கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! நெல்லையில் ஆர்ப்பாட்டம்.

20 ஜன

 

பன்னாட்டு முதலாளிகளின் லாப வெறிக்கான,

மனித குலத்திற்கு எதிரான

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆர்ப்பாட்டம்

நாள்:         21.1.2012 சனிக்கிழமை

நேரம்:        காலை 10 மணி முதல் 1 மணி வரை

இடம்:        ஜவகர் திடல், பாளை தினசரி சந்தை, திருநெல்வேலி

 

தலைமை:

வழக்குரைஞர். சே.வாஞ்சிநாதன்,

மதுரை மாவட்ட துணைச் செயலாளர், ம.உ.பா மையம்

கண்டன உரை:

வழக்குரைஞர். சி.ராஜூ,

மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா மையம், தமிழ்நாடு.

தோழர். காளியப்பன்,

மாநில இணைப் பொதுச் செயலாளர், ம.க.இ.க

பேராசிரியர். தொ.பரமசிவன்,

மேனாள் தமிழ்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நெல்லை.

பேராசிரியர். வே.மாணிக்கம்,

மேனாள் தமிழ்துறைப் பேராசிரியர், தூய வளனார் கல்லூரி, பாளையங்கோட்டை.

வழக்குரைஞர். இரா.சி.தங்கசாமி,

மேனாள் நெல்லை வழக்குரைஞர்.சங்கத் தலைவர்

வழக்குரைஞர். ஜி.ரமேஷ்,

நெல்லைமாவட்டக் குழு உறுப்பினர், இந்திய பொதுவுடமைக் கட்சி(மா.லெ) விடுதலை.

வழக்குரைஞர். செந்தில்,

மாவட்ட ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி, நெல்லை.

வழக்குரைஞர். சிவசுப்பிரமணியன்,

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், நாகர்கோவில்.

திரு. மா.விஜயக்குமார் பாக்கியம்,

நெல்லை மாநகர மாணவரணி செயலாளர், மதிமுக.

பேராசிரியர். அமலநாதன்,

நெல்லை.

தோழர். தமிழீழன்,

நெல்லை.

ஓவியர். புருஷோத்தமன்,

மே பதினேழு இயக்கம், நெல்லை.

 

புரட்சிகர கலை நிகழ்ச்சி: ம.க.இ.க மைய கலைக் குழு.

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

வழக்குரைஞர். சு.ப.இராமச்சந்திரன்,

தூத்துக்குடி மாவட்ட செயலாளர், ம.உ.பா மையம்.

வழக்குரைஞர். க.சிவராசபூபதி,

கன்யாகுமரி மாவட்ட செயலாளர், ம.உ.பா மையம்.

 

 

 • கூடங்குளம் அணு உலைகட்டப்பட்டது நாட்டின் மின்சார தேவையினை பூர்த்திசெய்வதற்கு அல்ல; பன்னாட்டு அணு உலைமுதலாளிகளின் இலாபத்திற்காகவும், அணுகுண்டு – வல்லரசு கனவிற்காகவும் தான்.
 • தமிழக மக்களுக்கும், சிறு தொழிலுக்கும் மின்வெட்டு; பன்னாட்டு நிறுவனங்களுக்கோ தடையில்லா சலுகைவிலை மின்சாரம் – இதுதான் தமிழகத்தின் இன்றைய நிலை! கூடங்குளம் மின்சாரம் தமிழக மக்களுக்கும் சிறு தொழிலுக்கும் என்பது அப்பட்டமான பொய்!
 • காற்றாலை, கடலலை, சூரிய ஒளி, குப்பை கழிவு என  எண்ணற்ற மாற்று மின்சாரத் தயாரிப்பு முறைகள் இருக்கும் போது, கடலோரங்கள் முழுவதும் பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் அணு உலைகள் அமைக்கப்படவுள்ளது அன்னிய முதலாளிகளின் லாபத்திற்காகவே!
 • அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ், ஜப்பான், இரஷ்யா என அனைத்து நாடுகளும் அணு உலைகளி மூடிவரும் நிலையில், அணு உலைகளை அவர்களிடமிருந்து இறக்குமதி செய்து இந்தியாவெங்கும் அமைப்பது பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் குப்பைக் கூடாரமாக இந்தியாவை மாற்றியமைக்கவே!

தமிழக அரசே!

 • கூடங்குளம் இடிந்தகரை போராட்டக் குழுவினர் மீது அரசு துரோக குற்றச்சாட்டு உட்பட பல்வேறு பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறு!
 • 156 பொய் வழக்குகளை பதிவு செய்துவிட்டு போராடும் மக்களை ஆதரிப்பது போல் நடிக்காதே!
 • சிறு தொழிலுக்கும், வீட்டு உபயோகம் – விவசாயத்திற்கும் தடையில்லா மின்சாரம் வழங்கு!
 • பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஐடி நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் சலுகை விலை மின்சாரத்தைரத்து செய்!

மத்திய அரசே! அணுசக்தி கழகமே!

 • அணு உலை பாதுகாப்பானது என்று பொய்ப் பிரச்சாரம் செய்ய மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வரிப்பணத்தை பயன்படுத்தாதே!
 • பொய் – அவதூறு பிரச்சாரத்தை உடனே நிறுத்து!
 • அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை, இரஷ்ய இந்திய கூடங்குளம் அணு உலை ஒப்பந்தத்தை இரத்து செய்!
 • கூடங்குளம், கல்பாக்கம் உட்பட அனைத்து அணு உலைகளையும்மூடு!
 • மாற்றுமின்சாரத் தயாரிப்பு முறைகளை உடனே செயல்படுத்து!

மனித உரிமை ஆர்வலர்களே! பொது மக்களே!

 • தங்கள் வாழ்வினை பாதுகாக்க கூடங்குளம் – இடிந்தகரை மக்கள் போராடுவது வாழ்வுரிமைக்கான போராட்டம்!
 • அவதூறு, அச்சுறுத்தல், அடக்குமுறை என அவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு முனைவதை எதிர்க்க வேண்டியது நம் கடமை!
 • அணு உலை பாதுகாப்பானது என்ற அப்துல் கலாம் மற்றும் அணு உலைக் கழக நிர்வாகிகளின் ஆதாரமற்ற,னேர்மையற்ற பிரச்சாரத்தை புறந்தள்ளுவோம்!
 • மக்களின் உயிருக்கு தலைமுறை தலைமுறையாய் பேராபத்தை விளைவிக்க உள்ள கூடங்குளம் அணு உலை திறக்கப்படுவதை அனுமதியோம்!

 

 

Advertisements

2 பதில்கள் to “கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! நெல்லையில் ஆர்ப்பாட்டம்.”

 1. Ravi ஜனவரி 20, 2012 இல் 4:51 பிப #

  கூடாங்குளம் அது அணுவுலை அல்ல.
  அது அணுகுண்டு உலை.
  மக்கள் நலனில் அக்கரை இல்லாத காமன்வெல்த்,ஆதர்ஷ்,2ஜி ஊழலில் திழைக்கும் காங்கிரஸ் அரசு மக்கள் துரோக அரசு.
  15000 கோடி என்பது வேஸ்ட்டானால் எங்களுக்கு கவலையில்லை.
  2 லச்சம் கோடியை துச்சமாக வீசியவர்கள் நாங்கள்.
  ரஷ்யாவின் கைக்கூலிகளை எதிர்ப்போம்.
  வருங்கால மக்கள் நலன் காப்போம்.

  கூடாங்குளத்தில் பூகம்பம் தாக்காது என்று நிரூபிக்க தவறிய விஞ்ஞானிகள் வேஸ்ட்டு.

 2. சி. ஜெயபாரதன் ஜனவரி 29, 2012 இல் 2:30 முப #

  1. தலைப்பில் உள்ள அங்கவீனக் குழந்தைகள் கயவர் சேர்த்த பொய்ப் பிரச்சாரத் திருட்டுப் படங்கள். அவர்கள் அணுக்கதிரயால் பாதிக்கப் பட்டவர் என்று யாராவது நிரூபித்தால் நான் 100 டாலர் வெகுமதி அளிக்கிறேன்.

  2. கடந்த 50 ஆண்டுகளாக ஹிரோஷிமா, நாகசாக்கி, செர்நோபில், புகுஷிமா விபத்துகளுக்குப் பிறகும் ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா, தென் கொரியா, இந்தியா உட்பட 30 உலக நாடுகளில் 430 மேற்பட்ட அணுமின் நிலையங்கள் இன்னும் இப்போதும் பாதுகாப்பாக இயங்கி வருகின்றன. ஜப்பான், ஜெர்மெனி கூட இன்னும் பல் அணுமின் உலைகளை நிறுத்தாமல் இயக்கி வருகின்றன.

  3. விருத்தியாகும் நாடுகள் ஜப்பான், சைனா, தென் கொரியா, தெய்வான், யுக்ரேய்ன், இந்தியா, தென் ஆப்பிரிகா, ஈரான், போலந்து, பின்லாந்து, அர்ஜன்டைனா ஆகிய அனைத்து நாடுகளின் அணுமின் நிலையங்கள், அன்னிய அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ரஷ்ய டிசைன்களில் ஒன்றாகவே இருக்கின்றன.

  சி. ஜெயபாரதன், கனடா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: