Tag Archives: குர் ஆன்

முகம்மதின் இரவுப் பயணம் .. .. ..?

9 ஆக

உம்மு ஹானி :   முஹம்மது நபியுடைய பெரிய தகப்பனார் அபூ தாலிபின் மகள். இவரது உண்மையான பெயர் ஃபகிதா. உம்முஹானியை விரும்பிய முஹம்மது நபி திருமணம் செய்து தருமாறு அபூ தாலிபிடம், கேட்கிறார். ஆனால் ஏதோ சில காரணங்களால்   அபூ தாலிப் மறுத்து, உம்மு ஹனியை, ஹூபைரா என்பவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். தன் கணவருடன் அபிசீனியாவில் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் இறந்ததால், மக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தார்.

                தாயிப் நகரத்திற்கு தன்னுடைய புதிய மார்க்கத்தைப் பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்யச் சென்ற முஹம்மது நபி, தாயிப் நகரவாசிகளின் ஏளனச் சொற்களால் தாக்குதலுக்குள்ளானார். முயற்சி தோல்வியடைந்த மனவேதனையுடன் கஅபாவில் படுத்திருந்தவர், இரவில் எல்லோரும் உறங்கியவுடன் யாரும் அறியாமல் எழுந்து உம் ஹனியின் வீட்டிற்குச் சென்றார். இது முஹம்மது நபியுடைய மனைவி கதீஜா மற்றும் பெரிய தகப்பனார் அபூ தாலிப் ஆகியோரது மரணத்திற்குப் பின் நிகழ்ந்த சம்பவம்.

                கஅபாவில் படுத்திருந்த முஹம்மது நபியயை காணவில்லை என மக்கள் தேடிய பொழுது அவர் உம் ஹனியின் வீட்டிலிருந்து வெளியே வந்தவர், மக்காவின் கஅபாவில் இருந்து ஜெருசலேமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) என்ற புனிதமான பள்ளிவாசல் வரை வான்வெளி பயணம் மேற்கொண்டு, அங்கு மற்ற நபிமார்களுடன் தொழுகையில் ஈடுபட்டு, அதன் பிறகு அங்கிருந்து அல்லாஹ்வை சந்திக்க, ஏழாம் வானம் வரை சென்ற தனது விண்வெளி  பயணத்தைப் பற்றி மக்களிடம் கூறுகிறார். முஹம்மது நபியின் விண்வெளிப்பயணத்தை குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது,

தன்னுடைய அடியாரை ஓரிரவில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவுப் பயணம் செய்வித்த ஒருவன் மகாப் பரிசுத்தமானவன்…

(குர் ஆன் 17:1)

 புகாரி ஹதீஸ் 3207

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

நான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் சாறையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான புராக் என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம்…

(நெஞ்சைப்பிளந்து OPEN HEART SURGERY செய்து பாவம் நீக்கப்பட்ட கதையை இவர் சிறுவயதிலிருந்து கூறிக் கொண்டிருக்கிறார். பாவத்தை அறுவை சிகிச்சையால் நீக்க  முடியுமா? அறுவை சிகிச்சையால் பாவங்கள் நீக்கப்பட்டது முஹம்மது நபிக்கு மட்டுமே. சந்தேகமே இல்லை இவர் மிகப்புதுமையான இறைத்தூதர்தான்!)

இச்சம்பவத்தைப்பற்றி உம்முஹனி கூறுகையில்

From Ishaq: 184

“Umm (Hani), Abu Talib’s daughter, said: “The Apostle went on no journey except while he was in my house. He slept in my home that night after he prayed the final night prayer. A little before dawn he woke us, saying, ‘O Umm, I went to Jerusalem.’ He got up to go out and I grabbed hold of his robe and laid bare his belly. I pleaded, ‘O Muhammad, don’t tell the people about this for they will know you are lying and will mock you.’ He said, ‘By Allah, I will tell them.’ I told my negress slave, ‘Follow him and listen.’”

 

(அபூதாலிப்பின் மகள் உம்மு (ஹானி) கூறுவதாவது,

(அல்லாஹ்வின்) தூதர் என்வீட்டிலிருந்ததைத்தவிர எந்தப் பயணத்திற்கும் செல்லவில்லை. இரவு வணக்கத்திற்குப் பின் என் வீட்டில் உறங்கிவிட்டார். அதிகாலைக்கு சற்று முன்பாக எங்களை எழுப்பி, ” ஓ, உம்மு நான் ஜெருசலேமிற்கு சென்றிருந்தேன்” என்று கூறி, வெளியே செல்ல முயன்றவரை அவரது உடையைப் பிடித்து இழுத்து நிறுத்தினேன். “ஓ முஹம்மதே இதைப்பற்றி மக்களிடம் கூறாதீர், அவர்கள் நீங்கள் பொய் சொல்வதாகக் கூறி ஏளனம் செய்வார்கள் என்றேன். “அல்லாஹ்விற்காக, அவர்களிடம் நான் கூறுவேன்” என்றார். நான், என் நீக்ரோ அடிமையிடம், அவரை பின்தொடர்ந்து சென்று கவனிக்க கூறினேன்)

                தன்னுடைய பயண நினைவுகளில் மூழ்கியவாறு பள்ளியில் அமர்ந்திருந்த முஹம்மது நபியை காணும் அபூஜஹ்ல், “ஏதாவது செய்தி இருக்கிறதா?” என்றார். நபி பதிலளிக்கையில், “ஆம். நேற்று இரவு ஜெருசலேம் அழைத்துச் செல்லப்பட்டேன்.” என்றார். தான் கேட்டது சரிதானா என்பதற்காக மறுபடியும், “ஜெருசலேமிற்கா?” என்றார் அபூஜஹ்ல்.

                முஹம்மதை ஒரு பொய்யர் என்று நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்ததாக நினைத்த அபூஜஹ்ல் முஹம்மது நபியிடம், “நான் மற்றவர்களையும் அழைத்து வருகிறேன் அவர்களிடமும் இதைக் கூற முடியுமா? என்றார். அதற்கு சிறிதும் தயக்கமின்றி “ஆம்” என்றார். தன் பயண நிகழ்வுகளை அவர்களிடம் கூறினார். முஹம்மது நபியின் கூற்றைக் கேட்ட மக்கள் சிரித்து வெவ்வேறு முறைகளில் ஏளனம் செய்கின்றனர். அம்மக்கள் தங்களது சந்தேகங்களை  தீர்க்கும் வகையில், அங்கு எத்தனை கதவுகள் இருந்தது?, எத்தனை ஜன்னல்கள் இருந்தது? அங்கு நிலவிய தட்பவெப்ப நிலை என்ன? என்பது போன்ற பலவிதமான கேள்விகளை மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றி கேட்கின்றனர்.

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்

காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர். ”உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)

Sahih Al-Bukhari HadithHadith 6.233

Narrated by Jabir bin Abdullah

The Prophet said, “When the Quraish disbelieved me (concerning my night journey), I stood up in Al-Hijr (the unroofed portion of the Ka’ba) and Allah displayed Bait-ul-Maqdis before me, and I started to inform them (Quraish) about its signs while looking at it.”

(நபி கூறுகிறார், குரைஷிகள் என்னை நம்பவில்லை, நான் அல் ஹிஜ்ர் (கஅபாவின் கூரையிடப்படாத பகுதி) முன் நின்று கொண்டிருந்தேன். அல்லாஹ் பைத்துல் முகத்தஸ் என் முன்னே காண்பித்தான். நான் பார்த்த அடையாளங்களை அவர்களுக்கு கூறினேன்)

 

முஸ்லீம் ஹதீஸ் எண்: 251அத்தியாயம்: 1, பாடம்: 1.75,

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)

“(கஅபாவின்) ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் வைத்து (எனது இரவுப் பயணத்தைப் பற்றிக்) குறைஷிகள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு நினைவில் இல்லாத, பைத்தில் மக்திஸ் பள்ளி சார்ந்த (அடையாளங்கள்) சிலவற்றை என்னிடம் அவர்கள் கேட்டபோது முன்னெப்போதும் நான் வருந்தியிராத அளவுக்கு எனக்கு வருத்தம் மேலிட்டது. அப்போது பைத்துல் மக்திஸை அல்லாஹ் எனக்குக் காட்டினான். அதைப் பார்த்துக் கொண்டே அவர்கள் கேட்ட ஒவ்வொன்றைப் பற்றியும் விபரம் தெரிவித்தேன்”.

“(பைத்துல் மக்திஸில்) இறைத்தூதர்களில் ஒரு குழுவினர் இருக்கக் கண்டேன். அங்கு மூஸா (அலை) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்து ஆண்களைப் போன்று வாளிப்பான தோற்றத்துடன் இருந்தார்கள். அங்கு மர்யமின் மைந்தர் ஈஸா(அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களுள் (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்களைத் தோற்றத்தில் மிக நெருக்கமாக ஒத்திருந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களை, சாயலில் மிகவும் ஒத்திருப்பவர் உங்கள் தோழர்(ஆகிய நான்)தான்”.

“அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறைத்தூதர்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினேன். தொழுது முடித்தபோது (என்னிடம்) ஒருவர், முஹம்மதே! இதோ இவர்தாம் நரகத்தின் காவலர் மாலிக். அவருக்கு ஸலாம் சொல்லுங்கள்! என்று கூறினார். நான் அவரை நோக்கித் திரும்பியபோது அவர் முந்திக் கொண்டு எனக்கு ஸலாம் சொல்லி விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Ishaq:183

“Upon hearing this many became renegades who had prayed and joined Islam. Many Muslims gave up their faith. Some went to Abu Bakr and said, ‘What do you think of your friend now? He alleges that he went to Jerusalem last night and prayed there and came back to Mecca.’

(இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருந்தவர்கள், இதை கேட்டவுடன் நம்பிக்கையிழந்தனர். சிலர் அபூபக்கரிடம் சென்று, “கடந்த இரவில் ஜெருசலேம் சென்று அங்கு தொழுகை நடத்தி மெக்காவிற்கு திரும்பியதாக உறுதியாக கூறும், உங்களது நண்பரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டனர்)

அவர் (முஹம்மது நபி) இதைக் கூறியிருந்தால் நம்புகிறேன், ஆம் அவர் கூறியது அனைத்தையும் நம்புகிறேன் உண்மையே என்றார். அபூபக்கர், இதன் பிறகே  சித்தீக் (உண்மையே கூறுபவர்) என்ற அடைமொழியுடன் அபூபக்கர் சித்தீக் என்று அழைக்கப்படலானார்.  ஆயினும் இந்த நிகழ்வை ஏற்க மறுத்து  சிலர் இஸ்லாமை விட்டு விலகினர். இச்சம்பவத்தின் பொழுது 70 – 80 பேர்களே இஸ்லாமை ஏற்றிருந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

“மஸ்ஜித்” என்பது முஸ்லிம்கள் கூட்டுத் தொழுகை நடத்தும் வழிபாட்டு இடத்தைக் குறிக்கும். “அல்மஸ்ஜிதுல் ஹராம்” என்பது சவூதி அரேபியாவின் மக்காவிலுள்ள கஅபாவைக் குறிக்கும். “அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்பது ஃபலஸ்தீனின் ஜெருசேலத்தில் உள்ள பைத்துல் மக்தஸைக் குறிக்கும்.

                இந்த விண்வெளிப் பயணம் தொடர்பான செய்திகள் அனைத்தும் வரலாற்று ஆதாரங்களுக்கு எதிரானவைகள். தாவூது நபி மற்றும் சுலைமான் நபியால் கிமு 958-951 கட்டப்பட்ட ஆலயம், கிமு 1004 -ல் கட்டி முடிக்கப்பட்டது. கிமு 586-ல் நெபுகத்நெஸ்ஸார் என்ற பாபிலோனிய மன்னரின் படையெடுப்பில் அந்த ஆலயம் முற்றிலும் தகர்கப்பட்டது. இரண்டாவது கட்டப்பட்ட ஜெருசலேம் ஆலயம், கிபி 70 ஆண்டு டைட்டஸ் என்ற ரோமானிய மன்னரின் படையெடுப்பில் அதாவது நபி பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்கள் அந்த யூதக் கோவிலை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கி அந்த யூதக் கோவிலை இருந்த இடம் தெரியாதவாறு செய்து விட்டனர். இப்பொழுது நீங்கள் பார்க்கும் எண்கோண (Octagon)  வடிவ பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா (Dome of Rock) கலீபா அப்து அல்-மாலிக் இப்ன் மர்வான் என்பவரால் கிபி 691-ல் கட்டப்பட்டது அதாவது நபியின் மரணத்திற்கு பின் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு  கட்டப்பட்டது. கிபி 1016 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முற்றிலும் அழிந்த கட்டிடத்தை Zaher Li-l’zaz என்பவரால் கிபி 1022 ல் மீண்டும் கட்டப்பட்டது. அதற்கு கிப்லா இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. கிபி 691வரை மஸ்ஜிதுல் அக்ஸா இல்லை. குர்ஆன் 17:1 வசனம் குறிப்பிடும் மஸ்ஜிதுல் அக்ஸா நபி உயிருடன் இருந்த பொழுது இல்லவே இல்லை.

இந்த வாததிற்கு ஆதாரம் இஸ்லாமிய வரலாற்றிலேயே இருக்கிறது. நபியின் மரணத்திற்குப் பிறகு, கலீபா உமர் அவர்களின் ஆட்சி காலத்தில் ஜெருசலேம் முஸ்லீம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அப்போது அங்கு சென்ற கலீபா உமர் தொழுகைக்கு நடத்த இடம் தேடுகிறார். அங்கு எந்த ஒரு பள்ளிவாசலும் இல்லாததால், கிருஸ்துவ பாதிரியார்  ஒருவர் தங்களது ஆலயத்தில் தொகை நடத்திக் கொள்ள கோரிக்கை வைக்கிறார். கிருஸ்துவ ஆலயத்தில் தொழுகை நடத்த விரும்பாத கலீபா உமர் கத்தாப் அவர்கள்,  குப்பைகூளத்துடன் காணப்பட்ட ஒரு திறந்த வெளியை சுத்தம் செய்து தொழுகை நடத்தியதாக வரலாறு தெளிவாக குறிப்பிடுகிறது.  அந்த திறந்த வெளி எதுவென்றால் சுலைமான் நபி கட்டியதாக கூறப்படும் Solomon Templeஎன்ற யூதக் கோவில் இருந்த இடம்.  நிர்வாக காரணங்களுக்காக,  உமர் அவர்கள் சில நாட்கள் அங்கு தங்கியிருந்தார். மக்களின் தேவைகளை விசாரித்து அறிகிறார். அவர் அங்கு புதிதாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணனிக்கிறார். அது “மஸ்ஜிதுல் உமர்” என்றழைக்கப்பட்டது.

இப்பொழுது என் மனதில் எழும் நியாயமான கேள்வி என்னவென்றால் நபி எங்கிருந்து மிஹ்ராஜ் பயணம் சென்றார்?

கிபி  622-623 ல் குர்ஆன் 17:1 கூறும் மஸ்ஜதுல்அக்ஸா எங்கே?

                மெக்கா நகரவாசிகள் முஹம்மது நபியின் இரவுப் பயணத்தைப் பற்றி குறுக்கு விசாரணை செய்கையில், அல்லாஹ், நபியின் கண்களில் பைத்துல் மக்தஸை தோன்றச் செய்ததாகவும், அதன் அடையாளங்களைப்பற்றி குறிப்பிட்டவுடன், அவர்கள் மறுத்துப் பேச முடியாமல் போனதாகவும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. இல்லாத ஒன்றை எப்படி காண்பிக்க முடியும்? முஹம்மது நபியின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரேபியர்கள் அறியாத ஒரு மஸ்ஜிதைக் குறித்து விசாரணை  செய்து எவ்வாறு உறுதிப்படுத்தியிருக்க முடியும்?

                இது இன்னொரு விவாதத்தையும் முன்வைக்கிறது. முஹம்மது அவர்கள் நபித்துவம் பெற்றதிலிருந்து ஹிஜ்ரத்திற்கு பிறகும் ஒன்றரை ஆண்டுகள் வரை பைத்துல் முகத்தஸ்ஸை கிப்லாவாக கொண்டு தொழுதார்கள். அதன் பிறகே நபியின் விருப்பப்படி மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா) கிப்லாவாக மற்றப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.

நபியே உம்முடைய முகம் (கிப்லா மாற்றக கட்டளையை எதிர்பார்த்து) வானத்தின் பக்கம் திரும்புவதை திட்டமாக நாம் காணுகிறோம். ஆகவே நீர் விரும்புகின்ற கிப்லாவுக்கு உம்மை திண்ணமாக நாம் திருப்பி விடுகிறோம். எனவே உம்முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின்பால் திருப்புவீராக

(குர் ஆன் )

இல்லாத பைத்துல் முகத்தஸ்ஸை நோக்கிய ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் தொழுகை நடந்துள்ளதாகவும் பொருள் தருகிறது. பைத்துல் முகத்தஸ் எங்கே?

இந்த மஸ்ஜிதுல் அக்ஸா தெடர்பான இன்னொரு ஹதீஸையும் பார்ப்போம்

புகாரி ஹதீஸ் :3366,

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் (நபி – ஸல் – அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளி வாசல் எது என்று கேட்டேன். அவர்கள், அல் மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறை இல்லம் என்று பதிலளித்தார்கள். நான், பிறகு எது என்று கேட்டேன். அவர்கள், (ஜெருஸலத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா என்று பதிலளித்தார்கள். நான், இவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது என்று கேட்டேன். அவர்கள், நாற்பது ஆண்டுகள் (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு, தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுது விடு. ஏனெனில் நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது என்று சொன்னார்கள்.

முஸ்லீம் ஹதீஸ் எண்: 808  அத்தியாயம்: 5, பாடம்: 5.01, 

அறிவிப்பாளர் : அபூதர் அல்கிஃபாரீ (ரலி)

“அல்லாஹ்வின் தூதரே! பூமியில் அமைக்கப்பட்ட முதல் இறையாலயம் எது?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்மஸ்ஜிதுல் ஹராம்” என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்டேன். அவர்கள், “அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான், “அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?” என்று கேட்டேன். அவர்கள், “நாற்பதாண்டுகள்” என்று கூறிவிட்டு, “உங்களைத் தொழுகை (நேரம்) வந்தடையும் இடத்தில் நீங்கள் தொழுது கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) அதுதான் (உங்களுக்கு) மஸ்ஜித்” என்று கூறினார்கள்.

இதில் இன்னொரு தவறும் உள்ளது. கஅபா, இப்ராஹிம் நபியால் கிமு 2000 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. (இன்னும் சில ஆதாரங்கள் கஅபா, ஆதம் நபியால் கட்டப்பட்டது என்கிறது.) தாவூது நபி காலத்தல் துவங்கி சுலைமான் நபி, Temple of Solomon (மஸ்ஜிதுல் அக்ஸா / பைத்துல் முக்அதிஸ்)  கிமு 958-1004 ல் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாறுகள் தெளிவாக கூறுகிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட காலம் சுமார் 1040 ஆண்டுகள். முஹம்மது நபி கூறியதில் ஆயிரம் ஆண்டுகள் பிழையுள்ளது.

நாம் விண்வெளி பயணத்தை தொடர்வோம். முஹம்மது நபி  அவர்களின் விண்ணுலகப் பயணத்தில் பல காட்சிகள் காண்பிக்கப்படுகிறது.

புகாரி ஹதீஸ் :  7517   

…”ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவையிரண்டும் நைல் மற்றும் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்” என்று பதிலளித்தார்கள்.…

Readislam.net என்ற இஸ்லாமிய இணையதளத்தின் ‘மிஃராஜ்” பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து…

…ஸித்ரத்துல் முன்தஹாவின் வேரிலிருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும்…

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வரை சுமார் 6695 கிலோ மீட்டர் நீளம் உள்ள நைல் நதி எங்கிருந்து துவங்குகிறது என்று தெரியாமல் குழப்பமிருந்தது. கிபி 1862 ல் நைல் நதியை ஆய்வுசெய்த JOHN HENNING SPEKE என்னும் ஆய்வாளர் விக்டோரியா ஏரியில் உற்பத்தியாவதை கண்டறிந்தார்.  அவரை வரலாறு ஏனோ மறந்தது. பின்னர் கிபி 1937 BRUCKHAR WALDEKKER  ஜெர்மன் ஆய்வாளர் வெள்ளை நைல் உகாண்டாவில் உள்ள விக்டோரியா ஏரியிலிருந்தும், நீல நைல் எத்தியோப்பியாவின் தானா  ஏரியிலிருந்தும் உற்பத்தியாகிறது என்பதை உறுதி செய்தார். இந்த இரண்டு நதிகளும் இணந்து நைல் நதியாக ஓடி மத்திய தரைக் கடலில் கலக்கிறது. சுமார் 2781 கிலோ மீட்டர் நீளம் உள்ள யூப்பரடீஸ் நதி துருக்கியில் துவங்கி சிரியா, ஈராக் வழியே பாய்கிறது.

யூப்பரடீஸ் மற்றும் நைல் நதிகள் ஏழாம் வானத்தில் பிறக்கிறது என்பதை பகுத்தறிவு உள்ளவர்களால் எப்படி ஏற்க முடியும்? கங்கை நதி சிவனின் தலையில் இருந்து வருகிறது என்ற இந்து மதத்தினரின்  நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?.

அன்றைய ஆன்மீக அறிவாளிகள் தங்களுடைய நம்பிக்கைகளுக்க எதிரான கருத்து என்று பூமி உருண்டை என நிரூபித்தவனை கல்லால் அடித்து கொன்றதும், பிறகு தங்களுடைய வேதத்தில் திருத்தம் செய்து கொண்டதும் நீங்கள் மிகத்தெளிவாக அறிந்த செய்தி.

போலந்துக்காரர் கோபர் நிகஸ் (1473-1543) பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கருத்தை வெளியிட்ட பொழுது எத்தனை பேர் அவரை நம்பினார்கள்?  இதே போன்ற மாற்றுக் கருத்தை ஆவேசமாக வெளியிட்ட  கியார்டனோ புரூனோ (1548-1600) என்ற இத்தாலியர், ரோம் நகரில் மதவாதிகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். டைகோ பிராகே (1546-1601) என்பவர் தனது 20 வருட கிரகங்களின் சஞ்சாரங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பை ஜோஹேன்ஸ் கெப்ளர் (1571-1630) என்பவரிவரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்தார். கலிலியோ (1564-1642), கோபர் நிகஸின், கெப்ளர் போன்றவர்களின் கருத்து உண்மையாதே என்று ஆதரத்துடன் நிரூபித்தற்காக அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். தான் தவறான ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு முடிவுகளை கூறிவிட்டதாகவும், பூமி தட்டையானதே என்று அழுது கொண்டே தனது கண்டுபிடிப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க வைக்கப்பட்டார். ஆனால் மனிதனின் அறிவுத் தாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் மதவாதிகளின் இத்தகைய தடைகளை மீறிக் கொண்டு வளர்கின்றன.

சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகே பூமி தட்டையானது, சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்பதைப் போன்ற பல கருத்துகள் தவறானவை என்பதை ஆன்மீகவாதிகள் மெதுவாக உணர்ந்தனர், தங்களது தவறான கோட்பாட்களுக்கும், விளக்கங்களுக்கும் புதிய முலாம் பூசி மறைத்தனர். அடுத்தது குர்ஆன் தனக்குத் தானே முரண்படுவதைப் பாருங்கள்.

 

தஜ்ஜால்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2

பழைய வேதங்களின் நிலையும் குர் ஆனின் குழப்பமும்

சந்திரனும் பிளந்து விட்டது

போர்க்களத்தில் வானவர்கள் .. .. .. அல்லாவின் தகுதி?

போர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..?

8 மே

பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தையும் பலவிதமான உயிரினங்களையும் “குன்” (ஆகுக!) எனும் ஒற்றை சொல்லில் உருவாக்கி, தன் கட்டளையின் கீழ் வைத்தும் நிர்வகிப்பதாக கூறிக் கொள்பவன் நிச்சயமாக வல்லமைமிக்கவனாகவும், நம் அனைவரின் கற்பனைக்கு எட்டாத அளவு ஞானம் உள்ளவனாக இருக்க வேண்டும். அத்தகைய சர்வ வல்லமைமிக்க ஆற்றல் தன்னால் படைக்கப்பட்ட படைப்பினத்தில் இருந்த ஒரு மிகச்சிறிய அற்ப மனித கூட்டத்தை கட்டுப்படுத்த அல்லது அழிக்க, போர்வியூகம் அமைத்து, கையில் வாள் ஏந்திய மலக்குகளை குதிரையில் ஏற்றி, முஹம்மது நபிக்கு ஆதரவாக போரிட போர்க்களங்களில் இறக்கினான். என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
புகாரி ஹதீஸ் -4118
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்ற போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனி வந்ததால் கிளம்பிய புழுதியை (இப்போது கூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
புகாரி ஹதீஸ் -2813
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி 4 அல்லது 5ஆம் ஆண்டில் நடந்த) அகழ் போரின் போது (போரின் முடிந்து) திரும்பி வந்து ஆயுதங்களை கீழே வைத்து விட்டு குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) தமது தலையை புழுதி மூடியிருக்க வந்தார்கள். நபி (ஸல்) அவர்களை நோக்கி நீங்கள் ஆயுதத்தை கீழே வைத்து விட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை கீழே வைக்கவில்லை என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள் என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதோ இங்கே ! என்று பனூ குறைழா ( என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்கும் இடம்) நோக்கி சைகை காட்டினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதரும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்
(புகாரி 2813,4117,4118).
அசூரர்களை அழிக்க கடவுளர்களும், தேவர்களும் பலவிதமான சிறப்பு ஆயுதங்களுடன் போரிட்டதாக கூறும் இந்துமத புராண கட்டுக்கதைகளை விட சிறுபிள்ளைத்தனமானது. ஏனெனில் அவைகளில் காண்பிக்கப்படும் அசூரர்கள் பலவிதமான மாயசக்தி கொண்டவர்கள், அவர்களது கடவுளர்களுடன் நேரடியாக போரில் ஈடுபடும் அளவுக்கு வல்லமையுடையவர்கள். அசூரர்கள் எனப்படுபவர்கள் சராசரி மனிதர்களில்லை.
நபி (ஸல்) அவர்களின் எதிரிகள் அபூஜஹல் மற்றும் அவனுடய கூட்டத்தினரை பலவாறு சபிக்கறான். சவால் விடுகிறான். உடன்படிக்கை செய்து கொள்கிறான் (குர் ஆன் 8:56,57,58,61, 9:4). வேறு வழியில்லாமல் போருக்கு வியூகம் வகுக்கிறான் (குர் ஆன் 4:101, 102, 103, 104, 8:60). ஆயிரக்கணக்கில் மலக்குகளை அனுப்பி வாளெடுத்து போர் புரிய வைக்கிறான் (குர் ஆன் 3:124, 125, 8:9).
உங்களுடைய ரப்பிடத்தில் நீங்கள் பாதுகாவல் தேடிய பொழுது தொடர்ந்து அணிவகுத்து முன்னே) வரும்படியான ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு நிச்சயமாக நான் உதவி செய்பவனாக இருக்கிறேன் என்று உங்களுக்கு அவன் பதிலளித்தான்.
(குர்ஆன் 8: 9)
உம்முடைய ரப்பு மலக்குகளிடம், நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். எனவே முஃமின்களை நீங்கள் உறுதிப்படுத்தங்கள். காஃபிரானவர்களின் இதயங்களில் திகிலை விரைவில் போடுவேன்; ஆகவே கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள் அவர்களிலிருந்து ஒவ்வொரு கணுவையும் வெட்டுங்கள் என்று அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)
(குர்ஆன் 8:12)
(பத்ருப்போரில்) அவர்களை நீங்கள் வெட்டவில்லை எனினும் அல்லாஹ் வெட்டினான். (மண்னை அவர்களின் மீது) நீர் எறிந்த போது (அதை நபியே) நீர் எறியவில்லை எனினும் அல்லாஹ் எறிந்தான்…
(குர் ஆன் 8:17)
1000 அல்லது 3000 அல்லது 5000 போர் அடையாளம் உள்ள மலக்குகளை அல்லாஹ் அனுப்பியதாகவும் ஹதீஸ்களிலும் காணப்படுகிறது

புகாரி ஹதீஸ் -3995
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், இதோ ஜிப்ரீல்! போர்த்தளவாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை) ப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள்.
முஹம்மது நபி அவர்களின் எதிரிகள் எவ்வித சிறப்பு சக்திகளும் இல்லாத நாகரீகமறியாத மிகச் சாதாரண மனிதர்கள். சில ஆயிரங்களில் மட்டுமே எண்ணிக்கை கொண்டவர்கள். அவர்களிடம், வாள், அம்பு, ஈட்டி, கற்களைத் தவிர எந்த சிறப்பு ஆயுதங்களும் கிடையாது. குதிரைகள், ஒட்டகங்களைத் தவிர எந்த வாகன வசதியும் கிடையாது. மேலும் இன்று இஸ்லாமுக்கு எதிராக உள்ளவர்களின் எண்ணிக்கையில் மிக சொற்பமானவர்கள். இன்றுள்ளது போல எவ்வித தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியும் அவர்களுக்கு கிடையாது.
எதிரிகளுடன் போர் புரிய உற்சாகப்படுத்துகிறான்,

தங்களுடைய சத்தியங்களை முறித்து (நம்) ரஸூலை (ஊரைவிட்டு) வெளியேற்ற எண்ணிய கூட்டத்தாரிடம் நீங்கள் போர் புரிய வேண்டமா? அவர்கள் (தாம்) முதன் முறையாக உங்களிடம் (போரைத்) துவக்கினர்; அவர்களுக்கு அஞ்சுகறீர்களா? அல்லாஹ்–அவனே அஞ்சுவதற்கு மிகத் தகுதியானவன்- நீங்கள் (உண்மையான) முஃமின்களாக இருந்தால்.
(குர் ஆன் 9:13)

புஹாரி ஹதீஸ் : 3992
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, உங்களிடையே பத்ருப் போரில் கலந்து கொண்டவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள் என்றோ அல்லது அதுபோன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவ்வாறு தான் வானவர்களில் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்) என்று கூறினார்கள். இந்த ஹதீஸை பத்ருப் போரில் கலந்து கொண்டவரான ரிஃபஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரகீ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் பின் ரிஃபஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

போர் புரிய வராதவர்களை எச்சரிக்கிறான் (குர் ஆன் 9:39,81,83,90,93–97), சபிக்கிறான் (குர் ஆன் 8:16, 9:94–97). வெற்றி பெற்றவுடன் மகிழ்ச்சியால் திளைக்கிறான். போரில் கைப்பற்றிய பெண்கள் மற்றும் இதர பொருட்களை பங்கு பிரித்து தருகிறான் (குர் ஆன் 48:15). முஹம்மது நபி அவர்களின் படை புறமுதுகிட்டால் எச்சரிக்கிறான், சபிக்கிறான்.
(அல்லாஹ்வின்) ரஸூல் உங்களுக்கு பின்னாலிருந்ருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க எவர்பக்கமும் நீங்கள் திரும்பிப்பார்க்காமல் விரண்டோடிக் கொண்டிருந்ததை (நினைத்துப்பாருங்கள்) எனவே (நீங்கள் ரஸூலுக்கு கொடுத்த) துக்கத்திற்கு பகரமாக (தோல்வி எனும்) துக்கத்தை உங்களுக்கு பிரதிபலனாகக் கொடுத்தான்…
(குர் ஆன் 3:153)

முஹம்மது நபி அவர்களின் மனைவியருக்கிடையே ஏற்படும் சக்களத்தி சண்டையை பஞ்சாயத்து செய்கிறான். யாரும் எந்த கேள்வியும் கேட்கக் கூடாதென்பதற்காக நபியே உம்மை படைக்கவில்லையென்றால் இந்த பிரபஞ்சத்தையே படைத்திருக்க மாட்டேனென்றும், நீரே இறுதித் தூதர் என்றும் பாதுகாப்பளிக்கிறான். யாராவது உயிர், ரூஹ் என சிக்கலான கேள்வியை கேட்டால், வஹி வரும் வேளையில் இது போன்ற கேள்விகள் வஹியை தடுத்து விடும் தேவையற்ற வீண் கேள்விகளால் உங்களது முன்னோர்கள் அழிந்ததைப் போன்று நீங்களும் அழிய வேண்டாம் என எச்சரிக்கிறான். (குர் ஆன் 2:108).

இவைகளை பார்க்கும் போது உங்களுக்கு புரிவது என்ன? ஊதிப் பெருக்கப்பட்டிருக்கும் அல்லாஹ் என்பதன் தகுதிக்கு பொருத்தமானவைகளா இவை? குதிரையில் ஏறி, வாளெடுத்து, போர்புரிந்து வெட்டிச் சாய்த்துத்தான் சக மனிதர்களிடமிருந்து தனக்கு அதி முக்கியமான முகம்மதை காக்க முடியும் என்றால் (முகம்மதைப் படைக்கவில்லை என்றால் பிரபஞ்சத்தையே படைத்திருக்க மாட்டேன் என்பதைக் கவனிக்கவும்) அவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் கோள்களையும் விண்மீன்களையும் இன்னும் அனைத்தையும் குன் என்று சொல்லி படைக்கும் தகுதி பெற்ற அந்த அல்லாஹ்வை எண்ணி சிரிக்கத் தோன்றுகிறதா?

தஜ்ஜால்

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2

பழைய வேதங்களின் நிலையும் குர் ஆனின் குழப்பமும்

சந்திரனும் பிளந்து விட்டது

பெண்ணியம் குறித்து எதுவுமில்லாத பெண்கள் இதழ்

14 டிசம்பர்

அண்மையில் “ஹைர உம்மத்” எனும் காலாண்டிதழ் எனக்கு கிடைத்தது. கடையநல்லூரிலிருந்து ‘பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் இதழ்’ என்ற அறிமுகத்துடன் அந்த இதழ் எனக்குக் கிடைத்ததால் மிகுந்த ஆர்வத்துடன் புரட்டினேன். ஆனால் என்னுடைய ஆர்வத்திற்கு ஈடான ஏமாற்றமே எனக்கு கிடைத்தது. அந்த இதழில் இருந்த தொடர்பு மின்னஞ்சல் முகவரிக்கு என்னுடய கருத்தை எழுதி, “ஒரே ஒரு இதழை மட்டும் வாசித்துவிட்டு முடிவு செய்வது பொருத்தமாக இருக்காது என்பதால் உங்கள் இதழ் குறித்த விபரங்களையும், கடந்த இதழ்களில் வெளிவந்த மிகச்சிறந்த கட்டுரையாக நீங்கள் கருதும் சிலவற்றை அல்லது அதன் கருத்துகளை குறிப்பிடுங்கள்” அஞ்சலை எழுதி அனுப்பிவிட்டு காத்திருக்கிறேன். இன்றுவரை பதிலில்லை.

 

குறுகிய அளவில் ஒரு இதழை நடத்துவது என்பது இன்றைய நிலையில் ஓரளவுக்கு எளிதான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் ஒரு இதழ் எதற்காக நடத்தப்படுகிறது என்பதை தெளிவுபடுத்துவது முதன்மையான ஒன்றாகும். அந்த வகையில் ‘பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் இதழ்’ எனும் அறிமுகத்துடன் கிடைத்த அந்த இதழில் பெண்களுக்கு என்று எதுவும் இல்லை என்பது ஆச்சரியமளிக்கும் ஒன்று.

 

அந்த இதழில் இடம்பெற்றுள்ளவைகளின் தலைப்புகள்,

எப்போது வரும் அந்தக் காலம்?
தகர்த்தெறியப்பட்ட நம்பிக்கைகள்
குர் ஆனைப் படித்துணர்வோம்
தூரிகை இல்லாக் காலத்தின் ஓவியங்கள்
அல்லாஹ்வின் குழுவினர்
குர் ஆன் மனன அட்டவணை
இம்மை முதல் மறுமை வரை
குர் ஆனைப் படித்து வியந்தேன்
காரிருளிலிருந்து பேரொளிக்கு
கட்டப்பஞ்சாயத்து
பிற இயக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாமா?
கண்ணொளி
செவியுற்றொம் கீழ்ப்படிந்தோம்
பெண்களின் ஜிஹாத்
சிந்திக்கச் சில சான்றுகள்
வியக்கவைக்கும் வான்மறை
நூலரங்கம்
குர் ஆனில் பெண்கள்
இவர்களை இறைவன் நேசிக்கிறான்

இதில் தலையங்கம் தவிர்த்த ஏனைய எதிலும் சமூகம் சார்ந்த எந்த ஒரு விசயமும் இல்லை, அதுவும் மதரீதியாக முன்னிலைப்படுத்தப்படும் ஒரு விசயம் என்பதும் கவனத்திற்குரியது. ஏன்? பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் ஒரு இதழில் பெண்களுக்கு சொல்வதற்கென்று எதுவும் இல்லையா? இந்த இதழ் குரான் சிறப்பிதழ் என குறிப்பிட்டுள்ளார்கள். என்றாலுமே கூட குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண்களுக்கானவற்றைக் கூட எடுத்துக்கொண்டு விளக்கலாம், விவரிக்கலாம், ஆய்வுக்கு உட்படுத்தலாம். சமூகம் சார்ந்தும், மதம் சார்ந்தும் பெண்களுக்கென்று எதுவும் இல்லாமல் பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் இதழ் என்பதில் என்ன பொருள் இருந்துவிட முடியும்?

 

பொதுவாக மத அடிப்படையில் சிந்திப்பவர்கள், பெண்கள் உரிமை, பெண்ணியம் என்றதும் இன்றைய நுகர்வுக்கலாச்சார, முதலாளிய சீரழிவுகளைச் சுட்டிக்காட்டி பாருங்கள் மதம் கூறும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காததால் தான் இவ்வாறெல்லாம் நேருகின்றன என எளிமைப்படுத்தி விடுவதுதான் போக்காக இருக்கிறது. ஆனால் இன்றைய நிலையின் அடிப்படை என்ன? அது எந்த விதத்தில் மதவாத அடிப்படைகளோடு ஒன்றிப்போகின்றன என்பனபோன்ற ஆழமான சிந்தனைகளை செய்வதுமில்லை, செய்வதற்கு ஊக்குவிப்பதும் இல்லை. மதவாதத்திற்கு எதிராக பெண்ணியம் குறித்து பேசினால் ஆடை அவிழ்ப்பிற்கும், குடிப்பதற்கும் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று மடைமாற்றிவிடுவது அவர்களுக்கு வழக்கமாக இருக்கிறது. பொதுவாக மதம் அனுமதிப்பதே பெண்களுக்கான சுதந்திரத்தின் எல்லை என அடம்பிடிப்பது அதற்கு எதிராக பேசுபவர்களைத் தூற்றுவது என்பதுதான் அவர்களின் நிலை. இதற்கு இசைவாகத்தான் பெண்களுக்கான இதழ் எனும் பெயரில் மதத்தை முதன்மைப் படுத்துகிறார்கள்.

 

அண்மையில் கடையநல்லூரில் வினாயகர் சதூர்த்தி ஊர்வலத்தின் போது நடந்த ஒரு சம்பவம் இது, பெண்களுக்கு எது தேவையாய் இருக்கிறது என்பதை உணர்த்தும் சம்பவமாகவும் இது இருக்கிறது. கடையநல்லூரில் கடைவீதியில்(பஜார்) மக்கள் நெருக்கடி மிக்க ஐஓபி வங்கி எதிரில் மூக்கையா லாலா கடை அருகில் ஒரு பெண் நடந்து செல்கிறாள். ஊர்வலம் முடிந்து திரும்பும் காவிக் கழிசடைகளில் இருவர் தானியில்(ஆட்டோ) இருந்து அந்தப் பெண்ணை வழி மறித்து இற‌ங்கி துணிச்சலாக மாரில் கைவைத்து விட்டு தப்பிச்செல்கிறார்கள். அந்தப் பெண் என்ன செய்வதென்று தெரியாமல் அழுகிறாள். சுற்றி இருப்பவர்கள் சுதாரிப்பதற்குமுன் தானி விரைந்து சென்றுவிடுகிறது. அங்கிருந்தவர்கள் செய்தி பரவிடாமல் இருப்பதற்காக எச்சரித்து விரைந்து அந்தப்பெண்னை அனுப்பிவிட்டு கலைகிறார்கள். இது எந்த விதத்தில் ஒரு பெண்ணைக் காக்கும்? முதலில் இப்படி ஒரு நிகழ்வை எதிர்கொள்ள அந்தப் பெண்ணுக்கு துணிவில்லை. அந்தப்பெண் மட்டுமல்ல கடையநல்லூரில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த எந்தப் பெண்ணுக்கும் இப்படி ஒரு நிகழ்வை எதிர்கொள்ளும் துணிச்சல் கிடையாது.

 

அந்த இடத்தில் இருந்தவர்களால் துரத்திச் சென்று அந்த தானியை மடக்கியிருக்க முடியாதா? தூரத்தில் இருப்பவர்களிடம் சப்தமிட்டு அந்த தானியை வழிமறித்திருக்க முடியாதா? குறைந்த பட்சம் அந்த தானியின் பதிவெண்ணை குறித்துவைக்க முடியாதா? காவல் நிலையத்தில் முறையிட்டு அவர்களைக் கண்டுபிடிக்கவைத்திருக்க முடியாதா? ஆனால் நடந்தது நடந்துவிட்டது என்று ஆறுதல் கூறவும், வெளியில் சொன்னால் நமக்குத்தான் அவமானம் என எச்சரிக்கவும் மட்டுமே முடிந்திருக்கிறதென்றால் காரணமென்ன?

 

பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டமுள்ள கடைவீதியில் ஒரு பொறுக்கி இப்படி நடந்து கொள்ள முயலும்போது ஒரு பெண்ணால் தடுத்திருக்க முடியாதா? தப்பும்போது கையையோ சட்டையையோ பிடித்திழுத்து நிருத்தியிருக்க முடியாதா? குறைந்தபட்சம் கீழே தள்ளிவிட்டிருக்க முடியாதா? சப்தம் போட்டு பிறர் கவனத்தை ஈர்த்திருக்க முடியாதா? ஆனால் அந்தப் பெண்ணால் அழ மட்டுமே முடிந்திருக்கிறது என்றால் காரணமென்ன?

 

வாழ்வு என்றால் என்ன? வாழ்வில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன? இதுபோன்ற பொறுக்கித்தனங்களை எப்படி எதிர்கொள்வது? என்பன போன்ற அறிதல்களை கற்றுத்தரவேண்டும். அதற்கு பெண்கள் உழைப்பில் ஈடுபடுத்தப்படவேண்டும். ஆனால் புர்கா அணிந்தால் அதுவே பெண்களை கண்ணியப் படுத்திவிடும் என நினைப்ப‌தும், ஆண்டவன் தண்டனை கொடுப்பான் என நம்புவதும் மீண்டும் மீண்டும் பெண்களை அடிமைத்தளைக்குள் கட்டிவைக்கவே பயன்படும்.

 

கடையநல்லூர் சூழலில் பெண்களே இணைந்து ஒரு இதழை நடத்தவேண்டும் என நினைத்திருப்பதே வரவேற்கத்தக்க ஒன்றுதான். அந்தவகையில் நல்லூர் முழக்கம் அந்த இதழை வரவேற்கிறது. முழுக்க முழுக்க சமூகம் சார்ந்த செய்திகளை கட்டுரைகளை மட்டுமே இடம்பெறச் செய்வது என்பது அவர்களால் இயலாத ஒன்றாகவும் அவர்களின் மரபுக்கும், இயல்புக்கும் இசைந்ததாக இருக்காது என்றாலும், அதை சிறிய அளவிலேனும் ஆரம்பிக்க வேண்டும் என்பதே நல்லூர் முழக்கத்தின் ஆவல். இனி வரும் இதழ்களில் வாழ்வியல் கண்ணோட்டத்துடன் கூடிய பெண்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் களமாக ‘ஹைர உம்மத்’ அமையவேண்டும் எனும் எதிர்பார்ப்பில்….