நான்

நான் யார் என்பதிலோ, என்னைப்பற்றி குறிப்பிட என்ன உள என்பதிலோ முதன்மைத்தனமுள்ள எதுவும் இருப்பதாய் நான் கருதவில்லை. கடையநல்லூரைச் சேர்ந்தவன் என்பது மட்டுமே போதுமானது.

கடையநல்லூரின் பெயரில் சில வ‌லைத்தளங்கள் இயங்குகின்றன. அவைகள் சிறப்பாய் இயங்குவதாகவோ, போதிய வீரியத்துடன் செயல்படுவதாகவோ சொல்வதற்கில்லை. அதுவே “நல்லூர் முழக்கம்” எனும் இத்தளத்தை தொடங்கும் எண்ணத்தை என்னுள் விதைத்தது.

தனி மனிதனைவிட சமூகம் முதன்மையானது எனும் வகையில் சமூக நோக்கில் கடையநல்லூர் குறித்தான, அதன் செயல்பாடுகள் குறித்தான‌ என்னுடைய மதிப்பீடுகளினூடாகவே இத்தளத்தின் செயல்பாடுகள் இருக்கும். சமூகம் எனும் கூட்டுத்துவத்தை மீறிய தனிமனித உரிமைகள், அதையே சமூக ஒழுங்காய் முன்னிருத்தும் தன்மைகள் மலினப்பட்டிருக்கும் சூழலில் ஒவ்வொருவருக்கும் இது கடமையாய் அமையவேண்டுமென்பதே என் அவா. அதை நோக்கி இத்தளம் சில அடிகளேனும் எடுத்துவைக்கும்.

கடையநல்லூர் நண்பர்களே,

இது உங்கள் தளம். இத்தளத்தில் நீங்கள் எது குறித்தும் பேசலாம். விவாதிக்கலாம். சிறந்த விவாதமே மீளாய்வுக்கான முதற்படி. நான் காத்திருக்கிறேன். நீங்கள்….?

தோழமையுடன்
செழிபா

20 பதில்கள் to “நான்”

  1. சித்திரவீதிக்காரன் நவம்பர் 8, 2011 இல் 4:48 பிப #

    நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

  2. ungal manasaatchi நவம்பர் 12, 2011 இல் 11:10 பிப #

    ellam valla iraivan ungalukku nervaliyai kodukkattum
    please read quran as a human being you well understand gods religion insha allah

  3. சி. ஜெயபாரதன் திசெம்பர் 5, 2011 இல் 2:43 பிப #

    உங்கள் வலைத்தளம் சிறப்பாக அமைக்கப் பட்டுள்ளது. எனது வலைத் தளத்தோடு இணைத்துள்ளேன். பாராட்டுகள்.

    http://jayabarathan.wordpress.com/ (நெஞ்சில் அலைகள்)

    சி. ஜெயபாரதன், கனடா.

  4. Hidayath திசெம்பர் 22, 2011 இல் 11:54 பிப #

    Arivudamai enbathu oru vishayaththai melottamaka therinthu kondu vimarsippathu alla, athaippatri muzhumaiyaga Aayvu seithu therindu kondu vimarsippatheyakum, nam vimarsikkum vishayaththil yarenum ethir kelvi kettal atharkum sariyana vilakkam tharum vithaththil therindhirukka veyndum… ungal vimarsanangalil unmai illai, nunippul meyinthirukkireerkal…. so please try to learn about islam and it’s source….

    Thanks

  5. சி. ஜெயபாரதன் திசெம்பர் 28, 2011 இல் 11:52 பிப #

    முகமூடி அணிந்து உங்கள் பெயரை மறைத்து ஏன் டாக்டர் அப்துல் கலாம் போன்ற பெரிய மனிதரை இகழ்ந்து எழுதி வருகிறீர் ?

    உங்கள் பெயர் என்ன ? முகவரி என்ன ? நெல்லூர் முழக்கம் என்பது எழுத்தாளர் பெயரில்லை !!! யாருக்காக அஞ்சுகீறீர் வீரத் தமிழரே !!!

    சி. ஜெயபாரதன்.

  6. S.Ibrahim திசெம்பர் 29, 2011 இல் 3:46 பிப #

    /////உங்கள் வலைத்தளம் சிறப்பாக அமைக்கப் பட்டுள்ளது. எனது வலைத் தளத்தோடு இணைத்துள்ளேன். பாராட்டுகள்.

    http://jayabarathan.wordpress.com/ (நெஞ்சில் அலைகள்)

    சி. ஜெயபாரதன், கனடா.

    முகமூடி அணிந்து உங்கள் பெயரை மறைத்து ஏன் டாக்டர் அப்துல் கலாம் போன்ற பெரிய மனிதரை இகழ்ந்து எழுதி வருகிறீர் ?

    உங்கள் பெயர் என்ன ? முகவரி என்ன ? நெல்லூர் முழக்கம் என்பது எழுத்தாளர் பெயரில்லை !!! யாருக்காக அஞ்சுகீறீர் வீரத் தமிழரே !!!

    சி. ஜெயபாரதன்./////

    ஒரு மாதத்திற்குள் ஜெயபாரதன் முரண்படுவது ஏன்? இஸ்லாத்தை விமர்சிப்பதோடு நில்லாமல் கலாம் அது இது என்று விமர்சிக்க ஆரம்பித்ததால் ,,,,,

    • kandasamy செப்ரெம்பர் 11, 2015 இல் 10:03 பிப #

      உங்கள் வலைத்தளம் சிறப்பாக அமைக்கப் பட்டுள்ளது. எனது வலைத் தளத்தோடு இணைத்துள்ளேன். பாராட்டுகள்……..
      விமர்சனம் இல்லையெல் வலர்சியில்லை தயவுசெய்து விமர்சனத்தை யாரும் கொச்சைபடுத்த வெண்டாம், குரை சொல்ல வெண்டாம்,,,குரிப்பாக மதிப்பிர்குரிய அய்யா சி. ஜெயபாரதன் அவர்கலுக்கு.

  7. சி. ஜெயபாரதன் திசெம்பர் 29, 2011 இல் 9:02 பிப #

    நெல்லூர் முழக்கம் ஆசிரியருக்கு விடுதலைத் தேசப் பிதா காந்தி மீது வெறுப்பு. இந்தியாவுக்கு விண்வெளி ஏவுகணை அசுர வல்லமை அளித்த ராக்கெட் மேதை டாக்டர் அப்து கலாம் மீது அவமதிப்பு. இவரை யாரென்று முதலில் எனக்குத் தெரியாமல் போனது,. இப்போது தெரிகிறது இவர் இந்தியர் அல்லர்.

    நெல்லூர் முழக்கம் இணைப்பை அறுத்து விட்டேன்.

    சி. ஜெயபாரதன்.

  8. nallurmuzhakkam திசெம்பர் 29, 2011 இல் 11:49 பிப #

    வணக்கம் ஐயா,

    சில மதம் பிடித்தவர்கள் தான் பெயரென்ன முகவரி என்ன என்று கேட்டுவிட்டு அதை வீரமாய் இறுமாந்து கொள்கிறார்கள் என்றால், நீங்களுமா?

    ஜெயபாரதன் எனும் உங்கள் பெயரும் நீங்கள் இணைத்திருக்கும் படமும் உண்மையானவை தான் என்பதை இணையப்பரப்பில் மெய்ப்படுத்திக் கொள்ள இயலுமா? ஏன், நல்லூர் முழக்கம் எனும் பொதுப்பெயரைத் தவிர்த்து ஏதாவது ஒரு தனிப்பெயரை வைத்துக் கொண்டிருந்தால் என்னை வீரமான தமிழராக ஒப்புக் கொண்டிருப்பீர்களோ!

    இணையத்தில் இவைகளெல்லாம் அடையாளங்கள் என்பதைத்தாண்டி ஒன்றுமில்லை. நான் யார் என்பது நான் என்ன கருத்து கொண்டிருக்கிறேன் என்பதில் மட்டுமே இருக்கிறது. எங்கள் பெயர் முகவரியை வெளிப்படுத்தாமல் இருப்பது அரசியல் காரணங்களுக்காக, இதை நீங்கள் எங்களின் தன்மையாக மொழிபெயர்த்தால் உங்கள் புரிதலில் பெருங்குறை இருக்கிறது என்பதே பொருள்.

    அப்துல் கலாமை அரசவைக் கோமாளி என்பது நாகரீகம் கருதி மட்டுமே. குடியரசுத் தலைவராக இருந்த போது தனது மாளிகையில் இருந்த மயிலுக்கு அடிபட்டு விட்டது என்று, இராணுவ எழுவூர்தியில் அனுப்பி மருத்துவம் செய்து திரும்பும்வரை உண்ண மாட்டேன் என்று அடம்பிடித்த அப்துல் கலாம்; தன்னுடைய ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகள் குறித்து இதுவரை மூச்சு விட்டதில்லை. என்றால் இவரை எப்படி மதிப்பிடுவீர்கள்? நவீன போகன் என்றா?

  9. nallurmuzhakkam திசெம்பர் 30, 2011 இல் 12:04 முப #

    வணக்கம் ஐயா,

    காந்தி மீதும் கலாம் மீதும் அரசியல் ரீதியாக அவர்களின் செயல்பாடுகளில் நாங்கள் விமர்சனங்கள் வைத்திருக்கிறோம். அந்த விமர்சனங்களை செவியுறுமாறும், அதற்கு விளக்கமளிக்குமாறும் அவர்களின் மீது அபிமானம் கொண்ட உங்களை அழைக்கிறேன். மாறாக நீங்கள் அவர்களை நம்புகிறீர்கள் என்பதால் அதை ஏற்குமாறு எங்களை நீங்கள் பணிக்க முடியாது.

    இந்தியன் என்பதற்கான உங்கள் அளவுகோல் என்ன? ராக்கெட் விட்டதை அசுர வல்லமை என்றால், இங்கு நடக்கும் பட்டினிச் சாவுகளை, ஆப்பிரிக்க நாடுகளைவிட மோசமான ஏழைகளை என்னவென்று அழைப்பீர்கள்?

  10. சி. ஜெயபாரதன் திசெம்பர் 30, 2011 இல் 12:07 முப #

    ///எங்கள் பெயர் முகவரியை வெளிப்படுத்தாமல் இருப்பது அரசியல் காரணங் களுக்காக, ////

    “எங்கள்” என்றால் நீங்கள் எத்தனை முகமூடிகள் ?

    இது ஆழ்ந்த கோழைத்தனம், முகமூடி போட்டுக் கொண்டு பிறரைப் பற்றித் தப்பாக, கீழாக எழுதி உதை வாங்க அஞ்சும் நீவீர் எல்லாம் எழுத்தாளரா ?

    குஜராத்தில் இந்து முஸ்லீம் கொலைப் போர் நிகழும் போது ஜனாதிபதி அப்துல் கலாம் யார் பக்கம் சார்ந்து அல்லது எதிர்த்துப் பேச வேண்டும் ?

    நீங்கள் சொல்லும் விமர்சனம் உண்மை யானால் உங்கள் எல்லோரது பெயரை அச்சமின்றி வெட்க மின்றி, ஆண்மையோடு குறிப்பிட வேண்டும்.

    சி. ஜெயபாரதன்.

  11. சி. ஜெயபாரதன் திசெம்பர் 30, 2011 இல் 12:25 முப #

    ////இந்தியன் என்பதற்கான உங்கள் அளவுகோல் என்ன? ராக்கெட் விட்டதை அசுர வல்லமை என்றால், இங்கு நடக்கும் பட்டினிச் சாவுகளை, ஆப்பிரிக்க நாடுகளைவிட மோசமான ஏழைகளை என்னவென்று அழைப்பீர்கள்? ///

    முதலில் நாட்டுக்கு வேலியும் காவலும் வேண்டும். அல்லது பாகிஸ்தான், சைனா உமது வீட்டில் அணுகுண்டை போட்டு விடலாம். 1962 இல் சைனா வடக்கு இமயமலைப் பகுதியில் சிலவற்றைப் பிடுங்கிக் கொண்டு போனது நினைவில் உள்ளதா ?

    உங்கள் வீட்டுக்கு நான்கு சுவர்கள், கூரை, கதவுகள் உள்ளனவா ? திருடன் வந்தால் என்ன செய்வீர் ? நாட்டின் ஜனாதிபதி வல்லமையில் தேசக் காவல் புரிவது தேவை இல்லையா ? முதலில் இதற்குப் பதில் என்ன ?

    பசி, பட்டினி தீர்ப்பு மாநில அரசின் பொறுப்பு.

    உமது வய்து என்ன ? வாழ்க்கை அனுபவம் என்ன ? இந்தியன் என்றால் என்ன வென்று தெரியாமல் பிறரிடம் கேட்கிறீர் ? 100 கோடி வேறுபட்ட மாநில மொழி மக்களை எப்படிக் கண்காணித்து அரசாட்சி செய்வது என்று வரிசையாக 10 குறிப்புகள் எழுதுங்கள் பார்க்கலாம். நீங்கள் போற்றும் இந்திய தீரர்கள் யார் யார் சொல்லுங்கள் ? நாட்டுக்கு அவர் என்ன செய்து வருகிறார் என்று காட்டுங்கள், கற்றுக் கொள்ளலாம்.

    உமது முகமூடி உலக அனுபவத்தை வாசகர் அறியட்டும்.

    சி. ஜெயபாரதன்.

    சி. ஜெயபாரதன்.

    • S.Ibrahim திசெம்பர் 30, 2011 இல் 5:32 பிப #

      ///100 கோடி வேறுபட்ட மாநில மொழி மக்களை எப்படிக் கண்காணித்து அரசாட்சி செய்வது என்று வரிசையாக 10 குறிப்புகள் எழுதுங்கள் பார்க்கலாம். நீங்கள் போற்றும் இந்திய தீரர்கள் யார் யார் சொல்லுங்கள் ? ///
      வெரி சிம்பிள் சார், ஆணாதிக்கம் என்னும் சல்லிகற்களுடன் தனியுடமை என்னும் தார் எண்ணையை கலந்து சோஷலிச ரோட்டை போட்டால் கம்யுனிசம் என்னும் ஊருக்கு போனால் போதும். இந்த மண்ணிலே சொர்க்கத்தை பார்த்து விடலாம். ஸ்டாலின் ஆட்சி காலத்தில் ரசியாவில் நிறைய பேர் பாத்திருக்கிறார்கள்
      ஒரே தீரர் பகத் சிங்

  12. S.Ibrahim திசெம்பர் 30, 2011 இல் 5:56 பிப #

    ////குஜராத்தில் இந்து முஸ்லீம் கொலைப் போர் நிகழும் போது ஜனாதிபதி அப்துல் கலாம் யார் பக்கம் சார்ந்து அல்லது எதிர்த்துப் பேச வேண்டும் ?////
    குஜராத்தில் இந்து முஸ்லிம் போர் நடந்ததா? இனப் படுகொலை நடந்ததா?
    அமெரிக்காவே , மோடியை இருமுறை தனது நாட்டுக்குள் உள்ளே விட அனுமதி மறுத்து விட்டதே ஏன் ?
    பல மனசாட்சியுள்ள ஹிந்து உயர் காவல்துறை அதிகாரிகள் நியாயத்தின் பக்கம் நிற்பதை நீவிர் அறியவில்லையா? கர்கரே மனைவி ஒருகோடி ரூபாயை தூக்கி சென்ற மோடியை வாயிற்படி மிதிக்காதே என்று விரட்டியதை அறிய வில்லையா?
    ஜனாதிபதி அப்துல் கலாம் நீதியின் பக்கம் நிற்க வேண்டும் .அமெரிக்காவுக்கு தெரிந்த நீதி அப்துல்கலாமுக்கு தெரிய வில்லையே ஏன்?
    செங்கோடியே ,நீங்கள் இஸ்லாத்தினை தூற்றுவதால் நல்லவர்கள் உங்கள் ஆதரவாளர்களாக இருக்க மாட்டார்கள் .இவர் போன்ற சங்க குடும்ப அங்கங்கள் தான் உமது ரசிகர்கள்

  13. S.Ibrahim திசெம்பர் 30, 2011 இல் 6:11 பிப #

    ///குடியரசுத் தலைவராக இருந்த போது தனது மாளிகையில் இருந்த மயிலுக்கு அடிபட்டு விட்டது என்று, இராணுவ எழுவூர்தியில் அனுப்பி மருத்துவம் செய்து திரும்பும்வரை உண்ண மாட்டேன் என்று அடம்பிடித்த அப்துல் கலாம்;///
    ஜெயபாரதன் ,இது ஒன்று போதாதா ? அவர் no.1அரசவை கோமாளி என்பதற்கு

  14. சி. ஜெயபாரதன் திசெம்பர் 31, 2011 இல் 5:09 பிப #

    நண்பர் இப்ராஹீம்,

    நல்லூர் முழக்கத்துக்குப் பதிலாக நீங்கள் ஏன் எனக்குப் பதில் எழுதுகிறீர் ? நீங்கள் அதன் உதவி ஆசிரியரா ?

    முதியவர் சிலர் சில சமயம் குழந்தைகள் போல் நடந்தால் கோமாளிகள் என்று இகழ்ந்தால், பலரது பெற்றோர், தாத்தா, பாட்டிகள் யாவரும் அந்த ரகத்தில் தள்ளப் படுகிறார்.

    ஜெயபாரதன்.

  15. nallurmuzhakkam திசெம்பர் 31, 2011 இல் 7:19 பிப #

    வணக்கம் ஐயா,

    உங்களின் பின்னூட்டங்களைப் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ச்சியாக உங்களின் கட்டுரைகளை படித்து வருபவன் எனும் அடிப்படையில் யதார்த்தமாக சமூகத்தின் மீது போதிய கவனம் கொள்ளாத ஒரு அணுவியல் அறிவியலாளராகவே உங்களை மதிப்பிட்டிருந்தேன். ஆனால் என்னுடைய அந்த மதிப்பீடு தவறு என்பதை உங்கள் பின்னூட்டங்களில் நீங்கள் பயன்படுத்தியிருக்கும் சொல்லாடல்களும், அவைகளினூடாக நீங்கள் வெளிப்படுத்திய கருத்துகளும் காட்டிவிட்டன. ஒவ்வொருவரின் சொல்லிலும் செயலிலும் அவரின் வர்க்கம் ஒழிந்திருக்கும் எனும் ஆசானின் கூற்றை உங்கள் கட்டுரைகள் காட்டிய மேதமையின் நிழலில் மறந்திருந்தேன். அதை நினைவுபடுத்திய உங்களுக்கு நன்றி. சுயவிமர்சனம் செய்து கொள்கிறேன்.

    உங்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வி, இணையத்தின் உதவியால் காண்காணாத தூரத்தில் இருந்து உரையாடும் இருவரில், வெறும் பெயர் முகவரியை வைத்து ஒருவரை மதிப்பிடுவீர்களா? அவர் வெளிப்படுத்தும் கருத்துகளை வைத்து மதிப்பிடுவீர்களா? இணையத்தில் அறிவிக்கப்படும் பெயர் முகவரி எல்லாம் வெற்று அடையாளங்களேயன்றி மதிப்பீடுகள் அல்ல. என்னுடைய மெய்யான பெயரும், முகவரியும் எந்த விதத்தில் என்னுடைய கருத்தை புரிந்து கொள்ள உதவும்? உங்கள் பெயரின் புகைப்படத்தின் மெய்த்தன்மையை ஐயுறும் யாரிடமும் நீங்கள் சான்றிதழ்களை காட்டிக் கொண்டிருப்பீர்களா? அலட்சியப் படுத்துவீர்களா? என்றால் பெயர், முகவரி குறித்த உங்களின் இந்தக் கேள்வியை நான் ஏன் அலட்சியப்படுத்தக் கூடாது? குறிப்பிட்ட காரணங்களுக்காக நான் புனை பெயரில் இருக்கிறேன். நான் யார் என்று அடையாளம் கண்டு உங்களுக்கோ, நீங்கள் யார் என்று அடையளம் கண்டு எனக்கோ ஆகப்போவது ஒன்றுமில்லை. நாம் ஏன் கருத்துகளை முன்வைத்து உரையாடக் கூடாது.

    இரண்டாவது கேள்வி, எது கோழைத்தனம்? எது வீரம்? இந்தத் தளத்தில் நாம் இரண்டு விசயங்களின் அடிப்படையில் உரையாட முனைந்திருக்கிறோம். 1. அணு உலை 2. காந்தி, கலாம். இந்த இரண்டிலும் என்னுடைய கருத்தை தெளிவாக முன்வைத்திருக்கிறேன். இந்த இரண்டிலும் என்னுடன் முரண்படும் நீங்கள் மாற்றாக முன்னிருத்தியிருக்கும் கருத்துகள் என்ன? அணு உலை விசயத்தில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தையும், காந்தி, கலாம் விசயத்தில் பாதுகாப்பு குறித்த தேசிய பெருமிதத்தையும்(!) கூறியிருக்கிறீர்கள். ஆனால், அணு உலை எதிர்ப்பில் பாதுகாப்பு மட்டும் காரணமல்ல என்பதை வலியுறுத்தி குறிப்பிட்ட பிறகும் அதற்கு வெளியே வர மறுக்கிறீர்கள். என்றால் இதை நான் உங்களின் கோழைத்தனமாக எடுத்துக் கொள்ளலாமா? காந்தி, கலாம் விசயத்தில் அவர்களின் அரசியல் ஒட்டாண்டித் தனத்தின் மீது வெளிப்படையாக வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களை மறுத்து எதுவும் கூறாத நீங்கள், புனை பெயர் வைத்துக் கொண்டிருப்பதை கோழைத்தனமாக உருவகப்படுத்தி சேறுவீச முயல்கிறீர்களே இது தான் நீங்கள் குறிப்பிடும் வீரமா? ஆகவே குறிப்பிட்ட அந்த இரண்டு விசயங்களிலும் வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களுக்கு உங்களுடைய விளக்கங்களை முன்வையுங்கள், பின்னர் நான் முன்னிலும் வீரியமாக வருகிறேன். இது தான் நேர்மையாகவும் வீரமாகவும் இருக்குமேயன்றி பெயர், முகவரியில் ஒன்றுமில்லை.

    மூன்றாவது கேள்வி, குஜராத்தில் நிகழ்ந்தது இந்து முஸ்லீம் கொலைப் போரா? நாளிதழ்கள் படிக்கும் வழக்கம் கூட உங்களுக்கு இல்லையா? அங்கு நடந்தது இந்து முஸ்லீம் கலவரம் என்று இந்து பாசிச நாளிதழ்கள் கூட எழுத முடியாமல் அம்பலப்பட்டிருக்கும் சூழலில் நீங்கள் அப்படி காட்ட முற்படுகிறீர்கள் என்றால் உங்களின் உளக்கிடக்கை தான் என்ன?

    நான்காவது கேள்வி, இந்தியன் என்பதற்கான அளவுகோல் என்ன? ஏகாதிபத்திய நாடுகள் செய்வது போன்ற அத்தனை அத்துமீறல்களையும் இந்தியாவும் தனக்கான அளவில் செய்து கொண்டிருக்கிறது. இந்தியா எனும் புவியியல் அமைப்புக்குள் பிறந்துவிட்டதால் அவைகளை ஆதரிக்க வேண்டும் என்பது தான் இந்தியன் என்பதற்கான அடையாளமா? நாடு என்பது அத்தனை வகையிலும் அதன் அனைத்து மக்களையும் உள்ளடக்கியது. ஆனால் இந்தியாவின் நிர்வாகம், அனைத்து மக்களுக்கானதாக இல்லாமல் முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமானதாகவும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே அதை எதிர்ப்பதும், அதற்காக போராடுவதுமே சரியான நாட்டுப் பற்றாக இருக்க முடியும். இதுதான் இந்தியன் என்பதற்கான சரியான அடையாளமேயன்றி, போலியாக பீஜப்படுத்திக் கொள்ளும் கௌரவங்களல்ல.

    நூறு கோடியென்ன மக்கட்தொகை ஆயிரம் கோடியானாலும் மக்களை எப்படி அரசாட்சி செய்வது என்பதற்கு பத்து குறிப்புகள் எதற்கு? ஒற்றைக் குறிப்பு போதுமானது. மக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பும், சமமான வசதிகளும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். இதை நோக்கமாக கொள்ளாத எந்த அரசும் எதிர்க்கப்பட வேண்டியதே, அது சொந்த நாட்டு அரசாக இருந்தாலும் கூட. இவற்றை எப்படி அடைவது? தனியார்மயத்தை கட்டுப்படுத்தி ஒழிப்பதன் மூலமும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதன் மூலமும். ஆனால் இந்திய அரசு மக்களைப்பற்றி கவலையுறாமல் இந்த இரண்டுக்கும் எதிராக நடந்து கொண்டிருக்கிறது. இதை உங்களால் மக்களுக்கான அரசாட்சி என்று கூற முடியுமா? இந்த அடிப்படையை ஆதரிக்கும், விமர்சனம் சுயவிமர்சனத்திற்கு தங்களை உட்படுத்திக் கொள்ளும் யாரும் எங்களுக்கு தீரர்கள் தாம்.

    பின் குறிப்பு: இந்த தளத்திற்கு உங்கள் தளத்தில் இணைப்பு கொடுப்பதும் மறுப்பதும் முழுமையாக உங்கள் விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டது. இணைப்பு கொடுங்கள் என்று உங்களை நான் கோரியிருக்காதபோது, நீங்கள் நீக்கியிருப்பது எனக்கு எந்தவித வருத்தத்தையும், அசூசையையும் ஏற்படுத்தாது என்பது உங்கள் கவனத்திற்கு. நீங்கள் இணைப்பதனாலோ நீக்குவதனாலோ என்னுடைய கருத்துகள் மாறப்போவதில்லை. என்னுடைய கருத்து தவறு என நீங்கள் எண்ணினால், அதை மாற்றுவது தான் சரியானது என் நீங்கள் கருதினால், அந்த கருத்தின் மீது விவாதம் நடத்துவது தான் சரியான வழி. தவறு என்று தெரிந்த எதன் மீதும் நான் நிற்பதில்லை, அது மரபு ரீதியான பெருமை பெற்றிருந்தாலும், அநேகர் பின்பற்றுவதாக இருந்தாலும் கூட.

    பின்குறிப்பு 2: இந்த பின்னூட்டத்தின் சில விசயங்களில் பொதுத்தன்மையில் நின்றே என் விளக்கங்களை வைத்திருக்கிறேன். நீங்கள் மறுவிளக்கம் அளித்த பின் குறிப்பாகவும் விரிவாகவும் வாதிக்கிறேன்.

    • செந்தோழன் ஜனவரி 2, 2012 இல் 9:24 பிப #

      நன்றாக விளக்கம் தந்துள்ளீர்கள்.உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.

      • S.Ibrahim ஜனவரி 3, 2012 இல் 7:56 முப #

        இப்போதே பனி அதிகமாக உள்ளது .குளிர் தாங்க முடியவில்லை .ஆதலின் இன்னும் சிறக்க வேண்டாம் .

  16. சி. ஜெயபாரதன் ஜனவரி 3, 2012 இல் 8:49 பிப #

    தோழர் செந்தேளருக்கு நல்ல ஊசி போட்டிருக்கிறீர் நண்பர் இப்ராஹீம்.

    சி. ஜெயபாரதன்

பின்னூட்டமொன்றை இடுக