Tag Archives: இஸ்லாம்

ஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே

25 ஜன

tntj appalam

திருச்சி ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து தெரியாதவர்கள் யாரும் இருந்தால் அவர்கள் வேறு எங்கோ இருந்து தமிழ்நாட்டுக்கு புதிதாக வந்திருக்கிறார்கள் என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்காக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. விளம்பரத்துக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 30 கோடிக்கும் மேல் என்று சொல்கிறார்கள். இது அதிகமா குறைவா என்ற விவாதம் நமக்கு தேவையில்லாத ஒன்று. ஏனென்றால் டி.என்.டி.ஜே வினருக்கே விளப்பரத்துக்காக இந்த அளவில் – அப்பளத்தில் மாநாட்டு விளம்பரம் செய்யும் அளவுக்கு – சென்றிருப்பது முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் பிஜேவே எழுந்தருளி சமாதானம் செய்யும் அளவுக்கு நிலமை சென்றிருக்கிறது. ஆனால் பொருட் செலவுகளுக்கு அப்பாற்பட்டு வேறு சில விசயங்கள் நமக்கு தேவையாய் இருக்கின்றன. இஸ்லாமிய இளைஞர்களின் முகம் எங்கு நோக்கி திருப்பபடுகிறது என்பதில் நமக்கு கவலையுண்டு. இஸ்லாமிய இளைஞர்களை இந்த சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட தனித் தீவுகளாக, இலக்கற்று அலைந்து திரியும் எதோ ஒன்றாக எம்மால் கருத முடியாது. அந்த அடிப்படையில் சில கேள்விகளை இஸ்லாமிய இளைஞர்களிடம் எழுப்புவது அவசியம் எனக் கருதியதால் இந்தக் கட்டுரை வடிவம் பெறுகிறது.

முதலில் ஷிர்க் என்றால் என்ன? இறைவனுக்கு இணை வைக்கும் குற்றத்தைச் செய்வது ஷிர்க் எனப்படுகிறது. இந்த ஷிர்க் எனும் அரபு கலைச் சொல்லுக்கு முழுமையான பொருளைத் தேடினால் அது இஸ்லாமிய இறையியலுக்குள் பல சுய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். அந்த சுய முரண்பாடுகளை சுரம் பிரித்து ஆலாபிப்பது நம்முடைய நோக்கமில்லை. ஏனென்றால், இங்கு நாம் நாத்திகம் பேச வரவில்லை. மெய்யாகவே இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது? என்பது குறித்த தெளிவை இஸ்லாமிய இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டிய கடமையும் கவலையும் இருக்கிறது.

சரி. ஷிர்க் என்பது இணை வைத்தல் என்றால் எதுவெல்லாம் ஷிர்க் ஆக கருதப்படும்? இறைவனுக்கு அதாவது அல்லாவுக்கு இணையாக அறிந்தோ, அறியாமலோ எதையெல்லாம் கருதுகிறோமோ அதுவெல்லாம் ஷிர்க் ஆக கருதப்படும். இப்படி ஷிர்க் ஆக கருதப்படும் வாய்ப்புள்ள அனைத்தையும் எதிர்த்து ஒழிக்கும் முயற்சியில் இறங்கினால் தான் அது ஷிர்க் ஒழிப்பு எனப்படும். ஆனால் தற்போது டி.என்.டி.ஜே வினரால் திருவிழாவாக கொண்டாடப்பட எதிர்நோக்கியுள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாடு இவ்வாறான அனைத்தையும் ஒழிக்கும் முயற்சிகளை தன்னுள்ளே கொண்டுள்ளதா? இந்த கேள்விக்கு ஆம் என பதில் சொல்ல எவராவது முன் வருவார்களா? டி.என்.டி.ஜே வினரின் கொண்டாட்ட மாநாடு ஒரே ஒரு அம்சத்தை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. அது தர்ஹா எனும் கலாச்சாரத்தை ஒழிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த அம்சத்தில் டி.என்.டி.ஜே வினர் அதாவது இஸ்லாமிய மீட்டுருவாக்கம் பேசும் ஜாக் தொடங்கி பல்வேறு குழுக்கள் ஏற்கனவே குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளனர். இது வெற்றியா என்பது குறித்து மாற்றுக் கருத்து இருந்தாலும், 80களில் இருந்த நிலை இன்றில்லை. சின்னச் சின்ன தர்ஹாக்கள் பல வழக்கொழிந்து போயுள்ளன. பிரபலமான பேரளவு வருமானம் கொண்ட தர்ஹாக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவைகளும் கூட முன்பிருந்த நிலையில் இல்லை. தமிழகத்தின் பெரும்பாலான இஸ்லாமிய இளைஞர்கள் தர்ஹா கலாச்சாரத்தை விட்டு இஸ்லாமிய மீட்டுருவாக்கப் பாதைக்கு வந்துள்ளனர். இன்று தர்ஹா கலாச்சாரம் எஞ்சியிருப்பது கூட அதனால் வருவாய் பெறுபவர்களும், அதனை விட்டுவிட இயலாத அகவை கூடிய அகத்தினர்களும் மட்டுமே தர்ஹாக்களை நீர்த்துப் போகாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் யதார்த்தம் எனும் நிலையில், மிகப்பெரும் பொருட்செலவில் தர்ஹாவை மட்டுமே முதன்மைப் படுத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்பது முக்கியமான கேள்வி.

அண்மையில் காவல்துறையில் இந்த மாநாடு மத மோதல்களை ஏற்படுத்தக் கூடுமோ எனும் கேள்வி எழுப்பப்பட்ட போது, “அப்படி ஏதும் நிகழாது. நாங்கள் சிலை வணக்கத்தையோ, பிற மதங்களைப் பின்பற்றுவோர்களை நோக்கியோ இம்மாநாடு நடத்த திட்டமிடவில்லை. சிலை வணக்கம் குறித்து பேசப் போவதில்லை. எனவே மத மோதல்கள் ஏற்படாது” என்று எழுதிக் கொடுத்து விட்டு வந்ததாக முகநூல் பதிவுகள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் சிலை வணக்கம் ஷிர்க்கில் அடங்காதா? அல்லது சிலை வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தில் சிலை வணக்கம் தவிர்க்க முடியாதது. எனவே சிலை வணக்கம் கூடாது எனும் இஸ்லாத்தின் நிலைபாடு இந்தியாவுக்கு பொருந்தாது என்கிறார்களா? இதற்கு டி.என்.டி.ஜே வினர் கூறும் பதில், “நாங்கள் ஏற்கனவே இஸ்லாம் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளில் போதுமானவரை சிலை வணக்கம் குறித்து கூறியிருக்கிறோம். தொடர்ந்து அது குறித்து பேசியும் வருகிறோம். எனவே இந்த மாநாட்டில் அது தேவையில்லை” என்கிறார்கள்.

இந்த இடத்தில் மீண்டும் மேற்கண்ட கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. தர்ஹா ஒழிப்பு, தாயத்து, தகடு ஒழிப்பில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற்று பெருமளவு இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கும் இந்த நிலையில். ஒப்பீட்டளவில் அந்த அளவுக்கு வெற்றி பெறாத சிலை ஒழிப்பில் நிகழ்ச்சி நடத்துவது மட்டுமே போதும் எனும் தெள்வுக்கு வந்திருக்கும் போது அதை விட அதிக வெற்ரி பெற்ரு மேலோங்கிய நிலையில் இருக்கும் தர்ஹா, தகடு தாயத்து ஒழிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவமும், பொருட்செலவும் செய்து மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன?

ஷிர்க் என்றால் தர்ஹா, தாயத்து மட்டுமோ, சிலை வணக்கம் மட்டுமோ அல்லவே. மருத்துவ முறையை எடுத்துக் கொண்டால், அது முழுக்க முழுக்க பரிணாம தத்துவத்தை அடிப்படையைக் கொண்டது. அதன் பரிசோதனை முறைகள், செயல்படும் விதம், புதிய கண்டுபிடிப்புகள் என அனைத்தும் பரிணாம அடிப்படையைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால் அல்லா களிமண் மூலமும், இடுப்பெலும்பின் மூலமும் படைத்த ஆதம், ஹவ்வா விலிருந்து மக்களை படைத்ததாக கூறுகிறான். இதை மறுத்து பரிணாமம் மூலம் உயிரினப் பரவல் நடைபெற்றது என்பதே பரிணாமம். அல்லா களி மண்ணால் படைத்தான் என்பதையும் ஏற்றுக் கொள்வோம், குரங்கு போன்றா மூதாதையிடமிருந்து வந்தான் என்பதையும் ஏற்றுக் கொள்வோம் என்பது அல்லாவை கேலி செய்வது போலில்லையா? அல்லா களி மண்ணால் படைத்தான் என்பதை மறுத்து பரிணாமம் மூலம் குரங்கிலிருந்து வந்தான் என்பதை ஏற்ருக் கொண்டு மருத்துவம் செய்பவர்கள் அனைவரும் ஷிர்க்கில் வீழ்ந்து விடவில்லையா? இந்த ஷிர்க்கை ஒழிக்க வேண்டாமா? இந்த ஷிர்க்கை ஒழிக்க திருச்சி மாநாடு எதையாவது செய்யுமா?

விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதன் யார் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? இப்படி ஒரு கேள்வி பள்ளித் தேர்வில் கேட்கப்பட்டு அதற்கு முகம்மது நபி என்று பதில் எழுதினால் மதிப்பெண் கிடைக்குமா? கிடைக்கசில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? மறுத்து முகம்மது நபி தான் என்று ஆசிரியரிடம் வாதாடுவீர்களா? அல்லது யூரி காக்ரின் என எழுதாதது என்னுடைய தவறு தான் என ஒப்புக் கொள்வீர்களா? இதன் பொருள் அல்லாவை நம்பவில்லை என்பது தானே. குரானில் நீங்கள் அவரைச் சந்தித்ததில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என முகம்மது நபிக்கே எச்சரிக்கை செய்யும் அல்லாவின் வார்த்தையை மீறி நீங்கள் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது யூரி காக்ரின் என்று கூறினால் அது ஷிர்க் இல்லையா? இந்த ஷிர்க்கை ஒழிக்க திருச்சி மாநாடு என்ன செய்யும்?

ஆக, ஷிர்க் ஒழிப்பு எனும் பெயரில் டி.என்.டி.ஜே வினர் நடத்த இருப்பது அவர்களே சொல்லும் காரணங்களுக்கு பொருந்தாத ஒன்று என்பது தெளிவு. இனி ஏன் இவ்வளவு விலை உயர்ந்த மாநாடு அவர்களுக்கு அவசியப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

அவர்கள் கூறுவது என்ன? ‘முஸ்லீம் மக்களிடம் இருக்கும் மூடப்பழக்க வழக்கங்களான தர்ஹா, தாயத்துகளை ஒழிக்கப் போகிறோம்’ என்பது. இதற்காக பத்து லட்சம் மக்களை திரட்டப் போகிறோம் என்கிறார்கள். இந்தக் கணக்கு சாத்தியமற்றது. சும்மா ஒரு பேச்சுக்கு கூறுவது என்பது அவர்களுக்கே தெரியும். முன்னர் தீவுத் திடல் மாநாட்டின் போதும் இப்படித்தான் கூறினார்கள். பின்னர் நல்ல காரியத்துக்காக பொய் சொல்வது தவறில்லை என்று விளக்கமும் சொன்னார்கள். எனவே, அதை விட்டு விடுவோம். இப்படி அவர்கள் திரட்டுவது யாரை? டி.என்.டி.ஜே வினரை மட்டும் தான். வேறு யாரும் வரப்போவதில்லை என்பதுடன் மட்டுமல்லாது, இதற்காக விளம்பரம் செய்யும் டி.என்.டி.ஜே வினரும் வேறு யாரையும் வர விடக்கூடாது என்பது போல் தான் செயல்படுகிறார்கள். பல ஜமாத்கள் இந்த மாநாட்டுக்கு செல்லக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்திகள் கிடைக்கின்றன. இதையும் மீறி வந்தாலும் அது சொற்பமான அளவில் தான் இருக்கும். ஆக, யாரை தர்ஹா, தாயத்து கலாச்சாரங்களிலிருந்து மாற்றி ஷிர்க் இல்லாதவர்களாக கூறுகிறார்களோ அவர்களைக் கூட்டி வைத்து ஷிர்க் கூடாது என்று மேடை போட்டு பேசப் போகிறார்கள். இந்த செலவுகளும் படாடோபமும் இதற்குத் தானா?

பொதுவாக இஸ்லாமிய மீட்டுருவாக்க இயக்கங்களின், குறிப்பாக டி.என்.டி.ஜே வின் திட்டங்கள் என்ன? தூய வடிவில் இஸ்லாத்தை பரப்புவது. தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு முஸ்லீம் சமூகப் பணிகளை செய்வது. இதில் இஸ்லாத்தைப் பரப்புவது என்பதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. பிற இஸ்லாமிய இயக்கங்கள் டி.என்.டி.ஜே வினர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய தத்துவார்த்த ரீதியில் முரண்பாடுகள் இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன. மீட்டுருவாக்கக் குழுக்களே பலவாறாக உடைந்து சிதறிக் கொண்டிருக்கின்றன. இவைகளை மீறி டி.என்.டி.ஜே வினர் மக்களை ஈர்த்திருக்கிறார்கள். இதற்கு முதற் காரணம் பிஜே எனும் அதன் தலைவரின் ஈர்ப்புக் கவர்ச்சி மிக்க வாதத் திறமை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே, டி.என்.டி.ஜே வினரின் மதத்தைப் பரப்புதல் என்பது ஒரு ஜாதிக் கட்சியைக் கட்டுவது எனும் அளவில் சுருங்கியிருக்கிறது.

சமூகப் பணிகள் என்பதில் டி.என்.டி.ஜே வினர் மட்டுமல்லாது மீட்டுருவாக்கக் குழுக்கள் அனைத்துக்குமே கடும் வரட்சி நிலவுகிறது. பாபரி பள்ளிவாசல், இட ஒதுக்கீடு என்பதைத் தாண்டி அவர்களின் சமூகப் பணிகள் விரியவே இல்லை. நாங்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதை பெரிதாக விளம்பரப்படுத்தினாலும் அரசியல் கட்சியாகவே செயல்படுகிறார்கள். நேரடியாக ஓட்டரசியலில் ஈடுபடுவதில்லை என்றாலும், அந்த ஓட்டரசியலை முன்வைத்தே இவர்களின் பணிகள் அமைந்திருக்கின்றன. அதாவது இஸ்லாமிய மக்களின் ஆதரவு எங்கள் இயக்கத்துக்குத் தான் உண்டு. எனவே, எங்களுக்கு இதைச் செய்யுங்கள் என்று அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசுவது. இதில் தான் இவர்களின் வெற்றியே அடங்கியுள்ளது.

பரபரப்பாக செயல்படுவதன் மூலம் மக்களை தங்களிடம் தக்க வைத்துக் கொள்வது தான் இவர்களின் ஒரே அரசியல் உத்தி. நேரடி விவாத அழைப்புகள், லட்சம் கோடி என சவடால் அறிவிப்புகள், தடாலடிப் பேச்சுகள் என நாலாந்தர அரசியல்வாதிகளின் உத்தியைகளைத் தாண்டி மக்களைத் திரட்ட அல்லது தக்க வைக்க வேறெந்த திட்டமும் இவர்களிடம் இல்லை. இந்த அடிப்படையிலிருந்து தான் இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.

மேலே இந்த மாநாட்டுக்கு அவர்கள் கூறும் ஷிர்க் ஒழிப்பு என்பது மெய்யான காரணம் அல்ல என்பதைக் கண்டோம். கடந்த காலங்களில் தேர்தல் காலத்தில் மாறி மாறி எடுத்த நிலைபாடுகள் டி.என்.டி.ஜே வினரிடமே ஒரு அதிருப்தியான நிலையை ஏற்படுத்தி இருந்தது. இதை மறைக்கத் தான் அகோரி மணிகண்டனுடனான சவடால் பயன்பட்டது.

இப்போது சில நிகழ்வுகளைக் கவனிப்போம். தொடக்கத்திலிருந்தே ஆன்லைன்பிஜே எனும் இணைய தளம் பிஜே வின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. திடீரென ஏதேதோ காரணம் கூறி அதிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். இதே போல் காரணங்கள் உருவாக்கப்பட்டு தலைமைப் பொறுப்பு உட்பட பல விசயங்கள் அவரிடமிருந்து விலக்கப்படுகின்றன. இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் டி.என்.டி.ஜே வினரை வேண்டுமானால் சமாதானமடையச் செய்யலாம். ஆனால் கூர்ந்து கவனிப்போர்க்கு அவை போதுமானதல்ல. இதற்கு பின்னணியாக பி.ஜே மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. பி.ஜே மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுவது இது முதன்முறையல்ல என்ற போதிலும், அதில் நம் கவனம் குவிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் டி.என்.டி.ஜே அணியினருக்கு ஏதோ ஓர் அதிருப்தி பி.ஜே மீது இருக்கிறது என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் பிஜேவின் உடல்நிலையையும் கருத்தில் கொள்ளலாம்.

ஜாக் தொடங்கி இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு பலவாறாக உடைந்து போனதன் பின்னணியில் சரியாகவோ, தவறாகவோ பிஜே இருந்திருக்கிறார் என்பது உண்மை. அதேநேரம் பிஜே இல்லாத எந்தக் குழுவும் தமிழக இஸ்லாமிய மக்களை ஈர்க்க முடியவில்லை என்பதை கவனிக்க வேண்டும். டி.என்.டி.ஜே வின் தொடக்க காலத்திலிருந்து கவனித்துப் பார்த்தால் இப்போதைப் போல் எப்போதும் இந்த அளவு அதிகமாக மக்களைத் தூண்டும் உணர்ச்சிகரமான பிரச்சனைகளை எடுத்தாண்டதில்லை. எடுத்துக்காட்டாக உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடைகளின் மூலமாக தமிழ்நாட்டில் பல பள்ளிவாசல் உருவாக்கப்பட்டன. எந்த இடத்திலும் மையவாடி (இடுகாடு) அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தந்த ஊர்களில் உள்ள மையவாடிகளைத் தான் அந்தந்த ஊர் ஜமாத்துக்கு உட்பட்டு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் ஓரிரு ஆண்டுகளாக இதில் பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவை அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் நாம் வந்தடையும் முடிவு என்ன? டி.என்.டி.ஜே நிர்வாகிகளின் தற்போதையே ஒரே கவலை பிஜேவுக்குப் பிறகு அமைப்பை எப்படி கட்டிக் காப்பது என்பதாகத் தான் இருக்க முடியும். இந்த கவலையிலிருந்து தான் மாநாடு உள்ளிட்ட அனைத்தும் கிளைத்து வருகின்றனவே தவிர, இஸ்லாமிய இறையியலைக் காக்கும் நடவடிக்கை இதில் ஒன்றும் இல்லை.

இன்னமும் சிலர் நினைக்கலாம். அவர்கள் அமைப்புக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ஷிர்க் ஒழிப்பு என்பது இஸ்லாத்தின் மையமான பிரச்சனை அல்லவா? அதைத்தானே அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று. அப்படி அல்ல. இதற்கு குறிப்பான சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். ந.ந. ஒரு நிமிடம், திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு எனும் இரண்டு இடுகைகளை படித்துப் பாருங்கள். பிரிந்து போன பல குழுக்களில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாகவே டி.என்.டி.ஜே வினரின் பெரும்பாலான செயல்பாடுகள் இருக்கின்றன. இந்தக் கண்னோட்டத்தை விலக்கி விட்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டைப் பார்க்க முடியுமா? முடியாது என்பதே யதார்த்தம்.

ஆக, பிஜேவுக்குப் பிறகு ஏற்படப் போகும் வெற்றிடத்தை நிரப்ப இப்போதிலிருந்தே தயார் செய்து கொள்வது, தமிழக முஸ்லீம்கள் அளவில் பெரிய அமைப்பு நாங்களே என மீண்டும் நிருவிக் கொள்வது இந்த இரண்டு நோக்கங்களுக்காக மட்டுமே ஷிர்க் ஒழிப்பு மாநாடு கொண்டாடப்பட விருக்கிறது. ஓர் அமைப்பின் உள்வசமான பார்வையில் இவை தவறான நோக்கங்கள் என்று கருத முடியாது. நேர்மையாக அதை தம் அணியினருக்கு தெரிவிக்காமல் இஸ்லாமிய இறையியலை ஏன் மறைக்கும் திரைச் சீலையாக பயன்படுத்த வேண்டும்? இது முக்கியமான கேள்வி அல்லவா?

இங்கு தான் இஸ்லாமிய இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். மதம் குறித்த உன்னதங்களைப் பேசிக் கொண்டு உங்களுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த அமைப்புகள் உங்கள் சொந்த வாழ்க்கைக்கு செய்தது என்ன? உங்கள் சொந்த வாழ்வின் பிரச்சனைகள் என்ன? அதற்கான காரணங்கள் எங்கிருந்து வருகின்றன? அதை எப்படி தீர்ப்பது? உங்களைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தை விட்டுவிட்டு உங்களால் தனித்து இயங்க முடியுமா? அல்லது உங்களைச் சூழ்திருக்கும் சமூகத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் அது உங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தாதா? ஒரு விலைவாசி உயர்வு உங்களை மட்டும் விலக்கி விடுமா? ஒரு ஆற்றில் கலக்கப்படும் நச்சுக் கழிவுகள் எல்லோரையும் பாதிக்கும் போது உங்களுக்கு அது நேராதா? உங்கள் நிலத்தடி நீர் பன்னாட்டு நிறுவனங்களால் சூரையாடப்பட்டு தன்னீர் பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் மட்டும் தாகம் தீர்ந்து இருக்க முடியுமா? இது போன்ற பிரச்சனைகளில் உங்கள் அமைப்பு உங்களுக்கு என்ன வழிகாட்டல் வழங்கியது?

ஒவ்வொரு மனிதனும் இறப்பைச் சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் வாழும் காலத்தில் சொர்க்கமா நரகமா என்பதைத் தவிர வேறு பிரச்சனைகள் தன்னாலே சரியாகி விடுமா? உங்கள் ஆன்மீக நம்பிக்கைகளை புண்படுத்துவது நோக்கமல்ல. ஆனால் சமூகப் பிரச்சனைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விலக்கி விட்டு ஆண்மீகம் மட்டுமே போதுமானதாகி விடுமா? என்பது மட்டுமே கேள்வி.

நீங்கள் உணர வேண்டும். உங்கள் அமைப்புகளுக்கு உணர்த்த வேண்டும். ஏகாதிபத்தியம், பார்ப்பன பயங்கரவாதம் எனும் இரண்டு பாசிசங்களுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவைகளை மோதி வீழ்த்துவதற்கு ஜாதி, மத, இன இன்னும் பிற பேதங்களை கடந்து வர்க்கமாக ஒன்றிணையும் தேவை நமக்கு முன் பூதாகரமாக நிற்கிறது. இதை சாதிப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா? உங்களின் பங்களிப்பு என்ன?

Advertisements

முகம்மதின் இரவுப் பயணம் .. .. ..?

9 ஆக

உம்மு ஹானி :   முஹம்மது நபியுடைய பெரிய தகப்பனார் அபூ தாலிபின் மகள். இவரது உண்மையான பெயர் ஃபகிதா. உம்முஹானியை விரும்பிய முஹம்மது நபி திருமணம் செய்து தருமாறு அபூ தாலிபிடம், கேட்கிறார். ஆனால் ஏதோ சில காரணங்களால்   அபூ தாலிப் மறுத்து, உம்மு ஹனியை, ஹூபைரா என்பவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். தன் கணவருடன் அபிசீனியாவில் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் இறந்ததால், மக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தார்.

                தாயிப் நகரத்திற்கு தன்னுடைய புதிய மார்க்கத்தைப் பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்யச் சென்ற முஹம்மது நபி, தாயிப் நகரவாசிகளின் ஏளனச் சொற்களால் தாக்குதலுக்குள்ளானார். முயற்சி தோல்வியடைந்த மனவேதனையுடன் கஅபாவில் படுத்திருந்தவர், இரவில் எல்லோரும் உறங்கியவுடன் யாரும் அறியாமல் எழுந்து உம் ஹனியின் வீட்டிற்குச் சென்றார். இது முஹம்மது நபியுடைய மனைவி கதீஜா மற்றும் பெரிய தகப்பனார் அபூ தாலிப் ஆகியோரது மரணத்திற்குப் பின் நிகழ்ந்த சம்பவம்.

                கஅபாவில் படுத்திருந்த முஹம்மது நபியயை காணவில்லை என மக்கள் தேடிய பொழுது அவர் உம் ஹனியின் வீட்டிலிருந்து வெளியே வந்தவர், மக்காவின் கஅபாவில் இருந்து ஜெருசலேமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) என்ற புனிதமான பள்ளிவாசல் வரை வான்வெளி பயணம் மேற்கொண்டு, அங்கு மற்ற நபிமார்களுடன் தொழுகையில் ஈடுபட்டு, அதன் பிறகு அங்கிருந்து அல்லாஹ்வை சந்திக்க, ஏழாம் வானம் வரை சென்ற தனது விண்வெளி  பயணத்தைப் பற்றி மக்களிடம் கூறுகிறார். முஹம்மது நபியின் விண்வெளிப்பயணத்தை குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது,

தன்னுடைய அடியாரை ஓரிரவில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவுப் பயணம் செய்வித்த ஒருவன் மகாப் பரிசுத்தமானவன்…

(குர் ஆன் 17:1)

 புகாரி ஹதீஸ் 3207

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

நான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் சாறையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான புராக் என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம்…

(நெஞ்சைப்பிளந்து OPEN HEART SURGERY செய்து பாவம் நீக்கப்பட்ட கதையை இவர் சிறுவயதிலிருந்து கூறிக் கொண்டிருக்கிறார். பாவத்தை அறுவை சிகிச்சையால் நீக்க  முடியுமா? அறுவை சிகிச்சையால் பாவங்கள் நீக்கப்பட்டது முஹம்மது நபிக்கு மட்டுமே. சந்தேகமே இல்லை இவர் மிகப்புதுமையான இறைத்தூதர்தான்!)

இச்சம்பவத்தைப்பற்றி உம்முஹனி கூறுகையில்

From Ishaq: 184

“Umm (Hani), Abu Talib’s daughter, said: “The Apostle went on no journey except while he was in my house. He slept in my home that night after he prayed the final night prayer. A little before dawn he woke us, saying, ‘O Umm, I went to Jerusalem.’ He got up to go out and I grabbed hold of his robe and laid bare his belly. I pleaded, ‘O Muhammad, don’t tell the people about this for they will know you are lying and will mock you.’ He said, ‘By Allah, I will tell them.’ I told my negress slave, ‘Follow him and listen.’”

 

(அபூதாலிப்பின் மகள் உம்மு (ஹானி) கூறுவதாவது,

(அல்லாஹ்வின்) தூதர் என்வீட்டிலிருந்ததைத்தவிர எந்தப் பயணத்திற்கும் செல்லவில்லை. இரவு வணக்கத்திற்குப் பின் என் வீட்டில் உறங்கிவிட்டார். அதிகாலைக்கு சற்று முன்பாக எங்களை எழுப்பி, ” ஓ, உம்மு நான் ஜெருசலேமிற்கு சென்றிருந்தேன்” என்று கூறி, வெளியே செல்ல முயன்றவரை அவரது உடையைப் பிடித்து இழுத்து நிறுத்தினேன். “ஓ முஹம்மதே இதைப்பற்றி மக்களிடம் கூறாதீர், அவர்கள் நீங்கள் பொய் சொல்வதாகக் கூறி ஏளனம் செய்வார்கள் என்றேன். “அல்லாஹ்விற்காக, அவர்களிடம் நான் கூறுவேன்” என்றார். நான், என் நீக்ரோ அடிமையிடம், அவரை பின்தொடர்ந்து சென்று கவனிக்க கூறினேன்)

                தன்னுடைய பயண நினைவுகளில் மூழ்கியவாறு பள்ளியில் அமர்ந்திருந்த முஹம்மது நபியை காணும் அபூஜஹ்ல், “ஏதாவது செய்தி இருக்கிறதா?” என்றார். நபி பதிலளிக்கையில், “ஆம். நேற்று இரவு ஜெருசலேம் அழைத்துச் செல்லப்பட்டேன்.” என்றார். தான் கேட்டது சரிதானா என்பதற்காக மறுபடியும், “ஜெருசலேமிற்கா?” என்றார் அபூஜஹ்ல்.

                முஹம்மதை ஒரு பொய்யர் என்று நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்ததாக நினைத்த அபூஜஹ்ல் முஹம்மது நபியிடம், “நான் மற்றவர்களையும் அழைத்து வருகிறேன் அவர்களிடமும் இதைக் கூற முடியுமா? என்றார். அதற்கு சிறிதும் தயக்கமின்றி “ஆம்” என்றார். தன் பயண நிகழ்வுகளை அவர்களிடம் கூறினார். முஹம்மது நபியின் கூற்றைக் கேட்ட மக்கள் சிரித்து வெவ்வேறு முறைகளில் ஏளனம் செய்கின்றனர். அம்மக்கள் தங்களது சந்தேகங்களை  தீர்க்கும் வகையில், அங்கு எத்தனை கதவுகள் இருந்தது?, எத்தனை ஜன்னல்கள் இருந்தது? அங்கு நிலவிய தட்பவெப்ப நிலை என்ன? என்பது போன்ற பலவிதமான கேள்விகளை மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றி கேட்கின்றனர்.

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்

காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர். ”உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)

Sahih Al-Bukhari HadithHadith 6.233

Narrated by Jabir bin Abdullah

The Prophet said, “When the Quraish disbelieved me (concerning my night journey), I stood up in Al-Hijr (the unroofed portion of the Ka’ba) and Allah displayed Bait-ul-Maqdis before me, and I started to inform them (Quraish) about its signs while looking at it.”

(நபி கூறுகிறார், குரைஷிகள் என்னை நம்பவில்லை, நான் அல் ஹிஜ்ர் (கஅபாவின் கூரையிடப்படாத பகுதி) முன் நின்று கொண்டிருந்தேன். அல்லாஹ் பைத்துல் முகத்தஸ் என் முன்னே காண்பித்தான். நான் பார்த்த அடையாளங்களை அவர்களுக்கு கூறினேன்)

 

முஸ்லீம் ஹதீஸ் எண்: 251அத்தியாயம்: 1, பாடம்: 1.75,

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)

“(கஅபாவின்) ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் வைத்து (எனது இரவுப் பயணத்தைப் பற்றிக்) குறைஷிகள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு நினைவில் இல்லாத, பைத்தில் மக்திஸ் பள்ளி சார்ந்த (அடையாளங்கள்) சிலவற்றை என்னிடம் அவர்கள் கேட்டபோது முன்னெப்போதும் நான் வருந்தியிராத அளவுக்கு எனக்கு வருத்தம் மேலிட்டது. அப்போது பைத்துல் மக்திஸை அல்லாஹ் எனக்குக் காட்டினான். அதைப் பார்த்துக் கொண்டே அவர்கள் கேட்ட ஒவ்வொன்றைப் பற்றியும் விபரம் தெரிவித்தேன்”.

“(பைத்துல் மக்திஸில்) இறைத்தூதர்களில் ஒரு குழுவினர் இருக்கக் கண்டேன். அங்கு மூஸா (அலை) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்து ஆண்களைப் போன்று வாளிப்பான தோற்றத்துடன் இருந்தார்கள். அங்கு மர்யமின் மைந்தர் ஈஸா(அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களுள் (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்களைத் தோற்றத்தில் மிக நெருக்கமாக ஒத்திருந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களை, சாயலில் மிகவும் ஒத்திருப்பவர் உங்கள் தோழர்(ஆகிய நான்)தான்”.

“அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறைத்தூதர்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினேன். தொழுது முடித்தபோது (என்னிடம்) ஒருவர், முஹம்மதே! இதோ இவர்தாம் நரகத்தின் காவலர் மாலிக். அவருக்கு ஸலாம் சொல்லுங்கள்! என்று கூறினார். நான் அவரை நோக்கித் திரும்பியபோது அவர் முந்திக் கொண்டு எனக்கு ஸலாம் சொல்லி விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Ishaq:183

“Upon hearing this many became renegades who had prayed and joined Islam. Many Muslims gave up their faith. Some went to Abu Bakr and said, ‘What do you think of your friend now? He alleges that he went to Jerusalem last night and prayed there and came back to Mecca.’

(இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருந்தவர்கள், இதை கேட்டவுடன் நம்பிக்கையிழந்தனர். சிலர் அபூபக்கரிடம் சென்று, “கடந்த இரவில் ஜெருசலேம் சென்று அங்கு தொழுகை நடத்தி மெக்காவிற்கு திரும்பியதாக உறுதியாக கூறும், உங்களது நண்பரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டனர்)

அவர் (முஹம்மது நபி) இதைக் கூறியிருந்தால் நம்புகிறேன், ஆம் அவர் கூறியது அனைத்தையும் நம்புகிறேன் உண்மையே என்றார். அபூபக்கர், இதன் பிறகே  சித்தீக் (உண்மையே கூறுபவர்) என்ற அடைமொழியுடன் அபூபக்கர் சித்தீக் என்று அழைக்கப்படலானார்.  ஆயினும் இந்த நிகழ்வை ஏற்க மறுத்து  சிலர் இஸ்லாமை விட்டு விலகினர். இச்சம்பவத்தின் பொழுது 70 – 80 பேர்களே இஸ்லாமை ஏற்றிருந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

“மஸ்ஜித்” என்பது முஸ்லிம்கள் கூட்டுத் தொழுகை நடத்தும் வழிபாட்டு இடத்தைக் குறிக்கும். “அல்மஸ்ஜிதுல் ஹராம்” என்பது சவூதி அரேபியாவின் மக்காவிலுள்ள கஅபாவைக் குறிக்கும். “அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்பது ஃபலஸ்தீனின் ஜெருசேலத்தில் உள்ள பைத்துல் மக்தஸைக் குறிக்கும்.

                இந்த விண்வெளிப் பயணம் தொடர்பான செய்திகள் அனைத்தும் வரலாற்று ஆதாரங்களுக்கு எதிரானவைகள். தாவூது நபி மற்றும் சுலைமான் நபியால் கிமு 958-951 கட்டப்பட்ட ஆலயம், கிமு 1004 -ல் கட்டி முடிக்கப்பட்டது. கிமு 586-ல் நெபுகத்நெஸ்ஸார் என்ற பாபிலோனிய மன்னரின் படையெடுப்பில் அந்த ஆலயம் முற்றிலும் தகர்கப்பட்டது. இரண்டாவது கட்டப்பட்ட ஜெருசலேம் ஆலயம், கிபி 70 ஆண்டு டைட்டஸ் என்ற ரோமானிய மன்னரின் படையெடுப்பில் அதாவது நபி பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்கள் அந்த யூதக் கோவிலை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கி அந்த யூதக் கோவிலை இருந்த இடம் தெரியாதவாறு செய்து விட்டனர். இப்பொழுது நீங்கள் பார்க்கும் எண்கோண (Octagon)  வடிவ பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா (Dome of Rock) கலீபா அப்து அல்-மாலிக் இப்ன் மர்வான் என்பவரால் கிபி 691-ல் கட்டப்பட்டது அதாவது நபியின் மரணத்திற்கு பின் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு  கட்டப்பட்டது. கிபி 1016 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முற்றிலும் அழிந்த கட்டிடத்தை Zaher Li-l’zaz என்பவரால் கிபி 1022 ல் மீண்டும் கட்டப்பட்டது. அதற்கு கிப்லா இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. கிபி 691வரை மஸ்ஜிதுல் அக்ஸா இல்லை. குர்ஆன் 17:1 வசனம் குறிப்பிடும் மஸ்ஜிதுல் அக்ஸா நபி உயிருடன் இருந்த பொழுது இல்லவே இல்லை.

இந்த வாததிற்கு ஆதாரம் இஸ்லாமிய வரலாற்றிலேயே இருக்கிறது. நபியின் மரணத்திற்குப் பிறகு, கலீபா உமர் அவர்களின் ஆட்சி காலத்தில் ஜெருசலேம் முஸ்லீம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அப்போது அங்கு சென்ற கலீபா உமர் தொழுகைக்கு நடத்த இடம் தேடுகிறார். அங்கு எந்த ஒரு பள்ளிவாசலும் இல்லாததால், கிருஸ்துவ பாதிரியார்  ஒருவர் தங்களது ஆலயத்தில் தொகை நடத்திக் கொள்ள கோரிக்கை வைக்கிறார். கிருஸ்துவ ஆலயத்தில் தொழுகை நடத்த விரும்பாத கலீபா உமர் கத்தாப் அவர்கள்,  குப்பைகூளத்துடன் காணப்பட்ட ஒரு திறந்த வெளியை சுத்தம் செய்து தொழுகை நடத்தியதாக வரலாறு தெளிவாக குறிப்பிடுகிறது.  அந்த திறந்த வெளி எதுவென்றால் சுலைமான் நபி கட்டியதாக கூறப்படும் Solomon Templeஎன்ற யூதக் கோவில் இருந்த இடம்.  நிர்வாக காரணங்களுக்காக,  உமர் அவர்கள் சில நாட்கள் அங்கு தங்கியிருந்தார். மக்களின் தேவைகளை விசாரித்து அறிகிறார். அவர் அங்கு புதிதாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணனிக்கிறார். அது “மஸ்ஜிதுல் உமர்” என்றழைக்கப்பட்டது.

இப்பொழுது என் மனதில் எழும் நியாயமான கேள்வி என்னவென்றால் நபி எங்கிருந்து மிஹ்ராஜ் பயணம் சென்றார்?

கிபி  622-623 ல் குர்ஆன் 17:1 கூறும் மஸ்ஜதுல்அக்ஸா எங்கே?

                மெக்கா நகரவாசிகள் முஹம்மது நபியின் இரவுப் பயணத்தைப் பற்றி குறுக்கு விசாரணை செய்கையில், அல்லாஹ், நபியின் கண்களில் பைத்துல் மக்தஸை தோன்றச் செய்ததாகவும், அதன் அடையாளங்களைப்பற்றி குறிப்பிட்டவுடன், அவர்கள் மறுத்துப் பேச முடியாமல் போனதாகவும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. இல்லாத ஒன்றை எப்படி காண்பிக்க முடியும்? முஹம்மது நபியின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரேபியர்கள் அறியாத ஒரு மஸ்ஜிதைக் குறித்து விசாரணை  செய்து எவ்வாறு உறுதிப்படுத்தியிருக்க முடியும்?

                இது இன்னொரு விவாதத்தையும் முன்வைக்கிறது. முஹம்மது அவர்கள் நபித்துவம் பெற்றதிலிருந்து ஹிஜ்ரத்திற்கு பிறகும் ஒன்றரை ஆண்டுகள் வரை பைத்துல் முகத்தஸ்ஸை கிப்லாவாக கொண்டு தொழுதார்கள். அதன் பிறகே நபியின் விருப்பப்படி மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா) கிப்லாவாக மற்றப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.

நபியே உம்முடைய முகம் (கிப்லா மாற்றக கட்டளையை எதிர்பார்த்து) வானத்தின் பக்கம் திரும்புவதை திட்டமாக நாம் காணுகிறோம். ஆகவே நீர் விரும்புகின்ற கிப்லாவுக்கு உம்மை திண்ணமாக நாம் திருப்பி விடுகிறோம். எனவே உம்முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின்பால் திருப்புவீராக

(குர் ஆன் )

இல்லாத பைத்துல் முகத்தஸ்ஸை நோக்கிய ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் தொழுகை நடந்துள்ளதாகவும் பொருள் தருகிறது. பைத்துல் முகத்தஸ் எங்கே?

இந்த மஸ்ஜிதுல் அக்ஸா தெடர்பான இன்னொரு ஹதீஸையும் பார்ப்போம்

புகாரி ஹதீஸ் :3366,

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் (நபி – ஸல் – அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளி வாசல் எது என்று கேட்டேன். அவர்கள், அல் மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறை இல்லம் என்று பதிலளித்தார்கள். நான், பிறகு எது என்று கேட்டேன். அவர்கள், (ஜெருஸலத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா என்று பதிலளித்தார்கள். நான், இவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது என்று கேட்டேன். அவர்கள், நாற்பது ஆண்டுகள் (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு, தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுது விடு. ஏனெனில் நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது என்று சொன்னார்கள்.

முஸ்லீம் ஹதீஸ் எண்: 808  அத்தியாயம்: 5, பாடம்: 5.01, 

அறிவிப்பாளர் : அபூதர் அல்கிஃபாரீ (ரலி)

“அல்லாஹ்வின் தூதரே! பூமியில் அமைக்கப்பட்ட முதல் இறையாலயம் எது?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்மஸ்ஜிதுல் ஹராம்” என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்டேன். அவர்கள், “அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான், “அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?” என்று கேட்டேன். அவர்கள், “நாற்பதாண்டுகள்” என்று கூறிவிட்டு, “உங்களைத் தொழுகை (நேரம்) வந்தடையும் இடத்தில் நீங்கள் தொழுது கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) அதுதான் (உங்களுக்கு) மஸ்ஜித்” என்று கூறினார்கள்.

இதில் இன்னொரு தவறும் உள்ளது. கஅபா, இப்ராஹிம் நபியால் கிமு 2000 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. (இன்னும் சில ஆதாரங்கள் கஅபா, ஆதம் நபியால் கட்டப்பட்டது என்கிறது.) தாவூது நபி காலத்தல் துவங்கி சுலைமான் நபி, Temple of Solomon (மஸ்ஜிதுல் அக்ஸா / பைத்துல் முக்அதிஸ்)  கிமு 958-1004 ல் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாறுகள் தெளிவாக கூறுகிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட காலம் சுமார் 1040 ஆண்டுகள். முஹம்மது நபி கூறியதில் ஆயிரம் ஆண்டுகள் பிழையுள்ளது.

நாம் விண்வெளி பயணத்தை தொடர்வோம். முஹம்மது நபி  அவர்களின் விண்ணுலகப் பயணத்தில் பல காட்சிகள் காண்பிக்கப்படுகிறது.

புகாரி ஹதீஸ் :  7517   

…”ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவையிரண்டும் நைல் மற்றும் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்” என்று பதிலளித்தார்கள்.…

Readislam.net என்ற இஸ்லாமிய இணையதளத்தின் ‘மிஃராஜ்” பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து…

…ஸித்ரத்துல் முன்தஹாவின் வேரிலிருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும்…

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வரை சுமார் 6695 கிலோ மீட்டர் நீளம் உள்ள நைல் நதி எங்கிருந்து துவங்குகிறது என்று தெரியாமல் குழப்பமிருந்தது. கிபி 1862 ல் நைல் நதியை ஆய்வுசெய்த JOHN HENNING SPEKE என்னும் ஆய்வாளர் விக்டோரியா ஏரியில் உற்பத்தியாவதை கண்டறிந்தார்.  அவரை வரலாறு ஏனோ மறந்தது. பின்னர் கிபி 1937 BRUCKHAR WALDEKKER  ஜெர்மன் ஆய்வாளர் வெள்ளை நைல் உகாண்டாவில் உள்ள விக்டோரியா ஏரியிலிருந்தும், நீல நைல் எத்தியோப்பியாவின் தானா  ஏரியிலிருந்தும் உற்பத்தியாகிறது என்பதை உறுதி செய்தார். இந்த இரண்டு நதிகளும் இணந்து நைல் நதியாக ஓடி மத்திய தரைக் கடலில் கலக்கிறது. சுமார் 2781 கிலோ மீட்டர் நீளம் உள்ள யூப்பரடீஸ் நதி துருக்கியில் துவங்கி சிரியா, ஈராக் வழியே பாய்கிறது.

யூப்பரடீஸ் மற்றும் நைல் நதிகள் ஏழாம் வானத்தில் பிறக்கிறது என்பதை பகுத்தறிவு உள்ளவர்களால் எப்படி ஏற்க முடியும்? கங்கை நதி சிவனின் தலையில் இருந்து வருகிறது என்ற இந்து மதத்தினரின்  நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?.

அன்றைய ஆன்மீக அறிவாளிகள் தங்களுடைய நம்பிக்கைகளுக்க எதிரான கருத்து என்று பூமி உருண்டை என நிரூபித்தவனை கல்லால் அடித்து கொன்றதும், பிறகு தங்களுடைய வேதத்தில் திருத்தம் செய்து கொண்டதும் நீங்கள் மிகத்தெளிவாக அறிந்த செய்தி.

போலந்துக்காரர் கோபர் நிகஸ் (1473-1543) பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கருத்தை வெளியிட்ட பொழுது எத்தனை பேர் அவரை நம்பினார்கள்?  இதே போன்ற மாற்றுக் கருத்தை ஆவேசமாக வெளியிட்ட  கியார்டனோ புரூனோ (1548-1600) என்ற இத்தாலியர், ரோம் நகரில் மதவாதிகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். டைகோ பிராகே (1546-1601) என்பவர் தனது 20 வருட கிரகங்களின் சஞ்சாரங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பை ஜோஹேன்ஸ் கெப்ளர் (1571-1630) என்பவரிவரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்தார். கலிலியோ (1564-1642), கோபர் நிகஸின், கெப்ளர் போன்றவர்களின் கருத்து உண்மையாதே என்று ஆதரத்துடன் நிரூபித்தற்காக அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். தான் தவறான ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு முடிவுகளை கூறிவிட்டதாகவும், பூமி தட்டையானதே என்று அழுது கொண்டே தனது கண்டுபிடிப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க வைக்கப்பட்டார். ஆனால் மனிதனின் அறிவுத் தாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் மதவாதிகளின் இத்தகைய தடைகளை மீறிக் கொண்டு வளர்கின்றன.

சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகே பூமி தட்டையானது, சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்பதைப் போன்ற பல கருத்துகள் தவறானவை என்பதை ஆன்மீகவாதிகள் மெதுவாக உணர்ந்தனர், தங்களது தவறான கோட்பாட்களுக்கும், விளக்கங்களுக்கும் புதிய முலாம் பூசி மறைத்தனர். அடுத்தது குர்ஆன் தனக்குத் தானே முரண்படுவதைப் பாருங்கள்.

 

தஜ்ஜால்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2

பழைய வேதங்களின் நிலையும் குர் ஆனின் குழப்பமும்

சந்திரனும் பிளந்து விட்டது

போர்க்களத்தில் வானவர்கள் .. .. .. அல்லாவின் தகுதி?

ஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா? கடுங்கோட்பாட்டுவாதிகளின் பயமா?

4 ஆக

அமெரிக்க இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளர் டாக்டர் ஆமீனா வதூதின் சென்னை பல்கலைகழக சிறப்பு விரிவுரை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் கூட்டறிக்கை

சென்னை பல்கலைக்கழக இஸ்லாமிய ஆய்வுத்துறையும், JABS கல்லூரியும் இணைந்து இஸ்லாம் , பாலியல் மற்றும் சீர்திருத்தம் என்ற தலைப்பில் அமெரிக்க இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளரான ஆமீனா வதூத் நிகழ்த்த இருந்த கவுரவ விரிவுரை ரத்து செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம். அதனை தொடர்ந்து ” பெண்களின் அனுபவங்கள் மற்றும் இஸ்லாத்தில் அவர்களின் அதிகாரம் சார்ந்த பிரச்சினைகள்” என்ற தலைப்பில் வட்டமேசை கலந்தாய்வு நடக்க இருந்தது. இதுவும் காவல்துறையின் உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறையின் வேண்டுகோள் காரணமாக அவரின் கவுரவ விரிவுரை மற்றும் வட்டமேசை கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று பல்கலைகழக அதிகாரிகள் தெரிவித்தார்கள். முஸ்லிம் குழுக்கள் (வஹ்ஹாபிய குழுக்கள்) என்று போலியாக தங்களை வெளிப்படுத்திக்கொள்பவர்கள் ஆமீனா வதூதின் நிகழ்ச்சியை  சென்னையில் நடத்தினால் நாங்கள் தடுப்போம் என்று மிரட்டியிருக்கிறார்கள். மேலும் ஆமினா வதூத் அமெரிக்க அரசின் ஊதுகுழல் என்றும், இஸ்லாமிய விரோதி என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். பல்கலைகழகத்தின் இஸ்லாமிய ஆய்வு மையமானது பல்கலைகழகத்தின் விவாத உரிமையை ஊக்குவிக்க மற்றும் உரையாடலை மேற்கொள்ள எடுத்த எல்லா முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

ஆமீனா வதூதின் செயல்பாடுகளை தூரத்தில் இருந்து கவனிக்கும் எவருமே இது அவர்மீதான அடிப்படை இயல்பற்ற குற்றச்சாட்டுகள் என்பதை ஒப்புக்கொள்வர். மேலும் இந்த குழுக்களின் வாதம் முழு அறியாமை என்பதையும் பதிவு செய்வார்கள். இஸ்லாத்திற்கு மதம் மாறிய ஆப்ரிக்க – அமெரிக்க பெண்ணான ஆமினா வதூத் , அஸ்மா பர்லாஸ் மற்றும் ரிபாத் ஹஸன் ஆகியோருடன் இணைந்து அமெரிக்காவில் இஸ்லாமிய பெண்ணிய கருத்தாக்கத்தை முன்னெடுக்கின்றார்.

மேலும்  ஆமினா வதூத்  மலேசியாவை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இந்த அமைப்பானது உலகம் முழுவதும் பெண்களுக்கு நீதியையும், சமத்துவத்தையும் குர் ஆனிய அடிப்படையில் வலியுறுத்தி ஆன்மீக தளத்தில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறது. மேலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் முத்தலாக் முறைமை ஆகியவற்றிற்கு குர் ஆனிய அடிப்படையில்  சமத்துவ முறையிலான தீர்வை முன்னெடுக்கிறது. இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பு (SiS)என்பது நம்பிக்கைக்கொண்ட பெண்களுக்காக உலகம் முழுவதும் தீவிரமாக இயங்கும் ஸ்தாபனம். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்போடு ஆமினா வதூத் முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கான சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை வலியுறுத்தி முசாவா இயக்கத்தை நடத்தினார்.

இந்த தருணத்தில் இந்தியா முழுக்க இருக்கும் முஸ்லிம் பெண்கள் மற்றும் உலகளாவிய முஸ்லிம் பெண்கள் எல்லோரும் முஸ்லிம்களாக ஒன்றுதிரண்டு, இணைந்து அவர்களுக்கான நீதி மற்றும் சமத்துவத்தை பெறுவதில் முனைப்பாக செயல்பட்டு, இஸ்லாமிய நம்பிக்கையாளர்களாக, அதன் மீதும் பற்றுதல் கொண்டவர்களாக, சட்டங்களை மதிப்பவர்களாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் இம்மாதிரியான குழுக்கள் இது தமிழ்நாட்டு முஸ்லிம் மக்களின் கருத்து என்று தங்களின் இருப்பை நிலைநாட்டுவதற்காக போலியாக கருத்து தெரிவிக்கிறார்கள்.
 இதைவிட மோசம் என்பது இப்படியான பார்வைகள் ஒளிபரப்ப அல்லது கேட்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆமினா வதூத் இந்தியாவிற்கு வருகை தந்ததில் இருந்து எவ்வித பிரச்சினையும் இல்லாமல் பல்வேறு பல்கலைகழகங்கள் மற்றும் பொதுமேடைகளில் உரையாற்றி இருக்கிறார். இந்நிலையில் அவரது பேச்சால் வன்முறை ஏற்பட சாத்தியமுண்டு என்பது அப்பட்டமான பொய்யாகும். அவரைப்பற்றி அறிந்தவர்கள் ஒவ்வொருவருமே அவர் தன் வாழ்நாள் முழுவதையும் இஸ்லாத்திற்குள்ளேயும், அதன் வெளியேயும்  சமாதானம் மற்றும் சமத்துவத்திற்காக செலவழிக்கிறார் என்பதை புரிந்து கொள்வர்.

இந்த வருந்தத்தக்க நிகழ்வுகள் மற்ற காரணங்களுக்காக வேதனையளிப்பதாக உள்ளன. தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமா அத், மும்பையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் அகில இந்திய முஸ்லிம் மகிளா அந்தோளன், அவாஸ் -இ -நிஸ்வான் – மும்பை மற்றும் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சட்டவாரியம் – லக்னோ, இந்தியாவின் சிறிய நகரங்களில் செயல்படும் சிறு குழுக்கள் ஆகியவை எல்லாம்  நம்பிக்கை மற்றும் சட்டம் ஆகியவற்றின் ஆணாதிக்க காரணிகளை எதிர்க்கின்றன.  இந்த சூழலில் ஆமினா வதூதின் வருகை மற்றும் உரையானது இந்தியாவில் பெண்களிடையே இந்த விவகாரம் சம்பந்தமான உற்சாகமூட்டும் விவாதத்தை கிளப்பும்.

ஆமினாவதூதிற்கு மாற்றாக சிந்திப்பவர்கள் அவருடன் விவாதிக்க எப்போதுமே வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் இது அவரின் பேச்சுரிமையை பறிப்பதாக, எல்லோருக்கும் பழக்கமான அமெரிக்க ஏஜண்ட் என்று முத்திரைக்குத்தி அவரின் மதிப்பை குலைப்பதாக இருக்க முடியாது. அப்படி இருக்க கூடாது.

இரண்டாவதாக  காவல்துறை பல்கலைகழக விவகாரங்களில் கருத்துக்கள் சார்ந்த ஆலோசகர்களாக மாறிப்போனது குறித்து அதிர்ச்சியடைகிறோம். எம்மாதிரியான கருத்துக்கள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தலாம். இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது மாதிரியான ஆலோசனைகளை வழங்க தகுதியான நபராக காவல்துறை தன்னை கருதிக்கொள்கிறது. நிச்சயமாக இது காவல்துறையின் வேலையல்ல. மேலும் தெளிவாக இது காவல்துறையின் அபாயகரமான மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் விளையாட்டே.

இறுதியாக, சென்னை பல்கலைக்கழகத்தின்  “காவல்துறை எச்சரிக்கை” நோக்கிய மனோபாவத்தை அறிந்து அதே மாதிரி அதிர்ச்சியடைகிறோம். பல்கலைகழகத்தின் எல்லா துறைகளும் மிக திடமாக விவாதம் மற்றும் திறந்த உரையாடல் ஆகியவற்றை நோக்கி நிற்பதற்கு பதிலாக, நிர்வாகம் ஆமினா வதூதிற்கு தன் கதவுகளை அடைத்திருக்கிறது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்கலைகழக அறிவுப்பண்பாட்டின் மீது உவப்பான சமிக்ஞைகளை அனுப்பாது.

நாங்கள் காவல்துறையின் இம்மாதிரியான கல்வித்துறை தலையீட்டை வன்மையாக எதிர்ப்பதுடன், கல்வி சமூகத்தை அதன் சுதந்திரத்திற்காக அணி திரள அழைக்கிறோம்.

முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிலைப்படுத்துபவர்கள் ஆமினா வதூத் மற்றும் பிற முஸ்லிம் பெண்கள் குழுக்களின் இம்மாதிரியான செயல்பாடுகள் மற்றும் விவாதங்களில்  தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மாறாக அவர்களை சட்டவிரோதிகளாக பார்க்கக்கூடாது.

சென்னை பல்கலைக்கழகம் கல்வித்துறையின் கவுரவம், சுதந்திரம்,கண்ணியம் ஆகியவற்றை மீட்டெடுப்பதுடன் , ஆமீனா வதூதை பல்கலைகழகத்திற்கு மீண்டும் அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
————————————————————————————————-

Kaviko Abdur Rahman, Tamil Poet
Aniruddhan Vasudevan (Writer)
Abeedheen, Writer
Abilash Chandran, Poet
AD Bala, Journalist
Ahmed Faizal, Poet, Sri Lanka
Ambai ,Writer
Ameer Abbas (Film director)
Anandhi Shanmugasundaram, Social Activist
Prof. S. Anandhi
Dr. Arshad Alam, JNU, New Delhi
S. Arshiya, Writer
Abdul Haq Lareena, Poet, Sri Lanka
P.K Abdul Rahiman, University of Madras
A.P.M Idress, Writer, Sri Lanka
Anwar Balasingam, Writer
Dr. A. R. Venkatachalapathy, MIDS, Chennai
Dr. A.K. Ramakrishnan, JNU, New Delhi
Benazir Begam, Poet and Student Reporter, Dindugal
Chitra Jeyaram, Film Director and Producer, U.S
Cimimeena  (Social activist )
Devabira, Poet, Netherlands
V. Geetha, Feminist Historian and Writer, Chennai
Geetha Ilangovan, Film Maker
Geetha Narayanan, Research Scholar and Social activist
Dr. P.M. Girish, University of Madras
Gnani Sankaran, Writer, France
H.G. Razool, Poet
Hameed Jaffer, Writer
Prof. Hameem Mustafa, Nagercoil
Inba Subramaniyan, Poet
Indira Gandhi alangaram (Writer)
Jamalan, Writer
Professor Jeyashree venkatadurai
Dr. M. H. Illias, Jamia Millia Islamia, New Delhi
Kalaiarasan, Writer, Nether Land
Kalanthai Peer Mohamad, Writer
Kannan Sundaram,  Editor  & Publisher, Kalachuvadu
Kavitha Muralidharan, Journalist, Chennai
Kavin Malar, Writer and Journalist, Chennai
Keeranur Jakir Raja, Writer
Kombai S Anwar, FilKm Maker, Chennai
Ko.Sugumaran, Human Rights Activist, Pondichery
Kulachal Mu.Yoosuf, Writer & Translator
Kutti Revathi, Poet
Leena Manimekalai, Poet & Film Maker
Lenin Mathivanan, Writer, Sri Lanka
Leninsha Begam, Journalist, Chennai.
Living smile Vidhya, Poet
Manomani, Poet and Editor, Pudhuezhuthu
Manusyaputhiran, Writer and Editor, Uyirmmai Magazine
Meeran Mydeen, Writer
Mohammed Imdad, Social Activist, Sri Lanka.
Mujeeb Rehman, Writer
Megavannan (Social activist)
Malathi maithri (Poet, New Delhi)
Nirmala Kotravai, Feminist
Nisha Mansur, Poet
Dr. V. Padma (Mangai), Academician and Theatre person, Chennai
Dr. G. Patrick, University of Madras
H.Peer Mohammed, Writer
Prince entra Periyar, Social Activist
Thi. Parameswari  (Poet)
Dr. M. Priyamvada, University of Madras
Professor Premananthan (Delhi university)
Raji Kumarasamy, Social Activist
Dr. Ramu Manivannan, University of Madras
Rishan Sherif, Poet, Sri Lanka
Riyaz Kurana, Poet, Sri Lanka
Rafeek Ismail (Assistant Film Director)
Rajan kurai (Writer)
Sadakathulla Hasani, Editor, Al-Hindh, Madurai
Salma, Writer & Poet
Syed Buhari, Film Maker
Sharmila Seyyid, Poet, Sri Lanka
Shoba Shakthi, Writer, France
Shubashree Desikan, Journalist, Chennai
S. P. Udayakumar (Coordinator – People Movement of Anti-nuclear project at Kodankulam)
Sukirtha Rani, Poet
Senthilnathan (Editor Aazhi magazine)
Dr. Sunitha V, MCC, Chennai.
Shameem sheik (Social activist, Bangalore)
Siddarth Kandasamy (Social activist)
Tajdheen, Poet
Tharmini, Poet
Poet Thilagar, Sri Lanka
Thamayanthi (Social Activist, Sri Lanka)
Tamilpen Vilasini (Social Activist)
Vaa. Manikandan, Poet
Venkatesh Chakravarthy, Film Critique
Yatheendra (Political Critique, Sri Lanka)

முதல் பதிவு: களந்தை பீர் முகம்மது

போர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..?

8 மே

பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தையும் பலவிதமான உயிரினங்களையும் “குன்” (ஆகுக!) எனும் ஒற்றை சொல்லில் உருவாக்கி, தன் கட்டளையின் கீழ் வைத்தும் நிர்வகிப்பதாக கூறிக் கொள்பவன் நிச்சயமாக வல்லமைமிக்கவனாகவும், நம் அனைவரின் கற்பனைக்கு எட்டாத அளவு ஞானம் உள்ளவனாக இருக்க வேண்டும். அத்தகைய சர்வ வல்லமைமிக்க ஆற்றல் தன்னால் படைக்கப்பட்ட படைப்பினத்தில் இருந்த ஒரு மிகச்சிறிய அற்ப மனித கூட்டத்தை கட்டுப்படுத்த அல்லது அழிக்க, போர்வியூகம் அமைத்து, கையில் வாள் ஏந்திய மலக்குகளை குதிரையில் ஏற்றி, முஹம்மது நபிக்கு ஆதரவாக போரிட போர்க்களங்களில் இறக்கினான். என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
புகாரி ஹதீஸ் -4118
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்ற போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனி வந்ததால் கிளம்பிய புழுதியை (இப்போது கூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
புகாரி ஹதீஸ் -2813
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி 4 அல்லது 5ஆம் ஆண்டில் நடந்த) அகழ் போரின் போது (போரின் முடிந்து) திரும்பி வந்து ஆயுதங்களை கீழே வைத்து விட்டு குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) தமது தலையை புழுதி மூடியிருக்க வந்தார்கள். நபி (ஸல்) அவர்களை நோக்கி நீங்கள் ஆயுதத்தை கீழே வைத்து விட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை கீழே வைக்கவில்லை என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள் என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதோ இங்கே ! என்று பனூ குறைழா ( என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்கும் இடம்) நோக்கி சைகை காட்டினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதரும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்
(புகாரி 2813,4117,4118).
அசூரர்களை அழிக்க கடவுளர்களும், தேவர்களும் பலவிதமான சிறப்பு ஆயுதங்களுடன் போரிட்டதாக கூறும் இந்துமத புராண கட்டுக்கதைகளை விட சிறுபிள்ளைத்தனமானது. ஏனெனில் அவைகளில் காண்பிக்கப்படும் அசூரர்கள் பலவிதமான மாயசக்தி கொண்டவர்கள், அவர்களது கடவுளர்களுடன் நேரடியாக போரில் ஈடுபடும் அளவுக்கு வல்லமையுடையவர்கள். அசூரர்கள் எனப்படுபவர்கள் சராசரி மனிதர்களில்லை.
நபி (ஸல்) அவர்களின் எதிரிகள் அபூஜஹல் மற்றும் அவனுடய கூட்டத்தினரை பலவாறு சபிக்கறான். சவால் விடுகிறான். உடன்படிக்கை செய்து கொள்கிறான் (குர் ஆன் 8:56,57,58,61, 9:4). வேறு வழியில்லாமல் போருக்கு வியூகம் வகுக்கிறான் (குர் ஆன் 4:101, 102, 103, 104, 8:60). ஆயிரக்கணக்கில் மலக்குகளை அனுப்பி வாளெடுத்து போர் புரிய வைக்கிறான் (குர் ஆன் 3:124, 125, 8:9).
உங்களுடைய ரப்பிடத்தில் நீங்கள் பாதுகாவல் தேடிய பொழுது தொடர்ந்து அணிவகுத்து முன்னே) வரும்படியான ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு நிச்சயமாக நான் உதவி செய்பவனாக இருக்கிறேன் என்று உங்களுக்கு அவன் பதிலளித்தான்.
(குர்ஆன் 8: 9)
உம்முடைய ரப்பு மலக்குகளிடம், நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். எனவே முஃமின்களை நீங்கள் உறுதிப்படுத்தங்கள். காஃபிரானவர்களின் இதயங்களில் திகிலை விரைவில் போடுவேன்; ஆகவே கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள் அவர்களிலிருந்து ஒவ்வொரு கணுவையும் வெட்டுங்கள் என்று அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)
(குர்ஆன் 8:12)
(பத்ருப்போரில்) அவர்களை நீங்கள் வெட்டவில்லை எனினும் அல்லாஹ் வெட்டினான். (மண்னை அவர்களின் மீது) நீர் எறிந்த போது (அதை நபியே) நீர் எறியவில்லை எனினும் அல்லாஹ் எறிந்தான்…
(குர் ஆன் 8:17)
1000 அல்லது 3000 அல்லது 5000 போர் அடையாளம் உள்ள மலக்குகளை அல்லாஹ் அனுப்பியதாகவும் ஹதீஸ்களிலும் காணப்படுகிறது

புகாரி ஹதீஸ் -3995
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், இதோ ஜிப்ரீல்! போர்த்தளவாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை) ப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள்.
முஹம்மது நபி அவர்களின் எதிரிகள் எவ்வித சிறப்பு சக்திகளும் இல்லாத நாகரீகமறியாத மிகச் சாதாரண மனிதர்கள். சில ஆயிரங்களில் மட்டுமே எண்ணிக்கை கொண்டவர்கள். அவர்களிடம், வாள், அம்பு, ஈட்டி, கற்களைத் தவிர எந்த சிறப்பு ஆயுதங்களும் கிடையாது. குதிரைகள், ஒட்டகங்களைத் தவிர எந்த வாகன வசதியும் கிடையாது. மேலும் இன்று இஸ்லாமுக்கு எதிராக உள்ளவர்களின் எண்ணிக்கையில் மிக சொற்பமானவர்கள். இன்றுள்ளது போல எவ்வித தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியும் அவர்களுக்கு கிடையாது.
எதிரிகளுடன் போர் புரிய உற்சாகப்படுத்துகிறான்,

தங்களுடைய சத்தியங்களை முறித்து (நம்) ரஸூலை (ஊரைவிட்டு) வெளியேற்ற எண்ணிய கூட்டத்தாரிடம் நீங்கள் போர் புரிய வேண்டமா? அவர்கள் (தாம்) முதன் முறையாக உங்களிடம் (போரைத்) துவக்கினர்; அவர்களுக்கு அஞ்சுகறீர்களா? அல்லாஹ்–அவனே அஞ்சுவதற்கு மிகத் தகுதியானவன்- நீங்கள் (உண்மையான) முஃமின்களாக இருந்தால்.
(குர் ஆன் 9:13)

புஹாரி ஹதீஸ் : 3992
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, உங்களிடையே பத்ருப் போரில் கலந்து கொண்டவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள் என்றோ அல்லது அதுபோன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவ்வாறு தான் வானவர்களில் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்) என்று கூறினார்கள். இந்த ஹதீஸை பத்ருப் போரில் கலந்து கொண்டவரான ரிஃபஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரகீ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் பின் ரிஃபஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

போர் புரிய வராதவர்களை எச்சரிக்கிறான் (குர் ஆன் 9:39,81,83,90,93–97), சபிக்கிறான் (குர் ஆன் 8:16, 9:94–97). வெற்றி பெற்றவுடன் மகிழ்ச்சியால் திளைக்கிறான். போரில் கைப்பற்றிய பெண்கள் மற்றும் இதர பொருட்களை பங்கு பிரித்து தருகிறான் (குர் ஆன் 48:15). முஹம்மது நபி அவர்களின் படை புறமுதுகிட்டால் எச்சரிக்கிறான், சபிக்கிறான்.
(அல்லாஹ்வின்) ரஸூல் உங்களுக்கு பின்னாலிருந்ருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க எவர்பக்கமும் நீங்கள் திரும்பிப்பார்க்காமல் விரண்டோடிக் கொண்டிருந்ததை (நினைத்துப்பாருங்கள்) எனவே (நீங்கள் ரஸூலுக்கு கொடுத்த) துக்கத்திற்கு பகரமாக (தோல்வி எனும்) துக்கத்தை உங்களுக்கு பிரதிபலனாகக் கொடுத்தான்…
(குர் ஆன் 3:153)

முஹம்மது நபி அவர்களின் மனைவியருக்கிடையே ஏற்படும் சக்களத்தி சண்டையை பஞ்சாயத்து செய்கிறான். யாரும் எந்த கேள்வியும் கேட்கக் கூடாதென்பதற்காக நபியே உம்மை படைக்கவில்லையென்றால் இந்த பிரபஞ்சத்தையே படைத்திருக்க மாட்டேனென்றும், நீரே இறுதித் தூதர் என்றும் பாதுகாப்பளிக்கிறான். யாராவது உயிர், ரூஹ் என சிக்கலான கேள்வியை கேட்டால், வஹி வரும் வேளையில் இது போன்ற கேள்விகள் வஹியை தடுத்து விடும் தேவையற்ற வீண் கேள்விகளால் உங்களது முன்னோர்கள் அழிந்ததைப் போன்று நீங்களும் அழிய வேண்டாம் என எச்சரிக்கிறான். (குர் ஆன் 2:108).

இவைகளை பார்க்கும் போது உங்களுக்கு புரிவது என்ன? ஊதிப் பெருக்கப்பட்டிருக்கும் அல்லாஹ் என்பதன் தகுதிக்கு பொருத்தமானவைகளா இவை? குதிரையில் ஏறி, வாளெடுத்து, போர்புரிந்து வெட்டிச் சாய்த்துத்தான் சக மனிதர்களிடமிருந்து தனக்கு அதி முக்கியமான முகம்மதை காக்க முடியும் என்றால் (முகம்மதைப் படைக்கவில்லை என்றால் பிரபஞ்சத்தையே படைத்திருக்க மாட்டேன் என்பதைக் கவனிக்கவும்) அவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் கோள்களையும் விண்மீன்களையும் இன்னும் அனைத்தையும் குன் என்று சொல்லி படைக்கும் தகுதி பெற்ற அந்த அல்லாஹ்வை எண்ணி சிரிக்கத் தோன்றுகிறதா?

தஜ்ஜால்

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2

பழைய வேதங்களின் நிலையும் குர் ஆனின் குழப்பமும்

சந்திரனும் பிளந்து விட்டது

பழைய வேதங்களின் நிலையும், குரானின் குழப்பமும்

1 நவ்

 

 

குர்ஆன் என்ற புதிய வேதத்தின் தேவை ஏன்? இஸ்லாமிய கொள்கைகளின்  அடிப்படை குர்ஆன். எனவே  இக்கேள்வியை இஸ்லாம் என்ற புதிய வழிமுறை ஏன்? எனவும் கேட்கலாம். இவ்வினாவிற்கு பதில்

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பிவைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; …

(குர்ஆன் 2:213)

அல்லாஹ்வால் இறக்கப்பட்ட  தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜீல் ஆகிய மூன்று வேதங்களும் மனிதர்கள் தங்கள் அற்பத் தேவைகளுக்காக மாற்றிவிட்டனர் என்பதே அல்லாஹ்வின் பொதுவான குற்றச்சாட்டு. அல்லாஹ்வின் ஆணைகளை மாற்றுவது, அவனது ஆணைகளை ஏற்க மறுப்பதை விட கொடியது, அவனது கட்டளையை தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி நம்பிக்கையாளர்களிடையே அதை பரவச் செய்வது, நம்பிக்கையாளர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம் ஆகும்.

…இவர்களில் ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்று, பிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டே) அதை மாற்றி விட்டனர்.

(குர்ஆன் 2:75)

 

எனவே, தங்களின் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதி பிறகு அதன் மூலம் (உலகின்) சொற்ப கிரையத்தை வாங்குவதற்காக, இது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்று வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு; மேலும் அவர்களின் கரங்கள் (வேதத்தை மாற்றி) எழுதியதன் காரணத்தால் அவர்களுக்கு வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு …

(குர்ஆன் 2:79)

எனவே நான்காவது வேதமாக குர்ஆன் முஹம்மது அவர்களின் மூலமாக மனித குலத்திற்கு அருளப் பெற்றது. அல்லாஹ், முஹம்மது அவர்களுடன் நிகழ்த்திய உரையாடலின் முழுமையாக பாதுகாக்கப்பட்ட எழுத்து வடிவமே  குர்ஆன். இதை பாதுகாக்கும் பொறுப்பை தானே ஏற்கிறான்.

 

நிச்சயமாக நாம்தாம் இந்த திக்ரை (நினைவூட்டல்) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.

(குர்ஆன் 15: 9)

                இது அல்லாஹ், மனிதனுக்கு தரும் உறுதிமொழி.    தனது வேதத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்.

 

…அன்றியும், அல்லாஹ்வுடைய வாக்குகளை மாற்றுகிறவர் (எவரும்) இல்லை.

(குர்ஆன் 6:34)

நம்பிக்கையாளர்களின் பண்புகளைக் குறிப்பிடுகையில்,

இன்னும் அவர்கள் எத்தகையவர்கள் என்றால் உமக்கு அருளப் பெற்ற(வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் …

(குர்ஆன் 2: 4)

“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

(குர்ஆன் 3:84)

தனது முந்தைய வேதங்களைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்,

நிச்சயமாக நாம்தாம் ‘தவ்ராத்’தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …

(குர்ஆன் 5:44)

நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; “நிச்சயமாக பூமியை (ஹாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

  (குர்ஆன் 21:105)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக  இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு  நேர் வழிகாட்டியாகவும்  நல்லுபதேசமாகவும்  இருந்தது.

 (குர்ஆன் 5:46)

அல்லாஹ், தன்னுடைய வேதங்களைப்பற்றி கூறுவதை சுருக்கமாக  பார்ப்போம் :

  • குர் ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது
  • குர் ஆன், தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் எல்லாம் அல்லாஹ் இறக்கிய வேதங்கள்  ஆகும்
  • குர் ஆனுக்கு முன்பாக இறக்கப்பட்டத தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜீல் ஆகிய      மூன்று வேதங்களும் மனிதர்களால் மாற்றப்பட்டது அல்லது திருத்தப்பட்டது.
  • முந்தைய வேதங்களாகிய தவ்ராத், ஜபூர், இன்ஜீல் அதிகாரபூர்வமாக       அல்லாஹ்      தான் இறக்கினான் என்று முஸ்லீம்கள் ஏற்க வேண்டும், குர் ஆன் பாதுகாக்கப்பட்டு   இருப்பதால், அதை மட்டும் தான் நம்பவேண்டும்.
  • அல்லாஹ்வின் வார்த்தைகளை யாரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது.

 

இவைகளிலிருந்து நாம் சில முடிவுகளை அடையலாம்

 

குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி கூறிய அல்லாஹ், மற்ற வேதங்களை  பாதுகாக்காமல் கோட்டை விடுவானா? குர்ஆனின் வசனங்கள் முந்தின வேதங்களை அல்லாஹ் பாதுகாக்க தவறியதை உறுதி  செய்கின்றன. அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வேதத்தை மனிதர்கள் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்ததாகவும், இறுதியில் குர்ஆனைப் பாதுகாக்க  உறுதிமேற் கொண்டதாக கூறுவது முட்டாள்தனமாக  தெரியவில்லையா?

குர்ஆன் பாதுகாக்கப்பட்டது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்ற முடிவை நீங்கள் கூறினால், இதன் பொருள், அல்லாஹ் பலவீனமானவன் அல்லது அவன் ஒரு அநீதிக்காரன். தனது முந்தைய வேதங்களை திருத்தப்பட விட்டு, குர்ஆனை மட்டும் பாதுகாத்த அல்லாஹ்வின் செயலுக்கு, இது தான் விளக்கமாக அமையும்.

அல்லது

அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்கலாம் அதனால்தான் அவனால் தன் முந்தைய வேதங்களை பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால்தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.

அல்லாஹ்வின் முந்தைய மூன்று வேதங்கள் திருத்தப்பட்டிருக்கும் போது, தன் கடைசி வேதமான குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்று எப்படி நம்புவது? பலவீன மனிதர்கள், தன் முந்தைய வேதங்களை திருத்தும் போது, அதை தடுக்காமல் சும்மா இருந்த அல்லாஹ்,  பிந்திய வேதமாகிய குர்ஆனை மட்டும் பாதுகாத்தான் என்று ஒரு மனிதன் நம்புவது எப்படி? ஏனெனில் முந்தை வேதங்களை பாதுகாக்கவில்லை என்பது அல்லாஹ்வின் வாக்குமூலத்திலிருந்து தெளிவாகிறது.

அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்,  வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் மற்ற வேதங்களும் கறைபடாமல் பாதுகாக்கப்பட்டவைகளே என்று கூறலாம். முந்தின வேதங்களை பாதுகாக்க இயலாதவனென்றால் குர்ஆன் உட்பட எதனையும் அவனால் பாதுகாக்க முடியாது என்றுதான் கூற முடியும். 

அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்,  வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் நேர்வழியும் பேரொளியும் இருந்த தவ்ராத்தையும், ஜபூரையும் மற்றும் நேர்வழியும் ஒளியும் இருந்த இன்ஜீலையும் பாதுகாக்கத் தவறியது ஏன்?

முதலில் இறக்கப்பட்ட வேதங்கள் மனிதனால் களங்கப்பட்டது அல்லது அல்லாஹ்வினால்  சரிவர பாதுகாக்கப்படாத காரணத்தால் இரண்டாவது வேதம் இறக்கப்பட்டது. இவ்வாறாக நான்காவது வேதம் வரை தொடர்கிறது. சர்வவல்லமை மிக்கதாக கூறிக் கொள்ளும் அல்லாஹ்விற்கு தன்னுடைய வேதம், மனிதர்களால் மாற்றத்திற்குள்ளாகும் செய்தி முன்பே தெரியாதா?

அல்லாஹ்வுடைய படைப்புகளின் ஒவ்வொரு அசைவும் அல்லாஹ் நாடியவாறு மட்டுமே நிகழ்கிறது அது அவனுக்கு மிக எளிதானதுதான். அல்லாஹ்வும் தன் உரையாடல்களில் இதை பல இடங்களில் குறிப்பிடுகிறான். நாளை மறுமையில் மனிதன் அடையும் வெகுமதிகளும் தண்டனைகளும் கூட அவன் நாற்பது நாட்கள் கருவாக இருக்கும் பொழுதே முடிவு செய்யப்படுகிறது என்பதை முன்பே பார்த்தோம். இப்பிரபஞ்சத்தின் படைப்பின் ஆரம்பம் முதல் மறுமையின் முடிவுக்கு பின்னர் நிகழ்வதையும் நிர்ணயம் செய்து விட்டதாக கூறிக் கொள்பவன், வேத வசனங்களை மனிதர்கள் மாற்றி விட்டதாக புலம்புவது ஏன்? இது யாருடைய குற்றம்?

குர்ஆனின் (6:34) வசனம் முரண்பாடுகளுக்கு மேலும் ஒரு உதாரணம்.  இதன் அடிப்படையில் நாம் மேலும் சிலமுடிவுகளை அடையலாம்.

ü அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது என்ற வசனத்தை ஏற்பதென்றால் தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகியவை நிச்சயமாக அல்லாஹ்வின் வேதங்களாக இருக்க முடியாது. தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகிய வேதங்கள் தான் அருளியதாக அல்லாஹ் கூறவது வடிகட்டிய  பொய்.

ü முந்தின வேதங்கள் மாற்றப்பட்டதை அல்லாஹ்வே ஒப்புக் கொண்டு விட்டதால், தனது வார்த்தைகளை எவரும் மாற்ற முடியாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவது அர்த்தமற்றது. குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டதாக இருக்கலாம். எனவே ஐந்தாவதாக புதிய வேதம் வரலாம்(?)

ü “அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது” என்ற வசனம் குர்ஆனை மட்டுமே குறிப்பிடுகிறது என்று விளக்கம் கூறினாலும் குழப்பம் தீரவில்லை. அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்க வேண்டும் அதனால்தான் அவன் முன்பு கூறிய வார்த்தைகளை (வேதங்களை) மனிதர்கள் சுலபமாக மாற்றி விட்டனர். அவைகளை அவனால் பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால் தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை எவராலும் மாற்ற முடியாது என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.

ü அல்லாஹ் சர்வ வல்லமையுடையவனே. மனிதர்களை சோதனை செய்யவே தனது வேதங்களை மாற்ற அனுமதித்தான் என்று  வாதிட முடியாது. ஏனென்றால் இவ்வாதம் விதியை அடிப்படையாகக் கெண்டது. தனது பாதையை சுயமாக தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த விளக்கத்தை ஏற்கமுடியும். விதியைப் பற்றி கூறும் வசனங்களை புறக்கணித்தால் குர்ஆனின் பெரும் பகுதி வேடிக்கையாகிவிடும். (விதியின் குழப்பத்தைப்பற்றி நாம் முன்பு பார்த்ததை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளவும்)

மனிதனின் இந்த துரோகச் செயல்களை அல்லாஹ்வினால் முன்னரே அறிந்து கொள்ள முடியவில்லை என  ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்,

ஒருமுறை தவறு நிகழ்ந்தவுடன் அதை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறு இறுதிவரை தொடர்கிறது. இறுதியில் பாதுகாப்பாக  வெளியிட்டதாக கூறும் குர் ஆனின் நிலை வேடிக்கையானது. முழுமையான எழுத்து வடிவம் பெறாத ஒரு மொழியில், எழுதவும் படிக்கவும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்கும் நிலையில் இருந்த ஒரு எழுத்தறிவற்றவரின் வாயிலாக வெளியிட்டான். அதையாவது ஒழுங்காக செய்தானா? என்றால் அதுவும் கிடையாது.

மறதியாளன் என தன்னால் வர்ணணை  செய்யப்பட்ட  மனிதனின் இதயத்தில்(?)  வைத்து  அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சென்றதாக கூறுகிறான்.

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால், அதை விடச் சிறந்ததை அல்லது அதுபோன்றதை நாம் கொண்டு வருவோம் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

(குர்ஆன் 2:106) 

முஹம்மதிற்கு மறதி ஏற்படுத்தப்பட்டால் அதேபோன்ற வசனம் அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். இவ்விடத்தில் மறந்த அந்த வசனத்தை மீண்டும் மிகச்சரியாக நினைவூட்ட முடியும் என்று அல்லாஹ் உறுதியிட்டு கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தான் கூறியதை மிகச்சரியாக மீண்டும்  வெளிப்படுத்தும் தன்மையில்லததால், அதைப்போன்ற அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். அவனிடத்தில் இருந்த “மூலப்பதிவேடு” என்ன ஆனது? இத்தகைய நினைவாற்றல் உள்ளவனின் குற்றச்சாட்டை எப்படி ஏற்பது?

எதற்காக மறதி ஏற்படுத்தப்பட வேண்டும்? சிறந்த வசனத்தால் ஈடுசெய்வதற்காகவென்றால் முதலில் கூறியது ‘சொதப்பலா’?. அவ்வாறு நீக்கப்பட்ட குர்ஆன் வசனம் பற்றிய ஹதீஸைப் பாருங்கள்,

புகாரி ஹதீஸ்4095

அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள்கூறியதாவது :

பிஃரு மஊனாவில் தம்தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் முப்பது நாள் காலை(த்தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா,ரிஅல், தக்வான்(பனூ) லிஹ்யான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள்கூறுகிறார்கள், ஆகவே இறைவன் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன்வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதி வந்தோம். பின்னர் (இறைவனால் அந்தவசனம்) நீக்கப்பட்டுவிட்டது. (அந்த வசனம்,)

” நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்தான். நங்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள்  சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள் “.

நீக்கப்பட்ட இவ்வசனத்தின் தன்மையையும் கருத்தையும் கவனித்துப் பாருங்கள் சரியான உளறல் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

முஹம்மதிற்கு மறதி ஏற்பட்டால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். சஹாபாக்களுக்கு மறதி ஏற்பட்டால்?  ஏனென்றால் நபியின் காலத்தில் குர்ஆன் முழுமையாக தொகுக்கப்படவில்லை.

புகாரி ஹதீஸ் : 4986          

வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது

…எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அபுபக்ர் (ரலி) அவர்கள்., அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான் என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) ஆகவே, (மக்களின் கரங்களிலிருந்து) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை பேரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். …

 நபியின் மரணத்திற்கு பிறகு அரசியல் குழப்பங்கள் எல்லை கடந்திருந்த நிலையில் பல குழப்பங்களுக்கிடையே சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகே தன்னுடைய உரையாடல்களை தொகுக்கச் செய்கிறான். ஆவணங்களின் முக்கியத்துவத்தையும், அதற்கான சாட்சிகளின் முறையையும் (குர்ஆன் 2:282)  விவரிக்கவும், முஹம்மது அவர்கள், தன் எதிரிகளுக்கு எழுதிய (மிரட்டல்) கடிதங்களில் முத்திரை பதிக்க அறிவுறுத்திக் கூறியவனுக்கு, தன்னுடைய உரையாடல்களை மிகச்சரியான எழுத்து வடிவத்தில்  தன் தூதரின் வாழ்நாளிலேயே முத்திரையிட்டு இறுதிவடிவம் கொடுக்கத் தெரியவில்லை. ஆயிஷாவின் பாதுகாப்பிலிருந்த குர்ஆனின் அத்தியாயங்களின் பிரதிகளை கோழி, ஆடு (வாத்து, மாடு, ஒட்டகம், பூனை, நாய், முயல்) மற்றும் நெருப்பிற்கும் இறையாக்கிவிட்டான்.

புகாரி ஹதீஸ் :        4987  

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான் (ரலி) அவர்கள், அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகவே, ஹுதைஃபா (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களுடைய வேதங்களில்) கருத்து வேறுபாடு கொண்டது போல் இந்தச் சமுதாயம் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே! என்று கூறினார்கள். ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் ! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம் என்று தெரிவித்தார்கள். எனவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த குர்ஆனை பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), சயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான் (ரலி) அவர்கள் (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, நீங்களும் (அன்சாரியான) ஸைத் பின் ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் (வட்டார) மொழி வழக்குப் படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்குப்படியே இறங்கிற்று என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா (ரலி) அவர்கிடமிருந்த) அநதக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் அந்தப் பிரதியை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வான்றையும் ஒவ்வாரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

குர்ஆன் முஹம்மதின் காலத்திலேயே குழப்பமற்ற முறையில்  இறுதி வடிவம் பெற்றுவிட்டதென்றால், பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலீபா உஸ்மான்,  குர்ஆனை மீண்டும் தொகுக்க  அவசியம் ஏன்? தனது தொகுப்புடன் முரண்படும் மற்ற பிரதிகளை நெருப்பிலிட்டது ஏன்? குர்ஆனுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் முஹம்மது அவர்களின் மருமகன் கலீஃபா உஸ்மான். அவரும் ஒரு இறைத்தூதரோ? குர்ஆனை தொகுத்தவரைப்பற்றி முஹம்மதின் காதல் மனைவி ஆயிஷாவின் கருத்து,

(ஒரு இஸ்லாமிய தளத்திலிருந்து,)

Ibn Atheer in ‘Al-Nahayah’, Volume 5 page 80 stated:

حديث “اقتلوا نعثلا قتل الله نعثلا” تعني عثمان . وهذا كان منها لما غاضبته وذهبت إل مكة

The hadith “kill Nathal, may Allah kill Nathal” refers to Uthman. That happened from her when she got angry and went to Makka.

Al-Razi records in Al-Mahsol, Volume 4 page 343:

فكانت عائشة رضي الله عنها تحرض عليه جهدها وطاقتها وتقول أيها الناس هذا قميص رسول الله صلى الله عليه وسلم لم يبل وقد بليت سنته اقتلوا نعثلا قتل الله نعثلا

Aisha (may Allah be pleased with her) did her best to incite people against Uthman, and she used to say: ‘Oh people! This is the cloth of the Messenger of Allah (pbuh) still not ragged, while his Sunnah is ragged, kill Nathal, may Allah kill Nathal.’

(ஆயிஷா, மக்களை உத்மானுக்கு எதிராக நன்றாக தூண்டிவிட்டார், அவர்(ஆயிஷா) கூறுவார், “மக்களே அல்லாஹ்வின் தூதருடைய இந்த துணி கிழியவில்லை. ஆனால் அவரது சுன்னத்துகள் கிழிந்து விட்டது, காஃபிரைக்  கொல்லுங்கள் அல்லாஹ் (அந்த) காஃபிரைக் கொல்லட்டும்” என்பார்.)

ஆயிஷாவின் இந்த கருத்தின்படி குர்ஆனை தொகுத்த கலீஃபா உஸ்மான் ஒரு காஃபிர். இதே உஸ்மான் மரணத்திற்குப்பின் அப்பாவியானதும், புனிதரானதும் அவரது கொலைக்கு பழிவாங்க ஆயிஷா போர்க்கோலம் பூண்டதும் தனிக்கதை. குர்ஆனைத்  தொகுத்தவரின் இறுதிகாலம் மிக கேவலமானது. கொலை செய்யப்பட்ட அவரது உடல் தீண்டுவாரின்றி குப்பைகூழத்துடன் மூன்று நாட்கள் கிடந்தது. இறுதியில் யூதர்களின் திறந்தவெளிக் கழிப்பிடத்தில் அடக்கம் செய்யபட்டது. இது தண்டனையா? இல்லை வெகுமதியா?

பல அனுபவங்களுக்கு பின் மிகுந்த பாதுகாப்புடன் வெளியிடப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் இறுதி வேதத்தின் நிலையே இப்படியென்றால், முந்தின வேதங்களின் நிலையைப்பற்றி கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் முந்தின வேதங்கள் மற்றப்பட்டதாக புலம்புவதில் எவ்வித பொருளுமில்லை.

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குர்ஆனில் மட்டுமே முந்தின வேதங்கள் மனிதர்களால் களங்கமடைந்து விட்டதாகவும் அவைகளைப் பின்பற்றக் கூடாது என்ற செய்தி உள்ளது. தவ்ராதிலும், ஜபூரிலும் மனிதர்களின் கைவரிசை இருப்பதாக இதற்கு அடுத்து இறக்கப்பட்ட இன்ஜீலில் அப்படி எந்த செய்தியும் காணவில்லையே. தவ்ராதிலும், ஜபூரிலும்  திருத்தம் செய்து கொண்டதை இன்ஜீலின் காலத்தில் அல்லாஹ்வினால் அறிய முடியவில்லையா?

எந்த காலகட்டத்தில், எவ்வாறு, யாரால் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது என தெளிவாக குறிப்பிடுவதுதானே குற்றம் சாட்டும் முறை. மாற்றிவிட்டார்கள்…! மாற்றிவிட்டார்கள்…! மீண்டும் மீண்டும் ஒப்பரிவைப்பது ‘சின்னபுள்ளத்தனமா இருக்கிறது. 

முன்னுக்குப்பின் முரணாக தெளிவின்றி  பேசும் குர்ஆனின் குற்றச்சாட்டுகளை நம்புவது எப்படி?

சரி…  

அல்லாஹ் தன்னுடைய வேதங்களின் மூலம் மனிதர்கள் நேர்வழி  பெற ஏவுவது எதற்காக?

ஏதேனும் ஓர் ஊரை நாம் அழிக்க நாடினால் அதில் சுகமாக வாழ்பவர்களை (நேர்வழியை பின்பற்றுமாறு) ஏவுவோம். (ஆனால் அவர்கள் நேர்வழியை பின்பற்றாமல்) அதில் பாவம் செய்கிறார்கள்; எனவே (வேதனையைக் கொண்டுள்ள நம்முடைய) சொல் அதன் மீது உண்மையாகி அதனை வேரோடு அழித்து நாசமாக்கி விடுகிறோம்.

(குர்ஆன் 17: 16)

 இவ்வசனம் அல்லாஹ்வின் மனநிலையை உணர்த்த போதுமானது.  தன்னுடைய சொல்(விதி) எவ்வாறு நிறைவேறுகிறது என்பதைப் பற்றிய ஒரு வாக்கு மூலம்.  சுகமாக வாழும் மனிதர்களைக் காண சகிக்காமல், அவர்களை வேரோடு அழிந்து நாசமாவதைக் காண்பதற்காக நேர்வழியை ஏவுபவன் இறைவனா?  இதற்கு ஒரு வேதம் தேவையா?

 

தஜ்ஜால்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2

ஐன்ஸ்டினின் கடவுள் பற்றிய கடிதம்

21 அக்
வணக்கம் நண்பர்களே,
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்னும் மகாகவியாரின் சொற்களை உண்மையாக்க எங்கும் செல்லாமல் இணையத்தில் மட்டுமே எட்டுத் திக்கும் தேடினால் போதும் என்று சூழலில் வாழ்கிறோம். எனினும் இணையத்திலும் தமிழ் மொழிக்கு பிற நாட்டு நல்லறிஞர் சா(சூ)த்திரங்கள்  தமிழாக்கம் செய்து அளிப்பது தமிழர்களின் கடமை.அப்போது மட்டுமே தமிழில் தேடும் தமிழர்களுக்கு பயன் தரும்.
அந்த வகையில் அறிவியலாளர் திரு ஐன்ஸ்டின் அய்யா அவர்களின் ஒரு கடிதம் 4 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது என்ற செய்தியைப் படித்தவுடம் அக்கடிதத்தில் என்ன உள்ளது ,அத்னை தமிழாக்கம் செய்து நம் சொந்தங்களுடன் பகிர்ந்தால் என்ன என தோன்றியதின் விளைவே இப்பதிவு.
ஐன்ஸ்டின் அய்யா குறித்து அறியாதோர் இருக்கவே முடியாது என்னும் அள்வுக்கு அறிமுகம் தேவையற்றவர் எனினும் நியுட்டனின் ஈர்ப்பு  விசைக்கு மாற்றுக் கொள்கை[ பொது சார்பியல் கொள்கை General theory of relativity] கண்டுபிடித்தவர்.ஒளியின் வேகம் ஒரு மாறிலி[சிறப்பு சார்பியல் கொள்கை Special relativity] என்பதும், பருப் பொருளின்[matter] இன்னொரு பரிமாணமே ஆற்றல்[E=mc^2] என்பதும் இவரின் முக்கிய கொள்கையாக்கங்கள் ஆகும்.

 

யூதராக இருந்தாலும் யூத இன மேட்டிமை மீது கடுமையான விமர்சனம் வைத்த மனித நேயர். 

 

I should much rather see reasonable agreement with the Arabs on the basis of living together in peace than the creation of a Jewish state. …the essential nature of Judaism resists the idea of a Jewish state with borders, an army, and a measure of temporal power….I am afraid of the inner damage Judaism will sustain – especially from the development of a narrow nationalism within our own ranks…
— Einstein speech in New York, 1938.
 
அதே சமயம் யூதனாக இருந்தும் யூத மதத்தை விமர்சிக்கிறாயா என யூதர்கள் யாரும் அவர் தலைக்கு விலை வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்க விடயம் ஆகும்.
இது அறிவியல் பதிவு அல்ல என்பதால் ஐன்ஸ்டின் அய்யா அவர்களின் ஆய்வுகளைப் பற்றி விளக்க தேவையில்லை.  அவர் கடிதம்  குறித்து திரு ரிச்சர்ட் டாக்கின்ஸ் அய்யாவின் இணைய தளத்தில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் முழுதும் அளிக்கிறோம்.[கடிதத்தின் மொழியாக்கம் மட்டும் சிவப்பு எழுத்துக்களில் இருக்கும்]
******
ஐன்ஸ்டின் கடவுள் பற்றி கூறினார் என மதவாதிகளின்  பரப்புரைகளுக்கு  ஒருவகையில் அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. ஐன்ஸ்டினும் கடவுள் என்பதை ஒரு கவிதை உருவகமாக பலமுறை கருத்து வெளியிட்டதன் ஒர் எதிர்பாரா ,விரும்பத் தகாத விளைவே எனலாம்.
ஆகவே ஐன்ஸ்டின் கடவுளை நம்பினார் என்னும் மதவாதிகளின் விளம்பர பிரச்சாரத்தை முழுதும் முறியடிக்க, இக்கடிதத்தை முற்றிலும் படித்து விளங்குவதின் மூலம் செய்ய இயலும்.இக்கடிதம் உள்ளிட்ட இதர ஆவண‌ங்கள் ஐன்ஸ்டின் ஒரு எதார்த்த இறை மறுப்பாளர் என்பதை தெளிவாக்குகின்றன.
இக்கடிதம் 2008ல் லண்டனில் ஏலத்திற்கு வந்த போது நான்(ரிச்சர்ட் டாக்கின்ஸ்) எனது அமைப்பிற்காக எடுக்க முயன்றேன்,அப்போதைய  விலை இப்போதைய ஏல தொடக்க விலை 3 மில்லியன் டாலரை[15 கோடி ரூபாய்] விட குறைவாக இருந்தாலும் என்னால் முடியவில்லை.
ஆகவே இக்கடிதத்தை ஏலத்தில் எடுப்பவர்கள் அதன் ஆங்கிலம்& இதர  மொழியாக்கங்களுடன்[ மூலம் ஜெர்மன் மொழி] உலக முழுதும் பரப்ப வேண்டும் என எதிர்பார்க்கிறேன். 
**********
இந்த தனிப்பட்ட கடிதம் அனைவருக்கும் பகிர்ந்த பொதுவான விடயம் இல்லை என்றாலும் கடவுள், மதம் மற்றும் இனம் சார் சிந்தனை போன்றவைகளின் மீதான‌ ஒரு தலை சிறந்த சிந்தனாவாதியின்  கருத்து என்ற வகையில் அறியத் தக்கதே.
இந்த ஞானியின் கடவுள்,மதம் மீதான தனிப்ப‌ட்ட ,வெளிப்படையான கருத்துகளை வெகு சிலரே சரியாக அறிந்து இருக்க முடியும் என்பதால் இக்கடிதம்  அக்கருத்துகளை ஒரு ஆவணமாக்கி அனைவருக்கும் அளிக்கிறது.
இக்கடிதத்ம் ஒரு நண்பருக்கு தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டதால் ஐன்ஸ்டினின் உள் மனதின் உண்மையான  கருத்தை உறுதியாக தொடர்பு படுத்துகிறது.இக்கடிதத்தின் கருத்துகள் வாழ்வின் நோக்கம் பற்றிய  பல அடிப்படை கேள்விகளின் பதிலை நோக்கிய நெடுநாள் தேடலை எடுத்து இயம்புகிறது.
வாழ்வின் நோக்கம் பற்றிய உண்மைத்தேடல் உடையவர்களுக்கு இக்கடிதம் ஒரு சிறப்பு அறிமுக விளக்கமே. 
இக்கடிதம் ஐன்ஸ்டின் அபோது பணியாற்றிய பிரின்ஸ்டன் பல்கலைக் கழக கடித குறிப்பேட்டில் ஜன்வரி 3,1954ல் பிரபல தத்துவவியலாளர் எரிக் குட்கிண்ட்[Eric B. Gutkind] அவர்கள்க்கு ஜெர்மன் மொழியின் எழுதப்பட்டது. 
இக்கடிதம் திரு குட்கிண்ட்டின் புத்தகமான  .Choose Life: The Biblical Call to Revolt”மீதான விமர்சனம் எனலாம்.கடிதத்தின் சில பகுதிகள் மட்டுமே ஆங்கிலத்தில் [1954ல் ஜோம் ஸ்டாம்பர்க் ஆல்]மொழியாக்கம் செய்யப்பட்டு இணையத்தில் கிடைக்கிறது.
 
Key Passages:
 
கடந்த சில நாட்களாக உங்கள் புத்தகம் பற்றி பரபரப்பாக பல விட‌யங்கள் அறிய‌ முடிந்தது. உங்கள் புத்தகத்தின் பிரதியை எனக்கு அனுப்பியதற்கு நன்றி.
புத்தகம் படித்த‌ உடனே எனக்கு தோன்றியது  நம்மிடையே உள்ள ஒற்றுமைகள்தான். சான்றுகள் மீதான எதார்த்த அணுகுமுறை கொண்டு தனிப்பட்ட ,மனித சமூகத்தின் வாழ்வை ஆய்வதுதான் அந்த ஒற்றுமை எனலாம்.

கடவுள் என்பது மனித பலகீனத்தின் உருவாக்கமாகவும்,வெளிபாடாகவும் மட்டுமே எனக்கு புலப்படுகிறது.பைபிள்[மத புத்தகம்] என்பது மதிப்புக்குறிய‌ ஆனால்  பழைய புராண ,குழந்தைகள் கேட்கும்அம்புலிமாமா கதைகளின் தொகுப்பு மட்டுமே.

எவ்வளவு நுட்பமான ,தர்க்கரீதியான தத்துவ விளக்கமும் இக்கருத்தை மாற்ற முடியாது.இம்மாதிரி நுட்பமான தத்துவ விளக்கங்கள் விளக்குபவரின் இயல்புக்கேற்ப ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன தவிர அந்த புத்தக்த்தின் எழுதப்பட்டுள்ளவைக்கு தொடர்பற்றவை.

 

[அதாவது மத புத்தகத்தில் அறிவியல்,உருவகமாகப் பார்க்க வேண்டும், சூழலுக்கு பொருத்தி பார்க்க வேண்டும்,அந்த கருத்து  அப்போது மட்டுமே, …இந்த மாதிரி..சார்வாகன்]

.என்னைப் பொறுத்தவரை யூதமதமும் பிற மதங்கள் போல பழைய அம்புலிமாமா கதைகள்,மூட நம்பிக்கைகள் அனைத்தையும் பழைய கள்ளை புதிய புட்டியில் ஊத்தி கொடுப்பது போல்தான்… .
 
யூதர்களின் ஒருவன் என மகிழ்சியுடன் நான் அறிவித்துக் கொண்டாலும், அவர்களோடு ஒத்த சிந்த்னை கொண்டு இருந்தாலும், பிற [இன,மத] மக்களை விட யூதர்களிடம் வித்தியாசமாக எந்த மேம்பட்ட குணமோ தகுதியோ  இல்லை எனவே கூறுகிறேன்.

என் அனுபவத்தில் இருந்து இப்போதைய சூழலில் தங்களை மோசமான நிலைக்கு ஆளாத‌ அளவுக்கு போதிய பாதுகாப்பு சக்தியை கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தவிர [கடவுளால்]தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

 
 நீங்கள் யூத இன மேட்டிமை என பெருமை பாரட்டுவதும். அதனை வெளியில்  மனிதன்,உள்ளே யூதன் என இரு எல்லைகளிலும் நின்று பாதுகாப்பதும் என்னை வருத்தத்திற்கு ஆளாக்குகிறது.

ஒரு மனிதனாக செய்த வினைகளின் பலனுக்கு விலக்கு கோருவதும் ,இல்லையெனில் ஏற்போம் என்பதும்,ஒரு யூதனாக ஓரிறைக் கொள்கையின் உயர்வு என தூக்கிப் பிடிப்பதுமே ஆகும். 

[அதாவது யூதர்கள் தாங்கள் 2000 வருடம் துன்புற்றோம் என்பதும்,கடவுள் இந்த தேசத்தை எங்கள்க்கு கொடுத்தார் என்ற வாதங்கள்  பாலஸ்தீன ஆக்கிரமிப்பை, துன்புறுத்துவதை நியாயப் படுத்தாது என்கிறார். அவர் இஸ்ரேல் என்னும் நாடு உருவானதை எதிர்த்தார்,பாலஸ்தீனர்களோடு யூதர்கள் ஒரே நாடாக ஒன்றுபட்டு வாழவே விரும்பினார்.கடிதத்தின் சில பகுதிகள் மட்டுமே கிடைத்தது என்பதால் விளக்கம் அவசியம் ஆகிறது]

குறிப்பிட்ட காலத்திற்கான காரண காரியம் முழுமையானது அல்ல,இதனை தத்துவமேதை ஸ்பினோஜா மிக அருமையாக் முதன்முதலில் விளக்கினார்

[அதாவது மனித சமூக வரலாற்றை ஆதியில் இருந்து பார்த்தால் மட்டுமே மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக நாகரிகம் அடைந்ததும்,கொள்கை கோட்பாடுகள் வரையறுத்த வரலாறும் தெரியவரும்.பாருச் ஸ்பினோசா[Baruch Spinoza and later Benedict de Spinoza (24 November 1632 – 21 February 1677) ] எனப்படும் யூத_டச்சு தத்துவமேதையின் பைபிள்,ஓரிறைக் கொள்கையின் மீதான விமர்சனங்களே 18 ஆம் நூற்றாண்டு பைபிள் விமர்சனம் ஆய்வுகளுக்கு அடித்தளம் இட்டது. ‍]

 உருவ,முன்னோர் ,இயற்கை  வழிபாடு போன்றவை உள்ளடங்கிய மதங்கள் ஓரிறைக் கொள்கையால் முழுதும் இல்லாமல்  போய் விடவில்லை.இச்சூழலில் அம்மதத்தவரிடம் ஒழுக்க கோட்பாடுகள் இல்லை அல்லது தரம் அற்றவை என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம்.ஆனால் அப்படி அல்ல!!!
.

நாம் இருவரும் சில அறிவுசார் கருத்துகளில் மாறுபட்டாலும் பல அடிப்படை விடயங்களில் ஒன்று படுகிறோம்[எ.கா மனித நடத்தை மதிப்பீடுகள்,] என்றே எண்ணுகிறேன். நமது அறிவுசார் முட்டு கொடுத்தல்களும்,பகுப்பாய்வுகளும் [மனோ தத்துவ மேதை ஃப்ரய்டின் மொழியில்]மட்டுமே வித்தியாசப்படுகின்றன்.ஆகவே சான்றுகள் உள்ள‌ உறுதிப் படுத்தப்பட்ட விடயங்களை நாம் விவாதித்தால் மட்டுமே நம் ஒருவருக்கொருவர் மீதான சரியான புரிதல்கள் ஏற்படும் என நினைக்கிறேன்.
நட்புடன் கூடிய அன்பின் வாழ்த்துக்களுடன்
ஐன்ஸ்டின்
 

***********

முழுமையான கடிதம் எப்படி இருக்கும் என்பதை மாதிரியாக இந்த பகுதி விளக்கி இருக்கிறது. மதபுத்த்கம் குறிப்பாக யூத கிறித்தவ மத புத்தக கதைகளும் அதன்  மீதான அரசியலே இப்போது வரை தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை என்பதைப் புரிந்தால் இக்கடிதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது எனப் புரியும். ஒருவேளை ஐன்ஸ்டின் யூத மேட்டிமை கொள்கை கொண்டு இருந்தால் இஸ்ரேல் அரசியலில் முக்கிய பதவி கூட கிடைத்து இருக்கலாம்.சிந்தனையாளர்கள் மத இன சார் கொள்கை உடையவர்களாக இருக்க கூடாது என்பதன் எ.கா ஐன்ஸ்டின்தான்!! 

யூத மத இனவாதிகள் கடவுள் இஸ்ரேல் என்னும் நாட்டை தங்களுக்கு எகிப்தில் இருந்து வர வைத்து ,அங்கு ஏற்கெனவே வாழ்ந்தவர்களை வெற்றி கொள்ள வைத்து அளித்ததாக இன்னும் [நம்பி?!!!!] பிரச்சாரம் செய்கிறார்.

இதில் எதிர் கோஷ்டி பாலஸ்தீனர்கள் தரப்பும் இன்னும் மோசமான மதவாதிகளாக முத்திரை குத்தப்பட்டது அவர்கள் பக்க நியாயத்தை எடுபடாமல் செய்து விட்டது.சமீபத்தில் எந்த நியாயமான தீர்வும் வர வாய்ப்பில்லை என்பதே உண்மை.

இது போன்ற கட்டுக்  கதைகளை ஒழிக்காதவரை அடக்குமுறை ஆக்கிரமிப்பும் ஏதோ ஒருவிதத்தில் நியாயப்படுத்தப்படும். ஐன்ஸ்டின் இதனை உணர்ந்தே பைபிள் கட்டுக் கதை, எந்த திற்மையான மதப் பிரச்சாரகரின் தத்துவ விளக்கமும் ஏற்புடையது அல்ல என அருமையாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். 

ஆனால் ஐன்ஸ்டின் ஆத்திகர் என்றும்,அவரின் கண்டுபிடிப்பும் எங்கள் புத்தகத்தில் சொல்லி இருக்கிறது என மத விளம்பரம் செய்யும் கோமாளிகளும் எதிர்காலத்தில் வருவார்கள் என அறிந்து இருப்பாரா??? ஹா ஹா ஹா!!

நன்றி!!

முதல் பதிவு: சார்வாகன்

கிருஸ்துவ மதத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2

25 ஆக

இயேசு சிலுவை மரணத்தின் போது  கூறியதை கவனியுங்கள், 

பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.

(லூக்கா 23:46)

உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.

(மத்தேயு 27: 48-50)

கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன். ஆனால் கடவுளின் மூன்று ஆள்த் துவங்களில்(The Trinity)  ஒருவராகக் கிறித்தவர்களால் கருதப்படும் இயேசு பிறப்பும் இறப்பும் உடையவர். மரியாளின் மகனாகப் பிறக்கின்றார். மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனை பைபிளும் கூறுகின்றது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே திரித்துவத்தின்(The Trinity) மூன்று ஆளத்துவங்களில் ஒருவர் இல்லை. அந்த இடைவேளையில் இருந்தது இருவர் மட்டுமே! அப்படியானால் இருமைத்துவமும் கிறித்தவத்தில் உள்ளது என்று கூறலாமா? காரணம் திரித்துவத்தை மீட்சி அடைவதற்கான கொள்கையாகக் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது.

இயேசு தன் ஆன்மாவை ஒப்புக் கொடுத்தார் என்றும் கிறித்தவர்கள் கூறுகின்றனர். இயேசுவே கடவுள் எனில் பிறகு ஏன் மற்றொரு கடவுளிடம் தன் ஆன்மாவை ஒப்புவிக்க வேண்டும்? அவ்வாறெனில் பிதாவும் புத்திரனும் ஓரே சக்தி பெற்றவர்கள் என்றும் மகத்துவத்தில் சமமானவர்கள் என்றும் கிறித்தவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

மிகச் சாதாரண மனிதர்களே மரணத்தை மிகத் துணிவுடன் எதிர்கொள்கின்றனர். உதாரணத்திற்கு தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சதாம் ஹூஸைன் சிறிதும் அச்சமின்றி அமெரிக்காவின் அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்தவாறே தூக்குக் கையிற்றை நெருங்கியதை  நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.  அனைத்தையும் அறிந்த கடவுள்  இப்படி பயந்து நடுங்கி புலம்பிக் கொண்டே மரணமடைவானா? மேலும், மரணமடைபவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று இஸ்லாம் கேட்கும் கேள்விகளில் எந்த தவறுமில்லை. இயேசு கடவுளாக இருக்க முடியாது  என்ற முஸ்லீம்களின் வாதமும் சரியாகவே தோன்றுகிறது. 

ஆள்மாறாட்டம் செய்தால் மட்டுமே  ஈஸா நபியைக் காப்பாற்ற முடியுமென்ற நிலைமை  அல்லாஹ் இல்லையே? ஆள் மாறாட்டத்தின் விளைவுகளைப் பார்க்கையில், ஒரு சராசரியாக சிந்திக்ககூடிய மனிதன் விமர்சிக்கும்  அளவிற்கு அல்லாஹ்வின்  செயல் மாபெரும் குழப்பமாக உள்ளது என்ற கிருஸ்துவர்களின் கேள்விகளில் உள்ள நியாயத்தையும்  மறுக்க முடியாது. இயேசு சர்வவல்லமையுடைய கடவுள் என்பதும், அல்லாஹ் என்ற சர்வ வல்லமையுடைய இறைவன் தனது தூதரை ஆள்மாறாட்டம் செய்து காப்பாற்றினான் என்ற இந்த இருவாதங்களுமே  முட்டாள்த்தனமானவைகள் என்பது தெளிவாகிறது.

  சிலுவையில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை மட்டுமே, கிருத்துவமும்,  இஸ்லாமும் கூறும் செய்திகளிலிருந்து நாம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆள்மாறாட்டக் கதையை மேலும் சிறிது ஆய்வு செய்வோம். ஈஸா நபியின் உருவ அமைப்பிற்கு யூதாஸ் மாற்றப்பட்டான் என்ற பர்பனபாஸ் சுவிசேஷத்தின்  கருத்தை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்கின்றனர். யூதாஸ் என்ன தவறு செய்தான்? முப்பது வெள்ளிக்( காசுகளுக்)கு ஆசைப்பட்டு ஈஸா நபியைக் காட்டிக் கொடுத்தான். அவனது துரோகச் செயலுக்கு  தண்டனையாகவே ஆள்மாறாட்டத்தில் அவன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டான்.

யூதாஸ் காட்டிக் கொடுப்பதற்கு, ஈஸா நபி மறைந்திருந்து “கொரில்லா” முறைத் தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கும் தீவிரவாத புரட்சிப்படை தளபதி இல்லையே! ஈஸா நபி யூத மக்களுக்கும், யூத அதிகரிகளுக்கும் நன்கு அறிமுகமானவர். அவரிடம் எந்த ரகசியமும் இல்லை. ஒவ்வொருவரும் அவரை நன்கு அறிவார்கள். தனது போதனைகளை எவ்வித ரகசியமுமின்றி வெளிப்படையாகவே செய்தார். அவர் தினமும் யூத கோவிலில், யூதமத குருமார்களுடனும், யூதமதச் சட்ட எழுத்தர்களுடனும், அங்கிருந்த மதவியாபாரிகளுடனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர். ஈஸா நபியின் அற்புதங்கள் மூலமாகவும் அவரை எல்லோரும் மிக நன்றாக அறிவார்கள். ஈஸா நபியை கைது செய்ய அதிகாரிகள் வந்த போது, “நான் தினமும் இந்த கோவிலில் இருந்தவாறே உங்களுக்கு போதனை செய்தேன் அப்பொழுது என்னைக் கைது செய்ய உங்களது கரங்களை நீங்கள் உயர்த்தவில்லை. ஆனால் இப்பொழுது ஒரு திருடனைக்கைது செய்வதைப் போல இந்த நள்ளிரவில் ஆயுதங்களுடன் வந்திருக்கிறீர்கள் “ என்றார்.

எனவே யூதாஸ்  முப்பது வெள்ளிக்( காசுகளுக்)கு ஆசைப்பட்டு,  முத்தம் செய்து காட்டிக் கொடுத்ததாக கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. வாதத்தற்காக அவன் ஈஸா நபியைக் காட்டிக் கொடுத்ததாகவும் அவனது துரோகத்திற்குப் பலனாக அவன் ஆள்மாறாட்டத்தில் மாட்டிக் கொண்டதாகவும் வைத்துக் கொள்வோம்.

அதாவது, ஆள்மாறாட்டத்திற்குப் பிறகு, மறு வினாடியிலிருந்து யூதாஸ் என்றொருவன் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது. அதாவது யூதாஸின் உருவமும், குரலும் ஈஸா நபியைப்போல மாற்றப்பட்ட பிறகு யூதாஸின் உருவ அமைப்பில் ஒருவரும் அந்தப் பகுதியில் இல்லை. ஆனால், இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பிறகு யூதாஸ் மனவேதனையால் தற்கொலை செய்து கொண்டதாக பல ஆதாரங்கள் கூறுகிறது. இது எப்படி சாத்தியமாகும்?

சிலுவையில் மரணமடைந்த இயேசு நாதரின் உடல் அதாவது, குர்ஆனின் மொழியில் சொல்வதென்றால் ஈஸா நபியைப்போன்ற தோற்றமுடைய(யூதாஸ் என்ற)வரின் உடல் என்ன ஆனது? அது எப்படி எழுந்து சென்றது?

இயேசு நாதர் கல்லறையிலிருந்தது உயிர்த்தெழுந்ததாகவும் சீடர்களுக்கு காட்சி தந்ததாகவும் கிருஸ்துவர்கள் கூறுகிறார்கள். கல்லறையிலிருந்தது உயிர்த்தெழுந்து சீடர்களுக்கு காட்சி தந்தது யூதஸா? யூதாஸிற்கு அத்தகைய அற்புத சக்தி வழங்கப்பட்டிருந்ததா?

 இதைப் போன்ற பல முக்கியமான கேள்விகளுக்கு குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் எந்த பதிலும் இல்லை…!

பர்னபாஸ் சுவிசேஷம் இதற்கு பதிலைச் சொல்லுகிறது. சிலுவையில் மரணமடைந்த ஈஸா நபியைப் போன்ற தோற்றமுடைய( யூதாஸ் என்ற)வரின் அடக்கம் செய்யப்பட்ட உடலை, கடவுளுக்கு அதாவது அல்லாஹ்விற்குப் பயப்படாத ஈஸா நபியின் சீடர்களில் சிலர்,   கல்லறையிலிருந்து திருடி, மறைத்து, இயேசு உயிர்த்தெழுந்ததாகக் கூறி அனைவரையும் குழப்பத்திலாழ்த்தி நம்பவைத்ததாகக் குற்றம்சாட்டுகிறது.

Those disciples who did not fear God went by night [and] stole the body of Judas and hid it, spreading a report that Jesus was risen again; whence great confusion arose.

 (Gospel of Barnabas 218:1)

ஈஸா நபியை ஏற்றுக் கொண்ட மக்களை, “ஈஸா நபி மரணத்திற்குப் பின்னும் உயிர்த்தெழுந்தார்” என்ற பொய்ச் செய்தியின் மூலம் திசை திருப்பி அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி தவறி, கிருஸ்துவம் என்ற பொய்யான மதத்தை உருவாக்கிய ஈஸா நபியின் சீடர்களைப் பற்றி அல்லாஹ்விற்கு எதுவுமே தெரியவில்லை. பிணத்தை மறைத்து, பொய்யை இட்டுக் கட்டி பெரும் பாவத்தை நிகழ்த்திய, ஈஸா நபியின் சீடர்களைக் கண்ணியமானவர்கள் வெற்றியாளர்கள் என்று குர்ஆனில் கூறுகிறான். பர்னபாஸ் சுவிசேஷத்தை எழுதியவருக்குத் தெரிந்த செய்தி கூட அல்லாஹ்விற்குத் தெரியவில்லை. குர்ஆன் ஒரு முழுமையற்ற, தெளிவற்ற புத்தகம் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

குழப்பம் இத்துடன் நிறைவடையவில்லை. ஈஸா நபியைப் போன்ற தோற்றத்திற்கு ஒப்பாக்கப்பட்ட அந்த ஒருவர் யார்? அவர் ஏன் அவ்வாறு தண்டிக்கப்பட வேண்டும்  என்ற கேள்விகளுக்கு, குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் எந்தவிதமான  விளக்கமும் இல்லை. ஆனால் குர்ஆன் விரிவுரைகளில்  விளக்கம் காணப்படுகிறது.

 துரோகத்திற்கு தண்டனையாக யூதாஸின் குரலும் உருவமும் ஈஸா நபியைப் போல மற்றப்பட்டது என்ற விளக்கங்களை நம் இதுவரை பார்த்தோம்.  இனி வேறு விதமான செய்திகளையும் வாதங்களையும் பார்ப்போம்.

குர் ஆனின்4 :157-ம் வசனத்திற்கு இப்ன் அப்பாஸ் கூறும் விரிவுரை

(And because of their saying: We slew the Messiah Jesus son of Mary, Allah’s messenger) Allah destroyed their man Tatianos. (They slew him not nor crucified, but it appeared so unto them) Allah made Tatianos look like Jesus and so they killed him instead of him; (and lo! those who disagree concerning it) concerning his killing (are in doubt thereof) in doubt about his killing; (they have no knowledge thereof save pursuit of a conjecture) not even conjecture; (they slew him not for certain) i.e. certainly they did not kill him.

(ஈஸா நபியை கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை. டேஸியானோஸ் என்பவர் ஈஸா நபியின் உருவத்திற்கு ஒப்பாக்கப்பட்டார். அவரையே அவர்கள் சிலுவையில் அறைந்து கொன்றனர். )

தனது இதே கருத்தை இப்ன் அப்பாஸ் மற்றொரு விளக்கவுரையிலும் உறுதி செய்கிறார்.

(And they schemed) they, i.e. the Jews, planned to kill Jesus, (and Allah schemed (against them)) Allah wished to kill their man Tatianos: (and Allah is the best of schemers) the strongest of those who have a will; it is also said this means: the best of Makers. [Sura 3 aya 54 ; ibn Abbas]

கிருஸ்த்துவம் உருவானதைப்பற்றி கூறும் 61:14 ம் குர்ஆன் வசனத்திற்கு இப்ன் கதீர் கூறும் விரிவுரை

Imam Abu Ja`far bin Jarir Al-Tabari reported that Ibn `Abbas said, “When Allah decided to raise `Isa to heaven, `Isa went to his companions while drops of water were dripping from his head. At that time, there were twelve men at the house. `Isa said to them, `Some of you will disbelieve in me twelve times after having believed in me.’ He then asked, `Who among you volunteers that he be made to resemble me and be killed instead of me; he will be with me in my place (in Paradise).’ One of the youngest men present volunteered, but `Isa commanded him to sit down. `Isa repeated his statement and the young man again stood up and volunteered, and `Isa again told him to sit down. `Isa repeated the same statement and the young man volunteered. This time, `Isa said, `Then it will be you.’ The appearance of `Isa was cast upon that young man, while `Isa, peace be on him, was raised to heaven through an opening in the roof of the house. The Jews came looking for `Isa and arrested the one that appeared as him, killing him by crucifixion. Some of them disbelieved in `Isa twelve times, after they had believed in him.

They divided into three groups. One group, Al-Ya`qubiyyah (the Jacobites), said, `Allah remained with us as much as He willed and then ascended to heaven.’ Another group, An-Nasturiyyah (the Nestorians), said, `Allah’s son remained with us as much as Allah willed and He then rasied him up to heaven.’ A third group said, `Allah’s servant and Messenger remained with us as much as Allah willed and then Allah raised him up to Him.’ The last group was the Muslim group. The two disbelieving groups collaborated against the Muslim group and annihilate it. Islam remained unjustly concealed until Allah sent Muhammad,..

(இமாம் அபு ஜாஃபர் இபின் ஜரீர் அல்-தபரி அறிவிப்பதாக இப்ன் அப்பாஸ் கூறுவது, ஈஸாவை சொர்க்கத்திற்கு உயர்த்த முடிவு செய்த பொழுது, ஈஸா தன் தலையிலிருந்து (வியர்வை) நீர் துளிகள் சொட்டிய நிலையில் தனது சீடர்களிடம் சென்றார். அவ்வேளையில், பன்னிரண்டு பேர் அந்த வீட்டிலிருந்தனர். ஈஸா அவர்களிடம் கூறினார், பன்னிரண்டு முறை என்மீது விசுவாசம் கொண்ட பின்னரும் உங்களில் சிலருக்கு என் மீது விசுவாசமின்றிப் போகும் என்றார். பிறகு அவர் கேட்டார், என் உருவ அமைப்பிற்கு ஒப்பாக்கப்பட்டு எனக்கு பதிலாக (சிலுவையில்) கொல்லப்பட்டு; (மறுமையில்) என்னுடன், என்னுடைய இடத்தில் சொர்க்கத்திலிருப்பதற்கும் உங்களில் தன்னையே அர்பணிப்பதற்கு யார் இருக்கிறார் ? என்று கேட்டார். அவர்களில் இளைஞர் ஒருவர் தன்னை அர்பணிக்க முன்வந்தார். ஆனால் ஈஸா அவரை அமரும்படி கட்டளையிட்டார். ஈஸா தனது கோரிக்கையை மறுபடியும் கூற அதே இளைஞர் எழுந்து நின்றார். ஈஸா மறுபடியும் அந்த இளைஞரை அமரும்படி கட்டளையிட்டார். ஈஸா  மறுபடியும் கூற, மறுபடியும் அதே இளைஞர் எழுந்து நின்றார். இம்முறை ஈஸா, “அப்படியானால் அது நீர்தான்” என்றார். அந்த இளைஞரின் உருவ அமைப்பு ஈஸாவைப் போல மாற்றப்பட்டது. அந்த வீட்டின் கூரையிலிருந்த திறப்பு வழியாக ஈஸா வானுக்கு உயர்த்தப்பட்டார். ஈஸாவைத் தேடி வந்த யூதர்கள் அவரைப் போன்ற உருவ அமைப்பிற்கு மாற்றப்பட்ட அந்த இளைஞரை சிலுவையில் அறைந்து கொன்றனர். அவர்களில் சிலருக்கு பன்னிரண்டு முறை ஈஸாவின் மீது விசுவாசம் கொண்ட பின்னரும் அவர்களில் சிலருக்கு  விசுவாசமின்றிப் போனது.

அவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்தனர். ஒரு குழுவான, அல்-யாக்கூபிய்யாவினர் கூறினர், அவர் (ஈஸா) இருந்த போதும் வானுக்கு உயர்த்தப்பட்ட பிறகும் அல்லாஹ் எங்களுடனே இருக்கிறான் என்றனர். மற்றொரு குழுவான, அந்-நஸ்தூரிய்யவினர் கூறினர் அவர் (ஈஸா) இருந்த போதும் வானுக்கு உயர்த்தப்பட்ட பிறகும் அல்லாஹ்வின் மகன் தங்களுடனே இருப்பதாகக் கூறினர். மூன்றம் பிரிவினர் கூறினர், அவர் (ஈஸா) இருந்த போதும் அல்லாஹ்விடம் வானுக்கு உயர்த்தப்பட்ட பிறகும் அல்லாஹ்வின் சேவகரும், தூதரும் தங்களுடனே இருப்பதாக கூறினர். இறுதியான குழுவினர் முஸ்லீம்கள். நம்பிக்கையற்ற இரு குழுக்களும் முஸ்லீம் குழுவை அழிப்பதற்காகக்கு எதிராக ஒன்றினைந்தனர். அல்லாஹ் முஹம்மதுவை அனுப்பும் வரை இஸ்லாம் அநியாயமாக  மறைத்து வைக்கப்பட்டிருந்தது…)

இப்ன் கதீர் கூறும் இந்தக் காட்சியை சிறிது கற்பனை செய்து பாருங்கள்.

ஈஸா நபி தன் சீடர்களின் முன் நின்று கொண்டு கூறுகிறார், சொர்க்கத்திற்குவரும்படி எனக்கு அழைப்பு வந்திருக்கிறது, நான் அங்கு சென்று இன்பங்களில் திளைக்கப் போகிறேன். யூதர்கள் என்னைக் கொல்வதற்குத் தேடிக் கொண்டிருக்கிறார்கள், எனவே எனக்கு பதிலாக  அடிகளையும், உதைகளையும், சவுக்கடிகளையும், கொடுமைகளையும், அவமானங்களையும் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து கொடூரமான முறையில் சிலுவையில் மரணமடைய விரும்புபவர் உங்களில் யார் இருக்கிறீர்கள்? என்று கேட்டிருப்பாரா? இதுதான் தெய்வீகத் தன்மையா?

வேறொருவர் ஒப்பாக்கப்பட்டாமல் ஈஸா நபியை சொர்க்கத்திற்கு உயர்த்த முடியாதா? ஈஸாவிற்குப் பதிலாக வேறொருவர் ஒப்பாக்கப்பட்டால் மட்டுமே, அல்லாஹ்வால் அவரை(ஈஸா) சொர்க்கத்திற்கு உயர்த்த முடியும் என்று கூறுவது  சிறுபிள்ளைத்தனமாகத் தெரியவில்லையா?

இப்ன் கதீர் கூறும் இந்த முட்டாள்தனத்தை,  வாதத்திற்காக உண்மையென்று வைத்துக் கொள்வோம். சிலுவையில் கொல்லப்பட்ட ஒருவரைத் தவிர மீதம் உள்ள பதினொரு சீடர்களுக்கும், ஈஸா நபி வானுக்கு உயர்த்தப்பட்டதும், சிலுவையில் கொல்லப்பட்டது ஈஸா நபி அல்ல என்பதையும் மிக நன்றாக எவ்விதமான சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக அறிவார்கள். அபாண்டமான  பொய்ச் செய்திகளான இயேசு நாதரின் சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் கூறி அவரது போதனைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டிய அவசியம் என்ன? இதற்காக அவரது சீடர்கள் உறவுகளையும், உடைமைகளையும் துறந்து பரதேசிகளாக சுற்றித் திரிந்தனர். பலர் கடுமையான அவமானங்களுக்கும்,  துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி கொடுமையான தண்டனைகளால் உயிரை விட்டனர் என்பது வரலாற்று செய்திகள்.

தெரிந்தே ஒரு பொய்யைத் திட்டமிட்டு பரப்ப வேண்டிய அவசியம் என்ன?

 சிலுவை மரணத்திற்குப்பின் ஈஸா/இயேசு உயிர்த்தெழுந்தார் என்று கூறுவது பகுத்தறிவிற்கு  ஏற்புடையது அல்ல! இயேசு உயிர்த்தெழுந்த கதை பர்னபாஸ் சவிசேஷம் கூறுவதைப் போல உண்டாக்கப்பட்டிருக்கலாம். குர்ஆன் கூறும் ஆள்மாறட்டக் கதை அர்த்தமற்றது. அது அல்லாஹ்வை கையாலாகதவனாக சித்தரிக்கிறது.

பர்னபாஸ் சுவிசேஷத்துடனும் குர்ஆன் முரண்படுகிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.  இயேசு நாதர் உயிர்தெழுந்த கதையும், குர்ஆன் கூறும் ஆள்மாறட்டக் கதையும் அர்த்தமற்றது. இப்படியொரு நம்பிக்கை ஏன் உருவானது?

நித்தியானந்த சாமியாரின் லீலைகள் வீடியோ ஆதரங்களுடன் வெளியிடப்பட்டது. அப்பொழும் அவர் மீது நம்பிக்கை கொண்ட சிலர், தங்களது குரு நேர்மையானவர், கண்ணியம் நிறைந்தவர் என்று கூறி, குற்றம் சுமத்திய  லெனின் கருப்பனைக்  குற்றவாளி என வாதிட்டவர்களையும் நீங்கள் அறிவீர்கள். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வீடியோ ஆதரங்களுடன் வெளியிடப்பட்டது. இதை ஆள் மாறட்டம் என்று உறுதிபடக் கூறும் அவர்களது ஆரவாளர்களையும், அரசியல்வாதிகளையும், அறிவு ஜீவிகளையும்  நீங்கள்  இன்றும் பார்க்கலாம்.

இப்படியொரு (நஸ்தூரிய்யா – நெஸ்ட்ரோனிய) கிருஸ்துவர்களின் கூட்டம், முஹம்மது நபியின் காலத்தில் அன்று பாரசீகம், டமாஸ்கஸ் மற்றும் வட அரேபிய பகுதிகளில் வாழ்ந்து வந்தது. இவர்கள் ஈஸா/இயேசு மனித பண்புகளும் தெய்வீகத்தன்மையும் தனித்தனயே கொண்ட ஒரு மனிதரே என்றும் கடவுளால் மகனான தத்தெடுத்துக் கொள்ளப்பட்டவர் என்று நம்பி வந்தனர். இந்த நம்பிக்கை கிபி 428-431-ளில் நெஸ்டோரஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர்கள், கடவுளின் மகனைக் கொல்லவே முடியாது கடவுள் ஏதேனும் யூதரின் முகத்தை இயேசுவிற்கு ஒப்பாக மாற்றி அவனை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு சூழ்ச்சி செய்து தனது மகனைக் காப்பாற்றி விட்டார் என்று நம்பிவந்தனர். இந்தக்  கதை குர்ஆனையும் விட்டுவைக்கவில்லை.

இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கைக்கு யார்பொறுப்பு?

        குர்ஆன் சொல்வது உண்மையான தகவலாக இருக்குமானால், ஈஸா நபியின் எதிரிகள் அவரை கொன்று விட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும் என்று அல்லாஹ் அவர்களை ஏமாற்றுவதற்கு முடிவு செய்தான். அதனால், “ஈஸா நபி சிலுவையில் மரித்தார்” என்ற திட்டம் அல்லது நம்பிக்கை வருவதற்கு காரணமே அல்லாஹ் தானே ! இது இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும். ஈஸா நபியின்  சீடர்கள் ஏமாற்றப்பட்டது “தற்செயலாக அல்லது ஒரு விபத்தாக நடந்தது” என்று சொல்வீர்களானால், நாம் இந்த முடிவுக்கு வரலாம், அது என்னவென்றால், “உலகத்தில் மிகப்பெரிய ஒரு பொய்யான மதம் உருவாகப் போகிறது” என்பதை அல்லாஹ் அறியாமல் இதை செய்தான் என்று நாம் முடிவு செய்யலாம். இல்லை, அல்லாஹ் இதை தெரிந்தே வேண்டுமென்றே செய்தான் என்று சொன்னால், அல்லாஹ்விற்கு பொய்யான மதங்களை உலகத்தில் உருவாக்கும் வியாபாரம் உள்ளது என்று முடிவு செய்யலாம். ஆக, இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ், ஒரு சின்ன விஷயத்தை கூட சரியாக செய்யத் தெரியாத “அறியாமையில்” இருக்கிறான் என்று முடிவு செய்யலாம், அல்லது “அவன் தெரிந்தே ஏமாற்றக் கூடியவன்” என்ற முடிவிற்கு வரலாம்

முஹம்மது நபியின் கூற்றுப்படி,  ஈஸா நபியின் பணி ஒரு மிகப் பெரிய தோல்வியை அடைந்தது.  ஈஸா நபி 33 ஆண்டுகள் ஏகத்துவ போதனையை போதிப்பதில் கழித்தார் (அதிலும், அவர் குழந்தையாக இருந்ததிலிருந்தே ஏகத்துவத்தை போதித்தார் என்று குர்ஆன் கூறுகிறது), அப்படியிருந்தும், அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட (வானில் உயர்த்தப்பட்ட)  சில நாட்களுக்குள் இஸ்ரவேல் மக்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்தனர். முதல் பிரிவு மக்கள் ஈஸா நபியின் போதனை கேட்டவர்கள் ஈஸா நபி உயிர்தெழுந்ததாக நம்பியதால் “கிறிஸ்தவர்களாக” மாறிவிட்டனர், இவர்கள் கற்பனைகூட செய்யக்கூடாத பாவமான “ஷிர்க்” (இணைவைத்தல்) என்ற மாபெரும் பாவத்தை செய்தவர்களாயினர். இரண்டாம் பிரிவு மக்களாகிய இவர்கள் “ஈஸாநபியின்  போதனைக்கு” கீழ்படியாததினால், இவர்களும் “இறைவனின் மிகப்பெரிய நபியை” புறக்கணித்த அல்லது நம்பாத பாவத்திற்கு ஆளானார்கள். ஆக, ஈஸா நபியை நம்பினவர்கள், ஈஸா நபியை நம்பாதவர்கள் இந்த இரு பிரிவினரும் கடைசியில் நரக நெருப்பிற்கு ஆளானார்கள். அதாவது, ஈஸா நபி, கடைசி வரை முஸ்லீமாக இருக்கக்கூடிய ஒருவரையாவதுசம்பாதித்துஇருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிப்பட்ட ஒருவரையும்  இஸ்லாமுக்குமாற்றவில்லை.

அல்லாஹ், ஈஸா நபியை எல்லோரும் காணும்விதமாக தன்னளவில் வானிற்கு உயர்த்தி பாதுகாப்பளித்திருக்கலாம் அல்லது ஈஸா நபி, அல்லாஹ்வின் ஏமாற்றும் செயலில் தன் சீடர்களாகிய நீங்கள் ஏமாறக்கூடாது என்று அவர்களை எச்சரித்து இருந்திருக்கலாம். ஆனால், ஈஸாநபி  தன் வாழ்நாட்கள் அனைத்திலும் இப்படிப்பட்ட எச்சரிக்கை செய்தியை அல்லாஹ்விடமிருந்து பெறவில்லை, அதனால், தன்னை பின்பற்றியவர்களுக்கு இதைப் பற்றி சொல்லவில்லை. இதன் பலனாக, உலகத்தின் கோடான கோடி மக்கள், இப்போது இஸ்லாமை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர், ஏனென்றால், “இயேசு தங்கள் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார்” என்று அவர்கள் நம்புகின்றனர். ஏன் இவர்கள் இப்படி நம்புகின்றனர் என்றால், இந்த செய்தியை முதலாவது பரப்பியதே “ஏமாற்றும் இறைவனாகிய” அல்லாஹ்வும், படுதோல்வி அடைந்த ஈஸா மஸிஹாவுமே.

குர்ஆனை நாம் கூர்ந்து கவனித்தால், அல்லா “கிறிஸ்தவ மார்க்கத்தை” தெரிந்தோ அல்லது தேரியாமலோ துவக்கினான் என்ற முடிவிற்கு வரலாம். அதோடு மட்டும் குர்ஆன் நின்றுவிடவில்லை.  தான் செய்த குழப்பத்தை சரி செய்வதை விட்டுவிட்டு, அல்லாஹ் “கிறிஸ்தவ மார்க்கத்தை” அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்கிறான்.

        ஈஸா நபியின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் என்ற நம்பிக்கைக்கு அடித்தளம் அல்லாஹ் அமைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த பொய்யான செய்தியை கிறிஸ்தவர்கள் பரப்புவதற்கும் மிகவும் நேர்த்தியாக அல்லாஹ் உதவினான்.

ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.

(குர்ஆன் 61:14)

 இந்த வசனம் மிகவும் முக்கியமான வசனம். ஈஸா நபியின் போதனையை ஏற்க மறுத்த யூதர்களுக்கு எதிராக, அல்லா ஈஸா நபியை  பின்பற்றியவர்களுக்கு உதவி செய்ததாக இந்த வசனம் சொல்கிறது. மற்றும் இந்த வசனத்தின்படி ” ஈஸாநபியின்  சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்” என்று குர்ஆன் சொல்கிறது. எனவே, யூதர்களை விட மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக மாறிய மற்றும் ஈஸா நபியை பின்பற்றியவர்களாகிய இவர்கள் யார்? இந்த விவரத்திற்கு சரியாக பொருந்துகிறவர்கள் சரித்திரத்தின் படி “ஆதி கிறிஸ்தவர்கள் – orthodox Christians” தான்.

இவர்களின் நம்பிக்கை “இயேசுவின் மரணத்தின் மீதும், அவர் உயிர்த்தெழுதந்தார்” என்பதன் மீதும் இருந்தது. ஈஸா நபியின் போதனை மாற்றப்பட்டது என்றும், உண்மை இஞ்ஜில் மாற்றப்பட்டது என்றும்  வாதிக்க முடியாது, ஏனென்றால், இந்த மக்கள் கூட்டம் குர்ஆன் வசனம் சொல்லும் மக்கள் அல்ல. ஒருவேளை குர்ஆன் சொல்வததைப் போல, முதல் நூற்றாண்டில் “முஸ்லீம்-கிறிஸ்தவ” கூட்ட மக்கள் இருந்ததாக ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் மற்றவர்களின் மீது வெற்றியுள்ளவர்களாக இருக்கவில்லை. அவர்கள் மிக சீக்கிரமாக அழிக்கப்பட்டார்கள். ஈஸா நபியை பின்பற்றியவர்களில், யூதர்களை விட அதிகமாக வலிமையானவர்களாக இருந்தவர்கள் கிறிஸ்தவர்களே. ரோம சாம்ராஜ்ஜியத்தில் அதிகமாக பரவியது இந்த கிறிஸ்தவமே. இந்த கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை, இன்று உள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் போலவே இருந்தது. ஆக, குர்ஆன் வசனத்தின் படி இந்த கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வர அல்லாஹ் உதவியாக இருந்தான் அதாவது வெற்றியாளர்களாக மாற்றினான். பின் எப்படி, கிறிஸ்தவம் வளர்ந்து, உலகத்தின் மிகப்பெரிய மதமாக மாறியது.? இது அல்லாவின் வல்லமை சக்தியினால் வளர்ந்தது! மற்றும் கிறிஸ்தவ அடிப்படை செய்தியாகிய ” ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்ற செய்தியை உருவாக்கியது யார்? அல்லாஹ்தான்.

ஈஸா நபி பற்றிய குர்ஆனின் செய்திகள் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். அல்லாஹ் பல பில்லியன் மக்களை ஏமாற்றினான் என்றே பொருள் தருகிறது. இது மட்டுமல்ல, ஈஸா நபியின் சீடர்களும் ” ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்று நம்பும்படி செய்து அவர்கள் அல்லாஹ்வின் வழியை விட்டு விலக அல்லாஹ் காரணமானான்.  யூத, ரோம ஆட்சியாளர்களை ஏமாற்ற வேண்டும் என்ற அல்லாஹ்வின் திட்டம்  நிறைய பலவிதமான கேள்விகளை எழுப்புகிறது.

குர்ஆன் சொல்வது உண்மையானால், அல்லாஹ் ஒரு தவறான செய்தியை ஆரம்பித்து, அது உலகத்தில் மிகப்பெரிய மார்க்கமாகும் வரை அதை வளர்த்தான் என்பது தெளிவாகிறது. குர்ஆன் சொல்வது உண்மையானால், ஈஸா மஸிஹாவின் வாழ்க்கையின் முடிவு, பல மக்களை அல்லாஹ்வின் வழியிலிருந்து விலகச் செய்தது. இப்படி வழிவிலகச் செய்தவர் ஈஸா மஸிஹாவைத் தவிர ஒருவரும் உலக சரித்திரத்தில் இருக்கமுடியாது. ஏனென்றால், இறைவனின் குணம் எப்படி இருக்கும் என்று எல்லாரும் பொதுவாக நம்பிக்கொண்டு இருக்கிறார்களோ, அப்படி இல்லாமல் அல்லாஹ்வின்  இறைபார்வை வித்தியாசமாக உள்ளது. ஒரு சராசரியாக சிந்திக்ககூடிய மனிதன் விமர்சிக்கும்  அளவிற்கு அல்லாஹ்வின்  குர்ஆன் குழப்பமாக உள்ளது.

ஈஸா நபியை அல்லாஹ் வானிற்கு உயர்த்திக்கொண்டதாக முஸ்லீம்கள் விளக்கமளிக்கிறார்கள்

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

 (குர்ஆன் 4:158)

இவ்வசனத்தில் ஈஸாநபியை, உயிருடன் தன்னளவில் (வானத்திற்கு?) உயர்த்திக் கொண்டதாக பொருள்விளங்க முடிகிறதா?

… வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

(குர்ஆன் 4:157)

அல்லாஹ்வால் உயர்த்திக் கொள்ளப்பட்ட ஈஸா/இயேசு,சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக  உயிருடன் இருப்பதாக குர்ஆன் கூறும் செய்திகளைப் பார்த்தோம் பின்வரும் குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்,

முஹம்மது (அல்லாஹ்வின்) தூதரன்றி (வேறு) அல்லர். அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் திட்டமாக(க் காலம்) சென்று விட்டனர் எனவே அவர்கள் இறந்து விட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ உங்களுடைய குதிங்கால்களின் மேல் புறங்காட்டி திரும்பி விடுவீர்களா?

 (குர்ஆன் 3:144)

முஹம்மது நபிக்கு முன்னர் வந்த அனைத்து நபிமார்களும் இறந்துவிட்டதாக குர்ஆன் 3:144-ம் வசனம் கூறுகிறது. அப்படியானால் ஈஸா நபியும் இறந்து விட்டாரா?

        ஆக, ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு ஈஸா நபி வானுக்கு உயர்த்தப்பட்டார், சிலுவையில் அறையப்படவில்லை, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார், சிலுவையில் மரணமடையவில்லை, சிலுவையில் மரணமடைந்தார்,  மரணத்திற்குப்பின் உயிருடன் எழுந்தார் என்று எப்படி வாதம் புரிந்தாலும் குர்ஆன் முரண்படுவதை எளிதாகக் காணலாம்.

 

தஜ்ஜால்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1

கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் – விவாதத்தின் இறுதிப் பகுதி

25 ஜூலை

இந்த விவாதத்தின் கடைசிப் பகுதியாக காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் எந்தவித தயக்கமும் இன்றி ஈடுபடும் மதவாதிகளின் அடிப்படை குறித்து அலசலாம்.

 

ஒரு நடவடிக்கை அல்லது செயல் எந்த அடிப்படையில் ஒருவனால் மேற்கொள்ளப்படுகிறது? தன்னால் செய்யப்படும் செயல் தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவு அவனிடம் இருக்கும் போது மட்டுமே அதை செய்வதற்கான உந்துதல் அவனுக்கு கிடைக்கும். தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவு அவனிடம் எந்த வழியில் வருகிறது? ஒரு செயல், அதற்கான தூண்டுதல், விளைவு, எதிர்வினை போன்றவை தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவை இரண்டு வழிகளில் அடைகிறார்கள். 1. சரியா? தவறா? 2. சாதகமா? பாதகமா?

 

உலகின் பெரும்பாலான மக்கள் சாதகமானதா? பாதகமானதா? எனும் கோட்டில் நின்று தான் சிந்திக்கிறார்கள். தாம் செய்யப் போகும் ஒரு செயல் சரியானதா? தவறானதா? எனும் ஆய்வு அவர்களுக்குள் ஏற்படுவதில்லை. தவறானதாக இருந்தாலும் சாதகமானதாக இருந்தால் செய்துவிடுவதும், தாம் செய்வதையே சரி என வாதிடுவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது. சரி என்று வாதிடுபவர்கள் அனைவரும் அது சரி என தெரிந்ததனால் வாதிடுபவர்கள் அல்லர். தவறு என்று தெரிந்து கொண்டே சரி என வாதிடுபவர்களே இங்கு அதிகம். இது ஏன்?

 

ஒன்று சரியா தவறா அல்லது சாதகமா பாதகமா எனும் முடிவு அந்தந்தப் பொருள் குறித்து அவர் கொண்டிருக்கும் கருத்திலிருந்து பிறக்கிறது. இந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே சரியா தவறா? சாதகமா பாதகமா? என்பதை ஒவ்வொருவரும் முடிவு செய்கிறார்கள். தனக்கு சாதகமானது என்று ஒன்றைப் பற்றி கருத்து கொண்டிருக்கும் ஒருவரால் மெய்த்தன்மையில் அது பாதகமானதாக இருந்தாலும், தவறானதாக இருந்தாலும் அதை தவறு என்று அவரால் தள்ள முடியாது. ஏனென்றால் அவரது கருத்துக்கு எதிராக அவரால் சிந்திக்க முடிவதில்லை. சிந்தனை கருத்து இரண்டுமே அனுபவங்களிலிருந்து அதாவது சமூகத்திலிருந்து தோன்றுபவை தான் எனும் போது ஏன் ஒருவரால் அவரின் சொந்த கருத்துக்கு எதிராக சிந்திக்க முடியாது? ஒரு பொருளைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு கருத்தை மீறி அதே பொருளைப் பற்றிய வேறு கருத்துகளும் இருக்கக் கூடும் எனும் நிலையைச் செரிக்க அவனால் முடிவதில்லை. தெளிவாகச் சொன்னால், ஒரு கருத்து அவனுள் நம்பிக்கையாக நிலை பெற்றிருக்கும் போது அந்தக் கருத்துக்கு எதிராக சிந்தனை செய்வது என்பது சாத்தியமற்றுப் போகிறது. இந்த நம்பிக்கையின் அடிக்கல்லில் எழுந்து நிற்பது தான் மதம். மதத்திற்கு எதிரான சிந்தனை குற்றமாகவும் பார்க்கப்படுவதால் மதத்துக்கு எதிரான சிந்தனைகள் எப்போதுமே இயல்பை மீறிய விசயமாகவே இருக்கிறது.

 

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடயேயுள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டால் யாரும் சட்டெனக் கூறுவது சிந்தனை என்பது தான். ஆனால் விலங்குகள் சிந்திப்பதில்லையா? சிந்திக்கின்றன. கழுதைப் புலிகள் கூட்டாக வேட்டையாடுகின்றனவே சிந்திக்காமல் சாத்தியமா? வேறென்ன வேறுபாடு, பகுத்தறிவா? விலங்குகளும் பகுத்தறிகின்றனவே. குறிப்பிட்ட செடியை மட்டும் உண்ணாமல் தவிர்க்கின்றன ஆடுகள். பகுத்தறியவில்லை என்றால் சாத்தியமா? மனிதர்களைப் போலவே விலங்குகளும் உழைக்கின்றன, உண்கின்றன, தாய்மை உணர்வு கொள்கின்றன. ஆனால் மனிதனைப் போல் விலங்குகளால் மீளாய்வு செய்ய முடிவதில்லை. தான் செய்து கொண்டிருக்கும் செயல் சரியானதா? தவறானதா? தொடர்ந்து செய்யலாமா? கூடாதா? என்பன போன்ற சிந்தனைகள் அதாவது ஒன்றை ஐயப்படத் தெரியாது விலங்குகளுக்கு. அதாவது உயிர் வாழும் தன்மைக்கு பாதிப்பு நேரிடாதவரை தன்னுடைய செயல்களை மாற்றிக் கொள்வதில்லை விலங்குகள். மனிதன் எந்த நிலையிலும் மீளாய்வு செய்து பார்க்கும் திறனைப் பெற்றிருக்கிறான். மீளாய்வு செய்து பார்க்கும் திறனைப் பெற்றிருக்கிறான் என்பது தான் உண்மையேயன்றி; ஒவ்வொன்றையும் மீளாய்வு செய்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உண்மையாக இருக்க முடியாது. தான் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் அது சரியா தவறா? என உள்வசமாய் சிந்திக்காமல்; சூழலுக்கான தம்முடைய எதிர்வினை சரியானதா? என்பதை ஆராயாமல் தான் நம்பிக் கொண்டிருக்கும் ஒன்றுக்கு எதிராய் இருக்கும் அத்தனையும் தவறாகவே இருக்கும் என்று எந்த மீளாய்வுக்கும் இடமில்லாமல் எந்த இடத்தில் முடிவு செய்கிறானோ அந்தப் புள்ளியிலிருந்து மூட நம்பிக்கை தொடங்குகிறது. அவன் அதை மூடநம்பிக்கை என்று வகைப்படுத்தவில்லை என்றாலும் கூட அதுவே நிஜம்.

 

ஆக, யாராக இருந்தாலும் அவர் தாம் செய்யும் செயல்களை – அது எந்த தத்துவத்தின் வழியில் வருவதாக இருந்தாலும், எந்த மதத்தின் அடிப்படையில் இருப்பதாக கொண்டாலும் – அதை மீளாய்வுக்கு உட்படுத்துகிறாரா? இல்லையா? என்பது மட்டுமே அவர் சரியான நிலைபாட்டில் இருக்கிறாரா என்பதை தெளிவதற்கான அளவுகோல். இப்போது கடையநால்லூர் நிகழ்வில் இதை பொருத்திப் பார்ப்போம். தோழர் துராப்ஷாவைத் தாக்கிய, தாக்க நினைத்த, தாக்கியதை சரி என்று எண்ணிய அத்தனை பேரையும் ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் கேட்கலாம், “உங்களிடம் இன்னும் நேர்மை உணர்வு கொஞ்சமேனும் மிச்சமிருக்குமானால் தோழரை நீங்கள் தாக்கியது, தாக்க நினைத்தது, தாக்கப்பட்டதை சரி என்று எண்ணியது சரிதானா?” நீங்கள் விலங்கு நிலைக்கு தாழ்ந்து போக விருப்பமில்லாதவர்களாயின் நீங்கள் மீளாய்வு செய்தே தீர வேண்டும்.

 

உங்களைச் சுற்றி நடக்கும் எத்தனை நிகழ்வுகளுக்கு நீங்கள் காது கொடுத்திருக்கிறீர்கள்? எத்தனை சமூக அநீதிக்கு எதிராக நீங்கள் கொதித்தெழுந்திருக்கிறீர்கள்? உங்கள் வாழ்வை வளங்களை பறித்து உங்களை கடல் கடந்து ஓட வைத்திருக்கும் முதலாளித்துவத்தை நினைத்து நீங்கள் சினந்தது உண்டா? குறைந்தபட்சம் அதை புரிந்துகொள்ளவேனும் முயற்சித்ததுண்டா? உங்கள் கண் முன்னே லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்த போது உங்கள் தார்மீகக் கோபம் எங்கே போனது? கல்வியை கை கழுவிவிட்டு மதுவை அரசுடமை ஆக்கி ஆறாய் ஓடச் செய்திருக்கும் இந்த அரசுக்கு எதிராக உங்கள் கைகள் உயர்ந்ததுண்டா? இன்றல்ல, இரண்டல்ல .. .. சமூகத்தில் நிகழும் பெரும்பாலான செயல்களும் ஏதாவது ஒரு விதத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிராகவே இருக்கின்றன. அவைகள் குறித்த உங்கள் எதிர்வினை என்ன? உங்களை நீங்களே கேள்வி கேட்டதுண்டா?

 

ஆனால், ஆனால் கேவலம் மதத்துகு எதிராய் எழுதினான் என்ற பொய்க் குற்றச்சாட்டை அப்படியே நம்பி  தாக்கத் துணிந்தீர்களே! உங்கள் செயல் சரிதானா என சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணம் வந்ததுண்டா உங்களிடம்? என்றால் நீங்கள் எதுவாக இருக்க விரும்புகிறீர்கள்? கேள்வியை கேட்டு விட்டேன், பதிலை நீங்கள் தான் தேட வேண்டும். ஏனென்றால் நான் உங்களை உயர்தினையாய் மதிக்க விரும்புகிறேன்.

 

முதல் பதிவு: செங்கொடி

கிருஸ்தவ மதத்தை உருவாக்கியது அல்லாஹ் தான்

11 ஜூலை

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 21

(Answering Islam.com இணைதளத்தின் கட்டுரையைத் தழுவியது)

ஈஸா நபி (இயேசு) பிறந்த குழந்தையாக இருந்த நாளிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை  போதித்துவந்தார் என்று  குர்ஆன் சொல்கிறது.

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறினார்.

 (குர்ஆன் 19:23)

(அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினான்.

(குர்ஆன் 19:24)

“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.

(குர்ஆன் 19:25)

“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், ‘மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.

 (குர்ஆன் 19:26)

“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

 (குர்ஆன் 19:30)

“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.

(குர்ஆன் 19:31)

“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.

    (குர்ஆன் 19:32)

“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.

(குர்ஆன் 19:33)

ஈஸா நபி தன் வாழ்நாள் முழுவதும், அதாவது அல்லாஹ் தன்னை தன் அளவில் உயர்த்திக் கொள்ளும்வரை இந்த இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்து வந்தார். குர் ஆனின்படி ஈஸா நபி  கொண்டுவந்த இஞ்ஜில் (பைபிள்) என்ற வேதத்தின் செய்தியும், தனக்கு முன் வந்த நபிமார்கள் கொண்டுவந்த செய்தியும் வெவ்வேறானவை அல்ல. ஈஸா நபி  அல்லாஹ்வின்  நபியாகவும் இருந்து இஸ்லாமை போதித்தார்.

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்’ என்பதே – இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது – தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் – (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.

(குர்ஆன் 42:13) 

அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.

 (குர்ஆன் 43:59)

இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் – ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.

(குர்ஆன் 43:63)

நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).

(குர்ஆன் 43:64)

ஆக, ஈஸா நபி  தான் பிறந்ததிலிருந்து, வானத்திற்கு அல்லாஹ்விடம் எடுத்துக் கொள்ளப்படும் காலம் வரை, கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் யூத மக்களுக்கு இஸ்லாமை போதிப்பதில் செலவழித்தார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு கொண்டு போகப்படும் முன்பு வரை அவருடைய இஸ்லாமிய பிரச்சாரம் ஓரளவிற்கு வெற்றிப் பெற்றதாக இருந்தது என்றுச் சொல்லலாம். ஏனென்றால், அவரை பின்பற்றுகிற பல சீடர்கள் அவருக்கு இருந்தார்கள் என்பதை நாம் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

        ஈஸா நபி  தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாமை போதித்தபடியால், அவருடைய ஆரம்பகால சீடர்களுக்கு அவர் கொடுத்த செய்தி, இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகளைச் சுற்றியே இருந்திருக்கும். இப்போதுள்ள முஸ்லீம்கள் போல அவருடைய சீடர்கள் போதிக்கப்பட்டு அல்லது கற்றுக் கொடுக்கப்பட்டு இருப்பார்கள். இதைத் தான் குர் ஆன்,  ஈஸா நபியைப்பற்றி கீழ்கண்டவாறுச் சொல்கிறது :

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.

(குர்ஆன் 3:52)

“என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்.

(குர்ஆன் 5:111)

அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக இருந்தனர்.

(குர்ஆன் 57:26)

ஈஸா நபி, “லாஹிலாஹா இல்லல்லாஹூ முஹம்மதுர் ரசூலில்லாஹிஎன்ற கலீமாவையே  போதித்தர்என்று  முஸ்லீம்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இந்தக் கலீமா ஆதமை படைப்பதற்கு முன்பே உள்ளதாகும், அல்லாஹ்வின் அர்ஷில் எழுதப்பட்டிருந்த இந்த கலீமாவின் உதவியின் காரணமாகவே ஆதம் மன்னிக்கப்பட்டார் என்பதை முன்பு நான் கூறியிருந்ததை நினைவுபடுத்திக் கொள்ளவும். பர்னபாஸ் சுவிசேஷத்தின் 39-ம் அதிகாரத்தில் ஒளிரும் பிரகாசமான எழுத்துக்களைக் ஆதம் கண்டதாக கூறுகிறது. அதன் உட்பொருள்  இன்று முஸ்லீம்களால் கூறப்படும் கலீமாவைத் தவிரவேறில்லை.   ஈஸா நபி தினமும் ஐவேளை தொழுததாகவும் பர்னபாஸ் சுவிசேஷம் கூறுகிறது.

ஆகவே, ஈஸா நபியின் இஸ்லாமிய போதனைகளை ஏற்றுக் கொண்ட முதல் நூற்றாண்டில் குறிப்பிட்ட அளவிற்கு முஸ்லீகள் இருந்ததாகவும், அல்லாஹ், அவர்களுக்கு செய்த உதவியால் வெற்றியாளர்களாய் ஆகிவிட்டதாகவும் குர்ஆன் கூறுகிறது.

 ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியது போல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.

(குர்ஆன் 61:14)

இந்த வசனத்தின்படி “ஈஸா நபியின்  சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்” என்று குர்ஆன் சொல்கிறது. ஈஸா நபியின் போதனைகளை ஏற்றுக் கொண்டு “வெற்றியாளர்கள் ஆகிவிட்ட” இந்த முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?

ஈஸா நபியின் சீடர்கள் முஸ்லீம்களாக இருந்தார்கள் என்ற வாதம் ஒரு தெளிவான கேள்வியை எழுப்பக் கூடியதாக உள்ளது. முதல் நூற்றாண்டில் முஸ்லீம்கள் இருந்தார்கள் என்பதை ஏன் நாம் ஒரு முறைகூட கேள்விப்பட்டதே இல்லை? இப்படிப்பட்ட முஸ்லீம்கள் பற்றிய ஒரு ஆதாரமும் ஏன் நம்மிடம் இல்லை?

வாதத்திற்காக, முதல் நூற்றாண்டில் குறிப்பிட்ட அளவிற்கு முஸ்லீகள் இருந்ததாகவும், அவர்களுடைய விவரங்கள் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், ஈஸா நபியை கடவுளாக்கிய கிறிஸ்தவர்களால், இஸ்லாம் சம்மந்தப்பட்ட எல்லா ஆதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டதாகவும் முஸ்லீம்கள் கூறலாம்.

அல்லாஹ்வால் “வெற்றியாளர்கள்” என்று அறிவிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை எவ்வித சிறு ஆதாரமுமின்றி அழிக்கமுடியுமா?

எந்த ஒரு நம்பிக்கையையோ, சமுதாயத்தையோ அவ்வாறு அழிக்கமுடியாது. உதாரணத்திற்கு, ஸ்பெயின் நாட்டிலிருந்து இஸ்லாம் விரட்டியடிக்கப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துக் கொள்வோம். அன்றைய ஸ்பெயின் ஆட்சியாளர்கள்,  முஸ்லீம்களை அதிகாரத்தையும், அடக்குமுறைகளைக் கொண்டும்  கிருஸ்துவமதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்தனர். ஸ்பெயினிலிருந்து இஸ்லாமின் சுவடுகளை முற்றிலும் அகற்ற முடியவில்லையே?

முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்ட “தீன்இலாஹி” என்ற மதம் அவருக்குப்பின் ஒருவராலும்  பின்பற்றப்படவில்லை. அக்பரின் வாரிசுகள் கூட அவரது புதிய மதத்தை ஏற்கவில்லை. அக்பரின் மரணத்திற்குப் பிறகு “தீன்இலாஹி” முற்றிலும் அழிந்தது. ஆயினும் “தீன்இலாஹி” பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும், ஆதாரங்கள் இன்றும் உள்ளது. மிக மிக பலவீனமான, அக்பரின் கற்பனையில் உருவான மதம் “தீன்இலாஹி”யின் குறிப்புகள் இருக்கையில், அல்லாஹ்வினால் அற்புதங்களுடன் அனுப்பப்பட்ட ஈஸா நபியின் போதனைகளின் அடிப்படை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறுவது,  முட்டாள்த்தனத்தின் உச்சம்…! ஈஸா நபியின் இஸ்லாமிய போதனைகளை கிருஸ்துவர்கள் அழித்ததாகவோ, அல்லது அழிக்க முயற்சி செய்ததாகவோ எவ்விதமான வரலாற்று குறிப்புகளும் இல்லை. இது முஹம்மது நபியின் வெற்று வார்த்தைகளைத் தவிர வேறில்லை…!

எனவே, கிறிஸ்தவர்களால், இஸ்லாம் சம்மந்தப்பட்ட எல்லா ஆதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டதாக  கூறுவது, அர்த்தமற்றது. கிறிஸ்தவத்திற்கு முந்தைய நம்பிக்கைகளைச் சொல்லக்கூடிய கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவம்-அல்லாத நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இந்த இரண்டு விதமான ஆதாரங்களிலும் ஒரு “முஸ்லீம்-கிறிஸ்தவன்” இருந்ததாக ஒரு தகவலும் இல்லை.

ஒன்று மட்டும் நாம் நிச்சயமாகச் சொல்லலாம், அதாவது “இயேசுவின் மரணம்” பற்றிய விவரம் அந்த காலத்து சமுதாயத்தினருக்கு தெரிந்த விவரமாக இருந்தது. மற்றும் இயேசுவின் ஆரம்பகால சீடர்களாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் போன்றவர்களுக்கு கூட இயேசு தங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்றும் பிறகு உயிர்த்தெழுந்தார் என்றும் அவர்கள் நம்பினர். இது மட்டுமல்ல இயேசுவின் சீடர்கள் இயேசு ஒரு தேவகுமாரன் என்று நம்பினர். இயேசு மரித்தார் மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நம்பினார்கள் என்று புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களிலிருந்தும், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலிருந்தும் நாம் தெரிந்து கொள்கிறோம். பவுல் எழுதிய கடிதங்கள் கூட இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதல் பற்றி அடிக்கடி குறிப்பிடுவதை காணலாம். மட்டுமல்ல, இயேசுவிற்கு பிறகு வாழ்ந்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை நாம் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் காணலாம். எனவே இயேசுவின் சீடர்கள் (அப்போஸ்தலர்கள்) காலத்தில் நிலவிய அவர்களின் நம்பிக்கைக்கு இது ஒரு அத்தாட்சியாகக் கொள்ளலாம்.  

உதாரணத்திற்கு : அப்போஸ்தர் பேதுரு “ரோம பேராயராக” நியமித்த “ரோம் கிளமண்ட் (Clement of Rome)” என்பவர் கூட பல முறை அப்போஸ்தர்களின் நம்பிக்கையாகிய “இயேசுவின் மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதல்” பற்றி பலமுறை எழுதியுள்ளார். அப்போஸ்தலர் யோவான் நியமித்த போலிகார்ப் (Polycarp), என்பவரும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பலமுறை எழுதியுள்ளார். இன்னும் பல “கிறிஸ்தவ அல்லாத ஆதாரங்கள் (Non-Christian Writings)” இயேசுவைப் பற்றியும், அவரது அப்போஸ்தலர்கள் பற்றியும் மிக முக்கியமான விவரங்களைச் சொல்கின்றன. யூத சரித்திர ஆசிரியர் “ஜோசபாஸ் (Josephus)” மற்றும் ரோம சரித்திர ஆசிரியர் டாசிடஸ் (Tacitus) இவர்களின் விவரங்களின்படி, இயேசு பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilate) என்பவர் ஆட்சி செய்யும் போது சிலுவையில் அறையப்பட்டார். ஒரு கிரேக்க நகைச்சுவை (Satirist) எழுத்தாளர் “Lucian of Samosata” என்பவர் இவ்விதமாகச் சொல்கிறார், “இன்று கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஒரு மனிதனை வணங்குகிறார்கள், இவர்களுடைய எல்லா நம்பிக்கைக்கும்  அவர் தான் காரணர் மற்றும் இதனாலேயே  அவர் சிலுவையில் அறையப்பட்டார்”. அவ்வளவு ஏன், யூதர்களின் தல்மட் (Talmud) கூட இயேசுவின் சிலுவையில் அறையப்படுதலைப் பற்றிச் சொல்கிறது.

இந்த முதல் நூற்றாண்டு முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?

ஈஸா நபியின் போதனைகள் என்ன ஆனது?

இந்த கேள்விகளுக்கு வழக்கம் போல “கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் போதனையை மாற்றி விட்டார்கள், மற்றும் கிறிஸ்தவ குருக்கள் ஈஸா நபியின் இஸ்லாமிய போதனையை மொத்தமாக அழித்து விட்டார்கள்” என்று பதில் சொல்ல முடியாது.

 ஈஸா நபிக்கு என்ன நடந்தது என்று குர் ஆன் சொல்வதை மறைத்துவிடுகிறது.

குர்ஆனின் கூற்றுப்படி, ஈஸா நபி சில யூதர்களை முஸ்லீம்களாக மாற்ற அவரால் முடிந்தது என்று அறியலாம். ஆனால், இயேசுவின் சீடர்கள் அல்லது அவரை பின்பற்றியவர்கள், அவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நம்பினார்கள் என்று சரித்திரத்தின் மூலமாக நாம் அறிந்துக கொள்ளலாம். இருந்தாலும், ஈஸா நபி வானத்திற்கு எடுத்துக் கொண்ட பிறகு ஏன் “ஒரு முஸ்லீம் கூட” இல்லை? அவர்களது நம்பிக்கை என்ன ஆனது ? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதில் என்னவென்றால், ஈஸா நபியை பின்பற்றிய எல்லாரும் “ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்  என்றும் அவர் மறுபடியும்  உயிரோடு எழுந்தார்” என்றும் நம்பினார்.

ஈஸா நபியைப் பின்பற்றியவர்களுக்கு, “ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார் ” என்ற நிகழ்ச்சியை உருவாக்கியது யார்? குர்ஆனின்  கூற்றுப்படி, “ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்ற எண்ணத்தை மனிதர்களிடையே  உருவாக்கியதே அல்லாஹ் தான்.

இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்று விட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

(குர்ஆன் 4:157)

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

 (குர்ஆன் 4:158)

குர்ஆனின்  இந்த வாதத்திற்கு வேறு ஆதாரம் ?

இயேசுவின் நேரடிச் சீடராக இருந்த பர்னபாஸ் என்பவரின் பெயரில் எழுதப்பட்ட சுவிசேஷம் கூறும் செய்திகள் அவர் வானத்துக்கு உயர்த்தப்ட்டார் என்றும் அவருக்கு வேறொருவன் ஒப்பாக்கப்பட்டான் என்றும் குறிப்பிடும் குர்ஆனின் செய்தியைக் கூறுகிறது.

பர்னபாஸின் சுவிசேஷம் (ஆங்கிலத்தின் தமிழாக்கம்)

இயேசு நின்ற இடத்திற்கு அருகே யூதாசும் படையாளிகளும் வந்தடைந்தபோது இயேசு ஜனங்களின் ஆரவாரத்தைக் கேட்டு வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார். பதினொரு அப்போஸ்தலர்களும் அப்போது நித்திரையிலிருந்தனர். அப்பொழுது கர்த்தர் தன் ஊழியக்காரனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்து, தன்னுடைய மந்திரிகளாகிய கப்ரியேல், மீக்காயேல், ராஃபேல், உரியேல் என்போருக்கு இயேசுவை பூலோகத்திலிருந்து புறமே எடுத்துவிடும் படிக்கு கட்டளையிட்டார். தெற்குப் பக்கமாக திறந்திருக்கும் சாளரம் வழியாக  இயேசுவை தேவ ஊழியர்கள் வெளியே எடுத்தார்கள். அவரையும் கொண்டு அவர்கள் கர்த்தரின் அருள் என்றைக்கும் நிலைத்து நிற்கக்கூடிய தேவ ஊழியக்காரர்கள் தங்கியிருக்கக்கூடிய மூன்றாவது வானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

        இயேசு எடுக்கப்பட்ட உடனே யூதாஸ் மற்றவர்கள் முன்னிலையில் அறைக்குள் சாடிச் சென்றான். அப்போது எல்லா அப்போஸ்தலர்களும் நித்திரை கொண்டிருந்தனர். அப்பொழுது அற்புதங்களை உடைய கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தினார்! யூதாசின் உரையாடலும் அவனது முகமும் இயேசுவினுடையது போல ஆயிற்று! நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது! எங்களை எழுப்பி அவன் குரு எங்கே என்று தேடினான். அப்பொழுது நாங்கள் வியப்புடன் அவனுக்கு பதில் கூறினோம் ”ஆண்டவரே! தாங்கள் தானே எங்களுக்கு குருவானவர், இப்போது எங்களை மறந்து விட்டீர்களா?” அவன் புன்னகைத்துக் கொண்டு கூறினான்: நான்தான் யூதாஸ் இஸ்காரியாத், இதனைப் புரியாத நீங்கள் இப்போது அறிவீனர்களே!”

        இப்படிக் கூறிக்கொண்டிருக்கையில் படையாட்கள் உள்ளே நுழைந்தனர். முற்றிலும் இயேசுவைப் போல மாறிவிட்டிருந்த யூதாசைப் பிடித்துக் கொண்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த படையாட்களுக்கு இடையில் நாங்கள் ஓடுகையில் யூதாஸ் கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். நார்ப்பட்டுத் துணியால் தன்னைப் போர்த்தியிருந்த  யோவான் எழுந்து ஓடியபோது ஒரு படையாள் நார்ப்பட்டுத் துணியைப் பிடித்தபோது, அவர் அதை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்! இயேசுவின் வேண்டுதலுக்கு கர்த்தர் செவி கொடுத்து, பதினொன்று பேரும் காப்பாற்றப்பட்டார்கள்.

        படையாட்கள் யூதாசைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர். அவனோ தான் இயேசு அல்ல என்று மறுத்துக் கொண்டிருந்தான். படையாட்கள் அவனைப் பரிகசித்துக் கொண்டு சொன்னார்கள், ஐயா, தாங்கள் பயப்படவேண்டாம், தங்களை இஸ்ரவேலரின் மன்னராக ஆக்குவதற்கு நாங்கள் வந்திருக்கிறோம். அரசாட்சியை தாங்கள் மறுப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் உங்களைப் பிடித்து வைத்துள்ளோம்!”

(The Gospel of Barnabas: Translated by Lonsdale and Laura Ragg, Chapter 215,217)

“The Gospel of Barnabas”-பர்னபாஸ் என்ற சீடரால் எழுதப்பட்டதல்ல.  இது மிக பலவீனமான ஆதாரமாகும். இந்த சுவிசேஷம் கிபி 1585 ல் எழுதப்பட்டதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.  பர்னபாஸ் சுவிசேஷம் இட்டுக்கட்டி எழுப்பட்ட புத்தகமென்பதற்கு ஏராளமான ஆதரங்கள் இருக்கின்றன. பர்னபாஸ் எழுதிய கடிதங்கள்  இந்த சுவிசேஷத்திற்கு எதிரான செய்திகளைக் கூறுகிறது. இருப்பினும், குர்ஆன் கூறும் ஆள்மாறாட்டம் எவ்வாறு நிகழ்ததென்பதைக் அறிந்து கொள்வதற்காகவே இதையும் முன்வைக்கிறேன். )

அல்லாஹ்வால் நிகழ்தப்பட்ட ஆள்மாற்றத்தை, ஈஸா நபியின் (இயேசுவின்)  தாயாரான மரியம் அவர்களாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவரும் தன்மகன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதாகவே நம்பினர். அல்லாஹ்வால், ஈஸா நபி வானிற்கு உயர்த்தப்பட்டதாகக்  கொண்டு நாம் விவாத்தைத் தொடர்வோம்.

அதாவது, மனித உடலுடன் அவர் இரண்டாம் வானத்திற்கு உயர்த்தப்பட்டார். இது ஒருமுரண்பாடான செய்தியாகும். எந்த வகையான சொர்க்கத்தைப் (வானம்) பற்றி  முஹம்மது நபி கூறுகிறார் என்பது புரியவில்லை. சொர்க்கம் என்பது ஆன்மாக்கள் வாழும் பகுதியாக இருந்தால், ஈஸா நபி மனித உடலுடன் அங்கு எப்படி வாழ முடியும்? ஈஸா நபி, உணவு, உடை, இயற்கைத் தேவைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சராசரி மனிதர். பூமியை போன்ற ஒரு இடத்தில்தான் அவரது உடலால் வாழ முடியும். எனவே முஹம்மது நபிகூறும் சொர்க்கம் பூமியைப் போன்ற பொருள் சார்ந்த உலகமாகவே தோன்றுகிறது. இதன் அடிப்படையில் நோக்கினால், ஈஸா நபி மட்டுமே மிக நீண்ட காலமாக, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதராவர். அப்படியானால் அல்லாஹ்வும் பூமியைப் போன்ற பொருள் சார்ந்த  பகுதியில்தான் தனது இருக்கையை (அர்ஷ்) அமைத்து அமர்ந்து கொண்டிருக்கிறானா?.

ஈஸா நபியை எதற்காக  தன்அளவில் (வானத்திற்கு) உயர்த்திக் கொண்டான்?

ஈஸா நபியை, தீய யூதர்கள் மற்றும் ரோம ஆட்சியாளர்களின் கைகளிலிருந்து  காப்பாற்றுவதே மைய நோக்கமென்றால், தனது நேசத்திற்குரிய ஒரு நபியை அநியாயமாகக் கொடூரமான முறையில் கொல்லத் துணிந்தவர்களின் மனதை மாற்றியிருக்கலாம், அல்லது  மற்றவர்களையும் எச்சரிக்கும்  முறையில் அவர்களை தண்டிக்கலாம் அல்லது  யூத மற்றும் ரோம ஆட்சியார்களை ஏமாற்றாமல், ஈஸா நபியை  அப்படியே எல்லாருக்கும் முன்பாக எல்லோரும் தெளிவாகக் காணும் முறையில் தன் அளவில் உயர்த்திக் கொள்ளலாம். மனிதர்கள் தங்களது இயலாமையின் காரணமாக எதிராளியை ஏமாற்றி தங்களது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக செய்யும் ஆள்மாறாட்ட வித்தையை சர்வவல்லமையுடைய அல்லாஹ்வும் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

அல்லாஹ் “ஈஸா நபியை பாதுகாப்பாக” தன் அளவில் எடுத்துக்கொண்டு அவருக்கு உரிய பாதுகாப்பு அளித்து விட்டானே. ஆள்மாறாட்டம்  செய்ய வேண்டிய அவசியம் என்ன?

நள்ளிரவில் மிக ரகசியமாகச் செய்யப்பட்ட இந்த ஆள்மாறாட்டத்தின் நோக்கம், ஈஸா நபியின்  எதிரிகள் ” ஈஸா நபியை  சிலுவையில் அறைந்து கொன்று விட்டோம்” என்று நம்பி ஏமாற வேண்டும் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது. (இயேசுவின் தாயார் உட்பட ஒருவருமே அறியாத,   அல்லாஹ்வால் ரகசியமாகச் செய்யப்பட்ட ஆள்மாறட்ட நிகழ்ச்சியை பர்னபாஸ் மட்டும் எப்படி அறிந்து கொண்டார்?) சர்வ வல்லமையுடையவனாகிய அல்லாஹ்விற்கு, ஆள்மாறாட்டம் செய்துதான் தன்னுடைய தூதரைக் காப்பாற்ற முடியுமா? அப்படி ஒரு கட்டாயம் என்ன?

அல்லாஹ்வின் திட்டப்படி வானவர்களால், ஈஸா நபி காப்பாற்றி அழைத்துச் செல்லப்படுவதை  யூத ரோமானியப் படைவீரர்கள் அறிந்து, வானவர்களை வழிமறித்து ஈஸா நபியை திரும்பவும் பூமிக்கு கொண்டுவந்து சிலுவையில் அடித்து கொன்று விடுவார்களோ  என்று அல்லாஹ் அஞ்சியிருக்க வேண்டும். எனவே படையாட்களின் கவனத்தை முற்றிலும் திசைதிருப்பி ஏமாற்றி ஈஸா நபியைக் காப்ற்றியிருக்கிறான் என்ற காரணத்தைத்தவிர வேறு எதுவுமில்லை.

 குர்ஆனின் கூற்றில் மறைந்துள்ள முட்டாள்தனத்தை உங்களால் அறிய முடிகிறதா?

எல்லோரும் தெளிவாகக் காணும் முறையில் ஈஸா நபியைத்  தன் அளவில் உயர்த்தி எடுத்துக் கொண்டிருந்தால், இப்படி பல மக்களை ஏமாற வேண்டிய அவசியமே இருந்திருக்காதே? ஆனால், அல்லாஹ்வின் இந்த ஏமாற்றுச் செயல், கிறிஸ்தவம் உருவாக காரணமாகி விட்டது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவம் இப்படித் தான் ஆரம்பித்தது என்று குர்ஆன் நம்மை நம்பச் சொல்கிறது. 

ஈஸா நபியை கொல்ல நினைத்தவர்களை மட்டும் ஏமாற்ற வேண்டும் என்பது தான் அல்லாஹ்வின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கும் என்று நாம் நினைத்தாலும், ஈஸா நபியின் சீடர்கள் உட்பட அனைவரும் அல்லாஹவால் ஏமாற்றப்பட்டனர் என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்து கொள்ளலாம்.

தஜ்ஜால்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

ஷாருக்கானின் இந்தியாவும் சையத் காஸ்மியின் இந்தியாவும்

25 மே

காஸ்மியை விடுவிக்க நடந்த ஆர்பாட்டத்தில் அவர் மனைவி-மகன்

 

அரண்மனை பாதுஷாக்கள் அதே தோரணையோடு உப்பரிகையில் இருக்கலாம், அம்பாரியில் பவனி வரலாம். ஆனால் தெருவிலிறங்கி அப்படி நடக்க முடியுமா? ஒருவேளை அப்படியொரு அசந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டால் என்னவாகும்? செருப்பில் குத்திய சிறு கல்லுக்காக பூமியைத் தாங்கி நிற்கும் டெக்டோனிக் தகடுகளே மேலெழுந்து வந்து கூத்தாடி பாதுஷாவின் முன் பணிந்து மன்னிப்புக் கேட்டு விடுமா என்ன? கேட்பதற்கே வினோதமான நகைப்புக்கிடமான இது போன்ற கதைகள் சாத்தியமில்லாதது என்று நீங்கள் நினைத்தால், அந்த நினைப்பைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்.

பாலிவுட்டின் பாதுஷா என்று போற்றப்படும் ஷாருக் கான் கடந்த மாதம் 12-ம் தேதி அமெரிக்கா சென்ற போது விமான நிலைய அதிகாரிகள் 2 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.  அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் Chubb Fellowship எனப்படும் சிறப்பு விருது ஒன்றைப் பெற அம்பானியின் மனைவி நீத்தா அம்பானியுடன் தனியார் விமானத்தில் சென்று இறங்கிய போது தான் அவருக்கு இந்த ‘அவமானம்’ நேர்ந்தது.

ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்ட  பல்கலைக்கழக நிர்வாகிகள், உடனடியாக பாதுகப்புத் துறை மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அவரை சீக்கிரம் விடுவிக்க வகை செய்துள்ளனர்.

அடிமை நாட்டின் ராஜபார்ட்டுக்கு நேர்ந்த இந்த மாபெரும் அவமரியாதைக்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவே களத்திலிறங்கி கம்பு சுற்றியுள்ளார். நடந்த சம்பவம் இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என்று குறிப்பிட்டவர், இனி இந்தியாவுக்குள் நுழையும் அமெரிக்கர்களுக்கு இதே விதமான ‘மரியாதை’ தான் காட்டப்படும் என்றோ, அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை இந்தியா மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் என்றோ அறிவித்து விடவில்லை. மாறாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவை அழைத்து மேற்படி சம்பவத்தின் மூலம் இந்தியாவுக்கு நேர்ந்த அவமானத்தின் பரிமாணத்தை அமெரிக்க எஜமானர்கள் முன் பவ்வியமாக வைக்கும் படி கேட்டிருக்கிறார்.

இந்திய ஆளும் வர்க்கம் மயிலறகால் அடித்த அடியைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் நடந்த சம்பவத்துக்காக ‘மன்னிப்பு’ கேட்டுள்ளனர். அந்த மன்னிப்பிலும் எந்த காரணத்துக்காக ஷாருக்கான் மேல் தாங்கள் சந்தேகப்பட்டோம் என்கிற விளக்கமோ இனிமேல் இவ்வாறு நடக்காது என்கிற உறுதிமொழிகளோ இல்லை. ஆனாலும் அடிக்கிற கை தானே அணைக்கும் என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு விஷயத்தை ஆறப்போட்டு விட்டது இந்திய அரசும் அல்லக்கை ஊடகங்களும். செருப்பால் அடித்தாலும் மறக்காமல் கருப்பட்டியைக் கொடுத்து விட்டார்களல்லவா?

ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தைப் பற்றி காட்டமாக எழுதிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் அனைத்தும், நடந்த சம்பவத்திற்கான அடிப்படையான காரணம் பற்றி மூச்சே விடவில்லை. ஷாருக்கான் போன்ற மாபெரும் அப்பாடக்கருக்கே இந்த நிலையா, இதைக் கேட்பாரில்லையா என்றெல்லாம் குரல்வளை கிழிய கூவிய ஊடகங்கள், இது இந்தியாவுக்கே நேர்ந்த அவமானமென்றும், அமெரிக்காவுக்கே இதே பிழைப்பாய்ப் போய் விட்டதென்றும் அங்கலாய்த்திருந்தன. ஆனால், மறந்தும் கூட மேற்படி கார்ப்பரேட் கூத்தாடி துரதிர்ஷ்டவசமாகவோ அசந்தர்ப்பமாகவோ ‘ஷாருக்கான்’ என்கிற முசுலீம் பெயரைத் தாங்கிக் கொண்டிருப்பதாலேயே தான் இந்த அவமானத்தைச் சந்திக்க நேர்ந்தது என்கிற கசப்பான உண்மையைப் பற்றி வாயே திறக்கவில்லை.

ஒருவேளை அப்படிச் சொல்ல நேர்ந்து விட்டால் தேவையில்லாமல் அமெரிக்காவின் முசுலீம் இனவிரோத பாஸிச அரசியல் பற்றியும், அதைத் தொடர்ந்து உலகெங்கும் முசுலீம்களை அமெரிக்கா எப்படி நடத்துகிறது – இசுலாமிய நாடுகளை எப்படிக் குத்திக் குதறுகிறது என்பதைப் பற்றியெல்லாம் வாசகர்களுக்கு நினைவூட்டியதைப் போலாகி விடுமல்லவா? இவர்களே இத்தகைய முசுலீம் வெறுப்பு அரசியலைத்தான் செய்து வருகிறார்கள். இது இந்துத்துவ பா.ஜ.கவிற்கும், ‘மதச்சார்பின்மை’ காங்கிரசுக்கும் வேறுபாடின்றி பொருந்தும். அதனால் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாய் விளங்கும் இந்த அல்லக்கைகளின் பார்ப்பன ஆன்மாவுக்கு தவறிக் கூட அப்படியெல்லாம் எழுதக் கைவராது என்பதே உண்மை. ஊதாங்குழலில் இருந்து சிம்பொனி இசையா பிறக்கும்?

ரத்த நாளங்களெங்கும் அடிமைத்தனமும் கோழைத்தனமும் பாயும் உணர்வுப்பூர்வமான அடிமைகளுக்கென்றே ஒரு விசேஷ குணம் இருக்கிறது – எந்தளவுக்கு எஜமானன் முன் மண்டியிட்டுக் குனிந்து குழைந்து போகிறார்களோ அந்தளவுக்கு தனக்குக் கீழ் இருப்பவர்கள் முன் விறைப்புக் காட்டுவார்கள். எடுப்பது பிச்சையென்றாலும் ராத்திரி பெண்டாட்டியைப் போட்டு அடிக்கும் பிச்சைக்காரர்களையும், செய்வது கூலி வேலையென்றாலும் ‘நாங்களெல்லாம் சத்திரிய பரம்பரை தெரியுமில்லே’ என்று தலித்துகளிடம் மீசை முறுக்கும் சாதி வெறி அற்பர்களையும் கொண்ட புண்ணிய பூமியாயிற்றே?

ஷாருக்கானுக்கு அமெரிக்காவில் நேர்ந்த அவமரியாதைக்குப் பொங்கிய இந்தியா, அமெரிக்க அதிகாரிகள் எந்த அடிப்படையில் அவரை இரண்டு மணி நேரங்கள் தடுத்து வைத்தார்களோ அதே  அடிப்படையில் ஒரு அப்பாவியைச் இங்கே சிறையில் தள்ளியிருக்கிறார்கள். இவர் ஷாருக்கானைப் போல் ஒரு கார்ப்பரேட் கூத்தாடியாக இல்லாத ஒரே பாவத்துக்காக பத்திரிகைகளும் பெரிதாக இதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.

சையது அஹமது காஸ்மி ஒரு உருது பத்திரிகையாளர். மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். குறிப்பாக ஈரான், சிரியா போன்ற நாடுகளின் அரசியலைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். இப்பிராந்திய அரசியல் பற்றி எழுதக் கூடிய மிகச் சில இந்திய (Political Analyst) அரசியல் ஆய்வாளர்களில் ஒருவர் . மார்ச் 6-ம் தேதி தூர்தர்ஷன் உருது சேனலின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு திரும்பிய காஸ்மியை காலை 11:30 வாக்கில் போலீசார் கைது செய்கிறார்கள். பிப்ரவரி மாதம் இசுரேலிய தூதரக அதிகாரி ஒருவரின் மனைவியினுடைய கார் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் வழக்கு சம்பந்தமான ஆவணங்களையோ கைது செய்தற்கான அடிப்படை ஆதாரங்கள் இன்னதென்றோ தெரிவிக்க காவல்துறை மறுத்துள்ளது. பின்னர் நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்த ஆவணங்களை காஸ்மியின் வழக்கறிஞர்கள் பரிசீலித்த போது, அதில் நடந்த சம்பத்தோடு காஸ்மியைச் சம்பந்தப்படுத்தும் வகையிலான குறிப்பான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று தெரியவந்துள்ளது. ஈரானிய விவகாரங்கள் பற்றி தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதியும் பேசியும் வந்த காஸ்மிக்கு ஈரானியர்கள் சிலரோடு தொடர்பு ஏற்பட்டதாகவும், அதில் சிலர் சந்தேகத்துக்குரியவர்களென்றும், அவர்கள்தான் கார் குண்டு வெடிப்புக்காக காஸ்மி உதவி செய்ய வேண்டி அமெரிக்க டாலர்களைக் கொடுத்துள்ளார்களென்றும் கதையைக் கட்டி விடும் போலீசு,  இதற்கு ஆதாரமாக காஸ்மியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சில டாலர் நோட்டுகளைக் காட்டுகிறது – அந்த நோட்டுகளின் மொத்த மதிப்பு 1254 டாலர்கள் மட்டுமே.

சையத் அஹ்மத் காஸ்மி

 

மேலும் காஸ்மியின் வீட்டிலிருந்து ஸ்கூட்டி ஒன்றைக் கைப்பற்றியிருக்கும் போலீசு, இதில் சென்று தான் தீவிரவாதிகள் குண்டு வைத்தனர் என்றும் சொல்கிறது. மேலும், குண்டு வைத்தவர்களுக்கு காஸ்மி தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார் என்றும் சொல்கிறது. அதே போல் காஸ்மியின் செல்பேசியிலிருந்து சில ஈரானிய எண்களுக்கு பேசப்பட்டிருப்பதையும் போலீசு ஆதாரம் என்று காட்டுகிறது. இதில் போலீசார் குறிப்பிடும் அந்த ஸ்கூட்டி வண்டி, சுமார் இரண்டு வருடங்களாக பயன்படுத்தப்படாமல் காஸ்மியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த ஓட்டை ஸ்கூட்டியை ஓட்டிப் போய் குண்டு வைத்து விட்டு தப்பிக்க வேண்டுமென்றால் அது இளைய தளபதி விஜயைத் தவிற இந்த பிரபஞ்சத்திலேயே வேறு யாராலும் முடியக் கூடிய காரியமல்ல. அதே போல் ஒரு பத்திரிகையாளர் என்கிற வகையிலும், அதிலும் மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய அரசியல் வல்லுனர் என்கிற வகையிலும், ஈரானிய செய்தி நிறுவனம் ஒன்றிற்காக வேலை பார்ப்பவர் என்கிற வகையிலும், காஸ்மியின் செல்பேசியிலிருந்து ஈரானிய எண்களுக்கு அழைப்புகள் செல்வதும் இயல்பானது தான். வெளிநாட்டு ஊடகங்களின் பிரதிநிதியாய் வேலை செய்பவர் ஆயிரம் அமெரிக்க டாலர் வைத்திருப்பதும் இயல்பானதுதான்.

ஆக, தீர்ப்பு இன்னதென்று முடிவு செய்து விட்டுத் தான் விசாரணையையே தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் போலீசு என்கவுண்டர்களுக்கு எழுதும் திரைக்கதையை விட மிக மொக்கையான கதையை எழுதியிருக்கிறார்கள். இது ஒன்றும் இந்தியாவின் காவல் துறைக்குப் புதிய விஷயமல்ல. நாண்டெட், சம்ஜௌதா, ஹைதரபாத் என்று எங்கே குண்டு வெடித்தாலும் விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சில பத்து முசுலீம் இளைஞர்களைக் கைது செய்து, சித்திரவதை செய்வது காவல் துறையின் வாடிக்கையான நடவடிக்கை தான். அதே போல் இங்கே நடந்த பேர்பாதி குண்டு வெடிப்புகளைச் செய்ததே  ஆர்.எஸ்.எஸ் கும்பல் தானென்பது விசாரணையின் போக்கில் வேறு வழியின்றி வெளிப்பட்டு அம்பலமாவதும் நமக்குப் புதிதில்லை தான்.

பிப்ரவரி மாதம் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து எந்த விசாரணையோ முகாந்திரமோ இல்லாமல் குண்டு வெடிப்புக்குக் காரணம் ஈரான் தானென்று முதலில் இசுரேல் குற்றம் சுமத்துகிறது. ஈரானின் மேல் இசுரேலும், அமெரிக்காவும் பொருளாதாரத் தடை விதித்துள்ளதையும், ஈரானின் பெட்ரோலை எந்த நாடுகளும் இறக்குமதி செய்யக் கூடாது என்று அமெரிக்கா அடாவடித் தனம் செய்து வந்ததையும், அந்தச் சூழ்நிலையில் இந்தியா தனது மொத்த எண்ணைய் இறக்குமதியில் சுமார் 16 சதவீதம் அளவுக்கு ஈரானிடம் இருந்து கொள்முதல் செய்து வந்ததையும், இதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவும் இசுரேலும் அழுத்தம் கொடுத்து மிரட்டி வந்ததையும் பின்னணியில் கொண்டே மேற்படி குண்டு வெடிப்பையும் அதைத் தொடர்ந்து இசுரேல் கூறிய குற்றச்சாட்டையும் காண வேண்டும். ஆரம்பத்தில் இசுரேல், ஈரான் மேல் சுமத்திய குற்றச்சாட்டுக்கு அடிப்படையேதும் இல்லை என்று சொல்லி வந்த இந்தியா, அதன் பின் இசுரேல் கொடுத்த அழுத்தங்களின் அடிப்படையில் தான் தனது நிலையை மாற்றியிருக்கிறது.

ஷாருக் கானை அமெரிக்கா இரண்டு மணி நேரங்கள் தடுத்து வைத்ததன் அடிப்படை என்னவென்பதை இந்திய ஆளும் வர்க்கமோ அதன் அல்லக்கை ஊடகங்களோ பேசாமலிருப்பதன் காரணம் இவர்கள் பவிசாகப் போட்டுக் கொண்டு திரியும் ஜனநாயக முகமூடிகளுக்குப் பின் ஒளிந்து கொண்டிருக்கும் பார்ப்பன பாஸிச ஒரிஜினல் மூஞ்சிகளிகளின் யோக்கியதை தான் காரணம்.  ஷாருக்கான் ஒரு கார்ப்பரேட் கூத்தாடி என்பதாலோ முதலாளிகளின் அரசவைக் கோமாளி என்பதாலோ ஒரு சம்பிரதாயமான மன்னிப்பு அறிக்கையைப் பெற்றிருக்கிறார் – குவாண்டனாமோ பேயிலும், இந்தியச் சிறைகளிலும் முசுலீம் என்கிற ஒரே காரணத்துக்காக எந்தக் குற்றமும் செய்யாமல் வருடக்கணக்கில் வாடும் அப்பாவி முசுலீம்களின் நியாயம் யாரால் தீர்க்கப்படும்?

இதில் இந்திய ஊடகங்கள், நடுத்தர வர்க்கத்தின் சென்டிமெண்டை பெற்ற ஷாருக்கானும் கூட தான் முசுலீம் என்பதற்காக தடுக்கப்பட்டதை கண்டிக்கவில்லை. ஆக முசுலீம் மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத அவதூறை ஆதரித்துக் கொண்டுதான் இத்தகைய ‘முன்னுதாரணமான’ முசுலீம்கள் பிசினெஸ் செய்யமுடியும். இதைத்தான் அவர் நடித்த “மை நேம் ஈஸ் கான்” படத்தின் கதையும் கூறுகிறது. அதாவது ‘பயங்கரவாத’ முசுலீம்களை பிடித்துக் கொடுத்தபடிதான் தனது மீதான பயங்கரவாதத்தை அமெரிக்க ஜனதிபதி வரை சென்று அகற்றப் போராடுவார். பகவத் கீதை படிக்கும் ‘முசுலீமாக’ இருப்பதால்தான் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக பாரதிய ஜனதா ஆக்கியது.

நாட்டில் பெரும்பான்மையான முசுலீம் மக்கள் இத்தகைய பாசிச அடக்குமுறைகளை எதிர்கொண்டபடிதான் வாழ்கின்றனர். அவர்கள் மீது கரிசனம் கொள்ளக்கூடாது என்போர்தான் ஷாருக்கானுக்கு நேர்ந்த அவமானத்தை அகற்ற துடிக்கின்றனர். அதுவும் அவர் ஒரு முசுலீம் என்ற அடையாளத்தை மறைத்து விட்டு……

_____________________________________________

தமிழரசன்

முதல் பதிவு: வினவு

%d bloggers like this: