தொகுப்பு | சமூகம் RSS feed for this section

ஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா? கடுங்கோட்பாட்டுவாதிகளின் பயமா?

4 ஆக

அமெரிக்க இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளர் டாக்டர் ஆமீனா வதூதின் சென்னை பல்கலைகழக சிறப்பு விரிவுரை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் கூட்டறிக்கை

சென்னை பல்கலைக்கழக இஸ்லாமிய ஆய்வுத்துறையும், JABS கல்லூரியும் இணைந்து இஸ்லாம் , பாலியல் மற்றும் சீர்திருத்தம் என்ற தலைப்பில் அமெரிக்க இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளரான ஆமீனா வதூத் நிகழ்த்த இருந்த கவுரவ விரிவுரை ரத்து செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம். அதனை தொடர்ந்து ” பெண்களின் அனுபவங்கள் மற்றும் இஸ்லாத்தில் அவர்களின் அதிகாரம் சார்ந்த பிரச்சினைகள்” என்ற தலைப்பில் வட்டமேசை கலந்தாய்வு நடக்க இருந்தது. இதுவும் காவல்துறையின் உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறையின் வேண்டுகோள் காரணமாக அவரின் கவுரவ விரிவுரை மற்றும் வட்டமேசை கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று பல்கலைகழக அதிகாரிகள் தெரிவித்தார்கள். முஸ்லிம் குழுக்கள் (வஹ்ஹாபிய குழுக்கள்) என்று போலியாக தங்களை வெளிப்படுத்திக்கொள்பவர்கள் ஆமீனா வதூதின் நிகழ்ச்சியை  சென்னையில் நடத்தினால் நாங்கள் தடுப்போம் என்று மிரட்டியிருக்கிறார்கள். மேலும் ஆமினா வதூத் அமெரிக்க அரசின் ஊதுகுழல் என்றும், இஸ்லாமிய விரோதி என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். பல்கலைகழகத்தின் இஸ்லாமிய ஆய்வு மையமானது பல்கலைகழகத்தின் விவாத உரிமையை ஊக்குவிக்க மற்றும் உரையாடலை மேற்கொள்ள எடுத்த எல்லா முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

ஆமீனா வதூதின் செயல்பாடுகளை தூரத்தில் இருந்து கவனிக்கும் எவருமே இது அவர்மீதான அடிப்படை இயல்பற்ற குற்றச்சாட்டுகள் என்பதை ஒப்புக்கொள்வர். மேலும் இந்த குழுக்களின் வாதம் முழு அறியாமை என்பதையும் பதிவு செய்வார்கள். இஸ்லாத்திற்கு மதம் மாறிய ஆப்ரிக்க – அமெரிக்க பெண்ணான ஆமினா வதூத் , அஸ்மா பர்லாஸ் மற்றும் ரிபாத் ஹஸன் ஆகியோருடன் இணைந்து அமெரிக்காவில் இஸ்லாமிய பெண்ணிய கருத்தாக்கத்தை முன்னெடுக்கின்றார்.

மேலும்  ஆமினா வதூத்  மலேசியாவை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இந்த அமைப்பானது உலகம் முழுவதும் பெண்களுக்கு நீதியையும், சமத்துவத்தையும் குர் ஆனிய அடிப்படையில் வலியுறுத்தி ஆன்மீக தளத்தில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறது. மேலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் முத்தலாக் முறைமை ஆகியவற்றிற்கு குர் ஆனிய அடிப்படையில்  சமத்துவ முறையிலான தீர்வை முன்னெடுக்கிறது. இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பு (SiS)என்பது நம்பிக்கைக்கொண்ட பெண்களுக்காக உலகம் முழுவதும் தீவிரமாக இயங்கும் ஸ்தாபனம். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்போடு ஆமினா வதூத் முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கான சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை வலியுறுத்தி முசாவா இயக்கத்தை நடத்தினார்.

இந்த தருணத்தில் இந்தியா முழுக்க இருக்கும் முஸ்லிம் பெண்கள் மற்றும் உலகளாவிய முஸ்லிம் பெண்கள் எல்லோரும் முஸ்லிம்களாக ஒன்றுதிரண்டு, இணைந்து அவர்களுக்கான நீதி மற்றும் சமத்துவத்தை பெறுவதில் முனைப்பாக செயல்பட்டு, இஸ்லாமிய நம்பிக்கையாளர்களாக, அதன் மீதும் பற்றுதல் கொண்டவர்களாக, சட்டங்களை மதிப்பவர்களாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் இம்மாதிரியான குழுக்கள் இது தமிழ்நாட்டு முஸ்லிம் மக்களின் கருத்து என்று தங்களின் இருப்பை நிலைநாட்டுவதற்காக போலியாக கருத்து தெரிவிக்கிறார்கள்.
 இதைவிட மோசம் என்பது இப்படியான பார்வைகள் ஒளிபரப்ப அல்லது கேட்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆமினா வதூத் இந்தியாவிற்கு வருகை தந்ததில் இருந்து எவ்வித பிரச்சினையும் இல்லாமல் பல்வேறு பல்கலைகழகங்கள் மற்றும் பொதுமேடைகளில் உரையாற்றி இருக்கிறார். இந்நிலையில் அவரது பேச்சால் வன்முறை ஏற்பட சாத்தியமுண்டு என்பது அப்பட்டமான பொய்யாகும். அவரைப்பற்றி அறிந்தவர்கள் ஒவ்வொருவருமே அவர் தன் வாழ்நாள் முழுவதையும் இஸ்லாத்திற்குள்ளேயும், அதன் வெளியேயும்  சமாதானம் மற்றும் சமத்துவத்திற்காக செலவழிக்கிறார் என்பதை புரிந்து கொள்வர்.

இந்த வருந்தத்தக்க நிகழ்வுகள் மற்ற காரணங்களுக்காக வேதனையளிப்பதாக உள்ளன. தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமா அத், மும்பையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் அகில இந்திய முஸ்லிம் மகிளா அந்தோளன், அவாஸ் -இ -நிஸ்வான் – மும்பை மற்றும் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சட்டவாரியம் – லக்னோ, இந்தியாவின் சிறிய நகரங்களில் செயல்படும் சிறு குழுக்கள் ஆகியவை எல்லாம்  நம்பிக்கை மற்றும் சட்டம் ஆகியவற்றின் ஆணாதிக்க காரணிகளை எதிர்க்கின்றன.  இந்த சூழலில் ஆமினா வதூதின் வருகை மற்றும் உரையானது இந்தியாவில் பெண்களிடையே இந்த விவகாரம் சம்பந்தமான உற்சாகமூட்டும் விவாதத்தை கிளப்பும்.

ஆமினாவதூதிற்கு மாற்றாக சிந்திப்பவர்கள் அவருடன் விவாதிக்க எப்போதுமே வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் இது அவரின் பேச்சுரிமையை பறிப்பதாக, எல்லோருக்கும் பழக்கமான அமெரிக்க ஏஜண்ட் என்று முத்திரைக்குத்தி அவரின் மதிப்பை குலைப்பதாக இருக்க முடியாது. அப்படி இருக்க கூடாது.

இரண்டாவதாக  காவல்துறை பல்கலைகழக விவகாரங்களில் கருத்துக்கள் சார்ந்த ஆலோசகர்களாக மாறிப்போனது குறித்து அதிர்ச்சியடைகிறோம். எம்மாதிரியான கருத்துக்கள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தலாம். இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது மாதிரியான ஆலோசனைகளை வழங்க தகுதியான நபராக காவல்துறை தன்னை கருதிக்கொள்கிறது. நிச்சயமாக இது காவல்துறையின் வேலையல்ல. மேலும் தெளிவாக இது காவல்துறையின் அபாயகரமான மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் விளையாட்டே.

இறுதியாக, சென்னை பல்கலைக்கழகத்தின்  “காவல்துறை எச்சரிக்கை” நோக்கிய மனோபாவத்தை அறிந்து அதே மாதிரி அதிர்ச்சியடைகிறோம். பல்கலைகழகத்தின் எல்லா துறைகளும் மிக திடமாக விவாதம் மற்றும் திறந்த உரையாடல் ஆகியவற்றை நோக்கி நிற்பதற்கு பதிலாக, நிர்வாகம் ஆமினா வதூதிற்கு தன் கதவுகளை அடைத்திருக்கிறது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்கலைகழக அறிவுப்பண்பாட்டின் மீது உவப்பான சமிக்ஞைகளை அனுப்பாது.

நாங்கள் காவல்துறையின் இம்மாதிரியான கல்வித்துறை தலையீட்டை வன்மையாக எதிர்ப்பதுடன், கல்வி சமூகத்தை அதன் சுதந்திரத்திற்காக அணி திரள அழைக்கிறோம்.

முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிலைப்படுத்துபவர்கள் ஆமினா வதூத் மற்றும் பிற முஸ்லிம் பெண்கள் குழுக்களின் இம்மாதிரியான செயல்பாடுகள் மற்றும் விவாதங்களில்  தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மாறாக அவர்களை சட்டவிரோதிகளாக பார்க்கக்கூடாது.

சென்னை பல்கலைக்கழகம் கல்வித்துறையின் கவுரவம், சுதந்திரம்,கண்ணியம் ஆகியவற்றை மீட்டெடுப்பதுடன் , ஆமீனா வதூதை பல்கலைகழகத்திற்கு மீண்டும் அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
————————————————————————————————-

Kaviko Abdur Rahman, Tamil Poet
Aniruddhan Vasudevan (Writer)
Abeedheen, Writer
Abilash Chandran, Poet
AD Bala, Journalist
Ahmed Faizal, Poet, Sri Lanka
Ambai ,Writer
Ameer Abbas (Film director)
Anandhi Shanmugasundaram, Social Activist
Prof. S. Anandhi
Dr. Arshad Alam, JNU, New Delhi
S. Arshiya, Writer
Abdul Haq Lareena, Poet, Sri Lanka
P.K Abdul Rahiman, University of Madras
A.P.M Idress, Writer, Sri Lanka
Anwar Balasingam, Writer
Dr. A. R. Venkatachalapathy, MIDS, Chennai
Dr. A.K. Ramakrishnan, JNU, New Delhi
Benazir Begam, Poet and Student Reporter, Dindugal
Chitra Jeyaram, Film Director and Producer, U.S
Cimimeena  (Social activist )
Devabira, Poet, Netherlands
V. Geetha, Feminist Historian and Writer, Chennai
Geetha Ilangovan, Film Maker
Geetha Narayanan, Research Scholar and Social activist
Dr. P.M. Girish, University of Madras
Gnani Sankaran, Writer, France
H.G. Razool, Poet
Hameed Jaffer, Writer
Prof. Hameem Mustafa, Nagercoil
Inba Subramaniyan, Poet
Indira Gandhi alangaram (Writer)
Jamalan, Writer
Professor Jeyashree venkatadurai
Dr. M. H. Illias, Jamia Millia Islamia, New Delhi
Kalaiarasan, Writer, Nether Land
Kalanthai Peer Mohamad, Writer
Kannan Sundaram,  Editor  & Publisher, Kalachuvadu
Kavitha Muralidharan, Journalist, Chennai
Kavin Malar, Writer and Journalist, Chennai
Keeranur Jakir Raja, Writer
Kombai S Anwar, FilKm Maker, Chennai
Ko.Sugumaran, Human Rights Activist, Pondichery
Kulachal Mu.Yoosuf, Writer & Translator
Kutti Revathi, Poet
Leena Manimekalai, Poet & Film Maker
Lenin Mathivanan, Writer, Sri Lanka
Leninsha Begam, Journalist, Chennai.
Living smile Vidhya, Poet
Manomani, Poet and Editor, Pudhuezhuthu
Manusyaputhiran, Writer and Editor, Uyirmmai Magazine
Meeran Mydeen, Writer
Mohammed Imdad, Social Activist, Sri Lanka.
Mujeeb Rehman, Writer
Megavannan (Social activist)
Malathi maithri (Poet, New Delhi)
Nirmala Kotravai, Feminist
Nisha Mansur, Poet
Dr. V. Padma (Mangai), Academician and Theatre person, Chennai
Dr. G. Patrick, University of Madras
H.Peer Mohammed, Writer
Prince entra Periyar, Social Activist
Thi. Parameswari  (Poet)
Dr. M. Priyamvada, University of Madras
Professor Premananthan (Delhi university)
Raji Kumarasamy, Social Activist
Dr. Ramu Manivannan, University of Madras
Rishan Sherif, Poet, Sri Lanka
Riyaz Kurana, Poet, Sri Lanka
Rafeek Ismail (Assistant Film Director)
Rajan kurai (Writer)
Sadakathulla Hasani, Editor, Al-Hindh, Madurai
Salma, Writer & Poet
Syed Buhari, Film Maker
Sharmila Seyyid, Poet, Sri Lanka
Shoba Shakthi, Writer, France
Shubashree Desikan, Journalist, Chennai
S. P. Udayakumar (Coordinator – People Movement of Anti-nuclear project at Kodankulam)
Sukirtha Rani, Poet
Senthilnathan (Editor Aazhi magazine)
Dr. Sunitha V, MCC, Chennai.
Shameem sheik (Social activist, Bangalore)
Siddarth Kandasamy (Social activist)
Tajdheen, Poet
Tharmini, Poet
Poet Thilagar, Sri Lanka
Thamayanthi (Social Activist, Sri Lanka)
Tamilpen Vilasini (Social Activist)
Vaa. Manikandan, Poet
Venkatesh Chakravarthy, Film Critique
Yatheendra (Political Critique, Sri Lanka)

முதல் பதிவு: களந்தை பீர் முகம்மது

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!

7 நவ்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

நவ. 7, 1917, உழைப்பது மட்டுமல்ல, நம்முடைய வேலை, நாட்டை ஆளவும் முடியும் என்பதை நிரூபித்த நாள். சுரண்டும் வர்க்கத்தை வீழ்த்தி உழைப்பவர்களுக்கான அரசியல் அதிகாரத்தை படைத்த நாள். இந்த பூவுலகில் சோசலிசம் என்ற சொர்க்கத்தை உழைப்பவர்களுக்கு அறிமுகப்படுத்திய நாள். அது தான் ரசியப் புரட்சி நாள். உழைக்கும் மக்களுக்கான உண்மையான கொண்டாட்ட நாளும் இதே நாள் என்பதை நம் நினைவில் நிறுத்துவோம்!

பாட்டாளி வர்க்கத்தின் தலைவரான ஆசான் தோழர் லெனின் தலைமையில், ரசிய கம்யூனிச கட்சியால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சோசலிச அரசு, தமது குடிமக்கள் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், குடிநீர் என அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் உடனடியாகத் தீர்த்து வைத்த்தோடு, அனைவருக்கும் கல்வி-வேலையும் உத்தரவாதப்படுத்தி சாதனை படைத்தது.

ஆனால், நம் நாட்டில் நிலைமை?

விலைவாசி விசம் போல்  ஏறி வருகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீதியில் வீசப்படுகிறார்கள், விவசாயம் அழிந்து தற்கொலை, பட்டினிசாவு என விவசாயிகள் லட்சக்கணக்கில் மடிந்து வருகிறார்கள். கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டதால் ஏழை மாணவர்கள் தற்குறியாக்கப்படுகிறார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்த நாடே பன்னாட்டுக் கம்பெனிகளின் லாபவெறிக்காக கூறுபோட்டு விற்கப்படுகிறது. இக்கொடுமைகளை எதிர்த்து போராடும் மக்கள் மீதே இராணுவம், போலீசை ஏவி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு ஒரு உள்நாட்டுப் போரையே நடத்தி வருகிறது. மன்மோகன் – சோனியா கும்பலின் காங்கிரஸ் அரசு.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

இந்த அரசு மனமுவந்து ஏற்று நடைமுறைப்படுத்திவரும் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்னும் மறுகாலனியாக்க்க் கொள்கைதான். இது தான் இன்று மக்களை மரணக்குழியில் தள்ளி வருவதோடு, நாட்டை மீண்டும் அடிமை (மறுகாலனி)யாக்கி வருகிறது.

இக்கொடுமை நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ஏழை நாடுகள் மீது உலக முதலாளித்துவம் திணித்து வரும் சுரண்டல் கொள்கையான மறுகாலனியாக்க்கக்  கொள்ளை. இதை ஒழிப்பதே உலக உழைக்கும் மக்களின் மீதான இன்றைய கடமை. இக்கடமையை நிறைவேற்ற ஏழை நாட்டு உழைக்கும் மக்களோடு ஒன்றிணைவோம். உலக முதலாளித்துவ சுரண்டலை – மறுகாலனியாக்க்கக்  கொள்கையை முறியடிப்போம். இதற்கு தெற்காசிய மக்களுக்கு நாம் ஒரு விடிவெள்ளியாகத் திகழ்வோம். மறுகாலனியாக்கத்தை முறியடிக்க முதலில் நமது நாட்டில் மீண்டும் ஒரு விடுதலைப் போரை நக்சல்பாரிகள் தலைமையில் கட்டிமைப்போம். பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளுக்கு மரண அடி கொடுப்போம். புதிய ஜனநாயகப் புரட்சியை நட்த்தி சமூக விடுதலையையும் சாதிப்போம். அதற்கு இன்றைய நவம்பர் புரட்சி நாளில் உறுதியேற்போம்.

முதல் பதிவு: பு.மா.இ.மு

ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்

6 நவ்

அண்மையில் ஆனந்த விகடன் இதழில் “ஒரு பெண் போராளியின் மனக் குமுறல்” என்ற தலைப்பில் ஒரு பெண் புலியின் செவ்வி வெளியாகியிருந்தது. பரவலாக கவனத்தை ஈர்த்த, அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரையாக அது இருந்தது. அந்த செவ்வியின் மெய்த்தன்மையில் எனக்கு ஐயம் உண்டு. அது புனைவாகக் கூட இருக்கலாம். அதன் நோக்கம் பரிதாபம் காட்டுவது எனும் போர்வையிலான கேவலப்படுத்தலாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், உயிருடன் கைது செய்யப்பட்ட ஈழப் புலிப் போராளிகள் கைக்கூலிகளாக செயல்பட ஒப்புக் கொண்ட வெகு சிலரைத் தவிர ஏனையோர் விடுதலை செய்யப்படவில்லை. அதுவும் தளபதி அளவுக்கு செயல்பாடு கொண்ட ஒரு பெண் போராளி வன்புணர்ச்சியுடன் வேறு தண்டனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யப்பட்டார் என்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம். அந்த முட்டாள்தனத்தை இலங்கை இராணுவம் ஒருபோதும் செய்திருக்காது. எனவே, அந்த செவ்வி புனைவாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். ஆனால் அந்த புனைவினூடாக தெறிக்கும் கேள்விகள்.. .. ..?

 

அந்தப் புனைவு கூறும் செய்தி என்ன? இரண்டு செய்திகளை அது அழுத்தமாக கூற விரும்புகிறது. ஒன்று ஈழப் போராட்டம் முடிந்து விட்டது. இனி அங்கு போராடுவதற்கு யாரும் தயாராக இல்லை, சூழலும் இல்லை. இரண்டு, தமிழகத்தில் ஈழ மக்கள் நலனுக்காக செயல்படுவதாக கூறிக் கொள்ளும் கட்சிகள் அனைத்தும் ஈழம் குறித்து அக்கரையும் புரிதலும் இல்லாதவை. இப்படிக் கூறுவதன் மூலம் ஈழப் பிரச்சனை தொடர்பாக தமிழத்திலிருக்கும் ஆதரவு நிலையை நீர்த்துப் போக வைப்பது; அவர்களை அப்புறப்படுத்திய இடத்தில் அரசு சாரா நிறுவனத்தையோ, வேறு குழுக்களையோ வைத்து, இந்திய அரசு செய்து கொண்டிருக்கும் துரோகத்தையும், பிராந்திய நலன்களுக்கான செயல்களை இன்னும் வீரியமாகவும், நுட்பமாகவும், மறைமுகமாகவும் செய்வதற்கான முந்தயாரிப்பாகக் கூட அந்தப் புனைவு இருக்கலாம்.

 

ஆனால் இந்தப் புனைவு யாரைத் தாக்குகிறதோ அவர்கள், அதாவது வைகோ, நெடுமாறன், சீமான் இன்னபிற தமிழ் தேசிய கட்சிகள் போன்றவை இது குறித்து எந்தக் கருத்தையும் இதுவரை கூறவில்லை. ஏனென்றால் அவர்களெல்லாம் ‘ஏசு இருக்கிறார், வந்து கொண்டே இருக்கிறார்’ என்பது போல் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், இதோ துப்பாக்கியோடு வந்து விட்டார் என்று ஜெபம் செய்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் பேசினாலுமே கூட அது கற்பனையாக எழுதப்பட்டது என்பதை தாண்டி வேறெதையும் கூறப் போவதில்லை. அது கற்பனை உரையாடலாகத்தான் இருக்கும் என்றாலும், மெய்யாகவே தற்போதைய இலங்கையின் யதார்த்த நிலை அது தான்.

 

தனி ஈழம் கோரி போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியா எனும் பிராந்திய வல்லாதிக்கத்திற்காக முற்றிலுமாக தகர்த்தெறியப் பட்டிருக்கிறது. தனி ஈழ தாகம் கொண்டிருந்த மக்கள் கொன்றொழிக்கப் பட்டிருக்கிறார்கள். போராளிகள் போரின் போதும் அதன் பிறகும் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள், உயிருடன் எஞ்சியவர்கள் சிறைக் கொட்டடிகளில் சித்திரவதை பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வெளியே ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாகவோ, போராளிகளுக்கு ஆதரவாகவோ நிலை எடுப்பது குற்றச் செயலாக, அரசு ஒடுக்குமுறைக்குள் வலிந்து மாட்டிக் கொள்வது போன்ற செயலாக மக்களிடம் ஆழமாக விதைக்கப் பட்டிருக்கிறது. ஒரு போராட்ட அமைப்பு முற்றிலுமாக குலைக்கப்படுவது முன்னெப்போதும் நடந்தே இராத ஒன்றல்ல. அது அவமானகரமான ஒன்றும் அல்ல. ஆனால் விடுதலைப் புலிகள் விசயத்தில் இவ்வாறான புரிதலுக்கு அதன் ஆதரவாளர்கள் ஏன் வர மறுக்கிறார்கள்? எந்த ஒரு விடுதலை இயக்கத்துக்கும் இயக்கம் தான் முதன்மையான ஒன்றேயன்றி அதன் தலைவர்களோ, தனிநபரோ அல்ல. புலி ஆதரவாளர்களிடம் இது தலைகிழாக இருக்கிறது. அதனால் தான் படையணிகளும், ஆயுதங்களும் எதிரியால் முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட பின்பும் பிரபாகரன் வானத்திலிருந்து குதித்து விரல் சொடுக்கினால் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாகிவிடும் என்பதைப் போல கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

விடுதலைப் புலிகள் ஏன் அழிந்தார்கள், எது அவர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது என்பதை விட்டு விடுவோம். விடுதலைப் புலிகள் என்றால் பிரபாகரன் தான் எனும் நாயக மனப்பான்மைக்கு இவர்களை இட்டு என்றது யார்? எது? லட்சக் கணக்கில் தங்கள் கட்சிக்கு உறுப்பினர்கள் இருப்பதாக காட்டிக் கொள்ளும், தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள் அந்தக் கடைசிக்கட்டப் போரில் இங்கிருந்து செய்த பங்களிப்பு என்ன? பாசிச ஜெயாவுக்கு ஓட்டுக் கேட்டது தான் இவர்களின் ஒரே பங்களிப்பு. அங்கு மக்களின் மேல் ஏவுகணைகள் பாய்ந்து கொண்டிருந்தபோது, இங்கே இவர்கள் இலைமலர்ந்தால் ஈழம் மலரும் என்று அறிக்கைக் கணைகள் விட்டுக் கொண்டிருந்தார்கள், ஈழ ஆதரவு என்பதை கருணாநிதியை திட்டுவது என்று குறுக்கிக் கொண்டிருந்தார்கள். எந்த இந்திய ஆளும்வர்க்கத்திற்காக போர் நடத்தப்பட்டுக் கொண்டிருந்ததோ அந்த ஆளும் வர்க்கத்தின் பலன்களைப் பெறுவதில் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

 

இலங்கை அரசு தமிழர்கள் விசயத்தில் என்ன செய்து கொண்டிருந்ததோ அதையே தான் இந்திய அரசு காஷ்மீர் விசயத்திலும், மத்திய கிழக்கிலும் செய்து கொண்டிருக்கிறது. அதை ஆதரித்துக் கொண்டு, இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் பெற துடித்துக் கொண்டு விடுதலைப் புலிகளையும், தனி ஈழத்தையும் ஆதரிக்கிறோம் என்பது அவர்கள் கொள்கையில் இருக்கும் ஓட்டாண்டித் தனமா இல்லையா? இந்த ஓட்டாண்டித் தனத்தை மறைக்கத்தான் பிரபாகரனை ஒரு நாயகனைப் போல தாங்கிப் பிடிக்கிறார்கள். நாளையே அவர் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு களத்துக்கு வந்து விடுவார் என்று பிரமையூட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் வெறுமனே தலைவராகப் பிறந்தவரல்லர். அங்கிருந்த சூழல் அவரை தலைவராக பரிணமிக்க வைத்தது. ஆனால் இன்று அங்கிருக்கும் சூழல் துப்பாக்கியை அல்ல புரசிகர மக்கள் திரள் இயக்கத்தையே கோரி நிற்கிறது. அரசில் அங்கம் வகிக்கத் துடிப்பவர்களால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியுமா? அதனால் தான் அவர்கள் துப்பாக்கியை துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அடையாளமாக பிரபாகரனுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஈழத் தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் இருந்தாலும் வெளியில், சொந்த இடத்தில் இருந்தாலும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஈழப் போரை நினைத்தாலே வலிக்கும் அளவுக்கு அவர்கள் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். தொட்டால் நொறுங்கிவிடும் அளவுக்கு அவர்களுக்குள் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இதை வெல்ல, அவர்களை நேரடியாக பாதிக்கும் வாழ்வாதாரப் பிரச்சனை தொடங்கி, வர்க்க அடிப்படையில் திரட்டி, உணவுப் பிரச்சனையினூடாக உலகப் பார்வையை ஊட்டி ஆயத்தப்படுத்தும் பெரும்பணி தேவையாக இருக்கிறது. அதை ஒரு புரட்சிகர இடதுசாரி இயக்கத்தாலல்லாது பிரிதொரு கொள்கையால் செய்யவியலாது.

 

அண்மையில் பலநாடுகளில் நடைபெற்ற மக்கள் எழுச்சிமிகு போராட்டங்கள் புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் இல்லாததால் நீர்த்துப் போய், மக்கள் போராடியதன் பலன் யாருக்கு எதிராக போராடினார்களோ அவர்களுக்கே கிடைத்திருக்கிறது. அங்கெல்லாம் புரட்சிகர இயக்கத்தின் தேவை அவர்களின் சொந்த அனுபவங்களினூடாகவே உணரப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தோல்விக்கும் அவர்களின் சிதைவுக்கும் இந்த இன்மையே தொடக்கமாக இருந்திருக்கிறது. பெண் போராளியின் பெயரால் புனையப்பட்டிருக்கும் அந்தக் கற்பனை உரையாடல், அது என்ன நோக்கத்திற்காக புனையப்பட்டிருந்தாலும் இதையே உணர்த்துவதாய் இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

ஈழத்திற்கு கிளஸ்டர் குண்டு பிரபாகரனுக்கு கிராஃபிக்ஸ் குண்டு

மாவீரர் நாள் எனும் சடங்கு

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

குடி: கௌடில்யன் முதல் டாஸ்மாக் வரை!

26 அக்

 

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்என்னவேண்டுமானாலும் செய்வேன்அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”

– 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது எனும் டெல்லி அரசின் முடிவுக்கெதிராக ‘போராடும்’ டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இயக்க முழக்கம்!

அன்றைய தினம் ஏறக்குறைய நூறு பேர் அந்த டாஸ்மாக் கடையின் பின்புறம் இருந்தார்கள். அவர்கள் அனைவரது மனநிலையும் இதுதான். அவர்கள் உச்சரித்த எண்ணற்ற வார்த்தைகளின் சாராம்ச பொருளும் இதுவேதான்.

உழைக்கும் மக்களில் ஆரம்பித்து, அதிகார வர்க்க எடுபிடிகள் வரை சகல தரப்பினரும் அங்கு சிதறியிருந்தார்கள். மாணவர்களில் தொடங்கி வயதானவர்கள் முடிய அந்த இடத்தில் குழுமியிருந்தார்கள். இரைச்சல்களுக்கிடையில் தங்கள் முதலாளிகளை திட்டினார்கள். மேலாளரின் கன்னத்தில் அறைந்தார்கள். மனிதவள மேம்பாட்டு அதிகாரியின் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். கல்லூரித் தாளாளரின் கைகளை ஒடித்தார்கள். காதலியுடன் முரண்பட்டார்கள். மனைவியை அடித்தார்கள். மகனுக்காக ஏங்கினார்கள். மகளுக்காக துடித்தார்கள். அப்பாவை அடித்தார்கள். அம்மாவை கொஞ்சினார்கள். அண்ணனை கொன்றார்கள். அக்காவை போற்றினார்கள். தங்கையை முத்தமிட்டார்கள். தம்பியை உதைத்தார்கள். மாநில முதல்வரை அவமானப்படுத்தினார்கள். பிரதமரின் கோவணத்தை அவிழ்த்தார்கள். மத்திய – மாநில அமைச்சர்களின் வீட்டு பெண்களை சந்திக்கு இழுத்தார்கள். கை கோர்த்தார்கள். கை குலுக்கினார்கள். கட்டிப் பிடித்தார்கள். கட்டி உருண்டார்கள். சிரித்தார்கள். அழுதார்கள். கதறினார்கள். கலைந்தார்கள்.

மறுநாள் அல்லது வரும் வார இறுதி அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் மீண்டும் கூடுவார்கள். திரும்பவும் கனவு காண்பார்கள். ஒரே மனநிலையை பலதரப்பட்ட வார்த்தைகளில் வெளிப்படுத்துவார்கள்.

இது ஏதோ ஒரு டாஸ்மாக் கடையில், என்றேனும் ஒருநாள் நடந்த – நடக்கும் – சம்பவமல்ல. இதுதான் தமிழகத்திலுள்ள 6,690 சில்லறை மதுபான விற்பனைக் கடைகளையும் சுற்றி அன்றாடம் நிகழும் நிகழ்வுகள். நகரங்களில் உள்ள 3,562 டாஸ்மாக் கடைகளிலும் கிராமப்புறங்களிலுள்ள 3,128 கடைகளிலும் பல இலட்சக்கணக்கான மக்கள் சங்கமிக்கிறார்கள். டாஸ்மாக்கே நமது ஆண்களின் புனிதக்கோவிலாக மாறிவருகிறது.

இந்த உண்மை அதிகார வர்க்கத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனாலும் சுவரெழுத்து எழுதவும், அரசுக்கு எதிராக துண்டறிக்கை விநியோகிக்கவும், அடிப்படை உரிமைக்காக சாலை மறியல் செய்யவும், தடை விதிப்பது போல் அரசாங்கம் இப்படி பகிரங்கமாக பேசுவதற்கு தடையேதும் விதிப்பதில்லை. பதிலாக தங்களைத்தான் திட்டுகிறார்கள் என்று தெரிந்தே அரசாங்கமும், தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் டாஸ்மாக்கையும், ‘பார்’களையும் ‘ஸ்பான்சர்’ செய்து நடத்துகின்றன.

———-

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”

உடைமையாளர்களுக்கு சொந்தமான இந்த வாக்கியத்தை, 1500 ஆண்டுகளுக்கும் முன்பே உடைமையற்றவர்களின் மனதிலும் நாவிலும் வலுக்கட்டாயமாக ஒருவன் புரண்டு, தவழ வைத்தான். அதற்கு குடிப் பழக்கத்தையே அடிப்படை காரணமாக மாற்றினான். இதன் மூலம் அரசின் வருவாயை பெருக்கினான். அவன் கவுடில்யன். அவன் எழுதிய ‘அர்த்த சாஸ்திரம்’ நூலில் இதுகுறித்து விரிவாகவே பதிவு செய்திருக்கிறான்.

அதிகமாக குடிப்பதை தண்டனைக்குரிய குற்றமாகவும், அதனை கண்காணிக்க ‘சுராதயக் ஷா’ என ஒரு கண்காணிப்பாளரையும் அவருக்குகீழ் ‘அதயாக் ஷா’ எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைத்து குடி குறித்த கண்காணிப்பு வலையை விரிக்க வேண்டும் என்கிறான். மதுபானங்களை வடித்தெடுத்து அதனை நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு என மது வணிகத்தை அரசுடைமையாக்கினான். அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் பணி, மேலே சொன்ன குழுவுக்கு உரியது. இக்குழு சமுகமெங்கும் கண்காணித்து மது குடிப்பதை ஒழுங்கமைக்க வேண்டும். மது அருந்தும் உயர்குடியினர் (nobels) கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். மது அருந்துவதற்கு என அரசு கட்டியுள்ள கட்டிடங்களில் மட்டுமே மது அருந்த வேண்டும். குறிப்பிட்ட விழாக்காலங்களில் மது காய்ச்சவும் குடிக்கவும் தடை விதிக்க வேண்டும். ஆனால், அந்நாட்களில் வீடுகளில் குடிக்கலாம்…

இன்றைய டாஸ்மாக்கின் நடைமுறை அப்படியே ‘அர்த்த சாஸ்திரத்தை’ அடியொற்றி இருப்பதைக் காணலாம். இதனையடுத்து வந்த அனைத்து அரசுகளுமே குடியை அரசு கஜானாவை நிரப்பும் கண்ணியாகவே பார்த்தன. பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’, குடிக்குரியதுதான்.

ஆங்கிலேயர் ஆட்சியில் ‘அப்காரி’ (Abhari Excise System) சட்டம் 1790-ல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, மதுவகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் என்பதற்கான உரிமைகளை அதிகத் தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கினர். இதனை தொடர்ந்து 1799-ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 – 94-ஆம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள் வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (அதாவது ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தொகை 1902 – 03-ஆம் ஆண்டுகளில் அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ.9,28,000 என உயர்ந்துள்ளது (ஆதாரம்: தஞ்சை மாவட்ட கெசட்).

1857-ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த அதிகாரங்களைப் பயன்படுத்திப் பல்வேறு மையப்படுத்தும் நடவடிகைகளையும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் கிளர்ந்து எழாமல் இருப்பதற்காக மது அருந்தும் பழக்கத்தை திணித்தது.

குடிநிர்வாகம் குறித்த ஆங்கிலேயரின் அணுகல் முறைக்கு அவர்கள் அயர்லாந்தில் 1799-ல் மேற்கொண்ட முயற்சிகளே முன்னுதாரணமாக இருந்தது. அதன்படி இந்தியாவில் சமுதாய அளவிலான குடி விவசாயங்களைத் தடை செய்து மையப்படுத்தப்பட்ட சாராய உற்பத்தி சாலைகளை ஏல முறையில் தரகு முதலாளிகளிடம் (‘மரியாதையும் மூலதனமுள்ள பெருவியாபாரிகளிடம்’ என்பது அயர்லாந்தில் ஆங்கிலேய அரசு பயன்படுத்திய வார்த்தை) அளிப்பது. சாராயக் கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது. அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது என்றும், கள் உற்பத்தி மற்றும் கள் குடிக்கும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைத்து ரசாயனங்களை கலந்து மதுவை தயாரிப்பது என்றும் முடிவுக்கு வந்தனர்.

இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள எல்லாப் பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டுமென மாகாண அரசுகளுக்கு 1859ஆம் ஆண்டு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினர். இதனையடுத்து பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்துப் பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்துவந்த தாதாபாய் துபாஷ் என்பவனிடம் மும்பை மாகாண சாராய உற்பத்தியின் ஏகபோகத்தை அளித்தார்கள். தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது. (1951ல் விட்டல் மல்லையா – விஜய் மல்லையாவின் தந்தை – இந்நிறுவனத்தை ‘முயன்று’ வாங்கினார்). இப்படித்தான் நாடு முழுவதுமே சாராய தரகு முதலாளிகள் மாகாண அளவில் உருவாக்கப்பட்டனர்.

1947 ஆகஸ்ட் 15 அன்று நிகழ்ந்த அதிகார மாற்றத்துக்கு பின்னர், ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு செல்லும்போது, நில வருவாய்க்கு அடுத்தபடியாகக் குடி மூலமான வருவாயே இந்தியாவில் இருந்தது. இன்றைய தமிழக அரசின் வருவாய் நிலையும் குடி வழியாக வரும் வருவாயை நம்பியே இருக்கிறது. 2010 – 11-ஆம் ஆண்டுகளில் டாஸ்மாக் வழியாக அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.14,965 கோடி என்கிறது புள்ளிவிவரம்.

ஆனால், இந்த விவரங்கள் உணர்த்தும் செய்தியோ வேறு. நேர்முக வரிகள் குறைக்கப்பட்டு, முதலாளிகளுக்கு ஏராளமான – தாராளமான – சலுகைகள் வழங்கப்படுவதால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்கவே அரசாங்கங்கள் குடி விற்பனையை ஊக்குவிக்கின்றன. இங்கிலாந்தில் லாட்டரியும், மற்ற ஐரோப்பிய நாடுகளில் சூதாட்டங்களும் எப்படி உழைக்கும் மக்களை பலி வாங்குகிறதோ அப்படி தமிழகத்தில் டாஸ்மாக் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை காவு வாங்குகிறது.

————–

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”

என்ற வாக்கியம் பொருளாதார ரீதியாக ஒரு அர்த்தத்தை தருவது போலவே பண்பாட்டுக்கு ரீதியாக வேறொரு பொருளைத் தருகிறது. ஆனால், அனைத்து அர்த்தங்களின் ஆணிவேரும் ஒன்றுதான். அது, பொழுதுபோக்கையும் சேர்த்து சுரண்டுவது. இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் மேல்நிலை வல்லரசுகளின் சுரண்டல்களுக்கு ஏற்ப உலக மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக – தக்கை மனிதர்களாக – மாற்றுவதுதான் இந்த வாக்கியத்தின் பின்னால் இருக்கும் உண்மை.

இதனடிப்படையிலேயே உழைப்பு நேரங்களை எப்படி அட்டவணைப் போட்டு ஒவ்வொரு தொழிலாளியையும் நிறுவனங்கள் சுரண்டுகிறதோ அப்படி அத்தொழிலாளியின் ஓய்வு நேரங்களையும் அட்டவணைப் போட்டு சுரண்ட ஆரம்பித்திருக்கின்றன. எதைப் பார்க்க வேண்டும், எதை ரசிக்க வேண்டும், எதை படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எந்தத் தொழிலாளிக்கும் இல்லை. உழைக்கும் நேரம் போலவே ஓய்வு நேரமும் பறிபோய் விட்டது. அதாவது தொழிலாளர்களின் பொழுதுபோக்கு நேரங்கள், சுரண்டல் அமைப்பின் உழைப்பு நேரங்களாகிவிட்டன. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘வீக் எண்ட்’ கலாச்சாரம், இன்று பிரபஞ்சம் தழுவிய கலாச்சாரமாக மறு ஆக்கம் செய்யப்பட்டு வருகிறது.

வாரநாட்களில் 10 அல்லது 12 அல்லது 14 மணிநேரங்கள் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்படும் தொழிலாளியின் கண்முன்னால், வார இறுதி என்ற கொண்டாட்டத்தை எலும்புத் துண்டு போல காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் ‘வீக் டேஸில்’ கோழையாக – மேலாளரின் அடக்குமுறைக்கு கட்டுப்பட்டு கீழ்படிந்து – இருப்பது ‘வீக் எண்ட்’டை உத்திரவாதப்படுத்துகிறது. குடிக்கும் நேரத்தை எதிர்பார்த்தே குடிக்காத நேரங்களை கடத்தும் மனநிலைக்கு தள்ளுகிறது. ஒவ்வொரு தொழிலாளியும் குடித்துவிட்டு வேலைக்கு வரக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கும் நிறுவனங்கள், குடிக்காமல் அதே தொழிலாளி உறங்கவும் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன.

அதனாலேயே உரிமைக்காக குரல் எழுப்புவர்களின் மீது தடியடி நடத்தும் காவல்துறையினர், குடித்துவிட்டு ‘மாண்புமிகு’களை என்ன திட்டினாலும் கண்டுக் கொள்ளாமல் செல்கின்றனர். சாலைகளில் வண்டிகளை நிறுத்தினால் அபராதம் விதிப்பவர்கள், டாஸ்மாக் கடை வாசலில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும்படி எப்படி நிறுத்தினாலும் புன்னகையுடன் நகர்கின்றனர். இப்படியாக பொது ஒழுங்கையும், சட்ட ஒழுங்கையும் பாதுகாக்க டாஸ்மாக் அவசியமாகிறது.

ஆக, குடிப்பது என்பது உள்ளார்ந்த விருப்பமல்ல. அது திணிக்கப்பட்டது. இதுவே பின்னர் விருப்பமாக உருவெடுக்கிறது. உடல் வலியை மறக்க குடிக்க ஆரம்பித்து உடல் வலிமையை இதனாலேயே உழைக்கும் வர்க்கம் இழக்கிறது. அடுத்த நாள் அல்லது அடுத்த வார வேலை(களை) செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்பட்ட பழக்கம், என்றைக்கும் வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளுகிறது.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பெண்களுக்கு வரன் தேடும்போது மாப்பிள்ளை குடிப்பவராக இருந்தால், அந்த மணமகனை நிராகரிப்பார்கள். இன்று குடிக்கும் பழக்கம் இல்லாத நபர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்கத்தான் பெண்கள் தயங்குகிறார்கள். ‘என்றாவது குடிப்பதில் தவறில்லை’ என்ற போக்கு அதிகரித்திருக்கிறது. மிதமாக குடிப்பவர், எப்பொழுதாவது குடிப்பவர், அவ்வப்போது குடிப்பவர், எப்பொழுதும் குடிப்பவர் என்ற தர வரிசை பெருமைக்குரிய அடையாளமாக மாறியிருக்கிறது.

இப்படி மதுவுக்கு அடிமையாகி இருப்பதாலேயே குறைந்தபட்ச எதிர்ப்புணர்வு கூட இல்லாமல் போய்விடுகிறது. ஐந்து ரூபாய்க்கு தேநீர் பருகும்போது, இந்த அளவில், இவ்வளவு டிகாஷனுடன் டீ வேண்டும் என்று கேட்பவர்கள், மேஜையின் மீது ஈ மொய்ப்பதை சுட்டிக் காட்டி துடைக்கச் சொல்கிறவர்கள், டாஸ்மாக் கடையில் அவர்கள் தரும் ‘சரக்கை’ மறுபேச்சில்லாமல் தங்களுக்கு பிடிக்காவிட்டாலும் வாங்கிச் செல்வது எதனால்? சிறுநீர் கழிக்கும் இடம் அருகிலேயே இருக்க, யாரோ எடுத்த வாந்தி காய்ந்திருக்க, அதன் அருகிலேயே அமர்ந்து குடிக்க நேர்வதை அவமானமாக கருதாதது ஏன்? சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் டாஸ்மாக் சுவர் இடிந்து விழுந்து பல தொழிலாளர்கள் மரணமடைந்தது நினைவில் இருக்கலாம். இன்றும் பழுதுப்பட்ட சுவர்கள் பல டாஸ்மாக் கடைகளை தாங்கித்தான் நிற்கின்றன. அதன் அடியில் அமர்ந்துதான் இப்போதும் பலர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை 120 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வணிக விற்பனைகளுக்காக முன்னிலைப்படுத்தப்படும் விழா நாட்கள், குடிப்பதற்கான நாட்களாகவும் இருக்கின்றன. உடைகளின் விற்பனை இந்நாட்களில் அதிகரிப்பது போலவே மது பானங்களின் விற்பனையும் அதிகரிக்கின்றன.

திரைப்படங்களில் வில்லன் மட்டுமே குடித்த காலம் மலையேறி, இப்போது கதாநாயகன் குடிக்க வேண்டும் என்பது ‘சாமுத்ரிகா லட்சணத்தில்’ வந்து நிற்கிறது. இந்த ‘லட்சணத்தை’ பத்திரிகைத்துறையில் இப்போது அதிகம் பார்க்கலாம். கண்முன் இருக்கும் உதாரணம், 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலை. இக்காலத்தில் இலங்கை தூதரக அதிகாரியான அம்சா, தமிழக பத்திரிகையாளர்களுக்கு ‘பார்ட்டி’ வைத்தார். அதுவரை ‘சிங்கள இராணுவம்’ என்று எழுதி வந்த ஊடகம், இந்தப் ‘பார்ட்டி’க்கு பிறகு ‘இலங்கை இராணுவம்’ என்று எழுத ஆரம்பித்தன. ஈழப்பிரச்னை தமிழகத்தில் பரவாமல் தடுக்க, சில கோப்பைகள் மதுவே இலங்கைத் தூதரகத்துக்கு போதுமானதாக இருந்திருக்கிறது.

இதே வழிமுறைகளை பல காவல்துறை அதிகாரிகளும், ஆணையர்களும் இன்றளவும் பின்பற்றுகிறார்கள். செய்தியாளர்களுக்கு ‘பார்ட்டி’ வைப்பதன் வழியாக அவர்களிடமிருந்து செய்திகளை அறிந்துக் கொள்கிறார்கள்; செய்திகள் வராமல் தடுக்கிறார்கள். பணி உயர்வு, ஊதிய உயர்வு, இட மாற்றம் போன்ற விஷயங்கள் ‘விருந்து’களில் தீர்மானமாகின்றன. இராணுவ ரகசியங்களை அறிய எந்த சித்திரவதைகளையும் அண்டை நாடுகள் செய்வதில்லை. ‘ஒரு ஃபுல்’ முழு ரகசியத்தையும் தாரை வார்த்து விடுகிறது.

குடிக்கு அடிமையான – அடிமையாக்கப்பட்ட மனிதர்களை குறி வைத்துத்தான் தரகு முதலாளிகளும் பன்னாட்டு மது உற்பத்தி நிறுவனங்களும் களத்தில் இறங்குகிறார்கள். அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்தியாவில் குடிப்பவர்களின் எண்ணிக்கை 30% அதிகரிக்கும் என்கிறது புள்ளி விவரம். 2011 – 12-ல் 2 ஆயிரம் இலட்சம் பீர் பெட்டிகளும், 1,100 இலட்சம் விஸ்கி பெட்டிகளும், 540 இலட்சம் ரம் பெட்டிகளும், 280 இலட்சம் பிராந்தி பெட்டிகளும், 20 இலட்சம் வோட்கா பெட்டிகளும், 60 இலட்சம் ஜின் பெட்டிகளும் இந்தியாவில் விற்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு பெட்டியில் 48 ‘குவார்ட்டர்’ அல்லது 24 ‘ஆஃப்’ அல்லது 12 ‘ஃபுல்’ இருக்கலாம்.

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் எதுவொன்றையும் மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாது. ஒன்றுக்குள் மற்றது அடக்கம். மற்றதுக்குள் இன்னொன்று அடக்கம். அந்தவகையில் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அரசு சாரா அமைப்புகள் பல பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் போதை மறுவாழ்வு மையங்களை தொடங்குவதும், கவுன்சிலிங் என்ற பெயரில் ஒரு தொகையை பறிப்பதும், புதிதுப் புதிதாக மன நோய்கள் பூப்பதும், மருந்துகள் அறிமுகமாவதையும் சொல்லலாம்.

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைடட் ப்ரீவரீஸ் லிட் நிறுவனத்தின் அதிகாரியான ரவி நெடுங்காடி, ”மூன்றில் இரண்டு பங்கு வாடிக்கையாளர்கள் குறைந்த வயதுடையவர்கள். சட்டப்படி குடிக்க அனுமதி இல்லாதவர்கள். இவர்களை குறி வைத்துதான் நாங்கள் விற்பனையில் இறங்கியிருக்கிறோம். 3500 இலட்சம் பேர் இப்போது குடிக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 5 ஆயிரம் இலட்சமாக உயர்த்துவதுதான் எங்கள் நோக்கம்…” என்று பெருமையுடன் பேசியிருக்கிறார்.

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”  என டிராகுலாவின் பற்களை ஆல்கஹால் கொண்டு மறைத்தபடி தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் புன்னகைக்கிறார்கள். அவர்களுக்கான வார்த்தைகளை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் வாக்கியமாக மாற்றத் துடிக்கிறார்கள்.

குடி என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த சுரண்டல் மட்டுமல்ல அல்லது மருத்துவ உலகம் பட்டியலிட்டிருப்பது போல் அதுவொரு நோய் மட்டுமே அல்ல. அது உடலையும் மனதையும் ஆளுமையையும் ஒரு சேர எடுக்கும் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பு.

_________________________________________________________

– புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011

__________________________________________________________
முதல் பதிவு: வினவு

அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’!

11 செப்

 

கூடங்குளம் போலீஸ் தடியடியை நியாயப்படுத்தி ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பக்திப் பரவசத்தோடு வெளியிட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில் அணு உலை பாதுகாப்பானது, அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய, மாநில அரசுகள் நியமித்த வல்லுனர் குழுக்கள் அளித்த அறிக்கைகளை அடுத்து அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை சொல்கிறார், ஜெயா.

இந்த 500 கோடி எதற்கு? கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் அப்பகுதியில் வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாம் ஏற்படும் என்று அளந்து விட்டார்களே அன்று. இன்று இந்த ‘லஞ்சப்’ பணம் எதற்கு? போராடும் மக்களை திசைதிருப்பி, உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் அரசியல் பிரமுகர்களை சரிக்கட்டவே இந்த 500 கோடி பம்பர் பரிசு என்பது பாமரனுக்கும் தெரியும்.

பிறகு சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் ஆராய்ந்து அணுமின்நிலையம் செயல்படலாம் என்று தீர்ப்பினை அளித்த பிறகு அணுமின்நிலையத்தை முடக்குவது பொருத்தமாகாது என்றும் ‘சட்டத்தின்’ ஆட்சியை நினைவு படுத்துகிறார் ஜெயா. சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டுமென்று இதே உயர்நீதிமன்றம் சொன்ன பிறகும் நடுராத்திரியில் உச்சநீதிமன்ற நீதிபதியை எழுப்பி தடை வாங்க முயன்றவர்தான் இந்த ஜெயலலிதா. பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தையே வாய்தா மன்றமாக ஆக்கி வாய்தா ராணி என்று பட்டமும் பெற்றவர் நீதிமன்றத்தை எதிர்க்கக் கூடாது என்று சொல்வதற்கும் சாத்தான் வேதம் ஓதுவதற்கும் என்ன வேறுபாடு?

போபால் விபத்து தொடர்பாக கூட இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள் கைவிரித்து விட்டன. கொலைகார ஆண்டர்சனை கைது செய்ய முடியாது என்றும் கூறிவிட்டன. இதை ஏற்றுக் கொண்டு போபால் மக்கள் அமைதியாக வாழ வேண்டுமென்று ஒருவர் சொன்னால் அது எத்தனை அயோக்கியத்தனமானது? அணுமின்நிலைய விபத்தும், அதனால் கொல்லப்பட்ட, நடைபிணங்களாக வாழும்  மக்களும் பல்வேறு இரத்த சாட்சியங்களாக உலகம் முழுவதும் இருக்கும் போது கூடங்குளம் பகுதி மக்கள் மட்டும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று தங்களையே பலி கொடுப்பதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டுமா? நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிட்டால் யாரும் போராடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம்?

“தங்களையும், அணுமின்நிலையத்தையும் காப்பாற்ற வேறு வழியின்றி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கூட்டத்தைக் கலைத்தனர்” என்கிறார் ஜெயலலிதா.  இடிந்தகரையிலிருந்து புறப்பட்ட மக்கள் வெள்ளைக் கொடிகளுடன் அமைதி வழியில் முற்றுகை நடத்துவதாகத்தான் அறிவித்தார்கள், செய்தார்கள். அவர்கள் அமைதி வழியில் போராடுகிறார்கள் என்பதை இப்போது அல்ல கடந்த ஓராண்டுகளாகவே பார்க்கிறோம். அப்படி இருக்கும் போது வன்முறையை யார் கட்டவிழ்த்தார்கள்?

அணிதிரண்டு வந்த மக்களிடம் பேசிய போலீசு அதிகாரிகள் 144 தடையுத்தரவு போடப்பட்டிருக்கிறது, அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்றுதான் மிரட்டியிருக்கிறார்கள். இது தொலைக்காட்சிகளிலும் வந்திருக்கிறது. போராடவே கூடாது என்று தடை போட்டு விட்டு பிறகு வன்முறை என்று திரிக்க வேண்டிய அவசியம் என்ன?

அணுமின்நிலையம் வந்தால் அப்பகுதி மக்கள் அனைவரின் வாழ்க்கையும் மரண அபாயத்தில் தள்ளப்படும். அந்த அபாயத்தை எதிர்த்து போராடுவதை ஒடுக்கி அணுமின்நிலையத்தை காப்பாற்றுகிறோம் என்றால் என்ன பொருள்? அணுமின்நிலையம் வந்தாலும் மரணம், அதை எதிர்த்து போராடினாலும் மரணம் என்று மிரட்டுவது யார்?

இத்தனை ஆயிரம் மக்களது போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீசு நடத்திய திட்டமிட்ட தாக்குதல்தான் அந்த தடியடி. இதைத்தான் நாசுக்கான நயவஞ்சக மொழியில் பாசிச ஜெயலலிதா நியாயப்படுத்துகிறார். இதற்கு அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் கூண்டோடு கைலாயம் அனுப்பிவிட்டு அணுமின்நிலையத்தை சேமமாக நடத்தலாமே?

 

முதல் பதிவு: வினவு

புதிய தலைமுறை: நடுத்தர வர்க்கத்தின் நாட்டுமருந்து!

6 செப்

புதிய-தலைமுறை

 

புதிய தலைமுறை டி.வி. வெற்றிகரமாக இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் புதிய தலைமுறையின் வெற்றியை தமது வெற்றியாக கருதி மகிழ்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். ‘ஒரே வருஷத்துல புதிய தலைமுறை பின்னுறாங்க. சன் நியூஸை தாண்டி நம்பர் ஒன் இடத்துக்கு வந்துட்டாங்க.. கிரேட்.. வாழ்த்துகள்’ என சமூக வலைதளங்களிலும், இன்னபிற இடங்களிலும் பலரும் புகழ்மாறி பொழிகின்றனர். சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்தை தகர்த்து எறிந்த வெற்றியாளன் என்ற பிம்பம் புதிய தலைமுறை மீது எழுப்பப்பட்டிருக்கிறது. ‘உண்மையை உடனுக்குடன்’ வழங்கும்’ புதிய தலைமுறையின் உண்மை முகம் என்ன?

புதிய தலைமுறை டி.வி.யை மட்டும் பார்க்கும் பலருக்கு இதன் உரிமையாளர் யார் என்று தெரிவதில்லை. எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் முதலாளி பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர்தான் புதிய தலைமுறையின் உரிமையாளர். பச்சைமுத்துவின் மகன் சத்தியநாராயாணா இந்த டி.வி. நிர்வாகத்தை கவனித்துக்கொள்கிறார். காட்டாங்கொளத்தூர் அருகே பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் எஸ்.ஆர்.எம். கேம்பஸ், ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை போல பிரமாண்டமாக மிரட்டுகிறது. 1969-ல் மேற்கு மாம்பலத்தில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேள் என்ற பெயரில் துவங்கப்பட்ட ஒரு பிரைமரி ஸ்கூல் இன்று தமிழகத்தின் மாபெரும் கல்வி சாம்ராஜ்ஜியமாக வளர்ந்தது எப்படி? இதற்கான பதிலில்தான் பச்சைமுத்து பாரிவேந்தரான கதையும் ஒளிந்திருக்கிறது.

மொத்தம் 43 வருடங்கள்… பச்சைமுத்து குடும்பம் கொள்ளையடித்திருப்பதோ பல லட்சம் கோடி ரூபாய். இரண்டு தலைமுறைகளாக தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்து பெற்றோர் சம்பாதித்துக் கொட்டிய பணம்தான் காட்டாங்கொளத்தூரில் பிரமாண்ட கட்டடங்களாக எழும்பி நிற்கின்றன. கொஞ்சநஞ்சமில்லை… ஒரு பொறியியல் சீட்டுக்கு 20 லட்சம், மெடிக்கல் சீட்டுக்கு 80 லட்சம், எம்.பி.ஏ. சீட்டுக்கு 15 லட்சம்… என நினைத்துப் பார்க்க முடியாத கல்விக் கொள்ளை. அண்மை வருடங்களாக சென்னையை தாண்டி தமிழகம் எங்கும், தமிழகத்தை தாண்டி இந்தியாவெங்கும் தனது வியாபாரத்தை விரித்திருக்கிறது எஸ்.ஆர்.எம். குழுமம். சில மாதங்களுக்கு முன்பு எஸ்.ஆர்.எம். உரிமையாளர் பச்சைமுத்து தங்களது வட இந்திய கல்வி முதலீடுகள் பற்றி ‘தி ஹிந்து’வில் தனி பேட்டியே கொடுத்திருந்தார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தில் எத்தனை கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? கொஞ்சம் மூச்சுவாங்கிக்கொண்டு படியுங்கள்…

  1. Nightingale Matriculation Higher Secondary School,
  2. Valliammai Polytechnic Institute,
  3. SRM Engineering College,
  4. SRM College of Nursing and SRM College of Pharmacy,
  5. SRM School of Nursing and SRM College of Physiotherapy,
  6. SRM Institute of Hotel Management,
  7. SRM Arts & Science,
  8. SRM Polytechnic Institute,
  9. Easwari Engineering College,
  10. SRM College of Occupational Therapy,
  11. SRM Institute of Management & Technology,
  12. Valliammai Engineering College,
  13. SRM Institute of Science and Technology,
  14. SRM Dental College,
  15. SRM Medical College Hospital and Research Centre,
  16. SRM Institute of Management and Technology, Modinagar, Delhi
  17. Chennai Medical College, Trichy
  18. Inter Disciplinary School of Indian System of Medicine,
  19. TRP Engineering College, Trichy,
  20. Faculty of Science and Humanities, Vadapalani,

இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். ஹோட்டல்கள், எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், இந்திய ஜனநாயக கட்சி என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து. மீடியாவில் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி என்ற இரண்டு பத்திரிக்கைகளும், புதிய தலைமுறை என்ற செய்தி தொலைகாட்சியும் இயங்குகிறது. விரைவில் ‘யுவா’ என்ற இன்ஃபோடைன்மென்ட் சேனலும், வேந்தன் என்ற பொழுதுபோக்கு சேனலும், புதிய தலைமுறை ஆங்கில செய்தி சேனலும் வரப்போகிறது. இதுபோக, ‘வேந்தன் மூவீஸ்’ என்ற பெயரில் சினிமாக்களை வாங்கி விற்கும் வேலையும் நடக்கிறது.

****

ந்த பிரமாண்ட வர்த்தகத்தின் ஒரு சிறு பகுதிதான் புதிய தலைமுறை டி.வி. இதன் வெற்றியை கொண்டாடும் யாரும் எஸ்.ஆர்.எம். எப்படி இந்த பணத்தை சம்பாதித்தது என்பதை பற்றி பேச மறுக்கின்றனர். ஏனெனில் ஆதாயம் அடையும் சந்தர்ப்பங்களை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை. புதிய தலைமுறையின் ஓராண்டு வெற்றிக்கு உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்திருக்கும் மனுஷ்யபுத்திரன், ‘எப்போது எதைப்பற்றி பேசக் கூப்பிடுவார்கள் என்று தெரியாது என்பதால் தினசரி எல்லா பேப்பர்களையும் படிக்க வேண்டியிருக்கிறது. இதுதான் இதில் உள்ள ஒரே கஷ்டம்”’ என்று செல்லமாக ஒரு கம்பெனி ஆர்ட்டிஸ்டுக்குரிய வகையில் அலுத்துக் கொள்கிறார். எல்லா நேரமும் வாடிக்கையாளரை எதிர்பார்த்தால் எல்லா நேரமும் மேக்&அப் செய்துகொண்டுதானே ஆக வேண்டும்? மனுஷ்யபுத்திரன் தனது பிராண்ட் இமேஜ் அதிகரிப்பதற்கு பு.தவை நாடுகிறார். பு.தவுக்கு கருத்து கந்தசாமிகள் நிறைய தேவை. பரஸ்பர ஆதாயம்.

இவராவது பரவாயில்லை. எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஞாநி அவரது ‘தீம்தரிகிட’’ காலத்தில் இருந்து ‘நடுநிலை’’ பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அதாவது “நடுநிலை என்று ஒன்று கிடையாது. ஒன்று நன்மையின் பக்கம் இருக்க வேண்டும். அல்லது தீமையின் பக்கம் இருக்க வேண்டும்’” என்ற ஞாநியின் கருத்துதான் நமது கருத்தும். ஒரு குறிப்பிட்ட பிரச்னையில் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லையெனில் மக்களுக்கு எதிராக இருப்பதாகத்தான் கருத முடியும். அதைவிடுத்து, சாம்பல் நிற கட்டங்களை’ தேட முடியாது. இப்போது புதிய தலைமுறை தொலைகாட்சி, “சிலர் இந்தப் பக்கம், சிலர் அந்தப் பக்கம், நாங்கள் நடு சென்டரில்”’ என்கிறது. தனது கருத்துப்படி ஞாநி இதை எதிர்த்திருக்க வேண்டும். மாறாக, பெருமகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவிக்கிறார். புதியதலைமுறையின் நடுநிலை’ அவருக்கு தொந்தரவாக தெரியவில்லை.

எந்தப்பிரச்சினையிலும் யாரையும் புதிய தலைமுறை எதிர்ப்பதில்லை. அதிகபட்சம் இவர்கள் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள், சில்லறை அதிகாரிகளைத்தான் எதிர்க்கிறார்கள். அதற்கு மேலே கலெக்டர், மாவட்ட செயலாளர், ஜெயலலிதா என்றெல்லாம் மறந்தும் போக மாட்டார்கள். இந்த ‘நடுநிலை’ அப்ரோச் ஞாநிக்கு ரொம்ப பிடித்திருக்கிறது போலும். மேலும் 49ஓ-வுக்கு ஓட்டுப்போடச் சொல்லி சில வருடங்களாக பிரசாரம் செய்து வருகிறார். ‘ஓட்டுக்கட்சிகள் சீரழிந்துவிட்டன. ஆகவே அவர்களுக்க் ஓட்டுப்போட வேண்டாம். அதற்காக ஜனநாயக கடமையை ஆற்றாமல் இருக்க முடியாது. என்ன செய்யலாம்? வாருங்கள் நடுவில் நின்று ஓ போடுவோம்’ என்று அறைகூவல் விடுக்கிறார். கிழிந்து தொங்கும் போலி ஜனநாயகத்தின் டவுசரை ஓ போட்டு ஒட்ட வைக்க முடியும் என்பது ஞாநியின் நம்பிக்கை. மூடநம்பிக்கை பாமரர்களுக்கு மட்டும்தான் இருக்கவேண்டும் என்பதில்லை, சர்வமும் உணர்ந்த ஞானிகளுக்கும் கூட இருக்கலாம்.

புதிய தலைமுறையை கொண்டாடுபவர்களும், அண்ணா ஹஸாரேவின் பக்தர்களும் வேறு வேறு அல்ல. இருவரும் ஒன்றே. பாம்பும் சாக வேண்டும். தடியும் உடையக்கூடாது வகையறா. போராட வேண்டும், 24 மணி நேரமும் சமூகத்துக்காகவே தன்னை அர்ப்பணிக்க வேண்டும், ஆனால் சின்ன சேதாரம் கூட வரக்கூடாது.  மிஸ்டு காலில் போராடுவது, மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவது, ஸ்டேட்டஸ் போட்டு போராடுவது, எஸ்.எம்.எஸ்ஸிலேயே போராடுவது என்ற இந்த தொழில்நுட்பத்தில் அண்ணா ஹசாரே குழுவினர் கை தேர்ந்தவர்கள். புதிய தலைமுறை தொலைகாட்சியோ… மக்களுக்கு இந்த சிரமத்தை கூட தரவில்லை. ‘எங்கள் டி.வி.யை பாருங்கள், நீங்களும் போராளிதான்’ என்கிறது. உலகில் ஏதேனும் ஒரு மூலையில் புதிய தலைமுறை டி.வி. பார்த்தால் நீயும், நானும் போராளியே. இதுதான் நம் நடுத்தர வர்க்கத்துக்கு தேவையான நாட்டுமருந்து.

அய்யப்பன் கோயிலுக்குப் போகிறவர்கள் எல்லா தவறையும் செய்துவிட்டு கடைசியில் காலணா குத்தக்காசு கட்டி புனிதமடைவதைப் போல… தங்களது சமூக பொறுப்பற்ற வாழ்க்கை முறை உருவாக்கும் குற்றவுணர்ச்சியில் இருந்து எளிமையான வழியில் புனிதமடையும் வாய்ப்புகளை நடுத்தர வர்க்கம் தேடிக்கொண்டே இருக்கிறது. அதில் ஹஸாரேவும், புதிய தலைமுறையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றனர். அண்ணா ஹஸாரேவின் உண்ணாவிரத்தை நேரலை செய்து தனது முதல் நாள் ஒளிபரப்பை புதிய தலைமுறை துவங்கியது எதேச்சையான ஒற்றுமைதான் எனினும் பொருத்தமானதே.

புதிய தலைமுறை தொலைகாட்சி, கடந்த ஒரு வருடத்தில் வியாபார ரீதியிலான வெற்றிகளை பெற்றிருக்கலாம். அதற்கான சாத்தியங்கள் உண்டு. ஏனெனில் வட இந்தியாவில் மிடிள்கிளாஸ் மக்களின் கோபம், ஆவேசம், கண்ணீர், மகிழ்ச்சி போன்றவற்றை இறக்கி வைக்க ஏராளமான தொலைகாட்சிகள் உண்டு. தமிழ்நாட்டில் அப்படி ஒன்று இல்லை. புதிய தலைமுறை, அந்த வெற்றிடத்தின் சிறு பகுதியை நிரப்பியிருக்கிறது. ஆனால் இது கொண்டாடத்தக்கதல்ல. ஒன்றுமில்லாததை ஊதி பெரிதாக்கும் செய்தி தொலைகாட்சிகளின் ஆபத்தை புதிய தலைமுறை முன்னறிவிக்கிறது.

நாள்தோறும் நாட்டில் நடக்கும் சகல மக்கள் பிரச்னைக்கும் உண்மையின் பக்கமிருந்து வினை புரிவதாக புதிய தலைமுறை காட்டிக்கொள்கிறது. தனது பார்வையாளர்களும் அவ்வாறே நம்ப வேண்டுமென விரும்புகிறது. அதனால்தான் கலாநிதிமாறனுக்கும், இவர்களுக்குமான தொழில்போட்டியில் புதிய தலைமுறை தொலைகாட்சி முடக்கப்படுவதை மக்கள் பிரச்னையை போல முன்வைத்து நீதி கேட்கிறார்கள். இந்த நீதியின் வரம்பு என்ன என்பதும் நமக்குத் தெரியும்.

பேருந்து ஓட்டையில் சிக்கி மாணவி ஸ்ருதி இறந்துபோன செய்தியை திரும்பத் திரும்ப பல்வேறு கோணங்களில் அலசினார்கள். அதன் தன்மை ஒரு சிறுமியின் மரணத்தால் விளைந்த மனிதாபிமானத்தை அறுவடை செய்வதாய் இருந்ததே ஒழிய, தனியார் கல்வியின் கோர முகம் பற்றி பேசுவதாய் இல்லை. அப்படிப் பேசினால் எஸ்.ஆர்.எம். கல்வி கொள்ளை பற்றியே முதலில் பேச வேண்டிவரும். சமீபத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்துபோன செய்தியை மற்ற மீடியாக்களை போல அடக்க ஒடுக்கமாக அடக்கித்தான் வாசித்தது புதிய தலைமுறை.

பதவியேற்ற சில மாதங்கள் மௌனமாக இருந்த ஜெயலலிதா, இப்போது சகட்டுமேனிக்கு ஊடகங்கள் மீது வழக்குகளை தொடுக்கிறார். ஓர் அரசியல் தலைவர் அறிக்கை விடுவதை பத்திரிகையில் வெளியிட்டால் அதற்கும் வழக்கு. ஊடகங்கள் மீதான இந்த அநீதியான தாக்குதல் குறித்து மற்ற ஊடகங்கள் பேசாதது போலவே புதிய தலைமுறையும் பேசவில்லை.

ல தமிழினவாதிகள், இலங்கை பிரச்னை, மூவர் தூக்கு போன்றவற்றில் புதிய தலைமுறை தமிழர் நலன் சார்ந்து இயங்குவதாக சொல்கின்றனர். அப்படி குறிப்பாக சொல்லாதவர்கள் கூட, ‘அவங்க நல்லா பண்றாங்க, பரவாயில்லை’’ என்கிறார்கள். சமீபத்தில் எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கையில் ‘எஸ்.ஆர்.எம். லங்கா’’ என்ற பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட செய்தி ஆதாரத்துடன் அம்பலமானது. இப்போதுவரை தமிழினவாதிகள் இதைப்பற்றி பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. நடிகர், நடிகைகள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இலங்கை போனால் ஆவேசத்துடன் எதிர்ப்பவர்கள் கல்வி வியாபாரம் செய்யும் பச்சைமுத்துவை எதிர்க்க முன்வரவில்லை. ஏனெனில் அப்படிப் பேசும் தமிழினவாதிகளில் பலருக்கு புதிய தலைமுறையில் முகம் காட்டும் ஆசை இருக்கிறது. முகம் காட்டிய நன்றிவுணர்ச்சி இருக்கிறது.

சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்துக்கு மாற்றாக எஸ்.ஆர்.எம்மை முன் வைக்க முடியாது. ‘அஞ்சு வருஷம் அய்யா கொள்ளையடிச்சார். இந்த அஞ்சு வருஷம் அம்மா கொள்ளையடிக்கட்டும்’’ என நாட்டை சுரண்டும் உரிமையை இவருக்கும், அவருக்கும் மடைமாற்றிவிடுவதை போல… ஊடகங்களை ஆக்கிரமிக்கும் உரிமையை கலாநிதிமாறனுக்கும், பச்சைமுத்துவுக்கும் தாரைவார்க்க முடியாது. கலாநிதிமாறன் எந்த அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டிய நபரோ அதே முக்கியத்துவத்துடன் எஸ்.ஆர்.எம். குழுமமும் எதிர்க்கப்பட வேண்டும். எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியும் நல்ல கொள்ளியல்ல!

 

முதல் பதிவு: வினவு

வங்கி ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம்

21 ஆக

 

மத்திய அரசின் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள 10 இலட்சம் வங்கி ஊழியர்களும், அதி காரிகளும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரு நாட்களும் முழுமையான வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளனர். இதற்கான அறை கூவலை பி.இ.எஃப்.ஐ. உள்ளிட்ட 9 சங்கங் களின் கூட்டமைப்பான யு.எஃப்.பி.யு. விடுத் துள்ளது. வங்கிகள் ஒழுங்கமைப்பு சட்டம், வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டம் மற்றும் போட்டிக் குழுமம் சட்டம் ஆகிய 3 சட்டங் களில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி திருத்தங் களை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த சட்டங்கள் நிறைவேறுமானால் தற்போது பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் அதிகபட்ச ஓட்டு ரிமை என்பது ஒரு சதவீதத்திலிருந்து 10 சத வீதமாக மாறிவிடும்; தனியார் வங்கிகளில் அதிகபட்ச ஓட்டுரிமை என்பது 10 சதவீதத்தி லிருந்து 26 சதவீதமாக மாறிவிடும்; பொதுத் துறை வங்கிகளை ஒன்றோடொன்று இணைக்க இனி போட்டிக் குழுமத்திடம் அனுமதி பெறத் தேவை இருக்காது. 

இவ்வாறு ஏற்படும் மாற்றங்களால் உள் நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் கைக்கு தனியார் வங்கிகள் மாறிவிடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து தனி யார் வங்கிகளின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.4,549 கோடி மட்டுமே. ஆனால், அவ்வங்கி களில் மக்கள் சேமித்து வைத்திருக்கும் மொத்த வைப்புத் தொகை ரூ.8,22,801 கோடி யாகும். சில ஆயிரம் கோடிகளைக் கொண்டு லட்சக்கணக்கான கோடி ரூபாயை கையா ளும் உரிமை பன்னாட்டு முதலாளிகள் கைக்கு மாறுவதற்கான ஏற்பாடுதான் இந்த சட்டத்திருத்தம்.

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாகும்

பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் ஓட்டுரிமை 10 சதவீதமாக உயர்த்தப்படுவ தால், 5 பெரும் நிறுவனங்கள் ஒன்றிணைந் தால் ஒரு பொதுத்துறை வங்கியின் கட்டுப் பாட்டை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. ஏற் கனவே பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் பங்கு 49 சதவீதம் வரை உள்ளது. இந்த சட்டத் திருத்தம் நிறைவேறுமானால் நடைமுறையில் பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாடு தனியாருக்கு சென்றுவிடும். பெயர்ப்பலகை மட்டுமே பொதுத்துறை வங்கி என்பதை தாங்கி நிற்கும்.

போட்டிக் குழுமத்திடம் அனுமதி என்ற ஏற்பாடே ஏகபோகத்தை தடுப்பதற்காக செய் யப்பட்ட ஏற்பாடாகும். பொதுத்துறை வங்கி களை இணைப்பதற்கு அனுமதி தேவை யில்லை என்ற சட்டத்திருத்தம் நிறைவேறு மானால், பொதுத்துறை வங்கிகள் ஒன்றோ டொன்று இணைக்கப்பட்டு அதன் விளை வாக ஏராளமான கிளை மூடலும், பொது மக் களுக்கு வங்கிச் சேவை பாதிப்பும் ஏற்படும். 

இந்த 3 சட்டத் திருத்தங்களுமே மக்கள் விரோதமானது; பெரும் முதலாளிகளுக்கு குறிப்பாக அந்நிய முதலாளிகளுக்கு சாதக மானது. எனவேதான், ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இச்சட்டத் திருத்தங்களை எதிர்த்து பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு தனது பிடிவாதமான போக்கை கைவிடாததன் காரணமாக நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் என் பது அவசியமாகிறது.

மக்களுக்கான கடன் மறுக்கப்படும்

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, சாதாரண மக்களுக்கும், ஏழை-எளிய மக்க ளுக்கும் கடன் வழங்குவதன் மூலமாக அவர் களின் வாழ்க்கைத்தரம் பெருமளவு முன் னேற்றத்தை பெற்றுள்ளது. ஆனால், தற்போது மீண்டும் வங்கிகள் தனியார்மயமாகுமானால் ஏழை-எளிய மக்களுக்கான கடன் என்பது அரிதாகிவிடும். பொதுத்துறையாக இருக்கும் போதே பல்வேறு காரணங்களைக் காட்டி கல்விக்கடன் மறுக்கப்படக்கூடிய சூழ்நிலை என்பது உள்ளது. பெண்கள் சுயஉதவிக் குழுக் களுக்கு நேரடியாக கடன் கொடுத்து வந்த பொதுத்துறை வங்கிகள் தற்போது நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் கொடுத்து, அதனை முன்னுரி மைக் கடனாக கணக்கெழுதிக் கொண்டிருக் கின்றன. அந்த நுண்கடன் நிறுவனங்களோ, வங்கிகளிடமிருந்து 11 சதவீத வட்டிக்கு கடன் பெற்று ஏழை-எளிய மக்களிடம் 26 சதவீதம் முதல் 48 சதவீதம் வரை வட்டிக்கு கடன் வழங்குகின்றன. அவர்கள் கடன் வசூல் செய்யும் முறையினால் ஆந்திராவிலும், தமிழ கத்திலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தற் கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும் ஆபத்து…

தற்போதுள்ள சூழலிலேயே பிரதானமாக நிறுவனக் கடன் கிடைக்காத காரணத்தினால் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தங்கள் நிறைவேறுமானால், அவர்களுக்கு கிடைத்து வரும் கடன் என்பது மேலும் அரிதாகி தற் கொலை எண்ணிக்கை அதிவேகமாக அதி கரிக்கக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. வங்கிகள் தேசியமயமாகி 43 ஆண்டு காலம் கடந்த பின்னணியில் இன்றளவிலும் 50 சத வீதம் மக்களுக்கு வங்கிச் சேவை என்பது மறுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், ‘கட்டுப் படியாகாத’ கிராமப்புற கிளைகளை மூடி விடும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிடுகிறது. இத னால், கிராமப்புற மக்களுக்கு தற்போது கிடைத்துவரும் சேவை கூட மறுக்கப்படும் சூழல் நிலவுகிறது.

ஒருபுறம், கெட்டிப்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை இணைப் பதற்கு முயற்சிக்கும் மத்திய அரசு, மறுபுறம், கார்ப்பரேட் நிறுவனங்கள்,(சூடிn க்ஷயமேiபே குiயேnஉயைட ஊடிஅயீயnநைள), வங்கிகள் துவங்க முழுமையான அனுமதி அளிக்கிறது. வங்கி கள் அல்லாத நிதி நிறுவனங்கள் வங்கிகள் துவங்கவும், வங்கிகளாக மாறவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது. கிராமப்புற வங்கிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுவீகரித்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது.

ரிசர்வ் வங்கி கவர்னரின் ஒப்புதல் வாக்குமூலம்

க்ஷயளநட ஐஐஐ விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தினால் 2018ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.1,75,000 கோடி முதலீடு தேவைப்படும். அவ்வளவு பணத்தை மத்திய அரசு கொடுக்க முடியாத காரணத்தினால் பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்று வதைத் தவிர வேறு வழியில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு. சுப்பா ராவ் சமீபத்தில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதிலிருந்தே இவர்களின் நோக்கம் வெளிப் படையாகத் தெரிகிறது. க்ஷயளநட ஐஐஐ விதி முறைகள் ஏன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்கான எந்தவிதமான தர்க்க நியாயத் தையும் அவர் எடுத்துச் சொல்லவில்லை. அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமானாலும் கூட முதலீடு செய்வதற்கு பணம் இல்லை என்று கூறும் மத்திய அரசு, கடந்த பட் ஜெட்டில் மட்டும் பல்வேறு வகையில் பெரும் முதலாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய வருமானத்தில் ரூ.5,28,000 கோடி அளவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. எனவே, மத்திய அரசின் நோக்கம் பொதுத்துறை வங் கிகளை தனியார்மயமாக்குவதுதான் என்பது தெளிவாக தெரிகிறது. மத்திய அரசின் இந்தக் கொள்கையை கைவிடக் கோரிதான் 10 லட் சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் வீதி யில் இறங்கியுள்ளனர்.

அத்துடன் 

* ஊழியர் விரோத – அதிகாரிகள் விரோத கண்டேல்வால் குழு பரிந்துரைகளை நிராகரித்திடுக!

* இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை/ஈட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை உடனே அமல்படுத்துக!

* பென்ஷன் திட்டத்தில் மத்திய அரசு ஊழி யர்களுக்கு இணையான முன்னேற் றத்தை ஏற்படுத்துக!

* பணியிலிருந்து ராஜினாமா செய்தவர் களுக்கும் கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டவர்களுக்கும் பென்ஷன் தேர்ந் தெடுக்க மற்றொரு வாய்ப்பு வழங்குக!

* அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை உத்தரவாதப்படுத்துக!

* வாரம் 5 நாட்கள் பணி நாட்களாக மாற்றுக!

* வீடு கட்ட கடன், வாகனக் கடன் போன்ற வற்றை அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியாக வழங்கிடுக!

* வங்கிப் பணிகளை வெளியாட்களிடம் ஒப் படைக்காதே!

* ஊழியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தன்னிச்சையான வழிகாட்டுதல்கள் வழங்குவதை கைவிடுக!

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது.

தகுந்த காலஅவகாசம் கொடுத்து வேலை நிறுத்த அறைகூவல் விடுக்கப்பட்டாலும், மத் திய தொழிலாளர் ஆணையாளருக்கு ஆகஸ்ட் 21ம் தேதிதான் சமரசப் பேச்சுவார்த்தை நடத் துவதற்கான நேரம் கிடைத்தது. இது மத்திய தொழிலாளர் துறையின் அக்கறையற்றப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்திருக்கும் அதே தேதியில் அதாவது ஆகஸ்ட் 22ம் தேதி இந்த மக்கள் விரோத மசோதாவை கொண்டுவருவதன் மூலமாக மத்திய அரசு தனது பிடிவாதத்தை கைவிடத் தயாராக இல்லை என்பதையே வெளிப் படுத்துகிறது.

எனவேதான், வங்கி ஊழியர்கள்-அதிகாரி களின் இந்த நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாததாகி விட்டது. மக்கள் நலன் காக்கும் இந்த தேசப் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் பேராதரவு நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இந்த 2 வேலை நிறுத்த நாட்களில் ஏற்படும் அசௌகரியத்தை பொறுத்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.

பொதுச்செயலாளர், 

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்,

தமிழ்நாடு.

 

முதல் பதிவு: தீக்கதிர்

நல்லூர் நண்பர்களே! ஒரு நிமிடம் .. .. ..

20 ஆக

அன்பார்ந்த நல்லூர் நண்பர்களே!

 

காயிதே மில்லத் திடலிலோ, அல்லது வேறு ஏதோ ஓர் இடத்திலோ நோன்புப் பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு; பெருநாள் வாழ்த்துகளை நேரிலும், தொலைபேசியிலும், குருஞ்செய்தியிலும், இணையத்திலும் பகிர்ந்துவிட்டு ஒழிவாய் அமர்ந்திருப்பீர்கள். அல்லது இந்த திருநாளை, கிடைத்த விடுமுறையை எந்த பொழுதுபோக்கு அம்சத்துடன் கொண்டாடுவது என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பீர்கள். அதில் ஒரு குறுக்கீடு.

 

மேலே காணும் சுவரொட்டியை கடந்த இரண்டு நாட்களாக கடையநல்லூரின் சுவர்களில் ஆங்காங்கே நீங்கள் கண்டிருப்பீர்கள். இதை ஒரு தகவலாக நீங்கள் கடந்து சென்றிருக்கலாம், சிலர் இது குறித்து விவாதித்துக் கூட இருக்கலாம். நானும் இது குறித்துத் தான் உங்களோடு பேச வந்திருக்கிறேன்.

 

நோன்புப் பெருநாள் தொழுகையை காயிதே மில்லத் திடலில் எந்தக் கும்பல் நடத்துவது எனும் போட்டியில் வெல்வதற்கு உதவி செய்ததற்காக இந்த நன்றி தெரிவிக்கப் பட்டிருக்கிறது என்றும், தொழுகை என்றால் என்னவென்றே தெரியாத அதிகாரிகளிடம் எந்தக் கும்பல் தொழுகை நடத்துவது என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒவ்வொரு ஆண்டும் நாமே ஒப்படைப்பது சரியா? என்றும் அந்த வாதங்கள் நடத்தப் பட்டிருக்கின்றன. ஆனால் அந்த சுவரொட்டியில் ஒழிந்திருப்பது இது மட்டும் தானா? எழுப்பப்பட வேண்டிய முதன்மையான கேள்வி ஒன்று அந்த சுவரொட்டியில் ஒழிந்திருப்பது உங்களுக்கு புலப்ப்படவில்லையா?

 

அரசியல் என்றால் என்ன? ஜெயலலிதா என்ன சொன்னார்? கருணாநிதி என்ன செய்தார்? பிஜேபியா? காங்கிரசா? இன்னபிற பல்வண்ண ஓட்டுக் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? போன்றவற்றை வாய்களால் அலசிக் காயப் போடுவது மட்டும் தானா? அல்ல. அரசியல் என்பது; நாம் ஒரு சமூகப் பிராணி என்பதால் சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழும் பல்வேறு செயல்களை, அவை ஏன் நிகழ்கின்றன? அதன் பின்னணி என்ன? எந்த நோக்கில் அது நிகழ்கிறது? என்பதை அலசி ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மைகளை தேடிக் கண்டு, அது நம் மீது என்னென்ன விதங்களில் தாக்கம் செலுத்துகிறது என்பதைத் தெளிந்து, அதற்கேற்ப எதிர்வினை புரிவது தான். இது தான் அரசியல் என்பதன் சாரம்.

 

இந்த அடிப்படையில், அந்த சுவரொட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் உண்மைகள் என்ன? அதற்கு நாம் என்ன எதிர்வினை புரிவது? கடையநல்லூர் இஸ்லாமிய இளைஞர்களை பெரிதும் ஆட்கொண்டிருப்பது இது போன்ற ஆன்மீக இயக்கங்கள் தாம். இத்தகைய ஆன்மீக இயக்கங்கள் மத ரீதியான ஒழுங்கை மக்களிடம் மேம்படுத்துவதே தங்களின் பணி என்று கூறிக் கொண்டு, அதற்கான முனைப்புகளில் முழுமூச்சாய் ஈடுபடுவதாகக் காட்டியே தங்களை வளர்த்துக் கொள்கின்றன. ஒற்றைக் கும்பலிலிருந்து பிரிந்த பல்வேறு கும்பல்களுக்கிடையே யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று வெளிப்படுத்திக் காட்டுவதாலேயே இன்று கடையநல்லுர் சந்தித்துக் கொண்டிருக்கும், வேவ்வேறு நாட்களில் ஒரே பெருநாள், தொழுகைத் திடலுக்கு போட்டி உள்ளிட்ட பலவும் நிகழ்கின்றன. ‘கியாமத்து’ நாளில் எது சிறந்த கும்பல் என அறியப்படுவதற்கு இன்று எந்தக் கும்பலுக்கு மக்களிடையே செல்வாக்கு இருக்கிறது என்பது தானா அளவுகோல்? அல்லது காயிதே மில்லத் திடலில் அதிகம் பேரைத் திரட்டி தொழுகை நடத்தியது எந்தக் கும்பல் என்பது தான் அளவுகோலா? இறைவனுக்கு எது பொருத்தமானது என்பதை உங்களுக்கு பாடம் நடத்தும் இந்தக் கும்பல்களின் செயல்களில் இறைப் பொருத்தம் எங்கு இருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்ததுண்டா?

 

நான்கு மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்ட ஓர் அறிவிப்புக்கு இப்போது ஏன் பாராட்டுச் சுவரொட்டி? தொழுகையை யார் நடத்துவது என்பதை அமைச்சரை சந்தித்து தங்களுக்கு சாதகமாக தீர்த்துக் கொள்ள முனையும் ஒரு கும்பலுக்கு ஏன் இது கௌரவப் பிரச்சனையானது? ஏனென்றால் இது அவர்கள் நடத்தும் அரசியல். மக்களை அரசியலற்றவர்களாக தங்களின் பின்னே திரட்டி வைத்திருக்கும் பலத்தில் அவர்கள் செய்யும் அரசியல். முதலாளித்துவமும் இதைத்தான் செய்கிறது. எந்த விதத்திலும் மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றே அது விரும்புகிறது. அதற்காகவே புதுப்புது பொழுது போக்குகளையும், நவீன கண்டுபிடிப்புகலையும் பயன்படுத்துகிறது. இனவெறி, மொழிவெறி, மதவெறி உள்ளிட்ட பலவற்றையும் உருவாக்கி, தூண்டிவிட்டு பயன்படுத்துகிறது.

 

அது போன்றே, இயல்பான மத வழிபாட்டு முறைகளுடன் இருந்த மக்களிடையே மதத் தூயவாதம் பேசி மக்களிடையே செல்வாக்குப் பெற்று, அந்த செல்வாக்கின் பலத்திலேயே மக்களின் அரசியலையும், சிந்தனையையும் மழுங்கடித்திருக்கின்றன இந்தக் கும்பல்கள். இதை புரிய மறுப்பவர்களுக்கு இரண்டு எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். 1) எந்த பேதமுமின்றி வீட்டருகே இருந்த பள்ளிவாசல் திடலில் தொழுது எல்லோருக்கும் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட மக்கள், இன்று ஒரே பெருநாளை அடுத்தடுத்த மூன்று நாட்களில் கொண்டாடியதை எந்த முணுமுணுப்பும் இன்றி அங்கீகரித்தார்களே, இது எப்படி நேர்ந்தது? 2) எவ்வளவோ மோசமான கட்டுரைகளெல்லாம் இணையத்தில் இரைந்து கிடக்க ஒரு கட்டுரையை முகநூலில் பகிர்ந்தார் என்பதற்காக அவரை அடிப்பதற்கு ஆயிரக் கணக்கானோர் திரண்டார்களே. இதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் தேவையா எனும் சிந்தனை யாரிடமுமே எழவில்லையே, இது எப்படி நேர்ந்தது? காரணம், கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்பட்டு வருகிறது என்பது தான்.

 

மதங்களும் அதைத்தான் விரும்புகின்றன. எந்தப் பரிசீலனைக்கும் இடமற்று, தன்னை நம்புபவர்களுக்கே அவைகள் சொர்க்கங்களை வாக்களிக்கின்றன. மழுங்கடிக்கப்படும் அரசியல் உணர்வு, மக்களிடம் இன்னும் மிச்சமிருக்கும் தவறுகளைக் கண்டு பொங்கி எழும் தன்மை, இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளிகளில் தோதாக அமர்ந்து கொள்ளும் இந்த மதவாதக் கும்பல்கள், மக்களின் அந்த இடைவெளியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இது தான் அந்த சுவரொட்டி முகத்திலறைந்து வெளிப்படுத்தியிருக்கும் உண்மை.

 

உழைக்கும் மக்களே! அதிகாலையில் உறக்கத்திலிருந்து எழுவதில் தொடங்கி பின்னிரவில் படுக்கையில் விழும் வரை பல்லாயிரக் கணக்கான மனிதர்களின் உழைப்பை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உங்களோடு சேர்ந்து அந்த உழைக்கும் மக்களை பல்வேறு பிரச்சனைகள் நாலாதிக்கிலிருந்தும் அழுத்திக் கொண்டிருக்கின்றன. விலைவாசி உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, சூழல் மாசுபாடு, தனியார்மயம், ஏழ்மை, கல்வியின்மை, அடிப்படை வசதிகளின்மை, சுகாதாரச் சீர்கேடுகள், ஊழல்கள், அடக்குமுறைகள் .. .. .. இது போன்ற எந்தப் பிரச்சனையும் உங்களுக்கு இல்லையா? இருக்கின்றன என்றால் அதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அற்பமான முகநூல் பிரச்சனைக்கும், ஒரு குறுஞ்செய்து தகவல் மூலமும் நொடியில் உங்களால் ஆயிரக்கணக்கில் திரளமுடியும் என்றால்; தினமும் உங்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சனைகளை எதிர்த்து நீங்கள் ஏன் திரளக் கூடாது?

 

பிரச்சனைகளுக்காக போராடுவது குறித்து நீங்கள் வெட்கப்படுகிறீர்களா? சலவை செய்த வேட்டியில் தேனீர் குடிப்பதற்காகவும் இன்னும் பலவற்றுக்காகவும் நாளில் பலமுறை கடந்துபோகும் சாலைகளில் உங்களை பாதிக்கும் ஒரு பிரச்ச்னைக்காக உங்களால் நிற்க முடியாது என்றால், உங்களுக்குள் அரசியல் உணர்ச்சி எந்த அளவுக்கு வற்றிப் போய் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு காட்டுகள் வேண்டுமா?

 

இந்த வறட்சியை உங்களிடம் ஏற்படுத்தியது யார்? இதை நீங்கள் எப்படி சரி செய்யப் போகிறீர்கள்? இவைகளை அறிந்த பிறகான உங்களின் எதிர்வினை என்ன? சமூக நடப்புகளை ஊன்றிக் கவனியுங்கள், உங்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன என்பதை ஆலோசியுங்கள். அவற்றை நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத் தலைமைகளிடம் முன்வைத்து கேள்விகளை எழுப்புங்கள். ஆம், உங்கள் இயக்கத் தலைமைகளிடம் நீங்கள் எழுப்பும் கேள்விகளிலிருந்து தொடங்கட்டும் உங்கள் எதிர்வினை.

தொடர்பான இடுகைகள்

திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு

இஸ்லாமிய இளைஞர்களே எங்கு செல்கிறீர்கள்?

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

19 ஆக

திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்! – பிரசுரம்!

பொதுக்கூட்டங்கள்
தெருமுனைக்கூட்டங்கள்
கலை நிகழ்ச்சிகள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள் பொங்கியெழுந்தனர்.  அவர்களின் கோபத்தீயில் வெந்து மடிந்தான் ஆலையின் மனித வளப் பொது மேலாளர் அவனீஷ்குமார் தேவ்.  முதலாளிகள் சங்கங்களும், ஓட்டுக் கட்சிகளும் பெருங்குரலெடுத்துக் கண்டனம் செய்தனர்.  அன்னிய மூலதனம் வராது, வளர்ச்சி குறையும் என ஓலமிட்டனர்.  தொழிலாளி வர்க்கத்தையே கொலைகார வர்க்கம் போல் பிரச்சாரம் செய்கின்றனர் முதலாளிகள்.  ஒரு நிமிடத் தாமதத்திற்குக் கூட அதை வேலை நீக்கத்திற்கான குற்றமாக்குவது, இயந்திரங்களின் வேகத்தைக் காட்டி தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிவது, இயந்திரத்தின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க தவறினால் சம்பள வெட்டு, கழிப்பறைகளிலும் கண்காணிப்புக் கேமரா, அற்பக்காரணங்களுக்கும் அசிங்கமாய் திட்டி அவமானப்படுத்துவது என அடுக்கடுக்கான அடக்குமுறைகள். பேச்சு வார்த்தைக்கு அழைப்பது என்ற பெயரில் குண்டர்களையும் போலீசையும் வைத்து தொழிலாளர்களைத் தாக்க முற்பட்ட போது தொழிலாளிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத்திய போராட்டத்தில் தான் அந்த அதிகாரி பலியானான்.  வன்முறைக்கு வித்திட்டது ஆலை நிர்வாகம், தொழிலாளிகளல்ல.

நாட்டில் 90 சதம் பேர் தொழிலாளிகள், உழைப்பாளிகள்.  அவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேச்சுவார்த்தை என அமைதியான வழிகளில் தான் போராடுகிறார்கள்.ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான முதலாளிகள் தான் அதிகார வர்க்கம், போலீசின் துணையோடு ஒடுக்கின்றனர்.  மிக மிக அரிதாகத் தான் தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.  எங்கோ, எப்போதோ ஒரு அதிகாரி பலியானால் ஊளையிடும் ஓட்டுக்கட்சிகளும், ஒப்பாரி வைக்கும் ஊடங்கங்களும் முதலாளிகள் நடத்தும் படுகொலைகள், வன்முறை பற்றி வாய் திறப்பதில்லை.

தனியார்மயத்தின் பெயரால் நாட்டை மீண்டும் காலனியாக்கும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்பட்டு வரும் கடந்த இருபது ஆண்டுகளில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளிகளின் வன்முறை மிகப்பெருமளவில் அதிகரித்துவருகிறாது.  நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தால் கிடைத்த எட்டு மணிநேர வேலை என்ற சட்டபூர்வ உரிமையை ஒழித்துவிட்டு முதலாளிகள் தங்கள் விருப்பப்படி 12 மணி, 14 மணி, 16 மணி என உழைப்பை உறிஞ்சுகிறார்களே இது வன்முறையில்லையா?  எட்டு மணி நேரம் என்ற சட்டத்தை முதலாளிகள் அமுல்படுத்தினால் இன்னும் பல லட்சம் பேருக்கு வேலை கொடுக்கலாம்.  வேலையில்லாத் திண்டாட்டம் என்பது முதலாளிகளின் லாப வெறியால் உருவாக்கப்படும் கொடுமை.  இது சமூகத்தின் மீது நடத்தப்படும் வன்முறையில்லையா?

240 நாட்கள் ஓராண்டில் தொடர்ச்சியாகப் பணியாற்றினால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை எந்த முதலாளியும் மதிப்பதில்லை.  பத்தாண்டு, இருபதாண்டு பணியாற்றியவர்களைக் கூட திடீரெனத் தூக்கியெறிந்து குடும்பங்களை வீதியில் நிறுத்துகின்றனர் முதலாளிகள்.  பயிற்சியாளர்கள் (ட்ரெய்னி) தொழில் பழகுநர் (அப்ரெண்டிஸ்) என்ற பெயரில் சம்பளமே இல்லாமல் அல்லது அற்பச் சம்பளத்தில் இளவயது ஆற்றலை உறிஞ்சி விட்டு தூக்கியெறிந்து விடுகின்றனர்.  இந்த மோசடியும், துரோகமும் வன்முறையில்லையா?  தமிழகத்தின் பெருந்தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளிகளில் முக்கால்வாசிப்பேர் ஒப்பந்த தொழிலாளிகள்  பெரும்பாலான் ஒப்பந்தத் தொழிலாளிகளை முதலாளிகள் கணக்கில் காட்டுவதேயில்லை.  சென்னையைச் சுற்றி ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், இருங்காட்டுகோட்டை, மறைமலை நகர் போன்ற பகுதிகளில் நோக்கியா, ஹூண்டாய், சிமென்ஸ், செயிண்ட் கோபெய்ன் என பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன.  அன்றாடம் நடக்கும் ஏராளமான விபத்துகளிலும் ‘மர்ம’மான முறையிலும் ஏராளமான தொழிலாளர்கள் மரணமடைகின்றனர்.  இவ்வளவு பெரிய தொழில்பகுதியில் தீவிர, அவசர சிகிச்சைக்க்கு ஒரு மருத்துவமனை கூட இல்லை.  அண்மையில் ஹவாசின் என்ற தொழிற்சாலையில் பணியாற்றிய 7 பேர் சாலை விபத்தில் இறந்தனர்.  இவர்கள் அனைவரும் மருத்துவமனையிலும், காவல் நிலையத்திலும் அடையாளம் தெரியாதவர்கள் என்றே பதிவு செய்யப்பட்டனர்.  புகழ்பெற்ற டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலையில் கை நசுங்கிய தொழிலாளிக்கு பஞ்சை வைத்துக் கட்டி பேருந்து செலவுக்கு ரூ. 25/- கொடுத்து அனுப்பி விட்டது நிர்வாகம்.  முதலாளிகளின் கொடிய மனதுக்கு சிறு எடுத்துக்காட்டு இது.  ‘சுமங்கலித் திட்டம்’ எனும் பெயரில் கிராமப்புறத்தில் ஏழை இளம்பெண்களைத் திரட்டி கொட்டடிகளில் அடைத்து வரைமுறையின்றி வேலை வாங்குவது, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவது என சொல்லொணாக் கொடுமைகளை கோவை திருப்பூர் பஞ்சாலை முதலாளிகள் நடத்துகின்றனர்.   முதலாளிகள் நடத்தும் வரம்பற்ற வன்முறைகளைப் பற்றி ஊடகங்களோ, ஓட்டுக்கட்சிகளோ பேசுவதில்லை.

கல்வி, மருத்துவம், குடிநீர், மின் உற்பத்தி, சாலை வசதி என அரசு வழங்கவேண்டிய சேவைகள் அனைத்தையும் தனியார்மயத்தின் பெயரில் முதலாளிகள் கைப்பற்றிக்கொண்டு கொள்ளையடிக்கின்றனர்.  மழலையர் பள்ளி முதல் மருத்துவக் கல்வி வரை ஆக்கிரமித்து ‘தரமான கல்வி’  என்ற போர்வையில் விதவிதமான வழிகளில் – கல்விக் கட்டணம், சிறப்பு வகுப்பு, செருப்பு, சீருடை பேனா, பென்சில், பேருந்து என பெற்றோர்களைக் கசக்கிப் பிழிகின்றனர். எந்த சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கின்றனர்.  அரியானா மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் இருநூறு ரூபாய் பணம் கட்டவில்லை என்பதால், இன்குபேட்டரில் இருந்த குழந்தைக்கு சிகிச்சையை நிறுத்தியதால் அந்தப் பச்சிளங்குழந்தை இறந்துவிட்டது.    அரசு மருத்துவமனையே இப்படியென்றால் தனியார் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் எவ்வளவு கொடூரமாக நடந்துகொள்வார்கள் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.  அப்பல்லோ போன்ற கார்ப்பரேட், தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் முன்பணம் கட்டாவிட்டால் தொட்டுக்கூட பார்க்கமாட்டார்கள்.  இவையெல்லாம் அரசின் துணையோடு முதலாளிகள் நடத்தும் வன்முறையில்லையா?

போலி மருந்து தயாரித்து மக்களின் உயிரோடு விளையாடுபவர்கள், பத்து மடங்கு, இருபது மடங்கு லாபம் வைத்து மருந்து விற்பனையில் கொள்ளையடிக்க்கும் கொலை பாதகத்தைச் செய்பவர்கள் யார்?  தொழிலாளிகளா, முதலாளிகளா?  மாசுப்பட்ட குடிநீரால் சென்னையில் காலரா நோய்க்கு 30 பேர் பலியாகிவிட்டனர்.  அசுத்தமான குடிநீரில் அன்றாடம் வாந்தி பேதிக்கு இரையாகும் மக்கள் ஏராளம்.  ஆனால் கொக்கோ கோலா, பெப்சி, டாடா, உள்ளூர் மாபியாக்கள் அனைவரும் நீர்வளத்தை உறிஞ்சி விற்று பல்லாயிரம் கோடிகளை சுருட்டுகின்றனர்.  தண்ணீர் சமூகத்தின் பொதுச்சொத்து, அதை முதலாளிகள் கைப்பற்றி உரிமை கொண்டாடுவது வன்முறையில்லையா?  கட்டுப்படியாகாமல் கடன்பட்டு இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம்?  விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை அநியாய விலைக்கு விற்று, அடிமாட்டு விலைக்கு விளைச்சலை அபகரித்த முதலாளிகள் தானே!  இது வன்முறையில்லையா?

பொய்க்கணக்கு எழுதி வரி ஏய்ப்பது, கறுப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குவது, பொருள்களைப் பதுக்கி விலையேற்றுவது, கலப்படம் செய்வது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பொதுச்சொத்துக்கள், கனிவளங்கள், கிரானைட் ஆகியவற்றை கொள்ளையடிப்பது இப்படி அனைத்துக் கிரிமினல் குற்றங்களையும் செய்வது யார் தொழிலாளியா?  முதலாளியா? இக்குற்றங்கள் வன்முறையில்லையா?  பயங்கரவாதவில்லையா?  சாராயம் காய்ச்சும் ரெளடி மீது பாயும் குண்டர் சட்டம் ஒரு குற்றத்தைக் கூட விட்டு வைக்காமல் செய்யும் முதலாளிகள் மீது பாய்வதில்லை.  காரணம் இக்குற்றங்கள் தனியார்மயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு அரசு அதிகாரிகள் துணையோடு நடத்தப்படுவதால் தான்!

உழைப்பைச் சுரண்டுவது, நாட்டின் பொருளாதார வளங்களைக் கொள்ளையடிப்பதோடு பண்பாட்டுத்துறையிலும் தங்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் முதலாளிகள்.  விற்பனையை அதிகரிக்கவும், சந்தையை விரிவுப்படுத்தவும் பெரு விளம்பர யுத்தத்தை நடத்தி மொத்த சமூகத்திலும் நுகர்வு வெறியை, பாலூணர்வைத் தூண்டுகின்றனர்.  எல்லாவற்றையும் அனுபவிப்பது, எந்த வழியிலும் பணம் சேர்ப்பது, சுயநலம், ஆடம்பரமோகம் என்ற சித்தாந்தத்தைப் பரப்புவதன் மூலம் ஒழுக்கக் கேட்டையே புதிய சமூக ஒழுங்காக மாற்றுகின்றனர்.  இதன் விளைவு தான் நாள்தோறும் பெருகிவரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, ரெளடித்தனம் ஆகியவை.  சமூகம் பாதுகாப்பற்றதாக மாறிவரக்காரணம் முதலாளிகளின் லாபவெறித்தானே!  இது வன்முறை இல்லையா?

முதலாளிகளின் அனைத்தும் தழுவிய இந்த வன்முறையை, பயங்கரவாதத்தை ஓட்டுக் கட்சிகளோ ஊடகங்களோ அம்பலப்படுத்துவதில்லை.  ஏனெனில் இவர்கள் தனியார்மயத்தின் பங்காளிகளாகிவிட்டனர்.  ஓட்டுக் கட்சிகளின் ஒரே கொள்கை கொள்ளையடிப்பது, அதற்குப் போட்டி போடுவதே அவர்களின் ஜனநாயகம்.  உங்கள் எல்லோருக்கும் தெரிந்த இந்த உண்மையை அம்பலப்படுத்த்வதால் தான் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்கின்றனர்.

இப்போது சொல்லுங்கள் யார் வன்முறையாளர்கள்?  எது வன்முறை?

சூழ்ச்சி, வஞ்சகம், பித்தலாட்டம், மோசடி, லாபம் இவைதான் முதலாளிகளின் சிந்தனை. வரைமுறையின்றி இயற்கை வளங்கைச் சுரண்டுவதன் மூலம் சுற்றுச்சூழலை அழித்து பூமியின் இருத்தலுக்கே எதிராக இருப்பவர்கள் முதலாளிகள்.

உழைப்பாளி மக்களாகிய நாம் எப்பொழுதும் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறோம்.  வன்முறையை நாம் சிந்திப்பதேயில்லை.  அதனால் தான் அணு உலை வேண்டாம் என்கிறோம்.  ஆபத்து எனத் தெரிந்தும் தங்கள் சுயநலத்திற்கு அணு உலை வேண்டும் என்கின்றனர் முதலாளிகள்.

உழைப்பாளிகள் வன்முறையைக் கையிலெடுத்தால் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளி வர்க்கம் ஒரு நொடியில் வீழ்ந்து விடாதா?  மாருதி தொழிலாளிகள் நடத்திய போராட்டம் ஒரு வெள்ளோட்டம் தான்.

முதலாளித்துவ சுரண்டல், பயங்கரவாத ஒடுக்குமுறை இவற்றிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டுமானால் காங்கிரஸ், பா.ஜ.க. பிற ஓட்டுக் கட்சிகள் அமுல்படுத்தும் தனியார்மயக் கொள்கைக்கு முடிவுகட்டவேண்டும்.  இதற்கு மார்க்சிய – லெனினிய மாவோ சிந்த்னை வழியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் தலைமையில்  அணிதிரள்வது ஒன்றே வழி!


* நாடு மீண்டும் காலனியாவதைத் 
தடுத்து நிறுத்துவோம்!

*  முதலாளித்துவ பயங்கரவாதத்தை
அடித்து வீழ்த்துவோம்!

*  போலி ஜனநாயக தேர்தல் பாதையைத் 
தூக்கியெறிவோம்!

* நக்சல்பாரி புரட்சிப் பாதையில்
ஒன்றிணைவோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.

தொடர்புக்கு:

அ. முகுந்தன்,
110, 2வது மாடி,  மாநகராட்சி வணிக வளாகம், 
63, ஆற்காடு சாலை, 
கோடம்பாக்கம், சென்னை – 24
பேச : 94448 34519

விடியவில்லையா? விடிவே இல்லையா?

15 ஆக

”நள்ளிரவில் வாங்கினோம்

இன்னும் விடியவில்லை” என்றொரு பழங்கவிதை

உலவுவதுண்டு.

எதிர்மறையில் ஏற்கும்

ஏக்கம் அது.

 

கருப்புக் கொடி நாட்டி

கருப்பு நாள் என்றறிவித்து

எதிர்ப்பை பதிவு செய்யும்

எதிர்வினைகளும் இங்குண்டு.

எதிர்ப்பின் மூலமே

இருப்பதாய் கட்டிக் கொள்ளும்

பொருளும் வந்து விடுகிறது அதில்.

 

விடியவில்லை எனும் ஏக்கத்துக்கும்

கருப்புதினம் எனும் துக்கத்துக்கும்

எதிராய்,

விடுதலை எனும் சொல்லின் வீச்சு

இந்த சுதந்திர நாளில்(!)

எங்கேனும் ஒட்டியிருக்கிறதா?

எனும் கேள்வியே மாற்று.

 

சட்டையில் மூன்றுநிறக் கொடியும்

நெஞ்சில் பூக்கும் பெருமிதமுமாய்

சுதந்திர தினம் கொண்டாடும்

அப்பாவிகளே!

எதில் இருக்கிறது என்று

இன்றை கொண்டாடுகிறீர்கள்?

 

உழைக்கும் மக்களின் பிரச்சாரத்தை மறுத்து

நகரின் சுவர்களில்

வண்ணாங்களாய் தீட்டி வைத்த

ஓவியங்களின் முதுகில்

சுவரொட்டி ஒட்டும் சுதந்திரம் உண்டா உனக்கு?

 

ஆண்டுக்கு ஐந்து லட்சம் கோடி

வரிச் சலுகையாய் உன் பணத்தை

கொட்டி முழுங்கும் முதலாளியை

இலவச முதலாளி என்றோ

விலையில்லா முதலாளி என்றோ

விளிக்கும் சுதந்திரம் உண்டா உனக்கு?

 

விளைச்சலை கொள்முதல் செய்யும் வசதிக்காக

கிராமப்புற சாலைகளை அமைத்துவிட்டு

மக்களுக்காக உள்கட்டுமான வசதிகள்

என உதார் விடுவது போல்

பசுமைப் புரட்சி எனும்

விவசாயிகளின் தூக்குக் கயிற்றை

முதலாளிகளின் செல்லத்திட்டம்

என்றழைக்கும் சுதந்திரம் உண்டா உனக்கு?

 

மருத்துவ வியாபாரிகள்

கோடிகளில் லாபம் பெற

உன் உறுப்புகளை தானம் செய்வது

மனிதாபிமானம் என திரிக்கப்பட்டிருக்கிறதே,

அவசரம் என்று ஒதுங்க

அவர்களின் பளிங்கு கக்கூசை கூட

திறக்கும் சுதந்திரம் உண்டா உனக்கு?

 

பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும்

இந்த பணம் படைத்த உலகில்

உங்கள் உரிமைகளுக்காய் வீதியில் கூடி

போராடச் சுதந்திரம் தான் உண்டா உனக்கு?

 

ஆனால்,

 

முன்னேற்றம் எனும் பெயரில்

முதலாளி குவிக்கும் பொருட்களை

நுகர்ந்து ஏமாற

சுதந்திரம் உண்டு உனக்கு.

 

எந்தச் சுதந்திரத்துக்காக

நீ கொண்டாடுகிறாய்?

இல்லாத சுதந்திரத்துக்கா?

இருக்கும் சுதந்திரத்துக்கா?

 

என்ன பொருளில் நீ கொண்டாடினாலும்

உன்னை அடிமையாய் ஆளப்படுவதற்ற்கு

நீயே வழங்கும் சுதந்திரம் அது

என்றே கொள்ளப்படும்.

 

திணிக்கப்படும் கொண்டாட்டங்களை மறு,

மறுக்கப்படும் உரிமைகளுக்கான சட்டங்களை மீறு

திரண்டு வீதியில் போராடு

அதுவே உன் சுதந்திரத்தைச் சமைக்கும்.

– நசீபா காஹ்துன்