பொறுக்கித் தின்ன போட்டி போடும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

13 அக்


உள்ளாட்சித் தேர்தலின் நோக்கம்
அதிகாரத்தை பரவலாக்குவதல்ல!
ஊழலை பரவலாக்குவதே!

விவசாயிக்கு நிலம், விளைபொருளுக்கு
விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம்,
இவையே கிராம மக்களுக்கான
உண்மையான அதிகாரங்கள்!
உள்ளாட்சி வழங்கு அதிகாரம் பிழைப்புவாதிகள்
பொறுக்கித் தின்பதற்கான அதிகாரமே!

விதை, உரம், பூச்சி கொல்லி மருந்துகள்,
உணவு தானியம், காய்கறிகள் விலை நிர்ணயம் செய்வது
டாடா, அம்பானி, பன்னாட்டுக் கம்பெனிகள்!
நெசவு, தீப்பெட்டி, கைவினைத் தொழில்களின்
கழுத்தை நெறிப்பதும் பன்னாட்டு கம்பெனிகள்!
உள்ளூர் பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியாத
உதவாக்கரை உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

விவசாயிகள், விசைத்தறி-கைவினைத் தொழிலாளர்களை
நாடோடிகளாக்கி தற்கொலைக்குத் தள்ளும்
தனியார்மய, தாராளமயக் கொள்கைகளிலிருந்து
மக்களைத் திசைத்திருப்பவும்,
போராட்டத்தை மழுங்கடிக்கவுமே
மகளிர் சுய உதவிக் குழுக்கள்! உள்ளாட்சித் தேர்தல்கள்!

கக்கூசுக்கு கட்டணக் கழிப்பிடம்,
குப்பை வார பிரெஞ்சு கம்பெனி,
ஆரம்ப சுகாதாரத்திற்கு அமெரிக்க மிஷனரி,
பாலம் போட மலேசிய கம்பெனி!
ம… புடுங்கவா மாநகராட்சி!
பொறுக்கித் தின்ன போட்டி போடும்
மாநகராட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

கூட்டணி போட்ட யோக்கியனெல்லாம்
தனித்தனியா வர்றான்…. எதுக்கும்
சொம்ப எடுத்து உள்ளே வை!
சாதிக்காரன் சொந்தக்காரன்னு ஓட்டுப் போடாதே!
சொந்தச் செலவுல உனக்கு நீயே சூனியம் வைக்காதே!
ஊராட்சி, நகராட்சி – யாராட்சி வந்தாலும்
நாறித்தான் கிடக்குது நம்ம பொழப்பு!

உடம்பு அரிப்பெடுத்தா, “இட்ச்காடு” போடு!!\
உள்ளங்கை அரிப்பெடுத்தா
உள்ளாட்சிக்குப் போட்டி போடு!
அதிகாரத்தை அல்ல, ஊழலை பரவலாக்குவதே
உள்ளாட்சித் தேர்தல்!

விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய
வெளி(நாட்டு கம்பெனி) ஆட்சி!
கக்கூஸ், சைக்கிள் ஸ்டாண்டு, சுடுகாட்டில்
நிர்வாகம் பண்ண உள்ளாட்சி!

தேர்ந்தெடுக்கவும், திருப்பி அழைக்கவும்
உரிமை கொண்ட; சட்டம் இயற்றவும்
நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் கொண்ட
மக்கள் சர்வாதிகார மன்றங்களை நிறுவப் போராடுவோம்!
பொறுக்கித் தின்ன போட்டி போடும்
மாநகராட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

இவண் :

மக்கள் கலை இலக்கிய கழகம் – 95518 69588
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – 94448 34519
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – 94451 12675
பெண்கள் விடுதலை முன்னணி

தொடர்புக்கு :

அ.முகுந்தன்,
110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை – 24.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: