கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் – விவாதத்தின் இறுதிப் பகுதி

25 ஜூலை

இந்த விவாதத்தின் கடைசிப் பகுதியாக காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் எந்தவித தயக்கமும் இன்றி ஈடுபடும் மதவாதிகளின் அடிப்படை குறித்து அலசலாம்.

 

ஒரு நடவடிக்கை அல்லது செயல் எந்த அடிப்படையில் ஒருவனால் மேற்கொள்ளப்படுகிறது? தன்னால் செய்யப்படும் செயல் தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவு அவனிடம் இருக்கும் போது மட்டுமே அதை செய்வதற்கான உந்துதல் அவனுக்கு கிடைக்கும். தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவு அவனிடம் எந்த வழியில் வருகிறது? ஒரு செயல், அதற்கான தூண்டுதல், விளைவு, எதிர்வினை போன்றவை தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவை இரண்டு வழிகளில் அடைகிறார்கள். 1. சரியா? தவறா? 2. சாதகமா? பாதகமா?

 

உலகின் பெரும்பாலான மக்கள் சாதகமானதா? பாதகமானதா? எனும் கோட்டில் நின்று தான் சிந்திக்கிறார்கள். தாம் செய்யப் போகும் ஒரு செயல் சரியானதா? தவறானதா? எனும் ஆய்வு அவர்களுக்குள் ஏற்படுவதில்லை. தவறானதாக இருந்தாலும் சாதகமானதாக இருந்தால் செய்துவிடுவதும், தாம் செய்வதையே சரி என வாதிடுவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது. சரி என்று வாதிடுபவர்கள் அனைவரும் அது சரி என தெரிந்ததனால் வாதிடுபவர்கள் அல்லர். தவறு என்று தெரிந்து கொண்டே சரி என வாதிடுபவர்களே இங்கு அதிகம். இது ஏன்?

 

ஒன்று சரியா தவறா அல்லது சாதகமா பாதகமா எனும் முடிவு அந்தந்தப் பொருள் குறித்து அவர் கொண்டிருக்கும் கருத்திலிருந்து பிறக்கிறது. இந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே சரியா தவறா? சாதகமா பாதகமா? என்பதை ஒவ்வொருவரும் முடிவு செய்கிறார்கள். தனக்கு சாதகமானது என்று ஒன்றைப் பற்றி கருத்து கொண்டிருக்கும் ஒருவரால் மெய்த்தன்மையில் அது பாதகமானதாக இருந்தாலும், தவறானதாக இருந்தாலும் அதை தவறு என்று அவரால் தள்ள முடியாது. ஏனென்றால் அவரது கருத்துக்கு எதிராக அவரால் சிந்திக்க முடிவதில்லை. சிந்தனை கருத்து இரண்டுமே அனுபவங்களிலிருந்து அதாவது சமூகத்திலிருந்து தோன்றுபவை தான் எனும் போது ஏன் ஒருவரால் அவரின் சொந்த கருத்துக்கு எதிராக சிந்திக்க முடியாது? ஒரு பொருளைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு கருத்தை மீறி அதே பொருளைப் பற்றிய வேறு கருத்துகளும் இருக்கக் கூடும் எனும் நிலையைச் செரிக்க அவனால் முடிவதில்லை. தெளிவாகச் சொன்னால், ஒரு கருத்து அவனுள் நம்பிக்கையாக நிலை பெற்றிருக்கும் போது அந்தக் கருத்துக்கு எதிராக சிந்தனை செய்வது என்பது சாத்தியமற்றுப் போகிறது. இந்த நம்பிக்கையின் அடிக்கல்லில் எழுந்து நிற்பது தான் மதம். மதத்திற்கு எதிரான சிந்தனை குற்றமாகவும் பார்க்கப்படுவதால் மதத்துக்கு எதிரான சிந்தனைகள் எப்போதுமே இயல்பை மீறிய விசயமாகவே இருக்கிறது.

 

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடயேயுள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டால் யாரும் சட்டெனக் கூறுவது சிந்தனை என்பது தான். ஆனால் விலங்குகள் சிந்திப்பதில்லையா? சிந்திக்கின்றன. கழுதைப் புலிகள் கூட்டாக வேட்டையாடுகின்றனவே சிந்திக்காமல் சாத்தியமா? வேறென்ன வேறுபாடு, பகுத்தறிவா? விலங்குகளும் பகுத்தறிகின்றனவே. குறிப்பிட்ட செடியை மட்டும் உண்ணாமல் தவிர்க்கின்றன ஆடுகள். பகுத்தறியவில்லை என்றால் சாத்தியமா? மனிதர்களைப் போலவே விலங்குகளும் உழைக்கின்றன, உண்கின்றன, தாய்மை உணர்வு கொள்கின்றன. ஆனால் மனிதனைப் போல் விலங்குகளால் மீளாய்வு செய்ய முடிவதில்லை. தான் செய்து கொண்டிருக்கும் செயல் சரியானதா? தவறானதா? தொடர்ந்து செய்யலாமா? கூடாதா? என்பன போன்ற சிந்தனைகள் அதாவது ஒன்றை ஐயப்படத் தெரியாது விலங்குகளுக்கு. அதாவது உயிர் வாழும் தன்மைக்கு பாதிப்பு நேரிடாதவரை தன்னுடைய செயல்களை மாற்றிக் கொள்வதில்லை விலங்குகள். மனிதன் எந்த நிலையிலும் மீளாய்வு செய்து பார்க்கும் திறனைப் பெற்றிருக்கிறான். மீளாய்வு செய்து பார்க்கும் திறனைப் பெற்றிருக்கிறான் என்பது தான் உண்மையேயன்றி; ஒவ்வொன்றையும் மீளாய்வு செய்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உண்மையாக இருக்க முடியாது. தான் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் அது சரியா தவறா? என உள்வசமாய் சிந்திக்காமல்; சூழலுக்கான தம்முடைய எதிர்வினை சரியானதா? என்பதை ஆராயாமல் தான் நம்பிக் கொண்டிருக்கும் ஒன்றுக்கு எதிராய் இருக்கும் அத்தனையும் தவறாகவே இருக்கும் என்று எந்த மீளாய்வுக்கும் இடமில்லாமல் எந்த இடத்தில் முடிவு செய்கிறானோ அந்தப் புள்ளியிலிருந்து மூட நம்பிக்கை தொடங்குகிறது. அவன் அதை மூடநம்பிக்கை என்று வகைப்படுத்தவில்லை என்றாலும் கூட அதுவே நிஜம்.

 

ஆக, யாராக இருந்தாலும் அவர் தாம் செய்யும் செயல்களை – அது எந்த தத்துவத்தின் வழியில் வருவதாக இருந்தாலும், எந்த மதத்தின் அடிப்படையில் இருப்பதாக கொண்டாலும் – அதை மீளாய்வுக்கு உட்படுத்துகிறாரா? இல்லையா? என்பது மட்டுமே அவர் சரியான நிலைபாட்டில் இருக்கிறாரா என்பதை தெளிவதற்கான அளவுகோல். இப்போது கடையநால்லூர் நிகழ்வில் இதை பொருத்திப் பார்ப்போம். தோழர் துராப்ஷாவைத் தாக்கிய, தாக்க நினைத்த, தாக்கியதை சரி என்று எண்ணிய அத்தனை பேரையும் ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் கேட்கலாம், “உங்களிடம் இன்னும் நேர்மை உணர்வு கொஞ்சமேனும் மிச்சமிருக்குமானால் தோழரை நீங்கள் தாக்கியது, தாக்க நினைத்தது, தாக்கப்பட்டதை சரி என்று எண்ணியது சரிதானா?” நீங்கள் விலங்கு நிலைக்கு தாழ்ந்து போக விருப்பமில்லாதவர்களாயின் நீங்கள் மீளாய்வு செய்தே தீர வேண்டும்.

 

உங்களைச் சுற்றி நடக்கும் எத்தனை நிகழ்வுகளுக்கு நீங்கள் காது கொடுத்திருக்கிறீர்கள்? எத்தனை சமூக அநீதிக்கு எதிராக நீங்கள் கொதித்தெழுந்திருக்கிறீர்கள்? உங்கள் வாழ்வை வளங்களை பறித்து உங்களை கடல் கடந்து ஓட வைத்திருக்கும் முதலாளித்துவத்தை நினைத்து நீங்கள் சினந்தது உண்டா? குறைந்தபட்சம் அதை புரிந்துகொள்ளவேனும் முயற்சித்ததுண்டா? உங்கள் கண் முன்னே லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்த போது உங்கள் தார்மீகக் கோபம் எங்கே போனது? கல்வியை கை கழுவிவிட்டு மதுவை அரசுடமை ஆக்கி ஆறாய் ஓடச் செய்திருக்கும் இந்த அரசுக்கு எதிராக உங்கள் கைகள் உயர்ந்ததுண்டா? இன்றல்ல, இரண்டல்ல .. .. சமூகத்தில் நிகழும் பெரும்பாலான செயல்களும் ஏதாவது ஒரு விதத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிராகவே இருக்கின்றன. அவைகள் குறித்த உங்கள் எதிர்வினை என்ன? உங்களை நீங்களே கேள்வி கேட்டதுண்டா?

 

ஆனால், ஆனால் கேவலம் மதத்துகு எதிராய் எழுதினான் என்ற பொய்க் குற்றச்சாட்டை அப்படியே நம்பி  தாக்கத் துணிந்தீர்களே! உங்கள் செயல் சரிதானா என சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணம் வந்ததுண்டா உங்களிடம்? என்றால் நீங்கள் எதுவாக இருக்க விரும்புகிறீர்கள்? கேள்வியை கேட்டு விட்டேன், பதிலை நீங்கள் தான் தேட வேண்டும். ஏனென்றால் நான் உங்களை உயர்தினையாய் மதிக்க விரும்புகிறேன்.

 

முதல் பதிவு: செங்கொடி

Advertisements

10 பதில்கள் to “கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் – விவாதத்தின் இறுதிப் பகுதி”

 1. S.Ibrahim ஜூலை 31, 2012 இல் 8:00 பிப #

  .//// பதிலை நீங்கள் தான் தேட வேண்டும். ஏனென்றால் நான் உங்களை உயர்தினையாய் மதிக்க விரும்புகிறேன்.////

  பதிலை நாங்கள் ஏன் தேட வேண்டும் ? நாங்கள் உங்களை உயர்திணையாக மதிக்க விரும்ப வில்லையே

 2. nallurmuzhakkam ஜூலை 31, 2012 இல் 8:29 பிப #

  நான் அஃறிணைகளை நோக்கி கேள்வி எழுப்பவில்லையே

  • S.Ibrahim ஓகஸ்ட் 1, 2012 இல் 9:32 முப #

   உங்களை அஹ்ரினையாகக் கொண்டு நீங்கள் போட்ட கூச்சலை யாரும் பொருட்படுத்தவில்லை.நான் மட்டுமே உங்களை உயர்தினையாக்க முயற்சித்தேன் .பலனில்லை.ஆனாலும் முயற்சியை கைவிடப் போவதில்லை

 3. nallurmuzhakkam ஓகஸ்ட் 2, 2012 இல் 8:51 பிப #

  வடிவேலு சொல்றாறு எல்லோரும் கேட்டுக்குங்க.

  உடுத்தியிருக்கிறது பன்னாடை, இதுல பொன்னாடை லெவலுக்கு பீத்தல் எதுக்கு?

 4. rafick ஓகஸ்ட் 5, 2012 இல் 3:30 பிப #

  இஸ்லாத்தை விமர்சிக்கும் செங்கோடியே உனக்கு நிஜமாகவே திராணி இருந்தால் ,உனது இத்து போன கம்யுனிச கொள்கையில் நம்பிக்கை இருந்தால் பி.ஜே வின் இந்த சவாலை ஏற்றுக்கொள் .விவாதிக்க வா .அதை விட்டுவிட்டு
  பொம்பளை மாதிரி முகத்தை காட்டமால் மூடிக்கொண்டு இஸ்லாத்தை விமர்சிப்பதால் எந்த நன்மையும் இல்லை .
  இதோ பி .ஜே வின் நெத்தியடி சவால்

  இத படித்து விட்டு கொஞ்சமாவது சூடு சொரணை இருந்தால் நேரடி விவாததிற்கு வா இல்லை என்றால் நீ ஒரு பொட்டைதான் என்பதற்கு நீயே சாட்சி ….

 5. nallurmuzhakkam ஓகஸ்ட் 5, 2012 இல் 9:52 பிப #

  நண்பர் ரபீக்,

  நீங்கள் எழுதியிருக்கும் அத்தனைக்கும் நீங்கள் சொந்தக்காரர் என்றால் அழைத்து வாருங்கள் உங்கள் பிஜேவை எழுத்து விவாதத்திற்கு. ஒரு கை பார்த்து விடலாம். மற்றப்படி உங்கள் விளக்கங்களெல்லாம். பிஜேவின் விசிலடிச்சான் குஞ்சுகளூக்குத் தான் சரியாக இருக்கும்.

 6. mohammed rafick ஓகஸ்ட் 6, 2012 இல் 12:41 பிப #

  தோழர் செங்கொடி
  பி.ஜே வோடு எழுத்து விவாதத்திற்கு தயார் ஆனால் நேரடி விவாதத்திற்கு வரவே மாட்டேன் என்று அடம்பிடிப்பது உங்கள் கொள்கையில் உங்களுக்கு உறுதி இல்லை என்பதை தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது .எழுத்து விவாதத்தில் எந்த பயனும் இல்லை என்பதால் தான் பி .ஜே அதை தவிர்த்து வருகிறார் .பதிலுக்கு பதில் எதையாவது எழுதி பக்ககங்களை நிரப்பி பல வருடங்கள் விவாதத்தை எழுத்து விவாதத்தின் மூலம் இழுத்தக் கொண்டே செல்லலாம் .அப்படியே பல வருடங்கள் எழுத்து விவாதத்தை சந்தித்தாலும் அந்த விவாதத்தை மக்கள் மத்தியில் கொண்டு பொய் சேர்ப்பதும் கடினம் .நூற்று கணக்கான பக்கங்கள் உள்ள விவாதத்தை யாரும் உட்காந்து பொறுமையாக படிப்பதும் சிரமம் .ஆனால் நேரடி விவாதத்தில் இரு தரப்புக்கும் கை மேல் பலன் உள்ளது .விவாதம் முடிந்ததும் அதை சீ .டி. மற்று டி.வி.டி க்களாக மக்கள் மத்தியில் கொண்டு பொய் சேர்ப்பது ஈசி .புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட விறு விருப்பான விவாதத்தை டிவி யில் உட்கார்ந்து பார்ப்பார்கள் .நமது கருத்துக்கள மக்கள் மத்தியில் எளிதாக சென்றடையும் .உதாரணமாக் சொல்வது என்றால் தவ்ஹீத் ஜமாஅத் சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்தவர்களோடு பைபிள் இறை வேதமா ?என்ற தலைப்பில் நேரடி விவாதம் செய்தது.தாங்களும் அதை பார்த்திருக்கலாம் .அந்த விவாத கேசட்டுகளை கிறிஸ்தவ மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்ததும் ஏராளாமான கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறி இஸ்லாத்தை தழுவி கொண்டார்கள்.இதே எழுத்து விவாதமாக இருந்திருந்தால் விவாதமே இன்னும் முடிதிருக்காது .பாமர மக்கள்

  விவாதத்தை பொறுமையாக படித்தும் பார்க்க மாட்டார்கள் .ஆதலால் எழுத்து விவாதம் என்பது பலனற்றது .நேரடி விவாதமே எல்லா விதத்திலும் சிறந்தது .ஆகையால் செங்கொடி அவர்கள் நேரடி விவாதத்திற்கு தயார் என்றால்
  மேலே எழுதியவை அனைத்துக்கும் நான் பொறுப்பேற்று பி.ஜே வை நேரடியாக அழைத்து வரவும் பொறுப்பேற்று கொள்கிறேன் .நாங்க ரெடி ?செங்க்கொடியாரே நீங்க ரெடியா

 7. nallurmuzhakkam ஓகஸ்ட் 6, 2012 இல் 8:09 பிப #

  நண்பர் ரபீக்,

  நேரடி விவாதம், எழுத்து விவாதம் குறித்து ஏற்கனவே புளிபோட்டு விளக்கியாகி விட்டது. இனியும் அதில் விளக்குவதற்கு ஒன்றுமில்லை.

  1. எழுத்து விவாதத்திற்கு பிஜே வரமாட்டேன் என்பதினால் அவர் கொள்கை உறுதியற்றவர் என எடுத்துக் கொள்ளலாமா?

  2. இதுவரை நீங்கள் நடத்திய நேரடி விவாதங்களில் எதிலாவது இறுதி முடிவு எட்டப்பட்டிருக்கிறதா?

  3. எழுத்து விவாதம் பயனற்றது என்றால் பிஜே மாய்ந்து மாய்ந்து இணைய தளங்களில் எழுதிக் கொண்டிருப்பது ஏன்?

  உங்களால் முடிந்தால் பிஜேவை எழுத்து விவாதத்துக்கு அழைத்துக் கொண்டு வாருங்கள் முடியாவிட்டால் நடையைக் கட்டுங்கள்.

 8. mohammed rafick ஓகஸ்ட் 7, 2012 இல் 12:44 பிப #

  நேரடி விவாதம், எழுத்து விவாதம் குறித்து ஏற்கனவே புளிபோட்டு விளக்கியாகி விட்டது. இனியும் அதில் விளக்குவதற்கு ஒன்றுமில்லை.
  ஆக நான் ஓட வில்லை என்று கத்தி கொண்டே ஓடி ஒளிகிறார்கள் என்று உங்களை மாதிரி ஆட்களை
  பார்த்து பி.ஜே சொன்னது சரிதான் என்பதை நிருபிக்கின்றீர்கள்

  “1. எழுத்து விவாதத்திற்கு பிஜே வரமாட்டேன் என்பதினால் அவர் கொள்கை உறுதியற்றவர் என எடுத்துக் கொள்ளலாமா?”
  எழுத்து விவாததிக்கு வரவே மாட்டேன் நேரடி விவாதத்திற்கு தான் வருவேன் என்று அவர் கூறுவதின் மூலம்
  அவரை கொள்கையில் ரொம்ப உறுதியுடையவர் என்று எடுத்து கொள்ளலாம் .

  2. இதுவரை நீங்கள் நடத்திய நேரடி விவாதங்களில் எதிலாவது இறுதி முடிவு எட்டப்பட்டிருக்கிறதா?

  இறுதி முடிவு என்றால் பட்டி மன்ற நடுவர் தீர்ப்பு அளிப்பாரே அது மாதிரி செங்கொடி எதிர் பார்க்கிறார் போலும் ?
  அய்யா செங்கொடி 1980களில் குர் ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற தவ்ஹீத் சிந்தனை உடையவர்கள் ஊருக்கு ஒருவர் இருவர் தேர்வதே கஷ்டம் .பெரும்பாலான முஸ்லிம்கள் மத்ஹப் கொள்கையிலும் ,தர்கா வழிபாட்டிலும் தான் மூழ்கி கிடந்தார்கள் .ஆனால் இன்றைக்கு என்ன நிலமை என்பது செங்கொடிக்கே தெரியுமே
  லட்ச கணக்கான தொண்டர்கள் ,எண்ணூறுக்கும் மேற்பட்ட கிளைகள் ,அறுநூறுக்கும் மேற்பட்ட மர்கஸ்கள்
  என மக்கள் சாரை,சாரையாக தவ்ஹீத் கொள்கையை நோக்கி வருவதற்கு மத்ஹப்வாதிகளோடு கடந்த காலங்களில் நடந்த விவாதமும் ஒரு காரணம் என்பதை செங்கொடி மறுக்க முடியுமா ?கிறிஸ்தவ விவாதத்தை கூட் உதரணமாக சொல்லி காட்டினேனே .பைபிள் இறை வேதமா? விவாதம் பார்த்து விட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள்
  இஸ்லாத்தை தழுவினார்களே.ஒரு முஸ்லிமாவது பைபிள் இறை வேதமா ?விவாதம் பார்த்துவிட்டு கிறிஸ்தவத்தை தழுவினானா ? இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று செங்கொடி எப்படி கூற முடியும் ? ஆட தெரியாத ………தெரு கோணல் என்றாளாம் “அது போல் உள்ளது செங்கொடியின் கதை

  “எழுத்து விவாதம் பயனற்றது என்றால் பிஜே மாய்ந்து மாய்ந்து இணைய தளங்களில் எழுதிக் கொண்டிருப்பது ஏன்?”

  எழுத்து விவாதம் தான் பயனற்றது என்று பி .ஜே கூறினாரே தவிர எழுதுவதே பயனற்றது என்று பி .ஜே .கூறவில்லையே .பாவம் செங்கொடி பி .ஜே வோடு நேரடி விவாதம் என்றால் குளிர் காய்ச்சல் போட்டு ஆட்டுகிறது போலும் கை நடுக்கத்தில் என்ன எழுதுவது என்பதே அவர்க்கு தெரியவில்லை

  “உங்களால் முடிந்தால் பிஜேவை எழுத்து விவாதத்துக்கு அழைத்துக் கொண்டு வாருங்கள் முடியாவிட்டால் நடையைக் கட்டுங்கள்.”
  மறுபடியும் எழுத்து விவாதமா ?”அய்யா நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்” .வழக்கம் போல் உங்கள் முக்காடு முக மூடி போட்டு கொண்டு உங்கள் பிரசாரத்தை தொடருங்கள் …ராஜாதி ராஜ கம்பீர ,ராஜ மார்தண்ட ,ராஜ குலோத்துங்க
  வீ………..ர பராகிரம செங்கொடி பராக் ..பராக் ..பராக்

 9. nallurmuzhakkam ஓகஸ்ட் 9, 2012 இல் 8:47 பிப #

  நண்பர் ரபீக்,

  ஓடி ஒழிவது யார்? இதுவரை நான் எழுப்பியிருக்கும் கேள்விகள் எவற்றுக்காவது பிஜே எந்த வடிவிலாவது பதில் கூறியிருக்கிறாரா? வெறுமனே கவைக்குதவாத காரணங்களைக் கூறிக் கொண்டு நேரடி நேரடி என்று கரடி விட்டுக் கொண்டிருக்கிறார். என்றால் ஓடிப் போனது யார்?

  1. \\\பி.ஜே வோடு எழுத்து விவாதத்திற்கு தயார் ஆனால் நேரடி விவாதத்திற்கு வரவே மாட்டேன் என்று அடம்பிடிப்பது உங்கள் கொள்கையில் உங்களுக்கு உறுதி இல்லை என்பதை தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது/// \\\ எழுத்து விவாததிக்கு வரவே மாட்டேன் நேரடி விவாதத்திற்கு தான் வருவேன் என்று அவர் கூறுவதின் மூலம் அவரை கொள்கையில் ரொம்ப உறுதியுடையவர் என்று எடுத்து கொள்ளலாம்/// பிஜேவின் விசிலச்சான் குஞ்சுகள் என்பதை இதைவிட தெளிவாக வேறு யாரும் நிரூபித்துவிட முடியாது.

  2. மக்கள் சாரை சாரையாக வருகிறார்களா இல்லையா எனும் கணக்குகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இங்கு வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் சரியானவையா? தவறானவையா? என்பது நீங்கள் நேரடியாக நடத்திய எந்த விவாதத்திலாவது நிருவப்பட்டிருக்கிறதா? அட இஸ்லாமா வேறொன்றா என்பதை விட்டுவிடுவோம். இஸ்லாத்துக்குள்ளேயே நீங்கள் நடத்திய நேரடிகளில் ஏதாவது முடிவு எட்டப்பட்டிருக்கிறதா? சும்மா இரண்டு நாட்கள் கூத்து நடத்தி விட்டு சென்று விடுவீர்கள். இதைக் கேட்டால் கிருஸ்தவர்கள் மதம் மாருகிறார்களாம். அட அப்பாடக்கருங்களா? எழுத்து விவாதத்துக்கு வாருங்கள் என்றால் முடிவு தெரியாமல் இழுத்துக் கொண்டே போகுமாம். நேரடியில் முடிவு தெரிந்திருக்கிறதா என்று கேட்டால் கிருஸ்தவர்கள் மதம் மாறுகிறார்களாம். நான் நடத்தியிருக்கும் எழுத்து விவாதஙக்ளில் பாருங்கள் நேர்மையற்று உளறிக் கொட்டி எஸ்கேப் ஆகியிருப்பவர்கள் யார் என்று தெரியும்.

  3. எழுதுவது பயனுள்ளது தான். ஆனால் எழுதி விவாதித்தால் அதில் பயனில்லை. பிஜே குஞ்சுகளின் புதிய கண்டுபிடிப்பு இது. ஐயா, இதுவரை எழுத்தில் நீங்கள் யாருக்கும் பதில் கூறியதே இல்லையா? அரைவேக்காடுகளுக்கு பதில், ஐயங்களுக்குப் பதில் என்று நீங்கள் எழுதித்தள்ளியிருக்கும் குப்பைகளில் பெரும்பகுதி பிறர் கேள்வி கேட்டு நீங்கள் அளித்திருக்கும் பதில் தானே. நான் கேள்வி கேட்டிருக்கிறேன், திராணியிருந்தால் பதில் கூறுங்கள். எல்லோருக்கும் பதில் கூறும் நீங்கள் எனக்கு கூறுவது என்றால் மட்டும் நேரடியா? யப்பா நல்ல புல்தடுக்கி பயில்வான்கள் தாம் நீங்கள்.

  யாரப்பா உங்களை இங்கே அழைத்தது. நானும் ரவுடிதான் என்று கூறிக் கொண்டே ஓடிப் போங்கள். உதார் விடும் வேலை எல்லாம் இங்கு வேண்டாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: