தொகுப்பு | கவிதை RSS feed for this section

விடியவில்லையா? விடிவே இல்லையா?

15 ஆக

”நள்ளிரவில் வாங்கினோம்

இன்னும் விடியவில்லை” என்றொரு பழங்கவிதை

உலவுவதுண்டு.

எதிர்மறையில் ஏற்கும்

ஏக்கம் அது.

 

கருப்புக் கொடி நாட்டி

கருப்பு நாள் என்றறிவித்து

எதிர்ப்பை பதிவு செய்யும்

எதிர்வினைகளும் இங்குண்டு.

எதிர்ப்பின் மூலமே

இருப்பதாய் கட்டிக் கொள்ளும்

பொருளும் வந்து விடுகிறது அதில்.

 

விடியவில்லை எனும் ஏக்கத்துக்கும்

கருப்புதினம் எனும் துக்கத்துக்கும்

எதிராய்,

விடுதலை எனும் சொல்லின் வீச்சு

இந்த சுதந்திர நாளில்(!)

எங்கேனும் ஒட்டியிருக்கிறதா?

எனும் கேள்வியே மாற்று.

 

சட்டையில் மூன்றுநிறக் கொடியும்

நெஞ்சில் பூக்கும் பெருமிதமுமாய்

சுதந்திர தினம் கொண்டாடும்

அப்பாவிகளே!

எதில் இருக்கிறது என்று

இன்றை கொண்டாடுகிறீர்கள்?

 

உழைக்கும் மக்களின் பிரச்சாரத்தை மறுத்து

நகரின் சுவர்களில்

வண்ணாங்களாய் தீட்டி வைத்த

ஓவியங்களின் முதுகில்

சுவரொட்டி ஒட்டும் சுதந்திரம் உண்டா உனக்கு?

 

ஆண்டுக்கு ஐந்து லட்சம் கோடி

வரிச் சலுகையாய் உன் பணத்தை

கொட்டி முழுங்கும் முதலாளியை

இலவச முதலாளி என்றோ

விலையில்லா முதலாளி என்றோ

விளிக்கும் சுதந்திரம் உண்டா உனக்கு?

 

விளைச்சலை கொள்முதல் செய்யும் வசதிக்காக

கிராமப்புற சாலைகளை அமைத்துவிட்டு

மக்களுக்காக உள்கட்டுமான வசதிகள்

என உதார் விடுவது போல்

பசுமைப் புரட்சி எனும்

விவசாயிகளின் தூக்குக் கயிற்றை

முதலாளிகளின் செல்லத்திட்டம்

என்றழைக்கும் சுதந்திரம் உண்டா உனக்கு?

 

மருத்துவ வியாபாரிகள்

கோடிகளில் லாபம் பெற

உன் உறுப்புகளை தானம் செய்வது

மனிதாபிமானம் என திரிக்கப்பட்டிருக்கிறதே,

அவசரம் என்று ஒதுங்க

அவர்களின் பளிங்கு கக்கூசை கூட

திறக்கும் சுதந்திரம் உண்டா உனக்கு?

 

பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும்

இந்த பணம் படைத்த உலகில்

உங்கள் உரிமைகளுக்காய் வீதியில் கூடி

போராடச் சுதந்திரம் தான் உண்டா உனக்கு?

 

ஆனால்,

 

முன்னேற்றம் எனும் பெயரில்

முதலாளி குவிக்கும் பொருட்களை

நுகர்ந்து ஏமாற

சுதந்திரம் உண்டு உனக்கு.

 

எந்தச் சுதந்திரத்துக்காக

நீ கொண்டாடுகிறாய்?

இல்லாத சுதந்திரத்துக்கா?

இருக்கும் சுதந்திரத்துக்கா?

 

என்ன பொருளில் நீ கொண்டாடினாலும்

உன்னை அடிமையாய் ஆளப்படுவதற்ற்கு

நீயே வழங்கும் சுதந்திரம் அது

என்றே கொள்ளப்படும்.

 

திணிக்கப்படும் கொண்டாட்டங்களை மறு,

மறுக்கப்படும் உரிமைகளுக்கான சட்டங்களை மீறு

திரண்டு வீதியில் போராடு

அதுவே உன் சுதந்திரத்தைச் சமைக்கும்.

– நசீபா காஹ்துன்

 

இன்றைய நிலவரம் – கவிதை

15 நவ்

காலுக்குத் தொப்பியும் தலைக்குச் செருப்பும் அணியுமாறு

இந்த நிமிடம் வரை உத்தரவுஎதுவும் பிறப்பிக்கப் படவில்லை.

 

கண்ணிருக்கும் இடத்தில் கண்ணும்

காதிருக்கும் இடத்தில் காதுமே இருந்துவிட்டுப் போகட்டுமென்று

மாட்சிமை தங்கிய அரசு

குடிமக்களை இன்றும் அனுமதித்திருக்கிறது,கருணையுடன்…..

 

தொடர்ந்தும் வாய் வழியாகவே உண்பதைமாற்றுவது குறித்து

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும்.

 

ஒரு மாறுதலுக்காகவும் காற்றை மிச்சப்படுத்தவும்

மூக்கின் ஒரு துவாரத்தை தூர்த்து மூடும் திட்டம்

நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.

 

உலகிலேயே முதன் முறையாக

தண்டவாளத்தில் பேருந்து, தார் ரோட்டில் ரயில்

துறைமுகத்தில் விமானம்,விமான நிலையத்தில் கப்பல் என்று

அரசு எடுத்துவரும் ஆக்கப்பூர்வ மாற்றங்களுக்கு ஆதரவளிக்குமாறு

குடிமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

 

பிரசவ ஆஸ்பத்திரியை சுடுகாட்டுக்கு மாற்றியுள்ள அரசு

நாட்டையே சுடுகாடாக மாற்றும் திட்டம் படிப்படியாக நிறைவேறும்.

 

கோன் எவ்வாறோ குடிமக்களும் அவ்வாறேயானபடியால்

அவர்களும்

எதையும் எப்போதும்

ஒரே இடத்தில் நீடித்திருக்க விடமாட்டார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

 

 

நன்றி: ஆதவன் தீட்சண்யா

முதல் பதிவு: ஜூனியர் விகடன் 13/11/2011 இதழ்

தொட்டுவிடு ‘ஷாக்’ அடிக்கட்டும்

3 அக்

எங்கும் ஒரே பேச்சு

இல்லையில்லை,

எங்கெங்கும் ஒரே ஏச்சு.

கடந்த ஆட்சி துண்டாய் போனது

மின்வெட்டினால் தான்

எச்சரிக்கிறார்களாம் சிலர்.

நடக்கும் ஆட்சி துண்டாய் போனாலும்

மின்வெட்டு எஞ்சியிருக்கும்

அறியாதவர்களா இவர்கள்.

காற்றாலை சுற்றவில்லை

அணைகளில் நீரில்லை

அனல் நிலக்கரி தரமில்லை

அண்டை மாநிலங்கள்

ஒத்துழைப்பதும் இல்லை

ஒன்றா இரண்டா காரணங்கள் ஏராளம்.

ஆனாலும்,

மின்சாரம் இல்லை.

பேசுவது எதிர்க்கட்சியா

ஆளும் கட்சி செயல்படவில்லை.

பேசுவது ஆளும் கட்சியா

ஆண்ட கட்சி செயல்படுத்தவில்லை.

காட்சியும், கட்சிகளும் மாறினாலும்

காரணங்கள் மாறாது.

எந்தக் கட்சி ஆண்டாலும்

எந்திரம் ஓடாது.

மின்வெட்டுக்கு மட்டும்

வெட்டே இருக்காது.

வியர்வையில் மின்சாரம் தயாரிக்கலாமா

மைக்கேல் ஃபாரடே வோ

தாமஸ் எடிசனோ

புதிதாய் வரவேண்டும்.

சாலைகளில், சந்திகளில்

கண்கள் கொள்ளக் கூசும்

வெளிச்சத்தில் குளித்த

விளம்பரங்கள், விளம்பரங்கள்.

குடிசை வீடுகளில்

கண்களை இடுக்கி திரிவிளக்கில்

பாடங்களை மேயும்

தேர்வுநேர மாணவர்கள்.

ஓலை விசிரி கைவலிக்கும்

விசிராவிட்டால் தூக்கம் சிரிக்கும்

உறக்கமாவது வந்துவிடக் கூடாதா?

படுக்கையிலும் போராட்டம்

விசிரிகள் கைதட்டும்

பறந்துவிட்டதா பந்து

போதை எழும்பிப்பார்த்து கொண்டாடும்

மின்னொளியிலும் கிரிக்கெட்.

மின்சாரம் பற்றாக்குறை

தினமும் வெட்டு 3 மணி நேரம்

திட்டம் போடும் அரசு

மின்சாரம் பற்றாக்குறை

விளம்பர ஆடம்பரங்களுக்கு இனி வெட்டு

சட்டம் போடுமா அரசு.

சொந்த விவசாயிகள்

விதைத்ததை எடுக்க

நீரிறைக்க மின்சாரமில்லை

அன்னிய கோலாக்கள்

புட்டிகளை நிறைக்க

எப்போதும் தடையில்லை

நீண்ட கடற்கரை நாடு

அலைகளிலிருந்து மின்சாரம்

யோசிக்கவே கூடாது.

எப்போதும் வெயில்காயும் நாடு

பரிதிஒளியில் மின்சாரம்

ஆராயவே கூடாது

வல்லரசு காணும் நாடல்லவா

அணுவை திருத்தி

அடிமையாவதை மட்டுமே

யோசித்து ஆராய்வோம்.

எதையும் விற்றே பழக்கப்பட்டு

மின்வெட்டிலும் லாபம் ருசிக்க

வருகிறார்கள்

மின்கல முதலாளிகள்.

இனி உபரியாய் மின்சாரம் இருந்தாலும்

லாபத்திற்கு உத்திரவாத ஒப்பமிட்டு

மின்வெட்டை

நம்மிடம் சாட்டும் அரசு.

என்ன செய்யப் போகிறோம் நாம்?

நினைத்தாலே ‘ஷாக்’ அடிக்கும்

புரட்சிகர மின்சாரம் என்னவென்று

காட்டவேண்டாமா?

– நசீபா காஹ்துன்

அரே அல்லா, நீ எத்தனை அல்லா?

21 பிப்

 

யா ரசூலல்லாஹ்
நாங்கள் முஸ்லிம்கள் – என்றாலும்
எங்கள் தமிழ் நாட்டில்
சுன்னத்து ஜமாத்து

ஜாக்கு

தமிழ் நாடு தவ்ஹீது

இந்தியத் தவ்ஹீது என
நான்காகப் பிரித்தது அல்லாமல்
பள்ளிவாசல்களையும் நான்காகப் பிரித்தோம்
ஒரு பிரிவு இன்னொரு பிரிவின் பள்ளியில் தொழமாட்டோம்
என்றாலும்
தொழுகை என்னவோ நடக்கிறது…!

எனக்கொரு பயம்…
அல்லாஹ்வை

சுன்னத்து அல்லாஹ்

ஜாக்கு அல்லாஹ்

தமிழ் நாடு தவ்ஹீது அல்லாஹ்

இந்திய தவ்ஹீது அல்லாஹ் என்று
நான்காகப் பிரித்துவிடுவோமோ…!

 

நன்றி : இஜட். ஜபருல்லா

இர‌ங்கி வ‌ரும் தெய்வ‌ம்

5 பிப்

தெய்வ‌மே

இற‌ங்கிவ‌ர‌வேண்டும்


ஏழையின் வாட்ட‌ம் போக்க‌

குறைந்த‌விலை வ‌ர‌ம் வேண்டும்.


உறை உடை ஊன் என‌

அனைத்தின் ம‌திப்பிற்கும்

நீயே கார‌ண‌ம்.


ம‌ழை செழித்தாலும் ப‌ழித்தாலும்

உன்னைய‌ல்லால் ஒன்றுமில்லை.


ஏழை ப‌ண‌

நாடுக‌ள் பேத‌மின்றி

உன்னைக்கொண்டே

அனைத்தும் ஓடும்.


நீ இல்லாத‌ இட‌மேது?


உன்னைத்த‌விர்த்த‌ செய‌லேது?


உன்னை வைத்து

மெத்த‌வ‌ருமான‌ம் இந்நாட்டிற்கு


நீ இர‌ங்கினாலும்

இற‌ங்க‌விடுவ‌தில்லை இவ‌ர்க‌ள்.


உன் புண்ணிய‌த்தால்

அடுத்த‌ சுற்று போராட்ட‌த்திற்கு

நாள் குறிக்கின்றன‌

ஓட்டுக்க‌ட்சிக‌ள்.


 

எதிர்வ‌ரும் தேர்த‌லிலும்

நீயே ப‌ர‌ம்பொருள்.


நீ இற‌ங்கிவ‌ந்தால்

எல்லாம் ச‌ரியாகிவிடும்

என்ப‌வ‌ர்க‌ளுக்காக‌வேனும்

 

இற‌ங்கிவ‌ர‌க்கூடாதா?


 

க‌ருப்பாய் சிரிக்கும்

பெட்ரோல் தெய்வ‌மே!


இற‌ங்கிவ‌ந்து


உன்னிட‌ம் அற்புத‌ம் ஒன்றுமில்லை

உன்னை


ஆட்டுவிப்ப‌வ‌ர்க‌ளிட‌மே

உள்ள‌தென‌க்காட்டு.


– நசீபா காஹ்தூன்

ஏக்க‌ ஓடை

28 ஜன

ச‌ல‌ச‌ல‌த்து ஓடும்
ஓடையின் ச‌த்த‌ம்

 
அத‌ன‌ருகே அம‌ர்ந்தால்
உயிரையும் வ‌ருடிச்செல்லும்.

 
அறுத்துக் க‌ளைத்த‌வ‌ன்
விய‌ர்வை சும‌ந்து
அந்த‌ நீருக்கும்
புது வாச‌ம் வ‌ரும்.

 
ம‌லையில் ம‌ழை பெய்து
க‌ல‌ங்கி வ‌ந்தாலும்
எங்க‌ள் ம‌ன‌ம்போல‌
ச‌ட்டென‌த்தெளியும்.

 
கெண்டையும் கெழுத்தியும்
ப‌ய‌மின்றி
எங்க‌ள் உட‌லோடு பேசும்.

 
கோடை வ‌ந்தால்
ம‌ழ‌லைய‌ர் விளையாட‌
ம‌ன‌தோடு இட‌ம்த‌ரும்

 
எங்க‌ள் ஓடைக்கு
இன்று

 
முக‌த்தில் விழுந்த‌
அம்மைப் ப‌ள்ள‌ங்க‌ளாய்
ஆங்காங்கே காய‌ம்.

 
பொல்லா ம‌ருந்துக‌ள்
வ‌ய‌ல்க‌ளை வ‌தைத்த‌து.

 
அள‌ந்து வ‌லித்த‌ கைக‌ள்
க‌ளை ப‌றித்து வ‌லித்த‌ன‌.

 
நில‌மே அசைவ‌து போல்
ப‌சுமையாய் அசையும் வ‌ய‌ல்க‌ளில்

 
அசையாம‌ல் எழுந்த‌
ம‌ச்சு வீடுக‌ளின்
உய‌ர‌ம் பார்த்து
ஓடையில் ம‌ண்வெட்டிக‌ள் இற‌ங்கின‌.

 
ஒன்றா இர‌ண்டா?
அடிப்பானை சோற்றை சுர‌ண்டும்
க‌ர‌ண்டியைப்போல‌
ஓடையின் ம‌டியை சுர‌ண்டிய‌
எந்திர‌க் கைக‌ள்

 
ஆற்று ம‌ண‌ல்
அர‌சு நில‌ம் என்றாரே

 
ஓடையில் ம‌ண‌லெடுத்து
எங்க‌ள்
வ‌யிற்றில் போட்ட‌ பாவிக‌ள்.

 

 

நசீபா காஹ்தூன்

இது நிச்சயம்…..

25 டிசம்பர்

காணலாம்
கருத்தில் ஏறலாம்
அல்லாது விலகியும்.

வெறுப்பை உமிழலாம்
வீணென்று தர்க்கமும்.

எத்தனை மனிதர்கள்
தோலில் வலிக்கும் வரை
தூக்கம் கலையாத மனிதர்கள்.

சுள்ளெனச் சுட்டாலும்
சடுதியில் மறந்துவிடும்
எத்தனை விதங்கள்.

சமாதானங்கள் எல்லோருக்கும் உண்டு
பிழைப்பு.

எட்டில் ஒரு பாகத்திற்கு
எல்லா நாளும் அர்ப்பணம்.

ஒன்றாய் எழுந்து நின்றால்
சூரியனும் விழுந்துவிடும்
பிரிக்கின்றன மாயவலைகள்
மதவலைகள்.

குரல் கொடுத்தால் போதும்
ஒரு காக்கையும் சாகாதிங்கே
தடுக்கின்றன தன்னலங்கள்
தள்ளா நலங்கள்.

லட்சம் விவசாயிகள் மடிந்த பின்னும்
கண்களில் மண் விழுந்த பின்னும்
உறுத்தவில்லை யாருக்கும்
உப்பிட்டுச் சாப்பிடும் யாருக்கும்

மலைக்க வைக்கும்
மலையா அது?

கடக்க அடாத‌
கடலா அது?

நொருங்கி வீழும்
ஓர் நாள்.

வருவோம்
தொட‌ர்ந்து வ‌ருவோம்

பாறை போல் க‌டின‌ம‌ல்ல‌
உங்க‌ள் ம‌ன‌ம்
எறும்பு போல் மென்மையும‌ல்ல‌
எங்க‌ள் முய‌ற்சி

நாங்க‌ள் ஊறுவோம்
உங்க‌ள் பாராம‌ன‌ம் தேயும்

உங்க‌ள் கைக‌ளையும்
இணைத்துக்கொண்டே
வெட்டி வீழ்த்துவோம்
உல‌க‌ம‌ய‌ ஈன‌த்தை.


– நசீபா காஹ்தூன்.