கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் – விவாதம் தொடர்கிறது

23 மார்ச்

இதன் முந்தைய பகுதிகளை படிக்க

 

இந்த விவாதத்தின் மூன்றாவது பகுதியாக சில இணைய மத பரப்புரையாளர்களின் பொய்யும் புனைச் சுருட்டுகளும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. முதலில் மனிதாபிமானி என்ற பெயரில் வேறு ஏதோ ஒன்றின் அபிமானியாக இருக்கும் பதிவைப் பார்க்கலாம். அந்த பதிவை படிக்க இங்கு சொடுக்குங்கள்.

 

வினவு கட்டுரையில் தோழர் துராப்ஷா மன்னிப்பு கேட்டார். அதாவது மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டார் என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.மட்டுமல்லாது பின்னூட்ட விவாதங்களிலும் அவரிடமிருந்து எப்படி மன்னிப்பு பெறப்பட்டது என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் எதையோ மறைத்து விட்டதாய் விளம்புகிறார்கள். எதையும் மறைக்காத நிலையிலேயே மறைத்து விட்டதாய் புழுகியவர்கள், தங்கள் பதிவில் எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் எழுதினார்களா? \\\ இவரின் நடவடிக்கைகள் இஸ்லாமிற்கு எதிராக இருந்ததால், அப்பகுதி மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இவர் இறைநிராகரிப்பாளர் என்று அறிவிக்கப்பட்டார். துராப்ஷாவிடம் இது சம்பந்தமாக கையெழுத்தும் வாங்கிக்கொள்ளப்பட்டது /// வெறுமனே இறை நிராகரிப்பாளர் என்று அறிவிக்கப்பட்டாரா? ”உன்னுடைய எந்த விளக்கமும் தேவையில்லை. மன்னிப்பு கேட்பதைத்தவிர வேறு எந்த வார்த்தையும் உன் வாயிலிருந்து வெளிவரக் கூடாது” என்று குடும்பத்தாரால் மிரட்டப்படவில்லையா? வேறு வழியில்லாமல் சரி என்று சம்மதித்து மன்னிப்பைக் கேட்கவந்தால் அதையும் கூட கேட்கவிடாமல் தாக்குதல் தொடுக்கப்படவில்லையா? பொய்யாக என்றாலும் குற்றம் சாட்டப்பட்டவரிடம் எந்த விசாரணையும் செய்யாமல் ஏற்கனவே எழுதி கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் கையெழுத்து வாங்கப்படவில்லையா? இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து ’அறிவிக்கப்பட்டார்’ என்ற ஒற்றைச் சொல்லில் கடந்து சென்றது ஏன்? அல்லது எந்த அயோக்கியர்களைக் காப்பாற்ற?

 

தோழர் துராப்ஷா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு குறிப்பிட்ட கட்டுரையை முகநூலில் அவர் பகிர்ந்தது காரணமல்ல, அரசியல் ரீதியாக அவர் செயல்பட்டதின் எதிர்விளைவு தான் என்பதை தெளிவாகவே நிருவியிருக்கிறேன். கேள்விகள் எழுப்பப்பட்டால் இன்னும் விரிவாக நிரூபிக்க காத்திருக்கிறேன். ஆனால் இந்த அபிமானிகளோ காழ்ப்புணர்வு எனும் ஒற்றைச் சொல்லில் கடந்து செல்கிறார்கள். முகநூலில் பகிர்ந்தது தான் காரணம் என்றால், இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் அறியப்பட்டபோதே ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இன்றும் கடையநல்லூரில் எத்தனையோ இளைஞர்கள் நாத்திக கருத்துகளை பரப்பி வருகிறார்கள். இஸ்லாத்துக்கு எதிரான சிந்தனைகளை பேசிவருகிறார்கள். ஏன் மேடைகளில் கூட முழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லையே. இவ்வாறிருக்க தோழர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்ட மர்மம் என்ன? அதுவும் முதலில் அவரது கடையில் வாங்காதீர்கள் என்று பள்ளிவாசலில் அறிவிப்பு அது செல்லுபடியாகவில்லை என்றதும் கடையில் குழப்பம் செய்து காவல்துறையில் முறையீடு செய்யப்பட்டது. அதிலும் தோழரின் விளக்கங்களுக்கு பதில் கூற முடியவில்லை என்றதும் ஜமாத்தார்கள் உலாமாக்கள் மூலம் நடவடிக்கை. இது ஏன்? பதில் கூற முன்வருவார்களா அபிமானிகள்?

 

அடுத்து போட்டி மனப்பான்மையால் வெளிப்பட்ட அரசியல் குறித்தும் எழுதப்பட்டிருந்தது அந்தக் கட்டுரையில் இதை முட்டாள்தனமானது என்று கூறியிருக்கிறார்கள் அபிமானிகள். கூடவே, புத்திசாலித்தனமான கேள்வி ஒன்றையும் எழுப்பியிருக்கிறார்கள். \\\ இப்போது துராப்ஷா முஸ்லிமாகிவிட்டார். இந்த ஜமாஅத்தினர்கள் இதனை எதிர்க்க போகின்றார்களா?  /// இந்தக் கேள்விக்கும், போட்டி அரசியலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?அந்த ஊரில் போட்டி அரசியல் தான் நிலவில் இருக்கிறது என்பதற்கு கட்டுரையிலேயே எடுத்துக்காட்டுகள் கூறப்பட்டிருக்கிறது மறுக்க முடியுமா அபிமானிகளால்? நடந்தது போட்டி அரசியல், அதனை அறுவடையும் செய்து கொண்டார்கள். இப்போது சேர்ந்ததை மறுப்பதால் யாருக்கு லாபம். லாபம் இருக்கிறது என்றால் அதையும் செய்வார்கள். பதில் எழுத அபிமானிகள் தயார் என்றால் முன்னிலும் அதிகமாக விளக்க நானும் ஆயத்தமாக இருக்கிறேன்.

 

அதுசரி பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது எழுதாமல் இப்போது ஏன் எழுதுகிறோம். இதற்கு ஏற்கனவே பதில் எழுதப்பட்டிருக்கிறது. தோழரை, தோழரின் குடும்பத்தினரை, தோழரின் உடமைகளை காக்கும் கடமை எங்களுக்கு இருந்தது. அப்போதே எழுதியிருந்தால் கொலைக்கும் அஞ்சியிருக்க மாட்டார்களே இந்த பயங்கரவாதிகள்?

 

இந்த இடத்தில் இன்னொரு விளக்கமளிக்க வேண்டியதும் தேவையாகிறது. அபிமானிகளின் பதிவு வெளிவந்த நேரத்தில் அவர்களுக்கு நான் பதிலளித்திருந்தேன். ஆனால் அது வெளியாகவே இல்லை. வினவில் வெளிவந்த அந்த பின்னூட்டம் இங்கே. வழக்கமாக இது போன்ற பின்னூட்டங்களை நான் சான்றுகளுக்காக படமெடுத்து வைப்பது வழக்கம். அன்றிருந்த சூழலில் இதை படமெடுக்க மறந்துவிட்டேன். அப்படி படமெடுத்து வைத்திருந்தால் இன்று இவர்களின் கள்ளத்தனங்களை அம்பலப்படுத்தியிருக்கலாம். தவறிவிட்டேன். இதையே சாக்காக வைத்து அதில் எழுப்பபட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவி விட்டார்கள் இந்த அபிமானிகள். அவர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள் \\\ எவ்வளவு குரூர மாணவனிடம் வேண்டும் என்றாலும் மோதலாம். ஆனால் பொய்யர்களிடம் மோதி வென்றோ அல்லது தோற்றோ ஆகப்போவது ஒன்றும் இல்லை. ஆகவே, விடு ஜூட்……. /// இவர்களின் சான்றிதழ்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பதாலும், இவர்களிடம் பதில் வாங்க வேண்டும் எனும் ஆவலிருப்பதாலும் ஒரு வாதத்திற்காக நான் அவர்கள் தளத்தில் பின்னூட்டமிடவில்லை என்றே கொள்வோம், கேள்விகளுக்கு பதில் கூறத் தயாரா இந்த அபிமானிகள்? (அந்தப் பதிவை எழுதிய அபிமானிகளுள் ஒருவர் இதுபோன்றே முன்பு என்னுடைய பின்னூட்டத்தை தடுத்துவைத்து தகிடுதத்தங்கள் புரிந்தார். அது இப்போது பேசப்படும் விசயங்களுக்கு வெளியிலுள்ள விசயம் என்றாலும் ஒரு தகவலுக்காக அந்த பதிவை இங்கே சொடுக்கி படித்துப் பார்த்துக் கொள்ளலாம்)  துணிவு உள்ளவர்கள் பதில் கூறட்டும். பார்க்கலாம் அவர்களின் நேர்மையை.

 

அடுத்து ஷேக்தாவூத் எனும் ஜோக் தாவூத் என்பவர் தொடர்பில்லாத வேறொரு விடயத்தோடு முடிந்திருக்கிறார். நாங்கள் கூறிய புகார் பொய்யானதல்ல என்பதற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட இஸ்லாமியரை உள்ளே தள்ளியிருக்கிறோம் என்பதே சான்று. இணையத்தில் அவதூற்றை கழிந்தவர்கள் அது உண்மை என நம்பினால் எங்கள் தோழர் மீது காவல் துறையில் புகார் அளிக்கட்டும். நாங்கள் சந்திக்கத் தயார். திராணி இருக்கிறதா இவர்களுக்கு? நேரடி நேரடி என்று பீலா விடும் எவரும் எழுத்து விவாதத்துக்கு வாருங்கள் என்று சவால் விட்டு கூறியிருக்கிறேன். அறிவு நாணயம் இருப்பவர்கள் எதிர் கொள்ளலாம்.

 

அடுத்து ஜிட்டிஜன் என்பவர் ஜோக் என்றும் பயங்கரவாதம் என்று ஏதேதோ எழுதியிருக்கிறார். அதை படித்து பொருள் புரிந்து கூறுபவர்களுக்கு பரிசு வழங்கலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு குழப்பம். எதை ஜோக் என்கிறார்? எப்படி பயங்கரவாதம் என்கிறார்? அவருக்கே புரிந்திருந்தால் மகிழ்ச்சி. அவர் ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் ஏன் போலீஸுக்கு போகவில்லை என்று. அவர் முகத்தில் படியும் கரியை எப்படி துடைத்துக் கொள்வார் என்று விளக்கினால், போலீசுக்கு போகக்கூடாது என்று குடும்பத்தார்கள் மிரட்டியதால் தான் போகவில்லை என்பதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயார். இது மட்டுமல்லாது, சங்கர்லால் போல துப்பறிந்து ஒரு விசயத்தையும் எழுதியிருக்கிறார். நடந்த நிகழ்வு அன்றே எனக்கு தெரியும் என்பதும், வினவு கட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை தான் ’பத்திக்கிச்சு’ என்று எழுதியிருப்பதும் எப்படி எந்த விதத்தில் முரண்படுகிறது? இது எப்படி பொய்யாகும் விளக்க முடியுமா? உளறல் என்பதற்கான மெய்ப்பொருள் வேண்டும் என யாராவது தேடினால் இவரின் இந்த கண்டுபிடிப்பை பரிந்துரை செய்யலாம்.

 

அடுத்து அப்துல்லா என்பவர், அமைதியான ஊரை, கண்ணியமான மக்களின் கூட்டமைப்பை என்று உருகியிருக்கிறார். ஆனால் எது அமைதி? கண்ணியம் எங்கிருக்கிறது என்பதை மட்டும் பரிசீலனை செய்ய மறுக்கிறார். ஒரு கருத்தை ஆதரிப்பதும் ஒதுங்குவதும் அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதில் எதை பொய் என்று கருதுகிறார் என்பதை அவர் வெளிப்படுத்தலாமே. அப்போதல்லவா தெரியும் எது பொய் எது உண்மை என்று. ஒதுங்கி ஓடினால் உண்மைகளை உணர முடியாது.

 

அபிமானிகளின் இந்த பதிவில் தங்கள் கருத்துகளை பின்னூட்டிய கார்பன் கூட்டாளி, ஷேக்தாவூத், முகம்மத் ஆஷிக், சிராஜ், சுவனப் பிரியன், அப்துல்லா ஆகியோர் என்னுடைய இந்த எதிர்வினை குறித்த பதில்களை தந்தாக வேண்டும். அப்படி அவர்கள் பதில் தராத பட்சத்தில் எந்த சிந்தனையுமற்ற மூடநம்பிக்கை மதவாதிகள் என்றே கருதப்படுவார்கள்.  ஏனென்றால், அநீதி என்று தெரிந்து கொண்டே அதை ஆதரிப்பவன் மூடநம்பிக்கை கொண்டவனாகத்தான் இருக்க முடியும் அல்லவா? எனக்கு ஹைதர் அலி என்றொரு நண்பர் உண்டு, அவர் என் கருத்துகளின் நண்பர் இல்லை என்றபோதிலும் எதிரி இல்லை என்பதையும் உணர்த்தியவர். இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நான் விரும்புபவர்களில் அவரும் ஒருவர். ஆனால் இதுவரை அவர் மௌனமாகவே இருந்து வருகிறார். இதன் மூலம் அவர் தன்னுடைய கருத்தை பதிய வேண்டும் எனும் வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

 

அடுத்ததாக நாம் பார்க்கவிருக்கும் தளம் கடையநல்லூர்.ஆர்க். கடையநல்லூர் தளங்களிலேயே அதிகம் கவனம் பெறும் தளம். என்னுடைய மாற்றுக் கருத்துகளையும் ஓர் எல்லை வரை அனுமதித்தார்கள் எனும் வகையில் குறிப்பிடத்தக்கதாய் இருந்தாலும், இந்த விசயத்தில் தொடக்கத்திலிருந்து அவர்கள் நடந்து கொண்ட விதம் அப்பட்டமாக குறுகிய மதவெறியை கொண்டதாக இருக்கிறது. இது குறித்து அவர்கள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் நடந்த அநீதியை மறைத்து அதை மதவாத நோக்கில் சரிக்கட்டும் விதமாகவே அமைந்திருந்தது. மட்டுமல்லாது கடையநல்லூரைச் சேர்ந்த பலர் மதக் கொழுப்பு வழிந்தோட இட்ட பின்னூட்டங்களையெல்லாம் பல நாட்களாக வைத்திருந்துவிட்டு வினவில் அது குறித்த கட்டுரை வெளிவந்த பின்னர் கள்ளத்தனமாக அந்த பின்னூட்டங்களை நீக்கி விட்டார்கள். இது அவர்களின் நேர்மையற்ற போக்கிற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு. இதன் பின்னரும் கூட என்னைப்பற்றிய செய்திகளை கிசுகிசுக்களாக வெளியிடுவதில் முனைப்பு காட்டினார்கள். அவற்றில் ஒன்றிரண்டிற்கு நான் பதில் எழுதியதும், நான் அவ்வாறு பதில் எழுதக் கூடாது என்பதற்காகவே தங்கள் தளத்தில் முகநூல் கணக்கில் பின்னூட்டமிடும் வசதியையே நீக்கிவிட்டார்கள். இது அவர்களின் காழ்ப்புணர்வை வெளிப்படுவதாகாதா? அது மட்டுமன்றி என்னை குறிவைத்து எழுதப்பட்ட பதிவுகளுக்கு நான் மறுப்பு எழுதி அனுப்பியபோது அதை வெளியிட மறுக்கிறார்கள், இது இந்திய அவதூறு சட்டப் பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத்தண்டனை பெறத்தக்க குற்றம் எனும் அறிதல் கூட இல்லாமல். இவைகளெல்லாம் நேர்மைக்கும் இவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை வெளிக்காட்டும் கருவிகள்.

 

கடைசியாக ஒரு பெரியவர். கவிஞர், கவியரங்குகளிலும், பொது மேடைகளிலும் தன் கவிதைகளை வாசித்தவர். கடல்கடந்த எழுத்தாளுமைகளுடன் தொடர்பு கொண்டிருப்பவர். ஆனால் அவருடைய எழுத்தின் ஆளுமையை தெரிந்து கொள்ள இதை படித்துப் பாருங்கள். \\\ USING YOUR RIGHTS YOU HAVE NO RIGHT TO SAY YOUR FATHER AND MOTHER AS BASTARD,. SIMILARLY YOU HAVE NO RIGHT TO EXPRESS ABUSES AGAINST A RELIGION.IF YOU TAKE THE RIGHTS IN YOUR HAND I CAN CALL YOUR WIFE AND MOTHER AS PROSTITUTE. IF I SAY THIS YOUR BLOOD WILL BE BOILING. ISNT ? OUR RELIGION ISLAM IS MORE THAN OUR SOUL, MOTHER AND WIFE. IF YOU ABUSE OUR BLOOD WILL BOIL. IT IS QUIET NATURE. YOU CAN NOT SAY IT AS BRUTAL AND BARBARISM./// இது கடையநல்லூர் பிரச்சனை குறித்து கூகுள் பிளஸில் அவர் எழுதியது. இவர் வேறு யாருமில்லை. இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதமே என்று என்னுடன் விவாதிக்க வந்து விட்டு முடியாமல் பாதியிலேயே ஓடிப் போனவர். ஐயா ரத்தம் கொதிக்கும் அளவுக்கு என்ன எழுதப்பட்டிருந்தது என்று பலமுறை கேட்டாயிற்று. பதில் கூறுவதற்கு நாதியில்லை. ஆனால் இவர்கள் ரத்தம் மட்டும் கொதித்துக் கொண்டே இருக்குமாம். போங்கையா நீங்களும் உங்கள் ரத்தக் கொதிப்பும். சீக்கிரமாக மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். இல்லையென்றால் உங்கள் ஆண்டவன் உங்களுக்கு எழுதிய தேதி சீக்கிரமே வந்துவிடப் போகிறது.

 

ஒன்றை கவனிக்கலாம். வெட்டணும், கொல்லணும், புண் பட்டு விட்டது, கருத்துரிமையின் எல்லை  என்றெல்லாம் கதை பேசியவர்கள் வாருங்கள் அது குறித்து பேசுவோம் என்றதும் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். வந்த சிலரும் கூட பேசவேண்டியதைப் பேசாமல் காணாமல் போய் விடுகிறார்கள். ஆனால் அவர்களின் கருத்தை மட்டும் பத்திரமாக பாதுகாத்துக் கொள்வார்கள். என்றால் அதன் பொருள் என்ன? தாங்கள் மத வெறி பிடித்தவர்கள் என்பதையும், கடையநல்லூரில் நடந்தது காட்டுமிராண்டித்தனமானது என்பதையும் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள் என்பது தான். ஆனால் இது ஆவணமாக பாதுகாக்கப்படப் போகிறது. பல ஆண்டுகள் கழித்து இதைப் படிக்கும் யாரும் உங்கள் மதவெறியின் மீதும் நேர்மையின்மையின் மீதும் காரி உமிழ்வார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடலாகாது.

 

பின் குறிப்பு: இந்தப்பதிவு இத்துடம் முடிவடைவதைப் போன்ற தோற்றம் வந்திருக்கிறது என்றாலும் முடிந்துவிடவில்லை. இதில் இன்னும் பல விசயங்கள் பேசப்பட வேண்டியதிருக்கிறது என்பதால் தொடரும்.

Advertisements

11 பதில்கள் to “கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் – விவாதம் தொடர்கிறது”

 1. raja மார்ச் 23, 2012 இல் 4:09 பிப #

  Neeyellam oru aalunnu unakku reply anuppkittu irukkanga … Poda Poi Pulla kuttigala nalla padikka vaida

 2. S.Ibrahim மார்ச் 24, 2012 இல் 8:50 முப #

  idontcare

 3. S.Ibrahim மார்ச் 24, 2012 இல் 9:14 முப #

  நல்லூர் ஒப்பாரி ////ஒன்றை கவனிக்கலாம். வெட்டணும், கொல்லணும், புண் பட்டு விட்டது, கருத்துரிமையின் எல்லை என்றெல்லாம் கதை பேசியவர்கள் வாருங்கள் அது குறித்து பேசுவோம் என்றதும் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள் .////

  அது குறித்து பேசுவோம் ? பீஜே வுடன் விவாதம் என்றால் என்னை அடையாளம் கண்டு கொன்னுவிடுவார்கள் என்று சால்ஜாப்பு சொல்லும் நீங்கள் மற்றவர்களை மட்டும் பேச அழைப்பது ஏன்? அவர்களை எழுத்து விவாதத்திற்குத்தான் அழைத்தேன் என்று கதையை திருப்பக் கூடாது. எழுத்து விவாதம் என்பது மாத கணக்கில் இழுத்துக் கொண்டு செல்லும்.உங்களைப் போல் எல்லோரும் சோம்பேறிகள் இல்லை .வேலை இல்லாதவர்களும் இல்லை .ஆயின் நேரடி விவாதத்தில் ஓரிரு நாளில் பேசி யாரிடம் உண்மை உள்ளது என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டு போகட்டும்

 4. S.Ibrahim மார்ச் 24, 2012 இல் 9:17 முப #

  கம்யுனிஸ்ட்கள் மொல்லுமாரித்தனம் செய்தார்களா? கடையநல்லூர் ஜமாஅத் மொல்லுமாரித்தனம் செய்ததா?என்ற தலைப்பில் விவாதத்திற்கு வரத்தயாரா?
  உள்வாங்கவில்லை .தட்டையாக பேசுகிறீர்கள் என்று வழக்கமான உங்களது சம்பிராதயங்களை தவிர்க்க வேண்டும் .

 5. nallurmuzhakkam மார்ச் 24, 2012 இல் 3:00 பிப #

  இப்ராஹிமே,

  தயார். ஆனால் அதற்கு முன்னால் தொடர்பற்ற விசயங்களை எழுதமாட்டேன்,கேட்ட கேள்விகளுக்கு நியாயமாக பதில் கூறுவேன், சுற்றி வளைத்து திசைதிருப்ப மாட்டேன் என்று உறுதி மொழிகள் தரவேண்டும். தயாரா?

  • S.Ibrahim மார்ச் 25, 2012 இல் 3:00 முப #

   தயார்,ஆனால் நியாயமான பதிலை தந்தாலும் சுற்றி வளைத்து திசை திருப்பாதீர்கள் என்று சொல்லக் கூடாது.பதில் சொல்ல இயலாத கருத்தாக இருந்தால் தொடர்பற்ற விஷயங்கள் என்று சொல்லக் கூடாது.

 6. nallurmuzhakkam மார்ச் 25, 2012 இல் 3:17 பிப #

  இப்ராஹிமே,

  முதலிலேயே திருகலா? சுற்றி வளைத்து திசை திருப்புதல் என்றால் என்ன? கேட்கப்பட்ட கேள்விக்கு,கேள்வியின் நோக்கத்திற்கு பதில் கூறாமல் அதனுடன் தொடர்புடைய வேறொன்றைக் கூறுவது. எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு வெளியில் இருந்தால் அது தொடர்பற்றது தான், அதில் நீங்கள் எவ்வளவு விருப்பம் கொண்டிருந்தாலும். இவைகளுக்கு எடுத்துக் காட்டு வேண்டுமென்றால் முன்னர் நடந்த விவாதத்தில் உங்களின் வாதங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். பின்னர் சம்மதமா என்று கூறுங்கள். அதன்பிறகு கடையநல்லூர் கம்யுனிஸ்ட்கள் மொல்லுமாரித்தனம் செய்தார்களா? கடையநல்லூர் ஜமாஅத் மொல்லுமாரித்தனம் செய்ததா? என்பதை விரிவாக விவாதிப்போம்

 7. S.Ibrahim மார்ச் 25, 2012 இல் 8:45 பிப #

  ///இவைகளுக்கு எடுத்துக் காட்டு வேண்டுமென்றால் முன்னர் நடந்த விவாதத்தில் உங்களின் வாதங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். ////
  எங்கே எடுத்துக் காட்டுங்கள் ?
  நான் சுற்றி வளைக்க வில்லை நீங்கள் தொடர்பற்றது என்பதை நான் தொடர்புடையது தான் என்று நிருபிக்கிறேன்.உங்கள் விருப்பதிர்கேற்றவாறு எதை வேண்டுமானாலும் தலைப்புக்கு தொடர்பற்றது என்று கூறக் கூடாது.இந்த திருகல் முறுகல் வெங்காயம் விளக்கெண்ணை எல்லாம் வேண்டாம்.
  விவாதத்தை தொடங்குங்கள் .மக்கள் எது திருகல் முறுகல் என்று முடிவு பண்ணட்டும்

 8. nallurmuzhakkam மார்ச் 27, 2012 இல் 4:07 பிப #

  இப்ராஹிம் விரைவில் தொடங்கப்படும்.

  தஜ்ஜாலுக்கென்று ஒரு தளம் இருக்கிறது, அங்கு சென்றுஅழையுங்கள்

 9. nallurmuzhakkam மார்ச் 29, 2012 இல் 6:21 முப #

  இப்ராஹிம்,

  விவாதம் தொடங்கப்பட்டு விட்டது, வருக.

 10. vignaani ஏப்ரல் 4, 2012 இல் 8:34 முப #

  Quran is to be kept outside any debate/discussion. Accepting it as it is the minimum responsibility of a muslim. At the same time, it is time, muslims see a point in discussing Hadiths and cull out paras not relevant/consistent with today,s social scenario. Discussion for discussion-sake would be of no consequence. Ther would be some semblance of unanimity in excluding a few Hadiths.(for example, drinking water while standing, yawning, etc.)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: