தொகுப்பு | மார்ச், 2012

கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் – விவாதம் தொடர்கிறது

23 மார்ச்

இதன் முந்தைய பகுதிகளை படிக்க

 

இந்த விவாதத்தின் மூன்றாவது பகுதியாக சில இணைய மத பரப்புரையாளர்களின் பொய்யும் புனைச் சுருட்டுகளும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. முதலில் மனிதாபிமானி என்ற பெயரில் வேறு ஏதோ ஒன்றின் அபிமானியாக இருக்கும் பதிவைப் பார்க்கலாம். அந்த பதிவை படிக்க இங்கு சொடுக்குங்கள்.

 

வினவு கட்டுரையில் தோழர் துராப்ஷா மன்னிப்பு கேட்டார். அதாவது மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டார் என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.மட்டுமல்லாது பின்னூட்ட விவாதங்களிலும் அவரிடமிருந்து எப்படி மன்னிப்பு பெறப்பட்டது என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் எதையோ மறைத்து விட்டதாய் விளம்புகிறார்கள். எதையும் மறைக்காத நிலையிலேயே மறைத்து விட்டதாய் புழுகியவர்கள், தங்கள் பதிவில் எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் எழுதினார்களா? \\\ இவரின் நடவடிக்கைகள் இஸ்லாமிற்கு எதிராக இருந்ததால், அப்பகுதி மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இவர் இறைநிராகரிப்பாளர் என்று அறிவிக்கப்பட்டார். துராப்ஷாவிடம் இது சம்பந்தமாக கையெழுத்தும் வாங்கிக்கொள்ளப்பட்டது /// வெறுமனே இறை நிராகரிப்பாளர் என்று அறிவிக்கப்பட்டாரா? ”உன்னுடைய எந்த விளக்கமும் தேவையில்லை. மன்னிப்பு கேட்பதைத்தவிர வேறு எந்த வார்த்தையும் உன் வாயிலிருந்து வெளிவரக் கூடாது” என்று குடும்பத்தாரால் மிரட்டப்படவில்லையா? வேறு வழியில்லாமல் சரி என்று சம்மதித்து மன்னிப்பைக் கேட்கவந்தால் அதையும் கூட கேட்கவிடாமல் தாக்குதல் தொடுக்கப்படவில்லையா? பொய்யாக என்றாலும் குற்றம் சாட்டப்பட்டவரிடம் எந்த விசாரணையும் செய்யாமல் ஏற்கனவே எழுதி கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் கையெழுத்து வாங்கப்படவில்லையா? இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து ’அறிவிக்கப்பட்டார்’ என்ற ஒற்றைச் சொல்லில் கடந்து சென்றது ஏன்? அல்லது எந்த அயோக்கியர்களைக் காப்பாற்ற?

 

தோழர் துராப்ஷா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு குறிப்பிட்ட கட்டுரையை முகநூலில் அவர் பகிர்ந்தது காரணமல்ல, அரசியல் ரீதியாக அவர் செயல்பட்டதின் எதிர்விளைவு தான் என்பதை தெளிவாகவே நிருவியிருக்கிறேன். கேள்விகள் எழுப்பப்பட்டால் இன்னும் விரிவாக நிரூபிக்க காத்திருக்கிறேன். ஆனால் இந்த அபிமானிகளோ காழ்ப்புணர்வு எனும் ஒற்றைச் சொல்லில் கடந்து செல்கிறார்கள். முகநூலில் பகிர்ந்தது தான் காரணம் என்றால், இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் அறியப்பட்டபோதே ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இன்றும் கடையநல்லூரில் எத்தனையோ இளைஞர்கள் நாத்திக கருத்துகளை பரப்பி வருகிறார்கள். இஸ்லாத்துக்கு எதிரான சிந்தனைகளை பேசிவருகிறார்கள். ஏன் மேடைகளில் கூட முழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லையே. இவ்வாறிருக்க தோழர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்ட மர்மம் என்ன? அதுவும் முதலில் அவரது கடையில் வாங்காதீர்கள் என்று பள்ளிவாசலில் அறிவிப்பு அது செல்லுபடியாகவில்லை என்றதும் கடையில் குழப்பம் செய்து காவல்துறையில் முறையீடு செய்யப்பட்டது. அதிலும் தோழரின் விளக்கங்களுக்கு பதில் கூற முடியவில்லை என்றதும் ஜமாத்தார்கள் உலாமாக்கள் மூலம் நடவடிக்கை. இது ஏன்? பதில் கூற முன்வருவார்களா அபிமானிகள்?

 

அடுத்து போட்டி மனப்பான்மையால் வெளிப்பட்ட அரசியல் குறித்தும் எழுதப்பட்டிருந்தது அந்தக் கட்டுரையில் இதை முட்டாள்தனமானது என்று கூறியிருக்கிறார்கள் அபிமானிகள். கூடவே, புத்திசாலித்தனமான கேள்வி ஒன்றையும் எழுப்பியிருக்கிறார்கள். \\\ இப்போது துராப்ஷா முஸ்லிமாகிவிட்டார். இந்த ஜமாஅத்தினர்கள் இதனை எதிர்க்க போகின்றார்களா?  /// இந்தக் கேள்விக்கும், போட்டி அரசியலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?அந்த ஊரில் போட்டி அரசியல் தான் நிலவில் இருக்கிறது என்பதற்கு கட்டுரையிலேயே எடுத்துக்காட்டுகள் கூறப்பட்டிருக்கிறது மறுக்க முடியுமா அபிமானிகளால்? நடந்தது போட்டி அரசியல், அதனை அறுவடையும் செய்து கொண்டார்கள். இப்போது சேர்ந்ததை மறுப்பதால் யாருக்கு லாபம். லாபம் இருக்கிறது என்றால் அதையும் செய்வார்கள். பதில் எழுத அபிமானிகள் தயார் என்றால் முன்னிலும் அதிகமாக விளக்க நானும் ஆயத்தமாக இருக்கிறேன்.

 

அதுசரி பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது எழுதாமல் இப்போது ஏன் எழுதுகிறோம். இதற்கு ஏற்கனவே பதில் எழுதப்பட்டிருக்கிறது. தோழரை, தோழரின் குடும்பத்தினரை, தோழரின் உடமைகளை காக்கும் கடமை எங்களுக்கு இருந்தது. அப்போதே எழுதியிருந்தால் கொலைக்கும் அஞ்சியிருக்க மாட்டார்களே இந்த பயங்கரவாதிகள்?

 

இந்த இடத்தில் இன்னொரு விளக்கமளிக்க வேண்டியதும் தேவையாகிறது. அபிமானிகளின் பதிவு வெளிவந்த நேரத்தில் அவர்களுக்கு நான் பதிலளித்திருந்தேன். ஆனால் அது வெளியாகவே இல்லை. வினவில் வெளிவந்த அந்த பின்னூட்டம் இங்கே. வழக்கமாக இது போன்ற பின்னூட்டங்களை நான் சான்றுகளுக்காக படமெடுத்து வைப்பது வழக்கம். அன்றிருந்த சூழலில் இதை படமெடுக்க மறந்துவிட்டேன். அப்படி படமெடுத்து வைத்திருந்தால் இன்று இவர்களின் கள்ளத்தனங்களை அம்பலப்படுத்தியிருக்கலாம். தவறிவிட்டேன். இதையே சாக்காக வைத்து அதில் எழுப்பபட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவி விட்டார்கள் இந்த அபிமானிகள். அவர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள் \\\ எவ்வளவு குரூர மாணவனிடம் வேண்டும் என்றாலும் மோதலாம். ஆனால் பொய்யர்களிடம் மோதி வென்றோ அல்லது தோற்றோ ஆகப்போவது ஒன்றும் இல்லை. ஆகவே, விடு ஜூட்……. /// இவர்களின் சான்றிதழ்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பதாலும், இவர்களிடம் பதில் வாங்க வேண்டும் எனும் ஆவலிருப்பதாலும் ஒரு வாதத்திற்காக நான் அவர்கள் தளத்தில் பின்னூட்டமிடவில்லை என்றே கொள்வோம், கேள்விகளுக்கு பதில் கூறத் தயாரா இந்த அபிமானிகள்? (அந்தப் பதிவை எழுதிய அபிமானிகளுள் ஒருவர் இதுபோன்றே முன்பு என்னுடைய பின்னூட்டத்தை தடுத்துவைத்து தகிடுதத்தங்கள் புரிந்தார். அது இப்போது பேசப்படும் விசயங்களுக்கு வெளியிலுள்ள விசயம் என்றாலும் ஒரு தகவலுக்காக அந்த பதிவை இங்கே சொடுக்கி படித்துப் பார்த்துக் கொள்ளலாம்)  துணிவு உள்ளவர்கள் பதில் கூறட்டும். பார்க்கலாம் அவர்களின் நேர்மையை.

 

அடுத்து ஷேக்தாவூத் எனும் ஜோக் தாவூத் என்பவர் தொடர்பில்லாத வேறொரு விடயத்தோடு முடிந்திருக்கிறார். நாங்கள் கூறிய புகார் பொய்யானதல்ல என்பதற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட இஸ்லாமியரை உள்ளே தள்ளியிருக்கிறோம் என்பதே சான்று. இணையத்தில் அவதூற்றை கழிந்தவர்கள் அது உண்மை என நம்பினால் எங்கள் தோழர் மீது காவல் துறையில் புகார் அளிக்கட்டும். நாங்கள் சந்திக்கத் தயார். திராணி இருக்கிறதா இவர்களுக்கு? நேரடி நேரடி என்று பீலா விடும் எவரும் எழுத்து விவாதத்துக்கு வாருங்கள் என்று சவால் விட்டு கூறியிருக்கிறேன். அறிவு நாணயம் இருப்பவர்கள் எதிர் கொள்ளலாம்.

 

அடுத்து ஜிட்டிஜன் என்பவர் ஜோக் என்றும் பயங்கரவாதம் என்று ஏதேதோ எழுதியிருக்கிறார். அதை படித்து பொருள் புரிந்து கூறுபவர்களுக்கு பரிசு வழங்கலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு குழப்பம். எதை ஜோக் என்கிறார்? எப்படி பயங்கரவாதம் என்கிறார்? அவருக்கே புரிந்திருந்தால் மகிழ்ச்சி. அவர் ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் ஏன் போலீஸுக்கு போகவில்லை என்று. அவர் முகத்தில் படியும் கரியை எப்படி துடைத்துக் கொள்வார் என்று விளக்கினால், போலீசுக்கு போகக்கூடாது என்று குடும்பத்தார்கள் மிரட்டியதால் தான் போகவில்லை என்பதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயார். இது மட்டுமல்லாது, சங்கர்லால் போல துப்பறிந்து ஒரு விசயத்தையும் எழுதியிருக்கிறார். நடந்த நிகழ்வு அன்றே எனக்கு தெரியும் என்பதும், வினவு கட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை தான் ’பத்திக்கிச்சு’ என்று எழுதியிருப்பதும் எப்படி எந்த விதத்தில் முரண்படுகிறது? இது எப்படி பொய்யாகும் விளக்க முடியுமா? உளறல் என்பதற்கான மெய்ப்பொருள் வேண்டும் என யாராவது தேடினால் இவரின் இந்த கண்டுபிடிப்பை பரிந்துரை செய்யலாம்.

 

அடுத்து அப்துல்லா என்பவர், அமைதியான ஊரை, கண்ணியமான மக்களின் கூட்டமைப்பை என்று உருகியிருக்கிறார். ஆனால் எது அமைதி? கண்ணியம் எங்கிருக்கிறது என்பதை மட்டும் பரிசீலனை செய்ய மறுக்கிறார். ஒரு கருத்தை ஆதரிப்பதும் ஒதுங்குவதும் அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதில் எதை பொய் என்று கருதுகிறார் என்பதை அவர் வெளிப்படுத்தலாமே. அப்போதல்லவா தெரியும் எது பொய் எது உண்மை என்று. ஒதுங்கி ஓடினால் உண்மைகளை உணர முடியாது.

 

அபிமானிகளின் இந்த பதிவில் தங்கள் கருத்துகளை பின்னூட்டிய கார்பன் கூட்டாளி, ஷேக்தாவூத், முகம்மத் ஆஷிக், சிராஜ், சுவனப் பிரியன், அப்துல்லா ஆகியோர் என்னுடைய இந்த எதிர்வினை குறித்த பதில்களை தந்தாக வேண்டும். அப்படி அவர்கள் பதில் தராத பட்சத்தில் எந்த சிந்தனையுமற்ற மூடநம்பிக்கை மதவாதிகள் என்றே கருதப்படுவார்கள்.  ஏனென்றால், அநீதி என்று தெரிந்து கொண்டே அதை ஆதரிப்பவன் மூடநம்பிக்கை கொண்டவனாகத்தான் இருக்க முடியும் அல்லவா? எனக்கு ஹைதர் அலி என்றொரு நண்பர் உண்டு, அவர் என் கருத்துகளின் நண்பர் இல்லை என்றபோதிலும் எதிரி இல்லை என்பதையும் உணர்த்தியவர். இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நான் விரும்புபவர்களில் அவரும் ஒருவர். ஆனால் இதுவரை அவர் மௌனமாகவே இருந்து வருகிறார். இதன் மூலம் அவர் தன்னுடைய கருத்தை பதிய வேண்டும் எனும் வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

 

அடுத்ததாக நாம் பார்க்கவிருக்கும் தளம் கடையநல்லூர்.ஆர்க். கடையநல்லூர் தளங்களிலேயே அதிகம் கவனம் பெறும் தளம். என்னுடைய மாற்றுக் கருத்துகளையும் ஓர் எல்லை வரை அனுமதித்தார்கள் எனும் வகையில் குறிப்பிடத்தக்கதாய் இருந்தாலும், இந்த விசயத்தில் தொடக்கத்திலிருந்து அவர்கள் நடந்து கொண்ட விதம் அப்பட்டமாக குறுகிய மதவெறியை கொண்டதாக இருக்கிறது. இது குறித்து அவர்கள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் நடந்த அநீதியை மறைத்து அதை மதவாத நோக்கில் சரிக்கட்டும் விதமாகவே அமைந்திருந்தது. மட்டுமல்லாது கடையநல்லூரைச் சேர்ந்த பலர் மதக் கொழுப்பு வழிந்தோட இட்ட பின்னூட்டங்களையெல்லாம் பல நாட்களாக வைத்திருந்துவிட்டு வினவில் அது குறித்த கட்டுரை வெளிவந்த பின்னர் கள்ளத்தனமாக அந்த பின்னூட்டங்களை நீக்கி விட்டார்கள். இது அவர்களின் நேர்மையற்ற போக்கிற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு. இதன் பின்னரும் கூட என்னைப்பற்றிய செய்திகளை கிசுகிசுக்களாக வெளியிடுவதில் முனைப்பு காட்டினார்கள். அவற்றில் ஒன்றிரண்டிற்கு நான் பதில் எழுதியதும், நான் அவ்வாறு பதில் எழுதக் கூடாது என்பதற்காகவே தங்கள் தளத்தில் முகநூல் கணக்கில் பின்னூட்டமிடும் வசதியையே நீக்கிவிட்டார்கள். இது அவர்களின் காழ்ப்புணர்வை வெளிப்படுவதாகாதா? அது மட்டுமன்றி என்னை குறிவைத்து எழுதப்பட்ட பதிவுகளுக்கு நான் மறுப்பு எழுதி அனுப்பியபோது அதை வெளியிட மறுக்கிறார்கள், இது இந்திய அவதூறு சட்டப் பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத்தண்டனை பெறத்தக்க குற்றம் எனும் அறிதல் கூட இல்லாமல். இவைகளெல்லாம் நேர்மைக்கும் இவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை வெளிக்காட்டும் கருவிகள்.

 

கடைசியாக ஒரு பெரியவர். கவிஞர், கவியரங்குகளிலும், பொது மேடைகளிலும் தன் கவிதைகளை வாசித்தவர். கடல்கடந்த எழுத்தாளுமைகளுடன் தொடர்பு கொண்டிருப்பவர். ஆனால் அவருடைய எழுத்தின் ஆளுமையை தெரிந்து கொள்ள இதை படித்துப் பாருங்கள். \\\ USING YOUR RIGHTS YOU HAVE NO RIGHT TO SAY YOUR FATHER AND MOTHER AS BASTARD,. SIMILARLY YOU HAVE NO RIGHT TO EXPRESS ABUSES AGAINST A RELIGION.IF YOU TAKE THE RIGHTS IN YOUR HAND I CAN CALL YOUR WIFE AND MOTHER AS PROSTITUTE. IF I SAY THIS YOUR BLOOD WILL BE BOILING. ISNT ? OUR RELIGION ISLAM IS MORE THAN OUR SOUL, MOTHER AND WIFE. IF YOU ABUSE OUR BLOOD WILL BOIL. IT IS QUIET NATURE. YOU CAN NOT SAY IT AS BRUTAL AND BARBARISM./// இது கடையநல்லூர் பிரச்சனை குறித்து கூகுள் பிளஸில் அவர் எழுதியது. இவர் வேறு யாருமில்லை. இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதமே என்று என்னுடன் விவாதிக்க வந்து விட்டு முடியாமல் பாதியிலேயே ஓடிப் போனவர். ஐயா ரத்தம் கொதிக்கும் அளவுக்கு என்ன எழுதப்பட்டிருந்தது என்று பலமுறை கேட்டாயிற்று. பதில் கூறுவதற்கு நாதியில்லை. ஆனால் இவர்கள் ரத்தம் மட்டும் கொதித்துக் கொண்டே இருக்குமாம். போங்கையா நீங்களும் உங்கள் ரத்தக் கொதிப்பும். சீக்கிரமாக மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். இல்லையென்றால் உங்கள் ஆண்டவன் உங்களுக்கு எழுதிய தேதி சீக்கிரமே வந்துவிடப் போகிறது.

 

ஒன்றை கவனிக்கலாம். வெட்டணும், கொல்லணும், புண் பட்டு விட்டது, கருத்துரிமையின் எல்லை  என்றெல்லாம் கதை பேசியவர்கள் வாருங்கள் அது குறித்து பேசுவோம் என்றதும் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். வந்த சிலரும் கூட பேசவேண்டியதைப் பேசாமல் காணாமல் போய் விடுகிறார்கள். ஆனால் அவர்களின் கருத்தை மட்டும் பத்திரமாக பாதுகாத்துக் கொள்வார்கள். என்றால் அதன் பொருள் என்ன? தாங்கள் மத வெறி பிடித்தவர்கள் என்பதையும், கடையநல்லூரில் நடந்தது காட்டுமிராண்டித்தனமானது என்பதையும் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள் என்பது தான். ஆனால் இது ஆவணமாக பாதுகாக்கப்படப் போகிறது. பல ஆண்டுகள் கழித்து இதைப் படிக்கும் யாரும் உங்கள் மதவெறியின் மீதும் நேர்மையின்மையின் மீதும் காரி உமிழ்வார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடலாகாது.

 

பின் குறிப்பு: இந்தப்பதிவு இத்துடம் முடிவடைவதைப் போன்ற தோற்றம் வந்திருக்கிறது என்றாலும் முடிந்துவிடவில்லை. இதில் இன்னும் பல விசயங்கள் பேசப்பட வேண்டியதிருக்கிறது என்பதால் தொடரும்.

கடிதம் மூலம் தலாக்! ஆணாதிக்கத்தின் வக்கிரம்!!

11 மார்ச்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த மணமேல்குடி பாசித் மரைக்காயர் என்பவர்  பெண்களிடம் தவறாக நடந்ததையும்; மனைவி மற்றும் அவருடைய பெண் குழந்தையும் அனாதையாக விட்டு விட்டு, மற்றொருucmd ஏழைப் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்ததையும்: ஆணாதிக்க திமிருடன் “இஸ்லாமிய முறைப்படி சரி” என்று கூறி ஜமாத்தில் தனக்கு சாதகமாக தீர்ப்பும் பெற்றதையும் வினவின் வாசகர்கள் தழிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித்மரைக்காயர் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை மூலம் அறிந்திருப்பீர்கள்.

இந்த இஸ்லாமிய தீர்ப்பால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஏழை குடும்பத்தினர் இப்பகுதியில் செயல்படும் புரட்சிகர அமைப்புகளின் தோழர்களிடம் புகார் செய்யவே தோழர்களுடைய உதவியால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதால், பாசித் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது பிணையில் வெளியில் உள்ளார். இவ் விசயத்தில் இஸ்லாமியர்கள்  பாசித்தை விமர்சித்தாலும், இஸஃலாமிய கொள்கையை தூக்கி பிடித்தனர். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினர் பாசித் திருமணம் செய்ததால் அவரை அமைப்பை விட்டு நீக்கிவிட்டோம் என்றும் பிறகு பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாகவும்” கதை அளந்தனர்.

ஆனால் பாசித் மரைக்காயர் சிறையில் அடைக்கப்பட்ட போது தவ்ஹித் ஜமாத்துதான் அவருக்கு ஆதரவாக அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவந்தனர். இன்று ஒருபடி மேலே சென்று முதல் மனைவி மற்றும் குடும்பத்தினரை நேரிலும், போனிலும் கிரிமினல் வழக்கை வாபஸ் பெறக் கோரியும், சிவில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் மிரட்டுகிறார்கள்.

“நீங்கள் காபிர்களின் (தோழர்களின்) பேச்சை கேட்டு போலிசுக்கு சென்றதால் உங்களுக்கு பாசித் எந்த பணமும் தரவில்லை. மேலும் அவர்கள் சொல்வதை கேட்டு சிவில் வழக்கு தாக்கல் செய்தால் உங்கள் பணமும் இருக்கின்ற ஒரே வீடும் வழக்கு செலவுக்காக காலியாகிவிடும்.” என்று மிரட்டி பார்த்துள்ளனர்.

ஆனால் இந்த மிரட்டல் பேச்சுக்கு அடிபணியாத அப்பெண்“எனக்கு இஸ்லாமியர்களைவிட தோழர்கள் மீதுதான் நம்பிக்கை அதிகம் ஏற்பட்டுள்ளது; என் வாழ்க்கை பாசித்தால் நாசமாய் போய்விட்டது; இனி எந்த இஸ்லாமிய பெண்க்கும் இந்த நிலைமை வரக்கூடாது”. என பதில் கூறியுள்ளார்.

இதனால் இந்த இஸ்லாமிய காவலர்கள் (பாசித்தின் தவ்ஹீத் ஜமாத்வாதி கூட்டாளிகள்) தங்களது இஸ்லாமிய சட்டபுலமையை வெளிபடுத்தும் விதமாக அந்த அப்பாவி பெண்ணுக்கு பதிவு அஞ்சல் (Register Post) மூலம் விவாகாரத்து அனுப்பியுள்ளனர்.

இஸ்லாம் பெண்ணுக்கு உரிமைகளை வாரி வழங்கி இருப்பதாக கூறுவர்கள் கடிதம் மூலம் விவாகாரத்து செய்து இருப்பதற்கு நேர்மையாக பதில் கூறவேண்டும்.

1. இஸ்லாமிய மதம் பெண்ணுக்கு சுதந்திரம் வழங்கி இருப்பதாக கூறுகிறிர்களே….பெண்ணை போகப் பொருளாக பயன்படுத்திவிட்டு நினைத்தால் விவகாரத்து செய்யும் ஆணின் இந்த வக்கிர மனம் ஆணாதிக்கத்தின் உச்சகட்டம் இல்லையா?

2. கடிதம், தொலைபேசி மற்றும் வேரொறு சாட்சியும் இல்லாமல் விவாகாரத்து செய்யும் இந்த நடைமுறைகள் இஸ்லாத்தை தவிர, வேறெந்த மதத்திலும் இந்த கொடுமை இல்லையே… எங்கே இருக்கிறது இஸ்லாத்தில் பெண்ணுரிமை? பெண்ணுரிமை என்பதை “மைக்ரோஸ்கோப்” வைத்து கண்டுபிடித்து இஸ்லாமிய அறிஞர்கள் அறியத்தர வேண்டுகிறோம்.

3. முத்தலாக்கையும் ஒரே தடவையில் கூறக்கூடாது என்று வாய்கிழிய பேசும் தவ்ஹீத் ஜமாத்தினர், தன்னுடைய உறுப்பினர்க்கு காட்டியுள்ள வழி முத்தலாக்கையும் ஒரே தடவையில் அதுவும் பதிவு அஞ்சலில் அனுப்பும் வழியைத்தான். எங்கள் அமைப்பிலுள்ளவர்கள்தான் அக்மார்க் இஸ்லாமியர்கள் என்று பிதற்றுகிறீர்களே. இதுதான் நீங்கள் கற்றுக்கொடுத்துள்ள தவ்ஹீதுவாதியின் லட்சணமோ?

4. கோபத்தில் கூட ஒரு கணவன் “தலாக், தலாக், தலாக்” என சொல்லிவிட்டால் அந்த தலாக் செல்லும் என்றும், கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் அப் பெண்ணை வேறொருவர்க்கு திருமணம் செய்து, பின்பு விவகாரத்து பெற்று மீண்டும் பழைய கணவர்க்கு புதிதாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுகிறீர்களே. இதுதான் எளிய மார்க்கம் இஸ்லாமா?

5. தவ்ஹித் ஜாமத்தை விட்டு பாசித்தை நீக்கிவிட்டதாக கூறினீர்கள்.. ஆனால் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டத்திற்கும், பிரசாரத்திற்கும், ஊரில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும் பாசித்தான் முக்கிய புள்ளி. தலை இல்லாம வால் ஆடமுடியுமா? ஆணாதிக்கவாதிகள் இல்லாமல் இஸ்லாமோ அல்லது தவ்ஹித் ஜமாத்தோ நிலைத்து இருக்கமுடியுமா?

6. கந்துரி விழாக்களை (தர்கா நிகழ்ச்சிகள்) தடை செய்ய கூறும் தவ்ஹித் ஜாமத், பாசித் தனது இரண்டாவது மனைவியை அருகில் உள்ள கோட்டைபட்டினம் மகான் ராவுத்தர் அப்பா தர்கா கந்துரி விழாவிற்கு அழைத்து டூர் சென்றரே அதற்கு எந்த ஹதிஸ்லேயாவது விதிவிலக்கு உள்ளதா? (முதல் மனைவி பாசித்திற்கு பிடிக்காமல் போனதற்கு அவர் சொன்ன முக்கிய காரணம் மனைவி தர்காவிற்கு செல்கிறார் என்பதுதான்)

சரி விஷயத்திற்கு வருவோம் கடிதம், தொலைபேசி மூலம் விவகாரத்து செய்தால் செல்லுமா? செல்லும் என்றால் இஸ்லாமிய மதம் பெண்ணுக்கு என்னதான் உரிமைகள் வழங்கி இருந்தாலும் அது தலையில்லா முண்டத்திற்கு சமம் தானே? பெண்களை போகப்பொருளாக பயன்படுத்த உரிமை வழங்கி இருக்கும் மதம் தான் இஸ்லாமா? அதன் விளைவுதான் பாசித் போன்றவர்களா?.ஆனாலும் உள்ளூர் ஜமாத் அவர் அனுப்பிய தலாக் கடிதத்தை புறக்கணித்ததுடன் கண்டித்தும் உள்ளனர்.

பெண்கள் தங்களுக்கான விடுதலை மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வை இந்த ஆணாதிக்கவாதிகளிடம் கிஞ்சித்தும் தேட முடியாது. மாறாக ஆணாதிக்கவாதிகளின் தோலை உரித்து தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட சமூக மாற்றத்திற்காக போரடும் புரட்சிகர அமைப்புகளில் இருந்துதான் பெறமுடியும். இதனையே கடிதம் மூலம் விவாகாரத்து செய்து இஸ்லாமிய ஆணாதிக்கவாதிகள் நமக்கு திமிருடன் அறிவித்து இருக்கிறார்கள்.

இனி இஸ்லாமிய பெண்கள் அந்த ஆணாதிக்கவாதிகளின் நடைமுறைகளை புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் மட்டுமே இஸ்லாமிய ஆணாதிக்கவாதிகளின் கொட்டத்தை ஒடுக்கமுடியும்.

 _________

– ஜமால்

_________

முதல் பதிவு: வினவு