தொகுப்பு | ஜூலை, 2011

சாத்தானின் வேதம்

20 ஜூலை

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 4

பெண் மோகம் நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்படும் மிகப் பெரிய குற்றச் சாட்டு. என் மாற்று மத நண்பர்கள், உங்களது நபிக்கு பல மனைவிகள் உண்டாமே? என கேலியாக கேட்பார்கள். நான் அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்ட அனைத்து திருமணங்களும் விதவைகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் அளிக்கப்பட்ட மறுவாழ்வு மேலும், இன்று புரட்சிகரமானது என்று போற்றப்படும் விதவைகள் திருமணத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே முன்மாதிரியாக இருந்து நடைமுறையிலும் வாழ்ந்து காட்டியவர் எங்கள் தலைவர் முஹம்மது நபி என்று விளக்கமளிப்பேன்.

உண்மையில், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை மனைவிகள் இருந்தனர் என்பது கூட எனக்குத் தெரியாது. நபி (ஸல்) அவர்களை விட, கதீஜா அம்மையார் வயது முதிர்ந்த விதவைப் பெண்மணி என்பது மட்டுமே எனக்குத் தெரிந்த அதிகபட்ச விஷயம். நான்கு மனைவிகள் இருந்திருக்கக் கூடும் என்று எண்ணிக் கொள்வேன். காரணம் திருக்குர்ஆனின் அனுமதி அவ்வளவுதான். மேலும் திருக்குர்ஆனின்  போதனைகளை சிறிதும் தவறாமல் வாழ்ந்து காட்டிய உத்தமர் என்று இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் புகழாரங்களை பலமுறை கேட்டிருக்கிறேன். அவர்களது கூற்று உண்மையே என்பதில் உறுதியாகவும் இருந்தேன்.

ஈரான் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியரான சல்மான் ருஷ்டி எழுதிய, THE SATANIC VERSES (சாத்தானின் வேதம்) என்ற புத்தகம் வெளிவந்த பொழுது, மேற்கத்திய நாடுகள் இஸ்லாமின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் களங்கமற்ற  தலைவர் முஹம்மது நபியின் மீது “பெண் பித்தர்” என்ற பொய்யான செய்திகளை ஊடகங்களில் திட்டமிட்டு பரவச் செய்கிறது என்று முஸ்லீம்களிடமிருந்து கண்டனக் குரல் ஓங்கி ஒலித்தது. இது நமது விரலே நமது கண்ணை குத்திக் கிழித்ததைப்  போல எனக்குத் தோன்றியது.

THE SATANIC VERSESல் முஹம்மது நபியை கடுமையாக விமர்சனம் செய்திருப்பதாகவும், அனைத்து முஸ்லீம்களுக்கும் தாய் போன்ற தகுதியுடைய நபி (ஸல்) அவர்களுடைய மனைவியர்களை விபச்சாரிகளாக சித்தரித்திருப்பதாகவும் அறிந்த பொழுது சல்மான் ருஷ்டியை மிகவும் வெறுத்து, என்னுடைய பிரார்த்தனைகளிலும் அவரை சபித்தேன். சல்மான் ருஷ்டிக்கு வழக்கம் போல கடுமையான எதிர்ப்பும்  மரண தண்டனை அறிவிப்பும் மட்டுமே நம்மால் தரப்பட்டது. திருக்குர்ஆனிலிருந்து வெளி வரும் ஒளிக்கதிர்கள் சல்மான் ருஷ்டியை அழிப்பதாக ஒரு பாகிஸ்தானிய திரைப்படம் சித்தரித்து தனது கோபத்தைத் தீர்த்துக் கொண்டது.

இறைவனால் இறக்கப்பட்டது, இப்பிரபஞ்சத்தின் மாபெரும் அற்புதம் என்று முஸ்லீம்களால் புகழப்படும் திருக்குர்ஆனை சாத்தானின் வேதம் என்று கூறிய, சல்மான் ருஷ்டியைப் போன்ற விஷக் கிருமிகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்தேன். களங்கமற்ற ஒரு மாமனிதரை இழிவுபடுத்தும் விதமாக எழுதிய சல்மான் ருஷ்டி மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை மனப்பூர்வமாக ஆதரித்தேன். இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், திருக்குர்ஆனின் மகத்துவத்தையும், முஹம்மது நபி அவர்களின் களங்கமற்ற தன்மையையும், உலக மக்களுக்கும், குறிப்பாக  மேற்கத்திய ஊடகங்களுக்கும் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்றும் விரும்பினேன். பெரிதாக எதுவும் நிகழவில்லை  காலப் போக்கில் எல்லாம் மறந்து போனது.

 

நான் தேடலின் பாதையில் செல்கையில், சல்மான் ருஷ்டியின் நினைவு வந்தது. சல்மான் ருஷ்டி அவ்வாறு ஏன் கூற வேண்டும்? என்ற சிந்தனை என்னுள் மேலோங்கத் தொடங்கியது. இஸ்லாமிய அறிஞர்கள் மறுப்பதைப் போல, சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகள் அபாண்டமான பொய்யாக இருப்பின், மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்கும் மத்தியில், உயிருக்குத் துணிந்து ஒரு பொய்யை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? திருக்குர்ஆன் உட்பட இஸ்லாமின் முழுப் பின்னணியையும் தெரிந்து கொள்ள விரும்பினேன். முதலில், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்படும் “பெண் மோகம்” கொண்டவர் என்ற குற்றச்சாட்டிற்கு சரியான பதில் தெரிந்து கொள்ள விரும்பினேன். THE SATANIC VERSES இந்தியாவில் தடை செய்யப்பட்டதால் அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களின பலதார மணவாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பிய பொழுது சல்மான் ருஷ்டியின்  குற்றச்சாட்டுகளுக்கு விடை தெரிந்தாலே போதுமானது என்று முடிவு செய்தேன்.

சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகளுக்கு, இஸ்லாமிய அறிஞர்களின் மறுப்புகள் புத்தகமாக வெளிவந்திருந்தது. அவற்றைப் படிக்கையில் என் மனம் திருப்தி அடையவில்லை. ஏனெனில், மார்க்க அறிஞர்கள் பலருக்கு சல்மான் ருஷ்டியை கடுமையாக எதிர்ப்பதில் இருந்த ஆவர்வம் ஆதாரங்களுடன் பதில் அளிப்பதில் இருக்கவில்லை. சிலர் THE SATANIC VERSESல் அவர் பயன்படுத்திய கீழ்த்தரமான (F…) வார்த்தைகளை எண்ணி கணக்கிட்டு சல்மான் ருஷ்டியை இழிவானவர் என்றனர். இன்னும் சிலர் இதைப் போன்று அநாகரீகமாக விமர்சித்தால் பதில் கூறமுடியாது என்றனர். இன்னும் சிலர், சல்மான் ருஷ்டியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்து, நபி (ஸல்) அவர்களைப் பற்றி விமர்சிக்க சல்மான் ருஷ்டி தகுதியற்றவர் என்றனர். சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகளுக்கு,  இஸ்லாமிய அறிஞர்களால் மிகச்சரியான ஆதாரங்களுடன் பதில் அளிக்க முடியவில்லை என்றே தோன்றியது. நபியின் பலதார மணத்திற்கான காரணங்களைத்  தெரிந்து கொள்ள அவரது மனைவியர்களின் பின்னணியையும் தெரிந்து கொள்வது அவசியம் என்று முடிவு செய்தேன்.  

 

எனக்கு கிடைத்த தகவல்கள் என்னை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் முதலில், நபி (ஸல்) அவர்களுக்கு   நான்கு மனைவிகள் இருக்கலாம் என்று நான் (தவறாக) நினைத்தது ஒன்பதானது, ஒன்பது பதிமூன்றாக உயர்ந்து இருபத்து இரண்டைக் கடந்நது முப்பத்தி இரண்டைத் தொட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு மனைவியர் இருக்கலாம் என்ற யூகத்தில்,  நான்கு மனைவியர்களைத் திருமணம் செய்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ள ஆய்வில் இறங்கிய எனக்கு தலைசுற்றத் தொடங்கியது…

மனைவியர்களின்  பட்டியல்

 

ஒரு இஸ்லாமிய இணையதளம் பதிமூன்று மனைவிகளின் பட்டியலை தந்து  குற்றச்சாட்டுகளை மறுத்தது. நபி (ஸல்) அவர்களின்   பலதார மணங்கள் சமுதாய நலனை அடிப்படையாக கொண்டது வேறு விதமாக கண்பது தவறானது எனவும் எச்சரித்தது. இதுதான் அவர்கள் கொடுத்த பட்டியல்,

 

மனைவியர்களின் / அவருடன்            மனைவியர்களின்           நபி அவர்களின்வாழ்ந்த பெண்களின்

பெயர்கள்                                                      திருமண வயது                 திருமண வயது

  1. கதீஜா                                                                    40                                            25
  2. சவ்தா                                                                    ?                                              52
  3. ஆயிஷா                                                              6                                              52
  4. ஹப்ஸா                                                              22                                            56
  5. ஜைனப்                                                                30                                            56
  6. உம்முஸல்மா                                                 26                                            56
  7. ஜைனப்                                                                 37                                            58
  8. ஜுவேரியா (போர் கைதி)                            20                                            58
  9. உம்மு ஹபீபா                                                  36                                            60
  10. ஸபியா (போர் கைதி/அடிமை)              17                                            60
  11. மாரியா (கிருத்துவ பெண் /அடிமை)   17                                            60
  12. ரைஹானா ( போர் கைதி/ அடிமை)     15                                            60
  13. மைமூனா                                                            36                                            53

மேற்கண்ட பதிமுன்று மனைவியர்களுடன் இன்னொரு இணையதளம் தரும் பட்டியல் இதோ,

நபி (ஸல்) அவர்கள்   மேலும் பல  பெண்களைத் திருமணம் செய்திருப்பதாக ஹதீஸ் ஆய்வாளர் அலீ தஷ்தி குறிப்பிடுகிறார் (இவர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்)  அவர் தரும் பட்டியலையும் காண்போம்

 

இவர்களைப் பற்றிய குறிப்புகள் 

  1. ஃபாத்திமா                                  al-Tabari vol.9 p.39, al-Tabari vol.9 p.139
  2. ஹெந்த் (விதவை)               Sahih Muslim vol.3 no.4251-4254 928-929.
  3. அஸ்மா பின்த் நுக்மான    Bukhari vol.7 book 63 no.181 p.131,132
  4. அஸ்மா                          a-Tabari vol.9 p.135-136. al-Tabari vol.39 p.166

 

உறுதியற்றஉறவுகள்/ சுருக்கமாக திருமணம் செய்தல்

  1. உம்மு ஷரிக்                                     al-Tabari vol.9 p.139.
  2. ஜைனப்                                                al-Tabari vol.7 p.150 footnotes 215,216 and al-Tabari vol.39 p.163-164
  3. கவ்லா                                                  al-Tabari vol.39 p.166           
  4. முலைகா பின்த் தாவூத்                 al-Tabari vol.8 p.189
  5. அல் ஷன்பா பின்த் அம்ர்            al-Tabari vol.9 p.136
  6. அல் அலீய்யா                                    al-Tabari vol.39 p.188
  7. அம்ராஹ் பின்த் யஜீத்                   al-Tabari vol.39 p.188
  8. கத்ைலா பின்த் கைஸ்                 al-Tabari vol.9 p.138-139
  9. ஸானா பின்த் ஸூஃப்யான்          al-Tabari vol.39 p.188
  10. ஷாராஃப் பின்த் கலீபா                   al-Tabari vol.9 p.138
  11. 28.   ஜைனப்
  12. பெயர் தெரியாத ஒரு பெண்        al-Tabari vol.39 p.187

 

 Wiki Islam தரும் பட்டியல் இதோ

  1. Khadija/Khadijah                                              
  2. Sauda/Sawda bint Zam’a/Zam’ah
  3. A’isha
  4.  A’isha’s Slaves
  5. Umm Salama
  6. Hafsa/Hafsah
  1. Zainab/Zaynab bint Jahsh
  2. Juwairiya/yya/yah
  3. Omm/Umm Habiba
  4. Safiya/Safiyya/Saffiya
  5. Maimuna/Maymuna bint Harith
  6. Fatima/Fatema/Fatimah
  7. Hend/Hind
  8.  Sana bint Asma’ / al-Nashat
  9.  Zainab/Zaynab bint Khozayma
  10. Habla
  11. Divorced Asma bint Noman
  12. Mary/Mariya the Copt/Christian
  13. Rayhana/Rayhanah bint Zaid
  14. Divorced Umm Sharik /Ghaziyyah bint Jabir
  15. Maymuna / Maimuna
  16. Zainab
  17. Khawla / Khawlah bint al-Hudayl
  18. Divorced Mulaykah bint Dawud
  19. Divorced al-Shanba’ bint ‘Amr
  20. Divorced al-‘Aliyyah
  21. Divorced ‘Amrah bint Yazid
  22. Divorced an Unnamed Woman
  23. Qutaylah bint Qays
  24. Sana bint Sufyan
  25. Sharaf bint Khalifah

சரியான ஆதார வரிசையில்லமல் விடுபட்டவர்களும் வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களின் எண்ணிக்கையை இணைத்தால் நபி (ஸல்) அவர்களின் மனைவிர்களின் எண்ணிக்கை சுமார் நாற்பதை நெருங்கும். உலகத்திற்கே அருளாக அனுப்பப்பட்டவர், இறைவனை அடையும் வழியை போதிக்க வந்தவர்இத்தனை பெண்களுடன் எப்படி வாழ முடியும் ?

சர்வ வல்லமையுடைய இறைவனால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டவர், இறைச்செய்தியை மக்களிடையே கூறவந்தவர், இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்தவர் சராசரி மனித வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவர்களால் அற்பமான இன்பங்களை நாடிச் செல்ல மாட்டார்கள் என்றும், அவர்கள் உணர்ந்து கொண்ட பேரின்பத்தின் முன் இந்த உலகமும் அதன் இன்பங்களும் அற்பமானவைகளே என்றும் நினைத்துக் கொண்டேன்

நிலையற்ற இவ்வுலக வாழ்வின் இன்பங்களில் மூழ்கி நிலையான மறுஉலகவாழ்க்கையைத் தொலைத்துவிட வேண்டாம் என்பதே முஹம்மது நபி உலக மக்களுக்கு  அச்சமூட்டி கூறிய உபதேசங்கள். எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருமணங்கள் உடல் தேவைகளுக்கானது அல்ல.  இது நிச்சயமாக, ஆதரவற்ற பெண்களுக்கு மறுவாழ்வளிக்க செய்து கொண்ட திருமணங்கள்தான் என்பதை குழப்பமடைந்த எனது மனதிற்கு உணர்த்த  விரும்பினேன்.

 

நபி (ஸல்) அவர்களின்   மனைவியர்களின் பின்னணியை ஆராய்ந்தால் சமுதாய காரணங்கள் என்னவென்பது தெளிவாகும். விளக்கங்களை அறிந்து கொள்ள மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள் சிலவற்றைப் படித்தேன் அவை எனக்குப் போதுமான தகவல்களைத் தரவில்லை.  எனவே விரிவான செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காக இணையதள வலைக்குள் இறங்கினேன்.

“The Prophet of Allah liked three worldly objects – perfume, women and food.”இது ஆயிஷா அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் ஒரு நம்பகமான ஹதீஸ்.

வாசனை திரவியங்கள், பெண்கள் மற்றும் உணவு – அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமான மூன்று உலக விஷயங்கள். (வேறு சில அறிவிப்புகளில், முஹம்மது நபிக்கு மிகவும் பிடித்தமான உலக விஷயங்கள், வாசனை திரவியங்களும், பெண்களுமே என காணப்படுகிறது)

“பெண்களை மிகவும் பிடிக்கும்” என்பதன் பொருள் அன்பு செலுத்துவதைக் குறிப்பிடுவதாக இருக்க வேண்டும், அதனால் தான் அவர்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தின் காரணமாகவே இவ்வளவு திருமணங்களும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன். ஆதரவற்ற பெண்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்குவதற்காக அனைத்து பெண்களையும், நபி (ஸல்) அவர்களே திருமணம் செய்து கொள்வதுதான் சரியான தீர்வா?

நபி (ஸல்) அவர்கள், தானே திருமணம் செய்து கொண்டிருப்பதைவிட தனது உத்தம நண்பர்களுக்கு திருமணம் செய்து வைக்க இயலுமே?, அல்லது அவர்களுக்கு வேறு வகைகளில் உரிய பாதுகாப்பு வழங்கியிருக்க முடியுமே?

என் மனதில் பலவிதமான எதிர்க்கேள்விகள் உருவாகிக் கொண்டிருந்த பொழுது வேறொரு ஹதீஸ் கண்களில் பட்டது.

Ibn Sad’s  “Kitab al-Tabaqat al-Kabir, volume 1”, pages 438, 439.

…The apostle of Allah said, “Gabriel brought a kettle from which I ate and I was given the power of sexual intercourse to forty men.”

(அல்லாஹ்வின் தூதர் கூறினார், ஜிப்ரீல் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்ததை நான் அருந்தியதிலிருந்து எனக்கு நாற்பது ஆண்களின் பாலியல் பலம் கிடைத்து விட்டது.)

ஜிப்ரீல் (கேப்ரியேல் என்ற தேவ தூதன்) அல்லாஹ்வின் வஹீ செய்திகளைக் கொண்டு வந்தார் என்று மார்க்க அறிஞர்கள் கூறுவதை அறிவேன். நபி(ஸல்) அவர்களுக்கு ஆண்மையை அதிகரிக்கச் செய்வதற்கு மருந்துகளையும் கொண்டு வந்தாரா?

இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு, ஜிப்ரீல் மூலமாக “வயாக்கராவை விட வீரியமிக்க மருந்துகளை வழங்கினான் என்று சொல்லலாம்.

அப்படியானால், முஹம்மது நபியின் இத்தனை திருமணங்களுக்கும் அடிப்படைக் காரணம்  என்ன?

எண்ணற்ற மனைவியர்களுடன் உல்லாசம் காண்பதற்காகத்தான்.

அல்லாஹ்வின் செய்தியை கூற வந்தவருக்கு இந்த பாலியல் வலிமை எந்த வகையில் உதவும்?  நாற்பது ஆண்களுக்கு சமமான வலிமை துன்பத்திலிருப்பவருக்கு உதவவோ, தன்னை இறைத்தூதுவராக ஏற்றுக் கொண்ட மக்களைப் பாதுகாக்கவோ வழங்கப்படவில்லை.  அற்ப உணர்வுகளில் உல்லாசம் காணவே  நாற்பது ஆண்களுக்கு சமமான பாலியல் வலிமை வழங்கப்படடுள்ளது. என்னுடைய உறுதியான நம்பிக்கைகள் ஆட்டம் காணத் துவங்கியது. மேற்கண்ட ஹதீஸ்களைக் கண்டவுடன்  நபி (ஸல்), பெண் மோகம் கொண்டவர் என்ற குற்றச்சாட்டிற்கான அடிப்படை விளங்கியது.

 

எனவே நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கையையும், பாலியல் பலத்தையும்  ஹதீஸ்களின் வழியாக எட்டிப்பார்த்தேன். முஹம்மது நபியின் மனைவியர்களைப் பற்றி நான் அறிந்து கொண்டவைகளில் சிலரைப்பற்றிய சுருக்கமான செய்திகள்.

 

தொடரும்

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

 

சமச்சீர்கல்வி உயர்நீதிமன்றத் தீர்ப்பு! பாசிச ஜெயாவுக்கு ஒரு செருப்படி!

18 ஜூலை

சமச்சீர் கல்வி – பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்துமாறு அம்மாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஜூலை 22 ஆம் தேதிக்குள் கருணாநிதி அரசால் தயாரிக்கப்பட்டு, அம்மாவின் அரசால் ஸ்டிக்கர் ஒட்டி மேம்படுத்தப்பட்ட சமச்சீர் பாடத்திட்ட நூல்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “வலது இடது போலி கம்யூனிஸ்டுகளின் பேராதரவுடன் சட்டமன்றத்தில் அம்மா நிறைவேற்றிய சட்டத்திருத்தமும் செல்லத்தக்கதல்ல என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாகப்பதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பின் முழு விவரம் இன்று மாலைதான் கிடைக்கும்.

தமிழகத்தின் காவல் தெய்வம், தங்கத்தாரகை, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மூன்றாவது முறையாக முதல்வராக அமர்ந்து, முதல் முறையாக நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முதன் முதலாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கே முட்டுக்கட்டை போட்டிருக்கிறது உயர்நீதிமன்றம்.

அம்மா உச்சநீதிமன்றம் போகிறார். ஒரு தலைப்பட்சமாக இடைக்காலத் தடை உத்தரவு எதையும் கொடுத்துவிடாமல் தடுக்கும் பொருட்டு, கேவியட் மனு தாக்கல் செய்வதற்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் உச்ச நீதிமன்றம் போகிறது.

உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் நவநீதி கிருஷ்ணனும், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவும் முன்வைத்த வாதங்கள் உப்புசப்பற்றவை. அவர்கள் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு உள்ள இறையாண்மை மிக்க அதிகாரம் குறித்துத்தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்கள். தமிழ் மாணவர்களின் முடியைத் திருத்தி குடுமி வைப்பதற்கோ, அல்லது மொட்டை அடிப்பதற்கோ அம்மாவுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதெனினும், ஒரு கோடி மாணவர்களுக்கும் இந்த ஆண்டே, இந்தக் கணமே மொட்டை அடித்தாக வேண்டும் என்ற சட்டத் திருத்தத்துக்கான நியாயத்தை விளக்கவில்லை.

அம்மா வின் கோபம், அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனை நோக்கித் திரும்புமே தவிர, பத்மா ஸேஷாத்ரி பள்ளியின் தாளாளர் ஸ்ரீமதி ஒய்.ஜி.பார்த்தஸாரதி, டி.ஏ.வி ஸ்கூல் என்று அறியப்படும் தயானந்தா ஆங்கிலோ வேதிக் ஸ்கூலின் தாளாளர், ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் அம்மையார் ஆகியோரை நோக்கித் திரும்பாது. அம்மா வை மூக்கறுபட வைத்தவர்கள் இவாள்தான். பொதுப்பாடத்திட்டத்தைப் பார்த்து கெக்கெக்கே என்று சிரித்த அக்ரகாரத்து அறிவுஜீவிகளும், ஆங்கிலக் குஞ்சுகளும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தங்களது தரப்பு வாதங்களைப் படித்துப் பார்ப்பார்களேயானால், தங்கள் முகத்தில் தாங்களே காறித்துப்பிக்கொள்ள வேண்டிய நியாயம் குறித்து அவர்கள் புரிந்து கொள்ள இயலும்.

வாதங்களின் அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று கொண்டால், தற்போதைய உயர்நீதி மன்றத் தீர்ப்பினை “நாம் எதிர்பார்த்த்துதான்’ என்று சொல்ல்லாம். நீதிமன்றங்களின் எதார்த்தநிலையைக் கணக்கில் கொண்டு கூறுவதாயின் இந்த தீர்ப்பு அவ்வப்போது நிகழும் அதிசயங்களில் ஒன்று.

இந்த வழக்குக்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்கள் பலர் உழைத்திருக்கின்றனர். வழக்குரைஞர் மோகன், புருஷோத்தமன் ஆகியோர் வாதிட்டிருக்கின்றனர். சமச்சீர் பாடத்திட்டக் குழவின் உறுப்பினரான கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர்களிடமிருந்து வாக்குமூலம் ஒன்றையும் பெற்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தாக்கல் செய்தது.

பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களின் சார்பில் வழக்குரைஞர் என்.ஜி.ஆர் பிரசாத், திருமதி மனோன்மணி அவர்கள் சார்பில் வழக்குரைஞர் விடுதலை ஆகியோர் இவ்வழக்கில் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கின்றனர்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் மார்க்சிஸ்டு கட்சியின் சார்பாளர் என்ற போதிலும் அக்கட்சியின் நெறியற்ற, சந்தரப்பவாத நடைமுறையை நிராகரித்து இறுதிவரை உறுதியாக நின்று போராடியிருக்கிறார் என்பது பாராட்டத்தக்கது. சமச்சீர் கல்விக்காக இவரும், இந்திய மாணவர் சங்கமும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, மார்க்சிஸ்டு, வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைமைகள் அம்மாவின் குலக்கல்வித் திட்டத்துக்கு “ஓ” போட்டுக் கொண்டிருக்கின்றனர். சொரணையுள்ளவர்கள் வலது இடது கம்யூனிஸ்டு கட்சிகளிலிருந்து தாங்களாகவே வெளியேறிவிடுவார்களா அல்லது அன்புச் சகோதரி அவர்கள், இவர்களையெல்லாம் “நமது எம்ஜிஆர்” நாளேட்டில் கட்டம் கட்டி வெளியேற்றும் காலம் வரை காத்திருப்பார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமச்சீர் கல்வியை ஒழிப்பதற்கு தமிழகத்தில் ஜெ அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், வல்லுநர் குழுவின் அறிக்கை எரிப்பு, அம்மா வின் கொடும்பாவி எரிப்பு எனப் பல்வேறு வடிவங்களில் போராடியதும் சிறை சென்றதும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்தான். மக்களின் வரவேற்பையும், அதிமுகவினருடனான மோதலையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு கடந்த இரு மாதங்களில் மேற்கொள்ளப்பட்டன இந்த பிரச்சாரங்கள்.

இப்போராட்டத்துக்கு இணையாக மெட்ரிக் பள்ளிகளின் நன்கொடைக் கொள்ளையை எதிர்த்த போராட்டங்களும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடத்தப்படுகின்றன. மெட்ரிக் மோகத்துக்கு ஆட்பட்ட பெற்றோரை, அந்தக் கொள்ளையர்களிடமிருந்து மீட்பதற்காகப் போராடுவதுடன், அவர்களை சமச்சீர் கல்வியை ஆதரித்தும், கல்வி தனியார்மயத்தை எதிர்த்தும் போராட வைத்திருக்கிறோம்.

*************************************

போன வாரம் பேருந்து ஒன்றில் ஜெ அரசின் சமச்சீர் கல்வி ஒழிப்பு நடவடிக்கையை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ஒரு ம.க.இ.க தோழர். “டேய்.. அம்மா ஆட்சியைப் பத்தி பேசாதே” என்று வெயிட்டாக வந்த்து ஒரு குரல். அதைக் காதில் வாங்காமல் அந்த தோழர் தனது பேச்சைத் தொடர்ந்தார். “டேய் பேசாதேங்கிறேன்ல” என்று குரலுக்கு ஏற்ற வெயிட்டுடன் எழுந்து நின்றது ஒரு கரை வேட்டி. “நான் என் கருத்தை சொல்றேன். நீங்க உங்க கருத்தை சொல்லுங்க. எது சரின்னு சனங்க முடிவு பண்ணட்டும்” என்று அந்தத் தோழர் மிகவும் நாகரீகமாகப் பதிலளித்தார்.

“டேய்.. நிறுத்துடான்னா…” என்று சொல்லி கையை ஓங்கிய கரை வேட்டியின் கை ஓங்கியபடி நின்றது. “னா..” என்ற குரல் முடியாமல் “ஆ” என்று தொடர்ந்தது. கரை வேட்டியின் கண்ணாடி தெறித்து கீழே விழுந்திருந்தது. “யோவ், இறங்கிப் போய்யா” “தம்பி தொலையிறான் விடுங்க” என்று தலையிட்டார்கள் பயணிகள். கரை வேட்டி தப்பித்த்து.

என்ன இருந்தாலும் தனிப்பெரும்பான்மை பெற்று செயித்த கட்சியல்லவா? கேப் இல்லாம ரெண்டாவது அடிய அடிக்கப்படாது.

முதல் பதிவு: வினவு

அரங்கக் கூட்டத்திற்கு அழைக்கிறோம்

10 ஜூலை

அன்பார்ந்த பெற்றோர்களே! நண்பர்களே!!

பல்வேறு வகைப்பட்ட பாடத்திட்டங்களைக் கொண்டு தனியார் கல்வி நிலையங்கள் நிலைத்து நிற்பதற்கு உதவியாக சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களை செயல்படுத்த மறுப்பது, தனியார் கல்வி நிலையங்களின் கட்டணக் கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருப்பதன் மூலம் மக்களைச் சுரண்டும் அவர்களின் கொள்ளை லாபத்திற்கு உறுதுணையாக இருப்பது, இந்த இரண்டு நடைமுறைகளின் ஊடாக மக்களின் கல்விக் கனவை தனியாரிடம் அடகு வைக்கும் அரசின் நடைமுறைகள் எந்த அளவுக்கு அபாயகரமானவை என்பதையும், அதை எதிர்த்தாகவேண்டிய அவசியத்தை விளக்கியும்

எதிர்வரும் 12/07/2011 செவ்வாயன்று மாலை 6.00 மணிக்கு கடையநல்லூர் நியூபஜாரிலுள்ள புதூர் புதிய பள்ளியில் அரங்கக் கூட்டம் நடைபெறுகிறது.

அனைவரும் கலந்து கொண்டு அரசியல் விழிப்புணர்வு கொள்ள வருமாறு அழைக்கிறோம்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தமிழ்நாடு

சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!

10 ஜூலை

மச்சீர்கல்வி பற்றிய விவாதங்களில் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. சமச்சீர் கல்வி வேண்டாம் எனச் சொன்னவர்கள் ‘சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களின் தரம் குறைவானது’ எனச் சொன்னார்கள். குறைந்தது 10 பேராவது இதனை என்னிடம் சொல்லியுள்ளனர். அவர்களிடம் அந்த நூல்களை வாசித்தீர்களா எனக்கேட்டேன். ஒருவரும் இல்லை என்றார்கள். மேலும் தரம் குறைவானதென எல்லோரும் சொல்கின்றனர் என்பதால் அவர்களும் அவ்வாறு சொல்வதாக ஒப்புக் கொண்டனர். அப்படி என்றால் சமச்சீர் கல்விப்பாட நூல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளன என்பதை அறிவதுதான் முதன்மையானதெனக் கருதி அரசின் இணையதளத்தில் போய்ப் பார்த்தேன். அதிலிருந்து பாடநூல்கள் எடுக்கப்பட்டு விட்டன. கூகிளில் தேடி ஒரு தனிநபரது இணையதளத்தில் இருந்து 5,7,8,9,10 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை மட்டுமே எடுத்துப் படிக்க முடிந்தது. அவற்றில் கணக்குப் பாடங்களைத் தவிர பிறநூல்கள் அனைத்தையும் வாசித்ததில் இருந்து சில அம்சங்களைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன். பாடத்திட்டங்களை அனைத்துத் தரப்பினரின் பங்கெடுப்போடுதான் நூல்களாக்கி உள்ளனர். மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்துதான் நூல்களை உருவாக்கி உள்ளனர். பல நூல்களின் ஆசிரியர் குழுக்களில் தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளின் பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு அறிவியல் நூலுக்கு தலைமை வகித்தவர் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆவார். பாடப்புத்தகங்கள் மனப்பாடம் செய்ய என இல்லாமல் சிந்திக்க, கலந்துரையாட, சுகமான வாசிப்புக்கு எனும் நோக்கில் வண்ணப்படங்கள், எளிய வரைபடங்கள் மூலம் அழகிய லே-அவுட்டில் அருமையாக இருந்தது. பாட வாரியாக அவற்றில் நான் கண்ட நிறை குறைகளை இனி பார்ப்போம்.

அறிவியல்பாடம்:

1) ஐந்தாம் வகுப்பு:

ஆசிரியர் குழு: லயோலா கல்லூரி பேராசிரியர், சென்னை புனித பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன்பள்ளி ஆசிரியர், மதுரை எஸ் பி ஓ ஏ மெட்ரிக் பள்ளி ஆசிரியர்.

  • பசுமை உலகம் பற்றிய பாடம், உரையாடல் வடிவில் உள்ளது. விதை பரவுதலின் வகைகள் வண்ணப்படங்களால் மனதில் பதியும்வண்ணம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
  • நாம் இன்று உண்ணும் சில காய்கறிகளின் பூர்வீகம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. (தர்பூசணி, வெண்டை- ஆப்ரிக்கா, தக்காளி,கொய்யா – தென் அமெரிக்கா)
  • விலங்குகளின் வாழ்விடமான காடு சுருங்குவதே விலங்குகள் ஊருக்குள் வரக்காரணம் என்பதை ஆழ நெஞ்சில் பதியவைத்துள்ளனர்.
  • எளிதில் அனைவரும் செய்து பார்க்கும் சோதனை: பாட்டில் ஒன்றில் முட்டையுடன் கூடிய எருக்கிலையைப் போட்டு அது புழு,கூட்டுப்புழு, பட்டாம்பூச்சி என வளர்ச்சியடவதைப் பார்க்கச் செய்தல்.
  • விண்வெளிப்பயணம் கட்டுரையில் அண்மையில் ஏவப்பட்ட இந்தியாவின் சந்திராயனும் இடம்பெற்றுள்ளது.
  • நீர் எந்த ஒரு தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல. அது பொது உடமையானது என ஒரு பாடம் வலியுறுத்துகிறது.

2) ஏழாம் வகுப்பு:

ஆசிரியர் குழு: பெரியார் பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர், எத்திராஜ் கல்லூரி இயற்பியல்பேராசிரியர், சென்னை புனித ஜான் மெட்ரிக் பள்ளி ஆசிரியர், மதுரை மகாத்மா மாண்டிசோரிமெட்ரிக் பள்ளி ஆசிரியர்.

  • முன்பு +1 இல் இடம்பெற்றிருந்த வகைப்பாட்டியல், சுற்றுச்சூழலியல் இப்போது 7ஆம் வகுப்பில்.
  • விலங்குகளால் மனித சமூகத்துக்குக் கிட்டும் பயன்களோடு விலங்கியல் பாடம் ஆரம்பமாகிறது.
  • லெக்ஹான் முட்டைக்கும் நாட்டுக்கோழிக்கும் உள்ள வேறுபாடு, நல்லமுட்டையை அழுகிய முட்டையில் இருந்து வேறுபடுத்தும் எளிய முறை ஆகியவை படிப்பை சுவாரசியமாக்குகின்றன.
  • நீரின் வணிகமயமாக்கம், ஆற்றுமணல் கொள்ளை போன்றவற்றால் நீர்வளம் சிதைக்கப்படுதல் விளக்கப்படுகிறது. கடல்நீர் எவ்வாறு குடிநீராக்கப்படுகிறது என்பதும் விளக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு பாட முடிவிலும், கூடுதலாக வாசித்துத் தெரிந்துகொள்ள உசாத்துணை நூல்கள், பதிப்பக விவரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. இணையதள முகவரிகளும் தரப்பட்டுள்ளன.
  • அணுக்கள்->மூலக்கூறுகள்->செல்கள்->திசுக்கள்->நுண்ணுறுப்புகள்->உறுப்புமண்டல்லங்கள்->உயிரினம் என்று விளக்கும் காட்சிப்பட விளக்கம், செல்களைப்பற்றிய புரிதலை எளிதாக்குகிறது.
  • மனிதன் ஓடும்போது அவனுடைய எலும்புகள் எந்த நிலையில் இருக்கும் எனும் படமும் அறிவியலோடு அன்றாட நிகழ்வை இணைத்து சிந்திக்க வைக்க உதவும்.
  • சித்தவைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, நீரிழிவு நோய் பற்றிய அறிமுகம் புதிதாக 7ஆம் வகுப்பிலேயே இடம்பெற்றுள்ளது.
  • வண்ணப்படங்களாலும் விளக்கச் சித்திரங்களாலும் வாசிப்பைத் தூண்டுகிறது, லே அவுட்.

3) எட்டாம் வகுப்பு:

ஆசிரியர் குழு: அண்ணா பல்கலை இயற்பியல் பேராசிரியர், கோவை எஸ் ஆர் எம் வி கல்லூரி, சென்னைபச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள், சென்னை புனித மேரி மெட்ரிக் பள்ளி, சென்னை டொன்போஸ்கோ, புனித பிரான்சிஸ் சேவியர் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள்

  • நெல்சாகுபடி ஆரம்பம் முதல் அறுவடை வரை விளக்கப்பட்டுள்ளது.நெல் சந்தைப்படுத்தப்படுவதும் உணவு பதப்படுத்தும் முறைகளும் விளக்கப்படுகின்றன.
  • கூடுதல் வாசிப்புக்குத் தரப்பட்டுள்ள ஒரு இணையதளம்: எம் எஸ் சுவாமிநாதன்.காம்
  • நாளமில்லாச்சுரப்பி, ஆண் பெண்கள் வளரிளம்பருவம் அடைதல், பால் நிர்ணய குரோமோசோம்கள், ஹார்மோன் குறைபாட்டால் வரும் முன்கழுத்துக் கழலை, குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதிலிருந்து எவ்வாறு தற்காத்தல், புகைத்தல், குடி போன்றவை உருவாக்கும் சீர்கேடுகள், நச்சுக்காளான்களை இனம் காணும் முறை – நன்கு எழுதப்பட்டுள்ளன.
  • சைகஸ், பைனஸ் ஆகிய மரங்களை 20 ஆண்டுகளுக்கு முன் +2 பாடத்தில் பார்த்தபோது கறுப்புவெள்ளைப் படத்தில் அது என்ன மரங்களென்றே தெரிந்துகொள்ள இயலவில்லை. இப்போது தெளிவான வண்ணப்படங்களால் 8ஆம்வகுப்பிலேயே அவற்றைப் பார்க்கமுடிகிறது.
  • எலுமிச்சை கேன்கர், வெள்ளரி பலவண்ணநோய் – வைரஸ்களால் உருவாகின்றன என அப்போது படித்தபோது அது என்ன நோய் என ஆசிரியரால் விளக்க முடிந்ததில்லை. இந்நூலில் அந்நோய் பாதித்த எலுமிச்சை, வெள்ளரிக்காய்கள் படங்களோடு தரப்பட்டுள்ளன.
  • வலசை போகும் ஆமை, உயிப் பன்மத்திற்கு அச்சுறுத்தல்கள், நமது பாரம்பரிய அறிவு இப்பன்மத்தைப் பாதுகாத்த தன்மை, காற்று நிலம் நீர் மாசுபடுதல் பற்றிய பாடங்களும் செறிவாக உள்ளன.
  • கழிவுநீர் சுத்திகரிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என்பது 8ஆம் வகுப்பில் விளக்கப்படுகிறது. இதனை எஞ்சினியரிங் கெமிஸ்ட்ரியில் கல்லூரியில்தான் முன்பு படித்தார்கள்.
  • உயிரி பிளாஸ்டிக் தயாரிக்கும் முறை இடம்பெற்றுள்ளது. இது உணவில் இருந்து பிளாஸ்டிக் போன்ற பொருள் தயாரிக்கும் முறை. இது உணவுப்பற்றாக்குறைக்கு இட்டுச் செல்லும் என்ற விழிப்புணர்வு இங்கே இடம் பெறவில்லை.

4) ஒன்பதாம் வகுப்பு:

ஆசிரியர் குழு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபணு மாற்றியல் துறையின் தலைவர்,கோவை ராமகிருஷ்ணாமிஷன் கல்லூரி இயற்பியல் துறை தலைவர், சென்னை புனித ஜோசப்ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சென்னை புனித மேரி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள்.

  • நகர்மயமாதலைப் படத்துடன் (ஒப்பீடு 1990 & 2010 ஒரே நிலப்பரப்பு எவ்வாறு மாறியுள்ளது எனப் புலப்படுத்தும் படம்) புரியவைத்து, இந்நகர்மயமாதல் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஆனதென்றும், இதனால் விளைச்சல் நிலம் குறைந்ததென்றும், மக்கள் மீதே பழிபோடும் விளக்கம் இடம்பெற்றுள்ளது J
  • பயிர் மேம்பாட்டுப்பாடம், இயற்கை உரங்களின் அவசியத்தையும் பேசுகிறது. பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப் பரிந்துரைக்கும் இப்பாடம் உதாரணமாக டி.டி.ட்டி ஐ பரிந்துரைக்கிறது  (இது பல ஆண்டுகளுக்கு முன்பே பல நாடுகளில் தடை செய்யப்பட்ட நஞ்சாகும்)
  • முன்னரெல்லாம், பயிர்களுக்கு வரும் நோய் பற்றிய குறிப்புகள் வெறுமனே எழுத்தில்தான் இருக்கும். இப்பாடநூலில் நிலக்கடலைக்கு வரும் இலைப்புள்ளி நோயை விளக்க வண்ணப்படம் இடம்பெற்றுள்ளது.
  • பயிர்ப்பாதுகாப்புப் பாடத்துக்கான உசாத்துணையில் தமிழ்நாடு வேளாண் பல்கலையின் இணையதள முகவரி இடம்பெற்றுள்ளது.
  • புகைத்தல், மது அருந்துதல் போன்றவற்றிற்கு அடிமையாவதற்கான காரணிகள், அவை உருவாக்கும் நோய்கள் ஆழமாக விளக்கப்பட்டுள்ளன.
  • அதேபோல உடல்பருமன், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுபட வழிமுறைகளும் சொல்லித்தரப்பட்டுள்ளன.
  • எலும்புமண்டலம், நரம்புமண்டலம் போன்றவற்றில் கண்டுபிடிப்பாளர்களின் படங்களுடன் அவர்கள் செய்த ஆய்வு, ஆய்வு முடிவுகள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. இதே போல அனைத்துத் துறைகளிலும் பின்பற்றப்பட்டுள்ளன. (உதாரணம் பெஞ்சமின் ப்ராங்ளின் சாவிக்கொத்தை பட்டத்தின் நூலில் கட்டி இடிதாங்கியைக் கண்டுபிடித்தது படத்துடன் உள்ளது)
  • மாசுபடுதலும் ஓசோன் படல ஓட்டையும் எவ்வாறு நிகழ்கின்றது எனும் பாடம் உள்ளது. இதில் சென்ற ஆண்டு மெக்சிகோ வளைகுடாவில் நடந்த எண்ணெய்க் கசிவு உட்பட பல ஆதாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • வேதியியல் சமன்பாடுகளைப் புரிந்துகொள்ள விளக்கப்படத்துடன் கூடிய சமன்பாடு உதவுகிறது. கந்தக ட்ரை ஆக்சைடு எவ்வாறு கந்தக டை ஆக்சைடிலிருந்து ஆக்சிஜன் ஏற்றமுறுகிறது என்பதை யாவரும் எளிதில் புரியும்படி சமன்பாடு புதுவகையில் தரப்பட்டுள்ளது.
  • தனிமவரிசை அட்டவணை உருவாக்கிய மென்டலீபின் புகைப்படத்தை முதன்முறையாக இப்புத்தகத்தில்தான் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.
  • நேனோ தொழில்நுட்பம் என்பது விளக்கப்பட்டிருக்கிறது.
  • வேதிப்பிணைப்புகள் முன்பெல்லாம் +1இல் சொல்லித்தரப்பட்டது., இப்போதோ அது 9ஆம் வகுப்பில்.
  • கெல்வின், ஜேம்ஸ் வாட், டாப்ளர் போன்றோரின் வரலாறும் அறிவியலில் இவர்கள் செய்த பங்களிப்பும் இதற்காக ஊலகில் இவர்கள் பெயர் நிரந்தரமாக்கப்பட்டமை எல்லாம் சொல்லப்பட்டுள்ளது (திறனின் அலகு வாட், வெப்பநிலையின் அலகு கெல்வின்)
  • ஒன்பதாம் வகுப்பில் இருந்து செய்முறைப்பயிற்சி இடம்பெறுகிறது.

5) பத்தாம் வகுப்பு:

ஆசிரியர் குழு: சென்னை ஐ ஐ டியின் இயற்பியல் பேராசிரியர், திருச்சி தேசிய தொழில்நுட்பநிறுவனத்தின் வேதியியல் பேராசிரியர், சேலம் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி, சென்னைசெயின்ட் பேட்ரிக் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள்

  • · மரபியல் 10ஆம் வகுப்பில் ஆரம்பமாகிறது.
  • · கிரிகர் ஜோஹன் மென்டல், டார்வின், ஜென்னர் எனப்பலரின் ஆய்வுகளோடு விவாதிக்கும் இப்பாடம் இரட்டைக்குழந்தைகள், குளோனிங் ஆட்டுக்குட்டி, ஸ்டெம் செல் சிகிச்சை வரை விளக்குகிறது.
  • · நோய்த்தடுப்பு முறை எனும் பாடம் சமகால நோய்களையும் பேசுகிறது. (இன்புளுயென்சா, ஊட்டக்குறைவு நோய்கள், ஹெச்1என்1 )
  • · செடி,மரங்களின் தாவரப்பெயர் அட்டவணை, அத்தாவரப்பெயரின் வட்டாரவழக்கிற்கும் ஒரு இடம் கொடுத்துள்ளது. உதாரணமாக ‘ஆர்டோகார்பஸ் இன்டக்ரிபோலியா’ என்பது பலாவைக் குறிக்கும். பலாவை சில வட்டாரங்களில் சக்கை என்றே அழைப்பது வழக்கம்.
  • · விலங்குகளின் நடத்தை பற்றிய அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து செந்நாய்களின் கூட்டு வேட்டைப்பழக்கம் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. (இவற்றைப்பற்றி சிறுபத்திரிக்கைகளில் தியோடர் பாஸ்கரன் ஏற்கெனவே எழுதி இருந்தார்)
  • · ரயில் பயணங்களின்போது தேநீரை தூக்கி எறியும் குவளைகளில் வழங்குகின்றனர். முன்பு மண்குவளையில் வழங்கிப் பார்த்தனர். இதனால் வளமான மண் வீணானது..இப்போது லட்சக்கணக்கில் தூக்கி எறிகிறோம்..இது நல்ல முறையா? சிந்தித்துப் பார் என்கிறது ஒரு பெட்டிச் செய்தி.
  • · கழிவுநீர் மேலாண்மை எனும் பாடம் இடம்பெற்றுள்ளது.
  • · சந்திராயன் திட்டம் பற்றிய பாடம் மயில்சாமியின் பங்களிப்போடு விளக்கப்பட்டிருக்கிறது.
  • · செய்முறைப்பயிற்சி இடம்பெறுகிறது.

ஆங்கிலப்பாடம்:

1) வகுப்பு 5:

பாடத்திட்டத்தை வகுத்தவர்களில் மதுரை டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவரும்,அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதல்வர்கள் இருவரும்,பொறியியற்கல்லூரியைச் சேர்ந்தவர் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

  • · ஆங்கிலத்தை வாசிப்பதற்கும், கேட்பதற்கும், எனத் தனித்தனிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாத்திலும் பேச்சுவழக்கு ஆங்கிலம் (ஸ்போக்கன் இங்கிலீஸ்) இடம் பெற்றுள்ளது. வார்த்தைகளை வைத்து விளையாடுதலும், அகராதியில் இருந்து கொடுக்கப்படும் பொருள்களும் அக்கம் பக்கமாக பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் பயிற்சியும் ஒவ்வொரு பாடத்திலும் தரப்பட்டிருக்கின்றன. வொக்கபுலரியை மேம்படுத்தவும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. மனப்பாடம் செய்து கற்பதைத் தவிர்த்து படங்கள், உரையாடல்கள் மூலமும் வார்த்தை விளையாட்டுகள் மூலமும் நடைமுறை ஆங்கிலம் பயில வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.
  • · படங்கள் மூலம் ஆங்கில இலக்கணப் பயிற்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக சில பயிற்சிகள்: Supply the missing letters: 1) C_nso_e 2) mo_es_ly 3) F_n_ly 4)Con_ra_ul_te

2) ஏழாம்வகுப்பு:

பாடத்திட்டத்தை வகுத்தவர்களில் இடம்பெற்ற ஆசிரியர்கள், தூத்துக்குடி ஹோலிகிராஸ்ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சென்னை அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி, சென்னை ஹோலிஏஞ்ஜெல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். மாநிலக்கல்லூரியின்ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியரும் இதில் அடக்கம்.

  • · இப்பாடத்திட்டத்தில் ஆங்கிலம் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தப்படுகிறது. வாசிப்புக்கு நிறைய வரிகளும், படித்ததில் கவனித்தவற்றை எழுதவும், அகராதி பார்த்துப் படிக்கும் பயிற்சிகளும், சில ஆங்கில வார்த்தைகளை எந்த சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம் போன்ற விவாதங்களும் இடம்பெற்றுள்ளன. இலக்கணத்தைப் பொறுத்தளவில் வாசகனுக்கு சுதந்திரம் தரும் போக்கில் கற்றுக்கொள்ள பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முன்னொட்டு பின்னொட்டு மூலம் ஆங்கில வேர்ச்சொல்கள் எவ்வாறு வெவ்வேறு வார்த்தைகளாகின்றன என்பதை படம் மூலம் விளக்கியுள்ளனர்.
  • · இறந்த காலம் / நிகழ் காலம் போன்ற இலக்கணவிதிகள் கற்பது எளிதில் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.

3) எட்டாம் வகுப்பு:

பாடத்திட்ட ஆசிரியர்கள் : சென்னை லயோலா கல்லூரி, சென்னை புனித பால் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி பேராசிரியர்கள், கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி முதல்வர், ஆங்கிலோ இந்தியபள்ளிகள்: சென்னை புனித ஜோசப் பள்ளி, சென்னை ஹோலி ஏஞ்ஜெல்ஸ். நிபுணர் குழுத் தலைவர்: தி ஸ்கூல் சென்னை

  • · குழு விவாதங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் உரையாடுவதன் மூலம் மொழிப்பயிற்சி, இலக்கணவிதிகளும் கூட்டு விவாதம் மூலம் பயிலுதல், வார்த்தை விளையாட்டுகள், பெட்டிச் செய்திகள் மூலம் முக்கியமாக நினைவில் வைக்க வேண்டியவை, உரையாடல்கள் நடித்துக் காட்டுதல். சமீபத்திய இந்தியக் கவிஞர் கமலாதாஸின் ஆங்கிலக் கவிதை பாடமாக உள்ளது. கேள்விக்குறிய பதில்கள் ஆப்ஜெக்டிவ் டைப் வகையில் தரப்பட்டுள்ளன.
  • · தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பயிற்சி உள்ளது.

4) ஒன்பதாம்வகுப்பு:

ஆசிரியர் குழு: சென்னை கிறித்துவ கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர், ராணி மேரிக் கல்லூரிபேராசிரியர், எஸ்பிஓஏ மெட்ரிக் பள்ளி முதல்வர், அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முதல்வர்.

  • · ஒன்பதாம் வகுப்பின் பாடத்திட்டத்தின் இலக்கு மாறுகிறது. வளரிளம்பருவ மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்தும் வண்ணம் பாடங்களும் துணைப்பாடங்களும் அவர்களின் இலக்கு, இலட்சியம் போன்றவற்றை வரையறுக்கும்படி சிறப்பான மேடைப்பேச்சுக்கள், சிறுகதைகள், உரைநடைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை காக்கும் விழிப்புணர்வை மையப்படுத்தியும் பாடம் உள்ளது. எட்டாம் வகுப்பை விட இந்த வகுப்பில் பாடத்தின் செறிவு அதிகரிப்பு. அதே நேரத்தில் துணைப்பாடங்கள் இலக்கிய ரசனையை உருவாக்கும் வகையில் உள்ளன. ஆங்கிலத்தில் மேடைப்பேச்சு நடத்தவும், சுயமாகக் கட்டுரை எழுதவும் பயிற்சிகள் உள்ளன.
  • · ஆங்கிலப்பிழைகளைக் கண்டறியும் மொழிப்பயிற்சி நன்கு உள்ளது. ஆங்கிலத்தில் விளம்பரம் / நிகழ்ச்சி நிரல் தயாரிக்க / சுலோகன் உருவாக்கி போஸ்டர் தயாரிக்க என ப்ராஜெக்ட் ஒர்க் களும் உள்ளன. க்ராஸ் வோர்ட் பஷில்ஸ் இருக்கிறது.
  • · வாசிக்கவும் கேட்கவும் பயிற்சிகள் உள்ளன. (இதில் அரசியலும் உள்ளது. சுய உதவிக்குழுக்களைப் பற்றிய அறிமுகம். களஞ்சியம் சின்னப்பிள்ளை பற்றிய வாசிப்புப் பயிற்சி இருக்கிறது).
  • · பேச்சுப் பயிற்சியில் கல்பனாசாவ்லா பற்றி பேசச் சொல்கின்றனர்.
  • · ‘பெண்களுக்கு கல்வி தரவேண்டுமா?’ எனும் பொருளில் ஆங்கில விவாத மேடைப் பயிற்சி உள்ளது.
  • · இறந்த பின் உடல் உறுப்பு தானம் செய்த ஹிருதயனின் அம்மா கொடுத்த பேட்டியை அனைவரும் வாசிக்கச் செய்யும் பயிற்சி உள்ளது.
  • · ஆங்கிலப் பத்திரிக்கைக்கு செய்தி எழுதுதல் எனும் பயிற்சி உள்ளது. ஈ மெயில் எழுதி அனுப்பும் பயிற்சி உள்ளது.
  • · மாணவர் தன்னை பீர்பாலாகக் கருதிக் கொண்டு தன் கதையை அனைவர் முன்னிலையிலும் நடிப்போடு சொல்லும் பயிற்சி.

5) பத்தாம் வகுப்பு:

சென்னை  ஐ டி வளாகத்துள் இருக்கும் வனவாணி மெட்ரிக் பள்ளியின் முதல்வர்தலைமையில் மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பள்ளி, மாம்பலம் அஹோபில மடம்ஓரியன்டல் பள்ளி ஆசிரியர்கள் எழுதிய பாடநூல்.

  • இப்பாடநூலில் தனியொரு மாணவன் தனது கற்பனை வளத்தை, சிந்திப்பதை எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தவும், கம்யூனிகேசன் ஸ்கில்ஸ் வளர்க்கவும் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
  • புகுந்திருக்கும் அரசியல்: வாரன் பப்பெட்டையும் பில்கேட்ஸையும் புகழ்ந்து சில பாராக்கள் எழுதப்பட்டுள்ளன.
  • கேட்கும் பயிற்சி & குழுவிவாத நடவடிக்கைகள் பாடத்திட்டத்தில் உள்ளன. ஆங்கில சொலவடைகளும் பழமொழிகளும் பயன்படுத்த வேண்டிய இடங்கள் விளக்கம். சூழ்நிலையைச் சொல்லி அச்சூழலில் இடம் பெற வேண்டிய ஆங்கில உரையாடல்களை எழுதுதல்.
  • உலக இசை மேதைகள் பற்றிய பாடம் ஒன்றில் இளையராஜாவின் சிம்பனி பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. இரட்டை கோபுர தாக்குதல், நாசி வதை முகாம்கள் பற்றிய பத்திகள் இடம்பெற்றுள்ளன.
  • பிரிட்டிஷ் ஆங்கிலத்துக்கும் அமெரிக்க ஆங்கிலத்துக்கும் உள்ள வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன.
  • ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பயிற்சி. (அரசு இசைக்கல்லூரி, சென்னை குறித்த கட்டுரை) அதே போல தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பயிற்சியும் உள்ளது.
  • உலகளாவிய தண்ணீர்ப்பிரச்சினை பற்றிய பாடம் உள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் தொழிலில் இருப்பது பற்றிய பாடம் உள்ளது.

தமிழ்பாடம்

1) 5ஆம்வகுப்பு:

  • · குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் கடவுள் வாழ்த்து யாவர்க்கும் பொதுவாக்கப்பட்டு வெறும் வாழ்த்தாக மாற்றப்பட்டுள்ளது. கவிமணி பாடிய ‘திருவடி தொழுகின்றோம்’ என்ற சமதர்ம வேட்கைப்பாடல்தான் இனி இறைவணக்கம்.
  • · காட்டின் வனப்பையும், சுற்றுச்சூழலையும் மய்யப்படுத்தி ஒரு பாடம். தமிழின் தொன்மை குறித்த பாடம் ஒன்றில் நடுகல் கல்வெட்டுகளின் வண்ணப்புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது.
  • · செயல்திட்டம்: மாணவர்களே கூடி பள்ளிவிழாவிற்கு அழைப்பிதழ் உருவாக்குதல்
  • · உங்கள் ஊரில் வழங்கும் கதைப்பாடல் (விளையாட்டுகள்) தொகுத்துத்தா..சிறுவர் இதழ்களின் கதைகளைத் தொகுத்துத்தா..
  • · பேச்சுத்திறனை வளர்க்கும் பயிற்சிகளும் உள்ளன.
  • · கலைவாணர் பற்றிய பாடம், தலைவாரிப் பூச்சூட்டி உன்னை எனத் தொடங்கும் பெண்கல்வி குறித்த பாரதிதாசன் பாடல், பாரம்பரிய உணவுகள் பற்றிய கட்டுரை (கம்பு, கேப்பை) உணவுத்திருவிழா பற்றிப் பேசுகிறது..அது நடைபெறும் இடம் பாரதிதாசன் குடியிருப்பு J
  • · பாரதியின் ‘பட்டங்கள் ஆள்வதும்’ பெண்கல்வி குறித்த பாடல்,
  • · *விளம்பரங்கள், அறிவிப்பு பலகைகள், வரைபடங்கள் போன்றவற்றை வாசித்து உள்வாங்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • · *குடும்பம் பற்றிய பாடங்களுக்கு வரையப்பட்டுள்ள படங்களில் அனைவரும் வீட்டில் மேசையில் அமர்ந்து உண்கின்றனர். ஷூ மாட்டியபடி தாத்தா பேரனோடு வாக்கிங் போகிறார். (இப்படங்கள் ஏழை மாணவர்களின் மனதில் என்ன விளைவை உருவாக்கும்?)
  • · பெரியார், புராணக்கதைகளை சிறுவயது முதலே விமர்சித்த விசயம் எழுதப்பட்டு அது பயிற்சிக்கேள்வியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
  • · நூல் முழுக்க வரும் சிறுவர் சிறுமியர் பெயரெல்லாம் தூய தமிழ்ப்பெயர்களாக உள்ளன. (யாழினி, எழிலரசன், பாவை)
  • · அகரமுதலி என்பதை அறிமுகம் செய்யும் பாடம் அருமையாக உள்ளது. அதில் அபிதான கோசம் பற்றியும் அபிதான சிந்தாமணி பற்றியும் குறிப்பு உள்ளது. பெ.தூரன் தொகுத்த சிறுவர் கலைக்களஞ்சியத்தில் இருந்து சில பக்கங்கள் தரப்பட்டுள்ளன. அகரமுதலியில் இருந்தும் சில பக்கங்கள் தரப்பட்டுள்ளன.

2) ஏழாம்வகுப்பு:

  • இந்த வகுப்பிலும் எம்மதத்தையும் சாராத ஒரு வாழ்த்துப்பாடல் திருவிக வால் எழுதப்பட்டுள்ளது.
  • ஊர்ப்பெயர் ஆய்வு எனும் நுட்பமான பாடம், மதிப்புக் கல்வி எனும் தலைப்பில் ஆளுமைத்திறனை மேம்படுத்தும் பயிற்சி (முடிவெடுக்கும் திறன், சுயகட்டுப்பாடு), பெருஞ்சித்திரனாரின் ஒரு பாடல், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றிய பாடம், கணிதமேதை ராமானுஜன், தாய் மொழிக்கல்வியை வலியுறுத்தும் காந்தி பற்றிய பாடம், அதில் காந்தியின் தமிழ்க் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.
  • இலக்கணம் பற்றிய பாடங்கள் அனைத்தும் உரையாடல் வடிவில் எளிதில் புரியும்படி எழுதப்பட்டுள்ளது.
  • சிறுபத்திரிக்கையில் மட்டும் பேசப்படும் ந.பிச்சமூர்த்தியின் கவிதை இடம்பெற்றுள்ளது.
  • சுயமரியாதை இயக்கத் தலைவி ராமாமிர்தம் பற்றிய வரலாறு,
  • ஆங்கிலம் கலந்த தமிழ் பேசும் தொலைக்காட்சி உரையாடலைப் பிரசுரித்து அதைக் கண்டித்து தமிழிலேயே பேசுவோம் என்பதை உணர்த்தி உள்ளனர்.
  • கழியூரன் தொகுத்த ‘தாத்தா பாட்டி சொன்ன கதைகள்’ தொகுப்பில் இருந்து ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது.
  • வீட்டுக்குள் தந்தை மகன் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் சித்திரத்தைத் தந்து அதனை எவ்வாறு களைவது, தனித்தமிழில் பேசுவதன் அவசியம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

திட்டம்: ஏழாம் வகுப்பு மாணாக்கர் கூடி ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை தயாரித்தல் (அரும்புகையெழுத்துஇதழ்)

3) எட்டாம் வகுப்பு:

  • செம்மொழி மாநாடு பற்றிய விவரணை ஒரு பாடமாக உள்ளது. தமிழறிஞர் ஜி.யு.போப் பற்றிய கட்டுரை, ஈழக்கவிஞர் சச்சிதானந்தனின் பாடல், தமிழ் அகராதிகளின் வரலாறு, கணினி உருவாக்கப்பட்ட வரலாறு பல அபூர்வமான படங்களுடன் பிரசுரமாகி உள்ளது. வேலுநாச்சியார் உள்ளிட்ட தமிழச்சிகளின் சுதந்திரப்போராட்ட வரலாறு புது முயற்சி. அதில் கதர் கோஷ்டி பார்ப்பனப் பெண்களும் கூச்சம் ஏதுமின்றி இடம்பெற்றுள்ளனர்.
  • பிறமொழிச்சொற்களுக்குரிய தமிழ்ச்சொல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. (பஞ்சாயத்து என்பது உருதாம். அதன் இணைச்சொல் ஐம்பேராயம். பதில், கச்சேரி, பேட்டி, குமாஸ்தா அனைத்தும் உருதுச்சொற்களே. ஜமீன், பஜார் – பார்சி; பேட்டை, கில்லாடி – மராட்டி, மிட்டாய் – அரபு)
  • தன்னை குற்றவாளியைப் போலத்தூக்கிலிடாமல் போர்க்கைதியைப் போல சுட்டுக்கொல்லச் சொன்ன பகத்சிங் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  • சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து அறிமுகமாகி உள்ளது.
  • தேவநேயப்பாவாணர் பற்றிய பாடம் நன்கு அமைந்துள்ளது.

திட்டம்: குருத்து கையெழுத்து இதழ் தயாரித்தல்

4) ஒன்பதாம் வகுப்பு:

  • இதில் கருணாநிதியின் செம்மொழி வாழ்த்தும், ஆசிரியர் பற்றிய குறிப்பில் ‘தோன்றிற்புகழொடு தோன்றுக எனும்குறட்பாவுக்கு சான்றாக இவரைக் காட்டலாம்’ எனக் கரைந்துள்ளனர்.
  • தெருவில் பொருட்களை எப்படிக் கூவி விற்கின்றனர் என ஆசிரியர் கேட்கிறார். மாணவர்கள் ‘பூவோஒ பூவு’, பழமோ ஒபழம்’ எனக் கூவி விற்பதைச் சொல்கின்றனர். சொல்வதை அழுத்தமாகச் சொல்லி மனதில் பதியவைக்கும் இம்முறைதான் அளபெடை என மிகவும் எளிதில் விளக்கியுள்ளனர்.
  • மணிக்கொடி, எழுத்து, வானம்பாடி இதழ்கள் புதுக்கவிதை இயக்கம் போன்ற விசயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் பற்றிய கட்டுரை அந்நாட்குறிப்புகளின் அருமையை சிறப்புறப் பேசுகிறது. அக்குறிப்பிலிருந்து சில பகுதிகளும் தரப்பட்டுள்ளன.

திட்டம்: கையெழுத்து இதழாக ‘உடல்நலச் சிறப்பிதழ்’ தயாரிக்க வேண்டும். அதில் சிறுகதைக்கானதலைப்பு “108 காப்புந்து அல்லது கலைஞர் காப்பீட்டு திட்டம்”.

  • ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான பழமொழிகளைக் கண்டறியும் பயிற்சி உள்ளது.
  • மீனவர்கள் பாடும் தொழிற்பாட்டு ‘ஐலசா’வுடன் பிரசுரமாகி இருப்பது நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.
  • ராணி மங்கம்மாவின் வரலாறும் சிறப்பாகவே உள்ளது.
  • பொங்கல் பண்டிகையைப் புகழ்ந்து ஒரு கட்டுரை. அதில் வண்ணப்படத்தில் பொங்கல் பானையை ஒரு வெள்ளைக்காரி கும்பிட்டபடி இருக்கிறாள். வெள்ளைக்காரி சொன்னாத்தானே பொங்கலின் மகிமை நம்மவங்களுக்குப் புரியும்னு நினைத்தார்களோ என்னவோ?
  • உழைப்பால் உயர்ந்த உத்தமர் கல்லிடைக்குறிச்சி ஈஸ்வரன் (என்பீல்டு) கதை இடம் பெற்றுள்ளது J
  • பெருஞ்சித்திரனாரின் சுயமுன்னேற்றப் பாடல் ஒன்று உள்ளது
  • புவி வெம்பலுக்கு காரணிகளை விளக்கி ஒரு கட்டுரை நன்றாக உள்ளது. அதில் ஏ.சி. சாதனங்கள் உமிழும் நச்சுக்கள் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.

5) பத்தாம் வகுப்பு:

  • பல பக்கங்களில் அபூர்வமான புகைப்படங்கள் – உதாரணமாக 1812இல் பதிப்பிக்கப்பட்ட திருக்குறளின் முகப்புப் படம் – இடம்பெற்றுள்ளன.
  • இதுவரை பெரியார் என்றால் பள்ளிப்பாட நூல்களில் 500 தென்னைமரங்களை வெட்டிய செய்தியைத் தாண்டி ஏதும் சொல்லப்பட்டதில்லை. இந்நூலில் பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்’ எனும் நல்லதொரு கட்டுரை உள்ளது. அதேபோல அம்பேத்கரின் வரலாற்றிலும் அவரின் வட்டமேசை மாநாட்டுப் பங்களிப்பு கூட இடம் பெற்றிருக்கிறது.
  • வங்கி, அஞ்சலகம், ரயில்வே நிலையங்களில் விண்ணப்பங்கள் நிரப்பும் பயிற்சி முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.
  • பிசிராந்தையார் வடக்கிருந்து உயிர்நீத்த நிகழ்வை விளக்குபவர் கருணாநிதிதான் J படித்தல் திறனை மேம்படுத்த கொடுக்கப்பட்டிருக்கும் பத்தியும் அவருடையதே..’இதைப் போன்றநயமிக்கஉரைகளைத் தேடிப் படித்து, அவற்றைப் போன்று எழுதவும் பேசவும் பழகினால்உலகம் உங்களைநோக்கி வரும்’ என்று அறிவுரை வேறு இலவசமாகக் கிடைக்கிறது J
  • சுவீடிஷ் மொழிக்கதை ஒன்றின் மொழிபெயர்ப்பு துணைப்பாடத்தில் இடம்பெற்றுள்ளது.
  • தாழ்த்தப்பட்டோர் நலனுக்குப் பாடுபட்ட அயோத்திதாசப் பண்டிதர் வரலாறும் உள்ளது. அதில் அவர் நடத்திய ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையின் புகைப்படமும் உள்ளது.
  • சிலி தங்கச்சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளர் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.

சமூக அறிவியல் பாடம்

5ஆம் வகுப்பு:

உருவாக்கியவர்கள்: யுனிசெப்பிற்கான ஆலோசகர் ஒருவர், சென்னை குட்ஷெப்பர்டு மெட்ரிக்பள்ளி ஆசிரியர், எஸ் பி ஓ ஏ, சங்கரா வித்யாலயா ஆகிய மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும்இடம்பெற்றிருந்தனர்.

  • இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள் பற்றிய பாடம் அவர்களின் படங்களுடன் இடம்பெற்றுள்ளது.
  • வாசிக்க ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் லே அவுட் பல வண்ணங்களில் ஏராளமான படங்களுடன் அமைந்துள்ளது. தீபகற்பம், வளைகுடா, பாலைநிலம், தீவு போன்றவற்றிற்கு சரியான படங்கள் வைத்து புவியியல் விளக்கப்பட்டுள்ளது.
  • இந்திய நிலப்பரப்பின் மண்வகைகள், சுரங்கங்கள், கனிமங்கள் போன்றவை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
  • செயற்கைக்கோள்கள் கட்டுமானத்தில் இருந்து ஏவுதல் வரை தக்க படங்களுடன் இடம்பெற்றுள்ளன.
  • இந்திய அரசமைப்பு, சார்க் நாடுகள், உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய பாடம் 5 ஆம் வகுப்பிலேயே தொடங்குகிறது.

திட்டம்: வகுப்பில் மாதிரி தேர்தல் நடத்திடுதல்.

  • சாலைப்போக்குவரத்து விதிகள் பாடமாக உள்ளது.

7ஆம் வகுப்பு:

  • ராஜபுத்திரர்கள் என்பவர்கள் எங்கிருந்து இந்தியாவுக்கு வந்தனர் என்பதும் அவர்களின் வரலாறும் தனியாக விளக்கப்பட்டிருப்பது தமிழக வரலாற்றுப் பாடத்தில் புதிய விசயம்.
  • சூஃபி இயக்கம் பற்றிய பாடமும் புதிதுதான்.
  • புவியில் மாறிக்கொண்டிருக்கும் மேற்பரப்பு பற்றியும், நிலநடுக்கத்தின் காரணிகள் பற்றியும் உயிரோடு இருக்கும் எரிமலைகள் பற்றியும் தெளிவான கண்ணோட்டம் கிடைக்கின்றது.
  • அருவி இதிலும் நீர்வீழ்ச்சி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது 

8ஆம் வகுப்பு:

  • காரன்வாலிஸ் பிரபு அறிமுகப்படுத்திய நிலச்சீர்திருத்தம் – ஜமீன் தாரி முறை எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது.
  • சிப்பாய்க்கலகம் இதில் மாபெரும் புரட்சி எனக் குறிக்கப்பட்டுள்ளது.
  • முன்பெல்லாம் இல்லாதிருந்த ‘தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி’ இதில் இடம்பெற்று, அப்பாடம் தெளிவாக அக்காலகட்டத்தை விளக்குகிறது. அதேபோல தஞ்சை மராட்டியர் ஆட்சியும் தனியாக விளக்கப்பட்டிருக்கிறது.
  • மருதுபாண்டியரும் தென்னிந்திய லீக் பற்றிய வரலாறும் வேலூர் புரட்சியும் இடம் பெற்றிருக்கிறது.
  • பொருளாதாரம் சமூக அறிவியலில் தனி அலகாக எட்டாம் வகுப்பில் இருந்து சொல்லித் தரப்படுகின்றது. தொழில்வகைகளும் பல்வகைத் தொழிலாளர்களும் பற்றிய வரையறைகள் உள்ளன.
  • பல்வகைப் பயிரிடல்களும், பலவகை தொழிற்சாலைகளும் பகுதிவாரியாக விளக்கப்பட்டுள்ளன.
  • வணிகத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் விளக்கப்பட்டுள்ளன.
  • குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, காரணிகள், சாதியப் பிரிவினை, மனித உரிமைகள் குறித்த ஐ.நா. தீர்மானங்கள், இந்திய மனித உரிமை அமைப்புகள் போன்றவை அலசப்பட்டுள்ளன.
  • பணம் சேமிப்பு முதலீடு பண்டமாற்று போன்ற அடிப்படை வரையறைகள் விளக்கப்பட்டுள்ளன.

9ஆம் வகுப்பு:

  • ரோமானியப் பேரரசு வீழ்ந்து போப்பாட்சி வந்ததும், அதற்கான பொருளாதார சமூகக்காரணிகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
  • ஐரோப்பாவில் நடந்த தொழிற்புரட்சியின் விளைவாக உருவான வர்க்கப் பிரிவினை, அத்துடன் விளைந்த வேலை இல்லாத்திண்டாட்டம், முதலாளித்துவ வளர்ச்சி, ராபர்ட் ஓவன்போன்றோரின் அரசியல், மார்க்சியக் கோட்பாடுகள் உருவாதல், எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
  • பிரெஞ்சுப் புரட்சிக்குத் தனி அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • புவியியலில் தமிழகத்தின் மழைப்பரவலும் காடுகளின் பரவலும் மண்பரவலும் மேப் மூலமாக விளக்கப்பட்டிருப்பது எளிதாக இருக்கிறது.
  • சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் இருப்பிடங்கள் குறித்த மேப் உள்ளது.
  • சூழல் மாசுபடுதல் பற்றிய விழிப்புணர்வுக்கட்டுரை உள்ளது.
  • தமிழால் அறியப்படும் பல்வேறு பறவை, விலங்குகளின் ஆங்கிலச் சொற்கள் பட்டியலில் தரப்பட்டுள்ளன.
  • குடிமையியலில் நாம் எவ்வாறு ஆளப்படுகிறோம், அரசியல் சட்டம் நமக்கு வழங்கி இருக்கும் உரிமை & கடமைகள், நாடாளுமன்றம் நீதிமன்றம் அமைச்சரவை, மாநில அரசு ஆகியவற்றின் அதிகாரங்கள் விளக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தின் தற்கால சமூகச் சிக்கல்கள் எனும் பாடத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு, பிராமணர்ஆதிக்கம், நீதிக்கட்சி வரலாறு போன்றவை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.
  • இடம்பெயரும் தொழிலாளர், திருநங்கையர் நிலைமை விளக்கப்பட்டிருக்கின்றது.
  • பொருளாதாரம்: சப்ளை, டிமான்ட் (அளிப்பும் தேவையும்), மார்ஷலின் தேவை விதி விளக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு:

  • ஏகாதிபத்தியத்தின் தன்மை என்ன? ராணுவ ஏகாதிபத்தியம், பொருளாதார ஏகாதிபத்தியம், 1870 வரை கடைப்பிடிக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தின் தன்மை, காலனி ஆதிக்கமும் ஏகாதிபத்தியமும், ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அடிப்படை விளக்கப்பட்டுள்ளன.
  • முதல் உலகப்போர், ரஷ்யப் புரட்சி, அதனை அடுத்து வந்த பொருளாதாரப் பெருமந்தம், பாசிசம் நாசிசம் தோன்றி வளர்ந்தது..இரண்டாம் உலகபோர் போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பதை விளக்கி நேர்க்கோட்டில் விளக்கி உள்ளனர்.
  • சீனாவில் ஏகாதிபத்தியங்கள் நடத்திய அபினிப்போர்கள், சன்யாட்சென்னின் புரட்சி, வரை விளக்கப்பட்டுள்ளன.
  • ஐரோப்பிய ஒன்றியம், யூரோ நாணயம், போன்ற அண்மைய வரலாறுகளும் விளக்கப்பட்டுள்ளன.
  • நீதிக்கட்சி ஏன் தோன்றியது? தியாகராயர், டி எம் நாயர் போன்றோரின் 
  • ங்களிப்புகள்,நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள், சுயமரியாதை இயக்கம், அதன் நோக்கங்கள்,சாதனைகள், பெரியார் நீதிக்கட்சித்தலைவராகி திராவிடர் கழகமாக்கியது, அண்ணா,முத்துலட்சுமி ரெட்டி, தர்மாம்பாள், ராமாமிர்தம் போன்றோரின் தொண்டுகள் எனவிரிவாக திராவிட இயக்கத்தின் தேவையையும் பங்களிப்பையும் அலசியுள்ளனர்.
  • இமயமலை உருவான புவியமைப்பு வரலாறு சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.
  • ஜிபிஎஸ், செயற்கைக்கோள் பயன்பாடு, இணையம், மென்பொருள் பூங்கா, விளக்கப்பட்டுள்ளன.
  • ஒருகட்சி ஆட்சிமுறை, இருகட்சி ஆட்சிமுறை, பலகட்சி ஆட்சிமுறை ஆகியவற்றின் சாதக பாதகங்கள் விளக்கப்பட்டுள்ளன.
  • நுகர்வோர் உரிமை ஒரு பாடமாக உள்ளது.
  • பொருளாதாரத்தில் நாட்டின் வருமானம், நிகர நாட்டு உற்பத்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், இவற்றைக் கணக்கிடும் முறை, 1947க்கு முன்னும் பின்னும் பொருளாதார நிலைகள், தனியார்மயம், தாராளமயம் – விளக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக

சமச்சீர் கல்விப் பாடங்களில் திருமதி பார்த்தசாரதி போன்ற கல்வியாளர்கள் கண்டறிந்த தவறுகளை, அச்சிடப்பட்டிருக்கும் சமச்சீர் கல்விப் புத்தகங்களில் தேடினோம். அறிக்கை கூறுவதை கருப்பு எழுத்துக்களிலும் நமது குறிப்புகளை நீல எழுத்துக்களிலும் தந்திருக்கின்றோம்.

1) Touching on factual incorrectness of the content, the committee cited the example of Social Science textbook for class VII. In the lesson on “Changing face of Earth’s surface” (pg no 75), a statement is given as “the continuous freezing and melting of water.” It is a factual error because water cannot melt, only ice can, the report said.

 உறைபனி சிதைவு பற்றிய இந்தப் பத்தி:  சிலநேரங்களில் விரிசல் உள்ள பாறைகளின் மழைப்பொழிவின் காரணமாக நீரானது நிரம்புகிறது. இரவு நேரங்களில் நிலவும் வெப்பநிலை காரணமாக இந்த நீரானது உறைந்து பனிக்கட்டியாக மாறும் மற்றும் பகல் நேரங்களில் உருகும்.பனிக்கட்டியானது திடப்பொருளாக இருப்பதால் பாறைகளின் உடைபட்ட பகுதிகளில் அது அதிக அழுத்தத்தை உருவாக்கும்.

  SCIENCE 2)   Content is too heavy. In Class 8, unit 10 of the book deals with atomic structure and concepts such as laws of chemical combination, electrical nature of matter, discovery of fundamental particles, properties of cathode rays and discovery of protons

இதெல்லாம் ரொம்ப ஓவர்..1980களில் படித்தபோதும் இதே பருண்மைமாறாவிதியையும், டால்ட்டனின் அணுக் கொள்கையையும் 9ஆம் வகுப்பில் இதே அளவுதான் படித்தோம்..இப்போது அவை 8ஆம் வகுப்பில்..  ரொம்ப கொஞ்சமா படிக்கிறாங்க ஸ்டேட் போர்டுல..அப்படின்னு சொல்லி மெட்ரிக் வியாபாரிகள் தங்கள் சரக்கை உயர்ந்ததென்று கடைகட்டிக் கொண்டிருந்தாங்க…பெரிதாக மாற்றம் ஏதும் இல்லாத இந்த அத்தியாயத்தை முன்வைத்து, சிலபஸ் ரொம்ப அதிகம்னு புளுகுறாங்க..

சமச்சீர் கல்விஇவற்றில் என்ன பாடச்சுமை இருக்கிறது

   3) Syllabus has no analytical activities. In Class 9, students could have been given the opportunity to study the unit ‘Matter’ through experiential learning rather than by rote

இது அப்பட்டமான பொய். பருப்பொருள் பற்றிய இப்பாடத்தில் இடம்பெற்றுள்ள செய்முறைகள் பின்வருவன. (பக்கம் 152 முதல்) சமச்சீர் கல்வி சமச்சீர் கல்விசமச்சீர் கல்வி சமச்சீர் கல்வி சமச்சீர் கல்வி

 4)  Syllabus does not integrate life skills with contents or activities. In Class 1, in the unit ‘Science in Everyday Life’, everyday practices such as ‘not to spit or litter in public places’, ‘respecting others’ and ‘solving problems’ have not been considered

 இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்ல அவங்களுக்கே கூச்சமா இருந்திருக்காதா?

  SOCIAL SCIENCE 5)   Syllabus deals with concepts that are too complex for a student of that age group. Ideas such as the Universe, stars and the solar system are dealt in the lesson ‘Wonders in the Sky’ in Class 3

 இதில் என்ன விந்தை இருக்க முடியும்? சூரியக்குடும்பம், விண்மீன்கள் பற்றி எல்லாம் சென்ற தலைமுறை மாணவர்கள் கூட 4ஆம் வகுப்பில் படித்தவைதானே..1980களின் ஆரம்பத்திலேயே இவை ஸ்டேட் போர்டில் இப்படித்தான் இருந்தன.. எவருக்கும் புரிதலில் சிக்கல் எல்லாம் இல்லை.

Instead of introducing chapters on the Union government and the state government before human rights and the United Nations, the chapters are introduced the other way round in Classes 8 and 9

எட்டாம் வகுப்பில் சொல்லித்தரப்பட்டிருப்பது மனித உரிமைகளும், மனித உரிமைகள் பற்றிய ஐ.நா.தீர்மானங்களும். இவை தவிர பெண்கள் உரிமைகள் என பன்னாட்டு அமைப்புகள் வரையறுத்தவையும், மனித உரிமை ஆணையங்கள் இந்தியாவில் செயல்படுவதும், அவற்றின் அதிகாரங்களும் இவற்றில் இடம்பெற்றுள்ளன. ஒன்பதாம் வகுப்பில் சொல்லித்தரப்பட்டிருப்பவையோ, எவ்வாறு மத்திய மாநில அரசுகள் இயங்குகின்றன, தேர்தல் முறை என்ன போன்றவைதான். மனித உரிமைகள் பற்றிய ஐ.நா.தீர்மானங்களுக்கும் மத்திய மாநில அரசமைப்புகளுக்கும் முன் பின் எனும் தொடர்ச்சி தேவையே இல்லை.. இந்த பாடங்களைப் படிக்காமலேயே, தலைப்புகளை மட்டும் பார்த்துவிட்டு மாநில அரசு->மத்திய அரசு -> ஐ நா சபை எனும் கற்பனைப் புரிதலோடு இந்த விமர்சனத்தை வைத்துள்ளனர்.

6) There is no meaningful link between the history units as they are not logically arranged. The Class 8 history syllabus begins with a unit on the ‘Advent of Europeans’ and ends with ‘Indian Independence’

இதில் என்ன தவறு இருக்க முடியும்? ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் ராஜபுத்திரர்களின் வரலாறு தொடங்கி விஜயநகரப் பேரரசு வரை விளக்கி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக 16ஆம் நூற்றாண்டின் முகலாயர் ஆட்சியில் தொடங்கி, மராத்தியர் ஆட்சி, ஐரோப்பியர் வருகை, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி, அதன் தொடர்ச்சியாக இந்திய சுதந்திரப் போரை விளக்கி உள்ளனர். இதில் தொடர்ச்சி ஏதும் அறுபடவில்லை..அதுவரை மத்திய, வட இந்திய வரலாறு விளக்கப்பட்ட பின், தமிழ்நாட்டில் நாயக்கர், மராட்டியர் ஆட்சியும் அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் நடந்த வேலூர் புரட்சியும் தொடர்ச்சியாகத்தானே எழுதப்பட்டிருக்கின்றது? ________________________________________________________________________ – இரணியன் ________________________________________________________________

சமச்சீர் கல்வி குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்திரவுப்படி தமிழக அரசு அமைத்த ‘நிபுணர்’ குழு உயர்நீதிமன்றத்திடம் அறிக்கையை அளித்து விட்டது. சாரமாகச் சொன்னால் முந்தைய அரசால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி தரமற்றது என்று கூறிவிட்டது. இந்த மூன்று வாரத்தில் அதிலும் நான்கு முறை மட்டும் கூடி 10,000த்திற்கும் மேற்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் பக்கங்களை இவர்கள் படித்திருக்க வாய்ப்பே இல்லை. எல்லாம் ‘அம்மாவின்’ விருப்பத்திற்கேற்ப எழுதப்பட்ட திரைக்கதைதான். இனி இதை வைத்து சென்னை உயர்நீதிமன்றம் அம்மாவின் விருப்பத்தையே நடைமுறைப்படுத்த நிறைய வாய்ப்பிருக்கிறது. உண்மையில் இந்த சமச்சீர் கல்வி எப்படி தயாரிக்கப்பட்டிருக்கிறது, அதில் என்ன இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. இங்கு தோழர் இரணியன் சமச்சீர் கல்வி குறித்த பாடத்திட்டங்களை விரிவாக படித்து விட்டு தனது கருத்துக்களை இங்கே பகிர்ந்திருக்கிறார். இதிலிருந்து சமச்சீர் கல்வி தரமற்றது என்று மூடநம்பிக்கை போல பரப்பப்படும் கருத்துக்களை வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும். – வினவு முதல் பதிவு: வினவு

வழிபாடுகளில் கவனம் தேவையா?

6 ஜூலை

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 3

 

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் சஹாபாக்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதை மறப்பதற்காக எனது சிந்தனையை வேறு வழியில் திருப்பினேன்.  இரத்தக்கறை படிந்த வரலாற்று செய்திகளை அறிந்து கொள்வதை முற்றிலும் நிறுத்தினேன். அரசியல் அதிகாரங்களுக்காக நடந்த படுகொலை வரலாற்றை படித்து வெறுப்படைவதற்கு பதிலாக, ஹதீஸ்களைப் பொருளுணர்ந்து படித்து மார்க்க அறிவைப் பெருக்கிக் கொள்வது என்று முடிவு செய்து கொண்டேன்.

 

ஒரு முறை லுஹர் தொழுகையில் இமாம் இரண்டாம் ரக்ஆத் முடிவில் அத்தஹியாத் (தொழுகையின் இடையே அமரும் சிறு இருப்பு)  அமர்வதற்கு மறந்து விட்டார். அவரைப் பின்பற்றி தொழுகையை நிறைவேற்றிய அனைவருக்கும் இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா? என்று குழப்பம் ஏற்பட்டது நினைவிற்கு வர தொழுகை மற்றும் நோன்பு தொடர்பாக எனக்கு ஏற்பட்ட அடிப்படையான சில சந்தேகங்களுக்கு விளக்கங்களை தெரிந்து கொள்ளவும் விரும்பினேன். கவனக் குறைவாக தொழுகையில் இருக்கும் வேளைகளில் எனக்கு தொழுகையில் ஏற்படும் மறதிகள், உதாரணத்திற்கு நான்கு ரக்ஆத்களுக்கு இரண்டு ரக்ஆத்துகளை அல்லது ஐந்து ரக்ஆத்கள் தொழுவது அல்லது  இரண்டாம் ரக்ஆத் முடிவில் அத்தஹியாத் இருக்க மறப்பது இவைகளுக்கு விளக்கம் தெரிந்து கொள்ள ஹதீஸ்களில் தேடுதல் துவங்கினேன். தொழுகையில் ஏற்படும் கவனக் குறைவுகளைப் பற்றி முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என்ன சொல்கிறார்?

புஹாரி ஹதீஸ் -608

அபூஹுரைரா  (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும் போது, பாங்கு

சப்தத்தை கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் வருகிறான் தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்புவரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, இதை நீ நினைத்துப்பார்; அதை நீ நினைத்துப்பார் என்று சொல்லிக்கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுகையில் இருக்கும் போதுதான் அதுவரையில்லாத நினைவுகளெல்லாம் வந்து என்ன தொழுதேன் என்ற நினைவையே மறக்கச் செய்து விடுகிறது இதைப் போன்ற ஷைத்தானின் பிடியிலிருந்து விலக வேண்டும் என்று உறுதிஎடுத்துக் கொண்டவனாக மறதியால் பாதிக்கப்பட்ட தொழுகைகளுக்கு விடைதேடினேன்.

புஹாரி ஹதீஸ் -1227

அபூஹுரைரா  (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ரையோ அஸ்ரையோ தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். அப்போது, துல்யதைன், (ரலி) அவர்கள்  “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம், “இவர் கூறுவது உண்மைதானா” எனக் கேட்டபோது அவர்களும் ’ஆம்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுவித்துவிட்டு இரண்டு சஜ்தாக்களும் செய்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சஅத் பின் இப்றாஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் மஃக்ரிப் தொழுவித்தபோது இரண்டு ரக்அத்திலேயே சலாம் கொடுத்துவிட்டுப் பேசியும் விட்டார்கள். பின்பு (நினைவு வந்ததும்) மீதம் உள்ளதைத் தொழுதார்கள். பின்னர் இரண்டு சஜ்தாச் செய்துவிட்டு, இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள், எனக் கூறினார்கள்

(புகாரி 1224 – 1230)

இதே போல் என்னுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்தது. இதைப்பற்றி எல்லோரும் நன்கு அறிவர்  இதில் என்ன புதுமை உள்ளது என்கிறீர்களா?. புதுமை ஒன்றுமில்லை, அதிலிருந்து கேள்விகள் சில கிடைத்தது. 

புஹாரி ஹதீஸ் :516

அபூகா தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது மகள் ஜெய்னப் அவர்களின் குழந்தை உமாமா வை (தோளில்) சுமந்து கொண்டு தொழுதார்கள். ஸஜ்தாவுக்கு செல்லும் போது இறக்கி விடுவார்கள். நிற்கும் போது தூக்கிக் கொள்வார்கள்.

குழந்தையைத் தோளில் சுமந்து கொண்டு எப்படித் தொழ முடியும்? குறிப்பிட்ட அந்த ஹதீஸில் கூறப்பட்டதைப் போல தொழுதால் அது தொழுகையைப் போலவா இருக்கும்? (எனக்குப் புரியவில்லை…!)

 

நான்  இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வாழும் ஒரு சராசரி மனிதன். உலகத் தேவைகளால், தினமும் புதுப்புதுப் போரட்டம். என் சிந்தனையை ஒருங்கிணைப்பது எனக்கு கடினமான பணி. நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை வேறு. என்னைப் போல் ஒரு சராசரி மனிதவாழ்க்கை வாழ்ந்திருந்தலும், அவருடைய ஆன்மா அல்லாஹ்வின் மிகப் பெரிய அன்புக்கும் ஆசைக்கும் உரியது. அவருடைய வாழ்க்கை முழுவதும் அல்லாஹ்விற்காகவும், அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றவும் இருப்பதாக நபி (ஸல்) அவர்களே சொல்கிறார். இறைவனை வழிபடும் முறையையும் அதன் ஒழுக்கத்தையும், மேன்மையையும் கற்பித்ததும் அவர்தான். அத்தகைய மனிதருக்கு என்னை போன்ற அற்பமனிதனுக்கு ஏற்படும் கவனக் குறைவுகளும்  ஏற்பட்டது ஏன்? அவரையும் ஷைத்தான் விடவில்லையா?அவர் தொழும்போதும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்து கொண்டு அவர் அதற்கு முன்புவரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, இதை நீ நினைத்துப்பார்; அதை நீ நினைத்துப்பார் என்று சொல்லிக் கொண்டு இருந்தானா?

தொழுகையின் பொழுது போருக்கான யுக்திகள் குறித்து யோசிக்கிறேன் என்கிறார் உமர் (ரலி) அவர்கள்.

(புகாரி)

வழிபாடுகளில் மனம் ஒருநிலைப்படுதலும், வழிமுறைகளில் தீவிரமும் தேவையற்றதா?  விடை தெரியாத நிலையில் ஹதீஸ்களில் தீவிரமானேன்.

புஹாரி ஹதீஸ் : 1217
ஜாபிர்பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவித்தார்.

அவர்கள் என்னை தம் அலுவல் விஷயமாக (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பி வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை. என் மனதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த சில எண்ணங்கள் தோன்றின. நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி(ஸல்) கோபமாக இருக்கக் கூடும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். பிறகு மறுபடியும் ஸலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பைவிடக் கடுமையாக சந்தேகங்கள் ஏற்பட்டன. பின்னர் மீண்டும் ஸலாம் கூறினேன். எனக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நான் தொழுது கொண்டிருந்ததால்தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது) கிப்லா அல்லாத திசையை நோக்கி தம் வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தனர்.

இது ஒரு சிறந்த கோட்பாடு அல்லது சிறந்த கட்டளையாகும், அதாவது ஒருவர் தன்னை படைத்தவனை, காப்பவனை தொழுது கொண்டு இருக்கும் வேலையில், அதைவிட முக்கியமான வேலை அவருக்கு என்ன இருக்கப் போகிறது?

ஆனால், நபி (ஸல்)  இதற்கு நேர் எதிராக‌ நடந்துக்கொண்டு, தான் சொன்னதை தானே செய்யாமல் இருந்திருக்கிறார். அதாவது ஒரு மனிதன் தொழுகையில் இருக்கும் போது, நபி (ஸல்)  அவரை அழைத்தார், அதற்கு அம்மனிதர் தொழுகையில் இருந்தவாரே பதில் தரவில்லை என்றுச் சொல்லி, அம்மனிதரை முஹம்மது நபி (ஸல்) கடிந்துக்கொண்டார். இதில் இன்னும் மோசமான‌ தகவல் என்ன‌வென்றால், அந்த‌ சஹாபி தன் தொழுகையை பாதியில் நிறுத்திவிட்டு அல்லாஹ்வின் தூதருக்கு பதில் தரவேண்டும் என்பதை நியாயப்படுத்த‌ முஹம்மது நபி (ஸல்) குர்ஆன் வசனத்தையே ஆதாரமாக‌ காட்டியது தான்!

புஹாரி ஹதீஸ் : 4647
அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்

நான் (‘மஸ்ஜிதுந் நபவீ’ பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், ‘நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், ‘இறைநம்பிக்கையாளர்களே! இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்’ என்று கூறவில்லையா?’ எனக் கேட்டார்கள். …

புஹாரி ஹதீஸ் -1209

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழும்போது நபி (ஸல்) அவர்களை நோக்கி என் கால்களை நான் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் சஜ்தாச் செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். உடனே கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக்கொள்வேன்

 

ஷாஃபி பிரிவைச் சேர்ந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மனைவியை தொட்டால் ஒளு (தொழுகைக்காக செய்து கொள்ளப்படும் தூய்மை)  முறிந்துவிடும் என்றும் தொழுகை இறைவனை முன்நோக்கும் செயல் எனவே அதிக கவனம் தேவை, தொழுபவரின் குறுக்கே செல்லும் குழந்தையைக்கூட கண்டிப்பதை பார்த்து வளர்ந்தவன்.

புஹாரி ஹதீஸ் : 0509

அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்)

அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்களில் எவரும் தமக்கு குறுக்கே செல்லாமலிருக்க தடுப்பு ஒன்றை வைத்துக் கொண்டு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் ஜுமுஆ நாளில் தொழுதுகொண்டிருப்பதை நான் கண்டேன். அப்போது பனூ அபீமுஜத் குலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்து செல்லப் போனார். எனவே, அபூசயீத் (ரலி) அவர்கள் அவரது நெஞ்சில் கையால் உந்தினார்கள். அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் (அவர்களைக் கடந்து) செல்வதைத் தவிர நடை பாதையேதும் இல்லையெனக் கண்ட அந்த இளைஞர், மீண்டும் அவர்களைத் தாண்டி (குறுக்கே) செல்லப் போனார். எனவே அபூசயீத் (ரலி) அவர்கள் அவரை முன்பைவிடக் கடுமையாக உந்தினார்கள். உடனே அந்த இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களை ஏசினார். பிறகு (மதீனாவின் ஆளுநராயிருந்த) மர்வான் பின் ஹகமிடம் சென்று அபூசயீத் (ரலி) அவர்கள் தம்மிடம் நடந்து கொண்டது பற்றி முறையிட்டார். அவருக்குப் பின்னால் அபூசயீத் (ரலி) அவர்களும் மர்வானிடம் சென்றார்கள். அப்போது மர்வான், “உங்களுக்கும் உங்கள் சகோதரரின் புதல்வருக்குமிடையே என்ன பிரச்சினை, அபூசயீத் அவர்களே”, என்று கேட்டார். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள், “மக்களில் எவரும் தமக்கு குறுக்கே செல்லாமலிருக்க தமக்கு முன்னால் ஏதேனும் ஒன்றை தடுப்பாக வைத்துக் கொண்டு உங்களில் ஒருவர் தொழும்போது எவரேனும் தமக்கு முன்னால் (குறுக்கே) கடந்து செல்ல முயன்றால் அவரைத் தள்ளிவிடுங்கள். அவர் (விலகிக்கொள்ள) மறுத்தால் அவருடன் சண்டையி(ட்டுத்த)டுங்கள். ஏனெனில் அவன்தான் ஷைத்தான்”, என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் (எனவேதான், இந்த இளைஞரிடம் இவ்வாறு நான் நடந்து கொண்டேன்)”, என்று கூறினார்கள்.

புஹாரி ஹதீஸ் :0510

புஸ்ர் பின் சயீத் (ரஹ்)

புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே நடந்து செல்பவர் அடைந்துகொள்ளும் பாவம் என்ன என்பது பற்றித் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற்றீர்கள், என்று அபூஜுஹைம் அப்துல்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் கேட்டுவருமாறு ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் என்னை அனுப்பிவைத்தார்கள். (நான் சென்று கேட்டேன்). அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்பவர் அதனால் தமக்கு ஏற்படு(ம் பாவத்) தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்கு முன்னால் (அவர் அருகில்) செல்வதற்குப் பதிலாக நாற்பது (நாட்கள்_மாதங்கள்_வருடங்கள் நின்று கொண்டிருப்பார். அத்தகைய நாற்பது) அவருக்கு நல்லதாக இருந்திருக்கும். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நள்ர் சாலிம் பின் அபீ உமைய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் நாட்களில் நாற்பது, என்று சொன்னார்களா அல்லது மாதங்களில் நாற்பது, என்று கூறினார்களா அல்லது, வருடங்களில் நாற்பது, என்று குறிப்பிட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

மேற்கண்ட ஹதீஸ்கடந்து போவதற்கு வேறு வழியின்றி, தொழுபவரின் குறுக்கே  நடந்து  செல்வதையே  குற்றம் என்று தடுக்கிறது.  ஆனால் இறைவனைத் தொழுது கொண்டிருப்பவரை நோக்கி காலை நீட்டிக் கொண்டிருப்பதும், அது தனது வழிபாட்டிற்கு இடையூறாக இருப்பதை உணர்த்திய பின்னரும் மீண்டும் காலை நீட்டிக் கொண்டிருப்பவரை என்னவென்று சொல்வது?  எனக்கு கற்பிக்கப்பட்டது யாருடைய வழிமுறை?

ஆயிஷா  அவர்களின் இந்த செயலை நபி (ஸல்) அவர்கள் தடுத்ததாகவோ, கண்டித்ததாகவோ எந்த தகவலுமில்லை.  ஆயிஷா   ஏன் அவ்வாறு செய்தார்?  நபி (ஸல்) ஏன் கண்டிக்கவில்லை? ஒருவேளை மனைவியின் மீது கொண்ட அதிகமான அன்பு காரணமாக இருக்கலாம் என்று முடிவு செய்து கொண்டேன். அதை உறுதி செய்ய நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கையைப்பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

 

புகாரி ஹதீஸ் -5068

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்று வந்து விடுவார்கள்.  (அப்போது) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

(புகாரி 5068,5215)

புகாரி ஹதீஸ்

நபி (ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி (ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது’ என நாங்கள் பேசிக் கொள்வோம்’ என அனஸ் (ரலி) கூறினார்” என கதாதா அறிவித்தார்.

இந்த ஹதீஸை படிக்கும் வேளையில் அதிர்ச்சியடைந்தேன்  காரணம், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களின் எண்ணிக்கை  திருக்குர்ஆன்  அனுமதித்த அளவை விட இரண்டு மடங்குகள் அதிகம். மேலும் இந்த ஹதீஸ்கள் அவரது பாலியல் வலிமையைப் பற்றியும் கூறவே மிகுந்த குழப்பமடைந்த என் மனதில் தடுமாற்ற எண்ணங்கள் ஆரம்பமாயின. எனது மனதில் தோன்றிய சந்தேகங்களை பிறரிடம் வெளிப்படுத்தவும் தயங்கினேன். இந்த தடுமாற்றம் சரியானதா?

 

முஸ்லீம் ஹதீஸ் எண் : 188, அத்தியாயம் : 1, பாடம் : 1.60

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

 நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில் சில (தடுமாற்றமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகிறோம்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு, “அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

எனது தடுமாற்றமும் ஒருவேளை ஒளிவுமறைவற்ற இறை நம்பிக்கையாக இருக்கலாம் என்று முடிவு செய்து கொண்டேன். மாற்று மதத்தினர் நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள்  நினைவுக்கு வரவே, என் கவனம் பலதாரமண ஆய்வில் செல்லத் துவங்கியது.

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?