ஓர் இஸ்லாமிய பரப்புரை பதிவரின் பொய்யில் உறையும் கள்ள மௌனம்

10 அக்

கவுண்டமணியைவிட சூப்பரா நடிக்கிறீங்க தம்பி நீங்க’ பதிவு வெளியிடப்பட்ட செய்தியை பின்னூட்டமாக குலாமின் நான் முஸ்லிம் தளத்தில் பதிவு செய்து இன்றுடன் நான்கு நாட்கள் ஆகி விட்டது. இன்னும் அது வெளியிடப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு தளத்திற்கு வரும் பின்னூட்டங்களை வெடியிடுவது குறித்த உரிமை அத்தளத்தை நடத்துபவருக்கே உரியது, அதில் நாம் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் அவர் அதை என்ன காரணத்துக்காக முடக்கி வைத்திருக்கிறார் என்பதை ஆராய முடியும். இந்தப் பதிவு அந்த நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. முதலில் அங்கு நான் பின்னூட்டமிட்டதற்கான ஆதாரத்தை கீழே தந்திருக்கிறேன்.

 

பொதுவாக பதிவர்கள் இந்த வகையில் ஒரு பின்னூட்டத்தை தடுக்கும் போது பரிசீலனையற்று திரும்பத் திரும்ப ஒரே செய்தியை கூறுவதால் அது வெளியாகவேண்டிய தேவையில்லை என முடிவு செய்வதாக கூறுவர். ஆனால் இவ்வாறான காரணத்தை குலாம் கூறமுடியுமா? அந்த கவுண்டமணி நடிப்பு இடுகையில் நான் எழுப்பியிருந்த விசயங்கள் என்ன? எனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக குலாம் கூறியதை பொய் என்று நிரூபித்திருந்தேன். நடந்த விவாதத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுங்கள் என்று நிர்ப்பந்தம் செய்திருந்தேன். விவாதத்திற்கு அழைக்கிறீர்களே இப்போது நடப்பது என்ன? நேரடி விவாதத்தை நான் ஏன் மறுக்கிறேன் என்பதற்கான காரணங்களை குறிப்பிட்டு ஏற்கனவே பதிவெழுதி இருக்கிறேன் அதில் எழுப்பபட்டிருந்த அம்சங்களை எந்த விதத்தில் மறுக்கிறீர்கள்? என்று கோரியிருந்தேன். இப்படி கேள்வியெழுப்பும் பதிவை தன் பார்வையாளர்களுக்கு காண்பிக்காமல் ஒருவர் தடுக்க நினைக்கிறார் என்றால் அதன் பொருள் என்னவாக இருக்க முடியும், தன் குட்டு வெளிப்பட்டு விடக் கூடாது என எண்ணுகிறார் என்பதைத் தவிர.

 

குலாம் இரண்டு விதங்களில் பொய் கூறியிருக்கிறார். 1. நல்லூர் முழக்கம் தளத்தில் அவர் பின்னூட்டமிட்டு அது பதிவு செய்யக் கோருவதாக தெரிவித்ததை மறுத்து; அப்படியென்றால் அதை திரைக்காட்சியாக எடுத்து வெளியிடுங்கள் என்று கேட்டிருந்தேன். இன்றுவரை அப்படி எதையும் வெளியிடவில்லை. எனவே, குலாம் அவ்வாறு கூறியது பொய். 2. அந்த திரைக்காட்சியை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்திருப்பதாக கூறினார். அப்படி எந்த மின்னஞ்சலும் எனக்கு வரவில்லை என்று என்னுடைய மின்னஞ்சலின் உள்பெட்டியை திரைக்காட்சியாக எடுத்து வெளியிட்டிருந்தேன். மட்டுமல்லாது, மெய்யாகவே குலாம் அவ்வாறு அனுப்பியிருந்தால் தேதி நேரம் தெரியும்படி அனுப்பிய அஞ்சல் பகுதியை திரைக்காட்சியாக எடுத்து வெளியிடும்படியும் கோரியிருந்தேன். இதுவரை அவ்வாறு குலாம் எதையும் வெளியிடவில்லை. எனவே, எனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக குலாம் கூறியதும் பொய். தவிரவும் இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. எனக்கு மின்னஞ்சலில் திரைக்காட்சியை அனுப்பியதாக குலாம் ஏன் பொய் கூற வேண்டும்?

 

தன்னுடைய தளத்தில் குலாம், தன்னை ஒரு நேர்மையானவராக எதிர்பின்னூட்டங்களை வரவேற்கும் பண்புள்ளவராக எதையும் நேரிய முறையில் மென்மையாக அணுகும் பண்புள்ளவராக இடுகைகளின் மூலமும் வெளிப்படுத்தலின் மூலமும் தன்னை வெளிக்காட்டியிருக்கிறார். இந்த நிலையில் ஒருவர் இதுவரை அவர் காட்டியிருக்கும் நேர்மைப் பண்புக்கு மாற்றமாக பின்னூட்டம் இடாமலேயே இட்டதாக கூறுவதை ஆதாரபூர்வமாக மறுக்கவில்லை என்றால் அது அவரது பிம்பத்தை உடைக்கும். அதேநேரம் அவரால் ஆதாரபூர்வமாக மறுகவும் முடியாது. அதனால் தான் தன்னுடைய தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு தான் அனுப்பியதாக ஆதாரபூர்வமாய் காட்டவேண்டும் எனும் நிர்ப்பந்தத்தில் மின்னஞ்சலில் அனுப்பியதாய் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, நான் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவோ அது பற்றி குறிப்பிடுவதையோ கவனமாக தவிர்த்திருக்கிறார். இவைகளெல்லாம் அவரிடம் பதில் இல்லை என்பதையே வெளிப்படுத்துகின்றன. ஆனாலும் அதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளமாட்டார். அது தான் மதத்தின் தன்மை. ஏனென்றால் அவர் மதத்தையும் கடவுளையும் நம்புகிறாரேயன்றி ஏற்கவில்லை.

 

குலாம் மட்டுமல்ல, இஸ்லாத்தை மீப்பெரும் இறும்பூறெய்தல்களாக காட்டி பதிவெழுதும் அனைவருக்கும் இவ்வாறு தனக்குத் தானே நேர்மையற்று இருப்பது தான் அடிப்படைப் பண்பாக இருக்கிறது. தான் கற்றறிந்ததை எழுதினாலும் அல்லது காப்பி பேஸ்ட் செய்து எழுதினாலும் அவர்களின் பண்பு இந்த எல்லையில் தான் நிற்கிறது. அதற்குக் காரணம் அவர்களிடம் பரிசீலனை இல்லாததே. பரிசீலனை எப்படி வரும்? மதம் என்றாலே அது பரிசீலனைக்கு அப்பாற்பட்டது தானே.

 

இப்படி பதிவெழுதி புழகமடையும் -தான் இம்மைக்காக அல்ல மறுமைக்காக எழுதுகிறேன் என்று ‘அல்டாப்பாக’ அலட்டிக் கொள்ளும்- பதிவர்களை விட்டுவிடுவோம். ‘சரியான நெத்தியடி கொடுத்திருக்கிறீர்கள் சகோ’ ‘நாத்திகர்களுக்கோர் செருப்படி’ ‘அல்லாஹு அக்பர், ஆண்டவன் உங்களுக்கு நற்கூலி கொடுப்பானாக’ ‘இனியும் நாத்திகர்கள் மறுத்துக் கொண்டிருக்க முடியுமா?’ என்றெல்லாம் அந்த பதிவுகளுக்கு பின்னூட்டமெழுதி தங்களைத் தாங்களே சுய சொரிதல்கள் செய்து கொள்ளும் சிலரையும் விட்டுவிடுவோம். ஆனால் இது போன்ற பதிவுகளை படித்து தங்கள் மத அறிவை விரிவுபடுத்திக் கொள்வதாக அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் பலரை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்புகிறேன்.

 

உங்கள் மதத்தின் உண்மைத் தனமையையும், காலத்தால் வழுவாதிருக்கும், அறிவியலால் வீழாதிருக்கும் பண்பையும் இது போன்ற பதிவுகளைப் பார்த்து அறிந்து கொள்ளும் நம்பிக்கையாளர்களே, யாரின் எழுத்தைப் பார்த்து உங்கள் நம்பிக்கையை நீங்கள் அதிகப்படுத்திக் கொள்கிறீர்களோ அவர்கள், கேள்விக்கு பதில் கூற முடியாமல் ஓடி ஒழிவதையும் நேர்மையற்ற முறையில் திருகல்கள் செய்வதையும், கவலையற்று பொய்கள் கூறுவதையும் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? மதத்தை பிரச்சாரம் செய்பவர்களே இப்படி நேர்மையற்ற செயல்களை செய்கிறார்கள் என்றால் அவர்களை அப்படி தூண்டுவது எது? எல்லாம் வல்ல அந்த வல்லாற்றல் மிக்க கடவுள் ஏன் அவர்களின் நேர்மையற்ற செயல்களை விலக்கச் செய்யவில்லை? தூய மார்க்கம் என்று கூறுபவர்கள் அனைவருமே ஓர் இடத்தில் நழுவுகிறார்கள், பசப்புகிறார்கள், திசை திருப்புகிறார்கள், கோபப்படுகிறார்கள், அல்லது கள்ளமௌனம் சாதிக்கிறார்கள். இது ஏன்? நடந்து செல்பவர்கள் தொடர்ந்து செல்ல முடியும், ஓடிக் கொண்டிருப்பவர்கள் ஏதேனும் ஓர் இடத்தில் நின்றே ஆகவேண்டும். சமூகத்தோடும் யதார்த்தத்தோடும் பொருந்திச் செல்பவர்கள் தொடர்வார்கள், சமூகத்துடன் தொடர்பற்று உச்ச சப்தத்தில் பொய்களை பேசுவோர் நின்றே ஆக வேண்டும். அதனால் தான் மதவாதிகளால் ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடிவதில்லை, ஏனென்றால் அவர்களிடம் உண்மையில்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? இதைப் படிக்கும் போது உங்களுக்கு கோபம் கூட வரலாம். ஏனென்றால், ஆண்டாண்டு காலமான மத அழுக்கு உங்களுக்குள்ளும் இருக்கக்கூடும். அந்த அழுக்கை நீங்கள் நீக்க விரும்புகிறீர்களா? என்றால் கேள்விகளைக் கேழுங்கள். கேட்கக் கேட்கத்தான் உண்மை விரியும். இதோ உங்களை வாரியணைக்க சமூகம் காத்துக் கிடக்கிறது.

 

முற்றும்.

 

பின்குறிப்பு: இந்த இடுகையும் வழக்கம் போல் குலாமின் தளத்தில் பின்னூட்டமாய் தெரிவிக்கப்படும். அதை வெளியிடுவதும் தடுத்துவிடுவதும் அவர் பொறுப்பு. ஆனால், இனியும் அதை திரைக்காட்சியாய் எடுத்து வைத்து அம்பலப்படுத்தப் போவதில்லை. ஏனென்றால், ஒட்டுக் கோமணமும் இல்லாமல் நிற்பவரிடம் எதை அம்பலப்படுத்த?

Advertisements

6 பதில்கள் to “ஓர் இஸ்லாமிய பரப்புரை பதிவரின் பொய்யில் உறையும் கள்ள மௌனம்”

 1. iniyavan ஒக்ரோபர் 10, 2012 இல் 3:04 பிப #

  வணக்கம் சகோ,

  எதிர் பார்த்தபடி மறுப்பு ஏதும் வரவில்லை,அவர்கள் எல்லையை அவர்களால் எப்பொழுதும் தாண்டவே முடியாது.மதம் என்கிற குறுகிய வட்டத்துக்குள் சுற்றி வருவதால் சுற்றுமிடமே சொர்க்கம் என நம்பிக்கையுடையவர்களால் உறுதி கூறுவது கடினம். தங்களின் பதிவை படிப்பவர்கள் சற்று நிதானமாக சிந்தித்தால் மதம் கசந்து விடும். தங்களைப்போல் அறிவிற் சிறந்தவனாக இல்லாத போதிலும்,என் சுய சிந்தனையால் மதம்,கடவுள் என மூடநம்பிக்கைகளை வெறுக்கும் போது,கற்றறிந்த இளைய வல்லுநர்கள் நிச்சயமாக சிந்திப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். மேலும் தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.நன்றி!!!

  இனியவன்….

 2. G u l a m ஒக்ரோபர் 10, 2012 இல் 6:16 பிப #

  அன்பு சகோ செங்கொடி.,

  எவ்வளவு ப்ரியாக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் அடுத்தடுத்த ஆக்கங்கள் கூறுகின்றது. நன்று இருந்தாலும் உங்கள் கற்பனை குதிரைக்கு கடிவாளமிட்டுக்கொள்ளுங்கள்.

  நாம் முன்பு விவாதிக்க தொடங்கும் முன்பே கூறி இருக்கிறேன். என்னால் அதிக நேரம் இணையத்தில் இயங்க முடியாது. அத்தோடு சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக பணி புரியும் எனக்கு எனது சுய அலுவல்களை அந்த நேரங்களை கடந்து தான் செய்ய வேண்டும். அத்தோடு இணையத்தில் இஸ்லாமிய கட்டுரை எழுதினால் மட்டும் அது இறைப்பணி ஆகாது. எனது தொழுகை மற்றும் மார்க்கம் சார்ந்த அலுவலுக்காக நான் ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்களை எடுத்துக்கொள்கிறேன். இனியும் இந்த நிலை தான் இன்ஷா அல்லாஹ்.

  அப்படியிருக்க உங்களுக்கு பயந்து தான் நான் இணையத்திற்கு வரவில்லை என்ற உங்கள் சுய தீர்மானிப்பு உங்கள் மீது எனக்கு பரிதாபத்தை தான் கூட்டுகிறது. மட்டுறுதல் இல்லாமல் எவரது பின்னூட்டமும் தானாகவே வெளியாகும் வண்ணம் தான் ஆரம்பத்தில் வைத்திருந்தேன். ஆனால் பாருங்கள் மதங்கள் காட்டுமிராண்டி தனமானது என கூறும் அறிவாளிகள் தங்களின் அஃறிணை சொற்களால் கேவலமான வசைப்பாடல்களில் பின்னூட்டம் இடுகிறார்கள். எனது தளம் பலரும் அதிலும் பெண்களும் அதிகமாக பார்வையிடும் ஒரு தளம்.

  ஆக இதைப்போன்ற கேவலமானவர்கள் இடும் பின்னூட்டத்தை நல்ல மக்களும் பார்க்க வேண்டி வருமே என்ற எண்ணமே மட்டுறுதல் வைக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கியது. கைர், அதை விளக்கமாக கூற தான் உங்களை சாட்டிலும் தொடர்புக்கொண்டேன். ஆனால் ஒரிரு வார்த்தைகளுக்கு பிறகு நீங்கள் ஆப்லைன் சென்று விட்டீர்கள்.
  அதுவுமில்லாமல் எனக்கு திங்கள் கிழமையிலிருந்து உடல் நிலை சரியில்லை, இன்றும் கூட எனது சட்டைக்கு பொத்தான் தைத்து விட்டு தான், இங்கே வருகிறேன். அதுவும் நீங்கள் ஆவேசமாக வெகுண்டெழுந்து, நியாயத்திற்கு எதிராக நான் ஏதோ பெரிய தவறிழைத்து விட்ட ரீதியில் எழுதிய வார்த்தைகளை பார்த்து தான் உடனே உங்களுக்கு பின்னூட்டமிடுகிறேன். உங்களுக்கு பின்னூட்டமிட்டமிறகு தான் எனது இன்னபிற வேலைகளை தொடரவேண்டும். இன்ஷா அல்லாஹ்.

  சகோ விவாதம் என்பது நாம் சரியென காணும் ஒன்றின் பக்கம் சார்ந்து அதை உண்மையென்பதற்கான சாத்தியக்கூற்றை மறுக்கும் தரப்பின் முன் எடுத்து கூறுவது. அதை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். அது தான் ஒருவருக்கு அளிக்கப்படும் சுய உரிமை. அதை தான் நான் கடவுள் இல்லையென கூறும் எவரின் முன்னும் கூறி வருகிறேன். அதையே உங்களிடம் கூறி வருகிறேன். இதில் எங்கே இருக்கிறது சகோ கவுண்டமணி அளவிற்கான காமெடி. சகோ எனக்கு கிடைக்கும் ஒய்வு நேரங்கள் மிக குறைவு. அதையும் இப்படி தேவையில்லாமல் தனிமனித சாடல் நிறைந்த பின்னூட்டத்தில் தொலைக்க மனமில்லை.

  செங்கொடிக்கு பதிவிட்டால் தான் எனக்கு சொர்க்கத்திற்கான ரிசர்வேசன் கிடைக்கும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் நான் தர்க்க ரீதியாக ஏற்கும் கடவுள் குறித்த உண்மைகளை பிறருக்கும் விளக்க வேண்டும் என்பதே என் ஆவல். அதற்கான பயணமே நான் முஸ்லிம் ஆக்கங்கள். இதில் எவருக்கும் பயப்படவோ, ஓடி ஓளிந்து பிதற்றவோ எனக்கு அவசியம் இல்லை.

  அப்புறம் ஒரு விசயம் சகோ.. நான் உங்கள் தளத்தில் பின்னூட்டமிட்ட போது அங்கே எனக்கு இப்படி காட்டியது ஆக ஒருவேளை அங்கே பின்னூட்டம் சேராமல் போய்விடுமோ என்ற அச்சத்தாலே என் தளத்தில் அதை கூறி பின் அதே பின்னூட்டத்தை வெளியிட்டேன். மாறாக செங்கொடி மட்டுறுதி வைத்து இருக்கிறார் என்று எங்கேயும் பதிவு செய்யவில்லை. கொஞ்சம் பொறுமை உங்களுக்கு நல்லது என்று நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்! உங்கள் பதிவிலும் என் சில நன்மைகள் இறை ஏற்பாளர்களுக்கு இருக்கும் என்றே நினைக்கிறேன். இஸ்லாம் மீதான என் ஈடுபாடு இன்னும் எனக்கு அதிமாகிறது. நன்றி உங்கள் பதிவுகளில் அறிவுக்கு (சில வரிகள் மட்டும்) தீனியாக அமைந்தது. என் சிந்தனையே வேறு கோணத்தில் அலச வைத்தது. இன்ஷா அல்லாஹ் அதை விளக்கி பதிவிட நினைத்து இருக்கிறேன். அடுத்து நபிகளாரை குறித்து ஒரு ஆக்கம். கடவுள் குறித்து அடுத்து தொடர்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

  அதுவரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பதிவிட்டுக்கொள்ளுங்கள். அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனெனில் எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது. அதன் ஊடாக பயணம் தொடரவே முற்படுகிறேன். மாறாக நேரத்திற்கு தகுந்தாற்போல, இடத்திற்கு தகுந்தாற் போல நிறம் மாற்றிக்கொள்ள நான் பச்சோந்தி அல்ல. அன்று என் வார்த்தைகளில் அதிகப்படியாக // எவனுக்கும் // என்று ஒருமையில் விளித்து இருந்தேன். அந்த வார்த்தைகள் பொதுவாக தான் கூறினேன் அது உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.

  2000 வரை நானும் போலி பகுத்தறிவு போர்வை போத்தி அம்மணமாக தான் இருந்தேன். அல்ஹம்துலில்லாஹ் இஸ்லாம் தாம் எனக்கு அறிவெனும் ஆடை தந்தது. இதை இங்கே சொன்னால் எனக்கான அடை மொழி காட்டுமிராண்டி!

  நீங்கள் மறுக்கும் இறை நாடினால் தொடர்வோம்.
  உங்கள் சகோதரன்
  குலாம்.

 3. nallurmuzhakkam ஒக்ரோபர் 12, 2012 இல் 1:17 பிப #

  நீங்கள் தூங்கவில்லை என நிரூபிக்க இமைகளை விரித்துப் பிடிக்க வேண்டுமோ

  ‘கள்ள மௌனம்’ பதிவுக்கு விரைந்து எதிர்வினை செய்திருக்கிறார் குலாம். என்ன சொல்வது .. ..? வெண்டைக்காயை விளக்கெண்ணயில் குழப்பியது போல் இருக்கிறது. அவரின் இந்த பின்னூட்டம் மொத்தத்தில் நான் என்ன கேட்டிருந்தேனோ அதற்கு பதில் கூறுவதற்கோ, அல்லது அது குறித்து பேசுவதற்கோ கொஞ்சமும் பயன்படுத்தவில்லை. மாறாக, கேள்விகளிலிருந்தும், பதில் கூற வேண்டியவைகளிலுந்தும் விலகி, எங்கெங்கோ சுற்றி வந்திருக்கிறார். அவரது பதிலின் ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு சொல்லையும் சுரம் பிரித்து அதில் தொனிக்கும் அபசுரத்தை ஆலாபனை செய்ய முடியும். ஆனால் என்னுடைய கவலையெல்லாம் வெளுத்த பின்னும் நடித்துக் கொண்டிருக்கிறாரே என்பது தான். நீங்கள் தூங்குவதாக காட்டிக்கொள்ள விரும்பலாம், நீங்கள் தூங்கவில்லை நடிக்கிறீர்கள் என நானும் நிருபிக்க விருப்பலாம். இரண்டும் ஒரு எல்லை வரை தான், அதற்கு அப்பாற்பட்டு உங்கள் இமைகளை இடுக்கி கொண்டு விரித்துப் பிடித்து உலகை காண வைப்பது என்னுடைய பணி மட்டுமே அல்ல.

  நான் ஃப்ரீயாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார், இதை இப்போது மட்டுமல்ல முன்பும் சில முறைகள் கூறியிருக்கிறார். அவர் அடிக்கடி கூறும் சுய தீர்மானிப்பு என்பதற்கு இதுவே தெளிவான காட்டாகும். நான் ஃப்ரீயாக இருக்கிறேன் என்பதை பரிசீலித்து முடிவெடுத்தாரா? அல்லது அவரது மனதில் அப்படித் தோன்றியதால் கூறுகிறாரா? இதுவரை குலாமுக்கும் எனக்கும் இடையில் நடக்கும் அத்தனை வாதங்களையும் எடுத்துப் பார்த்தால் அவருடைய வாதத்துக்கு நான் பதிலளித்ததைக் காட்டிலும்; என்னுடைய வாதத்துக்கு அவர் பதிலளித்ததில் தான் விரைவாகவும் கால இடைவெளி குறைவாகவும் இருக்கும். இதை நல்லூர் முழக்கத்தில் மட்டுமல்ல செங்கொடி தளத்திலுந்தும் கூட ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதாவது, நான் வாதத்தை எடுத்து வைத்ததும் உடனடியாக மறுப்பை எழுதி விடுவார். அதேநேரம் ஒவ்வொரு முறையும் தனக்கு நேரம் இல்லை என்றும், தன்னால் அதிக நேரம் இணையத்தில் செலவிடமுடியாது என்றும் தொடர்ந்து கூறிக் கொண்டிருப்பார். இப்போது நான் ஃப்ரீயாக இருக்கிறேன் என்று எதை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்தார். தொடர்ந்து அவரை எதிர்த்து பதிவுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதால். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி இப்போது வரை ஆறு பதிவுகள் எழுதியிருக்கிறேன். அதாவது 20 நாட்களுக்கு ஆறு பதிவு. இதைத்தான் நான் ஃப்ரீயாக இருக்கிறேன் என்பதற்கு சான்றாக கூறுகிறார். இது ஏற்புடையதா? என்னைவிட அதி விரைவுடன் மறுப்பெழுதும் குலாம், பதில் கூற முடியாத நிலை ஏற்படும் போது மட்டுமே தாமதம் செய்கிறார், என்னால் இணையத்தில் அதிக நேரம் இணைந்திருக்க முடியாது என்கிறார், 12 மணி நேரம் வேலை செய்வதாக கூறுகிறார், சட்டைக்கு பொத்தான் தைக்கிறார், பாவாடைக்கு நாடா கோர்க்கிறார் .. .. .. இதைக் கொண்டு யார் ஃப்ரீயாக இருப்பதாக முடிவு செய்வது? விரைந்து பதிலெழுதும் குலாமா? தகுந்த நேரம் எடுத்துக் கொண்டு அதேநேரம் முதன்மைத்தனம் தந்து பதிலெழுதும் நானா? பரிசீலனை சிறிதும் இன்றி தான் என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே பொது உண்மையாக எழுதுவது. இதுவே எல்லா மதவாதிகளின் இலக்கணமாக இருக்கும் போது குலாம் மட்டும் மீறிவிட முடியுமா என்ன?

  என்னால் அதிக நேரம் இணையத்தில் இணைந்திருக்க முடியாது. இதை ஒன்றல்ல இரண்டல்ல பல முறைகள் கூறியிருக்கிறார் குலாம், ஏன் இப்படிக் கூறுகிறார்? அதாவது கேள்விகளுக்கு பதில் கூறாத நிலை வரும் போது குலாம் பதிலளிக்கவில்லை என்று யாரும் கூறிவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப்பதிலை அடிக்கடி கூறி வந்திருக்கிறார். நான் மீண்டும் கூறுகிறேன், செங்கொடி தளத்திலிருந்து நல்லூர் முழக்கம் தளம் வரை பார்த்துக் கொள்ளுங்கள், நான் வாதம் வைத்ததற்கும் குலாம் பதிலெழுதியதற்கும் இடைப்பட்ட நேரத்தை குறிப்பாக பாருங்கள். இணையத்தில் அதிக நேரம் இணைந்திருக்க முடியாத ஒருவரால் நிச்சயம் இவ்வாளவு விரைவாக பதில் கூற முடியாது. அதுமட்டுமா, தமிழ் இணையப் பரப்பில் தேடிப்பாருங்கள். மதம் சார்ந்த பதிவுகள் பெரும்பாலானவற்றில் குலாமின் பின்னூட்டங்களும், விவாதங்களும் இரைந்து கிடக்கும். இணையத்தில் அதிக நேரம் இணைந்திருக்க முடியாத ஒருவரால், 12 மணிநேரத்துக்கும் அதிகமாக உழைக்கக்கூடிய ஒருவரால் அதன்பிறகான நேரங்களிலேயே தொழுகை முதலான பணிகளுக்கு நேரம் ஒதுக்குகிற ஒருவரால், இன்னும் சட்டைக்கு பொத்தான் தைப்பதைக்கூட தானே நேரம் ஒதுக்கிச் செய்கிற ஒருவரால் முடிகிற காரியமா இது? அல்லது இவ்வளவு செயல்களையும் செய்துகொண்டே மாதத்துக்கு தோராயமாக ஐந்து பதிவு + ஏராளமான பின்னூட்டங்களை எழுதும் ஒருவர் இணையத்தில் அதிக நேரம் பிணைந்திருக்க முடியாது என்று கூற முடியுமா? தவிரவும் எனக்கான பதிலாக அன்றி வேறெங்கும் குலாம் இப்படி எழுதி நான் கண்ணுறவும் இல்லை. என்றால் அதன் மெய்யான பொருள் தான் என்ன? எனக்கு பதில் கூற முடியாமல் தான் நேரமில்லை என்று கூறுகிறார் என நான் பொருள் கொண்டால் அதில் பிழை இருக்க முடியுமா?

  இந்த நேரமின்மை பிரச்சனையை நான் முன்பே பலமுறை விளக்கியிருக்கிறேன். குலாமுக்கு நேரமில்லை என்பதையோ, இணையத்தில் அவரால் அதிக நேரம் செலவிட முடியாது என்பதையோ நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அதை பொருட்டாக வைத்து பதில் கூறுவதிலிருந்து தப்பிக்க நினைப்பதையே நான் ஆட்சேபிக்கிறேன். முதல் பகுதி விவாதத்தில் இதை தெளிவாகவே கேட்டிருக்கிறேன். உங்களால் இணையத்தில் அதிக நேரம் செலவிட முடியாமல் போகலாம், நேரமில்லாமல் போகலாம் ஆனாலும் நீங்கள் பதில் கூற வேண்டும். ஒரு மாதம் எடுத்துக் கொள்ளுங்கள் மூன்று மாதம் எடுத்துக் கொள்ளுங்கள், அட ஆண்டுக்கு ஒரு முறையாவது பதில் கூறுவேன் என்று உறுதி கூறுங்கள் என்று கேட்டிருந்தேன். கடைசிவரை அடம்பிடித்தாரே தவிர பதில் கூறவில்லை. அதுவுமன்றி இரண்டாவது பகுதி விவாதத்தில் முதலிலேயே இப்படி குறிப்பிட்டிருக்கிறேன், \\\ஐயத்திற்கு துளியும் இடமின்றி உங்களுக்கு நேர நெருக்கடி இருக்கிறதென்பதை நான் அறிவேன். அதிலும் முன்பைவிட தற்போது உங்கள் நேரம் அதிகம் பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் என்பதையும் அறிந்திருக்கிறேன். ஆனால் நான் விடுத்திருக்கும் இந்த வேண்டுகோள் உங்களின் நேரமின்மையை மட்டும் குறிப்பதல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆவல்/// இதற்குப் பிறகும் நேரமில்லை என்று கூறுவது எதை மறைக்க?

  அடுத்து, குலாம் தன்னுடைய தளத்தில் ஏன் பின்னூட்ட மட்டுறுத்தலை வைத்திருக்கிறார் என்று நீளமாக விளக்கமளித்திருக்கிறார். அது கேட்கப்படவே இல்லையே. மட்டுறுத்தல் இல்லாமல் நேரடியாக வெளிவருவது தவறானது என்பதே என்னுடைய படிப்பினையும். ஆனால் நீங்கள் மட்டுறுக்கிறீர்கள் என்றல்ல தடுத்திருக்கிறீர்கள் என்பதே சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இப்போதும் கூட கடைசியாய் நீங்கள் வெளியிட்ட ஒரு பின்னூட்டத்திற்கு முந்திய பின்னூட்டம் வெளியிடப்படாமலேயே இருக்கிறது. மட்டுமல்லாது மீண்டும் ஒரு திரித்தலைச் செய்திருக்கிறீர்கள். அதாவது நீங்கள் என்னைச் சாட்டில் தொடர்பு கொண்டபோது நான் ஆன்லைனில் இருந்தது போலவும் உங்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் பதில் கூறிவிட்டு ஆஃப் லைனுக்கு சென்று விட்டது போலும் எழுதியிருக்கிறீர்கள். அந்த அரட்டையையும் நான் திரைக்காட்சியாக வெளியிட்டிருக்கிறேன். அதில் குறியிடப்பட்டிருக்கும் நேரத்தைப் பாருங்கள். நீங்கள் என்னிடம் கேட்டது இரவு 10:48க்கு அதற்கு நான் அளித்த பதில் அதே இரவு 11:35க்கு அதாவது முக்கால் மணி நேரத்துக்குப் பிறகு, மீண்டும் எனக்கு நீங்கள் விவாதத்துக்கு ஏற்பாடு செய்யவா எனக் கேட்டது மறு நாள் மதியம் 3:10க்கு. அரட்டை குறித்து நீங்கள் கூறியது போலவா நேரங்கள் காட்டுகிறது. குலாம், எதையும் மேலெழுந்தவாரியாக அணுகுவதை கைவிடுங்கள். அல்லது போகிறபோக்கில் எழுதுவதாய் காட்டி உங்களை மறைத்துக் கொள்ள முயலாதீர்கள்.

  அடுத்து விவாதம் குறித்து, \\\விவாதம் என்பது நாம் சரியென காணும் ஒன்றின் பக்கம் சார்ந்து அதை உண்மையென்பதற்கான சாத்தியக்கூற்றை மறுக்கும் தரப்பின் முன் எடுத்து கூறுவது. அதை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். அது தான் ஒருவருக்கு அளிக்கப்படும் சுய உரிமை/// அடேங்கப்பா! என்ன ஒரு சுற்றல். இதே கருத்தைத்தான் முதலிலும் நீங்கள் வேறு வார்த்தைகளில் கூறினீர்கள். அதை மறுத்து நான், நீங்கள் கூறியிருப்பது தவறு என்று விளக்கி விவாதம் என்பதன் மெய்யான பொருள் என்ன என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தேன். அதை நீங்கள் பரிசீலித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் உங்கள் கருத்தையே வேறு வார்த்தைகளில் மீண்டும், மீண்டும் கூறினால் அதற்கு என்ன பொருள்? நீங்கள் கூறும் எதையும் நான் காது கொடுத்துக் கேட்க மாட்டேன், நான் சொன்னதையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருப்பேன் என்பது தான். இதற்கு பிடிவாதம் என்று பெயர் சூட்டலாமே தவிர விவாதம் என்று பொருள் கூற முடியாது.

  அடுத்து குலாம் இப்படி எழுதியிருக்கிறார், \\\சகோ எனக்கு கிடைக்கும் ஒய்வு நேரங்கள் மிக குறைவு. அதையும் இப்படி தேவையில்லாமல் தனிமனித சாடல் நிறைந்த பின்னூட்டத்தில் தொலைக்க மனமில்லை. செங்கொடிக்கு பதிவிட்டால் தான் எனக்கு சொர்க்கத்திற்கான ரிசர்வேசன் கிடைக்கும் என்று எங்கும் சொல்லப்படவில்லை/// குலாம் எனக்கு பதிலெழுதினால் உங்களுக்கு சொர்க்கத்தில் முன்பதிவு செய்யப்படுமா? நரகத்தில் உங்களுக்கான நடை திறந்து வைக்கப்படுமா? என்றெல்லாம் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. எத்தனையோ இஸ்லாமிய பரப்புரை பதிவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள், எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நான் பதில் கூறுங்கள் என்று கேட்கவில்லையே. நீங்கள் பதில் கூற வேண்டும் என வற்புறுத்துவதன் காரணம், நீங்கள் தான் என்னுடன் விவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள், அதிலும் இந்த விவாதத்தை தொடங்கியதும் நீங்கள் தான். அந்த உரிமையில் தான் உங்களிடம் வற்புறுத்துகிறேனேயன்றி, உங்களுக்கு சொர்கமா நரகமா என்பதையெல்லாம் நான் ஆலோசித்துக் கொண்டிருக்க முடியாது. அப்புறம், எதை தனிமனித சாடல் என்கிறீர்கள்? தனிப்பட்ட முறையில் உங்களைச் சாடிஎதையும் நான் எழுதவில்லை. அதேநேரம் உங்கள் நேர்மையின்மைக்கு புனுகு தடவிக் கொண்டிருக்கவும் என்னால் முடியாது. நான் உங்களை நோக்கி என்னுடைய விமர்சனங்களை கூர்மையாக வைக்கிறேன். நான் செய்திருக்கும் விமர்சனங்கள் தவறு என்றால் இந்த விதத்தில் தவறு என எடுத்துக் கூறுங்கள் தவறிருந்தால் சுய விமர்சனம் செய்து கொள்கிறேன். மாறாக அதை தனிமனித சாடல் என்று உங்களை புனிதப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

  பின்னூட்ட விசயத்தில் நீங்கள் கூறுவது பொய் என அறுதியாக உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளேன், மறுக்க நினைத்தால் அது பொய்யல்ல என நிரூபியுங்கள். எனக்கு அனுப்பியதாக நீங்கள் பொய் கூறும் அஞ்சலில் அந்த தொரைக்காட்சியை அனுப்பியதாக எழுதியிருந்தீர்களே அதை வெளியிடுங்கள். அதை விடுத்து வேறு சமாளித்தல்கள் உதவாது.

  அடுத்து ஒருமையில் விளித்தது என்னை காயப்படுத்தியிருக்குமோ என்று மன்னிப்புக் கோரியுள்ளீர்கள். குலாம் நாங்கள் களத்தில் நிற்பவர்கள். நேரடியாக எங்களை அவமரியாதை செய்தாலும் பொது நோக்கத்துக்காக போராடுபவர்கள் நாங்கள். கேவலம் ஒரு வார்த்தையா எங்களை கேவலப்படுத்தும் என எண்ணுகிறீர்கள்? நாங்கள் அனிச்சம் மலரல்ல, தொட்டவுடன் வாடிவிடுவதற்கு. நான் வெளிப்படையாகவே உங்களை குற்றம் சாட்டி வருகிறேன். மறுக்கவில்லை மறுக்கப்போவதில்லை. ஆனால் அதிலிருக்கும் நியாயத்தை நீங்கள் உணர வேண்டும் உணர்ந்து எதிர்வினையாற்ற வேண்டும் என்பது தான் என்னுடைய ஆவல்.

  மீண்டும் மீண்டும் நான் குறிப்பிடுவது இதைத்தான். தொடங்கியது நீங்கள், களத்துக்கு வந்து விவாதிக்கத் தொடங்கி விட்டோம், விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இடையில் நீங்கள் விடுபட வேண்டும் என எண்ணினால் நேர்மையாக அதை தெரிவியுங்கள். உங்கள் கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. இன்னும் அதிகம் தெரிந்து கொண்டு பின் உங்களிடம் வருகிறேன் என்று கூறுங்கள். தாராளமாக நீங்கள் விடுபட்டுச் செல்லலாம். மாறாக பொருந்தா சாமாளித்தல்களைக் கூறி பிம்பம் உருவாக்க எண்ணினால், உங்களை அம்பலப்படுத்துவதும் எனக்கு முதன்மையான பணியாகவே இருக்கும்.

  இப்போதும் குலாம் என்னுடைய பதில்களை பரிசீலித்து கேள்விகளை எதிர்கொண்டு பதிவுகள் எழுதினால், அது எனக்கு தெரிய வந்தால், அல்லது எனக்கு தெரிவித்தால் கண்டிப்பாக என்னுடைய விளக்கங்களுடன் மீண்டும் வருவேன். ஆனால், வழக்கமான மதவாத உத்திகளுடன் எந்தவித பரிசீலனையும் இன்றி நழுவும் விதத்தில் இருந்தால் இப்போதே விடைபெற்றுக் கொள்கிறேன். என்னுடைய கேள்விகள் தொடர்பாக இருந்தாலும், அவ்வாறன்றி வேறு தலைப்புகளில் இருந்தாலும் என்னை அழைத்தால் என்னுடைய கூர்மையான விளக்கங்களுடன் எப்போதும் நான் ஆயத்தமாகவே இருப்பேன். ஆனால் தொடங்கிய பிறகு இணையத்தில் என்னால் அதிக நேரம் செலவிட முடியாது என நீங்கள் கூறாதிருக்க வேண்டும். இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறு தலைப்பில் எழுதுவதாக இருந்தால் இந்த விவாதத்தை என்ன செய்வது என்பதையும் குறிப்பிட்டு விடவும்.

  அனைவருக்கும் என் நன்றி.

  பின்குறிப்பு: ஏற்கனவே முற்றும் போடப்பட்டு விட்டது என்பதால் இது பின்னூட்டமாக வெளியிடப்படுகிறது. இது முடிந்து போவதும், தொடர்வதும் குலாமினுடைய விருப்பத்தின் பாற்பட்டது.

  • S.Ibrahim ஒக்ரோபர் 21, 2012 இல் 7:47 பிப #

   கவுண்ட மனியைவிட சூப்பராக நடிக்கும் செங்கொடி ,
   கடையநல்லூர் விவாதம் பற்றி எனது கருத்துக்களை மறைத்தது

   • nallurmuzhakkam ஒக்ரோபர் 21, 2012 இல் 8:04 பிப #

    பொய்ராஹிம்,

    விவாதத்தை வைத்து காத்துக் கிடந்தால் வராமல் எங்கோ சென்று ‘கிடந்து’ விட்டு இப்போது என்ன ‘உறுமல்’? உங்கள் கருத்துகளை(!) மறைக்க வேண்டிய தேவையெல்லாம் இல்லை. நீக்கி விட்டேன். ஏனென்றால் உங்களையெல்லாம் அனுமதிப்பதே அதிகம். இதில் விசமத்தனம் ஒரு கேடா?

 4. S.Ibrahim ஒக்ரோபர் 16, 2012 இல் 7:06 முப #

  தயவுடன் உங்கள் வெங்காய தமிழை கொஞ்சம் அடக்கி வையுங்கள் அக்டோபர் என்பதற்கு ஒக்ரோபர் என்று வருகிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: