இஸ்லாம் போதிப்பது எதை? ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

9 டிசம்பர்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 15


மதுவும், வட்டியும்,  பல தெய்வக் கொள்கையும், உருவ வழிபாடும் முஹம்மது நபிக்கு முன்பிருந்தவைகளே என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஈனத்தனமான செயல்களை இறைவனின் அனுமதியென்று கூறிக் கொள்வதை எப்படி ஏற்க முடியும்?

சராசரியாக சிந்திக்கக் கூடிய எவராலும் குர்ஆனின் இந்த அனுமதிகளிலுள்ள முட்டாள்த்தனத்தை அறிய முடியும். கற்றுணர்ந்த மார்க்க அறிஞர்களுக்குத் தெரியாதா? அவர்களென்ன இரக்கமில்லாதவர்களா?

                நிச்சயமாக  அவர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் இத்தகைய விவாதங்களை பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இஸ்லாமின் முரண்பாடுகளையும், முட்டாள்த்தனங்களையும் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினாலும் அதைப் பற்றி வாய் திறப்பதில்லை. அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒரே பதில்  “அல்லாஹ்வின் கடும்கோபத்திற்கு ஆளாக வேண்டாம்” என்பதுதான்.

இன்று இஸ்லாமிய பெண்கள் திரைக்குப் பின்னால் வாழ்வதற்கும் “பர்தா” என்ற திரைகளுடன் நடமாடுவதற்கும் உமர் பின் கத்தாப்பின் நச்சரிப்பு மட்டுமே காரணம் என்பதை முன்பே கண்டோம். பெண்களின் ஒழுக்கத்திற்காகவும் கண்ணியத்தை காப்பாற்றவும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் வற்புறுத்தியவரின் ஒழுக்கத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

 

Ibn Sa’d, volume 2, Page 438 

Narrated Umar

From “A slave girl passed by me who attracted me, and I cohabited with her while I was fasting”.

(உமர் பின் கத்தாப் கூறுகிறார்: என்னைக் கடந்து சென்ற அடிமைப் பெண்களில் ஒருத்தி (அழகால்) என்னை ஈர்த்ததாள் நான் நோன்பு வைத்திருந்த பொழுதும், அவளுடன் கலவியில் ஈடுபட்டேன்.)

நோன்பு வைத்திருக்கும் வேளையில் அழகான பெண்ணைக் கண்டிருக்கிறார். உடனே அவளைத் தனது இச்சைக்கு உபயோகப்படுத்திக் கொண்டார். அந்த அடிமைப்பெண் உமர் பின் கத்தாப்பின் மனைவி என்றோ, பிற்காலத்தில் அவளைத் திருமணம் செய்து கொண்டதாகவும் எந்த  குறிப்புகளும் இல்லை. சுருக்கமாக சொல்வதென்றால் அழகானவளைப் பார்த்தேன் வேலையை முடித்தேன்.

நோன்பின் கதி? அதோ கதி…!

முஹம்மது நபியின் காலத்திலும், அவருக்கு பிறகும் பல லட்சக்கணக்கான ஆப்ரிக்க கருப்பின மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர். கருப்பின அடிமைகளை விற்கும்,  விற்பனைச் சந்தை கிபி 1960 வரையிலும் மக்காவில் இருந்துள்ளது. ஆனால் அரேபிய  தீபகற்பத்தில் கருப்பின மக்கள் தொகை குறைவாக உள்ளதை நீங்கள் பார்க்கலாம். இதே போல அமெரிக்காவிற்கும் ஆப்ரிக்க கருப்பின அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கு பல்கிப் பெருகி ஒரு பெரும் சமுதாயமாகி அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆகும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். ஆங்கிலேயர்களால் அடிமைகளாக இந்தியாவிற்குக்   கொண்டு வரப்பட்ட நைஜிரியா, தான்ஸானியாவைச் சேர்ந்த ஆப்ரிக்க பழங்குடி கருப்பின மக்கள் மக்கள்  குஜராத் மாநிலத்தில் வசிப்பதை இன்றும் காணலாம்.

அரேபியாவிலிருந்து  கருப்பின மக்கள் விரட்டியடிக்கப்படவுமில்லை. அரேபிய  தீபகற்பத்தில் கருப்பின மக்கள் தொகை குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?

 அடிமைப் பெண்களை, தங்களது பாலியல் தேவைகளுக்காக உபயோகப்படுத்திக் கொண்ட மிருகங்கள், ஆண் அடிமைகளின் பாலியல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக ஆடு, மாடுகளுக்கு இன்றும் கிராமப்பகுதிகளில் “காயடிப்பதைப்” போன்று  ஆண் அடிமைகளின் விதைகளை அடித்து  மலடுகளாக ஆக்கிவிட்டனர். இப்பொழுது உங்கள் மனதில் இப்படி ஒரு கேள்வி எழலாம்.  இத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அடிமைகளாக எஜமானர்களின் காலடியிலேயே ஏன் வீழ்ந்து கிடக்க வேண்டும்? வாழ விரும்பினால் எங்காவது ஓடிப்போக வேண்டியதுதானே?

முஸ்லீம் ஹதீஸ் எண்: 101, அத்தியாயம்: 1, பாடம்: 1.31 அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).

“தன் எஜமானர்களிடமிருந்து ஓடிப்போகிற அடிமை, அவர்களிடம் திரும்பி வரும்வரை இறைமறுப்பாளனாகவே இருக்கிறான்” என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்லச்) செவியுற்றிருக்கிறேன்.

முஸ்லீம் ஹதீஸ் எண்: 102, அத்தியாயம்: 1, பாடம்: 1.31,  அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).

“(தன் எஜமானிடமிருந்து) ஓடிப் போன அடிமைக்கான (இறைவனின்) அடைக்கலம் நீங்கிவிடுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

சிந்தித்துப்பாருங்கள், அடிமை ஒடிப்போவதற்கும் இறைமறுப்பிற்கும் என்ன தொடர்பு?

புஹாரி ஹதீஸ்: 2534

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:    

எங்களில் ஒருவர் தன் அடிமை ஒருவனை தன் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை (இவனை வாங்குபவர் யார் என்று) கூறி அழைத்து (ஏலத்தில்) விற்று விட்டார்கள். அந்த அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே மரணித்துவிட்டான்.

சகமனிதனை கால்நடைகளைப் போல கருதுவது என்ன நியாயம்? முஹம்மது நபி, அடிமை முறை ஒழிப்பிற்காக பாடுபட்ட உத்தமர் என்று இஸ்லாமிய அறிஞர் மேடைகளில் வாய் கிழிய பேசுவார்கள். அதன் லட்சணம் இதுதான். 

விபச்சாரமும் அனுமதிக்கப்பட்டதே…!

புஹாரி ஹதீஸ் : 6837        

அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது.

ஓர் அடிமைப் பெண் கற்பைக் காக்காமல் விபசாரம் செய்துவிட்டால்… (அவளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவள் விபசாரம் செய்தால் அவளை சாட்டையால் அடியுங்கள். அதற்குப் பிறகும் விபசாரம் செய்தால் (திரும்பவும்) சாட்டையால் அடியுங்கள், மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் (மறுபடியும்) சாட்மையால் அடியுங்கள். அவள் மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்காவது விற்றுவிடுங்கள் என்று கூறினார்கள். (இதில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷஹாப் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், (அவளை விற்றுவிடவேண்டும் என்பது) மூன்றாவது தடவைக்குப் பிறகா அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா என்று எனக்குத் தெரியாது எனக் கூறினார்கள்.

மேற்கண்ட ஹதீஸை காணும் பொழுது ஒரு அடிமைப் பெண் விபச்சாரம் புரிவதைக் கூட முஹம்மது நபி தடை செய்துள்ளார் என்ற உயர்வான சிந்தனை உங்கள் மனதில் தோன்றலாம். உங்கள் எண்ணம் தவறானது கற்பழிப்பதற்கே அனுமதியளித்தவர்கள் விபச்சாரத்தை ஏன் தடுக்க வேண்டும்?

அடிமைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் உரிமையாளரை மீறி தன்னிச்சையாக செயல்படக் கூடாது. அவள் உரிமையாளருக்கு மட்டுமே வைப்பாட்டி. உரிமையாளர் விரும்பினால் பிற ஆண்களுக்கு  அடிமைப் பெண்களைத் இரவலாகத் தரலாம்.

Malik’s Muwatta:Book 28, Number 28.15.38:

Yahya related to me from Malik from Ibrahim ibn Abi Abla from Abd al-Malik ibn Marwan that he gave a slave-girl to a friend of his, and later asked him about her. He said, “I intended to give her to my son to do such-and-such with her.” Abd al-Malik said, “Marwan was more scrupulous than you. He gave a slave-girl to his son, and then he said, ‘Do not go near her, for I have seen her leg uncovered. “

(நண்பருக்கு கொடுத்த அடிமைப் பெண்ணைப் பற்றி கேட்கையில், அவர் அந்த பெண்ணை, ‘கசமுச’ செய்ய தன் மகனுக்கு அளிப்பதற்காக திட்டமிட்டிருப்பதாக கூறும் ஒருசெய்தி)

இவ்வாறாக அடிமைப்பெண்களை விரும்பியவர்களுக்கு வழங்கலாம். முஹம்மது நபிக்கு எகிப்திய ஆட்சியாளர், மரியத்துல் கிப்தியா, ஷிரின் என்று இரண்டு பெண்களை பரிசாக வழங்கியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மனைவிகளோ, அடிமைப் பெண்களோ இல்லாத சூழ்நிலையில் என்ன செய்வது?

அல்முத்ஆ திருமணம் முஹம்மது நபி  அவர்கள் காலத்திலும் அரபிகளின் வழக்கிலிருந்தது. அல்முத்ஆ திருமணம் என்பது குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு மட்டும் செய்யப்படும் தற்காலிக திருமணம். அவர்கள் விரும்பினால் திருமண வாழ்க்கையைத் தொடரலாம் அல்லது பிரியலாம் இதில் எந்த நிர்பந்தமும், குற்றமும் இல்லை. அல்முத்ஆ  திருமணத்திற்கு திரு குர் ஆனில் தடையெதும் காணவில்லை.

போர்காலங்களில் சஹாபக்கள் தங்கள் மனைவியரைப் பிரிந்து நீண்ட நாட்கள் இருக்க வேண்டியிருந்தது. சஹாபக்களின் உடல் தேவைக்காக மிகவும் சிரமப்பட்டனர். அதைக் கண்ட முஹம்மது நபி அவர்கள் போர் காலங்களில்  அல்முத்ஆ திருமணத்தை அனுமதித்தார். சஹாபக்கள்தங்களும் உடல் தேவைகளை அல்முத்ஆ திருமணம் மற்றும் பெண் போர்க் கைதிகளை அனுபவித்தல் என அல்லாஹ்வின் முழு அனுமதியோடு நிறைவேற்றி மகிழ்ந்தனர்.

ஆண்கள், மனைவியை விடுத்து பிற பெண்களை இச்சையுடன் பார்ப்பதை தடுப்பதற்காகவே புர்க்கா – ஃபர்தா/ ஹிஜாப் என்ற உடையை பெண்கள் அணிய வேண்டும் என்று முஹம்மது நபி கூறினார். எனவே  கற்புநெறியை ஆண்களும் பின்பற்ற வேண்டும் என்றே இஸ்லாம் போதிக்கிறது என்று உங்களையும் உலகை ஏமற்றிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பிரச்சாரா பீரங்கிகளின் வார்த்தைகளில் ஏதாவது பொருளிருப்பதாக தோன்றுகிறதா?

புகாரி ஹதீஸ் -5116

அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

அல்முத்ஆ (தவணை முறைத்திருமணம்) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அவர்கள் அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். அப்போது அவர்களுடைய முன்னாள் அடிமை ஒருவர் (பயணத்தில் மனைவி இல்லாத) நெருக்கடியான சூழ்நிலை பெண்கள் குறைவாக இருத்தல் போன்ற சமயங்களில்தான் இத்திருமணத்திற்கு அனுமதியுண்டாமே! என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆம்! என்று பதிலளித்தார்கள்.

(புகாரி 5116,5117,5118,5119)

பின் நாளில் முஹம்மது நபி  அவர்கள் அல்முத்ஆ  திருமணத்தை தடை செய்தார் என்று  ஸுன்னி முஸ்லீம்கள் கூறுகின்றனர். ஆனால் ஷியா முஸ்லீம்களிடையே அப்படி எந்த தடையுமில்லை. ஒவ்வொருவரும், வாழ்வில் ஒருமுறையேனும் அல்முத்ஆ (தவணை முறைத் திருமணம்) செய்ய வேண்டும் என வலியுறுத்திக்கூறும் ஹதீஸ்களை ஷியாக்கள் முன்வைக்கின்றனர்.

புகாரி ஹதீஸ் -5115

முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் அலீ (ரஹ்) அவர்களும் கூறியதாவது

எம் தந்தை) அலீ (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், அல்முத்ஆ) தவணை முறைத்) திருமணத்திற்கும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும், கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்று சொன்னார்கள்.

அலீ அவர்களின் பெயரால் புனையப்பட்டதாகக் கூறி இந்த ஹதீஸை ஷியாக்கள் அடியோடு மறுக்கின்றனர். கீழே காணும் இந்த ஹதீஸ் மக்கா வெற்றியின் பொழுது நிகழ்ந்தது, முஹம்மது நபியின் அனுமதியோடு அங்கு அல்முத்ஆ திருமணம் நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது. அதாவது மேற்கூறிய கைபர் போருக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சி இது

Sahih Muslim Book 008, Number 3253:

Rabi’ b. Sabra reported that his father went on an expedition with Allah’s Messenger (may peace be upon him) during the Victory of Mecca, and we stayed there for fifteen days (i. e. for thirteen full days and a day and a night), and Allah’s Messenger (may peace be upon him) permitted us to contract temporary marriage with women. So I and another person of my tribe went out, and I was more handsome than he, whereas he was almost ugly. Each one of us had a cloaks, my cloak was worn out, whereas the cloak of my cousin was quite new. As we reached the lower or the upper side of Mecca, we came across a young woman like a young smart long-necked she-camel. We said: Is it possible that one of us may contract temporary marriage with you? She said: What will you give me as a dower? Each one of us spread his cloak. She began to cast a glance on both the persons. My companion also looked at her when she was casting a glance at her side and he said: This cloak of his is worn out, whereas my cloak is quite new. She, however, said twice or thrice: There is no harm in (accepting) this cloak (the old one). So I contracted temporary marriage with her, and I did not come out (of this) until Allah’s Messenger (may peace be upon him) declared it forbidden.

அல்முத்ஆ திருமணம் தடை செய்யப்பட்டதாகவும், பிறகு அனுமதிக்கப்பட்டதாகவும் மீண்டும் தடை செய்யப்பட்டதாகவும்,  அனுமதிக்கப்பட்டதாகவும் பல செய்திகள் காணப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் அன்றைய காலத்தில் அல்முத்ஆ  திருமணம் நடை முறையில் இருந்ததென்பதும், தடை செய்யப்பட்டதற்கான உறுதியான ஆதரங்களில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.

போர் காலங்களில்  சஹாபக்களின் மனைவியர்களும்தான் தனிமையில் இருக்க வேண்டிய நிர்பந்தம். “அல்லாஹ்வின் ரசூலே போர்காலங்களில் எங்களுடைய கணவர்களைப் பிரிந்து நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டியுள்ளது எங்களின் உணர்வுகளுக்கு என்ன பதில்?” என்று சஹாபக்களின் மனைவியர்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும்?.

அல்முத்ஆ திருமணம் என்பது விபச்சாரத்தை தவிர வேறு என்ன? இன்று நம்மில் பல ஆண்கள் வயிற்று பிழைப்பிற்காக கடல் கடந்து செல்கிறார்கள். தங்கள் மனைவியர்களைப் பிரிந்து வருடக்கணக்கில் வாழவேண்டிய சூழ்நிலை அந்த ஆண்களும், அவர்களின் மனைவியரும் உணர்ச்சிகளற்ற ஜடமா? அவர்களுக்கும் அல்முத்ஆ திருமணம் செய்து வைத்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்யவே அருவருப்பாக தோன்றவில்லையா?

மது அருந்துவது இனி முற்றிலும் தடை செய்யப்படுகிறது என்று ஓரேஅடியாக தடை செய்தால் மனிதர்கள் “நாங்கள் ஒருபோதும் மது அருந்துவதை கைவிடமாட்டோம்” என்றும், விபச்சாரத்திற்கு தடைவித்தால், “நாங்கள் ஒரு போதும் விபச்சாரம் செய்வதை நிறுத்த மாட்டோம்” என்றும் கூறி மறுத்து விடுவார்களாம் எனவேதான் படிப்படியாக தடைவிதிக்கப்பட்டது. என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்.

 முதலில் அந்த ஹலாலான விபச்சாரத்தை அனுமதிக்க வேண்டும்? பின் நாளில் ஏன் தடைசெய்ய வேண்டும்?

அந்தந்த காலகட்டத்தில் தேவைக்கேற்ப புதிய வழிமுறைகள் அல்லாஹ்வினால் வஹியாக இறக்கப்பட்டது அல்லது ரத்து செய்யப்பட்டது என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்.  யாருடைய தேவைக்கு? முஹம்மது நபி  அவர்களின் தேவைகளுக்காகவா அல்லது மனிதர்களின் தேவைகளுக்காகவா?

புஹாரியின் ஹதீஸ், முஸ்லீம்கள் தங்களது அரசாட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்திய பிறகே, முத்ஆ திருமணங்கள் கியாமத் நாள்வரையிலும் தடைசெய்யப்பட்டதாக கூறுகிறது. இதை கவனித்தால் இதில் மறைந்துள்ள சூழ்சியை நீங்களே அறியலாம். இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள்,

முத்ஆ திருமணங்கள் முதலில் ஏன் அனுமதிக்கப்பட்டது?

                முஹம்மது நபி தனது படையினர் போரில் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்க எல்லா வழிகளிலும் உற்சாகப்படுத்தினார். பலதாரமணம், அளவில்லா அடிமைப் பெண்களுடன் கூடி மகிழ அனுமதி, எதிரிகளின் பெண்களையும், செல்வங்களையும்  சூறையாடுதல், சொர்க்கம், ஹூருலீன் கன்னியர்களுடன் சல்லாபம், நரகம் என்று  நியாய அநியாயங்களையும் ஒழுக்க முறைகளையும் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வெற்றியை வெறித்தனமாக அடைவதற்கு பல வழிகளிலும் உற்சாகப்படுத்தினார் அவற்றில் ஒரு வழிமுறையே இந்த முத்ஆ திருமணங்கள்.  தனது தேவை முடிவடைந்ததும் தடைசெய்து விட்டார்.

                வஹீ எனப்படும் முறையில் வெளியான குர்ஆன் வசனங்களையும் சூழ்நிலைகளையும் ஆய்வு செய்த பொழுது, இவைகள் சர்வ வல்லமையுடையவன் என்று போற்றப்படும் இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியாது எனத் தோன்றியது. ஏகத்துவ செய்தியை மக்களிடையே கூறுவதற்கு, இனப்படுகொலைகளும்,  கொள்ளையடித்தலும், கற்பழிப்பதலும், விபச்சாரம் செய்ய அனுமதித்தலும், வாக்குறுதிகளை மீறி பொய் சொல்லி ஏமாற்றுதலுக்கும் (தக்கியா-புனிதமோசடி) அவசியம் என்ன? இவைகளை முன்னின்று செய்வதற்கும் இறைத்தூதர் என்றொருவர் தேவையா?  இவர் கூறும் அக்கிரமங்களை வேதவாக்கு என்று நம்ப வேண்டும். மறுப்பவர்கள் இறைமறுப்பாளர்கள்…?

 நல்ல வேடிக்கை இது …!

முஹம்மது தனது மிகக் கீழ்த்தரமான எண்ணங்களையும் விருப்பங்களையும் அல்லாஹ்வின் வேதவாக்கு எனக் கூறி நிறைவேற்றிக் கொண்டார்

குர்ஆன் முழுவதுமே இறைவனின் வார்த்தைகளல்ல என்ற முடிவை அடைந்தேன். ஒருவேளை இறைவனின் வார்த்தைகளுடன் முஹம்மது நபியின் சொந்த சரக்குகள் சிலவற்றை குர்ஆனுக்குள் நுழைத்து விட்டிருப்பாரோ என்றும் தோன்றியது. முழு குர்ஆனிலுமிருந்து முஹம்மது நபியின் கைச்சரக்குகளையும் அல்லாஹ்வின் வாக்குகளையும் பிரித்தறிவது எப்படி?

  குர்ஆன் எவ்விதமான முரண்பாடுகளுமற்றது மிகத் தெளிவானது முன்னறிவிப்புகள் நிறைந்தது இதுவே குர்ஆன் இறைவனின் சொல் என்பதற்கான நிரூபனம் என்று, இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் நினைவிற்கு வந்தது.  எனவே குர்ஆனின் மேலும் சில பகுதிகளையும் அதன் பின்னணிகளையும் ஆய்வு செய்வதென்று முடிவு செய்தேன்

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

Advertisements

9 பதில்கள் to “இஸ்லாம் போதிப்பது எதை? ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?”

 1. Pathma Nathan திசெம்பர் 15, 2011 இல் 8:18 பிப #

  பகுத்தறிந்த உண்மை. உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • S.Ibrahim திசெம்பர் 17, 2011 இல் 1:15 பிப #

   //குர்ஆன் முழுவதுமே இறைவனின் வார்த்தைகளல்ல என்ற முடிவை அடைந்தேன். ஒருவேளை இறைவனின் வார்த்தைகளுடன் முஹம்மது நபியின் சொந்த சரக்குகள் சிலவற்றை குர்ஆனுக்குள் நுழைத்து விட்டிருப்பாரோ என்றும் தோன்றியது. முழு குர்ஆனிலுமிருந்து முஹம்மது நபியின் கைச்சரக்குகளையும் அல்லாஹ்வின் வாக்குகளையும் பிரித்தறிவது எப்படி?////
   நல்லூர் பொய்யரே ,எவ்வித இஸ்லாமிய அறிவும் அரபு மொழி தெரியாமலும் இது எப்படி சாத்தியம்?
   உமர் [ரலி] பற்றிய இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை வைத்துக் கொண்டு அவர் பற்றி கருத்து தெரிவிப்பது ஒரு நல்ல எழுத்தாளரின் பண்பு ஆகுமா?அரசு வேலைகளை செய்யும் வேளைகளில் அரசு விளக்கையும் தனது சொந்த வேலைகளை செய்யும் வேளைகளில் தனது சொந்த விளக்கையும் பயன்படுத்தும் உமர்[ரலி] வர்கள்.தனது வெளியூர் பயணங்களில் அதிக தூரம் நடந்து ஒட்டகத்தை நடத்தி வந்த வேலைக்காரரை ஒட்டகத்தில் உட்கார செய்து ஒட்டகத்தை நடத்தி வந்த இரக்க சிந்தனையாளர்.
   போரில் வெற்றிபெற்று கிறித்தவ நகரை கைப்பற்றிய பொழுது அங்குள்ள சர்ச்சில் பாதிரியார் தொழுகை நடத்திக் கொள்ளுமாறு வேண்டிய பொழுது அதை ஏற்றுக் கொள்ளாத நேர்மை மிக்கவர். அவர் ஜனாதிபதியாக் இருந்த பொழுதும் அவருடைய தவறுகளை ஆதாரங்களுடன் சுட்டி காட்டினால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர். இன்னும் உமர்[ரலி] அவர்கள் பற்றிய வரலாறு சிறப்புமிக்க செய்திகள் உள்ளன,அதையெல்லாம் மறைத்துவிட்டு ஒரு ஆதாரமற்ற செய்தியை வைத்துக் கொண்டு விமர்சிப்பது தான் பொதுவுடமைவாதிகளின் கண்ணியமா?

   *************************************

   நண்பர் இப்ராஹிம்,

   நானும் தஜ்ஜாலும் ஒருவரல்ல என்று ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டுவிட்டது. முடிந்தால் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளுக்கு மறுப்பளியுங்கள். முடியாவிடின் அமைதியாக இருந்துவிடுங்கள். இது போன்ற வம்படிகளுக்கு இதுவே கடைசியாக இருக்கட்டும்.

 2. பண்ணைக்காரன் திசெம்பர் 17, 2011 இல் 4:35 பிப #

  aakaa ,piramaatham

 3. S.Ibrahim திசெம்பர் 21, 2011 இல் 9:06 பிப #

  /////nallurmuzhakkam
  நவம்பர் 5, 2011 இல் 11:49 பிற்பகல் #
  நண்பர் இப்ராஹிம்,

  அரபு மொழியில் புலமையில்லாவிட்டால் இஸ்லாத்தை விமர்சிக்கக் கூடாது என்கிறீர்களா? என்றால் இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றை நீங்கள் மறுப்பதாகாதா?

  புஹாரியும், முஸ்லீமும் ஆதாரபூர்வமானவை என்றுதான் நீங்களே பிரச்சாரம் செய்கிறீர்கள். ,,,,,,,,,,////
  முஹம்மதின் குழந்தை திருமணம் என்ற தலைப்பில் எனது கருத்துரைகளுக்கு நல்லூர் முழக்கம் பதிலாக வந்துள்ளது .அதனாலே நல்லூர் பொய்யர் என்று அழைத்துள்ளேன்

 4. Rizwan N. Mohamed (Sri Lanka) ஓகஸ்ட் 12, 2012 இல் 10:42 முப #

  சகோதரர் நல்லூரில் இருந்து கொண்டு நாறுபவரே முதலில் இஸ்லாம முழுமையாக விளங்க வேண்டும் அல்லது உலகமாவது தெரிய வேண்டும் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் 2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

  இதைவிட ஒரு சாலன்ஜ் தேவையா? அரைவேக்காடா இருந்தா இப்படித்தான் எதுவுமே விளங்காது குர்ஆனை முழுமையா படிங்க அது சொல்லும் அறிவியல், அன்மீகம், மனித நேயம், சட்டம். குர்ஆன் வந்துங்க அறிவாளிகளுக்கு மட்டும்தான் விளங்கும் மேலும், அலலாஹ் தனது திருமறையில் 25:73. இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.) அறிவுக்கு இறைவன் எப்படியெல்லாம் முதலிடம் கொடுக்கிறான். யாரோ சொன்னத நம்புகிறவன மாங்கா மடையன் என்று சொல்லுகிறான் யாரோ சொன்னத நம்பாதீங்க ஏன்னா குர்ஆன் அல்லாஹ்வின் வாக்கு அதில் யாருடைய சுயகருத்தும் இல்ல ஒங்களவிட பெரிய கொம்பனுங்கலெள்ளாம் முயற்சி செய்துட்டானுங்க குர்ஆனில் பிழை கண்டுபிடிக்க கடைசியில அறிவாளி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான மடையன் கேவலபபட்டு போனான்.

  அப்புறம் என்ன சொன்னீங்க அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் விபச்சாரத்திற்கு அனுமதியளித்துள்ளார்களா? உண்மையில ஒங்களுக்கு அறிவே இல்லையா? பாவம் குர்ஆனில நீங்க எதப்படிச்சீங்க என்றே தெரியல நல்லாப் பாருங்க விபச்சாரத்திற்கு அல்லாஹ் என்ன தண்டனையை சொல்லுகிறான் என்று 24:2. விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். ஏன் இந்த தப்ப செய்யாதிருக்க. குர்ஆன் தாயையோ, மனைவியையோ, மகளையோ, சகோதரியையோ விபச்சாரம் செய்ய தூண்டும் மார்க்கமல்ல கம்பியுனிஸ்டவாதிகள் வேண்டுமென்றால் விபசாரத்திற்கும், அப்பாவி மனிதர்களை கொன்று குவிக்க அனுமதிப்பார்கள்.அதனால்தான் பிடல் கஸ்ட்ரோ 1000 பெண்களுக்கு மேல் வைத்திருந்தான்.

  சீனா கம்பியுனிஸ்டவாதிகள் சீனாவின் வடமேற்கு மாகாணமான ஜின்சியாங்கில் முஸ்லிம்கள் வேதனையுடன் இவ்வாண்டு ரமலானை வரவேற்றுள்ளனர். புண்ணியமிக்க மாதத்தில் மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் நோன்பு நோற்க அரசு தடை விதித்துள்ளது. ஜின்சியாங்கில் உய்கூர் முஸ்லிம்கள் மீது சீனா அரசு நடத்தி வரும் அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாக அங்கு அரசு அதிகாரிகளும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் நோன்பு நோற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இரஷ்யா அழிந்தது போல் எஞ்சியிருக்கும் கம்யுனிசமும் அழியும் அன்றைய தினம் உங்களைப் போன்றோர் உயிருடன் இருந்தால் All the best

  அப்புறம் ஒரு ஹதீஸ் குறிப்பிட்டிருந்தீர்கள் அதை முழமையாகப் படிக்க வேண்டும் ஷீயாக்களும் ஒங்களைப் போன்று ஒரு வழிகெட்ட கூட்டமே. எமது பார்வையில் அவர்களும் காபிர்களே அவர்களது கூறறை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் அவர்களை நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுங்கள் அதைப்பற்றி எமக்கு கவலையிலலை

  5119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
  ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள் அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்துவிடலாம்.
  இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) கூறினார்:
  இந்த(த் தவணை முறை)த் திருமணம் (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டும் (நெருக்கடி நிலையில்) அனுமதிக்கப்பட்டதா? அல்லது மக்கள் அனைவருக்கும் உள்ள பொது அனுமதியா என்று எனக்குத் தெரியவில்லை. 60 அபூ அப்தில்லாஹ் புகாரீ(யாகிய நான்) கூறுகிறேன்:
  இத்திருமணத்திற்கான அனுமதி விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
  Volume :5 Book :67

 5. nallurmuzhakkam ஓகஸ்ட் 13, 2012 இல் 8:20 முப #

  இஸ்லாத்தைப் பற்றியும் உலகைப் பற்றியும் நன்கு தெரிந்த ரிஸ்வான் அவர்களே,

  9999 தடவை பதில் சொல்லி அதரப் பழசான சாலன்சை மறுபடியும் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களை திருப்பிக் கேட்கிறேன். எந்த மக்களை நோக்கி இந்த சவால் விடப்பட்டதோ அந்த மக்கள் இதை எதிர்கொள்ளவே இல்லையா? எதிர்கொண்டிருந்தால் அவை எங்கே? இதற்கான பதிலை யோசித்துப் பாருங்கள். இஸ்லாத்தின் தகிடு தத்தங்கள் புரியும். மாறாக நாங்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்பதைப் போல் பீலா விட வேண்டாம்.

  இஸ்லாம் சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறதா? எங்கே, அல்லா என்றொரு சக்தி இருப்பதற்கு சாத்தியம் உண்டா இல்லையா? என்று சிந்தித்துப் பாருங்களேன். முடியுமா?

  ஷியாக்கள் உங்களுக்கு வழி தவறிய கூட்டம். நீங்கள் ஷியாக்களுக்கு வழி தவறிய கூட்டம். எங்களுக்கு நீங்கள் அனைவருமே வழி தவறிய கூட்டங்கள். எனவே உதார் விடும் வேலைகளை விட்டுவிட்டு உருப்படியாய் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசியுங்கள்.

 6. iniyavan செப்ரெம்பர் 3, 2012 இல் 9:54 முப #

  //2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

  இதைவிட ஒரு சாலன்ஜ் தேவையா? //

  அனைத்தும் அறிந்த‌வன், ச‌க‌ல‌க‌லாவ‌ல்ல‌வ‌ன்,இப்பிர‌பஞ்ச‌த்தையே(?)ப‌டைத்த‌வ‌ன் ஒரு சாமான்ய‌ ம‌னித‌னிட‌த்திலா ச‌வால் ச‌வ‌டால் எல்லாம் விடுவ‌து?? ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍== {ந‌ன்றி. த‌ருமி அய்யா.}

  இருள் சூழ்ந்த‌ உல‌கை ஒளிம‌ய‌மாக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌வும் ஆக்கிக் கொண்டிருக்கும் சாதார‌ண‌ ம‌னித‌னின் சாத‌னையான‌ மின்சார‌த்தை விட‌வா ஒரு ச‌வால் வேண்டும்??

  Iniyavan……

  • ஆர்ய ஆனந்த் செப்ரெம்பர் 17, 2012 இல் 11:30 முப #

   குர் ஆனை போன்று மிக மோசமாக, மடத்தனமாக, இலக்கண பிழைகளுடன், நூற்றுகணக்கான தவறுகளுடன் எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது. இந்த லட்சணத்தில் இதை போன்ற ஒரு அத்தியாயத்தையாவது கொண்டு வர முடியுமா என்றொரு சவாலை வேறு எழுத படிக்க தெரியாத தற்குறி முஹம்மது வெளியிட்டார். இந்த சவால் மிக பெரிய நகைச்சுவை என்பதை அறியாத மூட முஸ்லிம்கள் முஹம்மதின் நகைச்சுவையை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறார்கள்.

Trackbacks/Pingbacks

 1. குர் ஆனும் முரண்பாடுகளும் « - திசெம்பர் 19, 2011

  […] […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: