உணர்வில்லாத ‘உணர்வு’ வார இதழும், சில ரசிகர்களின் விசில் சத்தமும்.

22 அக்

அண்மையில் புதிய கலாச்சாரம் இதழில் “இஸ்லாமியப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்” எனும் கட்டுரை வெளிவந்திருந்தது. அந்தக் கட்டுரை வங்க தேசத்தில் (பங்களாதேஷ்) தன்னை காதலிக்க மறுக்கும், உடன்பட மறுக்கும் பெண்கள் மீது அமிலத்தை ஊற்றி அவர்களின் வாழ்வையும், நம்பிக்கையையும் சிதைக்கும் ஆணாதிக்கம் குறித்து விவரிக்கிறது. அந்தக் கட்டுரை இரண்டு பகுதிகளாக இருக்கிறது. முதல் பகுதி வங்க தேசத்தில் நடக்கும் அமில வீச்சுக்களை அதன் சூழலுடன் விவரிக்கிறது. இரண்டாவது பகுதி எல்லா மதங்களும் ஆணாதிக்கத்தை தக்கவைப்பதாக இருப்பதை, குறிப்பாக இஸ்லாமியப் பெண்களின் பாதிப்புகளை பேசுவதால் இஸ்லாமிய ஆணாதிக்கம் குறித்து தூக்கலாக பேசுகிறது.

இஸ்லாம் குறித்து விமர்சனம் வைத்தாலே அது அறியாமல் எழுதியது, காழ்ப்புணர்ச்சியுடன் எழுதியது என்பது தான் முஸ்லீம்களின் தீர்ப்பாக இருக்கும். அந்த வகையில் ’உணர்வி’ல் செப்டம்பர் 2-8/2011 இதழில் ”புத்தியிழந்த புதிய கலச்சாரம்” எனும் தலைப்பில் நிஜாம் என்பவர் ஒரு மறுப்புக் கட்டுரையை எழுதியிருக்கிறார். ஒரு கட்டுரைக்கு மறுப்பு எழுதினால் கட்டுரையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக அந்த மறுப்பு இருக்க வேண்டும். ஆனால் உணர்வின் அந்த மறுப்புக் கட்டுரையில் உணர்வும் இல்லை, உள்ளடக்கமும் இல்லை. அதாவது புதிய கலாச்சாரம் கட்டுரை வங்க தேசத்தில் அமிலம் வீசி பெண்களை சிதைப்பதற்கு ஆணாதிக்கம் காரணமாக இருக்கிறது என்பதையும், அந்த ஆணாதிக்கத்தை எல்லா மதங்களும் தக்க வைப்பதைப் போலவே இஸ்லாமும் தக்கவைத்துப் பாதுகாக்கிறது என்பதை தரவுகளுடன் எடுத்துக் காட்டியிருக்கிறது. ஆனால் அதை மறுக்கப் புகுந்த உணர்வோ வங்க தேசம் ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பதால் அங்கு நடக்கும் குற்றங்களுக்கு இஸ்லாம் பொறுப்பேற்க முடியாது என்று பொதுவாக கூறிவிட்டு நகர்ந்து விடுகிறது. மட்டுமல்லாது தொடர்பே இல்லாமல் சகுந்தலா நரசிம்மனின் பர்தா பற்றிய விதந்தோதல்களும், கமலா தாஸ் சுரையாவாக மாறியதையும் பெட்டிச் செய்திகளாக வெளியிட்டிருக்கிறது.

இதை மறுத்து (மறுப்புக்கு மறுப்பு) வினவு இணைய தளத்தில் தோழர் சாகித் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையின் பின்னூட்டப் போர்கள் தான் இந்த பதிவிற்கான உந்துதலும் சாரமும்.

வினவு இணைய தளம் அனைத்து மதங்களையும், அனைத்து பிற்போக்குத்தனங்களையும் விமர்சித்து அரசியல், சமூக தளத்தில் பல்வேறு கட்டுரைகளை வீரியமாக எழுதியிருக்கிறது, தொடர்ந்து எழுதும். ஆனால் ஒவ்வொரு தனித்த கட்டுரையின் பின்னூட்டங்களிலும், குறிப்பாக மதங்களை எதிர்த்து எழுதும் கட்டுரைகளில் ஏன் அந்த மதத்தை எழுதவில்லை, ஏன் இந்த மதத்தை எழுதவில்லை என கேள்வி எழுப்பப்படுவது வாடிக்கை. அதற்கு இந்தக் கட்டுரையிலும் விதிவிலக்கில்லை. இனி விசில் சத்தங்கள் குறித்து பார்க்கலாம்

இப்ராஹிம்

இவர் கூறுகிறார், \\நீங்கள் சொல்லுவதுதான் மையக் கருத்து என்றால் ‘வங்க பெண்களை சிதைக்கும் ஆணாதிக்க அமிலம் ‘என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும்.ஆனால் இங்கு இஸ்லாத்தை சாடவே வழி மீது விழி வைத்து குற்றம் கண்டு பிடித்து எழுதப்பட்ட கட்டுரையாகும்// வங்கப் பெண்கள் என்றாலும் இஸ்லாமியப் பெண்கள் என்றாலும் அதில் பொருட்பிழை ஒன்றுமில்லை. ஏனென்றால் வங்கத்திலுள்ள இஸ்லாமியப் பெண்கள் குறித்து தான் அந்தக் கட்டுரை பேசுகிறது. எனும்போது இஸ்லாமிய பெண்கள் எனக் குறிப்பிடுவது எப்படி தவறாகும்? இஸ்லாமியர்கள் செய்வதினால் மட்டுமே அது இஸ்லாத்தின் குற்றம் என்றாகிவிடும் என்று கட்டுரையிலோ, மறுப்பிலோ குறிப்பிடப்படவே இல்லை. மாறாக இஸ்லாத்தின் ஆணிவேரே முஸ்லீம்களை அப்படி வழிநடத்துவதற்கு தூண்டுதலாக இருக்கிறது என்பதையே தரவுகளுடன் குறிக்கிறது. எனவே கேரள கம்யூனிஸ்டுகள் செய்வது கம்யூனிசத்தைச் சராது (அவர்கள் போலிகள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களே அதுவரைக்கும் நன்றி)

ஏன் கம்யூனிசத்தின் சில கொள்கைகளை நடப்பு முதலாளித்துவ ஆணாதிக்க உலகில் செயல்படுத்தும் சூழல் இல்லை என்பதை ஏற்கனவே உங்களுக்கு விவாதங்களில் விளக்கியிருக்கிறேன். என்றாலும் இது போன்ற சில வாய்ப்பாட்டுக் கேள்விகளை கேடயமாக பிடித்துக் கொள்வது உங்கள் வாடிக்கை. தவ்வுஹீத் உட்பட உலகின் ஏனைய அனைத்து கொள்கைகளும் நடப்பு உலகில் சில சீர்திருத்தங்களை மட்டுமே கோருகின்றன. ஆனால் கம்யூனிசமோ தலைகீழ் மாற்றத்தைக் கோருகிறது. நடப்பில் இருக்கும் ஒன்றில் சிறு சீர்திருத்தம் செய்து காட்டுவதற்கும், நடப்பில் இருக்கும் அனைத்தையும் தலை கீழாக மாற்றி புதிய நடைமுறைகளை கொண்டுவருவதற்கும் இடையிலிருக்கும் வித்தியாசங்களை இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் புரியாதது போல் நடித்துக் கொண்டிருப்பீர்கள்.

ஐந்து நிமிட தேடலில் சுட்டி எடுத்துக் காட்டுவதற்கு முன்பாக தோழர் சாஹித் என்ன கேட்டிருக்கிறார் என்பதை கொஞ்சம் கவனித்திருக்கலாம். கம்யூனிஸ்டுகள் அமிலம் வீசினார்களா? கம்யூனிச கொள்கை அமிலம் வீச தூண்டுகிறதா? எனும் கேள்விக்கு நீங்கள் அளித்திருக்கும் சுட்டியில் ஏதாவது பதில் இருக்கிறதா? மட்டுமல்லாது சீனாவும், ரஷ்யாவும் சோசலிச நாடுகளல்ல சமூக ஏகாதிபத்திய நாடுகள் என்பது வினவில் பலமுறை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.  மேலும் குரானின் எந்தெந்த வசனங்கள் கொள்ளையடிக்க, கற்பழிக்க, அடக்கியாள தூண்டுதலாக இருக்கிறது என்பதையும் பலர் பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். உங்களின் ஆசைக்காக இன்னொரு முறையும் வெளிப்படுத்தலாம். கீழ்காணும் வசனங்களை படித்துப்பாருங்கள். வகைக்கு ஒன்றாக மூன்று வசனங்கள். இந்தப் பொருளில் மேலும் சில வசனங்கள் இருப்பது உங்களுக்கே தெரியும். 8:69, 4:24, 4:34

புர்கா பற்றி சுடிதார் போன்ற முழுமையாக மறைக்கும் ஆடைகளே போதுமானது என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் நடப்பில் அப்படி யாரும் கருதுவதில்லை என்பது உங்களுக்கே தெரியும். குரான் வசனங்களும் ஆடைகளுக்கு மேலாக இன்னொரு ஆடை வேண்டும் என வலியுறுத்துகிறது. இது குறித்து மேலும் அறிய அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா எனும் கட்டுரையை பார்க்கவும்.

அடுத்து பண்ணை வாழ்க்கை என்று ஒன்றை அடிக்கடி குறிப்பிட்டு வருகிறீர்கள். அப்படி என்றால் என்ன? கம்யூனிசத்தில் அப்படி ஏதேனும் இருக்கிறது என நீங்கள் கருதினால் அதை விவரியுங்கள், பின்னர் நாங்கள் பதிலளிக்கிறோம். மாறாக கம்யூனிசத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக யாரோ எழுதிய நாவலின் தலைப்பை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால், கவனம் கீழே விழுந்து அடிபட்டுவிடாதீர்கள் என்று மட்டுமே அறிவுரை கூற முடியும்.

நீங்கள் ஒரு அவதூறைக் கூறி, அது பொய்த்தகவல் என்பதால் உங்களிடம் விளக்கம் கோரப்பட்டது. ஆனால் நீங்களோ கிமு காலத்து உத்தியைப் பயன்படுத்தி அது என்னவென்றே தெரியாதது போல் நடிக்கிறீர்கள். அதாவது, எதை அவதூறு என்றும் பொய் என்றும் கூறுகிறோமோ அதை நாங்களாகவே மீண்டும் கூறவேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பு. மெய்யாகவே நீங்கள் மறந்திருந்தால், வினவு, புதிய கலாச்சாரம் என்ற பெயர்களைக் கேட்டதும் உங்கள் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். எனவே உங்கள் உத்திகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

அப்துல்லா

முஸ்லீம்களுக்கு புதிய கலாச்சாரம் பிடிக்காது இஸ்லாமிய கலாச்சாரம் தான் பிடிக்கும் என எதுகை மோனையுடன் கூறியிருக்கிறீர்கள். வீதியில் இறங்கி உணர்வு இதழை விற்ற அனுபவம் உங்களுக்கு இருக்குமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் புஜ புக இதழ்கள் விற்ற அனுபவம் எங்களுக்கு உண்டு. இந்துப் பாசிசங்களை விமர்சித்து கட்டுரை வந்தால் அதை பெருவாரியான முஸ்லீம்கள் வாங்குவதும், (ஜும்மா பள்ளிவாசல்களில் கூட விற்றிருக்கிறோம்) இஸ்லாத்தை விமர்சித்து கட்டுரை வந்தால் முகத்தை திருப்பிக் கொள்வதும் நாங்கள் வழக்கமாக எதிர்கொள்வது தான். அந்த அடிப்படையில் தோழர் சாஹித் கூறியது சரியானது தான். அதே நேரம் உணர்வு வார இதழ் குறித்து அறிந்திராத முஸ்லீம்களும் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

புர்காவை விமர்சித்துவிட்டால் அதை நிர்வாணமாக அலைய விடுவதற்கான அனுமதியாக பார்ப்பது உங்களைப் போன்றவர்களுக்கு வாடிக்கை தான். ஏனென்றால், இப்படி வண்ணம் பூசாவிட்டால் உங்களால் புர்காவை நியாயப்படுத்த முடியாதே.

\\அநியாயமாக எந்த உயிர்களையும் கொள்ளக்கூடாது , அனைவரிடமும் அன்பு கட்ட வேண்டும், நீதி போற்றப்படவேண்டும் என்று இஸ்லாத்தின் உலக சமத்துவத்தை சொல்லிகொண்டே போகலாம் // இது போல இஸ்லாம் மட்டுமல்ல, உலகின் பொழுதுபோகாத அத்தனை தீர்க்கதரிசிகளும், தீர்த்தாங்காரர்களும், நன்னெறியாளர்களும் இதை கூறித்தான் சென்றிருக்கிறார்கள். ஆனால் பிரச்சனை அவைகளை எப்படி ஏற்படுத்துவது என்பது தான். அந்தப் பார்வையில் தான் இஸ்லாம் விமர்சிக்கப்படுகிறது. என்ன செய்வது ‘குன்’ என்று கூறி உலகில் சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாதே.

இஸ்லாமிய பெண்கள் புர்காவை விரும்பி அணிகிறார்கள் என்று கூறப்படுவது உண்மையல்ல. மதச்சடங்கு என்றாகும் போது அங்கு விருப்பம் புறக்கணிக்கப்பட்டு மத அழுத்தமே எஞ்சியிருக்கும். இன்றும் புர்கா அணிய மறுக்கும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். விஜய் டிவி புர்கா விவாத விளம்பரத்தில் எத்தனையோ பெண்கள் புர்காவுக்கு எதிராக குரல் கொடுத்தார்கள், அதை ஒளிபரப்ப விடாமல் தடுத்தது ஏன்? புர்காவை தூக்கி எறிந்தால் அவர்கள் எறிவது இஸ்லாத்தையல்ல தங்கள் மானத்தை என்கிறீர்கள். புர்கா அணியவில்லை என்றால் அது மானத்தை இழந்த தன்மை என்று பொது வெளியில் தயக்கமில்லாமல் கூறுகிறீர்களே, இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் பெண்கள் நிர்ப்பந்தம் காரணமாகவே புர்கா அணிகிறார்கள் என்பதற்கு?

யுஏஇ தமிழன்

இஸ்லாத்தை விமர்சித்தால் உடனே மூட்டை முடிச்சுகளுடன் வந்து விடுகிறார்கள்” என நான் எழுதியதை மறுத்து பின்னூட்டம் குறித்த வினவின் கருத்துகளைக் கூறி விளக்கமளித்துள்ளீர்கள். நான் எழுதியது என்ன பொருளை உள்ளடக்கி இருக்கிறது என்பதை அறியாத விதத்தில் உங்களின் விளக்கம் அமைந்திருக்கிறது. முஸ்லீம்கள் கருத்தாட வரக்கூடாது எனும் பொருளில் அது எழுதப்படவில்லை. மாறாக, இஸ்லாம் குறித்த கட்டுரைகளுக்கு மட்டுமே வருகிறார்கள், ஏனைய சமூக அரசியல் கட்டுரைகளுக்கு வருவதில்லையே எனும் ஆதங்கத்தையே என்னுடைய அந்தக் கூற்று உள்ளடக்கி வெளிப்படுத்துகிறது. ’மூட்டை முடிச்சுகளுடன்’ என்பது ஒருவித எள்ளல் தான். ஆனால் அந்த எள்ளல் மற்றுக் கருத்து கொண்டவர்களை கேவலப்படுத்தி, கோபப்படுத்தி எங்கள் நிலைப்பாட்டை நிறுவுவதற்காக அல்ல. எல்லா கட்டுரைகளுக்கும் வந்து உங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும் எனும் தேடல் தாகத்தை ஏற்படுத்தும் விதத்திலேயே அந்த எள்ளல் ஆளப்பட்டிருக்கிறது. இன்னும் மூட்டை முடிச்சுகளுடன் என்பது உங்களிடம் இருக்கும் மீளாய்வுக்கு ஆட்படாத தன்மையையும் மறைமுகமாக சுட்டுகிறது.

உங்கள் கோபம், எங்கள் கோபம் என்றெல்லாம் அங்கு ஒன்றுமில்லை. எது போன்ற சொல்லாடல்கள் கையாளப்பட்டிருக்கிறதோ, அதேபோன்ற சொல்லாடல்களுடன் எதிர்வினை செய்யப்பட்டுள்ளது அவ்வளவு தான். ஒன்று தெரியுமா உங்களுக்கு? வினவு தளத்தில் முஸ்லீம்கள் இதுவரை கம்யூனிச விமர்சனம் எதையும் வைத்ததில்லை. அவர்கள் செய்வதெல்லாம் செவியுறும் அவதூறுகளை கொட்டிப் போவது தான். அதற்கு மறுப்புக் கூறினாலும் கூட தொடர்ச்சியாக அதன் நிலை குறித்து பேசுவதில்லை. மாறாக பிரிதோர் இடத்தில் தோன்றி மீண்டும் அதே அவதூறுகளைக் கடைபரப்புவார்கள்.

சிவப்புச் சட்டையையும், கருப்புச் சட்டையும் இறைமறுப்பு எனும் அடிப்படையில் ஒன்றிப் போவதக நீங்கள் கருதலாம். ஆனால் இரண்டு வண்ணங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு. எனவே இரண்டும் நாத்திகம் என்று மேலோட்டமாக பொதுமைப்படுத்திவிட முடியாது. நாத்திகர்களுடனான விவாதத்தில், சாராம்சமாக பார்த்தால் அறிவியல் உண்மைகளை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரால் எப்படி கூறமுடிந்தது என்று முஸ்லீம்கள் தரப்பும், அந்த வசனங்கள் சாதாரணமாகத்தான் இருக்கின்றன, அறிவியல் விளக்கங்களை அதனுள் திணிக்கிறீர்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என திராவிடர் கழகம் தரப்பும் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தன. இதில் முடிவு எதையும் வந்தடையாத நிலையில் வென்றுவிட்டோம் என்று ஒரு தரப்பு மட்டும் எப்படி கூறிக் கொள்ள முடியும்? மட்டுமல்லாது இந்த விவாதம் தொடங்கிய புள்ளி முகம்மதின் மிஹ்ராஜ் எனும் விண்வெளிப் பயணம். இது குறித்து உண்மை இதழில் வெளிவந்த கட்டுரையைத் தொடர்ந்தே உணர்வு கட்டுரைகளும் பின்னர் விவாதமும் ஏற்பட்டது. ஆனால் விவாதம் செய்த இரண்டு தரப்பினருமே மையப்புள்ளியான முகம்மதின் விண்வெளிப் பயணம் குறித்து மறந்தும் கூட வாய்திறக்காத மர்மம் என்ன என்பதை யோசித்துப் பாருங்களேன்.

நேரடி விவாதம் குறித்து நான் பலமுறை விளக்கியிருக்கிறேன். நாங்கள் என்ன நோக்கத்திற்காக இஸ்லாத்தை, மதங்களை விமர்சிக்கிறோமோ அந்த நோக்கம் பிஜே வடிவ விவாதங்களில் நிறைவு பெறுவதில்லை. எனவே நீங்கள் கூறும் நேரடி விவாதங்களை நான் மறுதலிக்கிறேன். அதேநேரம் தினமும் நாங்கள் நேரடி விவாதங்களை சமூக, அரசியல், மத விவகாரங்களில் நடத்திக் கொண்டிருக்கிறோம். நீங்கள் நம்புவதுபோல் நேரடி விவாதம் தவிர ஏணையவை கோழைத்தனமானவை என்பதை உள்ளுக்குள் நீங்கள் மீளாய்வு செய்து பார்த்தால் அவை தவறானவை என்பது உங்களுக்கே புலப்படும். அவை எல்லாவற்றையும் மீறி எழுத்து விவாதம் கோழைத்தனமானது என்பதில் நீங்கள் உறுதியுடனிருந்தால், மன்னிக்கவும். உங்களின் பிஜே வடிவ விவாதங்களில் பங்கு பெற்றுத்தான் எங்களின் துணிவை நிருபித்தாக வேண்டும் எனும் அவசியம் எங்களுக்கு இல்லை.

அப்புறம் வழக்கமான செத்துப்போன கம்யூனிசம் எனும் வாய்ப்பாட்டு. இதற்கு ‘இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதமே‘ எனும் விவாதத்தில் பதிலளித்திருக்கிறேன். முடிந்தால் அதை மறுத்துப் பாருங்கள். அல்லது அங்கு கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் கூற முயற்சித்துப் பாருங்கள்.

கடைசியாக ஒன்று, இஸ்லாத்திற்கு மாற்று ஒன்றுமேயில்லை என முஸ்லீம்கள் நம்பிக் கொண்டிருக்கலாம். அவர்களின் நம்பிக்கை எனும் அளவில் அதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அந்த நம்பிக்கை தான் உண்மையானது, இஸ்லாத்திற்கு மாற்றை கூறிவிட்டு விமர்சனம் செய்யுங்கள் என பொது வெளியில் கூறித்திரிகிறார்கள். மக்களின் நலவாழ்வுக்கு மர்க்சியமே சரியான வழி என்றே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இஸ்லாமியத்திற்கும் மார்க்சியத்திற்கும் இடையே ஒப்பீடு செய்ய விரும்பும் யாரும், எப்போதும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Advertisements

8 பதில்கள் to “உணர்வில்லாத ‘உணர்வு’ வார இதழும், சில ரசிகர்களின் விசில் சத்தமும்.”

 1. nadheem ஒக்ரோபர் 23, 2011 இல் 7:04 பிப #

  அய்யா செங்கொடி பெரிய ரம்பம் அய்யா நீங்க…. ஏட்டு சுரைக்காய் கறிக்கு ஆகாது என்பது உங்க விசயத்தில் ரொம்ப சரி. “நான் அங்க சொல்லி இருக்கேன் இங்க சொல்லி இருக்கிறேன், ஏற்கனவே விளக்கி இருக்கேன், இப்படி ஏட்டுல ஜல்லி அடிப்பதை விட்டுவிட்டு ஒரு முறை நேரடி விவாதத்திற்கு வந்து பார்க்க வேண்டியதுதானே…. அங்க சொல்லி இருக்கேன் இங்க சொல்லி இருக்கேன் டயலாக் எல்லாம் அடிச்சி அதுல கபடி ஆட முடியாது. கடைசியாக ஒரு காமெடி வேற ###”மக்களின் நலவாழ்வுக்கு மர்க்சியமே சரியான வழி என்றே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்” ### முடியலைங்கோ சிரிக்க முடியலைங்கோ …

 2. S.Ibrahim ஒக்ரோபர் 23, 2011 இல் 8:21 பிப #

  ///மாறாக இஸ்லாத்தின் ஆணிவேரே முஸ்லீம்களை அப்படி வழிநடத்துவதற்கு தூண்டுதலாக இருக்கிறது என்பதையே தரவுகளுடன் குறிக்கிறது. எனவே கேரள கம்யூனிஸ்டுகள் செய்வது கம்யூனிசத்தைச் சராது (அவர்கள் போலிகள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களே //
  இந்த இரண்டு ஒப்பீடுகளும் எங்ஙனம் சரி என்பதை தெளிவாக்குங்கள்.நான் வலது,இடது களை மட்டும் போலிகள் என்று குறிப்பிடவில்லை நீங்கள் உட்பட புகவினரையும் போலிகள் என்று தான் கூறிவருகிறேன்
  ////ஏன் கம்யூனிசத்தின் சில கொள்கைகளை நடப்பு முதலாளித்துவ ஆணாதிக்க உலகில் செயல்படுத்தும் சூழல் இல்லை என்பதை ஏற்கனவே உங்களுக்கு விவாதங்களில் விளக்கியிருக்கிறேன். என்றாலும் இது போன்ற சில வாய்ப்பாட்டுக் கேள்விகளை கேடயமாக பிடித்துக் கொள்வது உங்கள் வாடிக்கை. ////
  இப்படி பதில் அளிப்பது உங்களது வாடிக்கை எதிர் தாக்குதல் வரும்பொழுது கேடயத்தை தூக்குங்கள்.அதற்குள் என்ன அவசரம்? எங்களது வீட்டில் உள்ள இஸ்லாம் பிராண்டு விளக்குகள் சரியில்லை என்று சொல்லுபவர் அவர் வீட்டு இருட்டில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்.அப்போது உங்கள் பிராண்டு விளக்குகளை காட்டுங்கள் என்றால் தயாரிப்பில் உள்ளது என்கிறார்.சரி எப்போது கிடைக்கும் என்றால் உலகம் முழுவதும் எல்லா வீட்டினரும் ஆர்டர் கொடுத்தால்தான் தயாரிக்க முடியும் என்கிறார்.சரி இப்போது இருட்டை போக்க வழி என்ன என்றால் இணைய தளத்தில் உள்ள படத்தை காட்டுகிறார்.
  செங்கொடி ,அவர்களே காணாமல் போன சோஷலிச பாதையை கண்டுபிடித்து கம்யுனிச கொள்கைகளைசெயல்படுத்தி காட்டி இஸ்லாத்தை விமர்சிக்க வாருங்கள்.
  ///நடப்பில் இருக்கும் ஒன்றில் சிறு சீர்திருத்தம் செய்து காட்டுவதற்கும், நடப்பில் இருக்கும் அனைத்தையும் தலை கீழாக மாற்றி புதிய நடைமுறைகளை கொண்டுவருவதற்கும் இடையிலிருக்கும் வித்தியாசங்களை இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் புரியாதது போல் நடித்துக் கொண்டிருப்பீர்கள்.///
  தலை கீழாக நடக்க முடியாது .சர்க்கஸ்காரன் கொஞ்சநேரம் வித்தை காட்டவே முடியும் .அது கூட காட்டாமல் தலை மேலாக நடந்துகொண்டிருப்பவனை விமர்சிப்பது தான் வேடிக்கை.
  நான் அளித்த சுட்டியில் ,சீனா கம்யுனிஸ்ட் நாடு இல்லை என்றால் வங்காள தேசம் இஸ்லாத்தினை முழுமையாக பின்பற்றப்படும் நாடா?
  ////மேலும் குரானின் எந்தெந்த வசனங்கள் கொள்ளையடிக்க, கற்பழிக்க, அடக்கியாள தூண்டுதலாக இருக்கிறது என்பதையும் பலர் பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.///
  பலரும் பலமுறை அவற்றினை தவறு என்று நிருபித்தும் உள்ளார்கள்.
  முகம் கைகளைத் தவிர ,தன்னை காட்சி பொருளாக காட்டாமல் தன்னை ஒரு பெண்ணாக காட்டிக் கொள்வதில் அவள் சுடிதார் டாப்ஸ் க்கு மேல் துப்பாட்டவை தலை மற்றும் பெண்ணின் கவர்ச்சி பாகங்களை மறைத்து தொங்க விடுவதை நீங்கள் வலிந்து குரானுக்கு மாற்றமாக சித்தரிக்க முயலாதீர்கள்.
  அடுத்து பண்ணை வாழ்க்கை பற்றி ஒரு நாடகத்தை பிடித்து தொங்குவதாக கூறி உள்ளீர்கள்.அந்த நாடகத்தை படிக்க சொன்னது நீங்கள் தான் அதற்கு விளக்கம் கேட்டால் அடிபட்டு விடாதீர்கள் என்று மிரட்டுவது சரியா?
  வினவு புதிய கலாச்சாரம் கீறும் ஞாபகத்தில் இல்லை.மேலும் கம்யுனிஸ்ட்கள் பற்றி இணைய தளங்களில் உள்ள விமர்சனங்களுக்கு பதில் சொல்லுவதை விட்டு இஸ்லாத்தை தொக்கி பிடித்து கொண்டு இருக்க வேண்டாம் .ஆனாலும் உங்களுக்கு அடிவிழாது.கைவலித்து நழுவினால் தாங்கி படிக்க நாங்கள் உள்ளோம்.

 3. nallurmuzhakkam ஒக்ரோபர் 23, 2011 இல் 8:30 பிப #

  அய்யா நதீம்,

  நீங்க சிரிக்கணும் என்று நினைத்தீர்களென்றால் எப்போதும் சிரித்துக் கொண்டே தான் இருக்கணும். மாறாக கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன். அப்போ தெரியும் பேசுற வாயையும் கொதிக்கிற உலையையும் மூட முடியாது என்று. நேரடி நேரடிஎன்று உதார் விட்டுக் கொண்டே இருந்தால் எப்படி கொஞ்சம் உங்கள் அண்ணன் மார்களை எழுத்துக்கு அழைத்து வரலாமல்லவா?

 4. Quranist ஒக்ரோபர் 23, 2011 இல் 10:41 பிப #

  //குரானின் வசனங்கள் கொள்ளையடிக்க, கற்பழிக்க, அடக்கியாள தூண்டுதலாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த கீழ்காணும் வசனங்களை படித்துப்பாருங்கள். வகைக்கு ஒன்றாக மூன்று வசனங்கள். இந்தப் பொருளில் மேலும் சில வசனங்கள் இருப்பது உங்களுக்கே தெரியும். 8:69, 4:24, 4:34//

  008:069. So consume what you have gained, lawful and good, and be aware of God.

  004:024.The women who are already married, except those whom you have betrothed

  004:034.As for those women from whom you fear desertion, then you shall advise them, and abandon them in the bedchamber, and separate from them.

  quranist@aol.com

 5. Quranist ஒக்ரோபர் 23, 2011 இல் 10:54 பிப #

  குரான் குறிப்பிட்ட சிலரிடம் குறைந்தபட்ச ஆடையும் தவிர பிறரிடம் அதனினும் சற்று ஆடையில் பேணுதலையும் வலியுறுத்துகிறது.

  007:026.

  We have sent down for you garments
  to alleviate your bodies,as feathers*;

  Feathers* are one of the epidermal growths that form the distinctive outer covering, or plumage, on birds and some theropod dinosaurs.
  They are considered the most complex integumentary structures found in vertebrates,[1][2] and indeed a premier example of a complex evolutionary novelty.[3] They are among the characteristics that distinguish the extant Aves from other living groups.
  Feathers have also been noticed in those Theropoda which have been termed feathered dinosaurs. Although feathers cover most parts of the body of birds, they arise only from certain well-defined tracts on the skin.

  They aid in flight,
  thermal insulation*,
  waterproofing*
  and coloration*
  that helps in communication and protection*.[4]

  024:030.

  Tell the believing men to lower their gaze and keep covered their private parts, for that is better for them.

  024:031.

  And tell the believing females
  to lower their gaze and keep covered their private parts,
  and that they should not reveal their beauty except what is apparent,
  and let them put forth their shawls over their cleavage.
  And let them not reveal their beauty except to their husbands,
  or their fathers, or fathers of their husbands,
  or their sons, or the sons of their husbands,
  or their brothers,
  or the sons of their brothers,
  or the sons of their sisters,
  or their women,
  or those by betrothal,
  or the male servants who are without need,
  or the child who has not yet understood the composition of women.
  And let them not strike with their feet* in a manner that reveals what they are keeping hidden of their beauty.
  *catwalk

  033:059.

  Tell your wives,
  your daughters,
  and the women of the believers that they should lengthen upon themselves their outer garments.
  That is better so that they will not be recognized and harmed.

  quranist@aol.com

 6. S.Ibrahim ஒக்ரோபர் 26, 2011 இல் 6:38 முப #

  இங்கே செங்கொடியின் விசிலடிச்சான் குஞ்சுகளை காணோம்

 7. nallurmuzhakkam ஒக்ரோபர் 26, 2011 இல் 10:50 பிப #

  நண்பர் இப்ராஹிம்,

  உங்கள் பதிவில் பதிலளிக்க ஒன்றுமில்லை. ஏற்கனவே உங்களிடம் பலமுறை கூறிய அதே பழைய உத்திகள். கேள்விகளின் நோக்கங்களை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டு தொடர்பற்று வரிகளுக்கு பதில்கூறி விலகிச் செல்வது, விலக்கிச் செல்வது. உள்ளில் நேர்மையில்லாதவரை விவாதத்தில் பலனில்லை.

 8. mohamed aslam ஓகஸ்ட் 30, 2013 இல் 8:32 முப #

  கம்யூனிஸம் வீழ்ந்தது… நீங்கள் மீண்டும் கட்டியெழுப்ப ஆசைப்பட்டால், மீண்டும் அது வீழும்.. ஏனெனில் இது மனித புத்தியால் தோற்றுவிக்கப்பட்டது: மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த கொள்கையும் அழிவை நோக்கியே செல்லும். வரலாற்றை இதற்கு நான் சட்சியாக முன் வைக்கின்றேன்…. பெண்களை நீங்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தினீர்கள்… இது தவறல்ல ஆனால் அவர்களின் குடும்ப பொறுப்பை நீங்கள் அலட்சியம் செய்தீர்கள் விளைவு, கம்யூனிச நாடுகள் குடும்ப முறையை இழந்தன; மக்கள்த்தொகை குறைந்தது; பெண்கள் வீதீயில் போராடினார்கள்‍ தற்போது மீண்டும் குடும்பத்தில் பெண்களை ஈடுபடுத்துகிறீர்கள்(Peristroika by michael korbachev). பெண்களுக்கான உரிமையை பறித்தவர்களும், அழித்தவர்களும் நீங்களே! உங்களுக்கு சவலாக இருக்கும் இஸ்லாத்தை நீங்கள் குறைகூறிக்கொன்டே இருங்கள்… ஆனால் உங்களால் கம்யூனிஸத்தை மீட்கவும் முடியாது, இஸ்லாத்தை வீழ்தவும் முடியாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: