கூடங்குளம் அணு உலையும், மின் தடையில்லா தமிழகம் என்ற மாயையும்…!

10 ஜன

ஒருபுறம் கூட‌ங்குளம் பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக‌ தொட‌ர்ந்து போராடிவ‌ரும் வேளையில் ம‌றுபுற‌ம் அணு உலை அதிகாரிகளோ எல்லோரிட‌த்திலும் பாதுகாப்பு சான்றித‌ழ்க‌ளைப் பெற்று வ‌ருகின்ற‌ன‌ர். அதும‌ட்டுமின்றி கூட‌ங்குள‌ம் அணு உலையிலிருந்து கிடைக்கும் 50 விழுக்காடு மின்சார‌த்தின் மூல‌மாக‌ த‌மிழ்நாட்டின் மின்ப‌ற்றாக்குறை வெகுவாக‌ குறைந்துவிடும் என்றும் அதிகாரிக‌ள் கூறிவ‌ருகின்ற‌ன‌ர். இந்த‌ சூழ்நிலையில் அணு உலையை ஆத‌ரிப்பதா அல்ல‌து எதிர்ப்ப‌தா என்ற‌ குழ‌ப்பமான‌ மனநிலையில் த‌மிழ்நாட்டு ம‌க்க‌ள் இருக்கின்றனர்.

கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மின்சாரத்தின் பங்கை ஒரு அறிவார்ந்த ஆய்வுக்கு உட்படுத்தினால் நமது ஐயங்கள் எல்லாம் தெளிவுறும். இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் மின்சார துறை எதிர்கொண்டு வரும் தடைகளை கணக்கில் கொண்டு அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் பின்வரும் அட்டவணையில் தெளிவாக விளக்கப்படுகின்றது. தமிழகத்திற்கு வெறும் 405 மெகாவாட் மின்சாரம் தான் கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் என்பது இந்த அட்டவணையிலிருந்து கிடைத்த‌ முடிவுகள் மூலம் நமக்கு தெரியவருகின்றது. இதில் இறுதியில் பயனாளருக்கு கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 305 மெகாவாட் ஆகும்

மொத்த அளவு (மெ.வா) குறிப்புகள்
கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 2*1000 2000 கூடங்குளத்தின் மொத்த உற்பத்தியான 2*1000 என்பது தற்போது இரசியாவில் நடைபெற்று வரும் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் பொழுது 4*1000 என மாறும்
அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும் 1200 எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையமும் 100% மின் உற்பத்தியை கொடுக்க முடியாது. இங்கு ஆண்டு மின் உற்பத்தி 60% எனக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது.
ஆண்டு மொத்த மின்னுற்பத்தி – அணு உலையை இயக்குவதற்கான ஆண்டு மின்தேவை(அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10% மின்சாரம் அணு உலையை இயக்குவதற்கு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது) 1,080 இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் தேவைப்பட்டாலும், இங்கு 10% கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50% (1080ல் 50%) 540 ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 50% பங்கு மின்சாரம் கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே கொடுக்கப்படும்
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பிற்கு பின் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் 405 மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில் ஏற்படும் 25% என கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவு இழப்பு 27% ஆகும்.
இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின் அளவு 305 பிரயாசு என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி வீட்டு உபயோகத்தின் போது 20% மின் இழப்பு ஏற்படுகின்றது. இதில் தொழிற்சாலைகளிலும், விவசாய பயன்பாட்டின் போதும் ஏற்படும் மின் இழப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை
இதில் பேச்சுவார்த்தை நலம்பட முடிந்து மேலும் இரண்டு அணு உலைகளையும் சேர்த்தால் 4 அணு உலைகளாக கொண்டால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் 610

கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வெறும் 305 மெகாவாட் மின்சாரத்திற்காக அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கு மக்கள் ஆளாக வேண்டுமா என்று தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் ஏற்கனவே ஒரு அணு உலை செயல்பட்டுவருகின்றது. தமிழ்நாட்டின் மின் தேவையை ஈடுசெய்ய மக்களுக்கு எந்த ஒரு கேடும்விளைவிக்காத மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றதா என்பதே நம்முன் இப்பொழுது இருக்கும் கேள்வி

புதுப்பிக்கதக்க மின்மூலங்கள்

தமிழ்நாட்டில் இருக்கும் மின் ஆதாரங்களை அறிவார்ந்த ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் நம்மிடம் பல மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றன என்பது தெரியவருகின்றது. இது போன்ற சரியான மாற்று முறைகளின் மூலம் நமக்கு பெரிய அளவில் மின்சாரம் கிடைக்கக்கூடும் என பின்வரும் அட்டவணையிலிருந்து தெரிகின்றது. மேலும் தற்பொழுதுள்ள மின்னுற்பத்தி ஆதாரங்களில் இருந்து நமக்கு பயன் கிடைப்பதற்காக, புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைப்பதில் செலவழிக்கப்படும் தொகையில் 20 விழுக்காடு செலவழித்தாலே போதும், அதுமட்டுமின்றி தற்பொழுதுள்ள மரபுசாரி மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும் பாதிப்புகள் இதில் எதுவும் இல்லை. புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து மின்னுற்பத்தி தொடங்குவதற்கு நமக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதுபோலன்றி இங்கு நாம் பயன் பெறுவதற்கு மிகச்சிறிய காலமே போதுமானது, இதன் மூலம் சமூகத்திற்கு கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியதும், நிலையானதுமாகும்.

தற்பொழுதுள்ள மின்னுற்பத்தியை வைத்தே நாம் பின்வரும் சேமிப்புகளை மேற்கொள்ளலாம். மெ.வா குறிப்புகள்
மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு >>500 இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு 1,575 தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியான 10,500 மெகாவாட்டில் 15% சேமிப்பதன் மூலம் கோடைகாலத்தின் அதியுயர் மின் தேவையை நிறைவ்ய் செய்ய முடியுமென மைய மின்சார வாரிய அறிக்கை கூறுகின்றது
தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவுகளில் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பை குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு 2,625 இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் 25% நிறைவாகின்றது. அதுமட்டுமின்றி சரியாக மதிப்பிட்டால் இதன் மூலம் நமக்கு கிடைக்கும் சேமிப்பு மிகவும் அதிகமாகும்.

புதுப்பிக்கப்பட்ட மின் மூலங்கள் மூலம் கிடைக்கும் பயன்கள்

காற்றாலை 700 மெகாவாட் தமிழ்நாட்டின் மொத்த 5,500 மெகாவாட் காற்றாலை மின் திறனில் இதுவரை 4,790 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது.(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை)
உயிர்ம எரிபொருள் 900 மெகாவாட் உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை)
வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல் >> 5,000 மெகாவாட் தமிழ்நாட்டில் உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம்.
வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல், சூரிய ஒளியின் மூலம் நீரை சூடேற்றும் கருவிகளை மற்ற கட்டிடங்களில் வைத்தல் மிக அதிக அளவு சேமிப்பு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள்……..

மரபு சார் மின்னுற்பத்தி நிறுவனங்களைப் போலல்லாமல் புதுப்பிக்கதக்க மின்மூலங்கள் அதிக செலவு கொண்டதும், நம்பக்கூடியதுமல்ல என்ற வாதங்களும் உள்ளன. நீண்ட கால பயன்பாட்டில் புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காக அரசு செலவிடும் தொகை என்பது மிகவும் குறைவே. நம்மிடம் உள்ள மாற்று வழிகளை எல்லாம் சரியாக ஒருங்கிணைப்பதன் மூலம் கூடங்குளம் அணு உலையின் தேவையே இல்லாமல் செய்வது மட்டுமல்லாமல், கல்பாக்கம் அணு உலையையும் வருங்காலத்தில் மூடிவிடலாம். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவான கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகின்றது. இது ”தேசிய சூரிய ஒளி மின்சார ஆணையத்தின்” இரண்டாவது ஒப்பந்தப்புள்ளி கோரலிலும் எதிரொலித்துள்ளது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவும் நிலக்கரி மூலம் மின்சாரம் எடுப்பதற்கு ஆகும் செலவும் ஒன்றாகிவிடும்.

அணு உலைக்காக செலவு செய்யப்படும் நேரடி, மறைமுக செலவுகளையும், மாற்று வழிகளின் மூலமாகவும், புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காகவும் செலவு செய்யப்படும் தொகையையும் இவ்விரண்டின் மூலம் மக்களுக்கு கிடைக்கும் பயன்களையும் ஆய்வு செய்தால் நாம் அணு உலைக்கு ஆகும் அதிக செலவையும், அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும் தெளிவாக காணலாம். இந்த நாட்டிலேயே ஒரு முன்மாதிரியான மின் கொள்கையை தமிழ்நாடு வருவாக்குவதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன.

தற்பொழுது செயல்பட்டு வரும் மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும் நீண்டகால பாதிப்புகளை குறைப்பதற்கும் , அணு உலை பேரழிவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதற்கும் வேறு வழியில்லாததால் நாட்டின் மின் தேவை, மின்னுற்பத்தியை சீராக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இந்த நாடு உள்ளது.

வீட்டில் கிடக்கும் ஒரு பழைய நாற்காலியை பழங்கால பொக்கிசம் என்று ஏமாற்றி விற்பதற்காக சில மன நோயாளிகளை பணக்காரர்கள் போல தயார் செய்து அவர்கள் அனைவரும் அந்த நாற்காலியை ஏலம் எடுப்பதற்காக வந்திருப்பதாகவும், அந்த நாற்காலி பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனையாகும் என்று ஏலக் கடைக்காரரின் தலையில் கட்டிவிடுவார் நடிகர்.பாண்டியராஜன். அது போலவே மிக அதிக செலவும், அதிக அளவு பிரச்சனையும், மிகக்குறைந்த மின்னுற்பத்தியும் கொண்ட இந்த அணு உலை என்ற பழங்கால நாற்காலியை மக்களின் தலையில் கட்டுவதற்காக இந்த அணு உலைகள் வந்தால் தமிழ்நாடு பெரு வளர்ச்சி அடையும், இருபத்தி நான்கு மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும், இனி மின் தடையே இல்லை என்பது போன்ற பசப்பு வாதங்களை மத்திய அரசு நம்முன் வைத்து அணு உலை ஒரு பொக்கிசம் என ஏமாற்றிவருகின்றது. நாம் ஏமாறப்போகிறோமா ?

– சங்கர் சர்மா

மின் கொள்கை ஆய்வாளர்

மொழியாக்கம் – நற்றமிழன்.ப

முதல் பதிவு: பூவுலகின் நண்பர்கள்

 

Advertisements

4 பதில்கள் to “கூடங்குளம் அணு உலையும், மின் தடையில்லா தமிழகம் என்ற மாயையும்…!”

 1. சி. ஜெயபாரதன் ஜனவரி 11, 2012 இல் 1:06 முப #

  ////கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 2*1000 = 2000 கூடங்குளத்தின் மொத்த உற்பத்தியான 2*1000 என்பது தற்போது இரசியாவில் நடைபெற்று வரும் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் பொழுது 4*1000 என மாறும்

  அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும் 1200 எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையமும் 100% மின் உற்பத்தியை கொடுக்க முடியாது. /////

  இது மிகத் தவறான மதிப்பீடு. கூடங்குள இரட்டை அணுமின் நிலையம் முழு இயக்க நிலை அடையும் போது மொத்தம் 2000 எலெக்டிரிகல் மெகாவாட மின்வடத்தில் அனுப்பும்.

  கணக்கிட்டவர் மின்சார உற்பத்தி பற்றி அறியாதவர். கூடங்குள ஓர் அணுமின் உலையின் தெர்மல் ஜெனரேசன் = 3000 மெகாவாட் (MWt). அதில் எலெக்டிரிகல் மெகாவாட் ஜெனரேசன் = 1000 மெகாவாட் (MWe). (33% தெர்மல் Efficiency)

  MWe = MWt x 1/3 (33% தெர்மல் Efficiency)

  /////இங்கு ஆண்டு மின் உற்பத்தி 60% எனக் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது.

  கல்பாக்க அணுமின் உலைகள் புதியவை அல்ல். 25 வருடம் பலன் அளித்தவை. ஆரம்ப வருடங்களில் 220 MWe ஒவ்வொன்றும் அனுப்பின. இப்பொது சில பிரச்சனைகளால் மின்சாரத் தகுதி குறைக்கப் பட்டுள்ளன.

  http://www.npcil.nic.in/

  http://www.npcil.nic.in/main/ProjectOperationDisplay.aspx?ReactorID=75 (Kalpakkam Units 1 and 3 Power Generation 2 X 220 MWe)

  http://www.npcil.nic.in/main/ProjectOperationDisplay.aspx?ReactorID=73 (Tarapore Units 3 and 4 Power Generation 2 X 500 MWe)

  சி. ஜெயபாரதன்.

 2. சி. ஜெயபாரதன் ஜனவரி 11, 2012 இல் 10:28 பிப #

  January 11, 2012 at 10:20 pm

  Addressed to the Authour of this article Shankar Sharma

  Load factor & Capacity factor are different,

  1. The new Kudungulam first Unit will generate & pump out 1000 MWe at its full tested capacity continuously to the grid until & unless a trip occurs on a safety condition. I have seen in India & Canada continuous operation of units for over 365 days. Any shutdown incapacity for short duration will reduce the total energy delivered to the system, It will never reduce the generation capacity of a new unit 1000 MWe at any time as you have wrongly understood.

  Even if you refer to generation load factor you should take the new 500 MWe Candu units at Tarapore. Not a unit in Kalpakkam which is 25 year old.

  And you are comparing the New Russian VVER–1000 to the 25 year old Kalpakkam Candu units which are totally different in all aspects.

  Do not compare apples & oranges.

  Your main objective is to down rate the Indian Nuclear Power Programs by giving WRONG & inaccurate information to the public. You should be ashamed to write such kind of non-sense matter to the public as a technical person.

  I worked as a nuclear operating engineer in Indian Nuclear Plants at RAPP & Kalpakkam for 25 years & in Canada Candus for 17 years.

  S. Jayabarathan

 3. nallurmuzhakkam ஜனவரி 12, 2012 இல் 2:24 பிப #

  வணக்கம் ஐயா,

  இந்தக் கட்டுரை, அணு மின் நிலையங்கள் முழு மின் உற்பத்தியை எட்டாது எனும் ஒற்றை கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு எழுதப்படவில்லை. பல அம்சங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. ஏனையவை குறித்து உங்கள் கருத்து என்ன? அவைகளை விரிவான முறையில் இங்கு பின்னூட்டமாக இட்டால் உரியவர்களிடம் அதை சுட்டிக்காட்டி தகுந்த விளக்கத்தை வாங்கி இங்கு பதிப்பிக்கிறேன்.

  செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

 4. சி. ஜெயபாரதன் ஜனவரி 29, 2012 இல் 5:36 பிப #

  January 29, 2012 at 9:29 am

  மின்வெட்டில் சாகும் மக்களை காக்க கூடங்குள ஆலையை திறக்க கோரிக்கை

  தூத்துக்குடி:
  “”முதல்வர் ஜெ.,நினைத்தால், கூடங்குளத்தில் மின்உற்பத்தியை உடனடியாக துவங்கிவிடலாம்”என, தூத்துக்குடி உண்ணாவிரதத்தில், அணுமின்நிலைய ஆதரவாளர்கள் பேசினர். கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தியை உடனே துவங்க வலியுறுத்தி, தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின்உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கமிட்டி சார்பில், தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன், உண்ணாவிரதம் நடந்தது. சத்திரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால் தலைமை வகித்தார். தேவர் பேரவை தலைவர் சேதுராமன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன், யாதவர் பேரவை தலைவர் காந்தையா, பார்கவ குல சங்க தலைவர் ராஜன், அணுசக்தி ஆராய்ச்சியாளர் பெரியசாமி, சமுதாய தலைவர்கள், அணுஉலை ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
  மக்களை திசைதிருப்ப முயற்சி: இதில், சந்திரன் ஜெயபால் பேசியதாவது: முல்லைப்பெரியாறு அணை பலவீனமாகஉள்ளது. அதனால் ஆபத்துஎன, கேரளமுதல்வர் உம்மன்சாண்டி கூறுகிறார். அதுபோல, கூடங்குளம் அணுமின்நிலையத்தால் பேராபத்து எனக்கூறி மக்களை திசைதிருப்ப இங்குள்ள உம்மன்சாண்டி நினைக்கிறார். மக்களுக்கு மின்சாரம் மிக அவசியம். ஆனால், இந்த அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடுவோர், மக்களை இருண்ட காலத்திற்கு அழைத்துச்செல்கின்றனர்.

  ஜெ., நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒருபகுதிமக்களின் அச்சம் தீரும்வரை, இங்கு அணுமின் உற்பத்தியை துவங்கக்கூடாது என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.ஆனால், இந்த அணுமின்நிலையத்தில் மின்உற்பத்தி துவங்கப்படுமா? என தற்போது பெரும்பாலான மக்களிடையே தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு மீண்டும் சட்டசபையைக்கூடி, மக்கள் அச்சம் தீர்ந்துவிட்டதால், இந்த அணுமின்நிலையத்தில் உற்பத்தியை துவங்கலாம் என தீர்மானம் நிறைவேற்றவேண்டும். முதல்வர் ஜெ.,நினைத்தால் இந்த அணுமின்நிலையத்தில் உடனடியாக மின்உற்பத்தியை துவங்கிவிடலாம். அவ்வாறே பொதுமக்களும் கருதுகின்றனர். அதை அவர் உடனடியாக செய்யவேண்டும். ஏனெனில், தொழில்வளர்ச்சி, விவசாயம், எதிர்கால சந்ததியினருக்கு மின்சாரம் அவசியம். மின்சாரம் இல்லையென்றால் தமிழகம் இருளில்மூழ்கிவிடும். காமராஜர் ஆட்சிகாலத்தில் கல்பாக்கம் அணுமின்நிலையம், தூத்துக்குடி துறைமுகம் அமைக்கப்பட்டு பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. அன்று அதற்கு கிளம்பிய எதிர்ப்பை பார்த்து அவர் பின்வாங்கியிருந்தால், இந்த அற்புத திட்டங்கள் நமக்கு கிடைத்திருக்காது.
  யாருக்குமே திருமணம் நடக்காது: அணுமின்நிலையம் குறித்த சந்தேகம் என்ற பெயரில் நாட்டின்பாதுகாப்பு, தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளை போராட்டக்குழுவினர் கேட்கின்றனர். அணுமின்நிலையத்தால் எந்தபாதிப்புமில்லை என முன்னாள் ஜனாதிபதி கலாம் கூறியதையும் ஏற்கமறுக்கின்றனர். பிரசவத்தின்போது இறப்போம் என பெண்கள் பயப்பட்டால், இவ்வுலகில் யாருக்குமே திருமணம் நடக்காது. அணுமின்நிலைய எதிர்ப்பிற்காக வெளிநாட்டிலிருந்து 54 கோடி ரூபாய் வந்தது குறித்த குற்றச்சாட்டை இதுவரை அவர்கள் மறுக்காதது ஏன்? போராட்டக்காரர்களை மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, அவர்களிடம் உரியவிசாரணை நடத்தவேண்டும். இந்த
  அணுமின்நிலையத்தில் உற்பத்தியை துவங்க மத்திய,மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், பேசிய அனைவருமே இதே கருத்தை வலியுறுத்தினர்.

  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய தீர்மானம் : கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடுவோரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென அணுஉலை ஆதரவு உண்ணாவிரதத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  * கூடங்குளம் அணுமின் உற்பத்தியை தடுத்து, அன்னிய நாட்டு நிதியுதவியுடன்

  4 மாதத்திற்குமேல் போராட்டம் என்ற போர்வையில் அப்பாவிமக்களை பகடைக்காயாக்கி, தூண்டி, நாட்டின்பாதுகாப்பு ரகசியங்களையும், அணுஉலை வரைபடம் மற்றும் செயல்திட்டங்களைக்கேட்டு, இந்தியாவுக்கு அச்சத்தை கொடுப்பவர்களை நாட்டின்பாதுகாப்புகருதி, தேசிய பாதுகாப்புசட்டத்தை பயன்படுத்தி, கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசை கோருகிறோம்.

  * கூடங்குளம் பகுதிமக்களின் அடிப்படை வாழ்வாதாரம் உயர மீனவர்களுக்காக புதிய மீன்பிடித்துறைமுகம், மத்திய அரசின்

  நேரடிகட்டுப்பாட்டுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த மீன்வளர்ச்சித்துறை சார்ந்த கல்லூரியும், மக்கள் அனைவரும் பயன்பெற கல்விநிலையங்களும், உயர் தொழில்நுட்ப கல்லூரியும், மருத்துவக்கல்லூரியும் அமைக்க கோருகிறோம்.
  * தென்தமிழகத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அனைத்து தொழில் வளர்ச்சிக்கும், மிகுந்த துணைநிற்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 60 சதவீத வேலைவாய்ப்பு நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட மத்திய அரசை கோருகிறோம்.
  * அணுசக்தித்துறை முழுக்க முழுக்க பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்நிலையில், கூடங்குளம் அணுமின் உற்பத்தி தாமதத்தால் அணுசக்தியின் ஆக்க வேலைத்திட்டங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு கட்டுப்பாட்டை
  அணுசக்தித்துறை இழந்து நிற்பது போன்ற தோற்றம் மக்களிடையே எழுகின்றது. நாட்டின்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித்திட்டத்தில் முக்கிய பங்காற்றும் அணுசக்திதுறையின் செயல்திறன் கேள்விக்குறியாக போகும்முன், இந்திய ஜனாதிபதி உடனடியாக பார்லி.,யை கூட்டி முடிவெடுக்க கோருகிறோம்.

  *மத்திய, மாநில அரசுகளின் இணக்கமற்ற போக்கே, கூடங்குளம் அணுமின்நிலைய உற்பத்தி தடங்கலுக்கு காரணம் என பாமரர்களும் பேசும்நிலை, தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மக்களின் அச்சமெல்லாம் மின்வெட்டைப்பற்றியதுதான். விவசாயிகள், நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் அனைத்துதரப்பு மக்களும், இளைஞர்களும் அச்சப்படுவது உயிர்பயத்திற்காக அல்ல. மேற்கண்ட தொழில்கள் அனைத்தும் மின்வெட்டால் முடங்கிவிட்டால், அத்தொழில்களின் உற்பத்தி மட்டுமல்ல, அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள் குடும்பமும் வருமான இழப்பால் கடன்தொல்லை ஏற்பட்டு மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என நடுங்கிக் கொண்டிருக்கிற மக்களின் அச்சத்தைப்போக்க, மத்திய, மாநில அரசுகள் விட்டுக்கொடுத்து, உருவாக்கப்பட்ட போலி உயிர்பயத்தில் இருக்கிற மக்களையும் மீட்டு, உண்மையான வாழ்க்கை பயத்தில் இருக்கிற அனைத்து மக்களையும் காக்க கோருகிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.
  Reply
  punai peyaril says:

  January 29, 2012 at 12:53 pm

  உதயகுமார் வெளிநாட்டில் , குறிப்பிட்ட மதம் & நாடு சேர்ந்தவர்களிடம் வசூல் வேட்டை செய்வதை என்னால் நிரூபிக்க முடியும்… நண்பர்களின் மெயிலை ஃபார்வேர்ட் செய்ய முடியும்… அவர் ஒரு குறிப்பிட்ட குழுவின் கைக்கூலி.. உண்மையான அக்கறையெனில் கல்பாக்கத்திலும் போராடலாம்… அவரது எண்ணம் கூடங்குள முதலீடு நஷ்டமடைய வேண்டும் என்பதே… அரசு தான் முட்டாள்தனம் செய்கிறது.. .அவரை அப்புறப்படுத்த வேண்டும்…

  திரட்டியது சி. ஜெயபாரதன், கனடா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: