Tag Archives: மக்கள்

இன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்?

26 பிப்

நேற்று [24.02.2016] கடையநல்லூர் புதுத்தெருவில் வசிக்கும் 19 வயது மாணவன் மர்மக் காய்ச்சலுக்கு பலியானான் எனும் செய்தியை செவியுற்ற போது இப்படித் தான் மனம் எண்ணியது, “இன்னும் எத்தனை பேர் பலியாக வேண்டும்?” ஒரு நெடுங்கதை தொடர்வது போல் ஒவ்வொரு ஆண்டும் இப்படி மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இப்படி மரணம் நிகழ்ந்தவுடன் நகரில் குப்பை கூழங்கள் பெருகி விட்டன, கால்வாய்கள் சாக்கடையாகி விட்டன, மனிதக் கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுகின்றன என ஏதேதோ காரணங்கள் கூறுவதும் வழக்கமாகி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு காய்ச்சல் பொழுதில் இத்தளத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பை இங்கு மீள்பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என எண்னுகிறேன்.

கடையநல்லூரின் கழிவுகள் அகற்றப்படுவதற்கு இரண்டு கால்வாய்கள் இருந்தும், அவை இரண்டுமே பராமரிக்கப்படாமல் சாக்கடைகளாகிவிட்டன. மட்டுமல்லாது ஆக்கிரமிப்புகளும் அந்தக் கால்வாய்களை தோற்றத்திலும் கூட சாக்கடைகளாக உருமாற்றிவிட்டன. சுகாதாரக்கேடு என்று மக்களை மட்டும் குற்றம்சாட்டுவதில் பொருளில்லை. ஏனென்றால், அரசு மருத்துவமனையிலேயே மருத்துவக் கழிவுகளை கால்வாயில் தான் கொட்டுகிறார்கள். மனிதக் கழிவுகளை கால்வாயில் கலப்பது சுகாதார சீர்கேடுதான் என்றாலும், ஒட்டுமொத்தக் காரணத்தையும் அதன் தலையில் சுமத்துவது மெய்யான காரணத்தை மறைப்பதற்காகத்தான். பத்தாண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான மக்கள் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். பலரை மரணத்தில் தள்ளக்கூடிய மர்ம நோய்கள் எதுவும் அன்றைய காலங்களில் பீடித்ததில்லை. இன்று பெரும்பாலான வீடுகளில் நவீன கழிப்பறைகள் இருந்தும், திறந்தவெளிகளெல்லாம் மறிக்கப்பட்டு கட்டணக் கழிப்பிடங்களாக மாற்றப்பட்ட பின்பும் புதுப்புது நோய்கள்.

நகராட்சி பெருகும் மக்களுக்கு ஏற்ப சுகாதாரத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. யாராவது தலைவர்கள் வந்தாலோ, அல்லது இதுபோன்ற நோய் பீடிக்கும் நேரங்களிலோ சுண்ணாம்பு கலந்த பிளீச்சிங் பொடியை தூவி விடுவதும், எப்போதாவது கொசு மருந்து அடிப்பதும் தான் பெரிய அளவிலான சுகாதார நடவடிக்கைகள். சுகாதாரத்திற்கென எந்த திட்டமிடாமலிருப்பதும், கால்வாய்களை பராமரிக்காமல் நீர் தேங்கவிட்டு ஊரையே சாக்கடையாக்கியிருப்பதும் தான் மெய்யான காரணம்.

அப்படி என்ன தான் பிரச்சனை கடையநல்லூரில்? கடையநல்லூர் மட்டுமே அசுத்தமாக இருக்கிறது என்று யாராலும் கூற முடியாது. நீர்நிலைகளை பராமரிப்பிலிருந்து அரசு என்று விலகிக் கொண்டதோ அன்றிலிருந்தே எல்லா ஊர்களிலும் உள்ள அனைத்து நீர்நிலைகளும் சாக்கடைகளாக மாறி விட்டன. நகர் நிர்வாகம் தனியார்மயமாகியதும், நகர் மன்றம் என்பது ஊழலை பிழைப்புவாதத்தை பரவலாக்குவதும் தான் என்றான பின் நகரின் மீதான, நகர மக்களின் மீதான அக்கரை என்பதை எதிர்பார்க்க முடியுமா? நகர நிர்வாகங்கள் சீரழிந்து போய் ஊழலை கீழ்மட்டம் வரை பரவலாக்குவது என்பது எல்லா இடங்களிலும் இருக்கும் பொதுவான அம்சம் என்றாலும் கடையநல்லூரில் ஆண்டுதோறும் கோடைகாலத் தொடக்கங்களில் தவறாமல் அந்த மர்மக் காய்ச்சல் வந்து சிலரைக் கொன்று செல்வதின் தனிச் சிறப்பான காரணம் என்ன? கடையநல்லூரின் இந்த குறிப்பான நிலமைக்கு நகர் நிர்வாகச் சீர்கேடு என்ற பொதுவான காரணத்தை கூறி விலகிச் செல்ல முடியுமா? யார் பொறுப்பேற்பது? யார் விளக்குவது?

எனவே, பொதுவான காரணங்களைக் கூறி கடையநல்லூரின் குறிப்பான பிரச்சனையை தள்ளிவைக்க முடியாது. ஆண்டு தோறும் கடையநல்லூரைத் தாக்கும் இந்த மர்மக் காய்ச்சலுக்கு தனிப்பட்ட காரணம் ஏதோ இருந்தாக வேண்டும். அந்தக் காரணத்தை கண்டறிந்து களையாத வரை கடையநல்லூரின் தொடர் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட மாட்டாது. இதை கண்டறிந்து நீக்குவதை வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடாதவரை அரசின் கடையநல்லூர் நகராட்சியின் செவிட்டுச் செவிகளில் இது ஏறப் போவதில்லை. அப்படியான சமரசமற்ற போராட்டத்துக்கு மக்களே நீங்கள் தயாரா? இதற்கு பதில் கூறாமல் உயிரிழப்புகளை கண்டு இரக்கப் பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.

Advertisements

ஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே

25 ஜன

tntj appalam

திருச்சி ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து தெரியாதவர்கள் யாரும் இருந்தால் அவர்கள் வேறு எங்கோ இருந்து தமிழ்நாட்டுக்கு புதிதாக வந்திருக்கிறார்கள் என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்காக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. விளம்பரத்துக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 30 கோடிக்கும் மேல் என்று சொல்கிறார்கள். இது அதிகமா குறைவா என்ற விவாதம் நமக்கு தேவையில்லாத ஒன்று. ஏனென்றால் டி.என்.டி.ஜே வினருக்கே விளப்பரத்துக்காக இந்த அளவில் – அப்பளத்தில் மாநாட்டு விளம்பரம் செய்யும் அளவுக்கு – சென்றிருப்பது முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் பிஜேவே எழுந்தருளி சமாதானம் செய்யும் அளவுக்கு நிலமை சென்றிருக்கிறது. ஆனால் பொருட் செலவுகளுக்கு அப்பாற்பட்டு வேறு சில விசயங்கள் நமக்கு தேவையாய் இருக்கின்றன. இஸ்லாமிய இளைஞர்களின் முகம் எங்கு நோக்கி திருப்பபடுகிறது என்பதில் நமக்கு கவலையுண்டு. இஸ்லாமிய இளைஞர்களை இந்த சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட தனித் தீவுகளாக, இலக்கற்று அலைந்து திரியும் எதோ ஒன்றாக எம்மால் கருத முடியாது. அந்த அடிப்படையில் சில கேள்விகளை இஸ்லாமிய இளைஞர்களிடம் எழுப்புவது அவசியம் எனக் கருதியதால் இந்தக் கட்டுரை வடிவம் பெறுகிறது.

முதலில் ஷிர்க் என்றால் என்ன? இறைவனுக்கு இணை வைக்கும் குற்றத்தைச் செய்வது ஷிர்க் எனப்படுகிறது. இந்த ஷிர்க் எனும் அரபு கலைச் சொல்லுக்கு முழுமையான பொருளைத் தேடினால் அது இஸ்லாமிய இறையியலுக்குள் பல சுய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். அந்த சுய முரண்பாடுகளை சுரம் பிரித்து ஆலாபிப்பது நம்முடைய நோக்கமில்லை. ஏனென்றால், இங்கு நாம் நாத்திகம் பேச வரவில்லை. மெய்யாகவே இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது? என்பது குறித்த தெளிவை இஸ்லாமிய இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டிய கடமையும் கவலையும் இருக்கிறது.

சரி. ஷிர்க் என்பது இணை வைத்தல் என்றால் எதுவெல்லாம் ஷிர்க் ஆக கருதப்படும்? இறைவனுக்கு அதாவது அல்லாவுக்கு இணையாக அறிந்தோ, அறியாமலோ எதையெல்லாம் கருதுகிறோமோ அதுவெல்லாம் ஷிர்க் ஆக கருதப்படும். இப்படி ஷிர்க் ஆக கருதப்படும் வாய்ப்புள்ள அனைத்தையும் எதிர்த்து ஒழிக்கும் முயற்சியில் இறங்கினால் தான் அது ஷிர்க் ஒழிப்பு எனப்படும். ஆனால் தற்போது டி.என்.டி.ஜே வினரால் திருவிழாவாக கொண்டாடப்பட எதிர்நோக்கியுள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாடு இவ்வாறான அனைத்தையும் ஒழிக்கும் முயற்சிகளை தன்னுள்ளே கொண்டுள்ளதா? இந்த கேள்விக்கு ஆம் என பதில் சொல்ல எவராவது முன் வருவார்களா? டி.என்.டி.ஜே வினரின் கொண்டாட்ட மாநாடு ஒரே ஒரு அம்சத்தை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. அது தர்ஹா எனும் கலாச்சாரத்தை ஒழிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த அம்சத்தில் டி.என்.டி.ஜே வினர் அதாவது இஸ்லாமிய மீட்டுருவாக்கம் பேசும் ஜாக் தொடங்கி பல்வேறு குழுக்கள் ஏற்கனவே குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளனர். இது வெற்றியா என்பது குறித்து மாற்றுக் கருத்து இருந்தாலும், 80களில் இருந்த நிலை இன்றில்லை. சின்னச் சின்ன தர்ஹாக்கள் பல வழக்கொழிந்து போயுள்ளன. பிரபலமான பேரளவு வருமானம் கொண்ட தர்ஹாக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவைகளும் கூட முன்பிருந்த நிலையில் இல்லை. தமிழகத்தின் பெரும்பாலான இஸ்லாமிய இளைஞர்கள் தர்ஹா கலாச்சாரத்தை விட்டு இஸ்லாமிய மீட்டுருவாக்கப் பாதைக்கு வந்துள்ளனர். இன்று தர்ஹா கலாச்சாரம் எஞ்சியிருப்பது கூட அதனால் வருவாய் பெறுபவர்களும், அதனை விட்டுவிட இயலாத அகவை கூடிய அகத்தினர்களும் மட்டுமே தர்ஹாக்களை நீர்த்துப் போகாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் யதார்த்தம் எனும் நிலையில், மிகப்பெரும் பொருட்செலவில் தர்ஹாவை மட்டுமே முதன்மைப் படுத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்பது முக்கியமான கேள்வி.

அண்மையில் காவல்துறையில் இந்த மாநாடு மத மோதல்களை ஏற்படுத்தக் கூடுமோ எனும் கேள்வி எழுப்பப்பட்ட போது, “அப்படி ஏதும் நிகழாது. நாங்கள் சிலை வணக்கத்தையோ, பிற மதங்களைப் பின்பற்றுவோர்களை நோக்கியோ இம்மாநாடு நடத்த திட்டமிடவில்லை. சிலை வணக்கம் குறித்து பேசப் போவதில்லை. எனவே மத மோதல்கள் ஏற்படாது” என்று எழுதிக் கொடுத்து விட்டு வந்ததாக முகநூல் பதிவுகள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் சிலை வணக்கம் ஷிர்க்கில் அடங்காதா? அல்லது சிலை வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தில் சிலை வணக்கம் தவிர்க்க முடியாதது. எனவே சிலை வணக்கம் கூடாது எனும் இஸ்லாத்தின் நிலைபாடு இந்தியாவுக்கு பொருந்தாது என்கிறார்களா? இதற்கு டி.என்.டி.ஜே வினர் கூறும் பதில், “நாங்கள் ஏற்கனவே இஸ்லாம் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளில் போதுமானவரை சிலை வணக்கம் குறித்து கூறியிருக்கிறோம். தொடர்ந்து அது குறித்து பேசியும் வருகிறோம். எனவே இந்த மாநாட்டில் அது தேவையில்லை” என்கிறார்கள்.

இந்த இடத்தில் மீண்டும் மேற்கண்ட கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. தர்ஹா ஒழிப்பு, தாயத்து, தகடு ஒழிப்பில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற்று பெருமளவு இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கும் இந்த நிலையில். ஒப்பீட்டளவில் அந்த அளவுக்கு வெற்றி பெறாத சிலை ஒழிப்பில் நிகழ்ச்சி நடத்துவது மட்டுமே போதும் எனும் தெள்வுக்கு வந்திருக்கும் போது அதை விட அதிக வெற்ரி பெற்ரு மேலோங்கிய நிலையில் இருக்கும் தர்ஹா, தகடு தாயத்து ஒழிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவமும், பொருட்செலவும் செய்து மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன?

ஷிர்க் என்றால் தர்ஹா, தாயத்து மட்டுமோ, சிலை வணக்கம் மட்டுமோ அல்லவே. மருத்துவ முறையை எடுத்துக் கொண்டால், அது முழுக்க முழுக்க பரிணாம தத்துவத்தை அடிப்படையைக் கொண்டது. அதன் பரிசோதனை முறைகள், செயல்படும் விதம், புதிய கண்டுபிடிப்புகள் என அனைத்தும் பரிணாம அடிப்படையைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால் அல்லா களிமண் மூலமும், இடுப்பெலும்பின் மூலமும் படைத்த ஆதம், ஹவ்வா விலிருந்து மக்களை படைத்ததாக கூறுகிறான். இதை மறுத்து பரிணாமம் மூலம் உயிரினப் பரவல் நடைபெற்றது என்பதே பரிணாமம். அல்லா களி மண்ணால் படைத்தான் என்பதையும் ஏற்றுக் கொள்வோம், குரங்கு போன்றா மூதாதையிடமிருந்து வந்தான் என்பதையும் ஏற்றுக் கொள்வோம் என்பது அல்லாவை கேலி செய்வது போலில்லையா? அல்லா களி மண்ணால் படைத்தான் என்பதை மறுத்து பரிணாமம் மூலம் குரங்கிலிருந்து வந்தான் என்பதை ஏற்ருக் கொண்டு மருத்துவம் செய்பவர்கள் அனைவரும் ஷிர்க்கில் வீழ்ந்து விடவில்லையா? இந்த ஷிர்க்கை ஒழிக்க வேண்டாமா? இந்த ஷிர்க்கை ஒழிக்க திருச்சி மாநாடு எதையாவது செய்யுமா?

விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதன் யார் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? இப்படி ஒரு கேள்வி பள்ளித் தேர்வில் கேட்கப்பட்டு அதற்கு முகம்மது நபி என்று பதில் எழுதினால் மதிப்பெண் கிடைக்குமா? கிடைக்கசில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? மறுத்து முகம்மது நபி தான் என்று ஆசிரியரிடம் வாதாடுவீர்களா? அல்லது யூரி காக்ரின் என எழுதாதது என்னுடைய தவறு தான் என ஒப்புக் கொள்வீர்களா? இதன் பொருள் அல்லாவை நம்பவில்லை என்பது தானே. குரானில் நீங்கள் அவரைச் சந்தித்ததில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என முகம்மது நபிக்கே எச்சரிக்கை செய்யும் அல்லாவின் வார்த்தையை மீறி நீங்கள் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது யூரி காக்ரின் என்று கூறினால் அது ஷிர்க் இல்லையா? இந்த ஷிர்க்கை ஒழிக்க திருச்சி மாநாடு என்ன செய்யும்?

ஆக, ஷிர்க் ஒழிப்பு எனும் பெயரில் டி.என்.டி.ஜே வினர் நடத்த இருப்பது அவர்களே சொல்லும் காரணங்களுக்கு பொருந்தாத ஒன்று என்பது தெளிவு. இனி ஏன் இவ்வளவு விலை உயர்ந்த மாநாடு அவர்களுக்கு அவசியப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

அவர்கள் கூறுவது என்ன? ‘முஸ்லீம் மக்களிடம் இருக்கும் மூடப்பழக்க வழக்கங்களான தர்ஹா, தாயத்துகளை ஒழிக்கப் போகிறோம்’ என்பது. இதற்காக பத்து லட்சம் மக்களை திரட்டப் போகிறோம் என்கிறார்கள். இந்தக் கணக்கு சாத்தியமற்றது. சும்மா ஒரு பேச்சுக்கு கூறுவது என்பது அவர்களுக்கே தெரியும். முன்னர் தீவுத் திடல் மாநாட்டின் போதும் இப்படித்தான் கூறினார்கள். பின்னர் நல்ல காரியத்துக்காக பொய் சொல்வது தவறில்லை என்று விளக்கமும் சொன்னார்கள். எனவே, அதை விட்டு விடுவோம். இப்படி அவர்கள் திரட்டுவது யாரை? டி.என்.டி.ஜே வினரை மட்டும் தான். வேறு யாரும் வரப்போவதில்லை என்பதுடன் மட்டுமல்லாது, இதற்காக விளம்பரம் செய்யும் டி.என்.டி.ஜே வினரும் வேறு யாரையும் வர விடக்கூடாது என்பது போல் தான் செயல்படுகிறார்கள். பல ஜமாத்கள் இந்த மாநாட்டுக்கு செல்லக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்திகள் கிடைக்கின்றன. இதையும் மீறி வந்தாலும் அது சொற்பமான அளவில் தான் இருக்கும். ஆக, யாரை தர்ஹா, தாயத்து கலாச்சாரங்களிலிருந்து மாற்றி ஷிர்க் இல்லாதவர்களாக கூறுகிறார்களோ அவர்களைக் கூட்டி வைத்து ஷிர்க் கூடாது என்று மேடை போட்டு பேசப் போகிறார்கள். இந்த செலவுகளும் படாடோபமும் இதற்குத் தானா?

பொதுவாக இஸ்லாமிய மீட்டுருவாக்க இயக்கங்களின், குறிப்பாக டி.என்.டி.ஜே வின் திட்டங்கள் என்ன? தூய வடிவில் இஸ்லாத்தை பரப்புவது. தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு முஸ்லீம் சமூகப் பணிகளை செய்வது. இதில் இஸ்லாத்தைப் பரப்புவது என்பதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. பிற இஸ்லாமிய இயக்கங்கள் டி.என்.டி.ஜே வினர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய தத்துவார்த்த ரீதியில் முரண்பாடுகள் இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன. மீட்டுருவாக்கக் குழுக்களே பலவாறாக உடைந்து சிதறிக் கொண்டிருக்கின்றன. இவைகளை மீறி டி.என்.டி.ஜே வினர் மக்களை ஈர்த்திருக்கிறார்கள். இதற்கு முதற் காரணம் பிஜே எனும் அதன் தலைவரின் ஈர்ப்புக் கவர்ச்சி மிக்க வாதத் திறமை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே, டி.என்.டி.ஜே வினரின் மதத்தைப் பரப்புதல் என்பது ஒரு ஜாதிக் கட்சியைக் கட்டுவது எனும் அளவில் சுருங்கியிருக்கிறது.

சமூகப் பணிகள் என்பதில் டி.என்.டி.ஜே வினர் மட்டுமல்லாது மீட்டுருவாக்கக் குழுக்கள் அனைத்துக்குமே கடும் வரட்சி நிலவுகிறது. பாபரி பள்ளிவாசல், இட ஒதுக்கீடு என்பதைத் தாண்டி அவர்களின் சமூகப் பணிகள் விரியவே இல்லை. நாங்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதை பெரிதாக விளம்பரப்படுத்தினாலும் அரசியல் கட்சியாகவே செயல்படுகிறார்கள். நேரடியாக ஓட்டரசியலில் ஈடுபடுவதில்லை என்றாலும், அந்த ஓட்டரசியலை முன்வைத்தே இவர்களின் பணிகள் அமைந்திருக்கின்றன. அதாவது இஸ்லாமிய மக்களின் ஆதரவு எங்கள் இயக்கத்துக்குத் தான் உண்டு. எனவே, எங்களுக்கு இதைச் செய்யுங்கள் என்று அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசுவது. இதில் தான் இவர்களின் வெற்றியே அடங்கியுள்ளது.

பரபரப்பாக செயல்படுவதன் மூலம் மக்களை தங்களிடம் தக்க வைத்துக் கொள்வது தான் இவர்களின் ஒரே அரசியல் உத்தி. நேரடி விவாத அழைப்புகள், லட்சம் கோடி என சவடால் அறிவிப்புகள், தடாலடிப் பேச்சுகள் என நாலாந்தர அரசியல்வாதிகளின் உத்தியைகளைத் தாண்டி மக்களைத் திரட்ட அல்லது தக்க வைக்க வேறெந்த திட்டமும் இவர்களிடம் இல்லை. இந்த அடிப்படையிலிருந்து தான் இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.

மேலே இந்த மாநாட்டுக்கு அவர்கள் கூறும் ஷிர்க் ஒழிப்பு என்பது மெய்யான காரணம் அல்ல என்பதைக் கண்டோம். கடந்த காலங்களில் தேர்தல் காலத்தில் மாறி மாறி எடுத்த நிலைபாடுகள் டி.என்.டி.ஜே வினரிடமே ஒரு அதிருப்தியான நிலையை ஏற்படுத்தி இருந்தது. இதை மறைக்கத் தான் அகோரி மணிகண்டனுடனான சவடால் பயன்பட்டது.

இப்போது சில நிகழ்வுகளைக் கவனிப்போம். தொடக்கத்திலிருந்தே ஆன்லைன்பிஜே எனும் இணைய தளம் பிஜே வின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. திடீரென ஏதேதோ காரணம் கூறி அதிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். இதே போல் காரணங்கள் உருவாக்கப்பட்டு தலைமைப் பொறுப்பு உட்பட பல விசயங்கள் அவரிடமிருந்து விலக்கப்படுகின்றன. இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் டி.என்.டி.ஜே வினரை வேண்டுமானால் சமாதானமடையச் செய்யலாம். ஆனால் கூர்ந்து கவனிப்போர்க்கு அவை போதுமானதல்ல. இதற்கு பின்னணியாக பி.ஜே மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. பி.ஜே மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுவது இது முதன்முறையல்ல என்ற போதிலும், அதில் நம் கவனம் குவிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் டி.என்.டி.ஜே அணியினருக்கு ஏதோ ஓர் அதிருப்தி பி.ஜே மீது இருக்கிறது என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் பிஜேவின் உடல்நிலையையும் கருத்தில் கொள்ளலாம்.

ஜாக் தொடங்கி இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு பலவாறாக உடைந்து போனதன் பின்னணியில் சரியாகவோ, தவறாகவோ பிஜே இருந்திருக்கிறார் என்பது உண்மை. அதேநேரம் பிஜே இல்லாத எந்தக் குழுவும் தமிழக இஸ்லாமிய மக்களை ஈர்க்க முடியவில்லை என்பதை கவனிக்க வேண்டும். டி.என்.டி.ஜே வின் தொடக்க காலத்திலிருந்து கவனித்துப் பார்த்தால் இப்போதைப் போல் எப்போதும் இந்த அளவு அதிகமாக மக்களைத் தூண்டும் உணர்ச்சிகரமான பிரச்சனைகளை எடுத்தாண்டதில்லை. எடுத்துக்காட்டாக உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடைகளின் மூலமாக தமிழ்நாட்டில் பல பள்ளிவாசல் உருவாக்கப்பட்டன. எந்த இடத்திலும் மையவாடி (இடுகாடு) அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தந்த ஊர்களில் உள்ள மையவாடிகளைத் தான் அந்தந்த ஊர் ஜமாத்துக்கு உட்பட்டு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் ஓரிரு ஆண்டுகளாக இதில் பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவை அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் நாம் வந்தடையும் முடிவு என்ன? டி.என்.டி.ஜே நிர்வாகிகளின் தற்போதையே ஒரே கவலை பிஜேவுக்குப் பிறகு அமைப்பை எப்படி கட்டிக் காப்பது என்பதாகத் தான் இருக்க முடியும். இந்த கவலையிலிருந்து தான் மாநாடு உள்ளிட்ட அனைத்தும் கிளைத்து வருகின்றனவே தவிர, இஸ்லாமிய இறையியலைக் காக்கும் நடவடிக்கை இதில் ஒன்றும் இல்லை.

இன்னமும் சிலர் நினைக்கலாம். அவர்கள் அமைப்புக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ஷிர்க் ஒழிப்பு என்பது இஸ்லாத்தின் மையமான பிரச்சனை அல்லவா? அதைத்தானே அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று. அப்படி அல்ல. இதற்கு குறிப்பான சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். ந.ந. ஒரு நிமிடம், திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு எனும் இரண்டு இடுகைகளை படித்துப் பாருங்கள். பிரிந்து போன பல குழுக்களில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாகவே டி.என்.டி.ஜே வினரின் பெரும்பாலான செயல்பாடுகள் இருக்கின்றன. இந்தக் கண்னோட்டத்தை விலக்கி விட்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டைப் பார்க்க முடியுமா? முடியாது என்பதே யதார்த்தம்.

ஆக, பிஜேவுக்குப் பிறகு ஏற்படப் போகும் வெற்றிடத்தை நிரப்ப இப்போதிலிருந்தே தயார் செய்து கொள்வது, தமிழக முஸ்லீம்கள் அளவில் பெரிய அமைப்பு நாங்களே என மீண்டும் நிருவிக் கொள்வது இந்த இரண்டு நோக்கங்களுக்காக மட்டுமே ஷிர்க் ஒழிப்பு மாநாடு கொண்டாடப்பட விருக்கிறது. ஓர் அமைப்பின் உள்வசமான பார்வையில் இவை தவறான நோக்கங்கள் என்று கருத முடியாது. நேர்மையாக அதை தம் அணியினருக்கு தெரிவிக்காமல் இஸ்லாமிய இறையியலை ஏன் மறைக்கும் திரைச் சீலையாக பயன்படுத்த வேண்டும்? இது முக்கியமான கேள்வி அல்லவா?

இங்கு தான் இஸ்லாமிய இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். மதம் குறித்த உன்னதங்களைப் பேசிக் கொண்டு உங்களுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த அமைப்புகள் உங்கள் சொந்த வாழ்க்கைக்கு செய்தது என்ன? உங்கள் சொந்த வாழ்வின் பிரச்சனைகள் என்ன? அதற்கான காரணங்கள் எங்கிருந்து வருகின்றன? அதை எப்படி தீர்ப்பது? உங்களைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தை விட்டுவிட்டு உங்களால் தனித்து இயங்க முடியுமா? அல்லது உங்களைச் சூழ்திருக்கும் சமூகத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் அது உங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தாதா? ஒரு விலைவாசி உயர்வு உங்களை மட்டும் விலக்கி விடுமா? ஒரு ஆற்றில் கலக்கப்படும் நச்சுக் கழிவுகள் எல்லோரையும் பாதிக்கும் போது உங்களுக்கு அது நேராதா? உங்கள் நிலத்தடி நீர் பன்னாட்டு நிறுவனங்களால் சூரையாடப்பட்டு தன்னீர் பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் மட்டும் தாகம் தீர்ந்து இருக்க முடியுமா? இது போன்ற பிரச்சனைகளில் உங்கள் அமைப்பு உங்களுக்கு என்ன வழிகாட்டல் வழங்கியது?

ஒவ்வொரு மனிதனும் இறப்பைச் சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் வாழும் காலத்தில் சொர்க்கமா நரகமா என்பதைத் தவிர வேறு பிரச்சனைகள் தன்னாலே சரியாகி விடுமா? உங்கள் ஆன்மீக நம்பிக்கைகளை புண்படுத்துவது நோக்கமல்ல. ஆனால் சமூகப் பிரச்சனைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விலக்கி விட்டு ஆண்மீகம் மட்டுமே போதுமானதாகி விடுமா? என்பது மட்டுமே கேள்வி.

நீங்கள் உணர வேண்டும். உங்கள் அமைப்புகளுக்கு உணர்த்த வேண்டும். ஏகாதிபத்தியம், பார்ப்பன பயங்கரவாதம் எனும் இரண்டு பாசிசங்களுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவைகளை மோதி வீழ்த்துவதற்கு ஜாதி, மத, இன இன்னும் பிற பேதங்களை கடந்து வர்க்கமாக ஒன்றிணையும் தேவை நமக்கு முன் பூதாகரமாக நிற்கிறது. இதை சாதிப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா? உங்களின் பங்களிப்பு என்ன?

இற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்

28 ஜன

அண்மையில் தம்பி குலாம் ‘கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு’ எனும் ஓர் அரிய(!) கட்டுரையை பதிவேற்றியிருக்கிறார். தமிழ் இணையப் பரப்பில் அன்றாடம் இதுபோன்ற மதவாத குப்பைகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. தம்பி குலாம் கூட இன்னும் ஏராளமான கட்டுரைகளை தன்னுடைய தளத்தில் தந்து கொண்டே இருக்கப் போகிறார். இவைகளுக்கெல்லாம் நான் மறுப்பெழுதிக் கொண்டிருக்கப் போவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால் அவை குறுகிய வட்டத்தின் சுய சொரிதல்களை திருப்திப்படுத்தும் நோக்கில் நேர்மையற்று, பரந்த பார்வையற்று, பரிசீலனையற்று, முன்முடிவில் தேங்கி, அந்த முன்முடிவுகளுக்கு ஏற்ப வளைத்து வெளித்தள்ளப்படும் குப்பைகள். ஆனால் தம்பி குலாமின் மேற்கண்ட இடுகை இதே வார்ப்புகளில் வந்ததுதான் என்றாலும், கடவுள்: வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? எனும் தலைப்பில் நடந்த விவாதத்தின் தொடர்ச்சியாக வந்திருப்பதால் அதற்கு மறுப்பளிப்பது அவசியமாகிறது. அந்த நோக்கில் விளைந்தது தான் இந்தக் கட்டுரை.

 

முதலில் அந்த விவாதத்தின் தொகுப்பை மிகச் சுருக்கமாக பார்த்து விடுவோம். அறிவியல் ரீதியான சான்றுகள், வரலாற்று ரீதியான சான்றுகள், சமூக ரீதியான சான்றுகள் என மூன்று அடிப்படைகளின் மேல் நின்று கடவுள் என்ற ஒன்று இல்லை, இருக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்திருந்தேன். மறுபக்கம் தம்பி குலாமோ அறிவியலால் கடவுளை அளக்க முடியாது, இந்த உலகில் கடவுளின் வெளிப்பாடு எந்த வகையிலும் இருக்காது. எனவே, இவற்றுக்கு வெளியில் தான் கடவுளை உறுதிப்படுத்த முடியும் என்றார். அவ்வாறான உறுதிப்படுத்தல்களாக சில கேள்விகளையும் முன்வைத்தார். தம்பி முன்வைத்த அத்தனை கேள்விகளையும் அவை கடவுளின் இருப்பை உறுதிப்படுத்தாது என்பதையும், ஆத்திகர்கள் முன்வைக்கும் இது போன்ற எதிர்நிலைக் கேள்விகள் அனைத்தும் அறிவியலின் நிகழ்கால எல்லைக்கு அப்பால் இருக்கிறது என்பதையும், கடவுளின் இருத்தலோடு தொடர்பற்று இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தினேன். இதன் தொடர்ச்சிக்கு தம்பி குலாமிடம் பதிலில்லை. மட்டுமல்லாது கடவுளின் இருப்பை நேரடியாக உறுதி செய்ய முடியாது என்றால் புறநிலைக் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் செய்யுங்கள் என்று தம்பி குலாமுக்கு சில கேள்விகளை எழுப்பினேன். பலமுறை வலியுறுத்தியும் பதிலளிக்க முன்வராத அவர் கடைசியில் வேறு வழியின்றி பதில் எனும் போர்வையில் சில சமாளித்தல்களை செய்திருந்தார். அவை எந்த அடிப்படையில் சமாளித்தல்களாக இருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டினேன். இவைகளுக்கு நேர்மையாக பதில் கூற மறுக்கும் தம்பி குலாம் தன்னுடைய நம்ப்பிக்கையை வேறு வேறு வார்த்தைகளில் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார். மட்டுமல்லாது கடவுள் மறுப்புக்கு எந்த சான்றையும் அளிக்கவில்லை என்று திரும்பத் திரும்ப கூசாமல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

விவாதக் கேள்வி பதில்களுக்கு அப்பாற்பட்டு தம்பி குலாம் மீதான விமர்சனங்களாக பொய் சொல்கிறார், கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கிறார், கூறப்பட்ட விளக்கங்களை பரிசீலிக்க மறுக்கிறார் என்றெல்லம் விமர்சனம் செய்தேன். செய்யப்பட்ட இந்த விஅர்சனங்களுக்கு எந்தவித மறுப்பையோ, விள்க்கத்தையோ தம்பி குலாம் கூறவில்லை. மாறாக நான் புலம்புகிறேன் என்றும், சந்தர்ப்பவாதமாக கூறுகிறேன் என்றும் என் மீது விமர்சனங்களை வைத்தார். தம்பி குலாம் மௌனமாக இருந்தது போல நானும் இருக்க முடியாதே. அதனால், நான் கூறியவை எந்த விதத்தில் புலம்பல்களாக இருக்கின்றன, சந்தர்ப்பவாதமாக இருக்கின்றன என்பதை விளக்குங்கள் என்று கேட்டேன். கடைசி வரை பதில் கூறவே இல்லை. எனவே, கடவுள் இருப்புக்கு எந்தவித சான்றுகளையும் வைக்காததாலும், கடவுள் மறுப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்காததாலும் கடவுள் என்பது மனிதர்களின் நம்பிக்கை தானேயன்றி, உறுதியாக நிலவுவதல்ல என விவாதம் முடிவுக்கு வந்தது.

 

இப்படி இருக்கும் நிலையில் தான் மேற்கண்ட கட்டுரையை வழக்காமன திருகல்களுடன் புதிதாக பதிவேற்றியிருக்கிறார். எனவே, மீண்டும் கடைசியாக மீண்டும் ஒருமுறை அந்த திருகல்களுக்கு ‘டிங்கரிங்’ செய்து விடலாம்.

 

அந்தக் கட்டுரையில் தம்பி குலாம் கூறியிருப்பது என்ன? 1. கடவுள் இருப்பு நம்பிக்கை எனும் வகையில் கடவுள் மறுப்புக்கே அதிக சான்றுகள் தரவேண்டும். 2. கடவுளை எப்படி ஏற்க வேண்டும் என்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன, அந்த முறைகளல்லாது வேறு முறைகளில் கடவுளை ஏற்க முடியாது. 3. கடவுளை மனிதன் அறிவதற்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகளில் இரண்டாவதான புறக் கேள்விகள் மூலம் தான் அறிய முடியும். ஏனென்றால் கடவுள் உலகில் தோன்றவே மாட்டார். 4. கடவுளை மறுப்பதற்கு காரணங்கள் எதுவும் இல்லை. 5. கடவுளின் தகுதிகளாக என்ன கூறப்பட்டுள்ளதோ அவைகளை வைத்தே கடவுளை மறுக்கக் கூடாது. 6. கடவுளுக்கு அறிவியல் எந்த வரையறையையும் ஏற்படுத்தவில்லை. 7. மறுப்பவர்கள் கூறும் கடவுள் எது? அல்லது எப்படி இருந்தால் கடவுளை ஏற்றுக் கொள்வீர்கள்? 8. கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் எந்த சான்றையும் அளிக்கவில்லை. 9. பல கேள்விகளுக்கு அறிவியல் புரிரையே பதிலாக கொண்டிருக்கிறது. 10. கடவுள் ஏற்பாளர்கள் எழுப்பும் அத்தனை கேள்விகளுக்கும் மறுப்பளர்கள் விரல் நுனியில் பதில் வைத்திருக்க வேண்டும். இந்த பத்து அம்சங்களில் எதிலாவது கடவுளை ஏற்பதற்கான சான்றுகள் இவைதான் என அடையாளம் கட்டப்பட்டுள்ளதா? இல்லை. என்றால் தெளிவாக தெரிவது ஒன்று தான் கடவுள் என்பது மனிதனின் கற்பனைகளில் உலவும் ஒன்று என்பது தான்.

 

முதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம். தம்பி குலாம் கடவுளின் இலக்கணங்கள் என்று சிலவற்றை தந்திருக்கிறாரே அவை இஸ்லாமிய மதக் கடவுளுக்கு மட்டுமே பொருந்தும், ஏனைய மதக் கடவுளுக்கு பொருந்தாது. தம்பி குலாம் கூறுவது போலவே கடவுள் எந்த விதத்திலும் மனிதனுக்கு தன்னை வெளிப்படுத்த மாட்டார் என்பதை வாதத்துக்காக ஏற்றுக்கொண்டே தொடர்வோம். ஏதாவ்து ஒரு வழியில் கட்வுள் தன்னை மனிதனுக்கு உணர்த்திக் கொள்ள வேண்டுமல்லவா? அந்த வழிகள் என்ன? எந்தெந்த வழிகளில் கடவுள் மனிதர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்? இதற்குத்தான் தம்பி குலாம்போன்ற மதவாதிகள் பேரண்டத்தைப் படைத்தது யார்? அதை இயக்குவது யார்? மழையை அனுப்பியது யார்? அதை கட்டுப்படுத்த முடியுமா? பிறக்கும் இறக்கும் நேரத்தைக் கூற முடியுமா? போன்ற கேள்விகளை முன்வைக்கின்றனர்? இந்த இட்த்தில் தான் மதவாதிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் தான் படைத்து இயக்குகிறார், எல்லா நேரமும் கடவுளுக்குத் தான் தெரியும் என்பதெல்லாம் ஆத்திகர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை நாத்திகர்களுக்கு இருக்க முடியுமா? எனவே கடவுள் தான் படைத்து இயக்குகிறார் என்பதற்கும், கடவுளுக்குத்தான் அனைத்து நேரமும் தெரியும் என்பதற்கு ஏதாவது சான்று காட்ட வேண்டும். எந்த ஆத்திகவாதியோ, மதவாதியோ இப்படி ஏதாவது சான்றுகள் காட்டியிருக்கிறார்களா? அக அவர்கள் கூறுவது என்ன? கடவுள் எந்த வழியிலும் தென்படவும் மாட்டார். அதேநேரம் அவர் படைத்தவைகளையும் அவர்தான் படைத்தார் என உறுதிப்படுத்தவும் முடியாது. இதை ஈடுகட்டத்தான் கடவுள் படைக்கவில்லை என்றால் மனிதனா படைத்தான் அறிவியலா இயக்குகிறது என்று எதிர்க் கேள்வி எழுப்புகிறார்கள். எந்த நாத்திகவாதியாவது இப்பேரண்டத்தைப் படைத்தது மனிதன் தான் என்றோ, பேரண்டத்தின் இயக்கவிதிகளை அறிவியல் கட்டுப்படுத்த வல்லது என்றோ கூறியிருக்கிறானா? ஆக நாத்திகர்கள் யாரும் கூறாத ஒன்றை அவர்கள் கூறுவது போல் பவித்துக் கொண்டு எதிர்க் கேள்வியை எழுப்பி ஆத்திகர்களின் நம்பிக்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்கிறார்கள். இது தான் தம்பி குலாம் போன்றவர்கள் கூறும் ஏதாவது வழியில் உணர்த்துவது என்பதின் லட்சணம்.

 

இது போன்ற கேள்விகளை கேட்பதைக் கொண்டு தான் விரல் நுனியில் பதிலை வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் தம்பி குலாம். யாரிட்ம் பதில் இல்லை? விரல் நுனியில் பதில் கூறியிருக்கிறேன். இன்னும் எத்தனை கேள்விகளை அள்ளிவந்தாலும் அவ்வாறே பதில் கூற முடியும். ஆனால் தற்செயல் என்று கூறக்கூடாது, எதிர்காலம் சார்ந்து பதிலைக் கூறக்கூடாது என்று நிபந்தனைகளை விதிப்பது யார்? இதை எடுத்துக்காட்டுடன் கூறினால் தான் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இப்பேரண்டம் ஏன் உருவானது? எனும் கேள்வியோடு பார்ப்போம். பெருவெடிப்பு என்பது ஓர் அறிவியல் யூகம் தான். அது அப்படித்தான் நடந்தது என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தான் ஏன் உருவானது என்பதை ஆராய முடியும் இப்போது முடியாது. அண்ட வெளியின் பருப்பொருட்களை யார் இயக்குவது? என்றால் அது எந்த ஆற்றலாலும் முன்திட்டமிட்டு இயக்கப்படுவதல்ல. அவைகளின் இயக்கமும் தோற்றமும் தற்செயலானவை என்று பதில் கூறியதற்குத்தான் தற்செயல் என்றோ, எதிர்காலம் சார்ந்தோ பதில் கூறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார் தம்பி குலாம். ஆனால் தன்னுடைய வசதிக்காக மறந்து விட்ட இரண்டு அம்சங்கள் அதில் இருக்கிறது. அவை என்னவென்றால் 1. நிகழ்கால அறிவியல் எல்லைகளை மீறி கேட்கப்படும் பதில்களுக்கு எதிர்காலத்தில் தான் பதில் கூற முடியும். 2. அறிவியல் ரீதியாக இது தான் சரியான, மெய்யான பதில். கூறப்படும் பதில் சரியான பதிலா அறிவியல் ரீதியான பதிலா எனும் அம்சங்களெல்லாம் மதவாதிகளுக்கு தேவையில்லை. இந்த மாதிரியெல்லாம் பதில் கூறினால் கடவுளை எங்களால் தூக்கிப் பிடிக்க முடியாது எனவே, அப்படி பதில் சொல்லாதீர்கள், இப்படி பதில் சொல்லாதீர்கள் என்றெல்லாம் நிபந்தனை விதிக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக பிரிதொரு இடத்தில் பதிலே கூறவில்லை என்று கதையளப்பார்கள்.

 

கடவுள் மறுப்புக்கு வருவோம். காரணமே இல்லாமல் கடவுள் மறுப்பு கூறப்படுகிறதா? கடவுள் இருப்பு வாதங்களை மறுப்பதால் மட்டுமே கடவுள் மறுப்பு முன்வைக்கப்படுகிறதா? இரண்டுமே ஆற்றாமையால் கூறப்படும் அற்பவாதங்கள். கடவுள் இல்லை என்பதற்கு என்னென்ன காரணங்களை நான் முன்வைத்திருக்கிறேன்.

 

அறிவியல் ரீதியான காரணங்கள்:

1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.

2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.

3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

 

வரலாற்றுரீதியான காரணங்கள்:

1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.

2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.

 

சமூக ரீதியான காரணங்கள்:

1. கடவுளின் தகுதிகள் கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.

2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.

 

கடவுள் மறுப்புக்கு இவைகளெல்லாம் தூலமான காரணங்கள் இல்லையா? கடவுள் இருப்பு வாதங்களின் பதிலாக முன்வைக்கப்பட்டவைகளா இவை? எந்தப் பரிசீலனையும் இல்லாமல் ’கொய்த பழம் கொய்யாப் பழம் என்றால் எய்த அம்பு எய்யா அம்பு’ எனும் சொலவடைக் கேற்ப கூறப்படும் அங்கலாய்ப்புகள் அவ்வளவு தான்.

 

அடுத்து தம்பி குலாம் என்ன சொல்கிறார்? கடவுள் வாழும் உலகில் மனிதனுக்கு எந்தவிதத்திலும் தன்னை வெளிப்படுத்த மாட்டார். இதை ஏற்றால் தான் கடவுள் ஏற்பு. எனவே கடவுள் மறுப்பும் இதை ஏற்ற நிலையில் தான் இருக்க வேண்டும் என்கிறார். இது அறிவுக்கு உகந்ததல்ல என்றாலும், வாதத்துக்காக அதை ஒப்புக் கொள்வோம். நாம் கேட்பது என்ன? இவ்வாறு எதுவும் இல்லாத நிலையில் நீங்கள் எப்படி உறுதியாக கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறீர்கள்? என்பது தான். இந்தக் கேள்வி எழுப்பும் விசயத்திற்கும் வாதத்துக்காக ஏற்கும் அம்சத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? ஒன்றுமில்லை. சரி அறிவியல் ரீதியான காரணங்களைப் பார்ப்போம்.  எந்த விதத்திலும் கடவுள் தன்னை வெளிக்காட்டமாட்டார் என்பதிலா அந்தக் காரணங்கள் அமைந்திருக்கின்றன? அல்ல. கடவுளுக்கு என்னென்ன தகுதிகளைக் கூறுகிறார்களோ அந்த தகுதிகளையே கேள்விக்கு உள்ளாக்குகிறது அந்தக் காரணங்கள். கடவுள் உலகில் தன்னை வெளிப்படுத்துவாரா மாட்டாரா என்றல்ல, எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை என்கிறது அறிவியல். இதை மறுக்க முடியுமா? கடவுள் உலகில் தன்னை வெளிப்படுத்துவாரா மாட்டாரா என்றல்ல, தொடக்கமும் முடிவும் அற்ற எதுவும் இல்லை என்கிறது அறிவியல். இதை மறுக்க முடியுமா? கடவுள் உலகில் தன்னை வெளிப்படுத்துவாரா மாட்டாரா என்றல்ல, எந்த ஒன்றை சாராமலும் எந்த ஒன்றுக்கும் சார்பை பெறாமலும் தனித்தது என்று எதுவுமில்லை என்கிறது அறிவியல் இதை மறுக்க முடியுமா? இப்படிக் கேட்டால் கடவுள் அறிவியலுக்குள் அகப்படமாட்டார் என்று தோசையை திருப்பி போடுகிறார் தம்பி குலாம். 

 

வரலாற்று ரீதியான காரணங்களைப் பார்ப்போம். ஆதிமனிதர்கள் வாழ்வில் தற்போது கற்பிக்கப்படும் விதத்தோடு பொருந்தத்தக்க கடவுள் என்ற ஒன்று இல்லை. இது கடவுள் தன்னை வெளிப்படுத்த மாட்டார் எனும் வாதத்துடனோ, கடவுளின் தகுதி குறித்த எதிவாதமோ இல்லையல்லவா? இதற்கு என்ன பதில் தம்பி குலாம் கூறுவாரா? புவியில் மனிதன் மட்டுமல்லவே பல்கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன. இவைகளில் மனிதனைத் தவிர வேறெந்த உயிரினத்திற்கும் கடவுள் எனும் உணர்வு இல்லையே. இது கடவுள் தன்னை வெளிப்படுத்த மாட்டார் எனும் வாதத்துடனோ, கடவுளின் தகுதி குறித்த எதிவாதமோ இல்லையல்லவா, இதற்கு என்ன பதில்? தம்பி குலாம் கூறுவாரா

 

சமூக ரீதியான காரணங்களைப் பார்ப்போம். இதில் முதல் காரணம் மனிதர்களைப் படைத்தது சோதித்துப் பார்ப்பதற்காகத்தான் என்பதோடு உரசுகிறது என்பதால் அதை விட்டு விடுவோம். மனிதன் கேட்டு கடவுள் நிறைவேற்றிய சோதித்தறியத் தக்க ஏதேனும் சான்று இதுவரை ஒன்றுமில்லையே எப்படி? இது என்ன தம்பி குலாம் கூறுவது போல கடவுளின் வருகையோடும் தகுதியோடும் மோதுகிறதா? இல்லையே பின் பதில் கூறுவதில் தம்பிக்கு ஏன் தயக்கம்?

 

இவ்வளவு காரணங்களும் இருக்கும் நிலையில் கடவுள் குறித்து நாம் கூறுவது என்ன? அறிவியல் ரீதியாக, வரலாற்று ரீதியாக, சமூக ரீதியாக கடவுள் என்ற ஒன்று இருப்பதற்கான எந்தத் தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. கடவுளின் துணைநிலைகளும் இப்படியான எந்த தடயங்களும் இல்லாதிருக்கின்றன. அதுமட்டுமன்றி, துணை நிலைகள் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் போதும் அந்த இயங்கு விசைகள் கண்டறியப்பட முடியாததாக இருக்கிறது. மட்டுமல்லாது எக்காலத்திலும் அதைக் கண்டறிய முடியாது என ஆத்திகர்கள் கூறுகிறார்கள். எனவே தான் நான் கடவுள் இல்லை என மறுக்கிறேன். இது சான்றாதாரங்களின் அடிப்படையிலான என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம் எதிர்காலத்தில் கடவுள் குறித்தோ, அதன் துணை நிலைகள் குறித்தோ ஏதேனும் சின்னஞ்சிறு தடயம் கிடைத்தாலும் கூட என்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு கடவுளை ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறேன். இது சாத்தியங்களின் அடிப்படையிலான என்னுடைய நேர்மை. மறு பக்கம் ஆதாரங்களோ சான்றுகளோ எதுமற்ற நிலையிலும் கூட பேரண்டத்தை படைத்துவிட்டு மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கிடாதிருக்கும் கடவுள் என்றால் அதை ஏற்பதில் எனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று தெரிவித்திருக்கிறேன். இது உலகின் கோடிக்கணக்கான மக்கள் அதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் எனும் அடிப்படையில் எழுந்த என்னுடைய பரிசீலனை.

 

மறுபக்கம் தம்பி குலாம் போன்ற ஆத்திகர்களிள் கடவுள் குறித்து கொண்டிருக்கும் கருத்து என்ன? கடவுள் என்பதற்கு எந்த விதத்திலும், எந்த அடிப்படையிலும் எக்காலத்திலும் எந்த ஏற்புச் சான்றுகளும் தர இயலாது, ஆனாலும் கடவுள் என்ற ஒன்று உறுதியாக இருப்பதாக நம்புகிறோம். அதனால் நீங்களும் நம்புங்கள். இது எப்படி இருக்கிறது? கேட்பவன் கேணையனாக இருந்தால் எருமை ஏரோப்ளேன் ஓட்டும் என்பார்களே அது போன்று இல்லையா?

 

அறிவியலின் தகுதி குறித்துப் பேசுகிறார் தம்பி குலாம். தான் ஓர் உள அறிவியல் துறை மாணவன் எனக் கூறும் தம்பிக்கு அறிவியல் குறித்து பேசும் தகுதி இருக்கிறதா? அறிவியல் குறித்து தம்பி குலாம் அவிழ்த்து விட்ட சில முத்துகளைப் பார்ப்போம்.

 

\\\எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே

துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி

சொல்லி இருக்க வேண்டும் .. .. .. தற்செயல் என்று ஒன்று அறிவியல் இல்லவே இல்லை

.. .. .. அண்ட வெளியில் நடைபெற்ற, நடைபெரும் மோதல்களும், நிகழ்வுகளும் அறிவியலால் தான் நிகழ்ந்தது என்பதற்கு சகோ செங்கொடி சான்றுகள் தரவேண்டும்

.. .. .. பெருவெடிப்பு நிகழவில்லையென்றால் ஒட்டுமொத்த அறிவியலும் அர்த்தமற்றதாகி விடும்

.. .. .. அறிவிலை கொண்டு தான் ஒருவர் மீதான பாசமும், அன்பும் கொள்வது சாத்தியமென்றால் பல நேரங்களில் ஒருவரின் பாசமும், அன்பும் பொய்த்துவிடுகின்றன… இவ்விடத்தில் அறிவியல் எப்படி செயலற்று போனது .. .. .. உங்கள் சொல்லில் உண்மையாளராக இருந்தால் அண்டவெளி இயக்கத்தை எந்த அறிவியல் இயக்கி கொண்டிருக்கிறது என்பதை ஆதாரத்துடன் பட்டியலிடுங்கள்///

 

இவைகளெல்லாம் அறிவியல் குறித்து தம்பி குலாம் உதிர்த்த முத்துகளில் சில. அறிவியல் என்பதை தன் விருப்பத்துக்கு ஏற்ப வளைத்தும் நெளித்தும் திருகல்களுடனும் எப்படியெல்லாம் கூறினால் அது கடவுளை சார்ந்திருக்கும்படி வருமோ அப்படியெல்லாம் கூறுகிறார் தம்பி குலாம். சுருங்கச் சொன்னால் அறிவியல் என்று தம்பி குலாம் கூறியிருப்பதெல்லாம் அறிவியலல்ல. இதை தெளிவாகவும் துல்லியமாகவும் விவாதத்தில் விளக்கியிருக்கிறேன்.

 

\\\அறிவியல், அறிவியலின் மூலம் பெறப்பட்ட முடிவு, மனிதனின் அறிவு இந்த மூன்று தனித்தனியான விசயங்களை ஒன்றாக கலந்து குழப்பி வைத்துக் கொண்டு அதைத்தான் அறிவியல் என்று கூறிக் கொண்டிருக்கிறார் நண்பர் குலாம். அறிவியல் என்பது தேடும் முறை. சான்றுகள் இல்லாத எதையும் அறிவியல் ஏற்பதில்லை. சான்றுகள் இல்லாமல் எதையும் ஏற்காத தேடும் முறையான அறிவியலைக் கொண்டு தான் இப்பேரண்டத்தின் ஒவ்வொரு பொருளையும், ஒவ்வொரு விதியையும், ஒவ்வொரு ஆற்றலையும் நாம் கண்டறிந்து கொண்டிருக்கிறோம்///

 

இன்னொரு அம்சத்தையும் கவனிக்கலாம். கடவுளுக்கு அறிவியல் வரையறை ஏற்படுத்தி இருக்கிறதா என்பதை எத்தனை முறை பதில் சொன்ன போதிலும் கேட்டுக் கொண்டே இருக்கிறார். அறிவியல் எதற்கெல்லாம் வரையறை தந்திருக்கிறதோ அதையெல்லாம் அறிவியல் கண்டடைந்திருக்கிறது என்பது பொருள். அறிவியல் கண்டடையாத ஒரு பொருளுக்கு எந்த வரையறையும் தர முடியாது. அந்த வகையில் கடவுளுக்கு அறிவியல் ரீதியில் எந்த வரையறையும் இருக்க முடியாது. ஆனால் தம்பி குலாமோ நீங்கள் மறுக்கும் கடவுள் எப்படிப்பட்டவர்? கடவுளுக்கு அறிவியல் வரையறை உண்டா? என்று கேட்பதில் அலாதி ஆர்வமுள்ளவர், அது எவ்வளவு அபத்தமான கேள்வி என்பதை உணராமலேயே. ஒரு கையால் கடவுளை பிடித்து தூக்கிக் காட்டி இதோ பாருங்கள் இது தான் கடவுள் (கடவுளுக்கான வரையறை) இந்தக் கடவுளைத்தான் நாங்கள் மறுத்துக் கொண்டிருக்கிறோம் என கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போலும். எவ்வளவு விளக்கினாலும் புரியாதது போலவே நடித்துக் கொண்டிருக்கும் தம்பி குலாமுக்கு கடைசியாகவு ஒருமுறை விளக்கி விடுவோம். இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் செய்யலாம், ஒரு இரும்புத் துண்டும் அருகில் ஒரு கண்ணாடித் துண்டும் இருக்கிறது என்று கொள்வோம். இதில் இரண்டு விதத்தில் நாம் தர்க்கம் நிகர்த்தலாம். ஒன்று இரும்பு கண்ணாடியை உடைக்கும் வல்லமை கொண்டதா இல்லையா? என்பது, இரண்டு இரும்பு எனும் பொருள் இருக்கிறதா இல்லையா? என்பது. இதில் இரும்பு என்பதை கடவுளுக்கு உவமையாக கூறியுள்ளேன். இரும்பு தூலமாக உலகில் இருக்கிறது, கடவுள் தூலமாக இல்லை என்பது தான் வேறுபாடு. இங்கு முதல் விவாதத்தில் நாம் ஈடுபடுகின்றோம் என்றால் அதன் பொருள் இரும்பு இருக்கிறது என்பதை இரண்டு தரப்பு ஒப்புக் கொண்டு அதற்கு கண்ணாடியை உடைக்கும் வல்லமை இருக்கிறதா என்பதில் மட்டுமே கருத்து வேறுபாடு. ஆனால் இரண்டாம் விவாதத்தில் இரும்பு இருக்கிறது என்பதை ஒரு தரப்பு ஏற்றுக் கொள்கிறது மறுதரப்பு மறுக்கிறது. இந்த இரண்டுவிதமான நிலையில் இரும்புக்கான அறிவியல் ரீதியான வரைவிலக்கணம் என்றால் முதல் நிலையில் மட்டுமே சாத்தியம். ஏனென்றால் முதல் நிலையில் இரும்பின் இருப்பில் ஐயம் ஒன்றுமில்லை அதன் வல்லமையில் மட்டுமே பிரச்சனை. ஆனால் இரண்டாம் நிலையிலோ இருப்பே ஐயமாக இருக்கிறது. இருப்பே ஐயமாக இருக்கும் நிலையில்; இருக்கிறது எனும் தரப்பு இல்லை எனும் தரப்பை நோக்கி நீங்கள் இல்லை எனும் பொருளுக்கு அறிவியல் வரைவிலக்கணம் தாருங்கள் என்று கேட்டால் .. .. ? இது தான் பிரச்சனை. கடவுளின் வல்லமையை மட்டும் நாம் மறுக்கவில்லை. கடவுளையே இல்லையென மறுக்கிறோம். இதை தெளிவாக உணராத வரை அந்தக் கேள்வியிலுள்ள அபத்தத்தை தம்பி குலாமால் உணர்ந்து கொள்ள முடியாது.

 

கடவுளை ஏற்பவர்கள் அதற்கு நம்பிக்கை என்ற ஒன்றைத் தவிர வேறு எதையும் காரணமாக காட்ட முடியாது, முடியவில்லை என்பதே இதுவரையான யதார்த்தம். மாறாக கடவுள் இல்லை என்பவர்கலோ காரணங்களைக் கொண்டிருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் மேலாக வேறு சிலவற்றையும் காண வேண்டியதிருக்கிறது. கடவுளின் தகுதிகள் என்பதென்ன? ஆதி மனிதர்களிடம் கடவுள் எனும் பேறாற்றல் இல்லை. ஆனால் பின்னர் அது மக்களிடையே தோன்றுகிறது. திடீரென கடவுள் உருக் கொள்ள முடியுமா? அப்படி ஓரிரவில் கடவுள் உருவாகிவிடவும் இல்லை. படிப்படியாக மக்களிடம் நிலவிய நம்பிக்கைகள், பயங்கள், இறந்த பிற்கு என்ன நேர்கிறது எனும் அறியாமை போன்ற அனைத்தும் ஒன்று திரண்டு மெல்ல மெல்லவே கடவுள் உருவாகிறார். தற்போது உலகில் நிலவும் அத்தனை கடவுளர்களுக்கும் அதைக் கூறியவர்கள் என்று திட்டமாக சிலர் இருக்கிறார்கள். அவ்வாறு கடவுளைக் கூறிவர்கள் தாம் கடவுளுக்கான தகுதிகளையும் வகுத்திருக்கிறார்கள். அந்த தகுதிகளும் கூட காலத்தால் திருத்தியமைக்கப்பட்டே வந்திருக்கின்றன. தம்பி குலாம் போன்ற மதவாதிகள் அவ்வாறான தகுதிகளில் தான் கை வைக்கக் கூடாது என்கிறார்கள். அதாவது கடவுளுக்கு என்னென்ன தகுதிகள் கூறப்படுகிறதோ அவைகளை கேள்வி கணக்கின்றி ஏற்பது தான் கடவுள் ஏற்பு, எனவே அதற்கு உட்பட்டே தான் கடவுள் மறுப்பைக் கூற வேண்டும் என்பதன் பொருள் அது தான். இது அறிவார்த்த ரீதியாக தவறு. ஒரு நிலையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோமென்றால் அதன் அனைத்து அம்சங்களையும், அதன் அனைத்து கோணங்களையும் ஆராய வேண்டும். அப்போது தான் சரியான முடிவுக்கு வர முடியும். ஆனால் மதவாதிகளோ புனிதம் கற்பிப்பதன் மூலம் மறைத்து வைக்கிறார்கள். சரி, அந்த தகுதிகள் எந்த கண்ணோட்டத்துடன் இருக்கின்றன? வரலாற்று காலம் தொடங்கி கடவுளை எதிர்த்து கேட்கப்பட்ட கேள்விகளின் தாக்கத்தில், அந்த கேள்விகளை எதிர் கொள்ளும் இயலாமையிலிருந்து தப்பிக்கும் கண்ணோட்டத்திலிருந்தே கடவுளுக்கான தகுதிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கடவுளைக் காட்டு என்றால் காட்ட முடியாது எனவே கடவுள் இந்த உலகில் தோன்ற மாட்டார். கடவுள் எங்கிருக்கிறார் என்றால் கூற முடியாது எனவே கடவுள் அண்ட சராசரங்களை கடந்து சஞ்சரிப்பவர். கடவுளைப் பெற்றவர் யார் வாரிசுகள் உண்டா அவர்களின் தன்மைகள் எப்படி என்றால் பிரச்சனைகள் ஏற்படும் எனவே பெறவும் இல்லை, பெறப்படவும் இல்லை. இப்படி கூறிக் கொண்டே போகலாம். ஆக கடவுளின் தகுதிகள் என்பது கடவுளை வெற்றிகரமாக யதார்த்தத்திலிருந்து மறைக்கும் உத்திகள்.

 

கடவுளோ கடவுளோடு தொடர்புடையவைகளோ மனிதர்களுடன் தொடர்பு கொண்டவைகளே, மனிதத் தீண்டலின்றி சுயமான கடவுட் தாக்கம் என்று எதுவுமில்லை, அவ்வாறாக உலவும் கதைகளெல்லாம் எந்தவிதமான சான்றுகளுமின்றி தனிமைப்பட்டு நிற்கின்றன. இதை அனைவரும் தெளிவாக உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

 

எந்த ஒன்றை ஆராய்வதாக இருந்தாலும் அதற்கு இருக்கும் கருவிகள் அறிவியல் முறையில் உரசிப்பார்ப்பதும், வரலாற்று அறிவும் தான். ஆசான் ஏங்கல்ஸ் கூறுகிறார், “அறிவியலின் மேடையில் உரசிப் பார்க்கப் படாத எதும் இற்று வீழ்ந்துவிடும்” அறிவியலோடு உரசிப்பார்க்காத வரையில் தான் கடவுளுக்கு உயிர் வாழும் சாத்தியம் இருக்கும். அறிவியலோடு உரசிப் பார்க்கத் தொடங்கி விட்டால் கடவுளுக்கு சீழ் பிடிக்கத் தொடங்கும். இன்றைய சுரண்டல் சமூக அமைப்பு தன்னுடைய தேவைகளின் நிமித்தம் கடவுளை தாங்கிப் பிடித்துக் கொண்டு நிற்கிறது. அந்த அடிப்படையிலும் கடவுள் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சுரண்டல் அமைப்பு மக்களால் வீழ்த்தப்படும் போது கடவுளும் வீழ்த்தப்படும். இதில் ஐயம் ஒன்றுமில்லை.

ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்

6 நவ்

அண்மையில் ஆனந்த விகடன் இதழில் “ஒரு பெண் போராளியின் மனக் குமுறல்” என்ற தலைப்பில் ஒரு பெண் புலியின் செவ்வி வெளியாகியிருந்தது. பரவலாக கவனத்தை ஈர்த்த, அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரையாக அது இருந்தது. அந்த செவ்வியின் மெய்த்தன்மையில் எனக்கு ஐயம் உண்டு. அது புனைவாகக் கூட இருக்கலாம். அதன் நோக்கம் பரிதாபம் காட்டுவது எனும் போர்வையிலான கேவலப்படுத்தலாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், உயிருடன் கைது செய்யப்பட்ட ஈழப் புலிப் போராளிகள் கைக்கூலிகளாக செயல்பட ஒப்புக் கொண்ட வெகு சிலரைத் தவிர ஏனையோர் விடுதலை செய்யப்படவில்லை. அதுவும் தளபதி அளவுக்கு செயல்பாடு கொண்ட ஒரு பெண் போராளி வன்புணர்ச்சியுடன் வேறு தண்டனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யப்பட்டார் என்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம். அந்த முட்டாள்தனத்தை இலங்கை இராணுவம் ஒருபோதும் செய்திருக்காது. எனவே, அந்த செவ்வி புனைவாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். ஆனால் அந்த புனைவினூடாக தெறிக்கும் கேள்விகள்.. .. ..?

 

அந்தப் புனைவு கூறும் செய்தி என்ன? இரண்டு செய்திகளை அது அழுத்தமாக கூற விரும்புகிறது. ஒன்று ஈழப் போராட்டம் முடிந்து விட்டது. இனி அங்கு போராடுவதற்கு யாரும் தயாராக இல்லை, சூழலும் இல்லை. இரண்டு, தமிழகத்தில் ஈழ மக்கள் நலனுக்காக செயல்படுவதாக கூறிக் கொள்ளும் கட்சிகள் அனைத்தும் ஈழம் குறித்து அக்கரையும் புரிதலும் இல்லாதவை. இப்படிக் கூறுவதன் மூலம் ஈழப் பிரச்சனை தொடர்பாக தமிழத்திலிருக்கும் ஆதரவு நிலையை நீர்த்துப் போக வைப்பது; அவர்களை அப்புறப்படுத்திய இடத்தில் அரசு சாரா நிறுவனத்தையோ, வேறு குழுக்களையோ வைத்து, இந்திய அரசு செய்து கொண்டிருக்கும் துரோகத்தையும், பிராந்திய நலன்களுக்கான செயல்களை இன்னும் வீரியமாகவும், நுட்பமாகவும், மறைமுகமாகவும் செய்வதற்கான முந்தயாரிப்பாகக் கூட அந்தப் புனைவு இருக்கலாம்.

 

ஆனால் இந்தப் புனைவு யாரைத் தாக்குகிறதோ அவர்கள், அதாவது வைகோ, நெடுமாறன், சீமான் இன்னபிற தமிழ் தேசிய கட்சிகள் போன்றவை இது குறித்து எந்தக் கருத்தையும் இதுவரை கூறவில்லை. ஏனென்றால் அவர்களெல்லாம் ‘ஏசு இருக்கிறார், வந்து கொண்டே இருக்கிறார்’ என்பது போல் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், இதோ துப்பாக்கியோடு வந்து விட்டார் என்று ஜெபம் செய்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் பேசினாலுமே கூட அது கற்பனையாக எழுதப்பட்டது என்பதை தாண்டி வேறெதையும் கூறப் போவதில்லை. அது கற்பனை உரையாடலாகத்தான் இருக்கும் என்றாலும், மெய்யாகவே தற்போதைய இலங்கையின் யதார்த்த நிலை அது தான்.

 

தனி ஈழம் கோரி போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியா எனும் பிராந்திய வல்லாதிக்கத்திற்காக முற்றிலுமாக தகர்த்தெறியப் பட்டிருக்கிறது. தனி ஈழ தாகம் கொண்டிருந்த மக்கள் கொன்றொழிக்கப் பட்டிருக்கிறார்கள். போராளிகள் போரின் போதும் அதன் பிறகும் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள், உயிருடன் எஞ்சியவர்கள் சிறைக் கொட்டடிகளில் சித்திரவதை பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வெளியே ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாகவோ, போராளிகளுக்கு ஆதரவாகவோ நிலை எடுப்பது குற்றச் செயலாக, அரசு ஒடுக்குமுறைக்குள் வலிந்து மாட்டிக் கொள்வது போன்ற செயலாக மக்களிடம் ஆழமாக விதைக்கப் பட்டிருக்கிறது. ஒரு போராட்ட அமைப்பு முற்றிலுமாக குலைக்கப்படுவது முன்னெப்போதும் நடந்தே இராத ஒன்றல்ல. அது அவமானகரமான ஒன்றும் அல்ல. ஆனால் விடுதலைப் புலிகள் விசயத்தில் இவ்வாறான புரிதலுக்கு அதன் ஆதரவாளர்கள் ஏன் வர மறுக்கிறார்கள்? எந்த ஒரு விடுதலை இயக்கத்துக்கும் இயக்கம் தான் முதன்மையான ஒன்றேயன்றி அதன் தலைவர்களோ, தனிநபரோ அல்ல. புலி ஆதரவாளர்களிடம் இது தலைகிழாக இருக்கிறது. அதனால் தான் படையணிகளும், ஆயுதங்களும் எதிரியால் முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட பின்பும் பிரபாகரன் வானத்திலிருந்து குதித்து விரல் சொடுக்கினால் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாகிவிடும் என்பதைப் போல கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

விடுதலைப் புலிகள் ஏன் அழிந்தார்கள், எது அவர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது என்பதை விட்டு விடுவோம். விடுதலைப் புலிகள் என்றால் பிரபாகரன் தான் எனும் நாயக மனப்பான்மைக்கு இவர்களை இட்டு என்றது யார்? எது? லட்சக் கணக்கில் தங்கள் கட்சிக்கு உறுப்பினர்கள் இருப்பதாக காட்டிக் கொள்ளும், தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள் அந்தக் கடைசிக்கட்டப் போரில் இங்கிருந்து செய்த பங்களிப்பு என்ன? பாசிச ஜெயாவுக்கு ஓட்டுக் கேட்டது தான் இவர்களின் ஒரே பங்களிப்பு. அங்கு மக்களின் மேல் ஏவுகணைகள் பாய்ந்து கொண்டிருந்தபோது, இங்கே இவர்கள் இலைமலர்ந்தால் ஈழம் மலரும் என்று அறிக்கைக் கணைகள் விட்டுக் கொண்டிருந்தார்கள், ஈழ ஆதரவு என்பதை கருணாநிதியை திட்டுவது என்று குறுக்கிக் கொண்டிருந்தார்கள். எந்த இந்திய ஆளும்வர்க்கத்திற்காக போர் நடத்தப்பட்டுக் கொண்டிருந்ததோ அந்த ஆளும் வர்க்கத்தின் பலன்களைப் பெறுவதில் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

 

இலங்கை அரசு தமிழர்கள் விசயத்தில் என்ன செய்து கொண்டிருந்ததோ அதையே தான் இந்திய அரசு காஷ்மீர் விசயத்திலும், மத்திய கிழக்கிலும் செய்து கொண்டிருக்கிறது. அதை ஆதரித்துக் கொண்டு, இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் பெற துடித்துக் கொண்டு விடுதலைப் புலிகளையும், தனி ஈழத்தையும் ஆதரிக்கிறோம் என்பது அவர்கள் கொள்கையில் இருக்கும் ஓட்டாண்டித் தனமா இல்லையா? இந்த ஓட்டாண்டித் தனத்தை மறைக்கத்தான் பிரபாகரனை ஒரு நாயகனைப் போல தாங்கிப் பிடிக்கிறார்கள். நாளையே அவர் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு களத்துக்கு வந்து விடுவார் என்று பிரமையூட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் வெறுமனே தலைவராகப் பிறந்தவரல்லர். அங்கிருந்த சூழல் அவரை தலைவராக பரிணமிக்க வைத்தது. ஆனால் இன்று அங்கிருக்கும் சூழல் துப்பாக்கியை அல்ல புரசிகர மக்கள் திரள் இயக்கத்தையே கோரி நிற்கிறது. அரசில் அங்கம் வகிக்கத் துடிப்பவர்களால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியுமா? அதனால் தான் அவர்கள் துப்பாக்கியை துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அடையாளமாக பிரபாகரனுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஈழத் தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் இருந்தாலும் வெளியில், சொந்த இடத்தில் இருந்தாலும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஈழப் போரை நினைத்தாலே வலிக்கும் அளவுக்கு அவர்கள் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். தொட்டால் நொறுங்கிவிடும் அளவுக்கு அவர்களுக்குள் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இதை வெல்ல, அவர்களை நேரடியாக பாதிக்கும் வாழ்வாதாரப் பிரச்சனை தொடங்கி, வர்க்க அடிப்படையில் திரட்டி, உணவுப் பிரச்சனையினூடாக உலகப் பார்வையை ஊட்டி ஆயத்தப்படுத்தும் பெரும்பணி தேவையாக இருக்கிறது. அதை ஒரு புரட்சிகர இடதுசாரி இயக்கத்தாலல்லாது பிரிதொரு கொள்கையால் செய்யவியலாது.

 

அண்மையில் பலநாடுகளில் நடைபெற்ற மக்கள் எழுச்சிமிகு போராட்டங்கள் புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் இல்லாததால் நீர்த்துப் போய், மக்கள் போராடியதன் பலன் யாருக்கு எதிராக போராடினார்களோ அவர்களுக்கே கிடைத்திருக்கிறது. அங்கெல்லாம் புரட்சிகர இயக்கத்தின் தேவை அவர்களின் சொந்த அனுபவங்களினூடாகவே உணரப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தோல்விக்கும் அவர்களின் சிதைவுக்கும் இந்த இன்மையே தொடக்கமாக இருந்திருக்கிறது. பெண் போராளியின் பெயரால் புனையப்பட்டிருக்கும் அந்தக் கற்பனை உரையாடல், அது என்ன நோக்கத்திற்காக புனையப்பட்டிருந்தாலும் இதையே உணர்த்துவதாய் இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

ஈழத்திற்கு கிளஸ்டர் குண்டு பிரபாகரனுக்கு கிராஃபிக்ஸ் குண்டு

மாவீரர் நாள் எனும் சடங்கு

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

வங்கி ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம்

21 ஆக

 

மத்திய அரசின் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள 10 இலட்சம் வங்கி ஊழியர்களும், அதி காரிகளும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரு நாட்களும் முழுமையான வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளனர். இதற்கான அறை கூவலை பி.இ.எஃப்.ஐ. உள்ளிட்ட 9 சங்கங் களின் கூட்டமைப்பான யு.எஃப்.பி.யு. விடுத் துள்ளது. வங்கிகள் ஒழுங்கமைப்பு சட்டம், வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டம் மற்றும் போட்டிக் குழுமம் சட்டம் ஆகிய 3 சட்டங் களில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி திருத்தங் களை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த சட்டங்கள் நிறைவேறுமானால் தற்போது பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் அதிகபட்ச ஓட்டு ரிமை என்பது ஒரு சதவீதத்திலிருந்து 10 சத வீதமாக மாறிவிடும்; தனியார் வங்கிகளில் அதிகபட்ச ஓட்டுரிமை என்பது 10 சதவீதத்தி லிருந்து 26 சதவீதமாக மாறிவிடும்; பொதுத் துறை வங்கிகளை ஒன்றோடொன்று இணைக்க இனி போட்டிக் குழுமத்திடம் அனுமதி பெறத் தேவை இருக்காது. 

இவ்வாறு ஏற்படும் மாற்றங்களால் உள் நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் கைக்கு தனியார் வங்கிகள் மாறிவிடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து தனி யார் வங்கிகளின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.4,549 கோடி மட்டுமே. ஆனால், அவ்வங்கி களில் மக்கள் சேமித்து வைத்திருக்கும் மொத்த வைப்புத் தொகை ரூ.8,22,801 கோடி யாகும். சில ஆயிரம் கோடிகளைக் கொண்டு லட்சக்கணக்கான கோடி ரூபாயை கையா ளும் உரிமை பன்னாட்டு முதலாளிகள் கைக்கு மாறுவதற்கான ஏற்பாடுதான் இந்த சட்டத்திருத்தம்.

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாகும்

பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் ஓட்டுரிமை 10 சதவீதமாக உயர்த்தப்படுவ தால், 5 பெரும் நிறுவனங்கள் ஒன்றிணைந் தால் ஒரு பொதுத்துறை வங்கியின் கட்டுப் பாட்டை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. ஏற் கனவே பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் பங்கு 49 சதவீதம் வரை உள்ளது. இந்த சட்டத் திருத்தம் நிறைவேறுமானால் நடைமுறையில் பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாடு தனியாருக்கு சென்றுவிடும். பெயர்ப்பலகை மட்டுமே பொதுத்துறை வங்கி என்பதை தாங்கி நிற்கும்.

போட்டிக் குழுமத்திடம் அனுமதி என்ற ஏற்பாடே ஏகபோகத்தை தடுப்பதற்காக செய் யப்பட்ட ஏற்பாடாகும். பொதுத்துறை வங்கி களை இணைப்பதற்கு அனுமதி தேவை யில்லை என்ற சட்டத்திருத்தம் நிறைவேறு மானால், பொதுத்துறை வங்கிகள் ஒன்றோ டொன்று இணைக்கப்பட்டு அதன் விளை வாக ஏராளமான கிளை மூடலும், பொது மக் களுக்கு வங்கிச் சேவை பாதிப்பும் ஏற்படும். 

இந்த 3 சட்டத் திருத்தங்களுமே மக்கள் விரோதமானது; பெரும் முதலாளிகளுக்கு குறிப்பாக அந்நிய முதலாளிகளுக்கு சாதக மானது. எனவேதான், ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இச்சட்டத் திருத்தங்களை எதிர்த்து பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு தனது பிடிவாதமான போக்கை கைவிடாததன் காரணமாக நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் என் பது அவசியமாகிறது.

மக்களுக்கான கடன் மறுக்கப்படும்

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, சாதாரண மக்களுக்கும், ஏழை-எளிய மக்க ளுக்கும் கடன் வழங்குவதன் மூலமாக அவர் களின் வாழ்க்கைத்தரம் பெருமளவு முன் னேற்றத்தை பெற்றுள்ளது. ஆனால், தற்போது மீண்டும் வங்கிகள் தனியார்மயமாகுமானால் ஏழை-எளிய மக்களுக்கான கடன் என்பது அரிதாகிவிடும். பொதுத்துறையாக இருக்கும் போதே பல்வேறு காரணங்களைக் காட்டி கல்விக்கடன் மறுக்கப்படக்கூடிய சூழ்நிலை என்பது உள்ளது. பெண்கள் சுயஉதவிக் குழுக் களுக்கு நேரடியாக கடன் கொடுத்து வந்த பொதுத்துறை வங்கிகள் தற்போது நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் கொடுத்து, அதனை முன்னுரி மைக் கடனாக கணக்கெழுதிக் கொண்டிருக் கின்றன. அந்த நுண்கடன் நிறுவனங்களோ, வங்கிகளிடமிருந்து 11 சதவீத வட்டிக்கு கடன் பெற்று ஏழை-எளிய மக்களிடம் 26 சதவீதம் முதல் 48 சதவீதம் வரை வட்டிக்கு கடன் வழங்குகின்றன. அவர்கள் கடன் வசூல் செய்யும் முறையினால் ஆந்திராவிலும், தமிழ கத்திலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தற் கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும் ஆபத்து…

தற்போதுள்ள சூழலிலேயே பிரதானமாக நிறுவனக் கடன் கிடைக்காத காரணத்தினால் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தங்கள் நிறைவேறுமானால், அவர்களுக்கு கிடைத்து வரும் கடன் என்பது மேலும் அரிதாகி தற் கொலை எண்ணிக்கை அதிவேகமாக அதி கரிக்கக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. வங்கிகள் தேசியமயமாகி 43 ஆண்டு காலம் கடந்த பின்னணியில் இன்றளவிலும் 50 சத வீதம் மக்களுக்கு வங்கிச் சேவை என்பது மறுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், ‘கட்டுப் படியாகாத’ கிராமப்புற கிளைகளை மூடி விடும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிடுகிறது. இத னால், கிராமப்புற மக்களுக்கு தற்போது கிடைத்துவரும் சேவை கூட மறுக்கப்படும் சூழல் நிலவுகிறது.

ஒருபுறம், கெட்டிப்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை இணைப் பதற்கு முயற்சிக்கும் மத்திய அரசு, மறுபுறம், கார்ப்பரேட் நிறுவனங்கள்,(சூடிn க்ஷயமேiபே குiயேnஉயைட ஊடிஅயீயnநைள), வங்கிகள் துவங்க முழுமையான அனுமதி அளிக்கிறது. வங்கி கள் அல்லாத நிதி நிறுவனங்கள் வங்கிகள் துவங்கவும், வங்கிகளாக மாறவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது. கிராமப்புற வங்கிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுவீகரித்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது.

ரிசர்வ் வங்கி கவர்னரின் ஒப்புதல் வாக்குமூலம்

க்ஷயளநட ஐஐஐ விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தினால் 2018ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.1,75,000 கோடி முதலீடு தேவைப்படும். அவ்வளவு பணத்தை மத்திய அரசு கொடுக்க முடியாத காரணத்தினால் பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்று வதைத் தவிர வேறு வழியில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு. சுப்பா ராவ் சமீபத்தில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதிலிருந்தே இவர்களின் நோக்கம் வெளிப் படையாகத் தெரிகிறது. க்ஷயளநட ஐஐஐ விதி முறைகள் ஏன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்கான எந்தவிதமான தர்க்க நியாயத் தையும் அவர் எடுத்துச் சொல்லவில்லை. அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமானாலும் கூட முதலீடு செய்வதற்கு பணம் இல்லை என்று கூறும் மத்திய அரசு, கடந்த பட் ஜெட்டில் மட்டும் பல்வேறு வகையில் பெரும் முதலாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய வருமானத்தில் ரூ.5,28,000 கோடி அளவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. எனவே, மத்திய அரசின் நோக்கம் பொதுத்துறை வங் கிகளை தனியார்மயமாக்குவதுதான் என்பது தெளிவாக தெரிகிறது. மத்திய அரசின் இந்தக் கொள்கையை கைவிடக் கோரிதான் 10 லட் சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் வீதி யில் இறங்கியுள்ளனர்.

அத்துடன் 

* ஊழியர் விரோத – அதிகாரிகள் விரோத கண்டேல்வால் குழு பரிந்துரைகளை நிராகரித்திடுக!

* இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை/ஈட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை உடனே அமல்படுத்துக!

* பென்ஷன் திட்டத்தில் மத்திய அரசு ஊழி யர்களுக்கு இணையான முன்னேற் றத்தை ஏற்படுத்துக!

* பணியிலிருந்து ராஜினாமா செய்தவர் களுக்கும் கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டவர்களுக்கும் பென்ஷன் தேர்ந் தெடுக்க மற்றொரு வாய்ப்பு வழங்குக!

* அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை உத்தரவாதப்படுத்துக!

* வாரம் 5 நாட்கள் பணி நாட்களாக மாற்றுக!

* வீடு கட்ட கடன், வாகனக் கடன் போன்ற வற்றை அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியாக வழங்கிடுக!

* வங்கிப் பணிகளை வெளியாட்களிடம் ஒப் படைக்காதே!

* ஊழியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தன்னிச்சையான வழிகாட்டுதல்கள் வழங்குவதை கைவிடுக!

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது.

தகுந்த காலஅவகாசம் கொடுத்து வேலை நிறுத்த அறைகூவல் விடுக்கப்பட்டாலும், மத் திய தொழிலாளர் ஆணையாளருக்கு ஆகஸ்ட் 21ம் தேதிதான் சமரசப் பேச்சுவார்த்தை நடத் துவதற்கான நேரம் கிடைத்தது. இது மத்திய தொழிலாளர் துறையின் அக்கறையற்றப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்திருக்கும் அதே தேதியில் அதாவது ஆகஸ்ட் 22ம் தேதி இந்த மக்கள் விரோத மசோதாவை கொண்டுவருவதன் மூலமாக மத்திய அரசு தனது பிடிவாதத்தை கைவிடத் தயாராக இல்லை என்பதையே வெளிப் படுத்துகிறது.

எனவேதான், வங்கி ஊழியர்கள்-அதிகாரி களின் இந்த நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாததாகி விட்டது. மக்கள் நலன் காக்கும் இந்த தேசப் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் பேராதரவு நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இந்த 2 வேலை நிறுத்த நாட்களில் ஏற்படும் அசௌகரியத்தை பொறுத்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.

பொதுச்செயலாளர், 

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்,

தமிழ்நாடு.

 

முதல் பதிவு: தீக்கதிர்

நல்லூர் நண்பர்களே! ஒரு நிமிடம் .. .. ..

20 ஆக

அன்பார்ந்த நல்லூர் நண்பர்களே!

 

காயிதே மில்லத் திடலிலோ, அல்லது வேறு ஏதோ ஓர் இடத்திலோ நோன்புப் பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு; பெருநாள் வாழ்த்துகளை நேரிலும், தொலைபேசியிலும், குருஞ்செய்தியிலும், இணையத்திலும் பகிர்ந்துவிட்டு ஒழிவாய் அமர்ந்திருப்பீர்கள். அல்லது இந்த திருநாளை, கிடைத்த விடுமுறையை எந்த பொழுதுபோக்கு அம்சத்துடன் கொண்டாடுவது என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பீர்கள். அதில் ஒரு குறுக்கீடு.

 

மேலே காணும் சுவரொட்டியை கடந்த இரண்டு நாட்களாக கடையநல்லூரின் சுவர்களில் ஆங்காங்கே நீங்கள் கண்டிருப்பீர்கள். இதை ஒரு தகவலாக நீங்கள் கடந்து சென்றிருக்கலாம், சிலர் இது குறித்து விவாதித்துக் கூட இருக்கலாம். நானும் இது குறித்துத் தான் உங்களோடு பேச வந்திருக்கிறேன்.

 

நோன்புப் பெருநாள் தொழுகையை காயிதே மில்லத் திடலில் எந்தக் கும்பல் நடத்துவது எனும் போட்டியில் வெல்வதற்கு உதவி செய்ததற்காக இந்த நன்றி தெரிவிக்கப் பட்டிருக்கிறது என்றும், தொழுகை என்றால் என்னவென்றே தெரியாத அதிகாரிகளிடம் எந்தக் கும்பல் தொழுகை நடத்துவது என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒவ்வொரு ஆண்டும் நாமே ஒப்படைப்பது சரியா? என்றும் அந்த வாதங்கள் நடத்தப் பட்டிருக்கின்றன. ஆனால் அந்த சுவரொட்டியில் ஒழிந்திருப்பது இது மட்டும் தானா? எழுப்பப்பட வேண்டிய முதன்மையான கேள்வி ஒன்று அந்த சுவரொட்டியில் ஒழிந்திருப்பது உங்களுக்கு புலப்ப்படவில்லையா?

 

அரசியல் என்றால் என்ன? ஜெயலலிதா என்ன சொன்னார்? கருணாநிதி என்ன செய்தார்? பிஜேபியா? காங்கிரசா? இன்னபிற பல்வண்ண ஓட்டுக் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? போன்றவற்றை வாய்களால் அலசிக் காயப் போடுவது மட்டும் தானா? அல்ல. அரசியல் என்பது; நாம் ஒரு சமூகப் பிராணி என்பதால் சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழும் பல்வேறு செயல்களை, அவை ஏன் நிகழ்கின்றன? அதன் பின்னணி என்ன? எந்த நோக்கில் அது நிகழ்கிறது? என்பதை அலசி ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மைகளை தேடிக் கண்டு, அது நம் மீது என்னென்ன விதங்களில் தாக்கம் செலுத்துகிறது என்பதைத் தெளிந்து, அதற்கேற்ப எதிர்வினை புரிவது தான். இது தான் அரசியல் என்பதன் சாரம்.

 

இந்த அடிப்படையில், அந்த சுவரொட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் உண்மைகள் என்ன? அதற்கு நாம் என்ன எதிர்வினை புரிவது? கடையநல்லூர் இஸ்லாமிய இளைஞர்களை பெரிதும் ஆட்கொண்டிருப்பது இது போன்ற ஆன்மீக இயக்கங்கள் தாம். இத்தகைய ஆன்மீக இயக்கங்கள் மத ரீதியான ஒழுங்கை மக்களிடம் மேம்படுத்துவதே தங்களின் பணி என்று கூறிக் கொண்டு, அதற்கான முனைப்புகளில் முழுமூச்சாய் ஈடுபடுவதாகக் காட்டியே தங்களை வளர்த்துக் கொள்கின்றன. ஒற்றைக் கும்பலிலிருந்து பிரிந்த பல்வேறு கும்பல்களுக்கிடையே யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று வெளிப்படுத்திக் காட்டுவதாலேயே இன்று கடையநல்லுர் சந்தித்துக் கொண்டிருக்கும், வேவ்வேறு நாட்களில் ஒரே பெருநாள், தொழுகைத் திடலுக்கு போட்டி உள்ளிட்ட பலவும் நிகழ்கின்றன. ‘கியாமத்து’ நாளில் எது சிறந்த கும்பல் என அறியப்படுவதற்கு இன்று எந்தக் கும்பலுக்கு மக்களிடையே செல்வாக்கு இருக்கிறது என்பது தானா அளவுகோல்? அல்லது காயிதே மில்லத் திடலில் அதிகம் பேரைத் திரட்டி தொழுகை நடத்தியது எந்தக் கும்பல் என்பது தான் அளவுகோலா? இறைவனுக்கு எது பொருத்தமானது என்பதை உங்களுக்கு பாடம் நடத்தும் இந்தக் கும்பல்களின் செயல்களில் இறைப் பொருத்தம் எங்கு இருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்ததுண்டா?

 

நான்கு மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்ட ஓர் அறிவிப்புக்கு இப்போது ஏன் பாராட்டுச் சுவரொட்டி? தொழுகையை யார் நடத்துவது என்பதை அமைச்சரை சந்தித்து தங்களுக்கு சாதகமாக தீர்த்துக் கொள்ள முனையும் ஒரு கும்பலுக்கு ஏன் இது கௌரவப் பிரச்சனையானது? ஏனென்றால் இது அவர்கள் நடத்தும் அரசியல். மக்களை அரசியலற்றவர்களாக தங்களின் பின்னே திரட்டி வைத்திருக்கும் பலத்தில் அவர்கள் செய்யும் அரசியல். முதலாளித்துவமும் இதைத்தான் செய்கிறது. எந்த விதத்திலும் மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றே அது விரும்புகிறது. அதற்காகவே புதுப்புது பொழுது போக்குகளையும், நவீன கண்டுபிடிப்புகலையும் பயன்படுத்துகிறது. இனவெறி, மொழிவெறி, மதவெறி உள்ளிட்ட பலவற்றையும் உருவாக்கி, தூண்டிவிட்டு பயன்படுத்துகிறது.

 

அது போன்றே, இயல்பான மத வழிபாட்டு முறைகளுடன் இருந்த மக்களிடையே மதத் தூயவாதம் பேசி மக்களிடையே செல்வாக்குப் பெற்று, அந்த செல்வாக்கின் பலத்திலேயே மக்களின் அரசியலையும், சிந்தனையையும் மழுங்கடித்திருக்கின்றன இந்தக் கும்பல்கள். இதை புரிய மறுப்பவர்களுக்கு இரண்டு எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். 1) எந்த பேதமுமின்றி வீட்டருகே இருந்த பள்ளிவாசல் திடலில் தொழுது எல்லோருக்கும் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட மக்கள், இன்று ஒரே பெருநாளை அடுத்தடுத்த மூன்று நாட்களில் கொண்டாடியதை எந்த முணுமுணுப்பும் இன்றி அங்கீகரித்தார்களே, இது எப்படி நேர்ந்தது? 2) எவ்வளவோ மோசமான கட்டுரைகளெல்லாம் இணையத்தில் இரைந்து கிடக்க ஒரு கட்டுரையை முகநூலில் பகிர்ந்தார் என்பதற்காக அவரை அடிப்பதற்கு ஆயிரக் கணக்கானோர் திரண்டார்களே. இதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் தேவையா எனும் சிந்தனை யாரிடமுமே எழவில்லையே, இது எப்படி நேர்ந்தது? காரணம், கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்பட்டு வருகிறது என்பது தான்.

 

மதங்களும் அதைத்தான் விரும்புகின்றன. எந்தப் பரிசீலனைக்கும் இடமற்று, தன்னை நம்புபவர்களுக்கே அவைகள் சொர்க்கங்களை வாக்களிக்கின்றன. மழுங்கடிக்கப்படும் அரசியல் உணர்வு, மக்களிடம் இன்னும் மிச்சமிருக்கும் தவறுகளைக் கண்டு பொங்கி எழும் தன்மை, இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளிகளில் தோதாக அமர்ந்து கொள்ளும் இந்த மதவாதக் கும்பல்கள், மக்களின் அந்த இடைவெளியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இது தான் அந்த சுவரொட்டி முகத்திலறைந்து வெளிப்படுத்தியிருக்கும் உண்மை.

 

உழைக்கும் மக்களே! அதிகாலையில் உறக்கத்திலிருந்து எழுவதில் தொடங்கி பின்னிரவில் படுக்கையில் விழும் வரை பல்லாயிரக் கணக்கான மனிதர்களின் உழைப்பை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உங்களோடு சேர்ந்து அந்த உழைக்கும் மக்களை பல்வேறு பிரச்சனைகள் நாலாதிக்கிலிருந்தும் அழுத்திக் கொண்டிருக்கின்றன. விலைவாசி உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, சூழல் மாசுபாடு, தனியார்மயம், ஏழ்மை, கல்வியின்மை, அடிப்படை வசதிகளின்மை, சுகாதாரச் சீர்கேடுகள், ஊழல்கள், அடக்குமுறைகள் .. .. .. இது போன்ற எந்தப் பிரச்சனையும் உங்களுக்கு இல்லையா? இருக்கின்றன என்றால் அதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அற்பமான முகநூல் பிரச்சனைக்கும், ஒரு குறுஞ்செய்து தகவல் மூலமும் நொடியில் உங்களால் ஆயிரக்கணக்கில் திரளமுடியும் என்றால்; தினமும் உங்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சனைகளை எதிர்த்து நீங்கள் ஏன் திரளக் கூடாது?

 

பிரச்சனைகளுக்காக போராடுவது குறித்து நீங்கள் வெட்கப்படுகிறீர்களா? சலவை செய்த வேட்டியில் தேனீர் குடிப்பதற்காகவும் இன்னும் பலவற்றுக்காகவும் நாளில் பலமுறை கடந்துபோகும் சாலைகளில் உங்களை பாதிக்கும் ஒரு பிரச்ச்னைக்காக உங்களால் நிற்க முடியாது என்றால், உங்களுக்குள் அரசியல் உணர்ச்சி எந்த அளவுக்கு வற்றிப் போய் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு காட்டுகள் வேண்டுமா?

 

இந்த வறட்சியை உங்களிடம் ஏற்படுத்தியது யார்? இதை நீங்கள் எப்படி சரி செய்யப் போகிறீர்கள்? இவைகளை அறிந்த பிறகான உங்களின் எதிர்வினை என்ன? சமூக நடப்புகளை ஊன்றிக் கவனியுங்கள், உங்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன என்பதை ஆலோசியுங்கள். அவற்றை நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத் தலைமைகளிடம் முன்வைத்து கேள்விகளை எழுப்புங்கள். ஆம், உங்கள் இயக்கத் தலைமைகளிடம் நீங்கள் எழுப்பும் கேள்விகளிலிருந்து தொடங்கட்டும் உங்கள் எதிர்வினை.

தொடர்பான இடுகைகள்

திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு

இஸ்லாமிய இளைஞர்களே எங்கு செல்கிறீர்கள்?

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

19 ஆக

திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்! – பிரசுரம்!

பொதுக்கூட்டங்கள்
தெருமுனைக்கூட்டங்கள்
கலை நிகழ்ச்சிகள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள் பொங்கியெழுந்தனர்.  அவர்களின் கோபத்தீயில் வெந்து மடிந்தான் ஆலையின் மனித வளப் பொது மேலாளர் அவனீஷ்குமார் தேவ்.  முதலாளிகள் சங்கங்களும், ஓட்டுக் கட்சிகளும் பெருங்குரலெடுத்துக் கண்டனம் செய்தனர்.  அன்னிய மூலதனம் வராது, வளர்ச்சி குறையும் என ஓலமிட்டனர்.  தொழிலாளி வர்க்கத்தையே கொலைகார வர்க்கம் போல் பிரச்சாரம் செய்கின்றனர் முதலாளிகள்.  ஒரு நிமிடத் தாமதத்திற்குக் கூட அதை வேலை நீக்கத்திற்கான குற்றமாக்குவது, இயந்திரங்களின் வேகத்தைக் காட்டி தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிவது, இயந்திரத்தின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க தவறினால் சம்பள வெட்டு, கழிப்பறைகளிலும் கண்காணிப்புக் கேமரா, அற்பக்காரணங்களுக்கும் அசிங்கமாய் திட்டி அவமானப்படுத்துவது என அடுக்கடுக்கான அடக்குமுறைகள். பேச்சு வார்த்தைக்கு அழைப்பது என்ற பெயரில் குண்டர்களையும் போலீசையும் வைத்து தொழிலாளர்களைத் தாக்க முற்பட்ட போது தொழிலாளிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத்திய போராட்டத்தில் தான் அந்த அதிகாரி பலியானான்.  வன்முறைக்கு வித்திட்டது ஆலை நிர்வாகம், தொழிலாளிகளல்ல.

நாட்டில் 90 சதம் பேர் தொழிலாளிகள், உழைப்பாளிகள்.  அவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேச்சுவார்த்தை என அமைதியான வழிகளில் தான் போராடுகிறார்கள்.ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான முதலாளிகள் தான் அதிகார வர்க்கம், போலீசின் துணையோடு ஒடுக்கின்றனர்.  மிக மிக அரிதாகத் தான் தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.  எங்கோ, எப்போதோ ஒரு அதிகாரி பலியானால் ஊளையிடும் ஓட்டுக்கட்சிகளும், ஒப்பாரி வைக்கும் ஊடங்கங்களும் முதலாளிகள் நடத்தும் படுகொலைகள், வன்முறை பற்றி வாய் திறப்பதில்லை.

தனியார்மயத்தின் பெயரால் நாட்டை மீண்டும் காலனியாக்கும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்பட்டு வரும் கடந்த இருபது ஆண்டுகளில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளிகளின் வன்முறை மிகப்பெருமளவில் அதிகரித்துவருகிறாது.  நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தால் கிடைத்த எட்டு மணிநேர வேலை என்ற சட்டபூர்வ உரிமையை ஒழித்துவிட்டு முதலாளிகள் தங்கள் விருப்பப்படி 12 மணி, 14 மணி, 16 மணி என உழைப்பை உறிஞ்சுகிறார்களே இது வன்முறையில்லையா?  எட்டு மணி நேரம் என்ற சட்டத்தை முதலாளிகள் அமுல்படுத்தினால் இன்னும் பல லட்சம் பேருக்கு வேலை கொடுக்கலாம்.  வேலையில்லாத் திண்டாட்டம் என்பது முதலாளிகளின் லாப வெறியால் உருவாக்கப்படும் கொடுமை.  இது சமூகத்தின் மீது நடத்தப்படும் வன்முறையில்லையா?

240 நாட்கள் ஓராண்டில் தொடர்ச்சியாகப் பணியாற்றினால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை எந்த முதலாளியும் மதிப்பதில்லை.  பத்தாண்டு, இருபதாண்டு பணியாற்றியவர்களைக் கூட திடீரெனத் தூக்கியெறிந்து குடும்பங்களை வீதியில் நிறுத்துகின்றனர் முதலாளிகள்.  பயிற்சியாளர்கள் (ட்ரெய்னி) தொழில் பழகுநர் (அப்ரெண்டிஸ்) என்ற பெயரில் சம்பளமே இல்லாமல் அல்லது அற்பச் சம்பளத்தில் இளவயது ஆற்றலை உறிஞ்சி விட்டு தூக்கியெறிந்து விடுகின்றனர்.  இந்த மோசடியும், துரோகமும் வன்முறையில்லையா?  தமிழகத்தின் பெருந்தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளிகளில் முக்கால்வாசிப்பேர் ஒப்பந்த தொழிலாளிகள்  பெரும்பாலான் ஒப்பந்தத் தொழிலாளிகளை முதலாளிகள் கணக்கில் காட்டுவதேயில்லை.  சென்னையைச் சுற்றி ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், இருங்காட்டுகோட்டை, மறைமலை நகர் போன்ற பகுதிகளில் நோக்கியா, ஹூண்டாய், சிமென்ஸ், செயிண்ட் கோபெய்ன் என பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன.  அன்றாடம் நடக்கும் ஏராளமான விபத்துகளிலும் ‘மர்ம’மான முறையிலும் ஏராளமான தொழிலாளர்கள் மரணமடைகின்றனர்.  இவ்வளவு பெரிய தொழில்பகுதியில் தீவிர, அவசர சிகிச்சைக்க்கு ஒரு மருத்துவமனை கூட இல்லை.  அண்மையில் ஹவாசின் என்ற தொழிற்சாலையில் பணியாற்றிய 7 பேர் சாலை விபத்தில் இறந்தனர்.  இவர்கள் அனைவரும் மருத்துவமனையிலும், காவல் நிலையத்திலும் அடையாளம் தெரியாதவர்கள் என்றே பதிவு செய்யப்பட்டனர்.  புகழ்பெற்ற டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலையில் கை நசுங்கிய தொழிலாளிக்கு பஞ்சை வைத்துக் கட்டி பேருந்து செலவுக்கு ரூ. 25/- கொடுத்து அனுப்பி விட்டது நிர்வாகம்.  முதலாளிகளின் கொடிய மனதுக்கு சிறு எடுத்துக்காட்டு இது.  ‘சுமங்கலித் திட்டம்’ எனும் பெயரில் கிராமப்புறத்தில் ஏழை இளம்பெண்களைத் திரட்டி கொட்டடிகளில் அடைத்து வரைமுறையின்றி வேலை வாங்குவது, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவது என சொல்லொணாக் கொடுமைகளை கோவை திருப்பூர் பஞ்சாலை முதலாளிகள் நடத்துகின்றனர்.   முதலாளிகள் நடத்தும் வரம்பற்ற வன்முறைகளைப் பற்றி ஊடகங்களோ, ஓட்டுக்கட்சிகளோ பேசுவதில்லை.

கல்வி, மருத்துவம், குடிநீர், மின் உற்பத்தி, சாலை வசதி என அரசு வழங்கவேண்டிய சேவைகள் அனைத்தையும் தனியார்மயத்தின் பெயரில் முதலாளிகள் கைப்பற்றிக்கொண்டு கொள்ளையடிக்கின்றனர்.  மழலையர் பள்ளி முதல் மருத்துவக் கல்வி வரை ஆக்கிரமித்து ‘தரமான கல்வி’  என்ற போர்வையில் விதவிதமான வழிகளில் – கல்விக் கட்டணம், சிறப்பு வகுப்பு, செருப்பு, சீருடை பேனா, பென்சில், பேருந்து என பெற்றோர்களைக் கசக்கிப் பிழிகின்றனர். எந்த சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கின்றனர்.  அரியானா மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் இருநூறு ரூபாய் பணம் கட்டவில்லை என்பதால், இன்குபேட்டரில் இருந்த குழந்தைக்கு சிகிச்சையை நிறுத்தியதால் அந்தப் பச்சிளங்குழந்தை இறந்துவிட்டது.    அரசு மருத்துவமனையே இப்படியென்றால் தனியார் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் எவ்வளவு கொடூரமாக நடந்துகொள்வார்கள் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.  அப்பல்லோ போன்ற கார்ப்பரேட், தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் முன்பணம் கட்டாவிட்டால் தொட்டுக்கூட பார்க்கமாட்டார்கள்.  இவையெல்லாம் அரசின் துணையோடு முதலாளிகள் நடத்தும் வன்முறையில்லையா?

போலி மருந்து தயாரித்து மக்களின் உயிரோடு விளையாடுபவர்கள், பத்து மடங்கு, இருபது மடங்கு லாபம் வைத்து மருந்து விற்பனையில் கொள்ளையடிக்க்கும் கொலை பாதகத்தைச் செய்பவர்கள் யார்?  தொழிலாளிகளா, முதலாளிகளா?  மாசுப்பட்ட குடிநீரால் சென்னையில் காலரா நோய்க்கு 30 பேர் பலியாகிவிட்டனர்.  அசுத்தமான குடிநீரில் அன்றாடம் வாந்தி பேதிக்கு இரையாகும் மக்கள் ஏராளம்.  ஆனால் கொக்கோ கோலா, பெப்சி, டாடா, உள்ளூர் மாபியாக்கள் அனைவரும் நீர்வளத்தை உறிஞ்சி விற்று பல்லாயிரம் கோடிகளை சுருட்டுகின்றனர்.  தண்ணீர் சமூகத்தின் பொதுச்சொத்து, அதை முதலாளிகள் கைப்பற்றி உரிமை கொண்டாடுவது வன்முறையில்லையா?  கட்டுப்படியாகாமல் கடன்பட்டு இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம்?  விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை அநியாய விலைக்கு விற்று, அடிமாட்டு விலைக்கு விளைச்சலை அபகரித்த முதலாளிகள் தானே!  இது வன்முறையில்லையா?

பொய்க்கணக்கு எழுதி வரி ஏய்ப்பது, கறுப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குவது, பொருள்களைப் பதுக்கி விலையேற்றுவது, கலப்படம் செய்வது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பொதுச்சொத்துக்கள், கனிவளங்கள், கிரானைட் ஆகியவற்றை கொள்ளையடிப்பது இப்படி அனைத்துக் கிரிமினல் குற்றங்களையும் செய்வது யார் தொழிலாளியா?  முதலாளியா? இக்குற்றங்கள் வன்முறையில்லையா?  பயங்கரவாதவில்லையா?  சாராயம் காய்ச்சும் ரெளடி மீது பாயும் குண்டர் சட்டம் ஒரு குற்றத்தைக் கூட விட்டு வைக்காமல் செய்யும் முதலாளிகள் மீது பாய்வதில்லை.  காரணம் இக்குற்றங்கள் தனியார்மயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு அரசு அதிகாரிகள் துணையோடு நடத்தப்படுவதால் தான்!

உழைப்பைச் சுரண்டுவது, நாட்டின் பொருளாதார வளங்களைக் கொள்ளையடிப்பதோடு பண்பாட்டுத்துறையிலும் தங்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் முதலாளிகள்.  விற்பனையை அதிகரிக்கவும், சந்தையை விரிவுப்படுத்தவும் பெரு விளம்பர யுத்தத்தை நடத்தி மொத்த சமூகத்திலும் நுகர்வு வெறியை, பாலூணர்வைத் தூண்டுகின்றனர்.  எல்லாவற்றையும் அனுபவிப்பது, எந்த வழியிலும் பணம் சேர்ப்பது, சுயநலம், ஆடம்பரமோகம் என்ற சித்தாந்தத்தைப் பரப்புவதன் மூலம் ஒழுக்கக் கேட்டையே புதிய சமூக ஒழுங்காக மாற்றுகின்றனர்.  இதன் விளைவு தான் நாள்தோறும் பெருகிவரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, ரெளடித்தனம் ஆகியவை.  சமூகம் பாதுகாப்பற்றதாக மாறிவரக்காரணம் முதலாளிகளின் லாபவெறித்தானே!  இது வன்முறை இல்லையா?

முதலாளிகளின் அனைத்தும் தழுவிய இந்த வன்முறையை, பயங்கரவாதத்தை ஓட்டுக் கட்சிகளோ ஊடகங்களோ அம்பலப்படுத்துவதில்லை.  ஏனெனில் இவர்கள் தனியார்மயத்தின் பங்காளிகளாகிவிட்டனர்.  ஓட்டுக் கட்சிகளின் ஒரே கொள்கை கொள்ளையடிப்பது, அதற்குப் போட்டி போடுவதே அவர்களின் ஜனநாயகம்.  உங்கள் எல்லோருக்கும் தெரிந்த இந்த உண்மையை அம்பலப்படுத்த்வதால் தான் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்கின்றனர்.

இப்போது சொல்லுங்கள் யார் வன்முறையாளர்கள்?  எது வன்முறை?

சூழ்ச்சி, வஞ்சகம், பித்தலாட்டம், மோசடி, லாபம் இவைதான் முதலாளிகளின் சிந்தனை. வரைமுறையின்றி இயற்கை வளங்கைச் சுரண்டுவதன் மூலம் சுற்றுச்சூழலை அழித்து பூமியின் இருத்தலுக்கே எதிராக இருப்பவர்கள் முதலாளிகள்.

உழைப்பாளி மக்களாகிய நாம் எப்பொழுதும் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறோம்.  வன்முறையை நாம் சிந்திப்பதேயில்லை.  அதனால் தான் அணு உலை வேண்டாம் என்கிறோம்.  ஆபத்து எனத் தெரிந்தும் தங்கள் சுயநலத்திற்கு அணு உலை வேண்டும் என்கின்றனர் முதலாளிகள்.

உழைப்பாளிகள் வன்முறையைக் கையிலெடுத்தால் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளி வர்க்கம் ஒரு நொடியில் வீழ்ந்து விடாதா?  மாருதி தொழிலாளிகள் நடத்திய போராட்டம் ஒரு வெள்ளோட்டம் தான்.

முதலாளித்துவ சுரண்டல், பயங்கரவாத ஒடுக்குமுறை இவற்றிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டுமானால் காங்கிரஸ், பா.ஜ.க. பிற ஓட்டுக் கட்சிகள் அமுல்படுத்தும் தனியார்மயக் கொள்கைக்கு முடிவுகட்டவேண்டும்.  இதற்கு மார்க்சிய – லெனினிய மாவோ சிந்த்னை வழியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் தலைமையில்  அணிதிரள்வது ஒன்றே வழி!


* நாடு மீண்டும் காலனியாவதைத் 
தடுத்து நிறுத்துவோம்!

*  முதலாளித்துவ பயங்கரவாதத்தை
அடித்து வீழ்த்துவோம்!

*  போலி ஜனநாயக தேர்தல் பாதையைத் 
தூக்கியெறிவோம்!

* நக்சல்பாரி புரட்சிப் பாதையில்
ஒன்றிணைவோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.

தொடர்புக்கு:

அ. முகுந்தன்,
110, 2வது மாடி,  மாநகராட்சி வணிக வளாகம், 
63, ஆற்காடு சாலை, 
கோடம்பாக்கம், சென்னை – 24
பேச : 94448 34519

அறிவார்ந்த வடிவமைப்பு என்றால் என்ன? பகுதி 4

16 ஆக

 
 
நண்பர்களே.சென்ற பதிவுகளில் அறிவார்ந்த வடிவமைப்பின் விளக்கம் அதன் வரலாறு குறித்து அறிந்தோம்.அறிவார்ந்த வடிவமைப்பு இயக்கம்[ID] பிற பரிணாம எதிர்ப்புகளை விட அறிவியல்(?) ரீதியான விமர்சனங்களை பரிணாமத்தின் மேல் தொடுப்பதும் அதற்கு பரிணாம ஆய்வாளர்கள் பதிலளிப்பதும் இந்த 15+ ஆண்டுகளில் அதிகம் விவாதிக்கப் பட்ட ஒன்று.
இந்த இயக்கமும் பல்கலைகழகம் , ஆய்வுக் கூடம்,கல்வி,விளம்பர பிரச்சாரம் என மும்முரமாக இயங்குகிறார்கள்.இதன் முக்கியமான் நாயகர்கள் குறித்து அறிவோம்.ஒவ்வொருவர் பற்றி சுருக்கமான விவரங்களும் அவர்களின் ஒரு சிறிய உரையும் இப்பதிவில் அளிக்கிறேன்.காணொளியில் அவர்கள் முன் வைக்கும் பரிணாம கொள்கையின் மீதான விமர்சனங்கள் வரும் பதிவுகளில் விவாதிக்கப்படும்.இப்போது அறிமுகம் மட்டுமே!!!!!!!!!!
 
1.Phillip E. Johnson
 
 
 
 
Phillip E. Johnson (d.o.b: 18 June 1940) அறிவார்ந்த வடிவமைப்பு இயக்கத்தின் தந்தையாக அறியப்படுகிறார்.இவர் ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர் மட்டுமல்லாது பெர்க்லி பல்கலைகழகத்தில் சட்டத்துறை பேராசியராகவும் [emeritus professor of law at Boalt School of Law at the University of California, Berkeley] 1967 to 2000 ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.அமெரிக்காவின் இல்லினோய்ஸ் மாநிலத்தை சேர்ந்தவர். கிறித்தவ[Presbyterian Church (USA] மத நம்பிக்கையாளர். மைக்கேல் டென்டன் எழுதிய Michael Denton‘s Evolution: A Theory in Crisis. [1985] புத்தகம் மற்றும் ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய The Blind Watchmaker[1986] புதகம் ஆகியவற்றின் மீதான ஆய்வில் பரிணாம விமர்சகராக மாறியதாக குறிப்பிடுகிறார். Discovery Institute‘s Center for Science and Culture (CSC) நிறுவனர்களுள் ஒருவர்.
 
 
 
 

2.Michel Behe

Michael J. Behe (born 1952) அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தை சேர்ந்தவர். உயிர்வேதியலில்[Biochemistry] முனைவர் பட்டம் பெற்ற சிறந்த ஆய்வாளர். sickle-cell disease என்னும் இரத்த குறைபாடு பற்றியே ஆய்வு செய்து முனைவர் பட்டம் [1978 to 1982] பெற்றார். உன்னத முனைவர் பட்டம் எனப்படும் postdoctoral work [1982 to 1985] ஆய்வில் டி என் ஏ [DNA] அமைப்பு குறித்து ஆய்வு செய்தார் .பல ஆய்வுக் கட்டுரைகள் பல ஆய்விதழ்களில் பதிவிட்டார். நியூ யார்க்கில் உள்ள Queens College  கல்லூரியில் உயிர் வேதியியல் துறை பேராசியராக பணியாற்றியவர். இப்போது பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள  Lehigh University ல் பணி புரிந்து வருகிறார். Discovery Institute’s Center for Science and Culture அமைப்பிலும் பெருந் தொண்டு ஆற்றி வருகிறார்.
 
முதலில் பரிணாம் கொள்கையை ஏற்புடையதாக கருதினார்.ஆனால் மைக்கேல் டென்டன் எழுதிய Evolution: A Theory In Crisis புத்தகம் படித்த பின் பரிணாம கொள்கையை விமர்சிக்க தொடங்கினார். பரிணாம் கொள்கை உண்மையாக இருக்க முடியாது என்பதற்கு உயிர்வேதியியல் ரீதியான ஆதாரம் கண்டு பிடித்ததாக கூறினார் பெஹே. சில உயிர்களின் அடிப்படை வடிவமைப்புகள் எளிமைப் படுத்த முடியாத சிக்கலாக இருப்பதாகவும் இவை எந்த ஒரு எளிமையான அமைப்புகளில் இருந்து பரிணமிக்க முடியாது என்ற விமர்சனத்தை வெளியிட்டார்.இதுவே Irreducible complexity     என அழைக்கப்படும் அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கையின் சாரம் ஆகும். இவை பரிணாம செயல்முறைகளான் இயற்கை தேர்வு+சீரற்ற சிறு மாற்றத்தின் மூலமாக விளகக முடியாது என்பதால் இவை ஒரு அறிவு கொண்ட சக்தியால் மட்டுமே படைக்கப் பட்டு இருக்க முடியும்.இம்மாதிரி விளக்கங்கள் நிறைய கேட்டு இருக்க்லாம்.”கடவுள் இல்லையென்று நிரூபிக்க முடியாத‌தால் கடவுள் உண்டு”.இந்த விள்க்கம் எல்லாம் மைக்கேல் பெஹேவின் Irreducible complexity  கொள்கை போட்ட குட்டிகள்தான். இவர் 1996ல் எழுதிய. Darwin’s Black Box  புத்தகம் பிரபலமானது.
 
 
இக்கொள்கை முன்னெடுப்பதில் இவர்&கொள்கைகள் பற்றி இன்னும் அதிகம் வரும் பதிவுகளில் பார்ப்போம்..
 
மைக்கேல் பெஹே கீழ்க்கண்ட வாதங்களை காணொளியில் முன் வைக்கிறார்
முதல் காரணி வாதம்[First cause argument]
 
ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பிரபஞ்சம்[Fine tuning argument]
 
இயற்கையாக ப்ரோட்டின் அமையும் நிகழ்தகவு[Probability of protein formation]
 
பிரபஞ்சத்தில் முதல் உயிரின் தோற்றம்.[Abiogenesis]

.Michel Behe

3.William Albert “Bill” Dembski

William Albert “Bill” Dembski (born July 18, 1960) இவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை  William J. Dembski பரிணாம் உயிரியல் பேராசியர் [University of Erlangen-Nuremberg] என்பது வியப்பான உண்மை. William Dembski கணிதம் [University of Chicago], தத்துவம் [Princeton Theological Seminary] என இரு முனைவர் பட்டங்கள் பெற்றவர். சிறுவயது முதலே பரிணாம் கொள்கை மீது சந்தேகம் கொண்ட டெம்ஸ்கி 1991ல் சீரற்ற தன்மையை வடிவமைத்தல்[Randomness by design] என்னும் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டார்.
 
[பரிணாமத்தின் படி வடிவமைப்பு என்பது சீரற்ற தன்மையால் [Design by randomness] இவர் ப்ளேட்டை திருப்பி போடுகிறார். ஹா ஹா ஹா சரியான போட்டி!!!!!!!!!! சில பரிணாம கொள்கையாளர்கள் சீரற்ற சிறுமாற்றம் மட்டும்தான் ஒழுங்கற்றது இயற்கை தேர்வு அப்படியல்ல என்று கூறுவது சரியே என்றாலும் இங்கு இப்பதிவு ஒரு  ID கொள்கையாளரின் கண்ணோட்டதிலேயே எழுதப்படுகிறது. விமர்சனங்கள்,விவாதங்கள் பிறகு ]
 
பரிணாம செயல்முறைகள் மூலம் சிக்க்லான வடிவமைப்பு நிகழ முடியாது என்பதற்கு கணித ரீதியாக சில விமர்சனங்களை வைக்கிறார். பரிணாமத்தின் மாதிரியான Evolutionary Algorithms      பல கணித சிக்கல்களை தீர்ப்பது பரிணத்தின் நிரூபணம் என்பதை உடைக்க முயல்கிறார். இதற்கு No free lunch theorem மற்றும் Complexity theory அடிப்படையில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார்.இவர் Discovery Institute‘s Center for Science and Culture (CSC)  ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். எனக்கு பிடித்தவர் இவர்தான் . இவர் நம்ம specialization  ஆள் அதனால் வரும் பதிவுகளில் இவர் கட்டுரைகள் நுணுக்கமாக் அலசப்படும்

4.Stephen C Meyer

Stephen C. Meyer.Director of the Center for Science and Culture at the Discovery Institute and Vice President and Senior Fellow at the Discovery Institute
Stephen C. Meyer புவியியலில் பட்டமும்,வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் எழுதிய   signature in the cell     என்ற புத்தகமும் பிரபல்மானது.செல்லில் உள்ள டி என் ஏ ல் உள்ள சிக்கலான வடிவமைப்பு,தகவல்கள் பரிணாமத்தை தவறு என்று நிருபிப்பதாக வாதிடுகிறார்.
 
 
இது இல்லாமல் இன்னும் சிலரும் உண்டு என்றாலும் இந்த நால்வரை பற்றி சில குறிப்புகள் கொடுத்தது ஏன் எனில் இவர்களில் விமர்சன முறைகள் வேறுபட்டது.திரு ஜான்சன் சட்டாரீதியாக‌வே பரிணாம கொள்கை கல்வி எதிர்ப்பு குறித்து மேற்கொண்டார்.
 

திரு மைக்கேல் பெஹே உயிர் வெதியியல் சார்ந்தும்,திரு டெம்ஸ்கி கணிதம் சார்ந்தும் ஸ்டீஃபன் மெயர் செல் ஆய்வு சார்ந்தும் விமர்சனம் வைப்பதால் இந்த விமர்சகர்களை  அறிவது அவசியம் ஆகிறது.இனி நேரடியாக  கொள்கை  மற்றும் அதன் பரிணாம் விமர்சனம் குறித்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.நன்றி

 

முந்திய பதிவுகள்

கட்டுமான தொழிலாளர்களின் அவலநிலை! போராட்டம் தான் தீர்வு!

12 ஆக

இரண்டு நாள்களுக்கு முன்பு ஜேப்பியார் இன்ஸ்டூட்டுக்காக கட்டப்பட்ட விளையாட்டு ஸ்டேடியத்திற்காக நடந்த கட்டுமான வேலைகள் நடைபெற்றதில் 10 பேர் கோரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.  பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இது போல சென்னையில் ஆங்காங்கே தினம் ஒருநபராவது வேலையின் பொழுது கொல்லப்படுகிறார்கள்.

கொல்லப்படுகிறார்கள் என எழுதுவதற்கு காரணம் இருக்கிறது.  கட்டுமான தொழிலாளர்களுக்கு பணிச்சூழல் என்பது படுமோசமான நிலை இருக்கிறது. ஹெல்மெட் கிடையாது. பாதுகாப்பு கவசங்கள் கிடையாது.  பாத்ரூம், டாய்லெட் வசதி கூட முறையாக கிடையாது.  முன்பு சென்னையில் ஆந்திர மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வேலை செய்தனர். கடந்த சில வருடங்களாக வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது.  இவர்களுக்கு தற்காலிகமாக கட்டித்தரப்படும் வீடுகள் மாடுகள் இருப்பதற்கு கூட தகுதியற்றவை! 

மேலும், பல கட்டுமான நிறுவனங்கள் வேலையை துவங்கிவிட்டால், தங்களுடைய கொள்ளை லாபத்திற்காக இரவு பகல் என தொடர்ச்சியாய் வேலைகளை செய்கிறார்கள்.  ஜேப்பியார் போன்ற கல்வி வியாபாரிகள் ஒவ்வொர் ஆண்டும், மாணவர்களிடமிருந்து ஜூன், ஜூலையில் மாணவர்களிடமிருந்து லட்சகணக்கான பணத்தை நன்கொடை என்ற பெயரில் பிடுங்கி தான் தங்கள் கட்டுமான வேலைகள் உட்பட எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க துரிதப்படுத்துகிறார்கள். பில்டர்களும் தனது வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கி தான் வேலையை துவங்குகிறார்கள். இப்படி அடித்து பிடித்து, வேலைகளை செய்யும் பொழுது, கட்டுமான விதிகளை காற்றில் பறக்கவிடுகிறார்கள். உயிரிழப்பும், விபத்தும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இந்நிறுவனங்களில் வேலை பார்க்கும் பொறியாளர்கள், சூப்பர்வைசர்கள் காலையில் 7 மணிக்கு வேலைக்கு போனால், இரவு திரும்ப 11 மணி ஆகிவிடுகிறது. மூன்று சிப்டுக்கு பதில் இரண்டு சிப்டுகளிலேயே ஆள்களிடம் வேலை வாங்கிவிடுகிறார்கள்.

தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காவது இ.எஸ்.ஐ. மருத்துவ பாதுகாப்பு உண்டு. கட்டுமான தொழிலில் சீசனல் வேலை என்பதால், இவர்களுக்கு இ.எஸ்.ஐயும் கிடையாது.

இந்தியாவில் விவசாயத்திற்கு பிறகு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமான தொழிலில் ஈடுபடுகிறார்கள்.  அவர்களுக்கே இந்த கதி?  சமீபத்தில் ஒரு கட்டுமான தொழிற்சங்கம் வேலையின் பொழுது உயிரிழப்பு ஏற்பட்டால், இரண்டு லட்சம் கேட்டு போராட்ட அழைப்பு விடுத்திருந்தது. இன்றும் இரண்டு லட்சத்திற்கே போராடும் நிலை என்பது அவலம் தான்!

ஜேப்பியார் இன்ஸ்டூட்டில் நடந்த சம்பவத்திற்கு பிறகு, ஒரே ஒரு நபரை கைது செய்தார்கள். மக்கள் போராட்டங்களுக்கு பிறகு தான், ஜேப்பியாரை கைது செய்திருக்கிறார்கள். நாளையே தனது செல்வாக்கை வைத்து, வெளியில் வந்துவிடுவார். 

மக்கள் நலன் நாடும் அரசாய் இருந்தால் தொழிலாளர்களுக்கான உரிமைகளை முறைப்படுத்துவார்கள். நடப்பது மக்கள் விரோத அரசு தானே!  போராட்டங்கள் தான் நமக்கான உரிமைகளை பெற்றுத்தரும்!

முதல் பதிவு: குருத்து

அறிவார்ந்த வடிவமைப்பு என்றால் என்ன? பகுதி 3

9 ஜூலை
நண்பர்களே பரிணாமத்திற்கு மாற்றாக அதன் எதிர்ப்பாளர்களால் முன் வைக்கப்படும் அறிவார்ந்த வடிவமைப்பு[ID] என்னும் கொள்கையை குறித்த தொடர் பதிவுகளை எழுதி வருகிறோம்.முந்தைய இரு பதிவுகளில் அதன் வரையறுப்பு ,முக்கியமான் கொள்கையாக்கங்களை பார்த்தோம். ID கொள்கையாளர்களின் கருத்துகளை அப்படியே வெளியிடுவதில் மிக கவனமாகவும் வெளிப்படையாகவும் இருந்து வருகிறோம்.இப்பதிவில் அதன் தோற்றம், வரலாறாக அவர்களின் தளத்தில் இருந்தே மொழி மாற்றம் செய்து வெளியிடுகிறோம். இதில் பல தேவையான் விவரங்கள் இருக்கலாம். வழக்கம் போல் மொழி மாற்ற சிக்கல்களை தவிர்க்க ஆங்கில மூலத்தையும் அளித்து விடுகிறோம்.

 History of intelligent design and the creation – evolution controversy

1611: அரசன் ஜேம்ஸ் ஆங்கில பைபிள் பிரதி வெளியீடு
1654: கிறித்தவ‌ பேராயர் உஷைர் உலகம் தோன்றிய நாளை பைபிளில் இருந்து 4004B.C.E என கணக்கிடுகிறார்
1802: இயற்கை இறையியல் என்பது அறிவியல்,தத்துவம் உட்பட்ட காரணிகளை கொண்டு  கடவுளின் இருப்பை நிறுவும் முயற்சியாகும்.
William Paley (July 1743 – 25 May 1805) இயற்கை இறையியல் துறை சார்ந்த முக்கியமான புத்தகம் வெளியிடுகிறார். இது Teleological argument என்னும் இயற்கையின் படைப்புகள் அனைத்திலும் ஒரு ஒழுங்கான வடிவமைப்பு இருப்பது கடவுளை நிறுவுகிறது எனும் கொள்கையை தெளிவாக முதலில் முன் வைத்தது எனலாம்.
 
1830: டார்வினின் பரிணாம் கொள்கைக்கு மூல ஆதாரங்களில் ஒன்றான புவியியலின் முக்கியமான புத்தக்மான Principles of Geology        ஐ Charles Lyell          வெளியிடுகிறார்.
 
1859: டார்வினின் உற்ற நண்பரும்,தீவிர ஆதரவாளரான          T.H. Huxley பரிணாம கொள்கைக்கும்,மதவாதிகளுக்கும் கருத்து மோதல் வரலாம் என எதிர் நோக்குகிறார்.  Origin of Species     புத்தகம் வெளிவருவதற்கு முன் டார்வினுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இந்த மோதலுக்காக என் ஆயுதங்களை தயாராக் வைத்துள்ளேன் என்று எழுதி இருந்தார்.
 
1859: அறிவியலாளர் டார்வின் (12 February 1809 – 19 April 1882)  பரிணாம கொள்கையின் மிக முக்கியமான புத்தகமாகிய  “Orgin of Spicies” வெளியிடுகிறார். உயிர்கள் அனைத்தும் ஓர் செல் உயிர்களில் இருந்து இயற்கைத் தேர்வு மற்றும் சீரற்ற சிறு மாற்றங்களின் காரணமாக பரிணாம வளர்ச்சி மூலம் உருவாகின என்பதுதான் இக்கொள்கையாகும்.
 
1860: T.H. Huxley ம் Samuel Wilberforce ம் ஆக்ஸ்போர்ட் பல்கலை கழக்த்தில் பரிணாமம் குறித்து விவாதிக்கின்றனர்.
 
1860~1900: டார்வினின் கொள்கைக்கு முதலில் பிற அறிவியலாளர்க‌ளிடம் இருந்தே எதிர்ப்பு’ வந்தது. பலர் டார்வினின் கொள்கையை நிரூபிக்க முடியாது,உயிர்களின் தோற்றம் ,பல் வகை பிரிவுகளாதல் ஆகியவற்றை விளக்க முடியாது என்றே கருத்து தெரிவித்தனர்.இந்த அறிவியல் ரீதியான எதிர்ப்பு  சுமார் 50_80 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.இது மட்டுமல்லாமல் மத ரீதியாகவும் எதிர்ப்பு வந்தது.
 
1874: John William Draper என்ற எழுத்தாளர் History of the Conflict Between Religion and Science என்ற புத்தகத்தை வெளியிடுகிறார்.அதில் மதம்,அறிவியல் இவற்றின் முரண்பாடுகள் மோதல் போக்குகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறார்.இந்த டார்வினின் பரிணாம கொள்கை மீண்டும் ஒரு மத கொடுந் தண்டனைகளை தோற்றுவிக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.அது என்ன மத கொடுந் தண்டனை [Inquisition] என்று அப்பாவியாக கேட்கும் நண்பர்கள் இங்கே பாருங்கள்.
1896: Andrew Dickson White என்ற எழுத்தாளர் A History of The Warfare of Science With Theology என்ற புத்தகத்தை வெளியிடுகிறார் . இது கிறித்தவ மதத்தின் கொள்கைகளை ,வரலாற்றை விமர்சித்தது.
 
1905-1915: இதற்கு எதிர்வினையாக கிறித்தவ ப்ராஸ்டன்டன்ட் சபையை சேர்ந்த Bible Institute of Los Angeles (Biola) அமைப்பு The Fundamentals என்ற புத்தக்த்தை வெளியிடுகிறார்கள்.  இது இந்த இரு புத்தகங்களையும் கடுமையாக விமர்சித்தது.பரிணாமம் குறித்த  ஆவணப்படுத்தப்பட்ட முதல் விமர்சனம் இது ஆகும்
1912: நாளிதழ் தலைப்பு செய்தியாக டார்வினின் பரிணாம கொள்கை நிரூபணம் கிடைத்ததாக செய்தி வெளியிடுகிறது.மனிதனுக்கும் குரங்கிற்கும் பொதுவான[Missing link] முன்னோர் உயிரினத்தின் படிமம் கிடைத்ததாகவும் இது மதவாதிகளின் தாக்குதலில் இருந்து அறிவியலை வளர்க்க உதவியதாக ஆர்தர் கெய்த் குறிபிட்டார். ஆனால் பொ.ஆ 1953ல் இது ஒரு பொய்யான் படிமாம், ஏமாற்று வேலை என்பது நிரூபிக்கப்பட்டது. இது இன்றும் பரிணாம எதிர்ப்பாளர்களால் பரிணாம(ஆய்வாளர்களின்)த்தின் நேர்மையற்ற சான்றாக  விமர்சிக்கப் படுகிறது. http://en.wikipedia.org/wiki/Piltdown_Man

1925: இக்கால கட்டத்தில் (பெரும்பாலான)உயிரியல் ஆய்வாளர்கள் பரிணாம கொள்கையை ஏற்கின்றனர். பள்ளி,கல்லூரிகளில் பரிணாம் பாடத்திட்டம் ஆக்கப்படுகிறது.இப்போது பரிணாமத்திற்கு இருவகைகளில் எதிர்ப்பு வருகிறது.

1. பரிணாம்த்தை முற்று முழுதாக எதிர்க்கும்,பைபிள் ரீதியான படைப்பியல்வாதிகள்.[Young and Old earth creationists]
2.பரிணாம்த்தின் சீரற்ற,ஒழுங்கற்ற தனமையை மட்டும் ஏற்காமல் ,இது ஒரு வழி நடத்தப்பட்ட செயல் என்னும் கொள்கையாளர்கள். [Guided and directed Evolution]
 
1925: ஸ்கோப்ஸ் வழக்கு விசாரணை:பரிணாமத்தை பள்ளி கல்லூரிகளில் பாடத் திட்டமாக்க அமெரிக்காவின் டென்னீஸ் மாநிலத்தில் எதிர்ப்பு வலுக்கிறது ஜான் ஸ்கோப்ஸ் என்னும் உயிரியல் ஆசிரியர் மீது டென்னீஸ் மாநிலத்தின் பட்லர் சட்டத்தை மீறியதாக் வழக்கு போடப்பட்டது.பட்லர் சட்டம் எனில் பைபிளின் படைப்புக் கொள்கையை தவிர வேறு கல்வி அளித்தல் தவறு.,இது நீதி மன்றத்தில் வழக்காகிறது. இதில் ஸ்கோப்ஸ் சட்டத்தை மீறியதாக நிரூபணம் ஆனாலும்,தீர்ப்பு மாற்றப்பட்டு விடுவிக்கப் பட்டார்.இது மதம் பரிணாமம் மோதலை மிகவும் பரபரப்பு ஆக்கியது. [இது குறித்தே ஒரு சிறப்பு பதிவு இடுவோம்]
 
1959: டார்வினின் புத்தகம் வந்து நூறாண்டு கடந்தும் அது ஏற்படுத்திய அதிர்வுகள் ஓயவில்லை.
1968: படைப்பியல் கொள்கையும் பள்ளிகளில் கற்பிக்கப் பட வேண்டும் என்ற‌ இன்னொரு வழக்கில் Edwards v. Arkansas அமெரிக்க ஆர்கன்ஸாஸ் மாநிலத்தில் பரிணாம் கல்விக்கு எதிரான சட்டம் நீகப்படுகிறது.எந்த மதத்தின் படைப்புக் கொள்கையும் பாடத் திட்டத்தில் இருக்க கூடாது என்று தெளிவாக கூறுகிறது.:

1971: பரிணம்த்தை விமர்சித்து சிறந்த வழக்கறிஞர் Norman Macbeth என்பவர் Darwin Retried: An Appeal to Reason. என்ற புத்தத்தை வெளியிடுகிறார்.இதில் அக்கால கட்டத்தின் பரிணாம் விமர்சனங்களை முன் வைத்தது. 

 
1972: Institute for Creation Research ஆரம்பிக்கப் படுகிறது.இதில் 1980 வரை இளைய பூமி[Young earth] கொள்கையே முன் வைக்கப் பட்டது..

1973: அமெரிக்க டென்னீஸ் மாநில சட்டசபையில் மீண்டும் பட்லர் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதன்படி மனிதனின் தோற்றமாக் பள்ளிகளில் எந்த கொள்கையும் பாட புத்தகங்களில் கற்பிக்கப்படக்கூடாது. அப்படி செய்வதென்றால் அது ஒரு கோட்பாடு[theory] மட்டுமே மற்றும் அறிவியல் ரீதியாக் நிரூபிக்கபடாத உண்மை என்றும் கூறப்பட வேண்டும். பைபிள் உட்பட்ட அனைத்து மத புத்தகங்களும் பாடபுத்தகங்கள் அல்ல என்பதும் இச்சட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

1982: McLean v. Arkansas: வழக்கில்  Arkansas மாநிலத்தில் அறிவியல் படைப்புக் கொள்கை[“scientific creationism”] என்பது அறிவியல் அல்ல என தீர்ப்பு வருகிறது.
 
1983. அறிவியல் படைப்புக் கொள்கை[“scientific creationism” ]  எதிர்த்து சில அமைப்புகள் உருவாக்கப் படுகிறது. 1982 வழக்கு விசாரணைகளுக்கு பிறகு இந்த அமைப்புகள் ஒன்று சேர்ந்து தேசிய அறிவியல் கல்வி அமைப்பு[National Center for Science Education (NCSE),] ஆக உருவெடுக்கிறது.
 
1986: ஹியூக் ராஸ்[Hugh Ross] “நம்பிக்கையின் காரணங்கள்” [“Reasons to Believe,” ] என்னும் பழைய பூமி[Old earth] கொள்கை அமைப்பை ஏற்படுத்துகிறார்.
 
1986: மைக்கேல் டென்டன் [Michael Denton] என்பவர்          Evolution: A Theory in Crisis.
 என்னும் புத்தகத்தை வெளியிடுகிறார்.
1987: Edwards v. Aguillard: வழக்கில் மூன்று நிபந்தனைகள் பள்ளிகளின் பாட திட்டத்திற்கு விதிக்கிறது.
1) பாட திட்டத்தில் மதம், அல்லது சார்ந்த கொள்கைகள் இருக்க கூடாது.
 2) மத பிரச்சாரம் தவிர்த்தல்
 3) அரசு மற்றும் மதத்தின் தொடர்பு பாடத்திட்டத்தில் தவிர்க்க வேண்டும்.
1991: Phillip Johnson என்பவர்          Evolution: Darwin on Trial.
 என்னும் புத்தகத்தை வெளியிடுகிறார்.  
1993: பரிணாம எதிர்ப்பு வரலாற்றில் முக்கியமான கூட்டம்            Pajaro Dunes, California. ல் நடக்கிறது. இதில் அறிவார்ந்த வடிவமைப்பு இயக்கத்தை[intelligent design movement] தொடங்க போகும்    Phillip Johnson, Michael Behe, உட்ப‌ட பலர் கலந்து கொள்கின்றனர்.
ID Starts
1996: Michael Behe எழுதிய புத்தகம்  Darwin’s Black Box, அறிவார்ந்த வடிவமைப்பு[intelligent design] என்னும் சொல்லை முதன் முதலில் பிரபலப் படுத்துகிறது. இப்புத்தக்த்தில்தான் எளிமைப்படுத்தப் படாத சிக்கல்[“irreducible complexity] என்னும் கொள்கையும் விவாதிக்கப்படுகிறது
 
1996: “Mere Creation” ஆய்வரங்கம் Biola University ல் நடக்கிறது.இதில் அறிவார்ந்த வடிவமைப்பின் நாயகர்கள் Michael Behe, David Berlinsky, Walter Bradley, William Dembski, Sigrid Hartwig-Scherer, Phillip Johnson, Robert Kaita, Steven Meyer, J. P. Moreland, Paul Nelson, Nancy Pearcey, Del Ratzsch, John Mark Reynolds, Hugh Ross, மற்றும் Jonathan Wells கலந்து கொள்கின்றனர்..

1998: William Dembski எழுதிய புத்தகம் The Design Inference அறிவார்ந்த வடிவமைப்பின் பல கொள்கைகளை கணித ரீதியாக அளிக்கிறார். .

1999: அமெரிக்க கான்சாஸ் மாநிலத்தில் பெரும் பரிணாமம் [macroevolution] குறித்த பாடத்திட்டங்களை கல்வியில் இருந்து நீக்குகிறது.

 
2000: Jonathan Wells எழுதிய புத்தகம் Icons of Evolution வெளியிடப் படுகிறது.
2000: David K. DeWolf, Stephen C. Meyer, and Mark Edward எழுதிய புத்தகம்  “Teaching the Origins Controversy: Science, Or Religion, Or Speech”  வெளியிடப் படுகிறது. இது பாட திட்டத்தில் அறிவார்ந்த வடிவமைப்பு சார்ந்த பரிணாம விமர்சனம் சேர்க்கப் பட வேண்டும் என வலியுறுத்தியது.

2001: PBS ன் பரிணாமம் குறித்த ஆவணப் படம் ஒளிபரப் பட்டது.

2001ல் இருந்து இன்றுவரை அமெரிக்காவில் மட்டுமல்ல உலகெங்கும் பரிணாமம் vs ID , மோதல் நீதி மன்றங்களில் மற்றும் பல தளங்களில் தொடர்கிறது……………… தொடர்கிறது!!!!!!!!!!!!!!.

(நாமும் தொடர்வோம்)
References:

1. Summer for the Gods by Edward J. Larson.
2. Bones of Contention by Marvin L. Lubenow.
3. Darwinism and the Law: Can Non-Naturalistic Scientific Survive Constitutional Challenge by H Wayne House (see http://www-acs.ucsd.edu/~idea/house.rtf).
4. Cretinism or Evilution? No. 2 Edited by E.T. Babinski. See http://www.talkorigins.org/faqs/ce/2/part12.html
5. Timeline for Origins Class at http://jmlynch.dhs.org/classes/origins/timeline.php
6. Religion and Science: History, Method, Dialogue in “Dispelling Some Myths About The Split Between Theology and Science in the Nineteenth Century” an essay by Claude Welch.
7. See PBS Evolution‘s re-interpretation of this famous exchange.
8. William Jennings Bryan & The Scopes Trial by R.M. Cornelius at http://www.bryan.edu/historical/wjbryan_trial/ from Bryan College Historical Resources (a Christian college in Dayton Tennessee, home of the Scopes Trial).

முந்திய பதிவுகள்
%d bloggers like this: