தொகுப்பு | செப்ரெம்பர், 2011

எங்கேயும் எப்போதும்: ஆபத்தான அழுகை!

26 செப்

 

போராடுவதற்கு போக்கற்று அரற்றுவதையே விதியாகக் கொண்ட நாடு இது. அழுவதற்கென்றே கதைகளை உருவாக்கிய மண்ணிது. நல்லதங்காளோ, அரிச்சந்திரனது மயான காண்டமோ, பாசமலரோ, பாவமன்னிப்போ எல்லாம் கிராமத்து திடலிலோ இல்லை மண் தரையுள்ள டூரிங் டாக்கிசிலோ முடிந்து போன விசயங்கள் என்று நினைத்திருந்தால் உங்கள் முடிவுகளை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்! எஸ்க்கலேட்டர் வசதி கொண்ட மல்டிபிளக்ஸ் அரங்குகளில் கூட அந்த கண்ணீர்க் கதைகள் தொடருகின்றன என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா?

சிறுவயதில் கேட்ட ஆகாசவாணியின் பிரச்சாரக் கதைகளும், பிலிம்ஸ் டிவிஷனின் 20 அம்சத்திட்டக் கதைகளும் தரும் ஆயாசத்தை இந்த படமும் தருகிறது. பிலிம்ஸ் டவிஷன் படம் போட்ட பிறகு “யோவ் ஆப்பரேட்டர் படத்த போடுய்யா” என்று வரும் கூச்சல்கள் ஒரு கனவு போல இன்றும் நினைவிருக்கிறது. ஆனால் இரசிகர்களால் ஏகமனதாக புறக்கணிக்கப்பட்ட அதே பிலிம்ஸ் டவிஷன் உணர்ச்சியை இன்றும் ரசிக்கப்படுகிறது என்ற உண்மை கொஞ்சம் அலுப்பாகவும் இருக்கிறது. காலம் மாறினாலும் நம் மக்களது இரசனை இன்னும் மாறவில்லையே?

திரைப்பட விமரிசனம் எழுதும்போது முதலிலேயே, முன்னுரையிலேயே  அதன் சாரத்தை, ஒன்லைனை சொல்லுவது வழக்கமில்லை. சொல்லிவிட்டால் ஆர்வமாக வருபவர்களது வேகம் பட்டென தணிந்து ஸ்க்ரோல் செய்து போய் விடுவார்கள். ஆனாலும் அடக்கமாட்டாமல் இங்கே முதலிலேயே அதை சொல்ல வைத்திருப்பது நம் குற்றமல்ல, படத்தின் குற்றம்.

இந்தப் படத்தில் இரண்டு விசயங்களிருக்கின்றன. ஒன்று கொடூரமான விபத்து, மற்றொன்று இனிமையான காதல். இனிமையான காதலில் இரண்டு காதல் கதைகள் இருக்கின்றன. ஒன்று பி சென்டருக்கான சிறு நகரத்து காதல். மற்றொன்று ஏ சென்டருக்கான ஐ.டி துறை காதல். அதே நேரம் பி சென்டரின் காதல் முற்றிலும் பி சென்டருக்குரியதல்ல. அது ஏ சென்டரை நோக்கி மாறும் விசயங்களுடன் வருகிறது. அதாவது ஏ சென்டருக்கான அழகியல் மதிப்பீடுகளுடன்.

இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து ஒரு உடன்பாட்டுப் பொருளாவது போல இங்கே காதலும், விபத்தும் சேர்ந்து உங்களிடமிருந்து கட்டற்ற கண்ணீரை வரவழைக்கிறது. நேரில் பார்க்கும் விபத்தென்றால் நாம் நிச்சயம் வருந்துவோம் என்றாலும் அதில் நமக்குத் தெரிந்த காதல் ஜோடிகள், அதுவும் அவர்களது காவியமான காதல் கதைகளின் நினைவுகளோடு வருமென்றால் நாம் யாரும் கோராமலேயே கதறி அழுவோம்.

நாளிதழ்களில் மற்றுமொரு செய்தியாக மறையும் ஒரு விபத்து போன்றுதான் இது இருக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு விபத்தை பார்த்து நாம் அழவேண்டுமென்று நினைக்கும் இயக்குநர் அந்த உடனடி விளைவைத் தாண்டி விபத்தின் சமூகப் பரிமாணத்தை அறிந்தவராகவோ, இல்லை அது குறித்து கவலைப்பட்டவராகவோ இந்தக் கதையில் தென்படவில்லை.

ஒரு மாபெரும் வரலாற்று சம்பவத்தையோ இல்லை ஒரு மனதை வலிக்கச் செய்யும் பெரிய விபத்தோ இரண்டையும் ஒரு சில தனிநபர்களது செயலாக மட்டும் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. தலைக்கேற்ற தொப்பியைத்தான் தேட வேண்டுமே ஒழிய தொப்பிக்காக தலையை வெட்டினால் முண்டத்திற்கான சவப்பெட்டிதான் தேவைப்படும், தொப்பி அல்ல. விபத்து குறித்த இந்தப்படத்தில் இத்தகைய விபத்து தெரிந்தே நடந்திருக்கிறது. அது இயக்குநரின் கருத்தால் விளைந்த விபத்து.

____________________________________________________________________________

இந்தத் திரைப்படம் குறித்து விமரிசனம் எழுதியிருக்கும் பதிவர்கள் பலருக்கும் கூட அந்த விபத்து நடந்திருக்கிறது. சாலை விதிகளை மதிப்போம், ஓட்டும் போது செல்பேசியில் பேசாதிருப்போம், மது அருந்தாமல் ஓட்டுவோம், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவோம், ஓட்டுநர்களுக்கு இந்தப் படத்தை விசேடமாக திரையிட்டு காட்ட வேண்டும் என்பதாய் அவை குவிகின்றன. இவையெதுவும் தவறல்ல. ஆனால் உடன் தெரியும் இந்தத் தவறுகளின் பின்னே நிறுவனமயமான தவறுகள் பல அடிப்படையாக இருக்கின்றன. அவையெல்லாம் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டும் தொழிலாளர்களது தவறுகளல்ல.

வாகனத்தை ஓட்டும் அனைவரும் பொதுவில் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறார்கள். அவர்களது எச்சரிக்கையின் அளவை தீர்மானிப்பது பணிச்சூழல், குடும்பச் சூழல் குறித்த பிரச்சினைகள். பேருந்து ஓட்டுநர்களும், லாரி ஓட்டுநர்களும் எச்சரிக்கையாக இருப்பதால்தான் தமிழகத்தில் இலட்சக்கணக்கான வாகனங்கள் இருந்தும் இலட்சக்கணக்கான விபத்துக்கள் நடப்பதில்லை. நடக்கும் ஒரு சிலவற்றுக்கு கண நேர, திட்டமிடாத, எதிர்பாராத செயல்கள் காரணமென்றாலும் ஒரு ஓட்டுநரின் எச்சரிக்கை அளவு ஏன் மீறப்பட்டது என்பது குறித்து நாம் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் இந்தப்படத்தின் விளைவாய் வரும் மொக்கை மனிதாபிமானத்தில் சரணடைந்து உண்மையை தொலைத்துவிடுவோம்.

படத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்லும் ஆம்னி பேருந்தும், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவுப் பேருந்தும் மோதிக் கொள்கின்றன. இவை ஏன் மோதிக்கொண்டன, யார் காரணம் என்பது குறித்து படத்தில் தெளவில்லை என்றாலும் அது தேவையுமில்லை. ஆனால் என்னவெல்லாம் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது குறித்து இந்தத் திரைக்கதை சுட்டியிருக்க வேண்டும். அதை விடுத்து கோரக் காட்சிகளை வைத்து விபத்து குறித்து ஒரு பய உணர்வை மட்டும் இந்தப்படம் ஏற்படுத்துகிறது.

அரசுப் பேருந்துகள் போதுமான பராமரிப்பில் இல்லை. தனியார் பேருந்துகளை ஊக்குவிக்கும் தனியார்மயக் கொள்கை காரணமாக வேண்டுமென்றே திட்டமிட்ட முறையில் அவை நலிந்துப் போக விடப்படுகின்றன. இரவு பத்து மணிக்கு கோயம்பேடு சென்றால் வெளியூர் செல்லும் விரைவுப் பேருந்துகளை நிறுத்துவதற்கே வழியில்லாமல் நேரக் கண்காணிப்பாளரும், ஓட்டுநர்-நடத்துநர்களும் திண்டாடுவதை பார்க்கலாம். அல்ட்ரா டீலக்ஸ், டீலக்ஸ் என்று பெயர்களை தாங்கியிருக்கும் பேருந்துகள் அந்த பெயர்களுக்குரிய வசதிகள் இல்லாமல் இருப்பதும், அது குறித்து கேட்கும் மக்களிடம் நடத்துநர்கள் பேசி அலுத்துப் போவதும் அன்றாடம் நடக்கும் காட்சிகள்.

பேருந்துகளின் வெளிப்புற கன்டிஷன்களே இப்படி இருக்கும் போது அதன் உள்கட்டுமான கன்டிஷன்கள் எப்படி இருக்குமென்று யூகித்துக் கொள்ளலாம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராஜபாட்டை போட்டுக் கொடுக்கும் அரசு ஒரு விரைவுப் பேருந்து நிறுவனத்தை நல்லமுறையில் நடத்துவது முடியாத ஒன்றா என்ன?

அரசால் திட்டமிட்டே உருவாக்கப்படும் இந்தச் சூழலை தனியார் பேருந்து முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வேறு வழியின்றி நடுத்தர வர்க்கமும் இங்கே அதிக கட்டணம் கொடுத்து பயணிக்கிறது. தனியார் பேருந்துகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவது உண்மையென்றாலும் அதன் ஓட்டுநர்கள் கொத்தடிமை போல நடத்தப்படுகிறார்கள். அரசு ஓட்டுநர்களை விட மிகக் குறைந்த சம்பளம். மட்டுமல்ல, நிறுவனத்தின் பெயரை காப்பாற்றும் விதமாக குறிப்பிட்ட நேரத்தில், அதி வேகத்தில் பேருந்துகளை ஓட்டி சென்று இலக்கை அடைய வேண்டிய நிர்ப்பந்தம். அதன் கோரமுகத்தை கே.பி.என் விபத்தில் பார்த்திருக்கிறோம். இப்படி அனைவரும் அறிந்த விசயங்கள் என்றாலும் இந்தப் படம் எதனையும் கோடிட்டுக்கூட காட்டவில்லை. மாறாக படத்தில் இரு பேருந்துகள் ஓடுவதை பயமுறுத்தும் கோணங்களில், காட்சிகளில், இசையில் காட்டுகிறார்கள். கருத்து இல்லாத அந்தக் காட்சிகள் மூலம் விபத்து குறித்த ஒரு காரணமற்ற பயம் மட்டுமே தோன்ற முடியும்.

படத்தில் அரசுப் பேருந்து பஞ்சர் ஆவதும், அதன் ஓட்டுநர் அதிவேகமாக சாலையை விட்டிறங்கி ஓட்டுவதும் வருகிறது. அரசுப் பேருந்து என்றாலே மெதுவாக சென்று ஊரை தாமதமாக அடையும் என்பதுதான் மக்களின் குற்றச்சாட்டு. இங்கே ஊரறிந்த எதார்த்தத்தைக்கூட கதைக்காக சாகடித்திருக்கிறார் இயக்குநர். உண்மையில் பராமரிப்பில்லாத அரசுப் பேருந்து, பணிச்சுமையில் இருக்கும் தனியார் ஓட்டுநர்கள் என்பதைத் தாண்டி இந்த விபத்தில் வேறு எதைக்காட்டினாலும் அது பொருத்தமற்றது. ஆனால் இயக்குநர் அப்படி எதுவும் காட்டவில்லை.

ஃபைனல் டெஸ்டினேஷன் வரிசைப் படங்களில் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் விபத்தும், மரணமும் நடக்கும் என்று மிரட்டுவார்கள். அது பாதுகாப்பாக வாழும் மேற்குல மக்களை வேறு எப்படியும் மிரட்ட முடியாது என்ற எதார்த்தத்தோடு அபத்தமாக சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லா வகை அபாயங்களோடும் வாழும் நமது நாடுகளில் விபத்து என்பது சமூக வகைப்பட்டதாக, நிறுவன ரீதியாக இருக்கிறது. அதை வெறுமனே மொக்கை உபதேசங்களோடு கடந்துவிடலாம் என்பது இயக்குநரது துணிபு.

ஒருவேளை விபத்திற்காக காதல் கதை என்று அமைத்திருந்தால் அப்படி கொஞ்சம் ஏதாவது வந்திருக்கும். இங்கே காதலுக்காக விபத்து என்று போவதால் எதுவும் சொல்லிக்கொள்ளுமளவு வரவில்லை. அதனால்தான் ஆரம்பத்திலேயே விபத்து என்று காட்டியிருந்தாலும், படத்தின் முடிவை ரசிகர்கள் ஓரளவு ஊகிக்க முடியும் என்றிருந்தாலும் அது அவர்களது ரசனையை பாதிக்காது என்று இயக்குநர் நினைத்திருக்கிறார். அதில் அவர் சோடை போகவில்லை என்பதற்கு காரணம் இந்தப்படத்தை தூக்கி நிற்பது விபத்து போலத் தோன்றினாலும் அது நிற்பது உண்மையில் காதல் குறித்த சித்திரத்தில்தான். காதல் மயக்கத்தில் விபத்தின் வேர் மறைந்து போவது பார்வையாளர்கள் குறித்து இயக்குநருக்குள்ள மலிவான நம்பிக்கையைக் காட்டுகிறது.

அதிலும் ஒரு பேருந்தில் ஒரு இளம் ஜோடி, சமீபத்தில் திருமணமான ஜோடி வருகிறது. அதில் மணமகன் கொடூரமாக கொல்லப்படும் காட்சியை இடையில் காட்டி விட்டு பின்னர் பேருந்தில் அவர் மணமகளைக் கொஞ்சும் காட்சி ஒன்றே இயக்குநரது தரத்தை காட்டுகிறது. இது சென்டரல் ஸ்டேஷனில் கையை கீறி ரத்தத்தை வரவழைத்து உதவி கேட்கும் அதிரடி பிச்சைக்காரர்களின் ரசனைக்கொப்பானதாக இருக்கிறது. ஆனால் இந்த மலிவான உத்தியைக்கூட ஆழமான படிமமாக உணரும் நமது பதிவர்கள் இருக்கும் போது இயக்குநர் சரவணனை மட்டும் நாம் குற்றம் சொல்ல முடியுமா என்ன?

காதலையும், விபத்தையும் ‘பொருத்தமாக’ இணைத்து வெற்றியடைந்த படம் டைட்டானிக். டைட்டானிக்கில் கூட இறுதிக்காட்சிகளில் சாதாரண மக்களெல்லாம் உயிர் காக்கும் படகுகளில் ஏற முடியாமல் அலறும் காட்சிகள் ஒரு பின்னணியாக மட்டும் வரும். படத்தை பார்க்கும் இரசிக மனமோ காதலர்கள் எப்படியாவது பிழைக்க மாட்டார்களா என்று ஏங்கும். இங்கும் அதே கதைதான். அஞ்சலி – ஜெய், அனன்யா – சரவ் ஜோடிகளின் காதல் காட்சிகளில் மனதைப் பறிகொடுக்கும் இரசிகர்கள் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் என்ன ஆனார்கள், அவர்களது குடும்பத்தினர் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். இதற்கு வேண்டுமானால் இயக்குநர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

நாமெல்லாம் என்றாவது ஒரு நாள் பயணம் போகிறோம். ஆனால் ஓட்டுநர்களுக்கு அது அன்றாட பிழைப்பாக இருக்கிறது என்ற முறையில் கூட அவர்கள் நினைக்கப்படவில்லை. ஒரு வேளை அவர்கள்தான் இந்தப் படத்தின் வில்லன்கள் என்று இயக்குநர் கருதியிருப்பார் போலும். ஒருக்கால் இந்த இயக்குநர் நாளையே கூடங்குளம் அணுமின்நிலையத்தில் விபத்தையும் காதலையும் பிசைந்து ஒரு கதை செய்தால் வில்லனாக யாரை காட்டுவார்? ஒரு சுவிட்ச்சை போட மறந்த தொழிலாளிதான் அந்த வில்லன் என்பதில் மாற்றுக் கருத்து உண்டா என்ன?

_____________________________________________________________________________________

படத்தில் வரும் காதல் காட்சிகள் குறித்து சொல்வதற்கு நிறைய இருக்கிறது.

காதலன் ஜெய்யை அதிரடியாக மிரட்டி காதலிக்கும் அஞ்சலியை எடுத்துக் கொள்வோம். இதையெல்லாம்  “ஓடிப்போயிடலாமா” என பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரேயே மணிரத்தினம் எடுத்துவிட்டாலும், இன்றும் அதை இரசிப்பதற்கு காரணம் என்ன?

ஆணுக்கு அடங்கியவள் பெண், அவனுக்குரிய பணிவிடைகள் செய்வது பெண் என்றாலும் அந்தக்கால ஆனந்த விகடனில் கணவன் துணி துவைப்பதும், சமையல் செய்வதும், மனைவி பூரிக்கட்டையால் கணவனை தாக்குவதான ஜோக்குகள் வரும். மனைவியின் பணிவிடைகளில் சோம்பிக் கிடக்கும் கணவன்கள் அதைப் படித்து சிரிப்பார்கள். அதுதான் இது. அரதப்பழைய விகடன் முதல் அதி நவீன தமிழ் டவிட்டர்- பஸ்ஸர்களின் டைம்லன் வரை இதுதான் ஓடுகிறது. ஒரு பொதுவான சமூக யதார்த்தத்தில் ஆண்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான் என்றாலும் கதையில் அதற்கு நேரெதிராக வரும் போது தீர்மானிக்கும் அந்த ஆண் ரசிகர்கள் வாய்விட்டு சிரிக்கிறார்கள். இது சிரிப்பதற்குரிய ஒன்றாக இருப்பதினாலேயே நிஜத்தில் வாய்ப்பில்லாததாக ஒன்றாக இருக்கிறது. நிஜத்தை காட்டியிருக்கும் பட்சத்தில் அங்கே சிரிப்பதற்கு ஏதுமில்லை. இந்த முரண் உங்களுக்குப் புரிகிறதா?

மற்றுமொரு சான்றைப் பார்ப்போம். படத்தில் இரண்டு ஜோடிகளின் ‘கற்பை’யும், ஒழுக்கத்தையும் அழுத்திக் காட்டுவதற்கு சில காட்சிகள் வருகின்றன. நாயகன் ஜெய், நாயகி அணியும் ஆடையின் வண்ணத்தைப் பார்த்து அதே கலரில் தினமும் சட்டை அணிகிறார். அவரோடு பணி புரியும் தொழிலாளி இரண்டு கலர் சட்டைகளை மாற்றி மாற்றி அணிகிறார். காரணம் கேட்டால் அவர் இரண்டு தெருவில் இரண்டு பிகர்களை சைட் அடிக்கிறார்.

ஐ.டி துறை நாயகனான சரவ், பொறியியல் முடித்திருக்கும் அனன்யாவை விரும்புகிறார். இவர்கள் இருவரும் கம்பெனி பேருந்தில் பயணிக்கும் போது ஒரு பெண் சரவை இரண்டு ஆண்டுகள் துரத்திக் காதலித்ததாகவும், அவர் ஏற்கவில்லை எனவும், பிறகு ஒரு அப்பாவியை திருமணம் செய்திருப்பதாக தாலியை காட்டுகிறார். பேருந்தின் பின் சீட்டில் இருக்கும் ஒரு இளைஞன்தான் அந்த அப்பாவி என்று சொல்கிறார்.

நகரப் பேருந்தில் அனன்யாவின் அருகில் பயணிக்கும் ஒரு நகரத்துப் பெண் இரண்டு காதலர்களோடு பேசுகிறாள். மற்றவர் லைனில் வந்தால் அது அப்பா என்று இருவரிடமும் மாறி மாறி பேசுகிறாள். இந்த மூன்று காட்சிகளுக்கும் திரையரங்கில் கைதட்டல் தூள் கிளப்புகிறது. காதல் ஜோடிகளின் ஒழுக்கத்தையும், ‘கற்பையும்’ ஜாக்கி வைத்து தூக்குவதற்காக இந்தக்காட்சிகள் திட்டமிட்ட முறையில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

தங்களையும் அந்த நாயகர்கள் போல கருதிக் கொள்ளும் இரசிகர்கள் இந்த காட்சிகளுக்கு சிரிப்பதன் காரணம், தன்னைத் தவிர மற்றவர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்று நினைப்பதால். ஆனால் எல்லோரும் தானென்று ஆனால் யார்தான் அந்த மற்றவர்கள்? ஆனால் நடப்பில் மற்றவர்கள்தான் பெரும்பான்மை எனும் போது அது இங்கே விமரிசனமாக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி விமரிசனத்திற்குள்ளாக்கப் பட்டிருக்க வேண்டுமென்றால் அது படத்தின் மையமான பாத்திரங்களோடு இருக்க வேண்டும். ஆனால் அது துணைப் பாத்திரங்களோடு கேலிக்குரியதாக ஆக்கப்படும் போது சுயவிமரிசனம் மறுக்கப்பட்டு ஆழ்மனதில் புதையுண்டிருக்கும் கீழ்மைகள் வெறும் கேலிப்பொருளாய் பார்க்ப்படுகின்றன. இந்த முரணை அறிந்து கொள்ள முடிகிறதா?

படத்தில் அஞ்சலி அநியாயத்திற்கு பிரச்சாரம் செய்கிறார். சொல்லப் போனால் அஞ்சலியின் பாத்திரச் சித்தரிப்பு அண்ணா ஹாசாரே டைப் போலித்தனத்திற்கு பொருத்தமானதாகவும் இருக்கிறது. இறந்த பிறகு உடல் பாகங்களை தானம் செய்ய வேண்டும் என்று கையெழுத்து வாங்கும் அஞ்சலி இறுதிக் காட்சியில் அழுது கொண்டே காதலனது பாகங்களை தானமாக எடுக்க வேண்டுமென்று அரசு மருத்தவரிடம் கூறுவார். இப்படி தானமாகப் பெறப்படும் பாகங்கள் எவையும் ஏழைகளுக்காக பொருத்தப்படுவதில்லை. அவை அப்பல்லோவுக்கு சென்று பணக்காரர்களுக்கோ, வெளிநாட்டவருக்கோதான் பொருத்தப்படுகின்றன. இதற்காகவே உடல் தானம் குறித்த விழிப்புணர்வு வளரவேண்டும் என்று அப்பல்லோ முதலாளி ரெட்டி பேசியது குறித்து வினவில் முன்னர் எழுதிய பதிவு நினைவுக்கு வருகிறது.

இருக்கட்டும், இத்தகைய மனிதாபிமானியான அஞ்சலி தனது காதலனை வம்படியாக கூட்டிச் சென்று பணக்காரர்களது கடையில் 6000 ரூபாய்க்கு துணி எடுப்பதும், மேட்டுக்குடியினர் செல்லும் காபிஷாப்புகளுக்கு சென்று 160 ரூபாய்க்கு காபி குடிப்பதும், நாற்பது ரூபாயை டிப்ஸாக கொடுப்பதும், அதில் நாயகனது அறியாமையை கேலி செய்வதும் என்ன விதத்தில் பொருத்தம்? நியாயமாக தமிழ்நாட்டு காதலர்களுக்கு இந்த முதலாளித்துவ இடங்கள் தேவையில்லை என்ற விதத்தில் கேலி செய்யப்பட்டிருந்தால் நாம் பெருமைப்படலாம். ஆனால் இந்த நுகர்வுக் கலாச்சார வக்கிரங்களுக்கு நாம் அறிமுகமாகவில்லை என்று இயக்குநர் செல்லமாக கிள்ளிச் சொல்லுகிறார். அதோடு அஞ்சலியின் உடல்தானம் குறித்த பிரச்சாரம் சேரும் போது அண்ணா ஹசாரேநினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் காதல் குறித்த பிளாஷ் ஃபேக் நினைவுகளில் காதலின் சமூக யதார்த்தமும், அதன் பிரச்சினைகளும் மருந்துக்குக் கூட வரவில்லை. அந்த வகையில் உண்மையான காதல் படங்கள் எதுவும் தமிழில் இப்போதைக்கு வராது என்றுதான் தோன்றுகிறது. காதல் தோன்றும் தருணங்களை விதம் விதமாக ஆனால் அரைத்த் மாவாக காட்டும் நமது இயக்குநர்கள் காதல் தோன்றியதும் அது நிறைவேற எத்தனிக்கும் போராட்டங்களை, சமரசங்களை, குழப்பங்களை கிஞ்சித்தும் அறிந்தவர்கள் அல்லர்.

______________________________________________________

இயக்குநர் சரவணன் இந்தக் கதையை கூறியதும் தயாரிப்பாளர் முருகதாஸ் ஆடிப்போய் விட்டாராம். சரிதான். அதனால்தான் ஹாலிவுட் நிறுவனமான முர்டோச்சின் பாக்ஸ் நிறுவனமும் இதில் கூட்டுத் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறது. டைட்டானிக் அளவு செலவில்லாமலேயே இரண்டு பேருந்துகளை மோத வைத்து தமிழகத்தை அள்ளிவிடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும். இனி இந்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்றால் நாம் மகிழ்வதற்கு ஏதுமில்லை.

திருமணம் செய்த இரசிகர்கள் இனி தினுசு தினுசாகக் காதலிக்க முடியாது என்பதால் விபத்தையும், திருமணம் செய்யாத இரசிகர்கள் விபத்தை ஒதுக்கி வைத்து காதலை மட்டும் நினைத்து திரையரங்கை விட்டு அகலுவார்கள். இதைத் தவிர இந்தப்படம் எதையும் ஏற்படுத்தாது. அப்படி ஏற்படுத்தியாகக் கூறப்படும் மொக்கை மனிதாபிமானங்கள் அனைத்தையும் இந்தத் திரைப்படம்தான் முதலில் கண்டறித்து கூறியதாக பெருமைப்படவும் முடியாது.

நல்லதங்காள் கதையை உற்பத்தி செய்த மண்ணிலிருந்து “எங்கேயும் எப்போதும்” போன்ற கதைகள் வந்து கொண்டேதான் இருக்கும். சமூக வாழ்க்கையில் கோபம் என்ற உணர்ச்சி பிறந்து செயலாக முடியாத நாட்டில் கண்ணீர், நிறையக் கண்ணீர் உதித்துக் கொண்டுதான் இருக்கும். சரிதானே?

 

முதல் பதிவு: வினவு

வாச்சாத்தி வழக்கு: 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

26 செப்

தீர்ப்பைக் கேட்க நீதிமன்றத்திற்கு திராளாக வந்த வாச்சாத்தி மக்கள்

வழக்கை எடுத்துக் கொள்ளவே போராட்டம் நடத்திய வாச்சாத்தி மக்கள் (பழைய படம்)

கடந்த 19 ஆண்டுகளாக நட………….ந்துவந்த வாச்சாத்தி பழங்குடியினரை சூரையாடிய அரசு அதிகாரிகள் மீதான வழக்கு இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்த்து. ஆனால் குற்றவாளிகள் மூவர் வராததால் எதிர்வரும் 29ம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்றும் அப்போது வராத குற்றவாளிகளை கைது செய்து நேர்நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

************************************

அந்த பயங்கர வழக்கைப் பற்றிய ஃப்ளாஷ் பேக்…

வாச்சாத்தி கிராமத்தில் சுமார் 300 வீடுகள். கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதியில், மனித உரிமையை மல்லாக்கப் புரட்டிப்போட்ட மிகப் பெரிய அத்துமீறல் அங்கு நடந்தது. இந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் சித்தேரி மலைகளில் அப்போது சந்தன மரங்கள் ஏராளம். இவற்றை அரூர் சரக வனத் துறை அதிகாரிகள் சிலரின் ஆசியோடு, மரக் கடத்தல் முதலைகள் சிலர் வெட்டிக் கடத்திக்கொண்டு இருந்தனர். அதிகக் கூலி கிடைக்கிறதே என்று கிராமவாசிகளில் சிலரும் மரம் வெட்டும் பணிக்குச் சென்றனர். சில தொல்லைகள் வரத் தொடங்கவே, மிரண்டுபோன மக்கள் மரம் அறுக்கும் வேலைக்குச் செல்ல மறுத்தனர். மேலும், கடத்தல் நடமாட்டம் குறித்த தகவல் அம்பலப்பட… அதிகாரிகள் பொங்கி எழுந்தனர். ‘சந்தனம் உட்பட விலை மதிப்பு மிக்க வனச் செல்வங்களை, வாச்சாத்தி மக்கள் பெருமளவு கொள்ளை அடிக்கிறார்கள்…’ என்று பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ரெய்டு என்ற பெயரில் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை கிராமத்துக்குள் அன்றைய தினம் புகுந்தன.

அப்போது அதிகாரிகள் சிலர், ஊரில் இருந்த பருவம் அடைந்த, பருவம் அடையாத சிறுமிகள் 18 பேரை ஏரிக்குக் கடத்திச் சென்று… வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மாபெரும் பாலியல் கொடூரத்தை அரங்கேற்றினர். அதோடு, வாச்சாத்தி மக்கள் 133 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இந்த விஷயம், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மூலம் வெளிச்சத்துக்கு வர… தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.

பல்வேறு சட்டப் போராட்டங்​களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்​பட்டு, பிறகு சி.பி.ஐ. விசார​ணைக்கும் உத்தரவு இடப்பட்டது. 269 குற்றவாளிகளைப் பட்டியல் இட்டு, இந்த வழக்கை தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நடத்தி வருகிறது. 19 ஆண்டுகளாக இழுபறியாக இருந்த இந்த வழக்கின் விசாரணை, ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்ட நிலை​யில், தீர்ப்புக்கான நாட்கள் எண்ணப்​படுகின்றன.

வன்கொடுமை, அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அழித்தல், வன்புணர்ச்சி ஆகிய குற்றங்கள் நடந்ததற்கான வலுவான ஆதாரங்களோடு வழக்கை சி.பி.ஐ. நடத்துகிறது.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்​பட்டவர்​களில் ஏழு அரசு அதிகாரிகள், ‘சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் பணியாற்றிய தர்மபுரி கலெக்டர் தசரதன், எஸ்.பி-யான ராமானுஜம், ஆர்.டி.ஓ-வான தெய்வ சிகாமணி ஆகிய மூவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். மீண்டும் ஒரு முறை அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையோடு ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அது சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.

உடனே அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்​துக்குப் போனார்கள். கடந்த வாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி பாஷா, ‘சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்த ஒரே காரணத்துக்காக, குறிப்பிட்ட அந்த அதிகாரிகளை வழக்கில் சேர்க்கக் கோருவது வினோதம். வழக்கை மேலும் தாமதப்படுத்த இதுபோன்ற குறுக்கு வழிகளைக் கையாள்வது கண்டிப்புக்கு உரியது. இந்தக் குற்றத்துக்காக மனுச் செய்த ஏழு பேரும் சென்னையில் உள்ள குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு, தலா 10,000 அபராதமாகக் கட்டவும்’ என்று ‘ஷாக்’ கொடுத்ததோடு வழக்கு விசாரணையை துரிதமாக்கும்படி தர்மபுரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

கிராமத்தைச் சேர்ந்த பரந்தாயியிடம் விசாரித்தபோது, கதறிக் கண்ணீர்விட்டு அழுதார். ”என் மகள் உட்பட 18 கன்னிப் பொண்ணுங்களோட வாழ்க்கையை நாசமாக்கினாங்க. ஊர் சனங்களையும் சொல்லவே வாய் கூசுற அளவுக்கு அசிங்கப்படுத்தி உதைச்சாங்க. நீதிமன்றம் மேல் நம்பிக்கைவெச்சு 19 வருஷமா உறுதியாப் போராடுறோம். இப்போ, மேலும் வாய்தாவை அதிகரிக்க இப்படி ஒரு புது தந்திரம் பண்ணப் பார்த்தாங்க. அதை அந்த நீதிபதியாலயே பொறுக்க முடியலை. இதே மாதிரி அந்த அக்கிரம அதிகாரிகளுக்கு விரைவிலேயே தண்டனை கொடுத்து எங்க மனக் காயத்துக்கு நீதிமன்றம் மருந்து தடவணும்!” என்றார் கண்ணீரைத் துடைத்தபடி.

பாதிக்கப்பட்ட முருகன், ”எங்களை ஒரு ஜீவராசியாவே அன்னிக்கு அவங்க நினைக்கலை. பொண்ணுங்களை சூறை​யாடினாங்க… வீடுகளை அடிச்சு நொறுக்கினாங்க. கிணத்துல டீசல், ஆயிலை ஊத்துனாங்க. எங்க ஆடுகளையும் அடிச்சுத் தின்னாங்க. அதுகளோட குடலையும் எலும்புகளையும் கிணத்துல கொட்டினாங்க. அப்பப்பா… இப்போ நினைச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குது சார்!” என்றார்.

மனித உரிமைக்கான ‘குடிமக்கள் இயக்க’த்தின் சேலம் மண்டல பொறுப்​பாளரான செந்தில் ராஜா, ”எத்தனையோ குழுக்களின் விசாரணைகளில், வாச்சாத்​தியில் நடந்த மாபெரும் மனித உரிமை மீறல்களும் கொடுமைகளும் நிரூபணம் ஆகி இருக்கு. கோயில்களைவிட உயர்வானதா மக்கள் கருதுவது நீதிமன்றங்களைத்தான். அங்கேயும் இப்படித் தாமதம் என்றால், மக்களிடம் நம்பிக்கை குறைந்துவிடும். அதனால், விரைவாகத் தீர்ப்பையும் நிவாரணத்தையும் நீதித் துறை வழங்க வேண்டும்!” என்றார்.

நன்றி : தோழர் குருத்து

முதல்பதிவு: முத்துக்குமார்

குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!

19 செப்

நண்பர்களே,

திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்து தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பை கண்டித்தும், சம்பந்தமே இல்லாமல் அவரது பெயர் இழுக்கப்பட்டிருப்பது குறித்தும் அப்சல் குரு அவரது வழக்கறிஞர் பஞ்சொலி மூலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தரப்பட்டிருக்கின்றது.

மூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், அத்தகைய ஆதாரங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில் ‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திப் படுத்துவதற்க்காக அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக வெட்கம் கெட்ட உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் பாராளுமன்றத் தாக்குதல் நிச்சயமாக இந்திய உளவுத்துறையின் சதி நடவடிக்கை என்பதை பல மனித உரிமை அமைப்புகள் உரிய காரணங்களுடன் முன்வைத்திருக்கின்றனர். இதை உண்மையாக விசாரித்துப் பார்த்தால் அன்று இருந்த பா.ஜ.க அரசும், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள். அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாக தூக்கிலட வேண்டும் என்று துடிக்கிறது. காங்கிரசு அரசு அதற்கு ஒத்தூதுகிறது.

இதை காஷ்மீரத்து மக்கள் அறிவார்கள். ஒரு வேளை அப்சல் குரு அநியாயமாகத் தூக்கிலடப்பட்டால் காஷ்மீர் மீண்டும் தீப்பிடித்து எரியும். இதற்காக மட்டும்தான் ஆளும் வர்க்கங்கள் கொஞ்சம் தயங்குகின்றன. ஆனால் காஷ்மீரத்திற்கு வெளியே இது மக்கள் போராட்டமாக பரிணமிக்கவில்லை என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும். பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் அப்சல் குருவின் நியாயத்திற்காக தங்களது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்

வினவு

_____________________________________________________

என்.டி.பஞ்சொலி,

வழக்கறிஞர், ஜி 3/617 ஷாலிமார் கார்டன் விரிவாக்கம் 1

ஷஹிபாபாத், காஜியாபாத் (உ.பி) 201005

ஏன் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது?

அப்சல் குரு

முகமது அப்சல் குருவின் வழக்கறிஞா் என்ற அடிப்படையிலும், கூடவே மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் உறுப்பினா் என்ற அடிப்படையிலும், நான் இத்துடன் அப்சல் குரு விடுத்த அறிக்கை நகலை இணைத்துள்ளேன்.

இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்டது என்பது கண்டனத்துக்குரியது என்பதிலோ, அது எந்த அடிப்படையிலும் நியாயப்படுத்த இயலாத செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அந்த குற்றம் குறித்த மொத்த புலனாய்வு நடைபெறும் வழிமுறையில், விதத்தில் பல கேள்விகள் முன் நிற்கின்றன.  மேலும் எவ்வாறு துவக்க நிலை விசாரணையே துவங்காத நிலையில் மின்னணு ஊடகங்கள், குற்றம் சாட்டப்பட்டவரின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது போல் சித்தரித்து அவரை கொன்றேயாக வேண்டும் எனுமளவிற்கு எவ்வாறு ஒலிபரப்ப இயலும்?

மேலும் மீண்டும் ஒரு பயங்கரமான குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 7 செப் 2011-ல் நடைபெற்று பல உயிர்கள் பலியான சில மணிகளில், அப்சல் குருவின் பெயர் இதில் இழுக்கப்பட்டிருக்கிறது.  ஊடகங்கள் மின்னஞ்சல் ஒன்றை குறிப்பிட்டு அதன் உண்மைத் தன்மை நிறுவப்படாத சூழலிலேயே, முக்கியமான நேர ஒலி/ஒளி பரப்புகளில் குண்டுவெடிப்பு என்பது அப்சல் குருவிற்கு ஆதரவாக உள்ள குழுவினால் ஏற்பட்டது போல் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் ஊடகங்கள் என்பது யாருக்கும் கட்டுப்படாத ஒன்றாகும்.  மேலும் 24 மணி நேர தொலைக்காட்சி ஒளிபரப்புகளை மேற்கொள்கிற அத்தகைய ஊடகங்களின் செயல்பாடு, அடிப்படையான பத்திரிகை தர்மத்தை மீறுகிற செயல்களை திறம்பட கண்காணிக்க அதிகார அமைப்பு ஏதுமில்லை. அத்தகைய ஊடகங்களில் நடைபெறுகிற அனைத்து விவாத நிகழ்ச்சிகளும், நிலைத்திருக்கக் கூடிய கருத்திற்கு முரணாக யார் ஒருவர் மாறாக கருத்து சொன்னாலும் அதை எதிர்த்து மிகுதியான கருத்து திணிக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது. மின்னணு ஊடகங்களெல்லாம் மிக உரக்க ஊழலுக்கு எதிராக பேசிய போதிலும், எந்தவித பொறுப்புமின்றி அதிகாரத்தோடு அத்தகைய ஊடகங்கள் தாம் செய்து வரும் ஊழலை ஒருபோதும் உணர்ந்து பார்ப்பதில்லை.

ஊடகத்தின் முன்பாக யாரேனும் அப்சல் குருவிற்கு சாதகமாக பேசினால் அவர் இந்தியனுக்கெதிராக பேசுபவர் எனவும், தேசிய பாதுகாப்பு வல்லுனர்கள் சொல்லும் தேசப்பற்று என்பது நிலையாக நிற்கக் கூடிய கார்ப்பரேட் ஊடகங்களுக்கும் மற்றும் இந்து மத உரிமை பேசுபவர்களுக்கு மட்டுமே உரித்தானது போல் சித்தரிக்கப்படுகிறது.

நமது “அப்சல் குருவை காப்பாற்றுங்கள்” என்கிற பிரச்சாரம் இந்திய ஜனநாயகத்தில் கீழ்காணும் அம்சங்களை பிரதிபலிக்கிறது.

  1. புலனாய்வு அமைப்புகளில் நிலவி வரும் ஊழல் மற்றும் அவர்களிடம் தொழில் திறமை குறைவாக இருப்பது அம்பலப்படுத்தப்படுகிறது.  பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் புலனாய்வு அதிகாரியாக செயல்பட்டவர் பலமுறை புகழ்ந்து பேசப்பட்டார்.  ஆனால் பின்னர் கோடிக்கணக்கான பணம் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களில் அவருக்கிருந்த நிழலான மோசமான தொடர்புகள் காரணமாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் சிறப்பு பிரிவில் செயலாற்றும் காவலர்களின் ஊழல்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பிவிடலாம்.
  2. நீதித்துறை என்பது அரசியலமைப்பு சட்ட நிலை, மற்றும் சட்ட நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு ஊடகங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் விளைவாக உச்ச நீதிமன்றம் “இந்த நாட்டின் தேசிய மனச்சாட்சியை திருப்திப் படுத்துவதற்காக” தூக்கு தண்டனையை உறுதிப்படுத்துகிறது. எந்த ஒரு நபரின் இறப்பு குறித்த தண்டனையை முடிவு செய்யும் சட்ட அடிப்படை இங்கு கிடையாது. அப்சல் தூக்கிலிடப்பட்டால் அது எந்த ஒரு இந்தியனும் இந்திய உரிமைக் குழுக்கள் அல்லது கார்ப்பரேட் நலனை திருப்திப் படுத்துவதற்காக தூக்கிலிடப்படலாம் என்றாகிவிடும்.
  3. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் திட்டத்தின் பிரதம மூளை என்ற அடிப்படையில் மெளலானா மசூத் அசார்,காஜிபாபா மற்றும் தாரிக் அகமது என்ற 3 பாக்கிஸ்தானியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு குற்றக் குறிப்பாணை பதிவு செய்யப்பட்டது.  அத்தகைய பிரதம மூளையாக செயல்பட்டவர்கள் பிடிக்கப் படவில்லை.  கொலை நடவடிக்கையில் நிதர்சனமாக ஈடுபட்டவர்கள் இறந்து விட்டனர்.  எனவே சதிச்செயலில் ஒரு பங்கு அப்சலுக்கு உண்டு என கருதப்படினும் அவருக்கு தலைமை தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்படக் கூடாது. ஏனேனில் அவர் குறிப்பிட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்படவும் இல்லை, தாக்குதலில் ஈடுபடவும் இல்லை.  அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்பதும், தீவிரவாதத்திற்கு உண்மை காரணம் என்னவென்று கண்டறியும் நடவடிக்கையும் புறந்தள்ளப்பட்டுவிடும்.
  4. மனித உரிமை ஆர்வலர்கள் இது தொடர்பாக கைதான இருவர் ஒன்றும் அறிந்திராதவர்கள் என நிரூபித்துள்ளனர்.  இதில் கருவுற்றிருந்து சிறையில் குழந்தையை பெற்றெடுத்த ஒரு சீக்கிய பெண்ணும் அடக்கம். அவளது வாழ்வு முழுமையாக பழிவாங்கப்பட்டுவிட்டது.  நாம் எப்போதும் அவளை தொலைக்காட்சிகளில் கண்டதில்லை, என்பதுடன் அவளின் பயங்கரமான சோகமயமான வாழ்க்கையையும் கண்டதில்லை.  இது எவ்வாறு சில குடிமக்கள் கைவிடப்படுகிறார்கள் என்பதை காண்பிக்கிறது.
  5. டெல்லியிலும் நாட்டின் பிற பகுதியிலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நியாயமாக ஒன்றுபட்ட ஆதரவு காண்பிப்பதை காஷ்மீர மக்கள் பார்க்கின்றனர்.  அப்சலை தூக்கிலிடுவதென்பது அத்தகைய காஷ்மீர மக்களுக்கும், இதர இந்திய பகுதி மக்களுக்கும் இடையே நிலவிவரும் உணர்வு பூர்வமான பாலம் உடைந்துவிட ஏதுவாகும்.
  6. அப்சல் குருவிடம் எப்போதும் நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை. மேலும், அவருக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராக முன்வராததால், அவர் வழக்கறிஞர் மூலம் தனது தரப்பை தெரிவிக்க இயலவில்லை. மிக முக்கியமான சாட்சியங்கள் கூட குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒவ்வொருவருக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ள நியாயமான விசாரணை என்ற உரிமையை நாம் குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடும்.
  7. பாராளுமன்ற தாக்குதல் வழக்கின் முழுமையான அனுபவம் என்பது நமது ஜனநாயக நிறுவனங்களின் பலவீனத்தை காட்டுவதாக உள்ளது. அதே சமயம் அது குறிப்பிட்ட சில மெனக்கெடும் ஆர்வலர் குழுக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஜனநாயக உரிமைக்காக போராட துணிந்தால் அதற்கு இடமளிப்பதும் சாத்தியப்படும் என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்சல் தூக்கிலிடப்பட்டால் அந்த இடம் என்பது குற்றத் தீர்ப்பிற்குள்ளாகிவிடும்.  இந்துத்வா தீவிரவாதிகள் வெடிகள் வெடித்து கொண்டாடலாம், கார்ப்பரேட் ஊடகங்களுக்கு சில தினங்களுக்கு தொடர்ந்து ஒலிபரப்ப நாடக காட்சிகள் கிடைக்கலாம். ஆனால் இந்திய ஜனநாயகம் என்பது வெடித்து சிதறுவதாக ஆகிவிடும். எனவே தான் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது.
  8. நான் இத்துடன் அப்சலின் பத்திரிக்கை செய்தி அறிக்கை நகல் ஒன்றை இணைத்துள்ளேன்.  அவர் வேண்டுகையின்படி அது பிரசுரிக்கப்பட்டால் அவர் மீது தவறான கருத்துக் கொண்டிருக்கும் மக்களில் பலர் அவரின் குரலைக் கேட்க முடியும்.

– என்டி பஞ்சொலி,  வழக்கறிஞர், 09 செப் 2011

 அப்சல் குருவின் பத்திரிகை செய்திக் குறிப்பு:

 சில தீய சக்திகள் மற்றும் சமூக விரோத நபர்கள் டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கடுங்கொடிய மற்றும் பதைபதைக்க வைக்கும் குண்டு வெடிப்பு என்ற சம்பவத்தை மேற்கொண்டிருப்பது மிகவும் கவலைப்படக் கூடிய செயலாகும்.  அந்த கொடுஞ்செயல் அனைவராலும் கண்டிக்கத்தக்க செயலாகும்.  எந்த ஒரு மதமும் அப்பாவி மக்களை கொல்வதை அனுமதிப்பதில்லை.  எனது பெயர் இதில் சம்பந்தமில்லாமல், தேவையில்லாமல் இழுத்தடிப்பது அறிந்து நான் மிகவும் துயருற்றுள்ளேன். சில தரகர்கள்/குழுக்கள் அசிங்கமான ஆட்டத்தை ஆடி என்பெயரை இதில் ஈடுபடுத்துகின்றனர்.  மிகக்கொடுமையான குற்றங்கள் நடைபெறும் போது சில தவறான நோக்கமுள்ள குழுக்கள் என் பெயரை வேண்டுமென்றே இழுப்பது என்பது இது முதல்தடவையல்ல. எப்போதெல்லாம் நாட்டில் குண்டு வெடிப்புகள் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் என் பெயரை வேண்டுமென்றே அடிபடச் செய்வதன் மூலம் என் மீது களங்கம் விளைவிக்கவும், எனக்கு எதிரான பொதுக் கருத்தை வலுப்படுத்துவதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறது.

 நான் இதை எனது வழக்கறிஞர் திரு என்டி பஞ்சொலி மூலம் இதை எனது பத்திரிகை செய்திக் குறிப்பாக அனுப்பியுள்ளேன்.  தயவு செய்து இதை பிரசுரிக்கவும்.

 (ஒ-ம்) அப்சல் குரு

த/பெ: அபிபுல்லா

பகுதி எண் 8, சிறை எண் 3

திஹார் சிறைச்சாலை

___________________________________________________

– தமிழாக்கம்: சித்ரகுப்தன்

___________________________________________________

முதல் பதிவு: வினவு

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு!

13 செப்

சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 11/09/2011 அன்று பரமக்குடியில் நடந்த இம்மானுவேல் சேகரனின்நினைவுநாள் விழாவில் மூவரைச் சுட்டுக்கொன்றதன் மூலம் மனித ரத்தம் குடிக்க வெறி பிடித்து அலைவதில் இந்திய ராணவத்திற்கும், அமெரிக்க ராணுவத்திற்கும், சிங்கள ராணுவத்திற்கும் நாங்கள் பங்காலிகள் எனக்காட்டியிருக்கிறது தமிழகப்போலீசு.

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு! -

விழாவிற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே ஏராளமான போலீசை கும்பல் கும்பலாக இறக்கிவிட்டு பரமக்குடி நகரில் அலையவிட்டிருந்தது தமிழக அரசு. மக்களைப் பீதியூட்டுகிற வழக்கமான நடைமுறை என்று அப்போது தோன்றினாலும், ஒரு பயங்கரமான சதிதிட்டத்தை அரங்கேற்றத்தான் இந்தப் போலீசுக் கும்பல் வந்திருக்கிறது என்பது பின்னால்தான் தெரிந்தது.

விழாவிற்கு வந்துகொண்டிருந்த ஜான்பாண்டியனை அவர் வந்தால் கலவரம் ஏற்படும் எனக்காரணம் கூறி காலை 11 மணிக்கு எட்டுக் குடியருகே கைது செய்கிறது போலீசு.  முத்துராமலிங்கம் குருபூசைக்கு வருகிற ஒட்டுக்கட்சித் தலைவர்களையெல்லாம் வப்பாட்டியைப் போல மிகப் பாதுகாப்பாக அணைத்துக் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிட்டு வருகிற போலீசு, ஜான்பாண்டியனை மட்டுக் கலவரம் செய்பவராகக் காட்டி தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியைத் துவக்கி வைக்கிறது.

தேவர்சாதிவெறியின் அடையாளமாக கொண்டாடப்படும் தேவர் குருபூஜைக்கு ஜெயா, மு.க.ஸ்டாலின், நடிகர்கள், போலிக் கம்யூனிஸடுத் தலைவர்கள் உட்பட பலரும் வருவார்கள். அவர்களுக்கு முறை வைத்து அழைத்துச் சென்று பாதுகாப்பாக கொண்டு விடுவதில் இந்த அடிமைப் போலீசுக்கு பிரச்சினை இல்லை. மேலும் அந்த குருபூஜை நாளில் தேவர் சாதிவெறியர்கள் வரும் வழிகளிளெல்லாம் தலித் மக்களை தாக்குவதும், வெறுப்பூட்டுவதும் வருடா வருடம் நடக்கும். அப்போதெல்லாம் போலீசின் துப்பாக்கி வேலை செய்யாது. ஆதிக்க சாதி வெறியர்களின் வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கைகளாக கருதப்பட மாட்டாது.

இதற்கு எதிர்வினையாக தலித் மக்கள் இம்மானுவேல் சேகரனது குருபூஜையை நடத்தத் துவங்கியதும் போலீசும், அரசும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பது வழக்கம். இந்த வருடம் குருபூஜைக்கு வரும் ஜான்பாண்டியனை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? கேட்டால் அவர் ஒரு ரவுடி, கட்டைப் பஞ்சாயத்து செய்பவர் என்று கூறுவார்கள். இந்த வேலைகளை எல்லாக் கட்சித் தளபதிகளும்தான் செய்கிறார்கள். எனில் ஜான்பாண்டியனை மட்டும் அப்படி சித்தரிப்பதற்கு ஆதிக்க சாதி வெறியே முக்கியக் காரணம். சரி தங்களது தலைவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜான்பாண்டியனின் ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்யக்கூடாதா? அவர்களை நாய்களைப் போல அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் என்ன?

ஆதிக்க சாதிக்கூட்டத்திற்கு பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என தலித்துகளைக் கைது செய்வது, தலித்துகளுக்குப் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கிறோம் என்று தலித்துகளைக் கைது செய்வது தமிழகப் போலீசின் சாதி வழக்கம்.

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு! -

இமானுவேல் சேகரன்

ஜான்பாண்டியன் கைது செய்யப்படுகிறார். பரமக்குடியில் இருக்கிற அவரது ஆதரவாளர்கள் உடனடியாக அவரை விடுதலை செய்யச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். விடுதலை செய்ய மறுக்கும் போலீசு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பரமக்குடி ஐந்துமுக்கு ரோட்டில் சாலைமறியல் செய்கிறார்கள். சாதாரணமாக, ஓட்டுக்கட்சிகள் உள்படப் பலரும் செய்கின்ற அதே சாலைமறியல்தான். ஆனால், இப்போது அதை ஒரு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதைப்போல மாற்ற முயலும் முயற்சியாகத் தனது வேட்டையைத் தொடங்கியது. காட்டடி, மாட்டடி என்று சொல்வார்களே அப்படிப்பட்ட  போலீசின் வழக்கமான காட்டுமிராண்டித்தனமான அடியை அடிக்க ஆரம்பிக்கிறது. இன்னோரு வகையில் சொல்லப்போனால் வெறிகொண்ட தெருநாய்கள் பாய்ந்து பிறாண்டிக் கடித்துக் குதறுமே அதைபோல அ(க)டிக்கத் துவங்கியது. சிதறி ஓடுகிறார்கள் மக்கள். விரட்டி விரட்டியடிக்கிறது போலீசு.      கருணாநிதி கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் திமுககாரர்களையோ, ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் அதிமுககாரர்களையோ என்றாவது தமிழகப்போலீசு விழுந்து பிறாண்டியிருக்குமா? இல்லை தேவர் சிலையில் காக்கா கக்கா போனதற்காக சாலை மறியல் செய்யும் தேவர் சாதி வெறியர்களை என்றாவது தாக்கியிருக்கிறார்களா? தலித்துக்கள் சாலை மறியல் செய்தால் மட்டும் அது பயங்கரவாத நடவடிக்கையா?

அடிதாங்க முடியாமல் சில இளைஞர்கள் அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்து கொள்கிறார்கள். மருத்துவமனைக்குள் புகுந்த போலீசு அங்கிருந்தவர்களை வெளியில் இழுத்து சாலையில் போட்டு அடித்துத் துவைக்கிறது. இப்படி அடித்துக்கொண்டிரும்போது டி.எஸ்.பி கீழே விழுகிறார். இனி அடிவாங்கியவர்களின் முறை ஆரம்பிக்கிறது. நையப்புடைக்கப்பட்ட அவரை போலீசு காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறது. தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற நேரம் குறிக்கிறது. கடுமையான தாக்குதலுக்குள்ளான மக்கள் தங்களின் ஆத்திரத்தை அங்கிருந்த வஜ்ரா வாகனத்தை எரித்ததின் மூலம் தணித்துக் கொள்ள முயன்றனர். உணர்ச்சி வசப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்த அங்கே போலீசு இல்லை. உணர்ச்சி வசப்படும் அவர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் சற்றுத் தூரமாக இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கே போலீசுக் கும்பல் போய்விட்டிருந்தது. அதாவது தாங்கள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்றே அவர்கள் சாதுர்யமாக முதலில் ஒதுங்கி இருக்கிறார்கள்.

பிறகு அங்கிருந்து திரும்புகிறார்கள், சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசாகிய நாங்கள் என்பதை மீண்டுமொருமுறை நிரூபிப்பதற்கான உத்தரவோடு வந்தார்கள். சுட்டார்கள். பொதுமக்களில் மூன்று பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான காயங்களோடு இரண்டுபேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏழுபேர் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. சுடப்பட்டவர்கள் யாரென்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. சுடப்பட்டவர்களின் உடல்கள் ஐந்துமுனை ரோட்டிலேயே கிடக்க போலீசு மீண்டும் நின்று கொண்டிருந்த மக்களை விரட்டிக்கொண்டு ஒடியது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். அப்போதும் போலீசு சுடுகிறது. மதுரை ராமநாதபுரம் ரோட்டில், நடுச்சாலையில் நின்றுகொண்டு ஓடுகின்ற மக்களை நோக்கிக் குறிவைத்துச்சுடுகிறது போலீசு.

ஒரு போர்க்களத்தை நினைவூட்டுகிறது அந்தக்காட்சி.

ஏற்கனவே சாதி வெறியூட்டப்பட்ட ரெளடிக் கும்பலாக வளர்க்கப்பட்டிருக்கிற போலீசு, ஒரு பக்கா பாசிஸ்ட்டான, சாதித்திமிரின் மொத்த உருவமான, பார்ப்பன ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்தோடு தங்களின் வெறியைத் தீர்த்துக்கொள்வதற்காகவே சுடுகிறது. மேலும் பாசிச ஜெயா பதவிக்கு வந்த உடன் போலீசுக்கு அனைத்து அதிகாரமும் வழங்கி அவர்களை குளிப்பாட்டி பலமுறை பேசியிருக்கிறார். இப்படி ஜெயாவால் அதிகார போதை வெறியேறிய போலீசு இப்படி அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வதற்கு எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. எல்லாம் அம்மா கொடுத்திருக்கும் அதிகாரம் என்பது போல நடந்திருக்கிறது.

முத்துராமலிங்கம் குருபூசையின் போது அனைத்து ஓட்டுக்கட்சித் தலைவர்களும் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால், இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளின் போது எந்த ஓட்டுக்கட்சித் தலைவனும் வருவதில்லை. ஏன் வருவதில்லை என்பதைப்பற்றிக்கூடச் சிந்திக்காமல் அந்த ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித் இளைஞர்கள் தங்கள் தலைவர்களின் படங்களைத் தாங்களே பிளக்ஸ் பேனர்களில் போட்டுக்கொண்டு அவர்களும் இந்த விழாவிலே கலந்துகொள்வது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறார்கள்.

இதோ, திட்டமிட்டே, ஜெயாவின் ஆசிகளோடு,  துப்பாக்கியால் சுட்டு 4 பேரைக்கொலை செய்திருக்கிறது போலீசு. ஓரிடத்தில் இன்ஸ்பெக்டர் கைத்துப்பாக்கியினால் சுட்டு இருவரைக் கொன்றிருக்கிறார். மதுரையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பத்திரிகைகளிலே என்ன எழுதப்போகிறார்கள்? கலவரம் செய்தார்கள், அதை அடக்கப்போன போலீசாரைத் தாக்கினார்கள், கலவரத்தை அடக்க போலீசார் சுட்டனர் என்றுதான் எழுதப்போகிறார்கள்.

“இவெங்களும் ஆட்டம் அதிகமாகத்தான போட்ராங்க” என்கிற, ஆதிக்க சாதிப்பார்வையில் ஊறிக்கிடக்கும் ‘மக்களும்’ இதைக்கலவரம் என்றே நம்புவார்கள். பரப்புவார்கள். கலவரம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றுதான் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். அவர்களது அகராதியில் போலீசு எப்போதுமே கலவரம் செய்யாது. எதிர்க்கட்சியாக இருப்பவர்களோ, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பார்கள். ஆனால், சட்டம் ஒழுங்கைக் கெடுத்தது போலீசுதான் எனச்சொல்லமாட்டார்கள்.

இந்த துப்பாக்கி சூட்டில் இறந்து போனவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயை வீசியிருக்கும் பாசிச ஜெயா யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். வன்முறையில் ஈடுபட்டது ஜெயாவில் காவல் நாய்களான தமிழக போலீசு. வன்முறைக்கு பலியானது தலித் மக்கள். எனில் ஜெயாவின் வேண்டுகோளுக்கு என்ன பொருள்?   இனி இந்த ‘கலவர’ வழக்குகளுக்காக நூற்றுக்கணக்கான தலித்துக்கள் மீது பொய் வழக்கு போடப்படும். அவர்கள் இனி வரும் ஆண்டுகள் முழுவதும் வழக்கு, வாய்தா, சிறை என்று அலைய வேண்டும். இது கொடியங்குளம் ‘கலவரம்’ போதே நடந்திருக்கிறது. அந்த வழக்குகளுக்காக பல கிராம தலித் மக்கள் இன்றும் நீதிமன்றங்களுக்கு அலைகிறார்கள். சுட்டுகொன்றது போதாது என்று இப்படி நீதிமன்றங்கள் மூலமும் சித்திரவதை செய்கிறார்கள்.

ஆதிக்க சாதிக்கும்பல்கள் ஆடாத ஆட்டங்களெல்லாம் ஆடுகையில் அவர்களோடு சேர்ந்து கொண்டு, போதையில் மிதக்கும் போலீசு, தலித்துகள் உணர்வுபூர்வமாக ஏதேனும் செய்தால் கீச்சாதிப்பயலுக்கு திமிரப்பாருடா எனக் குமுறுகிறது. எல்லாத்துறைகளிலும் ஆதிக்கசாதி உணர்வுதான் வெளிப்படுகிறது. அதுதான் இப்போது ஆறு பேரைப் பழிவாங்கியிருக்கிறது. இனியும் இது அதிகரிக்கவே செய்யும். இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ, போலீசில் வேலை பார்க்கும் தலித்துகளும், ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித்துகளும் உணரவேண்டும்.

இப்போது பாசிச ஜெயா போலீசை வைத்து செய்திருக்கும் இந்தக் கொலைக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, சே.கு தமிழரசன் போன்ற விலை போன தலித் அமைப்புத் தலைவர்கள் வக்காலத்து வாங்குவார்கள். இத்தகைய பிழைப்புவாதிகளையும் தலித் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பதும் ஜெயாவின் ஆட்சிக்காலங்களில் அது இரட்டிப்பாகிறது என்பதும், ஒட்டுக்கட்சிகள் இதை எப்போதும் சுட்டிக்காட்டுவதில்லை என்பதும் மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிற இந்நேரத்தில் போலீசிலும் ஓட்டுக் கட்சிகளிலும் இனியும் நாம் இருக்கமுடியுமா என தலித்துகள் உடனடியாக முடிவு செய்யவேண்டும். வெளியேற வேண்டும். உங்களுக்காக புரட்சிகர அமைப்புகள் காத்திருக்கின்றன.

_________________________

– குருசாமி மயில்வாகனன்

______________________

முதல் பதிவு: வினவு

மங்காத்தா: அண்ணா ஹசாரேவை ‘என்கவுண்டர்’ செய்த தல!

5 செப்

“மனதினை மாற்றடா ஒகே
மகிழ்ச்சியை ஏற்றடா ஒகே
குறைகளை நீக்கடா ஹேஹே
தடைகளை தூக்கிப்போட்டு போடா
உடலுக்குள் நெருப்படா ஹொஹொ
உணர்வுகள் கொதிப்படா ஹஹ
புதுவிதி எழுதடா ஹேஹே
புரட்சியை செய்து காட்ட வாடா…”

– மங்காத்தா பாடல் வரிகள்….

கண்ணில் தெரியும் காட்சிகளை எல்லாம் தனித்தனியாக இரசிப்பதே நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கும் பழக்கம். அந்தக் காட்சிகளினிடையே ஊடாடியும், ஊடுறுவியும், வேர்விட்டும் நிற்கும் அந்த மாய இழையை கண்டுபிடிக்கும் போது மட்டுமே, தனித்தனிக் காட்சிகள் இணைந்து எழுப்பும் விரிந்த அந்த பிரம்மாண்டமான ஓவியத்தின் முப்பரிமாணத்தை தொட்டுணர்ந்து உள்ளிழுக்க முடியும். ‘ஆன்மீக’ மொழியில் வருணித்தால் அதுதான் தன்னையே பரப்பிரம்மமென உணரும் தெவிட்டாத பரவச தருணம். எங்கள் மொழியில் சொன்னால் அதுதான்……………? அது என்ன என்று சொல்லிவிட்டால் ஒரு ஆக்சன் த்ரில்லர் பட விமரிசனத்திற்கு செய்யப்படும் அநீதியாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தின்படி இது ஒன்றும் அநீதியல்ல. ஆனாலும்……

நாத்திகத் தமிழினவாதிகள் கோபித்துக் கொண்டாலும் கூட எந்த கட்டுரையும், விசயமும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதுதான் தமிழ் மரபு. இந்து மரபும் கூட. ஆகவே…………

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், விநாயகர் சதுர்த்தி – ஸ்பெசல் டின் பாக்ஸ், நெய் அப்பம், இனிப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, திரட்டி பால், முள்ளு முறுக்கு, கடலை உருண்டை, லட்டு, மனோகரம், தேன் குழல்……. விலை ரூ.279 மட்டுமே. அன்புப் பரிசாக விநாயகர் சிலை, விநாயகர் சி.டி இலவசம்.

ரம்ஜான் தினத்தன்று தினமலரில் வந்த விளம்பரம். அப்துல் காதரும் அம்மாவாசையும் போல் மங்காத்தாவுக்கும் கொழுக்கட்டைக்கும் என்ன தொடர்பு?

ஒரு தேசத்தின் ஊடக விளம்பரங்களை காட்டுங்கள், அந்த தேசத்தின் சமூகத் தரத்தைக் கூறுகிறோம்.…எனும் பொன்மொழிக்கேற்ப….

கவனியுங்கள், கொழுக்கட்டையின் விலை ரூ.279, கொழுக்கட்டையுடன் கூட விநாயகர் சிலை இலவசம். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பிடிக்கும். அதனால் அவரது நைவேத்தியத்தில் தொந்தி, தும்பிக்கையருகே தரையில் இருக்கும் கொழுக்கட்டை பிரதானம். ஆனால் கிருஷ்ணா ஸ்வீட்சைப் பொறுத்தவரை கொழுக்கட்டை கடவுளாகவும், கடவுள் இனாமாகவும் மாறிய விந்தையின் பொருள் என்ன? நைவேத்தியத்திற்கு விலை, அந்த நைவேத்தியம் படைக்கப்படும் ஆண்டவன் இலவசம் என்றால் உண்மையான ஆண்டவன் யார்?

தின்று செரித்து மலமாகப் போகும் ஒரு கொழுக்கட்டையின் மதிப்பு கூட அதை விரும்பி முழுங்கும் இறைவனுக்கு இல்லை எனில்? ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பாக்சை விலை கொடுத்து வாங்கிச் செல்லும் பார்ப்பன மேட்டுக்குடி பக்தர்களின் தரம் இதுதான் என்றால்?

இங்கே பக்தி ஒரு முகாந்திரம் மட்டுமே. அந்த பக்தியின் பின்னிருந்து இயக்கி முக்தியளிக்கும் கடவுள் பணம், பணம் மட்டுமே. இதைத்தான் மங்காத்தா படத்தில் விநாயக் என்ற பெயரில் வரும் அஜித் ஆங்காங்கே உணர்ச்சிப் பாவத்துடன் கூவுகிறார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பான்சராக நடத்தும் காலச்சுவடு கூட்டமாகட்டும், கர்நாடக கச்சேரியாகட்டும்……எல்லாம் அந்த நிறுவனத்தின் இனிப்பு கார வகைகளை காசு கொடுத்து வாங்கிச் செல்லும் பக்தர்களின் ‘பண்பாட்டு’ தூண்டில். பெப்சி அருந்திக் கொண்டே டோனி அடிக்கும் சிக்சரை சோனி எல்.சிடியில் பார்ப்பதும், கிருஷ்ணா ஸ்வீட்சின் கொழுக்கட்டையை விழுங்கியவாறே விநாயகனை துதிப்பதும் வேறு வேறா என்ன?

மதமோ, விளையாட்டோ எதுவும் வர்த்தகக் கடவுளின் தயவினால் மட்டும் நடக்கும் சமாச்சாரங்கள். சற்று குறிப்பாக பாருங்கள், பெப்சி விற்பதற்காக கிரிக்கெட்டில் தேவைப்படும் சிக்சர், கொழுக்கட்டை விற்பதற்காக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி. பெப்சி அருந்தினால் மட்டுமே சிக்சரின் மதிப்பு புரியும். கொழுக்கட்டையை வாங்கினால் மட்டுமே பக்தியின் மதிப்பு அளவிடப்படும்.

விநாயகர் சதுர்த்தி நாளில், விநாயக் என்ற பெயரில் அஜித் நடிக்க, விநாயகர் ஊர்வலங்களுக்கு பிரபலமான மும்பையில் நடக்கும் மங்காத்தாவின் கதை என்ன? பணம், பணம், பணம். காதல், நட்பு, பாசம், குடும்பம் எல்லாவற்றையும் விட பணம். எந்த வழியிலாவது, என்ன செய்தாவது, எப்படியாவது பணம். ஏன்?

ஆனால் மங்காத்தாவின் பலம் அது மட்டுமல்ல. அது சமகாலத்தின் பணம் குறித்த உணர்ச்சியை, உண்மையை, அரசியலை, பண்பாட்டை, புனிதங்களை வெள்ளேந்தியாக விறுவிறுப்பான காட்சிகளால் உணர வைக்கிறது. அல்லது போட்டுடைக்கிறது. எனினும் நுனிச்சீட்டில் இழுக்கும் வலுவான திரைக்கதை அளிக்கும் பேரின்ப வெள்ளத்தில் திளைக்கும் ரசிக பக்தர்கள் அதை உணர முடியாது என்பது ஒரு யதார்த்தம். ஆனால் பழகிப்போன சமரசங்களும், மரத்துப்போன நீதிகளும், இற்றுப்போன மதிப்பீடுகளும் கொண்ட சூழலை விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஒரு இரசிகன் அதை தனித்துப் பிரித்து உணர வேண்டிய அவசியமில்லையே?

கால ஓட்டத்தில் நமது விருப்பம், தெரிவு, இரசனை, கொள்கை அனைத்தும் மாறித்தான் போகிறது. ஆனால் அந்த கால ஓட்டத்தை நெறிப்படுத்துவது எது?

மூவர் தூக்கிற்காக தமிழகம் துடித்தெழுந்த போது இந்தியாவில் அதன் மாநகரங்களில் படித்த நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கம் அண்ணா ஹசாரேவின் தலைமையில் ஊழலை எதிர்த்து முழங்கிக் கொண்டிருந்தது. இங்கும் நமது தமிழக நகரங்களில், தலை நகராம் சென்னையில் மேன்மக்கள் கொதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஐ.டி துறையினர், பன்னாட்டு நிறுவனங்களில் பசையான சம்பளத்தை வாங்குவோர், செலிபிரிட்டிகள், திரைத்துறையினர் என்று பலரும் உண்டு.

இந்த மெழுகுவர்த்தி கனவான்களின் அடுத்த சென்சேஷன் எது? ஐ.டி துறை நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அது மங்காத்தா என்றார்கள். அதிலும் பல நிறுவனங்களில் உள்ளH.R.களே ஏற்பாடு செய்து அலுவகம் அலுவலகமாக கூட்டம் கூட்டமாக மங்காத்தா முதல் காட்சிக்கு சென்றிருக்கிறார்கள் என்பதைக் கேட்ட உடன் ஆவல் பிறந்தது.  படம் பார்த்த நண்பர்களிடம் கதை கேட்டால், “எல்லாம் பணம்” என்றார்கள். ஊழல் ஒழிப்பிற்கு மெழுகுவர்த்தி ஏந்திய கையோடு எல்லாம் பணம்தான் என்றால் எங்கோ இடிக்கிறதே?

_______________________________________

” இன்னும் எத்தனை நாள் நான் நல்லவனாக நடிப்பது “
– மங்காத்தாவில் வினாயக்

நல்லவனாக இருப்பது ஒரு நோக்கம் மட்டுமே. நிறைவேற்றவோ, அதை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கவோ முடியாத போது நடிக்க மட்டும்தான் முடியும். ஆனாலும் நடிப்பது சிரமமில்லையா? நல்லவனாக இருப்பது வேடிக்கையான கேலிப்பொருளான நிலையில் அஜித்தின் வசனத்திற்கு திரையரங்கு ஆர்ப்பரிக்கிறது. அது இயல்பாக தன்னையே கேலி செய்யும் சுய எள்ளல் என்பதை உறுதி செய்ய நீங்கள் மங்காத்தாவை பார்த்திருக்க வேண்டும். இந்த விமரிசனத்திற்கு மங்காத்தாவின் கதை தெரிந்திருப்பது அவசியமா?

எனினும் உங்களுக்காக கதைச் சுருக்கம்……

இந்தியாவின் கிரிக்கெட் சூதாட்டத்தில் கட்டப்படும் பணமெல்லாம் மும்பைக்கு டாலராக 500 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது. சூதாடிகள் அந்த சூதாட்டப் பணத்தை ஐ.பி.எல் பைனலுக்கு பின்னர் முறையாக பிரிப்பதற்கு முன் அதை ஒரு செட்டியாரிடம் பாதுகாக்குமாறு அனுப்புகிறார்கள். கிளப் சூதாட்டத்தை தொழிலாக நடத்தும் செட்டியார் அதன் பொருட்டு ஒரு திரையரங்கையும் நடத்துகிறார். இடையில் செட்டியாரிடம் வேலை செய்யும் ஒருவனோடு இன்னும் மூவர் சேர்ந்து அந்த சூதாட்டப் பணம் 500 கோடியை திருட  திட்டமிடுகிறார்கள்.

தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியான அஜித் அந்த நால்வர் கும்பலின் முயற்சியை கண்டறிந்து தானும் சேர்ந்து கொள்கிறார். அவரது திறமையால் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனாலும் பின்னர் அந்த நால்வர் கும்பலுக்குள் ஏற்படும் துரோகம் காரணமாக சண்டை. இடையில் குடியரசுத்தலைவருக்கு மட்டும் பதில் சொல்லும் அதிகாரம் படைத்த ஒரு போலீசு குழு அர்ஜூன் தலைமையில் இந்தியாவெங்கும் கிரிக்கெட் சூதாட்டப் பணத்தை கைப்பற்றி, சூதாடிகளை கைது செய்கிறது. அவர்களும் இந்த 500 கோடி கொள்ளையை துரத்துகிறார்கள்.

இறுதியில் அர்ஜூனும், அஜித்தும் சந்திக்கிறார்கள். சண்டையில் அஜித் சாவது போல தோன்றினாலும் பின்னர் அவர் கொள்ளைப் பணத்தோடு தாய்லாந்தில் வாழ்வது தெரிகிறது. மேலும் அவரோடு அர்ஜூனும் சேர்ந்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் தெரிகிறது. அஜித் கொள்ளையர்களோடும், அர்ஜூன் போலீசோடு இணைந்தும் பணிபுரிகிறார்கள். பணத்தை பங்கு போடும் போட்டியில் அந்த நால்வர் அணியினர் கொல்லப்படுகிறார்கள். சூதாட்ட மையமான செட்டியாரை நெருங்குவதற்குகாவே அஜித் அவரது மகள் த்ரிஷாவை காதலிக்கிறார். காரியம் கை கூடியவுடன் காதலை தூக்கி எறிகிறார். கதை போதுமா?

____________________________________________

” இது அம்பானி பரம்பரை, அஞ்சாறு தலைமுறை, ஆனந்தம் வளர்பிறை….
ஆடாம ஜெயிச்சோமடா, ஓடாம ரன்னெடுத்தோம், சும்மா உக்காந்து வின்னெடுத்தோம்….

– மங்காத்தா பாடல் ஒன்றிலிருந்து….

மங்காத்தா குறித்த பதிவுலக விமரிசனங்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. விறுவிறுப்பான படம், முன்பாதி கொஞ்சம் நீளம், பின்பாதி நறுக், ஐம்பாதாவது படம் வெற்றிப்படமாக அமைவது பலருக்கு நடக்கவில்லை, தல ஜெயித்திருக்கிறார், இளந்தொந்தி, நரை முடி, நாற்பது வயதை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்,…………இவைதான் அவற்றின் சாரம். இமேஜைப் பற்றி கவலைப்படாமல் நடித்திருக்கும் அஜித்திற்கு பாராட்டு மழைகள் குவிகின்றன. இதில் இமேஜை தியாகம் புரிந்திருப்பது எங்கே வருகிறது?

திரைக்குள்ளே பிடரியில் வழியும் முடி, பீடி, பன்ச் டயலாக் என புகழடைந்த ரஜினி திரைக்கு வெளியே வழுக்கை, நரை, தாடியுடன்தான் நடமாடுகிறார். 60 வயது பிறந்த நாட்களை கொண்டாடியபடிதான் இன்றும் சினிமாவில் நடிக்கிறார். இவையெல்லாம் ரஜினியின் மாகமித்யங்கள் என்று சொல்லுவதை விட ஆண்மையின் அடையாளம் என்று சொல்லுவதே பொருத்தம். ஆனால் இத்தகைய வாய்ப்புகள் ஒரு நடிகைக்கு இல்லவே இல்லை. அஜித்தின் ஜோடி த்ரிஷா இது போல தனக்கு 35 வயது என்று ஒரு பேச்சுக்கு அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்?

நடிகைகள் திருமணம் புரிந்தாலே அவர்களது சந்தையும், நடிப்பும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஆனால் நடிகர்களோ அவர்கள் திருமணம் புரிந்தாலும், பிள்ளைகள் பெற்றுக் கொண்டாலும், நடுத்தர வயதில் டீன் வயது நாயகிகளோடு டூயட் பாடுவதும், கல்லூரிக்கு போவதும் சாதாரணம். வேறு வார்த்தையில் சொன்னால் ஒரு ஆண் எந்த வயதிலும் பெண்டாளுவதற்கு தயாராக இருக்கிறான். அப்படி இருப்பதுதான் அவனது அடையாளம் எனும் ஆணாதிக்க சமூக மனோபாவத்தில்தான் அஜித்தின் நாற்பது வயது பிரகடனம் மாபெரும் தியாகமாக போற்றப்படுகிறது. சரி, அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் 2வது சுதந்திரப் போராட்டமாக போற்றப்படும் போது அஜித்தின் தியாகத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?

50 படங்களை முடித்திருக்கும் அஜித் மங்காத்தாவைத் தவிர மீதி படங்களில் வழமையான நீதி பேசும் நாயகனாகவே நடித்திருக்கிறார். வாலி, பில்லா போன்ற படங்களில் அவர் இரட்டை வேடங்களில் ஒன்றில் மட்டும் வில்லனாக நடித்திருந்தாலும் அவைகளின் தீமையை நன்மை வேட அஜித் விஞ்சி விடுகிறார். ஆனால் மங்காத்தாவில் ஒரு முற்றிலும் வில்லத்தனமான பாத்திரத்தில் அவர் நடிக்கத் துணிந்திருப்பது முதலில் ஒரு பாரிய மாற்றம் என்று தோன்றினாலும்…..

சில விதிவிலக்குகளைத் தவிர தமிழ் ஹீரோக்கள் அனைவரும் தீமையினை வென்று நன்மையை நிலை நாட்டும் வீரர்களாகவே நடித்திருக்கிறார்கள். அப்படித்தான் இரசிகர்களும் போற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர், ரஜினி ஃபார்முலாவின் இலக்கணமே அப்படித்தான். ஆனால் மங்காத்தாவில் இந்த இலக்கணம் சுக்கு நூறாக உடைத்தெறியப்படுகிறது. இது நடிகர், இயக்குநரின் புரட்சி என்பதை விடவில்லத்தனமே இனி வாழ்வின் கொண்டாட்டங்களுக்கு அடிப்படை என்று தெளியும் நடுத்தர வர்க்கத்தின் சமூக உணர்ச்சிக்கு பொருத்தமான கதை என்று சொல்லலாமா? இந்த பண்பு மாற்றத்தினை விமரிசனம் எழுதிய பதிவர்கள் யாரும் கவனிக்கவில்லை என்பதை விட அப்படி கவனித்து பார்க்குமளவு இது ஒன்றும் அந்நியமானதல்ல என்றும் சொல்லலாமல்லவா?

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தாய்க்குலம் மீதான செண்டிமெண்ட்தான் தமிழ் சினிமாவை காலந்தோறும் தாங்கி வந்த அஸ்திவாரம். அதை காதல், பாசம், நட்பு, தேசபக்தி என்று கிளை விரித்துப் பார்த்தாலும் எல்லாவற்றிலும் தாய்க்குலத்தின் மேன்மை போற்றப்பட்டிருக்கும்.திரையங்குகளில் தாய்மார்களின் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைப் பொறுத்து ஒரு படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படும் நிலை.

பார்க்காமலேயே காதல் என்று காதலுக்கு புதிய பரிமாணம் படைத்த காதல் கோட்டை, மிரட்டி காதலிக்க வைத்த அமர்க்களம் என்று பல்வேறு காதல் படங்களில் நடித்துப் புகழடைந்த அஜித் இங்கே காதலை இரசிகர்களின் பேராதரவுடன் கதறக் கதறக் ‘கற்பழிக்கிறார்’.

லட்சுமிராயுடன் படுத்துவிட்டு அவரை தந்திரமாக வெளியேற்றிவிட்டு, காதலி த்ரிஷாவை அப்பாவி போல வரவேற்கிறார். கண்மூடி முத்தமிடுகிற இடைவேளையில் த்ரிஷாவுக்குத் தெரியாமல் லட்சுமிராயின் பர்சை வெளியே நிற்கும் அவரிடம் கொடுத்து விட்டு “என்னாச்சு” என்று கேட்கும் த்ரிஷாவிடம் பல் விளக்கிவிட்டு வரவா என்று இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்பது போல் சொல்லும்போது இரசிகர்களின் நகைப்பு ஆரவாரத்துடன் மயிர் கூச்செரிகிறது. பணம் கொள்ளையடிக்கப்பட்டவுடன் இனி காதலுக்கு வேலையில்லை என்றவுடன் த்ரிஷாவின் முன்னே அவரது தந்தை செட்டியாரை ஓடும் காரிலிருந்து தள்ளிவிடுகிறார். அப்போது காட்டும் அஜித்தின் முகபாவம் ” போங்கடி நீங்களும் உங்கள் காதல் மசுரும்” என்பது போல அபிநயிக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

சேர முடியாமல் தவிக்கும் காதல் உணர்ச்சிப் படங்களுக்கு அடிமையாயிருந்த இரசிகர்கள் இங்கே படத்தின் துவக்கத்திலேயே காதலை செருப்பில் போட்டு மிதிக்கும் காட்சிகளில் மனதை பறி கொடுத்த மர்மம் என்ன? ஆம் நண்பர்களே அந்த தலைமுறை மாறிவிட்டது என்ற உண்மையினை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். அதனால்தான் சின்னத்தம்பியின் அந்த பாடிகார்டு காதல் சென்டிமெண்டை வைத்து பி.வாசு அரைத்திருக்கும் புலி வேஷம், புளித்துப் போய் தவளை வேடமாய் இரசிகர்களால் புறக்கணிக்கப்படும்போது மங்காத்தா சீறும் சிறுத்தை போல பட்டயைக் கிளப்புகிறது. இது பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என்ற வேறுபாட்டால் நடக்கவில்லை. எந்தக் கதை சமூகத்தின் உணர்ச்சியோடு பொருந்திப் போகிறது என்பதோடு தொடர்புடையது. எனில் அந்த உணர்ச்சி எது?

படத்தில் பல ஆண் நண்பர்களோடு பழக்கமுடைய காமக்கிழத்தியாக வரும் லட்சுமி ராய்தான் இரசிகர்களின் மனதை அள்ளுகிறார். அடக்க ஒடுக்கமாகவும், ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் கொஞ்சம் மதுவருந்தும் அல்ட்ரா மாடர்ன் காதலியாக த்ரிஷா இருந்தாலும், ராயின் இருப்பே இரசிகர்களுக்கு விருப்பமானதாக இருக்கிறது. இதை லக்கிலுக் போன்ற ஃபார்முலா விமரிசன பதிவர்கள் கவர்ச்சியின் அளவுகோலால் வரையறுக்கிறார்கள். ஆனால் உடல் தோற்றம் தரும் கவர்ச்சியை விட மனம் விரும்பி ஒட்டும் கருத்து உணர்ச்சிதான் இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவதற்கான அளவுகோல். அந்த நவீன உணர்ச்சிதான் என்ன?

காலம் முழுவதும், வாழ்க்கை முழுவதும் ஒரு பெண்ணை மட்டும் நினைத்து இராமன் போல ஏகபத்தினி விரதனாக இருப்பது ஒரு இலட்சியம் என்ற அளவில் கூட இன்று மதிப்பற்றது.முன்பு கூட அப்படி ஒரு யதார்த்தம் நிறைவேறக் கடினமானது என்றாலும் மதிப்பீடு என்ற அளவிலாவது அது நினைக்கப்பட்டு வந்தது. அதனால்தான் அத்தகைய காதல் படங்கள் கட்டற்று ஓடி திரையுலகை ஆக்கிரமித்து வந்தன. இனியும் கூட அத்தகைய படங்கள் வரும் என்றாலும் அது முந்தைய காதல் போன்று புனிதக் காதலாக இருக்க வாய்ப்பில்லை. சமூக வாழ்க்கை மாறுவதற்கேற்ப காதலும் கூட மாறித்தானே ஆக வேண்டும்?

செட்டியாரிடம் வேலை செய்து பின்னர் அவரது பணத்தை கொள்ளையடிக்க முனையும் வைபவ் தனது காதல் மனைவி அஞ்சலியுடன் அன்பாக அன்னியோன்யமாக வாழ்கிறார். அர்ஜூனும் தனது மனைவியை காதல் பாசத்துடன் பராமரிக்கிறார். ஆனால் கதையின் திருப்பங்களுக்குத் தேவை என்ற அளவில் வரும் இந்தக் காதல் காட்சியின் உணர்ச்சிகளை இரசிகர்கள் பொருட்படுத்தவில்லை. பின்னர் தனது மனைவியைக் காப்பாற்றுவதற்காக வைபவ் மற்றவர்களை காட்டிக் கொடுக்கத் துணியும் போது கூட அவர் மேல் இரசிகர்கள் அனுதாபம் கொள்ளவில்லை. அவரை ஒரு வில்லனாகவே பார்க்கிறார்கள். இந்த உலகின் நம்பர் ஒன் காதலியாக பணம் இருக்கும் போது இந்த மனிதப்பிண்டமான ஒருவருக்கு ஒருவர் எனும் காதல் தனது புனிதத்தை முன்வைப்பது பொருத்தமாக இல்லை என்பது வேறு விசயம். “பணம் இருந்தால் நமக்கு ஆயிரம் பெண்கள் கிடைப்பார்கள்” என்று அஜித் பேசும்போது இரசிகர்கள் கைதட்டி வரவேற்பதின் பொருள் அதுதானோ?

வேறு வழியின்றி ஒரு மனைவி, ஒரு காதலி, ஒரு கேர்ள் பிரண்டுடன் வாழ்பவர்களும் கூட தொட்டறியத்தக்க தவறுகளை செய்யாதவர்களாகவே இருந்தாலும், அவர்கள் மனது அப்படி வாய்ப்பிருக்கும்போது பலரை அனுபவிக்கவே நினைக்கிறது. வாழ்வின் இன்பச் சிகரங்களை எட்டுவதற்கு பணம்தான் ஏணி எனும் போது ஏற ஏற துய்க்க வேண்டிய இன்பங்களின் எண்ணிக்கை கூடி விடுகின்றன. காதலும் இல்லையில்லை காதல்களும் அதில் அடக்கம்தானே?

மேலதிக ஐந்திலக்கச் சம்பளத்தில் வாழப் பழகிவிட்ட இன்றைய படித்த தலைமுறையினர் காதலுக்காக முன்பு போல போராடுவதில்லை. “ஜாலிக்காக காதல், செட்டிலாவதற்காக திருமணம்” என்பதே அவர்களது சமூக முழக்கமாக இருக்கும் போது லட்சுமிராய் மட்டும் கிளுகிளுப்புடன் இரசிக்கப்படுவதில் வியப்பில்லை. ஆனால் பணத்தை எடுத்துக் கொண்டு நால்வர் கும்பலில் இருவர் மட்டும் போகும் போது லட்சுமிராயும் இணைந்து கொள்கிறார். அதில் ஒருவனை அவர் சுட்டுக் கொல்ல பணத்தின் பங்கு இருவருக்கு மட்டும் என்றாகிறது. அந்த நேரத்தில் அஜித் வரும்போது அவருடன் சேர்ந்து கொள்வதாக கூறி அவரைக் கொல்ல முனைகிறார். ஆனால் அஜித் அதை முன்னறிந்து லட்சுமி ராயை கொல்கிறார். கொல்லும் போது “தேவடியா முண்டை” என்று திட்டுவது சென்சாரில் மியூட் செய்யப்பட்டாலும் தெளிவாக புரிகிறது. இரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள், அந்த வசனத்திற்கு. அனுபவித்து விட்டு மட்டும் போக வேண்டிய ஒரு காமக்கிழத்தி வாழ்க்கையை அதாவது பணத்தை பங்கு கேட்டால்?

_________________________________________________________

“தி இஸ் மை Fucking மணி, தி இஸ் மை Fucking கேம்”
– 
மங்காத்தாவில் வினாயக்கின் பஞ்ச் டயலாக்.

பஞ்ச் டயலாக் என்றால் எதுகை, மோனை, சந்தத்துடன் மட்டும் வருவது அல்ல. கல்லூரி மாணவர்கள் தலைமுறை தலைமுறையாக தங்களது கலாட்டாக்களுக்கேற்ற பழமொழிகளை புதுப்பிக்கிறார்கள். அவை அந்தந்த கால இளையோரது மன ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. பணம் குறித்த அஜித்தின் கர்ஜனை முழக்கம் வாக்கியமென்ற வகையில் சாதாரணமாக இருந்தாலும் வாழ்க்கை என்ற வகையில் முக்கியமான ஒன்று.

ஹாலிவுட்டில் கொள்ளை, திருட்டு குறித்து ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில மங்காத்தா எனும் மசாலாவை விட காத்திரமான முறையில் அழுத்தமாக வந்திருக்கின்றன. தமிழ் இயக்குநர்கள் சுட்டுப் படமெடுப்பது தினசரி குடிக்கும் சரக்கு போல சாதாரணம் என்றாலும் இயக்குநர் வெங்கட் காலத்துக்கேற்ற கதைக்களத்தினையும், உணர்ச்சியையும் மீட்டிருக்கிறார் என்பதே முக்கியமானது. அந்தக் காலம் எது?

அண்ணா ஹசாரே திகார் சிறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது டைம்ஸ் நௌ தனது பிரச்சாரத்தினை சூடு பறக்க ஆரம்பித்திருந்த நேரம். அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்படித்த செய்தி ஒன்று. ஹாங்காங்கில் இருக்கும் மார்கன் ஸ்டான்லி எனும் நிதி மூலதன ஆலோசனை நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் சேட்டு அம்பி ஒருவன் இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு மும்பை வந்து சேர்கிறான். இந்தியாவில் இருக்கும் போது வருமானவரியை ஏமாற்றியதையெல்லாம் ஹாங்காங்கில் தன்னால் நினைத்துப் பார்க்க முடியாது என்று கூறுபவன் அது போன்று இந்தியாவிலும் வரவேண்டுமென்று இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக கூறுகிறான்.

மார்கன் ஸ்டான்லி எனும் நிதி மூலதன ஆலோசனை நிறுவனம் பங்குச் சந்தை சூதாட்டங்களையே தொழிலாக கொண்டு நடத்தப்படும் நிறுவனம். தனியார் மயத்திற்காக பொதுத்துறைகளை விற்க வேண்டுமென்பதையே தொழில் முறை ஆலோசனைகளாக அமல்படுத்தும் நிறுவனம். இப்படி சூதாட்டத்தையே தொழிலாகக் கொண்டு வாழும் அந்த சேட்டுப்பையன் இங்கே ஊழலை எதிர்க்கிறான் என்பதை என்னவென்று சொல்வீர்கள்? இதுதான் இந்தக் காலத்தின் உணர்ச்சி என்றால் ஏற்பீர்களா?

ஹாலிவுட்டின் கொள்ளையடிக்கும் படங்கள் ராபின் ஹூட்டில் துவங்கி ஒரு நீண்ட மரபினைக் கொண்டிருக்கிறது. திருட்டின் மீது மக்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கக் காரணம் சொத்துடமையின் ஏற்றத்தாழ்வான சமூக யதார்த்தம்தான். நேர்மையாக வாழ்ந்து அரை வயிற்றுக் கஞ்சி குடிக்கும் எளியோரும் தாம் அதிகம் பணம் சம்பாதிப்பதை ஒரு கனவாகவோ, இல்லை சினிமாவாகவோ நினைத்துப் பார்த்து மகிழ்வதை நாம் புரிந்து கொள்வது கடினமல்ல.அநீதியான இந்த சமூக அமைப்பு தான் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஆயிரம் தடைகள் ஏற்படுத்தியிருக்கும் போது அந்த தடைகளை ஒரு கொள்ளையன் தகர்த்தெறிவதை மக்கள் விரும்பாமலில்லை.

ஆனால் இந்த விருப்பம், கனவு வர்க்க ரீதியாக மேலே செல்லச் செல்ல வேறு பரிமாணத்தை எடுக்கிறது. பசையான சம்பளத்துடன் வாழும் படித்த நடுத்தர வர்க்கம் இந்தக் கனவினை நனவாக்க பங்குச் சந்தை, சிட் பண்ட், தங்க முதலீடு, ரியல் எஸ்டேட் என்று தன்முன் விரிந்திருக்கும் ராஜபாட்டையில் வேகமாக ஒடுவதற்கு விரும்புகிறது. சொந்த வீடு, சில பல இலட்சங்களில் வாரிசுகளுக்கு இன்ஜினியர், மருத்தவர் சீட், தொடர்ந்து விலையேறும் நிலம் எல்லாம் அவர்களுக்கு இருந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தங்கள். தனது அலுவலகத்திற்கு வாங்க வேண்டிய ஸ்டேசனரி பொருட்களுக்காக கமிஷன் வாங்கும் தனியார் நிறுவன அதிகாரியோ, தனியார் நிறுவனங்களை கவனிப்பதற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரியோஇப்படித்தான் ஓடுகிறார்கள். ஊழலின் ஊற்று மூலம் முதலாளித்துவம் என்றாலும் ஊழலின் சமூக அடிப்படை இவர்களைக் கொண்டே தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. கூடவே இவர்கள்தான் ஊழல் ஒழிப்பிற்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். எனில் இது என்ன வகைமுரண்?

படத்தில் அஜித்து புகை பிடிப்பதிலும், குடிப்பதிலும் அப்படியே கிழக்கு மகாபலிபுரம் சாலையின் வார இறுதிக் கொண்டாட்டத்தினை நினைவுபடுத்துகிறார். மகாபலிபுரம் செல்ல முடியாதவர்கள் டாஸ்மாக்கை மொய்க்கிறார்கள். அன்றாடம் அளவாகவோ, அளவு கடந்தோ, வார இறுதியில் அசுரத்தனமாகவோ குடிக்க வேண்டுமென்றால் வாழ்க்கையை இன்பமென பருகி நுகர பல்வேறு பொருட்களும், வசதிகளும், ஆடம்பரங்களும், சேவைகளும் வேண்டும். அவற்றை அடைய குறுக்கு வழியில் பணம். பணத்தை அடைந்தால் கொண்டாட மது.

மங்காத்தா படத்தை இரசிப்பவர்களெல்லாம் உடனே திருடி சம்பாதித்து கொண்டாடப் போகிறவர்கள் அல்லதான். ஆனால் அப்படி திருடாவிட்டாலும் ஏதாகிலும் குறுக்கு வழியில் பணம் வரவேண்டும் என்ற விருப்பமுடையவர்கள். இப்படி பொங்கி வழியும் நுகர்வுக் கலாச்சார மதத்தின் ஒரே கடவுளான பணத்தை அதை சம்பாதிப்பதை அல்லது கொள்ளையடிப்பதை ஒரு தேர்ந்த ரசனையுடன், திறமையுடன், வெறியுடன் செய்யும் அஜித்தின் காட்சிகளில் இரசிகர்களின் மனம் அவர்களையறியாமலேயே ஒன்றுகிறது. அந்த மாபெரும் பணம் என்ற உணர்ச்சிதான் காதலை கத்திரிக்காய் போல தூக்கி எறிவதை ஏற்றுக் கொள்கிறது. படித்த நடுத்தர வர்க்கத்தின் சமூக உணர்ச்சி இந்தப் பணத்தோடு தொடர்புடையது என்பதை யார் மறுக்க முடியும்? பணத்திற்காக வெறி கொண்டவனாக அஜித் கத்தும் முகபாவனைகளும், வீடியோ கேமில் வென்றே ஆக வேண்டுமென்று ஒரு மேட்டுக்குடி சிறுவன் காட்டும் வன்முறை முகபாவனைகளும் வேறு வேறு அல்ல.

அண்ணா ஹசாரேவுக்காக சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்திய படங்கள் வெளியாகியிருந்தன. படத்தில் ஐ.ஐ.டி கோல்டு மெடலிஸ்ட்டாக வரும் பிரேம்ஜி கொள்ளையடிப்பதற்கான சாப்ட்வேர் வேலைகளை திறமையுடன் செய்கிறார். 65.000 ரூபாய் சம்பளத்தில் பெங்களூரு போக வேண்டியவர் இங்கே நூறு கோடி சம்பாதிப்பதற்கு வாய்ப்பிருப்பதை ஒரு கேரியர் முன்னேற்றமாக எடுத்துக் கொள்கிறார், பேசுகிறார். நிஜத்தில் இந்தியாவில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்மில் படித்துவிட்டு நாசாவில் உலகநாடுகளை ஒழிப்பதற்கு வேலை செய்பவர்களும், கோல்டு மேன் சாசில் கள்ளக்கணக்கு எழுதுபவர்களும் சொல்லும் சலித்துப்போன விசயம் என்ன? “இந்தியாவில் தகுதி, திறமைகளுக்கு வாய்ப்பில்லை, எங்கள் திறமைகளுக்கு மதிப்பளிப்பது அமெரிக்காதான்”. ஆனால் இந்த பச்சையான தேச துரோகிகள் அமெரிக்காவிலும் அண்ணா ஹசாரேவுக்காக போராடாமல் இல்லை. இது முரணா, இல்லை முரணை மறைக்கும் மயக்கமா ?

ஐ.ஐ.டி மாணவர்களை இயக்குநர் வெங்கட் பிரபு இழிவுபடுத்தி விட்டதாக அவர்கள் யாரும் சண்டைக்கு வரப்போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இப்படி ‘சாகசங்கள்’ செய்து பணம் அள்ளுவது ஒரு தவறல்ல. ஆனால் ஒரு தலித் மாணவன் அங்கே நுழைந்தால் கோட்டா என்று கேலிசெய்வதும், இந்தியாவில் மெரிட்டுக்கு மதிப்பில்லை என்று போராடவும் செய்வார்கள். இவர்கள்தான் அண்ணா ஹசாரேவின் போர்ப்படைத் தளபதிகள் எனில் இந்தப் போர் யாரை எதிர்த்து?

அஜித், அர்ஜூன் இருவரும் ஆந்திர கேடரைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள். 500 கோடியைக் கொள்ளையடிக்க ஒருவர் போலீசு துறையின் உள்ளேயும், ஒருவர் வெளியேயும் வேலை செய்கிறார்கள். அதிலும் அர்ஜூன் குடியரசுத் தலைவரின் நேரடி அதிகாரம் பெற்ற சூப்பர் போலீசு. இதுவரை அர்ஜூன் எத்தனை தேசபக்திப்படங்களில் சூப்பர் காப்பாக நடித்திருக்கிறார், எத்தனை பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை கொன்றிருப்பார், தீவிரவாதிகளின் அபாயத்திலிருந்து எத்தனை முறை தேசத்தையும், பிரதமரையும் காப்பாற்றியிருப்பார்? அத்தகைய டிரிபிள் எக்ஸ்-எல் தேசபக்தி எக்ஸ்பர்ட் இங்கே ஒரு அல்ட்ரா மாடர்ன் கொள்ளையின் சூத்திரதாரி என்றால்?

எனில் அர்ஜூனும் தனது இமேஜைத் துறந்து விட்டார் என்று பொருளா? இல்லை. ஒருவேளை இந்தப்படத்தில் அவரை ஐ.எஸ்.ஐ உளவாளியாக நடிக்க கேட்டிருந்தால் நிச்சயம் மறுத்திருப்பார். ஏனெனில் பாக்கிஸ்தானை ஆதரிப்பதுதான் தேச துரோகமே அன்றி பணத்தை குறுக்கு வழியில் சம்பாதிப்பது அல்ல. இப்போது யாரும் திகார் சிறையில் ஊழல் வழக்களுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் அரசியல் வாதிகள், அதிகாரிகளை அப்படி கசாப் போன்று தேசவிரோதிகளாக கருதவில்லையே?

போலீசு அதிகாரிகளின் கடமை, நேர்மைகளைப் பற்றி விடாது பேசி பொளந்து கட்டும் நம்ம ஆக்ஷன் கிங்கை இப்படி பீரோ புல்லிங கொள்ளையன் போல இல்லாமல் கொஞ்சம் மாடர்னாக காட்டியிருந்தாலும் இதற்காகவே இயக்குநருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் சி.பி.ஐ டயரிக் குறிப்பு துவங்கி, விஐயகாந்த் வரை இவர்கள் போலீசுக்கு போற்றிப் பாடிய தூபங்களையெல்லாம் மங்காத்தா அடித்துக் காலி செய்திருக்கிறது. எனினும் XXXL  தேசபக்தி அர்ஜூன் இமேஜ் ஆத்மா சாந்தியடையும் வண்ணம் செட்டியாரின் அடியாளாக முசுலீம் அடையாளத்துடன் வரும் நடிகர் பின்னர் நால்வர் கும்பலைச் சேர்ந்த திருட்டு போலீஸ் இன்ஸ்பெக்டரால்  கொல்லப்படுவது படத்தில் இருக்கிறது.

ஆனாலும் பணத்தை காலம் அளிக்கும் தருணத்தில் கைப்பற்றும் வாய்ப்பை யாரும் இழக்கக் கூடாது என்பது ஒரு சமூக உணர்ச்சியாக கோலேச்சும் காலத்தில் இந்த நல்ல அதிகாரி இமேஜ் மாறியிருப்பது குறித்து இரசிகர்கள் அவ்வளவாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. திருட்டு வேறு, தீவிரவாதம் வேறு என்ற லாஜிக்படியும் அது அப்படித்தான் இருக்கிறது.

வார நாட்களில் கடுமையாக ‘உழைத்து, சிந்தித்து’ பணத்தை திருடி விட்டு வார இறுதியில் குடியும் கூத்துமாக கொண்டாடலாம் என்பதே மங்காத்தா நமக்குச் சொல்லும் நீதி. ஒரு மசாலா படத்துக்கு இவ்வளவு வலிந்து கட்டி விமரிசனமா என்று பலர் ஐயுறலாம். ஆனால் மங்காத்தாவின் கதை தற்செயலாக எடுக்கப்பட்டிருப்பினும் அது ஜஸ்ட் லைக் தட் கடந்து செல்லும் கதையாக இருப்பினும், அது ஆங்காங்கே இயல்பாக தெரிவிக்கும் வாழ்க்கை குறித்த யதார்த்தங்கள் நமக்கு முக்கியமானவை. அதை முற்றும் உணர வேண்டுமென்றால் சமகால இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக யதார்த்தத்தினை புரிந்திருக்க வேண்டும்.

மங்காத்தா படத்தை அழகிரி மகன் தயாரித்திருந்தாலும் சில ‘பிரச்சினைகள்’ காரணமாக சில சுற்றுக்களுக்குப் பின்னர் சன்.டி.வியால் வெளியிடப்பட்டிருக்கிறது. மங்காத்தா படம் ஏன் இப்படி ஓடுகிறது என்ற காரணம் தெரியாத இயக்குநர் வெங்கட் பிரபு திருப்பதி சென்று மொட்டை அடித்திருக்கிறார். கருப்புப் பணத்தை காணிக்கையாக அள்ளும் கடவுளுக்கு அவர் பக்தராக இருப்பதும் பொருத்தமானதுதான். ஆனால் தான் ஒரு மொக்கை, தன் படமும் ஒரு மொக்கை என்பதில் அவருக்கு கருத்து வேறுபாடு இருக்காது. இருப்பினும் வரலாற்றின் சில காட்சிகளில் மொக்கைகள் கூட அறிந்தோ அறியாமலோ இப்படி ஒரு படத்தை தரலாம். இது அவர்களது அறிவு குறித்த பிரச்சினை அல்ல, அவர்களின் சமூக உணர்வு அல்லது ட்ரெண்ட் குறித்த எச்சரிக்கை உணர்வு என்றும் சொல்லலாம்.

படத்தில் கிரிக்கெட் சூதாடிகளை அர்ஜூன் குழுவினர் பிடிக்கும் செய்திகள் காட்டப்படும் போது அருகில் அண்ணா ஹசாரேவின் போராட்டச் செய்திகளும் காட்டப்படுகின்றன. ராமலீலா போராட்டத்திற்கு முன்னரேயே மங்காத்தா படம் எடுக்கப்பட்டிருப்பினும், போஸ்ட் புரடக்ஷனில் சென்சேஷன் கருதி படக்குழுவினர் இதை சேர்த்திருக்கிறார்கள். எனினும் இரண்டும் ஒன்றுதான்என்று இயக்குநர் காட்ட முனைந்திருப்பார் போலும். உண்மைதான். நாமும் அதைத்தான் சொல்கிறோம்.

அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் மெழுகுவர்த்தி பிடித்த கையோடு அடுத்த நாள் மங்காத்தாவை முதல் காட்சிக்கு சென்று இரசிக்க முடியுமென்றால் இரண்டில் எது உண்மை? முன்னது ஒரு தர்ம சேவை வீக் எண்ட் என்றால் பின்னது பொழுது போக்கு வீக் எண்ட் என்றும் சொல்லாம். முன்னது அவர்களின் அரசியல் பார்வை என்றால் பின்னது அவர்களின் கலைப்பார்வை என்றும் சொல்லலாம். அதனால்தான் அண்ணா ஹசாரேவின் அரசியலுக்கு பொருத்தமான கலை உணர்ச்சி மங்காத்தாவில்தான் வெளிப்படுகிறது என்பதை நாம் உறுதியாகச் சொல்கிறோம். ஊழல் எதிர்ப்பும் ஒரு ஃபேஷன், பணம் சம்பாதிப்பதும் ஒரு பேஷன். முன்னது நாட்டுக்காக, பின்னது தனக்காக.

இதற்கு மேலும் புரியாதவர்களுக்குத்தான் இந்தத் தலைப்பு:

அண்ணா ஹசாரேவை என்கவுண்டர் செய்த ‘தல’ யின் மங்காத்தா!

அல்லது

IF I AM ANNA, I AM MANKATHA TOO !

முதல் பதிவு: வினவு

சவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு…

3 செப்
சவூதியில் “ஹுரூப்”  “Run away ”  “هرب” என்ற விதியை இந்தியர்கள் மீது வழுக்கட்டாயமாக திணித்து அவர்கள் பாதிக்கப்படுவதை ரத்துசெய்யும் பணியில், இந்திய வெளியுறவு துறை, இந்திய ஜனாதிபதி, இந்தியாவின்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை, சவூதி மன்னரின் தனிப்பிரிவு போன்ற துறைகளின் தனிக்கவனத்திற்கு கொண்டு சென்று ‘ஹுரூப்’ என்று சொல்லக்கூடிய அந்த கொடிய சட்டம் எந்த காரணமுமின்றி இந்தியர்கள் மீது பாயாமல் தடைசெய்ய, சவூதி அரேபியா மத்திய மண்டல தமுமுக மற்றும் கேரளா அசோஸியேஷன் இணைந்து கூட்டுநடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கின்றன. அதற்கான அனைத்து சட்டப்பூர்வ ஆலோசனைகளும் பெற்றப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இது சம்பந்தமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி அவர்களிடம் கேரளா அசோசியேசன் நிர்வாகிகள் மூலம் நேரடியாக பேசப்பட்டுள்ளது. சவூதி வாழ் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு  இந்திய உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இதென்ன சட்டம்… “ஹூரூப்”…?

“ஹூரூப்” என்று சொல்லக்கூடிய இந்த சட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், உதாரணமாக ஒருவரிடம் 15 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர் தனது பணியை முடித்துக் கொண்டு தாயகம் திரும்ப முடிவெடுக்கிறார் என்றால் அவர் பணியாற்றிய அந்த 15 ஆண்டுகளின் சர்வீஸ் பணம் வழங்க வேண்டும். அதை வழங்காமல் அவரது பாஸ்போர்ட்டை ‘ஜவாஸாத்தில்’ (பாஸ்போர்ட் அலுவலகத்தில்) ஒப்படைத்து இவர் ஓடி விட்டார் என்று அவரின் ஸ்பான்சர் புகார் செய்தால் எந்த கேள்வி கணக்குமின்றி அவர் குற்றாவாளி பட்டியலில் சேர்ந்து விடுகிறார். ஏற்கனவே அவரின் கைரேகைகள் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் அதன் பின் அவர் எந்த நிலையிலும் சவூதி மற்றுமின்றி வலைகுடாவின் எந்தப் பகுதிக்கும் வர முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

இந்தச் சட்டத்திலிருந்து நமது நாட்டினரை பாதுகாக்க நமது தூதரகத்திற்கு அதிகாரம் உயர்த்தப்பட வேண்டும். ஒரு இந்தியர் ஹுரூப் சட்டத்தின் கீழ் வந்தால் தூதரகம் தலையிட்டு உண்மைநிலையை கண்டறிந்து உடனடியாக அவருக்கு நீதி கிடைக்க முன்வரவேண்டும் அதற்கு இந்தியத் தூதரகத்தின் தரம் உயர்த்தப்பட்டு சவூதி வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். 
வழக்கின் முக்கிய நோக்கம்:

சவூதியில் செயல்படும் இந்திய தூதரகத்திற்கு போதிய அதிகாரம் இல்லாததால்… சவூதி அரேபியாவிற்கு பணிக்கு வரும் பணியாளர்களை அவர்களின் ஸ்பான்சர்கள் கொத்தடிமைபோல் நடத்தும் அவல நிலை, வேலைக்கு தகுந்த ஊதியமின்மை, உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்காதது, வாகன ஓட்டுனர்களுக்கு- குறிப்பாக வீட்டு வாகன ஓட்டுனர்களுக்கு அவர்களின் இக்காமா, வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விபத்து காப்பீடு போன்ற அடிப்படை உரிமைகள் கூட வழங்க மறுப்பது, விபத்துகள் ஏற்பட்டால் தொழிலாளியின் ஊதியத்தில் பிடித்தம் செய்வது, வீட்டுப் பணிப்பெண்கள் படும் சொல்லொன்னாத் துயரங்கள்… போன்ற அவலநிலை நிலவுகிறது. 

இதுபோன்ற செயல்களை கண்டிக்கும் உரிமையைும் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு அவர்களுக்குரிய உரிமையை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுக்கும் புதிய முறையை கொண்டு வர சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளும் இந்திய தூதரகத்தின் அதிகாரம் உயர்த்தப்பட வேண்டும். இந்திய தூதரகத்தில் சவூதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவலாளிகள் நியமிக்கப்படவேண்டும். 24 மணிநேரமும் அவசர உதவிக்கு தொடர்பில் இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து பணிக்கு வரும் ஒவ்வொரு பணியாளருக்கும் வேலை ஒப்பந்த படிவத்தில் தூதரக மேற்பார்வையுடனான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இது போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

பிற தூதரகங்களுக்கு உள்ள உரிமை போன்று

சவூதி அரேபியாவில் செயல்படும் ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் தற்போது (சில மாதங்களுக்கு முன்)  இலங்கை போன்ற தூதரகங்கள் தங்களின் முழு அதிகாரத்தை பயன்படுத்தி தன் நாட்டு குடிமக்களுக்கு நிவாரணமும் அவசர உதவிகளும் செய்து வருவது போல், 20 இலட்சத்திற்கும் அதிகமாக பணியாற்றும் இந்திய மக்களுக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சவூதி தொழிலாளர் நல அமைச்சகத்திடம் முறையிட்ட போது அதன் அதிகாரி…  

‘முதன் முதலாக ஒரு இந்தியர் தனது மக்களுக்காக முறையிடும் முதல் புகாராக உள்ளது (!?)’என்று வியந்து பாராட்டினார். ‘இன்ஷாஅல்லாஹ் அனைத்து உரிமைகளுக்கும் நாம் உதவிகள் செய்வோம்’ என்று சொல்லிய அமைச்சகம் ‘முதலில் உங்களின் கோரிக்கையை இந்திய உச்ச நீதி மன்றத்திலும் பாராளுமன்றத்திலும் ஒலிக்கச் செய்யுங்கள்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இன்ஷாஅல்லாஹ், இன்று செப்டம்பர் 3-ம் தேதி தற்போதுள்ள இந்தியத் தூதர் Mr.Talmiz Ahmadதனது பணிக்காலம் முடித்து திரும்பிச் செல்கிறார். புதிய தூதர் Mr.Hamid Ali Rao எதிர்வரும் 15-ம்தேதி பொறுப்பெடுக்க உள்ளார். புதிய தூதர் UN-ல் பணியாற்றிய IAS அதிகாரி என்று அறிந்துள்ளோம். அவர் பொறுப்பிற்கு வரும் முன் வேண்டிய தகவல்கள் சேகரித்து இன்ஷா அல்லாஹ் கோரிக்கைகள் முன் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. 
அதனடிப்படையில் http://www.hurub.com/ என்ற இணையம் கேரளா அசோசியேசன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உள்ள மனு படிவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் உள்ளீடு செய்யவும். இதில் உள்ளீடு செய்யும் புகார்கள் அனைத்தும் உடனடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதி மற்றும் வெளியுறவுத்துறை போன்ற துறைகளுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சவூதியில் 2 லட்சம் இந்தியர்கள் பாதிக்கபட்டு சட்ட உதவிகளின் தேவை உள்ளவர்களானக இருக்கிறார்கள் என்ற தகவல் நம்மை பெரும் துயரில் ஆழத்தி உள்ளது. அதிகாரப்பூர்வமான புகார்கள் முறையான வகையில் சென்றால்தான் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் ஆகவே இந்த இணையத்தில் உள்ள படிவத்தில் தங்கள் (சவூதி அரேபியாவில்) பகுதியில் பதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தகவல்களை உள்ளீடு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்.
சவூதியில் உள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வளர்களும் உங்களுக்குத் தெரிந்த பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் மேலே குறிப்பிட்டுள்ள http://www.hurub.com/ இந்த இணைய முகவரியில் உள்ள மனு படிவத்தில் பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்.  குறிப்பாக தமுமுக அனைத்து மண்டல, கிளை நிர்வாகிகளும் இந்த பணியை மேற்கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம். சவூதி வாழ் இந்தியர்கள் எதற்கும் அந்த வலைப்பக்கத்தை புக்மார்க்கில்/ஃபேவொரைடில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கேனும் உபயோகப்படலாம்.
குறிப்பு:- இந்த மின்அஞ்சலை அனைத்து சகோதரர்களுக்கும் அனுப்பி வைக்கவும்..! முடிந்தால் நீங்கள் அறிந்த இந்திய பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்து அனைவரையும் சென்றடையச் செய்யவும்..! 20 இலட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு நடவடிக்கையில் தாங்களும் பங்கெடுக்கும் படி அழைக்கின்றோம்..!
—————————————————————-
நன்றி  :   
சகோ. ஹூஸைன் கனி

தமுமுக 
மத்திய மண்டலம், ரியாத், சவூதி அரேபியா. 
—————————————————————-
முதல் பதிவு: முகம்மத் ஆஷிக்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

1 செப்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 6       

  4. ஹப்ஸா

உமர் அவர்களின் மகள். கிபி 607 ல் பிறந்தார். இவரது தந்தை உமரின் கூற்றுப்படி இவர் அழகு குறைந்த பெண்மனியாக அறியப்படுகிறார். உஹது போரில் தன் கணவர் ஹூனைதை இழந்தார். உமர், விதவையான தன் மகளை மறுமணம் செய்து கொள்ள உத்மான் மற்றும் அபூபக்கர் சித்தீக் இருவரிடமும் வேண்டுகோள் வைக்ககிறார் ஆனால் அவர்களோ ஹப்ஸாவை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விரும்புவதை உணர்ந்து மறுப்பு  தெரிவிக்கின்றனர்.

புஹாரி ஹதீஸ் -4005

ப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன்) குனைஸ் பின் ஹூதாஃபா (ரலி) அவர்கள் இறந்து விட்டதால் (மகள்) ஹப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொருவருக்கு திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்) குனைஸ் பின் ஹூதாஃபா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ரு போரில் கலந்து கொண்டவருமாயிருந்தார்கள். மேலும் மதீனாவில் இறந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், எனவே நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து  (என் மகள்) ஹப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறி, நீங்கள் விரும்பினால், என் மகள் ஹப்ஸாவை உங்களுக்கத் திருமணம் செய்து வைக்கிறேன். (அதற்கு)  உஸ்மான்  (ரலி) அவர்கள் (உங்கள் மகளை நான் மணம் புரிந்து கொள்ளும்) இந்த என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது என்று சொன்னார். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு (நான் உஸ்மானை சந்தித்த போது) இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன் என்று கூறினார்கள். ஆகவே நான் அபூபக்கர் அவர்களைச் சந்தித்தேன் (அவர்களிடம்) நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன் என்று கூறினேன்.  அபூபக்கர் அவர்கள் அமைதியாக இருந்தார்கள் எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே உஸ்மான்  அவர்களை விட அபூபக்கர் அவர்கள் மீதே மிகவும் மனவருத்தம் கொண்டவனாக  இருந்தேன். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை பெண் கேட்டார்கள். எனவே  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு  ஹஃப்ஸாவை திருமணம் செய்து வைத்தன். பிறகு (ஒரு நாள்) அபூபக்கர் அவர்கள் என்னைச் சந்தித்த போது நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவைக்  குறித்து சொன்ன போது நான் உங்களுக்கு பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக் கூடும் என்று கூறினார்கள். நான் ஆம் என்று கூறினேன். (அதற்கு அபூபக்கர் அவர்கள்) நீங்கள் கூறிய போது பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்து கொள்வது) பற்றி பேசியதை நான் அறிந்திருந்தேன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவேதான் உங்களுக்கு பதிலேதும் கூறவில்லை நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன் என்று கூறினார்கள்.

 

கிபி 625 நபி (ஸல்) அவர்கள் ஐம்பத்தி ஆறாம் வயதில் ஹஃப்ஸாவைத் திருமணம்  செய்து கொண்டார். இத்திருமணம் அரசியல் காரணங்களுக்காவே நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் வலிமையான உமரின் ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டார். ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் நெருங்கிய தோழிகள். தங்களது கருத்துக்களை நபி (ஸல்) அவர்களுடன் விவாதிக்க தயங்காதவர்கள். ஒருமுறை, குடும்ப ரகசியம்(?)வெளியான விவகாரம் தொடர்பாக முஹம்மது நபியுடன் ஹப்ஸா செய்த  விவாதம் காரணமாக அவரை மணவிலக்கு செய்தார். அங்கு இறங்கிய ஜிப்ரீல் அவர்கள் ஹப்ஸாவை மணவிலக்கிலிருந்து  மீட்க கோருகிறார். நபி (ஸல்) அவர்களும் அதை ஏற்று ஹப்ஸாவுடன் இணைந்து வாழ்ந்தார் (இதைப் பற்றி விரிவாக பின்னர் காண்போம்).   இவர் எட்டு ஆண்டுகள் நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தார். இவர் தன்னுடைய அறுபத்தது மூன்றாம் வயதில் காலமானார்.

 

5. ஜைனப் பின்த் குழைமா

 

ஹிஜ்ரி நாலாம் ஆண்டில்  இவரைத் தன்  ஐம்பத்தி ஆறாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய முதல் கணவர் பத்ரு போர் களத்தில் இறந்தவர். இவர் தானே முன்வந்து நபி (ஸல்) அவர்களுக்காக தன்னை அர்பணித்ததார். அனாதைகளிடமும் ஏழ்மையானவர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டவர்.  திருமணம் நிகழ்ந்து எட்டு மாதங்களில் மரணமடைந்தார்.

 

6. உம்முஸல்மா

 

ஹிஜ்ரி நாலாம் ஆண்டில்  இவரைத் தன்  ஐம்பத்தி ஆறாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய முதல்கணவர் அப்துல்லா பின் அப்துல் அஸத் உஹது போரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இறந்தவர். இத்தா காலத்திற்கு பிறகு அபூபக்கர் சித்தீக் மற்றும் உமர் இவர்களும் உம்முஸல்மாவை மறுமணம் செய்ய நாடுகின்றனர் ஆனால் மறுத்துவிடுகிறார். நபி (ஸல்) அவர்களின் முயற்சி வெற்றியடைகிறது.  நபி (ஸல்) அவர்கள்  உம்முஸல்மாவைத் திருமணம் செய்யும் வேளையில் இவருக்கு ஏழு வயதில் ஆண் குழந்தை இருந்ததாக காணப்படுகிறது. மிக அழகானவர். அறிவு கூர்மை நிறைந்தவர் என்பதால் சிக்கலான நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் இவரது அறிவுரை நாடுவது வழக்கம். ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு இறந்தார்.

7. ஜைனப் பின்த் ஜஹ்ஷ்

 

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையில் ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு, நபியவர்களின் ஐம்பத்து எட்டாம் வயதில், ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் அவர்களை ஆறாவது மனைவியாக திருமணம் செய்தார்கள். இவரைப் பற்றியும் விரிவாக பின்னர் காண்போம்.

 

8. ஜுவேரியா

 

Bukhari vol 3, Book 46, No. 717

Narrated Ibn Aun:            


Prophet had suddenly attacked Banu Mustaliq without warning while they were heedless and their cattle were being watered at the places of water. Their fighting men were killed and their women and children were taken as captives; the Prophet got Juwairiya on that day.

பனூ முஸ்தலிக் இனத்தவர்களின் மீது  அவர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தி நபி (ஸல்) அவர்களின் படை எளிதில் வெற்றி பெறுகிறது. இப்போரில் பனூ முஸ்தலிக் இனத்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். சுமார் 600 பேர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அவர்களனைவரும் அடிமைகளாக்கப்பட்டனர். சுமார் 2000 ஒட்டகங்களும், 5000 கால்நடைகளும், ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அக் கைதிகளில் ஜுவேரியா பனூ முஸ்தலிக் இன தலைவரின் மகளும் ஒருவர். பனூ முஸ்தலிக்போரில் இவருடைய கணவர் முஸாஃபி பின் ஸஃப்வான் நபி (ஸல்) அவர்களின் படையினரால் கொல்லப்பட்டு, ஜுவேரியா போர் கைதியாக பிடிக்கப்பட்டார். போரில் கிடைத்த பொருட்களை (கைதிகள் உட்பட) தன்னுடைய படையினருக்கு நபி (ஸல்) அவர்களால் பகிர்ந்தளிக்கப்படுகிறது.  ஜுவேரியாவை, தாபித் பின் கைஸ் என்ற படைவீரருக்கு அடிமையாக பங்கீடு செய்யப்படுகிறார். தலைவரின் மகள் என்ற உயர்ந்த நிலையில் தன்னை ஒரு சாதாரண போர்வீரனின் அடிமையாக்கப்பட்டதை நினைத்து மிகுந்த வேதனையடைந்தார்.

தன்னுடைய நிலைமையை கூறி, தாபித் பின் கைஸ்க்கு  பணயத்தொகை அளிப்பதன் மூலம் தன்னுடைய விடுதலையை நாடுகிறார். தன்னை பாதுகாப்பாக விடுதலை செய்ய நிறைய பிணைத்தொகை கேட்பார்கள் என அச்சமடைகிறார். தாபித் பின் கைஸும் கோரிக்கையை ஏற்கிறார். போரில் தங்களுடைய செல்வங்கள் முஸ்லீம்களின் வசமானதால், மற்றவர்களின் உதவியால் பணயத்தொகையை திரட்ட நினைக்கிறார்.

போரில் கிடைத்த அடிமைகள் மற்றும் இதர பொருட்களுடன் நபி (ஸல்) அவர்களின் படை மதீனா திரும்புகிறது. இந் நிலையில் ஜுவேரியா தன்னை காப்பாற்றிக்கொள்ள நபி (ஸல்) அவர்களை சந்தித்தால் ஏதேனும் எதிர்பாராத உதவி கிடைக்கலாம் என நினைத்து, நபி (ஸல்) அவர்களை சந்திக்க அனுமதி கேட்கிறார். ஜுவேரியா இருபது வயது நிரம்பிய அழகிய பெண். நபி (ஸல்) அவர்களுடன் ஜுவேரியாவை காண்பதை ஆயிஷா விரும்பவில்லை. பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு நிகழ்ந்த பேச்சுவார்தையில், ஜுவேரியா விரும்பினால் நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்யலாம் என்ற வேண்டுகோளுடன் அவர் மட்டும விடுதலை செய்யப்படுகிறார்.  பிறகு நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார். பாரா என்ற அவரது இயற்பெயரை  ஜுவேரியா என்று நபி (ஸல்) மாற்றினார்.

 நபி (ஸல்) அவர்களின் மனைவியின் (ஜுவேரியா) உறவினர்களையும் அவரது ஆட்களையும் அடிமைகளாக வைக்க முடியாமல், வேறு வழியில்லாமல் போரில் கிடைத்த அடிமைகள் மற்றும் இதர பொருட்கள் பனூ முஸ்தலிக் வசம் திருப்பித் தரப்பட்டதாக இஸ்லாமிய அறிஞர்கள்  குறிப்பிடுகின்றனர்.  ஆனால் பனூ முஸ்தலிக்கின் உடைமைகளை அவர்கள் வசம் திருப்பி கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் வரலாற்றில் கணப்படவில்லை. ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு நபி தன்னுடைய ஐம்பத்து எட்டாம் வயதில் ஜுவேரியாவைத் திருமணம் செய்து கொண்டார்.  ஹிஜ்ரி 50 ம் ஆண்டு தன்னுடைய 65 ம் வயதில் ஜுவேரியா காலமானார்.

இத் திருமணம் பனூ முஸ்தலிக் இஸ்லாமை ஏற்க காரணமாக இருந்தது. ஜுவேரியாவின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இத் திருமணம் நிகழ்ந்தது எனவே இத்திருமணத்தை விமர்சிப்பது முட்டாள்தனமானது என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம்.

இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கத்தின் படி நபி (ஸல்)ஜுவேரியா இடையே நிகழ்ந்த உடன்பாடு, ஜுவேரியாவை மட்டுமே விடுதலை செய்தது. அவரது உறவினர்களையும், அவரது நலம் விரும்பிகளையும் செல்வங்களை விடுதலை செய்யவில்லை. தன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்ற, ஜுவேரியா தேர்ந்தெடுத்த வழி; நபி (ஸல்) திருமணம் செய்வது என்ற முடிவு. ஜுவேரியா  தன்னைக் கொடுத்து தன் இனத்தை சேர்ந்த மற்றவர்களை காப்பாற்றினார் என்று முடிவு செய்யலாம். கணவனைக் கொல்வதும் மனைவியயை அபகரிப்பதும்  நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மை.

 

9. உம்மு ஹபீபா

 

நபி (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரிய எதிரியாக விளங்கிய அபூ ஸூஃபயானின் மகளாவார். நபி (ஸல்) அவர்களை விட இருபத்து மூன்று வயது இளையவர். அபிஸீனீயா சென்ற இவரது கணவர் உபைதுல்லா அங்கு கிருஸ்தவராக மதம் மாறினார் கணவருடன் வாழவிரும்பாததால் அபிஸீனீயாவில் தன் மகளுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார். ஹிஜ்ரி ஒன்றாம் ஆண்டு நபி (ஸல்) அவர்களால் திருமணம் செய்யப்பட்டார். ஆனால் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டுதான் நபி (ஸல்) அவர்களுடன் இணைந்து வாழ்ந்தார் அப்பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு அறுபது வயது. கலீபா முவாவிய இவரது சகோதரர். ஹிஜ்ரி 44 ம் ஆண்டு தன்னுடைய 72 ம் வயதில் காலமானார்.

 

10. ஸஃபியா

 

நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய முயன்றதால் கைபர் என்ற பகுதிக்கு நாடு கடத்தப்பட்ட பனூ நதீர் என்ற யூதகுல தலைவர் ஹூயயை பின் அக்தப் என்பவரின் மகள். சற்று குள்ளமான உருவமுடையவர். கினானா இப்ன் அல் ரபீ என்ற யூதத் தலைவரின் புதுமனைவி.

கைபர் யூதர்களின் உழைப்பால்  செழிப்பாக வளர்ந்த பகுதி. நபி (ஸல்) அவர்கள், சுமார் 1400 வீரர்களுடன் கைபர் பகுதியை தாக்கினார். வெளியில் வர அஞ்சிய யூதர்கள் தாக்குதல் கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர். இரவு நேரத்தில் வெளியில் வந்து குடிநீரையும், உணவையும் சேகரித்துக்கொண்டு மீண்டும் கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர். இதை அறிந்த முஹம்மது நபி,  யூதர்களை வெளியில் வரவழைக்க  அவர்களது குடிநீர் கிணறுகளை விஷமாக்கியும், அவர்களது பேரீச்ச மரங்களை வெட்டியும், தீயிட்டும் கொளுத்தினார்.

புஹாரி ஹதீஸ்:4031

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை விட்டார்கள். இன்னும் வெட்டிவிட்டார்கள். அது புவைரா என்னும் இடமாகும். எனவே தான் நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படி விட்டு விட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்தி விடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்) என்னும் (59-5) இறைவசனம் அருளப்பட்டது). இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

வேறு வழியின்றி  யூதர்கள் சரணடைந்தனர். பெரிய அளவில் போர் எதுவும் நிகழவில்லை கைபரின் கோட்டைகள் முஸ்லீம்கள் வசம்வந்தது. இறுதியில் பனூ நதீர் யூதர்கள் பேச்சு வார்த்தைக்கு வந்தனர். அபூ ஹூகைக் என்ற யூதருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, கோட்டைக்குள்ளிருக்கும் யூத வீரர்களைக் கொல்லக்கூடாது, அவர்களை அவர்களின் மனைவி மக்களுடன் வாழவிடவேண்டும், கைபரின் நிலம், செல்வங்கள், கால்நடைகள், ஆயூதங்கள் அனைத்தும் முஸ்லீம்களுக்கு சொந்தம், யூதர்கள் கைபரை விட்டு வெளியேறி விடவேண்டும். இதில் எந்த ஒரு பொருளை யூதர்கள் மறைத்தாலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் பொறுப்பு நீங்கிவடும்.

Sourcing Ibn Ishak, Tabari writes:

‘Kinanah b. al-Rabi b. al-Huqyaq who had the treasure of B. Nadir was brought to the Messenger of God, who questioned him; but he denied knowing where it was. Then the messenger of God was brought a Jew who said to him, “I have seen Kinanah walk around this ruin every morning.” The Messenger of God said to Kinanah: “What do you say? If we find it in your possession, I will kill you.” “All right,” he answered. The Messenger of God commanded that the ruin should be dug up, and some of the treasure was extracted from it. Then he asked him for the rest of it. Kinanah refused to surrender it; so the Messenger of God gave orders concerning him to al-Zubayr b. al-‘Awwam, saying, “torture him until you root out what he has.” Al-Zubayr kept twirling his firestick in his breast until Kinanah almost expired; then the Messenger of God gave him to Muhammad b. Maslamah, who beheaded him to avenge his brother Mahmud b. Maslamah.”‘

மேற்படி ஒப்பந்தத்தை அபூ ஹூகைக்கின் மகன்கள் அவர்களுடைய தோல்பையில் சில பொருட்களையும், ஸஃபியாவின் தந்தை ஹூயயை பின் அக்தப்பின் நகைகளையும்  மறைத்ததால் அவர்கள் கொல்லப்பட்டனர். ஸஃபியாவின் கணவர் கினானாவை அவர்கள் மறைத்த கஜானா இருக்குமிடத்தை கூற மறுத்ததால், முஹம்மது நபி அவர்களின் உத்தரவின்படி பழுக்க காய்ச்சிய ஆயுதங்களால் கினானாவின் மார்பில் குத்தி சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்.

போர்க்கைதிகள் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டனர். அப்பொழுது திஹ்யா பின் கல்ஃபி என்ற நபித்தோழர் தனக்கு கைதிகளிலிருந்து ஒரு பெண்ணை கேட்கிறார், உடனே, உனக்கு விருப்பமான பெண்ணை அழைத்துச் செல்க! என்று கூற, அவர் அழகும் இளமையும் நிரம்பிய ஸஃபியா அழைத்துச் சென்றுவிட்டார். அதைக் கண்டு பொறாமை கொண்ட மற்ற ஸஹாபிகள் ஸஃபியாவின் இளமையையும் அழகையும் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தனர். உடனே பிலாலிடம், திஹ்யா பின்  கலீஃபாவையும், ஸஃபியாவையும் தன்னுடைய கூடாரத்திற்கு அழைத்துவர உத்தரவிட்டார்.

பிலால்,  திஹ்யாவையும், ஸஃபியாவையும், கினானாவின் சகோதரிகளையும் அழைத்துக் கொண்டு போர்களத்தின் வழியே அழைத்து வருகிறார். போர்களத்தில் தங்களுடைய சகோதரர்களும், உறவினர்களும், நண்பர்களும் பிணமாக கிடப்பதைகண்டு ஒரு பெண் கதறி வீறிட்டு அழுகிறார், புழுதியில் புரண்டு கதறுகிறார்.  ஒரு பெண் அதிர்ச்சியில் உறைந்து அழுகையை வெளிப்படுத்த இயலாமல் வாயடைத்து போகிறார். இதில் இரண்டாமவரே  ஸஃபியா. இந் நிலையில் நபி (ஸல்) அவர்களின் கூடாரத்தை அடைகின்றனர்.

வீறிடும் அப்பெண்களை கண்டு, “முதலில் இந்த ஷைத்தான்களை வெளியேற்றுங்கள்” என பிலாலிடம் கூறி,  அச்சப்படும் விதமாக போர்களத்தில் பிணங்களுக்கு நடுவே அழைத்து வந்ததற்காக, ஏன் இரக்கத்துடன் நடந்து கொள்ளவில்லை எனவும் பிலாலை கண்டிக்கிறார். பிறகு ஸஃபியாவை கண்டவுடன் தன்னுடைய மேலங்கியை ஸஃபியாவின் மீது வீசி போர்த்துகிறார். அதாவது இனி தன்னுடையவள் என்று பொருள்.  கினானாவின் சகோதரிகள் உட்பட தன்னுடைய பங்கிலிருந்த ஏழு அடிமைகளாக்கப்பட்ட கைதிகளையும் திஹ்யாவிற்கு வழங்கி  ஸஃபியாவை தனது உடைமையாக்கிக்  கொணடார்.

Sunan Abu Dawud, Book 19, #2991:
Anas said:

“A beautiful slave girl fell to Dihyah. The apostle purchased her for seven slaves. He then gave her to Umm Sulaim for decoration her and preparing her for marriage.”

இது ஸஹாபிகள் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ஏனென்றால் ஸஃபியாவின் தந்தை முஹம்மது நபியின் தலையில் பறாங்கல்லைத் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற  கொலைகாரன் என்று நபியால் குற்றம் சாட்டப்பட்டவர் அதன் காரணமாகவே பனூ நளீர் யூதர்கள் கைபருக்கு நாடுகடத்தப்பட்டனர்ஸஃபியாவின் தந்தை மிக மோசமான எதிரி என்று நபியால் குறிப்பிடப்பட்டவர்.

பனூ நதீர் யூதர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். யூதர்களின் உழைப்பால் செழித்திருந்த கைபரின் நிலங்கள், 3600 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதில் சரிபாதியை, 1800 பங்குகளை போரில் ஈடுபட்ட  தனது படையினருக்கு பகிர்ந்தளித்தார். 200 குதிரைவீரர்களுக்கு, குதிரைக்கு இரண்டு பங்கும், வீரருக்கு ஒரு பங்கு என்று மூன்று பங்குகள் அளிக்கப்பட்டது. காலட்படையினருக்கு மீதமிருந்த 1200 பங்குகள் அளிக்கப்பட்டது. மறு பாதியை,  முஸ்லீம்களுக்கு ஏற்படும் பொதுப் பிரச்சனைகளுக்காக  ஒதுக்கப்பட்டது.

புஹாரி ஹதீஸ்       : 4228  

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின் (போர்ச் செல்வத்திலிருந்து) குதிரைக்கு இரு பங்குகளையும் காலாட்படை வீரருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள். இந்த அறிவிப்பிற்கு நாஃபிஉ (ரஹ்) அவர்கள், (போரில் கலந்து கொண்ட) ஒரு மனிதருடன் ஒரு குதிரையிருந்தால் (குதிரைக்காக இரு பங்குகளும், உரிமையாளருக்காக ஒரு பங்கும் சேர்த்து) அவருக்கு மூன்று பங்குகள் கிடைக்கும். அவருடன் குதிரை இல்லாவிட்டால் அவருக்கு ஒரு பங்கு கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார்கள்.

நிலத்தை செம்மைப்படுத்தி விவசாயம் செய்து மகசூலில் ஒரு பகுதியை (50%)  தரவேண்டும். நபி (ஸல்) கூறும் காலம் மட்டுமே தங்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து நிலம் யூதர்களிடம் தரப்பட்டது.

 

புஹாரி ஹதீஸ் -2499

ப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை யூதர்களுக்கு, அவற்றில் அவர்கள் உழைதது விவசாயம் செய்ய வேண்டும் என்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது (பாதி இஸ்லாமிய அரசுக்குரியது) என்றுபம் நிபந்தனையிட்டு கொடுத்துவிட்டார்கள்.

 

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா என்பவரை கண்காணிப்பாளராக நியமித்தார். இப்போரில் யூதர்களின் பெரும் செல்வம் முஸ்லீம்கள் வசமானது.

புஹாரி ஹதீஸ்       :4243   

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.

கைபரை வெற்றிக் கொள்ளும் வரையில் நாங்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை

 புஹாரி ஹதீஸ் : 4242       

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

கைபர் வெற்றி கொள்ளப்பட்ட போது, இனி நம் வயிறு பேரீச்சங் கனிகளால் நிரம்பும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்

தன்னால் அடிமையாக்கப்பட்ட, ஸஃபியாவை அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்து(?)  அதையே திருமணத்திற்கான மஹராகவும் அறிவித்து திருமணம் செய்தார்.

புஹாரி ஹதீஸ் -2499

னஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.

(கைபர் போரில்) ஸஃபியா பின்த் ஹூயை அவர்களை நபி (ஸல்) அவர்கள் கைது செய்து, பின்னர் விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள். அறிவிப்பபாளர்களில் ஒருவரான ஸாபித் (ரஹ்)  அவர்கள் கூறுகிறார். இந்த செய்தியைக் கூறுகையில் அனஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்)  அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள் என்று நான் கேட்டேன், (ஸஃபியா) அவர்களது விடுதலையையே அவர்களின் மஹ்ராக ஆக்கினார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

அன்றிரவு இஸ்லாமைப்பற்றி(?) எடுத்துரைத்து, இஸ்லாமை ஏற்க ஸஃபியாவிடம் கோரிக்கை வைக்கிறார். ஸஃபியாவும் இஸ்லாமை ஏற்கிறார். மறுநாள் வலீமா விருந்து நடைபெறுகிறது. அங்கு நபி (ஸல்) கொல்ல விஷம் வைக்கப்பட்டது.

அல்புகாரி பாகம் 3, அத்தியாயம் 51,

எண் 2617 , அனஸ் (ரலி) அறிவித்தார்.

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது உண்டார்கள். “அவளைக் கொன்று விடுவோமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அவர்கள்  “வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

From al-Tabari’s History, Volume 8, p. 124

ஒரு யூதப்பெண் விஷம் தோய்க்கப்பட்ட‌ ஒரு பெண் ஆட்டின் தொடையை நபி ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாள். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை அவர் எடுத்துக் கொண்டார், தன் வாயில் போட்டுக் கொண்டார், அதை மென்று மறுபடியும் அதை துப்பிவிட்டார். பிறகு தன் தோழர்களுக்கு இவ்விதமாகச் சொன்னார், “நிறுத்துங்கள், உண்மையாகவே இந்த ஆட்டுத் தொடையில் விஷம் உள்ளது என்று இது என்னிடம் சொல்லியது”. பின்பு, அந்த யூதப் பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: “இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?” என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: ” நீங்கள் உண்மையானவரா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையானவராக இருப்பீரானால், அல்லாஹ் அதை உங்களுக்கு தெரிவிப்பான், மற்றும் நீங்கள் ஒரு பொய்யராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக் கொள்வேன்”

மேலும்

அல்லாஹ்வின் ரஸூலும் அவரது தோழர்களும் அதிலிருந்து சாப்பிட்டார்கள். அந்த ஆடு, நான் விஷமூட்டப்பட்டுள்ளேன்” என்று சொல்லியது. அவர் (முஹம்மது) தன் தோழர்களிடம் “உங்கள் கைகளை அப்படியே வையுங்கள், இதில் விஷமுள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது!” என்றார். அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள், ஆனால், பிஷர் இபின் அல்-பரா என்பவர் இறந்துவிட்டார். அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: “இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?” என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: ” நீங்கள் உண்மையான நபியா என்பதை தெரிந்து கொள்ளத்தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையான நபியாக இருப்பீர்களானால் இது உம்மை பாதிக்காது இருப்பீரானால், மற்றும் நீங்கள் ஒரு அரசராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக் கொள்வேன்” .அவளை கொல்லும் படி அவர் கட்டளையிட்டார், அந்த பெண் கொல்லப்பட்டாள்.

முஹம்மது நபியின்  இறுதி நாட்களில் உடல் நலக்குறைவால் துன்பமடைந்தார். அப்படி நோய்வாய்ப்பட்ட கால கட்டத்தில், பிஷருடைய தாயார் அவரை பார்க்க வந்தார்கள், அவர்களிடம் ரஸுல் இப்படியாகச் சொன்னார்: “பிஷரின் தாயே, உங்கள் மகன் பிஷரோடு கெய்பர் என்ற இடத்தில் நான் உண்ட அந்த உணவினால்,  இப்போது கூட என் தொண்டை அறுந்துவிடும் போல வலியை உணருகிறேன்”.

ஸஃபியாவின் கதையைத் தொடர்வோம்

தன் படையினருடன் கைபரிலிருந்து மதீனா திரும்பும் வழியில் மூன்று நாட்கள் தங்கியிருந்து ஷஃபியாவுடன் கூடி மகிழ்ந்தார்.

புஹாரி ஹதீஸ்  4213

னஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் கைபருக்கு மதீனாவுக்கும் இடையில் (உள்ள சத்துஸ் ஸஹ்பா என்னுமிடத்தில் ஹஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மண முடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் வலீமா – மண விருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்டது. பிறகு, அதில் பேரீச்சம்பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (ஹைஸ் எனும் எளிமையான உணவு தயாரானது. அதை அங்கிருந்த முஸ்லிம்கள் உண்டனர்.) அப்போது முஸ்லிம்கள் ஸஃபிய்யா அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (நபியவர்களின் துணைவி-)யரில் ஒருவரா அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா என்று பேசிக் கொண்டனர். ஸஃபிய்யா அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஹிஜாப் – திரையிட்டுக் கொள்ளும்படி கட்டளையிட்)டால், அவர் இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை) யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர் என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்ட போது நமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கை அமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள்.

அவ்வாறான ஓர் இரவில்,  நபி (ஸல்), ஸஃபியாவுடன் கூடாரத்தில் இருக்கும் பொழுது கன்னத்தின் அடியில் இருககும் வடுவைக் கண்டு அதைப்பற்றி வினவுகிறார். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்கள் ஊருக்கு வருவதற்கு முன், முழுநிலவு தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாக கனவு கண்டு அதைப்பற்றி என் கணவரிடம் கூறியபொழுது அவர், வேகமாக என் கன்னத்தில் அறைந்து, “ மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய்?” என்றார் அதனால் ஏற்பட்ட வடுஎன்று கூறினாராம். (இதே போன்ற கனவை கருப்பழகி ஸவ்தாவும் கண்டதாக வரலாறு கூறுகிறது)

  முஹம்மது நபி, அல்லாஹ்வின் ஆணைகளை  நெறி தவறாமல் பின்பற்றி முன்னுதாரணமாக  வாழ்ந்தார் என்று புகழப்படுகிறார்.

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துவிட்டால் (மனைவியரான) அவர்கள் தங்களுக்காக நான்கு மாதங்கள் பத்து நாட்கள் (இத்தாவை) எதிர்பார்த்திருக்க வேண்டும்.

(குர்ஆன் 2:234)

 மேலும் விதியாக்கப்பட்ட (இத்தாவான)து அதனுடைய தவனையை அடையும்வரை திருமண பந்தம் பற்றி உறுதி செய்து விடாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய உள்ளங்களில் உள்ளவற்றை அறிகிறான் என்பதை நீங்கள் அறிநது அவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

(குர்ஆன் 2:235)

விவாகரத்தாயினும், விதவையாயினும் கடைபிடிக்க வேண்டிய நான்கு மாதம் பத்து நாட்கள் தவணை காலத்திற்கு பிறகே அப்பெண்களைத் திருமணம் செய்ய வேண்டுமென்ற அல்லாஹ்வின் ஆணை,   (முஹம்மது நபியால்) விதவைகளாக்கப்பட்ட  ஸஃபியா மற்றும் ஜுவேரியாவின் விஷயத்திலும் மீறப்பட்டுள்ளதே என்றால்,

இறைத்தூதருக்கு அல்லாஹ் அனுமதித்த 16 சலுகைகள் அல்லது தனிப்பட்ட கட்டளைகள் கீழ் கண்ட விதமாக உள்ளது.

1. போரில் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் நேர்மையாக இருத்தல்

2. போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை அல்லது ஐந்தில் ஒரு பங்கின் ஐந்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

3. அல் விசல் – Al Wisal (இது நோன்பை அல்லது உணவு உண்ணாமல் இருப்பதைக் குறிக்கும்)

4. நான்கு மனைவிகளை விட அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொள்ளுதல்

5. தன்னை முஹம்மது நபிக்கு அற்பணித்தேன் என்று வாய்வழியாக அறிக்கை செய்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுதல், அவளுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் (“Yas-tan-kih”).

6. ஒரு பெண்ணின் பாதுகாப்பாளரின் அனுமதியின்றி, அவரது முன்னிலையில் அல்லாமலும் அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள நபிக்கு அனுமதியுண்டு (“Yas-tan-kih”)

7. மஹர் கொடுக்காமலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை (“Yas-tan-kih”).

8. மார்க்க சுத்திகரிப்பு நாட்களிலும், ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, உடலுறவில் ஈடுபட அனுமதியுண்டு.

9. தான் செய்த சத்தியத்தை முறித்துக் கொண்டு தன் மனைவிகளை மறுபடியும் சேர்த்துக் கொள்ள அனுமதியுண்டு.

10. முஹம்மது நபி ஒரு பெண்ணைக் கண்டு அப்பெண்ணை விரும்பினால், முஹம்மது நபிஅவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்ய வேண்டும். இபின் அல் அரபி கூறுகையில், “இதைத் தான் இரண்டு இமாம்களும் கூறினார், மற்றும் ஜையத் கதையில் வரும் நிகழ்ச்சியும் இப்படிப்பட்ட பொருளில் வந்ததே என்று அறிஞர்களும் கூறுகிறார்கள்”.

இறைத்தூதர் போரில் பிடிப்பட்டிருந்த ஷபியாவை விடுதலையாக்கினார், இந்த விடுதலையானது, ஷபியாவின் மஹராக கருதினார்.

மார்க்க சுத்திகரிப்பு இல்லாமல் மக்காவில் நுழைய அனுமதியுண்டு.

மக்காவிலும் போர் புரிய அனுமதியுண்டு.

அவரின் சொத்துக்களை யாரும் சுவிகாரம் பெறமுடியாது. அதாவது ஒரு மனிதன் வியாதியின் காரணமாக மரணத்தை நெருங்கும் போது, அவரது அனைத்து சொத்துக்களும் எடுத்துக் கொள்ளப்படும், அவருக்கு மூன்றில் ஒரு பாகம் மட்டுமே இருக்கும். ஆனால், இறைத் தூதருக்கு இப்படியில்லாமல், அவரின் சொத்துக்கள் அனைத்தும் எடுத்துக் கொள்ளப்படாமல் அவருடையதாகவே இருக்கும். இதனை நாம் “சொத்துக்களை பிரித்துக்கொடுக்கும் வசனங்களிலும், சூரத் மரியம் அத்தியாயத்திலும் காணலாம்.

முஹம்மது நபியின் மரணத்தின் பிறகும் அவரது திருமண பந்தங்கள் இரத்து செய்யப்படாது.      

ஒரு பெண்ணை முஹம்மது நபி விவாகரத்து செய்தால், அப்பெண் அதன் பிறகு வேறு எந்த நபரையும் திருமணம் (நிக்காஹ்) செய்து கொள்ளக்கூடாது, வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கவேண்டும்.

“Yas-tan-kih” என்ற வார்த்தை “Yan’kah” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இது பல உருவங்களில் வருகிறது, உதாரணத்திற்கு, “Ajab” என்ற வார்த்தையை “Ista-jab” என்றும் அழைப்பது போல, இவ்வார்த்தையை “Nakaha” மற்றும் “Istan-kaha” என்றும் கூறலாம். “என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா?” அல்லது “என்னோடு உடலுறவு கொள்கிறாயா?” என்று பொருள்படும்படி கூற‌ “Istan-kaha” என்ற‌ வார்த்தையை பயன்படுத்த‌ அனுமதியுண்டு.

 

உபதேசங்களும், நெறிமுறைகளும் ஊருக்கு மட்டும்தான் …! இதுதான் அல்லாஹ்வின் ஆணைகளை  நெறி தவறாமல் பின்பற்றியதன் மர்மம்.

 

 நாம் கைபரின் ஷஃபியா விஷயத்திற்கு வருவோம்…

கைபர் போரைத் தொடர்ந்து, இப்ன் மஸ்ஊது என்பவரை ஃபதக் என்ற பகுதியில் வசிக்கும் யூதர்களிடம் அனுப்பி, தன்னை (முஹம்மது நபி) இறைத்தூராக ஏற்கும்படி கூறினார். கைபருக்கு ஏற்பட்ட நிலையை கண்ட அந்த யூதர்கள், ஃபதக்கின் விளைச்சலில் சரிபாதியை தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். எவ்விதமான போரும் இன்றி ஃபதக் வெற்றி கொள்ளப்பட்டதால் ஃபதக்கின் சரிபாதி விளைச்சல் முஹம்மது நபிக்கு மட்டுமே சொந்தமாயிற்று.

இத் திருமணத்தை விமர்சிப்பவர்களை  இஸ்லாமிய அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இஸ்லாமையும் முஸலீம்களையும் காப்பாற்ற அல்லாஹ்  செய்த ஏற்பாடே இத்திருமணம்  என்றும், தன்னைக் கொல்ல முயன்றவரின் மகளைத் திருமணம் செய்த உத்தமர் மேலும் ஸஃபியாவின் சம்மதத்துடனே இத் திருமணம் நிகழ்ந்துள்ளது. எனவே இது சிறந்த முன்னுதாரணமாகும் என வாதிடுகின்றனர்.

ஸஃபியாவின் அன்புக்குரிய கணவனை சாகும் வரை சித்திரவதை செய்து கொலை செய்யவும்,  தந்தையாரையும், உறவினர்களையும் மற்றும் தன்னுடைய நலம் விரும்பிகளையும் படுகொலை செய்யவும் முழுமுதற் காரணமாக இருந்தவர் நபி (ஸல்) மட்டுமே. அத்தகைய ஒருவர் அழைத்தவுடன் எந்த பெண்ணால் படுக்கையில் துள்ளிக் குதித்து தயார் நிலையில் இருக்கமுடியும்? ஸஃபியாவால் நபி (ஸல்) அவர்களுடன் படுக்கையில் எப்படி சல்லாபம் புரிய முடியும்?. ஸஃபியா, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கள்ளக் காதலியாகவோ, அல்லது அவர் ஒரு விபச்சாரியாகவும் இல்லாத நிலையில்; ஸஃபியா, நபி (ஸல்) அவர்களால் உறவு கொள்ளப்பட்டது, கற்பழிப்புதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. உண்மை இவ்வாறிருக்க, முழுநிலவு தன்னுடைய மடியில் விழுவதாக கனவு கண்டதாக ஷஃபியா காதல் ரசம் வழிய  கூறினாராம்.   அருவருப்பாக தோன்றவில்லையா?

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்னும் யூதஉறவினர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். ஹிஜ்ரி 50 ம் ஆண்டு தன்னுடைய 60 ம் வயதில் காலமானார்.

சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் பெண்களை வன்முறையால் அடிமைகளாக  கைப்பற்றி  தீராத வெறியை நிறைவேற்றுவதும்; இக் கொடூரச்செயல் இறைவனின் அனுமதி (குர்ஆன் 23:6, 70:30) எனக் கூறுவதும்; வெறி பிடித்த தன்னுடைய கூட்டத்தினரையும் கற்பழிக்க ஊக்குவிப்பதும் (குர்ஆன் 4:24); ஒருவேளை  அடிமைகளாகக் கைப்பற்றப்பட்ட அப்பெண்களை திருமணம் செய்ய விரும்பினால் (குர்ஆன் 4:25), அவர்களின் விடுதலையையே திருமணத்திற்கான மஹராக கூறுவதும், நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்  மாதிரிகளாகும்.

தொடரும்

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

நூல் அறிமுகம்: “நிலம் என்னும் நல்லாள்”

1 செப்

“இல்லாதவர்கள் ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசையில் பொதுவுடைமை பேசுகிறார்கள், இருப்பவர்கள் இழக்க நேரிடுமே என்று முதலாளித்துவம் பேசுகிறார்கள்”, என்றார் நண்பரொருவர். அவர் சொல்வது உண்மையாக இருந்தால் இல்லாதவர்கள் அனைவரும்  ஒன்றுபட்டு இந்நேரம் புரட்சி வெடித்து சோசலிசமல்லவா மலர்ந்திருக்கவேண்டும்?

ஒரு போதும் செல்வந்தர்களாகிவிட முடியாதென்று தெரிந்தாலும்  செல்வம் சேர்த்துவிடலாமமென கற்பனை செய்துக்கொண்டாவது வாழ்க்கையை தள்ளுகிறவர்களை  எல்லோருக்கும் எல்லாம் என்ற சோசலிசத்தை நோக்கி வருவதற்கு எது தடுக்கிறது?

கம்யூனிசம் என்றால் இப்போது இருக்கும் நிலையியிலிருந்து கீழேதான் வாழ வேண்டியிருக்கும் என்று  பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எல்லாருக்கும் எல்லாம் என்றால் தமக்கு எதுவும் கிடைக்காதென அவநம்பிக்கை கொள்கிறார்கள். (எனில், மற்றவர்களிடமிருந்து சுரண்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுதான் அது தன்னிடம் வருகிறது என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார்கள் எனபது ஒரு பக்கம்.) தமது வசதி வாய்ப்புகள் பறி போய்விடும், தற்போதைய சுகமான வாழ்க்கை கிடைக்காது என்று எண்ணிக்கொள்கிறார்கள்.

இதில், முதலாளித்துவத்தின் வதந்திகள் – “தமது பெண்களும் பொதுச் சொத்தாகி விடுவார்கள் அல்லது உனக்கென்று எந்த சொத்தும் இருக்காது, உன் வருங்கால சந்ததிக்கு எதுவும் சேர்த்து வைக்க முடியாது, இன்ஷ்யூரன்ஸ் எடுக்க முடியாது, கம்யூனிசமென்றால் எல்லோரும் சோம்பேறிகளாகி விடுவார்கள், யாருக்கும் பொறுப்பு இருக்காது அல்லது  கடினமாக உழைப்பவருக்கும் படுத்துறங்கி நாளைக் கழிப்பவருக்கும் வித்தியாசமில்லையா” முதலான அவதூறுகள் காரல் மார்க்ஸ் காலத்திலிருந்து இன்றளவும் பரப்பப்பட்டு உயிருடன் அலைந்து கொண்டிருக்கின்றன.

அதோடு, இல்லாதவர்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை கிடைக்க வழி செய்வதுதானே, அவர்களை மேலே முன்னேற வைப்பதுதானே என்று தமக்கிருப்பதை இழக்காமல் வாழ்வதையே சமத்துவமாகக் கருதிக்கொள்கிறார்கள்.

உண்மையில் கம்யூனிசம் மக்களுக்கு இதைத்தான் வழங்குகிறதா? புதிய சமுதாயத்தை, வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்திற்கு உறுதி அளிக்கும் கம்யூனிசம்,மக்களிடமிருந்து இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் பறித்துக்கொண்டு முன்பு வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையைவிட கீழே தள்ளிவிடப் பார்க்கிறதா?

சோவியத் ரஷ்யாவில் கம்யூனிசம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மனிதகுலம் காணாத சாதனைகளை குறுகிய காலத்தில் அம்மக்கள் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.

எனில், அது அவ்வளவு எளிதாகவா இருந்தது? முதலாளித்துவ நாடுகளில் சுரண்டல்களுக்கிடையிலே வாழும் நமக்கே இவ்வளவு சந்தேகங்கள் இருக்கும்போது குதிரைகள்,மாடுகள், கோழிகள், கொஞ்சம் நிலம் என்று விவசாயம் செய்த அம்மக்கள் எந்த பிரச்சினையுமின்றி சோசலிசத்தை ஏற்றுக்கொண்டனரா?

நிச்சயமாக இல்லை.  சொத்துரிமைக்காக உடன்பிறந்தவராக இருந்தாலும்  ஜென்மப்பகை பாராட்டுவதை பைபிள் காலத்திலிருந்தே காணலாம். ஒரு சதுர அடி நிலம் உடன்பிறந்தவனுக்கு அதிகப்படியாகப் போய்விட்டது என்ற காரணத்துக்காக ரத்தம் சிந்தி ஜெயிலுக்கு செல்வதை நாம் கண்கூடாகவே கண்டிருப்போம். கையளவு நிலமாக இருந்தாலும் கூட அவ்வளவு எளிதில் யாரும் விட்டுக்கொடுத்து விடுவதில்லை. இணையத்தில் கூட யாரிடமாவது ஏதாவது பிரச்சினையென்றால் “அவருக்கும் எனக்கும் வாய்க்கா வரப்புத் தகராறா” என்ற கமெண்டை சர்வசாதாரணமாகக் காணலாம். எனில்,நிலத்தின் மீது மக்களுக்கிருக்கும் பிணைப்பை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமாக இருக்காது.

அப்படியிருக்கும்போது, நிலத்தை அனைவருக்கும் பொதுவாக்கிவிட்டு விவசாயம் செய்ய வேண்டுமென்பதை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டனர்? எல்லாம் ஒரு சொடுக்கில் வழுக்கும் வெண்ணெய் போல நடந்து விட்டதா? முதலாளித்துவம் பரப்பிவருவது போல உண்மையில் சர்வாதிகாரமாகத்தான் சோவியத் ஆட்சி நடைபெற்றதா? கூட்டுப்பண்ணைக்காக ருஷ்ய மக்கள் தங்களது சொத்துரிமையை இழந்தனரா?

இந்த கேள்விகளுக்கு மட்டுமல்ல,  கூட்டுப்பண்ணைக்காக, சோசலிசத்துக்காக தங்களை தயார்படுத்திக் கொண்ட க்ராமியாச்சி கிராம மக்களின் வாழ்க்கையை, அவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்களை, கலகங்களை, சந்தேகங்களை, துரோகங்களை நம் கண்முன் விரிக்கிறது  – மைக்கேல் ஷோலோக்கோவ் எழுதிய ”நிலம் என்னும் நல்லாள்” நாவல்.

_____________________________________________

க்ராமயாச்சி கிராமத்தில் கூட்டுப்பண்ணையை உருவாக்குவதற்காக மாவட்ட கமிட்டியால் அனுப்பப்படுகிறார் டாவிடேவ். அவர் வரும் போதே கிராமத்தில் நடுத்தர விவசாயிகளை, வழி தவறிச் செல்பவர்களையும் பற்றி அறிவுறுத்தப்பட்டே அனுப்பப்படுகிறார்.

கிராம சோவியத்துக்குச் சென்று செயலாளரையும், தலைவரையும் சந்திக்கிறார். அவர்கள் ஒரு கூட்டுச்சங்கம் இருப்பதாகவும் , டிராக்டர் இல்லாததால் மாடுகளை வைத்து உற்பத்தியை பெருக்குவதும், வாங்கிய கடன்களை அடைக்கமுடியததாலும் அது செத்ததாகவும் ஆகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்,செயலாளர் நாகுல்நாவும், தலைவரான ரஷ்மியட்நாவும்.

மேலும் கூட்டுச்சங்கத்தின் தலைவர் வியாபாரியாக மாறிவிட்டதாலும் சரியானபடி இல்லையென்று சொல்கிறார்கள். டாவிடேவ் ஏழை கொசாக்கியர்களையும் விவசாயிகளையும் அடுத்த நாளே கூட்டுப்பண்ணை சங்கம் தொடர்பாக சந்திக்கவும் கூட்டம் கூடவும் வேண்டுமென்கிறார்.

இதற்கிடையில் பழைய தளகர்த்தர்கள் போலீஸ்டீவும், யாக்கோவ் லூக்கீச்சும் இரவு முழுக்க கூடிப்பேசுகிறார்கள். அதில் போலீஸ்டீவ் கார்ல் மார்க்ஸின் கம்யூனிச அறிக்கையை வாசித்திருப்பதாகவும், கூட்டுப்பண்ணை அவர்களது சொத்துகளை முழுக்க அபகரித்துவிடுமென்று அறிந்திருப்பதாகவும் கூறுகிறான்.”கூட்டுப்பண்ணையில் ஆரம்பித்து கம்யூனில் கொண்டுபோய் கடைசியில் சொத்துரிமையையே அது ஒழித்துவிடும். மாடுகள், காளைகள் மட்டுமல்ல,குழந்தைகளைக் கூட அரசாங்கமே எடுத்துக்கொள்ளும், வாத்து சூப்பும், கோதுமைக் கஞ்சியும் சாப்பிட நமக்கு பிரியமாக இருந்தாலும் புளித்த பீரைத்தான் கொடுப்பார்கள், கொத்தடிமையாக கடைசிவரை நிலத்தோடு கட்டுண்டு கிடக்க வேண்டியதுதான்” என்று பேசி இருவரும் தங்களது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரையிலும் கம்யூனிஸ்டுகளுக்கும் போல்ஷிவிக்குகளுக்கும் எதிராக போரிடுவதாக கையொப்பம் இடுகிறார்கள்.

அடுத்தநாள் தீவிர தொழிலாளிகளும், கொசாக்கியருமாக 32 பேர் ஆண்களும் பெண்களுமாக கூடியிருக்க, டேவிடாப் கூட்டுப்பண்ணையை பற்றியும் அதன அவசியத்தைப் பற்றியும் பேசுகிறான். ரத்தத்தை உறிஞ்சும் நிலச்சுவான்தார்களை ஒழித்து ஆடுகள், மாடுகள், கருவிகளை சமூகச் சொத்தாக்கினால் மட்டுமே அனைவரும் நீடித்து வாழ முடியும். நிலச்சுவான்தார்களிடம் தானியம் இருந்தாலும் அவர்கள் கொடுக்க மனமில்லாமல் கீழே கொட்டுவதால்தான் வறுமையில் வாடுகிறீர்கள், உங்களிடம் கொடுக்க மனமிருந்தாலும் தானியங்கள் இல்லை. கூட்டுப்பண்ணை ஒன்றினால்தான் விவசாயி வறுமையிலிருந்து விடுதலை பெறமுடியும். இல்லையென்றால் இரக்கமற்ற நிலச்சுவான்தார்கள் இரத்தத்தை உறிஞ்சிவிடுவார்கள் என்று தோழர் லெனின் இறக்கும் போது கூட கூறியதாகவும் சொல்கிறான்.

கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுகிறது. உடனடியாக சேர பலர் முன்வருகிறார்கள். அவர்களது வர்க்க உணரச்சியை பாராட்டும் டாவிடேவ், இவர்களே சோவியத் ரஷ்யாவின் ஜீவநாடி என்றும் கூட்டுப்பண்ணையில் சேர தயங்கிக்கொண்டிருக்கும் நடுத்தர விவசாயிகளையும் அழைத்துவரவேண்டும் என்று கூறுகிறான்.

இதன் நடுவில் நாகுல்நாவ் உணர்ச்சி மேலிட்டவனாய், சொத்துரிமையால் தங்கள் குடும்பத்துக்கும் அண்டை வீட்டார் குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட சிறுபகை எப்படி அண்டைவீட்டுக்காரரின் மகனை காவு கொண்டது என்றும் அதற்காக தான் பல ஆண்டுகள் தன் குடும்பத்தை விட்டு விலகியதையும் கூறுகிறான். நகரத்தில் தொழிலாளியாக இருந்து தற்போது போல்ஷிவிக்காக திரும்பி வந்திருப்பதாகவும் நடப்பவற்றை பார்க்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் உலகபுரட்சி அண்மையில் நம்மை நாடி வந்துக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறான்.

அடுத்ததாக, நிலச்சுவான்தார்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு குழுக்கள் பிரிக்கப்படுகின்றன. தானியங்கள், கால்நடைகள், கருவிகள் அனைத்தும் பதிவேடுகளில் குறிக்கப்பட்டு பொதுச் சொத்தாக்கபடுகிறது. இதை ஏற்கெனவே ஊகித்த சில நிலச்சுவான்தார்கள் தங்களது செல்வத்தை,கால்நடைகளை விற்று தங்கமும் காசுகளுமாக்கி புதைத்து வைக்கின்றனர். அல்லது தெரிந்த நண்பர்களிடம் கொடுத்தனுப்பி விடுகின்றனர்.

நிலச்சுவான்தார்களின் வீட்டை நோக்கி போகும் குழுக்கள் அவர்களின் வீடுகளில் பெண்களையும் குழந்தைகளையுமே காண்கின்றனர். அவர்களும் பயத்தில் உறைந்து ஒளிந்து கொண்டிருக்கின்றனர். தட்டுமுட்டு சாமான்களை சாக்குகளில் கட்டியபடி இருக்கின்றனர். அல்லது காவல்நாய்களை அவிழ்த்துவிட்டு  கூட்டுச்சங்கத்தாரை கடிக்கவிடுகின்றனர்.

குழுக்கள், வீடுகளிலிருந்து ஆடைகளை, புது பூட்சுகளை, தங்கம் போன்ற தானியங்களை, தேனை  களஞ்சியத்துக்கு கொண்டு வருகின்றனர். கந்தல் துணிகளை தைத்து தைத்து வரிகள் விழுந்த ஆடைகளைக் கொண்டவர்களுக்கு புது ஆடைகள் வழங்கப்படுகிறது. ஒரே ஆடையை துவைத்து நிர்வாணமாக நின்று கணப்பு அடுப்பருகே உலர்த்திவிட்டு அதே ஆடையை அணிந்து கொள்ளும் மக்கள் அடுத்த குளிர்காலம் வரை இது வரும் என்ற மகிழ்ச்சியை புதிய ஆடைகள் தருகிறது.

குழுவில் ஒருபகுதியினர் நிலச்சுவான்தார்கள் ஓட்டிச் சென்ற குதிரை,கால்நடைகளை தேடி நிலச்சுவான்தார்களிடம் துப்பாக்கி இருந்தாலும் உயிருக்கு பயப்படாமல் பின் தொடர்ந்து சென்று அவர்களை திரும்ப அழைத்து வருகின்றனர். இதற்கு நடுவில் அக்குழுவில் ஒருவனான ஆன்றி தன்னால் நிலச்சுவான்தார்களிடமிருந்து பொருளை கைப்பற்ற முடியாதென்றும் தான் அதற்காக பயிற்றுவிக்கப்பட்டவன் அல்லவென்றும் நிலச்சுவான்தார்களை ஒழிப்பது பாவமென்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள்  மரண பயத்தில் மூழ்கி கிடக்கிறார்களென்று இரக்கமேற்படுவதாகவும் கூறி பின்வாங்குகிறான்.

ஆன்றியிடம், “நம் குழ்ந்தைகள் வடித்த கண்ணீருக்காக நம் விரோதிகள் என்றாவது அழுததுண்டா அல்லது தாங்கள் கொன்ற குழந்தைகளுக்காக கலங்கியது உண்டா?வேலை நிறுத்தம் நடந்தபோது எனது தாய்க்கு வேலை போய்விட்டது, நாலு பிள்ளைகள், அவள் எங்களுக்கு உணவு வழங்குவதற்காக நாள் முழுவதும் சுற்றி விருந்தினருடன் வருவாள். திரைக்கு அந்தப்புறம் நாங்கள் இருப்போம். சிறுபிள்ளைகள். சமயத்தில் குடிகாரர்கள் வருவார்கள். என் தங்கைகள் அழுதுவிடக்கூடாதென்று அவர்கள் வாயை பொத்துவேன். அப்படி சம்பாதித்த காசுதான் எங்களுக்கு ரொட்டி வாங்க பயன்பட்டது . இப்படிபட்டவர்கள் மீதா இரக்கப்படுகிறாய்  இத்தகைய குறைபாடுகள் அற்ற சமுதாயத்தைதான் உருவாக்க முயல்கிறோம். வருங்காலத்தில் மீண்டும் அது நிகழக்கூடாது. மிராசுதாரரின் பிள்ளை மிராசுதாரராக முடியாது அப்படி நினைத்தால் தொழிலாளி வர்க்கம் அவர்களுக்கு பாடம் கற்பிக்கும்” என்று சொல்லி ஆன்றியை சிந்திக்க வைக்கிறான்.

க்ராமயாச்சி கிராமத்தில் திரும்பவும் கூட்டுப்பண்ணை தொடர்பாக கூட்டம் நடக்கிறது. கிராமத்தினர் அனைவருக்கும் பல சந்தேகங்கள். கேள்விகள். கோழி முட்டையொத்த நிலத்தைக் கொண்டிருந்தாலும் அவர்களால் விரிந்த முறையில் கூட்டுப்பண்ணையை பார்க்க முடியவில்லை. இரு குடும்பங்கள் இருந்தால், அதில் முதலில் பெண்களுக்கிடையில் சண்டை வரும் அதனால் ஆண்கள் பேசிக்கொள்ளமாட்டார்கள். விரிசல் பெரிதாகி தனித்தனியாகிவிட வேண்டியதுதான். குடும்பங்களுக்கே இப்படி என்றால் கூட்டுப்பண்ணைகள் வெற்றி பெறுவது எப்படி என்றெல்லாம் சந்தேகங்களும் கேள்விகளும் வருகின்றன.

யாவுமே சமூகச் சொத்தாக்கப்படுமா?

வீடுகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

சொந்த நிலங்களைப் வைத்து வேலை செய்வோரின் நிலை என்னவாகும்?

அவர்களிடமிருந்து நிலம் எடுத்துக்கொள்ளப்படுமா?

எல்லாரும் ஒன்றாக சாப்பிடுவதா?

எல்லா கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளிக்கிறான் டேவிடாவ். தற்போது இருப்பதை விட நிலைமை மோசமாகிவிடாதென்றும், கம்யூனிசம் அவர்களை  புதிய சமுதாயத்தில் உந்தித் தள்ளுகிறது என்றும் பாலைக் குடிக்காவிட்டால் கன்றுக்குத்தான் நஷ்டமென்றும் உணர்ந்து கொண்ட விவசாயிகள் கூட்டுப்பண்ணையில் சேர விண்ணப்பிக்கின்றனர்.

இருநூற்று பதினேழு குடும்பங்களில் அறுபத்தி ஏழு பேர் மட்டும் சேர கையை உயர்த்தினர். ஆனால், யாரும் எதிர்க்கவில்லை. இத்தனை நாள்கள் எங்கள் பாட்டன் முப்பாட்டன் வாழவில்லையா என்று  நடுத்தர விவசாயிகள் பலரும் தயக்கத்துடன் இருக்கின்ற்னர்.

அடுத்தநாளே ஒரு கூட்டமாக குதிரைகளும்,ஆடுமாடுகளும் கிராம சோவியத்தின் முன்பு நின்றது. மக்கள் மனுக்களை கொடுத்து கூட்டுப்பண்ணையில் சேர்ந்தனர். கூட்டுப்பண்ணைக்கு “ஸ்டாலின்” என்று பெயர் வைத்தனர். நாகுல்நாவும் தச்சர்களும் சேர்ந்து மாட்டுக்கான கொழுவை அடித்தனர். க்ராமியாச் கிராமத்தில் சமூகத்துக்காக பொதுவாக செய்யப்பட்ட முதல்காரியமாக அது இருந்தது.

தங்களது சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த நிலச்சுவான்தார்கள் கொசாக்கியரை வஞ்சம் தீர்க்க  ஒன்றாக கூடி திட்டம் தீட்டுகிறார்கள். இதற்கு நடுவில் நிலச்சுவான்தார்களால் ஒரு கொசாக்கிய விவசாய தம்பதியினர் கொலையுண்டு போகிறார்கள். இதுவும் நிலச்சுவான்தார்களின் வேலை.

கூட்டுப்பண்ணையில் சேர்ந்த யாக்கோவ் லூக்கிச் இரட்டை வாழ்க்கை வாழத் துவங்கினான். பகலில் கூட்டுப்பண்ணையில் உடம்பு நோக வேலை செய்வான். இரவில், தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலச்சுவான்தார் போலஸ்டீவுக்கு உதவிக் கொண்டிருப்பான்.

பனி பெய்யும் பிப்ரவரி மாதம். சூரியன் உதயமாகி பனியை உருகியோடச்செய்யும். பனி உருகியதும் நிலம் காய்ந்து வெடிக்கும். யாக்கோவ் லூக்கிச் தனது ஆடுகளை வெட்ட ஆரம்பிக்கின்றான், லூக்கிச் புரட்சி ஏற்படு முன்னரே செல்வம் சேர்க்க ஆரம்பித்துவிட்டான். மகனை கர்னலுக்கு படிக்க வைக்க வேண்டும். சீமாட்டியை திருமணம் செய்விக்க வேண்டும். ஒரு ஆலையை கட்ட வேண்டும். தங்க சங்கிலியில் கடிகாரம் சேர்த்து அணிந்து கொள்ள வேண்டும். தனது மகனையும் சீமாட்டியை வரவேற்க ரயில்வே ஸ்டேஷனுக்கு காரில் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். ஆனால், புரட்சி அத்தனையிலும் மண்ணள்ளி போட்டுவிட்டது.

தனது சொத்தில் ஒன்று கூட செஞ்சேனைக்கு சென்று விடக்கூடாதென்று திட்டமிட்டிருந்தான். அதன்படி ஆடுகளை அடித்து களஞ்சியத்தில் தொங்கவிட்டார்கள். லூக்கிச்சின் தூண்டுதலின் பேரில் கிராமத்தில் இரவு தோறும் கால்நடைகள் வெட்டப்பட்டன. அனைவரும் தின்ன முடியாமல் கறியை வயிறு முட்ட தின்றனர். வயிற்றுவலியால் அங்குகிங்கு நகரவும் முடியாமல் அவதிப்பட்டனர்.

இப்படி கால்நடைகள் சம்காரம் செய்யப்படுவதை கேள்விப்பட்ட டேவிடாவ் கூட்டுச்சங்கத்தை கூட்டினான். கால்நடைகளை வெட்டுவோர் கூட்டுப்பண்ணையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஆனால், அப்படி வெளியேற்றினால் கூட்டுப்பண்ணையில் ஒருவர் கூட மிஞ்ச முடியாது. கூட்டம் முடியும் போது கிராமத்தார்கள் ஒருவரோடொருவர் பேசியபடி கலைந்து சென்றனர் – “அவள்தான் வெட்டு வெட்டு என்று என்னை தூண்டிவிட்டாள், வீட்டுக்குப் போய் கவனித்துக்கொள்கிறேன், அவளை நன்றாக”.

குதிரைகளுக்கு கொட்டகை கட்டப்பட்டது. எல்லா குதிரைகளும் கொண்டு வந்து விடப்பட்டன. குதிரைக்குச் சொந்தக்காரர்கள் தங்களது குதிரைக்கு அதிகம் வைக்கோல் போடுமாறு கவனித்துக்கொள்பவனை கேட்டுக்கொண்டனர். இரவுகளில் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு சென்றனர். அவர்களில் யாருக்கும் அவ்வளவு எளிதில் சொத்துமீது ஆசை போகவில்லை.  ஆனால் கூட்டுப்பண்ணை ஆரம்பமானதில் இருந்து கிராமத்தில் ஒரு புதுவித பரபரப்பு தோன்றியிருந்தது. கால்நடைகளைக் கொல்வதும் நின்றது.

அடுத்துக்கூடிய கட்சி கூட்டத்தில், ஸ்டாலின் கூட்டுப்பண்ணையின் அங்கத்தினர்களின் கால்நடைகளை மட்டுமில்லாமல், கோழி-வாத்து போன்றவற்றையும் சமூகமயமாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.  இதற்கு பெண்களிடமிருந்து மிகுந்த எதிர்ப்பு இருந்தது. மழைக்காலத்துக்குள்ளாக குஞ்சு பொரிக்கும் இயந்திரம் வாங்கிவிடலாமென்றும் அவை நூற்றுக்கணக்கில் பொரிக்க உதவுமென்றும் பிடிவாதமாக இருக்க வேண்டாமென்றும் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள், வருத்தப்பட்டார்கள், சிரித்தார்கள், பறவைகளையும் கோழிகளையும் பொதுக்கூண்டுக்குள் அடைத்தார்கள். கோழிகள் முட்டையிட்டன. அவையெல்லாம் பொதுவாக சேமிக்கப்பட்டன.

நடுவில், புது வதந்தி கிராமத்தை சுற்றியபடி இருந்தது. அதாவது, கூட்டுப்பண்ணையில் நீராவி இயந்திரம் இல்லாத காரணத்தால் முட்டை பொரிக்க வைக்க அறுபது வயதுக் கிழவிகளை அடைக்காக்க சொல்லப் போவதாக வந்த வதந்திதான் அது. இதைக்கேட்டு கிழவிகள் கோபமடைந்துவிட்டார்கள், சிறு சிறு நாற்காலிகள் செய்து அதனடியில் வைக்கோலைப் பரப்பி முட்டையை வைத்து கிழவிகளை அடைகாக்க சொல்ல்ப்போகிறார்கள், முடியாதென்று சொல்லும் கிழவிகளை நாற்காலியோடு கட்டுப்போட்டு விடுவார்கள் என்ற வதந்தியை ஒரு கன்னியாஸ்திரி மூலமாக பண்ணையார்கள் பரப்பிவிட்டார்கள் நல்லவேளையாக அந்த கன்னியாஸ்தீரி கூட்டுப்பண்ணையின் அங்கத்தினர்களிடம் அகப்படவில்லை.

டேவிடாவுக்கும், கூட்டுப்பண்ணையின் அங்கத்தினர்களுக்கும் ஒரு விவாதம் வந்தது. அதாவது, இந்த பறவைகள் விஷயம் சிறிதானதுதான். உண்மையில், செய்திருக்க வேண்டியது நூற்றுக்கு நூறு அங்கத்தினர்களை சேர்த்துவிட்டு விதைப்பில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், கூட்டுப்பண்ணையை கம்யூனாக்கிக்கொண்டிருக்கிறோம். இது இடதுசாரி வழுக்கல். ஒரு போல்ஷிவிக்குரிய  வீரத்தோடு குற்றத்தை ஒப்புக்கொண்டு கோழிக்குஞ்சுகளை உரியவர்களுக்கு திருப்பிக்கொடுத்துவிடலாமென்று முடிவுக்கு வருகிறார்கள்.

இடையில், இரட்டை வேடமிட்ட லூக்கிச் போலீஸ்டீவின் வார்த்தையைக் கேட்டுக்கொண்டு கூட்டுப்பண்ணையை உள்ளிருந்தே சிதைக்கும் வேலையை தொடங்கியிருந்தான். குதிரைகள், மாடுகள் இரவில் படுக்குமிடத்தில் வைக்கோலுக்கு பதிலாக மணலை கொட்டுவது, அதனால் கால்நடைகளின் தோல் பனியில் சிக்கி சீரழிவது என்று நடந்து கொண்டிருந்தது.

அதோடு, விதைப்புக்கும் பயிரிடப்பட வேண்டிய ஹெக்டேர்களும், தானியங்களும் தீர்மானிக்கப்பட்டது. விதை தானிய வசூல், உற்பத்தி, கருவிகளை செப்பனிடுவது, வேலைப்பிரிவினை, விஞ்ஞான  முறையில் பயிடுவது  போன்றவை விவாதிக்கப்பட்டன. கூட்டுப்பண்ணையைச் சேர்ந்தவர்கள் தானியவசூலை ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் கூட்டுப்பண்ணை விவசாயிகளும், தனி விவசாயிகளும் தானிய வசூலை எதிர்த்தனர்.

ஏனெனில், தானியம் வசூலிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அடுத்த விதைப்பே இருக்காது. எந்த நேரத்தில் போர் வரலாம் போன்ற காரணங்கள்தான்.

இந்த வதந்தி காட்டுத்தீ போல கிராமமெங்கு பரவியது. ஆனாலும் தானிய வசூல் வெற்றியடையவே இல்லை. கொசாக்கியர்கள் ஏதாவது காரணம் சொல்லி வீட்டை விட்டு வெளியேறிவிடுவர்.

இவை நடுவில்,  நிலச்சுவான்தார்கள் போல்ஷ்விக்குகளை தாக்க ஒரு படையை திரட்டியிருந்தனர். காலியாக இருந்த நிலச்சுவான்தாரின் வீட்டை தலைமையலுவலகமாக மாற்றியிருந்தனர். அவர்களது நடவடிக்கைகள் யாருமற்ற இரவு வேளைகளில் மிகவும் ரகசியமாக நடைபெற்றது. குதிரைகளை லாயத்திலிருந்து திருடிக்கொண்டு படைகளை  அழைக்க சென்றனர். லூக்கிச்சும் அவர்களுடன் சென்றிருந்தான். கொசாக்கியர்களைப் பார்த்து கோலாஸ்டீவ் தாக்குதலுக்கு தயாராகும்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் கூட்டத்திலிருந்த பெரியவர் எழுந்தார்.

“நீங்கள் வருவதற்கு சற்று முன்னர்தான் அந்த பத்திரிக்கையை படித்தோம். ஸ்டாலின் எழுதிய கடிதம். அதைப்படித்தபின் நீங்களும் நாங்களும் வேறு என்று புலனாகிவிட்டது. நாங்கள் ஊழலை மட்டும்தான் எதிர்க்கிறோம், எங்கள் சோவியத்தை அல்ல. நாங்கள் கையெழுத்திட்ட மகஜர்களை திருப்பிக்கொடுத்துவிடுங்கள். எங்கள் கிராமத் தலைவர்கள் செய்த முட்டாள்தனம்தான். உங்களுடன் சேர்ந்தால் வெளிநாட்டுப்படைகள் வரும். கம்யூனிஸ்டுகள் யார், நமது சகோதர்கள்தானே?” என்று அவர்களை துரத்தி விட்டார்கள்.

போலாஸ்டீவும், லூக்கிச்சிடம் முடிந்தவரை கூட்டுப்பண்ணைக்கு தீங்கு செய்துக்கொண்டிருக்கும்படி சொல்லிவிட்டு குதிரைகளை விட்டு ஓடிவிட்டான். லூக்கிச்சுக்கு அவன் கிளம்பினதும்தான் மனமகிழ்வும் நிம்மதியும் ஏற்பட்டது. எதிர்புரட்சிக்காரர்கள் கிராமத்தை விட்டோடினர். ஸ்டாலினின் அந்தக்கட்டுரை வெள்ளப்பெருக்கினால் மூன்று வாரங்கள் தாமதமாக பல கிராமங்களை சென்றடைந்தது.

இந்த நாவலில், கட்சி அங்கத்தினர்களான டேவிடாவ்,நாகுல்நாவ், ரஷ்மியட்நாவ், போலீஸ்டீவ், லூக்கிச் கதாபாத்திரங்கள் உண்மையானவையே. சம்பவங்களும், கிராம மக்களது உணர்ச்சிகளும் உண்மையானவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவையே.  இப்போது நாம் நாவலை வாசித்தாலும்  கூட்டுப்பண்ணையின் காலத்துக்கே சென்று வந்தது போலிருக்கிறது.

மக்களுக்கும் சொத்துக்குமான உறவைப் பற்றி சொல்வதில் ஷோலோக்கோவ் வெற்றி பெறுகிறார். சுயநலம், ஏமாற்றி பிழைத்தல்,மூடநம்பிக்கைகள், வதந்திகள் என்று பலவும் மக்களிடம் நிலவி வந்திருக்கிறது, இன்று போலவே. இழக்க ஒன்றுமில்லாதவர்கள், உழைக்கத் தயங்காதவர்கள் கூட்டுப்பண்ணையின் அவசியத்தை உணர்ந்து இணைய முன்வந்தாலும் நடுத்தர விவசாயிகளிடம் ஊசலாட்டம் இருந்திருக்கிறது.  மாலையில் தோன்றி மறையும் மின்மினி பூச்சிகளின் வாழ்க்கையையொத்த நடுத்தர வர்க்கத்தினரின் இக்குணத்தை எந்த போராட்டத்திலும் நாம் காணலாம்.

மிக சொற்பமான சொத்துகளே இருந்தாலும் எண்ணத்தில் செல்வந்தராகவும், அன்றாட வாழ்க்கையில் வறியோராகவும்  இருந்தாலும் என்றாவது சொத்து சேர்த்து செல்வந்தாராகிவிடலாம் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள். உழைக்கும் மக்களைபோல தம்மீதான சுரண்டலை அவர்கள் உணர்வதில்லை. ஆனால், இவர்களும் வர்க்க உணர்வு பெற்றால் சுரண்டலற்ற, சமத்துவமான,  ஒளிமிக்க எதிர்காலமான உலக புரட்சிக்கான நாள் வெகுதொலைவில் இல்லை.

இந்த நாவல் இரத்தமும் சதையுமான சோவியத் நாட்டின் கூட்டுப்பண்ணைகள் குறித்த அழுத்தமான அனுபவத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. சொத்துடமையின் வரலாற்று ரீதியான பண்பாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஊறியிருக்கும் மக்களை மாற்றுவது என்பது எவ்வளவு சிரமம் நிறைந்த ஒன்று என்பதை இந்நாவல் பாத்திரங்களினூடாக நாம் உணர முடியும். ஆனாலும் இத்தகைய தடைகளை தகர்த்தெறிந்து அதற்கான பொறுமையையும், போராட்டத்தையும் கைவிடாத அந்த எளிய தோழர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

கம்யூனிசம் என்பது எல்லா வசதிகளையும் செய்து தரும் சொர்க்க மல்ல. அது மக்களே தமது வாழ்க்கையை உழைத்து உருவாக்கும் ஒரு போராட்டம். அந்த போராட்டத் தருணங்களை நுகர விரும்புவர்கள் உடன் இந்த நாவலை படியுங்கள். கம்யூனிசம் குறித்து அறிய விரும்புவர்களுக்கு இந்த நாவல் கூட ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும்.

நாவல்: நிலம் என்னும் நல்லாள் (Virgin soil Upturned)

பக்கங்கள்: 490, விலை ரூ. 200.00

ஆசிரியர்: மைக்கேல் ஷோலோக்கோவ்

தமிழாக்கம்: தா.பாண்டியன்

வெளியீட்டாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

நூல் கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம்,10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002. தொலைபேசி: 044-2841 2367

நன்றி: வேல்விழி

முதல் பதிவு: வினவு