தொகுப்பு | நவம்பர், 2010

கடையநல்லூரில் தானி சங்க மோதல்

30 நவ்

கடையநல்லூரில் புதிய ஆட்டோ சங்கம்(திமுக) ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதற்கு வேறொரு மார்க்சிஸ்ட்(சிபிஎம்) சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையநல்லூரில் பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனை பஸ் நிறுத்தப் பகுதிகளில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆட்டோ ஓட்டுநர்களில் பலர் மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத்தை(சிஐடியு) சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில் புதிய ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் (திமுக) தொடங்கப்பட்டது. இதில் திமுக மாவட்டச் செயலர் கருப்பசாமிபாண்டியன் கலந்து கொண்டு கொடியேற்றினார்.

இந்நிலையில் புதிய சங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி காட்டுவதற்கும், மறியல் போராட்டம் நடத்துவதற்கும் சிஐடியு சங்கத்தினர் முயன்றனராம். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் அவர்களிடம் பேசியதையடுத்து சிஐடியு சங்கத்தினர் தங்கள் முடிவை கைவிட்டனர்.

*****************************************************

கடையநல்லூர் சுற்றுப் பகுதிகளைப் பொருத்தவரை சிபிஎம்மை விட சிபிஐயே அதிகம். ஆனால் ஓட்டுக்கட்சிகளுக்கே உரிய இலக்கணமான கோஷ்டிச் சண்டையில் ஈடுபடுவதற்கே (நடராஜன் கோஷ்டி, வாத்தியார் கோஷ்டி) சிபிஐக்கு நேரம் சரியாக இருப்பதால் சிபிஎம் உள்ளே நுழைந்து சங்கம் கட்டி வருகிறது. ஆனால் தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பழைய கதிரவன் காலத்து செல்வாக்கை பெற்றுவிடவேண்டுமென்று திமுகவும் நெருக்குவதால் ஏற்பட்ட நாய்ச்சண்டைதான் தானி ஓட்டுனர் சங்க பிரச்சனை.

சாலையில் நாய்ச்சண்டை நடந்தால் என்ன செய்ய வேண்டுமென்பதை மக்கள் யோசிக்க வேண்டும்.

விக்கிலீக்ஸ் குண்டூசியால் இயல்புருவுக்கு சுருங்கும் அமெரிக்க ஊதுபெட்டி

30 நவ்

ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அதுதொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் குண்டைப் போட்டுள்ளது.

அமெரிக்காவே ஆடிப் போயிருக்கிறது, விக்கிலீக்ஸ் விவகாரத்தில். ஒவ்வொரு நாட்டுக்கும் ‘விக்கிலீக்ஸ்’ என்னவேண்டுமானாலும் சொல்லும்… தயவு செய்து நம்பிவிடாதீர்கள்’, என்கிற ரீதியில் கோரிக்கை விடுத்துவருகிறது அந்த நாடு.

ஆனால் அமெரிக்கா உலக நாடுகள் ஒவ்வொன்றுடனும் டபுள் டபுளாக கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வந்த பச்சோந்தித்தனம் தற்போது படிப்படியாக அம்பலமாகி வருகிறது. அமெரிக்காவை நம்பவே கூடாது என்ற கருத்துக்கு ஆணித்தரமாக ஆதாரம் தருவது போல உள்ளது இந்த கசிவுகள்.

என்ன அது விக்கிலீக்ஸ்?

2006-ம் ஆண்டு ஜூலியன் அஸாங்கே என்ற ஆஸ்திரேலியரால் தொடங்கப்பட்டது விக்கிலீக்ஸ். இது ஒரு லாப நோக்கற்ற இணையதளம். இங்கே உலகின் அத்தனை அரசியல், வர்த்தக சாம்ராஜ்யங்களின் ரகசியங்களும் சேகரித்து பின் வெளிப்படுத்தப்படும்.

சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள், புலனாய்வாளர்களுக்கு மிகப் பெரிய ஆதாரதளமாக விக்கிலீக்ஸ் மாறி வருகிறது. மேலும் சமூகத்தில் வெளிப்படைத் தன்மை நிலவ வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என அறிவித்துள்ளது விக்கிலீக்ஸ்.

இந்த தளம், கடந்த 5 ஆண்டுகளாக, உலகமெங்கும் உள்ள அமெரிக்கா தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்த முக்கிய ரகசிய ஆவணங்களை, அதிகாரிகள் மூலம் பெற்று சேகரித்தது.

அப்படி சேகரித்த லட்சக்கணக்கான சர்வதேச அரசியல் ஆவணங்களை இப்போது தொகுதி தொகுதியாக வெளியிட்டு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அதிர வைத்துள்ளது விக்கிலீக்ஸ்.

அமெரிக்கா ஒவ்வொரு நாட்டிலும் வெறும் தூதரகங்களை மட்டும் வைத்திருக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக உளவுத் துறையையே நடத்தி வருகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.

கடந்த 2009-ல் முதல் முறையாக அமெரிக்கா தொடர்பான பல்வேறு இராணுவ ரகசியங்களையும், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் அந்நாடு மேற்கொண்ட முடிவுகள் தொடர்பாகவும் பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ்.

பின்னர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி The Iraq War Logs என்ற தலைப்பில் 391,832 ஆவணங்களை வெளியிட்டு அதிர வைத்தது. உலகில் வெளியான மிகப் பெரிய ரகசிய ஆவண தொகுப்பு என்ற பெருமையும் இதற்குண்டு.

ஈராக் போரில் அமெரிக்கா வெண்டுமென்றே செய்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இதில் அம்பலமாக்கியது விக்கிலீக்ஸ். அமெரிக்காவின் நோக்கம் அங்குள்ள வளங்களைச் சுரண்டுவதே என்றும் அதற்குத் தடையாக இருப்பவர்களை ஒழிப்பதுதான் முதல் வேளை என்றும் இந்த ஆவணங்கள் அழுத்தமாக வெளிப்படுத்தின.

இந்தப் போரில் 2004-ம் ஆண்டி்லிருந்து 2009-ம் ஆண்டுவரை 109,032 பேர் உயிரிழந்த உண்மை அப்போதுதான் வெளியானது. இதில் சிவிலியன்கள் மட்டும் 66,081 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இந்தப் போரில். ஆனால் இதனை அப்படியே அமுக்கி வைத்திருந்தது அமெரிக்கா.

இந்தியாவைப் பற்றி…

இந்தியாவைப் பற்றி அமெரிக்காவின் உண்மையான அபிப்பிராயம் மற்றும் பிற நாடுகள் எப்படி பார்க்கின்றன என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.

இந்தியாவை இன்றுவரை சந்தேகத்துக்குரிய நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை டெல்லியில் உள்ள தூதரகம் மூலம் 3,038 ரகசிய ஆவணங்கள் வாஷிங்டனுடன் பரிமாறப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஆவணங்களில் உள்ள தகவல்களை அறிவதில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரி செய்யப்பட்டபின்னர் அது தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுவிடும் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

தவிர, துருக்கி ஏற்பாடு செய்த ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த ஆலோசனக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்த தகவலையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்றே இந்தியாவை துருக்கி தவிர்த்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்பான அனைத்து சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியா தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் துருக்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்தே, இந்த ஆண்டு தொடக்கத்தில் துருக்கி ஆதரவில் நடைபெற்ற “தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆப்கானிஸ்தான் நட்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்படாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்தியா குறித்த அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்திய தூதர்களை உளவு பார்க்க உத்தரவிட்ட ஹில்லாரி

இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு முயன்று வருகிறது. இதனால் அதன் செயல்பாடுகள் குறித்துஅறிய இந்தியத் தூதர்களை உளவு பார்க்குமாறு ஹில்லாரி கிளிண்டன் உத்தரவிட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக 2009ம் ஆண்டு ஜூலை 31ம்தேதி ஹில்லாரி அமெரிக்கத் தூதர்களுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்திய அணு ஆயுத ஒப்பந்தம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக எடுத்து வரும் முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து உளவு பார்க்குமாறு அதில் ஹில்லாரி அறிவுறுத்தியுள்ளார். இந்த பணியை தனது உளவு அமைப்புகளுக்கும் அவர் ஒதுக்கியுள்ளார்.

இந்தியா தவிர பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் பதவிக்காக மோதி வருவதால் அவர்களையும் உளவு பார்க்க உத்தரவிட்டுள்ளார் ஹில்லாரி.

இதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை விரிவாக்கத்தை எதிர்த்து வரும் மெக்சிகோ, இத்தாலி, பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய யூனியன், ஐ.நா. பொதுச் செயலகத்தில் உள்ள சிலரையும் தனக்கு கூட்டு சேர்த்து செயல்பட்டுள்ளது அமெரிக்கா.

மேலும் அணி சேரா நாடுகள் கூட்டமைப்பு, ஜி77 கூட்டமைப்பு, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு குறித்தும் அது உளவு பார்த்துள்ளது.

உலகத் தலைவர்களை கேவலமாக கிண்டலடித்த அமெரிக்கா

பிரான்ஸ் தொடங்கி ரஷ்யா வரை பல்வேறு நாட்டு தலைவர்களை ஏளனமாக பட்ட பெயர் சூட்டி அழைப்பது ‘பெரியண்ணன்’ அமெரிக்க ஸ்டைல் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. தனது நட்பு நாடுகளையும் கேவலமாகவே பார்த்து வந்துள்ளது அமெரிக்கா என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதான் அமெரிக்காவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா நட்பு பாராட்டினாலும், உள்ளுக்குள் அதிபர் சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

பாக் பிரதமர் சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளாராம். “பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும்” என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்.

இதுதவிர ‌‌பி‌ரி‌ட்ட‌ன் அரச குடு‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த ஒருவ‌‌ரி‌ன் ஒழு‌ங்‌கீனமான செய‌ல்பாடுகளை ‌‌‌தின‌ந்தோறு‌ம் அமெ‌ரி‌க்க தூதரக அ‌திகா‌ரிக‌ள் வா‌ஷி‌ங்டனு‌க்கு அனு‌ப்‌பி வ‌ந்து‌ள்ளதும் அம்பலமாகியுள்ளது.

“லிபியா தலைவர் மொம்மர் அல் கடாபி பெண் பித்தர். யாரையும் நம்ப மாட்டார். எங்கு சென்றாலும் உக்ரைன் நர்ஸ் ஒருவருடன் செல்கிறார். நர்சுக்கும், இவருக்கும் அந்தரங்க தொடர்பு உள்ளது. ஐநா செல்ல உரிய நேரத்தில் நர்சுக்கு விசா கிடைக்கவில்லை. பின்னர், இருவரும் தனியாக விமானத்தில் ஐ.நா. சென்றனர்…”, என அமெரிக்கா குறிப்பிட்டதும் அம்பலமாகியுள்ளது.

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை, “இவர் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை மறைக்க அடிக்கடி இரவு விருந்து அளிக்கிறார். இதனால், இவருக்கு ஓய்வே கிடையாது. இவர் மாடர்ன் ஐரோப்பிய உலகின் திறமையற்ற, ஆடம்பர தலைவர்..” என்றும் கூறியுள்ளனர்.

‘டாக் புடின்’

மேலும் ர‌ஷ்ய ‌பிரதம‌ர் ‌விளாடி‌‌மி‌ர் பு‌‌தினு‌க்கு, ‘அ‌ல்பா டா‌க்’ என்ற நா‌யி‌ன் பெயரை (அடங்காத நாய்) அடையாள பெயராக கு‌றிப்பி‌ட்டு, மா‌ஸ்கோ‌வி‌ல் இரு‌ந்து அமெ‌ரி‌க்க தூதரக அதிகாரிகள் தகவ‌ல்க‌ள் ப‌‌ரிமா‌றி‌க் கொ‌ண்டது தெரிய வந்துள்ளது.

அத்துடன் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் சிக்கல்களை கையாளாமல் தவிர்ப்பவர் என்றும், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் மனநிலை பிறழ்ந்தவர் என்றும், இதேபோல பல்வேறு உலகத் தலைவர்களுக்கு பல்வேறு பெயர்களையும் சூட்டி அமெரிக்கத் தரப்பு தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாம்.

ஈரான் ஹிட்லர்

ஈரான்அதிபர் அகமதி நிஜாத்தை “ஹிட்லர்” என்ற பெயரில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வர்ணித்து தகவல் அனுப்பியுள்ளனர்.

பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு நிர்வாண ராஜா என்றும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் 2 க்கு எபிலெப்சி, லிபிய அதிபர் கடாபிக்கு ஹாட் பிளான்ட், ஜெர்மனி அதிபர் மெர்க்கலுக்கு டெப்லான், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு பரோனியாவால் பாதிக்கப்பட்டவர் என பல கேவலமான அடைமொழிகளைச் சூட்டியுள்ளனர் தங்கள் தகவல் பரிமாற்றங்களின்போது.

பாகிஸ்தானிடம் தோற்ற அமெரிக்கா…

2009 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் வருவது பாகிஸ்தானிய ஊடகங்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தானின் ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி அதனை ஏற்க மறுத்து தடுத்து விட்டதாம் பாகிஸ்தான்.

உண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

சவூதி கோரிக்கையை அமெரிக்கா தட்டிக் கழித்தது ஏன்?

அதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்த சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதாம். இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம்.

அதேசமயம், அல் கொய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்கா தட்டிக் கழித்ததாம்.

மேலு‌ம் ‌சீனாவு‌ட‌ன் இணை‌ந்து கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் அமைதியை ‌‌நிலைநா‌ட்ட தெ‌ன் கொ‌ரியா மே‌ற்கொ‌ண்ட முய‌ற்‌சிகளை, அமெ‌ரி‌க்க உளவு‌த் துறை த‌டு‌த்து ‌நிறு‌த்‌தியது ப‌ற்‌றிய தகவ‌ல்களு‌ம் அதில் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதேபோ‌ன்று ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தா‌‌ன் துணை ‌பிரதம‌ர் சவூ‌தி ‌விமான‌ ‌நிலை‌‌த்‌தி‌ல் சுமா‌ர் 20 கோடி ரூபா‌ய் ம‌தி‌ப்புடைய அமெ‌ரி‌க்க டாலருட‌ன் ‌பிடி‌ப‌ட்டதும், ‌பி‌ன்ன‌ர் அமெ‌‌ரி‌க்கா தலை‌யி‌ட்டு அ‌ந்த ‌விவகார‌த்தை ‌‌தீ‌ர்‌த்து வை‌த்தது‌ம் ‌வி‌க்‌கி‌லீ‌க்‌‌‌ஸி‌‌ல் வெ‌ளியா‌கியு‌ள்ளது.

ஐரோப்பாவை பற்றி கவலையில்லை. மேற்கு நாடுகளை விட கிழக்கு நாடுகளை தேர்வு செய்கிறேன்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பேசிய பேச்சும் கசிந்துள்ளது, பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவுக்கு.

கூகுளை ஊடுருவி உளவறிந்த சீனா…

இதேபோல கூகுள் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவி அவற்றை செயலிழக்க வைக்க சீன அரசு உத்தரவிட்டதையும் அம்பலப்படுத்தியுள்ள விக்கிலீக்ஸ், அமெரிக்க அரசின் சில இணைய தளங்கள், மேற்கத்திய நாடுகளின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, தலாய் லாமாவின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளம் ஆகியவற்றுக்குள்ளும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் சீன அரசு ஊடுருவி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

விக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் உலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தவிர மத்திய கிழக்கிலும் பதற்றமான நிலைமைக்கு வழி வகுத்திருக்கிறது. அத்துடன், ஈரானுக்கெதிரான தாக்குதல் அவசியம் எனக் கருதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலுள்ள கடும் போக்காளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக அமைந்திருப்பதாக சர்வதேச பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.

இந்த பின்விளைவுகளை எதிர்ப்பார்த்துதான் ‘விக்கிலீக்ஸை நம்பாதீர்கள்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசுகள், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவுக்கு தொடர்ந்து செய்தி அனுப்பி வந்தார்.

அமெரிக்காவின் இந்த டெக்னிக் இனி எடுபடுமா? சந்தேகம்தான். இப்போதே பல நாடுகள் அமெரிக்காவின் இந்த இரட்டை முகம் கண்டு முகம் சுளிக்க ஆரம்பித்துள்ளன. விக்கிலீக்ஸ் விவகாரத்தில் அமெரிக்கா குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் ரியாக்ஷன் என்னவென்பது வரும் நாட்களில் தெரியும்

**********************************************************

தனது நலனுக்காக, தன்னுடைய தேவைகளுக்காக அமெரிக்கா எந்த எல்லைக்கும் செல்லத்தயாராக இருக்கும் என்பது மீண்டும் அம்பலமாகியிருக்கிறது. தன்னுடைய இராணுவ பலத்தைக் கொண்டு, பொருளாதார கட்டமைப்புகளைக் கொண்டு உலக நாடுகளை தனக்கு அடிபணிய வைத்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது எனும் கூற்றுக்கு முனைந்து ஆதாரங்களை வழங்கியிருக்கிறது விக்கிலீக்ஸ். அந்த வகையில் ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்ட அமெரிக்கா எனும் ஊதுபெட்டியில்(பலூன்) விக்கிலீக்ஸ் எனும் குண்டூசி குத்தியதால் அது உள்ளங்கையில் அடங்குவதுபோன்ற மெய்யான உருவத்திற்கு சுருங்கி வந்திருக்கிறது.

ஆனாலும் ஒரு நெருடல். தன்னுடைய சிறிய அளவிலான பித்தலாட்டங்களை மறைப்பதற்கே பல படுகொலைகளை நடத்தியிருக்கிறது அமெரிக்கா. ஆனால் அதன் ஒட்டுமொத்த பிம்பத்தையே கலைத்துப் போடும் அளவிற்கான இதில் ஒரு இணைய தளத்தை முடக்க முடியாமல், உலக நாடுகளை கெஞ்சிக் கொண்டிருக்கிறது என்பது அதன் இதுவரையான இயல்போடு ஒத்துப் போகவில்லை. எனவே இதன் பின்னணிகளை தெளிவாக அளவிடாதவரை இதை எச்சரிக்கையுடனேயே அணுகவேண்டும்.

கடையநல்லூர் தெருவில் நாற்று நடும் போராட்டம்

29 நவ்

கடையநல்லூரில்  சாலையை சீரமைக்க வலியுறுத்தி  சனிக்கிழமை நாற்று நடும் போராட்டம்நடைபெற்றது.

 

கடையநல்லூர் நகராட்சி 4-ஆவது வார்டுக்குள்பட்ட செவல்விளைத் தெருவில் சாலை மிகவும் மோசமான நிலையில்  குண்டும் குழியுமாக, சகதியுடன் இருப்பதால் தெருவில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

 

எனவே இதை சீரமைக்க வலியுறுத்தி சித்திரபுத்திரநயினார் தலைமையில் அங்கு நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

****************************************************

மக்கள் இதுபோன்ற நகைப்புக்கிடமான முறையிலான போராட்டங்களை நடத்துவதைவிட வீரியமாகவும் செயல்படத் தூண்டும் விதத்திலும் போராட முன்வர வேண்டும். இதையே நாற்று நடுவதற்குப் பதிலாக சகதியை அள்ளி நகராட்சி அலுவலகத்தில் கொட்டும் போராட்டமாக நடத்தினால், அது மக்களின் இன்னல்களை வெளிப்படுத்தும் விதமாகவும், வீரியமுள்ளதாகவும், அதேநேரம் அதிகாரிகளை செயல்படத் தூண்டும் விதமாகவும் இருக்கும்.

எச்சரிக்கை: கடையநல்லூரில் கண்நோய் பரவுகிறது

29 நவ்

கடையநல்லூர் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் தற்போது கடையநல்லூர் மட்டுமின்றி சொக்கம்பட்டி, திரிகூடபுரம், குமந்தாபுரம், முத்துசாமியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடையே மெட்ராஸ்-ஐ என்னும் கண் நோய் பரவலாக தாக்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக பள்ளிக்குழந்தைகளை அதிகமாய் தாக்கியுள்ளதால் பெரும்பாலான பள்ளி ஆசிரியர்களையும் இந்தக் கண் நோய் தொற்றிக் கொண்டுள்ளது

****************************************

இது எந்த மருந்தும் தேவையின்றி மூன்று அல்லது நான்கு நாட்களில் தானகவே சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனாலும் இருக்கும் நாட்களில் கண் எரிச்சலும், கண்ணீர் வழிதலும் இருக்கும்.

பாதிக்கப்பட்டவரின் கண்களை நேரடியாக பார்ப்பதை தவிர்க்கலாம் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் கருப்புக் கண்ணாடி அணிந்து நடமாடலாம் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

 

ஊழல் செய் + ஆவணங்களை அழி = நேர்மையாளன்

29 நவ்

கார்கில் போர் வீரர்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த ஊழல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளன.

மும்பையில் கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு 31 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டி தரப்பட்டது. இதற்கு ஆதர்ஷ் குடியிருப்பு எனப் பெயரிடப்பட்டது.

இந்த குடியிருப்பைக் கட்டுவதில் பெரும் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் முதல்வர் அசோக் சவான் மற்றும் துணை முதல்வர் மாற்றப்பட்டனர்.

மேலும் ஊழல் வழக்கில் ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஊழல் தொடர்பாக முக்கிய ஆவணமான கோப்பில் 15,27,99,279 ஆகிய முக்கிய பக்கங்கள் காணவில்லை.

சி.பி,ஐ, விசாரித்து வரும் இந்த வழக்கில், நகர்புற மேம்பாட்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த ஆவணங்களில்தான், ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் எழுதிய குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. இப்போது அவை மாயமாகியிருப்பதால், அந்த நேரத்தில் முதல்வராக இருந்த அசோக் சவானை குறை கூற போதிய ஆதாரங்கள் இல்லாத நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

****************************************************

இந்த ஆவணங்கள் மட்டுமா காணாமல் போயிருக்கிறது. இதற்கு முன்னரும் போபால் ஆண்டர்சனை தப்பவிட்டதில் ராஜிவின் தொடர்பு குறித்த ஆவணங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் மறைந்திருக்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் என டம்பமடிப்பது, நெருக்கிப்பிடித்தால் ஆவணங்களை அழித்துவிட்டு காணாமல் போய்விட்டதாக நாடகமாடுவது. மக்கள் புரிந்து கொள்ளும்வரைதான் இவர்கள் கொட்டமடிக்க முடியும். அது எப்போது என்பதே இப்போதைய கேள்வி

நந்தலாலா – மிஷ்கின் எனும் திருடனின் அழகியல்

29 நவ்

தமிழ் படவுலகின் பாலசந்தர்+கமலஹாசன் வகை திரைக்கதை பார்முலாவை வெற்றிகரமாக கையாண்டிருக்கும் நந்தலாலா வெற்றிபெற்றிருக்கார், சொந்தமான முயற்ச்சியில் நல்ல தமிழ் படத்தை அவரால் கொடுக்க முடியும் என நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.ஆனால் அது நிச்சயம் நந்த்லாலா இல்லை.

காலம் காலமாக தமிழ் சினிமா கையாண்டுவரும் ஒரு படத்தின் திரைக்கதையை காப்பியடிப்பது, அதில் இன்னொரு பட்த்தின் கதாபாத்திரத்தை காப்பியடித்து சேர்ப்பது, அதோடு வேறு சில படங்களின் சில காட்சிகள் கடைசியாக நம் சமுகம் என்பதற்கு சாட்சியாக சில பல காட்சிகள் ஏன்ற பார்முலாவில் வெற்றிகரமாக நந்தலாலா கிகிஜிரோ எனும் ஜப்பனிய படத்துடன் தன் புத்திசாலிதனத்தை காட்டி பெருந்திரள் சிங்சாக்கள் பாராட்டுமொரு படத்தை கொடுத்திருக்கிறார்.

கதை, திரைக்கதை சிறுவனின் பாத்திரப்படைப்பு எல்லாம் கிகிஜிரோ, என்ன ஜப்பான் மண்ணில் நடக்கும் கதையை தமிழ் மண்ணுக்கு மாற்றும் முயற்ச்சியில் சில வேறுபாடுகள் அவ்வளவுதான்.

மிஷ்கின் கதாப்பத்திரம் குழப்பம் என்றாலும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை, பல கிகிஜீரோ காட்சிகளை பார்க்க மனம் சகிக்காமல் கண்ணை மூடினால் இளையாராஜா கம்பிரமாக தெரிகிறார்.

சில சில காட்சிகளில் மிஷ்கினை க்ட்டிபிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.நிச்சயம மிஷ்கினுக்கு திறமையிருக்கிறது இல்லையென்றெல்லாம் சொல்ல முடியாது. அமிர் யோகியில் ஹீரொயிஸத்தை காட்ட சோட்சி காலி ஆனால் மிஷ்கின் ந்நத்லாலாவில் கதையுடன் சேர கிகிஜிரோ பிழைத்து.

கிகிஜிரோவை பார்க்கதவர்கள் நந்தலாலவை ஆஹா ஓஹோ எனலாம், பார்த்தவர்கள் மிஷ்கின் பாத்திரபடைப்பில் மட்டும் மயங்கி மகுடிக்கு ஆடலாம் ஆனால் மொத்தம் இது ரிமேக் கண்மணிகள் செய்யும் மாய வித்தைதான். கில்லி தெலுங்கு வெர்ஷ்ன், தமிழ் வெர்ஷன் பாருங்கள் தமிழுக்கு தகுந்த நிறைய மாற்றங்கள் இருக்கும், முன்னாபாய் வசூல்ராஜவாகும் போது வரும் மாற்றங்கள் இயல்பு தான்.அதற்காக?

ஒரு கார்ட் கிகிஜிரோ இன்ஸிபிரேஷன என போட்டிருந்தால் மிஷ்கினையும் நந்தலாலவையும் கொண்டாடலாம், ஆனால் எத்தனை பேர் கிகிஜிரோவை கச்சிதமாக தமிழ்படுத்த முடியும் என்று? மற்றபடி கிகிஜிரோவை பார்க்கவேயில்லை என்று சூடம் ஏத்தி சத்தியம் செய்யும் கள்ளனை ஆதரிக்க முடியது.

ஒரு திருடனின், கொலைகாரனின் திறமையையும், அழகியலை வியக்கலாம், அதிசயிக்க்லாம், ரசிக்கலாம் ஆனால் ஆதரிக்க முடியாது.என்னை போன்றவர்கள் திருடனையே ஆதரிப்பதில்லை.

நன்றி: அக்னிப் பார்வை

விலை உயர்வுக்கு கோசம் போடும் ஓட்டுக்கட்சிகள் ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யுமா?

28 நவ்

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விலை இன்று விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன், பட்ஜெட் நேரத்தில் மட்டும் தான் பொருட்களின் விலை உயர்வு இருக்கும். அதுவும், உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இருக்காது. ஆனால், தற்போதுள்ள நிலையே வேறு மாதிரியாக உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு விலை இருக்கிறது.

 

இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் பொதுச்செயலர் மோகன் கூறியதாவது: சில வருடங்களுக்கு முன், ஒரு பொருளின் விலையை அது உற்பத்தியாகும் சந்தை தான் தீர்மானிக்கும். உற்பத்தியாகின்ற இடத்திலும், அது சுற்றியுள்ள இடங்களிலும் அந்த பொருளின் விலை குறைவாக இருக்கும். ஆனால், தற்போது அந்த நடைமுறை வழக்கத்தில் இல்லை. மக்களின் தேவைக்கேற்ப உணவுப் பொருட்களின் உற்பத்தி அளவு இல்லை. இதனால் உணவுப் பொருட்களின் தேவை திடீரென்று கூடுவதால், மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. முன் கூட்டியே உணவுப் பொருளை சேமித்து வைக்க வேண்டும். மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருள்களில், மத்திய அரசின் பொருளாதார கொள்கை தவறாக உள்ளது. நம் நாட்டு உணவுக் கொள்கையை, அயல் நாட்டோடு ஒப்பிடக் கூடாது. இங்குள்ள தேவைகளை பூர்த்தி செய்யாமல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இதனால் இங்கு தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விலையும் கூடுகிறது. கடந்த காலங்களில் அரசு வரி விதிக்கும் போது, உணவுப் பொருள்களுக்கு வரி விலக்கு அளித்து வந்தது. ஆனால், கடந்த 2004ல் மத்திய அரசு அமல்படுத்திய மதிப்பு கூட்டு வரியிலிருந்து, இப்பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவது இல்லை.

 

விண்ணைத் தொடும் இன்றைய விலைவாசி உயர்வுக்கு, “ஆன்-லைன்’ வர்த்தகமே முக்கிய காரணம். ஆன்-லைன் வர்த்தகம் என்றழைக்கப்படும் முன்பேர வர்த்தகத்தில், மொத்தம் 83 பொருட்கள் உள்ளன. இந்த ஆன்-லைன் வர்த்தகத்தில் 23 நிறுவனங்கள் இருந்தாலும், ஆறு பெரிய நிறுவனங்கள் தான் விலைகளை தீர்மானிக்கின்றன. இது, மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்த வர்த்தகத்தின் கீழ், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, 51 லட்சத்து 74 ஆயிரத்து 274 கோடி ரூபாய் அளவுக்கு வேளாண்மை பொருட்களின் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்தியாவில் பருப்பு விலையை மகராஷ்டிராவை சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட குழு தான் ஆன்-லைன் வர்த்தகத்தின் மூலம் நிர்ணயிக்கின்றனர். பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில், இவர்கள் விலையை கூட்டி விற்கின்றனர்.

 

தற்போது நாம் அதிகம் உபயோகப்படுத்தும் சோப்பு, ஷாம்பு, பவுடர் உள்ளிட்ட பொருட்களை பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்கள் தான் தயாரிக்கின்றன. இப்பொருட்கள் விலையில் 90 சதவீதம் விலைக் கட்டுப்பாடு இல்லை. மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக தலையிட வேண்டும்.

 

விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு, அதிகாரிகளோடு மட்டும் கலந்தாலோசிக்காமல் வேளாண் தொழிலாளர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் கொண்ட குழுவை ஏற்படுத்திட வேண்டும். நாட்டில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு தான் ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டும். ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்தாலே, பாதியளவு உணவுப் பொருளின் விலை குறைய வாய்ப்புண்டு, என்றார்.

 

சுதந்திரம் அடைந்ததும், இந்திய அரசு முதன்முதலில் எடுத்து கொண்ட முக்கிய நிகழ்வுகளில் ஒன்று வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாகும். வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமல், இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிகரற்ற நிலையை அடைய வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. ஆனால், தற்போதைய உணவு அமைச்சர், உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுடன், உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்கும் நடவடிக்கையில் இறங்க தயங்குவதற்கான காரணம் என்ன என்பது பொதுமக்களின் கேள்வி.

***********************************************

எந்தக் கட்சி எதிர்க்கட்சியாக வந்தாலும் ஆளும்கட்சியை எதிர்க்க விலைவாசி உயர்வைத்தான் பயன்படுத்துகின்றன. அதேநேரம் எந்தக்கட்சி ஆளும்கட்சியாக வந்தாலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எதையும் செய்வதில்லை. ஆன்லைன் வியாபாரத்தை ஒழித்துக்கட்டினாலே விலைவாசி குறைந்துவிடும். இந்தச் செய்தியில் குறிப்பிடப்படும் 51 லட்சத்து 74 ஆயிரம் கோடியும் (எத்தனை பூச்சியம் என்று போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்) பொருளை வாங்கி விற்றதனால் கிடைத்த மதிப்பல்ல. வெறுமனே கணிணி முன்னால் அமர்ந்து பேரம் பேசியதன் விளைவால் உயர்ந்த விலையின் மதிப்பு. கோடிக்கணக்கான மக்கள் வாழ வழி தெரியாமல் பட்டினியால் வதங்கிக்கொண்டிருக்கையில், ஏன் ஆன்லைன் வியாபாரத்தை ஒழிக்கக்கூடாது. ஆனால் எந்தக் கட்சியும் அதைச் செய்யாது, ஏனென்றால் அது உலக வங்கியின் கட்டளை. இப்போது சொல்லுங்கள் நீங்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தவர்கள் உங்களை ஆள்கிறார்களா? அல்லது உலக வங்கி போன்ற பன்னாட்டு நிதியங்களின் பின்னாலிருந்து ஆட்டும் முதலாளிகள் உங்களை ஆள்கிறார்களா?

ஈழத்தமிழர்களின் தேவை என்ன? கிருஷ்ணா செய்தது என்ன?

28 நவ்

இலங்கை சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகத்தை நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்திற்கும், யாழ்ப்பாண தீபகற்பகத்திற்கும் இடையிலான கலாச்சார, மொழி, பொருளாதார அடிப்படையிலான நீண்ட, நெடிய பாரம்பரிய உறவு புதுப்பிக்கப்பட வேண்டும். அதில் இந்தியா ஆர்வமாக உள்ளது.

பல ஆயிரமாண்டுகளாகவே இந்த உறவு நீடித்து செழித்து ஓங்கி இருந்தது. தமிழர் காவியமான மணிமேகலையில் யாழ்ப்பாணத்து தமிழறிஞர்கள் குறித்து புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. தமிழ இலக்கியத்திற்கு ஆறுமுக நாவலரும், சி.டபிள்யூ தாமோதரம்பிள்ளையும் ஆற்றிய சேவை மகத்தானது.

தமிழ் வளர்ச்சி போக, மதம் மற்றும் வியாபார ரீதியிலான உறவும் யாழ்ப்பாணத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே செழித்தோங்கி இருந்தது.

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள துணைத் தூதரகம், இந்திய மற்றும் யாழ்ப்பாண மக்களுக்கிடையே நேரடி உறவுகளையும், தொடர்புகளையும் அதிகரிக்க உதவும்.

விரைவில், ராமேஸ்வரத்திற்கும், தலைமன்னாருக்கும் இடையே படகுச் சேவை தொடங்கவுள்ளது. அதேபோல இலங்கையில், மடு பகுதி வழியாக தலைமன்னார் துறைமுகத்திற்கும், மடவச்சியாவுக்கும் இடையே இந்திய அரசு சார்பில் ரயில் பாதை அமைத்துத்தரப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை இலங்கை அரசு சீரமைத்து அதை சிவில் விமான நிலையமாக மாற்றும் என்று நம்புகிறோம். இதன் மூலம் பலாலிக்கும், திருச்சிக்கும் இடையே விமான சேவையை தொடங்க முடியும்.

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்பது முக்கியமானது. இதற்காக இங்குள்ளவர்கள் நீண்ட காலமாக காத்துள்ளனர். இதில் இந்தியாவின் பங்கை அறியவும் அவர்கள் ஆர்வமாக உள்ளனர். இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது. இதன் மூலம் அர்த்தப்பூர்வமான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றார் கிருஷ்ணா.

முன்னதாக 1000 தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை கிருஷ்ணா தொடங்கி வைத்தார். அதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். அரியாலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

அப்போது ஆங்கிலத்தை விட்டு விட்டு கன்னடம் கலந்த தமிழில் பேசினார் கிருஷ்ணா. அவர் கூறுகையில், இந்த வீடுகளில் நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வதை காண நாங்கள் ஆர்வமாக உள்ளோம். உங்களது குழந்தைகளை நீங்கள் நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார். பின்னர் யாழ்ப்பாணம் விவசாயிகள் சங்கத்திற்கு 500 டிராக்டர்களை அவர் வழங்கினார்.

*******************************************************

சொந்த நாட்டில் அகதிகளைப் போல முட்கம்பி வேலிகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் இன்னமும் சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை. தமிழர்களின் நிலங்களையும், வீடுகளையும் சிங்களவர்களும், இராணுவமும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுவோம் இதை யாரும் தடுக்கமுடியாது என கொக்கரிக்கிறார் ராஜபக்சே. இவைகளுக்கிடையில் தமிழர்களுக்கான மேம்பாட்டுப்பணிகளை விரைவுபடுத்துவதற்கு செல்வதாக கூறிக்கொண்டு சென்ற கிருஷ்ணா வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். ரயில் பாதை அமைப்பது, நீர்வழிப்போக்குவரத்து தொடங்குவது, மின்நிலையம் அமைப்பது போன்ற உள்கட்டுமான விசயங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்.

முதலாளிகளுக்கான ஒப்பந்தங்களைப் போட்டு அவர்களுக்கு லாபத்தை உறுதி செய்வதுதான் கிருஷ்ணா பயணத்தின் நோக்கமேயன்றி, தமிழர்களுக்கான மேம்பட்டை உறுதிப்படுத்துவதல்ல. விடுதலைப் புலிகளை காரணம் காட்டி தமிழர்களை இனவழிப்பு செய்ததன் நோக்கமும் அதுதான். அது மீண்டுமொரு முறை அம்பலப்பட்டிருக்கிறது கிருஷ்ணா மூலம்.

பீகார் தேர்தல் முடிவும் ஜனநாயகமும்

27 நவ்

பீகார் மாநிலத்தின் முதல்வராக 2வதுமுறையாக இன்று நிதிஷ் குமார் பதவியேற்றார். துணை முதல்வராக பாஜகவின் சுஷில் குமார் மோடி பதவியேற்றார்.

பீகார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி. இக்கூட்டணி 2வது முறையாக இன்று பொறுப்பேற்றது.

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

துணை முதல்வராக சுஷில் குமார் மோடி பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் அத்வானி, நிதின் கத்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பீகார் எம்.எல்.ஏ.க்களில் 34 பேர் பெண்கள்:

இம்முறை சட்டசபைக்குத் தேர்வான 243 எம்.எல்.ஏக்களில் 34 பேர் பெண்கள் ஆவர். இதில் 24 பேர் ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணியைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேர்தலில் மொத்தம் 90 பெண்கள் போட்டியிட்டனர்.

அதே போல தேர்வான 243 எம்.எல்ஏ.க்களில் 141 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று நேசனல் எலக்சன் வாட்ச் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் 85 எம்எல்ஏக்கள் மீது கொலை, கொள்ளை கற்பழிப்பு, ஆள் கடத்தல், பணமோசடி போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

*******************************************************

நிதீஷ் குமார் வெற்றியின் பின்னிருக்கும் ஜனநாயக கேலிக்கூத்துகளை பற்றி விரிவாக அறிந்துகொள்ள இந்த கட்டுரையை படியுங்கள்

பீகார் : நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்

நெல்லை தென்காசி அகல ரயில் பாதையில் ஆழமாகும் ஊழல்

27 நவ்

Front page news and headlines today

நெல்லை-தென்காசி அகல ரயில் பாதை பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை-தென்காசி அகல ரயில் பாதை பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்கு பலகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணிகள் தாமதமாக நடப்பதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே ரயில் பாதை அமைக்கும் பணிகளில் சில முறைகேடுகள் நடப்பதாக ரயில்வே லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இதனையடுத்து சென்னையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் முதல் நெல்லை சந்திப்பிலுள்ள ரயில்வே கட்டுமானப் பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை நேற்றிரவு வரை நீடித்தது. இதில் பணிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக பொறியாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடந்தது. மேலும் இதற்காக செலவிடப்பட்ட கணக்கு விபரங்களை சேகரித்தனர். மேலும், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

**********************************************************

மக்களுக்காகவே நாங்கள் திட்டங்கள் தீட்டுகிறோம், செயல்படுகிறோம் என்று அரசியல்வியாதிகள் அனைவரும் முழங்குகிறார்கள். ஆனால் அவர்கள் திட்டமிடுவது செயல்படுத்துவது எல்லாம் ஊழலுக்காவே. அதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு இது.