எது தியாகம்? அல்லது எது தியாகத் திருநாள்?

6 நவ்
          தியாகம் என்றவுடன் முஹம்மதியர்களின் நினைவிற்கு வருபவர்கள் இப்ராஹிமும்(Abraham), இஸ்மாயீலுமே. நீங்கள் இணையதளத்தில் தியாகம்(Sacrifice) என்று தேடினால் கிடைக்கும் முடிவுகளில் இவர்களிருவருமே பெரும்பான்மையாக இருப்பார்கள். யூதர்களும், கிருஸ்துவர்களும்  மற்றும் முஹம்மதியர்களும் தங்களை இப்ராஹிமின் வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொள்வதில் பெருமையடைகின்றனர்.
முஹம்மதியர்களின் நம்பிக்கை இப்படி கூறுகிறது :
இன்றைக்கு சற்றேறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த அல்லாஹ்வின் தூதரான இப்ராஹிம் தன்னுடைய தள்ளாதவயதிலும்(85) தனது அடிமைப்பெண்(பணிப்பெண்) ஹாஜிராவுடன் செய்த லீலைகளின் காரணமாக இஸ்மாயில் என்ற மகனை பெற்றெடுக்கிறார். குழந்தைப்பேறு இல்லாத இப்ராஹிமின் வயதான மனைவி சாராவினால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தனது சக்களத்தி ஹாஜிராவையும் இஸ்மாயிலையும் வெறுக்கிறார் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்ற நினைக்கிறார். அதற்கேற்றவாறே, ஹாஜிராவையும் பச்சிளங் குழந்தை இஸ்மாயிலையும் ஆளரவமற்ற பாலைவன வெயிலில் விட்டுவிடுமாறு அல்லாஹ்வும் இப்ராஹிமிடம் கட்டளையிடுகிறான்.
 ஹாஜிராவையும் இஸ்மாயிலையும் சில உணவுப் பொருட்களுடன் அரேபியப் பாலைவனத்தில், ஸபா, மர்வா எனும் இரண்டு குன்றுகளுக்கு அருகில் தன்னந்தனியே விட்டுவிட்டு திரும்பிப்பாராமல் ஓடிவந்துவிடுகிறார். கைவசமிருந்த உணவும் குடிநீரும் தீர்ந்ததும் பிரச்சனை துவங்குகிறதுதாகத்தாலும் பசியாலும் வீறிட்டு அழும் குழந்தைக்காக உதவிதேடி அங்குமிங்குமாக அலைமோதுகிறார் ஹாஜிரா. நாதியற்றுப்போன தங்களுக்கு உதவிசெய்ய வழிப்போக்கர்கள் யாரேனும் தென்படமாட்டார்களா? என அங்குமிங்குமாக அலைபாய்கிறார். அப்பொழுது ஒரு வானவர் குழந்தையின் அருகே தோன்றி தன் கையிலிருக்கும் தடியினாலோ அல்லது தன்னுடைய சிறகினாலோ தரையை தட்டுகிறார். உடன் அந்த இடத்திலிருந்து நீர் குமிழியிட்டு வெளியேறுகிறது. குழந்தை இஸ்மாயீல் காலால் அழுது உராய்த்த இடத்திலிருந்து நீர் பீறிட்டுக் கிளம்பியதாகவும் சொல்லப்படுகிறது.ஸம் ஸம்என்று கூறி அந்த நீரை ஹாஜ்ரா தனது கைகளால் அணைகட்டித் தடுக்கிறார். அவர் அவ்வாறு தடுக்கவில்லையெனில் அந்நீர்  ஆறாக பெருக்கெடுத்து ஓடி அப்பகுதியை செழிக்கச் செய்திருக்கும் என்பதும் முஹம்மதியர்களின் ஜதீகம். கிணறாக சுருங்கிய அந்நீரைக் குடித்து பாலைவனத்திலிருந்து தப்பிப் பிழைத்து மீண்டும் இப்ராஹீமையே வந்தடைகின்றனர்(?). 
       ஆண்டுகள் பதிமூன்று கடந்ததும் அடுத்த களம் தயாரானது. அல்லாஹ், இப்ராஹிமிற்கு இஸ்ஹாக் என்ற மகனைக் கொண்டு நற்செய்தியை (கு 6:84, 11:71-72, 15:53, 19:49, 21:72, 29:27, 37:113, 38:45, 51:28) தனது தூதர்கள் வாயிலாக கூறுகிறான்  இதைக்கேட்ட  தொண்ணூறு வயதான அவரது மனைவி சாரா நம்பமுடியாமல் தனது முகத்திலறைந்தவாறு சப்தமிட்டு சிரிக்கிறார் (கு 11:72,51:29). அல்லாஹ்வின் அற்புதத்தால் மாதவிடாய் அறவே நின்றுபோன மூதாட்டி சாரா, இஸ்ஹாக் என்ற மகனைப் பெற்றெடுக்கிறார்இஸ்மாயீலின் மீதான சாராவின் வெறுப்பு அதிகமாகிறது. (இதற்கு வாரிசுரிமை, இஸ்ஹாக்கிற்கு தாய்பாலை மறக்கச்செய்யும் நிகழ்சியின் பொழுது சாராவை கேலி செய்ததது, இஸ்ஹாக்கை வழிகொடுத்து விடுவாரோ என வருத்தப்பட்டது என்று சில காரணங்களை யூதக்கதைகள் சொல்கிறது)
        இம்முறை அல்லாஹ் கடுமையான உத்தரவை வெளியிடுகிறான். இஸ்மாயீலை அறுத்து தனக்கு பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கனவில் கட்டளை பிறப்பிக்கிறான். முதலில் கனவை அலட்சியம் செய்தவர், அல்லாஹ்வின் வற்புறுத்தல் தாங்க முடியால் பதிமூன்று வயதான மகன் இஸ்மாயீலை நரபலி கொடுப்பதென்று முடிவு செய்கிறார்அதற்கென ஒரு நாளைக் குறித்து யாருமற்ற ஓரிடத்தில் மகனை நரபலியிட மகனை அழைத்தச் செல்கையில் இப்ராஹிமின் நரபலியை தடைசெய்ய முயன்ற சைத்தானை கல்லெறிந்து விரட்டுகிறார். மகனின் ஆலோசனைக்கேற்ப முகம் குப்புறக்கிடத்திய நிலையில் வைத்தவாறு மகனை அறுத்து பலியிட முயற்சிக்கிறார். பாறையையே இரண்டாக பிளக்கும் வாளால் சிறுவனின் கழுத்தை அறுக்க முடியவில்லையே என்று அங்கலாய்க்கையில், நரபலி சோதனை முடியுற்றதாகக்கூறி ஆட்டை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இப்ராஹிமின் இந்நரபலி முயற்சி அல்லாஹ்வின் நண்பர்என்ற தகுதியை அவருக்குப் பெற்றுத்தந்தது. இதன் நினைவாகத்தான் பக்ரீத்” – ஆட்டுத் திருநாள் – தியாகத்திருநாள் என்று உலக முஸ்லீம்கள் ஆட்டை அறுத்துப் பலியிடுகிறார்கள்இப்ராஹீமின் நரபலி முயற்சியைத்தான் மாபெரும் தியாகமாக இஸ்லாம் போற்றுகிறது. முஹம்மதியர்களின் ஐந்தாவது கடமையான ஹஜ் சடங்குகளும் இதைத்தான் நினைவுகூர்கிறது.
       இதில் முஹம்மதியர்கள், இப்ராஹிம் நரபலி கொடுக்க முயன்றது இஸ்மாயீலைத்தான் இஸ்ஹாக்கை அல்ல என்று கூறி பழைய ஏற்பாட்டுக்காரர்களுடன் மோதலுக்கும் நிற்கிறார்கள். யூதர்கள் இஸ்ஹாக்கின் வழித்தோன்றல்களாகவும் இஸ்மாயீல் அரேபியர்களின் தந்தையாகவும் அறியப்படுகின்றனர். யார் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வமான வாரிசு? என்பதுதான் யூதர்களுக்கும் அரேபியர்களுக்குமிடையிலான பங்காளிச் சண்டையின் அடிப்படை
இப்ராஹிம் நரபலி கொடுக்க முயன்றது யாரை? யூதர்களின் நீண்டகால நம்பிக்கைக்கு எதிரான கருத்தை முஹம்மது கூறினாரா?
       குர்ஆன், இஸ்மாயீலைத் தூதரென்றும் நல்லடியரென்றும் கஅபா புணரமைப்புப் பணியில் (கு 2:127) ஈடுபட்டதாக பெயரைக் குறிப்பிட்டு கூறுகிறதுஎனவே நபர்களின் பெயரைக் குறிப்பிடுவதில் குர்ஆனுக்கு எவ்வித தயக்கமுமில்லையென்பது தெளிவாகிறது.
ஆனால், மிக முக்கியமான, சர்ச்சைக்குறிய நரபலி நிகழ்ச்சியை (கு 37:100-108) மகனின் பெயர் குறிப்பிடப்பிடாமல் கூறுகிறது. முஹம்மதிய அறிஞர்கள், குர்ஆன் 37:10-108 வசனங்களில், வழக்கம்போல அடைப்புக்குறிகளுக்குள் இஸ்மாயீலை நுழைத்து தாங்கள் விரும்பியவாறு பொருள் விளங்கச் செய்துவிட்டனர்.   ஆனால் குர்ஆன் 37:101,112&113 வசனங்களை அவர்கள் சரிவர கவனிக்க(!) மறந்தது விட்டனர்.
 அல்லாஹ்வால் நன்மாராயம் கூறப்பட்ட மகனையே நரபலி சோதனைக்கு உட்படுத்தியதாகக் குர்ஆன் 37:101 கூறுகிறது. குர்ஆனின் 6:84, 11:71-72, 15:53, 19:49, 21:72, 29:27, 37:113, 38:45, 51:28 வசனங்கள், இஸ்ஹாக்கை, அல்லாஹ்வால் நற்செய்தியின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்ட மகனென்று உறுதி செய்கிறது
நரபலி சோதனையில் வெற்றியடைந்த இப்ராஹிமிற்கு வாழ்த்துக்களைக் கூறுகையில்(கு 37:108-111) இஸ்ஹாக்கை தனது தூதராக தேர்வுசெய்த நற்செய்தியை இப்ராஹிமிற்கு தெரிவித்ததாக குர்ஆன் 37:112 கூறுகிறது. முஹம்மதியர்கள் கூறுவதைப் போல  நரபலி (கு 37:100-108) முயற்சிக்குள்ளானவர் இஸ்மாயீலாக இருப்பின், தன்மீதுள்ள இரக்கத்தின் காரணமாக அல்லாஹ்வின் ஆணையை செயல்படுத்துவதில் தந்தையாருக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக தன்னை முகம் குப்புறகிடத்தியவாறு அறுக்க வேண்டுமென்றெல்லாம் ஆலோசனை கூறி, மயிரிழையில் உயிர் பிழைத்தவரை அடியோடு மறந்து விட்டு, இவ்விடத்தில், இஸ்ஹாக்கை நபியாக தேர்ந்தெடுத்ததைக்கூறி வாழ்த்த வேண்டிய அவசியமில்லையே?
       யூதர்களின் நீண்டகால நம்பிக்கைக்கு எதிராக இஸ்மாயீலை முன்நிறுத்துவது முஹம்மதின் நோக்கமாக இருந்திருக்குமானால் பெயரைக் குறிப்பிட்டு உறுதியாக கூறியிருப்பார். உதாரணத்திற்கு, கிருஸ்துவத்தின், இயேசு இறைமகன் என்ற வாதத்தை மறுப்பதற்காக, இயேசுவைப்பற்றி குறிப்பிடும் பொழுதெல்லாம் மரியமின் மகன் ஈசாஎன்று அவரது தாயின் பெயருடனே குறிப்பிட்டு தனது வாதத்தை வலியுறுத்துகிறார். கிருஸ்த்துவத்ததின் அடிப்படையான இயேசுவின் சிலுவை மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முஹம்மது வன்மையாகவே மறுக்கிறார். எனவே, நரபலி நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் முஹம்மது கூறியதை பின்னுள்ளவர்கள் திரித்துவிட்டனர் எனலாம்.
மேலும், இப்ராஹிம், தனது அடிமைப்பெண் ஹாஜிராவையும், மகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் தவிக்கவிட்டு சென்ற பிறகு நீண்டகாலத்திற்குப் பின்னரே இஸ்மாயீலைத் தேடிவந்ததாக புகாரி ஹதீஸ் கூறுகிறது
புகாரி 3364 –ல் இருந்து,
…. அவர்கள் (சென்று பார்த்தபோது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் (தம் குலத்தாரிடம்) திரும்பிச் சென்று அஙகே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார்/ இஸ்மாயீலின் அன்னை தன் அருகே இருக்க முன்னே சென்று/ நாஙகள் உஙகளிடம் தஙகிக் கொள்ள எங்களுக்கு நீஙகள் அனுமதியளிப்பீர்களா என்று கேட்க/ அவர்கள்/ ஆம் (அனுமதியளிக்கிறேன்)/ ஆனால் தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது என்று சொன்னார்கள். அவர்கள் சரி என்று சம்மதித்தனர். (ஜுர்ஹும் குலத்தார் தஙகிக்கொள்ள அனுமதி கேட்ட) அந்த சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு/ அவர்கள் (தனிமையால் துன்பமடைந்து) மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே/ அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப/ அவர்களும் (வந்து) அவர்களுடன் தஙகினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சோர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றிவிட்டன. குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியை கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துக் கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள்/ தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே/ இஸ்மாயீல் மனைவியிடம் இஹ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர்/ எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள்
எனவே, இப்ராஹிம் நரபலி கொடுக்க முயன்றது இஸ்மாயீலைத்தான் என்பது முஹம்மதியர்களின் குருட்டுநம்பிக்கையாகவே இருக்க முடியும். இது முஹம்மதிய அறிஞர்களின் இட்டுக்கட்டுதல்களுக்கு மேலும் ஓரு உதாரணம். இப்ராஹிம்ஹாஜிராஇஸ்மாயீல் இவர்களின் தன்னலமற்ற(?) தியாகத்தை நினைவு கூறுவதாக செய்யப்படும் ஹஜ் கிரியைகளுக்கும் சடங்குகளுக்கும் தேவையென்ன
சரி இவர்கள் இந்தக் கட்டுக்கதைகளின் மூலம் மனிதர்களுக்கு போதிப்பது தியாகமா? எது தியாகம்?
பிறர் நலனுக்காகத் தன்னலம் இழக்கும் தன்மையைத் தியாகம் எனலாம். இப்ராஹீம், பிறர் நலக்காகத் தன்னலம் கருதாமல் அப்படியென்ன தியாகம் செய்தார்? அதனால் மனிதகுலம் அடைந்த நன்மைகள் என்ன?
ஒன்றுமில்லை…!
இந்நரபலிக் கட்டுக்கதை, மனிதனுக்கு கற்பிக்கும் படிப்பினை தியாயாகமா?
தங்களது இறைவன் அல்லாஹ்விற்காக அனைத்தையும் இழக்கும் உயர்ந்த தன்மையையே இப்ராஹிம் நமக்கு உணர்த்துகிறார் என்று முஹம்மதியர்கள் பிரதாபிக்கின்றனர். இதன் பொருள், அல்லாஹ், மனிதாபிமானமற்ற தற்கொலைப்படை ஏதேனும் உருவாக்கும் திட்டத்திலிருக்க வேண்டுமென்பதைத்தவிர இவர்களிடம் சொல்வதற்கு வேறொன்றுமில்லை.
மனைவி மற்றும் குழந்தைகளைக் ஈவுஇரக்கமின்றி தவிக்கவிட்டுச் செல்வதுதான் தியாகமென்றால் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு ஆதரவற்றோர் இல்லங்களிலும் அநாதை இல்லங்களிலும்   இதன் சாட்சிகளைக் காணமுடியும்.
தியாகத்தின் பொருளை விளங்க சில உதாரணங்கள்.
மனிதகுலம் இன்றுவரை பல தியாகிகளையும் அதன் பலனையும் சந்தித்துள்ளது. அம்மை நோய்க்குத் தடுப்புமருந்து கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்ச்சர், மருந்தை தமது செல்லக் குழந்தையின் மீதே சோதனை செய்து பார்த்தவர். தொழுநோயைக் கட்டுப்படுத்துகிற மருந்தைக் கண்டுபிடித்த இன்னொரு விஞ்ஞானி, தம்மீதே தொழுநோயை வரவழைத்து ஆராய்ச்சி செய்வதற்காக, தொழுநோயாளி ஒருவரின் தசையை அறுத்து விழுங்கி இருக்கிறார். இத்தகையவர்களின் அபாரமான தீரம், தியாகம், கருணை ஆகியவைகளை அனுபவித்துக் கொண்டே, மனைவியின் நச்சரிப்பிற்கும், மிரட்டல்களுக்கும் அஞ்சி, கனவையும், கடவுளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, வைப்பாட்டியின் மகனை நரபலி கொடுக்க முயன்ற காட்டுமிராண்டி கதைகளை தியாக வரலாறு எனக்கூறி போற்றிப் புகழ்வதற்கு பகுத்தறிவற்ற மதவாதிகளால் மட்டுமே முடியும்!
தஜ்ஜால்
(பின் குறிப்பு: எஜமானியின் வெறுப்பிற்குள்ளான பரிதாபத்திற்குரிய அடிமைப்பெண்ணையும் அவளது மகனையும் மட்டுமே குறிவைத்து வஹீயால் தாக்கிக் கொண்டிருந்த அல்லாஹ்வின் செயல் எனக்கு விநோதமாகவே தோன்றுகிறது. சாரா-இப்ராஹிம்அல்லாஹ் இவர்களில் யார், யாருக்கு எஜமானர்என்றே புரியவில்லை! )

முதல் பதிவு: இறையில்லா இஸ்லாம்

***
Advertisements

28 பதில்கள் to “எது தியாகம்? அல்லது எது தியாகத் திருநாள்?”

 1. G u l a m நவம்பர் 9, 2011 இல் 9:33 முப #

  சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் நிலவட்டுமாக

  அன்பு சகோ
  ஏதேச்சையாக உங்கள் வலைத்தளம் பார்க்க நேர்ந்தது., சமூகம் குறித்த உங்கள் சிந்தனையில் இஸ்லாம் குறித்த உங்களின் பார்வையில் தவறான அணுகுமுறை இருப்பதாக உணர்கிறேன்.,

  சமூகபயன்பாட்டிற்கு தனிமனித ஒழுக்கமே பிரதானம் – அதற்கு இஸ்லாத்தில் அனேக வழிமுறைகள் இருப்பதாக அறிகிறேன்.,

  நான் முஸ்லிம் தளம் பாருங்கள் – கடவுள் -இஸ்லாம் குறித்து சில பதிவுகளை இட்டிருக்கிறேன்.,

  நீங்கள் சார்ந்த கொள்கைக்குறித்து தெளிவாக சொன்னால்- இறை நாடினால் மேற்கொண்டு கருத்து பரிமாறிக்கொள்ளலாம்

 2. nallurmuzhakkam நவம்பர் 9, 2011 இல் 4:30 பிப #

  வணக்கம் நண்பர் குலாம்,

  சமூகம் குறித்த என்னுடைய சிந்தனையில், இஸ்லாம் குறித்த என்னுடைய பார்வையில் என்ன தவறு இருக்கிறது என்று கூறினால் தொடர்ந்து நாம் களமாடுவதற்கு வசதியாக இருக்கும்.

  உங்கள் தளத்தின் சில கட்டுரைகளை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக உங்கள் கட்டுரைகளுக்கு மறுப்பாக்கம் நல்லூர் முழக்கம் தளத்தில் இடலாமா என எண்ணிக் கொண்டிருக்கிறேன். இப்போது நீங்களே அழைப்பு கொடுத்து விட்டீர்கள். விரைவில் வெளிவரும்.

  கம்யூனிசமே என்னுடைய கொள்கை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் கருத்தை பரிமாறிக் கொள்ளலாம், காத்திருக்கிறேன்.

  • G u l a m நவம்பர் 16, 2011 இல் 6:18 பிப #

   அன்பு சகோ
   உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக
   உங்கள் கொள்கைக்குறித்து தெளிவுப்படுத்தியதற்கு நன்றி.,

   பொதுவாக ஒரு கொள்கையின் மூலம் ஏற்படும் இடர்களை நாம் வெளிக்கொணர்வதாக இருந்தால் அதற்கு பகரமாக ஒரு மாற்று தீர்வை நாம் ஏற்படுத்தியாக வேண்டும் அதுவே விமர்சிக்கும் ஒன்றின் மீதான தவறை நியாயப்படுத்தும் முறைமையாகும்.,

   ஆக நாத்திக கம்யூனிஷ சிந்தனை இஸ்லாமிய கோட்பாடுகளில் குறை இருப்பதாக கண்டால் இஸ்லாம் கூறும் தவறுகளை வெளிக்கொணர்ந்து அவற்றை பொதுவில் வைப்போதோடு அதற்கான மாற்றுதீர்வை ஏற்படுத்த வேண்டும்,

   ஆனால் முதல் பாதியை தெளிவுறுத்தும் நாத்திக சிந்தனை., பிற்பாதிக்கான செய்கைகளை முழுமைப்படுத்துவதில்லை., அதாவது இஸ்லாம் மீதான குற்றச்சாட்டாக ஆணாதிக்க மதம், பெண்களுக்கு உரிமையில்லை, இஸ்லாத்தில் கடமைகள் மற்றும் உரிமைகளில் பாரபட்சமான நிலை என உரக்க குரலெழுப்பும் நாத்திக கம்யூனிஷ சிந்தனை அதற்கு பகரமான நீதமான வாழ்வியல் வழிமுறைக்கு வாய் திறப்பதில்லை.,

   நான் உரையாடிய வகையில் இஸ்லாம் மீதே குற்றச்சாட்டை வைத்தே தம் எண்ணங்களுக்கு எழுத்து வர்ணம் அடித்துக்கொண்டிருக்கிறார்களா தவிர ஒருவரும் இதற்கான இஸ்லாத்திற்கு எதிராக முழுமைப்பெற்ற மாற்றுத்தீர்வை முன்னிருத்தி பேசவில்லை.,

   ஆகையால் மீண்டும் உங்களிடம் அதே கேள்விகளை முன்வைத்து என் வாதங்களை தொடங்கலாம் என நினைக்கிறேன்.,
   () இஸ்லாமும் அது கூறும் கோட்பாடுகளும் இவ்வுலக வாழ்க்கைக்கு பொருந்தாதென்றால் அதைவிட விரிவாக தெளிவாக எல்லா மக்களும் பின்பற்றும் வகையில் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் வகையில் சட்டங்களை இயற்ற முடியுமா…?
   () கம்யூனிஷ வர்க்க சட்டங்களால் அந்நிலை முடியும் என்றால் முதலில் அந்த கம்யூனிஷம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்- பாதுக்காப்புகள் சமூகரீதியான மேம்பாடுகள் குறித்து சுருக்கமாக சொல்லுங்கள்.,

   இதற்கு பதில் திருப்திக்கரமாக தந்தால் கடவுள் குறித்த விவாதத்திற்கு செல்லலாம்.,

   எனக்கு அதிக நேரம் இணையத்தில் இணைவதற்கு வசதியில்லை., ஆக கருத்திட்டதும் எனக்கு மெயிலிடுங்கள் அல்லது நான் முஸ்லிம் தளத்தில் தெரியப்படுத்துங்கள்

   இறை நாடினால் காத்திருக்கிறேன்
   நான் முஸ்லிம் தளத்திற்கான உங்கள் மறுப்பு ஆக்கங்களை எதிர்ப்பார்த்து

   • nallurmuzhakkam நவம்பர் 16, 2011 இல் 11:30 பிப #

    வணக்கம் நண்பர் குலாம்,

    தனிப்பகுதியில் விவாதிப்பது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? நீங்கள் உங்கள் தளத்திலும் நான் என்னுடைய தளத்தில் விவாதிப்பதை விட அது சிறப்பானதாக இருக்கும். மட்டுமல்லாது, பிளாக்கரை விட வேர்ட்பிரஸ் ஆழமாக விவாதிப்பதற்கு ஏற்றது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    உங்கள் கருத்தை நீங்கள் கூறிய பின்னர் என்னுடைய வாதத்தை நான் தொடங்கி விடுகிறேன்.

 3. S.Ibrahim நவம்பர் 10, 2011 இல் 8:02 முப #

  ///மனிதகுலம் இன்றுவரை பல தியாகிகளையும் அதன் பலனையும் சந்தித்துள்ளது. அம்மை நோய்க்குத் தடுப்புமருந்து கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்ச்சர், மருந்தை தமது செல்லக் குழந்தையின் மீதே சோதனை செய்து பார்த்தவர். தொழுநோயைக் கட்டுப்படுத்துகிற மருந்தைக் கண்டுபிடித்த இன்னொரு விஞ்ஞானி, தம்மீதே தொழுநோயை வரவழைத்து ஆராய்ச்சி செய்வதற்காக,தொழுநோயாளி ஒருவரின் தசையை அறுத்து விழுங்கி இருக்கிறார்.இத்தகையவர்களின் அபாரமான தீரம், தியாகம், கருணை ஆகியவைகளை அனுபவித்துக் கொண்டே,/////
  இவர்களின் கொள்கைகளை அறிந்து அவற்றினை பின்பற்றாமல் ,இவர்களை உருவாக்கிய முதலாளித்துவ நாடுகளை போற்றாமல் ,ஒருவேளை உணவுக்கு வழி தெரியாமல் அல்லது உழைக்காமல் இருந்த மார்க்சையும் ஜனங்களை பிணங்கலாக்கிய ஸ்டாலினை போற்றிகொண்டிருப்பது நியாயமா?

 4. nallurmuzhakkam நவம்பர் 10, 2011 இல் 4:25 பிப #

  நண்பர் இப்ராஹிம்,

  இந்த பதிவிற்கும் நீங்கள் இட்டுள்ள மறுமொழிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? நேர்மை என்ற சொல்லின் பொருள் எபோதாவது உங்களுக்கு தெரிய வந்தால் அப்போது வாருங்கள் பேசலாம்.

  • S.Ibrahim நவம்பர் 23, 2011 இல் 6:55 முப #

   இப்ராஹீம் நபி அவர்கள் பலியிட முனைந்தது இஸ்ஹாக்கைத்தான் என்று சிலர் கூறுகின்றனர்.அது தவறு என்பதற்கு கீழ் கண்ட வசனமே சான்றாகும் .
   ,,,,,அவருக்கு இஸ்ஹாக்கைப் பற்றியும் இஸ்ஹாக்குப் பின் யாகூப் பிறப்பை பற்றியும் கூறினோம் [11;71]
   இஸ்ஹாக்கைப் பற்றி அறிவிக்கும்போதே யாக்கூப் என்ற பேரன் பிறக்கப் போவதாக இப்ராஹீம் நபிக்கு முன் கூட்டியே அறிவிக்கப் படுகிறது.பேரனைப் பற்றி நற்செய்தி கூறப்பட்டுள்ளதால்,இஸ் ஹாக் சிறுவனாக இருக்கையில் மரணிக்க மாட்டார் மேலும் மணம் செய்து யாக்கூப் என்ற பேரன் பிறப்பார் என்ற செய்தி இதன் மூலம் இப்ராஹீம் நபிக்கு தெரிவிக்கப் படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்ட பிறகு இஸ்ஹாக்கி பலியிடுமாறு கூறி இப்ராஹீம் நபியை சோதிக்க முடியாது.இஸ் ஹாக் இப்போது சாகமாட்டார் என்பது இறைவனே முன்னறிவிப்பு இருக்கும்பொழுது இப்ராஹீம் நபி அறித்து பலியிட முன் வந்ததில் தியாகம் இருக்க நியாயமில்லை .தன மகன் சாகவே மாட்டான் தெரிந்திருந்தால் யார் வேண்டுமானாலும் அறுத்து பலியிட முன் வருவர்.எனவே இஸ்மாயிலை அறுத்து பலியிடவே வந்த கட்டளையாகத்தான் கொள்ளமுடியும்.

 5. ஜெகதீஸ்வரன் நவம்பர் 11, 2011 இல் 8:08 பிப #

  மிகச் சிறப்பான இடுகை,. தங்கள் பணி தொடரட்டும்.

 6. செந்தோழன் நவம்பர் 16, 2011 இல் 10:18 பிப #

  நண்பர் இப்ராஹிம் அவர்களே! இந்த கட்டுரையை படித்ததும் வாயடைத்துபோய் விட்டீர்கள் என்பது உங்கள் பதிலில் இருந்து தெரிகிறது.தியாகம் (இஸ்லாமிய நம்பிக்கை) என்ற பெயரில் நாம் இதுவரை செய்த நரபலி (தியாகம்) ஆனைத்தும் முட்டாள்தனமானது,மூடநம்பிக்கை என்று ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்துறாங்களே என்ற கோபமா? ஆனால் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது.இந்துக்களை பாருங்கள் பெரியார் எவ்வளவோ எடுத்துச்சொன்னார். கேட்கவா செய்தார்கள் இல்லையே.அவங்க எப்பொழுதும்போல் கோவில்ல ஆடு,பன்றியை வெட்டுவதைபோல் நாமும் எதையும் கண்டுகொள்ளவே கூடாது.நாமும் எப்போழுதும்போல் ஆடு,மாடு பலியிட்டு அல்லாவை இரத்தால் அபிஷேகம் பண்ணுவோம்.யார் யாரோ எதாவது சொன்னால் ஏன்? எதற்கு என்று சிந்தித்து விடாதீர்கள்.அப்படி சிந்தித்து விட்டால் அல்லாஹ் நம்மை மன்னிக்கமாட்டான். அல்லாவும்,நபியும் சொன்னதுக்கு மேல் நாம சிந்திக்கவேகூடாது.ஆனாலும் நாம் இஸ்லாத்தை அறிவியல் பூர்வமானது என்று வெளியில் பீற்றிக்கொள்வோம் நீங்கள் இதற்கெல்லாம் கோபப்படக்கூடாது. அதுக்குதான் நம்ம பிஜே அண்ணே இருக்கிறாரே.இஸ்லாத்தையும், அறிவியலையும் ஒன்றாக ஒப்பிட்டு பேசி விஞ்ஞானிகளை எல்லாம் திணறடித்து விடுவார்.விஞ்ஞானிகளே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு விஞ்ஞான விளக்கம் சொல்லி நம்ம இஸ்லாத்தை காப்பாற்றிவிடுவார்.நீங்கள் கவலைப்படாதீர்கள். அண்ணே பிஜே அண்ணே!வாங்கண்ணே வந்து தியாகத்தையும்,விஞ்ஞானத்தையும் கலந்து ஒரு கலக்கு கலக்கி இஸ்லாத்தை காப்பாத்துங்கண்ணே.அப்படியே உங்க கல்லாவையும் கட்டிட்டு போங்கண்ணே.

  • S.Ibrahim நவம்பர் 19, 2011 இல் 10:16 முப #

   செந்தோழன் ,வாயடைத்து போகுமளவுக்கு உங்கள் அண்ணன் என்ன கூறியிருக்கிறார்.? குரான் வசனங்களை தனது மனம் போல் திரித்து ,புரிந்து எழுதியுள்ளதை உங்கள் மனம் சரி கண்டுவிட்டால் ஏனையோர் வாயடைத்து விட்டனர் என்பது பொருள். அன்று .நான் எழுதி உள்ளவற்றில் சிலதை உங்கள் நண்பர் வெளியிடவில்லை.இப்ராஹீம் நபி [அலை]அவர்களையும் அவரது தியாகத்தையும் விமர்சித்து ,ஒரு மருத்துவரின் தியாகம் ஒன்றை கூறி பாராட்டும் வேளையில் உங்களது கம்யுனிச தியாகங்களையும் அங்கெ குரிப்பிட்ட்ருக்கவேண்டும் அல்லவா?
   //தனது அடிமைப்பெண்(பணிப்பெண்)ஹாஜிராவுடன் செய்த லீலைகளின் காரணமாக இஸ்மாயில் என்ற மகனை பெற்றெடுக்கிறார். //
   இப்ராஹீம்[அலை]அவர்கள் ஹாஜர் அவர்களை பைத்துல் முகத்தசில் வைத்து திருமணம் செய்ததாக அல்பிதாயா வன்னிஹாயா என்ற நூலிலிருந்து தப்சீர் இப்னு கசிர் தமிழாக்கத்தில் உள்ளது .ஆனால் உமது குரங்குமனமோ வழக்கம்போலவே தனது விகாரத்தை காட்டியுள்ளது.
   ///இப்ராஹிமிற்கு இஸ்ஹாக் என்ற மகனைக் கொண்டு நற்செய்தியை (கு 6:84, 11:71-72, 15:53, 19:49, 21:72, 29:27, 37:113, 38:45, 51:28) தனது தூதர்கள் வாயிலாக கூறுகிறான் இதைக்கேட்ட தொண்ணூறு வயதான அவரது மனைவி சாரா நம்பமுடியாமல்தனது முகத்திலறைந்தவாறு சப்தமிட்டு சிரிக்கிறார்///
   அவர் அதனால் தான் சிரித்தார் என்பது தவறான புரிதலா?அல்லது வேண்டுமென்றே கூறப்பட்டதா?மேலும் யூக கதைகள் என்று அவரே கூறி ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.மாதவிடாய் நின்றதாக கூறியது,பாறை பிளந்தது என்பதும் போன்று அநேக யூகங்களை கூறியுள்ள அவர் அதை யூகம் என்று குறிப்பிட மறுக்கிறார்.அவ்வாறெனின் அவதூறு எழுதுவது தானே உங்களது திட்டம்.
   இப்ராஹீம் நபி[அலை] அவர்கள் தனி ஒரு நபராக நின்று ஒரு அரசனை எதிர்த்து நீதிக்காக போராடுவதை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை .ஒரு சர்வாதிகாரியின் கீழ் இருந்தால் தான் கம்யுனிசம் காணும் சோஷலிச பாதையை கண்டு பிடிக்க முடியும் என்று கூறும் கம்யுனிச கொள்கை போல் ஓரிறை கொள்கையை உலகமக்கள் ஏற்றுக் கொண்டால்தான் நீதியான ஒரே சட்டத்தை நிறுவி மக்களை நெறிபடுத்த முடியும் என்பதால் பல சோதனைகளையும் தாங்கிக் கொண்டு தனி ஒரு மனிதனாக் நின்று கொண்டு ஒரு அரசையே எதிர்த்து போராடுகிறார். அந்த சோதனை போதாது என்று ௮௬ வயதில் பிறந்த அற்புத குழந்தை பற்றிய சோதனை கனவாக வருகிறது. அவர் இறை தூதர் என்பதால் ,அந்த கனவின் மகிமை உங்களுக்கு எப்படி தெரியும் ?தனது மனைவியும் குழந்தையும் இறை கட்டளை ஏற்று, அவனிடமே பிராத்தித்து தனியாக விட்டு செல்ல வில்லையா? இறைவனும் அவரது நம்பிக்கைக்கு ஏற்றவாறு அந்த பூமியை செழிப்பாக்க விலையா ? அன்றோடு மட்டுமல்ல. இன்று வரை உலகமே பொருளாதார பின்னடைவை சந்தித்தபோழ்து சவூதி மட்டும் செழிப்பாக இருக்க வில்லையா? எனவே தனக்கு வயோதிகத்தில் குழந்தை தந்த இறைவன் ,அக்குழந்தையையும் ,மனைவியையும் தனியாக விட்டுசென்றபோளுதும் தனது பிரார்ர்தனைக்கு ஏற்றவாறு அந்த காட்டு பகுதியை நகரமாக ஆக்கிவிட்ட இறைவன் ,இன்று தனது மகனை அறுத்து பலியிட வேண்டிய போதும் அதற்கு தயாராகிவிட்டதால் ,அதன் மூலம் இன்று பல ஆடுகள் மாடுகள் அறுக்கப்பட்டுஏழை மக்களுக்கு உணவாகவுகவும் ஒரு வாரகாலம் கிடைக்கவில்லையா? ஆடு மாட்டு தோலகள் விற்கப்பட்டு பல ஏழைகளுக்கு மறுத்து உதவி செய்யப்படவில்லையா? எங்களது கிராமத்தில் தோல் விற்ற பணம் 23000 /= ஒரு பெண்ணின் இதைய அறுவை சிகிச்சை செய்ய உதவியுள்ளோமே.இது போன்று எத்தனை இடங்களில் நடந்து வருகிறது என்பதை உமது காமாலைக் கண்களுக்கு தெரியுமா? இன்னும் சவூதி அரேபியாவால் குர்பானி உணவு பதப்படுத்தப்பட்டு பல ஏழை நாடுகளுக்கு அனுப்பபடவில்லையா?உங்களைபோல் உண்டியல் ஏந்தி கலை நிகழ்ச்சி நடத்தி அவற்றினை போலி கம்யுனிச குடும்பங்களே கண்டு கழித்து நாட்களை நாங்கள் கடத்த வில்லை.
   ////தியாகம் (இஸ்லாமிய நம்பிக்கை) என்ற பெயரில் நாம் இதுவரை செய்த நரபலி (தியாகம்) ஆனைத்தும் முட்டாள்தனமானது,மூடநம்பிக்கை என்று ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்துறாங்களே என்ற கோபமா//
   நாங்கள் நரபலி செய்தோமா?என்ன உளறல்? நாங்கள் ஒவ்வொரு பண்டிகையையும் ஏழை மக்களை கவனத்திற்கொண்டே ,அவர்களுக்கு உதவுவதே எங்களது பண்டிகை கொண்டாட்டாமாக இருக்கிறது. எங்களது இரண்டு பண்டிகைகளும் ஏழைகளின் சிரிப்பில் இறைவானை காண்பதே .ஆனால் இவற்றை நாங்கள் அரசியல் வாதிகள்போல் ,மகஇக போல் வாயளவில் அல்ல செயலளவில். ஒன்று தர்ம பெருநாள் ,இன்னொன்று தியாக பெருநாள் .இரண்டு நாள்களிலும் ஏழைகளுக்கு உணவு உடை அளிக்க வேண்டும் என்பதே முழு நோக்கமும் .இஸ்லாம் அறிவு பூர்வமானதும் ஏழைகளை மதிக்கும் மனித நேயமிக்கதுமாகவே தனது அனைத்து செயல்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

   • nallurmuzhakkam நவம்பர் 20, 2011 இல் 7:25 பிப #

    நண்பர் இப்ராஹிம்,

    நண்பர் தஜ்ஜாலும் நானும் ஒருவரல்ல. அவர் கம்யூனிச கொள்கையில் உள்ளவரும் அல்ல. எனவே குழப்பிக் கொள்ளாமலும், கோபப்படாமலும் உங்கள் கருத்தைக் கூறுங்கள். கட்டுரையின் மையப் பொருளை உங்கள் கருத்துரை தொட்டிருந்தாலோ, அல்லது போதிய வீரியத்துடன் இருப்பதாக நண்பர் தஜ்ஜால் கருதினாலோ உங்களுக்கு பதிலளிப்பார்.

 7. G u l a m நவம்பர் 17, 2011 இல் 1:33 பிப #

  அன்பு சகோ
  உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

  தனிப்பகுதியில் விவாதிப்பது என்றால்.. வாத பிரதிவாதங்கள் அடிப்படையிலா., அல்லது மறுப்பாக்கம் இட்டா..? சரியாக புரியவில்லை ., பொதுவில் ஒன்றை விமர்சிப்பதாக எல்லோரும் அறியும் வரையில் இருப்பதே சிறந்தது.,

  //பிளாக்கரை விட வேர்ட்பிரஸ் ஆழமாக விவாதிப்பதற்கு ஏற்றது. //
  பிளாக்கரை விட வேர்டுபிரஸ் நீண்ட பின்னூட்டம் இடும் வசதி உள்ளது இது தவிர வேறேந்த சிறப்பு பயன்பாடும் ப்ளாக்கரை விட வேர்டுபிரஸில் இருந்தாக எனக்கு தெரியவில்லை.,

  இணையத்தில் கருத்தை சொல்வதற்கு இவை இரண்டும் ஒரு இலகுவான வழிமுறை தவிர ஒன்றை விட ஒன்று எப்படி சிறந்தது என்று எப்படி கூற முடியும்? மாறாக ,பயனர்களின் டிராபிக் மிகுந்திருக்கும் ஊடகமே விவாதிப்பதில் அதிக பயன்பாடு மிக்க தளமாக இருக்கும்,

  இன்னும் சொல்லப்போனால் நாம் கருத்துப்பரிமாறிக்கொள்ள எத்தனிக்கும் கடவுள் -நாத்திகம் போன்றவை குறித்து விவாதிக்க இத்தளத்தை விட நான் முஸ்லிம் தளமே ஏதுவான களமாக இருக்கும் ஏனெனில் அங்கே இவைகளை மையப்படுத்தி தனித்தனிப் பதிவாக இட்டும் இருக்கிறேன்.,

  ஒகே., உடன்பாட்டு முறையில் உங்களோடு இங்கேயே இத்தளத்திலேயே விவாதிக்க ஒப்புக்கொள்கிறேன்., இன்ஷா அல்லாஹ்

  ஆக, விவாதிக்கும் முன்பாக ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்., இஸ்லாம் குறித்த குற்றச்சாட்டிற்கு சுமார் 50 கேள்விகளுக்கு மேலான பதிலை
  நான் முஸ்லிம் தளத்தில் ஒருங்கிணைத்து வைத்திருப்பதால் இங்கு இஸ்லாம் சார்ந்த குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல தேவையில்லையென நினைக்கிறேன்
  அதற்கான சுட்டியை இங்கே இணைத்து இருக்கிறேன்.,

  நீங்களும் பாருங்கள்
  இதைத்தாண்டியோ அல்லது திருப்திகரமான பதில் இல்லையென்றாலோ மீண்டும் உங்கள் கேள்விகளை முன்னிருத்துங்கள்
  http://iraiadimai.blogspot.com/p/non.html

  அத்தோடு இஸ்லாம் குறித்து விளக்கும் தளங்கள் சுமார் 200க்கும் மேலாக என்னால் இனங்காட்டவும் முடியும்
  அதற்க்கான சுட்டியும் இங்கே இணைக்கிறேன்.
  http://iraiadimai.blogspot.com/p/s.html

  ஆக இப்போது நமது விவாத்தில் இரண்டாம் பகுதியில் இருந்து தொடங்குவதே அவசியமென கருதுகிறேன்
  ஆக நமது கருத்துபரிமாற்றம் கடவுள் – நாத்திகம் – பகுத்தறிவு – கம்யூனிஷம்-
  இதன் ஊடாக இஸ்லாம் சம்பந்தமாக தலையீடுகள் வந்தாலும் அதுக்குறித்தும் அங்கு விவாதிக்கலாம்.,

  இப்பதில் நம் விவாத தொடக்கத்திற்கு திருப்திகரமாக இருக்குமென நினைக்கிறேன்.

  குட்., இப்போது எனது சில கேள்விகளுடன் விவாதத்தை தொடங்குகிறேன் -இன்ஷா அல்லாஹ்

  நீங்கள் கடவுள் மறுப்பாளர் என்றால் ஏன் கடவுளை மறுக்க வேண்டும் ? அப்படி மறுக்கக்கூடிய கடவுள் எப்படிப்பட்டவர்..?
  இது என் சார்பு தொடர்பான கேள்விகள்., அத்தோடு நான் ஏற்கன்வே இட்ட பின்னூட்டத்தில் இரண்டு பொது நிலை கேள்விகளையும் கேட்டு இருக்கிறேன்

  இதற்கு முதலில் பதிலிட்டால்., அதைத்தொடர்ந்து இன்னும் நாத்திகம் குறித்து ஏராளமான கேள்விகளும் கடவுள் குறித்த விளக்கங்களுடனும் தொடர்கிறேன்

  மீண்டும் சொல்கிறேன் எனக்கு அதிக நேரம் இணையத்தில் இணைவதற்கு வசதியில்லை., ஆக கருத்திட்டதும் எனக்கு மெயிலிடுங்கள் அல்லது நான் முஸ்லிம் தளத்தில் தெரியப்படுத்துங்கள்

  -இறை நாடினால் காத்திருக்கும்
  உங்கள் சகோதரன்
  குலாம்

 8. nallurmuzhakkam நவம்பர் 17, 2011 இல் 11:33 பிப #

  வணக்கம் நண்பர் குலாம்,

  தனிப்பகுதியில் விவாதிப்பது என்றால், விவாதம் என்ற பெயரில் தனியாக ஒரு பக்கத்தை ஏற்படுத்தி அவரவர்களின் கருத்துகளை வாதங்களாக வைத்து விவாதிப்பது. அது இந்த தளத்திலோ, உங்கள் தளத்திலோ எங்கு என்றாலும் சம்மதமே. ஆனால் பிளாக்கர் தளத்தில் பின்னூட்டமிடுவது இன்னும் எனக்கு பிரச்சனையாகவே இருக்கிறது. பிளாக்கரில் வார்த்தைகளை எண்ணி பின்னூட்டமிடுவதைக் காட்டிலும், வேர்ட்பிரஸ் எளிதாக பின்னூட்ட முடியும் என்பதால் இந்த தளத்தில் விவாதிப்பதே என்னுடைய தெரிவு.

  அல்லாது, நீங்கள் உங்கள் தளத்திலும், நான் என்னுடைய தளத்திலும் மறுப்பாக்கம் இடுவதன் மூலம் என்றாலும் எனக்கு சம்மதமே.

  களம் எது என்பதை தீர்மானித்த பின் நான் என்னுடைய தளவாடங்களுடன் வருகிறேன்.

 9. G u l a m நவம்பர் 18, 2011 இல் 5:17 முப #

  அன்பு சகோ
  உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

  விவாதிப்பது தான் இங்கே முக்கியமே தவிர விவாத களம் முக்கியமன்று.,
  நீங்கள் தான் தெளிவாய் தெரிவு செய்ய வேண்டும் விவாதிப்பது குறித்து.,

  இங்கேயே விவாதிக்கலாம் என ஏற்கனவே சொல்லிவிட்டேன்
  //ஒகே., உடன்பாட்டு முறையில் உங்களோடு இங்கேயே இத்தளத்திலேயே விவாதிக்க ஒப்புக்கொள்கிறேன்., இன்ஷா அல்லாஹ்//

  அதைத்தொடர்ந்து சில கேள்விகளையும் முன்னிருத்தினேன்., ஆக நான் ஏற்கனவே என் விவாதப்பொருளை இங்கு பதிவு செய்துவிட்டேன்., ஆக விவாதிப்பதா அல்லது விவாதிப்பதை விட மறுப்பாக்கம் இடுவதோ உங்கள் பொறுப்பில் விடுகிறேன்.,

  எனினும் பின்னூட்டரீதியாக விவாதித்த வரையில் கும்மி, தருமி ஐயா, தமிழன், செங்கொடி வரை ஒரு நிலையில் கடவுள் – நாத்திகம் குறித்த கேள்விகளுக்கு இஸ்லாத்தை முன்னுருத்தியே பதிலிட்டனர்.என்பதையும் உங்கள் கவனத்திற்கு தருகிறேன்

  ஆக பின்னூட்டமிடுவதை விட மறுப்பாக்கம் பல பயன்பாடுகளை கொண்டது என்பதே என் நிலையும். நீங்கள் மறுப்பாக்கம் இடுவதாக இருந்தால் நான் முஸ்லிம் தள பதிவுகளை மேற்கோளாக தருகிறேன்.

  கடவுள் ஏன் இருக்க கூடாது?
  – இதை மையப்படுத்தியே ஆக்கமோ – விவாதமோ இருக்க வேண்டும் என்பதே என் அவா
  -இறை நாடினால் இனியும் சந்திப்போம்.

 10. nallurmuzhakkam நவம்பர் 18, 2011 இல் 9:33 பிப #

  வணக்கம் நண்பர் குலாம்,

  நாம் மறுப்பாக்கம் எனும் முறையிலேயே விவாதிக்கலாம்.நீங்கள் உங்களின் ஒரு பதிவை பரிந்துரை செய்யுங்கள், அதிலிருந்தே தொடங்கலாம்.

  • G u l a m நவம்பர் 19, 2011 இல் 4:25 முப #

   அன்பு சகோ
   உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

   தற்போதைக்கு .,
   கடவுள் ஏன் இருக்க க்கூடாது ?
   என்பது குறித்து பொதுவான ஆக்கம் ஒன்றை வரையுறுங்கள்., அதற்கு பதில் தரும் முகமாக நான் முஸ்லிம் தளத்தில் ஏற்கனவே ஆக்கம் பதியப்பட்டு விட்டது.,

   ஆக, நீங்கள் இனி பதியப்போகும் ஆக்கத்திற்கு பதில் ஏற்கனவே தயாராக வைத்திருக்கிறேன்.,

   அதையும் தாண்டி ஆக்கத்தில் உங்கள் கேள்விகளை முன்னிருத்தினால் தொடர்ந்து எனது கருத்தையும் இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறேன்.,

 11. செந்தோழன் நவம்பர் 20, 2011 இல் 10:25 பிப #

  இப்ராஹிம் அண்ணே ! ஏண்ணே கோபப்படுறீங்க நம்ம 2 பண்டிகையும் ஏழைகளை கவனத்தில் கொண்டே கொண்டாடப்படுகிறது என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.ஆனா ஏங்கூட சேர்கிற பயபுள்ள( மாற்று மதத்தவர்) என்ன சொல்றார்ன்ன இதையேதான் நாங்களும் கோவில்ல அறுத்து செய்கிறோம்.அப்படின்னா 2 மதமும் ஒன்றுதானே என்கிறான்.இப்போ ஹஜ் வழிபாட எடுத்துக்கொள்ளுங்கள் இங்கிருந்து அங்கேபோய் கல் கட்டிடத்தைசுற்றி வாராங்க,மொட்டை போடுறாங்க,புனிதநீருன்னு (ஜம்ஜம் தண்ணீர்) சொல்றாங்க,அப்புறம் அறிவியலின் உச்சகட்டமாம் சைத்தானை (நரபலியை தடுத்த நல்ல மனிதரை)கல்லவுட்டு எரிவது இதுதானே ஹஜ் யாத்திரை.இதைத்தான் இங்குள்ள இந்து மதத்திலும் செய்றாங்க அதுமட்டும் மூடநம்பிக்கை அப்படின்னு சொல்றோம்.எண்ணாண்ணே! இதுக்கு விளக்கம் சொல்லுங்கண்ணே எனக்கு ஒன்னும் புரியமாட்டேங்குது.எனக்கும் இது சரின்னுதான்படுது. ஓரே அறிவியல்,விஞ்ஞானம்னு படுச்சு பார்க்கும்போது கம்யூனிசம் சொல்றது சரின்னுபடுது இஸ்லாத்தில வருசத்தில் 5 நாள் மட்டும் ஏழைகளை கவனிக்கிறோம்(மற்ற நேரம் அவன் எக்கேடும் கெட்டுபோகிறான் ) ஆனால் கம்யூனிசத்தில் ஏழைகளே இருக்கக்கூடாதுன்னு சொல்றாங்க அப்போ எதுண்ணே சரியானது? ஏழையை இல்லாமல் ஒழிக்க அல்லாகிட்ட ஆயுதம் இல்லையா? ஆனால் கம்யூனிசத்தில் ஏழ்மையை ஒழிக்கும் அந்த ஆயுதம் இருக்குண்ணே. அல்லா தன் தூதர் இப்ராஹிமிடம் எனக்காக உன் குழந்தையை அறுத்து நரபலியிடு என்று கட்டளையிடுபவன் எப்படி கருணையாளனாய் இருக்கமுடியும்.(மதம் அன்பை போதிக்கிறதாம் எந்த முட்டாள் சொன்னான்) அப்போ இங்கே பூசாரி குழந்தையை கடத்திக்கொண்டு போய் கருணையே இல்லாமல் கடவுளின் பெயரால் நரபலி கொடுக்கின்றானே! அப்போ 2 மதமும் செய்றதுக்கு பெயர் தியாகமாண்ணே ! அப்போ உங்க அகராதியில தியாகம்ன்னா பெத்த புள்ளய போட்டு ஈவுயிரக்கமில்லாமல் கழுத்த அறுக்கிறதானா ? அண்ணே !சோமாலியா, சோமாலியான்னு ஒரு நாடு இருக்கு அல்லாஹ்வுக்கு தெரியுமான்னு கேளுங்க அங்கே சோறு தண்ணி இல்லாமல் பயபுள்ளைங்க சாகுறாங்க அல்லா எப்போ வருவான் எப்போ வருவாருன்னு கேட்டுக்கொண்டே இருக்கிறாங்க அங்குள்ள மக்கள்.நீங்க துஆ (செல்போன்) மூலமா செய்தியை சொல்லி அல்லாவை அங்கே ஒரு விசிட் போய்ட்டு வர சொல்லுங்கண்ணே! என்ன செய்றது அந்த நாட்டையும் அல்லாதான் படைத்திருப்பான் என்ன செய்ய பல வேலைகள் இருப்பதால் மறந்திருப்பான் நீங்கள் கண்டிப்பாக ஞாபகப்படுத்திடுங்கள். பசியோடுயிருக்கும் ஏழை மக்கள் மத்தியில் இப்ராஹிம் அண்ணன் குர் ஆன் ஹதீஸை படித்து விளக்கி பயான் செய்கிறார். இப்ராஹிம் ; கல்லில்யிருக்கும் தேரைக்கும் அல்லாவே உணவளிப்பவன். ஏழை ;எவண்டா அவன் இங்கே மனுசன் சோறு தண்ணியில்லாம தவிக்கிறான் அல்லா புடுங்கினாறாம்.எங்க ஏழ்மையை கேலி செய்யவா வந்திருக்க ஏய் !இவனை கல்லால் அடித்து வெரட்டுங்கடா………….!

  • S.Ibrahim நவம்பர் 21, 2011 இல் 10:20 முப #

   ///ஏழை ;எவண்டா அவன் இங்கே மனுசன் சோறு தண்ணியில்லாம தவிக்கிறான் அல்லா புடுங்கினாறாம்.எங்க ஏழ்மையை கேலி செய்யவா வந்திருக்க ஏய் !இவனை கல்லால் அடித்து வெரட்டுங்கடா………….!////

   ஏழைகளே ,இப்படி உத்தரவு போட்டு ஏமாற்றுபவர் எங்கே இருக்கிறார் தெரியுமா?இவர் உங்களுடன் எத்தனை நாட்கள் பட்டினியாக கிடந்தார் என்று தெரியுமா? ஏழைகள் உணவில்லாமல் இருக்கிறார்கள் அதனால் ஒருநாள் கூட வயிறு புடைக்க சாப்பிட மாட்டேன் என்று இருந்தது உண்டா? என்று இவரிடம் கேளுங்கள். இவர் எங்கேயோ கார்பொரேட் கம்பெனியில் வேலை பார்த்துக்கோ கொண்டு ,கொளுத்த தீனிகளை வயிற்றில் திணித்துக் கொண்டு கம்யுனிச நாடகத்தில் ஆட்டம் போடும் சோமாறி யாக இருப்பார். உழைப்பை பற்றி பேசும் அண்ணன் செங்கொடி தனது பெயரை மாற்ற எவ்வளவு கஷ்டப் படவேண்டும் என்பதை பக்கம் பக்கமாக எழுதுகிறார்.இவர்களுக்கு எல்லாம் பாமர மக்கள் உணவுக்காக ,அரசு சலுகைகளுக்காகக் என்ன பாடுபடுகிறார்கள் என்பது கடுகலவாது தெரியுமா?என்னவோ கீ போர்டில் தட்டிவிட்டால் ஏழைகளோடு உராவாடுவது போல் காட்டிக் கொள்கிறார்கள்.

   • S.Ibrahim நவம்பர் 21, 2011 இல் 10:52 முப #

    உணவுக்கே வழி இல்லாத ஏழைகளை இணையதளத்திலே அழைக்கிறார் என்றார் என்றால் செந்தோழன் எவ்வளவு அறிவுபூர்வமாக செயல்படுகிறார்!

   • S.Ibrahim நவம்பர் 23, 2011 இல் 5:17 முப #

    செந்தோழன் ,நீங்கள் சிவப்பு மயமாக பெயர்களை வைத்துக் கொள்வது ,சிவப்பு உடைகள் அணிவது,இதற்கும் பொதுவுடமை கொள்கைக்கும் என்ன தொடர்போ ,அது போன்றே ஹஜ் கிரியைகளும் ,.தனி ஒரு மனிதனாக என்று ஏக இறை கொள்கையை போரிட்ட இப்ராஹீம் நபி[அலை]அவர்களின் தியாக உணர்வுகளை நினைவு கூறும் வண்ணமாக,நடை பெரும் செயல்பாடுகளைத்த தவிர அதில் கட்டாய கடமைகள் இல்லை.அது போன்றே ஜம்ஜம் நீர் புனிதமாக கருதப் படவில்லை.ஆனால் அதன் அற்புதமும் மகிமையுமே போற்றப்படுகிறது.25 லட்சம் மக்கள் கூடும் நாட்களில் அனைத்து மக்களுக்கும் தலா 20௦ லட்டர் ஒரு கிணற்றிலிருந்து கிடைக்கச்செயகிறது என்றால் அதன் அற்புதத்தை மறைக்கமுடியுமா?
    மேலும் இஸ்லாத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ஏழைகளை கவனிக்கவில்லை.இரு இரு பெருநாட்களையும் குறிபிட்டது ஏன் என்றால் எங்களது மகிழ்ச்சிகரமான நாட்களும் ஏழைகளின் மகிழ்ச்சியில் பகிர்ந்து கொள்வதே .நாங்கள் கீபோர்டில் உட்கார்ந்து கொண்டு ஏழைகளைப் பற்றி பேசவில்லை.ஏழைகளின் வாசல் தேடி உதவி செய்கிறோம் என்பது கலை நிகழ்ச்சி காணும் கம்யுனிஸ்ட் களுக்கு தெரிய நியாயமில்லை. இன்னும் பிச்சைகாரர்கள் பிச்சை எடுக்க தேர்ந்தெடுத்த நாளை பார்த்தீர்களா? வெள்ளிகிழமை என்னும் ஜும்மா நாளில். சக்காத்,சதக்கா ,போன்ற கடமைகள்,அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க நீ வயிற்றை நிரப்பாதே போன்ற நபிமொழிகள் ஏழைகளின் மீது இஸ்லாம் காட்டும் அக்கறையை வெளிப்படுத்தும்.எங்களது பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு பெரும் செல்வந்தர் தனது வருட “ஏழைவரி” என்னும் சக்காத்தை வருடம் தோறும் தனது உறவு,மற்றும் ஊரை சேர்ந்த [சுமார்ஐந்து லட்ச ரூபாய்] ஒரே நபருக்கு கொடுத்து அவர்கள் அதன் மூலம் வியாபாரம் செய்து முன்னேற வழிவகுக்கிறார்.இது போன்று இரண்டு கோடி ரூபாய் சக்காது கொடுக்கும் செல்வந்தர்களை நான் அறிவேன் என்றும் அந்த மக்களின் சக்காதை முறைப்படுத்தினால் ஏழைகள் இல்லாமற் செய்துவிடலாம் என்று முன்பு ஒரு மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த ஒருவர் இப்போது தமிழ்நாடு தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி ஒரு நிகழ்ச்சயில் கூறியதை இங்கு நினைவு கூறுகிறேன்.கம்யுனிசம் ஏழைகளை இல்லாமற் செய்யுமா?அல்லது இன்னும் ஏழைகளை அதிகரிக்க செய்யுமா?என்று ரஷ்யாவில் சென்று பார்த்து வந்தால்தான் தெரியும்.பெயர் மாற்றம் செய்யவே உழைக்காதவர்கள் ,இது போன்று விசயங்களில் அரசு சலுகைகள் பெற ஏழை மக்கள் படும் அவஸ்தைகளை நேரில் கண்டு அனுபவித்து பார்க்க ,பகிர்ந்து கொள்ள சங்கடப் படுபவர்கள குளிர் சாதன அறையிலிருந்து கொண்டு கீ போர்டில் ஏழைகளை இல்லாமற் செய்வோம் என்று தட்டுவது போன்ற காரியங்களை இஸ்லாம் செய்ய வில்லை.கலை நிகழ்ச்சயில் ஏழைகளாக நடித்தும் காட்டுவதிலும் இஸ்லாம் ஏழை உபகார நிகழ்ச்சியாக்கவில்லை. கிறித்தவர்கள் ஏழை நோயாளிகளை கவனித்தது போன்று உங்களது கம்யுனிச காம்ரேடுகள் செயல் பாட்டினை எங்காவது என்றாவது நடத்தியதாக கூற முடியுமா?
    தனது மகனை சில சமயங்களில் உன்னை கொன்னுடுவேன் என்று சொன்னால் அந்த தாய் பெற்ற பிள்ளையை நரபலி கேட்கிறார் என்று செந்தோழன் பொருள் கொள்வாரா என்ன ?
    ///பசியோடுயிருக்கும் ஏழை மக்கள் மத்தியில் இப்ராஹிம் அண்ணன் குர் ஆன் ஹதீஸை படித்து விளக்கி பயான் செய்கிறார். ///
    நீங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு ரஷ்யாவைப் பற்றி சொல்லாதீர்கள் .இந்தியாவில் மாதம் இப்பொது இருபது கிலோ அரிசி இலவசமாக கிடைக்கிறது .ஆகவே இங்கே யாரும் பசியோடு இருக்கவில்லை.ஏழைகளை அணைத்துக் கொண்டு பணக்காரர்கள் மத்தியில் வியர்வை உலருமுன் உழைப்பவர்களின் கூலியை நியாயமான முறையில் கொடுத்துவிடுங்கள் என்ற குர்ஆன் ஹதிதையே பயான் பண்ணிக் கொண்டிருக்கிறோம் .எங்களின் பயானின் பயன் ஏழைமக்களுக்கு தெரியும்.

 12. செந்தோழன் நவம்பர் 23, 2011 இல் 11:48 பிப #

  நண்பர் இப்ராஹிம்
  நான் கேட்ட கேள்விகளுக்கு நேரடியன பதில் கூறவில்லை அதை விட்டுட்டு வேறு எதெல்லாமோ சொல்றீங்க.இந்துகளின் சடங்குகளும்,முஸ்லீம் சடங்குகளும் ஒன்றாக இருப்பதாக சொல்லியிருந்தேன் அதற்கு நேரடியான பதில் இல்லை.இப்ராஹிம் நபி நரபலி கொடுப்பதும்,பூசரி நரபலி கொடுப்பதும் ஒன்றா?கோவிலை சுற்றுவதும்,காபாவை (மெக்கா)சுற்றுவதும் ஒன்றா?கங்கை நீரும் ஜம் ஜம் நீரும் ஒன்றா?சைத்தானை கல்லெறிவதும்,மகரஜோதி காண்பதும் ஒன்றா?இதுபோல் இன்னும் எத்தனையோ ஒற்றுமைகளை என்னால் விளக்கமுடியும்.இவை அனைத்தும் ஒன்றென்றால் இஸ்லாத்தின் தனித்துவம் என்ன? விளக்க முடியுமா ?
  \\ இன்னும் பிச்சைகாரர்கள் பிச்சையெடுக்க தேர்ந்தெடுத்த நாள் வெள்ளிக்கிழமை\\ என்று கூறியிருந்தீர்கள்.
  ஏன் ஒரு வர்க்கம் பிச்சையெடுக்க வேண்டுமென்று யோசித்தீர்களா? சரி உங்க கூற்றுப்படியே கேட்கிறேன் சதக்கா என்று சொல்லி தர்மம் 1400 ஆண்டுகளாக செய்கிறீர்கள் அதனால் பயனடைந்தவர் உண்டா?பிச்சை எடுக்கதா (இல்லாத) சமூகத்தை உருவாக்கியிருக்கீங்களா?குறைந்த பட்சம் இஸ்லாமிய நாட்டிலாவது அந்த மாற்றத்தை கொண்டுவர முடிந்ததா !முகம்மது நபி பிறந்த தேசத்தில்கூட முற்றாக ஒழிக்கமுடியவில்லை.1400 ஆண்டுகளாக பிச்சையெடுக்கும் சமூகம் எந்த மாற்றமில்லாமல் அப்படியேதான் இருக்கிறது நீங்களும் அப்படியேதான் வைத்துள்ளீர்கள் இனியும் அப்படியேதான் வைத்துக்கொண்டிருபீர்கள்.ஏனென்றால் நீங்கள் பிச்சை போட (நீங்க தர்ம பிரபுவாக காட்டிக்கொள்ள) ஒரு சமூகம் தேவை.இல்லையென்றால் அல்லாவுடைய கூற்று தவறாக போய்விடுமல்லவா?
  ஏழையில்லாத,பிச்சைகாரர் இல்லாமல் ஒழித்த ஒரு இஸ்லாமிய தேசத்தை உங்களால் அடையாளம் காட்டமுடியுமா? ஆனால் என்னால் அடையாளம் காட்டமுடியும்.சோவியத் ரஷ்யாவில்(இப்போதுள்ள ரஷ்யா அல்ல),கியூபாவில்,இன்னும் சோசலிசத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஏழையில்லை,பிச்சைகாரன் இல்லை இவைகளை முற்றிலும் ஒழித்துள்ளது.
  அங்கே எல்லோருக்கும் வேலை,எல்லோருக்கும் உணவு,எல்லோரும் சமம்,உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற பாகுபாடுயில்லை,மனிதர் அனைவரும் சமம்.
  இப்போதாவது புரிகிறதா தனி ஒரு மனிதர் தர்மம் செய்து ஏழ்மையை ஒழிக்கமுடியாதென்று உன்னதமான,உயர்ந்த இலட்சியம் கொண்ட கம்யூனிச அரசால் மட்டுமே முடியுமென்று புரிகிறதா.
  நாங்கள் வீதி நாடகம் போடுவது மக்கள் பிரச்சினையை அவங்க மொழியில் சொல்லி அவங்களை அரசுகெதிராய் போராட தூண்டுவதற்க்குதான்
  \\பசிப்பவனுக்கு மீனை கொடுப்பதைவிட, மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதே
  மிக சிறந்ததாகும்\\ இதுதான் எங்கள் நிலை.
  வாருங்கள் நண்பரே! நம் பாட்டாளி வர்க்கத்திற்காக ஒண்றினைந்து போராடுவோம்.ஏழ்மையை இல்லாமல் செய்வோம். புரட்சிகர அமைப்புகள் காத்திருக்கின்றன.ஒண்றினைந்து செயலாற்றுவோம்.போராடுவோம்,வெல்வோம்.!

  • Robin நவம்பர் 24, 2011 இல் 12:16 பிப #

   //இந்துகளின் சடங்குகளும்,முஸ்லீம் சடங்குகளும் ஒன்றாக இருப்பதாக சொல்லியிருந்தேன் அதற்கு நேரடியான பதில் இல்லை.இப்ராஹிம் நபி நரபலி கொடுப்பதும்,பூசரி நரபலி கொடுப்பதும் ஒன்றா?கோவிலை சுற்றுவதும்,காபாவை (மெக்கா)சுற்றுவதும் ஒன்றா?கங்கை நீரும் ஜம் ஜம் நீரும் ஒன்றா?சைத்தானை கல்லெறிவதும்,மகரஜோதி காண்பதும் ஒன்றா?//

   யூத மார்க்கம், கிறிஸ்தவம், பாகனிசம் ஆகிய மதங்களிலிருந்து திருடப்பட்ட கருத்துக்களோடு தன்னுடைய கற்பனையையும் கலந்துதான் முகமது இஸ்லாமிய மதத்தை உருவாக்கியிருக்கிறார். எனவே நீங்கள் சொன்ன வழிபாட்டு முறைகள் பாகனிசத்திலிருந்து திருடப்பட்டிருக்கலாம்.

   சுன்னத், ஓரிறைக் கொள்கை போன்றவை யூத மார்க்கத்திலிருந்து திருடப்பட்டவைதான்.

  • S.Ibrahim நவம்பர் 25, 2011 இல் 5:27 முப #

   .

   செந்தோழன் ,இப்ராஹீம் நபி[அலை] அவர்கள் தனது மகனை அறுத்து பலியிட முனைந்ததற்கு காரணங்கள் உண்டு.அது பற்றி தங்களுக்கு தெரிந்திருந்தும் பூசாரி பலியிடுவதற்கும் இதற்கும் வெகு தூரம் என்பதை அறிந்தும் இரண்டையும் ஒப்பிட்டாலே கம்யுனிசத்தை காக்க முடியும் என்ற உங்களது நம்பிக்கைக்கு குறுக்கே நான் இல்லை.உமர் [ரலி ]அவர்கள் ஹஜ்ஜின் போது தவாபில் அதாவது கஹ்பாவை சுற்றுகையில் ஹஜ்ருல் அஸ்வத் ஐ நோக்கி ,அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீ கல்தான் ,உன்னால் எந்த நன்மையையும்,எந்த தீமையும் செய்ய முடியாது என்பதை நான் அறிவேன்.நபி[ஸல்]அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் உன்னை முத்தமிட மாட்டேன் என்று கூறி அந்த கல்லை முத்தமிட்டார்கள் பிறகு நாம் இப்போது ஏன் இப்படி தோள்களை குலுக்கியவாறு ஓட வேண்டும்?.நான் அன்று செய்தது நம் பலத்தை இணை வைப்பவர்களுக்கு காட்டுவதர்க்காகத்தானே.ஆனால் இன்று அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான் பிறகு ஏன் செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டு,எனினும் நபி[ஸல்] அவர்கள் செய்தார்கள்.அதை விட்டுவிட நாம் விரும்பவில்லை என்று கூறினார்கள் {.நூல்.புகாரி}
   முதன்மையான பள்ளிவாசல் என்பதால் ,இறைவனிடம் எங்களை இந்த உலகிலும் மறுமையிலும் அருள்புரியுமாறு பிரார்த்தனையை செய்தவாறு ஏழுமுறை சுற்றுவது கடமை என்பதால் மட்டுமே .
   ///கங்கை நீரும் ஜம் ஜம் நீரும் ஒன்றா?///
   இல்லை .மேலும் http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/438_zamzam_neer/
   இந்த சிறப்புகள் கங்கை நீருக்கு இருக்கிறதா? மேலும் ஜம்ஜம் நீர் குடிப்பதினால் பாவங்கள் அழியும். சுவர்க்கம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் அல்ல.முஹம்மது நபி[ஸல்] அவர்கள் ஹஜ்ஜில் அதை கொண்டு வந்தார்கள் .அதை அருந்தினார்கள் .அதற்காகவே இப்போதும் அவ்வாறு செய்யப்படுகிறது .அவ்வாறு கொண்டு வரப்படாவிட்டாலும் ஹஜ் கடமையில் குறைவு ஏற்படாது.
   ////சைத்தானை கல்லெறிவதும்,மகரஜோதி காண்பதும் ஒன்றா?////
   மகர ஜோதி என்பது கேரளா அரசுவின் மின்வாரியத்தினால் மக்களுக்கு தெரியாத வண்ணம் மறைமுகமாக ஏற்றப்படுவது .மேலும் அது இறைவன் புறத்தே வெளிப்படுவதாக ஐயப்ப பக்தர்கள் நம்புகிறார்கள்.அதை காணுவதுதான் விரதத்தின் உச்சகட்ட வணக்கமாக செய்யப்படுகிறது.ஆனால் சைத்தானை கல்லெறிவது என்பது எத்தனை செங்கொடிகள் வந்தாலும் மனஉறுதியை தளரவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி உறுதி எடுக்கும் நிகழ்வு.
   //இதுபோல் இன்னும் எத்தனையோ ஒற்றுமைகளை என்னால் விளக்கமுடியும்.///
   இதுபோல் நீங்கள் கூறும் அனைத்து ஒற்றுமைகளும் தவறு என்றும் என்னால் விளக்க முடியும்.
   ///இவை அனைத்தும் ஒன்றென்றால் இஸ்லாத்தின் தனித்துவம் என்ன? விளக்க முடியுமா ?///
   இஸ்லாத்தின் தனித்துவம் கம்யுனிசமும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் எதைக் கண்டு அஞ்சி இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளார்களோ அதுதான் இஸ்லாத்தின் தனித்துவம்.
   ///ஏழையில்லாத,பிச்சைகாரர் இல்லாமல் ஒழித்த ஒரு இஸ்லாமிய தேசத்தை உங்களால் அடையாளம் காட்டமுடியுமா? ஆனால் என்னால் அடையாளம் காட்டமுடியும்.சோவியத் ரஷ்யாவில்(இப்போதுள்ள ரஷ்யா அல்ல),கியூபாவில்,இன்னும் சோசலிசத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஏழையில்லை,பிச்சைகாரன் இல்லை இவைகளை முற்றிலும் ஒழித்துள்ளது.///
   நீங்கள் ஏழைக்கு என்ன வரையறை வைத்துள்ளீர்களோ தெரியவில்லை.ஆனால் தனி நபர் வருமானத்தில் க்யுபா வை விட சவூதி,குவைத் ,யு.எ .இ ,புருனை ,கத்தார் போன்ற நாடுகள் தனிநபர் சராசரி வருமானத்தில் முன்னிலை வகிக்கின்றன .
   ///அங்கே எல்லோருக்கும் வேலை,எல்லோருக்கும் உணவு,எல்லோரும் சமம்,உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற பாகுபாடுயில்லை,மனிதர் அனைவரும் சமம்..///
   ஆனால் காஸ்ட்ரோவின் மகன்களுக்கு இதிலிருந்து விதி விலக்குகள் உண்டு அல்லவா?சமிபத்தில் அவர்கள் ஏராளமான சொத்துக்கள் சேர்த்துவைத்துள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதே .ஆனால் இது போன்று நிகழ்ச்சியை கொஞ்சம் கவனியுங்கள் /முஹம்மது நபி[ஸல்] அவர்கள் தனது சொத்துக்களை பொதுவுடமை ஆகிவிட்டதால் ,அவர்கள் மரணத்திற்கு பின்னர் அவரது மகள் இதயத்துண்டாக வர்ணிக்கப்பட்ட பாத்திமா [ரலி] தனது வறுமை நிலையில் அடுத்த கலிபாகவாக இருந்த அபுபகர்[ரலி] தனது தந்தையின் சொத்தில் பங்கு கேட்டபொழுது அவரது வாக்குறுதிக்கு மாற்றமாக் செயல்பட முடியாது என்பதால் பாத்திமா[ரலி] அவர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.அதைப்போலவே உமர்[ரலி] ஆட்சி காலத்தில் உமர் அவர்கள் நீண்ட அங்கி அணிந்து பயான் பண்ணிக்கொண்டு இருக்கையில் ஒரு தோழர் எழுந்து கேட்கிறார் ,
   ஜனாதிபதி அவர்களே! தாங்கள் அணிந்து இருக்கும் இந்த ஆடை கடைசியாக நடந்த போரில் கைப்பற்ற பொருளில் இருந்து கிடைத்தது தானே ,அப்படியெனில் எங்களுக்கு கிடைத்த பங்கில் இடுப்பு அளவுக்கே சட்டை தைக்கும் அளவுக்கே துணி இருந்தது ஆனால் உங்களுக்கு மட்டும் முழங்கால் கீழ் வரை அங்கி தைக்க துணி கிடைத்தது எப்படி?தாங்கள் அதிக பங்கு எடுத்துள்ளீர்களா?என்று கேட்டார். உடன் அவர்கள் நான் ஜனாதிபதி என்னை பார்த்து இப்படிகேட்பதா?என்றெல்லாம் கேட்கவில்லை.உமர்[ரலி]அவர்கள் பொறுமையாகவே பதில் சொன்னார்கள்,எனது மகன் இப்னு உமர் அவர்களும் அந்த போரில் கலந்து கொண்டார்,அவருக்குரிய பங்குக்கான துணியையும் எனக்கு அன்பளிப்பாக தந்துவிட்டார் என்று கூறினார். இந்த சமத்துவத்தை ,இந்த ஜனநாயகத்தை நீவிர் இன்றளவும் எங்கும் கண்டதுண்டா?
   ///சோசலிசத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஏழையில்லை,பிச்சைகாரன் இல்லை இவைகளை முற்றிலும் ஒழித்துள்ளது.
   அங்கே எல்லோருக்கும் வேலை,எல்லோருக்கும் உணவு,எல்லோரும் சமம்,உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற பாகுபாடுயில்லை,மனிதர் அனைவரும் சமம்.
   இப்போதாவது புரிகிறதா தனி ஒரு மனிதர் தர்மம் செய்து ஏழ்மையை ஒழிக்கமுடியாதென்று உன்னதமான,உயர்ந்த இலட்சியம் கொண்ட கம்யூனிச அரசால் மட்டுமே முடியுமென்று புரிகிறதா///
   வீதி நாடக போதையில் இருப்பது புரிகிறது.பசிப்பவனுக்கு கைகளே இல்லாதபொழுது மீன்பிடிக்க நாங்கள் கற்று கொடுப்பது இல்லை .மீனைத்தான் நாங்கள் கொடுக்கிறோம். அவனை கால்களால் மீன்பிடிக்க கற்றுக்கொள்ள கட்டாயபடுத்துவதும் , இல்லையெனில் சைபிரியாவுக்கு அனுப்புவதும் நாங்கள் செய்யவில்லை.

   • செந்தோழன் நவம்பர் 29, 2011 இல் 10:04 பிப #

    நண்பர் இப்ராஹிம்
    நான் கேட்ட கேள்விக்கு இதுவரை நேரடியான பதில் இல்லை.நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு இஸ்லாத்தை பார்க்கிறீர்கள்.தவிர்த்து புத்திகொண்டு பாருங்கள் அதிலுள்ள ஓட்டை தெரியும்.நீங்கள் குர் ஆனை படிக்கவில்லை என்பதை தோழர் தஜ்ஜால் மீண்டும் நினைவூட்டி பதிவிட்டிருக்கிறார்.இப்பவாவது குர் ஆனை ஆழ்ந்து படித்துவிட்டு நாம் எந்த தலைப்பில் விவாதம் தொடங்கினோம் அதற்கு குர் ஆனில் விடையிருக்கிறதா? என்பதை படித்து பதில் தாருங்கள்.நீங்கள் இப்படி உணர்ச்சி வசப்படுதலை பார்த்தால் நீங்கள் ஒரு இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்ததனால் (மதம் எனும் போதையேற்றி ) இப்படி உணர்ச்சி வசப்பட்டு உங்கள் அல்லாவை காப்பாற்ற அல்லாடுகிறீர்கள்.ஒருவேளை இந்து பெற்றோருக்கு பிறந்திருந்தால் நீங்கள் Rss ஆக அல்லவா ஆகியிருப்பீர்கள்.நாம் எதை பின்பற்றுகிறோமோ அதை பற்றி தெரிந்து கொள்ளவேண்டாமா?ஏனென்றால் உணர்ச்சி வசப்பட்டு ஒரு விசயத்தை பின்பற்றுவதற்க்கும்,சிந்தித்து, படித்து, தெரிந்துகொண்டு பின்பற்றுவதற்க்கும் வித்தியாசம் இருக்கிறது.இனிமேலாவது குர் ஆனை ஆழ்ந்து படியுங்கள்.இனி தலைப்பு தெரிந்து பதிவிடுங்கள்.என்னுடைய கேள்வியின் சுருக்கம் என்னவென்றால் “இஸ்லாமிய வழிபாடும்,இந்துக்களின் வழிபாடும் ஒன்றாக இருப்பதேன்?இரண்டும் ஒன்றெனில் இஸ்லாத்தின் தனித்துவம் என்ன?இரண்டு மதமும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் வழிபடுகிறது என்றால் இஸ்லாத்தில் மட்டும் அறிவியல் பூர்வமானது (இந்துக்கள் அப்படி சொல்வதில்லை) என்று பிதற்றுவதேன்?ஒருவரது நம்பிக்கை சார்ந்த செயல் மட்டும் அறிவியல் ஆகாது என்பது உங்களுக்கு தெரியுமா?
    சரி “முஹம்மது நபி’ என்ன செய்தாரோ அதை அப்படியே எந்த சுயசிந்தனையின்றி பின்பற்றும் நீங்கள் அவர் 50 வது வயதில் 6 வயது சிறுமியை (ஆயிஸாவை)திருமனம் புரிந்ததை மட்டும் பின்பற்ற தவறுகின்றீர்களே ஏன்?அது சுன்னத் இல்லையா?
    எங்கே இதை பின்பற்றி பாருங்கள் அப்போ தெரியும்.பாலியவிவாகம் என்று கைது செய்வாங்க!அப்போ எந்த அல்லாவும் காப்பாற்ற வரமாட்டான்.ஏன் உங்க மதத்திலுள்ளவங்களே உங்களை காறி துப்புவாங்க!அப்போ நீங்க சொல்லுங்க நான் நபியுடைய சுன்னத்தை தான் பின்பற்றினேன் என்று சொல்லிப் பாருங்கள்.அப்போது புரியும் இது காலத்திற்கு உதவாத உதவாக்கரை மதமென்று.
    “கம்யூனிசம் பற்றிய விசயங்களுக்கு தனியாக பதிவிடுங்கள் அதற்கு பதில் தருகிறேன்.அதற்குமுன் கம்யூனிசம் பற்றி இந்த தளத்திலோ அல்லது கீழே தரப்பட்டிருக்கும் தளத்திலோ படியுங்கள் பின்பு விவாதிக்கலாம்.http://www.vinavu.com/
    http://senkodi.wordpress.com/

 13. தஜ்ஜால் நவம்பர் 29, 2011 இல் 3:50 பிப #

  இப்ராஹிம் அவர்களுக்கு,
  ///,,,,அவருக்கு இஸ்ஹாக்கைப் பற்றியும் இஸ்ஹாக்குப் பின் யாகூப் பிறப்பை பற்றியும் கூறினோம் [11;71] ….. ….. …… தன மகன் சாகவே மாட்டான் தெரிந்திருந்தால் யார் வேண்டுமானாலும் அறுத்து பலியிட முன் வருவர். எனவே இஸ்மாயிலை அறுத்து பலியிடவே வந்த கட்டளையாகத்தான் கொள்ளமுடியும்./// இடுகையை முழுவதுமாக உள்வாங்கியிருந்தால் இப்படி தத்து பித்து என்று எழுத வேண்டியிருக்காது. நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று நன்றாகப் படித்துப் பாருங்கள் நண்பரே. ///அல்லாஹ்வால் நன்மாராயம் கூறப்பட்ட மகனையே நரபலி சோதனைக்கு உட்படுத்தியதாகக் குர்ஆன் 37:101 கூறுகிறது. குர்ஆனின் 6:84, 11:71-72, 15:53, 19:49, 21:72, 29:27, 37:113, 38:45, 51:28 வசனங்கள், இஸ்ஹாக்கை, அல்லாஹ்வால் நற்செய்தியின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்ட மகனென்று உறுதி செய்கிறது./// குர் ஆனையாவது முழுவதுமாக வாசித்திருக்கிறீர்களா?
  உங்களது இதர உளறல்களை, நண்பர் செந்தோழன் மிக அழகாக தோலுரித்துக் காண்பித்துவிட்டார். நன்றி செந்தோழன்…!
  தஜ்ஜால்

  • S.Ibrahim திசெம்பர் 2, 2011 இல் 9:03 பிப #

   செந்தோழன் ,
   ///இஸ்லாமிய வழிபாடும்,இந்துக்களின் வழிபாடும் ஒன்றாக இருப்பதேன்?இரண்டும் ஒன்றெனில் இஸ்லாத்தின் தனித்துவம் என்ன?இரண்டு மதமும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் வழிபடுகிறது என்றால் இஸ்லாத்தில் மட்டும் அறிவியல் பூர்வமானது (இந்துக்கள் அப்படி சொல்வதில்லை) என்று பிதற்றுவதேன்?ஒருவரது நம்பிக்கை சார்ந்த செயல் மட்டும் அறிவியல் ஆகாது என்பது உங்களுக்கு தெரியுமா?///
   இஸ்லாமிய வழிபாடு ஒரே சீரமைப்பு ,வரைமுரைப்படுத்தப்பட வழிபாடு முறைகள் ,மேலும் கல்லையோ ஆலயத்தையோ நாங்கள் வழிபடவில்லைஎன்பதற்கான விளக்கம் தந்துள்ளேன் .இஸ்லாம் அறிவியலுக்கு இஸ்லாம் முரண்பாடாது என்றே கூறுகிறோம்
   ///சரி “முஹம்மது நபி’ என்ன செய்தாரோ அதை அப்படியே எந்த சுயசிந்தனையின்றி பின்பற்றும் நீங்கள் அவர் 50 வது வயதில் 6 வயது சிறுமியை (ஆயிஸாவை)திருமனம் புரிந்ததை மட்டும் பின்பற்ற தவறுகின்றீர்களே ஏன்?அது சுன்னத் இல்லையா?//
   இன்னும் நீங்கள் கேட்கலாம் ,முஹம்மது நபி ஒட்டகத்தில் பயணம் செய்தார்,நீங்களும் ஒட்டகத்தில் பயணம் செய்ய வேண்டியதுதானே என்று கேட்கலாம்.தொழுகை தவிர மற்ற நேரங்களில் மது அருந்த அனுமதி இருந்ததே இப்போது ஏன் அருந்தவில்லை?என்று கேட்கலாம் .தொழுகை தவிர மற்ற நேரங்களில் இருந்த அனுமதி பின்னர் முற்றிலுமாக தடுக்கப்பட்டது.அக்காலத்தில் உலகம் முழுவதும் இருந்த நடைமுறையிலே ஆயிசாவின் திருமணம் நடந்து. அதன் பின்னர் பெண்ணின் சம்மதம் இன்றி நடை பெரும் திருமணம் செல்லாது என்ற சட்டம் வந்த பின் ஆறு வயது சிறுமியிடம் சம்மதம் கேட்க முடியாது என்பதால் இப்போது பின்பற்றப்படவில்லை. இது பற்றிய அநேக விளக்கங்கள் தந்தாயிற்று
   ////தெரியும்.பாலியவிவாகம் என்று கைது செய்வாங்க!அப்போ எந்த அல்லாவும் காப்பாற்ற வரமாட்டான்.ஏன் உங்க மதத்திலுள்ளவங்களே உங்களை காறி துப்புவாங்க!அப்போ நீங்க சொல்லுங்க நான் நபியுடைய சுன்னத்தை தான் பின்பற்றினேன் என்று சொல்லிப் பாருங்கள்.அப்போது புரியும் இது காலத்திற்கு உதவாத உதவாக்கரை மதமென்று.///
   “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு ”
   //அதற்குமுன் கம்யூனிசம் பற்றி இந்த தளத்திலோ அல்லது கீழே தரப்பட்டிருக்கும் தளத்திலோ படியுங்கள் பின்பு விவாதிக்கலாம்.http://www.vinavu.com/
   http://senkodi.wordpress.com///
   அங்கெ படித்து விவாதம் எல்லாம் பண்ணியாயிற்று ,கீழே உள்ள சுட்டிகளை படித்து கம்யுனிசம் பற்றி விளக்கம் தாருங்கள்
   வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – I,
   http://indiancommunism.wordpress.com/2010/02/27/communism-commune-sex-rape-intercourse-etc-1/
   வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – II,
   http://indiancommunism.wordpress.com/2010/02/28/communism-commune-sex-rape-intercourse-etc-2/
   வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – III,
   http://indiancommunism.wordpress.com/2010/03/07/communism-commune-sex-rape-intercourse-3/

   • செந்தோழன் திசெம்பர் 14, 2011 இல் 2:03 பிப #

    இப்ராஹிம் அவர்களுக்கு.
    வேலைப்பளுவின் காரணமாக பதில் எழுத தாமதமாகிவிட்டது.தாமத்திற்க்கு வருந்துகிறேன்.
    நாம் எந்த தலைப்பில் வாதம் செய்கிறோம் என்பதை புரிந்து அதற்கு பதில் சொல்லுங்கள்.ஆத்திரப்படாதீர்கள்.அல்லாஹ்வை காப்பாற்றும் உங்கள் முயற்சியை பார்த்து அல்லாஹ்வே திகைத்திருப்பான்.காப்பாற்றும் போட்டியில் நீங்கள் முந்திக்கொண்டீர்கள்.
    ஆனாலும் நான் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலில்லை.அப்போ இரு மதங்களும் ஒன்று என்பதை ஒத்துக்கொள்கிரீர்களா? இஸ்லாம் தனித்துவமானதல்ல,அறிவியல் பூர்வமானதுமல்ல.என்பதை ஏற்றுக்கொள்கிரீர்களா?இல்லையென்றால் இருமத சடங்குகளும்,வழிபாடுகளும் ஒன்றாக இருப்பதேன்? இதற்கு சரியான பதில் இருந்தால் சொல்லுங்கள்.
    // ,இப்ராஹீம் நபி[அலை] அவர்கள் தனது மகனை அறுத்து பலியிட முனைந்ததற்கு காரணங்கள் உண்டு.அது பற்றி தங்களுக்கு தெரிந்திருந்தும் பூசாரி பலியிடுவதற்கும் இதற்கும் வெகு தூரம் என்பதை அறிந்தும் இரண்டையும் ஒப்பிட்டாலே கம்யுனிசத்தை காக்க முடியும் என்ற உங்களது நம்பிக்கைக்கு குறுக்கே நான் இல்லை.// இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்ககூடாது.அப்புறம் அல்லா மன்னிக்கமாட்டான்!

 14. S.Ibrahim திசெம்பர் 16, 2011 இல் 9:54 முப #

  எந்தோழா,செந்தோழா,//நான் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலில்லை.அப்போ இரு மதங்களும் ஒன்று என்பதை ஒத்துக்கொள்கிரீர்களா? இஸ்லாம் தனித்துவமானதல்ல,அறிவியல் பூர்வமானதுமல்ல.என்பதை ஏற்றுக்கொள்கிரீர்களா?இல்லையென்றால் இருமத சடங்குகளும்,வழிபாடுகளும் ஒன்றாக இருப்பதேன்? இதற்கு சரியான பதில் இருந்தால் சொல்லுங்கள்.///
  இஸ்லாமியர்கள் வணக்க வழிபாடுகளை நீங்கள் நன்கு அறிவீர்கள் ,இருந்தும் ஒரு குறிப்பிட்ட செயலைக் கொண்டு தலையில் பூவாக வைத்து ஆட்டம் போடுகிறீர்கள்.முஸ்லிம்கள் ஐந்து நேர தொழுகை போல் எவரும் தொழுவதில்லை .நோம்பு வைப்பதில்லை. சக்காத் எனும் ஏழை வரி கொடுப்பதில்லை.இன்னும் திருமணம் ,பாகபிரிவினை ,தொழில் ,போன்றவற்றில் ஒரு வரைமுறை ஏனைய மதங்களில் வகுக்கப்படவில்லை.இப்படி எம் மதத்திலும் காணப்படாத ,நிறைய வழிபாடுகளை அடுக்கி கொண்டேபோகலாம. ஆனால் தாங்கள் இவற்றை எல்லாம் மூடி மறைத்துவிட்டு ஹஜ் கிரியைகளில் உள்ள ஓரிரு செயல்பாடுகளை வைத்து இரு மத சடங்குகளும் ஒன்றுதானே என்கிறீர்கள். நெல்லை ,தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களில் பஸ்ஸில் சில ரவுடிகள் டிக்கெட் எடுப்பதில்லை.டிக்கெட் கேட்டால் அடி விழும் என்பதால் கண்டக்டர்களும் டிக்கெட் கேட்பதில்லை.அதே போலவே பஸ் கட்டணம் உயர்வை கண்டித்து சென்னையில் பு.மா.இ.மு வும் டிக்கெட் எடுக்காமல் போராட்டம் நடத்தினார்கள்.இப்போது நான் கேட்கிறேன் ,இரண்டும் ஒரே செயல்கள் அல்லவா?ஏற்றுக் கொள்வீர்களா? அரசியல் கட்சித்தலைவர்கள் ,சிலை வணக்ககாரர்கள் போலவே பகுத்தறிவாதிகளும் பெரியாருக்கு சிலை எடுத்து வணக்கம் தெரிவிக்கிறார்கள் ,இரண்டும் ஒரே வழிபாடுகளா?அல்லது ஒரே வணக்கம் என்பீர்களா?
  ஆயின் ,இஸ்லாம் தனித்துவமிக்கதே .சிறுநீர் கழிப்புக்கு பின்னர் தண்ணீர் உபயோகிப்பது முதல் பெருவெடிப்பு கொள்கை வரை இஸ்லாம் அறிவுபூர்வமானதே என்பதை பல இஸ்லாமிய தளங்களில் வாதங்கள் வைக்கப்பட்டுள்ளதை தாங்கள் அறிந்திருக்கக் கூடும் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: