தொகுப்பு | தமிழ்நாடு RSS feed for this section

தா. பாண்டியன் குமுறல்

21 ஜன

நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா கார்,

எனக்கு வெறும் அம்பேத் காரா?

tha.pa

 

முதற்பதிவு: முகநூல்

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! நெல்லையில் ஆர்ப்பாட்டம்.

20 ஜன

 

பன்னாட்டு முதலாளிகளின் லாப வெறிக்கான,

மனித குலத்திற்கு எதிரான

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆர்ப்பாட்டம்

நாள்:         21.1.2012 சனிக்கிழமை

நேரம்:        காலை 10 மணி முதல் 1 மணி வரை

இடம்:        ஜவகர் திடல், பாளை தினசரி சந்தை, திருநெல்வேலி

 

தலைமை:

வழக்குரைஞர். சே.வாஞ்சிநாதன்,

மதுரை மாவட்ட துணைச் செயலாளர், ம.உ.பா மையம்

கண்டன உரை:

வழக்குரைஞர். சி.ராஜூ,

மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா மையம், தமிழ்நாடு.

தோழர். காளியப்பன்,

மாநில இணைப் பொதுச் செயலாளர், ம.க.இ.க

பேராசிரியர். தொ.பரமசிவன்,

மேனாள் தமிழ்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நெல்லை.

பேராசிரியர். வே.மாணிக்கம்,

மேனாள் தமிழ்துறைப் பேராசிரியர், தூய வளனார் கல்லூரி, பாளையங்கோட்டை.

வழக்குரைஞர். இரா.சி.தங்கசாமி,

மேனாள் நெல்லை வழக்குரைஞர்.சங்கத் தலைவர்

வழக்குரைஞர். ஜி.ரமேஷ்,

நெல்லைமாவட்டக் குழு உறுப்பினர், இந்திய பொதுவுடமைக் கட்சி(மா.லெ) விடுதலை.

வழக்குரைஞர். செந்தில்,

மாவட்ட ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி, நெல்லை.

வழக்குரைஞர். சிவசுப்பிரமணியன்,

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், நாகர்கோவில்.

திரு. மா.விஜயக்குமார் பாக்கியம்,

நெல்லை மாநகர மாணவரணி செயலாளர், மதிமுக.

பேராசிரியர். அமலநாதன்,

நெல்லை.

தோழர். தமிழீழன்,

நெல்லை.

ஓவியர். புருஷோத்தமன்,

மே பதினேழு இயக்கம், நெல்லை.

 

புரட்சிகர கலை நிகழ்ச்சி: ம.க.இ.க மைய கலைக் குழு.

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

வழக்குரைஞர். சு.ப.இராமச்சந்திரன்,

தூத்துக்குடி மாவட்ட செயலாளர், ம.உ.பா மையம்.

வழக்குரைஞர். க.சிவராசபூபதி,

கன்யாகுமரி மாவட்ட செயலாளர், ம.உ.பா மையம்.

 

 

  • கூடங்குளம் அணு உலைகட்டப்பட்டது நாட்டின் மின்சார தேவையினை பூர்த்திசெய்வதற்கு அல்ல; பன்னாட்டு அணு உலைமுதலாளிகளின் இலாபத்திற்காகவும், அணுகுண்டு – வல்லரசு கனவிற்காகவும் தான்.
  • தமிழக மக்களுக்கும், சிறு தொழிலுக்கும் மின்வெட்டு; பன்னாட்டு நிறுவனங்களுக்கோ தடையில்லா சலுகைவிலை மின்சாரம் – இதுதான் தமிழகத்தின் இன்றைய நிலை! கூடங்குளம் மின்சாரம் தமிழக மக்களுக்கும் சிறு தொழிலுக்கும் என்பது அப்பட்டமான பொய்!
  • காற்றாலை, கடலலை, சூரிய ஒளி, குப்பை கழிவு என  எண்ணற்ற மாற்று மின்சாரத் தயாரிப்பு முறைகள் இருக்கும் போது, கடலோரங்கள் முழுவதும் பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் அணு உலைகள் அமைக்கப்படவுள்ளது அன்னிய முதலாளிகளின் லாபத்திற்காகவே!
  • அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ், ஜப்பான், இரஷ்யா என அனைத்து நாடுகளும் அணு உலைகளி மூடிவரும் நிலையில், அணு உலைகளை அவர்களிடமிருந்து இறக்குமதி செய்து இந்தியாவெங்கும் அமைப்பது பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் குப்பைக் கூடாரமாக இந்தியாவை மாற்றியமைக்கவே!

தமிழக அரசே!

  • கூடங்குளம் இடிந்தகரை போராட்டக் குழுவினர் மீது அரசு துரோக குற்றச்சாட்டு உட்பட பல்வேறு பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறு!
  • 156 பொய் வழக்குகளை பதிவு செய்துவிட்டு போராடும் மக்களை ஆதரிப்பது போல் நடிக்காதே!
  • சிறு தொழிலுக்கும், வீட்டு உபயோகம் – விவசாயத்திற்கும் தடையில்லா மின்சாரம் வழங்கு!
  • பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஐடி நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் சலுகை விலை மின்சாரத்தைரத்து செய்!

மத்திய அரசே! அணுசக்தி கழகமே!

  • அணு உலை பாதுகாப்பானது என்று பொய்ப் பிரச்சாரம் செய்ய மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வரிப்பணத்தை பயன்படுத்தாதே!
  • பொய் – அவதூறு பிரச்சாரத்தை உடனே நிறுத்து!
  • அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை, இரஷ்ய இந்திய கூடங்குளம் அணு உலை ஒப்பந்தத்தை இரத்து செய்!
  • கூடங்குளம், கல்பாக்கம் உட்பட அனைத்து அணு உலைகளையும்மூடு!
  • மாற்றுமின்சாரத் தயாரிப்பு முறைகளை உடனே செயல்படுத்து!

மனித உரிமை ஆர்வலர்களே! பொது மக்களே!

  • தங்கள் வாழ்வினை பாதுகாக்க கூடங்குளம் – இடிந்தகரை மக்கள் போராடுவது வாழ்வுரிமைக்கான போராட்டம்!
  • அவதூறு, அச்சுறுத்தல், அடக்குமுறை என அவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு முனைவதை எதிர்க்க வேண்டியது நம் கடமை!
  • அணு உலை பாதுகாப்பானது என்ற அப்துல் கலாம் மற்றும் அணு உலைக் கழக நிர்வாகிகளின் ஆதாரமற்ற,னேர்மையற்ற பிரச்சாரத்தை புறந்தள்ளுவோம்!
  • மக்களின் உயிருக்கு தலைமுறை தலைமுறையாய் பேராபத்தை விளைவிக்க உள்ள கூடங்குளம் அணு உலை திறக்கப்படுவதை அனுமதியோம்!

 

 

35 வது சென்னை புத்தகக் காட்சி

5 ஜன

புத்தகங்கள், மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கும் மனிதாபிமானத்திற்கும் வழிகாட்டும் அதிசயிக்கத் தக்க மனித குலத்தின் மிகப் பெரிய கண்டு பிடிப்பு – தோழர் மாக்சிம் கார்க்கி

வாருங்கள் தோழர்களே! நண்பர்களே!!

நூற்றுக்கணக்கான அரங்குகள் மத்தியில்

உழைக்கும் வர்க்கத்தின் பெருமிதமாய்…..

புரட்சி அரசியலின் நூற்களமாய்….

கீழைக்காற்று

அரங்கு எண்கள்: 404, 405

கீழைக்காற்று அரங்கு எங்கிருக்கிறது என்பதைக் காட்டும் வரைபடம் இங்கே

நாள்: 2012 சனவரி 5 முதல் 17 வரை

இடம்: ஜார்ஜ் பள்ளி மைதானம் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை 30

நேரம்: பிற்பகல் 3 மணி முதல் 9 மணி வரை

விடுமுறை நாட்களில்: காலை 11 மணி முதல் 9 மணி வரை.

 

சென்னை புத்தக காட்சியில் வாங்க வேண்டிய நூலக்ளின் பட்டியல்

 

இடதுசாரி – முற்போக்கு – சமூக அக்கறை கொண்ட அரசியலில்ஆர்வமும், துடிப்பும் மிக்க தோழர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அவசியம் வாங்கி படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலை பதிப்பகம் வாரியாக இங்கு தந்திருக்கிறோம். ஆனால், இந்தப் பட்டியல், இறுதியானவை அல்ல. ஏனெனில், பல பதிப்பகங்கள் இன்னமும் விலைப்பட்டியலை கொண்டு வரவில்லை. சிலர் அச்சுக்கு சென்றிருப்பதாக குறிப்பிட்டார்கள். வேறு சிலர், விலைப்பட்டியலை கொண்டு வரும் எண்ணம் இல்லை என்றார்கள். ‘நீங்களாக பார்த்து விவரங்களை எழுதிக் கொள்ளுங்கள்…’ என்பதே பல பதிப்பகங்களின் பதிலாக இருந்தது.

இந்த நடைமுறை சிக்கலுடனேயே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதால், விடுப்பட்ட நூல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. தவிர, பாதுகாக்க வேண்டிய சில நூல்களை கொண்டு வந்த பதிப்பகங்கள், பொருளாதாரம் அல்லது வேறு காரணங்களால் இந்தக் கண்காட்சியில் தனியாக ஸ்டால் போடவில்லை. பதிலாக, தாங்கள் வெளியிட்ட நூல்களை பிற பதிப்பகங்களில் வைத்து விற்க முடிவு செய்திருக்கிறார்கள். முடிந்தவரை அப்படி விற்கப்படும் நூல்களின் விவரங்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறோம்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே இந்தப் பட்டியலை படிக்கும்படி தோழர்களிடமும், நண்பர்களிடமும் கேட்டுக் கொள்கிறோம். விடுப்பட்ட நூல்கள் குறித்த விவரங்களை மறுமொழியில் தெரியப்படுத்தினால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கண்காட்சி நடக்கும் இடம், மொத்தம் 10 சாலைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சாலையின் தொடக்கத்திலும், முடிவிலும் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனவே, இந்தப் பட்டியலும் சாலைகளின் எண்கள் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. அதேபோல் அரசியல், வரலாறு, தத்துவம், கலை இலக்கியங்கள், அறிவியல்… என்றெல்லாம் பிரித்து வகைப்படுத்தாமல், பதிப்பகம் அல்லது விற்பனையகம் சார்ந்தே நூல்களின் விவரங்களை தந்திருக்கிறோம்.

இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் 90%, ‘கீழைக்காற்று‘ அரங்கில் கிடைக்கும்.

இனி –

———————-

சாலை எண்: 1

அலைகள் (எண்: 22)

1. சியாங் சிங்: ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் புரட்சிகர இலட்சியம் – ஜாஃபியா ராயன் – ரூ. 70/- (இந்த சியாங் சிங், தோழர் மாவோவின் துணைவியார்)

2. தத்துவத்தின் வறுமை – காரல் மார்க்ஸ் – ரூ. 135/-

3. மதம் பற்றி – லெனின் – ரூ. 70/-

4. சோசலிசமும் போரும் – லெனின் – ரூ. 50/-

5. மகாத்மா புலே – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (தமிழில்: சிங்கராயர்) – ரூ. 100/-

6. காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு – தமிழில் ஆ.சீனிவாசன் – ரூ. 750/-

(இதே நூலை நியூ செஞ்சுரி புத்தக நிலையமும் வெளியிட்டுள்ளது. கடைசி இரு அத்தியாயங்கள் மட்டும் குருசேவ் கால திரிபுவாத கருத்துக்களை கொண்டவை. எந்தெந்த காலகட்டத்தில் மார்க்ஸ், என்னென்ன நூல்களை, எந்தச் சூழலில் எழுதினார் என்பதை புரிந்து கொள்ள இந்த நூல் உதவும்)

7. இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு – சுகுமால்சென் (தமிழில்: வீ.பா.கணேசன்) – ரூ. 450/-

8. கறுப்பு அடிமைகளின் கதை (UNCLE TOM’S CABIN) – ஹேரியட்பீச்சர் ஸ்டவ் (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 280/-

9. அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் – ஆனந்த் டெல்டும்ப்டே (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 50/-

10. வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் – எம்.ஆர்.அப்பன் (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 230/-

11. இந்திய மக்கள்: மதம் – பழக்க வழக்கங்கள் – நிறுவனங்கள் – அபே.ஜெ.எ.துபுவா (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 260/-

12. இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும் – நா.வானமாமலை – ரூ. 100/-

13. தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துகள் – நா.வானமாமலை – ரூ. 30/-

14. பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பெளத்தமும் – நா.வானமாமலை – ரூ. 35/-

15. இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும் – நா.வானமாமலை – ரூ. 25/-

16. மார்க்சிய அறிவுத் தோற்றவியல் – நா.வானமாமலை – ரூ. 35/-

17. விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சி – நா.வானமாமலை – ரூ. 40/-

18. வரலாறும் வக்கிரங்களும் – ரொமிலா தாப்பர் (தமிழில் நா.வானமாமலை) – ரூ. 35/-

19. கற்பனை செய்யப்பட்ட சமயச் சமூகங்களா? – ரொமிலா தாப்பர் (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 25/-

20. ஆளும் வர்க்கமாக அறிவுஜீவிகள் – அசோக்ருத்ரா (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 30/-

21. பெளத்தத்தின் சமூக தத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்னையும் – உமா சக்கரவர்த்தி (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 25/-

22. அறிவியல், தத்துவம், சமுதாயம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: அ.குமரேசன்) – ரூ. 35/-

23. இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும் – சுனிதி குமார் கோஷ் (தமிழில்: திருமலை) – ரூ. 35/-

24. உலகை குலுக்கிய பத்து நாட்கள் – ஜான் ரீடு (தமிழில்: ரா.கிருஷ்ணையா) – ரூ. 250/-

(இதே நூலை நியூ செஞ்சுரி புத்தக நிலையமும் வெளியிட்டிருக்கிறது)

25. இந்தியத் தத்துவ இயல் – ஓர் எளிய அறிமுகம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 150/-

26. மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் – கான்ராட் உட் (தமிழில்: மு.இக்பால் அகமது) – ரூ. 130/-

27. இந்தியாவில் பெண்கள் இயக்கம் 1940 – 1950 – ரேணு சக்கரவர்த்தி (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 50/-

28. பிரெடெரிக் எங்கெல்ஸ் – டாக்டர் ஸ்தெபானாவா (தமிழில்: வ.சண்முகசுந்தரம்) – ரூ. 100/- (எங்கெல்சின் வாழ்க்கை வரலாறு)

29. இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் – சுனிதிகுமார் கோஷ் (தமிழில்: வெ.கோவிந்தசாமி) – 125/-

30. உழைக்கும் மக்களின் முன்னணிப் படை – ஏ.ஷாஜின் (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 30/-

31. தொழிற்சங்கங்களைப் பற்றி காரல் மார்க்ஸ் – ஏ.லாவோவஸ்கி (தமிழில்: எஸ்.ராமகிருஷ்ணன்) – ரூ. 70/-

32. சீன வானில் சிவப்பு நட்சத்திரம் (RED STAR OVER CHINA) – எட்கர் ஸ்நோ (தமிழில்: வீ.பா.கணேசன்) – ரூ. 375/-

33. மாயையும் எதார்த்தமும் – டி.டி.கோசாம்பி (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 110/-

34. நேரில் கண்ட ரஷ்யப்புரட்சி – ஆ.ரைஸ்வில்லியம்ஸ் (தமிழில்: பூ.சோமசுந்தரம்) – ரூ. 140/-

35. வரலாறு என்றால் என்ன? – ஈ.எச்.கார் (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 80/-

36. ஆதிசங்கரரின் மக்கள் விரோதக் கருத்துக்கள் – கன்னடம்: பகவான் (தமிழில்: முனைவர் சி.சண்முகம்) – ரூ. 55/-

37. மாவோவின் நெடும்பயணம் (THE LONG MARCH) – DICK WILSON (தமிழில்: நிழல் வண்ணன்) – ரூ. 175/-

38. மார்க்ஸ் – எங்கெல்ஸ் மேற்கோள்கள் – தொகுப்பு: சி.இளங்கோ – ரூ. 40/-

39. சென்னை பெருநகர தொழிற்சங்க வரலாறு – தே.வீரராகவன் (தமிழில்: ச.சீ.கண்ணன், புதுவை ஞானம்) – ரூ. 150/-

40. இளமையின் கீதம் (சீன நாவல்) (THE SONG OF YOUTH) – YANG MO (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 300/-

41. சூறாவளி (சீன நாவல்) (THE HURRICANE) – CHO LI – P0 (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 200/-

42. சீனா: ஒரு முடிவுறாத போர் – வில்லியம் ஹிண்டன் (தமிழில்: கி.இரமேஷ்) – 100/- (கலாச்சார புரட்சி குறித்த வரலாறு)

43. இராணுவமும் அரசியலும் (ஜாக் வோடிஸ் எழுதிய நூலின் சுருக்கம்) – நா.தர்மராஜன் – ரூ. 50/-

முதல் பாதையின் முடிவில் திராவிடர் கழக பதிப்பகத்தின் கடை உள்ளதுஇங்கு தந்தைபெரியாரின் நூல்களை 

வாங்கலாம்.

———

சாலை எண்: 2

கீழைக்காற்று (எண்: 404 / 405)

1. ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள்: பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்… – கணேசன் (அய்யர்) – ரூ. 130/-

2. பகத்சிங் சிறைப் போராட்டமும் அரிய ஆவணங்களும் – ஆவணங்கள் தொகுப்பு: சமன்லால் (பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) தமிழில்: எஸ்.சம்பத் – ரூ. 15/-

3. படிப்பும் விடுதலைக்கான அறிவும் – தோழர் மருதையன் – ரூ. 15/-

4. நக்சல்பாரி புரட்சியின் இடிமுழக்கம் – ரூ. 12/-

5. தெராய் பிராந்திய விவசாயிகள் இயக்கம் பற்றிய அறிக்கை செப்டம்பர், 1968 – தோழர் கனுசன்யால் – ரூ. 15/-

6. மக்களிடையே நமது பணிகள் – கதீப் அன்சாரி – ரூ. 12/-

7. ஹூனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை – மாசேதுங் – ரூ. 50/-

8. கட்சி அமைப்பு பற்றி – ஸ்டாலின், காகனோவிர், டிமிட்ரோவ், மாவோ – ரூ. 50/-

9. ஐந்து அரங்குகளில் தேர்வை எதிர்கொள்வோம் – செள என் லாய் – ரூ. 10/-

10. முரண்பாடு பற்றி – மாவோ – ரூ. 40/-

11. கம்யூனிசக் கொடியின் கீழ் – ஜூலியஸ் ஃபூசிக் – ரூ. 7/-

12. போராடும் தருணங்கள் – தோழர் மருதையன் – ரூ. 40/-

13. லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் – ஸ்டாலின் – ரூ. 75/-

14. சினிமா: திரை விலகும்போது… – புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த சினிமா விமர்சனங்கள் – ரூ. 70/-

15. மீண்டும் தொழிலாளி வர்க்கம் (வினவு, புதிய கலாச்சாரம் கட்டுரைகள்) – ரூ. 80/-

16. அருந்ததிராய் – கரண்தபார் விவாதம் – தமிழில்: அனாமதேயன் – ரூ. 10/-

17. விடுதலைப் போரின் வீரமரபு – (புதிய கலாச்சாரம் காலனியாதிக்க எதிர்ப்பு சிறப்பிதழ் கட்டுரைகளின் தொக்கு) ரூ. 65/-

18. ஈராக் வரலாறும் அரசியலும் – கலையரசன் – ரூ. 15/-

19. நினைவின் குட்டை நதி (சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்) – ரூ. 70/-

20. நிஜத்தின் உரைகல்லில் சினிமா (வினவு, புதிய கலாச்சாரம் இதழ்களில் வெளிவந்த திரை விமர்சனங்கள்) – ரூ. 110/-

21. ஆகஸ்டு 15, 1947: அதிகாரமாற்றம்: உண்மையா… சடங்கா? – சுனிதிகுமார் கோஷ் – ரூ. 25/-

22. பரமக்குடி துப்பாக்கிச் சூடு செப்.11, 2011, உண்மை அறியும் குழு அறிக்கை – ரூ. 15/-

23. நான் நாத்திகன் ஏன்? – பகத்சிங் – ரூ.

24. ’பாரதி’ய ஜனதா பார்ட்டி – வே.மதிமாறன் – ரூ.50

25. பாரதி பக்தர்களின் கள்ள மெளனம் – தோழர். மருதையன் – ரூ.40

26. ஆப்பிரிக்கர்கள் கண்டு பிடித்த இருண்ட ஐரோப்பா – கலையரசன் – ரூ. 50/-

27. காஷ்மீர் யாருக்கு சொந்தம்? – ரூ. 25/-

28. அமெரிக்க நெருக்கடி முதலாளித்துவத்துக்கு சவுக்கடி! (அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியும் இந்தியாவில் அதன் பாதிப்புகளும் – ரூ.30/-

29. கம்யூனிஸ்டு அறிக்கையின் கதை – ரூ. 7/-

30. கடவுள் கைது பக்தன் விடுதலை – வினவு – புதிய கலாச்சாரம் கட்டுரைகள் ரூ. 25/-

31. இட ஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினிய பார்வை – புதிய ஜனநாயகம்- ரூ. 30/-

32. சட்டக்கல்லூரி கலவரம்: சாதியம் ஒழிப்போம்! தமிழகம் காப்போம்! – வினவு – ரூ. 35/-

33. ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் – வினவு – ரூ. 25/-

34. ஐ.டி.துறை நண்பா… – வினவு – ரூ. 35/-

35. மும்பை 26/11 விளக்கமும் விவாதமும் – வினவு- ரூ. 35/-

36. ஜெயமோகன், சாரு நிவேதிதா, காலச்சுவடு, சுகுமாரன், உயிரோசை, சோல்சனிட்சின் இலக்கிய மொக்கைகள் – வினவு – ரூ. 25/-

37. எண்டோசல்பானையும் பி.டி.கத்திரிக்காயையும் விரட்டி அடிப்போம்! – ரூ. 10/-

38. பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – வினவு -ரூ. 55/-

39. இமாலய சாகசம்: 1962 இந்திய சீனப் போர்: காரணங்களும் விளைவுகளும் – சுனிதிகுமார் கோஷ் – ரூ. 30/-

40. இசை: போதை பொழுதுபோக்கு போராட்டம் – புதிய கலாச்சார கட்டுரைகள் – ரூ. 40/-

41. இந்தியாவில் சாதிகள் (பாவை வெளியீடு) – அண்ணல் அம்பேத்கர் – ரூ. 30/-

தோழமை (எண்: 385)

1. மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்னைகளும் – ஸ்டாலின் – (தொகுப்பு: மகாராசன்) – ரூ. 130/-

2. ஒரு கோப்பை தண்ணீர் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் – லெனின், க்ளாரா ஜெட்கின் உரையாடல் – (தொகுப்பு: மகாராசன்) – ரூ. 100/-

பொன்னி (எண்: 397)

1. வீரத்தெலங்கானா ஆயுதபோராட்டமும் அதன் படிப்பினைகளும் – சுந்தரய்யா (தமிழில்: தியாகு) – ரூ. 400/-

2. சிறைக் கடிதங்கள் (கம்பிகளுக்குள்ளிருந்து இயற்கையை நேசிக்க வைக்கும் கடிதங்கள்) – ரோசா லக்சம்பர்க் – ரூ. 50/-

3. இந்துமதக் கொடுங்கோன்மை வரலாறு (புரோகித ஆதிக்கத்தில் புதையுண்ட இந்திய வரலாறு) – தர்மகீர்த்தி அடிகள் (தமிழில்: வெ.கொ.பாலகிருஷ்ணன்) – ரூ. 120/-

4. அம்பேசிவம் (கூர்மைப்படுத்தப்பட்ட நாத்திகவாதக் கட்டுரைகள்) – குத்தூசி குருசாமி – ரூ. 50/-

5. வால்மீகி இராமாயணம் (மறைக்கப்பட்ட உண்மை இராமாயணம்) – குருவிக்கரம்பை வேலு – ரூ. 100/-

6. பூமணியின் 5 நாவல்கள் (பிறகு, வெக்கை, நைவேத்தியம், வாய்க்கால், வரப்புகள்) – ரூ. 300/-

7. அம்பாரம் (பூமணியின் 51 சிறுகதைகள் அடங்கிய பெருந்தொகுப்பு) – பூமணி – ரூ. 225/-

—————-

சாலை எண்: 3

அம்பேத்கர் ஃபவுண்டேஷன்ஸ்

1. அண்ணல் அம்பேத்கரின் அனைத்து ஆக்கங்களும் 37 தொகுதிகளாக தமிழில் கிடைக்கிறது. கைவசம் பிரதிகள் இல்லாததால் தொகுதி 8, 11, 22 ஆகிய மூன்றும் விற்பனைக்கு இல்லை. மீதமுள்ள 34 தொகுதிகளையும் ரூ. 1400/-க்கு வாங்கலாம். ஒருவேளை சில தொகுதிகள் பேப்பர் பேக் ஆக இருந்தால், இந்தத் தொகை உயரும்.

காலச்சுவடு (எண்: 11 / 12)

1. கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் – ஆ.சிவசுப்பிரமணியன் – ரூ. 100/-

2. நொறுங்கிய குடியரசு – அருந்ததி ராய் (தமிழில்:க.பூர்ணச்சந்திரன்) – ரூ. 145/-

3. அறியப்படாத தமிழகம் – தொ.பரமசிவன் – ரூ. 100/-

4. மணல்மேல் கட்டிய பாலம் – சு.கி.ஜெயகரன் – ரூ. 100/-

5. கோவில் – நிலம் – சதி – பொ.வேல்சாமி – ரூ. 90/-

6. பொற்காலங்களும் இருண்ட காலங்களும் – பொ.வேல்சாமி – ரூ. 180/-

7. பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன் – ரூ. 150/-

8. மந்திரமும் சடங்குகளும் – ஆ.சிவசுப்பிரமணியன் – ரூ. 150/-

9. குமரி நிலநீட்சி – சு.கி.ஜெயகரன் – ரூ. 100/-

10. தமிழகத்தில் அடிமைமுறை – ஆ.சிவசுப்பிரமணியன் – ரூ. 80/-

————

சாலை எண்: 4

விடியல் (எண்: 306 / 307)

1. இந்திய வரலாறு ஓர் அறிமுகம் – டி.டி.கோசாம்பி (தமிழில்: சிங்கராயர்) – ரூ. 350/-

2. இந்தியா ஒரு வல்லரசு: வேடிக்கையான கனவு – அருந்ததிராய் – ரூ. 30/-

3. ஏகாதிபத்தியத்தின் கிடுக்கிப்பிடியில் இந்திய வேளாண்மை – சுனிதிகுமார் கோஷ் (தமிழில்: நிழல்வண்ணன்) – ரூ. 70/-

4. வனம் எழுதும் வரலாறு (மாவோயிஸ்ட் கெரிலாக்களுடன் பஸ்கர் காட்டில் தங்கிய அனுபவம்) – சத்நாம் – ரூ. 130/-

5. இந்திய வரலாற்றில் பகவத் கீதை – பிரேம்நாத் பசாஸ் – ரூ. 500/-

6. கோபுரத்தை உலுக்கிய காற்று மற்றும் அதிகாலை பெருவெள்ளம் – ஹேன்சூயின் – (இரு நூல்களும் சேர்த்து) ரூ. 1000/-  (எட்கர் ஸ்நோ எழுதிய நூல்கள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட தோழர் மாவோவின் வாழ்க்கை வரலாறு. அதன் வழியாக சீனாவின் வரலாறு)

7. நீண்ட புரட்சி – எட்கர் ஸ்நோ – ரூ. 175/- (‘சீனவானில் சிவப்பு நட்சத்திரம்’ என்ற புகழ்பெற்ற நூலை ஸ்நோ, 1930களின் இறுதியில் எழுதினார். அதன் பிறகு அவர் மாவோவை 1970களில் சந்தித்தபோது எழுதிய நூல் இது)

8. மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 80/-

9. மனித சாரம் – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 100/-

10. முதலாளியமும் அதன் பிறகும் சரக்கு உற்பத்தியின் தோற்றமும் வீழ்ச்சியும் – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 75/-

11. சமயம் பற்றி – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்:  ) – ரூ. 25/-

(ஜார்ஜ் தாம்சனின் இந்த நான்கு நூல்களையும் வாசித்தால் ஓரளவு மார்க்சியத்தின்அடிப்படைகளை தெரிந்து 

கொள்ளலாம்.)

12. மாஓ சேதுங்: தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவப் படைப்புகள் – ரூ. 200/-

13. இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919 – 1947 (1) – சுனிதிகுமார் கோஷ் (தமிழில்: சிங்கராயர்); இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919 – 1947 (2) – சுனிதிகுமார் கோஷ் (தமிழில் நிழல்வண்ணன்) – இரு தொகுதிகளும் சேர்த்து ரூ. 600/-

14. தத்துவம்: பேக்கன் முதல் மார்க்ஸ் வரை – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: மு.வசந்தகுமார்) – ரூ. 35/-

15. சீனாவின் வரலாறு – வெ.சாமிநாதசர்மா – ரூ. 150/-

16. ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் – ஆனந்த் டெல்டும்ப்டெ (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 135/-

17. மனிதன் – ஆர்.இராமநாதன் – ரூ. 65/- (62 ஆண்டுகளுக்கு முன் தமிழில் எழுதப்பட்ட நூல் இது. மனித குலத்தின் வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் எழுதப்பட்ட நூல் இது)

18. ஹோசிமின் – யெவ்கனி கொபலெவ் (தமிழில்: க.விஜயகுமார்) – ரூ. 150/-

19. சீனாவும் சோஷலிசமும்: சந்தை சீர்திருத்தமும் வர்க்கப் போராட்டமும் – மார்ட்டின்ஹார்ட் – லேண்ட்ஸ்பர்க் பால்பர்க்கட் (தமிழில்: க.செங்கோடன்) – ரூ. 100/-

20. 1942 ஆகஸ்ட் புரட்சி: மறைக்கப்பட்ட உண்மைகள் – சு.துரைசாமி – ரூ. 100/-

21. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – ஜான் பெர்கின்ஸ் (தமிழில்: இரா.முருகவேள்) – ரூ. 150/-

22. உயிரினங்களின் தோற்றம் (சுருக்கப்பட்ட வடிவம்) – சார்லஸ் டார்வின் (தமிழில்: ராஜ்கெளதமன்) – ரூ. 65/-

23. என் நினைவுகளில் லெனின் – கிளாரா ஸெத்கின் – ரூ. 50/-

24. உலகமயமாக்கல்: அடிமைத்தளையில் இந்தியா – அரவிந்த் (தமிழில்: வசந்தகுமார் – நிழல்வண்ணன்) – ரூ. 175/-

அடையாளம் (எண்: 322 / 323)

1. எண்ணெய் அரசியல் – கேர்ரி ரீச் (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 170/-

2. காக்கி உடையும் காவிக் கொடியும் – தபன் பாசு (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 80/-

3. இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் – அஸ்கர் அலி எஞ்ஜினியர் (தமிழில்: ஐ.இசக்கி) – ரூ. 150/-

4. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – ரூ. 425/-

5. நான் ஏன் இந்து அல்ல – காஞ்சா அய்லய்யா – ரூ. 120/-

6. பதி பசு பாகிஸ்தான் – எஸ்.வி.ராஜதுரை – 80/-

7. இந்து இந்தியா – எஸ்.வி.ராஜதுரை – ரூ. 115/-

பாரதி புத்தகாலயம் (எண்: 18 / 19)

1. இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு: ஆரம்ப ஆண்டுகள் (1920 – 33) தொகுதி 1 – ரூ. 180/-

2. மா சே துங்: ஒரு மனிதர், கடவுளல்லர் – குவான் யான்சி (தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி) – ரூ. 140/-  (Foreign Languages Press, Beijing, China, 1992ல் வெளியிட்ட  MAO ZEDONG MAN, NOT GOD, By Quan Yanchi என்ற நூலின் தமிழாக்கம். மாவோவின் மெய்க்காப்பாளராக பல ஆண்ட்கள் பணிபுரிந்த லீயின் கியாயோவின் நினைவு கூர்தல்களை அடிப்படையாகக் கொண்ட நூல் இது. ஆனால், தவறான தமிழாக்கம், ஏராளமான எழுத்துப் பிழைகள். இதை பொறுத்துக் கொண்டுதான் இந்த நூலை வாசிக்க வேண்டும்)

3. ஒரு டிரில்லியனுக்கு எத்தனை ஜீரோ? குற்றவாளிக் கூண்டில் ஐ.எம்.எப் – உலக வங்கி – சூசன் ஜார்ஜ் – ரூ. 130/-

4. மார்க்சின் மூலதனம் பற்றி… – எங்கெல்ஸ் – ரூ. 70/-

5. சூறாவளியாய் தாக்கும் உலக நிதிமூலதனம் – என்.எம்.சுந்தரம் (தமிழில்: இலக்குவன்) – ரூ. 60/-

6, நிதி நெருக்கடி ஒரு புரிதல் – அமானுல்லாகான் (தமிழில்: இரா.இயேசுதாஸ்) – ரூ. 50/-

———-

சாலை எண்: 6

சிலிக்குயில் (எண்: 277)

பிற பதிப்பகங்களின் நூல்கள் இங்கு கிடைக்கின்றன. குறிப்பாக மனிதன் பதிப்பகம்‘ சார்பில் வெளிவந்த தோழர் கிஷன்ஜி‘, ‘தோழர் ஆசாத்‘ உட்பட மாவோயிஸ்ட்டுகளின் நூல்களை இங்கு வாங்கலாம்.

தவிர, முகம் பதிப்பகம் வெளியிட்ட வரலாற்றில் கிறிஸ்தவம் (புரூனோ பெள்வரும் பழையகிறிஸ்தவமும்பழைய 

கிறிஸ்தவத்தின் வரலாறு பற்றிபின் இடைக்கால ஜெர்மனியில்திருச்சபை சீர்திருத்தமும் திருச்சபை எதிர்ப்பும் 

ஆகிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு) –பிரெடரிக் எங்கெல்ஸ் – நூலும் இங்கு கிடைக்கிறது. இதன் விலை: ரூ. 65/-

———–

சாலை எண்: 8

தமிழ்ப் புத்தகாலயம் (எண்: 209 / 210)

1. வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல்ஜி – ரூ. 350/-

2. பொதுவுடமை என்றால் என்ன? – ராகுல்ஜி – ரூ. 35/-

3. கலையும் இலக்கியமும் – மாசேதுங் – ரூ. 12/-

4. யுத்தம் வேண்டாம் – மாக்ஸிம் கார்க்கி – ரூ. 25/-

5. லெனினுடன் சில நாட்கள் – மாக்ஸிம் கார்க்கி – 24/-

6. அமெரிக்காவிலே… – மாக்ஸிம் கார்க்கி – ரூ. 45/-

7. எது நாகரீகம்? – மாக்ஸிம் கார்க்கி – ரூ. 30/-

8. தூக்கு மேடைக் குறிப்பு – ஜூலிஸ் பூசிக் – ரூ. 55/-

நியூ செஞ்சுரி புத்தக நிலையம் (எண்: 53 / 54)

1. உலகாயதம் பண்டைய இந்தியாவின் ஆரம்பகால பொருள்முதல்வாத சிந்தனைகள் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: சிங்கராயர்) – ரூ. 500/-

2. மதமும் சமூகமும் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: சிசுபாலன்) – ரூ. 100/-

3. தமிழகத்தின் பொருளாதார வரலாறு – தேவ.பேரின்பன் – ரூ. 55/-

4. என் வாழ்க்கை – கே.என்.பணிக்கர் (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 150/-

5. நவீனத்துவம் – தமிழ் – பின்நவீனத்துவம் – கார்த்திகேசு சிவதம்பி – ரூ. 130/-

6. மனித சமுதாயம் (வரலாற்று பொருள்முதல்வாதம் குறித்த எளிமையான விளக்கம்) – ராகுல் சாங்கிருத்யாயன் (தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு) – ரூ. 150/-

7. இந்துத் தத்துவ இயல், பெளத்தத் தத்துவ இயல், இஸ்லாமியத் தத்துவ இயல், ஐரோப்பியத் தத்துவ இயல், விஞ்ஞான லோகாயத வாதம்… ஆகிய ராகுல்ஜியின் நூல்கள் ரூ. 50/- முதல் ரூ. 70/-க்குள் தனித்தனியாக கிடைக்கின்றன.

8. மார்க்சிய மெய்ஞானம் – ஜார்ஜ் பொலீட்ஸ்கர் (தமிழில் ஆர்.கே.கண்ணன்) – ரூ. 55/-  இவை தவிர முன்னேற்ற பதிப்பகம் வெளியிட்ட பழைய ரஷ்ய நாவல்களில் பல, இப்போது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்துள்ளன. பல முக்கிய நூல்களை தேடித்தான் எடுக்க வேண்டும் என்பது இங்குள்ள குறை.

———

சாலை எண்: 10

கருப்புப் பிரதிகள் (எண்: 119)

1. காசு ஒரு பிசாசு – கலையரசன் – ரூ. 75/-

2. குழந்தைப் போராளி – சைனா கெய்ரெற்சி – ரூ. 180/-

————

இவை தவிர –

சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்கட்சியின் வரலாறு (ரூ. 180/-), நிரஞ்சனா எழுதியநினைவுகள் அழிவதில்லை‘ நாவல் (விலை: ரூ. 60/-) உட்பட சவுத் விஷன் பதிப்பகம் வெளியிட்டுள்ள முக்கியமான நூல்கள் அனைத்தும் கீழைக்காற்று‘ மற்றும் பாரதிபுத்தகாலயம்‘ அரங்குகளில் கிடைக்கும்.

அதுபோலவே –

அருணன் எழுதி மதுரையிலுள்ள வசந்தம் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள –

1. தமிழரின்  தத்துவ மரபு (1) – ரூ. 170/-

2. தமிழரின் தத்துவ மரபு (2) – ரூ. 100/-

3. காலந்தோறும் பிராமணியம் (வேதகாலம் முதல் சோழர் காலம் வரை) (1) – ரூ. 150/-

4. காலந்தோறும் பிராமணியம் (சுல்தான்கள் + முகலாயர்கள் காலம் (2 & 3) – ரூ. 350/-

5. காலந்தோறும் பிராமணியம் (கிழக்கிந்திய கம்பெனி காலம்) (4) – ரூ. 150/-

6. காலந்தோறும் பிராமணியம் (பிரிட்டனின் நேரடி ஆட்சிக் காலம்) (5) – ரூ. 350/-

7. காலந்தோறும் பிராமணியம் (நேரு காலம்) (6) – ரூ. 250/-

ஆகிய நூல்களும் கீழைக்காற்று‘ மற்றும் ‘பாரதி புத்தகாலயம்‘ அரங்குகளில் கிடைக்கும்.

முடிவாக,

இங்கு வெளியிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியில் வாயிலாக பொதுவான இடதுசாரி அரசியல், பொருளாதாரம், இந்திய, தமிழக வரலாறு, சமூகம், சாதி, மதம் குறித்த ஆரம்ப அடிப்படைகளை கற்றுக் கொள்ளலாம். ஆசான்கள் தவிர்த்த நூல்களில் சில கராறான அரசியல் பார்வை இல்லாமல் இருந்தாலும் ஒரு அறிமுகம் என்ற வகையில் படிக்கலாம் என்பதால் அதையும் சேர்த்துள்ளோம்.

ஐவர் குழு தலைமை நீதிபதியின் குசும்பு

2 ஜன

முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்டினால் அதை தமிழகமும், கேரளாவும் இணைந்து பராமரிக்க முடியுமா என்று இன்றைய விவாதத்தின்போது ஐவர் குழு தலைவரான உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் கேட்டார். இதற்கு தமிழக வக்கீல்கள் கடும் எதிர்ப்பும், ஆட்சேபனையும் தெரிவித்தனர்.

நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு இன்று காலை டெல்லியில் உள்ள மத்திய நீர் ஆணையத்தின் அலுவலக வளாகத்தில் கூடியது. அப்போது சமீபத்தில் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று வந்த தொழில்நுட்ப நிபுணர்கள் தத்தே, மேத்தா ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

பின்னர் தமிழகம் மற்றும் கேரள மாநில வக்கீல்கள் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். கேரளவக்கீல்கள் முதலில் பேசினர். அப்போது அவர்கள் ஏற்கனவே கூறி வந்ததையே திரும்பக் கூறினர். கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன் வாதிடுகையில், முல்லைப் பெரியாறு அணை தொடர் பூகம்ப நிகழ்வுகளால் வலுவிழந்து, பலமிழந்து காணப்படுகிறது. அணையில் விரிசலோ, உடைப்போ ஏற்படவில்லை என்றாலும் கூட அணை பலமாக இல்லை. இதனால் கேரள மக்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நூறாண்டுகளைத் தாண்டி விட்ட அணையை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் திரும்பத் திரும்ப பழுது பார்த்துக் கொண்டிருப்பது. எனவே புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு என்று கூறினார்.

பின்னர் பிற்பகலில் தமிழக அரசின் வக்கீல்கள் குரு கிருஷ்ணகுமார், உமாபதி ஆகியோர் வாதாடினர். அப்போது அவர்கள் வாதிடுகையில், கேரள அரசு பொருத்தமற்ற, உண்மைக்குப் புறம்பான, தவறான தகவல்களையும், வாதங்களையும் தொடர்ந்து தந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை மிகப் பலமாக உள்ளது. அணையில் எந்த இடத்திலும் உடைப்போ, விரிசலோ இல்லை. கேரளாவின் வாதம்தான் மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே அதைத்தான் ஐவர் குழு நிராகரிக்க வேண்டும். கேரளாவின் வாதத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்றனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த், புதிய அணை கட்டினால் இரு மாநிலங்களும் இணைந்து அதை பராமரிக்க முடியுமா என்று கேட்டார். இதைக் கேட்டு தமிழக வக்கீல்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் நீதிபதியின் இந்தக் கேள்வியை மிகக் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஆட்சேபிப்பதாகவும் கூறிய தமிழக வக்கீல்கள், புதிய அணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தமிழகத்தின் கருத்தைப் பதிவு செய்தனர்.

************************************************************

அணை பாதுகாப்பாக இருக்கிறதா இல்லையா? என்பதை ஆராய்வது தான் ஐவர் குழுவின் பணி. அந்த ஐவர் குழுவின் நிபுணர்கள் இருவர் நேரடியாக அணைக்குச் சென்று ஆராய்ந்து அறிக்கையை அளித்திருக்கிறார்கள். அந்த அறிக்கையை நாளை தான் பரிசீலிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் ஐவர் குழுவின் தலைவரான  முன்னாள் நீதிபதி, “புதிய அணையைக் கட்டி அதை இரண்டு மாநிலங்களும் இணைந்து பராமரிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமென்ன? ஒருவேளை தமிழகத்தின் கருத்தை அறிய விரும்பியிருக்கிறார் என்றால், “இப்போது இருக்கும் அணையிலேயே கேரளா விரும்பும் பலப்படுத்தலைச் செய்தால் தமிழகத்துடன் ஒத்துழைக்கத் தயாரா?” என்று கேரள வழக்குறைஞர்களிடம் ஏன் கேள்வி எழுப்பவில்லை.

ஏற்கனவே மத்திய அரசு கேரளாவுக்கு சாதகமாக நடந்து வருகிறது. அணை பகுதிக்கு மத்திய படையின் பாதுகாப்பு வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கைக்கு, இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையில் கேரளாவின் எதிர்ப்பை மீறி தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்று கூறிய மத்திய அரசு; பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்க வேண்டும் எனும் கேரளத்தின் கோரிக்கைக்கு தமிழகத்திற்கு தகவல் கூட தெரிவிக்காமல் பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைத்தது. இது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை அணுகும் விதமா?

நீதிபதிகளானாலும், மத்திய அரசானாலும், கேரள ஓட்டுக் கட்சிகளானாலும் பிரச்சனையை ஏதாவது வழியில் திசை திருப்பி புதிய அணையை கட்டிவிட வேண்டும் என்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள். தமிழக ஓட்டுக் கட்சிகளுக்கும் இதில் பெரிதாய் ஆட்சேபம் ஒன்றுமில்லை. இல்லையென்றால் தமிழகத்தின் கையிலிருந்து அணையின் பராமரிப்பு, பாதுகாப்பு, மீன் பிடித்தல், காவல் பணி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கேரளத்திடம் தாரை வார்த்திருப்பார்களா? அனைவரிடமும் இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை ஓட்டுக் கட்சிகளை புறக்கணித்து தன்னெழுச்சியுடன் நடத்தப்பட்டு வரும் தமிழக மக்களின் போராட்டங்கள் தான்.

தங்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் அந்த அணையை தமிழக மக்கள் கைவிட மாட்டார்கள்.

அரசவைக் கோமாளி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் அப்துல் கலாம்

17 டிசம்பர்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்பட தமிழக, கேரள முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சைனிக் பள்ளியில் நடந்த விழாவில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு மாநிலங்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் நல்லுறவு, அணை பிரச்னையால் பாதிக்கப்படக் கூடாது’ என்றார். 

முல்லை பெரியாறு அணை குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் நேரில் பேசி, சுமுகமாக பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறு முதலமைச்சர்கள் பேசும் போது, அணையின் பாதுகாப்பு, செலவு, பயன்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.

****************************************************

பயன்படுத்தப்படும் நிலத்திற்காகவும், மின்சாரத்திற்காகவும், பாதுகாப்பு பணிகளுக்காகவும் ஆண்டுதோறும் தமிழகம் கேரளாவுக்கு முறையாக பணம் வழங்கி வருகிறது என்பது இந்த கோமாளிக்கு தெரியாதா? பலமுறை, பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி அவைகளை மீறி கேரளா செயல்படுகிறது என்பதால் நீதி மன்றங்களில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் அணையின் பலம் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆராய்ந்து, அந்த அடிப்படையில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் கேரளா அடாவடி செய்து கொண்டிருக்கிறது. இப்போது எல்லாவற்றையும் அழித்துவிட்டு முதலிலிருந்து தொடங்குங்கள் என்கிறார். இவரை கோமாளி என்று கூறுவது மட்டும் போதுமா?

முல்லைப் பெரியாறு: போராட்டக் காட்சிகள்

13 டிசம்பர்

கடந்த சனிக்கிழமை 10.12.2011 முதல் இன்று வரை பல்லாயிரம் தமிழ் மக்கள் கம்பம் கூடலூர் – குமுளி தமிழக கேரள எல்லையில் தினமும் அணிதிரண்டு போரடுகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த திணறும் போலீசு படிப்படியாக வன்முறையை அரங்கேற்றி வருகிறது. இன்றும் அங்கே தடியடி நடந்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. இங்கே அந்த போராட்டக்காட்சிகளின் படங்களை வெளியிடுகிறோம். தமிழ் மக்களின் நியாயமான உரிமை கோரி நடக்கும் இந்த போராட்டம் வெற்றியடைய தோள் கொடுப்போம்!

 

கம்பம், கூடலூர் பகுதிகளிலிருந்து வரும் மக்களை தடுத்த நிறுத்த குமுளி அருகே வேன்களை குவித்திருக்கும் போலீசு

 

மக்களை பார்வையிடும் ஐ.ஜி ராஜேஸ்தாஸ்

நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மக்களிடம் அடிவாங்கி ஓடியதை அடுத்து தடியடி நடத்தும் தமிழக போலீசு

போர்முரசு கொட்டி வந்த மக்களிடம் பேசும் தேனி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி.

தமிழக கேரள எல்லையான குமுளியில் மக்கள் வெள்ளம்.

குமுளி சாலையில் போலீசு தடுப்பை தகர்க்க முனையும் மக்கள்

குமுளி சாலையில் போலீசு தடுப்பை தகர்க்க முனையும் மக்கள்

குமுளி சாலையில் போலீசு வாகனங்களை தடுத்த நிறுத்த மக்கள் தடையரண்கள்

கேரள சுற்றுலாத்துறையின் சொகுசு மாட்டு வண்டிகளை தீவைப்பு

தேனி மாவட்ட எஸ்.பி தலைமையில் குருவனூத்து பாலத்தில் மக்களை தடுத்து நிறுத்தும் போலிசு

குருவனூத்து பாலத்தின் போலீசு தடுப்பை உடைக்க முயலும் மக்கள்

குருவனூத்து பாலத்தின் போலீசு தடுப்பை உடைக்க முயலும் மக்கள்

குருவனூத்து பாலத்தின் போலீசு தடுப்பை உடைக்க முயலும் மக்கள்

கம்பம் வட்டார கிராமங்களிலிருந்து வண்டிகளில் செல்லும் பெண்கள்

திரண்டு வந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

 

முதல் பதிவு: வினவு

அத்வானி யாத்திரையும் குழாய் குண்டு சதிகளும்

10 நவ்

அத்வானி கொலை முயற்சி வழக்கில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுச் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீனை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல காவல்துறை திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் பாஜக-வின் தலைவர்களில் ஒருவரான அத்வானி ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரை வந்தார். அவர் அங்கிருந்து யாத்திரை செல்லும் வழியில் பைப் வெடிகுண்டு ஒன்று காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் கடந்த 1ம் தேதி அப்துல் ரகுமான் மற்றும் இஸ்மத் என்ற இரண்டு இளைஞர்களைக் கைது செய்தனர். இநக்ச் சதி செயலுக்கு இமாம் அலி கூட்டாளியாக கருதப்படும் போலீஸ் பக்ருத்தீன் என்பவரைக் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக கூறப்பட்டது. ஆனால் காவல்துறையினரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், சென்னை மண்ணடியைச் சேர்ந்த எம்.அப்துல்லா என்பவர் சென்னசுயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு(ஹேபியஸ் கார்பஸ்) ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

“நானும், பக்ருதீனும் நண்பர்கள். ஒரு வழக்கு தொடர்பாக சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினரால் 2003ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். அதே வழக்கில் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீனும் (வயது 35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த வழக்கு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் அடிப்படையில் நான் வெளியே வந்துவிட்டேன்.

இந்த நிலையில், கடந்த 2ம் தேதி சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினரால் பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது அவர்களின் அலுவலகத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொலை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுபற்றி நானும், எனது நண்பரும் இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளருமான ஜெ.அப்துல் ரஹீமும், தமிழக அரசு மற்றும் டிஜிபி-க்குத் தந்தி அனுப்பி பக்ருதீனை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரினோம். ஆனால் அவர் விடுதலை செய்யப்படவுமில்லை. இதுவரை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுமில்லை.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது. எனவே சட்ட விரோத காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை வெளியில்விட அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.”

என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*************************************************

அத்வானியின் அயோத்தி ரத்த யாத்திரை போன்ற விளைவுகளோ, பலனோ இந்த யாத்திரையில் ஏற்படவில்லை. தெளிவாகச் சொன்னால் மக்கள் அத்வானியையும், யாத்திரையையும் கண்டு கொள்ளவே இல்லை. இதை மாற்றுவதற்குக்கூட குழாய் குண்டு சதி செய்யப்பட்டிருக்கலாம். அரசு எந்திரம் பார்ப்பன மயமாகியிருப்பதால் எதுவும் சாத்தியம் தான்.

நூலக இடமாற்றத்தைக் கண்டித்து புமஇமு ஆர்ப்பாட்டம்

10 நவ்

கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றம் என்ற பெயரில் வரலாற்றை அழிக்க முயலும் பாசிச ஜெயாவின் செயலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி சார்பில் 09.11.11 அன்று காலை 10.30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூர்புரம் அண்ணா நூலகம் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அங்கு குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்ட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் பராமரிப்பின்றி பாழடைந்து, சீரழிந்து போன சூழலில் அதை மேம்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த அறிவிப்பு ஒரு ஏமாற்று.

பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா சமச்சீர் பொதுப்பாட்த்திட்டம் மற்றும் தாய்மொழிக் கல்வியினை தடுக்க தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றுவது என்பது வரலாற்றை அழிக்க முயலும் செயலே. வரலாறு முழுவதும் பாசிஸ்டுகள் தாங்கள் ஒரு தேசத்தை கைப்பற்றுவதற்கு முன்னும், பின்னும் செய்கின்ற முதற்செயலே வரலாற்றை அழிப்பதுதான்.

ஹிட்லர் முதல் ஜார்ஜ் புஷ் , ராஜபட்சே வரையிலான பாசிஸ்டுகள் கைப்பற்றிய நாடுகளில் நாட்டின் பாரம்பரிய மிக்க சின்னங்களையும், நூலகங்களையும் திட்டமிட்டு அழித்தார்கள். அதைப்போல தமிழ்கப்பண்பாட்டை திட்டமிட்டு அழிக்கும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயல்லிதாவிற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் போராட வேண்டிய அவசியம் உள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளை இணைச்செயலர் தோழர்.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என நூற்றுகும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றம் என்ற பெயரில் வரலாற்றை அழிக்க முயலும் பாசிச ஜெயாவின் செயலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி சார்பில் 09.11.11 அன்று காலை 10.30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூர்புரம் அண்ணா நூலகம் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அங்கு குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்ட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் பராமரிப்பின்றி பாழடைந்து, சீரழிந்து போன சூழலில் அதை மேம்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த அறிவிப்பு ஒரு ஏமாற்று.

பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா சமச்சீர் பொதுப்பாட்த்திட்டம் மற்றும் தாய்மொழிக் கல்வியினை தடுக்க தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றுவது என்பது வரலாற்றை அழிக்க முயலும் செயலே. வரலாறு முழுவதும் பாசிஸ்டுகள் தாங்கள் ஒரு தேசத்தை கைப்பற்றுவதற்கு முன்னும், பின்னும் செய்கின்ற முதற்செயலே வரலாற்றை அழிப்பதுதான்.

ஹிட்லர் முதல் ஜார்ஜ் புஷ் , ராஜபட்சே வரையிலான பாசிஸ்டுகள் கைப்பற்றிய நாடுகளில் நாட்டின் பாரம்பரிய மிக்க சின்னங்களையும், நூலகங்களையும் திட்டமிட்டு அழித்தார்கள். அதைப்போல தமிழ்கப்பண்பாட்டை திட்டமிட்டு அழிக்கும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயல்லிதாவிற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் போராட வேண்டிய அவசியம் உள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளை இணைச்செயலர் தோழர்.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என நூற்றுகும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் காணொளி

 

முதல் பதிவு: புமஇமு

நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்

2 நவ்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக் குழு அலுவலகம்

421,அண்ணா சாலை,சென்னை-600018

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும்

தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்

புதிதாக சென்னை பள்ளிக் கல்வி இயக்கக (டிபிஐ) வளாகத்தில்

அமைக்கப்பட உள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம்

செய்யப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா

அவர்கள் இன்று (2.11.2011) அறிவித்துள்ளார். 1.1.2011 அன்று

நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்

பட்டிருக்கிறது. இந்த முடிவு, சமுதாய வளர்ச்சியில் நூலகங்களின்

தலையாய பங்கு குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும்

அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில்

ஏற்படுததப்பட்ட இந்த நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள்,

மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய

நவீன கட்டமைப்புகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம்,

மலையாளம் உள்ளிட்ட பல மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன.

ஒலி, ஒளி தொகுப்புகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே

நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர்

அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும்

உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற

கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட

கட்டடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.

முந்தைய அரசின் தவறுகள் காரணமாக தமிழக மக்கள் ஆட்சிமாற்றத்தை

ஏற்படுத்திய போது புதிய அணுகுமுறைகள் பற்றிய எதிர்பார்ப்பு

களுடனேயே இருந்தார்கள். ஆனால் அஇஅதிமுக அரசு அந்த

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மாறாக, அரசியல் பகையுணர்வுடன்

செயல்படுவதிலேயே முனைப்புக் காட்டுகிறது. தலைமைச் செயலகக்

கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும்

மாற்றப்படுவது அந்த அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான

வெளிப்பாடாகவே இருக்கிறது.

நூலகத்தை மாற்றுவதற்குச் சொல்லப்பட்டிருக்கிற காரணம் ஏற்கத்தக்கதாக

இல்லை. அறிவு சார் பூங்கா அமையவிருக்கும் இடத்தில்தான் ஒரு பொது

நூலகமும் அமைய வேண்டும் என்பது மக்களை திசைதிருப்புவதற்கான

மேலோட்டமான காரணமாகவே இருக்கிறது. டிபிஐ வளாகம் பள்ளிக்

கல்வி சார்ந்த துறையினரும் மாணவர்களும் வந்துசெல்கிற இடம். அங்கு

இப்படியொரு பொதுநூலகத்தை நிறுவுவது அந்த வளாகத்தின் செயல்

பாட்டுக்கும் இடையூறாகவே அமையும். தனியொரு இடத்தில் அண்ணா

நூற்றாண்டு நூலகம் அமைந்திருப்பது அதனைப் பயன்படுத்துவோருக்கு

எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. தற்போதைய அண்ணா நூலக

வளாகத்தின் இடப்பரப்பைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொண்டு

பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி அதனை வலுப்படுத்த முடியும்.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது

வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து

புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். தேவையான

உள்கட்டுமானங்களோடு அந்த மருத்துவமனை வளாகத்தைத் திட்டமிட்டு

உருவாக்க முடியும்.

அதைச் செய்ய மனமில்லாமல், முந்தைய அரசால் கட்டப்பட்டது என்ற

காரணத்திற்காகவும், அதற்கு முன் அஇஅதிமுக அரசு தலைமைச்

செயலகத்தை அமைக்கத் தேர்வு செய்து பின்னர் நீதிமன்றத் தலையீட்டால்

கைவிடப்பட்ட இடத்தில் இப்படியொரு கட்டடம் இருப்பதா என்ற தேவையற்ற

ஆத்திரத்தாலும் தற்போதைய அண்ணா நூற்றாண்டு வளாகத்தை மாற்றுவது

அரசியல் முதிர்ச்சியைக் காட்டவில்லை.

ஆகவே அரசின் இந்த முடிவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்

கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசு தனது முடிவைக்

கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை

மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறது. அரசு இதனை ஏற்க மறுக்குமானால்

கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைத்

திரட்டி மாநிலந் தழுவிய போராட்டத்தில் சங்கம் ஈடுபடும் என்று தெரிவித்துக்

கொள்கிறோம்.

ச.தமிழ்ச்செல்வன் சு.வெங்கடேசன்

மாநிலத்தலைவர் மாநிலப்பொதுச்செயலாளர்

மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்,வலைத்தளத்தில்,தொலைக்காட்சியில்

வெளியிடுமாறு வேண்டுகிறோம்.

சு.வெங்கடேசன்

பொதுச்செயலாளர்

முதல் பதிவு: தமிழ் வீதி

தமிழகத்தின் பதற வைக்கும் ஈழ அகதி முகாம்கள்! ஒரு நேரடி விசிட்

5 அக்

தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதி முகாம் ஒன்றுக்குள் வெளியாட்கள் நுழைவது என்பது மிகக் கொடுமையானது.

அதையும் மீறிய நுழைவு என்பது பல கட்ட பலத்த பாதுகாப்புக்கும் மனதை புண்படுத்தும் விசாரணைகளுக்கும் உட்பட்டது. கட்டுநாயக்காவில் நுழைந்த கரும்புலி வீரனின் மனநிலைக்கு ஒப்பானது.

இவற்றையும் தாண்டி முகாம்களுக்குள் நுழைந்தால் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடம் நான்கு கேள்வி கேட்க பழக முடியாது… புகைப்படம் எடுக்க முடியாது….

இப்படியாக நவீனத்துவமான வதை முகாம்கள் தான் தமிழகத்திலுள்ள ஈழத்தமிழர் அகதி முகாம்கள்.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள உச்சம்பட்டி ஈழத்தமிழர்கள் அகதி முகாம் ஒன்றுக்கு தமிழ் சி.என்.என் இனது விசேட புலனாய்வுச் செய்திப் பிரிவினர் சென்றனர்.

மதுரையில் உள்ள மூன்று முகாம்களிலேயே பெரிய முகாமாக இது காணப்படுகின்றது. இங்கு 600 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அகதிகளாக உள்ளனர். இவர்கள் அனைவரும் 1990 ஆம் ஆண்டே தமிழகத்துக்கு அகதியாக வந்தவர்கள்…

ஆனால் சாக்கடை ஓடும் இடத்துக்கு அருகில் உள்ள சின்னம் சிறு ஓலைக் குடிசைகளில் தான் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

முகாம் வாசலில் தமிழக விசேட பொலிஸ் பிரிவான கியூ பிரிவு பொலிசாரின் அலுவலகம் காணப்படுகின்றது.

அதற்கு வலது பக்கமாக கொஞ்சம் தள்ளி ஈழத் தமிழ் அகதி ஒருவரினால் நடத்தப்படும் தேநீர், சிற்றுண்டிக் கடை ஒன்றும் காணப்படுகின்றது.

நாங்கள் மெதுவாக தேநீர் குடிக்கச் செல்வது போல தேநீர் கடைக்குச் சென்றோம்.. அங்கு வயதான ஐயா ஒருவர் இருந்தார்.. நாங்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்…

ஐயா இலங்கையில எந்த இடம்? “நான் தம்பி வவுனியா… 90 இல அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்தனாங்கள்… இப்ப வரை இங்க தான் இருக்கிறோம்… இலங்கையில இப்ப சமாதானம் என்று சொல்லுறாங்கள்… ஆனால் எங்களுக்கு அங்க போக விருப்பம் இல்லை… ஏதோ கிறிஸ் மனிதன் என்றும் பயமுறுத்துறாங்கள்.. என்று தனது ஆதங்கத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.. “

அடுத்ததாக ஐயாவிடம் அம்மா புதுசா அறிவிச்ச திட்டங்கள் உதவிகள் கிடைச்சுதோ? முகாமில எப்படி வசதிகள் இருக்கு..?? என்று கேட்டோம்..

“இல்லை தம்பி… ஈழத் தமிழர்களுக்கு உதவிய கடவுள் தங்கத் தாரகை எங்கள் அம்மா என்று எல்லாம் பேப்பரில பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வந்து நான்கு மாசத்துக்கு மேல ஆகுது… ஆனா கூடுதலாக எந்த உதவிகளும் கிடைக்கல… முகாமில எங்களுக்கு நாத்தத்துக்க இருந்து பழகிப் போச்சு… இப்பவும் கொட்டில் வீட்டில தான் வாழுறோம்…முகாம் பொறுப்பதிகாரி வரும் நாட்களில் முகாமிலிருந்து யாரும் வெளியில் செல்ல முடியாது… “

தம்பி இப்ப கொஞ்சத்தில வந்திடுவாங்கள் கியூ பிராஞ்… அவங்கள் உங்களை யார் என்று கேட்டு எங்களை நோண்டி எடுப்பார்கள்… அதுக்கு முதலில வெளிக்கிடுங்கோ என்று அவசரம் காட்டினார் அந்த பெரியவர்..

அவரின் கோரிக்கையை ஏற்று அங்கு இன்னும் சிறிது நேரம் நின்றால் எங்களுக்கும் ஆப்பு தான் என்ற நிலையில் திரும்பினோம்…

முகாமில் ஒருவரைச் சந்திக்கச் சென்றால் கியூ பிராஞ்சுக்கு அவரின் பூர்வீகம், தொழில், விசா, பாஸ்போர்ட் போன்ற தனிப்பட்ட விடயங்களை துளாவும் அருகதை இல்லையே…. தனி மனித சுதந்திரத்தை மீறிய செயலாகவே இது பார்க்கப்படுகின்றது.

சில பொலிஸ்காரர்கள் பிச்சை எடுக்கும் பெருமாளிடம் பிடுங்கித் தின்னும் அனுமார் கணக்காக அவர்களிடம் உள்ள காசையும் பிடுங்குகிறார்கள்..

உண்மையில் திறந்த வெளிச் சிறைச்சாலையாக தான் தமிழக அகதி முகாம்கள் உள்ளன என்பது நிதர்சனமானது…

அங்கு வெளியாட்கள் பெரிதாக போக முடியாது.. அதுவும் பத்திரிகை, மீடியாக்களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அனுமதி இல்லை… அங்கு புகைப்படங்கள் எடுக்க முடியாது… இப்படியாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் தனித் தீவாக முகாம்கள் மாற்றப்படுள்ளன.

அங்குள்ள சிறுவர்களின் எதிர்காலம் தான் உண்மையில் கவலை கொள்ள வைக்கின்றது.

நம்மூர்களில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் தரவை வெளியில் உள்ள சுடுகாடுகளைப் போன்று காணப்படுகின்றன தமிழக முகாம்கள்.. முகாம்களைச் சுற்றி காடு போல் பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றன….

முகாம்களுக்கு இடையில் சிற்றாறு போல குறுக்கு மறுக்காக கழிவு நீர் பாய்ந்து செல்கின்றது.. சில இடங்களில் தேங்கியும் உள்ளது…

இவை நாளடைவில் பாரிய சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை…

இவ்வாறு பல்வேறு உளவியல், உடலியல் தாக்கங்களுக்கு மக்கள் உள்ளாகின்றனர்.

மெக்கானிக் வேலையிலிருந்து இந்திய எஜமானார்களின் கக்கூசு கழுவுகிற வேலைகள் வரை கஸ்ரமான பொருளாதார நிலை காரணமாக முகாமில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் செய்து வருகின்றார்கள்.

இந்தியாவில் இருந்து கொண்டு தமிழீழம் கிடைக்க அரும்பாடுபட்டு வரும் வெத்து வேட்டுக் கட்சிகள் கொஞ்சம் உங்களை நம்பி வந்தவர்களின் கொட்டில்களையும் அவர்களின் சீரழிந்த வாழ்க்கையையும் போய் பார்க்கலாமே…கடைசி அவர்களுக்காவது உதவலாமே..

முதல் பதிவு: தமிழ் சி.என்.என்