தொகுப்பு | 11:25 முப

மீண்டும் தெலுங்கானா: போராட்டத்தில் உஸ்மானியா மாணவர்கள்

20 பிப்

 

தெலுங்கானா போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்திலும் வன்முறையிலும் இறங்கியுள்ளனர்.

ஆந்திராவை பிரித்து தெலுங்கான பகுதியை புதிய மாநிலமாக அறிவிக்க கோரி கடந்த 2009 நவம்பரில் உஸ்மானிய பல் கலைக்கழக வளாகத்தில் போராட்டம் வெடித்தது. ராஷ்ட்ரிய சமிதா கட்சி தலைவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். பின்னர் பல்வேறு தரப்பில் வந்த கோரிக்கையை அடுத்து வாபஸ் பெற்றார்.

எனினும் போராட்டம் தெலுங்கான பகுதி முழுவதும் தீவிரமாக நடந்தது. தெலுங்கானா பகுதியை சேர்ந்த எம்.பி.,எம்.எல்.ஏக்கள் தெலுங்கானாவை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். மேலும் தங்கள் எம்.பி.,எம்.எல்.ஏ பதவியை கூண்டோடு ராஜினாமா செய்ய போவதாக மிரட்டினர்.

பல்வேறு நெருக்கடி சூழல் நிலைகளுக்கு பிறகு ஸ்ரீகிருஷ்னா தலைமையிலான 3பேர் கமிட்டி அமைக்கப்பட்டது இவர்கள் தெலுங்கான குறித்து பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டனர். பின்பு விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தாக்கல் செய்தனர். அதில் தெலுங்கானா குறித்து உறுதியான முடிவுகள் எட்டப்பட வில்லை.

இந் நிலையில் ஹைதரபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் 5 பேருந்துகளை தீ வைத்து எரித்தனர். மேலும் போலீசார் தங்குவதற்கு பல்கலைக்கழகத்தில் அமைத்திருந்த டெண்ட்டுகளையும் எரித்தனர். இதனை அடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்களின் இந்த போராட்ட சம்பவத்தால் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

************************************************

தனி தெலுங்கானாவோ, ஒருங்கிணைந்த ஆந்திராவோ இரண்டு கோரிக்கைகளுமே உலகமய ஆதாயங்களுக்கு வெளியே செயல்படமுடியாது. நிர்வாக வசதி என்பதும் உலகமய நலனையே மையாமாக கொண்டிருக்கிறது. இந்நிலையில் எது சரியானது?

விரிவாக அறிந்துகொள்ள இந்த‌க் கட்டுரையை படியுங்கள்

தெலுங்கானா: அன்றோடு இன்று பொருந்துமா?