Tag Archives: பெண்ணியம்

ஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா? கடுங்கோட்பாட்டுவாதிகளின் பயமா?

4 ஆக

அமெரிக்க இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளர் டாக்டர் ஆமீனா வதூதின் சென்னை பல்கலைகழக சிறப்பு விரிவுரை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் கூட்டறிக்கை

சென்னை பல்கலைக்கழக இஸ்லாமிய ஆய்வுத்துறையும், JABS கல்லூரியும் இணைந்து இஸ்லாம் , பாலியல் மற்றும் சீர்திருத்தம் என்ற தலைப்பில் அமெரிக்க இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளரான ஆமீனா வதூத் நிகழ்த்த இருந்த கவுரவ விரிவுரை ரத்து செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம். அதனை தொடர்ந்து ” பெண்களின் அனுபவங்கள் மற்றும் இஸ்லாத்தில் அவர்களின் அதிகாரம் சார்ந்த பிரச்சினைகள்” என்ற தலைப்பில் வட்டமேசை கலந்தாய்வு நடக்க இருந்தது. இதுவும் காவல்துறையின் உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறையின் வேண்டுகோள் காரணமாக அவரின் கவுரவ விரிவுரை மற்றும் வட்டமேசை கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று பல்கலைகழக அதிகாரிகள் தெரிவித்தார்கள். முஸ்லிம் குழுக்கள் (வஹ்ஹாபிய குழுக்கள்) என்று போலியாக தங்களை வெளிப்படுத்திக்கொள்பவர்கள் ஆமீனா வதூதின் நிகழ்ச்சியை  சென்னையில் நடத்தினால் நாங்கள் தடுப்போம் என்று மிரட்டியிருக்கிறார்கள். மேலும் ஆமினா வதூத் அமெரிக்க அரசின் ஊதுகுழல் என்றும், இஸ்லாமிய விரோதி என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். பல்கலைகழகத்தின் இஸ்லாமிய ஆய்வு மையமானது பல்கலைகழகத்தின் விவாத உரிமையை ஊக்குவிக்க மற்றும் உரையாடலை மேற்கொள்ள எடுத்த எல்லா முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

ஆமீனா வதூதின் செயல்பாடுகளை தூரத்தில் இருந்து கவனிக்கும் எவருமே இது அவர்மீதான அடிப்படை இயல்பற்ற குற்றச்சாட்டுகள் என்பதை ஒப்புக்கொள்வர். மேலும் இந்த குழுக்களின் வாதம் முழு அறியாமை என்பதையும் பதிவு செய்வார்கள். இஸ்லாத்திற்கு மதம் மாறிய ஆப்ரிக்க – அமெரிக்க பெண்ணான ஆமினா வதூத் , அஸ்மா பர்லாஸ் மற்றும் ரிபாத் ஹஸன் ஆகியோருடன் இணைந்து அமெரிக்காவில் இஸ்லாமிய பெண்ணிய கருத்தாக்கத்தை முன்னெடுக்கின்றார்.

மேலும்  ஆமினா வதூத்  மலேசியாவை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இந்த அமைப்பானது உலகம் முழுவதும் பெண்களுக்கு நீதியையும், சமத்துவத்தையும் குர் ஆனிய அடிப்படையில் வலியுறுத்தி ஆன்மீக தளத்தில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறது. மேலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் முத்தலாக் முறைமை ஆகியவற்றிற்கு குர் ஆனிய அடிப்படையில்  சமத்துவ முறையிலான தீர்வை முன்னெடுக்கிறது. இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பு (SiS)என்பது நம்பிக்கைக்கொண்ட பெண்களுக்காக உலகம் முழுவதும் தீவிரமாக இயங்கும் ஸ்தாபனம். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்போடு ஆமினா வதூத் முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கான சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை வலியுறுத்தி முசாவா இயக்கத்தை நடத்தினார்.

இந்த தருணத்தில் இந்தியா முழுக்க இருக்கும் முஸ்லிம் பெண்கள் மற்றும் உலகளாவிய முஸ்லிம் பெண்கள் எல்லோரும் முஸ்லிம்களாக ஒன்றுதிரண்டு, இணைந்து அவர்களுக்கான நீதி மற்றும் சமத்துவத்தை பெறுவதில் முனைப்பாக செயல்பட்டு, இஸ்லாமிய நம்பிக்கையாளர்களாக, அதன் மீதும் பற்றுதல் கொண்டவர்களாக, சட்டங்களை மதிப்பவர்களாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் இம்மாதிரியான குழுக்கள் இது தமிழ்நாட்டு முஸ்லிம் மக்களின் கருத்து என்று தங்களின் இருப்பை நிலைநாட்டுவதற்காக போலியாக கருத்து தெரிவிக்கிறார்கள்.
 இதைவிட மோசம் என்பது இப்படியான பார்வைகள் ஒளிபரப்ப அல்லது கேட்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆமினா வதூத் இந்தியாவிற்கு வருகை தந்ததில் இருந்து எவ்வித பிரச்சினையும் இல்லாமல் பல்வேறு பல்கலைகழகங்கள் மற்றும் பொதுமேடைகளில் உரையாற்றி இருக்கிறார். இந்நிலையில் அவரது பேச்சால் வன்முறை ஏற்பட சாத்தியமுண்டு என்பது அப்பட்டமான பொய்யாகும். அவரைப்பற்றி அறிந்தவர்கள் ஒவ்வொருவருமே அவர் தன் வாழ்நாள் முழுவதையும் இஸ்லாத்திற்குள்ளேயும், அதன் வெளியேயும்  சமாதானம் மற்றும் சமத்துவத்திற்காக செலவழிக்கிறார் என்பதை புரிந்து கொள்வர்.

இந்த வருந்தத்தக்க நிகழ்வுகள் மற்ற காரணங்களுக்காக வேதனையளிப்பதாக உள்ளன. தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமா அத், மும்பையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் அகில இந்திய முஸ்லிம் மகிளா அந்தோளன், அவாஸ் -இ -நிஸ்வான் – மும்பை மற்றும் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சட்டவாரியம் – லக்னோ, இந்தியாவின் சிறிய நகரங்களில் செயல்படும் சிறு குழுக்கள் ஆகியவை எல்லாம்  நம்பிக்கை மற்றும் சட்டம் ஆகியவற்றின் ஆணாதிக்க காரணிகளை எதிர்க்கின்றன.  இந்த சூழலில் ஆமினா வதூதின் வருகை மற்றும் உரையானது இந்தியாவில் பெண்களிடையே இந்த விவகாரம் சம்பந்தமான உற்சாகமூட்டும் விவாதத்தை கிளப்பும்.

ஆமினாவதூதிற்கு மாற்றாக சிந்திப்பவர்கள் அவருடன் விவாதிக்க எப்போதுமே வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் இது அவரின் பேச்சுரிமையை பறிப்பதாக, எல்லோருக்கும் பழக்கமான அமெரிக்க ஏஜண்ட் என்று முத்திரைக்குத்தி அவரின் மதிப்பை குலைப்பதாக இருக்க முடியாது. அப்படி இருக்க கூடாது.

இரண்டாவதாக  காவல்துறை பல்கலைகழக விவகாரங்களில் கருத்துக்கள் சார்ந்த ஆலோசகர்களாக மாறிப்போனது குறித்து அதிர்ச்சியடைகிறோம். எம்மாதிரியான கருத்துக்கள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தலாம். இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது மாதிரியான ஆலோசனைகளை வழங்க தகுதியான நபராக காவல்துறை தன்னை கருதிக்கொள்கிறது. நிச்சயமாக இது காவல்துறையின் வேலையல்ல. மேலும் தெளிவாக இது காவல்துறையின் அபாயகரமான மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் விளையாட்டே.

இறுதியாக, சென்னை பல்கலைக்கழகத்தின்  “காவல்துறை எச்சரிக்கை” நோக்கிய மனோபாவத்தை அறிந்து அதே மாதிரி அதிர்ச்சியடைகிறோம். பல்கலைகழகத்தின் எல்லா துறைகளும் மிக திடமாக விவாதம் மற்றும் திறந்த உரையாடல் ஆகியவற்றை நோக்கி நிற்பதற்கு பதிலாக, நிர்வாகம் ஆமினா வதூதிற்கு தன் கதவுகளை அடைத்திருக்கிறது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்கலைகழக அறிவுப்பண்பாட்டின் மீது உவப்பான சமிக்ஞைகளை அனுப்பாது.

நாங்கள் காவல்துறையின் இம்மாதிரியான கல்வித்துறை தலையீட்டை வன்மையாக எதிர்ப்பதுடன், கல்வி சமூகத்தை அதன் சுதந்திரத்திற்காக அணி திரள அழைக்கிறோம்.

முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிலைப்படுத்துபவர்கள் ஆமினா வதூத் மற்றும் பிற முஸ்லிம் பெண்கள் குழுக்களின் இம்மாதிரியான செயல்பாடுகள் மற்றும் விவாதங்களில்  தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மாறாக அவர்களை சட்டவிரோதிகளாக பார்க்கக்கூடாது.

சென்னை பல்கலைக்கழகம் கல்வித்துறையின் கவுரவம், சுதந்திரம்,கண்ணியம் ஆகியவற்றை மீட்டெடுப்பதுடன் , ஆமீனா வதூதை பல்கலைகழகத்திற்கு மீண்டும் அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
————————————————————————————————-

Kaviko Abdur Rahman, Tamil Poet
Aniruddhan Vasudevan (Writer)
Abeedheen, Writer
Abilash Chandran, Poet
AD Bala, Journalist
Ahmed Faizal, Poet, Sri Lanka
Ambai ,Writer
Ameer Abbas (Film director)
Anandhi Shanmugasundaram, Social Activist
Prof. S. Anandhi
Dr. Arshad Alam, JNU, New Delhi
S. Arshiya, Writer
Abdul Haq Lareena, Poet, Sri Lanka
P.K Abdul Rahiman, University of Madras
A.P.M Idress, Writer, Sri Lanka
Anwar Balasingam, Writer
Dr. A. R. Venkatachalapathy, MIDS, Chennai
Dr. A.K. Ramakrishnan, JNU, New Delhi
Benazir Begam, Poet and Student Reporter, Dindugal
Chitra Jeyaram, Film Director and Producer, U.S
Cimimeena  (Social activist )
Devabira, Poet, Netherlands
V. Geetha, Feminist Historian and Writer, Chennai
Geetha Ilangovan, Film Maker
Geetha Narayanan, Research Scholar and Social activist
Dr. P.M. Girish, University of Madras
Gnani Sankaran, Writer, France
H.G. Razool, Poet
Hameed Jaffer, Writer
Prof. Hameem Mustafa, Nagercoil
Inba Subramaniyan, Poet
Indira Gandhi alangaram (Writer)
Jamalan, Writer
Professor Jeyashree venkatadurai
Dr. M. H. Illias, Jamia Millia Islamia, New Delhi
Kalaiarasan, Writer, Nether Land
Kalanthai Peer Mohamad, Writer
Kannan Sundaram,  Editor  & Publisher, Kalachuvadu
Kavitha Muralidharan, Journalist, Chennai
Kavin Malar, Writer and Journalist, Chennai
Keeranur Jakir Raja, Writer
Kombai S Anwar, FilKm Maker, Chennai
Ko.Sugumaran, Human Rights Activist, Pondichery
Kulachal Mu.Yoosuf, Writer & Translator
Kutti Revathi, Poet
Leena Manimekalai, Poet & Film Maker
Lenin Mathivanan, Writer, Sri Lanka
Leninsha Begam, Journalist, Chennai.
Living smile Vidhya, Poet
Manomani, Poet and Editor, Pudhuezhuthu
Manusyaputhiran, Writer and Editor, Uyirmmai Magazine
Meeran Mydeen, Writer
Mohammed Imdad, Social Activist, Sri Lanka.
Mujeeb Rehman, Writer
Megavannan (Social activist)
Malathi maithri (Poet, New Delhi)
Nirmala Kotravai, Feminist
Nisha Mansur, Poet
Dr. V. Padma (Mangai), Academician and Theatre person, Chennai
Dr. G. Patrick, University of Madras
H.Peer Mohammed, Writer
Prince entra Periyar, Social Activist
Thi. Parameswari  (Poet)
Dr. M. Priyamvada, University of Madras
Professor Premananthan (Delhi university)
Raji Kumarasamy, Social Activist
Dr. Ramu Manivannan, University of Madras
Rishan Sherif, Poet, Sri Lanka
Riyaz Kurana, Poet, Sri Lanka
Rafeek Ismail (Assistant Film Director)
Rajan kurai (Writer)
Sadakathulla Hasani, Editor, Al-Hindh, Madurai
Salma, Writer & Poet
Syed Buhari, Film Maker
Sharmila Seyyid, Poet, Sri Lanka
Shoba Shakthi, Writer, France
Shubashree Desikan, Journalist, Chennai
S. P. Udayakumar (Coordinator – People Movement of Anti-nuclear project at Kodankulam)
Sukirtha Rani, Poet
Senthilnathan (Editor Aazhi magazine)
Dr. Sunitha V, MCC, Chennai.
Shameem sheik (Social activist, Bangalore)
Siddarth Kandasamy (Social activist)
Tajdheen, Poet
Tharmini, Poet
Poet Thilagar, Sri Lanka
Thamayanthi (Social Activist, Sri Lanka)
Tamilpen Vilasini (Social Activist)
Vaa. Manikandan, Poet
Venkatesh Chakravarthy, Film Critique
Yatheendra (Political Critique, Sri Lanka)

முதல் பதிவு: களந்தை பீர் முகம்மது

இஸ்லாம் போதிப்பது எதை? ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

9 டிசம்பர்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 15


மதுவும், வட்டியும்,  பல தெய்வக் கொள்கையும், உருவ வழிபாடும் முஹம்மது நபிக்கு முன்பிருந்தவைகளே என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஈனத்தனமான செயல்களை இறைவனின் அனுமதியென்று கூறிக் கொள்வதை எப்படி ஏற்க முடியும்?

சராசரியாக சிந்திக்கக் கூடிய எவராலும் குர்ஆனின் இந்த அனுமதிகளிலுள்ள முட்டாள்த்தனத்தை அறிய முடியும். கற்றுணர்ந்த மார்க்க அறிஞர்களுக்குத் தெரியாதா? அவர்களென்ன இரக்கமில்லாதவர்களா?

                நிச்சயமாக  அவர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் இத்தகைய விவாதங்களை பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இஸ்லாமின் முரண்பாடுகளையும், முட்டாள்த்தனங்களையும் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினாலும் அதைப் பற்றி வாய் திறப்பதில்லை. அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒரே பதில்  “அல்லாஹ்வின் கடும்கோபத்திற்கு ஆளாக வேண்டாம்” என்பதுதான்.

இன்று இஸ்லாமிய பெண்கள் திரைக்குப் பின்னால் வாழ்வதற்கும் “பர்தா” என்ற திரைகளுடன் நடமாடுவதற்கும் உமர் பின் கத்தாப்பின் நச்சரிப்பு மட்டுமே காரணம் என்பதை முன்பே கண்டோம். பெண்களின் ஒழுக்கத்திற்காகவும் கண்ணியத்தை காப்பாற்றவும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் வற்புறுத்தியவரின் ஒழுக்கத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

 

Ibn Sa’d, volume 2, Page 438 

Narrated Umar

From “A slave girl passed by me who attracted me, and I cohabited with her while I was fasting”.

(உமர் பின் கத்தாப் கூறுகிறார்: என்னைக் கடந்து சென்ற அடிமைப் பெண்களில் ஒருத்தி (அழகால்) என்னை ஈர்த்ததாள் நான் நோன்பு வைத்திருந்த பொழுதும், அவளுடன் கலவியில் ஈடுபட்டேன்.)

நோன்பு வைத்திருக்கும் வேளையில் அழகான பெண்ணைக் கண்டிருக்கிறார். உடனே அவளைத் தனது இச்சைக்கு உபயோகப்படுத்திக் கொண்டார். அந்த அடிமைப்பெண் உமர் பின் கத்தாப்பின் மனைவி என்றோ, பிற்காலத்தில் அவளைத் திருமணம் செய்து கொண்டதாகவும் எந்த  குறிப்புகளும் இல்லை. சுருக்கமாக சொல்வதென்றால் அழகானவளைப் பார்த்தேன் வேலையை முடித்தேன்.

நோன்பின் கதி? அதோ கதி…!

முஹம்மது நபியின் காலத்திலும், அவருக்கு பிறகும் பல லட்சக்கணக்கான ஆப்ரிக்க கருப்பின மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர். கருப்பின அடிமைகளை விற்கும்,  விற்பனைச் சந்தை கிபி 1960 வரையிலும் மக்காவில் இருந்துள்ளது. ஆனால் அரேபிய  தீபகற்பத்தில் கருப்பின மக்கள் தொகை குறைவாக உள்ளதை நீங்கள் பார்க்கலாம். இதே போல அமெரிக்காவிற்கும் ஆப்ரிக்க கருப்பின அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கு பல்கிப் பெருகி ஒரு பெரும் சமுதாயமாகி அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆகும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். ஆங்கிலேயர்களால் அடிமைகளாக இந்தியாவிற்குக்   கொண்டு வரப்பட்ட நைஜிரியா, தான்ஸானியாவைச் சேர்ந்த ஆப்ரிக்க பழங்குடி கருப்பின மக்கள் மக்கள்  குஜராத் மாநிலத்தில் வசிப்பதை இன்றும் காணலாம்.

அரேபியாவிலிருந்து  கருப்பின மக்கள் விரட்டியடிக்கப்படவுமில்லை. அரேபிய  தீபகற்பத்தில் கருப்பின மக்கள் தொகை குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?

 அடிமைப் பெண்களை, தங்களது பாலியல் தேவைகளுக்காக உபயோகப்படுத்திக் கொண்ட மிருகங்கள், ஆண் அடிமைகளின் பாலியல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக ஆடு, மாடுகளுக்கு இன்றும் கிராமப்பகுதிகளில் “காயடிப்பதைப்” போன்று  ஆண் அடிமைகளின் விதைகளை அடித்து  மலடுகளாக ஆக்கிவிட்டனர். இப்பொழுது உங்கள் மனதில் இப்படி ஒரு கேள்வி எழலாம்.  இத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அடிமைகளாக எஜமானர்களின் காலடியிலேயே ஏன் வீழ்ந்து கிடக்க வேண்டும்? வாழ விரும்பினால் எங்காவது ஓடிப்போக வேண்டியதுதானே?

முஸ்லீம் ஹதீஸ் எண்: 101, அத்தியாயம்: 1, பாடம்: 1.31 அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).

“தன் எஜமானர்களிடமிருந்து ஓடிப்போகிற அடிமை, அவர்களிடம் திரும்பி வரும்வரை இறைமறுப்பாளனாகவே இருக்கிறான்” என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்லச்) செவியுற்றிருக்கிறேன்.

முஸ்லீம் ஹதீஸ் எண்: 102, அத்தியாயம்: 1, பாடம்: 1.31,  அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).

“(தன் எஜமானிடமிருந்து) ஓடிப் போன அடிமைக்கான (இறைவனின்) அடைக்கலம் நீங்கிவிடுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

சிந்தித்துப்பாருங்கள், அடிமை ஒடிப்போவதற்கும் இறைமறுப்பிற்கும் என்ன தொடர்பு?

புஹாரி ஹதீஸ்: 2534

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:    

எங்களில் ஒருவர் தன் அடிமை ஒருவனை தன் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை (இவனை வாங்குபவர் யார் என்று) கூறி அழைத்து (ஏலத்தில்) விற்று விட்டார்கள். அந்த அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே மரணித்துவிட்டான்.

சகமனிதனை கால்நடைகளைப் போல கருதுவது என்ன நியாயம்? முஹம்மது நபி, அடிமை முறை ஒழிப்பிற்காக பாடுபட்ட உத்தமர் என்று இஸ்லாமிய அறிஞர் மேடைகளில் வாய் கிழிய பேசுவார்கள். அதன் லட்சணம் இதுதான். 

விபச்சாரமும் அனுமதிக்கப்பட்டதே…!

புஹாரி ஹதீஸ் : 6837        

அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது.

ஓர் அடிமைப் பெண் கற்பைக் காக்காமல் விபசாரம் செய்துவிட்டால்… (அவளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவள் விபசாரம் செய்தால் அவளை சாட்டையால் அடியுங்கள். அதற்குப் பிறகும் விபசாரம் செய்தால் (திரும்பவும்) சாட்டையால் அடியுங்கள், மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் (மறுபடியும்) சாட்மையால் அடியுங்கள். அவள் மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்காவது விற்றுவிடுங்கள் என்று கூறினார்கள். (இதில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷஹாப் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், (அவளை விற்றுவிடவேண்டும் என்பது) மூன்றாவது தடவைக்குப் பிறகா அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா என்று எனக்குத் தெரியாது எனக் கூறினார்கள்.

மேற்கண்ட ஹதீஸை காணும் பொழுது ஒரு அடிமைப் பெண் விபச்சாரம் புரிவதைக் கூட முஹம்மது நபி தடை செய்துள்ளார் என்ற உயர்வான சிந்தனை உங்கள் மனதில் தோன்றலாம். உங்கள் எண்ணம் தவறானது கற்பழிப்பதற்கே அனுமதியளித்தவர்கள் விபச்சாரத்தை ஏன் தடுக்க வேண்டும்?

அடிமைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் உரிமையாளரை மீறி தன்னிச்சையாக செயல்படக் கூடாது. அவள் உரிமையாளருக்கு மட்டுமே வைப்பாட்டி. உரிமையாளர் விரும்பினால் பிற ஆண்களுக்கு  அடிமைப் பெண்களைத் இரவலாகத் தரலாம்.

Malik’s Muwatta:Book 28, Number 28.15.38:

Yahya related to me from Malik from Ibrahim ibn Abi Abla from Abd al-Malik ibn Marwan that he gave a slave-girl to a friend of his, and later asked him about her. He said, “I intended to give her to my son to do such-and-such with her.” Abd al-Malik said, “Marwan was more scrupulous than you. He gave a slave-girl to his son, and then he said, ‘Do not go near her, for I have seen her leg uncovered. “

(நண்பருக்கு கொடுத்த அடிமைப் பெண்ணைப் பற்றி கேட்கையில், அவர் அந்த பெண்ணை, ‘கசமுச’ செய்ய தன் மகனுக்கு அளிப்பதற்காக திட்டமிட்டிருப்பதாக கூறும் ஒருசெய்தி)

இவ்வாறாக அடிமைப்பெண்களை விரும்பியவர்களுக்கு வழங்கலாம். முஹம்மது நபிக்கு எகிப்திய ஆட்சியாளர், மரியத்துல் கிப்தியா, ஷிரின் என்று இரண்டு பெண்களை பரிசாக வழங்கியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மனைவிகளோ, அடிமைப் பெண்களோ இல்லாத சூழ்நிலையில் என்ன செய்வது?

அல்முத்ஆ திருமணம் முஹம்மது நபி  அவர்கள் காலத்திலும் அரபிகளின் வழக்கிலிருந்தது. அல்முத்ஆ திருமணம் என்பது குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு மட்டும் செய்யப்படும் தற்காலிக திருமணம். அவர்கள் விரும்பினால் திருமண வாழ்க்கையைத் தொடரலாம் அல்லது பிரியலாம் இதில் எந்த நிர்பந்தமும், குற்றமும் இல்லை. அல்முத்ஆ  திருமணத்திற்கு திரு குர் ஆனில் தடையெதும் காணவில்லை.

போர்காலங்களில் சஹாபக்கள் தங்கள் மனைவியரைப் பிரிந்து நீண்ட நாட்கள் இருக்க வேண்டியிருந்தது. சஹாபக்களின் உடல் தேவைக்காக மிகவும் சிரமப்பட்டனர். அதைக் கண்ட முஹம்மது நபி அவர்கள் போர் காலங்களில்  அல்முத்ஆ திருமணத்தை அனுமதித்தார். சஹாபக்கள்தங்களும் உடல் தேவைகளை அல்முத்ஆ திருமணம் மற்றும் பெண் போர்க் கைதிகளை அனுபவித்தல் என அல்லாஹ்வின் முழு அனுமதியோடு நிறைவேற்றி மகிழ்ந்தனர்.

ஆண்கள், மனைவியை விடுத்து பிற பெண்களை இச்சையுடன் பார்ப்பதை தடுப்பதற்காகவே புர்க்கா – ஃபர்தா/ ஹிஜாப் என்ற உடையை பெண்கள் அணிய வேண்டும் என்று முஹம்மது நபி கூறினார். எனவே  கற்புநெறியை ஆண்களும் பின்பற்ற வேண்டும் என்றே இஸ்லாம் போதிக்கிறது என்று உங்களையும் உலகை ஏமற்றிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பிரச்சாரா பீரங்கிகளின் வார்த்தைகளில் ஏதாவது பொருளிருப்பதாக தோன்றுகிறதா?

புகாரி ஹதீஸ் -5116

அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

அல்முத்ஆ (தவணை முறைத்திருமணம்) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அவர்கள் அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். அப்போது அவர்களுடைய முன்னாள் அடிமை ஒருவர் (பயணத்தில் மனைவி இல்லாத) நெருக்கடியான சூழ்நிலை பெண்கள் குறைவாக இருத்தல் போன்ற சமயங்களில்தான் இத்திருமணத்திற்கு அனுமதியுண்டாமே! என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆம்! என்று பதிலளித்தார்கள்.

(புகாரி 5116,5117,5118,5119)

பின் நாளில் முஹம்மது நபி  அவர்கள் அல்முத்ஆ  திருமணத்தை தடை செய்தார் என்று  ஸுன்னி முஸ்லீம்கள் கூறுகின்றனர். ஆனால் ஷியா முஸ்லீம்களிடையே அப்படி எந்த தடையுமில்லை. ஒவ்வொருவரும், வாழ்வில் ஒருமுறையேனும் அல்முத்ஆ (தவணை முறைத் திருமணம்) செய்ய வேண்டும் என வலியுறுத்திக்கூறும் ஹதீஸ்களை ஷியாக்கள் முன்வைக்கின்றனர்.

புகாரி ஹதீஸ் -5115

முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் அலீ (ரஹ்) அவர்களும் கூறியதாவது

எம் தந்தை) அலீ (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், அல்முத்ஆ) தவணை முறைத்) திருமணத்திற்கும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும், கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்று சொன்னார்கள்.

அலீ அவர்களின் பெயரால் புனையப்பட்டதாகக் கூறி இந்த ஹதீஸை ஷியாக்கள் அடியோடு மறுக்கின்றனர். கீழே காணும் இந்த ஹதீஸ் மக்கா வெற்றியின் பொழுது நிகழ்ந்தது, முஹம்மது நபியின் அனுமதியோடு அங்கு அல்முத்ஆ திருமணம் நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது. அதாவது மேற்கூறிய கைபர் போருக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சி இது

Sahih Muslim Book 008, Number 3253:

Rabi’ b. Sabra reported that his father went on an expedition with Allah’s Messenger (may peace be upon him) during the Victory of Mecca, and we stayed there for fifteen days (i. e. for thirteen full days and a day and a night), and Allah’s Messenger (may peace be upon him) permitted us to contract temporary marriage with women. So I and another person of my tribe went out, and I was more handsome than he, whereas he was almost ugly. Each one of us had a cloaks, my cloak was worn out, whereas the cloak of my cousin was quite new. As we reached the lower or the upper side of Mecca, we came across a young woman like a young smart long-necked she-camel. We said: Is it possible that one of us may contract temporary marriage with you? She said: What will you give me as a dower? Each one of us spread his cloak. She began to cast a glance on both the persons. My companion also looked at her when she was casting a glance at her side and he said: This cloak of his is worn out, whereas my cloak is quite new. She, however, said twice or thrice: There is no harm in (accepting) this cloak (the old one). So I contracted temporary marriage with her, and I did not come out (of this) until Allah’s Messenger (may peace be upon him) declared it forbidden.

அல்முத்ஆ திருமணம் தடை செய்யப்பட்டதாகவும், பிறகு அனுமதிக்கப்பட்டதாகவும் மீண்டும் தடை செய்யப்பட்டதாகவும்,  அனுமதிக்கப்பட்டதாகவும் பல செய்திகள் காணப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் அன்றைய காலத்தில் அல்முத்ஆ  திருமணம் நடை முறையில் இருந்ததென்பதும், தடை செய்யப்பட்டதற்கான உறுதியான ஆதரங்களில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.

போர் காலங்களில்  சஹாபக்களின் மனைவியர்களும்தான் தனிமையில் இருக்க வேண்டிய நிர்பந்தம். “அல்லாஹ்வின் ரசூலே போர்காலங்களில் எங்களுடைய கணவர்களைப் பிரிந்து நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டியுள்ளது எங்களின் உணர்வுகளுக்கு என்ன பதில்?” என்று சஹாபக்களின் மனைவியர்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும்?.

அல்முத்ஆ திருமணம் என்பது விபச்சாரத்தை தவிர வேறு என்ன? இன்று நம்மில் பல ஆண்கள் வயிற்று பிழைப்பிற்காக கடல் கடந்து செல்கிறார்கள். தங்கள் மனைவியர்களைப் பிரிந்து வருடக்கணக்கில் வாழவேண்டிய சூழ்நிலை அந்த ஆண்களும், அவர்களின் மனைவியரும் உணர்ச்சிகளற்ற ஜடமா? அவர்களுக்கும் அல்முத்ஆ திருமணம் செய்து வைத்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்யவே அருவருப்பாக தோன்றவில்லையா?

மது அருந்துவது இனி முற்றிலும் தடை செய்யப்படுகிறது என்று ஓரேஅடியாக தடை செய்தால் மனிதர்கள் “நாங்கள் ஒருபோதும் மது அருந்துவதை கைவிடமாட்டோம்” என்றும், விபச்சாரத்திற்கு தடைவித்தால், “நாங்கள் ஒரு போதும் விபச்சாரம் செய்வதை நிறுத்த மாட்டோம்” என்றும் கூறி மறுத்து விடுவார்களாம் எனவேதான் படிப்படியாக தடைவிதிக்கப்பட்டது. என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்.

 முதலில் அந்த ஹலாலான விபச்சாரத்தை அனுமதிக்க வேண்டும்? பின் நாளில் ஏன் தடைசெய்ய வேண்டும்?

அந்தந்த காலகட்டத்தில் தேவைக்கேற்ப புதிய வழிமுறைகள் அல்லாஹ்வினால் வஹியாக இறக்கப்பட்டது அல்லது ரத்து செய்யப்பட்டது என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்.  யாருடைய தேவைக்கு? முஹம்மது நபி  அவர்களின் தேவைகளுக்காகவா அல்லது மனிதர்களின் தேவைகளுக்காகவா?

புஹாரியின் ஹதீஸ், முஸ்லீம்கள் தங்களது அரசாட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்திய பிறகே, முத்ஆ திருமணங்கள் கியாமத் நாள்வரையிலும் தடைசெய்யப்பட்டதாக கூறுகிறது. இதை கவனித்தால் இதில் மறைந்துள்ள சூழ்சியை நீங்களே அறியலாம். இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள்,

முத்ஆ திருமணங்கள் முதலில் ஏன் அனுமதிக்கப்பட்டது?

                முஹம்மது நபி தனது படையினர் போரில் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்க எல்லா வழிகளிலும் உற்சாகப்படுத்தினார். பலதாரமணம், அளவில்லா அடிமைப் பெண்களுடன் கூடி மகிழ அனுமதி, எதிரிகளின் பெண்களையும், செல்வங்களையும்  சூறையாடுதல், சொர்க்கம், ஹூருலீன் கன்னியர்களுடன் சல்லாபம், நரகம் என்று  நியாய அநியாயங்களையும் ஒழுக்க முறைகளையும் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வெற்றியை வெறித்தனமாக அடைவதற்கு பல வழிகளிலும் உற்சாகப்படுத்தினார் அவற்றில் ஒரு வழிமுறையே இந்த முத்ஆ திருமணங்கள்.  தனது தேவை முடிவடைந்ததும் தடைசெய்து விட்டார்.

                வஹீ எனப்படும் முறையில் வெளியான குர்ஆன் வசனங்களையும் சூழ்நிலைகளையும் ஆய்வு செய்த பொழுது, இவைகள் சர்வ வல்லமையுடையவன் என்று போற்றப்படும் இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியாது எனத் தோன்றியது. ஏகத்துவ செய்தியை மக்களிடையே கூறுவதற்கு, இனப்படுகொலைகளும்,  கொள்ளையடித்தலும், கற்பழிப்பதலும், விபச்சாரம் செய்ய அனுமதித்தலும், வாக்குறுதிகளை மீறி பொய் சொல்லி ஏமாற்றுதலுக்கும் (தக்கியா-புனிதமோசடி) அவசியம் என்ன? இவைகளை முன்னின்று செய்வதற்கும் இறைத்தூதர் என்றொருவர் தேவையா?  இவர் கூறும் அக்கிரமங்களை வேதவாக்கு என்று நம்ப வேண்டும். மறுப்பவர்கள் இறைமறுப்பாளர்கள்…?

 நல்ல வேடிக்கை இது …!

முஹம்மது தனது மிகக் கீழ்த்தரமான எண்ணங்களையும் விருப்பங்களையும் அல்லாஹ்வின் வேதவாக்கு எனக் கூறி நிறைவேற்றிக் கொண்டார்

குர்ஆன் முழுவதுமே இறைவனின் வார்த்தைகளல்ல என்ற முடிவை அடைந்தேன். ஒருவேளை இறைவனின் வார்த்தைகளுடன் முஹம்மது நபியின் சொந்த சரக்குகள் சிலவற்றை குர்ஆனுக்குள் நுழைத்து விட்டிருப்பாரோ என்றும் தோன்றியது. முழு குர்ஆனிலுமிருந்து முஹம்மது நபியின் கைச்சரக்குகளையும் அல்லாஹ்வின் வாக்குகளையும் பிரித்தறிவது எப்படி?

  குர்ஆன் எவ்விதமான முரண்பாடுகளுமற்றது மிகத் தெளிவானது முன்னறிவிப்புகள் நிறைந்தது இதுவே குர்ஆன் இறைவனின் சொல் என்பதற்கான நிரூபனம் என்று, இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் நினைவிற்கு வந்தது.  எனவே குர்ஆனின் மேலும் சில பகுதிகளையும் அதன் பின்னணிகளையும் ஆய்வு செய்வதென்று முடிவு செய்தேன்

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

சஹாபாக்கள் மீது சந்தேகமும் வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

29 நவ்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 14

 

Tabaqat, 8:101-102

Sulaiman Ibn Harb narrated, quoting Hammad Ibn Zaid, quoting Ayyub Ibn Abi Qulaba that Anas said, “I know about this verse, ‘the verse of the curtain’, more than anyone else. When Zainab was given to the Messenger of God, he held a banquet on the night he married Zainab, invited the people and served them a meal. He wished that they leave afterward, because his mind was set on his bride. He stood up to let them know he wanted to leave, so some left. He stood up once more, but some stayed. He stood up a third time, and then they all left. So he entered his house [where the bride was] and Anas followed him, but he prevented him [from coming in] by letting down the curtain and said

 

ஹிஜாப் (கோஷா) முறை அமலக்கப்பட்ட நிகழ்சி

தன்னுடைய வளர்ப்பு மகனின் மனைவி (மருமகள்) ஜைனப்  யை ஒருவழியாக திருமணம் செய்த பிறகு அவருடன் தாம்பத்திய வாழ்கையைத் துவங்குவதன் அடையாளமாக ஒரு விருந்து முஹம்மது நபி  அவர்களால், இரவு நேரத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. விருந்தில் உணவு தயாராவதற்கு முன்பே வந்து விட்ட சஹாபாக்கள் (நபித்தோழர்கள்)விருந்து முடிந்த பிறகும் செல்லாமல் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டும் போவதும் வருவதுமாக  முஹம்மது நபி  அவர்களின் “நிலைமை” புரியாமல் நடந்து கொள்கின்றனர். அவர்களை போகச் சொல்லும் விதமாக எழுந்து நிற்கிறார். சிலர் சென்று விடுகின்றனர் சிலர் அமர்ந்து விடுகின்றனர். பொறுமை இழந்த முஹம்மது நபி  அவர்கள் மூன்றாம் முறையாக இறுதில் எழுந்து நிற்கிறார் சஹாபாக்களும் (நபித்தோழர்கள்) கலைந்து சென்று விடுகின்றனர்.

புகாரி ஹதீஸ் :  4791         

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனைப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு பேசிக்கொண்டே அமர்ந்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து போகத் தயாராயிருப்பது போல் (பலமுறை) காட்டினார்கள். ஆனால், மக்கள் எழுந்திருக்கவில்லை.அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்துவிட்டார்கள்….

அவர் மணமகள் (மருமகள்?) இருக்கும் அறையை நோக்கிச் செல்கிறார். அனஸ்  அவரை பின் தொடர்து செல்கிறார். ஆனால் திரையிட்டு அவரை (அனஸ் வீட்டினுள் செல்வதை) தடை செய்கிறார்.

 

புகாரி ஹதீஸ் ஹதீஸ் :  4791                                                                

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

…அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்துவிட்டனர். ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்களிடம்) செல்லப் போனார்கள். அப்போதும் அவர்கள் அமர்ந்து(கொண்டு பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள். நான் உடனே உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என்று தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். நானும் அவர்களுடன் உள்ளே செல்லப் போனேன். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள். அப்போது தான் அல்லாஹ் இறை நம்பிக்கை கொண்டவர்களே நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள் என்று தொடங்கும் இந்த (33-53 ஆவது) வசனத்தை அருளினான்.

இவைகளை கண்ட அல்லாஹ்வால் அமைதியாய் இருக்க முடியவில்லை. உடனே வஹியை இறக்கி விட்டான்.

முஃமீன்களே உணவுக்காக உங்களுக்கு அறிவிக்கப்படாதவரை-அதன் தயாரிப்பை எதிர்பார்த்தவர்களாக- நபியுடைய வீடுகளில் நீங்கள் பிரவேசிக்க வேண்டாம்; எனினும் நீங்கள் (உண்பதற்கு) அழைக்கப்பட்டால் அப்பொழுது பிரவேசியுங்கள். பிறகு உணவு அருந்தி முடிந்ததும் பேசுவதில் ஈடுபடாதவர்களாக களைந்து சென்றுவிடுங்கள்; நிச்சயமாக அது நபிக்கு நோவினை செய்வதாக இருக்கிறது (எனினும்) உங்களிடம் (அதனைச்) சொல்ல வெட்கப்படுகிறார்; அல்லாஹ்வோ உண்மையைச் சொல்ல வெட்கப்படமாட்டான்.…

( குர் ஆன் 33.53)

 அல்லாஹ்வின் வஹி எவ்வளவு விளையாட்டாக இருந்திருக்கிறது. இந்த வசனம் முஹம்மது நபி  அவர்களின் வஹீ விளையாடலுக்கு  ஒரு உதாரணம்மேலும் இவ்வசனத்தின் இறுதிப்பகுதி முற்றிலும் வேறொரு செய்தியை கூறுகிறது அதாவது அனஸ் வீட்டினுள் செல்வதை திரையிட்டு தடுக்கப்பட்டதன் காரணம்,

…(நபியின் மனைவியர்களாகிய) அவர்களிடம் ஏதேனும் ஒரு பொருளை நீங்கள் கேட்பதானால் திரைக்கு பின்னாலிருந்து அவர்களிடம் கேளுங்கள். அது உங்களுடைய உள்ளங்களுக்கும் அவர்களுடைய உள்ளங்களுக்கும் பரிசுத்தமானதாகும். அல்லாஹ் உடைய ரசூலை நீங்கள் நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அவருக்குப் பின் எப்பொழுதுமே அவருடைய மனைவியரை நீங்கள் மணம் செய்து கொள்வதும் கூடாது- நிச்சயமாக அது அல்லாஹ் விடத்தில் (பாவத்தால்) மகத்தானது ஆகும்.

( குர் ஆன் 33.53)

புகாரி ஹதீஸ் : பாகம் 7, எண் : 7421

அனஸ் இப்னு மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது.

பர்தா தொடர்பான வசனம் ஜஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் விஷயத்தில்தான் அருளப் பெற்றது. அன்று நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்ததற்காக (வலீமா விருந்தாக) ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தார்கள்…

மேற்கண்டவசனத்தின் இறுதிப்பகுதி நபியின் மனநிலையை தெளிவாக உணர்த்துகிறது. அதாவது ஜைதை காணச் சென்ற பொழுது திரை விலகியதாலே மருகளான ஜைனப்பின் மீது காமம் பிறந்தது. அதே முறையில், வேறு ஒருவர் தன் மனைவியர்களையும் கவர்ந்து சென்று விடக்கூடாது என்ற நபியின் கவலையை அல்லாஹ் வஹியின் முலம் சரிசெய்தான்.

சரி…ஜைத் என்ன ஆனார்?

முஹம்மது ஜைனப் திருமணம் நிகழ்ந்த அதே ஆண்டு, கிபி 629 ல் சுமார் 3000 பேர் கொண்ட சிறிய படையை முத்தா என்ற  (தற்பொழுதைய ஜோர்டான்) பகுதிக்கு, சுமார் 200000 படை வீரர்களைக் கொண்ட மிகப் பெரும் ரோமானியப்படையை எதிர்கொள்ள அனுப்பினார். போரில் கொடியை பிடித்து படையை வழி நடத்தும் பொறுப்பை ஜைத்திடம் ஒப்படைத்திருந்தார். முஸ்லீம்கள் தோல்வியடைந்த அப்போரில் முதலில் கொல்லப்பட்டவர்களில் ஜைத்தும் ஒருவர்.

 

வன்புணர்ச்சியும் வேதவெளிப்பாடும்

முஹம்மது நபியும் அவரது படையினரும் பல போர்களை சந்தித்தவர்கள். இவற்றில் ஓரிரு போர்களைத் தவிர மற்றவையெல்லாம் முஹம்மது நபியால் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான திடீர் தாக்குதல்களே. ஒவ்வொரு போரின் முடிவிலும் பெருமளவு பெண்களும், குழந்தைகளும், ஆண்களும் போர்கைதிகளாக கருதப்பட்டு முஸ்லீம்களால் அடிமைகளாக்கப்பட்டனர். இந்த அடிமைகளை போரில் பங்கெடுத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதை முன்பே பார்த்தோம். இந்த அடிமைகளுக்கு சில அடிப்படை உரிமைகள் மட்டுமே வழங்கப்பட்டது. சுதந்திரமான  மனிதர்களைப் போல வாழ அடிமைகளுக்கு எவ்வித உரிமைகளும் வழங்கப்படவில்லை.

ஆண் அடிமைகள் கடுமையான உடல் உழைப்பிற்காக பயன்படுத்தப்பட்டனர். பெண் அடிமைகள் வீட்டு வேலைகளுக்கும்,  அவர்களது ஆண் எஜமானர்களின் உடல் தேவைகளுக்கும் பயன் படுத்தப்பட்டனர்.  பலர் தங்களது அடிமைப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியும் பொருளீட்டினர். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியும் பொருளீட்டுவதை முஹம்மது நபி தடைசெய்தார். இந்த அடிமைகளை பிறருக்கு இரவல் தருவதும், விற்பனை செய்வதும் அல்லது சுதந்திரமாக விடுதலை செய்வதும் எஜமானரின் உரிமைகளாகும்.  சுருக்கமாகச் சொல்வதென்றால், அடிமைகளென்பவர்கள் பேசவும், சிந்திக்கவும் தெரிந்த கால்நடைகள்.

இத்தகைய அடிமைப் பெண்களையே குர்ஆன், “(போரில்) உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்” என்று குறிப்பிடுகிறது.  இஸ்லாமியர்களுக்கு நான்கு மனைவிகளை மட்டுமே அனுமதித்த அல்லாஹ், இந்த அடிமைப் பெண்களின் விஷயத்தில் எந்த விதமான எண்ணிக்கை எல்லைகளையும் விதிக்கவில்லை. அடைப்புக்குறிகளுக்குள் “போரில்” என்று சொல் இருப்பதால் அடிமைகளைப் போர்கள் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்பதில்லை. விலை கொடுத்தும், பரிசுப் பொருளாகவும் அடிமைகளைப் பெறலாம்.  “(போரில்)”  மொழிபெயர்ப்பாளர்களின் இடைச்சொருகல். “உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்” என்ற வார்த்தையின் உண்மைப் பொருளை மாற்ற அவர்கள் கையாளும் தந்திரம்.

“உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்” என்பதை நேரடியாகக் கூறுவதென்றால் அடிமைகள். அவர்களை எஜமானர்கள் தங்களது இச்சைகளுக்கு விருப்பம் போல உபயோகப்படுத்தலாம். எகிப்திய ஆளுனரால் முஹம்மது நபிக்கு பரிசாக வழங்கப்பட்ட மரியத்துல் கிப்தியாவும் ஓர் அடிமையே. அடிமைகளுடன் விருப்பம் போல கூடி அதன் மூலம் நிறைய அடிமைகளை உற்பத்தி செய்து கொள்ளவும் அல்லாஹ் அனுமதிக்கிறான். இதன் விளக்கங்கள் சிலவற்றை மட்டும் காணலாம்.

விபச்சாரி-விபச்சாரகன் இருவருமே தங்களது செயலை நன்கு அறிவார்கள். விபச்சாரகன், ஏதோ ஒரு காரணத்திற்காக உடலை விற்கும் விபச்சாரியின் முழு சம்மததத்துடன்தான் அவளது இறைச்சியை சுவைக்கின்றான். இப்படி இருவரின் சம்மதத்துடனே நடக்கும் உறவு அல்லாஹ்விடத்தில் கடுமையான தண்டனைக்குரியது.

பனூ முஸ்தலிக் போரில் முஹம்மது நபி  அவர்களின் படையினர், போர்கைதிகளாக எதிரிகளை பிடிக்கின்றனர்.

புகாரி ஹதீஸ் -4138

இப்னு முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைப் பார்த்தேன். அவர்களிடம் (சென்று) அமர்ந்து கொண்டு அஸ்ல் பற்றிக் கேட்டேன். அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (ரலி) குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம். ஏனெனில்) எங்கள் மனைவியரைப் பிரிந்து (தனிமையில் இருந்தது எங்களை வாட்டியது. (அந்த பெண்களுடன் உடலுறவு கொள்ளும் போது) அஸ்ல் (சிற்றின்பப் புணர்ச்சி இடைமுறிப்பு) செய்ய நினைத்தோம் (ஆனால்) நம்மிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்க அவர்களிடம் கேட்பதற்கு முன் நாம் அஸ்ல் செய்வதா என்று எங்களுக்குள்) பேசிக் கொண்டு அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டோம். அதற்கு நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்

 (புகாரி 5210,4138,2229,2542)

Sahih Muslim Book 008, Number 3371:

Abu Sirma said to Abu Sa’id al Khadri (Allah he pleased with him): O Abu Sa’id, did you hear Allah’s Messenger (may peace be upon him) mentioning al-‘azl? He said: Yes, and added: We went out with Allah’s Messenger (may peace be upon him) on the expedition to the Bi’l-Mustaliq and took captive some excellent Arab women; and we desired them, for we were suffering from the absence of our wives, (but at the same time) we also desired ransom for them. So we decided to have sexual intercourse with them but by observing ‘azl (Withdrawing the male sexual organ before emission of semen to avoid-conception). But we said: We are doing an act whereas Allah’s Messenger is amongst us; why not ask him? So we asked Allah’s Messenger (may peace be upon him), and he said: It does not matter if you do not do it, for every soul that is to be born up to the Day of Resurrection will be born.

நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது போர்க் கைதிகளில் மிகச்சிறந்த (அழகிய) அரபு பெண்கள் சிலர் கிடைத்தனர். எங்கள் மனைவியரைப் பிரிந்து தனிமையில் இருந்தது எங்களை வாட்டியதால், அந்த பெண்களுடன் உடலுறவு கொள்ள விரும்பினோம்.  அப்பெண்களிடமிருந்து (அவர்களுடைய) விடுதலைக்கான  தொகையையும் பெற விரும்பியதால் ‘அஸ்ல்’ (சிற்றின்பப் புணர்ச்சி இடைமுறிப்பு) செய்ய நினைத்தோம். ஆனால்) நம்மிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்க அவர்களிடம் கேட்பதற்கு முன் நாம் அஸ்ல் செய்வதா என்று (எங்களுக்குள் பேசிக் கொண்டு அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டோம். அதற்கு நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்).

 

அஸ்ல் செய்ய விரும்பியதன் காரணங்களில் ஒன்றை இந்த ஹதீஸ் விளக்குகிறது. சஹாபக்களின் வெறித்தனத்தால் அப்பாவி பெண்கைதிகள் கருவுற்றால், அடிமைச்சந்தையில் ஆதரவற்ற அந்த பெண்களை நல்ல விலைக்கு விற்க முடியாது என்பது மற்றொரு காரணம்.

 புஹாரி ஹதீஸ்       : 6603         

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக் கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது (புணர்ச்சி இடைமுறிப்பு) அஸ்ல் செய்து கொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்படியா செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்கள் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாக்கியே தீரும் என்று பதிலளித்தார்கள்.

இத்தகைய உடலுறவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு புனிதமான(?) காரணம், சஹாபாக்கள், நீண்ட காலங்களாக தங்களது மனைவியர்களைப் பிரிந்து இருந்தனர். எனவே அவர்களால் இச்சையை கட்டுப்படுத்த முடியவில்லை. தனது அடியர்களான  சஹாபாக்களின் “…”தேவையறிந்த  அல்லாஹ்(!), பெண் போர்க் கைதிகளின்“ சூறையாடும் அனுமதிகளை வஹீயாக இறக்கினான். (அல்லாஹ்விற்கு(!) இது ரொம்ப முக்கியம்) அல்லாஹ்வே பரிதாபப்பட்டு தான் கூறிய ஒழுக்கநெறிகளை மீறிய அனுமதியாக வஹீ இறக்குமளவிற்கு நபி (ஸல்) அவர்கள் உட்பட சஹாபாக்கள் அனைவருமே, பெண்களின் வாடையைக் காணமல்காய்ந்துபோயிருந்தனரா?

சஹாபாக்கள் வருடக்கணக்கில் தங்களது மனைவியரைப் பிரிந்திருந்தனரா?

        இல்லை…! நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்களின்படி நபிகளாரின் காலத்தில், சில வாரங்களுக்கு மேல் எந்த ஒரு போரும் நீடிக்கவில்லை (இது நீஈஈஈ…ண்ட காலமாம் …!). ஒருவேளை நீடித்திருந்தாலும் ஆண்களை விட அறிவிலும், வலிமையிலும் பலவீனமானவர்கள் என திருக்குர்ஆன் வர்ணணை செய்யும் பெண்களை அதாவது பெண் போர்க்கைதிகளையும் அவர்களது பெண் குழந்தைகளையும் வேட்டையாடுவது முறையானதா?

        மேற்கண்ட ஹதீஸ்கள் அஸ்ல் (Coitus interruption- புணர்ச்சி இடைமுறிப்பு) செய்வதை தவிற்பது பற்றி மட்டுமே விளக்குகிறது. போரில் அடிமைகளாகக் கைப்பற்றப்பட்ட பெண்களுடன் புணர்ச்சியில் ஈடுபட முஹம்மது நபி  அவர்களும் தடையேதும் விதிக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.  தனது மருமகன் அலீயின் லீலைகளை, முஹம்மது நபி  ஆதரிப்பதைப் பாருங்கள்.

புஹாரி ஹதீஸ் : 4350        

புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம் குமுஸ் நிதியைப் பெற்றுவர அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ (ரலி) அவர்கள் (போர்ச் செல்வத்தில் தமக்கென எடுத்துக் கொண்ட அடிமைப் பெண்ணுடன் உறவு கொண்ட பின்) குளித்து விட்டு வந்தார்கள். அவர்கள் மீது நான் கோபமடைந்து, காலிதிடம், இவரை நீங்கள் பார்க்க மாட்டீர்களா என்று கேட்டேன். நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற போது, நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அதற்கு அவர்கள், புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா என்று கேட்க நான், ஆம்! என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், அவர் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு குமுஸ் நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது என்று சொன்னார்கள்.

 

முஹம்மது நபியோ அல்லது சஹாபாக்களோ பெண் கைதிகளுடன் உறவில் ஈடுபடுவதற்கு அந்த கைதிகள் சம்மதித்தனர் என்று எப்படிச் சொல்ல முடியும்?

 

இந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்,

அக்காலத்தில் கைதிகளை அடைத்து வைக்க சிறைச்சாலைகள் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே கைதிகள் விலங்கிடப்பட்டு திறந்தவெளிகளில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் பனூகுறைழாவில் நிறுத்தி வைக்கப்பட்டதைப் போல ஆண்களையும், பெண்களையும் தனித்தனியே நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.

            போரில் கைப்பற்றப்பட்ட எதிரிகளின் பெண்கள் நிலையை சற்று கவனிப்போம். அப்பெண்களின் பாதுகாவலர்களாக இருக்கும் ஆண்கள் தந்தை, கணவன், சகோதரர்கள், மகன்கள் அல்லது உறவினர்கள் போர்களத்தில் கொல்லப்படுகிறார்கள். அல்லது அவளது கணவன் கைதியாக செயலற்றுப்போய் பரிதாபமாக நிற்கிறான். பெண்கைதிகள் பங்குவைத்து பிரிக்கப்பட்டு அவரவர் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறார்கள். உடனே அப்பெண்கைதிகள், ஆஹா…! எங்களுக்கு புதிய உடலுறவுத் துணை கிடைத்து விட்டது இதற்காகத்தன் நாங்கள் இத்தனை நாள் ஏங்கிக் காத்திருந்தோம் என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துச் செல்வார்களா? அல்லது இது அல்லாஹ்வின் தீர்ப்பு எனக்கூறி ஆடைகளை அவிழ்த்து தயாராக நிற்பாளா?

            இது பெண்ணாகப் பிறந்ததின் இழிநிலை. நிச்சயமாக எந்தப் பெண்ணும் இந்த நிலையை கற்பனை செய்வதைக் கூட விரும்பமாட்டாள் நிச்சயமாக முஹம்மது நபி மற்றும் அவரது படையினரின் நடவடிக்கைகளுக்கு உடன்பட்டிருக்க மாட்டார்கள். தங்களால் முடிந்த எதிர்ப்பை ஏதாவது ஒரு வழியில் வெளிக் காட்டியிருக்க வேண்டும்

                தங்களது கண்முன்னே வல்லுறவுக்காக இழுத்துச் செல்லப்படும் தனது தாயையோ, மனைவியையோ, மகளையோ சகோதரியையோ காணும் ஒரு பெண் அல்லது ஆண் எப்படி எந்த நிலையிலிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

                பெண் கைதிகள்  “அதற்கு”  சம்மதித்திருப்பார்களா? அவர்கள் இணங்கவில்லையென்றால்?

கொடூரமான வன்கலவிக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்…!

இல்லையென்று மறுக்கின்றனர் இஸ்லாமிய அறிஞர்கள். அதாவது ஹதீஸ்களில் பெண் கைதிகளுடன் உடலுறவு கொண்டதாகவே கூறப்பட்டுள்ளது. கற்பழிக்கப்பட்டதாக கூறப்படவேயில்லை.  எனவே அவர்கள் கற்பழிக்கப்படவில்லை என்று விளக்கமளிக்கின்றனர்.

விபச்சாரியின் சம்மதத்துடன் நிகழும் உடலுறவை முறையற்றது என தடைசெய்த அல்லாஹ், எப்படி இந்த சம்மதமின்றி நிகழும் உடலுறவை அனுமதித்திருக்க முடியும்? வாதத்திற்காக, அவர்கள் சம்மதித்திருந்தாலும் அது விபச்சாரம்தானே?

கள்ளத்தொடர்பு என்பது தங்களது துணைவர்களுக்கு தெரியாமல், நம்பிக்கை துரோகம் செய்து காதல் கொண்டு இணைவதாகும். ஆனாலும் சம்பந்தப்பட்ட இருவரின் முழு ஒப்புதலோடுதான் கள்ளத் தொடர்புகள் அரங்கேறுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. அல்லாஹ் இதைக் கடுமையான தண்டனைக்குரிய குற்றமென்கிறான். திருக்குர் ஆனின் பல பகுதிகளிலும், ஹதீஸ்களிலும் இந்த கள்ளத்தொடர்பை வன்மையாக கண்டிக்கும் வசனங்களைக் காணலாம்.

பாதிப்பிற்குட்பட்ட அப்பெண்களின் நிலையில் தங்கள் அன்புக்குரிய தாயை, மனைவியயை, மகளை, சகோதரியை அல்லது தங்களின் நெருக்கமான உறவுவழி பெண்களை ஒரு நிமிடம்  கற்பனை செய்து பார்த்தால், சூழ்நிலையின் கொடூரம், மறுப்பவர்களுக்கு விளங்கும்.

                தங்களின் வாழ்க்கையை உருத்தெரியாமல் அழித்தவர்கள் அழைத்தவுடன் எந்த பெண்ணால் படுக்கையில் தயார் நிலையில் இருக்க முடியும்? அந்தப் பெண்கள் அதற்கு இணங்கியிருப்பார்களா? அப்பெண்கள் உடலுறவு கொள்ளப்பட்டதாக ஹதீஸ்கள் கூறுகின்றது.

முஹம்மது நபி மற்றும் அவரது  படையினரின் இச்செயலை என்னவென்று அழைக்க முடியும்?

வன்கலவி…!  கற்பழிப்பு…!       மிருகங்கள் கூட இது போன்ற ஈனத்தனமான செயலைச் செய்வதில்லை.

இஸ்லாமிய ஷரியத்தின்படி விபச்சார குற்றத்திற்கே கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் பொழுது கற்பழிப்பை எப்படி அனுமதித்திருப்பார்கள்?

கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையை குர்ஆனிலிருந்து கூறமுடியுமா?

நிச்சயமாக முடியாது … !

முழு குர்ஆனிலும் அப்படி ஒருவார்த்தையே கிடையாது. பெண்களுக்கு இழைக்கப்படும் இக்கொடூரத்தை அல்லாஹ் அறியவில்லையா? அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட செயலா?

கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையை, புஹாரி, முஸ்லீம் போன்ற மிக நம்பகமான ஹதீஸ்களிலிருந்தேனும் காண்பிக்க முடியுமா?

நிச்சயமாக எவனாலும் முடியாது …!

ஏன்…?

மேலும் சில குர்ஆன் வசனங்களையும் அதன் பின்னணி ஹதீஸ்களையும் காண்போம்

வலக்கரங்கள்சொந்தமாக்கிக்கொண்டவர்கள்

            முஹம்மது நபி அவர்களின் படையினரால் போரில் கைப்பற்றப்படுவதற்கு முன்பு வரை முன்பு வரை சுதந்திரமாக வாழ்ந்தவர்கள்.  அவரவர்களின் கலாச்சாரத்திற்கேற்ப கற்பு நெறியை பின்பற்றி வாழ்ந்தவர்கள்.  நிச்சயமாக அற்ப தேவைகளுக்காக உடலை விற்கும் கீழ்த்தரமானவர்கள் அல்லர்.

முஹம்மது நபிக்கு வழங்கப்பட்ட அனுமதி,

நபியே (பெண்களில்) எவருக்கு மஹர்ளைக் கொடுத்திருக்கிறீரோ அத்தகைய உம்முடைய மனைவியரையும், அல்லாஹ் (போரின் மூலம்) உமக்கு கொடுத்தவற்றில் உம்முடைய வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைப் பெண்கள்)…

 (குர்ஆன் 33:50)

மற்றவர்களுக்கும் வழங்கப்பட்ட அனுமதி,

(ஆனால்)  தம் மனைவியர்களிடமும் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும் தவிர; -இவர்களிடம் உறவுகொள்வதில் நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுகிறவர்கள் அல்லர்.

(குர்ஆன் 23:6)

தங்களுடைய மனைவியர்களிடமோ அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர நிச்சயமாக (இப் பெண்கள் விஷயத்தில்) பழிப்புக்குரியவர்களல்லர்.

(குர்ஆன் 70:30)

Sunaan Abu Dawud: Book 11,  number 2150

Abu Said al-Khudri said: “The apostle of Allah sent a military expedition to Awtas on the occasion of the battle of Hunain. They met their enemy and fought with them. They defeated them and took them captives. Some of the Companions of the apostle of Allah were reluctant to have intercourse with the female captives in the presence of their husbands who were unbelievers. So Allah, the Exalted, sent down the Qur’anic verse, “And all married women (are forbidden) unto your save those (captives) whom your right hand possesses”. That is to say, they are lawful for them when they complete their waiting period.”” [The Qur’an verse is 4:24].

Sahih Muslim: Book 008, Number 3432:

Abu Sa’id al-Khudri (Allah her pleased with him) reported that at the Battle of Hanain Allah’s Messenger (may peace be upon him) sent an army to Autas and encountered the enemy and fought with them. Having overcome them and taken them captives, the Companions of Allah’s Messenger (may peace be upon him) seemed to refrain from having intercourse with captive women because of their husbands being polytheists. Then Allah, Most High, sent down regarding that:” And women already married, except those whom your right hands possess (4: 24)

(ஹூனைன் போரில் நபியின் படை வெற்றி பெறுகிறது. போரில் ஈடுபட்ட நபித்தோழர்கள், தங்கள் கைப்பற்றிய பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்கின்றனர். நபித்தோழர்களில் சிலர், அப்பெண்கைதிகள் திருமணமானவர்கள் என்பதாலும், காஃபிர்களான அவர்களின் கணவர்கள் இருப்பதாலும் உடலுறவு கொள்ளத் தயங்குகின்றனர்.  இந்செய்தி நபியிடம் கூறப்பட்டவுடன், அடிமைகளின் திருமணங்களை ரத்து செய்யும் வசனங்களை (குர்ஆன் 4:24) அல்லாஹ் இறக்கினான்)

அன்றியும் பெண்களில் கணவனுள்ளவர்களும் (உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது) -அடிமைப் பெண்களில் உங்களுடைய வலக்கரங்கள் (போரில்) சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர…

                            (குர்ஆன் 4:24)

போர்க்கைதிகளில் தம்பதிகளும் இருந்தனர். சஹாபாக்களில் சிலர் தம்பதிகளை அவர்களது திருமணபந்தத்தை சிதைக்கத் தயங்குகின்றனர் திருமணமானவர்கள் என்பதாலும் அவர்களது கணவர்களின் முன்னிலையிலும் உடலுறவு கொள்ள சஹாபாக்களில் தயங்குகின்றனர். ஆனால் அல்லாஹ்(?),  சஹாபாக்களின் செயலை விரும்பவில்லை.  திருமண உறவைப் வலுக்கட்டாயமாகப் பிரித்து, அப்பெண் கைதிகளின் இறைச்சியை போர்வீரர்களுக்கு விருந்தாக்கினான் எனக்கூறும் திருக்குர் ஆனின் 4:24 வசனத்தின் பின்னணியை மனிதாபிமானமுடையவர்களால் எப்படி ஏற்க இயலும்?  கற்பை பாதுகாக்க பணிக்கும் அல்லாஹ் இப்படி கற்பழிப்பை ஊக்குவிப்பானா? சத்தியமாக இருக்க முடியாது…!

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் நமக்கு அறிவுறுத்திக் கூறுவது என்னவென்றால், மனைவியர்களைப் பிரிந்திருக்கும் நேரத்தில் அற்பமான காமஇச்சையை கட்டுப்டுத்திக் கொள்ளத் தெரியாதவர்கள் அல்லது முடியாதவர்கள் கற்பு என்ற ஒழுக்கத்தில் பேணுதல் செய்கிறாம் என்று சிரமத்திற்குள்ளாகத் தேவையில்லை என்பதுதான். ஒருவேளை ஒழுக்கத்தை மீறினாலும், நெறி தவறி விட்டோமே குற்ற உணர்ச்சியை களைவதற்காக வழங்கப்பட்டது அல்லாஹ்வின் அனுமதி(!) பழிப்பிற்குரியவர்களல்ர் என்ற மாபெரும் அற்புத அனுமதி. (த்ரீயெம் பிரின்டர்ஸ், K.A நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் மொழபெயர்பில் பழிப்பிற்குரியவர்கள் அல்லர்” எனவும் சவுதி வெளியீடு, முஹம்மது இக்பால் மதனி அவர்களின் மொழிபெயர்ப்பில் “நிந்திக்கப்படுபவர்களல்லர்” எனவும் உள்ளது)

                நாம் இங்கு முக்கியமான ஒன்றை கவனிக்கத் தவறுகிறோம் குர்ஆன் 23:5-6, 70:30 காணப்படும் “பழிப்பிற்குரியவர்கள் அல்லர்/ பழிப்பிற்குரியகுற்றமல்ல” என்பதன் உட்பொருள் அன்றைய காலகட்டத்திலும் இது பழிப்பிற்குரிய ஈனத்தனமான செயலாகவே இருந்துள்ளது என்பதுதான். இல்லையெனில் “பழிப்பிற்குரியவர்கள் அல்லர்” என்ற சொல் இடம்பெற வேண்டிய அவசியமில்லை. இத்தகைய பழிப்பிற்குரிய மகாபாவமான செயலைத் தடுக்க வேண்டிய தடுக்க வேண்டிய இறைவனே(!) “பழிப்பிற்குரிய குற்றமல்ல” என்று அனுமதித்தான் என விளக்கம் தரமுனைந்துள்ள இஸ்லாமியர்களின் மனிதாபிமானத்தை நினைத்து வேதனைப்படுகிறேன்.

கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனை குர்ஆனில் இல்லாததற்கான காரணமும் இதுதான்.

இந்த இழிவான செயல்களை இறைவன் அனுமதித்திருப்பானா? நிச்சயமாக ஒரு சராசரி மனிதன் கூட இந்த கேவலமான அனுமதிகளை வழங்கமாட்டான். இது கருணைமிக்கவன் என்று கூறப்படும் இறைவனின் அனுமதிகளாக இருக்க முடியாது. எனவே குர்ஆன் வசனங்கள் முழுவதுமே  முஹம்மது நபியின் கற்பனைகளின் விளைவுதான் என்பது  தெளிவாகிறது.

மிகக் கேவலமான சகிக்க முடியாத செய்தி என்னவென்றால், இன்று புனிதப்போரில் ஈடுபட்டுள்ள ஜிஹாதிகள் வெற்றி பெற்றால் இதைவிட கொடுமையான நிகழ்வுகள் அரங்கேறுவது உறுதி. காரணம் மேற்கூறிய குர்ஆனின் கற்பழிப்பு அனுமதிகள் இன்றும் 100%   செயல்படுத்த அனுமதிக்கப்பட்டவைகள்இதை ரத்து செய்ய எந்த முல்லாவாலும்  இயலாத விஷயம்.

ஒரு இஸ்லாமிய கேள்வி-பதில் தளத்திலிருந்து  “வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்” பற்றிய விளக்கம்.

http://www.binoria.org/q&a/miscellaneous.html#possessions

Question:

What is the meaning of right hand possession and what was the purpose of having them. Some brothers in America think it is okay to have right hand possessions now in the USA.

கேள்வி :

(வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் என்பதன் பொருள் என்ன அவர்களை அடைந்ததற்கான தேவை என்ன. அமெரிக்காவில், வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொள்வது இன்றும் சரியானதே என்று அமெரிக்காவில் இருக்கும் சில சகோதரர்கள் நினைக்கிறார்கள்)

 

Answer: 

Right hand possessions (Malak-ul-Yameen) means slaves and maids, those came in possession of Muslims through war or purchase. After having the possession of slave maid it is lawful and correct to have sexual relation with them. Even today if Muslims get possession over infidel country, this condition is possible, lawful and correct. 

(வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்கள் எனபது அடிமைகளைக்குறிக்கும். அவர்களை போர் அல்லது (பொருள் கொடுத்து) வாங்குவதன் முலம் சொந்தமாக்கிக் கொள்ளலாம். அவர்களை சொந்தமாக்கிக்கொண்டபின்னர் அவர்களுடன் பாலியல்உறவு கொள்வது (ஷரியத்) சட்டபூர்வமாகவும் சரியானதும். இன்றும் கூட காஃபிர் (இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாத) நாடுகளை  வெற்றி கொண்டால், இந்த (சட்ட) நிபந்தனை செயல்படுத்தக் கூடியதாகவும்,  சட்டபூர்வமாகவமானதாகவும்,  சரியானதாகவும் இருக்கிறது)

முஹம்மதை, என்னுடைய தூதராக ஏற்றுக் கொள்ளுங்கள். கொலை புரியவும்,  கொள்ளையடிக்கவும், கற்பழிக்கவும் முழு உரிமையை முஹம்மதிற்கு நாம் வழங்கியுள்ளோம். என்பதே மனிதனுக்கு, அல்லாஹ் கற்பிக்கும் போதனையா?

மாற்று மதத்தினரின் செயல்கள் அல்லாஹ்வை மிகுந்த அவமானப்படுத்திவிட்டது எனவே அவர்களைத் தண்டிக்கவும், அவமானப்படுத்துவதற்காகவும் முஹம்மது நபி கடுமையாக நடந்து கொள்ள அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்டார் என்கின்றனர்.

புஹாரி ஹதீஸ்       :  2926        

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் யூதர்களுடன் போர்புரியாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல் முஸ்லிமே ! இதோ…! என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கின்றான் அவனை நீ கொன்று விடு என்று கூறும்

இந்த அற்பமனிதர்களின் புறக்கணிப்பால் அல்லாஹ், அவமானமடைந்து விட்டான் எனக் கூறுவது, அவனுடைய வல்லமைக்கு இழுக்கு! சர்வவல்லமையுடைய இறைவன் தன்னை அவமானப்படுத்தியவனை கொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அப்படியே அவன், தன்னை இழிவு படுத்தியவர்களை தண்டிக்க விரும்பினால் அற்ப மனிதர்களின் உதவியின்றி நிறைவேற்ற முடியும். உதாரணத்திற்கு, மூளையைச் செயலிழக்கச் செய்யலாம், இதயத் துடிப்பை நிறுத்த முடியும். அல்லது அவன் அளிக்கும் தண்டனையை மற்றவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினால் எல்லேரும் காணும் விதமாக வானில் உயர்த்தி தரையில் வீசி எறிந்து சிதறடிக்கலாம். அது மற்றவர்களுக்கும் பாடமாக அமையும்.

        இரவு நேரத் தாக்குதல்களில் எதிரிகளின் குழந்தைகளும் இறக்கும் அபாயம் உள்ளதே? என்ற நபித்தோழர்  ஒருவரின் அச்சத்திற்கு, முஹம்மது நபி மிகக் கனிவான பதிலைக் கூறி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறார்.

புஹாரி ஹதீஸ்  : 3012       

 ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது.

அப்வா என்னுமிடத்தில் அல்லது வத்தான் என்னுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் நடந்து வந்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இணை வைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே என்று பதிலளித்தார்கள்.…

மாற்று மதத்தினர் இருக்கவே கூடாது என்று அல்லாஹ் விரும்பினால், முஹம்மதுவின் கையில் வாளைக் கொடுத்து கொல்லச் செய்வதை விட, யூதர்கள், கிருஸ்துவர்கள்  என எந்த ஒரு மாற்று மத குழந்தைகளும் பூமியில் பிறக்காமல் தடுப்பது எளிதல்லவா?

தன்னைப் புறக்கணித்தவர்களை தண்டிக்க அல்லாஹ்விற்கு ஒரு மனிதனின் உதவி தேவையா? முஸ்லீம்கள், இந்த ஒரு கேள்வியை சிந்தித்தால் போதும் எல்லா உண்மைகளும் விளங்கிவிடும். முஹம்மது நபி, முஸ்லீம்களின் மனதில் அவர் வலுவாக பதிய வைத்துள்ள பேய்க்கதைகள் உள்ள வரையிலும் அவர்களால் சிந்திக்கவும் முடியாது, அவரது போதனைகளில் நிறைந்திருக்கும் அபத்தங்களை உணரவும் முடியாது.

முஸ்லீம் பெண்மணி ஒருவர், TNTJ-வினரின் இஸ்லாமிய கேள்விபதில் நிகழ்ச்சி ஒன்றில் “வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களைக்” குறிப்பிட்டு, இது  வன்கலவி செய்ய குர்ஆன் அனுமதிப்பதைப் போன்றுள்ளதே? என்று கேள்வி கேட்டார். அதற்கு, தவ்ஹீத் ஜமாத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தஃபி, பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார், “முன்னாள் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் அவர்களின் காலத்திற்கு முன்பு வரை போர்கைதிகள் அடிமைகள்தான் அவர்களை தங்கள் விருப்பம் போல பயன்படுத்தலாம் என்ற நிலையிருந்தது. ஆப்ரஹாம் லிங்கன் காலத்திற்குப்பின் உருவாகிய புதிய சிந்தனைகளின் காரணமாகவே இந்த அனுமதிகள் உங்களுக்குத் தவறாகத் தெரிகிறது. மேலும் இது அல்லாஹ்வின் அனுமதி எனவே சஹாபக்களின் செயலில் தவறில்லை” என்றார்.

 நம் மார்க்க அறிஞர்களின் வாதம் எப்படி மனசாட்சியுள்ள மனிதர்களால் ஏற்க முடியும்?

அடிமைப் பெண்களுடன் கூடுவதும், அவர்களை விருப்பம் போல பயன்படுத்துவதும்,  முஹம்மது நபியால் துவங்கி வைக்கப்படவில்லை.  இது அவருக்கு  முன்பிருந்தே பின்பற்றப்படும் ஒரு நடைமுறை இதற்கு முஹம்மது நபியை எப்படிக்  குறை கூற முடியும் ? என்றும் மறுக்கின்றனர்.

                எந்த இராணுவத்திலும் சில‌ சிப்பாய்களிடம் இருக்கும் ஒரு தவறான காரியம், பெண்களை கற்பழிப்பதாகும். எல்லா இராணுவத்திலும் இந்த குற்றத்தை செய்யும் குற்றவாளிகள் உள்ளனர். ஆனால், முஹம்மது நபி இந்த கற்பழிப்பை சட்டமாக்கி, அதனை அல்லாஹ் தனக்கு வேதவாக்காக அருளியதாகக் கூறி குர்ஆனிலும்  எழுதிவைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயமாகும்.

முஹம்மது நபி கற்பழிப்பதை நியாயப்படுத்தி அல்லாஹ்வின் பெயரால் சட்டபூர்வமாக்கிவிட்டார்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேதவெளிப்பாடும்.

20 நவ்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 13

 

 

(நபியே) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர், ”அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்கு செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்னபோது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்திருந்தீர். ஆனால் அல்லாஹ் அவன் தான் நீர் பயப்படுவதற்குத் தகுதியானவன்,…                                                                                                              (குர்அன் 33:37)

கதீஜா அவர்கள் உக்காழ் எனும் அரேபியாச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஸைத்  அவர்களை விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா அவர்களிடம் வளர்ந்து வந்தார். கதீஜா அவர்கள் முஹம்மது நபி அவர்களை மணந்தவுடன் அந்த அடிமைச் சிறுவரை முஹம்மது நபி அவர்களுக்கு வழங்கி, நீங்கள் விரும்பினால் இச்சிறுவரை அடிமையாகவே வைத்துக் கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் இவரை விடுதலை செய்து விடலாம் என்று கூறிவிட்டார்கள்.

சொந்த மகனைப் போலவே ஸைதை முஹம்மது நபி அவர்கள் தமது இருபத்தைந்தாம் வயது முதல் ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஸைத் அவர்களின் எல்லாக் காரியங்களுக்கும் முஹம்மது நபி அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். வளர்பு மகனை தங்களது சொந்த மகன்களாகவே காண்பதும் அவர்களுக்கு அதற்குரிய எல்லா உரிமைகளையும் வழங்குவதும்  அன்றைய அரபியர்களின் வழக்கம்முஹம்மது நபி அவர்களும் அவ்வாறே ஸைது அவர்களை தன்னுடைய சொந்த மகனாகவே அறிவித்திருந்தார்

அடிமைத்தளையிலிருந்து தன் மகனை மீட்க வந்த ஸைத்தின் தந்தை ஹாரிஸாவிடம், ”ஸைத் இனிமேல் என் மகனாவார் அவர் இனி அடிமை இல்லை. நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார். எனக்கு முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான் வாரிசாவேன்” என்று முஹம்மது நபி அவர்கள் அறிவித்தார்கள். முஹம்மது நபி அவர்களுக்கும் ஸைதுக்குமிடையே உள்ள உறவைப் புரிந்து கொண்ட அவரது தந்தை மகிழ்வுடன் திரும்பிச் சென்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும்போது முஹம்மது  அவர்கள் நபியாக நியமிக்கப்படவில்லை. (அல் இஸாபா) அன்றிலிருந்து முஹம்மது நபி அவர்கள் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை (ஸைத் இப்னு முஹம்மத்) முஹம்மதின் மகன் ஸைத் என்றே குறிப்பிட்டார்கள்.

 

புகாரி ஹதீஸ்- 4782

இப்னு உமர் (ரலி )அவர்கள் கூறியதாவது

”அவர்களை அவர்களின் தந்தையின் பெயராலேயே குறிப்பிடுங்கள்” (அல்குர்ஆன் 33:5) வசனம் அருளப்படும் வரை இறைத்தூதர் (ஸல்) அவர்களால் விடுதைல செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களை ”முஹம்மதின் மகன் ஸைத்” என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம்

அதுபோல் ஸைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் முஹம்மது நபி  அவர்களையே சார்ந்திருந்தார்கள். முஹம்மது நபி  அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரி ‘உஸைமா’ என்பாரின் மகள் ஜைனப் அவர்களை, அதாவது தமது சொந்த மாமிமகளை ஸைதுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஜஹ்ஷுடைய மகள் ஸைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஸைதுக்கும் நடந்த இத் திருமணம் என்ன காரணத்தாலோ ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயிற்று. குடும்ப அமைதி குலைந்து போகும் நிலை உருவாயிற்று. இறுதியில் ஸைனபை விவாகரத்து (தலாக்) கூறும் நிலைக்கு ஸைத் ஆளானார்.  விவாகரத்திற்கு பின்னர்,  முஹம்மது நபி, ஜைனப் அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்.

…பிறகு ஜைத் அவளிடமிருந்து (தலாக்) விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்ட பொழுது, அவளை உமக்கு நாம் திருமணம் செய்து வைத்தோம். முஃமினானவர்களின் மீது தங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவியர்கள் விஷயத்தில் அவர்களிலிருந்து விருப்பத்தை இவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்களானால் எவ்வித குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக; அல்லாஹ்வுடைய கட்டளை நிறைவேற்றப்படக் கூடியதாக உள்ளன.

(குர்அன்33:37)

ஜைனப் – ஜைத் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டிற்கு,  குர்ஆனின்    33:37 வசனத்திற்கு அல் தபரி, அல் குர்தூபி, இப்ன் ஸாத் தரும் விளக்கவுரைகள் இவ் விவாகரத்திற்கு வேறொரு தோற்றத்தை தருகிறது.

திருக்குர்ஆன் வசனம் 33:37 ற்கு அல் தபரி  தரும் விளக்கவுரை,

Narrated by Yunis  narrated by Ibn Wahab, narrated by Ibn Zaid who said, “The prophet -pbuh- had married Zaid son of Haritha to his cousin Zainab daughter of Jahsh. One day the prophet -pbuh- went seeking Zaid in his house, whose door had a curtain made of hair. The wind blew the curtain and the prophet saw Zainab in her room unclothed and he admired her in his heart. When Zainab realized that the prophet desired her SHE BEGAN TO HATE ZAID. English translation of al-Tabari’s Arabic Commentary on Sura 33:37

(ஒரு நாள் ஜைதை காண்பதற்காக (அவரது வீட்டிற்கு) சென்றார். அப்பொழுது அங்கு நுழைவாயில் ஒரு துணி திரையாக மூடியிருந்தது. காற்று திரையை விலக்கியது. வீட்டினுள் ஜைனப் (ஏறக்குறைய) உடையின்றி இருந்தார், அவரைப் (ஜைனப்) பற்றிய எண்ணம் நபியின் மனதில் நுழைந்தது. நபி அவரை (ஜைனப்) விரும்புவதை உணர்ந்த பொழுது அவர் (ஜைனப்) ஜைதை வெறுக்க துவங்கினார்.)

The Messenger of God came to the house of Zayd b. Harithah. (Zayd was always called Zayd b. Muhammad.) Perhaps the Messenger of God missed him at that moment, so as to ask, “Where is Zayd?” He came to his residence to look for him but did not find him. Zaynab bt. Jash, Zayd’s wife, rose to meet him. Because she was dressed only in a shift, the Messenger of God turned away from her. She said: “He is not here, Messenger of God. Come in, you who are as dear to me as my father and mother!” The Messenger of God refused to enter. Zaynab had dressed in haste when she was told “the Messenger of God is at the door.” She jumped up in haste and excited the admiration of the Messenger of God, so that he turned away murmuring something that could scarcely be understood. However, he did say overtly: “Glory be to God the Almighty! Glory be to God, who causes the hearts to turn!”

நபி ஜைத் பின் ஹாரிஸ்ன் வீட்டிற்கு வந்தார். (ஜைத் எப்பொழுதும் ஜைத் பின் முஹம்மது என்றே அழைக்கப்பட்டு வந்தார்) அங்கு அவரை காணாவில்லை என்ற காரணத்தால், ஜைத் எங்கே? என்று கேட்டவாறு வீட்டிற்குள் சென்றார். ஆனால் நபியால் அவரை(ஜைத்) காண முடியவில்லை. அங்கிருந்த ஜைனப் நபியை காண எழுந்தார். நபி, அவரி(ஜைனப்)டமிருந்து திரும்பிக்கொண்டார் காரணம் அவர் (ஜைப்)  குறைவான ஆடைமட்டுமே அணிந்திருந்தார். அவர் (ஜைனப்)  கூறினார், அவர் (ஜைத்) இங்கு இல்லை, அல்லாஹ்வின் தூதரே உங்ளே வாருங்கள், நீங்கள் என் தாய், தந்தையை போன்று அன்புக்குரியவர் என்றார். அல்லாஹ்வின் தூதர் வீட்டினுள் செல்ல மறுக்கிறார். “அல்லாஹ்வின் தூதர் கதவருகிலேயே நிற்கிறார்” என்றவாறு ஆடையை சரிசெய்ய விரைவாக(படுக்கையிலிருந்து) குதித்து (எழுந்து) அல்லாஹ்வின் தூதரின் வியப்பான எண்ணத்தில் கிளர்ச்சியை உண்டாக்கினார். ஆதலால் அங்கிருந்து அல்லாஹ்வை புகழ்ந்து, தொடர்ந்து முணுமுணுத்தபடி விலகி சென்றார். (Glory be to God the Almighty! Glory be to God, who causes hearts to turn!)

When Zayd came home, his wife told him that the Messenger of God had come to his house. Zayd said, “Why didn’t you ask him to come in?” He replied, “I asked him, but he refused.” “Did you hear him say anything?” he asked. She replied, “As he turned away, I heard him say: ‘Glory be to God the Almighty! Glory be to God, who causes hearts to turn!’”

ஜைத் வீட்டிற்கு வந்தவுடன், ஜைனப் அல்லாஹ்வின் தூதர் வீட்டிற்கு வந்த செய்தியை தெரிவிக்கிறார். ஜைத்கூறினார், “நீ ஏன் அவரை வீட்டிற்குள் அழைக்கவில்லை?”, “நான் கேட்டுக்கொண்டேன் ஆனால் அவர் மறுத்துவிட்டார்” என்று பதிலுரைத்தார் “அவர் ஏதாவது கூறினாரா?” அவர் “திரும்பிச் செல்லும் போது அவர் கூறியதைக்கேட்டேன்; அல்லாஹ்விற்கே புகழனைத்தும் என் இதயத்தை (மனதை) திருப்பிய காரணத்திற்காக அல்லாஹ்விற்கே புகழனைத்தும்” என்றார்.

So Zayd left, and having come to the Messenger of God, he said: “Messenger of God, I have heard that you came to my house. Why didn’t you go in, you who are as dear to me as my father and mother? Messenger of God, perhaps Zaynab has excited your admiration, and so I will separate myself from her.” Zayd could find no possible way to [approach] her after that day. He would come to the Messenger of God and tell him so, but the Messenger of God would say to him, “Keep your wife.” Zayd separated from her and left her, and she became free.

ஜைத் சென்று அல்லாஹ்வின் தூதரை சந்தித்து,  “அல்லாஹ்வின் தூதரே நீங்கள் வீட்டிற்கு வந்ததை அறிந்தேதன், நீங்கள் ஏன் வீட்டிற்குள் செல்லவில்லை நீங்கள் என் தாய், தந்தையை போன்று அன்புக்குரியவர் அல்வா? அல்லாஹ்வின் தூதரே, ஒருவேளை ஜைனப், உங்கள் மனதில் கிளர்ச்சியூட்டியிருக்கலாம் அதனால் நான் அவளிடமிருந்து நான் பிரிந்து விடுகிறேன்.” அதன் பிறகு அவரை (ஜைனப்)  அடையும் சரியான வழியை ஜைத்தால் காணமுடியவில்லை. அவர்(ஜைத்)  அல்லாஹ்வின் தூதரிடம் சென்று அவ்வாறாக கூறினார் ஆனால் மனைவியை அவரிடமே (ஜைத்)  வைத்துக் கொள்ள கூறினார். ஜைத்  அவரை (ஜைனப்)  விட்டு விலகினார்  (தலாக் கூறி) அவரை விடுவித்தார்.

While the Messenger of God was talking with ‘A’isha, a fainting overcame him When he was released from it, he smiled and said, “Who will go to Zaynab to tell her the good news, saying that God has married her to me?” Then the Messenger of God recited: “And when you said unto him on whom God has conferred favor and you have conferred favor, ‘Keep your wife to yourself.’”- And the entire passage.

அல்லாஹ்வின் தூதர், ஆயிஷாவுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது சூழ்ந்திருந்த குழப்பத்திலிருந்து தெளிவடைந்து புன்னகைத்தவாறு, “ அல்லாஹ்,  அவளை (ஜைனப்)  எனக்கு திருமணம்  செய்து தரும் இந்த நல்ல செய்தியை அவரி(ஜைனப்பி) டம் கூறுபவர் யார்?” என்றார்

According to ‘A’isha, who said: “I became very uneasy because of what we heard about her beauty and another thing, the greatest and loftiest of matters – what God had done for her by giving her in marriage. I said she would boast of it over us.” (The History of Al-Tabari: The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3; bold emphasis ours)

(ஆயிஷா அறிவிக்கிறார், என் மனஅமைதி குலைந்தது காரணம் நான் கேள்விப்பட்ட அவரது அழகைப்பற்றியும் மேலும் உயர்வான குணங்களைப்பற்றியுமே – அவரது (ஜைனப்)   திருமணத்திற்கு அல்லாஹ் (உதவி) செய்தவற்றின் மீது அவருக்கு (ஜைனப்)   தற்பெருமை இருந்தது.)

புகாரி ஹதீஸ் : பாகம் 7, எண் : 7420

அனஸ்(ரலி) அறிவித்தார்.

….ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். ‘ உங்களை (நபி (ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத் தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி (ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்’ என்று சொல்வார்கள்.

திருக்குர்ஆன் வசனம் 33:37 அல் குர்தூபி தரும் விளக்கவுரை,

Here, also, are the comments of renowned Muslim commentator, al-Qurtubi, on surah 33:37, translated directly from the Arabic:

Muqatil narrated that the prophet married Zainab daughter of Jahsh to Zaid and she stayed with him for a while. Then one day the prophet –pbuh– came seeking Zaid but he saw Zainab standing; she was white skinned with a beautiful figure and one of the most perfect women in Quraish. So HE DESIRED HER and said, “Wondrous is Allah who changes the heart.” When Zaynab heard the prophet’s exaltation of her, she relayed it to Zaid who then understood (what he had to do). Zaid said to the prophet, “O prophet of Allah, allow me to divorce her, for she has become arrogant; seeing herself superior to me and she insults me with her tongue.”

(முகாதில் அறிவிப்பது, ஜைனப்பிற்கும் ஜைதிற்கும் திருமணம் செய்துவைத்தார் அவர்(ஜைனப்) அவருடன்(ஜைத்) இருந்தார். பிறகு ஒருநாள் நபி ஜைத்தை தேடி சென்றார் ஆனால் அங்கு ஜைனப் நின்று கொண்டிருந்தார். அவரின் வெண்ணிறத்துடன் அழகிய உடல் அமைப்பும் கொண்டவர் மேலும் குரைஷி குலத்தின் முழுநிறைவான பெண். ஆதனால் அவரை விரும்பினார் மேலும் மனதை மாற்றியது அல்லாஹ்வின் அற்புதம் என்றார். அவர் தன்னைப்பற்றி ஆச்சரியப்பட்டதை ஜைனப் உணர்ந்து ஜைத்திடம் கூறியபொழுது அவர் அதை உணர்ந்து கொண்டார். நபியிடம் ஜைத் கூறினார், “அல்லாஹ்வின் தூதரே அவரை விவாகரத்து செய்ய அனுமதிக்க வேண்டும், அவள் பிடிவாதமாகவும், என்னை விட தன்னை உயர்வாக நினைக்கிறாள், மேலும் என்னை சொல்லால் அவமதிக்கிறாள்” என்றார்)

அல்லாஹ்வின் தூதர், “அல்லாவிற்கு அஞ்சி மனைவியை தடுத்து வைத்துக்கொள்” என்று கூறினார்.

…அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்திருந்தீர் …

(குர்அன் 33:37)

என்ற வசனத்தின் பொருள், அதாவது  ஜைனப் மீதிருந்த விருப்பத்தை மனிதர்களுக்கு பயந்து மனதில் மறைத்து, ஸைத் தலாக் கூற முன்வந்ததும் ”தலாக் கூற வேண்டாம்” என்று வெறும் வாயளவில் கூறி விட்டு மனதுக்குள் ”அவர் தலாக் கூற வேண்டும்” அதன் பிறகு தாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்கள். இதைத்தான் இந்த வசனத்தில் (குர்அன் 33:37) அல்லாஹ் குறிப்பிடுகிறான் என கடுமையான குற்றச்சாட்டு முஹம்மது நபி அவர்களின் மீது சுமத்தப்படுகிறது.

முறை தவறிய தனது திருமணத்திற்காக, தன்னால் கைவிடப்பட்ட அந்த வளர்ப்பு மகனையே தூது அனுப்பினார்.

முஸ்லீம் ஹதீஸ் : பாகம் 8, எண் : 3330

அனஸ்   (ரலி) அவர்கள் கூறியதாவது.

ஸைனப் அவர்களின் இத்தா முடிந்தவுடன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜைத்திடம், தன்னைப் பற்றி ஜைனப்பிடம் கூறும்படி சொன்னார்கள். ஜைனப் மாவைப் பிசைந்துக் கொண்டிருக்கும் போது ஜைத் அங்கு சென்றார். அவர் கூறினார் நான் ஜைனப்பை கண்ட போது, அல்லாஹ்வின் தூதரே ஜைனப்பைப் பற்றி கூறியதால் அவர் எவ்வளவு பெருமைக்குரியவராக இருக்கிறார் என்று நினைத்தேன் அதனால் ஜைனப்பிற்கு நேராக நின்று பேசாமல் வேறு திசையில் திரும்பிக் கொண்டு பேசினேன். நான் கூறினேன்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களுக்கு ஒரு செய்தியை என்னிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்”. இதற்கு பதிலாகஅவர்: நான் இறைவனின் விருப்பம் என்னவென்று தெரிந்து கொள்ளும் வரை எதையும் செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். இதைச் சொல்லிவிட்டு, இறைவனை தொழுவதற்கு தயாராக நின்றார்கள். அப்போதுதான் அவரின் திருமணம் பற்றிய வசனம் வெளிப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவரின் அனுமதியின்றி அவரைக் காணவந்தார்…

ஜைனப், அல்லாஹ்வின் முடிவை அறிய வேண்டுமென்று உறுதியாக கூறிவிட்டதால், வேறு வழியின்றி முஹமத் – ஜைனப் திருமணத்திற்கான அனுமதி வஹீயாக வெளிப்பட்டது.

முஹமத் ஜைனப் திருமணமும் அதன் பின்னணியும் மாற்று மதத்தினரின் கற்பனையல்ல. இதற்கு ஆதாரம்  சில குர்ஆன் விரிவுரை நூல்களில் காணப்படுகிறது. தங்களுக்கு பாதகமான தகவல்களை வழக்கம்போல அதற்கு சரியான ஆதார வரிசையில்லை என்று  மார்க்க அறிஞர்கள் மறுக்கின்றனர். நம்முடைய மார்க்க அறிஞர்கள் தர்கரீதியான வாதங்களால் மட்டுமே அவர்களுக்கு பதில் அளிக்கின்றனர் தகுந்த ஆதாரங்களை முன் வைக்க முடியவில்லை.

இதற்குஇஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் தரப்படும் விளக்கங்களும்  மறுப்புகளும் வருமாறு:-

விளக்கம் : 1

முஹம்மது நபி  அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஸைதை மண முடித்துக் கொள்ளுமாறு ஸைப்- குடும்பத்தினரிடம் கேட்டார்கள் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஸைத் ஒரு முன்னாள் அடிமை என்பதாலும், தாங்கள் உயர்ந்த குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஸைனப்பும் அவரது குடும்பத்தினரும மறுத்து விடுகிறார்கள். ஆனால் ஸைனப்  முஹம்மது நபி  அவர்களை திருமணம் விரும்புகிறார்கள்.  அவரது குடும்பத்தினரின் விருப்பமும் அதுவே.  வேறுவழியில்லாததால்    பின் வரும் இறை வசனம் உடனே இறங்கியது.

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

(குர்ஆன் 33:36)

இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஸைனப்  அவர்கள் ஸைதைத் திருமணம் செய்ய சம்மதித்தார்கள்.

(இப்னு ஜரீர், இப்னு கஸீர்)

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆரம்பம் முதலே ஸைத்  அவர்களை மணந்து கொள்ள ஸைனப்  விரும்பவில்லை என்பதும், முஹம்மது நபி  அவர்களின் வற்புறுத்தலுக்காகவே, தமக்குப் பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகின்றார் என்பதும் தெளிவாகிறது.

மறுப்பு :

முஹம்மது நபி-ஸைனப் திருமணமே, ஸைனப் மற்றும் அவரது  குடும்பத்தினரின் விருப்பமும்  எனில், கதீஜா  அவர்களின் மரணத்திற்குப் பின்னர் முஹம்மது நபிக்கு ஸைனபை மறுமணம் செய்து வைத்திருக்கலாமே! அதற்குத் தடை எதுவும் இருக்கவில்லையே! முஹம்மது நபி நான்கு திருமணங்களை முடிக்கும்வரையிலும்  காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

ஜைத்-ஜைனப் தம்பதியினரிடையே சுமூக உறவின்றி பிரிந்தனர் என ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், விவாகரத்திற்குப் பின் ஜைனப்பை முஹம்மது நபி திருமணம் செய்யவேண்டிய அவசியம் இல்லையே! விவாகரத்திற்குப் பின்னர் ஜைனபின் வாழ்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பு நபியிடம் வழங்கப்படவில்லை.   ஸைனபின் பேரழகில் மயங்கி விட வில்லையெனில், ஸைனப்பை வேறு யாருக்காவது திருமணம் செய்துவைக்க இயலுமே. ஏனெனில் முஹம்மது நபி  வார்தைக்கு முற்றிலும்  கீழ்படிந்தவர்கள் பலர் இருந்தனர். அவருக்கு இது எளிதானதும் கூட.

“தலாக்” (விவாகரத்து) என்ற சொல் உச்சரிக்கப்படும் பொழுது அல்லாஹ்வின் அரியாசனமே (அர்ஷ்) நடுங்குகிறது என்கின்றனர். அல்லாஹ்விடத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்களிலேயே மிகவும் வெறுப்பிற்குரிய செயல் விவாகரத்து என்கிறது அபூதாவூத்.  குர்ஆன் 33:36 வசனத்தைக்கூறி திருமணம் செய்துவைத்த முஹம்மது நபி மேற்கண்ட குர்ஆன் 33:36 வசனத்தை மேற்கோள் காண்பித்து அல்லாஹ்விற்கு மிகவும் வெறுப்பிற்குரிய விவாகரத்தை ஏன் தடுக்கவில்லை?

விளக்கம் : 2

முஹம்மது நபி  அவர்கள் ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்கள் செய்தியை ஸைத் அவர்களும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் முஹம்மது நபி  அவர்களின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி, தம் மனைவியைத் தலாக் கூறுவது சம்பந்தமாக முஹம்மது நபி அவர்களிடமே ஆலோசனை கேட்கிறார்கள். அதன் பின்பும் முஹம்மது நபி  அவர்களுடன் முன்னர் நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில் எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை.

  முஹம்மது நபி அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. முஹம்மது நபி அவர்களும் சொல்லவில்லை. ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததாக முஹம்மது நபி அவர்களும் சொல்லவில்லை. ஸைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது.

மறுப்பு :

ஜைத்-ஜைனப் விவாகரத்திற்குப் பின்னரும்,  ஜைத் முஹம்மது நபியிடம், ஜைத், முன்னர் நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில் எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை.

முஹம்மது நபி  அவர்கள் மீது, ஜைத் ஆத்திரப்பட வாய்ப்பில்லை ஏனெனில், ஜைத் அல்லாஹ்வின் தூதருக்காக தாமாகவே முன்வந்து ஜைனப்பை விட்டுக் கொடுத்தார். நாம் முன்பு ஹதீஸில் (முஸ்லீம்: பாகம் 87, எண் : 3330)  முஹம்மது நபிக்காக தூது செல்கிறார், முஹம்மது நபி, வியந்து பாராட்டிய பெண் என்று ஆச்சரியமடைகிறார்.

 

இமாம் குர்தூபி பட்டியலிடும் முஹம்மதுநபி க்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளிலிருந்து

முஹம்மது ஒரு பெண்ணைக் கண்டு அப்பெண்ணை விரும்பினால், முஹம்மது அவளை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக, அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்ய வேண்டும். இபின் அல் அரபி கூறுகையில், “இதைத் தான் இரண்டு இமாம்களும் கூறினார், மற்றும் ஜையத் கதையில் வரும் நிகழ்ச்சியும் இப்படிப்பட்ட பொருளில் வந்ததே என்று அறிஞர்களும் கூறுகிறார்கள்”.    

 

முஹம்மது நபி  அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. முஹம்மது நபி  அவர்களும் சொல்லவில்லை. ஆனால் மனிதர்களுக்கு ஏளனத்திற்கு அஞ்சி வெளியே கூற இயலாத ஒரு செய்தி முஹம்மது நபியின் மனதில் மறைந்திருந்தது மறுக்க முடியாத உண்மையே! ஜைத்-ஜைனப் விவாகரத்திற்குப் பின் நடந்த சகிக்க முடியாத நிகழ்வுகள், முஹம்மது நபியின் மனதில் மறைத்திருந்ததை  வெளியாக்கி விட்டதே!

 

விளக்கம்  :3

முஹம்மது நபி  அவர்களைத் திருமணம் செய்யும் ஸைனப்ன் வயது முப்பத்து ஆறு. முஹம்மது நபி  அவர்களின் வயது 56.  56 வது வயதில் நாடுவதை விட அதிகம் பெண்களை அதிகம் நாடக்கூடிய இளம் வயதில் வயதில்) பருவ வயதிலிருந்த ஸைனப்  அவர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பை முஹம்மது நபி  அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது. அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள் பற்றியும், அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக் கொள்ளலாகாது என்பது பற்றியும் இறைக் கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஸைனப் ஆவர்களைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பு முஹம்மது நபி  அவர்களுக்கு வாய்த்திருந்தது.

முஹம்மது நபி  அவர்கள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள். 17 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், 20 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், 25 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், பெண்களின் அழகு பிரகாசிக்கக்கூடிய 15வயது முதல் 30 வரையிலான பல்வேறு பருவங்களில் ஸைனபைப் பார்த்துப் பேசிப் பழகியிருக்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஸைனபின் அழகில் சொக்கிவிடாத முஹம்மது நபி அவர்கள் 34 வயதை ஸைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவரது பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடையோர் எவரும் ஏற்க முடியுமா?

மறுப்பு :

இப்ன் ஜரீர் அல் தபரி இஸ்லாமிய ஆராய்சியாளர்களாலும், அறிஞர்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவர். குர்தூபியும் சிறந்த மார்க்க அறிஞராவர். இவர்கள்  தங்களுடைய ஆன்மீகத் தலைவர் முஹம்மது நபி  அவர்களின் மீது வேண்டுமென்றே ஒரு கட்டுக்கதையைக் கூற வேண்டியத் தேவை என்ன?

இந்த திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் ஜைனப்பின் மீது முதலிலிருந்தே காதல் இருந்ததாக கூறவில்லை குறிப்பிட்ட ‘அந்த ஆடையற்ற’ சம்பவத்திற்கு பிறகே முஹம்மது நபி, தன்னை விரும்புவதை ஜைனப் அறிந்து கொண்டார் என்றே  குறிப்பிடுகின்றனர். ஸைனப்பின் பேரழகில் மயங்கி, சொக்கி விடவில்லையெனில்  இழிவான புதிய வரைமுறைகளை ஏற்படுத்தி, அவரை தனது படுக்கைக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லையே!

 

விளக்கம்  :3

முஹம்மது நபி அவர்களின் 50வயது வரை அவர்களுக்கு கதீஜா  மனைவியாக இருந்தார்கள். கதீஜா  அவர்களின் மரணத்திற்குப் பின்னர் முஹம்மது நபி அவர்களுக்கு மனைவியின்பால் தேவையிருந்தது. கதீஜா மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது. ஜைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உண்மையானால் கதீஜா அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஸைனபை மணந்திருக்கலாமே! அதற்குத் தடை எதுவும் இருக்கவில்லையே!

மறுப்பு :

முஹம்மது நபி, ஜைனபின் பேரழகில் மயங்கி விடவில்லையெனில் ஜைத் விவாகரத்து கூறிய, ஒரு சில நாட்களில், அல்லாஹ் அனுமதியளித்துவிட்டான் எனக்கூறி ஜைனப்புடனான  திருமண ஆலோசனையை முதலில் துவக்கியது ஏன்?

முஹம்மது நபிக்கு, ஜைனப்பின் மீது எவ்விதமான ஈர்ப்பும் இல்லையெனில், வேறு யாருக்காவது திருமணம் செய்து வைக்கலாமே? அதற்கு எந்தத் தடையும் இல்லயே?

ஜைனப்பை திருமணம் செய்தால், மருமகளையே அதாவது தன் (வளர்ப்பு) மகனின் மனைவியை தன்னுடைய படுக்கையில் வீழ்த்தியவர் என்று நாகரீமற்ற(?) பண்டைய அரபியர்கள் இழிவாக பேசுவார்களே என தயங்கினார். அவரது இந்த மனப்போராட்டத்தை பார்த்துக் கொண்டு அல்லாஹ்வால் பொறுமையாய்  இருக்க முடியவில்லை. உடனே ஜிப்ரீல் மூலம் வஹியை இறக்கி விட்டான்.

…முஃமினானவர்களின் மீது தங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவியர்கள் விஷயத்தில் அவர்களிலிருந்து விருப்பத்தை இவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்களானால் எவ்வித குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக; …

(குர்அன்33:37)

 

நபியின் மீது அல்லாஹ் அவருக்கு ஆகுமாக்கியவற்றில் (அவற்றை நிறைவேற்றுவதில்) எவ்வித குற்றமும் இல்லை…

(குர்அன்33:38)

“எவ்வித குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக” என்ற வார்த்தைகளின் நேரடிப் பொருள், முஹம்மது நபி, ஜைனப் மீது  கொண்டிருந்த (தகாத) விருப்பம், குற்றம் கூறும் வகையிலேயே இருந்திருக்கிறது என்பது தான். அதை சரி செய்யவே இத்தகைய புதிய சட்டம் இயற்றப்பட்டதாக  குர்ஆன் தரும் இந்த விளக்கத்தை எப்படி மறுக்க முடியும்?

”அவர்களை அவர்களின் தந்தையின் பெயராலேயே குறிப்பிடுங்கள்”.. 

                (குர்ஆன்33:5)

அதாவது உங்களுடைய வளர்ப்பு மகன்களை ஒருநாளும் சொந்த மகன்களாக கருதக்கூடாது என்று புதிய சட்டத்தை இயற்றி, முஹம்மது நபி அவர்களுக்கும் ஜைனப்  அவர்களுக்கும் திருமணம் நடக்க வழிவகை செய்துவிட்டான் (திருக் குர்ஆன் அறக்கட்டளையின் மொழி பெயர்பின் 33 ம் அத்தியாயத்தின் Foot Note 5 & 6 காண்க) 

அல் பாக்கவி.com–ன் “பலதார மணம் புரிந்தது ஏன்?“என்ற இணையதள  கட்டுரையிலிருந்து….

நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒன்று ஊறிப்போன அறியாமைக் கால வழக்கத்தை தகர்ப்பதற்காக நடத்தப்பட்டது. அதாவது, அரபியர்களிடம் வளர்ப்பு மகனை பெற்ற மகனாக கருதும் வழக்கம் இருந்தது. பெற்ற மகனுக்குக் கொடுக்கும் உரிமைகளையும், கடமைகளையும் வளர்ப்பு மகனுக்கும் வழங்கினர். இவ்வழக்கம் அரபியர்களிடம் ஆழமாக வேரூன்றி இருந்தது. இதைக் களைவது இலகுவானதல்ல. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்றவற்றில் இஸ்லாமின் சட்டங்களுக்கும் அடிப்படைகளுக்கும் இக்கொள்கை முரணாக இருக்கிறது.

மேலும், சமூகத்திலிருந்து எந்த மானக்கேடான அருவருக்கத்தக்க பழக்க வழக்கங்களை அழிப்பதற்காக இஸ்லாம் இந்த உலகத்தில் உதித்ததோ, அவை அனைத்தையும் இக்கொள்கை சமுதாயத்திற்குள் இழுத்து வருகிறது. இந்த சட்டத்தை நபி (ஸல்) அவர்களின் கரத்தால் நபி (ஸல்) அவர்களின் சொந்த வாழ்க்கை மூலமாகவே உடைக்க வேண்டுமென அல்லாஹ் நாடினான்.

குழந்தைகளைத் தத்தெடுக்கும் மனிதாபிமான செயல், அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் சமூகத்திலிருக்கும் மானக்கேடான அருவருக்கத்தக்க, ஊறிப்போன அறியாமைக் கால வழக்கமாகத் தெரிந்தது எனவே அதை அல்லாஹ் தடைசெய்ய விரும்பினானாம்.

அநாதைகளை குழந்தைகளைத் தத்தெடுத்து தங்களது சொந்த குழந்தைகளாகக் கருதி அதற்குரிய சகல உரிமைகளையும் வழங்குவதுஅநாதைகளை ஆதரிக்கும் மனிதாபிமான செயலின் உச்சகட்டம். மனிதாபிமான மிகுந்த தத்தெடுக்கும் முறை ஏன் தடைசெய்ய வேண்டும்? அதொன்றும் அவ்வளவு கொடூரமான செயல் இல்லையே !      

                வாதத்திற்காக கூறினாலும், முஹம்மது நபியும் ஜைத்தும் அதிபயங்கர விரோதிகளாகவும் இருக்கவில்லை.  தத்தெடுக்கும் முறையைத் தடை செய்வதென்றால் அல்லாஹ்வினால் நேரடியாகவே கூறியிருக்க முடியும்.

                குழந்தைகளைத் தத்தெடுப்பதால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறோம் எனவே இந்த காடுமிராண்டித்தனத்தை தடைசெய்து எங்களைக் காப்பற்ற வேண்டும் என்று யாராவது அல்லாஹ்விடமும், முஹம்மதுவிடமும் முறையிட்டார்களா?

அப்படி எதுவுமில்லை

நமக்குத் தெரிந்தவரையில் இப்படியொரு தடையின் தேவை ஏற்பட்டது முஹம்மது நபியின் அடங்காத இச்சைக்குக்கு மட்டுமே! அது அல்லாஹ்விடமிருந்து வேதவாக்கையும் வரவழைத்தது.

“முஹம்மது உங்களுடைய ஆண்களில் எவருடைய தந்தையாகவும் இருக்கவில்லை….”

                (குர் ஆன் 33.53)

இந்த வசனம் “ஆண்களில்” என குறிப்பிடுவதால் இது ஸைனப்ஐ திருமணம் செய்வதற்காக, ஸைத் அவர்களையே இலக்காக கொண்டுள்ளதை காணலாம்.

…‘‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன் ” என்று (நபியவர்களிடம்) சொன்னேன் (புகாரி ஹதீஸ் -4788)  (முஸ்லீம் ஹதீஸிலும் இது இடம் பெற்றுள்ளது.)

வெவ்வேறு சூழ்நிலைகளில் நிகழ்ந்தவைகளை அடிப்படையாகக் கொண்டு ஆயிஷா கூறிய இந்த கருத்து மிகச்சரியானதே!

அன்று மட்டுமல்ல இன்றும் உலகில் இருக்கும் நடைமுறையை  மீறி முஹம்மது நபி – ஜைனப்   இடையே நிகழ்ந்த திருமணம் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரமாக அமைகிறது.  இத்திருமணத்திற்கு முன்பு வரை தன் வளர்புமகனாக கருதியவரை  இத்திருமணத்திற்கு தடையான உறவு என்ற ஒரே காரணத்திற்காக அல்லாஹ்வின் வஹி என்ற பெயரில் வளர்ப்பு மகன் என்ற உறவை தூக்கி எறிந்தார். மற்றவர்களும், இனி உலகம் உள்ளவரையிலும், தத்து எடுக்கக் கூடாது எனக்கூறி மனிதாபிமனமிக்க நடைமுறையை முற்றிலும் தடை செய்தார்.

இச்சம்பவத்தை காணும் பொழுது, வாலை இழந்த நரியின் கதை நினைவிற்குவருகிறது. ஒரு முறை விவசாயி ஒருவரின் வீட்டில் கோழியைத் திருடச் சென்ற நரி, தாக்குதலுக்கு உள்ளாகி வாலை இழந்தது. காட்டிற்கு திரும்பிய நரி, வால் இல்லாத காரணத்தால் தன் இனத்தார் ஏளனம் செய்வார்கள் என்று அஞ்சிய ஒரு தந்திரம் செய்தது. நம் இனத்திற்கே வால் மிகவும் அசிங்கமாக உள்ளது எனவே அனைவரும் வாலை வெட்டி எறிய வேண்டும் என்று கூறியதாம்.

 

ஜைனப்பின் பேரழகில் மயங்கவில்லையெனில், முறை தவறிய உறவை ஆதரித்தும் அன்று மட்டுமல்ல இன்றும் உலகில் இருக்கும் மனிதாபிமானமுள்ள  தத்தெடுக்கும் நடைமுறையை தடைசெய்து அல்லாஹ்வின் வசனம் ஏன் இறங்கவேணடும்?  தத்தெடுக்கும்  முறையை தடை செய்வதைப் பற்றி முன்பே வேறு சந்தர்பங்களில் கூறியிருந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி போயிருக்கும்.

நேர்மையையும், நியாயத்தையும், ஒழுக்கத்தையும், அன்பையும் மனிதாபிமானத்தையும் போதிக்கிறது என்று நாம் மார்தட்டிக் கொள்ளும் கொள்கைகளின் ஏதார்த்த நிலை இதுதான். நபி   அவர்களின் பலதார மணமும் அற்கான பின்னணியும், ஸைனப்  இடையே நிகழ்ந்த இத்திருமணம் முறை தவறியிருப்பதை உறுதி செய்கிறது

முஹம்மது நபிக்கு பெண்கள் விஷயத்தில் எவ்வித கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காக அல்லாஹ்வின் சலுகை அறிவிப்பு

 

“நபியே (பெண்களில்) எவருக்கு மஹர்ளைக் கொடுத்திருக்கிறீரோ அத்தகைய உம்முடைய மனைவியரையும், அல்லாஹ் (போரின் மூலம்) உமக்கு கொடுத்தவற்றில் உம்முடைய வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைப் பெண்கள்) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களே அத்தகைய உம் தந்தையின் சகோதரருடைய புதல்வியரையும் உம் தந்தையின் சகோதரிகளுடைய புதல்வியரையும் உம் தாய்மாமனின் புதல்வியரையும் உம் தாயின் சகோதரிகளுடைய புதல்வியரையும் (இப் பெண்களை மஹர் கொடுத்து மணமுடிப்பதை) உமக்கு நிச்சயமாக நாம் ஆகுமாக்கியுள்ளோம். இன்னும் மஹரின்றியே தன்னை நபிக்காக அர்பணித்துக்கொள்ளும் முஃமினான பெண்ணையும் நபியும் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் (ஆகுமாக்கி வைத்துள்ளோம். இதுமற்ற) முஃமின்களுக்கின்றி உமக்கு (மட்டுமே) பிரத்தியோகமாக உள்ளதாகும். (மற்ற முஃமின்களாகிய) அவர்கள் மீது, அவர்களுடைய மனைவியரின் விஷயத்திலும் நாம் விதியாக்கியுள்ளதைத் திட்டமாக நாம் அறிவோம் (உமக்கு விலக்களித்ததெல்லாம்) உம்மீது எவ்வித கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காகத்தான் – அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவனாகவும் மிகக் கிருபையுடையோனாகவும் இருக்கிறான்.”

(குர்ஆன் 33:50)

முஃமின்களுக்கின்றி உமக்கு (மட்டுமே) பிரத்தியோகமாக உள்ளதாகும்.”, “உம்மீது எவ்வித கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காகத்தான்”  விதவிதமான அனுமதிகளின் அவசியம் என்ன? பெண்கள் விஷயத்தில்  முஹம்மது நபிக்கு என்ன கஷ்டங்கள் இருக்க முடியும்? இந்த சிறப்பு அனுமதி வசனங்கள் நமக்கு கூறும் செய்தியை சற்று சிந்தித்தது பாருங்கள்.  வஹியின் முழுப் பின்னணியையும் நீங்களே அறிந்து கொள்ளலாம்.

ஆதரவற்ற ஒரு அநாதையை மகனாக தத்தெடுத்து வாழ்வளிப்பதில் உள்ள தவறு என்ன? தனக்கு பிறந்த மகன்களுக்கு இணையாக வாரிசுரிமையை வழங்குவது தவறான முடிவா? உடல் வேட்கைக்காக, வளர்ப்பு மகன் என்ற உறவைத் துண்டித்து, மருமகளைத் திருமணம் செய்து கொள்வது உலகின் சிறந்த முன்உதாரணமா? இந்நிகழ்ச்சியின் மூலம் அல்லாஹ், மனிதனுக்கு கற்பிக்கும் படிப்பினை என்ன?

ஒருவேளை முறைதவறிய முஹம்மதுஸைனப்  திருமணம் நிகழவில்லை எனில், மேற்கண்ட இழிவான குற்றச்சாட்டுகள் அடிப்படை முகாந்திரம் இன்றி தானே வீழ்ந்திருக்கும். இதைப் போன்ற  எதிர்கருத்துக்களுக்கும் இடமின்றி போயிருக்கும்.

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

 

சக்களத்திச் சண்டையும் வேதவெளிப்பாடும்

12 நவ்

 

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 12

முஹம்மது நபி அவர்களுக்கு தேனை மிக விரும்பி உண்பார். தினமும் ஒவ்வொரு மனைவியின் வீட்டுக்கும் செல்வது முஹம்மது நபி அவர்களுக்கு வாடிக்கை. ஜைனப்   அவர்களின் முறை வரும் பொழுது சற்று கூடுதலான நேரம் தங்கி அவர் தரும் தேனைக் குடித்து மகிழ்வார். இதை மற்ற மனைவியர்களால் பொறுக்க முடியாமல் மனைவியருக்கிடையே ஏற்பட்ட சக்களத்தி சண்டையில் தேன் உண்பதை நிறுத்திவிடுவதாக கூறுகிறார் (புகாரி 4912, 5267, 5268).

புகாரி ஹதீஸ் -4912

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், அவர்களது (வீட்டில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப்பேசி முடிவு செய்து கொண்டோம் தேன் சாப்பிட்ட பின்) நம்மவரில் எவரிடம் நபி (ஸல்) அவர்கள் முதலில் வருவார்களோ, அவர், நபி (ஸல்) அவர்களிடம் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா உங்களிடமிருந்து பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூறி விடவேண்டும். வழக்கம்போல ஸைனப்பின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டு விட்டு நபி (ஸல்) அவர்கள் வந்த போது நாங்கள் பேசிவைத்த பிரகாரம் கூறியதற்கு அவர்கள் இல்லை (பிசின் சாப்பிட வில்லை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (வீட்டில்) தேன் குடித்தேன். (இனிமேல்) நான் ஒரு போதும் அதைக் குடிக்கமாட்டேன், நான் சத்தியமும் செய்து விட்டேன் என்று கூறிவிட்டு இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே என்று கூறினார்கள்.

 

மனைவியர்களின் செயலால் வருத்தமடைந்த முஹம்மது நபி ஒரு மாத காலம் எந்த மனைவியர்களின் வீட்டிற்கும் செல்லாமல் இருக்கிறார்.

 

புகாரி ஹதீஸ் :  5203  

அபூ ய அபூர் அப்துர் ரஹ்மான் பின் உபைத் அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது

நாங்கள் அபுள்ளுஹா (ரஹ்) அவர்களிடம் (ஒரு மாதத்திற்கு எத்தனை நாள் என்பது குறித்து) விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வரும் ஹதீஸை)க் கூறினார்கள். ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அழுது கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அருகில் அவரவர் குடும்பத்தினரும் இருந்தனர். நான் (மஸ்ஜதுந் நபிவீ) பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்றேன். பள்ளிவாசல் மக்களால் நிரம்பியிருந்தது. அப்போது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் வந்து, நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த மாடியறைக்கு ஏறிச் சென்றார்கள். (நபி (ஸல்) அவர்களுக்கு) சலாம் (முகமன்) சொன்னார்கள். ஆனால் யாரும் உமருக்கு பதில் சலாம் சொல்லவில்லை. மீண்டும சலாம் சொன்னார்கள். அப்போதும் அவர்களுக்கு யாரும் பதில் சலாம் சொல்லவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) சலாம் சொன்னார்கள். அப்போதும் யாரும் (உமர் (ரலி) அவர்களுக்கு) பதில் சலாம் சொல்லவில்லை. அப்போது உமர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, தங்கள் துணைவியரை (தாங்கள்) விவாக ரத்துச் செய்துவிட்டிர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை. ஆனால், ஒரு மாத காலம் (அவர்களை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் (ஈலாஉ) செய்தவிட்டேன் என்று பதிலளித்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்கள் இருபத்தொன்பது நாட்கள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு தம் துணைவியரிடம் சென்றார்கள்

 

Bukhari Volume 3, Book 43, Number 648:

The Prophet did not go to his wives because of the secret which Hafsa had disclosed to ‘Aisha, and he said that he would not go to his wives for one month as he was angry with them when Allah admonished him.

 

(அல்லாஹ் அவரை (நபியை) எச்சரிக்கை செய்த நிகழ்ச்சியில், ஹஃப்ஸா ரகசியத்தை ஆயிஷாவிடம் தெரிவித்ததால் கோபமடைந்த அல்லாஹ்வின் தூதர் ஒரு மாதகாலம் அவர்களிடம் (மனைவியர்களிடம்) செல்ல மாட்டேன் என்று கூறினார்)

 இவ்விஷயத்தில் ஹஃப்ஸா மீது மனவருத்தம் கொண்டு அவரை விவாகரத்து செய்ய நாடினார். இந்த விஷயங்கள் அல்லாஹ்வின் கவனத்திற்கு வருகிறது, அவ்வளவு எளிதில் விடுவானா?  ஜிப்ரீலை உடனே அனுப்புகிறான். ஜிப்ரீல் தலையீடு காரணமாக தலாக் சொல்வது தடுக்கப்பட்டது. நபிக்கு எதிராக செயல்பட்ட மனைவியர்களை கடுமையாக எச்சரித்தான்.  உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு உணவை எப்படி நீங்கள் ஹராமாக்கலாம்?  என்று உடனே வஹி அனுப்பி தேன் சாப்பிட வைத்தான்.

1. நபியே உம்முடைய மனைவியரின் திருப்திகளை நீர் நாடி அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன் மிகக் கிருபையுடையவன்.

2. (இத்தகைய) உங்களுடைய சத்தியங்களை முறிப்பதை அல்லாஹ் உங்களுக்கு திட்டமாகக் கடமையாக்கி இருக்கிறான். அல்லாஹ் உங்களுடைய எஜமான் – அவன் முற்றும் அறிந்தவன் ஞானமுள்ளவன்.

3. இன்னும் நபி, தம் மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகச் சொல்லிய நேரத்தை (நினைவு கூர்க) அதனை அவர் (அம்மனைவி மற்றொரு மனைவிக்கு) அறிவித்து, அல்லாஹ் அவருக்கு (நபிக்கு) வெளியாக்கிய போது, அவர் (நபி) அதில் சிலதை அறிவித்தும் மற்றும் சிலதை புறக்கணித்தும் விட்டார். அவர் அதனை அவருக்கு (தம் மனைவியரில் ஒருவருக்கு) அறிவித்த போது இதனை உமக்கு அறிவித்தவர் யார்? என்று (மனைவியரான) அவர் கேட்டார் முற்றும் அறிந்தவனும் (எல்லாவற்றையும்) தெரிந்தவனாகிய (அல்லாஹ்) எனக்கு அறிவித்தான் என்று அவர் கூறினார்.

4. (நபியின் மனைவியரான) நீங்கள் இருவரும் அல்லாஹ்வின்பால் (தவ்பா செய்து) மீண்டால் (அது உங்களுக்கு நன்மையாகும்) ஏனெனில் உங்களிருவருடைய இதயங்களும் அவ்வேளையில் திட்டமாக சாய்ந்து விட்டன; நீங்கள் இருவரும் (நபிக்கு) எதிராக உதவி செய்து கொண்டால், அப்போது நிச்சயமாக அல்லாஹ் அவருடைய உதவியாளனாக இருக்கிறான். இன்னும் ஜிப்ரீலும் முஃமின்களில் ஷாலிஹானவர்கள் அவருக்கு உதவியாளர்களாவார்கள். அதற்குப் பின்னும் மலக்குகள் உதவியாளர்களாவார்கள்.

(குர்ஆன் 66:1-4)

நபியிடம், அல்லாஹ் கொண்ட அன்பை சொல்லில் விளக்க முடியாது. ஆனால் அல்லாஹ்விற்கு அந்த சக்களத்தி சண்டையை நிறுத்தத் தெரியவில்லை. அல்லாஹ்வை இதை விட வேடிக்கையாக சித்தரிக்க முடியாது.  தேன் அனுமதிக்கப்ட்ட உணவாக இருப்பினும் கட்டாயமாக சாப்பிட வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லையே.  நபி தேன் அருந்த மாட்டேன் என்று கூறுவதில் என்ன ரகசியம் இருக்க முடியும்?

நபி தேன் அருந்த மாட்டேன் எனக் கூறியது வெளியானால், நபியின் செயல் முறைகளை பின்பற்றிவரும் சஹாபாக்களும் தேன் அருந்தாமல் விட்டுவிடுவார்களோ என அஞ்சியே இந்த செய்தியை ரகசியமாக பாதுகாக்குமாறு நபி கூறினார் என்று விளக்கமளிக்கின்றனர்.

தேன் கெட்ட வாசனையுடையது அல்ல என்பது அனைவரும் மிக நன்றாக அறிந்த செய்தி. மக்ஃபிர் என்பது கருவேல மரத்தின் பிசின் என்கிறார்கள் சில அறிஞர்கள் பேரீச்சை மரத்தில் உருவாக்கப்படும்  ‘கள்’ வகை மது என்கிறார்கள். எப்படியிருந்தாலும் தேனின் வாசனைக்கும் (Maghafir) மக்ஃபிர் -ன் வாசனைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மக்ஃபிர்  மிக மோசமான வாசனையுடையது. மனைவியர்கள் மக்ஃபிர் -ன் வாசனை வருகிறது என்று முஹம்மது நபி அவர்களிடம்,  பொய்யுரைத்தவுடன் அதை அப்படியே நம்பி தேன் அருந்துவதை கைவிடுவதாக முஹம்மது நபி  கூறினாராம். அல்லாஹ்வும் வஹீ அனுப்பி தேன் அருந்தச் செய்தானாம். அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஹதீஸ்கள் சிறிதும் பகுத்தறிவிற்கு பொருந்தவில்லை. தேனின் வாசனைக்கும் மக்ஃபிர்-ன் வாசனைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவரா முஹம்மது நபி? அல்லது மக்ஃபிர் சாப்பிட்டு இருந்தாரா?

மேற்கண்ட ஹதீஸ் கூறும் நிகழ்ச்சியின் அடிப்படையான விஷயம் என்னவென்றால் முஹம்மது நபி  அவர்களை, ஜைனப் பின்த் ஜஹ்ஷ் வீட்டில் அதிக நேரம் தங்குவதைத் தடுப்பது மட்டுமே நபியின் மற்ற மனைவியர்களான ஆயிஷா மற்றும் ஹப்ஸா ஆகியவர்களின் நோக்கம்;  தேன் அருந்துவதை வெறுக்கச் செய்வது அல்ல.  அதாவது கணவன் தனக்கு மட்டுமே சொந்தம் (Possessiveness) என்று எண்ணிய அப்பாவி மனைவிகளின் அன்பினால் ஏற்பட்ட சக்களத்திச் சண்டையே இந்நிகழ்ச்சி. இதில் வேறு எந்த சதித் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அல்லாஹ், மேற்கூறிய அடிப்படைக் காரணத்திற்கு சிறிதும் தொடர்பில்லாமல் மனைவியர்கள் சதி செய்து விட்டதாக கூறி, ஆயிஷா மற்றும் ஹப்ஸாவை எச்சரிக்கிறான். நபிக்கு உதவி செய்வதற்கு ஜிப்ரீல், முஃமின்களில் ஷாலிஹானவர்கள், மலக்குகள் என நிறைய பேர் உள்ளனர் என்றும் பட்டியலிடுகிறான். இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட “தேன் குடித்த” சம்பவத்தை என்னால் ஏற்க முடியவில்லை. அல்லாஹ்வே வஹீயின் மூலம் நபியின் மனைவியர்களை எச்சரிக்கை  செய்கிறான் என்றால், நிச்சயமாக வலுவான வேறு காரணம் இருக்க வேண்டும்.

நாம் முதலில் பார்த்த ஹதீஸில், ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம், அவர்களது வீட்டில் தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். இதை விரும்பாத ஆயிஷாவும் ஹப்ஸாவும் சதி செய்ததாக கூறியது. பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்…

புகாரி ஹதீஸ்  :  5268        

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவைகளாக இருந்தன. அஸ்ர் தொழுகையை முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியாரிடம் செல்வார்கள்: அவர்களில் சிலருடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு (ஒரு முறை) தம் துணைவியால் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சென்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்து விட்டார்கள். ஆகவே நான் ரோஷப்பட்டேன். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கிளாள் என்றும் அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது.…

தன்னுடைய வீட்டில், முஹம்மது நபி அதிக நேரம் தங்கி தேன் அருந்தியது ஹஃப்ஸாவிற்கு பிடிக்கவில்லையா? முஹம்மது நபி தன்னுடைய வீட்டிற்கு வருவதை ஹஃப்ஸா விரும்பவில்லையா? (என்னய்யா…!  குழப்பம் இது?)   66 : 1–4 குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் கண்டிப்பது யாரை?

புகாரி ஹதீஸ் -4913

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.

நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை. (ஒருமுறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ் முடித்துக் கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ்) ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள் தமது (இயற்கைத்) தேவை ஒன்றிற்காக அராக் மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள், தமது தேவையை முடித்துக்கொண்டு வரும்வரை நான் அவர்களை எதிர்பார்த்தபடி அவர்களுக்காக நின்றுகொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன். அப்போது நான் அவர்களிடம், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப் படுத்தும் வகையில்) கூடிப்பேசிச் செயல்பட்ட இருவர் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தாம் அந்த இருவர் என்று பதிலளித்தார்கள். ….

…பிறகு (பின் வருமாறு) தெரிவித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக* அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்களின் உரிமைகள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்துரிமை ஆகிய பங்குதனைஅவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது). (ஒருநாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி, நீங்கள் இப்படிச் செய்யலாமே என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், கத்தாபின் புதல்வரே (இப்படிச் சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர் கோபமாக இருந்தார்கள் என்று சொன்னார். உடனே நான் எழுந்து, அதே இடத்தில் எனது மேலங்கியை எடுத்துக்கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, என் அருமை மகளே, நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே (உண்மையா?) என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, அல்லாஹ்வின் மீதாணையாக (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு என்றhர். அதற்கு நான், அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை-ஆயிஷாவை-ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே என்று (அறிவுரை) சொன்னேன். பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, (நபி (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரான உம்மு சலமாவிடம் அறிவுரை கூறச்சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார். இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, கத்தாபின் புதல்வரே உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக உம்மு சல்மா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி கோப உணர்ச்சியை உடைத்தெறிந்துவிட்டார். ஆகவே நான், அவரிடமிருந்து வெளியேறி வந்துவிட்டேன். மேலும், அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (நபி (ஸல்) அவர்களது அவையில்) இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம். (அந்தக் காலக் கட்டத்தில் ஷாம் நாட்டு) ஃகஸ்ஸான் வம்ச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். திறங்கள், திறங்கள் என்று சொன்னார். (கதவைத் திறந்த) நான் ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா? என்று கேட்டேன். அதற்கவர், அதைவிடப் பெரியது நடந்து விட்டது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டு விலகிவிட்டார்கள் என்றார். உடனே நான், ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறிவிட்டு…

ஹஃப்ஸா செய்த விவாதத்தால், முஹம்மது நபி கோபமடைந்து ஒரு மாத காலம் மனைவியர்களை விட்டு விலகி இருந்ததுடன் அவர்களை விவாகரத்து கூறுமளவிற்கு   சென்று விட்டதாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.

தேன் குடித்ததற்கு இவ்வளவு  பெரிய பிரச்சினையா? மற்ற மனைவியர்களையும்  எதற்காக விலக்கி  வைக்க வேண்டும்?

தன்னுடைய மகள் உட்பட நபியின் மனைவியர்கள் அனைவரும் தவறு செய்து விட்டதாக நினைத்து அறிவுரை கூறச் சென்ற உமர் அவர்களை, “அல்லாஹ்வின் மீதாணையாக உம்மு சல்மா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி கோப உணர்ச்சியை உடைத்தெறிந்துவிட்டார்” என்று கூறுமளவிற்கு உம்மு சல்மா என்ன பதில் விளக்கத்தைக் கூற முடியும்?

ஒரு ஹதீஸ், ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம், அவர்களது வீட்டில் தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள் என்று கூறுகிறது. மற்றொன்று ஹஃப்ஸா வீட்டில் சற்று அதிக நேரம் தங்கியதாக கூறுகிறது. இன்னொரு ஹதீஸ், ஹஃப்ஸாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாக கூறுகிறது.

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் வீட்டில் அதிக நேரம் தங்கிவிடுவார்கள் என்று அறிவிப்பதும், ஹஃப்ஸா வீட்டில் சற்று அதிக நேரம் தங்கியதாக அறிவிப்பதும் ஆயிஷாதான். ஏன் இந்த ஆள்மாறட்ட குழப்பம்?

இதில் முக்கியமான ஒரு செய்தி மறைந்திருக்கிறது. 

66 : 1–4 வரையுள்ள குர்ஆன் வசனத்திற்கு உண்மையை தேடிய பொழுது இன்னொரு விளக்கமும்  கிடைத்தது. முஹம்மது நபி குடித்த தேன் எது? எங்கிருந்து வந்தது? இப்ன் ஸாத் –ன் தபாகத் தரும் விளக்கத்தைக் காண்போம்.

Reported by Ibn Sa’d in Tabaqat:

Waqidi has informed us that Abu Bakr has narrated that the messenger of Allah (PBUH) had sexual intercourse with Mariyyah in the house of Hafsah. When the messenger came out of the house, Hafsa was sitting at the gate (behind the locked door). She told the prophet, O Messenger of Allah, do you do this in my house and during my turn? The messenger said, control yourself and let me go because I make her haram to me. Hafsa said, I do not accept, unless you swear for me. That Hazrat (his holiness) said, by Allah I will not contact her again. Qasim ibn Muhammad has said that this promise of the Prophet that had forbidden Mariyyah to himself is invalid ? it does not become a violation (hormat). [Tabaqat v. 8 p. 223 Publisher Entesharat-e Farhang va Andisheh Tehran 1382 solar h (2003) Translator Dr. Mohammad Mahdavi Damghani]

(நபி, ஒவ்வொரு மனைவியின் வீட்டிற்கும் தினமும் செல்லும் வழக்கமுடையவர். அவ்வாறு ஹப்ஸாவின் வீட்டிற்கு வரும் முறையன்று, ஹப்ஸாவிடம், உனது தந்தையார் உமர் கத்தாப் உன்னை பார்க்க விரும்புவதாக கூறுகிறார்.ஹப்ஸாவும், நபியின் ஆணையை ஏற்று தந்தையை காணச் சென்று விடுகிறார். இதற்கிடையில் அடிமைப்பெண் மரியத்துல் கிப்தியாவுடன் கலவியில் ஈடுபட்டு விடுகிறார். சற்று விரைவாகவே வீடு திரும்பிய ஹப்ஸா (கதவு அடைக்கப்பட்டிருந்ததால்) வாயிலில் காத்திருக்கிறார், நடந்த நிகழ்ச்சியை உணர்ந்து கோபமடைகிறார். அவர் நபியிடம் கூறுகிறார், “அல்லாஹ்வின் தூதரே, என் வீட்டிலா இதைச் செய்தீர்கள் அதுவும் என்னுடன் (இருக்க வேண்டிய) முறையில்?”  ஹப்ஸாவை சமாதானம் செய்ய, வேறு வழியின்றி அல்லாஹ்வால் ஹலால் ஆக்கப்பட்ட மரியத்துல் கிப்தியா இனி தனக்கு ஹராம் எனக்கூறி ஹப்ஸாவை சமாதானம் செய்கிறார். அதற்கு ஹஃப்ஸா அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினால் தவிர என்னால் ஏற்க முடியாது  என்கிறார். வேறுவழியின்றி இனி மரியத்துல் கிப்தியாவுடன் தொடர்பு கொள்ள மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறார். இந் நிகழ்சியை யாரிடமும் கூறக்கூடாது எனவும் கூறுகிறார். ஆனால் ஹப்ஸா, தன் தோழியான ஆயிஷாவிடம் கூற விஷயம் வெளியாகிறது)

இதைக் கேள்விப்பட்ட மற்ற மனைவியர்களின் ஏளனப் பார்வையை முஹம்மது நபியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய மனைவியர்களுக்கு புத்தி புகட்டவே ஒரு மாத காலம் விலகியிருந்தார். விவாகரத்து செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

இந்த ஹதீஸைக் கூறிய வாகிதி ஒரு பொய்யர். எனவே இந்த ஹதீஸ் ஏற்புடையது அல்ல. தேன் குடித்த சம்பவமே சரியானது, அதுவே அறிஞர் பெருமக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹதீஸ் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம். 66:1-4 வரையுள்ள குர்ஆன் வசனங்களை சற்று கூர்ந்து கவனித்து அதன் பொருளைத் தெளிவாக உணர்ந்த பின், ஹஃப்ஸா வீட்டில் அதிக நேரம் தங்கியதாகக் கூறும் புஹாரியில் பதிவு செய்யப்பட்ட நம்பகமான ஹதீஸையும், அறிஞர்களால் பொய்யர் என புறந்தள்ளப்பட்ட வாகிதியால் கூறப்பட்ட ஹதீஸுடன் இணைத்து ஒப்பிட்டு பாருங்கள்.  ஹஃப்ஸா உட்பட மனைவியர்கள் அனைவரையும் மணவிலக்கு செய்யுமளவிற்கு வலுவான காரணம் எதனுடன் பொருந்துகிறது?

தேனா?  மரியத்துல் கிப்தியாவா? நீங்களே  சிந்தித்துப் பருங்கள். “தேன்” எனக் குறிப்பிடப்படுவது சங்கேத வார்த்தையே என்பதை நீங்களே அறியலாம்.

இருப்பினும் எங்களால் சங்கேத வார்த்தைகளையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது என்று கூறுபவர்களுக்காக, ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்டுள்ள புஹாரி ஹதீஸ் தமிழ்மொழிபெயர்ப்பில்  2468 ஆம் ஹதீஸின் 15 ஆம் அடிக்குறிப்பு மரியத்துல் கிப்தியா உடனான “ஜல்ஸா” நிகழ்ச்சியை உறுதி செய்கிறது என்பது கூடுதல் தகவல்.

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

 

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

6 நவ்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 11

 

சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகள்,  ஜிப்ரீல் என்ற வானவர் மூலமாக குர் ஆனின் வசனங்கள் சிறிது சிறிதாக முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. அவ்வாறு அருளப்பட்ட வசனங்களின் முழுமையான தொகுப்பு குர்ஆன். 

புகாரி ஹதீஸ் : 0003          

ஆயிஷா (ரலி) அவர்கள்  கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேதஅறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. (எனவே) அவர்கள் ஹிரா குகையில் தனித்திருந்து தம் வீட்டாரிடம் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுவந்தார்கள். அதற்காக (பலநாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். (அந்த உணவு தீர்ந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து அதைப் போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் பெற்றுச் செல்வார்கள். இந்நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்திய (வேத)ம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி அவர்களிடம் வந்து, ஓதுவீராக என்றார். நபி (ஸல்) அவர்கள், நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்று சொன்னார்கள் (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள் வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டு விட்டு ஓதுவீராக என்றார் அப்போதும் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதுவீராக என்றார். அப்போதும் நான் ஓதத்தெரிந்தவனில்லையே என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையாக கட்டித் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக அவனே மனிதனை அலக் (அட்டை போன்று ஒட்டிப் பிடித்துத் தொங்கும்) நிலையிலிருந்து படைத்தான். ஓதுவீராக உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி எனும் இறைவசனங்களை (96:1-5) அவர் ஓதினார். (தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்„) பிறகு (அச்சத்தால்) அந்த வசனங்களுடன் இதயம் படபடக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குப் போர்த்திவிடுங்கள் எனக்குப் போர்த்திவிடுங்கள் என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள் (சிரமப் படுவோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள் வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள் விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள் சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை) என்று (ஆறுதல்) சொன்னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் சென்றார்கள். -வரக்கா அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் (அரபு மற்றும்) எபிரேய (ஹீப்ரு) மொழியில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல்லாஹ்  நாடிய அளவிற்கு ஹீப்ரு  மொழியி(லிருந்து அரபு மொழியி)ல் எழுதுவார். அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.- அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், என் தந்தையின் சகோதரர் புதல்வரே உங்கள் புதல்வர் (முஹம்மத்) இடம் அவர் கூறுவதைக் கேளுங்கள் என்றார்கள். அப்போது வரக்கா நபி (ஸல்) அவர்களிடம், என் சகோதரர் மகனே நீங்கள் என்ன பார்த்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் விவரத்தை அவரிடம் சொன்னார்கள். (இதைக் கேட்ட) வரக்கா, (நீர் கண்ட) இவர்தாம், (இறைத்தூதர்) மூசாவிடம் இறைவன் அனுப்பிய வானவர் (ஜிப்ரீல்) ஆவார் என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, (மகனே) உம்மை உம் சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்த சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்? என்று கேட்க, வரக்கா, ஆம், நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுவப்பணி பரவலாகும்) நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவி செய்வேன் என்று சொன்னார். அதன் பின் வரக்கா நீண்ட நாள் இராமல் இறந்துவிட்டார். (அந்த முதல் வஹீயுடன்) வேத அறிவிப்பு (சிறிது காலம்) நின்றுபோயிற்று.

இவ்வாறாக அவ்வப்போது தேவைகளுக்கேற்ப தீர்ப்புகளாகவும், அனுமதிகளாகவும், விதிமுறைகளாகவும் எச்சரிக்கைகளாகவும் குர்ஆன் வசனங்கள் வஹீயாக  வெளிப்பட்டது.

முஹம்மது நபியிடம் கொண்டு வரப்பட்டது இறைவனின் கட்டளைகள்தான் என்பதற்கும் செய்திகளைக் கொண்டு வந்தவர் இறைவனின் தூதர்தான் என்பதற்கும் உள்ள ஆதாரங்கள் என்ன?

குர்ஆனின் வசனங்கள் நேடியாக மனிதர்களை வந்து அடையவில்லை. அல்லாஹ் கூறியதாக ஜிப்ரீல் என்ற வானவர் தன்னிடம் கூறியதாக முஹம்மது நபி கூறிக் கொண்டார். ஜிப்ரீலும் முஹம்மது நபியும் உரையாடியதை நேரடியாக கண்களால் கண்டவர்கள் ஒருவருமில்லை.

 Ibn Ishaq’s Sirat Rasul Allah, translated by Alfred Guillaume: The Life of Mohammed, OUP Karachi, Page.106-153)

        இத்தகைய திடீர்த் தோற்றங்களினாலும், அசரீரீ குரல்களினாலும் மிகுந்த மனக் குழப்பமடைந்து, வாழ்நாளின் ஏனைய பகுதிகளையெல்லாம் மெக்கா நகரின் முட்டாளாக கழிக்க விரும்பாத முஹம்மது, மலை உச்சியிலிருந்து குதித்து, தற்கொலை செய்துகொள்ள எண்ணினார்:

“இப்படிப்பட்ட சூழ்நிலையில், உலகிலேயே நான் மிகவும் வெறுத்ததெல்லாம் இது போன்றதொரு ஆவேச நிலையடையும் கவிஞன் அல்லது ஆவியின் ஆளுமைக்குட்பட்ட மனிதனையே. இனி நாசமாய்ப் போவேனாக என்று நினைத்துக் கொண்டேன். ஜின்னால் பீடிக்கப்பட்டவன் அல்லது பைத்தியக்கார கவிஞனென்று என்னை குரைஷிகள் ஏளனம் செய்ய அனுமதிக்க மாட்டேன்! மலைஉச்சியிலிருந்து வீழ்ந்து எனது உயிரைத் துறப்பேன், இந்தத் துயரநிலையிலிருந்து விடுதலை பெறுவேன்”

        முஹம்மது கூறுகின்றார்: “ஆகவே, இந்த முடிவை நிறைவேற்றும் வண்ணம் நான் மேலே செல்லலானேன். அப்போது பாதிவழியில், வானிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது. ‘ஓ முஹம்மதுவே! நீரே அல்லாஹ்வின் தூதர், நான்தான் ஜிப்ரீல்” என்றது.” அங்கேயே நான் நின்று கொண்டிருந்தேன், முன்னேயும் செல்லாமல் பின்னேயும் போகாமல். அந்த நேரத்தில் கதீஜா தன்னுடைய ஆட்களை மெக்கா நகருக்கு வெளியே அனுப்பி என்னைத் தேடிப் பிடித்து அழைத்து வருமாறு கூறியிருந்தார். இந்நிலையில், அவர் (ஜிப்ரீல்) என்னிடமிருந்து விலகினார், நானும் அவரிடமிருந்து மீண்டேன்”

        இத்தகைய ‘வஹீ வெளிப்பாடுகள்’ அடிக்கடி தொடர்ந்து ஏற்பட ஆரம்பித்த நிலையில், கதீஜாதான் அவரை ஆறுதல்படுத்தி, அவருக்கு ஏற்படும் வஹீ வெளிப்பாடு நிலைகளைப் பொறுத்துக் கொள்ளும் மனஉறுதியை முஹம்மதுவுக்கு வழங்கினார். இதையெல்லாம் விடவும் (கதீஜாவின்) முக்கியமானதொரு பங்களிப்பு என்னவென்றால், முஹம்மதுவுக்கே தமக்கு ஏற்படும் இந்த வஹீ குறித்த சந்தேகங்கள் இருந்த நேரத்தில், கதீஜா அவருக்கு தெம்பை ஊட்டி தன்னம்பிக்கை கொள்ளச் செய்தார்.

        கதீஜா, முஹம்மதுவுக்கு நம்பிக்கையூட்டியவிதம் இவ்வாறிருந்தது. (முதல் வஹிக்குப் பிறகு) முஹம்மது வீடு திரும்பியபோது கதீஜாவிடம் கூறினார்: “கவியான அல்லது ஜின் பீடித்த நான் நாசமாய்ப் போவேனாக!”. ஆனால் கதீஜாவோ, “அபுல் காசிமே அல்லாஹ்விடம் நான் தஞ்சமடைகின்றேன்! உமது நிலை அவ்வாறிருக்க வாய்ப்பில்லை. அல்லாஹ் உம்மை அந்த நிலைக்குத் தள்ள மாட்டான். உமது நேர்மை, நம்பகத்தன்மை, நற்பண்புகள், காருண்யம் ஆகியவற்றை அல்லாஹ் அறிவான். உண்மையிலேயே நீங்கள் எதையாவது கண்டிருக்கக் கூடும்” என்று கூறினார். அதற்கு முஹம்மது, “ஆம், நான் எதையோ கண்டது நிஜம்தான்” என்று பதிலளித்தார்.

        அடுத்தமுறை முஹம்மதுவுக்குள் அசரீரீ கேட்கும்போது தம்மிடம் சொல்லுமாறும், பின்னர் அது ஜிப்ரீலா அல்லது வேறு ஏதாவது வழக்கமான ஜின்னா என்று முடிவு செய்வோம் என்றும் அவர் முஹம்மதுவைக் கேட்டுக் கொண்டார்.

        அப்படியே மறுமுறை முஹம்மதுவுக்கு ஜிப்ரீல் காட்சி தந்தவுடன் “இதோ ஜிப்ரீல் வந்துவிட்டார்” என்று கதீஜாவை உடனே அழைத்தார்.  “எழுந்திருங்கள் !” என்று அவரை எழுப்பிய கதீஜா, “எழுந்து என் இடதுதொடைப் பக்கம் அமர்வீராக” என்று சொல்ல, அப்படியே அமர்ந்தார் முகம்மது. “என்ன இன்னும் அவரைக் காண்கிறீர்களா?” என்று கேட்க “ஆம்” என்றார் முகம்மது. “சரி, இப்போது வலதுதொடைப் பக்கம் வந்து அமர்வீராக!” என்று சொல்லி “இன்னும் உள்ளாரா?” என்று கேட்க “ஆம்” என்று பதில் சொன்னார் முஹம்மது.

        பின்னர் அவரைத் தம் மடியிலேயே வந்து அமர்ந்து கொள்ளுமாறு கதீஜா கேட்டுக்கொள்ள முஹம்மதுவும் அப்படியே செய்தார். மடியில் அமர்ந்து கொண்ட பின்னரும் ஜிப்ரீலைத் தொடர்ந்து காண்பதாகச் சொன்னவுடன், கதீஜா ஆடையை விலக்கினார். தம் அழகை வெளிக்காட்டி “இப்போது (ஜிப்ரீலைக்) காண்கிறீர்களா?” என்று கேட்க “இல்லை” என்றார் முகம்மது. “மகிழ்ச்சி கொள்ளுங்கள்  நீங்கள் கண்டது ஜிப்ரீலையே, சைத்தானை அல்ல!” என்று உறுதி செய்தார் கதீஜா.

        இதைத் தொடர்ந்து வர்ணிக்கும் இபின் இஷாக் இது குறித்து இரண்டம் நிலை ஹதீஸையும் சேர்த்துச் சொல்கிறார். அதன்படி கதீஜா நபியவர்களை உறவு கொள்ள அழைத்ததாகவும், அதைக் காண விரும்பாத ஜிப்ரீல் உடனே விலகிச் சென்றதாகவும்  அதைக் கேட்ட கதீஜா “இது உண்மையில் ஜிப்ரீலேயன்றி சைத்தானில்லை” என்று அறிவிக்கிறார் என அந்த ஹதீஸ் கூறுகிறது.

        அக்கால நம்பிக்கைப்படி, முஹம்மது கண்டது இச்சை மிகுந்த கெட்ட ஜின்னாய் இருக்குமாயின் அது கதீஜாவுடன் உறவு கொள்வதைக்  கண்டு களித்திருக்கும் என்றும், உலகவாழ்வை விரும்பாத ஜிப்ரீலுக்கு இக்காட்சியில் விருப்பமில்லாததால் நகர்ந்திருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

        தனது மனைவி நடத்திய இந்தச் சோதனையின் மூலம் தாம் கண்டது ஜிப்ரீலையா என்ற முஹம்மதின் சந்தேகம் தீர்ந்தது. இதன்மூலம் தாமே இறைவனின் தூதர் என்று நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்கிய முகம்மது அதன் பின்னர் தொடர்ந்து ஜிப்ரீலின் மூலம் வெளிப்பட்ட செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினார். இவை உதவியாளர்களால் தொகுக்கப்பட்டுப் பின்னர் குர்ஆன் என்ற வேத புத்தகமானது.

 

புகாரி ஹதீஸ் :        3217          

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கின்றார் என்று கூறினார்கள். நான், வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு – அவர் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (அல்லாஹ்வின் தூதரே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கூறுனேன். ஆயிஷா (ரலி) அவர்கள் நீங்கள் என்று நபி (ஸல்) அவர்களையே குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.

முஹம்மது நபி அவர்களின் வாக்குமூலத்தைத் தவிர வேறு ஆதரங்கள் ஒன்றுமில்லை…! இறைவன் தன்னுடைய கட்டளைகளை இன்றுவரை மனிதர்களுக்கு இப்படியோரு வலுவான சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலேயே கூறுவது ஏனென்று புரியவில்லை. சரி, வஹீ எப்படியெல்லாம் வெளிப்பட்டது?

புகாரி ஹதீஸ் :  3215         

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், தங்களுக்கு வஹீ (வேத வெளிப்பாடு) எப்படி வருகின்றது என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அவையெல்லாம் (இப்படித்தான்) சில வேளைகளில் வானவர் (ஜிப்ரீல்) என்னிடம் மணியோசையைப் போன்று (சத்தம் எழுப்பிய நிலையில்) வருவார். அவர் கூறியதை நான் நினைவில் (பாதுகாத்து) வைத்துக் கொண்ட நிலையில் அவர் என்னை விட்டுப் பிரிந்து விடுவார். இவ்வாறு வருவது எனக்கு மிகக் கடுமையான சிரமம் தரக் கூடியதாக இருக்கும். சில வேளைகளில் அந்த வானவர் ஒரு மனிதரைப் போன்று காட்சியளித்து என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக் கொள்வேன் என்று பதிலளித்தார்கள்.

ஆக, இன்றை சாமியார்களின் அருள்வாக்கு கூறும் முறையில்தான் குர்ஆன் வசனங்கள் வெளியாகியுள்ளது. இந்த அருள்வாக்கு முறையை அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட மாபெரும் அற்புதம் என்கிறார் முஹம்மது நபி.

 

முஸ்லீம் ஹதீஸ் :217,   அத்தியாயம்: 1, பாடம்: 1.70

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

“அற்புதங்கள் வழங்கப்படாத நபிமார்கள் இல்லை. அவ்வற்புதங்களைக் கண்ணுற்ற மனிதர்கள் (நபிமார்கள் கூறியவற்றை) நம்பினர். அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பான வஹீயைத்தான் எனக்கான அற்புதமாக வழங்கப் பட்டிருக்கிறேன். …”

 

அருள்வாக்கு சாமியார்கள் தங்களது சொந்த சரக்குகளை கடவுளின் பெயரில் அவிழ்த்து விடுவது நாம் தெளிவாக அறிந்த உண்மை. அருள்வாக்கு கூறுபவர்களுக்கும் முஹம்மது நபியின் “வஹீ”க்கும் உள்ள வேறுபாட்டை அறிய விரும்பினேன்.  சில குர்ஆன் வசனங்களையும் அதன் பின்னணிகளையும் ஆய்வு செய்ததில் நான் உணர்ந்து கொண்ட உண்மைகளைக் கூறுகிறேன்.

 

மனைவியின் மீது சந்தேகமும் வேதவெளிப்பாடும்

 

ஆயிஷா  அவர்களையும் வேறொரு ஆணுடன் இணைத்து புனையப்பட்ட செய்தி… (புகாரி 2661, 3388, 4141, 4750, 4757) (பெரிய ஹதீஸ்தான் வேறுவழியில்லை!)

புகாரி ஹதீஸ் -2661

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

…நபி (ஸல்)அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்ட போது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்துக் கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தெட்டுப் பார்த்த போது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன், அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்தி விட்டது. ஆகவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கின்ற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். ஆகவே, சிவிகையைத் தூக்கிய போது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பி விட்டு நடக்கலானார்கள். படையினர் சென்ற பிறகு நான் (தெலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர், நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன். ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ் ஸுலமீ என்பவர் படையின் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (ஆகவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், இன்னாலில் லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் – நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள், மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப்பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் பின் பை பின் ஹலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் நோயுற்று விடும் போது நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகின்ற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும் போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

…அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிதுமின்றியும் காலை வரை கழித்தேன். காலை நேரம் வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களையும் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வஹீ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா (ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன் என்று அவர்கள் கூறினார்கள்.  அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களோ  அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள் என்று கூறினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கின்றாயா என்று கேட்டார்கள். அதற்கு பரீரா (ரலி) தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய்விடுவார், வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும், அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை என்று பதில் கூறினார்….

 

….அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன். சிறிதும் உறங்கவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும் போது என் தாய் தந்தையர் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும் ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று கூறிவிட்டு ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில் அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான் என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்த போது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம் அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள் என்று சொன்னேன். அதற்கு என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம் அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள் என்று சொன்னேன். அதற்கு என் தாயார், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிகமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன். ஆகவே அல்லாஹ்வின் மீதாணயைக! நீங்கள் மக்கள் என்னைப் பற்றிப் பேசிக் கொண்டவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனத்தில் பதிந்து போய் அதை உண்மையென்று நீங்கள் நம்பி விட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நான் தங்களிடம் சொன்னால். …..நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்….. நீங்கள் அதை நம்பப் போவதில்லை, நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் தந்தையை (யஃகூப் (அலை) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது) (இதை) சகித்துக் கொள்வதே நல்லது நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும். (குர்ஆன் 12-83) பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும் திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகின்ற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்தவமுடையவளல்ல மிகச் சாதாரணமானவள் தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே – வேதவெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவன் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை வீட்டிலிருந்த எவரும் வெளியே செல்லவுமில்லை, அதற்குள் அல்லாஹ் நபி (ஸல்) அவர்கள் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்து விட்டான். உடனே (வேத வெளிப்பாடு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தெடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரை விட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்து விட்டான் என்று கூறினார்கள். என் தாயார் அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல் என்று கூறினார்கள். நான் மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன் என்றேன்….

 

ஆயிஷாவின் மீதான இந்தக் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டிற்கு முஹம்மது நபியின் மருமகன் அலீ பின் அபூதாலிப் அவர்களின் முடிவு வேறுவிதமாக இருந்துள்ளதாக ஹதீஸ்கள் கூறுகின்றன.

 

புகாரி ஹதீஸ் :4142   

இப்னு ஷிஹாப்(முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

அலீ (ரலி) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறியவர்களில் ஒருவர் என்று உங்களுக்கு செய்தி கிடைத்ததா என என்னிடம் வலீத் பின் அப்தில் மலிக் கேட்டார். நான், இல்லை (அலீ-ரலி-அவர்கள் அவ்வாறு கூறவில்லை.) மாறாக, தம் விஷயத்தில் அலீ (ரலி) அவர்கள் மௌனம் சாதித்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் தங்களிடம் தெரிவித்தார்கள் என்று உங்கள் குலத்ததைச் சேர்ந்த அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும், அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம் கூறினர் என்று பதிலளித்தேன். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் (மற்ற அறிவிப்பாளர்கள் இன்னும் இது பற்றி அதிக விளக்கம் கேட்டபோது) அவர்கள் பதிலளிக்கவில்லை. மேலும், சந்தேகத்திற்கு இடமளிக்காத முஸல்லிமன் – அலீ – ரலி – அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள் என்ற வார்த்தையையே வலீத் அவர்களுக்கு ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பதிலாகக் கூறினார்கள். (வேறெதையும் அதிகபட்சமாகக் கூறவில்லை).

(ஆயிஷாவின் மீது கூறப்பட்ட கள்ளத் தொடர்பு குற்றச்சாட்டை அலீ அவர்கள் மறுக்கவில்லை. மேலும் ஆயிஷாவை விவாகரத்து செய்ய முஹம்மது நபி ஆலோசனை செய்த பொழுதும் அலீ அதைத் தடுக்க விரும்பவில்லை. நான்தேடலின் ஆரம்பத்தில் கூறியதை நினைபடுத்திக் கொள்ளுங்கள். தனது மருமகனான அலீ அவர்களை எதிர்த்து போர்க்களம் சென்ற ஆயிஷவின் செயலுக்கு அடிப்படைக் காரணம் இதுதானா?)

 முஹம்மது நபி  அவர்களின் தோழர்கள் மனைவி ஜைனப், பணிப்பெண் பரீரா  இன்னும் பலர் ஆயிஷா  அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை, அகில உலகத்திற்கே அருட்கொடையாக வந்த நபி  அவர்களுக்கு தன் காதல் மனைவி ஆயிஷா  அவர்கள் மீது ஏன் இல்லாமல் போனது?. தன்னுடைய ரசூல்(தூதர்) தவறான முடிவை எடுக்க போகிறார் என்பதை இவ்வளவு சாட்சியங்கள் கிடைத்த பிறகே அல்லாஹ்விற்கும் தெரிகிறது.

24:11 நிச்சயமாக எவர்கள் (நபியின் மனைவியான ஆயிஷா மீது) அவதூறைக் கொண்டுவந்தார்களோ அவர்களும் உங்களில் ஒருகூட்டத்தினர்தாம்; அ(வ்வாறு நேர்ந்த)தை உங்களுக்கு தீமை என்று நீங்கள் எண்ண வேண்டாம். எனினும் (இறுதியில்) அது உங்களுக்கு நன்மைதான்; (அவதூறு சொன்ன) அவர்களிலிருந்து ஒவ்வொரு மனிதனுக்கும் பாவத்திலிருந்து அவன் சம்பாதித்தது (தண்டனை) உண்டு; அவர்களிலிருந்து எவன் இதனுடைய பெரும் பங்கை சுமந்து கொண்டானோ அவனுக்கு மகத்தான வேதனை உண்டு.

24: 12 இதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் தங்களுடைய மனங்களில் நல்லதையே எண்ணி, இது பகிரங்கமான அவதூறு என்று சொல்லி இருக்க வேண்டாமா?

24: 13 இதன் மீது நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அவ்வாறு சாட்சிகளைக் கொண்டுவராத பொழுது அவர்கள்தாம் பொய்யர்கள்.

24: 16  அதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது இதனை நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (யா அல்லாஹ்) நீ மகாத் தூய்மையானவன் இது கடுமையான அவதூறு என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?

மற்றவர்களை நோக்கி “இது பகிரங்கமான அவதூறு என்று சொல்லி இருக்க வேண்டாமா?“, “இது கடுமையான அவதூறு என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?” என்று கேட்கும் அல்லாஹ், இந்த அவதூறு செய்தியை உண்மையென நம்பி விவாகரத்து வரை சென்ற முஹம்மது நபியை அல்லவா முதலில் கேட்டிருக்க வேண்டும்?

முஹம்மது நபி மனைவியின் மீது சந்தேக குணமுடையவர் என்பதை சில ஹதீஸ்கள் உறுதி செய்கிறது

புகாரி ஹதீஸ் -5102

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறிவிட்டது போல் தோன்றியது. அந்த மனிதர் அங்கு இருந்ததை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், இவர் என் (பால்குடி) சகோதரர் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளைப் பால் அருந்தியிருந்தால்) தான் என்று சொன்னார்கள்

புகாரி ஹதீஸ் :  3330         

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்த பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டார்கள்.”

 ஊரார் ஆயிரம் குற்றச்சாட்டுகளைக் கூறினாலும், ஆயிஷாவின் மீது முதன்மையாக நம்பிக்கை கொள்ள வேண்டியவர் யார்?  முஹம்மது நபியா? இல்லை மதீனா வாசிகளா?

ஆயிஷாவின் மீது அவதூறு கூறப்பட்ட நிகழ்ச்சி தொடர்பான ஹதீஸ் பலவிதமான கேள்விகளை தூண்டுகிறது.

  •   ஆயிஷா இயற்கைத் தேவைகளுக்காக சென்றுள்ளார் என்பது படையினர் தெளிவாகவே அறிவார்கள். தங்களின் உயிருக்கும் மேலான தலைவரின் காதல் மனைவி தன்னுடைய தேவைகளை முடித்து திரும்பி விட்டாரா என்று உறுதி செய்ய மாட்டார்களா ?
  •   படைவீரர்கள் கவனக் குறைவுடன் செயல்பட்டனர் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். படைபரிவாரங்கள் மதீனா சென்றடையும் வரை, முஹம்மது நபி  அவர்கள் தன்னால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அழைத்து வரப்பட்ட மனைவியின் மீது கவனம் செலுத்த அளவிற்கு கவனக்குறைவை ஏற்படுத்தியது எது?
  •   ஒரு படை தன் பரிவரங்களுடனும், போரில் கைப்பற்றப்பட்ட  600 அடிமைகள், 2000 ஒட்டகங்கள், 5000 கால்நடைகள் இன்னும் ஏராளமான ஆயுதங்களுடன்  உள்ள முகாம் இடம் மாற தேவைப்படும் கால அவகாசம் மிக அதிகம். ஆயிஷா அவ்வளவு காலம் கடத்தியது ஏன்?
  •   மேலும்  இரவு தங்குவதற்காகவே படைமுகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஆயிஷா தற்செயலாக படையினரை தவறவிட்டதாக கூறுவது முரண்படுகிறது.
  •   அல்லாஹ்வும், முஹம்மது நபி  அவர்களும் உண்மையை உணர ஒரு மாதகாலம் கடத்தியது எதற்காக?

 

இவைகளுக்கு சுருக்கமான பதில்கள்

  •   நபிக்கு, ஆயிஷாவின் நினைவின்றி போனதற்கு  காரணம் புதிதாக கைப்பற்றப்பட்ட பெண்  ஜுவாரியா மீது ஏற்பட்ட மோகம்.
  • ஜுவாரியாவின் பக்கம் சாய்ந்துவிட்டார் என்று நபியின் மீது ஆயிஷா கொண்ட கோபம். ஏனென்றால் நபி – ஜுவாரியா சந்திப்பை ஆயிஷா முதலிலிருந்தே விரும்பவில்லை
  • ஆயிஷாவின் கற்பின் மீது, நபி  கொண்ட சந்தேகம்.
  • ஆயிஷாவின் மாதவிலக்கை வைத்து, அவரது பத்தினி தனத்தைப் பற்றி முடிவெடுக்க.

சில Instant வேதவெளிப்பாடுகள்

மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ என்னுமிடத்திலிருந்த கால்வாய் விஷயத்தில் முஹம்மது நபியின் (அன்சாரித்) தோழர் ஒருவருவருக்கும் முஹம்மது நபியின் உறவினரான ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் சச்சரவு ஏற்பட்டது. அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓடவிடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) ‘தண்ணீரைத்திறந்து விட) மறுத்துவிட்டார்கள். இந்தத் தகராறு முஹம்மது நபியிடம் பஞ்சாயத்திற்கு வந்தது.  முஹம்மது நபி கூறிய தீர்ப்பு ஸுபைருக்கு சாதமாக இருந்தது. தீர்ப்பில் அதிருப்த்தியடைந்த அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, ‘உங்கள் அத்தை மகன் என்பதால் அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் நிறம் மாறி சிவந்து விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, ‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகைளச் சென்றைடயும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றுகூறினார்கள்.

அல்லாஹ்வால் அமைதியாய் இருக்க முடியவில்லை உடனே இறக்கிவிட்டான் வஹீயை!

புகாரி ஹதீஸ்- 2359

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது

‘இறைவன் மீதாணையாக! ‘(முஹம்மேத!) உங்களுடைய இறைவன் மீதுசத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்ற பின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்’

(குர்ஆன் 04:65)

திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில் தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்” என்று ஸுபைர் (ரலி) கூறினார்கள்.

 

முஹம்மது நபி அவர்களின் மனைவியர்கள் தங்களின் இயற்கை தேவைகளுக்காக இரவு வேளைகளில் திறந்தவெளியில் வருவதை உமர் அவர்கள்  காண்கிறார்.  எந்தக் காரணத்திற்காகவும் பெண்கள் வெளியில் வருவதை அவர் விரும்பவில்லை.  அப்படியே வந்தாலும் அப் பெண்கள் தங்களை இனம் காண முடியாதவாறு  கடுமையாக மறைத்துக் கொள்ள வேண்டுமென்று  விரும்பினார்

புகாரி ஹதீஸ்- 4795

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள். என்று சொன்னார்கள். சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது ச்வதா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, அல்லாஹ்வின் தூதரே நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம சொன்னார்கள், என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேதவெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களது கரத்தில் அப்படியே இருந்தது. அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள்.


பெண்களைப் பர்தாவுக்குள் மூடிவைக்கப்பட வேண்டிய பொருள் என்ற உமர் நச்சரித்துக் கூறிய  கருத்துக்களையே அல்லாஹ், முஹம்மது நபி அவர்களிடம் வஹீயாக அனுப்பினான் (குர்ஆன் 33:33,59). அதன் காரணமாகவே சவ்தா பர்தாவுடன் கழிப்பிடத்திற்கும் செல்கிறார். அங்கும் விடாது பின்தொடர்ந்து வந்து பர்தாவைப்பற்றி கூறுவதிலிருந்து உமர் அவர்களின் நச்சரிப்பின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம். இவரது வேறு சில நச்சரிப்புகளும் உடனடியாய் வஹீயாக வெளிப்பட்டுள்ளது. அவைகளிலிருந்து ஒன்றைக் காணலாம்,

புஹாரி ஹதீஸ் : 1269

இப்னு உமர் (ரலி ).அவர்கள் கூறியதாவது

(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான்.அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்கேள! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும்” என்று கூறினார். உடேன நபி (ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, ‘(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்” என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடிய போது, உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களை இழுத்து, ‘நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்கைளத் தடுக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்தெதடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது’ எனக் கூறிவிட்டு, ‘நீர் நயவஞ்சகர்களுக்கு பாவமன்னிப்பு தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்பு தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை” என்ற (குரான் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே “அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் ஜனாஸா தொழ வேண்டாம்” என்ற (குரான் 09:84) வசனம் அருளப்பட்டது.

எனக்கு பிறகு ஒருவரை அல்லாஹ் நபியாக தேர்வு செய்தால், அது நிச்சயமாக உமராகத்தான் இருப்பார் என முஹம்மது நபி அவர்களும் பெருமை பாராட்டுகிறார்.

 

புஹாரி ஹதீஸ் : 2831

அல்பராஉ பின் ஆஸிஃப்  (ரலி ) கூறியதாவது.

”இறை நம்பிக்கை கொண்டோரில் (அறப் போரில் கலந்து கொள்ளாமல்) தங்கி விடுவோரும், இறைவழியில் தம் உடைமைகளாலும் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் சம அந்தஸ்து கொண்டவர்களாக முடியாது…” என்னும் வசனம் அருளப்பட்ட போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் இப்னுஸாபித் (ரலி) அவர்களை  அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார். (அருகில் இருந்த கண்பார்வையற்ற) அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) தம் கண்பார்வையில்லாத நிலை குறித்து முறையிட்டார்கள். அப்போது, ‘…. தகுந்த  காரணமின்றி ..” என்ற (வாசகம் சேர்ந்த) முழு வசனம் (குரான் 04:95)அருளப்பட்டது.

பார்வையற்ற ஒருவர் தனது இயலாமையைத் தெரிவித்த பின்னரே அல்லாஹ்விற்கு போருக்கு வராமலிருப்பதற்கு சில நியாயமான காரணங்களும் இருக்கிறதென்று தெரிந்ததா?

 

புஹாரி ஹதீஸ் : 4517

அப்துல்லாஹ் பின் மஃகல் (ரலி )கூறியதாவது.

நான் இந்தப் பள்ளிவாசலில் – அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாசலில் – கஅப்பின் உஜ்ரா (ரலி) அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக் கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், ‘உங்களுக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை” என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு ஓர் ஆடு கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை ‘ஸாவு’ உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். எனவே, இந்த (திருக்குர்ஆன் 02:196 வது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும்” என்று கூறினார்கள்.

மனிதர்களின் தலைகளில் பேன்களால் ஏற்படும் சிரமத்தைக்கூட அல்லாஹ் அறியவில்லையா? அவனது தூதர் பேன்களின் தொல்லையைப் பற்றி தகவல் கூறியவுடன் முடியை மழித்துக் கொள்ள அனுமதி. என்னுடைய கேள்வி என்னவென்றால் அல்லாஹ்விற்கு எதுவும் தெரியாதா? மிகச் சாதாரணமான இந்த மனிதர்கள் சொல்வதை மறுஒலிபரப்பு  செய்ய அல்லாஹ் எதற்கு? அற்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வேதவாக்குகள் வெளிப்படுகிறேதே என்று நினைக்க வேண்டாம் அருவருப்பான அனுமதிகளும் வேதவாக்குகளான அற்புதங்களும் உண்டு

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

 

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் குழந்தைத் திருமணம்

29 அக்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 10

 

நான் காணும் நடைமுறைக்கும் ஹதீஸ்களுக்கும் வேறுபாடுகள் தெரிந்தது. மேலும் ஹதீஸ்களை படிக்க அதிர்ச்சியில் உறைந்து போனேன். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருமண வாழ்க்கை தொடர்பான ஹதிஸ்கள் என்னை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஒரு ஹதீஸை சிறிதும் நம்ப முடியவில்லை. ஆயிஷா  அவர்களின் திருமண வயது ஆறு என்ற செய்திதான் அது.

அபூபக்கர் சித்தீக்  அவர்களிடம் அவருடைய மகள் ஆறு வயதே ஆன ஆயிஷா அவர்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியச் சென்று பெண் கேட்டார்.

புகாரி ஹதீஸ் 5081

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு ஹலால் – மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர்தாம் என்று சொன்னார்கள்.

மேலும் ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் ஆயிஷா அவர்களின் திருமண வயது ஆறு, தாம்பத்திய வாழ்கை ஒன்பது வயதில். முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகள் மட்டுமே (புகாரி 3894, 3896, 5133, 5134, 5156, 5158, 5160).

புகாரி ஹதீஸ் -3894

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்துக் கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரீஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்கு காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என் முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னை சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள்/ நன்மையுடனும் அருள் வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின) நற்பேறு உண்டாகட்டும் என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி) விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.

முஹம்மது நபி (ஸல்) ஆயிஷாவைத் திருமணம் செய்யும் பொழுது,  தன்னுடைய ஈரலின் ஒரு  பகுதி என்று முஹம்மது நபியால் வர்ணனை செய்யப்படும், அவரது மகள் ஃபாத்திமாவின் வயது பதினேழு என்பதையும் நினைவில் வைக்கவும்.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய அறுபத்தி மூன்றாம் வயதில் மரணமடைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. அதாவது ஆயிஷா  அவர்களை திருமணம் செய்யும் பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு வயது சுமார் ஐம்பத்தி இரண்டு. ஐம்பத்தி ஜந்து வயது முதியவர், தனது மகளை விட பதினொரு வயது சிறிய,  ஒன்பது வயதான ஒரு பெண் குழந்தையை புணர்வது சராசரியான மனநிலை கொண்ட மனிதர்களின் செயல் அல்ல. 

Why Did Prophet Muhammad (pbuh) Married Young Aisha Siddiqa (r.a.)? என்ற இணையதள  கட்டுரையிலிருந்து…

Two main theories are often advance by orientalists to attack the pure character of Prophet Muhammad (pbuh) on his marriage to Aisha (r.a.) at her young age.

A. He was a Paedophile.

B. He was involved in child abuse.

Let’s analyse each theory to dig out the truth, through the Guidance of Allah (SWT).

A. Prophet Muhammad (pbuh) married Aisha (r.a.) because he was a paedophile?

முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஒரு Paedophile (Psychosexual Disorder) மற்றும் Child abuse (Cruelty to Children) போன்ற மன வியாதிகளால் பாதிக்கப்பட்டவர் என்றும் குற்றம் சட்டப்படுகிறார்.

Paedophile – சிறுகுறிப்பு

Paedophile என்பது பருவ வயதை அடையாத சிறுமிகளிடம் உறவு கொள்வதற்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் மனநிறைவு காண்பது. வயது நிரம்பிய பெண்களிடம் திருப்தி அடையாதவர்  மற்றும் தன்னம்பிக்கை இல்லாதவர் பெரியவர்களை விட முதிர்ச்சி அடையாத சிறுமிகளிடம் உறவு கொள்வதால் துன்பம் குறைவானது என காண்பவர். இந் நோய்  பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம் பெண்கள் மிக மிக அரிதாக காணப்படுகிறது.                          

 Brittanica encyclopedia 2008

 

கண்டறியும் முறை:

குறைந்தபட்சம் தொடர்ந்து ஆறுமாதங்களுக்கும் மேலாக பருவம் அடையாத சிறுமிகளிடம் அல்லது குழந்தைகளிடம் உறவு கொள்ள தீவிரமாக  வற்பறுத்தல்,  ஈடுபடுவது தெடர்பான மனக்கண்வடிவம்  கொடுத்தல். இந்த வற்புறுத்தல் காரணமாக  அவர்களால் வெளிப்படையாக மனக்கவலை அடைவார். இத்தகையவருக்கு குறைந்தபட்சம் பதினாறு வயதும் அந்த சிறுமிகளை விட ஐந்து வயது பெரியவராக இருப்பார்.

 

DSM-III- R Diagnostic and Statistical Manual of Mental Disorders, rev. ed. 3,  (American Psychiatric Association).

 

Child abuse– சிறுகுறிப்பு

சற்றும் ஏதிர்பாரத தண்டனைகளால் அளவுக்கு மீறிய உடல் ரீதியான  வேதனையையும் துன்பத்தையும் அளித்தல். மிகக் கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பது. அவர்களுக்கு உணவு, உறைவிடம், மருத்துவம் என எதையும் சரிவர வழங்காதிருத்தல். அவர்கள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது அல்லது ஈடுபடுத்துவது.  இத்தகைய கொடுமைக்கு ஆளான சிறார்களுக்கு உடல் வளர்ச்சி, கற்கும் திறன், மொழி அறிவு மேலும் சில குறைபாடுகள் காணப்படும்

விவாதம்

Paedophile என்னும் மனநோய் கொண்டவர் சிறுமிகளையே தொடர்ந்து நாடுவர். ஆனால் முஹம்மது நபியின் மனைவிகளின் பட்டியலில், ஆயிஷாவைத் தவிர வேறு சிறுமியர்கள் இடம் பெறாத காரணத்தால்,  முஹம்மது நபி (ஸல்) அவர்களை, Paedophile என்ற மனநலை பதிப்படைந்தவர் என்று குற்றம் சாட்ட முடியாது என்றும்,  Child abuse-ல் கூறப்படும் பாதிப்புகள், ஆயிஷா அவர்களுக்கும் சிறிதும் பொருந்தவில்லை. நேர்மாறாக  தோற்றத்திலும், அறிவிலும், ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கினார். மேலும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலால் இறை அருள் பெற்றவராக இருந்தார் என்று  Why Did Prophet Muhammad (pbuh) Married Young Aisha Siddiqa (r.a.)? என்ற இணையதள கட்டுரையில் ஒரு மார்க்க அறிஞர் வாதிடுகிறார்.

முஹம்மது நபி  அவர்களின் Paedophilic செயல்பாடுகளுக்கு  ஹதீஸ்களிலிருந்து  மேலும் சில உதாரணங்கள்

Muhammad even wanted to marry a crawling baby-girl. Let us read what ibn Ishaq, the most authentic biographer of Muhammad wrote about this. 

(Suhayli, ii.79: In the riwaya of Yunus I. I recorded that the apostle saw her (Ummu’l–Fadl) when she was a baby crawling before him and said, ‘If she grows up and I am still alive I will marry her.’ But he died before she grew up and Sufyan b. al-Aswad b. ‘Abdu’l-Asad  al-Makhzumi married her and she bore him Rizq and Lubaba… (ibn Ishaq, 2001, p. 311). 

 

(தவழ்ந்து கொண்டிருந்த உம்முல் -ஃபதல் என்ற குழந்தையை கண்ட நபி கூறினார், “இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்”. ஆனால் அவள் வளரும்முன் அவர் (நபி) இறந்து விட்டார். (குழந்தை தப்பியது !)

Musnad Ahmad: 25636

Muhammad saw Um Habiba the daughter of Abbas while she was fatim (age of nursing) and he said, “If she grows up while I am still alive, I will marry her.” 

(அப்பாஸ் என்பவரின் மகள் உம்மு ஹபீபா என்ற குந்தையைக் கண்ட நபி (ஸல்), “இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்”. என்று கூறினார்)

நம்முடைய அன்றாட வாழ்விலிருந்து ஒரு உதாரணம்

நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீட்டிற்கு செல்லும் ஒருவர், அங்கு, உடைகள் ஏதும் அணியாத, ஆறு வயது பெண் குழந்தை கண்டால், எவ்விதமான கிளர்ச்சியும் அடைவதில்லை.  அதிக பட்சம், அந்த பெண் குழந்தையிடம் உடைகளை அணிந்து வருமாறு கூறுவார். இது தெளிவான மனநிலை கொண்ட சராசரி மனிதனின் செயல்.

மாறாக, உடைகள் ஏதும் அணியாத பெண் குழந்தையை கண்டு, ஒருவரது உணர்வுகள் கிளர்சியடைகிறதென்றால் அவர் நிச்சயமாக சராசரி மனநிலை கொண்டவர் அல்ல என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இன்றைய காலகட்டத்தில் ஐம்பத்து நான்கு வயது முதியவர் பருவமடையாத ஒன்பது வயது சிறுமியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால், சமுதாயத்தின் கடும் கோபத்திற்கு ஆளாவதுடன், சட்டத்தால் கடுமையாக  தண்டிக்கப்படுவார். முஹம்மது நபி மட்டும் ஏன் மன்னிக்கப்பட வேண்டும்?

 

முஷ்கின் என்ற பதினொருவயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த மோகன கிருஷ்ணன் என்ற காமுகனை ஒட்டு மொத்த தமிழகமும் சபித்தது ஏன்?

09.11.2010-ல் அவன், காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, மக்கள் வரவேற்று கொண்டாடியதை நினைவுபடுத்திப் பாருங்கள். மோகன் மீது,  தமிழக மக்கள் இந்த அளவிற்கு வெறுப்பை உமிழ காரணம் என்ன?

சின்னஞ்சிறு மலர்கள் பாலியல்வன்முறை செய்யப்பட்ட செய்திகளைக் கேள்விப்படும் பொழுது நாம் வேதனையால் துடிப்பது ஏன்?

உடல் நலக் குறைவிலிருந்து மீண்டு, ஒரு முற்பகல் வேளையில் சகதோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அழைத்து, தலை வாரி உனக்கு நன்மை உண்டாகட்டும் என வாழ்த்தி(?) தாம்பத்திய வாழ்கைக்காக அறைக்குள் அடைத்தனர். அப்பொழுது தன்னுடைய விளையாட்டு பொம்மைகளுடன் முதலிரவு (முதல்பகல் என்பதே சரி) அறைக்குள் சென்ற ஆயிஷா   அவர்களுக்கு வயது ஒன்பது. பிறகு முஹம்மது நபி  அவர்கள் வந்தார் ஆயிஷா அவர்களுக்கு ‘அதிர்ச்சியளித்தார்’ என்பதும் ஆயிஷா  அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்.

Sahih Muslim 2:3310, 3311, Page716

‘A’isha (Allah be pleased with her) reported that Allah’s Apostle (may peace be upon him) married here when she was seven years old, and she was taken to his house as a bride when she was nine, and here dolls were with her: and when he (the Holy Prophet) died she was eighteen years old.”

அறைக்குள் நிகழப்போவதை அறிந்திருந்தால் விளையாட்டு பொம்மைகளை ஆயிஷா கொண்டு சென்றிருப்பாரா? (தன்னுடன் பொம்மைகளை வைத்து விளையாட ஒரு தாத்தா கிடைத்து விட்டதாகவே எண்ணியிருப்பார். ஆனால் முஹம்மது நபி விபரீதமான, வினோதமான பொம்மையை வைத்து விளையாடுவார் என்பதை ஆயிஷா எதிர்பார்க்கவில்லை. எனவேதான் இச்சம்பவத்தை “அதிர்ச்சியளித்தார்” என்று குறிப்பிடுவதாக நினைக்கிறேன்) வயது முதிர்ந்த ஒருவர் சிறுமியின் மேல் மோகம் கொள்வது விபரீதமாகத் தெரியவில்லையா?.  முஹம்மது நபி  அவர்கள் ‘அதிர்ச்சியளித்த’ பொழுது ஆயிஷா அவர்கள் பருவம் அடைந்திருந்தார்களா?.

 புஹாரி ஹதீஸ் : 6130

ஆயிஷா  (ரலி)  கூறுகிறார்,

நான் (சிறுமியாக இருந்தேபாது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச்சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்கைளக் கண்டதும் தோழியர்(பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்)அவர்கள் என் தோழியைர என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன்(சேர்ந்து) விளையாடுவார்கள்.

 (பொம்மைகள் வைத்து விளையாடுவது தடை செய்யப்பட்டது. ஆனால் ஆயிஷாவிற்காக, சின்னப் பெண்ணாக இருந்ததாலும், பருவமடையாதவர் என்பதாலும் அச்சமயம் அனுமதிக்கப்பட்டிருந்தது) (Fateh-al-Bari page 143, Vol.13)

 

 Islamic Q&A வின் பதில்

“. . . and for those who have no courses [periods] [(i.e., they are still immature) their ‘iddah is three months likewise, except in case of death] . . .” [al-Talaaq 65:4]

 

is an indication that it is permissible to marry girls below the age of adolescence. This is a good understanding, but the aayah makes no specific mention of either the father or the young girl. It could be said that the basic principle concerning marrying children is that it is forbidden unless there is specific evidence (daleel) to indicate otherwise. The hadeeth of ‘Aa’ishah states that her father Abu Bakr married her off before the age of puberty, but there is no other evidence apart from that, so the rule applies to all other cases.

Al- Muhallab said: “[The scholars] agreed that it is permissible for a father to marry off his young virgin daughter, even though it is not usually the case to have intercourse with such a young woman.”

(The above was summarized from Fath al-Baari Sharh ‘ala Saheeh al-Bukhaari)

அன்றைய காலத்தில் சராசரியாக பதினேழு வயதில் பெண்கள் பருவம் அடைந்திருக்கிறார்கள் என்பதும்  மார்க்க அறிஞர்களின் கருத்து. சிறுவயதில் பருவமடைவது தற்காலத்திலேயே மிக அதிகமாக காணப்படுகிறது. உடல் வளர்ச்சியைத் தூண்டும் ரசாயணம் கலந்த உணவு வகைகளே இதற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. ஒன்பது வயதில்  ஆயிஷா  அவர்கள் பருவம் அடைந்திருந்தார்கள் என்று உறுதியாக கூறமுடியுமா?. அவர் பருவமடைந்திருக்கவில்லை என்றே ஃபதே-அல்-பாரியின் விளக்கம் கூறுகிறது?

குர் ஆன் 65:4 பருவம் அடையாத பெண்களை திருமணம் செய்து கொள்ளவும், அவர்களுடன் தாம்பத்தியம் கொள்ளவும் அனுமதிக்கிறது.

திருமணத்திற்கான வயதெல்லை? 

பெண்களின் திருமண விடயத்தில் இஸ்லாம் கட்டாயப்படுத்துவது பெண்ணின் சம்மதத்தினையும் அப்பெண்ணின் பொறுப்புதாரியின் (தகப்பன்) அங்கீகாரத்தையும் மட்டுமே இவ்விரண்டு சம்மதங்களும் ஒருங்கே கிடைப்பதால் இஸ்லாமிய திருமணத்தின் மூலம் எந்த பெண்ணுக்கும் எந்த காலத்திலும் அநீதி இழைக்கப்பட நூலளவும் வாய்ப்பில்லை.

விலைமாது என்றாலும் அவளின் சம்மதமின்றி கூடினால் அது வன்கலவிதான் இது ஒரு நியதி. ஆறு வயது குழந்தைக்கு திருமண வாழ்க்கையைப் பற்றியும், ஆண்-பெண் புணர்ச்சியைப் பற்றியும் என்ன தெரியும்? ஆறு வயது சிறுமியிடம் திருமணத்திற்கும், அவளுடன் கலவியில் ஈடுபடவும் எப்படி சம்மதம் பெற்றிருக்க முடியும்? (இறைவனே அறிவான்!).

ஒன்பது வயதான ஆயிஷா அவர்களின் முழு சம்மதத்துடன்தான் ‘அதிர்ச்சியளித்ததாக’ எந்த விதமான செய்தியும் இல்லை. மிகச்சரியாக சொல்வதென்றால், ஒன்பது வயதான ஆயிஷா  வன்கலவிக்கு ஆளாக்கப்பட்டார் என்பதே உண்மை.

அபூபக்ர் அவர்களின் அங்கீகாரம் முதலில் மறுக்கப்பட்டது ஏன்?

நபி  அவர்கள், ஆயிஷா  அவர்களுடன் தம்பத்திய வாழ்க்கையைத் துவங்குவதற்கு, அபூபக்ர் வர்களின் அங்கீகாரம் முன்று வருடங்கள் தாமதப்பட்டது ஏன்?

முஹம்மது நபி, ஆயிஷாவை மணமுடித்துத் தருமாறு கேட்டவுடன், அதற்கு அபூபக்ர் உடனே சம்மதிக்கவில்லை என்று  துவக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த இந்த ஹதீஸை சற்று கூர்ந்து கவனிப்போம்,

புகாரி ஹதீஸ் 5081

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். …

 

பிறப்பால் சகோதரர்களாக  இருப்பவர்களுக்கும், கொள்கைகளின் அடிப்படையில் சகோதரர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறியாதவரா அபூபக்கர்? முஸ்லீம்களுக்குள் திருமணபந்தமே கூடதென்று நினைத்து விட்டாரா?

“ஆம்” என்று கூறினால், இஸ்லாமிய வரலாற்றில்  அபூபக்கரை விட ஒரு முட்டாளை நாம் காண்பது அரிது. (அபூபக்ர், தனது நண்பர் முஹம்மது நபியை தனது உடன்பிறந்த சகோதரராகவே நினைத்திருக்கிறார் ஆனால் முஹம்மது நபியின் பார்வைதான் வேறுவிதமாக இருந்திருக்கிறது)

இல்லை என்று கூறினால், எல்லாம் தெரிந்தும் அவர் எதற்காக அப்படிக் கூற வேண்டும்?

முஹம்மது நபியின் கோரிக்கையால் அதிர்ச்சியடைந்து, எப்படி மறுப்பதென்று தெரியாமல் இவ்வாறு அவர் மழுப்ப முயற்சித்திருக்கிறார். வேறு வழி தெரியததால் தன் மகள் மிகச் சிறியவளாக இருக்கிறாள் எனவே மூன்று ஆண்டுகள் கழித்து அவள் வளர்ந்தவுடன் தம்பத்திய வாழ்க்கையைத் துவங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.

அபூபக்ர் அவர்களின் கோரிக்கையை நபி  அவர்கள் பெருந்தன்மையுடன்(?) ஏற்றுக் கொண்டார். அபூபக்ர் அவர்களின் கோரிக்கை மட்டும் இல்லையென்றல்…?

எழுதுவதற்கு எனது கைகள் கூசுகின்றன. இருப்பினும், உண்மைநிலையை விளக்க எனக்கு வேறு வழிதெரியவில்லை. முக்கியமான “அந்த”செயலுக்கு மட்டுமே மூன்றாண்டுகள் கால அவகாசம் பொருந்தும். சில்மிஷங்களும் “தொடைவேலைகளும்” இடைப்பட்ட மூன்றாண்டுகளில் நிழ்ந்துள்ளதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. எனவே பருவ வயதடையாத சிறுமிகளிடமும் சின்னஞ்சிறிய குழந்தைகளிடமும் அவர்களின் கணவர் என்ற தகுதியுடையவர்,  இத்தகைய சில்மிஷங்களில் ஈடுபடுவது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டதே என பிரபல ஷியா பிரிவு தலைவர் அயத்துல்லாஹ் கோமேனி  தனது ஃபத்வாவில் கூறுகிறார்.

‘அதிர்ச்சியளித்த’ நிகழ்ச்சி ஆயிஷா    அவர்களின் பெற்றோர்களின் முழு சம்மதத்துடனே நிகழ்ந்தது, பின்நாளில் ஆயிஷா அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். இதில் தவறொன்றுமில்லை என்றால், அகில உலகிற்கும் அழகிய முன் மாதிரியான  நபி   அவர்களின் அழகிய வழி முறை மூடி மறைக்கப்பட்டது ஏன்? பின்பற்ற வலியுறுத்தி பிரச்சாரம் ஏன் மேற்கொள்ளவில்லை?. நபி   அவர்களின் இந்த வழி முறையைப்பற்றி பகிரங்க மேடையில் விவாதிக்க முடியுமா? யாருடைய கருத்து சரியென்பதைக் கண்டறியதை இதைப்பற்றி ஒரு பொதுவிவாதம் நடத்துவதற்கு என்ன தயக்கம்?

முஹம்மது நபியின் வற்புறுத்தல் காரணமாகவே முஹம்மது நபி-ஆயிஷா திருமணம் நிகழ்துள்ளது என்பது ஹதீஸ்களின் மூலம் மிகத் தெளிவாக உறுதிபடுத்தப்பட்ட செய்தியாகும். ஆனால் சிறிது கூட வெட்கமில்லாமல்  எப்படி ஒரு பொய்யை  கூறுகின்றனர் என்பதை பாருங்கள்.

நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….

என்னதான் தனது நண்பர் அபூபக்கர் விரும்பினாலும் சின்னப் பெண் என்பதால் முஹம்மத் இந்த திருமணத்தை மறுத்திருக்கலாமே… என்ற சந்தேகம் கூட எழலாம். ஆய்ஷா போன்ற ஒரு பெண் தேவை என்பதை முஹம்மத் அவர்கள் உணர்ந்ததால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

 

தெளிவான ஹதீஸ் ஆதாரங்களையும், தர்க்கரீதியான வாதங்களையும் அறிந்து கொண்டே மீண்டும், மீண்டும் உண்மையை மறைக்க முயலும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் இட்டுக்கட்டலுக்கும், நம்பகத் தன்மைக்கு இது ஒரு உதாரணம்.

ஆயிஷா அவர்கள் வயது குறைவாக இருந்தாலும், திருமண வாழ்க்கைக்கு ஏற்றவாறு உடல் முழுவளர்ச்சியடைந்து இருந்தது என்றும் வாதிடுகின்றனர். ஆயிஷா அவர்கள் தான் மிகச்சிறிய பெண்ணாகவும் மிகவும் எடை குறைவாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார் (புகாரி 2661, 3388,4141,4750,4757)

 

புகாரி ஹதீஸ் -2661

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

   …..என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று நான் வழக்கமாக சவாரி செய்கின்ற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். ஆகவே, சிவிகையைத் தூக்கிய போது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும் நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன்.

 

இச்சம்பவம் நிகழும்பொழுது சுமார் 13 வயது இருக்கும். அப்படியானால் ஒன்பது வயதில் எப்படி இருந்தருப்பார் என்று கற்பனை செய்துபாருங்கள்.

திருமணத்திற்கான  வயதெல்லை? 

நய வஞ்சகர்களால் அவதூறு பேசப்படுமளவு முழுமையாக வளர்ந்துள்ளார்கள்.

இவ்வாறான பிரச்சனை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஒரு சிறுவனை ஆயிஷா (ரலி)அவர்களுக்கு வழித் துணையாக நபி (ஸல்) அனுப்புகிறார்கள். சிறுவனுக்கும் ஆயிஷா (ரலி)அவர்களுக்குமான தெளிவான வித்தியாசத்தை இது காட்டுகிறது.

“இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், ‘என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்’ என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில்விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி (ஸல்)  அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.” [புஹாரி :4757]

இன்னும் அதிகமாக அவர்களது அறிவுத்திறமையை இச்சம்பவம் எடுத்துரைக்கிறது

 

அவதூறு பேசப்படுவதையும், சிறுவனை வழித்துணையாக பெற்றதும்  உடல்வளர்ச்சியின்  அளவுகோலாக பார்க்கலாமா? அவதூறு செய்தியை நபி  உண்மையென நம்புவதை உணர்ந்த ஆயிஷா அவர்கள், இறைத்தூதர்  அவர்களிடம், ‘என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்’ என கூறுவதை அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடாக எவ்வாறு காணமுடியும்? இதில் என்ன அறிவுத்திமை இருக்கிறது?

திருமணத்திற்கான  வயதெல்லை? 

முதலில் இத்திருமணம் மூலம் ஆயிஸா (ரழி) அவர்கள் வாயிலாக ஏக இறைவன் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகளை எமது அறிவிற்கு எட்டிய மட்டும் காண்போம்.

நபி (ஸல்) அவர்களுடைய மனைவிகளில் ஆயிஸா (ரழி) அவர்கள் மட்டுமே எழுதத் தெரிந்த கல்வியறிவுள்ளவர்கள் என்பதனால் இத்திருமணத்தின் பலன்களை இஸ்லாம் இன்றளவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது .(இஸ்லாத்திற்கு முன்னைய அறியாமைக்கால பெண்களிடம் கல்வியறிவு ஓரிருவரைத்தவிர இருந்ததில்லை.

ஹதிஸ்கள் என அறியப்படும் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை அதிகம் அறிவித்தவர்களில் இவரும் ஒருவராகும்.

பெண்ணியல் சட்டங்களை நபி (ஸல்) அவர்களிடம் பெற்று அறிவித்தவர்களில் இவரே முதன்மை இடத்திலும் உள்ளார்.

ஆறு வயது  குழந்தைக்கு,  கல்வியில் என்ன புலமை இருக்க முடியும்?  ஆயிஸா  அவர்களைத் திருமணம் செய்கின்ற வேளையில் இஸ்லாம் ஓரளவு நிலை நிறுத்தப்பட்டு இருந்தது. பலர் முழுமையாக இஸ்லாத்தில் இருந்தனர் அவர்களில் கல்வியறிவு பெற்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரும் இல்லையா? என்ற கேள்விக்கு திருமணத்திற்கான வயதெல்லை?  ஆசிரியரின் பதில்

 

முதலில் இத்திருமணம் மூலம் ஆயிஸா (ரழி) அவர்கள் வாயிலாக ஏக இறைவன் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகளை எமது அறிவிற்கு எட்டிய மட்டும் காண்போம். (அதிலொன்றே)

பெண்ணியல் சட்டங்களை நபி(ஸல்) அவர்களிடம் பெற்று அறிவித்தவர்களில் இவரே முதன்மை இடத்திலும் உள்ளார். ( மற்றவைகளை இறைவனே அறிவான்.)

ஒரு மனைவி தன் கணவரின் செயல்பாடுகளை தெரிவிப்பது மிகவும் சாதரணமான ஒரு நிகழ்வு. இதை உலகமகா அறிவுகூர்மை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. பிறப்பால் முஸ்லீமான ஒரு பெண்ணை மணக்க விரும்பினார். முஹம்மது நபி  அவர்களின் காலத்தில் பிறப்பால் யாரும் முஸ்லீமாக இருக்கவில்லை(?) முஹம்மது நபி  அவர்கள் உட்பட.   எனவே ஆயிஷா அவர்களை திருமணம் செய்தார் என்று வாதிடுகின்றனர்.  இவர்கள்  மார்க் அறிவு அல்லது பகுத்தறிவுடன்தான் வாதிடுகிறார்களா என தெரியவில்லை.  பிறப்பால் முஸ்லீம் ஆகிறவர் சிறந்தவரா? அல்லது அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையால் முஸ்லீம் ஆகிறவர் சிறந்தவரா? இதைக் கூட நபி  அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.

ஆயிஷா  அவர்களின் அழகையும், வல்லமைமிக்க நினைவாற்றலையும், அறிவு கூர்மையையும் கண்டுவியந்து அவர் மேல் விருப்பம் கொண்டார். மார்க்கத்தை முழுமையாக கற்பித்து முழுமையான முஸ்லீமாக, பின்வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக  உருவாக்கவே ஆறு வயது குழந்தையை திருமணம் செய்தார் என்றும் ஒரு விளக்கம். ஆனால் ஆயிஷா அவர்கள் அறிவித்த பல ஹதீஸ்களைக் காணும் பொழுது அறிவுகூர்மைக்கு பதிலாக வெகுளித்தனமே தெரிகிறது. மேலும் அவர் அறிவித்த ஹதீஸ்களில் பல “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்ற வகையைச் சேர்ந்தது.

அன்றாட வாழ்வில் மிக திறமையான அறிவுகூர்மையான பல சின்னஞ்சிறு சிறுமிகளைக் காண்கிறோம். ஒரு ஐம்பது வயது மனிதர் அத்தகைய சிறுமிகளைக் கண்டு வியந்து தனக்கு அந்த சிறுமியை தனக்கு திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்?

அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுடன் தனக்கு இருந்த நெருக்கமான நட்பை மேலும் வலுப்படுத்த ஆயிஷா  (ரலி)  அவர்களை திருமணம் செய்ய விரும்பினார்.

நபி அவர்களும் அபூபக்கரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். சகோதரர்களைப் வாழ்ந்தவர்கள். இத் திருமண உறவு மட்டுமே அவர்களது நட்பை நீடிக்கச் செய்யும் என்று வாதிடுவது முட்டாள்த்தனமாக இருக்கிறது. உணர்வுகளின் அடிப்படையில்  நபி, ஆயிஷாவை தன் (சகோதரரின்) மகளென்றே கூறியிருக்க வேண்டுமே தவிர அவரது ஆறு வயது பெண் குழந்தையை மனைவியாக காண்பது அபூபக்கர் சித்தீக் அவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம்.

எந்த இடத்தில் உறங்க வேண்டும் என்ற முதிர்ச்சி கூட இல்லாத ஒரு சிறுமியை வதந்திகளை உண்மையென நம்பி சந்தேகப்படுகிறார், சிறுமியான ஆயிஷா  அவர்களை விட்டு நீண்ட நாட்கள் விலகியிருக்கிறார். இறுதியில் ஆயிஷா  அவர்களை மணவிலக்கு செய்ய முடிவு செய்து தோழர்களுடன் ஆலோசிக்கிறார்.

 

ஆயிஷா  அவர்களையும் வேறொரு ஆணுடன் இணைத்து பேசப்பட்ட செய்தி…. (இதைப்பற்றி விரிவாக பின்னர் காணலாம்)                       

(புகாரி 2661,3388,4141,4750,4757)

எனவே ஆயிஷா அவர்களை திருமணம் செய்தது அற்பமான உடல் தேவைகளுக்காக மட்டுமே!

புகாரி ஹதீஸ் -2581

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

….. அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனைதராதே. ஏனெனில் ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு)எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்….

நபி  அவர்களின் இந்த வாக்குமூலம் உங்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கவில்லயா? (அல்லாஹ்வின் வஹீ (வேதவாக்கு) படுக்கையறையிலும், கம்பளி போர்வைக்கு அடியில், ஆயிஷாவுடன்  “……” இருக்கும் போதும் விடாது பின்தொடர்வதன் மர்மம் என்னவோ?)

நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….

முஹம்மத் அவர்கள் முடித்த பல்வேறு திருமணங்களில் ஆய்ஷா மட்டுமே கன்னிப் பெண். மற்ற அனைவரும் இறைத்தூதரின் வயதுக்கு ஒப்பவர்கள் – சிலர் அவர்களின் வயதை விட அதிக வயதை அடைந்தவர்கள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணுடன் அவர்கள் இல்லறத்தில் சேராமல் போயிருந்தால் அவர்களின் ஆண்மையில் கூட சந்தேகம் எழும். இந்த திருமணத்தின் வழியாக அத்தகைய சந்தேகம் எழாமல் போயிற்று.

உண்மையான வரலாற்றுச் செய்திகளை அறிந்தவர்களால் மட்டுமே இதைப் போன்ற அபாண்டமான புளுகு மூட்டைகளை இனம்காண முடியும். முஹம்மது நபியின் மனைவியர்களின் அழகு, வயது மற்றும் நபி அவர்களின் பாலியல் திறமைகளைப் பற்றியும் முந்தின அத்தியாயத்தில் நான் விளக்கியிருப்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இவர்களது விளக்கத்தின் அபத்தங்களை நீங்களே அறிந்து கொள்ளலாம். மேலும் நபி  அவர்கள் தனது ஆண்மையை நிரூபிக்கவே சிறுமியுடன் வாழ்ந்தார்கள் என்கிறார்கள். இவர்கள் இதைப்போன்ற முதிர்ச்சியற்ற விளக்கங்களை என்று நிறுத்துவார்கள்?

திருமணத்திற்கான வயதெல்லை? 

 இறைவனது ஏற்பாடே ஆயிஸா (ரழி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமான திருமணம் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. இந்த ஆதாரங்களைக்கொண்டு இவ்வேற்பாட்டினைச் செய்த இறைவனை ஆராய முற்பட வேண்டுமே தவிர அவனது சட்டங்களை ஆராய்வது வீணான கால விரயம் என்றே நான் கருதுகிறேன்.

 புகாரி ஹதீஸ் -7012

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள் உன்னை நான் மணமுடிபதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன். (முதல் முறை) வானவர் பட்டுத் துணி ஒன்றில் உன்னைச் சுமந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் அவரிடம் (அந்தத் துணியை) விலக்குங்கள் என்று சொன்னேன். அவர் விலக்கினார். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான் என்று சொல்லிக்கொண்டேன். பிறகு (இரண்டாம் முறையாக) உன்னை வானவர் பட்டுத் துணி ஒன்றில் சுமந்துகொண்டிருப்பதைக் (கனவில்) கண்டேன். அப்போது நான் (இத்துணியை) நீக்குங்கள் என்றேன். அவர் நீக்கினார். அது நீதான். அப்போதும் நான் (மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான் என்று சொல்லிக்கொண்டேன்

(புகாரி 5078,  5125)

(நிச்சயமாக இது கால விரயமல்ல…! வரலாற்றையும், மார்க்கச் சட்ட விளக்கங்களையும் மட்டுமே தெரிந்து கொள்ள விரும்பிய என்னை, ஆயிஷாவின் திருமண வாழ்க்கை தொடர்பான ஹதீஸ்களே இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியது. மார்க்க அறிஞர்களின் மழுப்பலான பதில்களும், அர்த்தமற்ற அச்சுருத்தல்களும் என் ஆராய்ச்சியை தீவிரப்படுத்தியது, பல உண்மைகளை உணர வைத்தது)

ஆழ் மனதில் புதைந்துள்ள நினைவுகளும், ஆசைகளும் கனவுகளாக வெளிப்படுகின்றன என்பது நாம் நன்றாக அறிந்த செய்தி. நபி  அவர்கள்,  ஆயிஷாவை மணமுடிபதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன் என்கிறார்.  ஆயிஷாவின் திருமண வயது ஆறு என்பதை நாம் அறிவோம். அப்படியானால் ஆயிஷா சின்னஞ்சிறிய குழந்தையாக இருக்கும்பொழுதே இவரின் பார்வை வேறுவிதமாக இருந்துள்ளது என்பதையே இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.

இது  தெய்வீகத்திருமணம். இத்திருமணம் அல்லாஹ்வின் ஏற்பாடு. நபி  அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார். ஒருவேளை நபி  அவர்கள் ஆயிஷா  அவர்களை திருமணம் செய்வது,  Child sex -ல் ஈடுபடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால்?  அவ்வாறு இருப்பின், மருமகள் ஜைனப்பை திருமணம் செய்யவும்,  தேன் அருந்துவதற்கும்(?), சக்களத்தி சண்டையை பஞ்சாயத்து செய்யவும் வஹீ இறக்கிக் கொண்டிருந்த அல்லாஹ் இதற்கு எந்த வஹியையும் அனுப்பவில்லை. அப்படி எந்த ஒரு விளக்கத்தையும் நான் காணவுமில்லை கேள்விப்படவுமில்லை. ஆயிஷா  அவர்களிடம் கொண்ட காதலையே மிகுதியாக  நபி அவர்களின் செயலில் காணமுடிகிறது.

ஆயிஷா சிறப்பு என்னவென்றால், பெண்களில் ஆயிஷா ஸரீத் என்று தன் ஆசை மனைவி ஆயிஷா  அவர்களைப் பற்றி நபி  அவர்கள் வர்ணனை செய்கிறார் (புகாரி 3343). ஸரீத் என்பது இறைச்சி மாற்றும் கோதுமை மாவு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் உயர்ரக அரேபிய உணவு.

புஹாரி ஹதீஸ் -2028

அபூசயீத் அல்குத்ரீ(ரலி)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியாவது :நபி (ஸல்)அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும்போது தமது தலையை (வீட்டிலிருக்கும்) என் பக்கம் நீட்டுவார்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதை நான் வாருவேன்.

(புகாரி 2028-2031, 2046)

மேலும் தன் மனைவியரிடையே நீதம் செலுத்த தவறியுள்ளார். அவர்களிடையே தன் அன்பையும், பிரியமான ஆதரவையும் மற்ற மனைவியரிடையே சரிவர நிகழ்த்தவில்லை. நபி  அவர்களின் நேசம் ஆயிஷா அவர்கள் பக்கமாக சாய்ந்த போக்கை அனுசரித்து மற்ற மனைவியர்தான் விட்டுக் கொடுத்துள்ளனர். தன்னுடைய இறுதிகாலத்தில் ஆயிஷா அவர்களுடன் தங்கியிருப்பதையே மிகவும் விரும்பினார். அவர் மடியிலேயே  நபி  அவர்களின் உயிரும் பிரிந்தது.

புஹாரி ஹதீஸ்  : 4450  

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது, நாளை நான் எங்கே இருப்பேன். நாளை நான் எங்கே இருப்பேன் என்று எனது (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி) க்கும் இடையே அவர்களது தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக்கொண்டான். (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள், தாம் பல் துலக்கும் குச்சியைத் தம்முடன் கொண்டுவந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், என்னிடம் இந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுங்கள். அப்துர் ரஹ்மானே! என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார். நான் அதைப் பற்களால் கடித்துமென்று (பல் துலக்க ஏதுவாக மென்மைப் படுத்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். (இவ்வகையிலேயே அவர்களுடைய எச்சில் எனது எச்சிலுடன் கலந்தது.) அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடி அதனால் பல் துலக்கினார்கள்.

 (இறந்த தங்களது உறவினர்களை அல்லது நண்பர்களைப் பற்றி நம்மில் பலர் இவ்வாறு சொல்வதுண்டு, அவர் தொழுகையில் ஸஜ்தாவில் இறந்தார், ஹஜ் செய்யும் போது இறந்தார், மதப்போரில் ஷஹீதானார் (உயிர்த்தியாகி) ஒளுவுடன் தூய்மையாக இறந்தார் என்றெல்லாம் அவர்களது மரணத்தைப் பற்றி உயர்வாக கூறுவார்கள். உண்மையில் அவை சுன்னத்தான மரணங்கள் இல்லை. ஆண்கள், விருப்பமான தங்கள் மனைவியின் மார்புக்கு நடுவே அவர் மனைவியின் எச்சிலும் கலந்த நிலையில் மரணிப்பதே நபி வழி மரணம். இதுவே நபி  அவர்களின் சிறந்த முன்மாதிரி. பெண்கள் நபிவழிப்படி  மரணிப்பது எப்படி?)  

மேலும் சில ஹதீஸ்களையும் பார்ப்போம்,

புகாரி ஹதீஸ் -5218

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது

என் அண்டைவீட்டு அன்சாரி நண்பர் நபி (ஸல்)அவர்கள் தம் துணைவியரை விவாகவிலக்குச் செய்துவிட்டதாகத் தந்த தவறான தகவலையடுத்து நான் என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று என்னருமை மகளே! தம் அழகும் தம்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுள்ள அன்பும் யாரைக் குதூகலப்படுத்தியுள்ளதோ அவர்-ஆயிஷா-(நபியவர்களிடம் சற்று கூடுதல் உரிமை எடுத்துக் கொள்வது) கண்டு நீ ஏமாந்துவிடாதே! என்று கூறினேன். பிறகு இந்தச் சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் எடுத்துரைத்தபோது அவர்கள் புன்னகைத்தார்கள்…

 (புகாரி 4913,5115, 5218).

புகாரி ஹதீஸ் -2581

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

….மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள்.  உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில் ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்….

….பிறகு அந்த மனைவியர் அல்லாஹ்வின் தூதருடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்கள் மனைவிமார்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மக(ளான ஆயிஷா (ரலி) அவர்க)ளின் விஷயத்தில் (தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் எள்று கூறுமாறு (சொல்லி) அனுப்பினார்கள். (அவ்வாறே) ஃபாத்திமாவும் நபி (ஸல்) அவாகளிடம் பேசினாகள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா என்று கேட்டார்கள். அதற்க அவர்கள் ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்) என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று அவர்களிடம் (தன் சின்னம்மாக்களிடம்) செய்தியைத் தெரிவித்து விட்டார்கள். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்) என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா அவர்கள் மறுத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (சற்று) கடுமையாகப் பேசி உங்கள் மனைவிமார்கள் அபூ கஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகளின் (ஆயிஷாவின்) விஷயத்தில் (நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள். நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக குறைகூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால் அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே நான் ஸைனவுக்கு பதில் சொல்லி இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து இவள் (உண்மையிலேயே) அபூபக் ருடைய மகள் தான் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது ஃபாத்திமா அனுமதி கேட்டு உள்ளே வந்தார் என்று ஆயிஷா (ரலி) கூறியுள்ளார்கள்.

மற்ற மனைவியரை விட நபி  அவர்களின் மீது ஆயிஷா அவர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்ள நபி  அவர்கள் அனுமதித்தார். அவரும் ஒரே பக்கமாக சாய்ந்திருநதார் என்பதை உமர்  மற்றும்  பாத்திமா  அவர்களின் கூற்று வெளிப்படுத்துகிறது. 

 

ஆயிஷா அவர்களை இச்சையின் காரணமாகவே நபி  அவர்கள் திருமணம் செய்தார் என்பதே மார்க்க அறிஞர்களின் கருத்து. ஆதாரம் த்ரீயெம் PRINTERS வெளியிட்ட குர் ஆன் மொழிபெயர்ப்பின் 265 வது Foot Note ஐ காண்க.

புகாரி ஹதீஸ் -2581

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

….அல்லாஹ்வின் தூதர் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள் ஆகவே அன்பளிப்பு செய்பவர் தம்மிடம் பரிசுப் பொருள் ஏதும் இருந்தால் அதை அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால் அதை தள்ளிப் போட்டு என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது என் வீட்டிற்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புவார்….

நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….

பால்ய விவாகம் தவறு என்ற சிந்தனையே எட்டாத – தவறாகக்கூட கருதப்படாத – ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை, அது தவறு என்று தீர்மானிக்கப்பட்ட காலத்தில் (ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு) இருந்துக் கொண்டு ‘அது தவறு’ என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் முதலாவதாக சிந்திக்க வேண்டும்.

பால்ய விவாகம் அந்த சமுதாயத்தில் அன்றைக்கு நடைமுறையில் இருந்தாலும் இறைத்தூதரின் இறுதிக் காலத்தில் அத்தகையத் திருமணங்கள் இல்லாமலாக்கப்பட்டு விட்டன… திருமணம் என்பதை வலுவான உடன்படிக்கை என்று இறைவன் குறிப்பிட்டு வசனத்தை இறக்கியவுடன் பால்யவிவாகம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. எனவே இன்றைக்கு அத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை. இது குறித்து வாய்ப்பு வரும் போது விளக்குவோம்.

அல்பாக்கவி.com–ன் “அன்னை ஆயிஷா (ரலி)-1″என்ற இணையதள  கட்டுரையிலிருந்து….

சிறுமிகளை திருமணம் செய்யலாமா?

சிறுவயதில் திருமணம் செய்தததை ஆதாரமாகக் கொண்டு நாமும் பருவமடையாத சிறுமிகளை திருமணம் செய்யலாம் என நாம் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவை திருமணம் புரிந்தது அந்நாட்டு வழமைபடித்தான். பின்னர் திருமணம் தொடர்பான சட்டங்கள் இறைவனால் வழங்கப்பட்டு சிறுமிகளை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டு விட்டது.

புகாரி ஹதீஸின் விரிவுரையில் இவ்வகை திருமணம் காரணம் முஹம்மது நபி  அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி என்ற விளக்கம் காணப்படுகிறது. Child sex அந்தக் கால நடைமுறை இறைவானால் அனுமதிக்கப்பட்ட வழிமுறை எனவே முஹம்மது நபி  அவர்கள் செய்தது சரிதான். இவ்வகை திருமணத்திற்கு இன்று அனுமதியில்லை என்றும் விளக்கம் தரப்படுகிறது.

 உலமாக்கள் தரும் விசித்திரமான விளக்கங்களில் ஒன்று. சிறப்பு அனுமதி என்று கூறியது யார்? நிச்சயமாக அல்லாஹ் அவ்வாறு எந்த ஒரு செய்தியையும் கூறவில்லை. முஹம்மது நபி  அவர்கள் கூறினார் என்றால் தன்னுடய செயல் மிகப்பெரும் தவறு, இந்த செயலை மற்றவர்கள் பின்பற்றினால் உலகில் ஒரு பெண் குழந்தை கூட வாழ முடியாது. எனவே, இது தவறான முன்னுதாரணம் இது தவிர்க்கப்படவேண்டும் என முஹம்மது நபி  அவர்கள்  உணர்ந்திருந்தார்கள் என்று பொருள்படும். இதனால் அவரின் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகிவிடும். (இவரின் நம்பகத்தன்மையைப்பற்றி அடுத்துவரும் அத்தியாயத்தில் பார்க்கலாம்)

நாகரீகத்தின் வளர்ச்சியால் இன்று தவறாக தெரிகிறது என்றால், கொள்கைகள் காலத்தின் மாற்றத்திற்கு உட்பட்டது என பொருள்படும். அல்லாஹ்விற்கும், நபி  அவர்களுக்கும்  உலகநாகரீகத்தின் வளர்ச்சி புரியவில்லை, மேலும்  அவர்களின் பார்வையில் காலத்தை கடந்த ஞானமில்லை எனவும் பொருள்படும். காலத்தைக் கடந்த ஞானமில்லை என்றால் அவன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? என்று புதிய கேள்வி பிறக்கும்.

Child sex முஹம்மது நபி அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி என அல்லாஹ்வும் குறிப்பிடவில்லை. என்னைத்தவிர வேறுயாரும் Child sex  செய்யக்கூடாது என நபி அவர்களும் கூறவில்லை.  நபி  அவர்களின் செயலில் நிச்சயம் படிப்பினை இருக்கிறதென்றால், Child sex -ல் அப்படி என்ன படிப்பினை இருக்கிறது?. இன்று வரை யாருக்குமே தெரியாத, விளக்க முடியாத ரகசிய படிப்பினையால் யாருக்கு, என்ன உபயோகம் இருக்க முடியும்?.

மேலும், நமக்குள் இஸ்லாம் இணையதள கட்டுரையில் கூறப்பட்ட விளக்கங்கள்,  தவறென்பதை இவர்கள் அளித்துள்ள இறுதியான பதில்களும், சமீபத்திலும் சில முஸ்லீம் நாடுகளில் நிகழ்ந்துள்ள திருமணங்கள் உறுதி செய்கிறது.

இஸ்லாமிய வரலாற்றிலிருந்து ஒரு உதாரணம்

நபியின் மரணத்திற்குப் பிறகு (ஹிஜ்ரி 17ல்) நிகழ்ந்த உமர்  அவர்களின் குழந்தைத் திருமண செய்தி இது.

Umar ibn al-Khattab, the 3rd caliph of Islam, at the age of 55 married Umm Kulthum bint Ali when she was between 10 and 12 years old. Some sources even say that she was five years old when Umar married her.

“‘Umar asked ‘Ali for the hand of his daughter, Umm Kulthum in marriage. ‘Ali replied that she has not yet attained the age (of maturity). ‘Umar replied, ‘By Allah, this is not true. You do not want her to marry me. If she is underage, send her to me’. Thus ‘Ali gave his daughter Umm Kulthum a dress and asked her to go to ‘Umar and tell him that her father wants to know what this dress is for. When she came to Umar and gave him the message, he grabbed her hand and forcibly pulled her towards him. ‘Umm Kulthum asked him to leave her hand, which Umar did and said, ‘You are a very mannered lady with great morals. Go and tell your father that you are very pretty and you are not what he said of you’. With that ‘Ali married Umm Kulthum to ‘Umar.” [In Tarikh Khamees, Volume 2, p. 384 (‘Dhikr Umm Kalthum’) and Zakhair Al-Aqba, p. 168]

ஏமன் நாட்டு பெண்கள் நீதிமன்றம் எட்டு வயது சிறுமிக்கு இதே சாயலில் நடந்த திருமணத்தை நாகரீகமற்ற, மனிதத் தன்மையற்ற செயல் என கருதி ரத்து செய்தது. இதே போன்ற ஒரு நாகரீகமற்ற நிகழ்வு  பாகிஸ்தானிலும் நடைபெற்றது. சவுதி அரேபியாவில் எட்டு வயது வயதான சிறுமி, வயதான கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். வெளி உலகிற்கு தெரியாமல் இன்னும் எவ்வளவோ உள்ளது.

இஸ்லாத்தில் இல்லாத ஒன்றைச் செய்ததற்காக, பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்டவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, இஸ்லாத்தில் இத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை என்பது உண்மையானால், குழந்தைத் திருமண வழக்கில் விவாகரத்து எப்படி வழங்க முடியும்?

திருமணத்திற்கான வயதெல்லை? 

நபி (ஸல்) அவர்கள் மனித வாழ்க்கைக்காக இறைவனால் நியமிக்கப்பட்ட முன்னுதாரணமாகும். இவர்கள் பொறுத்தமில்லாத மூட சம்பிரதாய சடங்குகளையும், வணக்க வழிபாடுகளையும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத சமுதாயத் திணிப்புகளையும் தகர்த்தெறிந்து தனது ஒவ்வொரு செயல்கள் மூலமும் உலக மக்களுக்கு முன் உதாரணமானவராகவே திகழ்ந்துள்ளார்கள்.

முஹம்மது நபி, உலக மக்களுக்கு முன்னுதாரணமோ இல்லையோ, நிச்சயமாக, முஸ்லீம்களுக்கு முன்னுதாரணம் அவர் மட்டுமே…!

ஆம்…! 

முஸ்லீம்கள் முஹம்மது நபியைப் போலவே எல்லா விதங்களிலும் இருக்கவே முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய அறிஞர்கள் பலவருடங்களாக மதரஸாக்களில் கற்ற அல்லாஹ்வின் தூதருடைய சுன்னாவை (செயல்முறைகளை) மற்ற முஸ்லீம்களுக்கு கற்பிக்கின்றனர்.

சுன்னாவைக் கற்பதன் மூலம் முஹம்மது நபி எவ்வாறு முகம், கைகள், கால்களைக் கழுவிக் கொண்டார், எவ்வாறு தொழுகை நடத்தினார், எவ்வாறு பல் துலக்கினார், மூக்கு, காதுகளை எப்படி குடைந்து சுத்தம் செய்தார் என்றும், அவர் ஆடை அணிந்த விதம், ஆடையின் வடிவம், நிறம், தைக்க உபயேகித்த நூல் எது? என்றும், அவர் எந்தெந்த உணவுகளை சப்பிட்டார், எந்தெந்த விரல்களை சப்புகொட்டி உறிஞ்சி நக்கினார், அவருக்குப்பிடித்த உணவு எது? எவ்வாறு தூங்கினார், எந்தப்பக்கம் ஒருக்களித்துப் படுத்தார், அவர் தலைமுடி, தாடி மற்றும் மீசையின் அளவுகள் என்ன? அவர் தன் நகங்களை எந்தமுறையில் நறுக்கிக் கொண்டார்? எந்த விரல் நகத்தை முதலில் நறுக்கினார்? எப்படி சொறிந்து கொண்டார்? எத்தனைமுறை சொறிந்து கொண்டார்?

அவர் உடலுறவுக்கு முன்னும் பின்னும் செய்த செயல் முறைகள் யாவை? அதை எவ்வாறு செய்தார்? கழிப்பறையில் எந்த காலை முதலில் வைத்தார்? சிறுநீர் எவ்வாறு கழித்தார்? நின்று கொண்டா அல்லது அமர்ந்து கொண்டா கழித்தார்? எந்த கையால் உறுப்பைப் பிடித்து சிறுநீர் பீச்சினார்? மலம் கழிக்கையில்அவர் முகம் எந்த திசையை நோக்கியிருந்தது? அவ்வாறு மலம் கழிக்கையில் எந்த காலின் மீது தன் முழுஉடல் பாரத்தை வைத்திருந்தார்? எந்த கையால் தன் பிட்டத்தை எப்படி கழுவிக் கொண்டார்?

இவையனைத்துமே முஸ்லீம்களுக்குப் புனிதமானவைகள் மறுமையின் வெற்றிக்கும் உரியவைகள். இவைகள் தங்களின் இயல்புக்குப் பொருந்தவில்லையென்றாலும், இவைகளை உயிராக கருதி  பின்பற்றி வாழ்கை முறையை அமைத்துக் கொள்கின்றனர். மற்ற முஸ்லீம்களையும் பின்பற்றுமாறு வற்புறுத்துகின்றனர். பின்பற்றாதவர்களை, நரக தண்டனைகளைக் கூறி எச்சரிக்கின்றனர். ஆனால் மிக முக்கியமான குழந்தைத் திருமண சுன்னத்துகளைப் பற்றி வாய் திறக்கமாட்டார்கள்.

எனவே ஏதேதோ பொருளற்ற சுன்னத்துகளை (நபிவழி செயல்முறைகளை) வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும் நாமும், நம்முடைய மார்க்க அறிஞர்களும், பகுத்தறிவிற்கு மிகவும் ஏற்புடைய (?), முஹம்மது நபி அவர்களின்  Child sex சுன்னத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். புனிதமான Child sex செயல்முறைகளை எதிர்க்கும் சமுதாய திணிப்புகளை தகர்த்தெறிய வேண்டும். இஸ்லாமிய பிரச்சார பிரங்கிகளால் முடியுமா? அல்லது உங்களால்தான் முடியுமா?

(இது போன்ற ஏடாகூடமான கேள்விகளைக் கேட்டு தொலைத்து விட்டால் அவ்வளவுதான் அவர்களது மத உணர்வுகள் புண்பட்டுவிடும், உங்களை அடித்து நொறுக்கி விடுவார்கள் அல்லது  ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைப் போல முகத்தை வைத்துக் கொள்வார்கள். ஆனால் பதில் மட்டும் கிடைக்காது.)

நிச்சயமாக முடியாது. காரணம் Child sex  ன் மனிதத் தன்மையற்ற வெறியை, கொடூரத்தை, வலியை அவர்களால் நிச்சயமாக உணர முடியும். அப்படி மனிதர்களாகிய நாம் உணர்ந்ததால்தான் நாம் மேற்கண்ட மருத்துவ அறிவியல் கொள்கைகள் பிறந்தது. இல்லையெனில் முஹம்மது நபி அவர்களின் Child sex போன்ற செயல்களை இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைப்போல உலகில் உள்ள அனைவரும் நியாயப்படுத்திக்  கொண்டு இருப்பார்கள்.

இந்த குறிப்பிட்ட சுன்னத்தை ஆதரித்தால் பிற சமுதாயம் மட்டுமல்லாமல் இஸ்லாமிய சமுதாயத்தின் வெறுப்பிற்கு ஆளாவது உறுதி என்பதை உணர்ந்ததால் இன்றுவரை இச்செய்தி மார்க்க அறிஞர்களால் மறைக்கப்பட்டும் மழுப்பப்பட்டும் வருகிறது.  முஹம்மது நபி மற்றும் அவரது தோழர்களின் முடிவைப்போல இறைவன் படைத்த பெண் இனம் ஆண்களின் இச்சைக்கு மட்டுமே வயதும் மனிதத் தன்மையும் ஒரு பொருட்டல்ல என விட்டுவிடலாமா?. (இன்றும் அதே நிலைதான்)

நாகரீகம், தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் பண்பாட்டையும், உறவுமுறைகளையும் சீரழிப்பதாகக் கூறப்படும் மேலை நாட்டில் கூட Child sex is a Crime என்ற விளம்பரங்களை அனைத்து Media களிலும் காணலாம்.

நாகரீகம், மனிதத்தன்மை மிக்கவர், உலகத்திற்கே ரஹ்மத்தானவர், இந்த பிரபஞ்சத்திற்கே அழகிய முன்மாதிரி என்று இறைவனால் போற்றப்படுபவர்  செய்யும் செயலா இது?. மனிதத் தன்மையற்ற செயலை இஸ்லாம் பகிரங்கமாக அனுமதிக்கிறது!  என்று ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சொல்கிறேன் உங்களால் ஆதரத்துடன் மறுக்க முடியுமா?.

என்னுடைய கேள்விகளால் “திருமணத்திற்கான வயதெல்லை ?” யின்ஆசிரியர் எரிச்சலடைந்து போனார்.

…இன்னும் ஐந்து முறை புவி சூரியனைச்சுற்றி வந்தாலே மனிதர்களின் அறிவும் திடகாத்திரமும் பெருகும் என்றும், புவி சுழற்சியை கொண்டே சட்டங்களை இயற்றுமாறும் இறைனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை எம்மிடமில்லை.

“ஆக பெண்ணாயின் பொறுப்பாளரினது சம்மதத்துடன் தனது விருப்பப்படி எந்த வயதுடைய கணவனையும் துணைவனாக தேர்ந்தெடுக்க இஸ்லாம் வழியேற்படுத்திக் கொடுக்கிறது. ஆணாயின் அவனது விருப்பம் மட்டுமே போதுமானதாகும் தன்னை விட மூத்த அல்லது இளைய வயது பெண்களை திருமணம் செய்ய அவன் நாடலாம். அதே நேரம் ஆண்களானாலும் பெண்களானாலும் சரியே துணைவர் மரணிக்கும் போது அடுத்த திருமணத்தை இஸ்லாம் கட்டாயப்படுத்தி ஊக்குவிக்கவும் செய்கிறது. திருமண உறவுகளை இறைவணக்கமாகவும் இஸ்லாம் ஊக்குவிக்கிறது.”

Islamic Q & A வின் பதில்

In summary, then, it is permitted to contract marriage with a young girl and to hand her over to her husband to stay with him before she reaches adolescence. As for consummating the marriage, this does not happen until she is physically able for it. Thus the matter becomes quite clear. Do you see anything wrong with a man living with his young wife in one house, bringing her up and teaching her, but delaying consummation until she is ready for it? We ask Allaah to show us truth and falsehood and to make each clear. And Allaah knows best.

 

திருமணம் என்ற பெயரில் இவ்வகையான மனிதத் தன்மையற்ற செயலை இஸ்லாம் பகிரங்கமாக அனுமதிக்கிறது!  நிச்சயமாக  Child sex முஹம்மது நபி  அவர்களின்  வழிமுறையாக இருக்கிறது.

புகாரி ஹதீஸ் -4788

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களைளேய கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?’ எனும் சொல்லிக் கொண்டேன். ‘(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி  வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை(விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை ” எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய போது, நான் ‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.

சிறுமியாக இருப்பினும் ஆயிஷாவின் துடுக்குத்தனமான பதிலில் பொருளில்லாமலில்லை. முஹம்மது நபியின் பலதார குடும்ப வாழ்க்கையும், அதற்கு ஆதரவாக  உடனுக்குடன் அல்லாஹ் இறக்கிக் கொண்டிருந்த குர்ஆனின் வசனங்களும், என் மனதை நெருடியது…

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

பலதாரமணம் ஏன்? 2

21 அக்

 

 

 

 

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 9

 

 

Dr.ஜாகீர் நாயக்தொடர்கிறார்

 மக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதும் பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுவதை செய்து கொல்லப்படுவதுமே இதற்கு காரணம் ஆகும். இந்தியாவில்; மாத்திரம் ஒரு வருடத்திற்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் – பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன. அல்லது அழிக்கப் படுகின்றன. இந்த கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் – ஆண்களின் எண்ணிக்கையைவிட – பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.

2006 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 1.07 ஆண்கள்/பெண்கள் என்ற விகிதாச்சாரம் உள்ளது. பெண் சிசுக்கொலை மிகவும் தீய பழக்கவழக்கமாகும், இந்திய சமுதாயம் அதற்காக கண்டிக்கப்பட வேண்டியது தான், அமெரிக்காவும் அதன் கருக்கலைப்பு பழக்கத்திற்காக கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் இந்தியாவில் உள்ள ஆண்/பெண் விகிதாச்சாரம் மற்ற இஸ்லாமிய நாடுகளை விட குறைவாகவே உள்ளது.

 

2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி,

நாடு ஆண்/பெண்

விகிதாச்சாரம்

பஹ்ரைன் 1.03
ட்ஜிபௌடி 1.07
ஜோர்டான் 1.1
குவைத் 1.5
ஓமன்    1.31
கத்தார்  1.93
ஐக்கிய எமிரேட்                1.51

 

 

சவுதிஅரேபியா ஆண்/பெண் விகிதாச்சாரம்

வயது ஆண்/பெண்

விகிதாச்சாரம்

பிறப்பின் பொழுது 1.05
 15 வயதிற்குள் 1.04
15-64 வயது வரைs 1.33
65 வயதிற்கு மேல்r 1.13
மொத்த மக்கள் தொகையில் 1.2

 

எனவே சவுதிஅரேபியா மற்றுமுள்ள இஸ்லாமிய நாடுகளில்,  ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் என்ற முறையை நடைமுறைப்படுத்துவது அல்லது Dr.ஜாகீர் நாயக் கூறுவது போல ஆண்களை  ‘பொதுச் சொத்தாக மாறுவது’ சரியான தீர்வாக அமையும்.

Dr.ஜாகீர் நாயக்  தொடர்கிறார்,

கேள்வி: ஒரு மனிதன் ஒரு மனைவிக்கும் மேல் வைத்துக்கொள்ள அனுமதி இருக்கும் போது ஏன் ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்களை வைத்துக்கொள்ள முடியாது?

பதில்: முஸ்லீம்கள் உட்பட பலர் இக்கேள்வியை கேட்கின்றனர். முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அதாவது இஸ்லாமின் அடிப்படை நீதி, நியாயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது, அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் சரிசமமாகவே படைத்துள்ளார், ஆனால் வெவ்வேறு தகுதிகளின் அடிப்படையிலேயே, ஆண்களும் பெண்களும் உடல் மற்றும் மனோரீதியாகவும் வெவ்வேறு வகையினர், அவர்களது கடமைகளும் வெவ்வேறானதே.

மறுப்பு :

ஒரு சமுதாயம் என்பது பல குடும்பங்கள் இணைந்தது. மகிழ்ச்சியான குடும்பங்கள் இணைந்த சமுதாயமும் மகிழ்ச்சியாக இருக்கும். அலுவல் காரணமாக வெளியே சென்று திரும்பும் கணவன் புதிதாக ஒரு பெண்ணை தனது துணைவியாக வீட்டிற்கு அழைத்துவந்தால் முன்பே இருக்கும் மனைவியின் மனநிலை எப்படியிருக்கும்?

முஹம்மது நபியின் அலுவல் போர்க்களத்திற்குச் செல்வது ஒவ்வொரு முறையும் அவர் விதவிதமான பல பெண்களுடனே தனது இல்லத்திற்கு திரும்பினார். அவரது மனைவியர்களால் எதுவும் பேசமுடியவில்லை. அவருடைய மனைவி(யர்கள்) அறிய பிற பெண்களுடன் கூடி மகிழ்ந்தார் அம்மனைவியர்களால் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை காரணம் அல்லாஹ்வின் அனுமதி.

உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;.…

(குர்ஆன்2:223)

இக்குர்ஆன்வசனத்தின்படி, பெண்கள், ஆண்களைத் திருப்தி செய்யவே படைக்கப்பட்டுள்ளனர். மேலும் இஸ்லாமில் பெண்களின் நிலை கீழ்தரமானதே.

ஒரு பெண்  பல ஆண்களுடன் ஏன் வாழ முடியாது?

ஹதீஸ்களில் பெண்களின் நிலை

புகாரி ஹதீஸ் : 5219           பாடம் : 108

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது :

சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், என் வாளின் கூர்மையான பகுதியாலேயே நிச்சயம் நான் அவனை வெட்டுவேன்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “சஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு வியப்படைகின்றீர்களா நான் சஅத்தை விட ரோஷக்காரன் அல்லாஹ் என்னைவிடவும் ரோஷக்காரன்” என்று சொன்னார்கள்.

அதாவது ஒருவரது மனைவியுடன் அந்நிய ஆண்  அவ்வாறு இருப்பதாக கண்டவுடன் ரோஷம் கொண்டு அந்த ஆணை வெட்டலாம். அந்த பெண்ணை அந்நிய ஆணுடன் உறவு கொண்ட குற்றத்திற்காக கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும்.

                ஆனால் ஒரு பெண் தன் கணவன் விதவிதமாக மனைவிகளுடனும், அடிமைப் பெண்களுடனும் உறவு கொள்வதை அறிந்தும் அவள் ரோஷம் கொள்ளக் கூடாது.  ஏனென்றால் அது அல்லாஹ் ஆணுக்கு வழங்கிய உரிமை.

பெண்கள் ரோஷம் கொள்ளக் கூடாத ஒரு உயிரினம் !

 

நீதி, நியாயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இஸ்லாமியக் கொள்கைகளின் இழிநிலை  இதுதான்.

 

 ஆண் உயர்வானவன் என்பதே அல்லாஹ்வின் நிலை. அல்லாஹ்விற்கு, அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத்,  என்ற பெண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களது பரிந்துரைகள் அல்லாஹ்வால் ஏற்கப்படுகிறது என்றும்  குரைஷிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதற்கு, அல்லாஹ்வின் பதில்,

 

ஆண் மக்களை விட பெண் மக்களையா அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்?

(குர்ஆன் 37:153)

ஆபரணங்களைக் கொண்டு வளர்க்கப்பட்டதும் வழக்கில் தெளிவாக எடுத்துக் கூற இயலாததுமான ஒன்றையா (அல்லாஹ்விற்கு சந்ததிகளாக்குகின்றனர்)?

(குர்ஆன் 43:18)

உங்களுக்கு ஆண் குழந்தைகளும், அவனுக்குப்  பெண் குழந்தைகளுமா?

அவ்வாறாயின் அது அநீதியான பங்கீடாகும்.

(குர்ஆன் 53:21-22)

அல்லாஹ், தனக்கு மனைவிகளோ, குழந்தைகளோ இல்லையென்று கூறுவதற்காக பெண்களை எதற்காக இழிவாக கூறவேண்டும்? பெண்களின் மீது இவ்வளவு இழிவாக கருத்து கொண்ட அல்லாஹ், எதற்காக அவர்களைப் படைக்க வேண்டும்? மேற்கண்ட குர்ஆன் வசனங்களைக் காணும்போது, பெண் இனத்தை அல்லாஹ் படைக்கவில்லை என்றே என் மனதில் தோன்றுகிறது.

இது  உண்மையாகவே, அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனின் வார்த்தைகள் தானா?

 பெண்களைப் பற்றி இஸ்லாம் கூறும் சில உயர்ந்த கருத்துக்களையும் காண்போம்.

புகாரி ஹதீஸ் :5094

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் மக்கள் அப சகுனம் குறித்துப் பேசினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப சகுனம் எதிலேனும் இருக்குமானால், வீட்டிலும் பெண்ணிலும் குதிரையிலும்தான் இருக்கும் என்று சொன்னார்கள்.

 

Tirmidhi

        Women are your prisoners, treat them well, if necessary beat them but not           severely…104

        (பெண்கள் உங்களின் கைதிகள் அவர்களை நல்ல முறையில்      நடத்துங்கள்,       தேவைப்பட்டால் அடியுங்கள் ஆனால் கடுமையாக              அல்ல)

        A woman must immediately respond to her husband’s demand for sex even       when she is in the midst of baking bread in an oven…109

(தன் கணவன் உறவுக்கு அழைத்தால் ஒரு பெண் கட்டாயமாக உடனே செல்ல வேண்டும். அவள் அடுப்பில் ரொட்டி சமைப்பது           பாதியிலிருந்தாலும் சரி.)

        If a woman wears perfume and attends a party, she is an adulteress…330

        (ஒரு பெண், வாசனை திரவியங்கள் பூசி விழாக்களில் கலந்து     கொண்டால், அவள் விபச்சாரியே)

        If a woman annoys her husband Allah does not accept her prayer; ditto for a     runaway slave and a leader disliked by his people…344, 347

        Virgins have the sweetest mouths, the most prolific wombs and are easily             satisfied with very little; so marry them…920

        If a religious person (that is, a Mullah, a Maulana or a Maulovi) asks your           daughter for marriage, you must accede to his request…919

 

Ibn Majah

        A black dog is a Satan; a black dog or a donkey or a woman cancels a                 prayer…                2.952

        (கருப்பு நாய் ஒரு சைத்தானாக இருக்கிறது. ஒரு கருப்பு நாய் அல்லது   ஒரு       கழுதை அல்லது ஒரு பெண்ணால் தொழுகையை தடுக்க   முடியும்)

        Beat your wives if they commit sinful acts…3.185

        (உங்கள் மனைவியர்களைஅடிக்கலாம் அவர்கள் பாவமானசெயலை        செய்திருந்தால்)

        A husband is worth worshipping by his wives…3.1852

        A woman is a property; a righteous woman is the best property…3.1855

        பெண் ஒரு உடைமைப் பொருளாக இருக்கிறாள். நல்ல பெண்     மிகச்சிறந்த         உடைமையாவாள்.

        If a woman contracts her own marriage, she is an adulteress…3.1882

        தனது திருமண ஒப்பந்தத்தை ஒரு பெண் தானே முடிவுசெய்தால், அவள்               விபச்சாரியே

(முஹம்மது நபியின் முதல் மனைவி கதீஜா, முஹம்மது நபியுடனான தனது திருமணத்தை தானே முடிவு செய்து கொண்டார் அப்படியானால் அவரும் ஒரு விபச்சாரியா?)

        You can marry a woman with just a pair of sandals…3.1888

        Muhammad’s final sermon is:—beat women…4.3074

        Raise three daughters, miss hell…5.3669      

        Raise two daughters, enter paradise…5.3670

        A naked woman tears down the curtain of Allah…5.3750

        Women are extremely harmful for men…5.3998

        ஆண்களுக்கு மிக ஆபத்தானவர்கள் பெண்களே

        Fear women…5.4000

        பெண்களை அஞ்சுங்கள்

        Women are stupid…5.4003

        பெண்கள் முட்டாள்களே

 

Imam Ghazali

“(Prophet said – if husband would be covered with pus from head to toe, and       wife would lick it, even then wife’s gratitude to husband wouldn’t be fulfilled”.

Your sexual intercourse with your wife is an act of charity. If you throw your      semen in lawful things (inside a vagina), you will get rewards. (p.1.236)

Muhammad said: A prison in the corner of a house is better than a        childless woman. (p.2.24)

மலடியை விட  வீட்டின் மூலையில் சிறையிருப்பது மேல்

An ugly woman with children is better than a beautiful woman without                 children (p.2.24)

அழகற்ற பெண் , அழகான மலடியைவிட மேலானவள்

If you see a woman in front, she is a devil. After seeing such a woman, hurry to your         wife for immediate sex because your wife also becomes a devil if you do  not do (immediate sex). (p.2.26)

Devil runs through your vein like the circulation of blood; so do not go to a woman            without the presence of her husband. Only Muhammad had been saved from the                machinations of devils.(p.2.26)

      A wife’s duty is to do household chores and to satisfy her husband’s sexual         appetite. (p.2.27)

வீட்டு வேலைகளைச் செய்வதும், கணவணின் உடல்ப்பசியைத் தீர்ப்பதுமே ஒரு மனைவியின் கடமை

The best woman is she who is beautiful and whose dower is little.(p.2.31)

Miserliness, pride and cowardice are bad for men but good for women.(p.2.31)

கஞ்சத்தனமும், தற்பெருமையும், கோழைத்தனமும் ஆண்குக்கு அழகல்ல             ஆனால் இவை  பெண்களுக்கு சிறந்ததாகும்

When marrying a girl, look for her beauty, as this will save you from      fornication (p.2.31)

அழகான பெண்களை திருணம் செய்வதால், அவள் உங்களை    கள்ளத்தொடர்பிலிருந்து பாதுகாப்பாள்

If it be known that a woman is barren, do not marry her marry lovely and            child bearing women.(p.2.32)

A good woman is one who is married early at her age, who gives birth to a child without delay and who demands a small dower.(p.2.32)

Choose a woman for your semen as a vein is like an arrow (p.2.32)

 

மேற்கண்ட விளக்கங்கள், கேள்விக்கான பதிலை தருகிறது. பெண்கள் ஆண்களை திருப்தி செய்யவே படைக்கப்பட்டுள்ளனர் என்பதே இஸ்லாமின் முடிவு. முஹம்மது நபி  ஏன் பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தினார் என்பதற்கு அல் தபரி  யில் இருந்து ஹதீஸைக் காண்போம்:

 

… Layla bt. al-Khatim b. ‘Adi b. ‘Amr b. Sawad b. Zafar b. al-Harith b. al-Khazraj approached the Prophet while his back was to the sun, and clapped him on his shoulder. He asked who it was, and she replied, “I am the daughter of one who competes with the wind. I am Layla bt. al-Khatim. I have come to offer myself [in marriage] to you, so marry me.” He replied, “I accept.” She went back to her people and said that the Messenger of God had married her. They said, “What a bad thing you have done! You are a self-respecting woman, but the Prophet is a womanizer. Seek an annulment from him.” She went back to the Prophet and asked him to revoke the marriage and he complied with [her request]. (The History of Al-Tabari: The Last Years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany, 1990], Volume IX, p. 139)

(லைலா பின்த காதிம் என்ற பெண்மணி நபியவர்களை சந்தித்து, அவர் கூறினார், …என் பெயர் லைலா பின்த காதிம். திருமணத்தின் மூலம் என்னை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன் என்று கூறினாள். எனவே என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். அதற்கு நபி சரி என்றார். தன்னுடைய ஆட்களிடம் திரும்பிச் சென்ற அப்பெண் நபியுடன் தனக்கு நடந்த திருமணத்தை பற்றி கூறினாள். அவர்கள் (அப்பெணின் ஆட்கள்) என்ன மோசமான காரியத்தை செய்திருக்கிறாய்! நீ ஒரு தன்மானம் கொண்டபெண், ஆனால் நபி ஒரு பெண்பித்தர். அவரிடம் தலாக் பெற்றிடு என்றனர். நபியிடம் திரும்பிச்சென்ற அப்பெண்,  தன்னை தலாக் செய்துவிட கோரினார், நபி அதற்கு உடன்பட்டார். )

 

மணப்பெண்ணின் பொறுப்புதாரியிடம் சம்மதம் பெறாமலே இத்திருமணம் நிகழ்ந்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். முஹம்மது நபி   அவர்களின் மீது சுமத்தப்படும் பெண்கள் விஷயத்தில் மிக பலவீனமானவர் என்ற குற்றச்சாட்டிற்கு ஹதீஸ்களிலிருந்து கிடைக்கும் ஆதாரம்.

 

ஒரு பெண்களைக் கண்டு அலைபாய்ந்த முஹம்மது நபி அவர்களின்  நிலையைப் பற்றிய ஹதீஸ் இது.

 

Sahih Muslim Book 008, Number 3240:

Jabir reported that Allah’s Messenger (may peace be upon him) saw a woman, and so he came to his wife, Zainab, as she was tanning a leather and had sexual intercourse with her. He then went to his Companions and told them: The woman advances and retires in the shape of a devil, so when one of you sees a woman, he should come to his wife, for that will repel what he feels in his heart.

(ஒரு பெண்ணைக் கண்டு கிளர்ச்சியடைந்த நபி, விரைவாக தன் மனைவியிடம் வந்தார். தோல் விரிப்பை உலர்த்திக் கொண்டிருந்த மனைவி ஜைனப்புடன் கலவியில் ஈடுபடுகிறார். பிறகு தன் தோழர்களிடம் சென்று, ஒரு பெண்ணைக் கண்டு ஒரு உங்களது மனம் கிள்ச்சியடையும் போது, அவர் “மனதிலுள்ளதை” தணிக்க, அவர் தன் மனைவியிடம் விரைவாக வரவேண்டும் என்று கூறினார்)

 

பெண்களைக் கண்டு கிளர்ச்சியடைந்து மனைவிகளை  தேடி ஓடியதோடு நிற்கவில்லை. தன்னுடைய அற்பத் தேவைகளுக்காக அந்த பெண்களையே அணுகிய நிகழ்ச்சி இது.

 

புகாரி ஹதீஸ் 52551

அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்சாரி  (ரலி) அவர்கள் கூறியதாவது.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) அஷ்ஷவ்த் (அல்லது அஷ்ஷவ்ழ்) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி (ஸல்) இங்கேயே அமர்ந்திருங்கள் என்று சொல்லிவிட்டுத் தோட்டத்திற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்து பெண் அழைத்து வரப்பட்டு பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தாள். அப்பெண்(ணின் பெயர்) உமைம பின்த் நுஅமான பின் ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித்தாயும் இருந்தார். அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி (ஸல்) அவர்கள் உன்னை எனக்கு அன்பளிப்பு செய் என்று கூறினார்கள். அந்த பெண், “ஒரு அரசி, தன்னை இடையர்களுக்கெல்லாம் அன்பளிப்பு செய்வளா?” என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவற்காக நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தை அவர் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் “உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்)அவரை நோக்கி “கண்ணியான (இறவனிடம் தான் நீ பாதுகாப்பு கோரி இருக்கிறாய்” என்று சொல்லி விட்டுஅங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள் மேலும் அபூஉசைதே இரு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து , அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டு போய் விட்டு விடு என்று சொன்னார்கள்.

ஏற்கெனவே தேவைக்கும் அதிகமான மனைவிகள் இருக்கும் பொழுது மீண்டும் ஏன் பெண்களைத் தேடி ஓடவேண்டும்? அழகிய பெண்களைக் கண்டால் வேலையைக் காட்ட வேண்டுமா? அந்த பெண் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன் என்று கூறியதால் முஹம்மது நபியால் எதுவும் செய்ய முடியவில்லை. இல்லையென்றால் “கதை” கந்தலாக போயிருக்கும். தெளிந்த மனநிலை கொண்ட மனிதனின் செயலா இது?

                 “ஒரு அரசி, தன்னை இடையர்களுக்கெல்லாம் அன்பளிப்பு செய்வளா?” என்ற அப்பெண்ணின் துடுக்குத்தனமான பதிலிலிருந்தும், அவளுடன் அவளைப் பராமரிக்கும் செவிலித் தாயும் உடனிருப்பதைக் கொண்டும் அவள் வயதை நாம் யூகிக்க முடியும். முஹம்மது நபியைப் பற்றி தெரிந்தும் வயது முதிர்ந்த பெண்ணால் இவ்வாறு தைரியமாக பேச முடியாது. அப்படியானால் அவள் வயது குறைந்த சிறுமியாகவே இருக்க முடியும்.  

                இன்றுவரை, மார்க அறிஞர்கள் ஆயிரம்  விளக்கங்கள், கூறினாலும் முஹம்மது நபி  அவர்களுடைய விஷயத்தில் எதுவும் எடுபடவில்லை. மார்க்க அறிஞர்கள் கூறும் விளக்கங்கள் ஒன்றிற்கொன்று முரண்படுவதால் புதிது புதிதாக பல கேள்விகளையே அவைகள் உருவாக்குகின்றன.

                ஷஃபியா, ரைஹானா போன்றவர்கள் தங்களது கணவர்களைக் கொலை செய்த முஹம்மது நபியுடன்  மிக மிழ்கச்சியாகவே தம்பத்திய வாழ்கை நடத்தினர் என்ற வாதமும், ஒரே இரவில் பல மனைவிகளிடமும் அடிமைப் பெண்களிடமும் தம்பத்திய உறவு கொண்டு தங்களிடமும் வரும் முஹம்மது நபியின் செயல்களை அவரது மற்ற மனைவியர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் மிக மகிழ்சசியுடன் ஏற்றுக் கொண்டதாகக் கூறும் வாதமும் அறிவுடையவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அல்லது சல்மான் ருஸ்டி கூறுவது சரியாக இருக்க வேண்டும்.

                வாழ்க்கைத் துணையில்லாததால் செய்யப்படும் மறுமணங்களைப் பற்றி நான் விவாதிக்கவில்லை என்பதை நினைவில் வைக்கவும். ஒரே நேரத்தில் பல பெண்களை திருமணம் செய்வதை முதிர்ச்சியடையாத வாதங்களால் நியாயப்படுத்த வேண்டாம் என்பதே என்னுடைய பணிவான வேண்டுகோள்.

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

 

பலதாரமணம் ஏன்?

13 அக்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 8

 

நபி (ஸல்) அவர்கள் நாடியிருந்தால் பல கன்னியர் அவர் காலடியில் இருந்திருப்பார்கள். அவர் திருமணம் செய்ததில் ஆயிஷா அவர்களைத் தவிர யாரும் கன்னியரில்லை. நபி (ஸல்) அவர்களின் திருமணங்கள் அனைத்தும் இச்சையின காரணமாக செய்யப்பட்டதல்ல. அனைத்தும் ஆதரவற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் பலவாறாக பிளவுபட்ட அரபு சமுதாயங்களை இணைக்கவே இத்தனை பெண்களுடன் வாழ்ந்தார் என மார்க்க அறிஞர்கள்   வாதிடுகின்றனர்.  நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய திருமணங்களுக்கு இப்படியொரு விளக்கத்தை எங்கும், எப்பொழும் தரவில்லை. ஆதரவற்ற பெண்களுக்கு மறுவாழ்வளிக்க உலகில் இதைவிட வேறு வழிகளே இல்லையா?. 

 

நமது  நாட்டில் இன்றும் பலவிதமான தீவிரவாத அமைப்புக்களும், பிரிவினைவாத குழுக்களும் உள்ளது. இவர்களால் எப்பொழுதும் நாட்டின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. தீவரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் அடக்கியாள,  பிரதமரோ அல்லது உள்த்துறை அமைச்சரோ  தீவிரவாதிகளுடன் திருமண ஒப்பந்தங்களை, செய்து  கொண்டதாக கூறினால் அவர்களை எள்ளிநகையட மாட்டீர்களா?

 

சமுதாயங்களின் தலைவர்கள் தங்களைச் சார்ந்த ஆதரவற்ற பெண்களுக்கு வாழ்வளிக்க, திருமணம் செய்யத் துவங்கினால் என்ன ஆகும்? உதாரணத்திற்கு நமது பிரதமர், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களை திருமணம் செய்வதாக கற்பனை செய்து பாருங்கள். பிரதமரின் மனைவியர்களின் சிறிய தேவைகளை நிர்வகிக்கவே தனிஅமைச்சரவை தேவைப்படும். மனைவியர்கள் தங்குவதற்கு அந்தப்புரங்கள் கோடிக்கணக்கில் அமைக்க பெரியதொரு தனி மாநிலமே உருவாக்க வேண்டும். இஸ்லாமிய அறிஞர்களின் இவ்விளக்கம் முட்டாள்தனமாகத்  தெரியவில்லையா?

இன்றும் உலகில் ஆதரவற்ற நடுத்தர வயது பெண்கள் மூதாட்டிகள் என பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் எவ்வாறு வாழ்கின்றனர்? பிளவுபட்ட சமுதாயத்தை அல்லாஹ்வினாலும் அவன் கொள்கைகளாலும் இணைக்க முடியவில்லையா?.

முஹம்மது நபி  அவர்கள் மட்டுமல்ல அவருடைய அன்பு (சகோதரன்) மருமகன்  அலீ அவர்களின் மனைவியரின் எண்ணிக்கை எவ்வளவு என வரலாற்று ஆசிரியர்களுக்கே தெரியவில்லை. அவற்றில் குறிப்பிடத்தகுந்தது என ஒரு ஏழு பெண்களைக் குறிப்பிடுகின்றனர். இங்கும்  அடிமைப் பெண்களும், வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களின் கணக்கு தனி. இவரும் பெண்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இருந்தவர்தானா?.

அலீ  அவர்களும் தனது மனைவியரின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டார். ஆனால், அதை முஹம்மது நபி விரும்பவில்லை. தனது அன்பு மகள் பாத்திமா    இருக்கும் பொழுது வேறு எந்த பெண்ணையும்  திருமணம்  செய்யக்கூடாது என தடைவிதித்தார். காரணம், பாத்திமா   விரும்பவில்லை எனவே முஹம்மது நபியும் அதை விரும்பவில்லை.

புகாரி ஹதீஸ் -5230

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி ஹிஷாம் பின் முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்கு செய்துவிட்டுஅவர்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு அனுமதி வழங்க மாட்டேன்.) ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும் என்று சொன்னார்கள்.

 

 பலதாரமணம் அல்லாஹ் அனுமதித்த வழிமுறை. பொதுவாக, திருமணத்திற்கு  மணப்பெண் மற்றும் மணப்பெண்ணின் பொறுப்பாளரின் (தந்தை)  சம்மதம் மட்டுமே போதுமானது. பலதாரமணத்தை விரும்புபவர்கள் மற்ற மனைவியரின் ஒப்புதலையோ அல்லது அவர்களுடைய பொறுப்பாளர்களின்(மாமனார்) ஒப்புதலையோ பெற வேண்டுமென்று அல்லாஹ்வும் கூறவில்லை. அல்லாஹ்வின் அனுமதிக்கு எதிராக முஹம்மது நபி  ஏன் துள்ளிக் குதிக்க வேண்டும்?

 

தன் அன்பு மகளுக்கு ஒரு சக்களத்தி வருவதை விரும்பாதவர், தன்னுடைய மனைவியர்களின் விஷயத்திலும் இதே நியாயத்துடன் நடந்து கொள்ளவில்லையே?. அலீ பின் அபீதாலிப் அவர்களின் இரண்டாவது திருமணம் தன் மகளை வெறுப்படையச் செய்து விடும் என்று வேதனைப்பட்டவர் தன்னுடைய மற்ற மனைவியர்களும் இதேபோல அடைந்த மனவேதனையை குறித்து எந்த கவலையும் அடையவில்லையே? இந்தசம்பவம் முஹம்மது நபியின் இரட்டை வேடத்தை உங்களுக்கு உணர்த்தவில்லையா? எப்படி இருக்கிறது இவர்களது நியாயம்? 

முதல் மனைவி ஃபாத்திமா உயிருடன் இருந்தவரை அலீ   வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அடிமைபெண்களின் கணக்கு தனி. அலீ  அவர்களின் செயல்களில் அதிருப்தி அடைந்த அவருடைய மகன்கள் ஒரு காலகட்டத்தில் அலீ  அவர்களை விட்டு ஒதுங்கி இருந்தனர்.

ஷரீயத்தின்படி ஒரு ஆண் நான்கு மனைவிகளுடன் ஒரே நேரத்தில் வாழ்கை நடத்தலாம். ஆனால் ஷரீயத்தை உருவாக்கியவர் நாற்பது மனைவிகளுடன் வாழ்கை நடத்தலாம்இது நடுநிலையற்றது என வாதிடும் சமஉரிமை விரும்பிகளுக்கு அல்லாஹ்வின்  பதில்,

 (ஆனால்) தம் மனைவியர்களிடமும் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும் (அடிமைகள்) தவிர (இவர்களிடம் உறவு கொள்வதில்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுகிறவர்கள் அல்லர்

(குர்ஆன் 23:6, 70:30)

சமஉரிமை விரும்பிகள், வைப்பாட்டிகளை தங்கள் விரும்பும் எண்ணிக்கையில் வைத்துக்கொள்வதற்கான அனுமதி.

குடும்ப வாழ்க்கையை, பலதார மணவாழ்கையை, பெண்களின் குணங்களையும் செயல்பாடுகளைப் பற்றி தன் கருத்துக்களை அல்லது அறிவுரைகளை தெரிவிக்க பல மனைவிகளுடன் வாழ்ந்து சுயஅனுபவம் பெற்று விளக்கமளித்தார் என்பதும் உலமாக்களின் பதில்.

பொய், திருட்டு, மது அருந்துதல், விபச்சாரம், கொலை, கற்பழிப்பு பற்றி ஒருவர் தன்னுடைய கருத்தை தெரிவிக்க மேற்கண்ட செயல்களில் சுயஅனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே மிகவும் சிறப்பான கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என்று  வாதிட்டால் உங்களால் ஏற்க முடியுமா?.

மேலும் மதவிடாய் பற்றி  உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர் (அவர்களுக்கு) நீர் கூறுவீராக, அது ஓர் அசுத்தமான உபாதையாகும் அந்த மாதவிடாயி(ன்     காலத்தி)ல்  பெண்களை விட்டு விலகி இருங்கள் அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்…

(குர்ஆன் 2:222)

மனைவியின் மாதவிடாய் காலங்களிலும் பிரசவ காலங்களிலும் ஆண்கள் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழ்வது சிறப்பானது. அவ்வாறு உணர்ச்சிகளை அடக்க முடியாத சபலபுத்தி உள்ள ஆண்கள்  விபச்சாரம், தவறான தெடர்பு என வழிதவறி விடுகிறார்கள். எனவே அதற்கு இஸ்லாம் தரும் ஒரே தீர்வு பலதார மணம் என்பதே மார்க்க மாமேதைகளின் விளக்கம். 

 

அப்படி என்றால் முஹம்மது நபி  அவர்களும்  ஒரு சபலபுத்திகாரரா?.  – ஆம்…!

புகாரி ஹதீஸ் -302

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையிலுள்ள (நபியின் மனைவியரான) எங்களில் ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அணைத்துக் கொள்ள விரும்பினால் மாதவிடாய் போகுமிடத்தை துணியால் கட்டிக் கொள்ளுமாறு  கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்? (அவ்வாறிருந்தும் ஆடைகளுக்கு மேல்தான் அனுபவித்தார்கள்.)

புகாரி ஹதீஸ் -300

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பொழுது நபி (ஸல்) அவர்கள் என்னை துணி கட்டிக்கொள்ளுமாறு பணிப்பார்கள். (நான் அவ்வாறே செய்து கொள்வேன்) அப்போது என்னை அணைத்துக் கொள்வார்கள்.

புகாரி ஹதீஸ் -303

மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில்  ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்.

புகாரி ஹதீஸ் -299

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

 பெருந்துடக்குடனிருந்த  நபி (ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து (ஒருமித்து நீரள்ளிக்) குளிப்போம்.

புகாரி ஹதீஸ்          : 1929         

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போர்வைக்குள் இருக்கும்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது நான் (போர்வையிலிருந்து) நழுவி, மாதவிடாய்க்குரிய ஆடைகளை அணிந்து கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ,உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா, என்று கேட்டார்கள். நான், ஆம்!, என்று கூறிவிட்டு, அவர்களுடன் போர்வைக்குள் நுழைந்து கொண்டேன். நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (இருக்கும் தண்ணீரையள்ளிக்) குளிப்போம். நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது என்னை முத்தமிடுவார்கள்.

Sunaan Abu Dawud: Book 1, Number 0270:

Narrated Aisha, Ummul Mu’minin:

 Umarah ibn Ghurab said that his paternal aunt narrated to him that she asked Aisha: What if one of us menstruates and she and her husband have no bed except one? She replied: I relate to you what the Apostle of Allah (peace_be_upon_him) had done.

One night he entered (upon me) while I was menstruating. He went to the place of his prayer, that is, to the place of prayer reserved (for this purpose) in his house. He did not return until I felt asleep heavily, and he felt pain from cold. And he said: Come near me. I said: I am menstruating. He said: Uncover your thighs. I, therefore, uncovered both of my thighs. Then he put his cheek and chest on my thighs and I lent upon he until he became warm and slept.

Sunaan Abu Dawud: Book 13, Number 2380:

Narrated Aisha:

The Prophet (peace_be_upon_him) used to kiss her and suck her tongue when he was fasting.

(ஆயிஷா அறிவிக்கிறார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்),  நோன்பு வைத்திருக்கும் வேளையிலும் முத்தமிட்டு அவருடைய (ஆயிஷா) நாக்கை உறிஞ்சி சுவைப்பார்.)

 புகாரி ஹதீஸ்  : 1928         

உர்வா பின் ஸுபைர் (ரஹ்)

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது : “நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டு தம் துணைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!” என்று சொல்லிவிட்டு (என் சிறியதாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள்.

புகாரி ஹதீஸ் -297

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும் பொழுது எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.

 

பெண்களுக்கு ஒரு குறிபபிட்ட வயதைக் கடக்கும் பொழுது தாம்பத்தியத்தில் நாட்டம் முற்றிலும் குறைந்துவிடுகிறது. ஆனால் ஆண்கள் நிலை வேறுவிதமாக மாறிவிடுகிறது. வயதானாலும் அவர்களின் தாம்பத்திய உணர்வுகள் குறைவதில்லை. எனவே அவர்கள் வழி தவறி விடாமல் இருக்கவும் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டது என்கின்றனர் மார்க்க வல்லுனர்கள்.

 

ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைகள் ஏன் தேவைப்படுகிறது என்பதை மிக சுலபமாக பட்டியலிட முடியும்.

 

பெண் மோகம்

துணையின் மீது வெறுப்புஇணையின் அழகு மற்றும் குணம்

துணையின் நோய் –  உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள்

வாரிசு

 

சவ்தா அவர்களைத் தவிர முஹம்மது நபி அவர்களின் மனைவியர் அனைவருமே மிக மிக அழகானவர்கள். ஓரிருவரைத்தவிர அனைவரும் முப்பது வயதிற்குட்பட்ட இளம் பெண்கள். எனவே முஹம்மது நபி  அவர்களுக்கு இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது காரணங்கள் பொறுத்தமற்றது. மேலும், அதற்கு ஆதரமாக ஹதீஸ், வரலாற்று செய்தி, அல்லது அறிஞர்களின் விளக்கம் என எந்த ஒரு தகவலும் இல்லை. இஸ்லாமில் பலதாரமணத்திற்கான அனுமதி ஏன்? மிக பிரபலமான இஸ்லாமிய பேச்சாளர் Dr.ஜாகீர் நாயக் அவர்களின்பதில்

                இப்போது நாம் இஸ்லாம் ஏன் – ஒருஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதித்துள்ளது என்பது பற்றி சற்று விரிவாக ஆராய்வோம்.
1. அல்-குர்ஆன் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதை சில நிபந்தனைகளுடன் – அனுமதியளிக்கிறது.
நான் முன்பே குறிப்பிட்டது போல் உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் ‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான். அல்-குர்ஆனின் அத்தியாயம் 4 சூரத்துல் நிஷாவின் மூன்றாவது வசனம் ‘உங்களுக்குப் பிடித்தமான பெண்களை – இரண்டிரண்டாகவோ – மும்மூன்றாகவோ – நன்னான்காவோ – மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்).’ என்று சுட்டிக் காட்டுகின்றது.
குர்ஆன் வருவதற்கு முந்தைய கால கட்டங்களில் இஸ்லாத்தில் பலதார மணத்திற்கு தடையில்லாமல் இருந்தது. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களை திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு – இஸ்லாத்தில் ஓர் ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் என அனுமதியளித்தது. ஒரு ஆண் கூடுதலாக நான்கு பெண்களை வரை திருமணம் செய்து கொள்ளலாம் – அதுவும் அப்பெண்களிடையே சமமான நீதி செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் – பலதார மணத்திற்கு வரைமுறை இட்டது.
மேலும் அல்-குர்ஆனின் அத்தியாயம் 04 ஸுரத்துல் நிஷாவின் 129ஆம் வசனத்தில் – ‘(இறை விசுவாசிகளே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது’ என்று குறிப்பிடுகின்றது. மேற்படி வசனத்திலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு விதிவிலக்கேத் தவிர – கட்டாயமில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இஸ்லாத்தின் கொள்கைகளில் – செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை ஐந்து வகையாக பட்டியலிடுகிறது. அவையாவன:
1. ‘ஃபர்லு’- கட்டாயக் கடமைகள்

2. ‘முஸ்தகப் ‘ – பரிந்துரைக்கப்பட்டவை அல்லது தூண்டப்பட்டவை

3. ‘முபாஹ் ‘- அனுமதிக்கப்பட்டவைகள்

4. ‘மக்ரூ ‘ – அனுமதிக்கப் படவும் இல்லை – அதே சமயத்தில் தடுக்கப்படவுமில்லை.

5. ‘ஹராம் ‘- கண்டிப்பாக தடை செய்யப் பட்டவை.

மேற்படி ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட (கூடுதலாக நான்கு வரை) திருமணம் செய்து கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றேத் தவிர கட்டாயக் கடமை அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்ட ஒரு இஸ்லாமியர் – ஒரே ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொண்ட மற்றொரு இஸ்லாமியரைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவர் இல்லை.

முஹம்மது நபி  ஏன் நான்கு மனைவியருக்கு மேல் வைத்திருக்க அனுமதி பெற்றிருந்தார்? என்ற கேள்விக்கு Dr.ஜாகீர் நாயக் அவர்களின்பதில்

 

 2. சராசரியாக பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு – ஆணினத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.

                இயற்கையிலேயே ஆணிணமும் – பெண்ணிணமும் சரிசமமான விகிதத்தில்தான் பிறக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியில் ஆணிணத்தை மிஞ்சியதாக பெண்ணிணம் அமைந்துள்ளது. நோய்கிருமிகளை எதிர்கொள்வதில் பெண் குழந்தைகள் – ஆண் குழந்தைகளைவிட அதிக சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. இந்த காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் பெண் குழந்தைகள் மரணிப்பதைவிட ஆண் குழந்தைகள்தான் அதிகமாக மரணிக்கின்றன.
                யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் – நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் – பெண்களின் வாழ்க்கை காலத்தைவிட குறைவாகவே இருப்பதால் – எந்த குறிப்பிட்ட காலகட்டத்திலும் – மனைவியை இழந்த கணவர்களை விட கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.

3. உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.

அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் – பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும். ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும். உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை கோடி பெண்கள் ஆண்களைவிட அதிகம் என்பதை அறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே.  

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்களை விட 7.8 மில்லியன் பெண்கள் அதிகமாக‌ உள்ளனர்.

மறுப்பு :

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்கள் எண்ணிக்கை

வயது சதவீதம் ஆண்களின்

எண்ணிக்கை

பெண்களின்

எண்ணிக்கை

0-14 வயதிற்குள் 20.4% 3,10,95,847 2,97,15,872
15-64 வயது வரை 67.2% 10,00,22,845 10,04,13,484
65 வயதிற்கு மேல் 12.5% 1,55,42,288 2,16,53,879

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்/பெண் விகிதாச்சாரம்

வயது ஆண்/பெண்

விகிதாச்சாரம்

பிறப்பின் பொழுது 1.05
 15 வயதிற்குள் 1.05
15-64 வயது வரை 1.0
65 வயதிற்கு மேல் 0.72
மொத்த மக்கள் தொகையில் 0.97

எனவே மேற்கண்ட வாதத்தின் அடிப்படையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இளம்வயது ஆண்களும் வயதான கிழவிகளுடன் பலதாரமணம் புரிந்தால் மட்டுமே சாத்தியமாகும். இதை உங்களால் ஏற்க முடியுமா?

 

ஒரு புள்ளி விபரத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஒருவனுக்கு ஒருத்தி என்று உறுதியாக இருந்தால் பல  பெண்களின் திருமணத்திற்கு வாய்ப்பு கிடைக்காமல் தடைபடும் அதன் காரணமாக ஒழுக்க கேடுகள்தான் அதிகமாகும். எனவே பலதார திருமணத்தின் மூலம் இஸ்லாம் தீர்வு காண்கிறது என்பதும்  Dr.ஜாகீர் நாயக் போன்றவர்களின் வாதம்.

Dr.ஜாகீர் நாயக்:

4. ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று வரையறை ஏற்படுத்துவது – நடைமுறைக்கு சாத்தியக் கூறானது அல்ல.

ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்). அதுபோல – பிரிட்டனில் 40 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும்தான் ஏற்படும்.

உதாரணத்திற்கு திருமணம் முடிக்காத என்னுடைய சகோதரி அல்லது தங்களுடைய சகோதரி திருமணம் முடிக்க ஆண்கள் இல்லாத நிலையில் உள்ள அமெரிக்காவில் வசித்து வருவதாக வைத்துக் கொள்வோம். அவருக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது அவர் அமெரிக்காவின் ‘பொதுச் சொத்தாக மாறுவது’. இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் அமெரிக்காவின் ‘பொதுச் சொத்தாக’ மாறுவதைவிட ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது என்கிற முதல் வாய்ப்பைத்தான் சிறந்த புத்திசாலி தேர்ந்தெடுப்பார்.

மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பது சர்வ சாதாரணம். இது போன்ற நிலைகளில் பெண்ணுக்கு பாதுகாப்பற்ற நிலையும் – சமூகத்திற்கு பயந்து வாழக் கூடிய நிலையும் உண்டாகிறது. அதே சமூகத்தில் ஒரு பெண் – ஒரு ஆணுக்கு – இரண்டாவது மனைவியாக இருப்பதை முழு மனதுடன் சமுதாயம் ஏற்றுக் கொள்வதுடன் – அந்த பெண்ணுக்கு மரியாதையான கௌரவமான பாதுகாப்பான வாழ்க்கையும் அமைகிறது.

ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது ‘பொதுச் சொத்தாக மாறுவது’ என இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் உள்ள பெண்ணுக்கு – இஸ்லாமிய மார்க்கம் முதலாவது நிலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி – இரண்டாவது நிலையை முற்றிலும் மறுக்கச் சொல்கிறது.

Dr.ஜாகீர் நாயக் அவர்கள் தவறான வாதத்தை முன்வைக்கிறார். அவரின் வாதத்திலுள்ள முரண்பாடுகளைக் காண்போம்

ஆண்/பெண் விகிதாச்சாரம் உலக அளவில் 1.01 ஆண்கள்/ பெண்கள் என்றே உள்ளது, 2006 est.).

வயது சதவீதம் ஆண்களின்

எண்ணிக்கை

பெண்களின் எண்ணிக்கை
0-14 வயதிற்குள் 27.4% 91,92,19,446 87,02,42,271
15-64 வயது வரை 65.2% 2,15,20,66,888 2,10,03,34,722
65 வயதிற்கு மேல் 7.4% 21,31,60216 27,01,46,721

இதை வயது அடிப்படையில் பிரித்தால், உலகில் ஆண்/பெண் விகிதாச்சாரம்

வயது ஆண்/பெண்

விகிதாச்சாரம்

பிறப்பின் பொழுது 1.06
15 வயதிற்குள் 1.06
15-64 வயது வரை 1.03
65 வயதிற்கு மேல் 0.79
மொத்த மக்கள் தொகையில் 1.01

எனவே பலதார மணம் என்பது இளம் ஆண்கள் வயதான பெண்களை திருமணம் செய்ய சம்மதித்தாலே சாத்தியமாகும்.

தொடரும்…

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பெண்களை அடிமைப்படுத்தும் சமூகம் தலைநிமிர முடியாது – சித்தி ஜுனைதா பேகம்

25 ஆக

இஸ்லாமிய பெண்களில் முதன்முதலில் நாவல் படைத்திட்ட புரட்சிப் படைப்பாளி சித்தி ஜூனைதா பேகம் என்பவர் யார்? இவரைத் தந்த ஊர் எந்த ஊர்? இவரை ஏன் புரட்சிப் படைப்பாளி என்று அழைக்க வேண்டும்? அப்படி என்னதான் செய்தார்? இதுபோன்ற ஆர்வமிக்க பல சந்தேகங்களுக்கு விடை அளிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

தமிழில் பெண் படைப்பாளிகள் இன்றும் குறைவாகவே காணப்படுகின்றனர். இப்படி இருக்கும் இன்றைய சூழலில் 70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்துப் பணியை தொடங்கிய பெண் படைப்பாளிதான் இந்த சித்தி ஜூனைதா பேகம். 1917-ம் ஆண்டு நாகூரில் பிறந்தவர்.

மூன்றாம் வகுப்பே படித்தவர். 16 வயதிலேயே எழுதத் தொடங்கியவர். கிட்டத்தட்ட 64 ஆண்டுகளுக்கு முன்னால் 21 வயதில் ‘காதலா கடமையா’ என்ற அபூர்வ புரட்சி நாவலை எழுதியவர். ‘காதலா கடமையா’ நாவலை எழுதியதன் மூலம் முதல் இஸ்லாமியப் பெண் நாவலாசிரியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்த நாவலைப் படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1958-ல் தயாரித்து இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைப்படக் கதை காதலா கடமையா நாவலின் கதையோடு ஒத்திருந்ததுதான். இத்துடன் பெண்ணுள்ளம், இஸ்லாமும் பெண்களும் உள்பட பத்து நூல்களை சமுதாய நலனுக்காக எழுதியவர். 1998ம் ஆண்டு 81-ம் வயதில் தம்முடைய எழுத்துப் பணியை நிறுத்திக் கொண்டார். ஆம், அந்த ஆண்டுதான் அவர் மறைந்தார்.

ஒரு நாட்டின் இளவரசனுக்கு முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இளவரசனுக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்கச் செய்யும் சதிகாரர்கள் தங்களுக்கு வேண்டிய ஒருவனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்கிறார்கள். இந்த நேரத்தில் இளவரசனைப் போல் உருவ ஒற்றுமையுடைய ஒருவன் வெளியூரில் இருந்து வருகிறான். அவனைச் சந்தித்த இளவரசனின் ஆதரவாளர்கள் தற்காலிகமாக அவனுக்கு முடி சூட்டுகின்றனர். மக்களும் இளவரசியும் அவனை உண்மையான இளவரசன் என்றே நம்புகின்றனர். நாட்டுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைத் தீட்டுகிறான். இறுதியில் சிறை வைக்கப்பட்ட உண்மையான இளவரசனை , இளவரசனாக நடிப்பவன் மீட்டு வருகிறார்.

‘காதலா கடமையா?’ நாவலின் இந்தக் கதைச் சுருக்கம்தான் நாடோடி மன்னனுக்கு அடிப்படைக் கதையாக அமைந்திருந்ததை காண முடிந்தது.

நாடோடி மன்னனுக்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவர் ரவீந்தர் (இயற்பெயர் : ஹாஜா முஹைதீன்). இவரும் நாகூரைச் சேர்ந்தவர். 74 வயதான இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவரிடம் நேரில் சென்று ‘காதலா கடமையா’ நாவல் தாங்கள் வசனம் எழுதிய நாடோடி மன்னன் படக்கதையுடன் ஒத்துள்ளதே என்று கேட்டேன். அதை அவர் ஒப்புக் கொண்டார்.

நாடோடி மன்னன் கதை விவாதத்தின்போது  எம்.ஜி.ஆர் அவர்கள் ரவீந்தரிடம் பாதிக்கதை வரையில் சொல்லிக்கொண்டு இருந்தபொழுது  மீதிக்கதையை ரவீந்தர் சொல்லி முடித்தார். இதைக் கேட்டு வியந்த எம்.ஜி.ஆரிடம் ‘காதலா கடமையா?’ என்ற நாவலில் படித்த கதைதான் இது என்று ரவீந்தர் தெரிவித்தார்.

‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசனாக நடிப்பவன் மக்களுக்காக போடும் சமுதாய நலத்திட்டங்கள் சிறப்புக்குரியதாக அமைந்தது. இதே திட்டங்கள் நாடோடி மன்னன் படத்திலும் மக்களிடத்தில் பரபரப்பை உண்டாக்கிய காட்சியாக அமைந்திருக்கிறது.

‘காதலா கடமையா?’ நாவலில் மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் :

1. 18 வயது முதல் 45 வயதுக்குள் புத்தகப் பயிற்சி அளித்து கல்வியில் ஆர்வத்தை ஊட்ட வேண்டும்.
2. வைத்திய வசதிகள்
3. பயிர்த்தொழில், குடிசைத் தொழில் பெருக்குதல்
4. பெண்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்தல். உயர்கல்விச்சாலையும் அமைத்தல். அனாதை விடுதி, தனி மருத்துவமனை அமைத்தல்.
5. ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க வசதி.
6. ஏழை பணக்காரர் வேற்றுமையை நீக்குதல்

இதே கருத்துக்கள்  நாடோடி மன்னன் திரைப்படத்தில்  இளவரசனாக நடிப்பவன் போடும் சட்டமாகும்.

1. ஐந்து வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாயமாக்குதல்
2. பயிர்த்தொழில் செய்தல்
3. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்களைக் கட்டுதல்
4. பயிர்த்தொழில் செய்தல்
5. கல்வி வைத்திய வசதி ஏற்படுத்துதல்
6. வாழ்விழந்த பெண்களுக்காக செலவிடுதல், மருத்துவமனை அமைத்தல்
7. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி ஏழை பணக்காரர் வேறுபாடு நீக்குதல்
8. வயோதிகர், கூன், குருடு, முடம் போன்றோர்க்கு உதவி செய்தல்
9. கலப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புச் சலுகை
10. உழுபவனுக்கே நிலம் சொந்தம்
11. கற்பழித்தால் தூக்கு தண்டனை
…. என்று இடம் பெற்றுள்ளன.

‘காதலா கடமையா?’ நாவலின் சமுதாய கருத்துக்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த காரணத்தால் நாடோடி மன்னனில் அதே கருத்துக்களுடன் சில புதிய சிந்தனைகளையும் சேர்த்து ரவீந்தர் வசனமாக எழுதியுள்ளார்.

நாவலில் இடம்பெறும் திட்டங்களும் படத்தில் இடம்பெறும் திட்டங்களும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதைக் காணலாம்.

நாடோடி மன்னனில் இளவரசனாக நடிப்பவனிடம் அவன் காதலி ,’அத்தான் நாம் காதலோடு பிறப்பதில்லை. கடமையோடுதான் பிறக்கிறோம். உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டால் நாடு நலம் பெறும்’ என்று குறிப்பிடுகிறாள். ‘காதலா கடமையா?’ என்ற நாவலின் தலைப்பு நாடோடி மன்னன் திரைப்பட வசனத்திலும் அப்படியே வந்துள்ளது. இது வசனகர்த்தா ரவீந்தரிடம் நாவலின் தலைப்பு ஏற்படுத்திய ஆழமான தாக்கமாகக் கருதலாம்.

‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசன்  சிறை வைக்கப்பட்டு இருக்கும் தீவு மாளிகையும், இளவரசனாக நடிப்பவன் சண்டையிட்டு மீட்கும் காட்சியும் நாடோடி மன்னன் திரைப்படத்திலும் அப்படியே இடம் பெற்றுள்ளன.

இதைப்போல நாடோடி மன்னன் திரைப்படத்தில் வரும் பல காட்சிகள் ‘காதலா கடமையா?’ நாவலில் வரும் காட்சிகளைப் பின்பற்றி அமைத்து இருக்கின்றன.

‘காதலா கடமையா?’ நாவல் நாடோடி மன்னன் திரைப்படம் முழுவடிவம் பெறுவதற்கு முன்னோடியாகவும் பின்னோடியாகவும் அமைந்துள்ளது.

இனிய தமிழ்நடையில் சித்தி ஜூனைதா பேகம் எழுதிய ‘காதலா கடமையா?’ நாவலுக்கு மதிப்புரை வழங்கிய உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் ‘‘மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூல் எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகிறது. பொதுமக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிறேன்’’ என வரிக்கு வரி வியந்து போற்றுகிறார் தமிழ்த் தாத்தா. இந்த மதிப்புரையே சித்தி ஜூனைதா பேகத்திற்கு கிடைத்த தமிழ்ப் பரிசாகக் கருதலாம்.

இஸ்லாமியப் பெண்கள் எழுத முன்வராத அந்தக் காலத்தில் பெண்ணியச் சிந்தனையை முன்னிறுத்தி ‘எந்தச் சமூகம் பெண் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதோ  அந்தச் சமூகம் ஒரு காலத்திலும் தலைநிமிர்ந்து நிற்க முடியாது’ என்று ‘காதலா கடமையா?’ நாவலில் துடித்துக் கூறியுள்ளார்.

சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், பட்டினத்தார் பாடல் முதலியவற்றை தம்முடைய நாவலில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்

இவரது படைப்புகள் புரட்சிமிக்க கருத்துக்கும், பெண்ணியச் சிந்தனைக்கும் இனிய தமிழ் நடைக்கும் ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கும் சான்றாக உள்ளன. இதைப்போல தமிழ்-தமிழின உணர்வும் இவருடைய உள்ளத்தில் மேலோங்கி நிற்பதை இவரது நாவலில் காண முடிகிறது.

1935களில் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடுக்கி விட்ட காலகட்டத்தில் சித்தி ஜூனைதா பேகம் அவர்கள் தாம் எழுதிய காதலா கட¨மாயா நாவலில் ‘தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய்நாட்டை மீட்பதற்காக உடல், பொருள், ஆவியை தத்தஞ் செய்த பெரியோரைப் பின்பற்றுவேன்’ என்று எழுதி இருப்பது இவரது தமிழ் இனப்பற்றை காட்டுகிறது.

தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு உ.வே.சா ஒரு தமிழ்த்தாத்தா
சித்தி ஜூனைதா பேகம் ஒரு தமிழ்ப் பேத்தி!

நன்றி : டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது, தினகரன்

 

முதல் பதிவு: ஆபிதீன் பக்கங்கள்

மேலதிக விபரங்களுக்கு

காதலா கடமையா வாசிக்க