தொகுப்பு | நவம்பர், 2011

சஹாபாக்கள் மீது சந்தேகமும் வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

29 நவ்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 14

 

Tabaqat, 8:101-102

Sulaiman Ibn Harb narrated, quoting Hammad Ibn Zaid, quoting Ayyub Ibn Abi Qulaba that Anas said, “I know about this verse, ‘the verse of the curtain’, more than anyone else. When Zainab was given to the Messenger of God, he held a banquet on the night he married Zainab, invited the people and served them a meal. He wished that they leave afterward, because his mind was set on his bride. He stood up to let them know he wanted to leave, so some left. He stood up once more, but some stayed. He stood up a third time, and then they all left. So he entered his house [where the bride was] and Anas followed him, but he prevented him [from coming in] by letting down the curtain and said

 

ஹிஜாப் (கோஷா) முறை அமலக்கப்பட்ட நிகழ்சி

தன்னுடைய வளர்ப்பு மகனின் மனைவி (மருமகள்) ஜைனப்  யை ஒருவழியாக திருமணம் செய்த பிறகு அவருடன் தாம்பத்திய வாழ்கையைத் துவங்குவதன் அடையாளமாக ஒரு விருந்து முஹம்மது நபி  அவர்களால், இரவு நேரத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. விருந்தில் உணவு தயாராவதற்கு முன்பே வந்து விட்ட சஹாபாக்கள் (நபித்தோழர்கள்)விருந்து முடிந்த பிறகும் செல்லாமல் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டும் போவதும் வருவதுமாக  முஹம்மது நபி  அவர்களின் “நிலைமை” புரியாமல் நடந்து கொள்கின்றனர். அவர்களை போகச் சொல்லும் விதமாக எழுந்து நிற்கிறார். சிலர் சென்று விடுகின்றனர் சிலர் அமர்ந்து விடுகின்றனர். பொறுமை இழந்த முஹம்மது நபி  அவர்கள் மூன்றாம் முறையாக இறுதில் எழுந்து நிற்கிறார் சஹாபாக்களும் (நபித்தோழர்கள்) கலைந்து சென்று விடுகின்றனர்.

புகாரி ஹதீஸ் :  4791         

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனைப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு பேசிக்கொண்டே அமர்ந்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து போகத் தயாராயிருப்பது போல் (பலமுறை) காட்டினார்கள். ஆனால், மக்கள் எழுந்திருக்கவில்லை.அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்துவிட்டார்கள்….

அவர் மணமகள் (மருமகள்?) இருக்கும் அறையை நோக்கிச் செல்கிறார். அனஸ்  அவரை பின் தொடர்து செல்கிறார். ஆனால் திரையிட்டு அவரை (அனஸ் வீட்டினுள் செல்வதை) தடை செய்கிறார்.

 

புகாரி ஹதீஸ் ஹதீஸ் :  4791                                                                

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

…அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்துவிட்டனர். ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்களிடம்) செல்லப் போனார்கள். அப்போதும் அவர்கள் அமர்ந்து(கொண்டு பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள். நான் உடனே உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என்று தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். நானும் அவர்களுடன் உள்ளே செல்லப் போனேன். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள். அப்போது தான் அல்லாஹ் இறை நம்பிக்கை கொண்டவர்களே நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள் என்று தொடங்கும் இந்த (33-53 ஆவது) வசனத்தை அருளினான்.

இவைகளை கண்ட அல்லாஹ்வால் அமைதியாய் இருக்க முடியவில்லை. உடனே வஹியை இறக்கி விட்டான்.

முஃமீன்களே உணவுக்காக உங்களுக்கு அறிவிக்கப்படாதவரை-அதன் தயாரிப்பை எதிர்பார்த்தவர்களாக- நபியுடைய வீடுகளில் நீங்கள் பிரவேசிக்க வேண்டாம்; எனினும் நீங்கள் (உண்பதற்கு) அழைக்கப்பட்டால் அப்பொழுது பிரவேசியுங்கள். பிறகு உணவு அருந்தி முடிந்ததும் பேசுவதில் ஈடுபடாதவர்களாக களைந்து சென்றுவிடுங்கள்; நிச்சயமாக அது நபிக்கு நோவினை செய்வதாக இருக்கிறது (எனினும்) உங்களிடம் (அதனைச்) சொல்ல வெட்கப்படுகிறார்; அல்லாஹ்வோ உண்மையைச் சொல்ல வெட்கப்படமாட்டான்.…

( குர் ஆன் 33.53)

 அல்லாஹ்வின் வஹி எவ்வளவு விளையாட்டாக இருந்திருக்கிறது. இந்த வசனம் முஹம்மது நபி  அவர்களின் வஹீ விளையாடலுக்கு  ஒரு உதாரணம்மேலும் இவ்வசனத்தின் இறுதிப்பகுதி முற்றிலும் வேறொரு செய்தியை கூறுகிறது அதாவது அனஸ் வீட்டினுள் செல்வதை திரையிட்டு தடுக்கப்பட்டதன் காரணம்,

…(நபியின் மனைவியர்களாகிய) அவர்களிடம் ஏதேனும் ஒரு பொருளை நீங்கள் கேட்பதானால் திரைக்கு பின்னாலிருந்து அவர்களிடம் கேளுங்கள். அது உங்களுடைய உள்ளங்களுக்கும் அவர்களுடைய உள்ளங்களுக்கும் பரிசுத்தமானதாகும். அல்லாஹ் உடைய ரசூலை நீங்கள் நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அவருக்குப் பின் எப்பொழுதுமே அவருடைய மனைவியரை நீங்கள் மணம் செய்து கொள்வதும் கூடாது- நிச்சயமாக அது அல்லாஹ் விடத்தில் (பாவத்தால்) மகத்தானது ஆகும்.

( குர் ஆன் 33.53)

புகாரி ஹதீஸ் : பாகம் 7, எண் : 7421

அனஸ் இப்னு மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது.

பர்தா தொடர்பான வசனம் ஜஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் விஷயத்தில்தான் அருளப் பெற்றது. அன்று நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்ததற்காக (வலீமா விருந்தாக) ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தார்கள்…

மேற்கண்டவசனத்தின் இறுதிப்பகுதி நபியின் மனநிலையை தெளிவாக உணர்த்துகிறது. அதாவது ஜைதை காணச் சென்ற பொழுது திரை விலகியதாலே மருகளான ஜைனப்பின் மீது காமம் பிறந்தது. அதே முறையில், வேறு ஒருவர் தன் மனைவியர்களையும் கவர்ந்து சென்று விடக்கூடாது என்ற நபியின் கவலையை அல்லாஹ் வஹியின் முலம் சரிசெய்தான்.

சரி…ஜைத் என்ன ஆனார்?

முஹம்மது ஜைனப் திருமணம் நிகழ்ந்த அதே ஆண்டு, கிபி 629 ல் சுமார் 3000 பேர் கொண்ட சிறிய படையை முத்தா என்ற  (தற்பொழுதைய ஜோர்டான்) பகுதிக்கு, சுமார் 200000 படை வீரர்களைக் கொண்ட மிகப் பெரும் ரோமானியப்படையை எதிர்கொள்ள அனுப்பினார். போரில் கொடியை பிடித்து படையை வழி நடத்தும் பொறுப்பை ஜைத்திடம் ஒப்படைத்திருந்தார். முஸ்லீம்கள் தோல்வியடைந்த அப்போரில் முதலில் கொல்லப்பட்டவர்களில் ஜைத்தும் ஒருவர்.

 

வன்புணர்ச்சியும் வேதவெளிப்பாடும்

முஹம்மது நபியும் அவரது படையினரும் பல போர்களை சந்தித்தவர்கள். இவற்றில் ஓரிரு போர்களைத் தவிர மற்றவையெல்லாம் முஹம்மது நபியால் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான திடீர் தாக்குதல்களே. ஒவ்வொரு போரின் முடிவிலும் பெருமளவு பெண்களும், குழந்தைகளும், ஆண்களும் போர்கைதிகளாக கருதப்பட்டு முஸ்லீம்களால் அடிமைகளாக்கப்பட்டனர். இந்த அடிமைகளை போரில் பங்கெடுத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதை முன்பே பார்த்தோம். இந்த அடிமைகளுக்கு சில அடிப்படை உரிமைகள் மட்டுமே வழங்கப்பட்டது. சுதந்திரமான  மனிதர்களைப் போல வாழ அடிமைகளுக்கு எவ்வித உரிமைகளும் வழங்கப்படவில்லை.

ஆண் அடிமைகள் கடுமையான உடல் உழைப்பிற்காக பயன்படுத்தப்பட்டனர். பெண் அடிமைகள் வீட்டு வேலைகளுக்கும்,  அவர்களது ஆண் எஜமானர்களின் உடல் தேவைகளுக்கும் பயன் படுத்தப்பட்டனர்.  பலர் தங்களது அடிமைப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியும் பொருளீட்டினர். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியும் பொருளீட்டுவதை முஹம்மது நபி தடைசெய்தார். இந்த அடிமைகளை பிறருக்கு இரவல் தருவதும், விற்பனை செய்வதும் அல்லது சுதந்திரமாக விடுதலை செய்வதும் எஜமானரின் உரிமைகளாகும்.  சுருக்கமாகச் சொல்வதென்றால், அடிமைகளென்பவர்கள் பேசவும், சிந்திக்கவும் தெரிந்த கால்நடைகள்.

இத்தகைய அடிமைப் பெண்களையே குர்ஆன், “(போரில்) உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்” என்று குறிப்பிடுகிறது.  இஸ்லாமியர்களுக்கு நான்கு மனைவிகளை மட்டுமே அனுமதித்த அல்லாஹ், இந்த அடிமைப் பெண்களின் விஷயத்தில் எந்த விதமான எண்ணிக்கை எல்லைகளையும் விதிக்கவில்லை. அடைப்புக்குறிகளுக்குள் “போரில்” என்று சொல் இருப்பதால் அடிமைகளைப் போர்கள் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்பதில்லை. விலை கொடுத்தும், பரிசுப் பொருளாகவும் அடிமைகளைப் பெறலாம்.  “(போரில்)”  மொழிபெயர்ப்பாளர்களின் இடைச்சொருகல். “உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்” என்ற வார்த்தையின் உண்மைப் பொருளை மாற்ற அவர்கள் கையாளும் தந்திரம்.

“உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்” என்பதை நேரடியாகக் கூறுவதென்றால் அடிமைகள். அவர்களை எஜமானர்கள் தங்களது இச்சைகளுக்கு விருப்பம் போல உபயோகப்படுத்தலாம். எகிப்திய ஆளுனரால் முஹம்மது நபிக்கு பரிசாக வழங்கப்பட்ட மரியத்துல் கிப்தியாவும் ஓர் அடிமையே. அடிமைகளுடன் விருப்பம் போல கூடி அதன் மூலம் நிறைய அடிமைகளை உற்பத்தி செய்து கொள்ளவும் அல்லாஹ் அனுமதிக்கிறான். இதன் விளக்கங்கள் சிலவற்றை மட்டும் காணலாம்.

விபச்சாரி-விபச்சாரகன் இருவருமே தங்களது செயலை நன்கு அறிவார்கள். விபச்சாரகன், ஏதோ ஒரு காரணத்திற்காக உடலை விற்கும் விபச்சாரியின் முழு சம்மததத்துடன்தான் அவளது இறைச்சியை சுவைக்கின்றான். இப்படி இருவரின் சம்மதத்துடனே நடக்கும் உறவு அல்லாஹ்விடத்தில் கடுமையான தண்டனைக்குரியது.

பனூ முஸ்தலிக் போரில் முஹம்மது நபி  அவர்களின் படையினர், போர்கைதிகளாக எதிரிகளை பிடிக்கின்றனர்.

புகாரி ஹதீஸ் -4138

இப்னு முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைப் பார்த்தேன். அவர்களிடம் (சென்று) அமர்ந்து கொண்டு அஸ்ல் பற்றிக் கேட்டேன். அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (ரலி) குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம். ஏனெனில்) எங்கள் மனைவியரைப் பிரிந்து (தனிமையில் இருந்தது எங்களை வாட்டியது. (அந்த பெண்களுடன் உடலுறவு கொள்ளும் போது) அஸ்ல் (சிற்றின்பப் புணர்ச்சி இடைமுறிப்பு) செய்ய நினைத்தோம் (ஆனால்) நம்மிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்க அவர்களிடம் கேட்பதற்கு முன் நாம் அஸ்ல் செய்வதா என்று எங்களுக்குள்) பேசிக் கொண்டு அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டோம். அதற்கு நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்

 (புகாரி 5210,4138,2229,2542)

Sahih Muslim Book 008, Number 3371:

Abu Sirma said to Abu Sa’id al Khadri (Allah he pleased with him): O Abu Sa’id, did you hear Allah’s Messenger (may peace be upon him) mentioning al-‘azl? He said: Yes, and added: We went out with Allah’s Messenger (may peace be upon him) on the expedition to the Bi’l-Mustaliq and took captive some excellent Arab women; and we desired them, for we were suffering from the absence of our wives, (but at the same time) we also desired ransom for them. So we decided to have sexual intercourse with them but by observing ‘azl (Withdrawing the male sexual organ before emission of semen to avoid-conception). But we said: We are doing an act whereas Allah’s Messenger is amongst us; why not ask him? So we asked Allah’s Messenger (may peace be upon him), and he said: It does not matter if you do not do it, for every soul that is to be born up to the Day of Resurrection will be born.

நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது போர்க் கைதிகளில் மிகச்சிறந்த (அழகிய) அரபு பெண்கள் சிலர் கிடைத்தனர். எங்கள் மனைவியரைப் பிரிந்து தனிமையில் இருந்தது எங்களை வாட்டியதால், அந்த பெண்களுடன் உடலுறவு கொள்ள விரும்பினோம்.  அப்பெண்களிடமிருந்து (அவர்களுடைய) விடுதலைக்கான  தொகையையும் பெற விரும்பியதால் ‘அஸ்ல்’ (சிற்றின்பப் புணர்ச்சி இடைமுறிப்பு) செய்ய நினைத்தோம். ஆனால்) நம்மிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்க அவர்களிடம் கேட்பதற்கு முன் நாம் அஸ்ல் செய்வதா என்று (எங்களுக்குள் பேசிக் கொண்டு அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டோம். அதற்கு நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்).

 

அஸ்ல் செய்ய விரும்பியதன் காரணங்களில் ஒன்றை இந்த ஹதீஸ் விளக்குகிறது. சஹாபக்களின் வெறித்தனத்தால் அப்பாவி பெண்கைதிகள் கருவுற்றால், அடிமைச்சந்தையில் ஆதரவற்ற அந்த பெண்களை நல்ல விலைக்கு விற்க முடியாது என்பது மற்றொரு காரணம்.

 புஹாரி ஹதீஸ்       : 6603         

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக் கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது (புணர்ச்சி இடைமுறிப்பு) அஸ்ல் செய்து கொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்படியா செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்கள் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாக்கியே தீரும் என்று பதிலளித்தார்கள்.

இத்தகைய உடலுறவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு புனிதமான(?) காரணம், சஹாபாக்கள், நீண்ட காலங்களாக தங்களது மனைவியர்களைப் பிரிந்து இருந்தனர். எனவே அவர்களால் இச்சையை கட்டுப்படுத்த முடியவில்லை. தனது அடியர்களான  சஹாபாக்களின் “…”தேவையறிந்த  அல்லாஹ்(!), பெண் போர்க் கைதிகளின்“ சூறையாடும் அனுமதிகளை வஹீயாக இறக்கினான். (அல்லாஹ்விற்கு(!) இது ரொம்ப முக்கியம்) அல்லாஹ்வே பரிதாபப்பட்டு தான் கூறிய ஒழுக்கநெறிகளை மீறிய அனுமதியாக வஹீ இறக்குமளவிற்கு நபி (ஸல்) அவர்கள் உட்பட சஹாபாக்கள் அனைவருமே, பெண்களின் வாடையைக் காணமல்காய்ந்துபோயிருந்தனரா?

சஹாபாக்கள் வருடக்கணக்கில் தங்களது மனைவியரைப் பிரிந்திருந்தனரா?

        இல்லை…! நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்களின்படி நபிகளாரின் காலத்தில், சில வாரங்களுக்கு மேல் எந்த ஒரு போரும் நீடிக்கவில்லை (இது நீஈஈஈ…ண்ட காலமாம் …!). ஒருவேளை நீடித்திருந்தாலும் ஆண்களை விட அறிவிலும், வலிமையிலும் பலவீனமானவர்கள் என திருக்குர்ஆன் வர்ணணை செய்யும் பெண்களை அதாவது பெண் போர்க்கைதிகளையும் அவர்களது பெண் குழந்தைகளையும் வேட்டையாடுவது முறையானதா?

        மேற்கண்ட ஹதீஸ்கள் அஸ்ல் (Coitus interruption- புணர்ச்சி இடைமுறிப்பு) செய்வதை தவிற்பது பற்றி மட்டுமே விளக்குகிறது. போரில் அடிமைகளாகக் கைப்பற்றப்பட்ட பெண்களுடன் புணர்ச்சியில் ஈடுபட முஹம்மது நபி  அவர்களும் தடையேதும் விதிக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.  தனது மருமகன் அலீயின் லீலைகளை, முஹம்மது நபி  ஆதரிப்பதைப் பாருங்கள்.

புஹாரி ஹதீஸ் : 4350        

புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம் குமுஸ் நிதியைப் பெற்றுவர அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ (ரலி) அவர்கள் (போர்ச் செல்வத்தில் தமக்கென எடுத்துக் கொண்ட அடிமைப் பெண்ணுடன் உறவு கொண்ட பின்) குளித்து விட்டு வந்தார்கள். அவர்கள் மீது நான் கோபமடைந்து, காலிதிடம், இவரை நீங்கள் பார்க்க மாட்டீர்களா என்று கேட்டேன். நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற போது, நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அதற்கு அவர்கள், புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா என்று கேட்க நான், ஆம்! என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், அவர் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு குமுஸ் நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது என்று சொன்னார்கள்.

 

முஹம்மது நபியோ அல்லது சஹாபாக்களோ பெண் கைதிகளுடன் உறவில் ஈடுபடுவதற்கு அந்த கைதிகள் சம்மதித்தனர் என்று எப்படிச் சொல்ல முடியும்?

 

இந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்,

அக்காலத்தில் கைதிகளை அடைத்து வைக்க சிறைச்சாலைகள் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே கைதிகள் விலங்கிடப்பட்டு திறந்தவெளிகளில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் பனூகுறைழாவில் நிறுத்தி வைக்கப்பட்டதைப் போல ஆண்களையும், பெண்களையும் தனித்தனியே நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.

            போரில் கைப்பற்றப்பட்ட எதிரிகளின் பெண்கள் நிலையை சற்று கவனிப்போம். அப்பெண்களின் பாதுகாவலர்களாக இருக்கும் ஆண்கள் தந்தை, கணவன், சகோதரர்கள், மகன்கள் அல்லது உறவினர்கள் போர்களத்தில் கொல்லப்படுகிறார்கள். அல்லது அவளது கணவன் கைதியாக செயலற்றுப்போய் பரிதாபமாக நிற்கிறான். பெண்கைதிகள் பங்குவைத்து பிரிக்கப்பட்டு அவரவர் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறார்கள். உடனே அப்பெண்கைதிகள், ஆஹா…! எங்களுக்கு புதிய உடலுறவுத் துணை கிடைத்து விட்டது இதற்காகத்தன் நாங்கள் இத்தனை நாள் ஏங்கிக் காத்திருந்தோம் என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துச் செல்வார்களா? அல்லது இது அல்லாஹ்வின் தீர்ப்பு எனக்கூறி ஆடைகளை அவிழ்த்து தயாராக நிற்பாளா?

            இது பெண்ணாகப் பிறந்ததின் இழிநிலை. நிச்சயமாக எந்தப் பெண்ணும் இந்த நிலையை கற்பனை செய்வதைக் கூட விரும்பமாட்டாள் நிச்சயமாக முஹம்மது நபி மற்றும் அவரது படையினரின் நடவடிக்கைகளுக்கு உடன்பட்டிருக்க மாட்டார்கள். தங்களால் முடிந்த எதிர்ப்பை ஏதாவது ஒரு வழியில் வெளிக் காட்டியிருக்க வேண்டும்

                தங்களது கண்முன்னே வல்லுறவுக்காக இழுத்துச் செல்லப்படும் தனது தாயையோ, மனைவியையோ, மகளையோ சகோதரியையோ காணும் ஒரு பெண் அல்லது ஆண் எப்படி எந்த நிலையிலிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

                பெண் கைதிகள்  “அதற்கு”  சம்மதித்திருப்பார்களா? அவர்கள் இணங்கவில்லையென்றால்?

கொடூரமான வன்கலவிக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்…!

இல்லையென்று மறுக்கின்றனர் இஸ்லாமிய அறிஞர்கள். அதாவது ஹதீஸ்களில் பெண் கைதிகளுடன் உடலுறவு கொண்டதாகவே கூறப்பட்டுள்ளது. கற்பழிக்கப்பட்டதாக கூறப்படவேயில்லை.  எனவே அவர்கள் கற்பழிக்கப்படவில்லை என்று விளக்கமளிக்கின்றனர்.

விபச்சாரியின் சம்மதத்துடன் நிகழும் உடலுறவை முறையற்றது என தடைசெய்த அல்லாஹ், எப்படி இந்த சம்மதமின்றி நிகழும் உடலுறவை அனுமதித்திருக்க முடியும்? வாதத்திற்காக, அவர்கள் சம்மதித்திருந்தாலும் அது விபச்சாரம்தானே?

கள்ளத்தொடர்பு என்பது தங்களது துணைவர்களுக்கு தெரியாமல், நம்பிக்கை துரோகம் செய்து காதல் கொண்டு இணைவதாகும். ஆனாலும் சம்பந்தப்பட்ட இருவரின் முழு ஒப்புதலோடுதான் கள்ளத் தொடர்புகள் அரங்கேறுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. அல்லாஹ் இதைக் கடுமையான தண்டனைக்குரிய குற்றமென்கிறான். திருக்குர் ஆனின் பல பகுதிகளிலும், ஹதீஸ்களிலும் இந்த கள்ளத்தொடர்பை வன்மையாக கண்டிக்கும் வசனங்களைக் காணலாம்.

பாதிப்பிற்குட்பட்ட அப்பெண்களின் நிலையில் தங்கள் அன்புக்குரிய தாயை, மனைவியயை, மகளை, சகோதரியை அல்லது தங்களின் நெருக்கமான உறவுவழி பெண்களை ஒரு நிமிடம்  கற்பனை செய்து பார்த்தால், சூழ்நிலையின் கொடூரம், மறுப்பவர்களுக்கு விளங்கும்.

                தங்களின் வாழ்க்கையை உருத்தெரியாமல் அழித்தவர்கள் அழைத்தவுடன் எந்த பெண்ணால் படுக்கையில் தயார் நிலையில் இருக்க முடியும்? அந்தப் பெண்கள் அதற்கு இணங்கியிருப்பார்களா? அப்பெண்கள் உடலுறவு கொள்ளப்பட்டதாக ஹதீஸ்கள் கூறுகின்றது.

முஹம்மது நபி மற்றும் அவரது  படையினரின் இச்செயலை என்னவென்று அழைக்க முடியும்?

வன்கலவி…!  கற்பழிப்பு…!       மிருகங்கள் கூட இது போன்ற ஈனத்தனமான செயலைச் செய்வதில்லை.

இஸ்லாமிய ஷரியத்தின்படி விபச்சார குற்றத்திற்கே கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் பொழுது கற்பழிப்பை எப்படி அனுமதித்திருப்பார்கள்?

கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையை குர்ஆனிலிருந்து கூறமுடியுமா?

நிச்சயமாக முடியாது … !

முழு குர்ஆனிலும் அப்படி ஒருவார்த்தையே கிடையாது. பெண்களுக்கு இழைக்கப்படும் இக்கொடூரத்தை அல்லாஹ் அறியவில்லையா? அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட செயலா?

கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையை, புஹாரி, முஸ்லீம் போன்ற மிக நம்பகமான ஹதீஸ்களிலிருந்தேனும் காண்பிக்க முடியுமா?

நிச்சயமாக எவனாலும் முடியாது …!

ஏன்…?

மேலும் சில குர்ஆன் வசனங்களையும் அதன் பின்னணி ஹதீஸ்களையும் காண்போம்

வலக்கரங்கள்சொந்தமாக்கிக்கொண்டவர்கள்

            முஹம்மது நபி அவர்களின் படையினரால் போரில் கைப்பற்றப்படுவதற்கு முன்பு வரை முன்பு வரை சுதந்திரமாக வாழ்ந்தவர்கள்.  அவரவர்களின் கலாச்சாரத்திற்கேற்ப கற்பு நெறியை பின்பற்றி வாழ்ந்தவர்கள்.  நிச்சயமாக அற்ப தேவைகளுக்காக உடலை விற்கும் கீழ்த்தரமானவர்கள் அல்லர்.

முஹம்மது நபிக்கு வழங்கப்பட்ட அனுமதி,

நபியே (பெண்களில்) எவருக்கு மஹர்ளைக் கொடுத்திருக்கிறீரோ அத்தகைய உம்முடைய மனைவியரையும், அல்லாஹ் (போரின் மூலம்) உமக்கு கொடுத்தவற்றில் உம்முடைய வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைப் பெண்கள்)…

 (குர்ஆன் 33:50)

மற்றவர்களுக்கும் வழங்கப்பட்ட அனுமதி,

(ஆனால்)  தம் மனைவியர்களிடமும் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும் தவிர; -இவர்களிடம் உறவுகொள்வதில் நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுகிறவர்கள் அல்லர்.

(குர்ஆன் 23:6)

தங்களுடைய மனைவியர்களிடமோ அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர நிச்சயமாக (இப் பெண்கள் விஷயத்தில்) பழிப்புக்குரியவர்களல்லர்.

(குர்ஆன் 70:30)

Sunaan Abu Dawud: Book 11,  number 2150

Abu Said al-Khudri said: “The apostle of Allah sent a military expedition to Awtas on the occasion of the battle of Hunain. They met their enemy and fought with them. They defeated them and took them captives. Some of the Companions of the apostle of Allah were reluctant to have intercourse with the female captives in the presence of their husbands who were unbelievers. So Allah, the Exalted, sent down the Qur’anic verse, “And all married women (are forbidden) unto your save those (captives) whom your right hand possesses”. That is to say, they are lawful for them when they complete their waiting period.”” [The Qur’an verse is 4:24].

Sahih Muslim: Book 008, Number 3432:

Abu Sa’id al-Khudri (Allah her pleased with him) reported that at the Battle of Hanain Allah’s Messenger (may peace be upon him) sent an army to Autas and encountered the enemy and fought with them. Having overcome them and taken them captives, the Companions of Allah’s Messenger (may peace be upon him) seemed to refrain from having intercourse with captive women because of their husbands being polytheists. Then Allah, Most High, sent down regarding that:” And women already married, except those whom your right hands possess (4: 24)

(ஹூனைன் போரில் நபியின் படை வெற்றி பெறுகிறது. போரில் ஈடுபட்ட நபித்தோழர்கள், தங்கள் கைப்பற்றிய பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்கின்றனர். நபித்தோழர்களில் சிலர், அப்பெண்கைதிகள் திருமணமானவர்கள் என்பதாலும், காஃபிர்களான அவர்களின் கணவர்கள் இருப்பதாலும் உடலுறவு கொள்ளத் தயங்குகின்றனர்.  இந்செய்தி நபியிடம் கூறப்பட்டவுடன், அடிமைகளின் திருமணங்களை ரத்து செய்யும் வசனங்களை (குர்ஆன் 4:24) அல்லாஹ் இறக்கினான்)

அன்றியும் பெண்களில் கணவனுள்ளவர்களும் (உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது) -அடிமைப் பெண்களில் உங்களுடைய வலக்கரங்கள் (போரில்) சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர…

                            (குர்ஆன் 4:24)

போர்க்கைதிகளில் தம்பதிகளும் இருந்தனர். சஹாபாக்களில் சிலர் தம்பதிகளை அவர்களது திருமணபந்தத்தை சிதைக்கத் தயங்குகின்றனர் திருமணமானவர்கள் என்பதாலும் அவர்களது கணவர்களின் முன்னிலையிலும் உடலுறவு கொள்ள சஹாபாக்களில் தயங்குகின்றனர். ஆனால் அல்லாஹ்(?),  சஹாபாக்களின் செயலை விரும்பவில்லை.  திருமண உறவைப் வலுக்கட்டாயமாகப் பிரித்து, அப்பெண் கைதிகளின் இறைச்சியை போர்வீரர்களுக்கு விருந்தாக்கினான் எனக்கூறும் திருக்குர் ஆனின் 4:24 வசனத்தின் பின்னணியை மனிதாபிமானமுடையவர்களால் எப்படி ஏற்க இயலும்?  கற்பை பாதுகாக்க பணிக்கும் அல்லாஹ் இப்படி கற்பழிப்பை ஊக்குவிப்பானா? சத்தியமாக இருக்க முடியாது…!

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் நமக்கு அறிவுறுத்திக் கூறுவது என்னவென்றால், மனைவியர்களைப் பிரிந்திருக்கும் நேரத்தில் அற்பமான காமஇச்சையை கட்டுப்டுத்திக் கொள்ளத் தெரியாதவர்கள் அல்லது முடியாதவர்கள் கற்பு என்ற ஒழுக்கத்தில் பேணுதல் செய்கிறாம் என்று சிரமத்திற்குள்ளாகத் தேவையில்லை என்பதுதான். ஒருவேளை ஒழுக்கத்தை மீறினாலும், நெறி தவறி விட்டோமே குற்ற உணர்ச்சியை களைவதற்காக வழங்கப்பட்டது அல்லாஹ்வின் அனுமதி(!) பழிப்பிற்குரியவர்களல்ர் என்ற மாபெரும் அற்புத அனுமதி. (த்ரீயெம் பிரின்டர்ஸ், K.A நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் மொழபெயர்பில் பழிப்பிற்குரியவர்கள் அல்லர்” எனவும் சவுதி வெளியீடு, முஹம்மது இக்பால் மதனி அவர்களின் மொழிபெயர்ப்பில் “நிந்திக்கப்படுபவர்களல்லர்” எனவும் உள்ளது)

                நாம் இங்கு முக்கியமான ஒன்றை கவனிக்கத் தவறுகிறோம் குர்ஆன் 23:5-6, 70:30 காணப்படும் “பழிப்பிற்குரியவர்கள் அல்லர்/ பழிப்பிற்குரியகுற்றமல்ல” என்பதன் உட்பொருள் அன்றைய காலகட்டத்திலும் இது பழிப்பிற்குரிய ஈனத்தனமான செயலாகவே இருந்துள்ளது என்பதுதான். இல்லையெனில் “பழிப்பிற்குரியவர்கள் அல்லர்” என்ற சொல் இடம்பெற வேண்டிய அவசியமில்லை. இத்தகைய பழிப்பிற்குரிய மகாபாவமான செயலைத் தடுக்க வேண்டிய தடுக்க வேண்டிய இறைவனே(!) “பழிப்பிற்குரிய குற்றமல்ல” என்று அனுமதித்தான் என விளக்கம் தரமுனைந்துள்ள இஸ்லாமியர்களின் மனிதாபிமானத்தை நினைத்து வேதனைப்படுகிறேன்.

கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனை குர்ஆனில் இல்லாததற்கான காரணமும் இதுதான்.

இந்த இழிவான செயல்களை இறைவன் அனுமதித்திருப்பானா? நிச்சயமாக ஒரு சராசரி மனிதன் கூட இந்த கேவலமான அனுமதிகளை வழங்கமாட்டான். இது கருணைமிக்கவன் என்று கூறப்படும் இறைவனின் அனுமதிகளாக இருக்க முடியாது. எனவே குர்ஆன் வசனங்கள் முழுவதுமே  முஹம்மது நபியின் கற்பனைகளின் விளைவுதான் என்பது  தெளிவாகிறது.

மிகக் கேவலமான சகிக்க முடியாத செய்தி என்னவென்றால், இன்று புனிதப்போரில் ஈடுபட்டுள்ள ஜிஹாதிகள் வெற்றி பெற்றால் இதைவிட கொடுமையான நிகழ்வுகள் அரங்கேறுவது உறுதி. காரணம் மேற்கூறிய குர்ஆனின் கற்பழிப்பு அனுமதிகள் இன்றும் 100%   செயல்படுத்த அனுமதிக்கப்பட்டவைகள்இதை ரத்து செய்ய எந்த முல்லாவாலும்  இயலாத விஷயம்.

ஒரு இஸ்லாமிய கேள்வி-பதில் தளத்திலிருந்து  “வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்” பற்றிய விளக்கம்.

http://www.binoria.org/q&a/miscellaneous.html#possessions

Question:

What is the meaning of right hand possession and what was the purpose of having them. Some brothers in America think it is okay to have right hand possessions now in the USA.

கேள்வி :

(வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் என்பதன் பொருள் என்ன அவர்களை அடைந்ததற்கான தேவை என்ன. அமெரிக்காவில், வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொள்வது இன்றும் சரியானதே என்று அமெரிக்காவில் இருக்கும் சில சகோதரர்கள் நினைக்கிறார்கள்)

 

Answer: 

Right hand possessions (Malak-ul-Yameen) means slaves and maids, those came in possession of Muslims through war or purchase. After having the possession of slave maid it is lawful and correct to have sexual relation with them. Even today if Muslims get possession over infidel country, this condition is possible, lawful and correct. 

(வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்கள் எனபது அடிமைகளைக்குறிக்கும். அவர்களை போர் அல்லது (பொருள் கொடுத்து) வாங்குவதன் முலம் சொந்தமாக்கிக் கொள்ளலாம். அவர்களை சொந்தமாக்கிக்கொண்டபின்னர் அவர்களுடன் பாலியல்உறவு கொள்வது (ஷரியத்) சட்டபூர்வமாகவும் சரியானதும். இன்றும் கூட காஃபிர் (இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாத) நாடுகளை  வெற்றி கொண்டால், இந்த (சட்ட) நிபந்தனை செயல்படுத்தக் கூடியதாகவும்,  சட்டபூர்வமாகவமானதாகவும்,  சரியானதாகவும் இருக்கிறது)

முஹம்மதை, என்னுடைய தூதராக ஏற்றுக் கொள்ளுங்கள். கொலை புரியவும்,  கொள்ளையடிக்கவும், கற்பழிக்கவும் முழு உரிமையை முஹம்மதிற்கு நாம் வழங்கியுள்ளோம். என்பதே மனிதனுக்கு, அல்லாஹ் கற்பிக்கும் போதனையா?

மாற்று மதத்தினரின் செயல்கள் அல்லாஹ்வை மிகுந்த அவமானப்படுத்திவிட்டது எனவே அவர்களைத் தண்டிக்கவும், அவமானப்படுத்துவதற்காகவும் முஹம்மது நபி கடுமையாக நடந்து கொள்ள அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்டார் என்கின்றனர்.

புஹாரி ஹதீஸ்       :  2926        

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் யூதர்களுடன் போர்புரியாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல் முஸ்லிமே ! இதோ…! என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கின்றான் அவனை நீ கொன்று விடு என்று கூறும்

இந்த அற்பமனிதர்களின் புறக்கணிப்பால் அல்லாஹ், அவமானமடைந்து விட்டான் எனக் கூறுவது, அவனுடைய வல்லமைக்கு இழுக்கு! சர்வவல்லமையுடைய இறைவன் தன்னை அவமானப்படுத்தியவனை கொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அப்படியே அவன், தன்னை இழிவு படுத்தியவர்களை தண்டிக்க விரும்பினால் அற்ப மனிதர்களின் உதவியின்றி நிறைவேற்ற முடியும். உதாரணத்திற்கு, மூளையைச் செயலிழக்கச் செய்யலாம், இதயத் துடிப்பை நிறுத்த முடியும். அல்லது அவன் அளிக்கும் தண்டனையை மற்றவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினால் எல்லேரும் காணும் விதமாக வானில் உயர்த்தி தரையில் வீசி எறிந்து சிதறடிக்கலாம். அது மற்றவர்களுக்கும் பாடமாக அமையும்.

        இரவு நேரத் தாக்குதல்களில் எதிரிகளின் குழந்தைகளும் இறக்கும் அபாயம் உள்ளதே? என்ற நபித்தோழர்  ஒருவரின் அச்சத்திற்கு, முஹம்மது நபி மிகக் கனிவான பதிலைக் கூறி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறார்.

புஹாரி ஹதீஸ்  : 3012       

 ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது.

அப்வா என்னுமிடத்தில் அல்லது வத்தான் என்னுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் நடந்து வந்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இணை வைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே என்று பதிலளித்தார்கள்.…

மாற்று மதத்தினர் இருக்கவே கூடாது என்று அல்லாஹ் விரும்பினால், முஹம்மதுவின் கையில் வாளைக் கொடுத்து கொல்லச் செய்வதை விட, யூதர்கள், கிருஸ்துவர்கள்  என எந்த ஒரு மாற்று மத குழந்தைகளும் பூமியில் பிறக்காமல் தடுப்பது எளிதல்லவா?

தன்னைப் புறக்கணித்தவர்களை தண்டிக்க அல்லாஹ்விற்கு ஒரு மனிதனின் உதவி தேவையா? முஸ்லீம்கள், இந்த ஒரு கேள்வியை சிந்தித்தால் போதும் எல்லா உண்மைகளும் விளங்கிவிடும். முஹம்மது நபி, முஸ்லீம்களின் மனதில் அவர் வலுவாக பதிய வைத்துள்ள பேய்க்கதைகள் உள்ள வரையிலும் அவர்களால் சிந்திக்கவும் முடியாது, அவரது போதனைகளில் நிறைந்திருக்கும் அபத்தங்களை உணரவும் முடியாது.

முஸ்லீம் பெண்மணி ஒருவர், TNTJ-வினரின் இஸ்லாமிய கேள்விபதில் நிகழ்ச்சி ஒன்றில் “வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களைக்” குறிப்பிட்டு, இது  வன்கலவி செய்ய குர்ஆன் அனுமதிப்பதைப் போன்றுள்ளதே? என்று கேள்வி கேட்டார். அதற்கு, தவ்ஹீத் ஜமாத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தஃபி, பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார், “முன்னாள் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் அவர்களின் காலத்திற்கு முன்பு வரை போர்கைதிகள் அடிமைகள்தான் அவர்களை தங்கள் விருப்பம் போல பயன்படுத்தலாம் என்ற நிலையிருந்தது. ஆப்ரஹாம் லிங்கன் காலத்திற்குப்பின் உருவாகிய புதிய சிந்தனைகளின் காரணமாகவே இந்த அனுமதிகள் உங்களுக்குத் தவறாகத் தெரிகிறது. மேலும் இது அல்லாஹ்வின் அனுமதி எனவே சஹாபக்களின் செயலில் தவறில்லை” என்றார்.

 நம் மார்க்க அறிஞர்களின் வாதம் எப்படி மனசாட்சியுள்ள மனிதர்களால் ஏற்க முடியும்?

அடிமைப் பெண்களுடன் கூடுவதும், அவர்களை விருப்பம் போல பயன்படுத்துவதும்,  முஹம்மது நபியால் துவங்கி வைக்கப்படவில்லை.  இது அவருக்கு  முன்பிருந்தே பின்பற்றப்படும் ஒரு நடைமுறை இதற்கு முஹம்மது நபியை எப்படிக்  குறை கூற முடியும் ? என்றும் மறுக்கின்றனர்.

                எந்த இராணுவத்திலும் சில‌ சிப்பாய்களிடம் இருக்கும் ஒரு தவறான காரியம், பெண்களை கற்பழிப்பதாகும். எல்லா இராணுவத்திலும் இந்த குற்றத்தை செய்யும் குற்றவாளிகள் உள்ளனர். ஆனால், முஹம்மது நபி இந்த கற்பழிப்பை சட்டமாக்கி, அதனை அல்லாஹ் தனக்கு வேதவாக்காக அருளியதாகக் கூறி குர்ஆனிலும்  எழுதிவைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயமாகும்.

முஹம்மது நபி கற்பழிப்பதை நியாயப்படுத்தி அல்லாஹ்வின் பெயரால் சட்டபூர்வமாக்கிவிட்டார்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

பு.மா.இ.மு. வழித்தடத்தில் நாமும் பயணிப்போம்!

29 நவ்

ஆவடி பிராட்வே.. ஆர்.எஸ்.ஒய்.எஃப். அவர் வே..

ஆவடி பேருந்து நிலையம், ஜெயலலிதா சசிகலா முகமூடியணிந்த இருவர் திடீரென ஒரு பேருந்தில் ஏறி பயணிகளிடம் பேருந்து கட்டண உயர்வு, பால், மின்சாரம் விலைவாசி உயர்வை தெனாவெட்டாக அறிவிக்கிறார்கள். திகைப்பிலும், வெறுப்பிலும் மக்கள் பார்த்திருக்க, மக்களின் உணர்ச்சிக்கு முகம் கொடுப்பது போல பத்து பதினைந்து சிவப்புச் சட்டைகள் பேருந்தில் ஏறி முழக்கமிடுகிறார்கள். “”அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளைக்கு பதிலடி கொடுப்போம், புலம்பினால் மட்டும் போதாது! போர்க்குணத்துடன் போராடுவோம்…” என அறிவிப்பு வெளியிட்டு ஜெயா சசி குமபலின் தோலுக்கு உரைக்கும்படி முதலில் வார்த்தைகளால் பந்தாடுகிறார்கள். அடுத்து ஆவேசத்துடன் கைகள் நீள்கிறது. காத்து கிடந்த மக்களோ தன் பங்குக்கு நாலு சாத்து சாத்துகிறார்கள்.. பாவம் ஜெயலலிதா வேடத்தில் நடித்ததினாலேயே தோல் மரத்ததோ என்னவோ.. தாமதமாக வலி உணர்ந்து முகமூடியை களைகிறார்கள் தோழர்கள்.. “”என்னுயிர் தோழி.. கேளடி சேதி.. இதுதானோ பெங்களூரு நீதிபதி தோழி” என ஜோடியாக ஏ.சி. காரிலேயே ஓசி பயணம் செய்யும் ஜெயாசசியை பஸ்ஸில் ஏற்றி மக்களோடு சேர்ந்து தீர்ப்பு வழங்கினார்கள் தோழர்கள். கட்டண உயர்வால் கொதித்துப் போயிருக்கும் மக்களிடம் சிக்கினால் ஜெயாசசிக்கு என்ன நடக்கும் என்பதை திருச்சி ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க. தோழர்கள் நிகழ்த்திக் காண்பித்தனர். சென்னையிலோ, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரின் “”ரூட்டே” தனி.

பஸ்சுக்கு பஸ்சு மக்கள் விரோத ஜெயாசசியை ஏற்றி மக்கள் கையாலேயே பஞ்சராக்கிப் போட்டார்கள். எதிர்க்க முடியாத மலையல்ல ஜெயலலிதா என நிகழ்த்திக் காண்பிப்பது மட்டுமல்ல. கட்டண உயர்வுக்கு எதிராக கண்டனம் புலம்பும் மக்களிடம் “”அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பேயாட்சிக்கு எதிராக வெறும் பேசி மட்டும் போதாது, பாசிச ஜெயாவின் திமிராட்சிக்கு நாம் பணிய வேண்டியதில்லை. மக்களை வாட்டி வதைக்கும் இந்தக் கட்டண உயர்வை நாம் மதிக்கவும் தேவையில்லை. ஆகவே உழைக்கும் மக்களே! இந்த அநியாய பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக பயணச்சீட்டு வாங்காமல் நாம் பயணிப்போம்! யாரும் டிக்கட் எடுக்காதீர்கள். டிக்கெட் விலை அநியாயம்! அதை ஏற்பதும் அநியாயம்! கட்டணக் கொள்ளைக்கு காசு தர முடியாது! பாசிச ஜெயாவின் திமிரடிக்கு நாம் பணியவும் முடியாது. மக்களே! டிக்கட் எடுக்காதீர்கள்” என ஓடும் பேருந்தில் மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டே பு.மா.இ.மு. தோழர்கள் வந்தனர். பெருவாரி மக்கள் பு.மா.இ.மு. அறிவிப்பை உச்சி மோந்து “”இவ திமிருக்கு இதுதாங்க சரி” என்று கோயம்பேடு வரை டிக்கட் எடுக்காமலேயே வந்து இறங்கினர். நடத்துனருக்கோ வேலை மிச்சமானது. ஓட்டுனரோ உற்சாகத்துடன் கியரை மாற்றி ஜெயாவின் உத்தரவைக் காலில் போட்டு மிதித்து பஸ்சை இயக்கினார்.

இப்படி பு.மா.இ.மு. தோழர்கள் ஒரு நாள் முழுக்க சென்னையில் ஆவடி, கோயம்பேடு, என்.எஸ்.கே. நகர், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, பாரிமுனை என மாறி மாறி பேருந்து ஏறி ( ஜெயா சசி வேடமிட்ட லக்கேஜ்களையும் சேர்த்துக் கொண்டுதான்) மக்களிடம் நாள் முழுக்க கட்டண உயர்வுக்கு எதிராகப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டே போயினர். பு.மா.இ.மு. ரூட் பாஸ் வாங்கிவிட்ட மக்களிடம் இன்னிக்கு ஜெயலலிதா சீட்டு செல்லாது என்று வர்க்க உணர்வுடன் புரிந்து கொண்ட பெரும்பாலான நடத்துநர்கள் தோழர்களின் அரசியலுக்கும் சேர்த்து ரைட் கொடுத்துக் கொண்டே வந்தார்கள். ஓட்டுனர்களோ பஸ்ஸில் சிக்கிய ஜெயாசசி கும்பல் டயரில் சிக்காதா? என ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே பஸ்சை நகர்த்தினர். அண்ணா சாலையில் இறங்கிய பெண் பயணி ஒருவர் “”தோழர்களே! உங்களால் நான் இன்னிக்கு டிக்கெட்டே எடுக்கவில்லை என்று போதி மரத்தில் ஞானம் பெற்றதைப் போல பு.மா.இ.மு. தோழர்களை பூரிப்புடன் பார்த்து விடைபெற்றார். பஸ்சுக்காக காத்திருந்து மட்டுமே பழகிப்போன மக்கள் இப்படி ஒரு உத்தரவுக்காக காத்துக் கிடந்தது போல செயல்படுத்தியதைப் பார்க்கும்போது, புரட்சிக்காகக் காத்திருக்கும் மக்களிடம் பு.மா.இ.மு. வைக்கும் நம்பிக்கை வீண் போகாது என்பதை உணர்த்துவதாக இருந்தது.

போராட்டப் பயணம் இப்படியே இனிமையாகவே போய்விடுமா என்ன? எதிர்பார்த்தது போலவே ஒரு பேருந்தில் பிரச்சாரம் ஓடிக்கொண்டிருக்கும்போதே தேனாம்பேட்டைவந்ததும் அந்தப் பேருந்தின் நடத்துனர், இப்படியே ஒரு சீட்டும் கிழிக்காமல் போனால் தன் சீட்டு கிழிந்து விடுமோ என்ற பயத்தில் பேருந்தை தேனாம்பேட்டை போலீசு ஸ்டேசன் பக்கம் நிறுத்தி தோழர்களை ஜாடையாக தள்ளிவிட முயன்றார். ஆர்வத்துடன் அந்த போலீசோ சிவப்புச் சட்டைகள் தோழர்களின் பிரச்சார வார்த்தைகள், மக்களின் அடங்காத ஆர்வம் இவைகளைக் கண்ணுற்று இந்தத் தலைவலி நமக்குத் தேவையா என்பது போல, “”யோவ், இவங்கள ஸ்டேசன்ல எறக்க முடியாதுய்யா.. பேசாம டெப்போவுல போயி எறக்கிடு..” என்று வேகத்துடன் நழுவப் பார்த்தது. நடத்துனரோ லா அண்டு ஆர்டர் பிரச்சனையாகும் சார், என்று போலீசைப் போல பேச போலிசோ வேறு வழியின்றி நடத்துனரைப் போல டிக்கெட்டை எண்ண ஆரம்பித்தார். தோழர்களோ அஞ்சவில்லை. சட்டப்படி என்ன செய்ய முடியுமோ செய்ங்க என்றனர். “”நான் கைதெல்லாம் பண்ணலப்பா, பேசாம கலைஞ்சு போயிடுங்க, செய்றதுதான் செய்றீங்க எதாவது பர்மிசன் வாங்கிட்டு செய்ங்கப்பா” என்று ஸ்டேசன் எஸ்.ஐ. உலகம் புரியாமல் உளறிக் கொட்டினான். சற்றும் தாமதிக்காத இளம் தோழர்கள், “”ஜெயலலிதா எங்ககிட்ட பர்மிசன் வாங்கிகிட்டா விலை ஏத்தினுச்சு, நாங்க அடுத்த பஸ்சுல ஏறி பிரச்சாரத்த தொடருவோம். கலைய மாட்டோம்” என்று விருட்டென்று வரக்கூடிய பேருந்தில் ஏறப் போனார்கள். ஒரு இரண்டு பேருந்து வரைக்கும் தோழர்களை ஏற விடாமல் தேனாம்பேட்டை போலீசு கபடி விளையாடிப் பார்த்தது. மூன்றாவது பேருந்தில் தோழர்களின் பிரச்சாரம் கம்பீரமாய் கால்பதிக்க ஆளை விட்டால் போதுமென்று தேனாம்பேட்டை காக்கி ஒதுங்கிக் கொண்டது. பிறகென்ன..கேட்டுக் கொண்டே இருக்க… நான் என்ன கதையா சொல்ல வந்தேன். வாருங்கள் நண்பர்களே! பு.மா.இ.மு. வழித்தடத்தில் நாமும் பயணிப்போம்.

துரை. சண்முகம்.

முதல் பதிவு: புமாஇமு

 

விரிவாக அறிந்து கொள்ள:

பேருந்துக்கு நோ டிக்கட், சென்னையைக் கலக்கும் பு.மா.இ.மு

கூடங்குளம்: பொய்களைவிட குறை உண்மைகள் ஆபத்தானவை

28 நவ்

 

நல்லூர் முரசு நவம்பர் 18 – 24 இதழில் ஐயா சேயன் இப்ராஹிம் அவர்கள் “கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சனை என்ன?” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்கள். அதில் சாராம்சமாக, அணு உலைக்கு எதிரான மக்களின் அச்ச உணர்ச்சி நியாயமானது தான் அதேநேரம் பெருகிவரும் மின் தேவையை தீர்ப்பதற்கு வேறு வழியும் இல்லை என்பதாக கருத்து தெரிவித்திருந்தார்கள். இது ஆழமான புரிதலின்றி, குறை உண்மைகளோடு வெளிப்பட்டிருக்கும் கருத்து. முழுப் பொய்யைவிட குறை உண்மைகள் ஆபத்தானவை. அந்த வகையில் உண்மைகளை ஆழமாக விளக்குவது அவசியமாகிறது.

 

மின்சாரத் தேவைகளுக்காகத் தான் அணு உலைகள் அமைக்கப்படுகின்றன என்பதே மோசடியானது. நாட்டில் மின்சார பற்றாக்குறை இருக்கிறது என்பதில் ஐயம் ஏதுமில்லை. ஆனால் அந்த பற்றாக்குறை எந்த வழியில் ஏற்பட்டது? அதை எப்படி தீர்ப்பது? தனியார்மயமே நாட்டின் கொள்கையாகிவிட்ட நிலையில் ஏனைய பொதுத்துறை நிறுவனங்களைப் போலவே மின்சாரத் துறையும் சீரழிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக பெருகிவரும் தேவைகளுக்கு ஏற்ப மின் உற்பத்திக்கான ஆதாரங்களைப் பெருக்காமல் புறக்கணிக்கப்பட்டது. இதுதான் பற்றாக்குறைக்கான முதல் காரணம். மின் பயன்பாட்டை முறைப்படுத்தாமல் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தேவைப்படும் மின்சாரம் போக எஞ்சியிருப்பவை மட்டுமே மக்களுக்கு என்றுதான் அரசுகள் நடந்து கொள்கின்றன. மின் தட்டுப்பாட்டை காரணம் காட்டி மக்களுக்கு நான்கு ஐந்து மணி நேரம் மின்சாரத்தை தடை செய்யும் அரசு அவர்களுக்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கி வருகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கழிப்பறையில் கூட ஏ.சி பொருத்தி பகட்டாக நூறு குடும்பங்களின் மின்சாரத்தை ஒரு குடும்பமே செலவு செய்யும் நிலையில் பகட்டுக் குடும்பத்திற்கு 24 மணிநேர மின்சாரமும் மக்களுக்கு மின் தட்டுப்பாடும். கண்ணைக் கூசும் நியான் விளக்குகளின் வெளிச்சத்தில் விளம்பரங்கள் ஜொலிக்கையில் ஏழை மக்கள் மெழுகு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றால் மின் தட்டுப்பாடு என்பதன் பொருள் தான் என்ன?

 

யாருக்கான மின் தட்டுப்பாடு என்றாலும் மின் தட்டுப்பாடு இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த மின் தட்டுப்பாட்டை போக்கத்தான் அணு உலைகளா? அல்லது வேறு நோக்கங்களுக்கா? மின்சாரத் தேவைகளிலிருந்து அணுமின் திட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை பன்னாட்டு ஒப்பந்த நிர்ப்பந்தங்களின் காரணமாகவே அவை நிறைவேற்றப்படுகின்றன என்பதே உண்மை. நாட்டிலிருக்கும் 18 அணுமின் நிலையங்களிலுமான மின் உற்பத்தி, மொத்த மின் உற்பத்தியில் 2.8% மட்டுமே. இந்திய அமெரிக்க அணு ஆற்றல் ஒப்பந்தப்படி புதிய அணு உலைகள் கட்டியமைத்தாலும், அவை அனைத்தும் முழுத்திறனுடன் இயங்கினாலும் 7% மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். 1970ல் அணு உலை திட்டங்கள் தொடங்கும்போது 2000 த்தில் 43,500 மெவா மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறினார்கள். ஆனால் 2010 ல் தயாரிக்கப்பட்டது 2,720 மெவா மட்டுமே. அதிலும் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் 2005ல் உச்சகட்ட அளவாக 3,310 மெவா மின்சாரம் தயாரிக்க அணு உலைகளை இயக்குவதற்கு 4000 மெவா மின்சாரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதை அணு உலை எதிர்ப்பாளர்கள் கூறவில்லை, தீரேந்திர சர்மா எனும் அணுத்துறை பேராசிரியர் கூறுகிறார். இந்த 2.8% அணு மின்சாரத்தை தயாரிக்க ஏனைய வழியில் ஆகும் செலவைவிட 15 மடங்கு அதிகம்.

 

சரி, எவ்வளவு அதிக செலவு ஆனாலும், எவ்வளவு குறைவாக தயாரிக்க முடிந்தாலும் அணு உலை மூலம் தான் தயாரிக்க வேண்டும் என்றால் அதை உள்நாட்டிலேயே தாராளமாக கிடைக்கும் தோரியத்தின் மூலம் ஏன் தயாரிக்க முயலக் கூடாது? அறிவியலாளர்களின் எதிர்ப்பையும் மீறி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்திலிருந்து தான் தயாரிக்க வேண்டும் என்பது ஏன்? எந்த நாடுகளின் உதவியுடன் அணு உலைகள் கட்டப்படுகிறதோ அந்த நாடுகளில் அணு உலைகள் புதிதாக ஏற்படுத்தப்படவில்லை என்பதோடு மட்டுமல்ல, ஏற்கனவே இருக்கும் உலைகளும் மூடப்பட்டு வருகின்றன. அணு உலைகள் 100% பாதுகாப்பானவை என்றால் தொடர்புடைய நாடுகள் ஏன் அணு உலைகளை செயல்படுத்த மறுக்கின்றன? ஏனென்றால் அணு உலைகள் ஏற்படுத்தப்படுவது மின்சாரத் தேவைகளுக்காக அல்ல. பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு உதவுவதற்காகவே அணு உலைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

 

மக்கள் போராடும் போது அவர்களை சமாதானப் படுத்துவதற்காக எதையாவது சொல்லிவைப்பது அரசின் வழக்கம். அந்த வகையில் தான் அணு உலைகள் 100% பாதுகாப்பானது, புதிய தொழில் நுட்பம் என்பதெல்லாம். கூடங்குளத்தில் தற்போது கட்டப்படுவது விவிஇஆர்1000 எனும் தொழில்நுட்பத்தில். இதே தொழில்நுட்பத்தில் 31 குறைபாடுகள் இருக்கின்றன என்று ரஷ்ய அறிவியலாளர்கள் ரஷ்ய பிரதமர் மெத்தவெதேயிடம் அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் கூறுகிறார்கள் 100% பாதுகாப்பானது என்று. விபத்து நடந்தால் அரசு எப்படி நடந்து கொள்ளும் என்பதற்கு போபால் விசவாயுக் கசிவு ஏற்கனவே நமக்கு பாடமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களை கொன்று, லட்சக்கணக்கான மக்களை இன்றுவரை ஊனமாக்கிவரும் முதல் குற்றவாளியான வாரன் ஆண்டர்சனை பத்திரமாக விமானம் ஏற்றி அனுப்பிவைத்தது இந்திய அரசு. அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம் என்று ஒன்றை நிறைவேற்றி 1500 கோடி கொடுத்தால் போதும் மிச்சத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அதுவும் பத்து ஆண்டுகள் கடந்துவிட்டால் நட்ட ஈடு கோர முடியாது. அணுத்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு கொடுக்கப்பட்டு, அது குறித்த தகவல்கள் இரகசியமாக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் நேரடியாக வழக்கு தொடுக்க முடியாதபடி இந்திய ரஷ்ய நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. மின்சாரம் தான் நோக்கம் என்றால் இந்த பன்னாட்டு முதலாளிகளை பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன?

 

அணு உலைகளின் முதன்மையான விசயமே அதன் கழிவு தான். இதை ஏதோ வீட்டுக் கழிவு போல் எண்ணிக் கொண்டு கடலில் கொட்டினால் மீன்வளம் பாதிக்கப்படும் என்பது போல் புரிந்து கொள்வது அபத்தமானது. அமெரிக்க, ரஷ்யா உட்பட இந்தியாவுக்கு அணு தொழில் நுட்பத்தை கொடுத்த எல்லா நாடுகளும் அணுக்கழிவை திரும்ப பெற்றுக் கொள்ள மறுக்கிறது. இதை இந்திய அரசு மிகுந்த பொருட் செலவில் மண்ணின் அடியாழத்தில் புதைத்து வருகிறது. ஏனென்றால் அணுக்கழிவுகள் கதிரியக்கம் மிகுந்தவை. மூவாயிரம் அடிக்குக் கீழே 2400 ஆண்டுகள் புதைத்து பாதுகாத்தால் தான் இதன் கதிரியக்க வீரியம் குறையும்.

 

வீட்டில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்படுவதும், சாலை விபத்துகளில் மரணம் நேர்வதும் அணு உலை விபத்தும் ஒன்றா? பாதுகாப்பு முறைகளை இலாபம் கருதி இயக்காமல் வைப்பதன் மூலமோ, தொழிநுட்பக் கோளாறின் மூலமோ, ஒரு மனிதத் தவறின் மூலமோ நிகழ்ந்துவிடும் சாத்தியம் கொண்ட அணுவிபத்து பல கிமீ சுற்றளவில் தாவரங்கள் உட்பட எந்த உயிரினங்களும் இருக்க முடியாமல் துடைத்தெறிந்துவிடும். மட்டுமல்லாது பல தலைமுறைகளுக்கு பிறக்கும் குழந்தைகளும் அணுக்கதிர் வீச்சினால் ஊனமுற்றும் நோய்களுடனும் பிறந்து அழியும். இதை சாலை விபத்துடன் ஒப்பிடுவது அறிவார்ந்த செயலா?

 

மின்சாரத் தேவைகளுக்காக அணு உலைகளைச் சார்ந்து இருப்பது இந்தியாவின் சுயச்சார்பை அழிப்பதோடு மட்டுமின்றி அடிமைப்படுத்தலுக்கும் வழிசமைக்கக் கூடியது. புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டுமென்றாலோ, வெளியுறவுக் கொள்கையில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றாலோ, தமக்கு ஏற்ப செயல்பட வைக்க வேண்டுமென்றாலோ யுரேனியத்தை தடை செய்தால் போதும் என்ற நிலை உருவாகும். இப்போதே பங்குச் சந்தையை கையில் வைத்துக் கொண்டு அவ்வப்போது மிரட்டுவதை நாம் கண்டு வருகிறோம். சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயர்ந்தால் (அதிகார வர்க்கத்தின் பார்வையில் அது ஒரு புதையல் என்றபோதிலும்) நம்முடைய அன்னியச் செலாவணி கையிருப்பு வேகமாக கரைகிறது. இந்த நிலையில் யுரேனியம் எனும் தூண்டிலையும் அன்னிய நிறுவனங்களின் கைகளில் கொடுப்பது எந்த விதத்தில் மக்களுக்கு உதவும்?

 

அணு உலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தில் குறிப்பிட்ட அளவை அனைத்து வீடுகளுக்கும் சி.எல்.எப் விளக்குகளைக் கொடுப்பதன் மூலம் ஈடுகட்டலாம். தொலைக்காட்சிப் பெட்டியும், மடிக்கணிணியும் இலவசமாக கொடுக்க முடியும் போது ஒவ்வொரு வீட்டுக்கும் சில விளக்குகளை வழங்க முடியாதா? மொத்த மின் உற்பத்தியில் கால் பங்கு கடக்கும் போது விரையமாகிறது. புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து பயன்படுத்துவதன் மூலம் அணுமின்சாரத்தை விட அதிகமாக சேமிக்க முடியுமே. ஓட்டுக் கட்சிகள் நிகழ்ச்சிகளின் போது திருடப்படும் மின்சாரத்தைக் கட்டுப்படுத்தினாலே குறிப்பிடத்தகுந்த மின்சாரம் மிச்சமாகுமே. சூரிய ஒளியிலிருந்து, கடல் அலையிலிருந்து இன்னும் மரபுசாரா ஆற்றல்களிலிருந்து மின் உற்பத்தி செய்ய என்ன ஆய்வுகள் நடத்தப்பட்டன இந்தியாவில்? அத்தனையையும் மீறி அணுமின் உற்பத்தி செய்தாலும் அது ஒருக்காலும் மக்களுக்கு பயன்படப் போவதில்லை. மாறாக பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பகட்டு உபயோகங்களுக்கும் தான் பயன்படப் போகிறது.

 

எனவே அணு உலைகளை அது கூடங்குளமானலும் உலகில் எந்த மூலையில் என்றாலும் அதை ஆதரிப்பது அறிவுடையவர்களின் செயலாக இருக்க முடியாது. நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிப்பவர்கள் யாரானாலும் அவர்கள் இடிந்தகரை மக்களோடு இணைந்து போரட வேண்டியது அவசர, அவசிய கடமையாகும்.

காந்தி- ஆதரவும் எதிர்ப்பும் அல்லது பக்தியும் புரிதலும். 2

27 நவ்

காந்தி : வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும்.,  கட்டுரையின் தொடர்ச்சி

எதிரியை எப்படி எதிர்கொள்வது என்பதையும் நீங்கள் பகத்சிங் உள்ளிட்ட தியாகிகளின் வாழ்வில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தங்கள் கோரிக்கையை வெள்ளை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் அறிவிக்கவே அவர்கள் கைதானார்கள். ஒவ்வொரு விசாரணையையும் அவர்கள் தங்களுக்கான பிரச்சார களமாக மாற்றினார்கள்.

பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசிய வழக்கு லாகூர் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, அங்கு குண்டு வீசியதன் நோக்கம் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அது நியாயமற்றது என அவர்கள் வாதிடுகிறார்கள்,

//நாம் நோக்கத்தை புறக்கணித்துவிட்டால், உலகின் மிகப்பெரிய தளபதிகள்கூட சாதாரண கொலைகாரர்களைப் போல தோன்றுவர். வருவாய்த்துறை அதிகாரிகள் திருடர்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் காட்சியளிப்பர். ஏன் நீதிபதிகளும் கொலைக் குற்றத்துக்கு ஆளாகலாம்.// –விசாரணையின்போது பகத்சிங்.

அவர்களுடைய நோக்கம் அவர்களின் குற்றத்தைக் காட்டிலும் அதிகபட்ச தண்டனைக்குரியது என அவர்களுக்கு தெரியும். ஆயினும் அவர்கள் தங்கள் நோக்கம் பரிசீலிக்கப்படவேண்டும் என கடுமையாக வாதிடுகிறார்கள். நிராயுதபாணி மக்களை சுட்டுக்கொன்ற ஜெனரல் டயரின் அராஜகத்தை குறிப்பிடுகிறார்கள். தங்களது வாக்குமூலத்தில் இருந்து நீக்கப்பட்ட இன்குலாப் ஜிந்தாபாத், ஏகாதிபத்தியம் ஒழிக எனும் வாசகங்கள் நீக்கப்பட்டதை குறிப்பிடும் சாக்கில் நீதிமன்றத்தில் அதற்கான விளக்கங்களை சொல்கிறார் பகத்சிங்.

அவரது இந்த நிலைப்பாட்டை முழுதாக புரிந்துகொள்ள இன்னொரு சம்பவம் உதவிகரமாக இருக்கும். 1930 டிசம்பர் 23ல் லாகூர் பல்கலைக் கழகத்தில் பஞ்சாப் ஆளுநரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் ஹரி கிஷன் எனும் போராளி. ஆளுநர் லேசான காயமடைய இன்னொருவர் இறந்துபோனார். இவ்வழக்கு விசாரணையின்போது ஹரி கிஷனின் வழக்குரைஞர், தன் கட்சிக்காரர் கொலை செய்யும் நோக்கில் சுடவில்லை என்றும் ஒரு எச்சரிக்கையாகவே அந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார் என வாதிடுகிறார். இதையறிந்த பகத்சிங் புரட்சியாளர்கள் தங்கள் வழக்குகளை எவ்வாறு கையாளவேண்டும் எனும் ஆலோசனையை தன் நண்பருக்கு ஒரு கடிதமாக எழுதுகிறார், (1931 ஜூன் பீப்பிள் இதழில் வெளிவந்தது).

அதில் அரசுக்கு நாம் போதுமான எச்சரிக்கை கொடுத்த பிறகுதான் செயல்பாட்டுக்கு வருகிறோம். ஆனால் அதிருஷ்டவசமாக் ஆளுநர் தப்பித்துக்கொண்டதற்காக (அதிருஷ்டம் ஆளுநருக்கு, சுட்டவருக்கல்ல) அதனை நமக்கு சாதகமாக்கிக்கொண்டு வாதிடுவதால் நமக்கு (இயக்கம்) என்ன பலன் கிடைத்துவிடும்? இதுபோன்ற செயல்களால் இயக்கத்தின் அழகை சிதைக்கக்கூடாது என்கிறார் பகத்சிங். (அடைப்புக்குறிகளுக்குள் உள்ள அழுத்தம் நம்முடையது). அந்த நீண்ட கடிதத்தில் அவர் சொல்வதன் சுருக்கம் இதைதான், ஆளுனரைக் கொல்வது எனும் நோக்கம் இரண்டாம் பட்சமே. கொலைமுயற்சி எனும் வழக்கையே நம்க்கான போராட்ட களமாக்க வேண்டுமேயன்றி, அதனை வெறும் எச்சரிக்கை எனும் வாதத்தால் நம் போராட்ட களத்தை சுருக்கிக்கொள்ளக்கூடாது.

காந்தி ஏரியாவுக்கு வரலாம், ரவுலட் கமிட்டி அறிக்கை வெளியானபோது அவர் முடிவெடுத்த போராட்ட முறையை கொஞ்சம் படியுங்கள்,

சாத்வீக சட்ட மறுப்பை செய்வது எப்படி என்று எனக்கு விளங்கவேயில்லை. சட்ட மறுப்பு செய்வதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் அளித்தால்தானே ஒருவன் சட்டத்தை மீற முடியும்? (சத்திய சோதனை பக்கம் 552) – இது அவரது குழப்பம்.

நேற்றிரவு கனவில் ஒரு யோசனை வந்தது. பொது ஹர்தாலை நடத்த வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்வது என்பதே அது. நம்முடைய போராட்டமோ ஒரு புனிதமான போராட்டம். ஆகையால் அதை ஆன்ம தூய்மை செய்துகொள்வதோடு துவங்கவேண்டும். இந்திய மக்கள் எல்லோரும் அன்று தங்கள் வேலைகளைய்யெல்லாம் நிறுத்திவிட்டு உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்யட்டும்-இது அவரது தீர்வு (ச.சோதனை பக்கம் 552) மக்கள் இந்த ஹர்தாலை அனுஷ்டித்தது ஒரு அற்புதக்காட்சி என விவரிக்கிறார் காந்தி (ஒரு அற்புதக்காட்சி என்றுதான் அந்த அத்யாயத்துக்கு பெயரிட்டிருக்கிறார்).

நான் விளக்க இதில் ஏதுமில்லை. போராட்டம் என்பது எப்படியிருக்கவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம். அதற்கான முன்னோடியாக யாரை கருதவேண்டும் என்பதும் உங்கள் முடிவிற்கானதே.

பகத்சிங்கின் மீதான இன்னொரு குற்றச்சாட்டு ஆங்கிலேய காவல் அதிகாரி (டெபுடி சூப்பிரெண்டென்ட்) சாண்டர்சை கொலை செய்தது. அதன் காரணம், லாலா லஜபதிராயை தடியடி மூலம் கொன்றதற்கு பதிலடி தருவது (அவர்கள் இலக்கு லஜபதிராயை தடியால் தாக்கிய ஸ்காட்டை கொல்வது. ஜெய்கோபாலால், சாண்டர்ஸ் தவறுதலாக அடையாளம் காட்டப்பட்டார்) . கொல்லப்பட்ட லஜபதிராய் பகத்சிங்கின் இயக்க உறுப்பினரல்ல. இன்னும் சொல்வதானால் அவர் தம் கடைசி காலங்களில் புரட்சியாளர்களை வெறுக்கத்துவங்கியிருந்தார் (பகத்சிங் மற்றும் சுகதேவை அவர் தன் பங்களாவுக்குளேயே விடவில்லை). புரட்சியாளர்கள் முற்றாக வெறுத்த மதச்சார்பை அவர் வளர்த்துக்கொண்டிருந்தார் (இதனால் அவருக்கு மோதிலால் நேருவுடனும் கருத்துவேறுபாடு தோன்றியிருந்தது).

இத்தகைய சூழலில் 1928 அக்டோபர் 30ல் சைமன் கமிஷன் லாகூர் வந்தது. அப்போது ஒரு மாபெரும் கூட்டம் அந்த அதிகாரிகளுக்கு கறுப்பு கொடி காட்டியது. அப்போது நடத்தப்பட்ட தடியடியில்தான் லாலா படுகாயமடைகிறார். நவம்பர் 19ல் அவர் மரணமடைய லாலாவின் மரணத்தை தங்கள் நாட்டின் மீதான தாக்குதலாக எடுத்துக்கொள்கிறார்கள் பகத்சிங்கும் அவரது சகாக்களும். அப்போதுதான் ஸ்காட்டை கொலைசெய்யும் முடிவுக்கு வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒருமாத கண்காணிப்புக்குப் பிறகு டிசம்பர் 17/ 1928 ல் அந்த திட்டம் நிறைவேறுகிறது. போலீஸ் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது ராஜகுருவும் பகத்சிங்கும் அவனை சுட்டுக்கொன்றார்கள் (ஜெயகோபால் வருகையை கண்காணித்து அறிவிக்கவும், ஆசாத் சுட்டவர்கள் பாதுகாப்பாக தப்பிப்போக உதவவும் அங்கே இருந்த மற்ற போராளிகள்). மறுநாள் லாகூர் நகரெங்கும் அந்த கொலையின் காரணங்களை விளக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் விணியோகம் செய்யப்பட்டன. ஏதோ இளமை வேகத்திலும் பழியுணர்ச்சியிலும் அவர்கள் கொலைசெய்ததாக உள்ள கற்பிதங்களுக்கு முடிவு கட்டவே இந்த சம்பவத்தை நாம் குறிப்பிடவேண்டியிருக்கிறது. அவர் லாலாவின் மரணத்தை தங்களது எதிர் நிலைப்பாடு கொண்ட நபரின் கொலையாக பார்க்கவில்லை. அதை தம் தேசத்தின் மீதான தாக்குதலாக பார்த்தார். காந்தியைப்போல சொந்த மக்கள் சாகையில் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஆக்கிரமித்தவன் வீட்டு எழவுக்கு மட்டும் கடும் எதிர்வினை செய்த அகிம்சாவாதியல்ல பகத்சிங்.

பகத்சிங் வெறும் விடுதலைப் போராளி மட்டுமல்ல. அவருக்கு விடுதலைக்குப் பின்னாலான இந்தியா பற்றியும் பெரிய கனவுகள் இருந்தது.

//வெள்ளையரின் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் முதல் கட்டமே. இறுதிப்போராட்டம் சுரண்டலுக்கு எதிராக நடக்க வேண்டியுள்ளது.//

//சமூக பொருளாதார சுதந்திரமில்லாமல் வெறும் அரசியல் சுதந்திரம் ஒரு சிலர் பலரை சுரண்டும் சுதந்திரமாகவே இருக்கும்// (இதெல்லாம் பகத்சிங் தன் நண்பர்களுடன் விவாதித்தவை.)

வெறும் துப்பாக்கி மட்டுமே அவரது ஆயுதமல்ல. மக்களை சேர்த்துக்கொள்ளாத போராட்டம் வெற்றியடையாது என்பதை அவர் பலமுறை தம் நண்பர்களிடம் வலியுறுத்துகிறார். தொழிலாளர்களிடையே பணிபுரிவது, பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதுவது, சிலைடு மூலம் பிரச்சாரம் செய்வது மற்றும் துண்டு பிரசுரம் ஆகிய எல்லா வழிகளையும் அவர் பயன்படுத்தினார். இளைஞர்களிடையே அவரது மேடைப்பேச்சுக்கள் அப்போது மிகவும் புகழ்பெற்றவை. அவரது சட்ட ஞானமும் வாதத்திறமையும் எந்த ஒரு உலகத்தலைவருக்கும் சளைத்ததல்ல. அவர் சிறையில் இருந்தபோது அரசுக்கு எழுதிய கடிதங்களையும் நீதிமன்ற வாதங்களையும் படித்தால் அவர் எத்தகைய அறிவுஜீவி என்பது புரியும்.

அவரது தனிப்பட்ட வாழ்வும் சுபாவமும் ஏராளமான செய்திகளை நமக்கு கற்றுத் தருவதாகவே உள்ளது. அவர் ஐந்து மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்தவர். இளம் தோழர்களை ஒருங்கிணைப்பதில் அவரது ஆற்றல் மகத்தானது. அவரது தோழர் சிவவர்மா அவ்வளவாக உடல்வலு உள்ளவரல்ல. அவருக்கு தன்னால் இயக்கத்தின் நடவடிக்கைகளில் ஈடுபட இயலாதோ எனும் கவலை மேலோங்கியபோது பகத்சிங் அவரிடம் நடத்திய உரையாடல் சிவவர்மாவை மட்டுமல்ல நம் எல்லோரையும் கணக்கில் கொண்டு சொன்னதுபோலவே இருக்கும். அவர் தூக்கிலிடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னால் அவரை கடைசியாக சந்தித்த நண்பர்களிடம் புன்சிரிப்போடு சொன்னவை இதைதான்,

“உணர்ச்சி வசப்படும் நேரம் இன்னும் வரவில்லை பிரபாத். நான் இன்னும் சில நாட்களிலேயே இந்த உலகத்தை விட்டு போய்விடுவேன். ஆனால் நீண்ட பயணம் ஒன்று காத்திருக்கிறது. கடமை எனும் பெருஞ்சுமை உன்னை அழுத்திக்கொண்டிருந்தாலும், அந்த நெடும் பயணத்தில் நீ களைத்துப் போய்விடமாட்டாயென்றும், தோல்வியடைந்து உட்கார்ந்துவிட மாட்டாயென்றும் நான் நம்புகிறேன்”.

காந்தி பற்றிய கட்டுரையில் இவ்வளவு அதிகமாக பகத்சிங் பற்றிய தகவல் தேவையில்லைதான். ஆனால் காந்தி இல்லாமல் வேறு யாரைத்தான் சுதந்திரப்போராட்ட வீரர் என்று சொல்லுவீர்கள்? எனும் கேள்விகள் நம்மை எப்போதும் துரத்துகின்றன. போட்டிக்கு ஆளில்லாத மைதானத்தில் காந்தியை நிறுத்தி அவரே மாபெரும் வீரர் என கொண்டாடுவது போல இருக்கிறது நம் வரலாறு. 1950ல் உத்திரப் பிரதேச பாடநூல்கள் சந்திர சேகர ஆசத்தை ரத்த வெறி கொண்டவர், கொள்ளைக்காரர், நல்வாய்ப்பாக நாடு அவர்களது பாதையை தேர்ந்தெடுக்காது காந்திய வழியில் நின்றது என மாணவர்களுக்கு பாடம் நடத்தின. எழுதிய மூதேவியின் பெயர் ஏ.எல்.ஸ்ரீவாஸ்தவா, பிரிட்டிஷ் அரசால் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் என கருதப்பட்டவர். இதே போன்ற பிரச்சாரங்கள் பகத்சிங்கின் மற்ற தோழர்கள் மீது மகாராஷ்டிர அரசு பாடநூல்களில் இருந்தது. மற்ற இடங்களில் எப்படி என்பது பற்றிய செய்தி இல்லை. ஆனால் அவர் தீவிரவாத வழியில் போராடினார்கள் எனும் வாசகங்கள் எல்லா மாநில வரலாற்றிலும் இருக்கின்றன. அப்படியே பின்லேடன், முல்லா ஓமர் ஆகியோர் தீவிரவாதிகள் எனும் செய்தி அன்றாடம் அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த நிலையில் பகத்சிங் உள்ளிட்ட போராளிகளின் மீதான மதிப்பீடு மாணவர்களுக்கு எப்படியிருக்கும்? இதை சரிசெய்ய வேண்டுமாயின் மேற்சொன்ன பகத்சிங்கின் வரலாறு இன்னும் அதிகமாக எழுதப்படவேண்டும். அதனை வேறொரு சந்தர்பத்தில் பார்க்கலாம்.

இப்போது, காந்தி மக்களின் ஏகோபித்த ஆதரவு கொண்ட தலைவராகவும் புரட்சியாளர்கள் மக்கள் ஆதரவற்றவர்களாகவும் இருந்தார்களா என பார்க்கலாம். 1929 டிசம்பர் 23ல் வைஸ்ராய் சென்ற ரயில் ஒரு குண்டுவெடிப்பில் சிக்கியது. அதில் வைஸ்ராய் மயிரிழையில் தப்பினார். அதற்கு கடவுளுக்கு நன்றி சொன்னார் காந்தி, காங்கிரசில் அச்செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் தீர்மானம் அவ்ரால் கொண்டுவரப்பட்டது. அதனை நிறைவேற்ற அவர் தன் செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்தினார். இறுதியில் அந்த தீர்மானம் 1713 உறுப்பினர்களைக் கொண்ட அந்த அவையில் வெறும் 81 வாக்குகள் முன்னிலையில் வென்றது.

அந்த பலூனையும் உடைக்கிறார் சரளாதேவி சௌதாராணி, “ நான் உரையாடிய மிகப் பெரும்பாலானாவர்கள் மகாத்மா மீதான விசுவாசம் காரணமாக தங்கள் தனிப்பட்ட கருத்தை மறைத்துக்கொண்டு காந்தியால் முன்மொழியப்படும் தீர்மானத்தை ஆதரித்தார்கள்” என குறிப்பிடுக்கிறார் அவர். (பகவதி சரண் வோரா தலைமறைவாக இருந்தபோது எழுதப்பட்ட கடிதமொன்றில் உள்ள தகவல்- இக்கடிதம் காந்தியின் வெடிகுண்டின் வழிபாடு எனும் கட்டுரைக்கு மறுப்பாக எழுதப்பட்டது). காந்தியின் பல சென்டிமென்ட் பிட்டுகளுக்கு பிறகும் அவரது சீடர் பட்டாபி சீதாராமைய்யா சுபாஷிடம் தோற்ற கதை எல்லோருக்கும் தெரிந்ததே. காந்தி தன்னிச்சையாக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதை நேருவே ஆதரிக்கவில்லை.

சாண்டர்சை கொன்ற பிறகு பல காங்கிரஸ்காரர்கள் பகத்சிங்கை ஆதரித்திருக்கிறார்கள். அவர்களது உதவியாலேயே போராளிகள் டெல்லிக்கு தப்பிச்செல்கிறார்கள். டெல்லி பாராளுமன்ற தாக்குதலுக்காக ஒரு காங்கிரஸ் எம்.பிதான் அவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்திருக்கிறார்.  சுகதேவ், ராஜகுரு, பகத்சிங் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட பிறகு நடந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்த தலைவர்களை எதிர்த்து பெரிய போராட்டங்கள் அங்கு நடந்திருக்கின்றன. பகத்சிங்கை கொன்றவரே திருப்பிப்போ எனும் முழக்கங்கள் ஒலித்திருக்கின்றன. உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த ஜஜீந்திரநாத் தாசின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஏழு லட்சம்.

இந்திய விடுதலைக்குப் பிறகும் இவ்வளவு மெனக்கெட்டு ஏன் காந்தியை உயர்த்திக்காட்ட வேண்டும் மற்றவர்களை ஏன் இருட்டடிப்பு செய்யவேண்டும் எனும் கேள்வி கடைசியாக எழலாம். அதற்கான பதில் அதிகாரவர்கத்துக்கு இன்னும் அவரது தேவை இருக்கிறது என்பதுதான்.

காந்தியின் மற்ற சிந்தனைகள் அவரது காலத்துக்கே பொருந்தாதவை. அவரது மண் சிகிச்சை மற்றும் நீர் சிகிச்சை ஆகியவற்றை இந்த காலத்தில் கொஞ்சநஞ்ச மருத்துவ அறிவுடைய பாமரனே ஏற்க மாட்டான். மனிதன் வாழ பழங்களும் கொட்டைகளும் போதும் எனும் கருத்தை எந்த உணவியல் நிபுணரும் ஏற்கமாட்டார்கள் (சூரிய ஒளியில் பக்குவமான பழங்களையும் கொட்டைகளையும் தவிர மனிதனுடைய உணவில் வேறு எதுவும் இருக்கக்கூடாது– ச.சோதனை பக்:325). இந்திரியத்தை கட்டுப்படுத்தி பிரம்மச்சாரியாக வாழ்வதுதான் மனிதத்தன்மை எனும் வாதத்தை நவீன உளவியல் மட்டுமல்ல பழைய உளவியலே ஒத்துக்கொள்ளாது (பிரம்மச்சர்யம் இல்லாத வாழ்க்கை சாரமற்றதாகவும் மிருகத்தனமானதாகவும் எனக்கு தோன்றுகிறது– ச.சோதனை, பக்:381)

அவரது கிராமச் சார்பு பொருளாதாரத்தை இன்று வற்புறுத்தினால் காந்தி கொடும்பாவியை தன் சகாக்களுடன் கொளுத்தும் முதல் ஆள் மன்மோகனாகத்தான் இருப்பார்.சாராயமா காந்தியா எனும் நிலை வந்தால் தமிழக இன்னாள் முன்னாள் முதல்வர்கள் எதை தெரிவு செய்வார்கள் என உங்களுக்கே தெரியும்!!  ஆக சத்யாகிரகம், அகிம்சாவாதம் ஆகியவற்றைத் தவிர அவரது எல்லா சிந்தனையும் இந்தியாவில் காலாவதியானது என்பதை அவரது ஆதரவாளர்களே ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

அகிம்சை என்பதை வரையறை துன்பங்களுக்கு தானாகவே கீழ்படிதல் என்பதாகும். அகிம்சையிலிருந்து மயிரளவு பிறழ்ந்து வெற்றி பெறுவதைவிட, ஊடறுபடாத அகிம்சையோடு படுதோல்வியடைவதையே நான் வரவேற்பேன் என பேட்டியளித்திருக்கிறார் காந்தி. இதை வாசிக்கையில் இந்திய விடுதலையைக்காட்டிலும் காந்தி அகிம்சா தர்மத்தில் பிடிப்போடு இருந்ததாக கருதவேண்டியிருக்கும். ஆனால் இந்த தருமத்தை அவர் இந்திய மக்கள் மீது மட்டும்தான் வலியுறுத்தினார்.

போர்களின்போதான அவரது பிரிட்டன் விசுவாசத்தை பார்த்தால் அவரது கடைசி ஆயுதமும் கேள்விக்குள்ளாகும்.

பிரிட்டிஷ் பிரஜை எனும் வகையில் நான் உரிமைகளை கோரினால், அந்த பிரஜை எனும் வகையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பாதுகாக்க போரில் ஈடுபடவேண்டியது என் கடமை- 1899ல் நடந்த போயர் யுத்தத்தில் தமது பங்கு பற்றி காந்தி (ச.சோதனை, பக் 258)

இங்கிலாந்தில் வசித்துவரும் இந்தியர், யுத்தத்திற்கு தங்களாலான உதவியை செய்ய வேண்டும் என நான் கருதினேன். ஆங்கில மாணவர்கள் ரணுவத்தில் சேவை செய்ய தொண்டர்களாக முன்வந்திருக்கிறார்கள். அவ்வளவாவது இந்தியரும் செய்ய வேண்டும்- 1914ல் பிரிட்டனில் இருந்தபோது சொன்னவை (ச.சோதனை, பக்:416,417) (போரில் பங்கேற்க வைப்பதுதான் அவர் நோக்கம்.. சேவை என்பது சமரசம் மட்டுமே- இந்த அழுத்தம் நம்முடையது)

படைக்கு ஆள் திரட்டுவது சம்பந்தமான தீர்மானத்தை நான் ஆதரிக்க வேண்டுமென வைசிராய் விரும்பினார். நான் ஹிந்துஸ்தானியில் பேச அனுமதிக்கவேண்டுமென அவரிடம் கேட்டேன். என் கோரிக்கைக்கு அவர் அனுமதியளித்தார். ஆனால் நான் ஆங்கிலத்திலும் பேச வேண்டும் என அவர் யோசனை கூறினார். “என் பொறுப்பை பூரணமாக உணர்ந்தே நான் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறேன்”’ என்ற ஒரே வாக்கியம்தான் நான் பேசியது. ஹிந்துஸ்தானியில் நான் பேசியதை பலரும் பாராட்டினார்கள். இத்தகைய கூட்டத்தில் ஹிந்துஸ்தானியில் பேசியது அதுவே முதல் முறை என அவர்கள் சொன்னார்கள். (ச.சோதனை: பக்:532. ஆண்டு குறிப்பிடப்படவில்லை..)  அந்த முடிவுக்கு எந்த காரணத்தையும் காந்தி குறிப்பிடவில்லை. ஹிந்துஸ்தானியில் பேசியதை வைத்து அதை திசை திருப்புகிறார். படைக்கு ஆள் திரட்ட தாம் மேற்கொண்ட பெரிய அளவிலான பிரச்சாரத்தையும் துவக்கத்தில் அதற்கு கிடைத்த பெரிய அளவிலான எதிர்ப்பையும் அவர் அடுத்தடுத்த பக்கங்களில் குறிப்பிடுகிறார் காந்தி.

கடைசி யுத்த ஆதரவு காலத்தில் அவர் சத்யாகிரகத்தில் எல்லா ரிசர்ச் அண்டு டெவலப்மென்டையும் முடித்திருந்தார். ஆகவே அவர் உண்மையான அகிம்சாவாதியெனில் பிரிட்டனுக்கு “துன்பத்தை வலிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்” என ஆலோசனை சொல்லியிருக்கவேண்டும். வெள்ளைக்காரனுக்கு பிரச்சனை என்றால் அவன் துப்பாக்கி தூக்கலாம், அதற்கு நாம் உதவவேண்டும். இந்தியனுக்கு விடுதலை வேண்டுமானால் மட்டும் எதிரியின் கல்மனம் கரையும்வரை அவன் தாக்குதலுக்கு  நாம் முதுகையும் அதற்கு கீழும் காட்டிக்கொண்டிருக்க வேண்டுமா?

உலகின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களிலேயே அகிம்சாவாதம்தான் எதிரிக்கு மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கியது. அதனால்தான் வெள்ளையனின் இடத்தை நிரப்பி அவனைப்போலவே இந்தியாவின் செல்வத்தை கடல்கடந்து கொண்டுசெல்லும் சுதேசி ஆட்சியாளர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். காந்தியின் தேசம் எனும் மறைமுக உருவகம் மக்களை ஒடுக்குமுறை எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் கூட்டமாக வைத்திருக்கிறது. எப்படி பிராமணன் அசைவம் சாப்பிடக்கூடாது எனும் விதி அவனது பிறப்பினால் எழுதப்படுகிறதோ அப்படியேதான் இந்தியனுக்கு அகிம்சையும் மறைமுகமாக ஒரு விதியாக போதிக்கப்படுகிறது, கொஞ்சம் தீவிரத்தன்மை அடையும் போராட்டங்களின் போதெல்லாம் காந்தி பிறந்த நாட்டில் இப்படியா எனும் அங்கலாய்ப்புக்கள் கேட்கின்றன. போலீஸ் துப்பாக்கியால் சுட்டு எத்தனைபேர் செத்தாலும் “காந்தி பிறந்த நாட்டில்” எனும் சுலோகம் கேட்காது., காந்திதான் அதற்கெதிராக எதையும் சொன்னதில்லையே!. அதற்காகத்தான் இந்திய விடுதலையின் ஒட்டுமொத்த பொறுப்பும் காந்திக்கே உரியது என புகழ்பாடல்கள் இன்றும் தீவிரமாக தொடர்கிறது. அப்போதுதான் அகிம்சாவாதம் வெற்றிகரமானது என மக்கள் நம்புவார்கள்.

நிறைவாக, காந்திய வழிபாடு ஒரு மதமாக இருக்கும் நாட்டில் இந்த விவாதம் முடிவில்லாது போய்க்கொண்டே இருக்கும். காந்தி ஒரு அவதாரம் என்றோ, அகிம்சையே சர்வரோக நிவாரணி என்றோ அல்லது சப்ளா கட்டையே அதிசிறந்த ஆயுதம் என்றோ நம்புவோருக்கு இனியும் சொல்ல நம்மிடம் செய்தி ஏதுமில்லை. இந்த சூழலில் நாம் கேட்டுக்கொள்ள மட்டும் ஒரு செய்தியிருக்கிறது, காந்தி பக்தர்கள் துணிச்சலோடும் ஏனையவர்கள் ஆர்வதோடும் கவனிக்கப்படாத விடுதலைப் போராட்ட வீர்ர்களின் தேடிப்படியுங்கள். அதன் பிறகு ஒரு முடிவுக்கு வரலாம், நாட்டுக்கு அதிகம் சொல்லப்படவேண்டியது, சந்தேகத்தின் பலனை சாதகமாக்கி விடுதலைப் போராட்ட தியாகியாய் இருக்கும் காந்தியையா அல்லது சந்தேகத்திற்கிடமின்றி தியாகியாய் இருக்கும் பகத்சிங்கையா?

சில பின்னிணைப்புக்கள்:

ஆயுதங்களை உபயோகிக்க விரும்பினால் இதோ ஒரு பொன்னான வாய்ப்பு. அரசாங்கத்துக்கு கஷ்டம் ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில் மத்தியதர வர்கம் வலிய வந்து அதற்கு உதவி செய்வார்களாயின், அவநம்பிக்கை மறைந்துவிடும்; மக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ள இருக்கும் தடையும் ரத்தாகிவிடும்– பிரிட்டனின் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் பணியில் இருந்தபோது காந்தி தந்த பிரச்சாரத்தில் இருந்து.. சத்திய சோதனை பக்: 537.

எனக்கு இருப்பதோ நான் கட்டியிருக்கும் இந்த புடவை ஒன்றுதான். இதை எப்படி துவைப்பது? மகாத்மாவிடம் எனக்கு இன்னொரு புடவை தரச்சொல்லுங்கள். அப்போது தினமும் நான் குளித்து துணிகளை சுத்தமாக வைத்திருப்பதாக வாக்குறுதி அளிக்க முடியும்.- பிகார் கிராம்மொன்றில் காந்தி சுகாதாரம் போதிக்க சென்றபோது கஸ்தூரிபாவிடம் ஒரு கிராமத்துப்பெண் சொன்னது. (ச.சோதனை, பக்:507)

நாங்கள் கட்டிய ஆகாயக் கோட்டைகளில் ஒன்று, கிராம சுகாதாரத்துடன் சம்பராணில் பசுப் பாதுகாப்பு வேலையையும் கவனிப்பது என்பது– ச.சோதனை பக்:511.

நான் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டது ஆலை முதலாளிகள் செய்த தவறுக்காக அன்று. தொழிலாளர்கள் தங்கள் சத்தியத்தில் இருந்து தவறி விட்டதற்காகவே உண்ணாவிரதமிருந்தேன்– ச.சோதனை பக்:518

வேண்டாம் என்று நான் சொல்லியும் கேட்காமல் பம்பாய் வர்தகர்கள் எங்களுக்கு அவசியத்திற்கும் அதிகமாக பணம் அனுப்பினார்கள்– சாம்பாரண் போராட்டத்திற்கான நிதி ஆதாரம் பற்றி காந்தி (ச.சோதனை பக்:524)

நம்மிடம் நிதி இல்லை என்று உங்களுக்குத் தெரியும். பொது ஜனங்களிடம் பிச்சை எடுத்து, அதைக்கொண்டு வேலைநிறுத்தத்தை தொடர்ந்து நடத்திக்கொள்ள நாம் விரும்பவில்லை– அகமதாபாத் வேலைநிறுத்த போராட்டத்தின் போது காந்தி (ச.சோதனை பக் 516)

ஆங்கிலேயரிடம் ஒவ்வொரு இந்தியருக்கும் விசுவாசத்தை உண்டுபண்ண நான் விரும்புகிறேன் (காந்தி வைசிராக்கு எழுதிய கடிதத்தில் உள்ள கடைசி வாசகம்). படைக்கு ஆள் திரட்டும் வேலையில் என் உடலை அனேகமாக நான் நாசப்படுத்திக்கொண்டேன் (மரணத்தின் வாயிலருகில் எனும் அத்தியாயத்தில்) ( (ச,சோதனை பக்:540)

நாம் தொழிலாளர்களை (விடுதலைப் போராட்டத்தினுள்) திருப்பிவிடக்கூடாது. ஆலைத் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக பயன்படுத்துவது அபாயகரமானது– அகமதாபாத் போராட்டத்துக்குப் பிறகு காந்தி; தி டைம்ஸ் மே, 1921. (பகத்சிங் எழுதிய அறிக்கையொன்றிலிருந்து.. இவ்வறிக்கை கல்கத்தாவை சேர்ந்த பாதுகாப்புக் கைதி திருமதி விமலா பிரதீபா தேவியின் வீட்டை சோதனையிட்டபோது 1931 அக் 3ல் கிடைத்தது)

செவிகளுக்கு கேட்பதற்காகவே குண்டு வீசப்படுகிறதேயன்றி எவருடைய உயிரையும் பறிப்பதற்காக அல்ல– பகத்சிங் மற்றும் தோழர்கள் பாராளுமன்றத்தில் வீசிய பிரசுரத்தில் இருந்து..

சோசலிச தத்துவம், சுயசரிதை, இந்தியாவில் புரட்சி இயக்க வரலாறு, மரணத்தின் நுழைவாயில்– பகத்சிங் எழுதிய நூல்கள். கையெழுத்துப் பிரதிகளாகவே அழிக்கப்பட்டன.

எனக்கும் வாழ்க்கையின் கவர்ச்சிகளை அனுபவிக்கவேண்டும் எனும் ஆசை நிரம்பவே உண்டு. ஆயினும் தேவைப்படும் நேரத்தில் அனைத்தையும் என்னால் துறந்துவிடவும் முடியும்– 1929 ஏப்ரல் 5 அன்று பகத்சிங் சுகதேவுக்கு எழுதிய கடிதத்திலிருந்து.

எனது உயிர் அந்த அளவுக்கு அருமையானது அல்ல. எனது கோட்பாடுகளை விலையாக கொடுத்து வாங்குமளவுக்கு அது ஒன்றும் அத்தனை மதிப்புடையது அல்ல– 1930 அக்டோபர் 4ல் பகத்சிங் அவரது தந்தைக்கு எழுதிய கடிதம் (சாண்டர்ஸ் கொலைக்கும் என் மகனுக்கும் தொடர்பில்லை என அவரது தந்தை தீர்பாயத்துக்கு கடிதம் எழுதியமைக்கு பகத்சிங்கின் பதிலில் இருந்து)

இர்வின் பிரபுவின் இடத்தில் சர்.தேஜ் பகதூர் சாப்ரு வைக்கப்படுவாராயின், ஒரு விவசாயியைப் பொறுத்தவரை அதில் என்ன வேறுபாடு இருக்கும்? (விமலா பிரதீபா தேவியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட மேற்குறிப்பிட்ட அறிக்கையில் இருந்து..)

மனித குலத்திற்க்கு நான் செய்யவேண்டி சில குறிக்கோள்களை நான் பேணிவளர்த்தேன். அதில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஒருவேளை நான் உயிரோடிருந்தால் அவற்றை நிறைவேற்றுவதற்குண்டான வாய்ப்பு எனக்கு கிடைக்கலாம். நான் சாகக்கூடாது என்ற எண்ணம் எப்போதேனும் என் மனதில் உண்டாகுமானால் அது இந்த நோக்கத்தில் இருந்து மட்டுமே உண்டாகும்– 1931 மர்ச் 22. பகத்சிங்கின் கடைசி கடிதத்தில் இருந்து.

முதல் பதிவு: வில்லவன்

முந்தைய பதிவுகள்

காந்தி: வாழும் போதும்,வாழ்க்கைக்குப் பிறகும்

காந்தி: ஆதரவும் எதிர்ப்பும் அல்லது பக்தியும் புரிதலும் 1

காந்தி- ஆதரவும் எதிர்ப்பும் அல்லது பக்தியும் புரிதலும். 1

25 நவ்

காந்தி : வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும்.,  கட்டுரையின் தொடர்ச்சி

காந்தி பற்றிய முந்தைய பதிவுக்கான எதிர்வினைகள் நான் எதிர்பார்த்ததே. ஆனால் அதற்கு இரண்டாவது பதிவு எழுதவேண்டியிருக்கும் என்பது எதிர்பாராதது. இடது, வலது மற்றும் நடு சென்டரில் நிற்போர் என எல்லா தரப்பின் விமர்சனங்களும் வெவ்வேறாக இருப்பினும் அவை எல்லாமே முந்தைய பதிவு போதுமானதாக இல்லை என்பதை மறைமுகமாக உணர்த்தின.

முந்தைய கட்டுரைக்கு எதிர்மறை விமர்சனங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வந்திருந்தாலும் அதற்கு ஆதரவு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வந்திருந்தது. எதிர்குரல்களில் பல, எங்கே “ஆதாரத்தை காட்டு பார்க்கலாம்” எனும் தொணியில் இருந்ததை நான் வெகுவாகவே ரசித்தேன். காந்தி ஒரு மகாத்மா, அவர்தான் விடுதலை வாங்கித்தந்தார் எனும் பழமொழிகளை ஆதாரம் கேட்காமல் நம்புபவர்களை ஆதாரம் கொடு என கேட்கவைப்பது எவ்வளவு சிரமமான பணி? அதை ஒரு பதிவின் வாயிலாக சுலபமாக செய்வது எத்தனை மகிழ்ச்சிக்குரியது?

காந்தி நல்லவரே எனும் அணியில் இருந்து வந்த பின்னூட்டங்களை பொதுவில் மூன்று வகையாக பிரிக்கலாம்,

  1. சொன்னவையெல்லாம் ஆதாரமற்றவை எனும் வாதம் (காழ்ப்புணர்ச்சி, விளம்பர நோக்கம் ஆகியனவும் இதில் அடங்கும்)
  2. அவர் சொன்னவற்றை வெட்டி, ஒட்டி அர்த்தத்தை மாற்றுகிறீர்கள் என்பது இரண்டாவது வாதம்.
  3. காந்தி வெளிப்படையாக வாழ்ந்தார், எதையும் மறைத்துவைக்கவில்லை. ஆகவே அவர் மகாத்மாவே எனும் வக்காலத்து.

உண்மையில் பலரையும் கோபமுற வைத்திருப்பது காந்தியின் தனிப்பட்ட வாழ்வு பற்றிய விமர்சனங்கள்தான். அது காந்தியின் புனித பிம்பத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. காந்தியின் புனித பிம்பத்தை வைத்துதான் அவரது அரசியல் நிலைப்பாடுகள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. காந்தியின் புனிதம் கெட்டுப்போனால் அவரது அரசியல் நிலைப்பாடு காலாவதியாகும். ஆகவே எந்த அரசியல் நிலைப்பாட்டை மக்களிடம் சேதாரமில்லாமல் கொண்டு சேர்க்க காந்தியின் எந்த பரிசுத்த உருவம் அவர்களுக்கு தேவைப்பதோ அதே நிலைப்பாட்டை அம்பலப்படுத்த எங்களுக்கு காந்தியின் புனித முகத்தையும் சேர்த்து விமர்சனம் செய்யவேண்டிய அவசியம் வருகிறது அவ்வளவுதான்.

ஆகவேதான் காந்தியின் தனிப்பட்ட வாழ்வு குறித்த தகவல்கள் அவர் மீது பேரபிமானம் கொண்ட எழுத்தாளர்களிடம் இருந்து மட்டும் எடுத்தாளப்பட்டது. (சாம்பிளுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும்http://thoughtsintamil.blogspot.com/2008/08/blog-post_29.html). பெரியார், சட்டபூர்வமாகவும் வெளிப்படையாகவும் செய்துகொண்ட இரண்டாம் திருமணம் இன்றளவும் விமர்சிக்கப்படுகிறது. அதற்கான பதிலை பெரியாரிஸ்டுகள் இன்றுவரை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தலைவர்களின் தனிப்பட்ட முடிவுகள் பற்றி யார் வேண்டுமானாலும் பதில் சொல்ல முடியும், முடிவு நியாயமானதாக இருக்கும்பட்சத்தில். வெறுமனே கோபம் பொத்துக்கொண்டு வந்தால் அங்கே பதிலுக்கு வழியில்லாத நிலை இருக்கிறது என அர்த்தம். இதற்குமேல் காந்தியின் தனிப்பட்ட வாழ்வு பற்றி விளக்க ஏதுமில்லை.

ஒரு வாதத்துக்காக “வெட்டி ஒட்டுதல், அர்த்தத்தை மாற்றி சொல்லுதல்” ஆகியவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டாலும், காந்தி ஆதரவாளர்கள் சில கேள்விகளுக்கு பதிலுரைக்க வேண்டியிருக்கும்.

  1. பகத்சிங் தூக்கு தொடர்பாக இர்வினுக்கும் காந்திக்கும்       இடையேயான  கடித உரையாடல்கள் என்ன சொல்கின்றன? எங்கள் கேள்வி அவ்வளவுதான். மற்றபடி அவர் பகத்சிங்கின் தூக்குதண்டனையை விரும்பவில்லை எனும் கருத்தோ அவர் பகத்சிங்கின் விடுதலைக்கு கடிதம் எழுதினார் என்பதோ சொத்தை வாதங்கள். இந்த ஸ்டைல் ஏமாற்றுவேலைகளை கருணாநிதி புண்ணியத்தில் நாம் பல முறை பார்த்தாகிவிட்டது.
  2. காந்தி தன்னிச்சையாக முடிவெடுப்பவரா இல்லையா? எந்த விவாதமும் இல்லாமல் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டது மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் காங்.தலைவராக தெரிவு செய்யப்பட்டதை எதிர்த்தது ஜனநாயக விரோத செயலா இல்லையா? உள்ளுணர்வை கேட்டு முடிவெடுத்தாலும் சரி மனைவி மச்சினனை (மட்டும்) கேட்டு முடிவெடுத்தாலும் சரி, அது ஜனநாயக விரோதம்தான்.
  3. காந்தி ஆன்ம பரிசோதனை செய்து கொண்டதை அவரது ஆதரவாளர்களே ஒத்துக்கொள்வார்கள் (மனுவின் பெயர் மட்டும் மறைக்கப்படும்). இதை நியாயம் என்றோ பிரம்மச்சர்யத்தில் இருக்கும் பிடிவாதமான பிடிப்பு என்றோ எந்த அடிப்படையில் வரையறுப்பீர்கள்? இதில் மகாத்மாத்தனம் எங்கே இருக்கிறது? முன்னாள் இத்தாலி பிரதமர் பெர்லூஸ்கோனியும் இதே பரிசோதனையைத்தான் அடிக்கடி செய்கிறார். துரதிருஷ்டவசமாக அவரால் அவரது பிரம்மச்சர்யத்தை ஒருமுறைகூட நிரூபிக்கமுடியாமல் போய்விடுகிறது.

கட்டுரைக்கு திரும்புவோம், பொதுவில் தலைவர்களை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கலாம். தனது கொள்கைகளால் மட்டுமே அறியப்படுகிற தலைவர்கள் ஒருவகை. இதற்கு சரியான உதாரணம் பெரியார். அவரது சாதியாலோ அல்லது அவரது கட்சியாலோ அவர் அறியப்பட்டிருப்பாரேயானால் பெரியார் இன்றைக்கு கரைந்துபோயிருப்பார். அவரை நேரில் பார்த்திராத ஒரு தலைமுறையிலும் அவர் செல்வாக்குடையவராக இருக்க அவரது கொள்கைகளே காரணம். நேரெதிராக வேறொரு தலைவர்கள் குழாமுக்கு அந்த சிரமம் கிடையாது. அவர்கள் ஒரு குழுவின் குறியீடாக மட்டும் அறியப்படுவார்கள்.

மிக பரிச்சயமான ஒரு உதாரணம் பசும்பொன் முத்துராமலிங்கம். அவரைக் கொண்டாட கொள்கை கோட்பாடு என ஒரு வெண்டைக்காயும் தேவையில்லை, ஒரே சாதிக்காரர்களாக இருந்தால் மட்டும் போதும். ஏறத்தாழ காந்தியும் இந்த பிரிவை சேர்ந்தவரே. ஆனால் அவர் ஒரு குறியீடாக இருக்கும் குழுவாக இந்தியா எனும் நாடு மாற்றப்பட்டிருக்கிறது. தேசியக் கொடியைப்போல தேசிய கீதத்தைப்போல காந்தியின் உருவம் ஒரு தேசிய அடையாளமாக காட்டப்பட்டிருக்கிறது. ஒரு தேசியக்கொடியின் மீது பக்தி கொள்ள எந்த புரிதலும் அவசியமில்லை, என் நாடு, எங்கள் கொடி எனும் ஒரு பந்தம் போதுமானது (துரதிருஷ்டவசமாக நம் தேசிய கீதத்துக்கு அந்த கொடுப்பினை இல்லை.. அப்பாடல் 1911 ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியா வந்தபோது அவரை வாழ்த்தி பாடப்பட்டது).

இந்தியாவின் விடுதலை எனும் வார்த்தை காந்தி எனும் வார்த்தையோடு பிணைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் சுற்றத்தில் இருக்கும் மிகப்பலர் காந்தி எனும் ஒற்றை நபரால் மட்டுமே இந்திய விடுதலை சாத்தியமானதாகவும் முழு தேசமும் அவர் பின்னால் நின்றதாகவும் நம்பிக்கொண்டிருப்பார்கள். விடுதலை எனும் சம்பவத்தை காந்தியின் ஊடாக மட்டும் பார்த்து பழகிய இரண்டு தலைமுறையிடம் காந்தியை பற்றி புரிதலை உண்டாக்குவது சிரமமானது. ஆனால் நமக்கு வேறுவழியில்லை, காந்தி ஆக்கிரமித்திருக்கும் இடத்தை காலிசெய்தாலன்றி நாட்டு விடுதலைக்கு தீரத்துடனும் சமரசமின்றியும் போராடிய வீர்ர்களின் வரலாற்றை நாம் பரப்புரை செய்ய இயலாது.

தேச விடுதலைக்கு போராடியதில் அவரை விஞ்சிய நபர்கள் யாருமே இல்லையா? எனும் கேள்வியோடு இந்த விவாதத்தை துவங்குவது சரியாக இருக்கும் என கருதுகிறேன். காந்தியின் வார்த்தைகளின்படியே பார்த்தாலும் அவர் 1930 வரை இந்திய விடுதலையை கோரியிருக்கவில்லை. அவர் தலைமையிலான காங்கிரஸ் 1930ல் கூட குடியேற்ற (டொமினியன்) அந்தஸ்தைத்தான் வலியுறுத்தியது (12 மாதங்களுக்குள் அது கிடைக்காவிட்டால் பூரண சுயராஜ்யத்துக்காக போராட வேண்டியிருக்கும் என அறிவித்து விடுதலைப்போராட்டத்தை பகடி செய்தது காங்கிரஸ்.) சரியாக சொல்வதானால் 1942ல் துவங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு முன்னால் முழுமையான விடுதலை எனும் கோரிக்கையை காந்தி முன்னிலைப்படுத்தியதில்லை.

இப்போது நான் இந்தியாவின் விடுதலையைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் போரில் (இரண்டாம் உலகப்போர்) இங்கிலாந்தும் பிரான்சும் வீழ்ந்துவிட்டால் என்னாவது? என்றார் காந்தி 1939ல் (ஹரிஜன் செப் 9/1930). இன்னும் சரியாக வரலாற்றை கவனித்தால் 1945ல் கூட காந்தியும் காங்கிரசும் அந்த கோரிக்கையில் உறுதியாக இல்லை என்பது புலனாகும். மகாத்மா முடிவு செய்யும்வரை எந்த இயக்கமும் முடிவு செய்யக்கூடாது. எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இறுதியாக அவர் வேறுவிதமாக முடிவு செய்யலாம். ஒரு பெரிய அனுமதி பெறாத தவறுக்கு நீங்கள் பொறுப்பாளி ஆவீர்கள். விழிப்போடு இருங்கள் ஆனால் எவ்விதத்திலும் செயல்படாதீர்கள்– 1942 ஆகஸ்ட் 7,8 ல் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட சுற்றறிக்கை (ஆனால் தொண்டர்களுக்கு அனுப்பப்படவில்லை). இது 1943 ஜீலை 15ல் காந்தியால் மேற்கோள் காட்டப்பட்டது.

1942 ஆகஸ்ட் 9ல் காந்தி (மற்றும் காங்.தலைகள்) கைது செய்யப்பட்டார், அதன் பிறகு மக்கள் போராட்டம் தீவிரமாக நடந்தது. 1944ல் காந்தி சிறையில் இருந்து வெளியே வந்த போதும்வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடரவில்லை. ஆகஸ்ட் தீர்மானம் தானாகவே ரத்தாகிவிட்டது என அறிவித்தார். 1944 ஆம் ஆண்டில் 1942 க்கு திரும்பிச்செல்ல இயலாது என அதற்கு விளக்கமும் அளித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியாலோ காந்தியாலோ எந்த இயக்கமும் அதிகாரபூர்வமாக துவங்கப்படவில்லை– நேரு, படேல் மற்றும் ந.பி.பந்த் ஆகியோரால் 1945 செப்டம்பர் 21ல் வெளியிடப்பட்ட காங்கிரசின் அதிகாரபூர்வ அறிக்கை.

ஆக, காங்கிரசின் வரலாற்றுப்படி அவர்கள் இந்திய விடுதலைக்கு போராடியது ஐந்து ஆண்டுகாலம்தான். நிஜமான வரலாற்றுப்படி அது அவர்களுக்கு ஒரு தவிர்க்கவியலாத நிர்பந்தம், அல்லது விடுதலைக்கு பிந்தைய புத்திசாலித்தனமான வரலாற்று பிற்சேர்க்கை. மக்களிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு வரும் அழுத்தத்தை குறைக்கும் ஒரு வால்வைப் போலத்தான் காங்கிரசும் காந்தியும் செயல்பட்டிருக்கிறார்கள். இனியும் பிரிட்டன் ஆதிக்கத்தை அனுமதிக்க முடியாது என மக்கள் முடிவெடுத்தார்கள், காந்தி (காங்கிரஸ்) அந்த முடிவை வேறுவழியில்லாமல் பின்பற்ற வேண்டியதாயிற்று. இந்த சூழல்தான், பிற்பாடு தேசமே காந்தியின் பின்னால் நின்றதாக காட்டப்பட்டது. காந்தியை பின்பற்றியவர்கள் மட்டுமே சுதந்திர போராட்ட வீர்ர்களாக பெருமளவு முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். ஏனெனில் மற்றவர்கள் முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டால் காந்தியின் தலையில் உள்ள கிரீடம் அவருக்கு உரியதல்ல என்பது தெரிந்துபோகும்.

அஸ்ரத் மகல், சந்திரசேகர ஆசாத், ஜஜீந்திர நாத் தாஸ், பி.கே.தத், பகவதி சரண் வோரா, மாகாவீர் சிங் இந்த பெயர்களில் நமக்கு யார் யாரெல்லாம் பரிச்சயம்? இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசன், அனுசீலன் சமிதி, கதார் கட்சி, நவ்ஜவான் பாரத் சபா, பப்பார் அகாலிகள், யுகாந்தர் குழு, கத்தார் இயக்கம், சிட்டகாங் போராளிகள் இயக்கம், இந்துஸ்தான் ஜனநாயக சங்கம்., இந்த வார்த்தைகள் எல்லாம் எத்தனை பேருக்கு அறிமுகம்?  காந்தி ஏன் அரை வேட்டியில் இருக்கிறார் என்பதும் ஏன் ஆட்டுப்பால் மட்டும் குடித்தார் என்பதும் வரலாறாக இருக்கும் நாட்டில் விடுதலைக்காக தங்கள் உயிரையும் உடமைகளையும் தொலைத்த போராளிகளும் இயக்கத்தவர்களும் மட்டும் இருட்டடிப்பு செய்யப்படுவதன் காரணம் என்ன?

இதற்கான காரணங்களை பிறகு பார்க்கலாம். அதை புரிந்துகொள்ள முதலில் பகத் சிங்குடன் காந்தியை கொஞ்சமாக ஒப்பிட்டு பார்ப்பது பேருதவியாக இருக்கும்.

மிஞ்சிப்போனால் நமக்கு பகத்சிங் பற்றி தரப்பட்ட செய்திகள் என்னென்ன? அவர் பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசியவர், லாலா லஜபதிராயை கொன்ற பிரிட்டிஷ் அதிகாரி சாண்டர்சை கொன்றவர் அவ்வளவுதான். இருபத்து மூன்றாண்டுகள் மட்டும் இவ்வுலகில் வாழ்ந்த அவர், சிறையில் இருந்த சில மாதங்களில் மட்டும் 151 புத்தகங்களை வாசித்து ஆறு சிறு நூல்களை எழுதிய சிந்தனாவாதி என்பது எத்தனை பேருக்கு தெரியும்? சிறை என்றால் வெள்ளைக்காரர்களின் செல்லப்பிள்ளைகளுக்கு தரப்பட்ட சகல சௌபாக்கியங்களுடன் கூடிய சிறையல்ல. மிக மோசமான சித்திரவதைகளையும் வசதிக் குறைபாடுகளையும் கொண்ட சிறைகள் அவை, அங்கே தன் இரண்டு சக போராளிகளை உண்ணாவிரதத்தில் பலிகொடுத்த உளவியல் அழுத்தத்தின் போதும் அவர் படித்த எழுதிய நூல்கள் அவை (அப்போதைய போராளிகளில் சிறையில் மிக அதிகமாக அடி உதை வாங்கியவர்கள் பகத்சிங், ஜெயதேவ் கபூர், மகாவீர் சிங், டாக்டர் கயா பிரசாத் ஆகியோரே. அதிலும் பகத்சிங்கே முன்னணியில் இருந்திருக்கிறார்.. ஏறத்தாழ விசாரணையின் போது இது தினசரி நிகழ்வு. என தம் நூலில் குறிப்பிடுகிறார் சிவ வர்மா).

இப்போது உண்ணாவிரதம் இருப்பவர்கள் பலரும் தவறாமல் சொல்லும் வாசகம் “நாங்கள் காந்தீய வழியில் போராடுகிறோம்” என்பதுதான். காந்திதான் உண்ணாவிரதத்தையே கண்டுபிடித்தார் எனும்படியான வலுவான பிரச்சாரத்தின் விளைவுதான் இந்த பொதுவான மனோநிலைக்கு அடிப்படை. பகத்சிங் தன் சிறை வாழ்வில் மட்டும் நூற்று பதின்நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். சிறையில் தங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்று கோரியும் கைதிகளுக்கு அடிப்படையான வசதிகள் கோரியும் இருந்தவை அந்த உண்ணாவிரதங்கள். தற்கொலை தொடர்பாக தன் நண்பன் சுகதேவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் “விடுதலைக்கு பிறகான இந்தியாவின் சிறைகளில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட அது குறித்து நேரடி அனுபவம் உள்ளவர்கள் தேவை இல்லையா?” என கேட்கிறார். இரண்டாவது உண்ணாவிரதப்போராட்டம் பற்றி அரசுக்கு அறிவிக்கும் கடிதத்தில் தேவைப்பட்டால் அரசியல் கைதிகளை இரண்டு பிரிவாக பிரித்து (வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டோர் மற்றும் வன்முறையில் ஈடுபடாதோர்) கையாள வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் பகத்சிங்.

தூக்கு தண்டனை உறுதி என தெரிந்தே வலிய கைதான ஒரு வீரன், விடுதலைக்கு பிறகு தன் தேசத்திற்கான சிறையில் செய்யப்படவேண்டிய சீர்திருத்தங்களுக்காகவும் சமகாலத்தில் தமக்கு எதிர் நிலைப்பாடு கொண்ட கைதிகளுக்காவும் தன் உயிரை பணயம் வைத்து உண்ணாவிரதமிருக்கிறார். (இரண்டாவது உண்ணாவிரதம் அறுபத்து நான்கு நாள் நீடித்தது. ஒரு மாத உண்ணாவிரதத்துக்குப் பிறகு தன் வசீகரமான உருவத்தை இழந்து குற்றுயிராக நீதிமன்றத்துக்கு தூக்கிவரப்பட்டார் பகத்சிங் என் குறிப்பிடுகிறார் அவரது தோழர் சிவ வர்மா. பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் சாப்பிடவைக்க மிக மோசமான வன்முறையை கையாண்டது ஆங்கிலேய அரசு. அதிலொன்றாக அவர்கள் அறையில் உள்ள தண்ணீர் பானையில் பாலை நிரப்பி போராட்டத்தை ஒடுக்க முயன்றது. இதன் பொருள் பாலைக்குடி எனும் கருணையல்ல போராடினால் தண்ணீர்கூட இல்லாமல் சாவாய் எனும் எச்சரிக்கை).

உடல் நல ஆராய்ச்சிக்காக உண்ணாவிரதம், தொழிலாளர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாதிருக்க உண்ணாவிரதம், அம்பேத்கர் கொண்டுவர விரும்பிய இரட்டை வாக்குரிமையை ஒழித்துக்கட்ட உண்ணாவிரதம், கணக்கு போட்டு பார்த்தால் காந்தி இந்திய மக்களுக்கு எதிராக இருந்த உண்ணாவிரதம்தான் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. காந்தியின் உண்ணாவிரதப்போராட்டத்தின் தன்மையை புரிந்துகொள்ள சத்திய சோதனை புத்தகத்தில் உண்ணாவிரதம் எனும் அத்தியாயத்தை (பக்கம் 516) படித்துப்பாருங்கள். அதில் தொழிலாளர்களுக்கான தன் உண்ணாவிரதம் ஆலை முதலாளிகளுக்கு நிர்பந்தம் தருவதற்காக இல்லை என மீண்டும் மீண்டும் சொல்கிறார் காந்தி. தொழிலாளர்களுக்காக போராடுவதாக சொல்லிக்கொண்டு அது முதலாளிகளை நிர்பந்திப்பதற்காக இல்லை என சொன்ன ஒரே தலைவன் காந்தி மட்டுமே (போராட்ட முடிவில் மிட்டாய்கள் சிதறியதை பற்றி விவரிக்கும் அளவுகூட அந்த போராட்டம் பற்றியோ அதன் முடிவு பற்றியோ அவர் விவரிக்கவில்லை என்பது வேறு விஷயம்).

இப்போது முடிவு செய்யுங்கள்.. உண்ணாவிரதம் என்பது உண்மையில் காந்திய வழிப் போராட்டமா?

பகத்சிங் இடுப்பில் குண்டை கட்டியபடியே அலைந்தவன் என்பது மாதிரியான வெகுஜன அபிப்ராயமும் யுத்தத்துக்கு ஆள் சேர்த்த காந்திக்கு கிடைத்த சாத்வீக பிம்பமும் ஒரு வலுவான பிரச்சாரத்தினால் உருவான ஒரு வரலாற்று மோசடி.

புரட்சியாளர்கள் எப்போதுமே ஜனநாயகத்துக்கு எதிரானவர்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். நம் முன்முடிவுகள் பகத்சிங் வரலாற்றிலும் அதை பொருத்திப்பார்க்கும். 1928 ல் பகத்சிங் தலைமையில் கூடிய புரட்சியாளர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு இயக்கத்தை ஜனநாயகப்படுத்துவதுதான். யாரோ ஒருவரை இயக்கத்துக்கு தலைவராக்கிவிட்டு, அவருடைய சித்தத்துக்கு இயக்கத்தை விட்டுவிடுவது பகத்சிங்கிற்கு விருப்பமில்லை. அவரது யோசனையின்படி இயக்கத்தை வழிநடத்த ஒரு மத்திய கமிட்டி அமைக்கப்பட்டது. கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை வகுக்க அதற்கு அதிகாரமும் வழங்கப்பட்டது.-விடுதலைப் பாதையில் பகத்சிங் நூலில் இருந்து(-பக் 59)

பாராளுமன்றத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்னால் இயக்கத்தின் மத்திய குழு கூடுகிறது. அதில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தொழில் தகராறு மசோதா மற்றும் பாதுகாப்பு மசோதா ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்க குண்டு வீசும் முடிவு எடுக்கப்படுகிறது, ஆட்கள் இல்லாத இடத்தில் குண்டுவீசிவிட்டு கைதாவது, அதன்வாயிலாக பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும் முடிவாகிறது. அதனை தானே செய்யவதாக சொல்கிறார் பகத்சிங். மற்ற உறுப்பினர்கள் அவரை அனுப்பும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் (குண்டு வீச்சில் ஈடுபடுபவருக்கு தூக்கு உறுதி என உணர்ந்தே அவர்கள் அம்முடிவை எடுக்கிறார்கள். ஆகவே எதிர்கால இயக்க நடவடிக்கைகளுக்கு அவசியம் என்று கருதி பகத்சிங்கை இச்செயலில் ஈடுபடுத்த மற்ற தோழர்கள் விரும்பவில்லை.). முடிவு, கமிட்டியின் பரிசீலனைக்கு வருகிறது. பெரும்பான்மை முடிவுப்படி பகத்சிங் இந்த செயலில் பங்கேற்கக்கூடாது என முடிவாகிறது.

இந்த முடிவுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு சுகதேவ் பஞ்சாபிலிருந்து வருகிறார். அவர் இம்முடிவைக்கேட்டு மற்ற தோழர்களை கடிந்துகொள்கிறார். மற்ற தோழர்கள் குண்டு வீசி கைதானால் அதனை பகத்சிங் அளவுக்கு பிரச்சாரமாக்க முடியாது எனும் அச்சத்தை சுகதேவ் விளக்குகிறார். நோக்கமும் நிறைவேறாது வீணே இரண்டு பேரின் உயிரையும் பலியிட வேண்டுமா என வினவுகிறார். நீண்ட சமாதானங்களுக்குப் பிறகு மீண்டும் முடிவு ஓட்டெடுப்புக்கு வருகிறது, பகத்சிங் தாக்குதலில் கலந்துகொள்வது என முடிவாகிறது.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.. தங்கள் வாழ்வின் இன்பங்களை நுகரும் பேரவாவில் இருக்கும் வயதுடைய இளைஞர்கள் தங்கள் உயிரை கொடுக்க முன்வந்து தங்கள் தோழனின் உயிரை நீட்டிக்க முடிவெடுக்கிறார்கள், இயக்கத்தின் எதிர்கால நலனுக்காக. காப்பாற்ற விரும்பிய நபர் உயிரைக்கொடுக்க முடிவாகிறது, தங்கள் லட்சியமும் மற்ற தோழர்களின் தியாகமும் கவனிக்கப்படாது போய்விடக்கூடாது என்பதற்காக. வீரமென்றால் இது வீரம். தியாகமென்றால் இதுதான் தியாகம். ஜனநாயகம் என்றாலும் இதுதான் ஜனநாயகம்.

மறுபுறம் காந்தியின் செயல்பாடுகளை பாருங்கள். சௌரி சௌரா சம்பவத்துக்காக தன்னிச்சையாக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்துகிறார். சக காங்கிரஸ் தலைவர்களே திகைத்தார்கள். எல்லோருக்கும் தெரிந்த செய்திதான், பட்டாபி சீதாராமையாவின் தோல்விக்கான அவரது எதிர்வினை. தன்னை எதிர்க்கும் ஒருவரது தேர்வை ஏற்க மறுக்கும் எதேச்சதிகாரம். தன் விருப்பத்துக்கு எதிராக இருந்தால் ஜனநாயகத்தை சவக்குழிக்கு அனுப்பும் அடாவடித்தனம். இதுதானே காந்தியின் முகம்?

தொடரும்….

முந்தைய பதிவு

காந்தி: வாழும் போதும்,வாழ்க்கைக்குப் பிறகும்

காந்தி- வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும்.

24 நவ்

 

தமிழ் சினிமாவில் வரும் “மாஸ்” திரைப்படங்கள் எப்படி இருக்கும்? ஹீரோ இளமையில் இருந்தே அதிபுத்திசாலியாக இருப்பார். அம்மா சென்டிமென்ட் இருக்கும். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இருக்கும். தன்வழியில் சிவனே என்று போய்க்கொண்டிருக்கும் ஹீரோவை வலிய வந்து வம்புக்கு இழுப்பான் வில்லன். அதன்பிறகு முட்டியை மடக்கிக் கைகளை உயர்த்தும் ஹீரோவிடம், வரிசையில் வந்து அடிவாங்கிச் செல்வார்கள் வில்லனின் அடியாட்கள். கடைசியில் பிரதான வில்லனை அடித்தோ அறிவுரை சொல்லியோ திருத்துவார் கதாநாயகன்.

காந்தியின் கதையும் சற்றொப்ப இதேபாணியில் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். (காந்தி பக்தர்கள் கொஞ்சம் நிதானிக்கவும்…) அவர் பெற்றோருக்குக் கட்டுப்பட்ட பிள்ளை, நன்றாகப் படிப்பவர், லண்டனுக்குப் படிக்கப் போகையில் மதுவைத் தொடமாட்டேன், பெண்களைப் பார்க்கமாட்டேன் என்ற சத்தியங்களைச் செய்தார். தென்னாப்பிரிக்காவில் அவரது வக்கீல் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது வெள்ளையன் ஒருவனால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். பிறகு மக்களைத் திரட்டிப் போராடினார். கடைசியாக இந்தியாவுக்கு கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் சுதந்திரம் வாங்கித்தந்தார்.

ஜாலியன் வாலாபாக்கில் பயன்படுத்தப்பட்டது துப்பாக்கிகள் என்பதால் மேற்சொன்ன வாக்கியம் பாதி உண்மை என்றே கொள்வோம். (எப்படியோ கத்தி இல்லை இல்லையா?!) 1915ல் இந்தியாவுக்கு வந்த காந்தியிடம் நூற்றைம்பது வருட விடுதலைப் போராட்டத்தின் ஒட்டுமொத்த ராயல்டியும் தரப்பட்டது எப்படி? போகட்டும், விடுதலை அவர் பேசி வாங்கித் தந்ததாகவே வைத்துக்கொள்வோம். அதற்காக அவரைத் தேசத்தந்தை என்றோ அல்லது தேச சித்தப்பா என்றோ அழைப்பது சரி. மகாத்மா எனும் அடைமொழி ஏன் காந்தி பெயரோடு எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கிறது?

எந்த கேள்வியும் இல்லாமல், தோராயமாக மூன்று தலைமுறை மக்கள் காந்தியை ஏற்றுக்கொள்ள பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவரது வாழ்வின் சில நேர்மறையான அம்சங்கள் மட்டும் மக்கள் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டு அவரை மகாத்மாவாகவே வைத்திருக்கும் வேலை இன்றளவும் தொடர்கிறது. காந்தி கொண்டாடப்பட வேண்டியவராகவும் பின்பற்றப்பட வேண்டியவராகவும் நூறாண்டுகாலமாக பிரசாரம் செய்யப்படுகிறார். சமகால அரசியல்வாதிகளில் தொடங்கி அவ்வப்போது வந்துபோகும் அண்ணா ஹசாரே, அப்துல் கலாம் போன்ற காமெடி டிராக் நபர்களையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள காந்தியைத் தெரிந்துகொள்வது அவசியம். அவர் பயன்படுத்திய அல்லது அவருக்காகப் பயன்படுத்தப்பட்ட நுட்பங்கள் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்தியாவில் ‘மாகாத்மா’ காந்தியின் காலம் 1915ல் தொடங்குகிறது. சத்யாகிரகம் எனும் தொழில்நுட்பத்துக்கான பேட்டன்ட்டுடன்தான் அவர் நம் நாட்டுக்கு வந்தார். சரியாக ஆறு ஆண்டுகள் கழித்து 1921ல் அவர் அகில இந்திய காங்கிரசுக்கு தலைவராகிறார். பெரிய அளவில் ஊடக வலுவில்லாத அந்தக் காலத்தில், வெறும் ஆறாண்டு காலத்தில், காந்தியால் முப்பதுகோடி மக்கள்தொகை கொண்ட ஒரு தேசத்தின் தலைவராக முடிந்ததன் விளைவுதான், திடீரென ஒருநாள் இரவில் அண்ணா ஹசாரேவால் ஊழல் ஒழிப்புப் போராளியாக முடிகிறது.

சத்யாகிரகம் என்பது வெள்ளையன் உதைவாங்காமல் நாட்டை ஆள உருவாக்கப்பட்ட போராட்டமுறை மட்டுமல்ல. பிரிட்டிஷ் அரசுக்கெதிராக வீரத்துடன் போராட முன்வந்தவர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி, அவர்களைச் சொந்த மக்களிடமிருந்து அன்னியப்படுத்தும் நோக்கமும் அதற்கு இருந்தது. காந்தியின் ஜால்ராக்களில் ஒன்றான அன்றைய ஆனந்தவிகடன் 1929 மே இதழில், பகத்சிங் பாராளுமன்றக் கட்டடத்தின் மீது குண்டு வீசியதைக் கண்டிக்கும் தலையங்கத்தைப் பாருங்கள்:

// இரண்டு இளைஞர்கள் திடீரென எழுந்து இரண்டு அசல் வெடிகுண்டுகளை எறிந்துவிட்டுகைத்துப்பாக்கிகளால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்களாம். இந்த இளைஞர்கள் இருவருக்கும் முழுமூடச் சிகாமணிகள்’ என்றபட்டத்தை விகடன் அளிக்க விரும்புகின்றான். முதலாவதாகமகாத்மாவின் சத்தியாக்கிரகப் பீரங்கியினால் தகர்க்க முடியாத அதிகார வர்க்கத்தை வெங்காய வெடியினாலும்,ஓட்டைத் துப்பாக்கியாலும் பயமுறுத்த அவர்கள் எண்ணியது மூடத்தனம்…//

காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் தெரிவு செய்யப்பட்டபோது, ‘பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என்னுடைய தோல்வி’ என பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தார் காந்தி. காந்தி ஆதரவாளர்கள் வரிசையாக ராஜினாமா செய்ய, சுபாஷ் வெறுத்துப் போய் பதவியை உதறினார். பகத்சிங் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனை குறித்து காந்தியின் ஆலோசனையைக் கேட்டு இர்வின் பிரபுவின் செயலாளர் கடிதம் எழுதுகிறார். அதற்கு காந்தியின் விசுவாசி பட்டாபி சீதாராமையா எழுதிய பதில் இதுதான்:

//“Ganthi himself definitely stated to the Viceroy that, if the boys should be hanged, they had better be hanged before the Congress, than after.”// (அதாவது அப்போது நடைபெற இருந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்னரேயே இந்த இளைஞர்களைத் தூக்கிலிடலாம் என்று காந்தியார் ஒப்புதல் வழங்கியுள்ளார்.)

இவ்விரு சம்பவங்களும் சொல்லும் கருத்து இதுதான். எந்த ஜனநாயக பண்புகளும் இல்லாத, தனக்கு நிகரான வேறு தலைவர்கள் உருவாவதையோ அல்லது தனக்கு இணையாக வேறொரு நபர் புகழ் பெறுவதையோகூட விரும்பாத தலைவராக இருந்திருக்கிறார் காந்தி. (அப்போது காந்தி அளவுக்கு புகழ் பெற்றிருந்தார் பகத்சிங் எனக் குறிப்பிடுகிறார் காங்கிரசின் அதிகாரபூர்வ வரலாற்றாசிரியர் பட்டாபி சீதாராமையா- The History of Indian National Congress நூலின் முதலாவது பாகம்.)

காந்தியின் சமத்துவ சிந்தனையும் பாசாங்குகள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. இறுதி நாள்வரை அவர் இந்து மதத்தின் பிற்போக்குத்தனங்களைப் பற்றிக் கொண்டவராகவே இருந்தார். அம்பேத்கரை தலித் மக்களின் தலைவராக அங்கீகரிக்க முடியாது என வெளிப்படையாகவே அறிவித்தவர் காந்தி. தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தரும் சட்டம் கொண்டுவருவதில் லண்டன் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரை வெல்ல முடியாத காந்தி, தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தரக்கூடாது என்பதற்காக, எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். தலித் மக்களின் விடுதலைக்கான அவரது முயற்சி, காந்தியைக் கொல்ல அவர் காட்டும் பிடிவாதமாக காங்கிரஸ்காரர்களால் திரிக்கப்பட்டது. காந்தி எனும் ஒற்றை நபருக்காக ஒட்டுமொத்த தலித் மக்களின் உரிமைகளையும் விட்டுத்தர வேண்டிய நிலைக்கு ஆளானார் அம்பேத்கர்.

தலித் மக்கள் ஏனைய உயர்சாதி மக்களை சார்ந்திருக்கும்படியாகவும் ஏழைகள் பணக்காரர்களை சார்ந்திருக்கும்படியாகவும் உள்ள சமூகத்தைத்தான் அவர் விரும்பினார். அவர் வலியுறுத்தியது சாதிகளுக்குள் இணக்கம் இருக்கவேண்டும் என்பதுதான், சாதி ஒழிப்பல்ல. (சாதி ஒழியவேண்டும் என காந்தி சொல்லவில்லை- ராஜாஜி.) அது வேலைக்காரனுக்கும் முதலாளிக்குமான இணக்கம். அது வேலைக்காரன் அடிமையாக இருக்கும் வரைதான் சாத்தியம். பணம் பணக்காரர்களிடம்தான் இருக்கவேண்டும், ஏழைகளுக்கு அவர்கள் புரவலர்களாக இருப்பார்கள் எனும் காந்தியின் சொற்றொடர் ஒன்றே போதும், அவர்களது செல்வந்தர்கள் மீதான பாசத்தைக் காட்ட.

Sarla Devi

தனிப்பட்ட நபராகவும் அவரது வாழ்வு கடுமையாக விமர்சிக்கத்தக்கதே. மெடலைன் சிலேட் மற்றும் சரளாதேவி சவுதாராணி (ரபீந்திரநாத் தாகூரின் உறவுக்கார பெண்) என்ற இரண்டு பெண்களுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது. சரளாதேவியை அவர் மணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தார். அந்த உறவு உடல் அளவிலானதல்ல, மன அளவிலானது என்றார் காந்தி. இந்த முடிவு ராஜாஜி, காந்தியின் மகன் தேவதாஸ் ஆகியோரால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.

சரளாதேவியுடனான நெருக்கம் காந்தி அவரது பஞ்சாப் வீட்டில் தங்கியிருந்தபோது உருவானது. அப்போது சரளாதேவியின் கணவர் ரவுலட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம்புங்கள், தன் தந்தையின் சாவுக்குப்பிறகு பிரம்மச்சர்யத்தை போதித்த காந்தி மையல்கொண்டது ஒரு மணமான பெண் மீது.

ஒருநாள் தூக்கத்தில் அவருக்கு விந்து வெளியேறியதால் அவரது பிரம்மச்சர்யத்தைப் பரிசோதிக்க எடுத்த முடிவு அநாகரிகமானது. பதினெட்டு வயதான அவரது பேத்தி மனுவுடன் ஓரிரவு ஆடையில்லாமல் படுக்கையில் இருப்பதன் வாயிலாக தனது பிரம்மச்சர்யத்தை அவர் பரிசோதித்தார். காந்தி தன்னுடன் ஆசிரமத்தில் இருந்த பெண்களை உடலுறவு இல்லாமல் வாழும்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தினார். ஆசிரமப் பெண்கள் சிலருடன் அவர் நெருக்கமாக இருந்தது அவரது தொண்டர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மோகன்தாஸ் காந்திக்கு ஒருவித நரம்பு நோய் இருந்தது. மிகவும் அழுத்தம் அதிகமான கட்டங்களில் காந்தியின் உடல் தாங்கமுடியாமல் நடுங்க ஆரம்பிக்கும். அப்போது அவர் யாரையாவது அணைத்தவாறு படுத்திருப்பார். இவ்வாறு அவர் அணைத்துக்கொண்டு படுத்தது ஆஸ்ரமத்தில் இருந்த பெண்களில் ஒரு சிலரை. ஆனால் இது வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும். கஸ்தூர்பாவும் அதே ஆஸ்ரமத்தில்தான் அப்போது இருந்தார். (“I am taking service from the girls” என்று காந்தி பலமுறை இதைப்பற்றிக் கடிதங்களில் குறிப்பிடுகிறார்.) – “மோகன்தாஸ்” புத்தகத்தில் ராஜ்மோகன் காந்தி.

மேற்கூறிய செய்திகள் வாயிலாக நான் காந்தியைப் பெண் பித்தர் எனச் சொல்ல வருவதாக எண்ண வேண்டாம். அவரது திருமணத்து வெளியேயான உறவுகள் என்பது அவரது தனிப்பட்ட விடயம் என்பதில் எனக்கு விமர்சனம் இல்லை. ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக, தன்னைப் பின்பற்றிய, தன்னுடனிருந்த  பெண்களை, ஒரு கருவிபோல மட்டும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நிச்சயம் விமர்சனம் செய்யப்படவேண்டியதே. பிரம்மச்சர்யத்தை சோதித்துத் தன்னை நிரூபித்தார், சரி, அதில் பயன்படுத்தப்பட்ட மனுவின் கதி?

Manu

இத்தகைய முரண்பாடான அரசியல் மற்றும் சொந்த வாழ்வைக் கொண்டிருந்த காந்தி ஏன் இன்றளவும் அப்பழுக்கற்றவராகக் காட்டப்படுகிறார்? இந்தக் கேள்வியை எழுப்பவே மேலேயுள்ள தகவல்களைத் தர வேண்டிய அவசியம் உருவாகிறது. அவரது கதை ஏதோ ராமாயணம் அல்லது திருத்தொண்டர் புராணம் போலவோ, வெறும் பஜனையாகவோ பாடப்பட்டால் நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை. மாறாக, அவர் தேசத்தின் முகமாகக் காட்டப்படுவது வேறு பல காரணங்களுக்காக.

விடுதலைக்கு முன்பாக சத்தியாகிரகம் எப்படி ஆங்கிலேயனுக்குத் தேவைப்பட்டதோ இப்போதும் அது நவீன அதிகார வர்க்கத்துக்கும் தேவைப்படுகிறது. காந்தியை ஆதர்ச தலைவனாகத் தொடர்ந்து முன்னிறுத்துவதன் மூலம்தான், அனேக மக்கள்திரள் போராட்டங்களைத் தீவிரவாதமாகச் சித்திரிக்க முடியும். சமீபத்தில் கூடங்குளம் போராட்டம் பற்றி சுப்பிரமணியம் சாமி சொன்ன ஒரு விமர்சனம்- “அது நக்சலைட்டுக்கள் நடத்தும் போராட்டம்.” (டைம்ஸ் நவ் டிவியில்.) ஆக ஒரு போராட்டம் நடத்தப்படும் காரணிதான் அதனை சாத்வீகப் போராட்டமா அல்லது தீவிரவாதமா என அதிகாரவர்கத்தை முடிவெடுக்க வைக்கிறது. காந்தி எனும் பிம்பத்தை உயிருடன் வைத்திருப்பது இந்த கபடத்தனத்தைச் சுலபமாக்குகிறது.

ராகுல் காந்தியின் ஒரு கோடி ரூபாய் ஏழைவீட்டுச் சப்பாத்திக்கான யோசனை எம்.கே.காந்தியிடமிருந்து பெறப்பட்டதுதான். அவர்தான் பிர்லா கட்டிக்கொடுத்த மாளிகைகளில் தங்கிக்கொண்டு இந்தியாவின் கடைக்கோடி ஏழைகளைப்போல உடுத்திக்கொண்டிருந்தவர். காரணமேதும் தெரியாமல் காந்தி மகாத்மா என அடைமொழியிட்டு அழைக்கப்பட்டதன் விளைவுதான் தளபதி, அஞ்சாநெஞ்சன், புரட்சித்தலைவி என அடைமொழிகள் பொருத்தமில்லாத நபர்களை அலங்கரிக்கின்றன.

மதத்தை அரசியலுடன் கலந்தது மற்றும் பஜனையைப் போராட்டமாக்கியது என அவர் இந்திய அரசியலுக்கு இரண்டு மோசமான முன்னுதாரணங்களைத் தந்திருக்கிறார். இந்து வைணவரான காந்தி தன் ராம பக்தியைத் தன்னுடன் மட்டும் வைத்துக்கொள்ளாமல் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்தார். பாரதீய ஜனதா பிற்பாடு இந்த அடிப்படைவாதத்தில் ஏராளமான ரத்தத்தைக் கலந்து வளர்ச்சியடைந்தது.

காந்தி சாத்வீகத்தை மக்கள் போராட்டத்தில் மட்டும்தான் வலியுறுத்தினார். இயல்பில் அவர் ஒரு சர்வாதிகாரியாகவே இருந்திருக்கிறார். பம்பாய் கப்பற்படையினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒடுக்க தனது தொண்டர்களை அனுப்பியது காங்கிரஸ் கட்சி. அதன் தோல்விக்குப் பிறகு காந்தி சொன்னது:

அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டைக் காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காண்பதற்கு நான் 125 ஆண்டுகள் வாழவிரும்பவில்லை. மாறாகத் தீயிலிட்டு என்னை அழித்துக் கொள்வேன்” (: ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946.)

அவர் நடத்த விரும்பிய அரசு வெள்ளையன் நடத்திய ஆட்சியை ஒத்ததாகவே இருந்திருக்க முடியும். இரண்டாம் உலகப் போரில் இந்தியர்கள் பங்கேற்பதை அவர் தயக்கமில்லாமல் விரும்பினார், வெள்ளையனைப் போலவே. பெஷாவரில் நடைபெற்ற எழுச்சிமிக்க மக்கள் போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு தன் படைகளை அனுப்பியது. சொந்த மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வீரர்கள் மறுத்தார்கள். அதனைக் கண்டித்து காந்தி சொன்ன வாசகங்கள்:

”இராணுவ சிப்பாயாக வேலைக்கு சேர்ந்த பிறகு இராணுவ அதிகாரி யாரை சுட்டுக் கொல்லச் சொன்னாலும் சுடவேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அவன் கீழ்ப்படிய மறுத்த பெருங்குற்றத்தைச் செய்தவன் ஆவான். அப்படி சுட்டுக் கொல்லச் சொன்ன பிறகும் அதைச் செய்ய மறுக்குமாறு நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும்போது இதே அதிகாரிகளையும் சிப்பாய்களையும்  பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். இப்பொழுது நான் அவர்களை அவ்வாறு சுட மறுக்குமாறு கற்பித்தால் பின்னர் நான் அவர்களை சுடச் சொல்லும்போதும் இவர்கள் இதே போல கீழ்ப்படிய மறுக்க நேரிடும் என அஞ்சுகிறேன்.’’

பிடிவாதம், எதேச்சதிகாரம், மத அடிப்படைவாதம், ஜனநாயக விரோதம் என நம் சமகால அரசியல்வாதிகளில் எல்லா அடாவடிகளையும் அப்போதே கொண்டிருந்தவராக இருந்திருக்கிறார் காந்தி. எத்தனை உதைத்தாலும் வாங்கிக்கொள் என அவர் மக்களுக்கு மட்டும் அறிவுரை சொன்னதால்தான் இன்றுவரை அவரை அதிகாரவர்க்கம் கொண்டாடுகிறது.

எனக்கு வண்ணதாசனைப் பிடிக்கும் என்பது மாதிரியான நிலைப்பாட்டை நாம் காந்தியின் மீது வைக்க முடியாது. காந்தியை ஏற்றுக்கொள்ளும்போதே நீங்கள் பகத்சிங்கை நிராகரிக்கிறீர்கள், கட்டபொம்மனின் தியாகத்தைக் குறைத்து மதிப்பிடும் மனோநிலைக்கு ஆளாகிறீர்கள். பாஸ்கோவுக்கு ஆதரவாக, பழங்குடிகளுக்கு எதிராகத் தரகு வேலை பார்க்கும் மன்மோகன் கும்பலும் தான் காந்திய வழியிலான அரசை நடத்துவதாக கருதிக்கொள்ளலாம், அதற்காக அவர் எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்ள அவசியமிருக்காது.

நிறைவாக, காந்தியைக் கொண்டாடாதீர்கள் எனக் கேட்பதற்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை. கொண்டாடும் முன்பு அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்ளவே எழுதப்படுகிறது. காந்தியின் நோக்கங்கள் உயர்வானவை, நடைமுறைப்படுத்துவதில் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என நீங்கள் வாதிட்டால் அதற்கு காந்தியின் வார்த்தைகளிலேயே பதில் இருக்கிறது,

“முடிவைவிட முறையே முக்கியம்!” (சௌரி சௌரா சம்பவத்துக்காக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது காந்தி உதிர்த்த வாசகம்.)

முதல் பதிவு: வில்லவன்

தொடரும்……

எகிப்தில் மீண்டும் பரவும் மக்கள் போர்

22 நவ்

எகிப்து நாட்டில் ராணுவத்தினருக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது. தக்ரீர் சதுக்கத்தில் திரண்டு இருந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

30 ஆண்டுகாலம் எகிப்து நாட்டை ஆட்டிப் படைத்து வந்த ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் அங்கு மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். சுதந்திர சதுக்கத்தில் குழுமி மக்கள் நடத்திய போராட்டத்துக்கு ராணுவமும் மறைமுக ஆதரவு அளித்தது. இதையடுத்து முபாரக் பதவியை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. 

முறைப்படி தேர்தல் நடத்துவோம் என்று அது கூறிய நிலையிலும், இன்னும் அது ஆட்சி நிர்வாகத்திலிருந்து அகலாமல் உள்ளது.

ராணுவத்திற்கு எதிராக போராட்டம்

இதையடுத்து தற்போது ராணுவம் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று கோரிமக்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சுதந்திர சதுக்கத்தில் திரண்ட அவர்கள் அங்கிருந்தபடி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக நடந்து வரும் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. 

போராட்டம் நடத்த திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து விலகிச்செல்லுமாறு போலீஸாரும், ராணுவத்தினரும் உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் அகல மறுத்ததால் கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினார். 

போராட்டக்காரர்கள் அதற்கும் அசையாமல் இருக்கவே பின்னர் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கடந்த இரு தினங்களில் மட்டும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை காணப்படுகிறது.

பரவும் போராட்டம்

வன்முறை மூலம் தங்களை ஒடுக்க போலீஸாரும், ராணுவமும் முயல்வதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். என்ன நடந்தாலும் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் மக்களாட்சி மீண்டும் மலரும் வரை போராடப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கூறியுள்ளனர்.

கெய்ரோ தவிர அலெக்சான்ட்ரியா, சூயஸ் உள்ளிட்ட நகரங்களிலும் கூட போராட்டம் வெடித்துள்ளதால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

**************************************************

சாராம்சத்தில் மக்கள் ஏகாதிபத்தியங்களை எதிர்த்தே மக்கள் கிளர்ந்தெழுகிறார்கள். ஆனால் அந்த கிளர்ச்சியின் பலன்களை அதே ஏகாதிபத்தியங்களும், மதவாதிகளும் அறுவடை செய்து கொள்கிறார்கள். கவர்ச்சிகரமான முழக்கங்கள் மூலம் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகிறார்கள். காரணம் மக்கள் போராட்டங்கள் திசை திருப்பப்படுவதைத் தடுக்கவும், தகுந்த விழிப்புணவுடன் போராட்டங்களை வழிநடர்த்தவும், அதனூடாக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புரட்சிகர கட்சிகள் ஏதும் இல்லாததே. சில மாதங்களிலேயே மீண்டும் மக்கள் திரண்டெழுந்திருப்பதே புரட்சிகர இடதுசாரி கட்சியின் தேவையை உணர்த்துவதாக இருக்கிறது.

மேலும் விபரங்களுக்கு,

அரபுலக எழுச்சி: தேவை அரசை மாற்றுவதா? ஆளை மாற்றுவதா?

கடவுள் குறித்த விவாத அறிவிப்பு

21 நவ்

கடவுளின் இருப்பு மனிதனுக்கு இன்றியமையாததா?

கடவுள், மதம் குறித்த விவாதங்கள் மட்டுமே என்னை அடையாளப்படுத்தும் கருவியாகி விடக் கூடாது என்பதில் நான் கவனம் கொள்ள விரும்புகிறேன். ஆனாலும், கடவுள் குறித்த விவாதங்களிலேயே நான் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டிய சூழல் நேர்கிறது. மனிதனின் வாழ்வில் மதமோ கடவுளோ ஆழமான பங்களிப்பைச் செய்வதில்லை. ஆனால், மேலோட்டமான பார்வையில் கடவுளே அனைத்தையும் தீர்மானிப்பதாக, தங்கள் வாழ்வை வழி நடத்துவதாக நம்பிக் கொள்கிறார்கள். ஆக கடவுள் குறித்த விவாதம் என்றால் அது வாழ்வின் ஆழமான பார்வைக்கும், மேலோட்டமான பார்வைக்குமான முரண்பாடு என்பது என்னுடைய நிலைப்பாடு.

பதிவர் குலாம் அவர்களை சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவர் எனக்கு அறிமுகம் செய்தார். அவர் பதிவுகளின் சுட்டிகள் சிலவற்றை தந்து படிக்கப் பணித்தார். அந்த வகையில் எனக்கும் குலாமுக்குமான விவாதம் செங்கொடி தளத்தில் நடந்தது. அந்த தொகுப்பை, விரும்புபவர்கள் இங்கு படித்துக் கொள்ளலாம். அதில் அவர் பதிவுக்கு எதிர்பதிவு எனும் ரீதியில் விவாதித்துக் கொள்ளலாம், பின்னூட்டத்தில் ஆழமாக விவாதிக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். அப்போதிலிருந்து நல்லூர் முழக்கத்தில் எதிர்ப்பதிவு இடுவது குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். பின்னர் அவரே நல்லூர் முழக்கத்தில் அழைப்பு விடுத்தது, இந்த தொடர் பதிவுக்கான வாய்ப்புகளை துரிதப்படுத்தியது.

எதிர்ப்பதிவு வகையான இந்த விவாதத்தில் ஒரு பதிவு இடுவதற்கு ஒரு வாரகாலம் போதுமானதாக இருக்கும் என கருதுகிறேன். எனவே பதிவு இடப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் அதற்கான எதிர்ப்பதிவு இடப்பட வேண்டும். (இது குறைந்த கால அளவு என நண்பர் கருதினால் உகந்த கால அளவை குறிப்பிடலாம்) தவிர்க்க முடியாமல் ஒரு பதிவு வெளியிட தாமதமானால் அந்த காலத்திற்குள் தாமதமாவதையும், அந்தப்பதிவை எப்போது பதிவிடமுடியும் என்பதையும் குறிப்பிட்டு பின்னூட்டம் இடவேண்டும். பதிவிட்டதும் எந்தப் பதிவை மறுத்து இடப்படுகிறதோ அந்தப் பதிவில் மறுப்பு இடப்பட்டுள்ளதை பின்னூட்டம் மூலம் தெரிவிக்க வேண்டும். விவாதம் தொடர்பான அனைத்தையும் வெளிப்படையாக பின்னுட்டம் இடுவதன் வாயிலாகவே தெரிவிக்க வேண்டும், மின்னஞ்சல் தொடர்பு கூடாது. பொதுவான வேறு விதிமுறைகள் எதுவும் இருந்தால் நண்பர் தெரிவிக்கலாம்.

வழக்கம் போல என்னுடைய வாதங்களை தகுந்த உள்ளீட்டுடனும், போதிய வீரியத்துடனும், வீண் அலங்காரங்களோ, வசைகளோ இன்றி எடுத்துவைப்பேன் என உறுதி கூறுகிறேன்.

அடுத்து, குற்றச்சாட்டைப் போன்ற ஒன்றை என்மீது நண்பர் குலாம் சுமத்தியிருக்கிறார். \\பின்னூட்டரீதியாக விவாதித்த வரையில் கும்மி, தருமி ஐயா, தமிழன், செங்கொடி வரை ஒரு நிலையில் கடவுள் – நாத்திகம் குறித்த கேள்விகளுக்கு இஸ்லாத்தை முன்னுருத்தியே பதிலிட்டனர்// இதில் கும்மி, தருமி ஐயா, தமிழன் போன்றோர் குறித்து அவர்களே பதில் தரும் பொறுப்புள்ளவர்கள். என்னைப் பொருத்தவரையில் நான் கடவுள் என்ற பொதுவான அம்சத்தைக் கொண்டுதான் பதில் கூறியிருந்தேனே தவிர, குறிப்பாக இஸ்லாத்தை முன்வைத்து பதில் கூறவில்லை. ஆனால் சிலவற்றை விளக்குவதற்கு இஸ்லாத்தையும் எடுத்துக் கொண்டிருந்தேன். அதேநேரம் நண்பர் குலாமின் வாதங்கள் கடவுள் மதம் என்று பொதுவான சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் அவை இஸ்லாத்தையே உள்ளடக்கமாக கொண்டிருந்தன. கடவுளுக்கான வரைவிலக்கணமாக அவர் கூறியிருந்தது ஏனைய மதக் கடவுளர்களுக்கு பொருந்தாமல் இஸ்லாமிய மதக் கடவுளுக்கே பொருந்தியிருந்தது. எனவே என்னுடைய பதிலும் இவற்றை கவனத்தில் கொண்டதாக இருப்பது தான் சரியானது. தவிரவும், நண்பரின் நோக்கம் இஸ்லாமாக இருக்கும் போது அதை தவிர்க்கவும் முடியாது.

அடுத்து, நண்பர் இரண்டு கேள்விகளை விவாதத்திற்கான முன்நிபந்தனையாக குறித்திருந்தார். \\ இஸ்லாமும் அது கூறும் கோட்பாடுகளும் இவ்வுலக வாழ்க்கைக்கு பொருந்தாதென்றால் அதைவிட விரிவாக தெளிவாக எல்லா மக்களும் பின்பற்றும் வகையில் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் வகையில் சட்டங்களை இயற்ற முடியுமா…?
கம்யூனிஷ வர்க்க சட்டங்களால் அந்நிலை முடியும் என்றால் முதலில் அந்த கம்யூனிஷம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்- பாதுக்காப்புகள் சமூகரீதியான மேம்பாடுகள் குறித்து சுருக்கமாக சொல்லுங்கள்., // கடவுள் குறித்த விவாதத்தில் சட்டங்களும், பெண்களுக்கான பாதுகாப்பும் என்ன பாத்திரத்தை வழங்க முடியும்? என எழும் ஐயத்தை ஒதுக்கிவிட்டு நண்பரின் கேள்விகளை எடுத்துக் கொள்ளலாம். முதலில் சட்டம், அரசு, வர்க்கம் என்பவை குறித்து சரியான புரிதல் இருந்தால் தான் இதற்கான பதிலை முழுமையாக உள்வாங்க முடியும்.

மனித இனம் எனும் அடிப்படையில் அனைவரும் ஒன்று என்றாலும் வாழ்நிலை, வாய்ப்புகள், உழைப்பு, உற்பத்தியின் பலன்கள் போன்றவற்றின் அடிப்படையில் மனிதர்கள் பலவாறாக பிரிந்திருக்கின்றனர். இந்த வர்க்கப் பிரிவுகளுக்கிடையே எழும் முரண்பாடுகளைத் முடித்து வைப்பதற்காக தோன்றிய அமைப்பே அரசு என்பது. அந்த முரண்பாடுகளை முடித்துவைக்கத் தோன்றிய வழிமுறைகள் தான் சட்டம் என்பது. இதில் அரசை எந்த வர்க்கம் கைப்பற்றிக் கொள்கிறதோ அந்த வர்க்கத்திற்கு சாதகமாகத்தான் சட்டங்கள் வடிக்கப்படுகின்றன. ஒரு வர்க்கத்திற்கு பலன் தரும் வகையில் வார்க்கப்பட்ட சட்டங்கள் அரசின் அதிகாரத்தாலும், பலத்தாலும் அனைவருக்கும் பொதுவானதாக ஏற்றுக் கொள்ளச் செய்யப்படுகின்றன. இதுவரை உலகில் பயன்பாட்டில் இருந்த, இருக்கும் அனைத்து சட்டங்களுக்கும் இது பொருந்தும்.

நண்பரின் முதல் கேள்வியை எடுத்துக் கொண்டால் \\எல்லா மக்களும் பின்பற்றும் வகையில் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும்// என்று இரண்டு கருத்துகளை வைத்திருக்கிறார். இஸ்லாமியச் சட்டங்கள் இந்த இரண்டையும் நிறைவு செய்தனவா? இல்லை. ஏற்கனவே இருந்த நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது தான் இஸ்லாம். இஸ்லாம் கூறும் கலாச்சார வழிமுறையை ஏற்று மரபை விட்டுவிட முன்வந்தவர்களால் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடிந்தது தான் இஸ்லாமியச் சட்டம். ஆக, எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் அதன் பணி ஏற்கனவே இருந்துவரும் நடைமுறை வாழ்வை மாற்றுவதும், அரசின் அதிகாரத்தையும் பலத்தையும் கொண்டு அனைவரையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதும் தான். உழைப்புக் கருவிகள் எதுவும் சொந்தமாக இல்லாத, உற்பத்தியின் பலனை குறைந்த அளவே பெறுகிற ஒரு பாட்டாளிக்கும், உற்பத்திக் கருவிகளையும், வாய்ப்புகளையும் கொண்டிருக்கும் உற்பத்தியின் பலனை அதிக அளவில் அனுபவிக்கும் ஒரு முதலாளிக்கும் பொருந்தி வருகிற ஒரே சட்டம் என்று ஒன்று இருக்க முடியுமா? ஒரு சட்டம் அனைத்து வர்க்கங்களுக்கும் பொதுவானதாக, பின்பற்றக் கூடியதாக இருக்க முடியும் என எண்ணுவதே இதில் ஆழமான புரிதல் இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதாகத் தான் கொள்ளமுடியும்.

மேற்கூறிய அடிப்படையில் அமைவது தான் சோசலிச சட்டங்களும் என்றாலும் இரண்டு விதங்களில் அது ஏனைய சட்டங்களிலிருந்து மாறுபடுகிறது. ஒன்று, இதுவரை உலகில் அமைந்த அனைத்துவித அரசுகளும் அதன் சட்டங்களும் சிறுபான்மை வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக கொண்டு அமைந்திருக்கின்றன. சோசலிசம் மட்டுமே பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்தை ஆளும்வர்க்கமாக கொண்டு அமைந்தது, அமையும். ஆகவே இதுவரையான சட்டங்கள் குறைந்த அளவு மக்களுக்கு சாதகமாகவும், பெருமளவு மக்களுக்கு பாதகமாகவும் இருந்த நிலை மாறி சோசலிசத்தில் பெருமளவு மக்களுக்கு சாதகமாகவும், குறைந்த அளவு மக்களுக்கு பாதகமாகவும் மாறும். இரண்டு, இதுவரை அமைந்த அனைத்து அரசுகளும் அதன் சட்டங்களும் இருக்கும் வர்க்க வேறுபாடுகளை தக்கவைப்பதன் மூலம் அரசு எனும் அமைப்பை நீட்டிப்பதை நோக்கமாக கொண்டவை. சோசலிசம் மட்டுமே வர்க்க வேறுபாடுகளை களைந்து மக்களை ஒரே வர்க்கமாக மாற்றும் திட்டத்துடன் அரசு எனும் அமைப்பை உதிரச் செய்வதை நோக்கமாக கொண்டது. எனவே அனைத்து அரசுகளும் வர்க்கங்களை தக்கவைத்துக் கொண்டே வர்க்கச் சட்டத்தை பொதுச் சட்டமாக மாற்றுகையில் சோசலிசம் வர்க்க பேதங்களை அகற்றி மெய்யான பொதுச்சட்டத்தை கட்டியமைக்கும் பணியை தன்னுடைய நோக்கமாக கொண்டிருக்கிறது. ஆகவே, ஏனைய அனைத்து சட்டங்களை விட சோசலிச சட்டமே சிறப்பானது.

இரண்டாவது கேள்வியை எடுத்துக் கொண்டால், சோவியத்களில் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்புகள். அனைவருக்கு கட்டாயக் கல்வி எனும் அடிப்படையில் (முதியோர் கல்வி உட்பட) பெண்கள் முழுமையாக கல்வியறிவு கொண்டவர்களாக ஆக்க சட்ட வழிமுறை ஏற்படுத்தப்பட்டது. குழந்தை வளர்ப்பு, சமையல் போன்ற பெண்களுக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவராத, அடிமைத்தளையில் கட்டுண்டு கிடப்பதை உறுதிப்படுத்தும் உழைப்பு முறையை அகற்றுவதற்காக பொது குழந்தை வளர்ப்பு மையங்களையும், பொது சமையல் கூடங்களையும் ஏற்படுத்தியது. அரசியலிலும், சட்ட வடிவமைப்பிலும் பெண்களின் கருத்துகளும், எதிர்வினைகளும் ஏற்றுக்கொண்டு நிர்வாக விதிகளை திருத்தியது. சமவேலைக்கு சமகூலி முறையை கொண்டுவந்தது, அதாவது ஒரே வேலையைச் செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே கூலி. ஆணும் பெண்ணும் சமமாக கருதப்படுவதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்தது. இதுபோல் நிறைய கூறலாம், சுருக்கமாக இவை போதுமானவை.

இனி விவாதக் கேள்விகளுக்குள் நுழையலாம். \\நீங்கள் கடவுள் மறுப்பாளர் என்றால் ஏன் கடவுளை மறுக்க வேண்டும்? அப்படி மறுக்கக்கூடிய கடவுள் எப்படிப்பட்டவர்?// \\கடவுள் ஏன் இருக்க கூடாது?// இதில் நீங்கள் மறுக்கும் கடவுள் எப்படிப்பட்டவர்? எனும் கேள்விக்கு செங்கொடி தளத்தில் நடந்த விவாதத்தில் பதில் கூறப்பட்டு விட்டது. அது குறித்து நண்பர் மேல் விளக்கங்கள் அளிக்கும்போது விரிவாக அலசலாம். எனவே, கடவுள் ஏன் இருக்கக் கூடாது? எனும் கேள்வியை எடுத்துக் கொள்வோம்.

கடவுள் ஏன் இருக்கக் கூடாது என்பதை விட கடவுள் இருப்பதாக ஏன் நம்பக் கூடாது? என்பதே பொருட்பிழையற்ற கேள்வியாக இருக்கும் என கருதுகிறேன். இதை இரண்டு விதங்களில் பார்க்கலாம். ஒன்று, கடவுள் இருப்பதாக கருதப்படுவதால் மக்களுக்கு கிடைத்த பலன்கள் என்ன? இரண்டு, கடவுள் இருப்பதாக கருதப்படுவதால் மக்களுக்கு கிடைத்த தீதுகள் என்ன?

மதவாதிகளின் விளம்பல்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கடவுளின் இருப்பால் இரண்டு முதன்மையான பலன்கள் மக்களுக்கு கிடைப்பதாக கருதப்படுகிறது. ஒன்று, தவறு செய்யாமல் நேரிய வழியில் நடக்க உதவுகிறது. இரண்டு, துயரமான போதுகளில் துவண்டுவிடாமல் ஆறுதலளிக்கிறது. இந்த இரண்டுமே மக்களின் கடவுள் குறித்த நம்பிக்கையிலிருந்து பிறந்திருக்கிறதேயன்றி உண்மையிலிருந்து பிறந்த கருத்துகளல்ல. உலகின் பெரும்பான்மையான மக்கள் ஏதோ ஒரு விதத்தில் கடவுளின் இருப்பை ஏற்றுக் கொள்பவர்கள் தான். உலகில் சட்டரீதியில் குற்றமிழைத்தவர்களில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே மிக அதிகம். எனவே கடவுள் நம்பிக்கை குற்றம் செய்வதிலிருந்து தடுக்கிறது என்பது சரியான கூற்றாக இருக்க முடியாது. அதேநேரம் உலகின் பெரும்பான்மையோர் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்கிறார்களே இதில் கடவுள் நம்பிக்கையின் பங்களிப்பு இருக்கிறதா? சமூகம் தான் இதில் பெரும்பங்கு வகிக்கிறது. குற்றம் வெளிப்பட்டாலோ, தண்டனை கிடைத்தாலோ அதனால் ஏற்படும் சமூக மதிப்பிழப்பு தான் குற்றம் செய்வதிலிருந்து தடுக்கிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதால் இயல்பான கூடி வாழும் பண்பு, தனிமைப் படுத்தப்படுதலின் வலி, தண்டனையின் மீதான பயம் இவை அனைத்தும் ஒன்றுகூடித்தான் மனிதன் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பெருமளவில் தடுக்கிறதேயன்றி கடவுள் நம்பிக்கை அல்ல. கடவுளின் மீதான நம்பிக்கையும் இதற்கு உதவுகிறது என்றாலும் சமூகத்துடன் ஒப்பிடும்போது சொற்ப அளவுதான்.

எல்லா மதங்களின் கடவுளர்களும் தாங்கள் மக்களை பாதுகாப்பதாக பல வழிகளில் கூறுகின்றன. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே மனிதர்கள் தங்களுக்கு நேரும் இன்னல்களை கடவுளால் தரப்பட்ட சோதனை எனக் கருதுகிறார்கள். அந்த வகையில் தங்களின் வணக்க வழிபாடுகளை செயல்படுத்துவதன் மூலம் அதிலிருந்து மீளமுடியும் எனும் ஆறுதல் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் மெய்நிலையில் எந்த ஒரு அற்ப பிரச்சனையானாலும் அதற்கெதிராக மனிதன் போராடியே மீள வேண்டியதிருக்கிறது. யதார்த்தத்தில் தங்களின் உழைப்பும், போரட்டங்களுமே வாழ்வில் தங்களின் இன்னல்களை, பிரச்சனைகளை தீர்த்திருக்க அதற்கு மாறாக போராட்டங்களின் வெம்மைகளை தணித்துக் கொள்ள பொய்யான இளைப்பாறலை கடவுள் நம்பிக்கையின் மீது அடைகிறான். இந்த இளைப்பாறல் எந்த விதத்திலும் மனிதனுக்கு மீளாற்றலை தந்துவிடுவதில்லை. இதை கடவுள் எனும் கருத்தியல் தான் செய்யமுடியும் என்பதும் இல்லை. தனக்குகந்த எந்த அம்சத்தைக் கொண்டும் இந்த இளைப்பாறலை மனிதன் பெற்றுவிட முடியும். ஆகவே, கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று இருந்தே தீரவேண்டும் எனும் அவசியம் மனிதனுக்கு இல்லை.

கடவுள் நம்பிக்கையை மனிதன் கொண்டிருப்பதால் ஏற்படும் தீதுகளைப் பார்த்தால், எல்லா கடவுளும், மதங்களும் விதிக் கொள்கையை கொண்டிருக்கின்றன. இதன் சாராம்சமான விளைவு மனிதனுக்கு இந்த உலகில் ஏற்படும் சிக்கல்களிலிருந்து தீர்வை நோக்கி பயணப்படும் பாதையை மடைமாற்றுவது தான். என்ன நடந்தாலும் அது கடவுளிடமிருந்து வந்தது எனும் நம்பிக்கை ஒருவனிடம் ஏற்பட்டு விட்டால் அவன் நிகழ்வின் மெய்யான காரணிகளை நோக்கி நகரவே மாட்டான். உலகில் மனிதர்கள் மேலெழுந்தவாரியாக சிந்திப்பதும் பேசுவதுமே இதன் சான்று. ஏனென்றால் குழந்தைப் பருவத்திலேயே மனிதனின் சிந்திக்கும் பாதையை கடவுள் நம்பிக்கை கைப்பற்றி விடுகிறது. அதை மீறி சிந்திப்பதற்கு அவனின் சூழலும் அனுமதிப்பது இல்லை. மட்டுமல்லாது, விதிக்கொள்கையை திரளாக பார்த்தால் அது மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லை என்றே பொருள் தருகிறது. ஆனால் மனிதன் சிந்திக்கிறான் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்கப் போவதில்லை. எனவே யதார்த்தத்திற்கு முரணான கருத்தை சிந்தையில் ஏற்றிவைத்திருப்பது தேவையற்றது.

எல்லா கடவுளின் மதங்களுமே ஏதோ ஒரு வடிவத்தில் மறுபிறப்பு கொள்கையை கொண்டிருக்கின்றன. இது மனிதர்களுக்கு ஏற்படும் சரியான கோபங்களைக் கூட தணித்து விடுகின்றன. மக்கள் விரோத செயலொன்றை சந்திக்கும் மனிதன் அதை எதிர்த்து வினையாற்றாமல் கடவுள் தண்டிப்பார் என்று தம் பலம் பலவீனம் சார்ந்து ஒதுங்கிவிடுவது கடவுளின் மறுபிறப்பு வகைப்பாட்டின் பின்னணியிலேயே வருகிறது. ஆனால் துலக்கமான வாழ்வு பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் மட்டுமே நிலவுவதால், அந்த வாழ்வில் போரட்டத்திற்கான வீரியத்தை இழந்து விடுகிறான். நிச்சயமற்றதாக இருக்கும் மறுபிறப்பிற்காக நிச்சயமான வாழ்வின் களங்கள் சிதைக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

மனிதனல்லாத பிற உயிரினங்களில் கடவுள் எனும் தாக்கம் இல்லை. ஏனென்றால் அவைகளுக்கு தமது தேவைகளைத் தாண்டிய சிந்தனை இல்லை. மனிதன் மட்டுமே சூழலை தனக்கு உகந்ததாக திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுகிறான். இதில் அவனுக்கு தோன்றும் இயலாமைகளின் உருவெளியே கடவுள் எனும் அப்பாற்பட்ட சக்திக்கான தேவையை ஏற்படுத்துகிறது. அதேநேரம் கடவுள் எனும் அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது எனும் எண்ணம் மனிதர்களுக்கு ஏற்படவே இல்லை என்று கொண்டால் இன்று மனிதன் கண்டிருக்கும் எந்த முன்னேற்றமும் தடைபட்டிருக்காது என்பதோடு மட்டுமன்றி இன்னும் மேலதிக உயரங்களை மனிதன் எட்டியிருக்கக் கூடும். எப்படி என்றால், கடவுள் இருப்பு, கடவுள் மறுப்பு என்ற நிலை மட்டுமே பூமியில் இல்லை. கடவுள் இருப்பின் அடிப்படையில் பல்வேறு மதங்கள் கட்டமைக்கப் பட்டிருப்பதால், வரலாற்றில் மனிதனின் ஆற்றல் பெருமளவில் மதங்களுக்கிடையேயான முரண்பாட்டிற்காகவே செலவழிக்கப்பட்டிருக்கிறது, செலவு செய்யப்பட்டும் வருகிறது. ஆகவே கடவுள் நம்பிக்கை மனிதர்களுக்கு, மக்களுக்கு இருந்தே தீர வேண்டும் எனும் காரணி எதுவும் இல்லை என்பதால் கடவுள் இருக்கிறார் எனும் நம்பிக்கை மனிதனுக்கு அவசியமில்லை. அது மனிதனுக்கு எந்த விதத்திலும் பலன் தரப் போவதுமில்லை.

எதிர்ப்பதிவு வகைப்பட்ட இந்த விவாதத்தின் முதல் பதிவான இதில் தொடக்க வாதங்களை வைத்திருக்கிறேன். நண்பர் குலாமின் எதிர்ப்பதிவில் இருக்கும் வீரியத்தைப் பொருத்து என்னுடைய உள்ளீட்டை நான் தீர்மானித்துக் கொள்கிறேன்.

தகாத விருப்பமும் வேதவெளிப்பாடும்.

20 நவ்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 13

 

 

(நபியே) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர், ”அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்கு செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்னபோது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்திருந்தீர். ஆனால் அல்லாஹ் அவன் தான் நீர் பயப்படுவதற்குத் தகுதியானவன்,…                                                                                                              (குர்அன் 33:37)

கதீஜா அவர்கள் உக்காழ் எனும் அரேபியாச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஸைத்  அவர்களை விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா அவர்களிடம் வளர்ந்து வந்தார். கதீஜா அவர்கள் முஹம்மது நபி அவர்களை மணந்தவுடன் அந்த அடிமைச் சிறுவரை முஹம்மது நபி அவர்களுக்கு வழங்கி, நீங்கள் விரும்பினால் இச்சிறுவரை அடிமையாகவே வைத்துக் கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் இவரை விடுதலை செய்து விடலாம் என்று கூறிவிட்டார்கள்.

சொந்த மகனைப் போலவே ஸைதை முஹம்மது நபி அவர்கள் தமது இருபத்தைந்தாம் வயது முதல் ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஸைத் அவர்களின் எல்லாக் காரியங்களுக்கும் முஹம்மது நபி அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். வளர்பு மகனை தங்களது சொந்த மகன்களாகவே காண்பதும் அவர்களுக்கு அதற்குரிய எல்லா உரிமைகளையும் வழங்குவதும்  அன்றைய அரபியர்களின் வழக்கம்முஹம்மது நபி அவர்களும் அவ்வாறே ஸைது அவர்களை தன்னுடைய சொந்த மகனாகவே அறிவித்திருந்தார்

அடிமைத்தளையிலிருந்து தன் மகனை மீட்க வந்த ஸைத்தின் தந்தை ஹாரிஸாவிடம், ”ஸைத் இனிமேல் என் மகனாவார் அவர் இனி அடிமை இல்லை. நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார். எனக்கு முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான் வாரிசாவேன்” என்று முஹம்மது நபி அவர்கள் அறிவித்தார்கள். முஹம்மது நபி அவர்களுக்கும் ஸைதுக்குமிடையே உள்ள உறவைப் புரிந்து கொண்ட அவரது தந்தை மகிழ்வுடன் திரும்பிச் சென்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும்போது முஹம்மது  அவர்கள் நபியாக நியமிக்கப்படவில்லை. (அல் இஸாபா) அன்றிலிருந்து முஹம்மது நபி அவர்கள் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை (ஸைத் இப்னு முஹம்மத்) முஹம்மதின் மகன் ஸைத் என்றே குறிப்பிட்டார்கள்.

 

புகாரி ஹதீஸ்- 4782

இப்னு உமர் (ரலி )அவர்கள் கூறியதாவது

”அவர்களை அவர்களின் தந்தையின் பெயராலேயே குறிப்பிடுங்கள்” (அல்குர்ஆன் 33:5) வசனம் அருளப்படும் வரை இறைத்தூதர் (ஸல்) அவர்களால் விடுதைல செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களை ”முஹம்மதின் மகன் ஸைத்” என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம்

அதுபோல் ஸைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் முஹம்மது நபி  அவர்களையே சார்ந்திருந்தார்கள். முஹம்மது நபி  அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரி ‘உஸைமா’ என்பாரின் மகள் ஜைனப் அவர்களை, அதாவது தமது சொந்த மாமிமகளை ஸைதுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஜஹ்ஷுடைய மகள் ஸைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஸைதுக்கும் நடந்த இத் திருமணம் என்ன காரணத்தாலோ ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயிற்று. குடும்ப அமைதி குலைந்து போகும் நிலை உருவாயிற்று. இறுதியில் ஸைனபை விவாகரத்து (தலாக்) கூறும் நிலைக்கு ஸைத் ஆளானார்.  விவாகரத்திற்கு பின்னர்,  முஹம்மது நபி, ஜைனப் அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்.

…பிறகு ஜைத் அவளிடமிருந்து (தலாக்) விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்ட பொழுது, அவளை உமக்கு நாம் திருமணம் செய்து வைத்தோம். முஃமினானவர்களின் மீது தங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவியர்கள் விஷயத்தில் அவர்களிலிருந்து விருப்பத்தை இவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்களானால் எவ்வித குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக; அல்லாஹ்வுடைய கட்டளை நிறைவேற்றப்படக் கூடியதாக உள்ளன.

(குர்அன்33:37)

ஜைனப் – ஜைத் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டிற்கு,  குர்ஆனின்    33:37 வசனத்திற்கு அல் தபரி, அல் குர்தூபி, இப்ன் ஸாத் தரும் விளக்கவுரைகள் இவ் விவாகரத்திற்கு வேறொரு தோற்றத்தை தருகிறது.

திருக்குர்ஆன் வசனம் 33:37 ற்கு அல் தபரி  தரும் விளக்கவுரை,

Narrated by Yunis  narrated by Ibn Wahab, narrated by Ibn Zaid who said, “The prophet -pbuh- had married Zaid son of Haritha to his cousin Zainab daughter of Jahsh. One day the prophet -pbuh- went seeking Zaid in his house, whose door had a curtain made of hair. The wind blew the curtain and the prophet saw Zainab in her room unclothed and he admired her in his heart. When Zainab realized that the prophet desired her SHE BEGAN TO HATE ZAID. English translation of al-Tabari’s Arabic Commentary on Sura 33:37

(ஒரு நாள் ஜைதை காண்பதற்காக (அவரது வீட்டிற்கு) சென்றார். அப்பொழுது அங்கு நுழைவாயில் ஒரு துணி திரையாக மூடியிருந்தது. காற்று திரையை விலக்கியது. வீட்டினுள் ஜைனப் (ஏறக்குறைய) உடையின்றி இருந்தார், அவரைப் (ஜைனப்) பற்றிய எண்ணம் நபியின் மனதில் நுழைந்தது. நபி அவரை (ஜைனப்) விரும்புவதை உணர்ந்த பொழுது அவர் (ஜைனப்) ஜைதை வெறுக்க துவங்கினார்.)

The Messenger of God came to the house of Zayd b. Harithah. (Zayd was always called Zayd b. Muhammad.) Perhaps the Messenger of God missed him at that moment, so as to ask, “Where is Zayd?” He came to his residence to look for him but did not find him. Zaynab bt. Jash, Zayd’s wife, rose to meet him. Because she was dressed only in a shift, the Messenger of God turned away from her. She said: “He is not here, Messenger of God. Come in, you who are as dear to me as my father and mother!” The Messenger of God refused to enter. Zaynab had dressed in haste when she was told “the Messenger of God is at the door.” She jumped up in haste and excited the admiration of the Messenger of God, so that he turned away murmuring something that could scarcely be understood. However, he did say overtly: “Glory be to God the Almighty! Glory be to God, who causes the hearts to turn!”

நபி ஜைத் பின் ஹாரிஸ்ன் வீட்டிற்கு வந்தார். (ஜைத் எப்பொழுதும் ஜைத் பின் முஹம்மது என்றே அழைக்கப்பட்டு வந்தார்) அங்கு அவரை காணாவில்லை என்ற காரணத்தால், ஜைத் எங்கே? என்று கேட்டவாறு வீட்டிற்குள் சென்றார். ஆனால் நபியால் அவரை(ஜைத்) காண முடியவில்லை. அங்கிருந்த ஜைனப் நபியை காண எழுந்தார். நபி, அவரி(ஜைனப்)டமிருந்து திரும்பிக்கொண்டார் காரணம் அவர் (ஜைப்)  குறைவான ஆடைமட்டுமே அணிந்திருந்தார். அவர் (ஜைனப்)  கூறினார், அவர் (ஜைத்) இங்கு இல்லை, அல்லாஹ்வின் தூதரே உங்ளே வாருங்கள், நீங்கள் என் தாய், தந்தையை போன்று அன்புக்குரியவர் என்றார். அல்லாஹ்வின் தூதர் வீட்டினுள் செல்ல மறுக்கிறார். “அல்லாஹ்வின் தூதர் கதவருகிலேயே நிற்கிறார்” என்றவாறு ஆடையை சரிசெய்ய விரைவாக(படுக்கையிலிருந்து) குதித்து (எழுந்து) அல்லாஹ்வின் தூதரின் வியப்பான எண்ணத்தில் கிளர்ச்சியை உண்டாக்கினார். ஆதலால் அங்கிருந்து அல்லாஹ்வை புகழ்ந்து, தொடர்ந்து முணுமுணுத்தபடி விலகி சென்றார். (Glory be to God the Almighty! Glory be to God, who causes hearts to turn!)

When Zayd came home, his wife told him that the Messenger of God had come to his house. Zayd said, “Why didn’t you ask him to come in?” He replied, “I asked him, but he refused.” “Did you hear him say anything?” he asked. She replied, “As he turned away, I heard him say: ‘Glory be to God the Almighty! Glory be to God, who causes hearts to turn!’”

ஜைத் வீட்டிற்கு வந்தவுடன், ஜைனப் அல்லாஹ்வின் தூதர் வீட்டிற்கு வந்த செய்தியை தெரிவிக்கிறார். ஜைத்கூறினார், “நீ ஏன் அவரை வீட்டிற்குள் அழைக்கவில்லை?”, “நான் கேட்டுக்கொண்டேன் ஆனால் அவர் மறுத்துவிட்டார்” என்று பதிலுரைத்தார் “அவர் ஏதாவது கூறினாரா?” அவர் “திரும்பிச் செல்லும் போது அவர் கூறியதைக்கேட்டேன்; அல்லாஹ்விற்கே புகழனைத்தும் என் இதயத்தை (மனதை) திருப்பிய காரணத்திற்காக அல்லாஹ்விற்கே புகழனைத்தும்” என்றார்.

So Zayd left, and having come to the Messenger of God, he said: “Messenger of God, I have heard that you came to my house. Why didn’t you go in, you who are as dear to me as my father and mother? Messenger of God, perhaps Zaynab has excited your admiration, and so I will separate myself from her.” Zayd could find no possible way to [approach] her after that day. He would come to the Messenger of God and tell him so, but the Messenger of God would say to him, “Keep your wife.” Zayd separated from her and left her, and she became free.

ஜைத் சென்று அல்லாஹ்வின் தூதரை சந்தித்து,  “அல்லாஹ்வின் தூதரே நீங்கள் வீட்டிற்கு வந்ததை அறிந்தேதன், நீங்கள் ஏன் வீட்டிற்குள் செல்லவில்லை நீங்கள் என் தாய், தந்தையை போன்று அன்புக்குரியவர் அல்வா? அல்லாஹ்வின் தூதரே, ஒருவேளை ஜைனப், உங்கள் மனதில் கிளர்ச்சியூட்டியிருக்கலாம் அதனால் நான் அவளிடமிருந்து நான் பிரிந்து விடுகிறேன்.” அதன் பிறகு அவரை (ஜைனப்)  அடையும் சரியான வழியை ஜைத்தால் காணமுடியவில்லை. அவர்(ஜைத்)  அல்லாஹ்வின் தூதரிடம் சென்று அவ்வாறாக கூறினார் ஆனால் மனைவியை அவரிடமே (ஜைத்)  வைத்துக் கொள்ள கூறினார். ஜைத்  அவரை (ஜைனப்)  விட்டு விலகினார்  (தலாக் கூறி) அவரை விடுவித்தார்.

While the Messenger of God was talking with ‘A’isha, a fainting overcame him When he was released from it, he smiled and said, “Who will go to Zaynab to tell her the good news, saying that God has married her to me?” Then the Messenger of God recited: “And when you said unto him on whom God has conferred favor and you have conferred favor, ‘Keep your wife to yourself.’”- And the entire passage.

அல்லாஹ்வின் தூதர், ஆயிஷாவுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது சூழ்ந்திருந்த குழப்பத்திலிருந்து தெளிவடைந்து புன்னகைத்தவாறு, “ அல்லாஹ்,  அவளை (ஜைனப்)  எனக்கு திருமணம்  செய்து தரும் இந்த நல்ல செய்தியை அவரி(ஜைனப்பி) டம் கூறுபவர் யார்?” என்றார்

According to ‘A’isha, who said: “I became very uneasy because of what we heard about her beauty and another thing, the greatest and loftiest of matters – what God had done for her by giving her in marriage. I said she would boast of it over us.” (The History of Al-Tabari: The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3; bold emphasis ours)

(ஆயிஷா அறிவிக்கிறார், என் மனஅமைதி குலைந்தது காரணம் நான் கேள்விப்பட்ட அவரது அழகைப்பற்றியும் மேலும் உயர்வான குணங்களைப்பற்றியுமே – அவரது (ஜைனப்)   திருமணத்திற்கு அல்லாஹ் (உதவி) செய்தவற்றின் மீது அவருக்கு (ஜைனப்)   தற்பெருமை இருந்தது.)

புகாரி ஹதீஸ் : பாகம் 7, எண் : 7420

அனஸ்(ரலி) அறிவித்தார்.

….ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். ‘ உங்களை (நபி (ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத் தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி (ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்’ என்று சொல்வார்கள்.

திருக்குர்ஆன் வசனம் 33:37 அல் குர்தூபி தரும் விளக்கவுரை,

Here, also, are the comments of renowned Muslim commentator, al-Qurtubi, on surah 33:37, translated directly from the Arabic:

Muqatil narrated that the prophet married Zainab daughter of Jahsh to Zaid and she stayed with him for a while. Then one day the prophet –pbuh– came seeking Zaid but he saw Zainab standing; she was white skinned with a beautiful figure and one of the most perfect women in Quraish. So HE DESIRED HER and said, “Wondrous is Allah who changes the heart.” When Zaynab heard the prophet’s exaltation of her, she relayed it to Zaid who then understood (what he had to do). Zaid said to the prophet, “O prophet of Allah, allow me to divorce her, for she has become arrogant; seeing herself superior to me and she insults me with her tongue.”

(முகாதில் அறிவிப்பது, ஜைனப்பிற்கும் ஜைதிற்கும் திருமணம் செய்துவைத்தார் அவர்(ஜைனப்) அவருடன்(ஜைத்) இருந்தார். பிறகு ஒருநாள் நபி ஜைத்தை தேடி சென்றார் ஆனால் அங்கு ஜைனப் நின்று கொண்டிருந்தார். அவரின் வெண்ணிறத்துடன் அழகிய உடல் அமைப்பும் கொண்டவர் மேலும் குரைஷி குலத்தின் முழுநிறைவான பெண். ஆதனால் அவரை விரும்பினார் மேலும் மனதை மாற்றியது அல்லாஹ்வின் அற்புதம் என்றார். அவர் தன்னைப்பற்றி ஆச்சரியப்பட்டதை ஜைனப் உணர்ந்து ஜைத்திடம் கூறியபொழுது அவர் அதை உணர்ந்து கொண்டார். நபியிடம் ஜைத் கூறினார், “அல்லாஹ்வின் தூதரே அவரை விவாகரத்து செய்ய அனுமதிக்க வேண்டும், அவள் பிடிவாதமாகவும், என்னை விட தன்னை உயர்வாக நினைக்கிறாள், மேலும் என்னை சொல்லால் அவமதிக்கிறாள்” என்றார்)

அல்லாஹ்வின் தூதர், “அல்லாவிற்கு அஞ்சி மனைவியை தடுத்து வைத்துக்கொள்” என்று கூறினார்.

…அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்திருந்தீர் …

(குர்அன் 33:37)

என்ற வசனத்தின் பொருள், அதாவது  ஜைனப் மீதிருந்த விருப்பத்தை மனிதர்களுக்கு பயந்து மனதில் மறைத்து, ஸைத் தலாக் கூற முன்வந்ததும் ”தலாக் கூற வேண்டாம்” என்று வெறும் வாயளவில் கூறி விட்டு மனதுக்குள் ”அவர் தலாக் கூற வேண்டும்” அதன் பிறகு தாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்கள். இதைத்தான் இந்த வசனத்தில் (குர்அன் 33:37) அல்லாஹ் குறிப்பிடுகிறான் என கடுமையான குற்றச்சாட்டு முஹம்மது நபி அவர்களின் மீது சுமத்தப்படுகிறது.

முறை தவறிய தனது திருமணத்திற்காக, தன்னால் கைவிடப்பட்ட அந்த வளர்ப்பு மகனையே தூது அனுப்பினார்.

முஸ்லீம் ஹதீஸ் : பாகம் 8, எண் : 3330

அனஸ்   (ரலி) அவர்கள் கூறியதாவது.

ஸைனப் அவர்களின் இத்தா முடிந்தவுடன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜைத்திடம், தன்னைப் பற்றி ஜைனப்பிடம் கூறும்படி சொன்னார்கள். ஜைனப் மாவைப் பிசைந்துக் கொண்டிருக்கும் போது ஜைத் அங்கு சென்றார். அவர் கூறினார் நான் ஜைனப்பை கண்ட போது, அல்லாஹ்வின் தூதரே ஜைனப்பைப் பற்றி கூறியதால் அவர் எவ்வளவு பெருமைக்குரியவராக இருக்கிறார் என்று நினைத்தேன் அதனால் ஜைனப்பிற்கு நேராக நின்று பேசாமல் வேறு திசையில் திரும்பிக் கொண்டு பேசினேன். நான் கூறினேன்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களுக்கு ஒரு செய்தியை என்னிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்”. இதற்கு பதிலாகஅவர்: நான் இறைவனின் விருப்பம் என்னவென்று தெரிந்து கொள்ளும் வரை எதையும் செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். இதைச் சொல்லிவிட்டு, இறைவனை தொழுவதற்கு தயாராக நின்றார்கள். அப்போதுதான் அவரின் திருமணம் பற்றிய வசனம் வெளிப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவரின் அனுமதியின்றி அவரைக் காணவந்தார்…

ஜைனப், அல்லாஹ்வின் முடிவை அறிய வேண்டுமென்று உறுதியாக கூறிவிட்டதால், வேறு வழியின்றி முஹமத் – ஜைனப் திருமணத்திற்கான அனுமதி வஹீயாக வெளிப்பட்டது.

முஹமத் ஜைனப் திருமணமும் அதன் பின்னணியும் மாற்று மதத்தினரின் கற்பனையல்ல. இதற்கு ஆதாரம்  சில குர்ஆன் விரிவுரை நூல்களில் காணப்படுகிறது. தங்களுக்கு பாதகமான தகவல்களை வழக்கம்போல அதற்கு சரியான ஆதார வரிசையில்லை என்று  மார்க்க அறிஞர்கள் மறுக்கின்றனர். நம்முடைய மார்க்க அறிஞர்கள் தர்கரீதியான வாதங்களால் மட்டுமே அவர்களுக்கு பதில் அளிக்கின்றனர் தகுந்த ஆதாரங்களை முன் வைக்க முடியவில்லை.

இதற்குஇஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் தரப்படும் விளக்கங்களும்  மறுப்புகளும் வருமாறு:-

விளக்கம் : 1

முஹம்மது நபி  அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஸைதை மண முடித்துக் கொள்ளுமாறு ஸைப்- குடும்பத்தினரிடம் கேட்டார்கள் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஸைத் ஒரு முன்னாள் அடிமை என்பதாலும், தாங்கள் உயர்ந்த குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஸைனப்பும் அவரது குடும்பத்தினரும மறுத்து விடுகிறார்கள். ஆனால் ஸைனப்  முஹம்மது நபி  அவர்களை திருமணம் விரும்புகிறார்கள்.  அவரது குடும்பத்தினரின் விருப்பமும் அதுவே.  வேறுவழியில்லாததால்    பின் வரும் இறை வசனம் உடனே இறங்கியது.

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

(குர்ஆன் 33:36)

இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஸைனப்  அவர்கள் ஸைதைத் திருமணம் செய்ய சம்மதித்தார்கள்.

(இப்னு ஜரீர், இப்னு கஸீர்)

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆரம்பம் முதலே ஸைத்  அவர்களை மணந்து கொள்ள ஸைனப்  விரும்பவில்லை என்பதும், முஹம்மது நபி  அவர்களின் வற்புறுத்தலுக்காகவே, தமக்குப் பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகின்றார் என்பதும் தெளிவாகிறது.

மறுப்பு :

முஹம்மது நபி-ஸைனப் திருமணமே, ஸைனப் மற்றும் அவரது  குடும்பத்தினரின் விருப்பமும்  எனில், கதீஜா  அவர்களின் மரணத்திற்குப் பின்னர் முஹம்மது நபிக்கு ஸைனபை மறுமணம் செய்து வைத்திருக்கலாமே! அதற்குத் தடை எதுவும் இருக்கவில்லையே! முஹம்மது நபி நான்கு திருமணங்களை முடிக்கும்வரையிலும்  காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

ஜைத்-ஜைனப் தம்பதியினரிடையே சுமூக உறவின்றி பிரிந்தனர் என ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், விவாகரத்திற்குப் பின் ஜைனப்பை முஹம்மது நபி திருமணம் செய்யவேண்டிய அவசியம் இல்லையே! விவாகரத்திற்குப் பின்னர் ஜைனபின் வாழ்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பு நபியிடம் வழங்கப்படவில்லை.   ஸைனபின் பேரழகில் மயங்கி விட வில்லையெனில், ஸைனப்பை வேறு யாருக்காவது திருமணம் செய்துவைக்க இயலுமே. ஏனெனில் முஹம்மது நபி  வார்தைக்கு முற்றிலும்  கீழ்படிந்தவர்கள் பலர் இருந்தனர். அவருக்கு இது எளிதானதும் கூட.

“தலாக்” (விவாகரத்து) என்ற சொல் உச்சரிக்கப்படும் பொழுது அல்லாஹ்வின் அரியாசனமே (அர்ஷ்) நடுங்குகிறது என்கின்றனர். அல்லாஹ்விடத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்களிலேயே மிகவும் வெறுப்பிற்குரிய செயல் விவாகரத்து என்கிறது அபூதாவூத்.  குர்ஆன் 33:36 வசனத்தைக்கூறி திருமணம் செய்துவைத்த முஹம்மது நபி மேற்கண்ட குர்ஆன் 33:36 வசனத்தை மேற்கோள் காண்பித்து அல்லாஹ்விற்கு மிகவும் வெறுப்பிற்குரிய விவாகரத்தை ஏன் தடுக்கவில்லை?

விளக்கம் : 2

முஹம்மது நபி  அவர்கள் ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்கள் செய்தியை ஸைத் அவர்களும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் முஹம்மது நபி  அவர்களின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி, தம் மனைவியைத் தலாக் கூறுவது சம்பந்தமாக முஹம்மது நபி அவர்களிடமே ஆலோசனை கேட்கிறார்கள். அதன் பின்பும் முஹம்மது நபி  அவர்களுடன் முன்னர் நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில் எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை.

  முஹம்மது நபி அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. முஹம்மது நபி அவர்களும் சொல்லவில்லை. ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததாக முஹம்மது நபி அவர்களும் சொல்லவில்லை. ஸைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது.

மறுப்பு :

ஜைத்-ஜைனப் விவாகரத்திற்குப் பின்னரும்,  ஜைத் முஹம்மது நபியிடம், ஜைத், முன்னர் நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில் எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை.

முஹம்மது நபி  அவர்கள் மீது, ஜைத் ஆத்திரப்பட வாய்ப்பில்லை ஏனெனில், ஜைத் அல்லாஹ்வின் தூதருக்காக தாமாகவே முன்வந்து ஜைனப்பை விட்டுக் கொடுத்தார். நாம் முன்பு ஹதீஸில் (முஸ்லீம்: பாகம் 87, எண் : 3330)  முஹம்மது நபிக்காக தூது செல்கிறார், முஹம்மது நபி, வியந்து பாராட்டிய பெண் என்று ஆச்சரியமடைகிறார்.

 

இமாம் குர்தூபி பட்டியலிடும் முஹம்மதுநபி க்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளிலிருந்து

முஹம்மது ஒரு பெண்ணைக் கண்டு அப்பெண்ணை விரும்பினால், முஹம்மது அவளை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக, அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்ய வேண்டும். இபின் அல் அரபி கூறுகையில், “இதைத் தான் இரண்டு இமாம்களும் கூறினார், மற்றும் ஜையத் கதையில் வரும் நிகழ்ச்சியும் இப்படிப்பட்ட பொருளில் வந்ததே என்று அறிஞர்களும் கூறுகிறார்கள்”.    

 

முஹம்மது நபி  அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. முஹம்மது நபி  அவர்களும் சொல்லவில்லை. ஆனால் மனிதர்களுக்கு ஏளனத்திற்கு அஞ்சி வெளியே கூற இயலாத ஒரு செய்தி முஹம்மது நபியின் மனதில் மறைந்திருந்தது மறுக்க முடியாத உண்மையே! ஜைத்-ஜைனப் விவாகரத்திற்குப் பின் நடந்த சகிக்க முடியாத நிகழ்வுகள், முஹம்மது நபியின் மனதில் மறைத்திருந்ததை  வெளியாக்கி விட்டதே!

 

விளக்கம்  :3

முஹம்மது நபி  அவர்களைத் திருமணம் செய்யும் ஸைனப்ன் வயது முப்பத்து ஆறு. முஹம்மது நபி  அவர்களின் வயது 56.  56 வது வயதில் நாடுவதை விட அதிகம் பெண்களை அதிகம் நாடக்கூடிய இளம் வயதில் வயதில்) பருவ வயதிலிருந்த ஸைனப்  அவர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பை முஹம்மது நபி  அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது. அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள் பற்றியும், அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக் கொள்ளலாகாது என்பது பற்றியும் இறைக் கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஸைனப் ஆவர்களைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பு முஹம்மது நபி  அவர்களுக்கு வாய்த்திருந்தது.

முஹம்மது நபி  அவர்கள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள். 17 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், 20 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், 25 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், பெண்களின் அழகு பிரகாசிக்கக்கூடிய 15வயது முதல் 30 வரையிலான பல்வேறு பருவங்களில் ஸைனபைப் பார்த்துப் பேசிப் பழகியிருக்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஸைனபின் அழகில் சொக்கிவிடாத முஹம்மது நபி அவர்கள் 34 வயதை ஸைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவரது பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடையோர் எவரும் ஏற்க முடியுமா?

மறுப்பு :

இப்ன் ஜரீர் அல் தபரி இஸ்லாமிய ஆராய்சியாளர்களாலும், அறிஞர்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவர். குர்தூபியும் சிறந்த மார்க்க அறிஞராவர். இவர்கள்  தங்களுடைய ஆன்மீகத் தலைவர் முஹம்மது நபி  அவர்களின் மீது வேண்டுமென்றே ஒரு கட்டுக்கதையைக் கூற வேண்டியத் தேவை என்ன?

இந்த திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் ஜைனப்பின் மீது முதலிலிருந்தே காதல் இருந்ததாக கூறவில்லை குறிப்பிட்ட ‘அந்த ஆடையற்ற’ சம்பவத்திற்கு பிறகே முஹம்மது நபி, தன்னை விரும்புவதை ஜைனப் அறிந்து கொண்டார் என்றே  குறிப்பிடுகின்றனர். ஸைனப்பின் பேரழகில் மயங்கி, சொக்கி விடவில்லையெனில்  இழிவான புதிய வரைமுறைகளை ஏற்படுத்தி, அவரை தனது படுக்கைக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லையே!

 

விளக்கம்  :3

முஹம்மது நபி அவர்களின் 50வயது வரை அவர்களுக்கு கதீஜா  மனைவியாக இருந்தார்கள். கதீஜா  அவர்களின் மரணத்திற்குப் பின்னர் முஹம்மது நபி அவர்களுக்கு மனைவியின்பால் தேவையிருந்தது. கதீஜா மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது. ஜைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உண்மையானால் கதீஜா அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஸைனபை மணந்திருக்கலாமே! அதற்குத் தடை எதுவும் இருக்கவில்லையே!

மறுப்பு :

முஹம்மது நபி, ஜைனபின் பேரழகில் மயங்கி விடவில்லையெனில் ஜைத் விவாகரத்து கூறிய, ஒரு சில நாட்களில், அல்லாஹ் அனுமதியளித்துவிட்டான் எனக்கூறி ஜைனப்புடனான  திருமண ஆலோசனையை முதலில் துவக்கியது ஏன்?

முஹம்மது நபிக்கு, ஜைனப்பின் மீது எவ்விதமான ஈர்ப்பும் இல்லையெனில், வேறு யாருக்காவது திருமணம் செய்து வைக்கலாமே? அதற்கு எந்தத் தடையும் இல்லயே?

ஜைனப்பை திருமணம் செய்தால், மருமகளையே அதாவது தன் (வளர்ப்பு) மகனின் மனைவியை தன்னுடைய படுக்கையில் வீழ்த்தியவர் என்று நாகரீமற்ற(?) பண்டைய அரபியர்கள் இழிவாக பேசுவார்களே என தயங்கினார். அவரது இந்த மனப்போராட்டத்தை பார்த்துக் கொண்டு அல்லாஹ்வால் பொறுமையாய்  இருக்க முடியவில்லை. உடனே ஜிப்ரீல் மூலம் வஹியை இறக்கி விட்டான்.

…முஃமினானவர்களின் மீது தங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவியர்கள் விஷயத்தில் அவர்களிலிருந்து விருப்பத்தை இவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்களானால் எவ்வித குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக; …

(குர்அன்33:37)

 

நபியின் மீது அல்லாஹ் அவருக்கு ஆகுமாக்கியவற்றில் (அவற்றை நிறைவேற்றுவதில்) எவ்வித குற்றமும் இல்லை…

(குர்அன்33:38)

“எவ்வித குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக” என்ற வார்த்தைகளின் நேரடிப் பொருள், முஹம்மது நபி, ஜைனப் மீது  கொண்டிருந்த (தகாத) விருப்பம், குற்றம் கூறும் வகையிலேயே இருந்திருக்கிறது என்பது தான். அதை சரி செய்யவே இத்தகைய புதிய சட்டம் இயற்றப்பட்டதாக  குர்ஆன் தரும் இந்த விளக்கத்தை எப்படி மறுக்க முடியும்?

”அவர்களை அவர்களின் தந்தையின் பெயராலேயே குறிப்பிடுங்கள்”.. 

                (குர்ஆன்33:5)

அதாவது உங்களுடைய வளர்ப்பு மகன்களை ஒருநாளும் சொந்த மகன்களாக கருதக்கூடாது என்று புதிய சட்டத்தை இயற்றி, முஹம்மது நபி அவர்களுக்கும் ஜைனப்  அவர்களுக்கும் திருமணம் நடக்க வழிவகை செய்துவிட்டான் (திருக் குர்ஆன் அறக்கட்டளையின் மொழி பெயர்பின் 33 ம் அத்தியாயத்தின் Foot Note 5 & 6 காண்க) 

அல் பாக்கவி.com–ன் “பலதார மணம் புரிந்தது ஏன்?“என்ற இணையதள  கட்டுரையிலிருந்து….

நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒன்று ஊறிப்போன அறியாமைக் கால வழக்கத்தை தகர்ப்பதற்காக நடத்தப்பட்டது. அதாவது, அரபியர்களிடம் வளர்ப்பு மகனை பெற்ற மகனாக கருதும் வழக்கம் இருந்தது. பெற்ற மகனுக்குக் கொடுக்கும் உரிமைகளையும், கடமைகளையும் வளர்ப்பு மகனுக்கும் வழங்கினர். இவ்வழக்கம் அரபியர்களிடம் ஆழமாக வேரூன்றி இருந்தது. இதைக் களைவது இலகுவானதல்ல. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்றவற்றில் இஸ்லாமின் சட்டங்களுக்கும் அடிப்படைகளுக்கும் இக்கொள்கை முரணாக இருக்கிறது.

மேலும், சமூகத்திலிருந்து எந்த மானக்கேடான அருவருக்கத்தக்க பழக்க வழக்கங்களை அழிப்பதற்காக இஸ்லாம் இந்த உலகத்தில் உதித்ததோ, அவை அனைத்தையும் இக்கொள்கை சமுதாயத்திற்குள் இழுத்து வருகிறது. இந்த சட்டத்தை நபி (ஸல்) அவர்களின் கரத்தால் நபி (ஸல்) அவர்களின் சொந்த வாழ்க்கை மூலமாகவே உடைக்க வேண்டுமென அல்லாஹ் நாடினான்.

குழந்தைகளைத் தத்தெடுக்கும் மனிதாபிமான செயல், அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் சமூகத்திலிருக்கும் மானக்கேடான அருவருக்கத்தக்க, ஊறிப்போன அறியாமைக் கால வழக்கமாகத் தெரிந்தது எனவே அதை அல்லாஹ் தடைசெய்ய விரும்பினானாம்.

அநாதைகளை குழந்தைகளைத் தத்தெடுத்து தங்களது சொந்த குழந்தைகளாகக் கருதி அதற்குரிய சகல உரிமைகளையும் வழங்குவதுஅநாதைகளை ஆதரிக்கும் மனிதாபிமான செயலின் உச்சகட்டம். மனிதாபிமான மிகுந்த தத்தெடுக்கும் முறை ஏன் தடைசெய்ய வேண்டும்? அதொன்றும் அவ்வளவு கொடூரமான செயல் இல்லையே !      

                வாதத்திற்காக கூறினாலும், முஹம்மது நபியும் ஜைத்தும் அதிபயங்கர விரோதிகளாகவும் இருக்கவில்லை.  தத்தெடுக்கும் முறையைத் தடை செய்வதென்றால் அல்லாஹ்வினால் நேரடியாகவே கூறியிருக்க முடியும்.

                குழந்தைகளைத் தத்தெடுப்பதால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறோம் எனவே இந்த காடுமிராண்டித்தனத்தை தடைசெய்து எங்களைக் காப்பற்ற வேண்டும் என்று யாராவது அல்லாஹ்விடமும், முஹம்மதுவிடமும் முறையிட்டார்களா?

அப்படி எதுவுமில்லை

நமக்குத் தெரிந்தவரையில் இப்படியொரு தடையின் தேவை ஏற்பட்டது முஹம்மது நபியின் அடங்காத இச்சைக்குக்கு மட்டுமே! அது அல்லாஹ்விடமிருந்து வேதவாக்கையும் வரவழைத்தது.

“முஹம்மது உங்களுடைய ஆண்களில் எவருடைய தந்தையாகவும் இருக்கவில்லை….”

                (குர் ஆன் 33.53)

இந்த வசனம் “ஆண்களில்” என குறிப்பிடுவதால் இது ஸைனப்ஐ திருமணம் செய்வதற்காக, ஸைத் அவர்களையே இலக்காக கொண்டுள்ளதை காணலாம்.

…‘‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன் ” என்று (நபியவர்களிடம்) சொன்னேன் (புகாரி ஹதீஸ் -4788)  (முஸ்லீம் ஹதீஸிலும் இது இடம் பெற்றுள்ளது.)

வெவ்வேறு சூழ்நிலைகளில் நிகழ்ந்தவைகளை அடிப்படையாகக் கொண்டு ஆயிஷா கூறிய இந்த கருத்து மிகச்சரியானதே!

அன்று மட்டுமல்ல இன்றும் உலகில் இருக்கும் நடைமுறையை  மீறி முஹம்மது நபி – ஜைனப்   இடையே நிகழ்ந்த திருமணம் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரமாக அமைகிறது.  இத்திருமணத்திற்கு முன்பு வரை தன் வளர்புமகனாக கருதியவரை  இத்திருமணத்திற்கு தடையான உறவு என்ற ஒரே காரணத்திற்காக அல்லாஹ்வின் வஹி என்ற பெயரில் வளர்ப்பு மகன் என்ற உறவை தூக்கி எறிந்தார். மற்றவர்களும், இனி உலகம் உள்ளவரையிலும், தத்து எடுக்கக் கூடாது எனக்கூறி மனிதாபிமனமிக்க நடைமுறையை முற்றிலும் தடை செய்தார்.

இச்சம்பவத்தை காணும் பொழுது, வாலை இழந்த நரியின் கதை நினைவிற்குவருகிறது. ஒரு முறை விவசாயி ஒருவரின் வீட்டில் கோழியைத் திருடச் சென்ற நரி, தாக்குதலுக்கு உள்ளாகி வாலை இழந்தது. காட்டிற்கு திரும்பிய நரி, வால் இல்லாத காரணத்தால் தன் இனத்தார் ஏளனம் செய்வார்கள் என்று அஞ்சிய ஒரு தந்திரம் செய்தது. நம் இனத்திற்கே வால் மிகவும் அசிங்கமாக உள்ளது எனவே அனைவரும் வாலை வெட்டி எறிய வேண்டும் என்று கூறியதாம்.

 

ஜைனப்பின் பேரழகில் மயங்கவில்லையெனில், முறை தவறிய உறவை ஆதரித்தும் அன்று மட்டுமல்ல இன்றும் உலகில் இருக்கும் மனிதாபிமானமுள்ள  தத்தெடுக்கும் நடைமுறையை தடைசெய்து அல்லாஹ்வின் வசனம் ஏன் இறங்கவேணடும்?  தத்தெடுக்கும்  முறையை தடை செய்வதைப் பற்றி முன்பே வேறு சந்தர்பங்களில் கூறியிருந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி போயிருக்கும்.

நேர்மையையும், நியாயத்தையும், ஒழுக்கத்தையும், அன்பையும் மனிதாபிமானத்தையும் போதிக்கிறது என்று நாம் மார்தட்டிக் கொள்ளும் கொள்கைகளின் ஏதார்த்த நிலை இதுதான். நபி   அவர்களின் பலதார மணமும் அற்கான பின்னணியும், ஸைனப்  இடையே நிகழ்ந்த இத்திருமணம் முறை தவறியிருப்பதை உறுதி செய்கிறது

முஹம்மது நபிக்கு பெண்கள் விஷயத்தில் எவ்வித கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காக அல்லாஹ்வின் சலுகை அறிவிப்பு

 

“நபியே (பெண்களில்) எவருக்கு மஹர்ளைக் கொடுத்திருக்கிறீரோ அத்தகைய உம்முடைய மனைவியரையும், அல்லாஹ் (போரின் மூலம்) உமக்கு கொடுத்தவற்றில் உம்முடைய வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைப் பெண்கள்) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களே அத்தகைய உம் தந்தையின் சகோதரருடைய புதல்வியரையும் உம் தந்தையின் சகோதரிகளுடைய புதல்வியரையும் உம் தாய்மாமனின் புதல்வியரையும் உம் தாயின் சகோதரிகளுடைய புதல்வியரையும் (இப் பெண்களை மஹர் கொடுத்து மணமுடிப்பதை) உமக்கு நிச்சயமாக நாம் ஆகுமாக்கியுள்ளோம். இன்னும் மஹரின்றியே தன்னை நபிக்காக அர்பணித்துக்கொள்ளும் முஃமினான பெண்ணையும் நபியும் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் (ஆகுமாக்கி வைத்துள்ளோம். இதுமற்ற) முஃமின்களுக்கின்றி உமக்கு (மட்டுமே) பிரத்தியோகமாக உள்ளதாகும். (மற்ற முஃமின்களாகிய) அவர்கள் மீது, அவர்களுடைய மனைவியரின் விஷயத்திலும் நாம் விதியாக்கியுள்ளதைத் திட்டமாக நாம் அறிவோம் (உமக்கு விலக்களித்ததெல்லாம்) உம்மீது எவ்வித கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காகத்தான் – அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவனாகவும் மிகக் கிருபையுடையோனாகவும் இருக்கிறான்.”

(குர்ஆன் 33:50)

முஃமின்களுக்கின்றி உமக்கு (மட்டுமே) பிரத்தியோகமாக உள்ளதாகும்.”, “உம்மீது எவ்வித கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காகத்தான்”  விதவிதமான அனுமதிகளின் அவசியம் என்ன? பெண்கள் விஷயத்தில்  முஹம்மது நபிக்கு என்ன கஷ்டங்கள் இருக்க முடியும்? இந்த சிறப்பு அனுமதி வசனங்கள் நமக்கு கூறும் செய்தியை சற்று சிந்தித்தது பாருங்கள்.  வஹியின் முழுப் பின்னணியையும் நீங்களே அறிந்து கொள்ளலாம்.

ஆதரவற்ற ஒரு அநாதையை மகனாக தத்தெடுத்து வாழ்வளிப்பதில் உள்ள தவறு என்ன? தனக்கு பிறந்த மகன்களுக்கு இணையாக வாரிசுரிமையை வழங்குவது தவறான முடிவா? உடல் வேட்கைக்காக, வளர்ப்பு மகன் என்ற உறவைத் துண்டித்து, மருமகளைத் திருமணம் செய்து கொள்வது உலகின் சிறந்த முன்உதாரணமா? இந்நிகழ்ச்சியின் மூலம் அல்லாஹ், மனிதனுக்கு கற்பிக்கும் படிப்பினை என்ன?

ஒருவேளை முறைதவறிய முஹம்மதுஸைனப்  திருமணம் நிகழவில்லை எனில், மேற்கண்ட இழிவான குற்றச்சாட்டுகள் அடிப்படை முகாந்திரம் இன்றி தானே வீழ்ந்திருக்கும். இதைப் போன்ற  எதிர்கருத்துக்களுக்கும் இடமின்றி போயிருக்கும்.

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

 

பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!

18 நவ்

ஜெயலலிதா பதவியேற்றதும்தான் எத்தனை எத்தனை நலத் திட்டங்கள்…! சமச்சீர் கல்வியை ஒழிக்க சில நூறு கோடி செலவு செய்து வீம்பாட்டம் ஆடிய கொடுமை; பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் இழுத்து மூடப்பட்டு, முகமது பின் துக்ளக்கே வெட்கப்படும் அளவுக்கு சிறப்பு மருத்துவமனை என்ற அறிவிப்பு; அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக்கப்படுமென்ற ஹிட்லர் பாணி உத்திரவு; ஆயிரக்கணக்கான மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய வக்கிர முடிவு; பரமக்குடியில் போலீசு கயவாளிகளுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கி ஏழு தலித்துக்களை கொன்று குவித்த பிசாசு ஆட்சி; மாதம் இரண்டு லாக்கப் கொலைகளைச் செய்யும் போலீசுத் துறைக்கு அளவிலா சலுகைகள்.

ஆனாலும் ஜெயலலிதா விடுவதாக இல்லை. முந்தைய முறை தன்னை முதலமைச்சராக தெரிவு செய்யாத மக்களை இந்த முறை வேறு வழியின்றி தெரிவு செய்திருந்தாலும் பழிவாங்க நினைக்கிறார் போலும்.

பால், மின்சாரம், பேருந்து என்று அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் ஒரு மூச்சிலேயே விலையையும், கட்டணத்தையும் உயர்த்தி தான் ஒரு பாசிஸ்ட் என்று ஓங்கி நிரூபித்திருக்கிறார். இந்தியாவில் எந்த ஒரு முதலமைச்சரும், மாநிலமும் செய்திராத முன்னுதாரணமிது.

சுருங்கக் கூறின் இந்த விலை உயர்வினால் ஆவின், அரசுப் போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம் ஆகியவை கடும் கடன் சுமையிலிருந்து விடுபடும் என்பதெல்லாம் சும்மா ஒப்புக்கு தெரிவிக்கப்படும் சாக்கு. உண்மையில் இவற்றை ஒழித்து தனியார் துறையை விரிவுபடுத்தி கொள்ளையடிப்பதற்குத்தான் இவை உதவப் போகின்றன.

ஆவின் பால் தரமானது, சீக்கிரம் கெட்டுப் போகாது, சத்து விவரம் அறிவிக்கப்பட்ட அளவிலேயே இருக்கும். தனியார் பால் இவைகளுக்கு நேரெதிரானது. பொது மக்கள் அனைவரும் ஆவின் பாலையே விரும்புகின்றனர் என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக தனியார் பால் முதலாளிகள் பெருகி வருவதற்கு அரசே மறைமுகமாக உதவி செய்கிறது. ஆவின் வலைப்பின்னலை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் முதலாளிகள் கைப்பற்றி வருகின்றனர். ஆவின் பால் கிடைக்காது என்ற தட்டுப்பாட்டை உருவாக்கி தனியார் பால் முதலாளிகள் சந்தையில் கணிசமான அளவை பிடித்திருக்கின்றனர்.

தனியார் பால் முதலாளிகள் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பினாமிகளாகக் கொண்டும், இல்லையேல் லஞ்சத்தால் குளிப்பாட்டியும் இதைச் செய்து வருகிறார்கள். ஆவினுக்கு பால் கொடுக்கும் விவசாயிகளையும் தனியார் பால் முதலாளிகள் வேண்டுமென்றே அதிக விலை கொடுத்து கைப்பற்றுவதும் நடக்கிறது. ஆவின் ஒட்டு மொத்தமாக இழுத்து மூடப்பட்டாலோ, இல்லை கணிசமான சந்தையை இழந்தாலோ கொள்முதல் விலை என்பது தனியார் முதலாளிகள் நிர்ணயிக்கும் ஒன்றாகத்தான் இருக்கும். மேலும் சிறு அளவில் கால்நடை வைத்து பராமரிக்கும் விவசாயிகளை ஒழித்து விட்டு பணக்கார விவசாயிகள் பெரும் பண்ணைகளை வைத்து நடத்துவதையே தனியார் பால் நிறுவனங்கள் விரும்புகின்றன. இதன்மூலம் பல இலட்சம் சிறு விவசாயிகள் ஒழிக்கப்படுவார்கள். இது ஒரு தனிக் கதை.

இந்நிலையில் பால் விலை உயர்வு என்பது தனியார் முதலாளிகளை நோக்கி மக்கள் திரும்பவதையே நீண்ட கால நோக்கில் செய்யும். மேலும் ஆவின் முகவர்களுக்கும் குறைவான கழிவு வருமானம், பால் பொருட்கள் போதிய அளவில் தராமல் இருப்பது என்ற பிரச்சினையும் தமிழகம் முழுவதும் உண்டு. இறுதியில் ஆவின் பாலை வைத்து தனது  குடும்ப பட்ஜெட்டை போடும் சாதாரண மக்கள் அனைவரும், இனி மாதம் 200 முதல் 400 ரூபாயை அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். இது பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு பெரும் சுமை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அது போல பேருந்து கட்டண உயர்வு. தற்போதைய கட்டண உயர்வு மூலம் விரைவுப் பேருந்துகளின் கட்டணம் என்பது ஏறக்குறைய ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நெருங்கி விட்டது. ஏற்கனவே அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இயக்கப்பட்டு வந்தாலும் கட்டணம் குறைவு என்ற ஒரே காரணத்திற்காக மக்களால் விரும்பப்பட்டு வந்தன. இப்போது அதற்கும் ஆப்பு வைத்திருக்கிறார்கள். இலாபகரமான பேருந்துப் பாதைகள் முழுவதும் தனியாருக்கு திறந்து விடப்பட்டிருக்கும் நிலையில் இலாபம் இல்லாத பாதைகளுக்கு சேவை அளிப்பது அரசு பேருந்துகள் மட்டும்தான்.

ஆனால் இலாபம் தரும் பாதைகளை வைத்து தனியார் முதலாளிகள் சம்பாதிப்பதால் அந்த பணம் அரசுக்கு வருவதில்லை. ஆகையினால் மொத்தத்தில் நட்டம் ஏற்படுகிறது. மேலும் அரசு போக்குவரத்து கழகத்தை பொதுத்துறை அதிகாரவர்க்க முதலாளிகளும், அமைச்சர் பெருச்சாளிகளும் 90களில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே கொள்ளையடித்து வருகின்றனர். பாடி கட்டுவது, உதிரிப் பாகங்கள் வாங்குவது, ஏன் பயணச்சீட்டு அடிப்பது வரை இந்தக் கொள்ளை விருட்சமாய் வேர் விட்டிருக்கிறது.

இது போக மினிபஸ், ஷேர் ஆட்டோ, கால்டாக்சி, கேப் முதலான தனியார் சேவைகள் மூலம் பொதுப்போக்குவரத்து சேவையிலிருந்து அரசு மெல்ல மெல்ல கழன்று கொண்டு வருகிறது. விரைவுப் பேருந்து மட்டுமல்ல, நகரப் பேருந்துகளின் கட்டண உயர்வும் சாதாரண மக்களை அச்சுறுத்தும் வண்ணம் இருக்கிறது. ஆவடி, பூந்தமல்லியிலிருந்து பாரிமுனைக்கும், பாரி முனையிலிருந்து தாம்பரத்திற்கும் வேலை நிமித்தமாக சென்று வரும் மக்கள் இனி கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீதம் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும். தோராயமாக 500 முதல் 1000 ரூபாய் வரை அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

5000, 10,000 ரூபாய் சம்பளத்தில் வாழும் மக்களின் மொத்த செலவு திட்டத்தில் போக்குவரத்து மட்டும் 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளும். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் அல்லறும் மக்களுக்கு இது பேரிடியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. மத்திய அரசு டீசல் விலையேற்றத்தினால் நட்டம் என்பதில் ஒரு உண்மையை மறைத்து வருகிறார்கள். மொத்த விலையில் பாதிக்கும் மேற்பட்ட தொகை வரியாகச் செல்கிறது. இது மாநிலங்களுக்குத்தான் செல்கிறது என்றாலும் அதை குறைக்க யாரும் தயாரில்லை.

மேலும் கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு, விவசாயம் அழிக்கப்பட்டு வேறு வழியின்றி மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. இந்த செயற்கையான நகரமயமாக்கத்தின் விளைவுதான் எல்லா இடங்களிலும், பேருந்துகளிலும், ரயில்களிலும் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கும் இந்த அரசுதான் காரணம். கிராமப்புறங்களையும், விவசாயத்தையும் வாழ வைத்திருந்தால் இந்த அசுர போக்குவரத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இனி பேருந்து கட்டண உயர்வால் மக்கள் ரயில்களை மொய்க்கப் போவது உறுதி. ஏற்கனவே அப்படித்தான் நடந்து வருகிறது. ஆக ரயில்வே நிறுத்தங்களில் இனி வன்முறை, சண்டையில்லாமல் மக்களை திணிப்பதற்கு ஏகப்பட்ட போலீசு தேவைப்படும். அல்லது ரயில் கட்டணங்களையும் ஆம்னி பேருந்து அளவு உயர்த்தி விட்டால் பிரச்சினை இல்லை. அதையும் செய்தாலும் செய்வார்கள்.

அடுத்து மின்சார கட்டண உயர்வை அரசு அறிவிக்காது, ஒழுங்குமுறை ஆணையமே அறிவிக்கும் என்று தனக்கு சம்பந்தமில்லாதது போல ஜெயலலிதா தெரிவிக்கிறார். ஏற்கனவே கிராமங்களில் 5 மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு, நகரங்களில் 3 மணி நேரத்திற்கு குறையாத மின்வெட்டு, மின்சாரமில்லாமல் ஓட முடியாத விவசாயிகளின் பம்பு செட்டுக்கள், சிறு – நடுத்தர தொழில்கள் என்று ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் போது பட்ட காலிலே படும் என்பது போல கட்டண உயர்வு. இந்தக் கட்டண உயர்வும் ஏறத்தாழ 30 முதல் 40 சதவீதம் இருக்குமென்று தெரிகிறது. அதன்படி 500 ரூபாய் கட்டியவர்கள் இனி 700 ரூபாய் கட்ட வேண்டும். 1000 ரூபாய் கட்டியவர்கள் இனி 1400 ரூபாய் கட்ட வேண்டும்.

பெரு நகர குடித்தன வீடுகளில் யூனிட் ஒன்றுக்கு 7, 8 ரூபாய் வைத்து வாடகைக்கு விடுபவர்கள் இனி பத்து ரூபாய் என்று மாற்றப் போவது உறுதி. அதன்படி 100 யூனிட் மட்டும் பயன்படுத்தும் மக்கள் அதற்கென ரூ.1000 கட்ட வேண்டும். இது வீடுகளில்லாமல் வாடகைக்கு இருக்கும் சாதாரண மக்களுக்கு எத்தகைய துயரமென்பது விளக்காமலேயே புரியும். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தடையின்றி சலுகை விலையில் கொடுக்கப்படுவதும், ஷாப்பிங் மால்கள் முதலான பேரங்காடிகளுக்கு விரயமாக்கப்படும் மின்சாரமும்தான் இன்றைய தட்டுப்பாட்டிற்கு காரணம்.

இவர்களுக்கு உரிய விலை வைத்தாலே மின்சார வாரியம் நட்டமின்றி செயல்பட முடியும். இது போக ஆளும் கட்சி பொதுக்கூட்டங்களுக்கும், கோவில் விழாக்களுக்கும் கொக்கி போட்டு திருடப்படும் மின்சாரத்திற்கு உரிய கட்டணத்தை வசூலிக்க முடியும். இதையெல்லாம் விடுத்து சாதாரண மக்களது மடியில் கை வைக்கிறார் ஜெயலலிதா.

தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை என்று நாடகமாடும் ஜெயலலிதாவின் நரித்தனத்திற்கு தினமலர், தினமணி, ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஊடக மாமக்கள் விளம்பரம் கொடுத்து அது உண்மை போல செய்திகளை வெளியடுகின்றனர். இலவச லாப் டாப், மிக்சி, பேன், கிரைண்டர், ஆடு மாடு போன்றவை கொடுப்பதற்கு மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டுமாம்.

எனில் இதை தேர்தலின் போது தெரிவித்திருக்கலாமே? இத்தகைய இலவச திட்டங்களை மத்திய அரசு நிதி கொடுத்தால் மட்டும் அமல்படுத்துவோம் என்றல்லவா அறிவித்திருக்க வேண்டும்? தி.மு.கவிற்கு போட்டியாக ஏதாவது செய்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் பாசிச ஜெயாவின் திட்டம். உண்மையில் இத்தகைய இலவசத் திட்டங்களெல்லாம் கொடுக்க கூடாது என்பதுதான் அவரது உட்கிடை. முதலாளிகளின் உலகில் வாழும் அவருக்கு சாதாரண மக்களது நலனைப் பற்றி என்ன அக்கறை இருக்க முடியும்? உண்மையில் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்றால் தன்னால் எதுவும் பிடுங்க முடியாது என்று ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு போகவேண்டியதுதானே?

நட்டமடையும் பொதுத்துறைகளுக்காக கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக கூறும் ஜெயா அது போல ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய் வருமானத்தை அள்ளித் தரும் மற்றொரு ‘பொதுத்துறையான’ டாஸ்மாக்கிற்கு கட்டண  குறைப்பை அறிவிப்பாரா? இல்லை அந்த வருமானத்தைக் கொண்டு பால், பேருந்து விலை உயர்வை செய்யமாட்டோம் என்றுதான் சொல்லுவாரா? முக்கியமாக அவரது பல இலவசத் திட்டங்களுக்கு அமுத சுரபி இந்த டாஸ்மாக்தான். அதனால்தான் ஏழை குடிகாரர்களின் வாந்திகளுக்கிடையே குடிக்க விரும்பாத பணக்காரர்களுக்காக எலைட் டாஸ்மாக்கை திறக்கப் போகிறார்.

அரசு வரிவருவாயைப் பெருக்க வேண்டுமானால் கார்களை வைத்திருப்போருக்கு வரி உயர்த்த வேண்டும், மாளிகைகளில் குடியிருப்போருக்கு வரி விதிக்க வேண்டும், பன்னாட்டு முதலாளிகள், தரகு  முதலாளிகள் இவர்களுக்களல்லவா அதிகம் வரி விதிக்க வேண்டும்? இத்தகைய வசதிகளெதுவும் இல்லாத வாழ்வை நடத்துவதற்கே அல்லும் பகலும் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் மடியில் கை வைக்க வேண்டுமென்றால் என்ன காரணம்?

கல்வி, போக்குவரத்து, மருத்தவம் என அனைத்து துறைகளிலும் அரசை ஒழித்து விட்டால் அளப்பறிய பணம் தனியார் முதலாளிகளுக்கு போகும். அதற்காகத்தான் இந்த விலை உயர்வு. இது பாசிச ஜெயா மட்டுமல்ல, கருணாநிதி இருந்தாலும் இப்படித்தான் நடந்திருக்கும். என்ன தி.மு.க ஆட்சியிலிருந்தால் அது சத்தமில்லாமல் நடந்திருக்கும். பாசிச ஜெயா என்பதால் ஊரறிய பறையடித்து அறிவித்திருக்கிறார்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் இனி உழைக்கும் மக்கள் தமது மாத செலவில் 2000 ரூபாய் வரை அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். இந்த சுமையை அவர்கள் அடிமைகளைப் போல சுமந்து கழிக்கப் போகிறார்களா? இல்லை தளையை அறுத்து போராடப் போகிறார்களா?

ஓட்டுப் போடாதீர்கள், அதில் தீர்வில்லை, இந்த சமூக அமைப்பை மாற்ற புரட்சி நடத்த வேண்டுமென்று பேசினால் இதெல்லாம் வேலைக்காகாது என்று எல்லாம் அறிந்தவர் போல புறந்தள்ளும் நடுத்தர வர்க்கம் இனியாவது தனது முட்டாள்தனத்தை உணருமா?

பாசிச ஜெயா அறிவித்திருக்கும் இந்த உத்திரவுகள் ஒரு முன்னோட்டம்தான். நாடும், மக்களும் மொத்தமாக பன்னாட்டு முதலாளிகளுக்கு விலை பேசப்படும் அங்கமாகத்தான் இந்த அறிவிப்புகள் பட்டவர்த்தனமாக வருகின்றன. என்ன செய்யப் போகிறோம்?

முதல் பதிவு: வினவு