காந்திக்கு மரியாதை – இனம் இனத்தோடுதான் சேரும்

2 அக்

அகிம்சை உள்ளிட்ட பல அரிய தத்துவங்களைப்(!) போதித்த காந்தியின் 141வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி சிறப்புற கொண்டாடப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த பாஜக தலைவர் அத்வானி, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல பல்வேறு மதத் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்களும் ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி பிறந்த தினம் கொண்டாடப்பட்டது

**************************************************************************

விடுதலையின் பொருளை மாற்றி நாட்டையும் மக்களையும் ஏமாற்றிய ஒரு தலைவனுக்கு(!) இன்று நாட்டையும் மக்களையும் ஏமாற்றி வயிறு வளர்த்துக்கொண்டிருக்கும் தலைவர்கள்(!) மரியாதை செய்வது பொருத்தமானது தான். அகிம்சை என்றும் மகாத்மா என்றும் முகமூடிகள் அன்றிலிருந்து இன்றுவரை தேவைப்படுகின்றன. ஆம், கொள்ளையடிப்பதற்கு முகமூடிகள் தேவைதான்.

காந்தியின் தூரோகத்தனங்களை விரிவாக தெரிந்துகொள்ள வேண்டுமா? இந்த வெளியீட்டைப் படித்துப்பாருங்கள்.

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

ஒரு பதில் to “காந்திக்கு மரியாதை – இனம் இனத்தோடுதான் சேரும்”

  1. maduraisaravanan ஒக்ரோபர் 2, 2010 இல் 7:32 பிப #

    😦

பின்னூட்டமொன்றை இடுக