தொகுப்பு | ஜனவரி, 2012

அறிவார்ந்த வடிவமைப்பு என்றால் என்ன? பகுதி 2

29 ஜன

 

சென்ற பதிவில் இத்தொடர்பதிவை ஏன் எழுதுகிறோம் என்பதை மட்டும் பார்த்தோம்.

 

.இந்த பரிணாமம்/அறிவார்ந்த படைப்பு என்பதன் விவாதங்களை தமிழில் ஆவணப்படுத்தும் ஒரு ,சார்பற்ற முயற்சியாகவே இப்பதிவு எழுதப் படுகிறது. ஆகவே இத்தொடர் பதிவில் இக்கொள்கையாளர்களின் விளக்கங்களின் எளிமையான தமிழாக்கம் தருவது மட்டுமே நம் நோக்கம்.அறிவார்ந்த வடிவமைப்பு சரியா? இல்லையா? என்பதை இப்பதிவில் விவாதிக்கப் போவது இல்லை. இது ஏன் எனில் முதலில் தமிழில் முடிந்தவரை இக்கொள்கை சார்ந்த விவரங்களை ஆவணப்படுத்தி விட்டால் இரு கொள்கைகளையும் விவாதிப்பதை அறிவார்ந்த தமிழ் சான்றோர்  சமூகம் பார்த்துக் கொள்ளும். இதனை அடுத்த படியில் செய்யலாம் என நினைக்கிறேன்.  

இப்பதிவில் இன்னும் இதன் வரையறுப்பை அக்கொள்கையாளர்கள் எவ்வாறு வரையறுக்கிறார்கள் என்பதை கேள்வி பதிலாக  வெளியிடுகிறோம். மொழி பெயர்ப்போடு ஆங்கில மூலமும் கொடுப்பது அவசியம் என்றே கருதுகிறோம். மொழி பெயர்ப்பை மேம்படுத்தும்  கருத்துகளை நன்றியோடு வரவேற்கிறோம்.
இப்பதிவில் அதன் தெளிவான‌ வரையறுப்பை பார்ப்போம். இந்த கேள்வி பதில் அக்கொள்கையாளர்களின் முக்கியமான தளத்தில் இருந்து எடுக்கபட்டது.
1.முதலில் நுண்ணறிவு [Intelligence] என்றால் என்ன? என்பதை அறிவோம்.
இது பல பரிமாணம் உள்ள சொல் ஆகும்.இதற்கு பல விளக்கங்கள் உண்டு.எளிமையாக இப்படி சொல்லலாம்.
நுண்ணறிவு (Intelligence) என்பது, திட்டமிடுதல், தகவல் பரிமாற்றம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், கோர்வையாக சிந்தித்தல்,  கற்றல் போன்றவற்றுக்கான திறன்களை உள்ளடக்கிய மனம் சார்ந்த திறமைகளைத் தழுவி அமைந்த, மனத்தின் ஒரு இயல்பாகும். இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகள், தாவரங்கள் கூட குறிப்பிட்ட அளவு பெற்றுள்ளதாகவே கருதப் படுகிறது.  
2.அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கை [Intelligent Design] என்றால் என்ன?
இது இயற்கையின் நிகழ்வுகளில் ஒரு ஒழுங்கான வடிவமைப்பை தேடும் ஒரு அறிவியல் ரீதியான ஆய்வு ஆகும்.இதில் பலதுறை அறிவியலாளர்கள், தத்துவ மேதைகள் ஆகியோர் பங்களிப்பு ஆற்றுகின்றனர்.
இக்கொள்கையின்படி “பிரபஞ்சம், உயிரினங்கள் தோற்றம் உள்ளிட்ட பல செயல்கள், தன்மைகள் போன்றவை ஒரு  நுண்ணறிவு சார்ந்த காரணி மூலமே சரியாக‌[நன்றாக] விளக்க முடியுமே தவிர ஒழுங்கற்ற இயறகை தேர்வு மற்றும் சீரற்ற சிறு மாற்றத்தினால் அல்ல.”
ஒவ்வொரு இயற்கையின் நிகழ்வையும் அந்த காரணிகள் ஊடாக ஆய்வு செய்து அவை வடிவமைக்கப்பட்டே இருக்கின்றனவா இல்லை இந்நிகழ்வுகள் தானாக‌ நடைபெற வாய்ப்பு உண்டா அல்லது இரண்டும் சேர்ந்தா  என்பதின் மீதே ஆய்வு நடைபெறுகிறது. இந்த காரணிகளில் சில நுண்ணறிவு உரியவையாக உள்ளன் என்பதுதான் இக்கொள்கையின் மிக முக்கியமான‌ அம்சமாகும். இக்காரணிகளில் இருந்து பெறப்படும் தகவல்கள் இதனை உறுதிப்படுத்துவதாக் இக்கொள்கையாக்கம் முன்வைக்கிறது.எடுத்துக்காட்டாக உயிரினங்களின் உடல் செல்களில் உள்ள டி என் ஏ மூலக்கூறுகளில் உள்ள தகவல்கள்,பிரபஞ்சத்தில் (இபோதைய கருத்தின்படி) பூமியில் மட்டும் உயிர் வாழும் சூழ்நிலை ஏற்படும் விதமான் அமைப்பு,530 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிடைத்த வளர்ச்சி பெற்ற கேம்பிரியன் படிமங்கள் ….போன்றவற்றை அறிவார்ந்த மூலக் காரணி என்பதற்கு சான்றாக முன் வைக்கின்றனர்.
What is intelligent design?

Intelligent design refers to a scientific research program as well as a community of scientists, philosophers and other scholars who seek evidence of design in nature. The theory of intelligent design holds that certain features of the universe and of living things are best explained by an intelligent cause, not an undirected process such as natural selection. Through the study and analysis of a system’s components, a design theorist is able to determine whether various natural structures are the product of chance, natural law, intelligent design, or some combination thereof. Such research is conducted by observing the types of information produced when intelligent agents act. Scientists then seek to find objects which have those same types of informational properties which we commonly know come from intelligence. Intelligent design has applied these scientific methods to detect design in irreducibly complex biological structures, the complex and specified information content in DNA, the life-sustaining physical architecture of the universe, and the geologically rapid origin of biological diversity in the fossil record during the Cambrian explosion approximately 530 million years ago.

3. அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கையும் (மதங்களின்) இறை படைப்பியல் கொள்கையும் ஒன்றா?
இல்லை!!!!!!!!!!!!!!!.இரண்டும் ஒன்றல்ல.அறிவார்ந்த வடிவமைப்பு என்பது இயற்கையின் நிகழ்வுகளில் ஒரு ஒழுங்கான வடிவமைப்பு உள்ளதா இல்லை இயற்கைத் தேர்வு+சீரற்ற சிறு மாற்றம் மேலான விள்க்கம் மட்டும் போதுமா என்பதை  தேடும், வரையறுக்கும் ஒரு அறிவியல் ரீதியான ஆய்வு முயற்சி மட்டுமே!!!. ஆனால் இறை படைப்புக் கொள்கை என்பது மத புத்தக்த்தில் உள்ள படைப்பு தகவல்களை இப்போதைய அறிவியலோடு பொருத்துவதே ஆகும்.
அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கை இயற்கையின் ஒழுங்கான வடிவங்களை சான்றாக முன் வைத்து அதில் இருந்து என்ன அனுமானம் கொள்ள முடியும் என்பதையே வலியுறுத்துகிறது. இக்கொள்கையின் படி  ஒழுங்கான வடிவமைப்பின் அறிவார்ந்த காரணியாக வரையறுக்கப்படுவது இயற்கைக்கு மேம்பட்டதுதான் [Supernatural] என்று கண்டறிய முடியுமா என வலியுறுத்துவது இல்லை!!!!!!!!!!!!!!!!.
பாரபட்சமற்ற உண்மையான ஆய்வாளர்கள் இவ்விரு கொள்கைகளின் வித்தியாசத்தை ஏற்றுக் கொள்வது இயல்பு.(I like this!!!!!!!!!!!!!)
அறிவார்ந்த கொள்கையை முறியடிக்க பல பரிணாம ஆய்வாளர்கள் இதுவும் இறை படைப்பியல் கொள்கை ஒன்றே என்று தவறாக கூறுவது வழக்கம்.இதன் மூலம் இக்கொள்கையின் மேன்மைகளை, உண்மைகளை  விவாதிக்காமல் ஒதுக்கி விடலாம் என்பதே இதன் நோக்கமாகும்.ஆகவே இயற்கையின் நிகழ்வுகளில் வடிவமைப்பு உள்ளதா என்ற தேடலை மட்டுமே இக்கொள்கை முன் வைக்கிறது,அதன் சான்றுகளின் மேல் மட்டுமே வாதங்களை வைக்கிறது.

Is intelligent design the same as creationism?

 No. The theory of intelligent design is simply an effort to empirically detect whether the “apparent design” in nature acknowledged by virtually all biologists is genuine design (the product of an intelligent cause) or is simply the product of an undirected process such as natural selection acting on random variations. Creationism typically starts with a religious text and tries to see how the findings of science can be reconciled to it. Intelligent design starts with the empirical evidence of nature and seeks to ascertain what inferences can be drawn from that evidence. Unlike creationism, the scientific theory of intelligent design does not claim that modern biology can identify whether the intelligent cause detected through science is supernatural.

Honest critics of intelligent design acknowledge the difference between intelligent design and creationism. University of Wisconsin historian of science Ronald Numbers is critical of intelligent design, yet according to the Associated Press, he “agrees the creationist label is inaccurate when it comes to the ID [intelligent design] movement.” Why, then, do some Darwinists keep trying to conflate intelligent design with creationism? According to Dr. Numbers, it is because they think such claims are “the easiest way to discredit intelligent design.” In other words, the charge that intelligent design is “creationism” is a rhetorical strategy on the part of Darwinists who wish to delegitimize design theory without actually addressing the merits of its case.
4. அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கை ஒரு அறிவியல் கொள்கையா?
ஆம்!!!!!!!!!!!!.பிற அறிவியல் கொள்கைகள் கோட்பாடுகள் போல் இயற்கை மீதான  கணிப்புகள் + கோட்பாடு உருவாக்கம் + ஆய்வு மூலம் சோதித்தல்+கோட்பாடு வரையறுப்பு முடிவாக்கம் என்ற நான்கு நிலைகளையும் உள்ளடக்கியது.
“அறிவார்ந்த காரணிகள் சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்குகின்றன” என்ற கொள்கையின் அடிப்படையில் ஒவ்வொரு இயற்கையின் செயலும்,படைப்பும இவ்வியல்பை கொண்டிருக்க வேண்டும். ஆய்வாளர்கள் ஆய்வின் மூலம் இச்சிக்கலான வடிவமைப்பை உறுதி செய்ய முயல்கின்றனர்.இதில் முக்கியமான் ஆய்வுக் கரு எளிமைப் படுத்த முடியாத சிக்க்லான வடிவமைப்பு[irreducible complexity] என்பதாகும். இவை கண்டறியப்ப்டும் போது இவை வடிவமைக்கப் பட்டு மட்டுமே இருக்க முடியும் என்றா கோட்பாட்டு முடிவாக்கத்திற்கு வருகின்றனர்.

நண்பர்களே இத்தொடரில் எந்த கருத்தையும் உருவாக்க விரும்பவில்லை.அனைவரும் இக்கொள்கை குறித்து பாரபட்சமற்ற தகவல்கள் தமிழில் அளிக்க‌ வேண்டும் என்பதே நம் ஆசை.கருத்துகள் விவாதங்கள் வரவேற்கப் படுகிறது என்றாலும் அது தகவல் பரிமாற்றமாக் மட்டும் இருந்தால் நலமாக இருக்கும் என ஒரு வேண்டுகோள்.அறிந்த தகவல்களை பகிருங்கள்.

Is intelligent design a scientific theory?

Yes. The scientific method is commonly described as a four-step process involving observations, hypothesis, experiments, and conclusion. Intelligent design begins with the observation that intelligent agents produce complex and specified information (CSI). Design theorists hypothesize that if a natural object was designed, it will contain high levels of CSI. Scientists then perform experimental tests upon natural objects to determine if they contain complex and specified information. One easily testable form of CSI is irreducible complexity, which can be discovered by experimentally reverse-engineering biological structures to see if they require all of their parts to function. When ID researchers find irreducible complexity in biology, they conclude that such structures were designed.
முந்திய பதிவு

 

விதியா? மதியா? என்னதான் கூறுகிறது குர் ஆன்

28 ஜன

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 20

 

உலகில் தொடர்ந்து கெண்டிருக்கும் குழப்பங்களுக்கு, சமுதாய ஏற்றத்தாழ்வுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. நாடு, மதம், மொழி, நிறம், இனம், பொருளாதாரம் எனவும் இவற்றிற்குள் பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து காணப்படுகிறது. இந்த பிரிவினைகள் ஏன்?   இவ்வினாவிற்கு, 

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பிவைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; (அவ்வாறு) தெளிவான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த பிறகும், தங்களுக்கிடையே இருந்த பொறாமையினால் அ(வ்வேதத்)தைக் கொடுக்கப்பட்டவர்களேயன்றி (வேற எவரும்) கருத்து வேறுபாடு கொள்ளவில்லை; ஆயினும் சத்தியத்தில் நின்றும் எதில் அவர்கள் மாறுட்டிருந்தனரோ அ(ந்த சத்தயத்)தின் பால் முஃமின்களுக்கு அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு நேர்வழி காட்டினான். அல்லாஹ் தான் நாடியவரை நேரான வழியில் செலுத்துகிறான்.

(குர்ஆன் 2:213)

  மனிதன் பல சமுதாயங்களாக பிரிந்ததற்கு அவனது பொறாமை குணம் மட்டுமே காரணம். எனவே இறுதியாக மீண்டும் தூதுவர்களையும், வேதங்களையும் மனிதர்களிடையே அனுப்பி, பிளவுபட்ட சமுதாயத்தை இணைக்க நாடுவதாக கூறுகிறான். இங்கு அல்லாஹ் குறிப்பிடும் சமுதாயம்,  முஹம்மது நபிக்கு கட்டுப்பட்டு வாழும் கூட்டத்தையே குறிக்கிறது.

தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் வேதத்தைக்கொண்டும், இன்னும் மனிதர்களுக்கு அவர்களுக்காக இறக்கி வைக்கப்பட்டதை நீர் விளக்குவதற்காக திக்ரை உம்பால் இறக்கி வைத்தோம். அவர்கள் சிந்திப்பவர்களாகி விடலாம்.

(குர்ஆன் 16:44)

மேலும், எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ அதனை அவர்களுக்கு நீர் விளக்கி வைப்பதற்காகவும், முஃமீனான கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டியாகவும், ரஹ்மத்தாக இருப்பதற்காக தவிர வேதத்தை உம்மீது நாம் இறக்கவில்லை.

(குர்ஆன் 16:64)

அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இந்தக் குர்ஆனில் திட்டமாக நாம் தெளிவாக்கியுள்ளோம்…

(குர்ஆன் 17:41)

(நபியே) மக்களாகிய அவர்களை நேர்வழியில் செலுத்துவது உம்மீது (கடமை) யில்லை…

(குர்ஆன் 2:272)

 (இஸ்லாம்) மார்க்கத்தில் எவ்வித நிர்பநதமும் இல்லை; …

(குர்ஆன் 2:256)

இதில் எவ்வித நிர்பந்தமும் இல்லையென மென்மையாகக் கூறிய அல்லாஹ், வழியைத் தேர்தெடுக்கும்  வாய்ப்பை மனிதனுக்கு வழங்கி, பொறுப்பிலிருந்து விலகியவன், குர்ஆனின் மற்றொரு பகுதியில் கூறுவதை கவனியுங்கள்,

…நேர்வழியாகிறது வழிகேட்டிலிருந்து (பிரிந்து) திட்டமாகத் தெளிவாகிவட்டது எவர் வழிகெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்கிறாரோ அவர் (அறுந்து) போகாத உள்ள கயிற்றின் உறுதியான முடிச்சை திட்டமாக பற்றி பிடித்துக் கொண்டார்…

(குர்ஆன் 2:256)

அன்றியும் எவரேனும் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை தேடுவாரானால் அவரிடமிருந்து அது ஏற்கப்படவே மாட்டாது; இன்னும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.

(குர்ஆன் 3:85)

இஸ்லாம் மட்டுமே நேர்வழி. எனவே, அதைத் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டுமென வலியுறுத்தி கூறுகிறான். அவ்வாறு ஒரு மனிதன் நேரான வழியைத் தேர்ந்தெடுப்பதும்  தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையிலேயேதான் என வலியுறுத்தி மீண்டும் குழப்ப நாயனாகிறான். குர்ஆனில் பல வசனங்களில் “அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்” என்ற வாக்கியத்துடன் முடிவுறுவதை எல்லோரும் அறிந்த ஒன்று. எனவே மனிதன் நேர்வழியில் செல்வது அல்லாஹ்வின் நாட்டத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டது.

…அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்

(குர்ஆன் 2:272)

…அல்லாஹ் நாடினால் அவர்களை நேர்வழியின் மீது ஒன்று சேர்த்து விடுவான் ஆகையால் அறியாதவர்களில் உள்ளவராக திண்ணமாக நீர்ஆகிவிடவேண்டாம்

(குர்ஆன் 6:35)

தான் நாடுபவரை தன் ரஹ்மத்தில் புகச் செய்வான்.

(குர்ஆன் 76:31)

நிச்சயமாக எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் அல்லது அவர்களுக்கு நீர் எச்சரிக்காவிட்டாலும் (இரண்டும்) அவர்களுக்கு சமமேயாகும் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொள்ளமாட்டார்கள்.

(குர்ஆன் 2:6)

…வழியை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டு விட்டனர்; – அல்லாஹ் எவரை வழி தவறச் செய்கிறானோ அவரை நேர்வழியில் செலுத்துபவர் எவருமில்லை.

(குர்ஆன் 13:33)

…அல்லாஹ் தான் நாடியவரை வழி தவறச் செய்கிறான்; இன்னும் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்…

(குர்ஆன் 14:04)

அல்லாஹ் நாடினாலன்றி (எதையும்) நீங்கள் நாடமாட்டீர்கள்.

 (குர்ஆன் 76:30)

உம்முடைய ரப்பு நாடினால் மனிதர்களை ஒரே சமுதாயத்தவராய் அவன் ஆக்கியிருப்பான் (அவன் அப்படி நாடாமையினால்) அவர்கள் கருத்து வேறுபாடு உள்ளவர்களாகவே இருந்து வருவார்கள்.

(குர்ஆன் 11:118)

வழி தவறச் செய்தது மட்டுமல்லாமல், மனிதன் நேர்வழியை அடைவதும் அல்லாஹ்வினால் தடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுக்கப்பட்ட மனிதனை திரும்ப நேர்வழியில் செலுத்த யாராலும் இயலாது. அல்லாஹ்வின்  இந்த நிலையை மெய்பிக்க மேலும் சில குர்ஆன் வசனங்களை காண்போம்.

அல்லாஹ் அவர்களின் இதயங்களின் மீதும் அவர்களின் செவிப்புலன்களின் மீதும் முத்திரை வைத்து விட்டான் இன்னும் அவர்களின் பார்வைகளின் மீது திரையிருக்கிறது. மேலும் மகத்தான வேதனையுண்டு.

(குர்ஆன் 2:7)

அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்கு பின்னால்  ஒரு தடுப்பையும் நாம் ஏற்படுத்தி விட்டோம்; (இவ்வாறே) நாம் அவர்களை மூடி விட்டோம், எனவே அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

(குர்ஆன் 36: 9)

…அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் அவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையட்டு விட்டான்

(குர்ஆன் 47:16)

அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் அவர்களை சபித்து அவர்களை செவிடாக்கி அவர்களுடைய பார்வைகளையும் குருடாகவும் ஆக்கிவிட்டான்

(குர்ஆன் 47:23)

ஆனால்  அல்லாஹ்வால், தடுக்கப்பட்டவர்  -களையும், முடமாக்கியவர்களையும் இஸ்லாமெனும் பாதையில் மனிதர்களை  ஒன்றினைய அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது. “நீர் அச்சமூட்டி எச்சரிப்பவர்” என அல்லாஹ்வினால் வர்ணிக்கப்பட்ட தன் தூதரிடம், தான் கூறும் வழியை அவ்வாறு பின்பற்ற இயலாத, தன்னால் முடமாக்கப்பட்டவர்களிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்ள உத்தரவிடுகிறான்.

ஃபித்னா நீங்கி மார்க்கம் அல்லாஹ்விற்காகே ஆகும்வரை அவர்களிடம் போர் புரியுங்கள்

(குர்ஆன் 2:193)

நிச்சயமாக எவர்கள் நம்முடைய வேத வசனங்களை நிராகரித்திட்டார்களோ அவர்களை நரக நெருப்பில் நாம் புகச் செய்வோம்; (அதில்) அவர்களுடை தோல்கள் கரிந்து விடும் போதெல்லாம் வேதனையை அவர்கள் அனுபவிப்பதற்காக அவையல்லா வேறு தோல்களை நாம் அவர்களுக்கு மாற்றிடுவோம்.

(குர்ஆன் 4:56)

உம்முடைய ரப்பு மலக்குகளிடம், நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். எனவே முஃமின்களை நீங்கள் உறுதிப்படுத்துங்கள். காஃபிரானவர்களின் இதயங்களில் திகிலை விரைவில் போடுவேன்; ஆகவே கழுத்துகளுக்குமேல் வெட்டுங்கள் அவர்களிலிருந்து ஒவ்வொரு கணுவையும் வெட்டுங்கள்…

(குர்ஆன் 8:12)

எந்த நபிக்கும் (விஷமங்களை தடுக்க) பூமியில் இரத்தத்தை ஓட்டுகின்றவரை (கொல்லாமல்) சிறைப்பிடித்து அவரிடத்தில் இருப்பது தகுமல்ல; உலகத்தின் (சொற்ப) நன்மையை விரும்புகிறீர்கள்.

(குர்ஆன் 8:67)

(போரிடுதல் தடைசெய்யப்பட்ட) புனிதமான மாதங்கள் சென்று விட்டால் முஷ்ரிக்கு (இணைவைப்பவர்)களை – அவர்களை நீங்கள் கண்ட இடங்களில் வெட்டுங்கள்; அவர்களைப் பிடியுங்கள், அவர்களை முற்றுகையிடுங்கள் (அவர்கள்)  நடமாடும் பாதைகளையெல்லாம் அவர்களுக்காக நீங்கள் நோட்டமிட்டவர்களாக உட்கார்ந்திருங்கள்.

(குர்ஆன் 22:9)

இவ்வாறாக அல்லாஹ்வினால் நேர்வழியிலிருந்து தடுக்கப்பட்டவர்கள் யார்? ஏன் அவ்வாறு தடுக்கப்பட்டார்கள்?

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிருகங்களில் கெட்டது (அல்லாஹ்வை) நிராகரித்தார்களே அத்தகையோராவர் எனவே அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.

(குர்ஆன் 8:55)

எனவே எவனொருவன்-அவனுடைய தீய செயல் அவனுக்கு அழகாக்கப்பட்டு அதை(ச் செய்வதை) அவனும் அழகானதாகவும் கண்டானோ அவனா? நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்.

(குர்ஆன் 35:8)

எந்த ஒரு மனிதனும் சுயமாக செயல்பட எவ்விதமான வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. அனைத்தும் அல்லாஹ் இறுதி  செய்த விதிப்படியே நடக்கிறது.

பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

(குர்ஆன் 57:22)

அவர்களில் பெரும்பாலானவர்களின் மீது (விதியின்) சொல் திட்டமாக உறுதியாகி விட்டது எனவே அவர்கள்  ஈமான்  கொள்ளமாட்டார்கள்.

(குர்ஆன் 36:7)

நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் விதியுடன்(கத்ர்) படைத்திருக்கின்றோம்.

(குர்ஆன் 54:49)

புஹாரி ஹதீஸ்       : 3332         

உண்மையே  பேசுபவரும்,  உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு அவ்வாறே (40 நாட்களில்) அந்தக் கரு (அட்டைப்போன்று கருப்பையின் சுவரைப்பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறிவிடுகின்றது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாட்களில் மெல்லப் பட்டசக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறி விடுகின்றது. பிறகு அல்லாஹ் அதனிடம் ஒரு வானவரை நான்கு கட்டளைகளைத் தந்து அனுப்புகிறான் (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை துர்பாக்கியசாலியா நற்பாக்கியசாலியா என்பதும் எழுத்தப்படுகின்றது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகின்றது. இதனால் தான் மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளியிருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான். இதைத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸ் விதியின் வலிமையைக் கூறுகிறது. பகுத்தறிவு  ஏற்கவில்லையென்றாலும் கட்டயமாக நம்பியே தீரவேண்டும். விதியை மறுப்பவர்களை  கடுமையாக எச்சரிக்கும் ஹதீஸ் ஒன்றைப்  பார்ப்போம்.

முஸ்லீம் ஹதீஸ் : 1, அத்தியாயம்: 1, பாடம்: 1.01

…(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் மஅபத் அல் ஜுஹனீ என்பவரே விதியை(நம்புவது)ப் பற்றி மாற்றுக் கருத்துத் தெரிவித்த முதலாமவராவார். அக்கால கட்டத்தில் (யஹ்யா பின் யஅமர் ஆகிய) நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ(ரஹ்) அவர்களும் ‘ஹஜ்’ அல்லது ‘உம்ரா’ச் செய்வதற்காக(ப்புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்களது (மறுதலிப்புக்) கூற்றைப் பற்றிக் கேட்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டோம். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சூழ்ந்து கொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப்பக்கத்திலும் மற்றொருவர் இடப்பக்கத்திலும் இருந்துக் கொண்டோம். பேச வேண்டிய பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டு விடுவார் என எண்ணி நானே பேசினேன்: “அபூ அப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்துக் கல்வி பயில்கின்றனர்” என அவர்களது (நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, “ஆனால், அவர்கள் ‘விதி’ என்று ஏதுமில்லை எனவும், நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலாகத்தான் நிகழ்கின்றன என்றும் பேசத் துணிந்து விட்டனர்” என்றேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: “இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நான் விலகி விட்டவனாவேன்; என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்களாவர் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார் மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கைக் கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றுக் கூறி விடுங்கள்)”.

பிறகு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: “என் தந்தை உமர் பின் அல் கத்தாப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:…

குர்ஆனும் இந்த கருத்தை ஏற்றுக் கொள்கிறது. உலகின் ஒவ்வொரு நிகழ்வும் அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கிறது. விதியை உண்மையான முஸ்லீம்களால் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது. அது ஈமானின் (நம்பிக்கை) ஒரு பகுதியாகும்

முஸ்லீம் ஹதீஸ் : 1, அத்தியாயம்: 1, பாடம்: 1.01

…அடுத்து அவர், “ஈமான் (இறை நம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனின் தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதாகும்” என்றுக் கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் “உண்மை உரைத்தீர்கள்” என்றார். …

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)

நூல்: திர்மிதி

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள்.

அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் வழியே படைப்பினங்களின்   ஒவ்வொரு அசைவும் நிகழ்கிறதென்றால்,  மனிதர்களை நேர்வழிப்படுத்துவதாகக் கூறி தூதர்களையும் வேதங்களையும் அனுப்ப வேண்டிய தேவை என்ன?  மனிதர்கள் எல்லோரையும் இஸ்லாமை ஏற்கும்படியான விதியை ஏன் எழுதவில்லை? மனிதர்கள் அனைவரும் இஸ்லாம் என்ற பாதையில் செல்ல, அல்லாஹ் ஒருபொழுதும் விரும்பவில்லை.  காரணம், நரகத்தை நிரப்புதல் மட்டுமே அல்லாஹ்வின் குறிக்கோள்.

நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அதனுடைய நேர்வழியைக் கொடுத்திருப்போம். எனினும் ஜின்கள், மனிதர்கள் ஆகிய அனைவரிலிருந்தும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற என்னிலிருந்து உள்ள சொல் உண்மையாகி  விட்டது.

(குர்ஆன் 32:13)

(அவர்களில்) உம்முடைய ரப்பு அருள் புரிந்தவரைத் தவிர இதற்காகவே அவர்களை படைத்திருக்கிறான். (பாவம் செய்த) ஜின்கள், மனிதர்கள் அனைவரினாலும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற உம்முடைய ரப்பின் வாக்கு பூர்த்தியாகிவிட்டது.

(குர்ஆன் 11:119)

நரகத்தை நோக்கி, நீ நிரம்பி விட்டாயா? என்று நாம் கேட்கும் நாளில், இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று அது கூறும்.

(குர்ஆன் 50:30)

மறுமையின் மிக மிக முக்கியமான கேள்வி மார்க்கத்தைக்  குறித்ததே. அப்படியானால் தீர்ப்பு நாளின் விசாரணை வேடிக்கையாக தோன்றவில்லையா? (தீர்ப்பு நாளின் வேடிக்கைகளை இத்தொடரின் இறுதியில் விரிவாகக் காணலாம்.) ஒருவர் இஸ்லாமை ஏற்பதும், மறுப்பதும் அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கிறது. எனவே இஸ்லாம் என்ற பாதையை தேர்ந்தெடுக்கத்தவறியவர்கள் தங்களது பாதை மாறிய பயணங்களுக்காக அல்லாஹ்வின் விதியின் மீது குற்றம் கூற முடியாது காரணம்,

துன்பத்திலிருந்து உங்களுக்கு ஏதாவது ஏற்படுமாயின் (அது) உங்களுடைய கரங்கள் சம்பாதித்துக் கொண்ட(தீய)வற்றினாலேயாகும்.

(குர்ஆன் 42:30)

உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (இதுவே அல்லாஹ் உலகிற்கு ஏற்படுத்தித் தந்துள்ள விதியாகும்). இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால்தான் (,உனக்குத் தரப்பட்டுள்ள தீர்மானிக்கும் அறிவு குறை பாட்டால்தான்) வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு தூதராகவே அனுப்பியுள்ளோம் – அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.

(குர்ஆன் 4:79)

(இப்பகுதியை மீண்டும் படித்தால் ஒருவேளை தெளிவான முடிவிற்கு வர வாய்ப்பு இருக்கலாம் என்று நினைக்…கி…க…வி…#@#?@&?!!?) விதி குறித்து இவ்வளவு தெளிவாக குழப்பும் குர் ஆன் தான் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்க வந்த மனிதக் கரங்களால் கரைபடியாத ஒரே வேதமாம். யாராவது தலை சுற்றி மயங்கி விழுந்தால் கம்பனி பொறுப்பல்ல.

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

 

பெயரில் குடியரசு செயலில் முடியரசு

26 ஜன

 

வரிசையான பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இன்னுமொரு பண்டிகையாக வந்திருக்கிறது குடியரசு தினம். ஆனால் ஏனைய பண்டிகைகளை விட இந்த பண்டிகைக்கு அரசு காட்டும் முனைப்பு மக்களிடையே பீதியூட்டுவதாக இருக்கும். தொடர்ந்து அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. குடிமக்களுக்கான அரசு இது அதை குலைப்பதற்காக தீவிரவாதிகள் முயல்கிறார்கள், அவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கவே இத்தகைய கெடுபிடிகள் என்பது வழக்கமாக அரசு கூறும் காரணம். சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 800 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவெங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் இப்படியான கைதுகளும், சித்திரவதைகளும், பொதுமக்களுக்கு சிரமங்களும் செய்யப்பட்டு வருகின்றன. மட்டுமல்லாது ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதுகாப்பு கெடிபிடிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குடிமக்களுக்கான அரசை அதன் குடிகளில் சிலரே ஏன் தகர்க்க நினைக்கிறார்கள்?

 

இந்தக் கேள்வி இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. உலக நாடுகள் அனைத்திலும் பரிசீலிக்கப்பட வேண்டியதும், பரிசீலிக்கப் படாமல் ஒதுக்கப்படுவதுமான கேள்வி. குடிமக்களில் பெரும்பாலானோர் அரசுகளின் மீது கோபமாகவும் வெறுப்பாகவுமே இருக்கிறார்கள். ஏனென்றால், அரசின் திட்டங்களும், செயல்பாடுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்களை பாதிக்கிறது. அவர்களை தங்கள் வாழ்நிலைகளிலிருந்து கீழிறக்குகிறது. அதனால், தனித்தனி குழுக்களாக வெவ்வேறு பிரச்சனைகளுக்காக அரசை எதிர்த்து தினமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையான மக்களை போராடத் தூண்டும்படியாக நடந்து கொண்டிருக்கும் அரசை குடி மக்களுக்கான அரசு என்று கூற முடியுமா? ஆனால், பலர் அப்படி கூறிக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால் தான் குடியரசு தினம் இன்னும் கொண்டாட்டமாய் நீடிக்கிறது. அரசின் திட்டங்களும் செயல்களும் அதன் பொருட்டே மக்களுக்கானதாக விளம்பப்படுகிறது. ஆனால் மெய்யில் அப்படி இருக்கிறதா?

 

இதை தற்போது மக்களிடையயே கொதிப்பில் இருக்கும் மீனவர் பிரச்சனையினூடாக பார்க்கலாம். கடந்த கால் நூற்றாண்டாக தோராயமாக 600 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக தன் சொந்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியா செய்ததென்ன? எல்லா முதலாளித்துவ நாடுகளும் தம் சொந்த மக்களை தன்னுடைய நோக்கத்திற்கு இடையூறாக இருப்பதாக கருதும் போது கொன்று குவிக்க தயங்குவதில்லை. ஆனால் பிற நாடுகள் தம் குடிமக்களை கொல்லும் போது தன் பிம்பத்தை காத்துக் கொள்ள கொஞ்சமாவது எதிர்ப்பை காண்பிக்கும். ஆனால், ஐநூறுக்கும் அதிகமானோர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருந்தும், அதற்கு எதிராக எதுவும் செய்யாமல் கிடப்பது தான் ஒரு குடியரசின் இலக்கணமா?

 

இதை இன்னும் அணுகிப் பார்த்தால் இந்திய குடியரசின் லட்சணம் என்ன என்பது வெளிப்படையாகிவிடும். மீனவர்கள் தொடர்ந்து தனித்தனியான பல அடையாள போராட்டங்களை நடத்தி சோர்ந்து நீதிமன்றத்தை அணுகினார்கள். நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்திருக்கும் பதிலில் மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் கொல்லப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறது. தொடக்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்று கூறிக் கொண்டு இலங்கை இதைச் செய்தது. தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும் இது தொடர்கிறது, மட்டுமல்லாது அதிகரித்திருக்கிறது. என்றால் அதன் நோக்கம் காரணங்களுக்கு அப்பாற்பட்டு அந்தக் கடல் பகுதியில் மீனவர்கள் நடமாட்டத்தை இரண்டு அரசுகளுமே தடுக்க நினைக்கின்றன என்பதாகத் தான் இருக்க முடியும்.

 

90களில் நரசிம்மராவ் தொடங்கிய வெளிப்படையான மறுகாலனியாக்கத்தில் இந்திய இலங்கை கடற்பகுதியில் பன்னாட்டு மீன்பிடி நிறுவங்களுக்கு மீன்பிடித்துக் கொள்ளும் அனுமதியை வழங்கியது. பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித்தல் என்பது மீன்வளத்தை அழிக்கும் தன்மை கொண்டதல்ல மாறாக தகவமைதலை பயன்படுத்தி மீன்வளத்தை காக்கும். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் மீன்பிடித்தல் என்பது முட்டைகள் குஞ்சுகள் தொடங்கி கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் ஒட்ட வழித்தெடுப்பதால் மீன்வளத்தை அழிக்கிறது. உலகமயமாக்க சூரையாடல்களால் உயர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளை ஈடுகட்டவும், பன்னாட்டு மீன்பிடி கப்பல்களை எதிர்கொள்ள முடியாமையும் இணைந்து மீனவர்களை எல்லை தாண்டவும், தடுக்கப்பட்ட வலைகளை, மீன்பிடி முறைமைகளை பயன்படுத்த தூண்டுகிறது. இந்த காரணங்களால் இலங்கை மீனவர்களுக்கும், தமிழக, இலங்கை மீனவர்களுக்கிடையேயும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது போன்ற பிரச்சனைகள் இந்திய மாநிலங்களுக்கிடையேயும், உலகமெங்கும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

 

இதை மீனவர்களை கொல்வதன் மூலமும், தொடர்ச்சியாக படகுகளை வலைகளை தாக்கி சேதப்படுத்துவதன் மூலமும் அச்சத்தையும், நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்தி அந்த கடற்பகுதியிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்தும் வேலையை இலங்கை செய்கிறது. அதற்கு முழுமையான ஆசியையும், ஆதரவையும் இந்தியா வழங்குகிறது. இதை மறைப்பதற்கு இந்தியா எல்லை தாண்டுவதையும், இலங்கை மீனவர்களிடையேயான பிரச்சனைகளையும் முன்னிருத்தி திசை திருப்புகின்றன.

 

இந்தியா பெயரில் மட்டுமல்ல தன்மையிலும் குடியரசாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? இரு தரப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து பிரச்சனைகளை ஏற்படுத்தும் பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 40 கிலோமீட்டர் கொண்ட குறுகிய கடற்பரப்பை இரு தரப்பு மீனவர்களும் பயன்படுத்தும் வண்ணம் எல்லை கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும். எந்த மாதிரியான மீன்பிடி முறையை பாவிப்பது என்பது குறித்து இரு தரப்பு மீனவர்களும் உகந்த இணக்கமான முடிவை எடுப்பதற்கு அரசு உதவ வேண்டும். குடிகளுக்கான அரசாக இருந்தால் இதைத்தான் செய்திருக்க வேண்டும்.

 

ஆனால் இந்தியா செய்திருப்பதென்ன? பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி வழங்கி அதனை பாதுகாக்கிறது. எல்லையை வறையறை செய்யாமலும், அதேநேரம் எல்லை தாண்டாதே என்றும் குழப்புகிறது. மீன்பிடியை ஒழுங்கு செய்வதற்கு என்று சட்டம் கொண்டு வந்து பாரம்பரிய மீனவர்களுக்கு ஏற்க முடியாதபடி பலவிதமான கட்டுப்பாடுகளைச் சுமத்துகிறது. மீறினால் ஆயிரக்கணக்கில் தண்டத்தொகை வசூலிக்கவும், படகை பறிமுதல் செய்யவும் வழிவகை செய்யும் அதேநேரம் பன்னாட்டு கப்பல்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி கடலை வழித்தெடுக்க துணை நிற்கிறது. கடலோர மீனவர்களிடையே தொண்டு நிறுவனங்களை, சுய உதவிக் குழுக்களை களமிறக்கி மெழுகுதிரி செய்தல், பொம்மை செய்தல் என்று மாற்றுத் தொழில்களை பயிற்றுவித்து மீன்பிடித்தலிலிருந்து வெளியேற ஊக்குவிக்கிறது. நீளமான கடற்பரப்பை பெற்றிருக்கும் இந்தியா, பல்லாயிரக்கணக்கான மீனவ குடிமக்களுக்கு எதிராகவும், சில பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இவைகளைச் செய்திருக்கிறது. என்றால் இது குடியரசா?

 

மீன்பிடி தொழிலில் மட்டுமல்ல, உழவு, நெசவு உட்பட மக்களின் வாழ்வாதரமாக இருக்கும் அனைத்து தொழில்களிலும் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு எதிராகவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவுமே அரசு செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், நாட்டின் கனிம வளங்கள் உள்ளிட்ட அனைத்திலும் அரசின் செயல்பாடு மக்கள் விரோதமாகத்தான் இருக்கிறது. மக்களுக்கு புதுப்புது வரிகளை அமல்படுத்துவதிலிருந்து இருக்கும் மானியங்களை வெட்டிக் குறைப்பது வரை, முதலாளிகளுக்கு வரிச்சலுகையிலிருந்து லாபத்திற்கான உத்திரவாதம் வரை மக்களுக்கு எதிராகவே அரசுகள் பொதுநிதியை கையாளுகின்றன. இவைகள் ஒன்றும் கமுக்கமான செய்திகளல்ல.

 

எப்படி மக்களை பட்டினி போடும் மசோதவுக்கு உணவு பாதுகாப்பு மசோதா என்று பெயர்சூட்டி மக்களை ஏமாற்ற எண்ணுகிறதோ அது போன்றே முதலாளிகளின் நலனில் மட்டுமே அக்கரை கொண்டு செயல்படும் அரசுக்கு குடியரசு என்று பெயர் சூட்டப்பட்டிருகிறது. மக்கள் சிந்திக்க வேண்டும், இப்படி தங்களைத் தாமே ஏமாற்றிக் கொள்வதற்கு கொண்டாட்டம் ஒரு கேடா என்று.

 

தொடர்புடைய பதிவுகள்

கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்

புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன் ஹண்ட், புரியாதவர்களுக்கு குடியரசு தினம்

தமிழக மீனவர்களை கொல்லச் சொல்வது இந்திய அரசு தான்.

முதல் பதிவு: செங்கொடி


நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்! மாணவர் ஒற்றுமையை கட்டியமைப்போம்!

25 ஜன

அன்பார்ந்த மாணவர்களே,

 

‘‘மாணவர்களா இவர்கள் ? ரவுடிகள் ,பொறுக்கிகள்’’ என்று ஓயாமல் ஒப்பாரி வைக்கின்றனர் ஓட்டுக் கட்சிகள், மாணவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பத்திரிக்கை -தொலைக்காட்சி ஊடகங்களும் அலறுகின்றன. அரசோ, கல்லூரிகளில் போலீசை நிறுத்தி மாணவர்களை பீதியூட்டுகிறது.கல்லூரியை கலவரப் பகுதியாகக் காட்டுகிறது.

 

கல்லூரி மாணவர்களிடையே எப்போதாவது நடைபெறும் மோதல்களை வைத்துத்தான்  மாணவர்களை ரவுடிகள்,பொறுக்கிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். இம்மோதல்களை போலீசும் – செய்தி ஊடகங்களும்  ஊதிப் பெருக்கி வருகின்றன.

 

    கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் இந்த மோதல்களால், சில மாணவர்கள் பாதிக்கப்படுவதையும்,  இதைத் தொடர்ந்து சில மாணவர்கள் சிறையிலடைக்கப்பட்டு கல்லூரி வாழ்வை இழப்பதையும் நாம் மறுக்க முடியாது. இந்த நடவடிக்கைகள் மாணவர் ஒற்றுமையை சீர்குலைப்பவையே.இவைகள் சமூக அநீதிகளுக்கு எதிராக வீரம் செரிந்த பல போராட்டங்களை நடத்திய கடந்த கால மாணவர் வரலாற்றை கறைபடுத்துகின்ற செயல்கள். ஏழைக் குடும்பங்களில் பிறந்து பள்ளிப் படிப்பை முடிக்கவே கடன்பட்டு பல கனவுகளுடன் கல்லூரிக்குள்  காலெடுத்து வைத்த  நாம், 3 வருட டிகிரி முடிக்கும் முன்பே ’ ரவுடிகள் ,பொறுக்கிகள்’ என்று அவதூறு பட்டங்களை சுமப்பது கேவலமில்லையா? நண்பர்களாகப் பழக வேண்டிய நாம் ரூட்டுகள் – கல்லூரிகள் எனறு எதிரிகளைப்போல் அடித்துக் கொள்வது  எந்த வகையில் நியாயம்?. எனவே இதை உடனே கைவிடுவோம்.நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்போம்.

 

           சூழ்நிலைதான் ஒரு மனிதனின் நடவடிக்கையை தீர்மானிக்கிறது என்பது உண்மையென்றால், சீரழிந்த இந்த சமூக சூழலில் ஒரு சிறந்த சமூகப் பற்றுள்ள மாணவன் எப்படி உருவாக முடியும் ? அரசுக் கல்லூரிகளின் சூழ்  நிலையும் இப்படித்தான் உள்ளது. ஏழை மாணவர்கள் என்பதற்காகவே, அரசுக் கல்லூரிகளில் குடி நீரும் இல்லை ,கழிவறை வசதியும் இல்லை , கேண்டீனும் இல்லை ,போதிய ஆசிரியர்களும் இல்லை ,ஆசிரியர் திறனை வளர்க்க அரசு முயலுவதும் இல்லை. மாணவர்களுடைய தனித்திறனை வெளிப்படுத்த விளையாட்டோ, கலாச்சார விழாவோ ,கவிதை, கட்டுரைப் போட்டிகளோ அறவே இல்லை. இந்த ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட மாணவர் சங்கத்திற்கும், அதற்கான தேர்தலுக்கும் தடை.  மாணவனுக்கு இருந்த ஓரே ஒரு மகிழ்ச்சி பஸ் டே, அதற்கும்  நீதிமன்றத் தடை  . இந்த ஆரோக்கியமற்ற சூழ் நிலைக்கு மாணவர்களை தள்ளிவிட்ட இந்த அரசுக்கு அவர்களை ரவுடிகள்,பொறுக்கிகள் என்று கூறுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது ?

 

போதாக்குறைக்கு சினிமா கூத்தாடிகளும் சீரழிந்த ஊடங்களும் மஞ்சள் பத்திரிக்கைகளும் ’நோட்டு – புத்தகங்கள் வாங்கவே திண்டாடும் அரசுக் கல்லூரி மாணவர்களிடம் சூர்யா-வைப் போல் சிக்ஸ் பேக் காட்டவும் ,அதற்கேற்ற புதிய ,புதிய ஜீன்ஸ் ,டி –சர்ட் ,ஷூ போட்டுக் கொண்டு,அந்த நாயகனைப் போன்று பல மாணவிகளை வளைத்துப் போட பந்தா பண்ணும் ஆசையை வளர்க்கின்றன. ’தான் ஆசைப்பட்ட மாணவியிடம்’ பிறர் பேசுவது பொறுக்காமல் அடித்துக் கொள்வதும், , மங்காத்தா அஜித், வானம் சிம்பு போன்று குறுக்குவழியில் பணம் சம்பாதித்து ஜாலியாக வாழ பணம் பறிப்பதையும்(கட்டிங் போடுவது), பல பெண்களோடு சுற்றித்திரியும் ’டேட்டிங் ‘எனும் பொறுக்கிப் பண்பாட்டையும் பரப்பி வருகின்றன. நண்பனுக்கு துரோகம் செய்து அவன் காதலியை தன்வசப்படுத்திக் கொள்வது,அடுத்தவன் மனைவியை எப்படியாவது அடைய முயற்சிப்பது என்ற நச்சுப் பண்பாட்டை – இதை நியாயப்படுத்தும் ஒரு ’ கொலைவெறிப்  பண்பாட்டை ’ – உருவாக்கி விட்டிருக்கும் தனுசை மானசீக ஹீரோவாக எற்றுக் கொண்டு வலம்வர கற்றுத்தருகின்றன.

 

        மேலும் ,புதுப் புது செல்போன்களையும் பைக்குகளையும் காட்டி ஏங்க வைத்து நுகர்வு வெறியை ஊட்டிவருகின்றன. அதோடு,  நடிகர் நடிகைகளின் ஆபாச வக்கிர கூத்துக்களையும் இலவச இணைப்பாக கொடுத்து மயக்குகின்றன. போதாக்குறைக்கு அரசும் டாஸ்மாக் ,கிரிக்கெட் என மலிவான விலையில் தரமான போதையை மாணவர்களுக்கு கொடுத்து சீரழிவுப் பண்பாட்டிற்கு நிரந்தர அடிமைகளாக்கி வருகிறது, போராடும் குணத்தையும் மழுங்கச்செய்கிறது.

 

ஓட்டுப் பொறுக்கிகளும் தங்களுக்கான அடியாட்களை உருவாக்குவதற்காக சாராயம், பிரியாணி, தலைக்கு இவ்வளவு ரூபாய் என்று போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களை விலை பேசுகிறார்கள். இந்த சீரழிவுகளில் சிக்கும் மாணவர்கள்தான் யாருடைய கல்லூரி பெரியது யாருடைய ரூட் பெரியது,மாப் காட்டுவது,வெயிட் காட்டுவது,கெத்துக் காட்டுவது என்று தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த  மாநிலக்கல்லூரி மாணவர்களின் மோதல் இதற்கு ஒரு உதாரணம்

 

மாணவர்களோ செயல் துடிப்புள்ளவர்கள்,பயமறியாதவர்கள், அநியாயத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் என்பது உலக வரலாறு. நம் நாட்டிலும் அன்று இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி வென்றது; ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைக்கு இந்திய அரசு துணைபோவதை கண்டித்து தமிழக அரசை முடக்கியது; தலைமைச் செயலகத்திற்காக ராணிமேரிக் கல்லூரி இடிக்கப்படவிருந்ததை தடுத்து நிறுத்தியது;இன்று மெட்ரோ ரயிலுக்காக பறிக்கப்படவிருந்த பச்சையப்பன் கல்லூரி இடத்தை மீட்டது போன்ற வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியவர்கள். இத்தகையப் போர்குணத்தை இந்த அரசும், போலீசும் ,அரசியல்வாதிகளும்,சினிமா-பத்திரிக்கை –தொலைக்காட்சி ஊடகங்களும் வளரவிடுமா ? விடாது.

 

  நம்முடைய போர்குணத்தை மழுங்கடிக்கும் ஓட்டுப் பொறுக்கிகளையும் வகுப்புகளுக்குள் புகுந்து சுற்றிவளைத்து தாக்கும் போலீசையும் , நச்சுப் பண்பாட்டைப் பரப்பி சீரழிக்கும் மஞ்சள் பத்திரிக்கைகளையும் ,ஊடகங்களையும் நம்மை நெருங்கவிடாமல் அடித்து விரட்டுவோம்.இதற்கு மாணவர்களாகிய நாம் ஒரே வர்க்கமாக அணிதிரள்வோம். ரூட் என்று, கல்லூரி என்று ,ஏரியா என்று மோதிக் கொள்வதை நிறுத்துவோம். நமக்கு எதிரிகள் மாணவர்கள் இல்லை  இந்த அரசும் – ஓட்டுப்பொறுக்கிகளும்-ஊடகங்களும் தான் என்பதைப் பிரகடனப்படுத்துவோம்.இவர்களுக்கு எதிராக ஒரு போராட்டக் களத்தை அமைப்போம்.இதில் பெற்றோர்- ஆசிரியர்களை இணைப்போம் மாணவர்களாகிய நம்மீது திணித்துவரும் ரவுடிகள் பொறுக்கிகள் என்ற அசிங்கத்தை அப்புறப்படுத்துவோம். நம்முடைய பெற்றோர்களின் வாழ்வையும், நமது கல்விகற்கும் உரிமையையும் பறித்துவரும் ’ஆட்சியாளர்களால் அலங்கரிக்கப்படும்’ மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்.

 

அனைத்துக் கல்லூரி மாணவர்களே!

 

  • கல்லூரி என்றும் ரூட் என்றும் நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்!

மாணவர்  ஒற்றுமையை கட்டியமைப்போம்!

 

  • போலீசு – ஊடகங்கங்கள்- ஓட்டுப் பொறுக்கிகள்தான் எதிரிகள் ,

மாணவர்கள்  இல்லை என்பதை உணர்வோம்!

 

  • மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் ,கல்வியை வணிகமயமாக்கும் ,

நச்சுப் பண்பாட்டைப் பரப்பும் மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்!

 

 புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி 

சென்னை

புமாஇமு வெளியிட்ட பிரசுரத்திலிருந்து

 

முதல் பதிவு: புமாஇமு

கூடங்குளம் அணு உலையை மூடு – நெல்லை ஆர்ப்பாட்டம்

24 ஜன

கூடங்குளம் அணு உலையை மூடு – நெல்லை ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள் + காணொளி

 

புகைப்படங்கள்

 

காணொளி

 

 

 

கடவுள் ஏன் இருக்கக்கூடாது – விவாதம்: பகுதி 4

22 ஜன

 

விவாதப் பகுதி 3 க்கு நண்பர் குலாம் ஒற்றை வரியில் தன் பதிலை முடித்துவிட்டிருக்கிறார். ”உங்கள் மீது நம்பகத்தன்மை இல்லை” அவ்வளவு தான். நம்பகத்தன்மை குறித்து கடந்தமுறை அவர் கூறிய பொருந்தாக் காரணத்தை, அது எவ்வாறு பொருந்தாமல் இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கியிருந்தும், அதற்கு பதிலேதும் கூறாத நிலையில் மீண்டும் அதே காரணத்தைக் கூறி பதில் கூறும் கடமையை தட்டிக் கழித்திருக்கிறார். இதன் மூலம் அவர் மீது இரண்டுவித முடிவுகளுக்கு என்னால் வரமுடிகிறது.

 

1) என்னுடன் விவாதம் செய்ய குலாம் தயாராக இல்லை. காரணம், அவ்வாறு செய்தால் தன்னுடைய நிலையை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறி, அம்பலப்பட நேரலாம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். கடந்த பதிவுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்பதைக் கொண்டு மட்டும் இதை கூறவில்லை. அவருடைய முறைமைகளைக் கொண்டே கூறுகிறேன். கடவுளுக்கான வரைவிலக்கணம் குறித்தும், சட்டப் போதாமை குறித்தும், தர்க்க ரீதியான கடவுள் இருப்பு குறித்தும் செங்கொடி தளத்தில் என்னுடன் விவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் பின்னூட்டத்தில் முழுமையாக விவாதிக்க முடியாது என்று கூறி நழுவினார். பின்னூட்டத்தில் முழுமையாக விவாதிக்க முடியாது என்பதை உணர்ந்த அவர், அதன் பிறகும்கூட வேறுசில தளங்களில் சென்று பின்னூட்ட விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார், அல்லது ஈடுபட ஆர்வம் தெரிவித்திருக்கிறார். ஆக பின்னூட்டங்களில் முழுமையாக விவாதிக்க முடியாது எனும் அவரது முடிவு எனக்கு மட்டுமானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சரி, பின்னூட்டங்களில் முழுமையாக விவாதிக்க முடியாது என உணர்ந்ததன் பின்னர் அவருடைய தளத்தில் பல இடுகைகளை இதுவரை இட்டுள்ளார், அதில் கடவுளின் இருப்பு குறித்த இடுகைகளும் அடங்கும். ஆனால் அவைகள் எதிலும் நான் எழுப்பிய கேள்விகள் எவற்றுக்கும் பதிலில்லை. மட்டுமல்லாது அவ்வாறான பதிலை கூறும் ஆர்வம் இருப்பதாகவும் வெளிக்காட்டப் படவில்லை. இவைகளெல்லாம் செங்கொடி தளத்திற்கானவை.

 

நல்லூர் முழக்கம் தளத்திலும் பின்னூட்டங்களில் விவாதிக்க ஆர்வப்படுவதாக தெரிவித்திருந்தார். காரணம், செங்கொடியான நான் தான் நல்லூர் முழக்கம் தளத்தையும் நடத்துகிறேன் என்பது அவர் அறியாதது. நான் செங்கொடி என்பதை வெளிப்படுத்தி அவருக்கு பதிலளித்த பிறகு தான், விவாதத்தை தவிர்ப்பதற்காக மடக்கி, மடக்கி பொருந்தாத விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார். அதுவும் பலிக்காது என அறிந்ததும் மௌனமாகி விட்டார். அதிக பட்சம் ஒரு ஆண்டுக்கு ஒரு பதிவு என்றாலும் பதில் கூறுவதற்கு பிடிவாதமாக மறுக்கிறார். ஆகிய இவைகளிலிருந்து தான் அந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.

 

இது தொடர்பாக விளக்கம் ஒன்றையும் நண்பர் குலாமுக்காக இங்கு பதிவு செய்து விடலாம். விவாதம் என்பது ஒரு நிலைப்பாட்டில் எது சரியானது என்பதை தம்மளவில் தீர்த்துக் கொள்ள உதவும் ஒரு கருவி. அறிதல் எனும் நிலையில் வெற்றியும் தோல்வியும் சமமானதே. தோல்வி ஏற்புக்குறியதல்ல எனும் கருத்து இருப்பதால் தான் நண்பர் தவிர்க்க முயல்கிறார். ஆனால் அது தேவையற்றது. தோல்வி என்பது நம் தேடலை, அறிதலை அகலமாகவும், ஆழமாகவும் செய்வதற்கு உதவக்கூடியது. அதை முன்னிட்டு தவிர்க்காதிருப்பதே சிறந்தது.

 

2) மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர்கள் மீது கேள்வி எழுப்பும் தார்மீக உரிமை நண்பர் குலாமுக்கு இல்லை. தன்னுடைய கருத்தைத்தான் பிறரும் கொண்டிருக்க வேண்டும் என யாரும் வற்புறுத்த முடியாது, அதேநேரம் பொதுவிலிருக்கும் ஒரு கருத்தை யாரும் விமர்சனம் செய்யலாம். ஆனால் ஒருவர் அவ்வாறு விமர்சனம் செய்கிறார் என்றால் அவருக்கு பதில் கூறும் கடமை இருக்கிறது என்பதே அதன் பொருள். பதில் கூறும் கடமையை கையில் எடுத்துக் கொள்ளாத யாரும் விமர்சனம் செய்வதற்கு தகுதியற்றவர்கள். குலாம் பதில் கூறும் கடமையிலிருந்து நழுவி விடுவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்கிறார் என்பதால் விமர்சனம் செய்யும் உரிமையும் அவரிடமிருந்து நழுவி விடுகிறது.

 

தமிழ் இணைய உலகில் எகிறிக் குதிக்கும் இஸ்லாமிய பரப்புரை பதிவர்கள் அதிகம். அவர்களின் மத்தியில் நண்பர் குலாம் விதிவிலக்கானவர் என்று நான் மதிப்பிட்டிருந்தேன். காரணம், மதத்தில் அறிவியல் என்று இறுபூறெய்தாத தன்மை(வெகுசில பதிவுகள் அவ்வாறு இருந்த போதிலும்), உணர்ச்சி வயப்படாமல் அறிவுவயப்பட்டு பதில் கூறும் பாங்கு, தர்க்க ரீதியாக அணுகும் முறை போன்றவற்றால் அவ்வாறு கருதினேன். அதனால் தான் அவர் விவாதத்திற்கு வரமறுக்கிறார் என்பது புரிந்த பிறகும், தொடர்ச்சியாக விவாதத்தில் பங்கெடுக்குமாறு அவரை வற்புறுத்தினேன். என்னுடைய அந்த முயற்சியில் தோல்வி தான் என்றாலும் குலாமும் ஏனையோரைப் போல நேர்மை உணர்வற்ற மதப் பரப்புரை பதிவர் தான் என்பதை அறிந்து கொண்ட வகையில் மகிழ்ச்சியே.

 

இனி அவரின் ”கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?” எனும் பதிவை எதிர் கொள்ளலாம். கடவுளை விமர்சிக்கும் அறிவாளிகள் என்று பொதுத் தலைப்பை தன் பதிவுக்கு இட்டிருந்தால் அதை பொதுவானதாக கருதியிருக்கலாம். ஆனால் ‘ஓர்’ எனும் இலக்க உருபை பயன்படுத்தியிருப்பதால் தனிப்பட்ட யாரையோ உத்தேசித்துத்தான் தன் பதிவை இட்டிருக்கிறார் என்பது புலனாகிறது. ஆனால் அது யார் என்பதை அவர் வெளிப்படுத்தாததால் (வெளிப்படுத்தினால் பதில் கூறும் கடமை வந்துவிடுமே) பொதுவில் நானும் ஒருவன் என்பதாகவே அதை அணுகுகிறேன். நண்பர் குலாம் அந்த பதிவை எழுதி வெளியிடுவதற்கு முன் சற்று சீர்தூக்கி பார்த்திருக்கலாம். என்ன சொல்கிறோம்? அதை எந்த அடிப்படையில் நின்று சொல்கிறோம்? அவைகளில் உண்மையோ பொருத்தப்பாடோ இருக்கிறதா? போன்ற எதுவும் அவருக்கு அவசியமில்லை. கடவுள் இருக்கிறார், அவர் இந்த பேரண்டத்தை நிர்வகிக்கிறார் என்பது அவரது நம்பிக்கை. அதை உண்மைப்படுத்த வேண்டும் என்பது அவரது நோக்கம். இந்த நம்பிக்கையும் நோக்கமும் தான் அதில் இருக்கிறதேயன்றி தர்க்கமோ, அறிவியலோ துளியும் இல்லை.

 

தன்னுடைய பதிவின் தொடக்கத்திலேயே குலாம் இப்படி குறிப்பிட்டிருக்கிறார், \\கடவுள்! மனித சமூகத்தோடு பிண்ணி பிணைக்கப்பட்ட ஒரு வார்த்தை// மெய்தான். கடவுள் என்பது இயற்கையாக மனிதனுடன் பிணைந்த சொல்லல்ல, திட்டமிட்டு செயற்கையாக திணித்து பிணைக்கப்பட்ட ஒரு சொல்.

 

கடவுள் இருக்கிறார் என்பதற்கு அறிவியல் ரீதியாகவோ, தர்க்க ரீதியாகவோ அல்லது வேறொந்த வடிவிலோ ஒரு நிரூபணமும் இல்லை. ஆனால் நம்பிக்கை சார்ந்த அந்த கற்பிதத்தை, அறிவியல் இன்னும் தொடாத உயரங்களில் நின்று கொண்டோ, மக்களின் அறிதல் ஐயங்களை பயன்படுத்திக் கொண்டோ சில கேள்விகளை எழுப்பிவிடுவதன் மூலம் மெய்ப்படுத்திவிட முனைகிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை இது தான் நடந்து கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், கடவுள் இல்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியாது என நாங்கள் நம்புகிறோம், அதுவே கடவுள் இருப்பதற்கான ஆதாரம், என்பது தான் அவர்களின் வாதமுறைமை. ஒன்று இருக்கிறது என உறுதியாக கூறவேண்டும் என்றாலே அதன் இருப்பு ஐயந்திரிபற நிரூபிக்கப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்கப் பட்டிருக்கவில்லை என்றால் அதை யூகமாக மட்டுமே கொள்ள முடியும். கடவுள் இருக்கிறார் என்பது ஐயந்திரிபற நீருபிக்கப்பட்டிருக்கிறதா? என்றால் இல்லை என்பார்கள். கடவுள் மெய்யாக இருக்கிறாரா? என்றால் ஆம் என்பார்கள். இந்த முரண்பாடுகளுக்கு இடையில் நம்பிக்கை எனும் பாலத்தை கட்டிவைத்திருக்கும் வரையில், அவர்களால் உண்மைக்கு அருகில் வரமுடியாது.

 

கடவுள் மறுப்பு என்பது, கடவுள் இருப்பின் விளைவால் ஏற்பட்ட சீர்கேடுகளைக் கண்டு உருவானதல்ல. என்று கடவுள் எனும் சிந்தனை தோன்றியதோ அந்தக் கணமே அதன் மறுப்பும் தோன்றிவிட்டது. கடவுள் இருப்பு எப்படி மனிதச் சிந்தையில் தோன்றியதோ ஆதுபோலவே கடவுள் மறுப்பும் மனிதச் சிந்தையில் தோன்றியது தான். அதை மதத்தின் பெயரால் செய்யப்படும் மூடநம்பிக்கைகளைப் பார்த்து தான் தோன்றியது என்பது, கடவுள் இருப்பும் கடவுள் மறுப்பும் சமநிலையில் இருப்பதல்ல நிலை தாழ்ந்தது என்பதை உணர்த்தும் ஒருவித குறியீடு.

 

கடவுள் மறுப்பு அறிவியலை மட்டும் சார்ந்ததல்ல, சமூகவியல், பயன்பாடு உள்ளிட்டவைகளையும் சார்ந்தியங்குவது. ஆனால் கடவுள் மறுப்பு என்றதும் மக்களின் மூடநம்பிக்கைகளைப் பார்த்து தோன்றியது என்பதும், அறிவியல் விளக்கமளிக்காததையும்(இது குலாமின் விளக்கங்களை ஒட்டி பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல்) நாம் ஏற்கவில்லையா என்பதும் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதைதான். கடவுள் மறுப்பு கடவுள் இருப்பு என்பதை அறிவியலை விளங்கி வாழ்பவர்கள், அறிவியலை விலக்கி வாழ்பவர்கள் என்று பிரிவினை செய்ய இயலாது. அனைவருமே அறிவியலை ஏற்று அறிவியலுக்கு உட்பட்டே வாழ்கிறார்கள். அதேநேரம் சொந்த சாதக பாதகங்களை, கலாச்சார மரபுகளை முன்வைத்து சில நம்பிக்கைகளயும் கொண்டிருக்கிறார்கள். இது இருப்பு, மறுப்பு என்ற இரு நிலையிலுள்ளவர்களுக்கும் பொருந்தும். இதைக் கொண்டு அறிவியல் விளக்கமளிக்காதையும் கூட ஏற்றுக் கொள்பவர்கள் கடவுளை மறுக்கக் கூடாது என கூற முடியுமா?

 

அறிவியல் விளக்கமளிக்காததை ஏற்பதும், அறிவியலை மறுப்பதும் வேறுவேறான நிலைகள். கடவுளை ஏற்பது என்பது அறிவியலை மறுக்கும் நிலை. விளக்கமளிக்காததையும் ஏற்பது என்பது அறிவியலை மறுக்கும் நிலையல்ல. தெளிவாகச் சொன்னால் அறிவியல் விளக்கமளிக்காத நிலை என்று உலகில் எதுவுமில்லை. குலாம் எடுத்துக் காட்டியிருப்பவைகளையே நானும் எடுத்துக் கொள்கிறேன். கெடு தேதிக்கு முன்பே கெட்டுப் போகும் உணவு, கெடு தேதி முடிந்த பிறகும் நல்ல நிலையில் இயங்கும் மின்கலம்; இவைகள் அறிவியல் முரண்பாடா? ஒரு பொருளின் கெடுதேதி என்பது அந்தப் பொருளில் இருக்கும் சேர்மங்கள், அவற்றின் வேதி வினைபாடுகள், வினைபுரியும் வெளித்தனிமங்கள், நொதிகளால் ஏற்படும் பயன்மாற்றம் முதலியவைகளைக் கொண்டு எந்த தன்மையில் அது மக்களுக்கு பயன்படுகிறதோ அந்த தன்மையை எவ்வளவு காலத்தில் அது இழக்கும் என்பதை அறிவியல் ரீதியாக கணிப்பது. இந்த கணிப்புகள் வெகுசில போதுகளில் தவறிப்போகலாம். அப்படி தவறுவது அறிவியல் தவறல்ல. முன்னதாகவே கெட்டுப் போன உணவையோ, பின்னாலும் இயங்கும் மின்கலத்தையோ ஆய்வுக்கு உட்படுத்தினால் ஏன் அவை கணிப்பை மீறின என்பது புலப்படும். அவை கணிப்பை மீறிய காரணமும் அறிவியலுக்கு உட்பட்டு இருக்குமேயன்றி அறிவியல் முரண்பாடாக இருக்காது. இதை அறிவியல் முரண்பாடாக சுட்டுவதே சூழலை தனக்கு சாதகமாக வளைக்கும் நரித்தனம் தான்.

 

சுண்டி விடப்படும் நாணயத்தில் எந்தப்பக்கம் மேலாக விழும் என்பது வெற்று யூகமா? அல்ல அதுவும் அறிவியல் தான். எந்தப் பக்கம் விழுவதற்கும் 50:50 வாய்ப்பு இருக்கிறது என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு பக்கத்திலும் தனித்தனியாக செய்யப்பட்டிருக்கும் அச்சுக்கோர்ப்புகளின் கனத்தைக் கணக்கிட்டு எந்தப் பக்கம் விழுவதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது என்பதைக் கூட அறிவியலால் கூறமுடியும். இதை அறிவியலல்லாத வெற்று யூகம் என்று கூற முடியுமா? அறிவியல்லாமல் செய்யப்படும் வெற்று யூகங்கள் கூட தன்னிச்சையாக மனிதனுக்குள்ளிருந்து கிளைத்து விடுவதில்லை. வாழ்ந்த சூழல், கற்ற கல்வி, பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றின் துணைகொண்டே யூகங்கள் எழும். ஆக வெற்று யூகங்களைக்கூட அறிவியலுக்குள் வகைப்படுத்த முடியும்.. குறிப்பிட்ட மனிதன் ஒன்றை அறிந்திருக்கிறனா இல்லையா என்பதையும் தாண்டி வாழ்வில் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எதுவுமில்லை. இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் பார்க்கலாம்.

 

நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதன் அதைவிட்டு எழும்போது தன் கால்களை செங்கோணத்திலோ, விரிகோணத்திலோ நிலத்தில் ஊன்றி எழுவதில்லை. உள்வசமாய் சற்று மடக்கி குறுங்கோணத்தில் வைத்தே எழுகிறான். இதன் அறிவியல் காரணத்தை எல்லா மனிதர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அமர்ந்திருக்கும் போது மனிதனின் மொத்த எடையும் பிட்டப் பகுதியிலுருந்து நாற்காலியின் நான்கு கால்களின் மையப்பகுதில் புவியீர்ப்பு நிலை கொண்டிருக்கும். எழும்போது எடையின் புவியீர்ப்பு மையத்தை நாற்காலியிலிருந்து பாதங்களுக்கு மாற்றும் போது புவியீர்ப்பு மையத்திற்கு வெளியிலிருந்தால் எழுவதில் சிரமம் ஏற்படும். அதனால் பாதங்களை அந்த மையத்திற்குள் கொண்டுவந்து எடையை மாற்றி பின் நகர்கிறார்கள். இந்த அறிவியல் விளக்கம் ஒருவருக்கு தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் அந்த அறிவியல் விதிக்கு உட்பட்டே அவரின் செயல்கள் இருக்கும். இது போல் மனித வாழ்வின் ஒவ்வொரு செயலும் அறிவியலுக்கு உட்பட்டே அமைகிறது. இவ்வாறு செயல்படும் அறிவியலை யாரும் மறுப்பதில்லை, மறுக்கவும் முடியாது, ஒருவர் கடவுளை ஏற்றாலும் மறுத்தாலும் இது தான் நிலை. இதில் எங்கிருந்து அறிவியல் மெய்பிக்காத நிலை வருகிறது?

 

மனிதன் மரபு ரீதியாக, கலாச்சார ரீதியாக சில நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறான். இதை காரணமாக காட்டியும், மக்களின் அறிதல் குறைகளை காரணமாக காட்டியும் கடவுளின் இருப்பை மெய்பிக்க முயல்வது ஒருவழியில் கடவுள் மறுப்பை ஏற்றுக் கொள்வது தான். ஏனென்றால் ஒரு நிலைப்பாடு சரியா? தவறா? ஏற்கலாமா? கூடாதா? என்பதைத் தீர்மானிக்க அறிவியலைத் தவிர வேறொரு கருவி மக்களிடம் இல்லை. எந்த ஒன்றில் ஐயம் ஏற்பட்டாலும் அதை அறிவியலைக் கொண்டு தீர்ப்பது தான் சரியானதாக இருக்கும். அதேநேரம் அறிவியல் என்பது மனித அனுபவங்களை தொகுத்து சோதித்தறிந்து அந்த சோதனையின் முடிவுகளைக் கொண்டு பொதுவிதிகளை அடைவது. மீண்டும் மீண்டும் அவை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இயங்கியலுக்கு இயைபவை ஏற்றுக் கொள்ளப்படும், மாறானவை தள்ளப்படும். அறிவியல் மனித அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது தான் என்றாலும் அது விரிவடைந்து கொண்டே இருக்கிறது, புதிய உயரங்களை எட்டிக் கொண்டே இருக்கிறது. அது எட்டாத உயரங்கள் இருக்கிறதா? ஆம். அடுத்து அடுத்து என உயரங்களைத் தேடிக் கொண்டே இருப்பதால், நுண்ணியமாக நுழைந்து கொண்டே இருப்பதால் எப்போதும் அது தேடலிலேயே தொடரும், அதுதான் அறிவியலின் இயல்பு. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அறிவியல் இந்த இடத்திற்கு மேல் எட்டவில்லை எனவே, அதற்கு மேல் இருப்பதாக எங்களால் கூறப்படும் கடவுளை ஏற்றுக் கொள் என்பது இயலாமை. இயலாமை மட்டுமல்ல அயோக்கியத்தனமும் கூட. எப்படியென்றால், எதையும் மக்களுக்கு விளக்கிக்கூறி புரியவைப்பதுதான் மக்களை உயர்த்துவதற்கான வழியேயன்றி, மக்களிடம் இருக்கும் அறியாமையை பயன்படுத்தி ஒருவரிடம் இருக்கும் ஆதாரமற்ற நம்பிக்கையை இன்னொருவரிடம் பதியவைப்பதல்ல.

 

சரி, ஒருவன் அறிவியலின் அடிப்படையில் சிந்தித்து எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா? இல்லை. எப்போதும் சரியாக இருப்பது சாத்தியமும் அல்ல. சரி, தவறு என்பதும் உண்மை என்பதும் எப்போதும் எல்லா இடத்திலும் பொருந்தக் கூடியதும் அல்ல. சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது பூமியில் தான் உண்மை வேறொரு சூரியக் குடும்பத்திலுள்ள கோளில் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்று கூற முடியுமா? வேண்டுமானால் எந்த திசையில் உதிக்கிறதோ அந்த திசைக்கு கிழக்கு என பெயர் வைத்துக் கொள்ளலாம். பூமியிலேயே கூட பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் திசையை மாற்றிக் கொண்டால் (அப்படி மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது) அப்போது சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது உண்மையாக இருக்காது. நிரந்தரமான உண்மை என்று எதுவுமில்லை. மனிதனின் சூழல், ஆற்றல், வாய்ப்புகள், தேவைகளைப் பொருத்து உண்மைகளும், சரியா தவறா என்பதும் மாறுபடும். இதை முகம்மதியர்களுக்கு குறிப்பாக குலாமுக்கு எளிமையாக புரியவைக்க ஒரு எடுத்துக்காட்டை கூறலாம். பன்றியை உண்ணக்கூடாது என்பது முகம்மதியர்களுக்கான விதி. இந்த விதி எப்போதும் எல்லா இடத்திலும் பொருந்துமா? முக்காலமும் அறிந்த எல்லாவற்றையும் செய்யும் திறனுள்ளதாக இவர்களால் கூறப்படும் அல்லாவுக்கே எல்லா நேரத்திலும் இது ஒன்றே சரியானது என்று கூற முடியவில்லை எனும்போது, மனிதர்களின் சிந்தனை எப்போதும் சரியாக இருக்காது என்பதை தன்னுடைய நம்பிக்கைக்கு சாதகமாக பயன்படுத்த முனைகிறார்கள் என்றால் அவர்களுக்கு என்ன பெயரிடுவது? நடப்பு உலகில் அரசை எதிர்த்து போராடுவதும், போராடத் தூண்டுவதும் கம்யூனிஸ்டுகளின் கடமை, இதையே ஆளும் வர்க்க கோணத்திலிருந்து பார்த்தால் அது அரச துரோகம். இங்கு எது சரியானது என்று பார்த்து அதை ஆதரிக்க வேண்டுமேயல்லாது, சிந்தனை மனிதனுக்கு மனிதன் வேறுபடக் கூடியது எனவே கடவுளை நம்பு என்றால் அது எப்படி சரியாக இருக்க முடியும்?

 

பொதுவாக மனிதர்கள் எந்த ஒரு பிரச்சனையிலும் தனக்கு சாதகமானதா? பாதகமானதா? என்பதைக் கொண்டே முடிவெடுக்கிறார்கள். ஆனால் அது சரியா? தவறா? எனும் அடிப்படையில் எடுக்கும் முடிவே அவர்களை சரியான நிலைப்பாட்டில் இருத்தி வைக்கும். சரியான நிலைப்பாட்டில் தாம் இருக்க வேண்டும் எனும் நினைப்பு இருக்கும் வரை ஒருவனால் சொந்த சாதக பாதகங்கள் குறித்து கவலைப்பட முடியாது. கடவுள் இருப்பு மறுப்பு எனும் பிரச்சனையில் நம்பிக்கையாளர்களை விட மறுப்பாளர்களே சரியா தவறா எனும் கேள்விக்கு அருகில் நிற்கிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் தான் விமர்சனம் இருக்கிறது, அவர்களிடம் தான் மீளாய்வு இருக்கிறது. அவ்வாறன்றி குலாம் உள்ளிட்டவர்கள் தாங்களும் சாதகமான நிலைப்பாட்டில் அல்ல சரியான நிலைபாட்டில் இருக்கவே விரும்புகிறோம் என்று கூறுவார்களாயின் தங்களை மீளாய்வு செய்து கொள்ளட்டும்.

 

கடவுளை மனிதன் விமர்சிக்க முடியுமா? மனிதன் என்பவன் யார்? அவனது தகுதிகள், எல்லைகள் என்னென்ன? என்பதை நாம் தெளிவாக அறிந்திருக்கிறோம். இது போன்ற தெளிவு கடவுளுக்கு இருக்கிறதா? மனிதன் எவ்வாறு ஐயங்களுக்கு ஆட்படாதவாறு தூலமாக இலங்குகிறானோ அது போன்று கடவுளும் தூலமாக இலங்கினால் தான் இரண்டையும் ஒப்பிட முடியும். அவ்வாறன்றி மனிதன் தூலமான நிலையிலும் கடவுள் மாயமான நிலையிலும் இருக்கும் போது இரண்டையும் ஒப்பிடுவது எப்படி சரியாக இருக்க முடியும்? மனிதனின் தகுதி எவ்வளவு உயர்ந்தாலும் கடவுளின் தகுதிக்கு அருகில் வருவதாக நம்பிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா? கடவுள் எனும் கருத்து மனிதனுக்கு தோன்றிய காலத்தில் கடவுளுக்கு என்னென்ன தகுதிகளை மனிதன் ஏற்படுத்தியிருந்தானோ அதைவிட அதிக தகுதிகளோடு இன்று மனிதன் இருக்கிறான். வேறு வடிவத்தில் கூறினால் மனிதனின் அறிவும் தகுதியும் உயர உயர கடவுளின் அறிவும் தகுதியும் உயர்ந்து கொண்டிருக்கிறது.

 

சிறு குழந்தைகள் ஒருவித கணித விளையாட்டொன்றை விளையாடுவார்கள். யார் அதிக மதிப்புள்ள எண்ணை கூறுவது என்பது போட்டியாக இருக்கும். மாறிமாறி அதிக மதிப்பை கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைப் பார்த்து நீ எவ்வளவு கூறினாலும் அதைவிட ஒன்று அதிகம் என்று கூறினால் என்ன நிலை வருமோ அந்த நிலை தான் கடவுளின் தகுதி. அதாவது மனிதனின் தகுதி எவ்வளவு உயர்ந்தாலும் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இருப்பதாக கருதப்படும் இடைவெளி எப்போதும் குறையாது தக்கவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் போது கடவுளை விமர்சிக்கும் தகுதி மனிதனுக்கு இல்லை என்று கூறினால் அதன் பொருள் என்ன? கடவுளின் மீது என்ன கற்பனைகளை நாங்கள் ஏற்றிவைத்தாலும், ஏற்றுக் கொள் அல்லது விலகிச் செல் மாறாக அதை விமர்சிக்கக் கூடாது என்பது தான். இதைவிட கடவுளை வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது. மனிதனுக்கு மனிதனே அடிமையாக இருத்தல் கூடாது எனும் போது ஆண்டவனுக்கு தான் அடிமை என அறிவித்துக் கொள்பவர்களிடமிருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்?

 

ஒன்றின் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது என்றால், அது சரியாக செய்யப்பட்டிருக்கிறதா? தவறாகவா? என்று பார்ப்பது தான் சரியான அணுகுமுறை. சரியாக செய்யப்பட்டிருந்தால் அதை எதிர்கொண்டு விளக்கம் கூறுங்கள். தவறாக செய்யப்பட்டிருந்தால் எந்த விதத்தில் அது தவறான விமர்சனம் என்று தெளிவியுங்கள். அதை விடுத்து, கடவுளை விமர்சிக்க மனிதனுக்கென்ன தகுதி இருக்கிறது என்றால் அது நாலாம்தர அரசியல் வியாதிகளின் அணுகுமுறை.

 

கோடிக்கணக்கான ஆண்டுகளாய் தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கும் இப்பேரண்டத்தில் ஒரு துளியைப் போன்ற சூரியக் குடும்பத்தில் அதனில் தூசைப் போன்ற பூமியில் பல லட்சம் உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து பூண்டற்றுப் போன பின்னில் துணுக்கைப் போன்ற மனிதர்களுடைய மனதில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள் இப்பேரண்டத்தை படைத்து பரிபாலித்துக் கொண்டு அதையும் தாண்டி வியாபித்திருக்கிறார் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறியாமை. அதிலும் அதை விமர்சிக்கவும் தகுதியில்லை என்பது அறியாமையினும் அடங்காமை. இவ்வாறு அடங்காத அறியாமையை கொண்டிருக்கும் நம்பிக்கையாளர்கள் அந்த அடங்காத அறியாமையையே முற்று முழுமை என்பது மனமுரண்டா அல்லது அதனிலும் மேலா?

 

முந்திய பதிவுகள்

கடவுள் ஏன் இருக்கக் கூடாது? – விவாதம்: பகுதி 1

கடவுள் ஏன் இருக்கக் கூடாது? – விவாதம்: பகுதி 2

கடவுள் ஏன் இருக்கக் கூடாது? – விவாதம்: பகுதி 3

கூடங்குளம் – தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்

21 ஜன

முல்லைப் பெரியாறு – தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்

21 ஜன

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! நெல்லையில் ஆர்ப்பாட்டம்.

20 ஜன

 

பன்னாட்டு முதலாளிகளின் லாப வெறிக்கான,

மனித குலத்திற்கு எதிரான

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆர்ப்பாட்டம்

நாள்:         21.1.2012 சனிக்கிழமை

நேரம்:        காலை 10 மணி முதல் 1 மணி வரை

இடம்:        ஜவகர் திடல், பாளை தினசரி சந்தை, திருநெல்வேலி

 

தலைமை:

வழக்குரைஞர். சே.வாஞ்சிநாதன்,

மதுரை மாவட்ட துணைச் செயலாளர், ம.உ.பா மையம்

கண்டன உரை:

வழக்குரைஞர். சி.ராஜூ,

மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா மையம், தமிழ்நாடு.

தோழர். காளியப்பன்,

மாநில இணைப் பொதுச் செயலாளர், ம.க.இ.க

பேராசிரியர். தொ.பரமசிவன்,

மேனாள் தமிழ்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நெல்லை.

பேராசிரியர். வே.மாணிக்கம்,

மேனாள் தமிழ்துறைப் பேராசிரியர், தூய வளனார் கல்லூரி, பாளையங்கோட்டை.

வழக்குரைஞர். இரா.சி.தங்கசாமி,

மேனாள் நெல்லை வழக்குரைஞர்.சங்கத் தலைவர்

வழக்குரைஞர். ஜி.ரமேஷ்,

நெல்லைமாவட்டக் குழு உறுப்பினர், இந்திய பொதுவுடமைக் கட்சி(மா.லெ) விடுதலை.

வழக்குரைஞர். செந்தில்,

மாவட்ட ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி, நெல்லை.

வழக்குரைஞர். சிவசுப்பிரமணியன்,

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், நாகர்கோவில்.

திரு. மா.விஜயக்குமார் பாக்கியம்,

நெல்லை மாநகர மாணவரணி செயலாளர், மதிமுக.

பேராசிரியர். அமலநாதன்,

நெல்லை.

தோழர். தமிழீழன்,

நெல்லை.

ஓவியர். புருஷோத்தமன்,

மே பதினேழு இயக்கம், நெல்லை.

 

புரட்சிகர கலை நிகழ்ச்சி: ம.க.இ.க மைய கலைக் குழு.

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

வழக்குரைஞர். சு.ப.இராமச்சந்திரன்,

தூத்துக்குடி மாவட்ட செயலாளர், ம.உ.பா மையம்.

வழக்குரைஞர். க.சிவராசபூபதி,

கன்யாகுமரி மாவட்ட செயலாளர், ம.உ.பா மையம்.

 

 

  • கூடங்குளம் அணு உலைகட்டப்பட்டது நாட்டின் மின்சார தேவையினை பூர்த்திசெய்வதற்கு அல்ல; பன்னாட்டு அணு உலைமுதலாளிகளின் இலாபத்திற்காகவும், அணுகுண்டு – வல்லரசு கனவிற்காகவும் தான்.
  • தமிழக மக்களுக்கும், சிறு தொழிலுக்கும் மின்வெட்டு; பன்னாட்டு நிறுவனங்களுக்கோ தடையில்லா சலுகைவிலை மின்சாரம் – இதுதான் தமிழகத்தின் இன்றைய நிலை! கூடங்குளம் மின்சாரம் தமிழக மக்களுக்கும் சிறு தொழிலுக்கும் என்பது அப்பட்டமான பொய்!
  • காற்றாலை, கடலலை, சூரிய ஒளி, குப்பை கழிவு என  எண்ணற்ற மாற்று மின்சாரத் தயாரிப்பு முறைகள் இருக்கும் போது, கடலோரங்கள் முழுவதும் பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் அணு உலைகள் அமைக்கப்படவுள்ளது அன்னிய முதலாளிகளின் லாபத்திற்காகவே!
  • அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ், ஜப்பான், இரஷ்யா என அனைத்து நாடுகளும் அணு உலைகளி மூடிவரும் நிலையில், அணு உலைகளை அவர்களிடமிருந்து இறக்குமதி செய்து இந்தியாவெங்கும் அமைப்பது பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் குப்பைக் கூடாரமாக இந்தியாவை மாற்றியமைக்கவே!

தமிழக அரசே!

  • கூடங்குளம் இடிந்தகரை போராட்டக் குழுவினர் மீது அரசு துரோக குற்றச்சாட்டு உட்பட பல்வேறு பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறு!
  • 156 பொய் வழக்குகளை பதிவு செய்துவிட்டு போராடும் மக்களை ஆதரிப்பது போல் நடிக்காதே!
  • சிறு தொழிலுக்கும், வீட்டு உபயோகம் – விவசாயத்திற்கும் தடையில்லா மின்சாரம் வழங்கு!
  • பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஐடி நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் சலுகை விலை மின்சாரத்தைரத்து செய்!

மத்திய அரசே! அணுசக்தி கழகமே!

  • அணு உலை பாதுகாப்பானது என்று பொய்ப் பிரச்சாரம் செய்ய மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வரிப்பணத்தை பயன்படுத்தாதே!
  • பொய் – அவதூறு பிரச்சாரத்தை உடனே நிறுத்து!
  • அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை, இரஷ்ய இந்திய கூடங்குளம் அணு உலை ஒப்பந்தத்தை இரத்து செய்!
  • கூடங்குளம், கல்பாக்கம் உட்பட அனைத்து அணு உலைகளையும்மூடு!
  • மாற்றுமின்சாரத் தயாரிப்பு முறைகளை உடனே செயல்படுத்து!

மனித உரிமை ஆர்வலர்களே! பொது மக்களே!

  • தங்கள் வாழ்வினை பாதுகாக்க கூடங்குளம் – இடிந்தகரை மக்கள் போராடுவது வாழ்வுரிமைக்கான போராட்டம்!
  • அவதூறு, அச்சுறுத்தல், அடக்குமுறை என அவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு முனைவதை எதிர்க்க வேண்டியது நம் கடமை!
  • அணு உலை பாதுகாப்பானது என்ற அப்துல் கலாம் மற்றும் அணு உலைக் கழக நிர்வாகிகளின் ஆதாரமற்ற,னேர்மையற்ற பிரச்சாரத்தை புறந்தள்ளுவோம்!
  • மக்களின் உயிருக்கு தலைமுறை தலைமுறையாய் பேராபத்தை விளைவிக்க உள்ள கூடங்குளம் அணு உலை திறக்கப்படுவதை அனுமதியோம்!

 

 

கோமாதாவும் மூத்திர வியாபாரிகளும்

19 ஜன

இன்றைய செய்தியில், உத்தரகாண்ட் மாநில பாரதீய ஜனதா மேலிட பொறுப்பாளரும், கட்சியின் தேசிய செயலாளருமான தவார்சந்த் கெலாட் டேராடூனில் செய்தியாளர்களிடம் பசுவின் கோமியத்திலிருந்து குளிர்பானம் தயாரிப்பது குறித்து பேசினார். இது தான் பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கிய இடம் பிடிக்குமாம். இது குறித்து முன்னர் எழுதிய கட்டுரை ஒன்று தேவை கருதி மீள்பதிவு செய்யப்படுகிறது.

***********************************************

 

சில நாட்களுக்கு முன் நண்பரொருவர் இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

Mr.Senkodi

What is your opinion of following article ?

Is it True ? If it is true can we drink ?

Medically  it is ok ??

please answer it.

byrosekhan

one of the agenda from hindutva.

பெங்களூர்: பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களுக்குப் போட்டியாக, பசுவின்சிறுநீரை (கோமியம்) வைத்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய குளிர்பானத்தைஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த குளிர்பானத்திற்கு கெளஜல் என அது பெயரிட்டுள்ளது.இந்த குளிர்பானம் தற்போது ஆய்வக சோதனையில் உள்ளதாம். விரைவில் இதுமார்க்கெட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக இதுதொடர்பான ஆய்வுக்குழுவின் தலைவரான ஓம் பிரகாஷ் என்பவர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த குளிர்பானத்தில் கண்டிப்பாக சிறுநீர்வாசனை அறவே இருக்காது. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தற்போதுமார்க்கெட்டில் உள்ள கார்போனைட் அடங்கிய குளிர்பானங்களைப் போலஉடலைக் கெடுக்காது. எந்த வகையான நச்சுக் கிருமிகளும் இதில் இருக்காதுஎன்றார் ஓம் பிரகாஷ்.இந்தியாவில் தற்போது வெளிநாட்டு குளிர்பானங்கள்தான் கோலோச்சிவருகின்றன. இவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும், இந்துத்வாவை இதிலும்புகுத்த வேண்டும் என இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. அந்த வகையில்இந்துக்கள் புனிதமாக கருதும் பசுவின் சிறுநீரை அடிப்படையாகக் கொண்டகுளிர்பானத்தை ஆர்.எஸ்.எஸ். தயாரித்துள்ளது. 2001ம் ஆண்டுதான் கோமியம், உடல் கோளாறுகளை குறிப்பாக கல்லீரல்பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்து என பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும்பிரசாரத்தைத் தொடங்கின என்பது நினைவிருக்கலாம். இதுதவிர உடல்பருமனையும் குறைக்கும் அரு மருந்து கோமியம். புற்று நோயைக் கூட இதுகுணப்படுத்தும் எனவும் இந்த அமைப்புகள் கூறி வந்தன.ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த 1994ம் ஆண்டு வெளிநாட்டுகுளிர்பானங்களையும், நுகர்வோர் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும்என்று கோரி பெரும் போராட்டத்தையும் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.புதிய கோமிய குளிர்பானம் குறித்து ஓம் பிரகாஷ் மேலும் கூறுகையில், நாங்கள்தயாரித்துள்ள கெள ஜல் குளிர்பானம் பசுவின் சிறுநீரைக் கொண்டுதயாரிக்கப்படுகிறது. இதில் சில மருத்துவ மூலிகைகள், ஆயுர்வேதமூலிகைகளின் சாறும் சேர்க்கப்படும். இது விலை மலிவானது. விலை குறித்து இப்போது அறிவிக்கும் திட்டம்இல்லை. முறைப்படி தொடங்கப்பட்டவுடன் அனைத்து விவரமும் தெரிய வரும்.தற்போது உள்ள அமெரிக்காவின் குளிர்பானங்களுக்கு எங்களது புதியகுளிர்பானம் கடும் போட்டியைக் கொடுக்கும். அவர்களுக்கு கடும் போட்டியைக்கொடுக்கும் வகையில் நாங்கள் மார்க்கெட்டிங் செய்யவுள்ளோம் என்றார்.உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இந்த கோமிய குளிர்பானத்தைஏற்றுமதி செய்யப் போகிறதாம் ஆர்.எஸ்.எஸ்.


அண்மையில் தோழர் அரை டிக்கட் வினவு தளத்தில் பின்னூட்டமிடுகையில் கதை ஒன்றை சொல்லியிருந்தார். பிரிட்ஜ் (குளிர் பெட்டி) வாங்குவதற்கு ஒருவர் கடைக்கு செல்கிறார். விற்பனைப்பிரதிநிதியோ அவருக்கு அதை விற்க மறுக்கிறார். பின் அவர் பல நாட்களில் பல்வேறு வேடங்களில் வந்து கேட்டும் அவரை சரியாக அடையாளம் கண்டு ஒவ்வொரு முறையும் “உனக்கு விற்பதற்கில்லை” என மறுத்துவிடுகிறார். கடைசியில் சோர்ந்து போய் அவர் “ஒவ்வொரு முறையும் நான் தான் என்று எப்படி சரியாக அடையாளம் கண்டு கொள்கிறீர்கள்?” என்று விற்பனை பிரதிநிதியிடம் கேட்டார். “யோவ் நீ ஒவ்வொரு முறையும் பிரிட்ஜ் என்று கேட்டது ஒரு வாஷிங் மிஷினை” என்றார். இதைப்போல்தான் பார்ப்பனீய பாசிசங்கள் சுதேசி என்றும் கலாச்சார காவலர்கள் என்றும் பல்வேறு முகமூடிகளுடன் வருகிறார்கள். ஆனாலும் அவர்களால் அவர்களின் சொந்த கோர முகத்தை மறைக்க முடிவதில்லை. அந்த வகையில் இப்போது கோமிய பானம். அதாவது பசுவின் மூத்திரத்திலிருந்து குளிர்பானம் தயாரிக்கிறார்களாம், அதற்கு கோஜல் என்று பெயராம். கோகோகோலா, பெப்சி போன்ற அமெரிக்க மூத்திரத்தில் உட்கொள்ளக்கூடாத அளவில் வேதிப்பொருட்கள் கலந்திருக்கின்றன என்றும், நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும் ஆய்வகங்களில் சோதனை செய்து நிரூபித்தனர் சில ஆண்டுகளுக்கு முன்பு. அதனைத்தொடர்ந்து பல ஊர்களிலும் அந்த அமெரிக்க மூத்திரத்தில் மின்ட் மிட்டாயை போட்டால் எப்படி பொங்கிச்சீருகிறது என்று பலர் நேரடியாக செய்து காட்டினர். இன்னும் சிலர் கழிப்பறையை கழுவி அதன் கரை நீக்கும் அமிலத்தன்மையை விளக்கிக்காட்டினர். அந்த நேரத்தில் அவைகளின் விற்பனை கொஞ்சம் சரிந்திருந்தது. இதைப்பயன்படுத்தி ஒரேகல்லில் மூன்று மாங்காய்களை அடிக்கத்திட்டமிட்டன பாசிசப்பரிவாரங்கள். அந்தக்கல்தான் கோஜல் எனும் மாட்டு மூத்திரம். அப்படியென்றால் மூன்று மாங்காய்கள்?

 

உழவர்களின் வாழ்வோடும், கிராமப்புற கால்நடை வளர்ப்போடும் இரண்டறக் கலந்த விலங்கு மாடு. உழவுக்கு காளையும், கால்நடை வளர்ப்புக்கு பசுவும் இன்றியமையாதவை. அறுவடைக்குப்பிறகு வைக்கோல் மாடுகளுக்கு உணவானது, அடுத்த விதைப்புக்கு இடைப்பட்ட காலத்தில் கால்நடை வளர்ப்பு மாற்றுத்தொழில். பால், இறைச்சியை உணவாகக்கொள்வதும், சாணத்தை வீடுகளில் தரை மொழுகவும், அடுப்பெரிக்கவும் என்று அவர்களின் வாழ்வில் பிரிக்கமுடியாத ஒன்றாக இருந்தது. அதனால்தான் அவர்கள் கொண்டாடும் திருநாளில் கூட மாட்டுக்கு உரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். ஆனால் இதற்கு நேர் எதிராக வேள்வி நெருப்பில் குதிரையையும் மாடுகளையும் பொசுக்கித் தின்றுதீர்த்த பார்ப்பனக்கூட்டம், பௌத்தத்தை எதிர்கொள்ளமுடியாமல் அதன் கொல்லாமயை தன்னுள் வாங்கிக்கொண்டு புலாலுண்ணாமை என தகவமைத்துக்கொண்டு தன்னை தக்கவைத்துக்கொண்டது. பின்னர் முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் தங்கியிருப்பதாக புழுகி அதையே புராணமாக்கி பசுவை புனிதமாக்கிக்கொண்டது. இன்று அதைக்கொண்டே தாழ்த்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினரையும் நரவேட்டையாடிவருகிறது. மாட்டை கொன்றார்கள் என்று கூறி மனிதர்களின் தோலை உரிக்கிறது. மாட்டின் உயிரைவிட மனிதனின் உயிர் முக்கியமானதல்ல என்று வெளிப்படையாகவே கொக்கரிக்கிறது.

 

பெரியார் ஒரு முறை சொன்னார், “பஞ்சகவ்யம் என்று பசுவின் சாணி மூத்திரம் போன்றவற்றை கலந்து அதை புனித தீர்த்தமாக குடிக்கச்செய்வது, முகம் சுழிக்காமல் குடிக்கிறானா என்பதை வைத்து இவன் எவ்வளவு ஏமாளியாக இருக்கிறான், எந்த அளவு இவனை ஏமாற்றலாம் என்று அளந்து பார்க்கும் கருவியாக பசுமூத்திரத்தையும் சாணியையும் பயன்படுத்துகிறான்” என்று. இன்று அதே சோதனையை விரிவான அளவில் செய்யப்போகிறார்கள் அதுவும் நம்மிடமே காசு வாங்கிக்கொண்டு. சரி இந்துக்கள் என்று தம்மை நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இது சரிவரும் ஏனையவர்களுக்கு? அதற்க்காகத்தானே பசு மூத்திரம் செல்வளர்ச்சிக்கு உதவுகிறது என்று டாக்டர் சந்திர சேகர் என்பவர் ஆய்வு செய்து கூறியிருக்கிறார். குஜராத்தில் பசுவின் பயபாடுகள் பற்றி கருத்தரங்கம் நடத்தியிருக்கிறார்கள். மைசூரில் பிஞ்சாரேபோல் சொசைட்டி சாந்திலால் சோர்டியா என்பவரின் தலைமையில் இது போன்ற அரிய உண்மைகளை(!) கண்டுபிடித்துச் சொல்வதற்கு முழுமூச்சோடு ஈடுபட்டு வருகிறது. உத்ராஞ்சல் அரசு 20கோடி ரூபாய் செலவில் ஆய்வகம் அமைத்துக்கொடுத்திருக்கிறது. இணையத்தில் தேடினாலோ உலகத்திலுள்ள அத்தனை நோய்களுக்கும் கோமியம் சிறந்த நிவாரணி என்று கட்டுரைகள் கிடைக்கும். ஆக நாம் எவ்வளவு ஏமாளி என்று நம்முடைய காசைக்கொண்டே சோதித்துப்பார்த்து அதில் லாபமும் அடைவது முதல் மாங்காய்.

 

பெப்சி கோக் போன்ற அன்னியப்பொருட்களை எதிர்ப்பது போலவும், சுதேசியத்தை காப்பது போலவும் போராட்டம் நடத்தியவர்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்தது என்ன? பொதுத்துறை நிறுவனங்களை அன்னியனிடம் அடிமாட்டு விலைக்கு விற்பதற்கென்றே ஒரு அமைச்சகம் அமைத்தார்கள். பசுவதை தடுப்புச்சட்டம் என்று மாட்டின் புனிதம் பற்றி பாடம் நடத்தியவர்கள், அந்த புனிதமான மாட்டோடு இணைந்த விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொள்ள காரணமான கொள்கையை எதிர்த்து ஒரு எழுத்தேனும் பேசமுடியுமா? நாடெங்கும் உள்ள சிறுபான்மையினர் உணவுக்காக கொன்ற மாட்டைவிட பால் பவுடர் இறக்குமதி என்ற ஒரே உத்தரவில் லட்சக்கணக்கான மாடுகளை ஒழித்துக் கட்டினார்களே, இதற்கு பதில் கூற முடியமா? இப்படி பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாயைப்போல சேவகம் புறிய ஓட்டுப்பொறுக்குவதற்கு, சுதேசி கோமாதா என்று கபட நாடகமாடுவதற்கு மாட்டு மூத்திர கோஜல் பயன்படுகிறதே இது இரண்டாவது மாங்காய்.

 

நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அபாயம் என்று பயங்கர வாதம் குண்டுவெடிப்பு சீன் காட்டி சிறுபான்மையினரை விரக்தியின் விழிம்புக்குத்தள்ளி அதைக் காரணம் காட்டியே இந்து என்ற பட்டிக்குள் எல்லோரையும் அடைத்துக்கொண்டிருக்கிறார்களே பாசிச பயங்கரவாதிகள், அவர்களின் அந்த செயல்திட்டத்தின் வழிமுறைகள் தான் தேசிய நாயகன் தேசிய கலாச்சாரம் என்பது. ஒரே நாடு ஒரேகலாச்சாரம் ஒரே சட்டம் என்று தங்களின் பார்ப்பனிய முகத்தை தேசிய முகமூடியால் மறைத்துக்கொள்ள மருத்துவப் பலன்களை புனைந்து அதைக்காட்டி ஒரு குளிர்பானமாய், விதேசியத்திற்கெதிரான சுதேசியமாய் விளம்பரம் செய்து, தேசிய வெறியை கிளப்பி தங்களின் அரசியல் இலக்கை நீங்கள் அறியாமலேயே உங்களுக்குள் திணிக்கிறார்களே இது மூன்றாவது மாங்காய்.

 

நாட்டில் பயங்கரவாதத்திற்கு பலியானவர்களை விட, தொன்னூறுகளின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த பொருளாதாரக்கொள்கையால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம். விவசாய நாடான இந்தியாவில் பெருமளவில் வேலைவாய்ப்பை கிராமப்புறங்கள் தான் வழங்கிக்கொண்டிருந்தன. அவர்களை கிராமியச்சூழலிலிருந்து பிய்த்து உதிரித்தொழிலாளர்களாய் நகரங்களில் வீசி எறிந்திருக்கிறது அந்த பொருளாதாரக்கொள்கை. சமூகத்தில் எல்லாத்தட்டு மக்களையும் பாதிக்கும் பொருளாதாரக்கொள்கைகளையும், உலக வங்கியின் உத்தரவுகளையும் எந்தக்கட்சியும் மீறுவதில்லை. இப்படி அன்னியக்கைக்கூலிகளாய், நம் வாழ்வை அன்னியனின் சுரண்டலுக்குள் அடிமைப்படுத்தும் சோரம் போனவர்கள் தான் சுதேசியம் என்றும், தேசியக்கலாச்சாரம் என்றும் கௌஜல் புனிதம் என்று சொல்லிக்கொண்டு உங்கள் முன் வருகிறார்கள். இத சரியான வழியில் புறிந்து கொள்வதற்கும் முறியடிப்பதற்கும் பெப்சி கோக்கை கையில் பிடித்துக்கொண்டு சிந்திப்பவர்களால் முடியாது. பெப்சி கோக்கின் ஒவ்வொரு சொட்டிலும் விவசாயிகளின் கண்ணீரும் ரத்தமும் கலந்திருக்கிறது. அவைகளை புறக்கணிப்பதுடன் ஆரோக்கியமும் ருசியும் நிறைந்த இளநீர் மோர் போன்ற பானங்களுக்கு திரும்புவோம். அதோடு மட்டுமன்றி இயற்கை பானங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராகவும், இயற்கை வளங்களை நாசமாக்கி அதை தம் சொத்தாக மாற்றுபவர்களுக்கு எதிராகவும் அணிதிரள்வோம்.

 

முதல் பதிவு: செங்கொடி